நெஞ்சுக்கு நீதி
ஆறாம் பாகம் ஆரம்பமாகும்! · 362 / 391
50. ஆறாம் பாகம் ஆரம்பமாகும்! தேர்தல் பணிகளுக்கு இடையேயும் நான் எழுதிவரும் 'நெஞ்சுக்கு நீதி' - எனது வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல... என் வாழ்வோடு இணைந்த இயக்கத்தின் வரலாறு! நா டாளுமன்றத் தேர்தல் வரவிருந்ததை யொட்டி, கழகத்தின் நிர்வாகக் குழு என்னுடைய தலைமையில். சென்னையில் 1.5.1999 அன்று கூடியது. அன்றைய தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய பகுதி வருமாறு:- ★ "இந்தியத் திருநாட்டின் 12 ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாட்டின் அரசியல் - சமுதாய - பொருளாதாரத் துறையில் ஒரு நிலையற்ற தன்மை சூழ்ந்துள்ள ஒரு நெருக்கடியான நேரத்தில், உலகத்தின் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்த நாட்டின் மக்கள், அடுத்து இந்த பொதுத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் ஒரு முக்கியமான கட்டத்தில், கழகத்தின் நிர்வாகக் குழு ஆழ்ந்த சிந்தனையுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தது.
★"ஜெயலலிதா, தி.மு.க ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தன்மீதுள்ள பயங்கரமான ஊழல் வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கு வகை செய்யக்கூடிய ஒரு மாற்று ஆட்சியை மத்தியில் அமைப்பதற்கான சுயநலம் நிறைந்த மோசடி நோக்கத்துடனேயே மத்தியில் இருந்த வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்ந்திட முனைகிறார் என்ற சதித் திட்டத்தைப் புரிந்து கொண்டுள்ள தி.மு. கழகம், பாரதீய ஜனதா கட்சிமீது கொள்கை ரீதியான - மாறுபாடான கருத்துக்கள் இருந்த போதிலும், இந்தச் சதித் திட்டத்தில் கலைஞர் ஜெயலலிதாவெற்றி பெற விடக்கூடாது என்ற நிலை எடுத்து, அதற்கான ஒப்புதலைச் செயற் குழுவிலும் ஏக மனதாகப் பெற்று, கழகத்தின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களிடம் ஜெயலலிதாவின் உள்நோக்கத்தை மிகத் தெளிவாக விளக்கி உள்ளது.
இந்தியாவின் 12 ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து - தி.மு.க.வின் நிர்வாகக்குழு கூடி - அப்பிரச்சினை பற்றி விவாதித்தது. ★"திரு. முரசொலி மாறன் மார்க்கிஸ்ட் தலைவர் திரு. சுர்ஜித் அவர்களைச் சந்தித்து, சுமார் 45 நிமிடங்கள் உரையாடி, "ஜெயலலிதா கட்சி இருக்கும் இடத்தில் தி.மு.க. இருக்க இயலாது!"
என்பதைத் கெள்ளத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அப்போது, அந்த விளக்கத்தை அவரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்து திரு.ஜோதிபாசு வின் முதல் அறிக்கையில் வெளியாகி யிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தோழமைக் கட்சிகளின் தலைவர்களான திரு. மூப்பனார் அவர்கள், திரு. சங்கரய்யா அவர்கள், திரு. நல்லகண்ணு அவர்கள், திரு. அப்துல் லத்தீப் அவர்கள், கழகத் தலைவர் கலைஞர் அவர்களிடம் தனித்தனியாகப் பேசும் போது, ஜெயலலிதாவின் சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்டிருப்பதாகவே கருத்து வெளியிட்டனர்.
★ "இத்தகைய கலந்துரையாடல்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதிவரையில் தனித்தனி சந்திப்பின் மூலமும், தொலைபேசி உரையாடல் மூலமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே. டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான கர்ஜித் அவர்களும், ஜோதிபாசு அவர்களும், ஜெயலலிதா மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரைச் சந்தித்து, ஜெயலலிதாவின் முயற்சிக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்ட செய்திகள் பத்திரிகைகளில் படங்களுடன் வெளிவந்துவிட்டன.
