உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

உணர்ச்சிமாலை

பகுதி 6 · 6 / 7

வகுப்புவாதத்தை திராவிடக் கும்பல் நாட்டில் பரப்புகிறது என்று பிரச்சாரம் செய்கிற பிராமணோத்தம குலத்துப் பெம்மான் ஸ்ரீ துரைசாமி அய்யங்காரின் இந்த அறிக்கை 29-5-48 மெயிலில் காணப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் நூற்றியைம்பது பேர். நூற்றுக்கு மூவராய் வாழும் பார்ப்பன குலத்தவர் அந்தக் கல்லூரியில் தொண்ணூறு பேர்! நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேராயுள்ள திராவிட மாணவர்கள் அங்கு ஐம்பத்தேழு பேர். படிப்பில்லா சமுதாயமாக பாழ்பட்டு நிற்கும் பழங்குடி வகுப்பினர் மூன்று பேர். சதவிகிதக் கணக்குப்படி 100-க்கு 60 பார்ப்பனர்; 100-க்கு 38 (பார்ப்பனரல்லாத) திராவிடர்; 100-க்கு

2 பேர் ஆதிதிராவிடர். இந்த அழகில் அங்கேயும் ஒரு குருகுலத்தை சிருஷ்டிக்க நினைக்கிறார் ஆரிய குல மகிபர். எல்லோரும் அன்னை பாரததேவியின் அருந்தவப் புதல்வர்கள் என்று கீதம் பாடிய கூட்டம் இன்று பேதம் பாடுகிறது. அதற்கு தலையாட்டும் பொம்மைகளாக சில தன்மான மற்ற திராவிடரையும் துணைக்கழைக்கிறது.

நாம்......பரிதாபமாக...வயிற்றெரிச்சலோடு......விழியிலே நீர்வழிய கெஞ்சுகின்றதோரணையில்...ரத்தப் பாசம் விடாமல்... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் அந்த 57 பேரை நோக்கி!.....ஐம்பத்து ஏழுவரே !... வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தை ஏளனம் செய்து... கீழ்பாக்கம் வைத்திய சாலையை கிண்டலுக்கு பயன்படுத்துகிற வெறியர் கூட்டத்தின் செயலை சற்று சீர் தூக்கிப்பாருங்கள். நீங்கள் மக்கள் கணக்கில் 97 சதவிகிதத்தினர்.

அவர்கள் மூன்று சதவிகிதத்தினர். ஓரியண்டல் கல்லூரியில் நீங்கள் 57 பேர், அவர்கள் 90 பேர். உங்களுக்கும், அவர்களுக்கும் உட்கார, உலவ, உல்லாசம் அனுபவிக்க உழைத்து உழைத்து உருமாறிய—இரத்தத்தை வியர்வையாக மாற்றிய வம்சத்தவர் மூவர். அந்த மூவரையும் மூலையில் தள்ள ஆரியத்தின் மூளை அஸ்திவாரம் அமைக்கிறது. பலம் தேடிக் கொள்ள உங்களையும் பிணைத்துக் கொண்டு பேசுகிறது.

ஆம்......ஆஞ்சநேய சுக்ரீவர்களை துணைக்கழைத்துக் கொண்டு வெற்றிப் பண் பாடியது போல—சர்

ராமசாமிகளை, சண்முகங்களை இழத்துக் கொண்டு தன் சமுதாயத்தை காத்துக்கொண்டது போல துரைசாமி அய்யங்காருக்கு உங்கள் 57 பேரின் துணை தேவையாயிருக்கிறது. அந்த மூன்று பேரையும் மூன்று துளி நஞ்சாகக் கருதுகிறார் உங்கள் 57 பேரையும் 57 பிர பிரஹலாதர்களாக 57 கருவேப்பிலைகளாகக் கருதுகிறார்.

நீங்கள் அறுபது பேராகுங்கள். ஆரியம் தொண்ணூறும் அந்த முனையில் நிற்கட்டும். திராவிட இன உணர்ச்சியை இனி மேலாவது, காற்றில் பறக்கவிட்டு மீளாத பழியை சுமத்திக் கொள்ளாதீர்கள். இதையே தான் நாம் அரசாங்கத்தாருக்கும் அறிவிக்க வேண்டியுளது.

