உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 14 · 14 / 300

எல்லாம் வல்லதல்லவா மழை! அத்தகைய மழையின்றி மனிதன் வாழ முடியுமா? உலகத்தை உய்விக்கும் மழையை மகளிரோடு ஒப்பிடும் அழகே அழகு! அந்த அழகை - வள்ளுவர் தந்த மிக உயர்ந்த இடத்தை - உரை எழுதியோர் கெடுத்தனர்.

கழனிக்கு மழை தேவை என்று உழவன் நினைத்தபோது உடனே மழை பொழிந்துவிட்டால் - அந்த மழை எத்தனைக் குடும்பங்களின் நல்வாழ்த்தைப் பெறுகிறது! பெய்யெனப் பெய்யும் மழை, பெறுகிற புகழ்மாலைகள் எண்ணிலடங்கா!

அதுபோன்றவளாம், கணவனையே தெய்வமாகக் கருதும் பெண்! அந்தக் கருத்தைத்தான் வள்ளுவர் வண்ணத் தமிழிலே குழைத்துத் தருகிறார்- மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

அதிகாரம் - 2 - வான்சிறப்பு; பாடல் - 15 அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணை நலம்; பாடல் - 55

Small standing Thiruvalluvar monument illustration centred below the citation block.

Large colour battle illustration above the prose showing an armed warrior amid combat, directly introducing the page's martial-history discussion.

போர்க்களக் காட்சிகளையும் போருக்குப் புறப்படும் வேந்தர்கள் உரைத்திடும் சூளுரைகளையும் தமிழ் இலக்கியம் சிறப்பாகக் கூறும்.

‘போரில் தோற்றுவிடுவேனாயின் புலவர்கள் என்னைப் பாடாது போகட்டும்’ என்றும் ‘என் நாட்டு மக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று இழித்துரைக்கட்டும்’ என்றும் முழங்கியவாறு களம் புகுந்தனர் நாட்டுடைத் தலைவர்கள் என்று, தமிழர் வரலாறு கூறுகிறது.

“என் மகன் களம் சென்றுள்ளான். அந்தப் புலி வாழ்ந்த குகை இதோ இருக்கிறது” என்று, தன் மகனைச் சுமந்திருந்த வயிற்றைக் காட்டினாளாம் வீரத் தாயொருத்தி.

“மன்னனைத் தொடர்ந்து சென்றுள்ள வீரர் அணிவகுப்பில், என் மகன் மீது மன்னன் தனியன்பு காட்டுகிறான் என்பதறிந்து மகிழ்கிறேன். எனினும் இன்னும் என் மகன் போரில் விழுப்புண் பெற்றுக் களம்பட்டான் என்ற செய்தி எனக்குக் கிடைக்கவில்லையே; அப்படிக் கிடைத்தால் அல்லவா - அவன் மன்னனையும் இந்த மண்ணையும் உயிரெனப் போற்றுகிறான் என்பது உண்மையாகும்?”

என்ற கருத்துப்படக் கதறுகிறாளாம் இன்னொரு வீரத் திருமகள்!

காவா நாவிற் கனகனும் விசயனும் தமிழ் மன்னர்களை இழித்துரைத்தார்கள் எனக் கேள்வியுற்று வடபுலம் சென்று, அவர்களை வென்று, அவர்தம் முடியினில் கல்வேற்றி வந்து கண்ணகிக்குச் சிலையெடுத்தான் சேரமன்னன்.

இலங்கையை வென்றான்; கடாரம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினான் - சோழ மன்னர்கள்.

இளந்தளிரென இருந்த பாண்டியனோ போர்முரசு கேட்டவுடன் அரிமா எனக் கிளம்பி, ஒரே களத்தில் பல அரசர்களை மோதி வென்றான்.

இவையனைத்தும் தமிழகத்தின் கடந்தகால வீர வரலாற்றுக் கருவூலங்கள்!