நம்மைக் கலக்காமல் அல்ல; நமக்குத் தெரிவிக்கப்படாமல் எடுக்கப்பட்ட இந்தத் திடீர் முடிவு நமது சுயமரியாதை உணர்வுகளைப் புண்படுத்தி, நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கழக அரசைக் கலைக்க ஜெயலலிதா பின்னிடும் சதி வலையில் சிக்காதிருக்க, வாஜ்பாய் அரசை ஆதரிக்கும் முடிவுபற்றி நிர்வாகக் குழுவிலே விளக்கினேன் ★ அது மட்டுமின்றி, "ஜெயலலிதா இருக்குமிடத்தில் இருக்கமாட்டோம் என்று தி.மு.க. தலைவர் சொல்வதைப் பார்த்தால், அவருக்கு ஏதோ கோளாறு (சம்திங் ராங்)" என்று சுர்ஜித் அவர்கள் செய்தியாளர்களிடத்தில் விமர்சித்துப் பேசிய வேதனையான நிகழ்ச்சியும் ஏடுகளில் வெளிவந்தன.
இது இலட்சக்கணக்கான கழகச் செயல் வீரர்களை நேரடியாகப் புண்படுத்தியது மட்டுமின்றி, அவர்கள் எங்களை உதறிவிட முடிவு செய்துவிட்டார்கள் என்பதையும் உலகத்திற்குப் பறை சாற்றியது. ★ "பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதோ - அந்த அரசை எதிர்ப்பதோ - இறக்குவதோ - என்பதைத் தோழமைக் கட்சிகள் கலைஞர் கூட்டாக எடுக்கும் முயற்சியைப் பொறுத்து அமைய வேண்டும் என்கிற கருத்தினை தி.மு.க. கொண்டிருந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஊழல் வழக்குகளில் இருந்து தப்புவதற்காக, கழக அரசைச் சீர் குலைக்கும் குறிக்கோளுடன், ஜெயலலிதா பின்னிடும் சதி வலையில் சிக்கக்கூடாது என்றுதான் வாஜ்பாய் அரசுக்கு எதிராக ஜெயலலிதா எடுக்கும் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளித்திட இயலாது என்று - தொடக்கம் முதல் தொடர்ந்து கழகம் அறிவித்து வந்துள்ளது. தோழமைக் கட்சிகள் இதனை எண்ணிப் பார்த்து, எங்கள் வாதத்தை ஏற்பதுபோல உறுதி அளித்துவிட்டுப் பிறகு எங்களுக்கு அறிவிப்புகூடச் செய்யாமல், தாங்களாவே ஒரு நிலை எடுத்து விட்டதால் தி.மு.
கழகம், வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களிக்கும் முடிவெடுக்க வேண்டியதாயிற்று. ★ "மார்க்கிஸ்ட் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் தமிழகக்கில் தி.மு.க.வுக்கு அழைப்புவிடும் அதே சமயத்தில், இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் திரு. பிரகாஷ் காரத் அவர்கள், "தி.மு.க.வுடன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்தல் உடன்பாடு கிடையாது" என அறிக்கை விட்டுள்ள செய்தியும் வெளிவந்துள்ளது.
(இதிலிருந்தே தி.மு.க. மீது பிரகாஷ் காரத் அவர்களுக்கு ஒரு "அலர்ஜி" அந்தக் காலத்திலிருந்தே இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.) தி.மு.க எந்த முடிவும் எடுக்காத நிலையில் அவர் நம்மை "வெளியே தள்ளி கதவை மூடியிருப்பது" - குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி, குழியும் பறித்த கதைபோல் இருப்பதை வேதனையுடன் குறிப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம். ★ "இந்தச் சூழ்நிலையில், பழைய தோழமைக் கட்சிகளுடன் தி.மு.க.
இருப்பதா - அல்லது தான் கொண்டிருக்கும் கொள்கைகளை நிலைநாட்டிட கழகத்தின் வலிவுக்காகவும், நாட்டின் நிலைத்த தன்மை - ஜனநாயக மாண்பு - சமூக நீதிப் பாதுகாப்பு - சாதி வேறுபாடற்ற சமத்துவ நிலை - சமதர்மக் கோட்பாடு - சிறுபான்மை சமுதாய மக்களின் நிரந்தரமான நலன். மத நல்லிணக்கம் - மாநில உரிமைகள் - தமிழ் மொழி ஆக்கம் - இவற்றுக்காகவும் தொடர்ந்து பாடுபட தமிழகத்தில் புதிய அணி அமைப்பதா என்பது குறித்தும் இந்த நிர்வாகக் குழு விரிவாக விவாதித்துள்ளது.
★ "அரசியல் சூழ்நிலைகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும், தி.மு. கழகம் எப்போதும் போல் சிறுபான்மையினருக்கு, அவர்கள் நலன் நாடும் தோழனாக - தொண்டனாக - துணைவனாக - உயிரைக் கொடுத்து உதவும் பாதுகாவலனாக - இருந்து தனது வரலாற்றுக் கடமையினை ஆற்றும் என்கிற உறுதி மொழியை இந்த நிர்வாகக் குழு அவர்களுக்கு மீண்டும் அளிப்பதில் பெருமைப்படுகிறது. எனவே அவர்கள் இது குறித்துச் சிறிதும் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை - என்று இந்த நிர்வாகக் குழு அவர்களை விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
இனிமேல் யாரிடமிருந்தும் எந்த விளக்கமும் பெறத் தேவையில்லை. நமக்கு நாமே - நமது இலட்சியத்திற்கேற்ப - நமது சமுதாயத்திற்கேற்ப - நமது மாநிலத்திற்கேற்ப - நமது நாட்டிற்கேற்ப - முடிவினை மேற்கொள்ள வேண்டிய அவசியத்திற்கு ஆட்படுத்தப்பட்டிருக்கிறோம்."
கலைஞர் பா.ஜ.க.வின் ஆட்சி தொடர - தி.மு.க. வாக்களிக்க முன்வந்ததற்கு நன்றி தெரிவித்தார், வாழப்பாடி ராமமூர்த்தி. - இதன் தொடர்ச்சியாக வெகு விரைவில் கழகச் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூட்டப் பெற்று, தி.மு.க. கூட்டணி பற்றிய முடிவை எடுத்து அறிவிப்பது என்றும் நிர்வாகக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. ★ ★ ★ தி.மு. கழக வரலாற்றில் இன்றளவும் சொல்லப்படுகிற ஒரு குற்றச்சாட்டாக இருந்துவரும் பா.ஜ.க.வுடன் தி.மு.க.
உறவு கொள்ள நேர்ந்ததற்கான காரணத்தை அந்த நிர்வாகக்குழுவின் தீர்மானத்தைப் பார்த்தால் உணர்ந்துக்கொள்ள முடியும். அனைத்துக் கட்சிகளும் கூடி தி.மு. கழகத்தை பா.ஜ.க.வின் பக்கம் தள்ளி விட்டார்களே தவிர - தி.மு.கழகத்திற்கு வேறு வழியில்லாமல் செய்தார்களே தவிர - தி.மு.கழகமாக அந்த நிலையை எடுக்கவில்லை என்பதையும், சந்தர்ப்பமும். சூழ்நிலையும், பிற கட்சிகளின் செயல்பாடுகளும், அத்தகைய நிலைமைக்குத் தி.மு.க.வைத் தள்ளிவிட்டது என்பதையும் விளக்குவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி நான் சற்று விரிவாக எழுத நேர்ந்தது.
தி.மு. கழக நிர்வாகக் குழுவின் இந்தத் தீர்மானம்கூட தன்னிச்சையாக எழுதப்பட்டு விடவில்லை. தி.மு. கழகம் தேர்தலில் போட்டியிடலாமா? கூடாதா? என்பதற்கு எப்படி அண்ணா அவர்கள் திருச்சி மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுத்தார்களோ, அதைப்போலவே நிர்வாகக் குழுவிற்கு வந்திருந்த அனைவரிடமும் ஒரு கேள்விப் பட்டியல் கொடுக்கப்பட்டு, அந்தப் பட்டியலுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அளித்த பதில்களை அடிப்படையாக வைத்துத்தான் நிர்வாகக் குழுவின் தீர்மானமே தயாரிக்கப்பட்டது.
அந்தத் தீர்மானத்தைப் படித்துவிட்டுச் செய்தியாளர்கள், "உங்களுடைய பழைய கூட்டணிக் கட்சிகளுக்கு இனி உங்கள் கதவு மூடப்பட்டு விட்டதா?" என்று கேட்டதற்கு - "அது உங்கள் கருத்தாக இருக்கலாம், நாங்கள் செய்யுளை எழுதியிருக்கிறோம். அதற்கு பதவுரை - பொழிப்புரை எழுத வேண்டியது உங்களுடைய திறமையைப் பொறுத்தது!"
என்று கூறினேன். அடுத்து செய்தியாளர், "தி.மு. கழகம் சந்தர்ப்ப வாத இயக்கம் என்று மார்க்சிஸ்ட்டுகள் கூறியிருக்கிறார்களே...?" என்று கேட்டதற்கு விளக்கம் அளித்தேன். "சந்தர்ப்பவாதக் கட்சி எது என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் தெளிவாகப் புரிந்துக்கொள்வார்கள் - இந்த நாட்டு அரசியல் வரலாற்றைப் பார்த்தால், சந்தர்ப்பவாதக் கட்சி எது என்பது நன்றாகத் தெரியும். 1998 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் கல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் என்ன தீர்மானம் நிறைவேற்றினார்கள்?
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், பா.ஜ.க.வும்.காங்கிரசும் ஒன்றுதான். ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல; இரண்டையும் நாங்கள் ஒன்றுபோல் கருதி எதிர்க்கிறோம்!" என்று தீர்மானம் போட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். தி.மு.க. வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்துக்கொண்ட எந்தவொரு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் முஸ்லீம் லீக் தலைவர்கள் வரக்கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்தவர்கள் மார்க்சிஸ்ட்டுகள்!"
கலைஞர் 1998ஆம் ஆண்டு. மே மாதம், என் இல்லத்திற்கு வந்த டாக்டர் ராமதாஸ், "இது மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பு கூட்டணிபற்றிப் பேசியிருக்கிறேன்" என்று கூறினார் - என்று கூறியதோடு, அவர்கள் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள் என்பதற்கான பல எடுத்துக் காட்டுகளையும் அன்றைய தினம் நான் செய்தியாளர்களிடம் எடுத்து விளக்கினேன்.
★ ★ ★ நிர்வாகக் குழுவிற்குப் பிறகு - அதுவரை ஜெயலலிதா அணியில் இருந்த தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள், 2.5.1999 அன்று என் இல்லத்தில் என்னைச் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வாழப்பாடியார் கூறும் போது, "கடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது, நாட்டின் நலன் கருதி பா.ஜ.க. ஆட்சி தொடர வேண்டுமென்பதற்காக தி.மு.கழகத்தின் வாக்குகளை அளிப்பதற்கு முன்வந்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சந்தித்தேன்" என்றும், "தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.கழகம் இந்தக் கூட்டணியிலே பங்கேற்குமானால், அது தலைமையேற்று தொடர்ந்து நடத்துவதற்கு நாங்கள் பெரிதும் விருப்பப்படுகிறோம்!"
என்று சொன்னார். "தி.மு. கழகத் தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க.. பா.ம.க., தமிழக ராஜீவ் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டு, பா.ஜ.க. மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்" என்றும் அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
வாழப்பாடியாரிடம் செய்தியாளர்கள், "கடந்த காலத்தில் கலைஞர்மீது நீங்கள் கூறிய குற்றச் சாட்டுகள்பற்றி தற்போது என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "அவைகளையெல்லாம் கெட்டகனவாக மறந்து விடுங்கள்" என்றார். ★ ★ ★ அதற்கடுத்த நாளே, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், நண்பர் கோ.க. மணி அவர்களும் என் இல்லத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். சந்திப்பிற்குப்பின் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், "அன்று மகிழ்ச்சிகரமான சந்திப்பு" என்று தொடங்கி, "நாங்கள் நீண்ட நாள் நண்பர்கள்.
இடையில் கொஞ்ச நாள் அரசியல் ரீதியாகச் சந்திக்க முடியவில்லை. இப்போது அரசியல் ரீதியாகவும் சந்தித்திருக்கிறோம். இன்று ஆரம்பக் கட்டப் பேச்சு வார்த்தையை நடத்தியிருக்கிறோம். இந்தப் பேச்சு வார்த்தையை எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களுடைய கருத்துக்களை நான் கேட்ட பிறகு, அதனுடைய அடிப்படையில் நடத்தியிருக்கிறேன்" என்றார்.
