உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 28 · 28 / 300

“நேர்மையானவன்போல் தோன்றிய தளபதி கீழ்மைச் செயல் புரிந்தான். கீழோன்போல் தோன்றியவனோ மேலான செயலாலே மேலோன் ஆனான்” என வாழ்த்தியது ஊர்.

இதையே வள்ளுவர் இரு அடியில், “நேராகத் தோன்றும் அம்பு கொலைச் செயல் புரியும் - வளைந்து தோன்றும் யாழ் இன்பம் பயக்கும்” என்று கூறிவிட்டு, “அவ்வாறே மாந்தரையும் அவர்தம் உருவத்தால் கணக்கிடுவதை விடுத்து, அவர்களின் செயல்களைக் கொண்டு கணக்கிடுதல் நன்று” என்று விளக்குகிறார்.

அதற்கு, இதோ இணையற்ற குறள்:

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல்.

அதிகாரம் - 28 - கூடாவொழுக்கம்; பாடல் - 279

Small statue illustration centered below the citation line near the foot of the page.

Large colour illustration above the prose showing two women, with a pair of hanging drums above/behind them.

“திடும்! திடும்! திடும்!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்........”

இவ்வாறு பறையை முழக்கிவிட்டுச் செய்தியைச் சொல்லத் தொடங்கினான் பறையறிவிப்போன்! அவன் தொடர்ந்து சொல்லப் போவது நல்ல செய்தியா? கெட்ட செய்தியா? அது பற்றியெல்லாம் அவன் கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. சற்றே திறந்திருந்த தெருக்கதவின் வழியாக அவனைப் பார்த்தாள்; அந்த ஒலியைக் கேட்டாள். அவன் சொல்லப் போகிற செய்தி என்ன? அதுபற்றி அவா எழுந்திடவில்லை. கதவைச் சாத்திவிட்டுத் தாழ்வாரத்து முற்றத்தில் போய் உட்கார்ந்து

கொண்டாள். பறை அறைதல் என்னும் நிகழ்ச்சியைக் கற்பனை செய்து பார்க்கிறாள். ஊர்மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பொதுவான செய்தியைத்தான் பறை முழக்குவோன் அறிவிக்கிறான். அப்போது அவளுக்குத் தன் கண்களைப் பற்றிய நினைவு வருகிறது.

“என் கண்களும் இந்தப் பறையைப் போல்தான் இருக்கின்றன. பறை அறைதல் வாயிலாகவாவது ஊரார் பொதுச் செய்திகள் கூறப்படுகின்றன. ஆனால் என் கண்களோ, காதலரை எண்ணி வருந்துகிற - மறைத்து வைக்கப்பட வேண்டிய துன்பச் செய்தியையும் ஊராருக்கு அறிவித்து விடுகின்றன. என் கண்களுக்கும், பறை அறைதலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.”

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணா ரகத்து.

“அறையப்படும் பறை போன்றன என் கண்கள். துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களையுடைய எம்மைப் போன்றவர்களிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊர்மக்களுக்கு அரிய காரியமல்ல!”

இப்படித் தனக்குத் தானே அந்தத் தாழம்பூ மேனியாள் பேசிக்கொண்டிருந்தபோது, தோட்டத்துக் கதவைத்திறந்து கொண்டு தோழை வந்தாள்! வந்த தோழியைப் பைங்கிளி வரவேற்றாள்!

“என் தோழை, உன் கண்கள் சோர்வடைந்து காணப்படுகின்றன? ஒரு வேளை உன்னுடையவர் நேற்றிரவு வரவில்லையா? அதனால் அவர் வரவு பார்த்து விழித்துக் கிடந்தனையோ, விழியிரண்டும்?”

என வினவினாள் பைங்கிளி! தோழை பதில் சொன்னாள்: