உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

உணர்ச்சிமாலை

பகுதி 5 · 5 / 7

அவர்கள் இருந்த திராவிடம்......அவர்களுடைய கல்லறைகளின் மேல் அமர்ந்து அவர்கள் தந்த தமிழ்ச் சொத்துக்களை வீசியெறிந்துவிட்டு மாரியம்மன் தாலாட்டை மனப்பாடம் செய்கிறது. புறநானூறு இங்கிருந்து புறப்பட்டு இதோ இரஷ்யாவில் புகுந்து விட்டது.

சென்ற போராட்டத்தில் இடோகியோ நிஜுலினா என்பவர் ஆகாய விமானம் மூலமாக 600 தடவை பறந்து சென்று விரோதிகளின் விலாவை ஒடித்து வேகமான தாக்குதல்கள் நடத்தி திரும்பினார், இடோகியோ நிஜுலினா. ஆணல்ல ! பெண் ! பெண் !! இங்கு ஏணை ! அங்கு ஏரோப்ளேன் ! இங்கு அரசமரம் ! அங்கு ஆராய்ச்சிக்கூடம் !

1945-பிப்ரவரி 1-ந் தேதி வரையில் 10,55,000* பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டதின் காரணமாக பற்பல வகையான வீரப்பிரதாப பட்டங்களைப் பெற்றனர்.

அங்கே புறநானூறு! இங்கே புற்றடி மாரியம்மன் கோயில் சிந்து!

கூட்டுப்பண்ணை போன்ற அமைப்புகளில் தலைவர், பொருளாளர், செயலாளர், பதவிகளில் 1940-ஆம் ஆண்டு முடிய 54,200 பெண்கள் உள்ளனர். இரஷ்யாவில்!

அறிவு, நாட்டில் அடுப்பங்கரை இந் எதிரிகளின் நிஜுலினா உட்பட 49-பெண்கள் முதுகெலும்பை முறித்து நாட்டுத் தொண்டாற்றினார்கள் என்பதற்காக “சோவியத் யூனியன் வீரர்” (Hero of the Soviet union)என்ற விருதுபெற்றுள்ளனர்.- “ஆகா அசல் சீதேவி மாதிரி குணம்” “அருந்ததி மாதிரி அடக்கம்” “அகல்யாமாதிரி அழகு” “திரௌபதி மாதிரி கற்பு” இந்தப் பட்டங்கள் இங்கே, இருண்ட திராவிடத்தில்!

புறநானூறு இங்கு புதைந்துவிட்டது. அங்கே......இரஷ்யாவில் ஒளி விடுகிறது.

“என்ன துணிவப்பா இது”

“எப்படியப்பா எழுதினான் இந்த மனுஷன்”

“வாயில் வந்தபடி பேசுகிறானே வகை கெட்டவன்”

“ஆட்டு மந்தைப்போல் ஒரு கூட்டம் நம்மைப் பின்பற்ற இருக்கும்போது இவனுக்கு மட்டு மென்ன அறிவு கொழுந்து விடுகிறதாம்”

“ஆளை உயிரோடு விடுவதே ஆபத்து”

“இவன் இருக்கும் வரையில் நாம் தலை தூக்க முடியாது போலிருக்கே”

“விஷத்தை யல்லவா வாரி யிறைக்கிறான் விரியன் பாம்பு”

இப்படி சொல்லம்புகள் மாறி மாறி வீசப்பட்டன அந்த வீரர் மேல். வீரர் கலங்கவில்லை. விலாவொடிந்து போனாலும், வெட்டுண்டு சாய்ந்தாலும் கவலைப்படாத வைர நெஞ்சத்தினர் அவர். மனதிற் பட்டதை மறைத்துப் பேசும் கோழைத் தனமோ, கால் கழுவி வாழ நினைக்கும் கபோதித் தன்மையோ, சுய நலத்திற்காக

சூதர்களை சுற்றி, நிற்கும் சோதாப் பண்போ அவர் இதயத்தை எட்டிப் பார்க்கவுமில்லை.

“ஏய் நாஸ்திகனே !......நீ நாசமாய்ப் போக”

“வகுப்பு வாத விஷ விருக்ஷமே......உன்னை வாழ விடுகிறோமா பார் !”

இந்த வசவுகளை வாழ்த்தாக நினைத்தார்.

“வகுப்பு வாரி பிரதி நிதித்துவம் வேண்டும்”

அந்தக் குரலை சற்று பலமாக அமைத்தார். திருப்பித் திருப்பிச் சொன்னார். அடிக்கடி சொன்னார். அதற்காகவே வாழ்வை அர்ப்பணிக்க வந்துவிட்டார். புத்தன் முதல்...இராமலிங்கன் வரையில் கூறுவதற்கு நடுங்கிய கொள்கைகளை இன்று துணிவாகச் சொல்வதென்றால்—அதுவும் நம்மவர் காலடியில் நாட்டாட்சி கிடக்கிற வேளையில் சொல்வதென்றால்......என்று ஆச்சரியப்பட்ட ஆரியம் தனது பாகு மொழியையே பலி பீடமாக அமைத்து திராவிட சமுதாயத்தைக் காவு கொள்ள ஆரம்பித்தது.

அய்யோ.........அந்த பலி பீடத்தில் சாய்ந்தவர் எத்தனை பேர் ! காமராசர்கள், முத்துரங்கர்கள், பக்தவத்சலர்கள், கிராமணியர்கள், நாடிமுத்துக்கள், தியாகராசர்.........

“சகோதரர்களே......வகுப்பு வாதத்தில் வழுக்கி விழாதீர்கள். நாம் பாரதத் தாயின் கர்ப்பத்தில் கிடந்த புதல்வர்கள்”

பூணூலை உருவிக் கொண்டே ஆரியம் பேச.........புன் சிரிப்பு நெளிய திராவிட விபீஷணர்கள் கரகோஷம் செய்ய......காங்கிரஸ் கட்சி வளர்ந்தது.

வகுப்புக்கள் ஒழிந்தால் தான் வகுப்பு வாதம் ஒழியும்......அதுவரை நாம் வாழ—வளம்பெற வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் தேவை......ஆரியம் ஒற்றுமை வலை விரிக்கும் ஒன்றே குல மென்று கூறும், உம்மை யெலாம் ஒதிய மரங்களாக்கி உயர்ந்த ஸ்தானங்களில் அமர்ந்து உல்லாசம் பேசும். அது ஒரு ஓநாய்க்கூட்டம். இந்தக் கருத்தை அந்த வீரர் எடுத்துரைத்தார். வேதியர் அவரை நாஸ்திகர் என்றனர். விபீஷணர்கள் அவரை வகுப்பு வாதி என்றனர்.

விழித்துக் கொண்ட மக்கள் அவரை மதித் தலைவர் என்றனர். விபீஷணர் விழிப்படைய—விழித்துக் கொண்டவர் விளக்கம் பெற உதவி புரியும் வகையில் நாம் தரவேண்டிய செய்தி ஒன்றுளது.

“திருப்பதி ஓரியண்டல் கல்லூரியில் பொது உணவு முறை ஏற்படுத்துவதுபற்றி அரசாங்கம் வற்புறுத்துகிறது. தேவஸ்தானக் கமிட்டியார், அரசாங்கத்தை இவ் வுத்திரவுபற்றி புனராலோசனை செய்யுமாறும், பொது உணவு முறையில் கலந்துகொள்ளச் சம்மாதிக்காத மாணவர்களுக்குத் தற்காலம் கொடுக்கப்பட்டு வரும் உபகாரச் சம்பளத்தை தொடர்ந்து கொடுக்க அனுமதிக்குமாறும் வேண்டிக்கொள்கிறது. ஆனால் அரசாங்கத்தார் இது பற்றி புனராலோசனை செய்யத் தயாராக இல்லை, என்று அறிகிறேன்.

ஓரியண்டல்

கல்லூரியில் 150 மாணவர்கள் இருக்கிறார்கள். பிராமண மாணவர்கள் 90 பேர் இருக்கின்றனர். ஹரிஜன மாணவர்கள் 3 பேர்களே உள்ளனர். பிராமண மாணவர்களும், பிராமணரல்லாத மாணவர்களும், பொது உணவு முறை ஏற்படுத்தப்பட்டாலும், தனியாக உண்ண விரும்புபவருக்கு உபகாரச் சம்பளம் கொடுப்பது நிறுத்தப்பட்டாலும் கல்லூரியை விட்டு விலகிவிட ஒரே முகமாக விரும்புகின்றனர். அரசாங்கத்தை இது பற்றி மீண்டும் தெளிவாக—தாராள மனப்பான்மையுடன் சிந்திக்கும்படி வேண்டிக்கொண்டும் பொது உணவு முறையை ஏற்க மறுக்கும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளத்தை தொடர்ந்து கொடுக்குமாறு தேவஸ்தான கமிட்டியையும் வேண்டிக்கொள்கிறேன்”