உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 27 · 27 / 300

அவள் குழறலை உணர்த்துகிறது இந்தக் குறள். இவர் நிலைதான் இதுவென்றால், என்றன் நிலையோ அதைவிட மோசம் - என்று மழைக் கண்களைக் காட்டுகிறாள் மற்றொருத்தி.

காதலன் விடைபெற்றபோது அவள் கூறிய வார்த்தை என்ன தெரியுமா? “நீ போகவில்லையென்றால் என்னிடம் சொல்! போய்த் திரும்புகிறேன் என்று சொல்வதானால், நீ திரும்பும் வரையில் உயிரோடு இருப்பவளிடம் விடைபெற்றுப் போ!”

இப்படிச் சொல்லிக் காதலைத் திணற அடித்தவள் அவள். பாவம், அவளால் காம நோயைப் பிறர் அறியாமல் மறைக்கவும் முடியவில்லை; அந்த நோயைத் தந்த காதலனிடம், நோயின் கடுமைபற்றி விளக்கவும் வெட்கமாயிருக்கிறது. இப்படித் திண்டாடுகிறாள், அந்த வண்டாடும் மலர்க்குழலாள்.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.

“உடலிற் பூசிய சந்தனத்தின் ஈரம் காய்வதற்குள் அவசரப்பட்டார்; பாடச் சொன்னார்; உடனே இதழ் மூடச் சொன்னார். ‘இசை கசக்கிறதோ?’ என்றேன். ‘இல்லை, இதழ் இனிக்கிறது’ என்றார். விளக்கைக் காட்டி, ‘அணையுங்கள்’ என்றேன். அணைத்தார். உயிர், அணு ஒவ்வொன்றையும் தேனில் நனைத்தார். பக்கத்தே சிறிது நகர்ந்தேன். உடனே என் உடம்பெங்கும் பசலை நிறம் பரவிவிட்டது. அந்தப் பிரிவைக்கூட என்னால் தாங்க முடியவில்லையே; இந்தப் பிரிவை எப்படியடி தாங்குவேன்?”

என்று வருந்துகிறாள், அந்த வண்ணமணிச் சிலையாள்.

புல்லிக் கிடந்தேன்; புடைபெயர்ந்தேன்; அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்; பாடல்கள் - 1163, 1162

அதிகாரம் - 119 - பசப்புறுபருவரல்; பாடல் - 1187

Small printed architectural/chariot-like motif below the citation lines.

Large colour illustration above the prose showing two men in a martial setting, one associated with a bow and a spear visible between them.

“அவனது அழகிய கவர்ச்சிகரமான தோற்றமே அவனை உத்தமன் என்று ஊருக்கு உணர்த்துகிறது. அவன் கண்களில்தான் எவ்வளவு கனிவு! புன்னகை புரிகிறான். ‘புனிதனே! புவிக்கோர் நல்லமுதே!’ என்று புகழ்ந்திட முந்துகிறது நா! அதிகமாகக்கூட அவன் யாரிடமும் பேசுவதில்லை. கேட்ட கேள்விகளுக்குக்கூட இதழ் அசைவது தெரியாமல் பதில் கூறுகிறான். பெண்கள் நிறைந்த கூட்டமொன்றில் அவனுக்கு விழாக் கொண்டாட்டி வரவேற்பு வழங்கினர். அந்தப் பெண்களை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

மகளிர் அவனைச் சீலம் நிறைந்தவன் என்று சிங்காரப் பண்பாடிப் போற்றி மகிழ்ந்தனர். அவனோடு இன்னொருவன் வந்தானே அவன் மிகவும்

கெட்டவன்; அவன் பார்வையே சரியில்லை; பெண்களிடம் சுற்றிச் சுற்றியோடித்தான் யார் என்பதை காட்டிக் கொண்டான். முறுக்கு மீசை - முரட்டு உடல் - மூடத்தனம் நிறைந்த மூளை - மொத்தத்தில் நல்லவன் அல்லன்! அலையும் விழிகளும், இளித்த வாயும், போதும் - அவன் ஒரு காமுகன் என்பதை எடுத்துக் காட்ட!”

-இப்படி அந்த இரண்டு மனிதர்களைப் பற்றியும் ஊரார் தங்கள் மதிப்புரையை எழுதி தள்ளினார்கள்! இருவருமே அந்தப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் படைவீரர்களைக் கண்காணிப்பதற்காகப் புதிதாக ஊருக்கு வந்த தளபதிகள்.

வரவேற்பு விழா முடிந்து ஒரு கிழமை கழிந்தது. அழகிய தோற்றமும் ஊரார் மதிப்புரையும் பெற்ற தளபதி, ஒரு நாள் இரவு ஒளிந்து ஒளிந்து தெருவில் நடந்தான். ஊரார் அவனை உற்றுக் கவனித்தனர். தெருக்கோடியில் தேன்மொழி என்ற குடும்பப் பெண்ணொருத்தி. அவள் ஆளன் ஊரில் இல்லை. அவளை அணைத்து இன்புற இல்லில் நுழைந்தான்.

மலர் கசங்கிடும் வேளையில், இன்னொரு தளபதி உள்ளே பாய்ந்தான். “இழிமகனே! கடைப்பிறவியே! உயிர் தேவையெனில் ஓடிப்போ!” எனச் சீற, அது கண்டு கொடியவனும் குழைவானான். இருவருமே போரிட்டனர். முதலாமவன் மாண்டான். அடுத்தவனே நல்லவன் எனும் பெயர் பூண்டான்.