உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 26 · 26 / 300

காதலனோடிருப்பதாகக் கனவு கண்டாளாம். விழித்துக் கொண்டாளாம். அதற்காக வருந்துகிறாள். அந்தச் சோகத்தை வள்ளுவர் நடையிலே கேட்டு இன்பம் பெறுங்கள் - இதோ!

நனவென ஒன்றில்லை யாயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன்.

அதிகாரம் - 122 - கனவுநிலையுரைத்தல்; பாடல் - 1216

Small printed statue motif below the Kural/citation block.

Large colour illustration above the prose showing an angry older-looking prince/ruler in front of assembled men, with another figure partly visible at right.

அந்தப் போரில் அவர் தன் கைகளில் ஒன்றை இழக்க நேரிட்டது. எதிரிகளின் சிறையிலும் சில ஆண்டுகள் இருக்க நேரிட்டது. இப்படிச் சொந்தநாட்டு வெற்றிக்காகக் கடுந்தவம் ஏற்ற அந்தப் பெரியவர், இளவரசனின் போக்கிலே வெறுப்புக்கொண்டு, தான் ஓய்வு பெற்றிருப்பதையும் மறந்து ஓய்வின்றிப் பணியாற்றினார். அதனால் எழுந்த சீற்றத்தால் இளவரசன், பொதுமன்றில் கூடியிருந்த மக்களிடம், அந்தப் பெரியவர் குறித்து மிகக் கீழான முறையில் உரை நிகழ்த்தினான்.

குடிமக்களுக்கு இளவரசனின் போக்கும் பேச்சும் கிஞ்சிற்றும் பிடிக்கவில்லை. அவற்றை அவர்கள் வெறுப்பதைக் காட்டிக்கொண்டு பொது மன்றத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத இளவரசன், குடிமக்களின்மீது போர் வீரர்களை ஏவினான். குடிமக்கள் எலும்பு நொறுங்கத் தாக்கப்பட்டார்கள்; சிலர் உயிரையும் இழந்தனர். அந்தச் செய்தி பெரியவருக்கு எட்டியது. பொறுமையின் உறைவிடமாக இருந்த அவர் வெகுண்டு எழுந்தார்.

குடிமக்கள் கொடுமைப்படுத்தப்படும் இடம் நோக்கி நடந்தார். குருதி வெள்ளம் பெருக்கெடுக்கும் அந்தப் பொதுமன்றத்தருகே சென்றார். ‘அய்யோ! அய்யோ!’ என ஓலமிட்டவாறு ஓடிக்கொண்டு இருக்கும் மக்களைப் பார்த்து அவர் கூறினார்:

“உங்களுக்கு இருப்பது ஒரு உயிர்தானே! அது போகப்போவதும் ஒரு முறைதானே! அதற்குள் ஏன் இப்படி அஞ்சிச் சாகிறீர்கள்? அநியாயத்தை எதிர்த்து நில்லுங்கள்! வாருங்கள். அடிபடும் உங்களுக்கு நான் தலைமை வகிக்கிறேன். இனி விழுகிற அடிகள் அத்தனையும், என்மேல் விழட்டும்.”

அடிபட்டுக் கொண்டிருந்த மக்கள் நிமிர்ந்து நின்றனர். ஓடியவர்கள் திரும்பி வந்து அவர் பின்னே அணி வகுத்தனர். மக்கள் கடல் உருவாகியது. அதன் கொந்தளிப்பு வெளியே தெரியவில்லை. குமுறலும் கொந்தளிப்பும் அவர்களின் உள்ளத்திலே இருந்ததை அவர்களின் விழிகள் காட்டிக் கொண்டிருந்தன.

பெரியவர் தலைமையில் அந்தப் பேரணி, இளவரசன் நின்ற இடத்தை நோக்கி நகர்ந்தது. ஓங்கிய கைகளுடன் இருந்த வீரர்கள் திகைத்துப்போய் ஒதுங்கி நின்றனர். பெரியவர், இளவரசனின் முன்னே மிக நெருக்கமாக வந்து விட்டார். அவர் முகம் எழுஞாயிறு போலச் சிவந்திருந்தது. அவர் பின்னே வந்த மக்களின் முகமும் அவ்வாறே!

நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த இளவரசன், அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினான். பெரியவரின் நெஞ்சு உறுதியின் முன்னே அவனால் நிற்க முடியவில்லை; அவன் படையும் செயலிழந்தது; அரணும் அவனுக்குக் கை கொடுக்கவில்லை; நட்பு அரசுகளும் துணை புரியவில்லை; கருவூலத்துப் பெரும் பொருளும் அவனைக் காத்திடவில்லை. அவன் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டான். சிறப்புடைய பெரியவர்கள் சீற்றம் கொள்வாராயின் அரண், படை, பொருள் போன்ற அளவுகடந்த சார்புடையவர்களானாலும் அவர்களால் அந்தப் பெரியவர்களின் சீற்றத்திற்கு எதிராகத் தப்பிப் பிழைக்க இயலாது என்பதையே இது விளக்குகிறது.

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின்.

அதிகாரம் - 90 - பெரியாரைப் பிழையாமை; பாடல் - 900

Large colour illustration above the prose showing two women close together, one placing her hands on the other's shoulders, with a large male profile in the background.

“நகை தந்தார் - நகை தந்தேன்; தொட்டார் - சுட்டேன்; தழுவினார் - நழுவினேன்; தொடர்ந்தார் - படர்ந்தேன்; பிரிந்தார் - இருக்கிறேன்!”

வேதனையை விழிமூலம் விளக்கி நிற்கிறாள் அவள். இன்னொருத்தியோ இப்படியாமல் இருப்பதற்காகத் தோழியின் தோளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு காம நோயும் நாணமும் இரு பக்கமும் தொங்குகின்றன; நான் என் செய்வேன்? - என்று துவளுகிறாள் அந்தத் தோகை.

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென் நோனா உடம்பின் அகத்து