கல்லூரியை விட்டு தொண்ணூறு பூணூலும், ஏன் ஐம்பத்தி ஏழுவரும், கண்ணிருந்தும் குருடராய்—காட்டுமிராண்டித் தன்மையராய் அவர்களோடுசேர்த்து விலக நேர்ந்தாலும் அந்த மூவருக்காக—புது சமுதாயத்தின் அந்த அஸ்திவாரக் கற்களுக்காக...ஒரியண்டல் கல்லூரியை நடத்தும் துணிவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை “உள்ள ஒலி”யாக்கித் தருகிறோம். எம்மை வகுப்பு வாதி என்னும்—பெரியோரே! திராவிட இயக்கத்தாரை குறுகிய மனப்பான்மை படைத்தோர் எனக் கூறுவோரே!

வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து நிற்போரே! மீண்டும் கருத்தில் பதிய வையுங்கள் அந்த எண்களை! 3, 57, 90.

இந்திய உப கண்டத்தின் வரலாற்றில் இரத்தக் கரை படிந்த நாள். மக்கள் உகுத்த இரத்தக் கண் நீர் அருவி யென ஒடி அரபிக் கடலில் கலந்து...வங்களாக் குடாக்கடலில் “வழிந்தோட......காந்தி மாண்டாரா ?” என்ற கேள்விக்கு முன் கிளம்பிய பெரு மூச்சு இமயத்தை அசைக்க—இப்படி ஒரு சோக பூகம்.

உத்தமர் காந்தியார் சுடப்பட்டார்! மும்முறை. சுடப்பட்டார்! ஐயகோ! சுடப்பட்டார்! பிரார்த்தனைக்குத்தான் வந்தாராம்......வேலும் வாளும் ஏந்தி வேற்றார்படை எங்கே என்று அவர் அதட்டலாக கேட்ட நேரத்தில் அல்ல!......அன்பு தவழும் மொழிகளில் பிரார்த்தனைக்கு மக்கள் வந்துவிட்டனரா என்று வினவிய நேரத்தில்......சுடப்பட்டார் !

கனல் கக்கும் கண்களோடு...கட்டாரியை எறிந்த காட்டானையைப் போல் எதிரியின்மேல் மோதிய வேளையில் அல்ல—கருணை பொங்கும் கண்களால் தன் உபதேசங்கேட்க வந்திருந்த மக்களைக் கண்டானந்தித்த வேளையில்......சுடப்பட்டார் ! சுடப்பட்டார்....சுடப்பட்டார்......சுக்குநூறாக்கம்

30 ந் தேதி மோகனப் புன்னகையார் மோகன் தாஸ் காந்தி!......!31-ந் தேதி......அய்யய்யோ...முறிந்தும் எரிந்தும் போன எலும்புத்துண்டுகள்!...... ஒரு முட்டாள் வீசிய மூன்று குண்டுகள் முரட்டுத் தனத்தையும் மெளடீக மதவெறியையும் போக்குவதற்கு முயன்ற ஒரு தியாகியின் வாழ்வை முடித்தன.

“ஏ ! துப்பாக்கிக் குண்டே !...அந்த துன்மார்க்கன் செய்த துரோக வேலைக்கு நீயும் துணையா ?...எப்படித்தான்...அண்ணல் காந்தியின் அன்பு கனியும் இருதயத்தைப் பிளந்தெறிந்தாயோ ?”...என்று இந்தக் கண்டம் அழுகிறது. ஏன்...உலகமே அழுகிறது.

காந்தியாரின் உயிரை உறிஞ்சியவன் ஒரு பார்ப்பனன், ஆம்...சாம்ராஜ்யங்களை சாய்த்த பரம்பரை! மன்னாதி மன்னர்களை மண்கவிழச் செய்த மரபு!...அந்த இனம் கக்கிய ஒரு துளி விஷம் காந்தியார் உயிரை சூறையாடிற்று. அந்த வைதீகம் வீசிய ஒரு வஞ்சகவாள் வார்தா உத்தமரின் வாழ்வை வெட்டித் தள்ளிற்று. அந்த மதவெறி செய்த சதி......ஒரு மாபெரும் வீரருக்கு மரணத்தீர்ப்பு வழங்கிற்று.......

இந்தியா கண்ணீர் விடுகிறது.........இந்து மகா சபை இனிப்பு வழங்கிற்றாம். ஆச்சரியப்படவில்லை நாம்! ஓமான் கடலில் சர். செல்வத்தின் வாழ்வு சிதைந்த போது சர்க்கரை வழங்கிய ஆரியக் கூட்டம் வாழ்கிற திராவிடத்தில் நாமும் வாழ்வதால்! காந்தியாரின் கொள்கைகளில் நமக்கு கருத்து வேற்றுமையுண்டு. ஆனால் நாம் கல் நெஞ்சர்களல்ல!... காந்தியாரின் தியாகத்தையும் அவர் மேலான உழைப்

பையும்....அவர் ஊக்கத்தையும்...நாம் பாராட்டியவர்கள்!....அதே நேரத்தில் காந்தியாரின் தொண்டு பல பதவி வேட்டைக்காரர்களுக்கும் பனியா......பார்ப்பனர்களுக்கும் பயன் படுகிறது என்றும் சொல்லத் தவறாதவர்கள் !....

காந்தியாரே!......தங்கள் உழைப்பின் பெரும் பகுதியைக் கூலியாகக் கொடுத்து...இக் கண்டத்திற்கு ஓரளவு விடுதலை வாங்கித்தந்தீரே!...விடுதலை...உண்மை விடுதலையாக மாறுவதற்கு முன்...பதவி வேட்டை ஒய்வதற்கு முன் தேசீயத்தில் தெகிடுதத்தம் கலந்து விட்டது என்று தாங்கள் எழுதி...அந்த அறிவுரை ஆட்சியாளரை நல்வழிப் படுத்துவதற்கு முன், நாசத்திற்காளானீரே !....

‘சுதந்தரம்’ கிடைத்த ஆறாவது மாதத்தில்—இந்த அகால சாக்காடா ?—அதுவும் தங்களுக்கா ?—தாங்கள் என்ன மதவெறியை வளர்த்தீர்களா ?—அமைதியைக் குலைத்தீர்களா? அராஜகத்திற்கு காரணகர்த்தாவாயிருந்தீர்களா ?—இல்லையே!—பிறகேன் இந்தப் படுகொலை! மதவெறி—பதவிவெறி பாரப்பனீய வெறி... இது தான் பதிலா ?—சுதந்திர இந்தியாவில்—யாருக்காகப்பாடு பட்டீர்களோ அந்த சமுதாயத்தின் ஒரு மலைப்பாம்பால் விழுங்கப்பட்டீர்கள் என்பது—அவமானம் வெட்கக் கேடு...இந்த உபகண்டத்திற்கேற்பட்ட........

மாறாத இழிச்சொல்!..... நாள் 30-1-1948... ஆமாம்... வரலாற்றை வீணாக்கிய

“ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி என்கிறார்களே அது எப்படிப் பொருந்தும் ?”

“ஐவர் என்றால் ஐந்து பஞ்ச பூதங்கள், காந்திஜி கூட அரிஜன் பத்திரிகையில் அப்படித்தான் வியாக்கியானம் செய்திருக்கிறார். எல்லாம் தத்துவார்த்தம்”

“பஞ்ச பூதங்களா ?......சரி... அவள் கர்ணன் மேலுங் காதல கொண்டாளாமே அந்த ஆறாவது பூதம் எதுவோ ?”

“.........” பதில் இல்லை.

“பருவமடையாத குந்தி தேவி கர்ணன் என்ற பாலகனை கன்னத்தால் பெற்றாள் ! அது எப்படி முடியும் ?”

“பகவத் அனுக்ரகம், வரப்பிரசாதம்”

“பால்யத்திலே சூரிய பகவானைக் கூடி பிள்ளை பெற்றவள் பிறகு பாண்டு மகாராஜாவை மணந்தது பத்தினி தன்மைக்கு ஏற்றதா ?”

“அட பாவி...சூரியனை அவள் கூடினாளா ? டே நாக்கு அழுகிவிடுமடா ! அநியாயம் பேசாதே ! குந்தி தேவி குளிகை சாப்பிட்டாள். சூரியன் வந்தார். வரம் தந்தார். உடனே கர்ணன் தோன்றினான். பார்த்தது மாதிரி பொய் பேசாதேடா பாவிப்பயலே !”

“ஓகோ அப்படியா !...சரி ! பாண்டுவை மணந்த குந்தி தேவி யமதர்மனுக்கு தர்மரையும், வாயுபகவானுக்கு பீமரையும், இந்திரனுக்கு அர்ச்சுனரையும் பெற்றாளாமே...அது ?”