"வருகிற தேர்தலில் தி.மு.க.வும். பா.ம.க.வும் ஒன்றாகப் போட்டியிடுமா?" என்ற கேட்டதற்கு, "நாங்கள் சந்திப்பது பிறகு எதற்காக? தனித் தனியாகப் போட்டியிடுவதற்கா?" என்றார். அன்றைய தினம் மாலையில், மத்திய அரசின் மின்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான ரெங்கராஜன் குமாரமங்கலம் அவர்களும், 1999 ஜுன் மாதம், 2ஆம் நாள், அறிவாலயத்தில் 'கலைஞர் அரங்கம்' திறப்பு விழாவின் போது நடைபெற்ற பொதுக்குழுவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க.வும் சேர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
கலைஞர் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், வாஜ்பாய் அந்தக் கட்சியின் வேறு சிலரும் என்னைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். "பா.ஜ.க.வினால் கூட்டணி ஆட்சி மூலம் இந்தியாவிற்கு ஸ்திரமான ஆட்சியைத் தர முடியுமென்று கருதுகிறீர்களா?"
என்று பத்திரிகையாளர் கேட்டபோது. "இப்போது அப்படித்தான் நாங்கள் கருதுகிறோம்" என்று பதில் கூறினேன். ★ ★ ★ நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்களிப்பில் ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்கள் கலந்துக்கொண்ட பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பிரதமர் வாஜ்பாய் தலைமையில் "தேசிய ஜனநாயகக் கூட்டணி" (National Democratic Alliance - NDA) ஒன்றை உருவாக்கிட முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க எல்.கே.
அத்வானி தலைமையில், முரசொலி மாறன், ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் அடங்கிய குழுவை அமைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மு. கண்ணப்பன், எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர், 19.5.1999 அன்று என் இல்லத்தில் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்களுடன் கூட்டணி பற்றிப் பேசியதோடு,
பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தொடர்ந்து விளக்கமாகப் பேசலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ★★★ 1999ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் தேதியன்று, கழகப் பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவில் முக்கியமாக அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது பற்றிய விவாதம் நடைபெற்று, முக்கியமான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கழகம் ஏன் அந்த நிலைமையை மேற்கொள்ள நேரிட்டது என்பதை விளக்குகின்ற வகையில் அந்தத் தீர்மான வாசகங்கள் கலைஞர் அமைந்திருந்தன.
அந்தத் தீர்மானத்தின் முக்கியப் பகுதிகள் வருமாறு:- மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட வாஜ்பாயை, நான் வாழ்த்தினேன். ★ "இந்திய அரசியல், நாம் விரும்பியோ, விரும்பாமலோ இங்கிலாந்து, அமெரிக்காபோல முற்றிலும் இரு கட்சி அரசியலாக மாறா விட்டாலும், ஏறத்தாழ இருவேறு அணிகளாக உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது (Indian Political Party. System is becoming increasingly bi - polar) இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் மிகவும் தொன்மையான மாநிலக் கட்சி என்கிற வரலாற்றுப் பெருமை பெற்ற தி.மு.
கழகம், தான் கொண்டிருக்கிற கொள்கைக்குச் சிறிதும் பாதகம் ஏற்படாத வகையில், வரவிருக்கும் 13 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், தனது பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ★ "எனவே, எந்த அணி மாநிலக் கட்சிகளை மதித்து நடப்பதாகத் தனது நடைமுறையை வகுத்துக் கொண்டிருக்கிறதோ - ★ "எந்த அணி யதேச்சாதிகாரமாக நடக்காமல், ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, ஒத்த கருத்துடையோரை அழைத்துப் பேசும் பண்பாட்டைக் (Culture) கொண்டிருக்கிறதோ - ★ "எந்த அணி மாநிலக் கட்சிகளை மதிப்பதன் மூலம் இந்த 'பன்மைச் சமுதாயத்தை' (Plural Society) மதித்து, அதை ஒற்றுமையுடன் மேலும் நடத்திச் செல்லும் சாதனம் கூட்டாட்சி (Federalism) என்று கூறுகிறதோ - ★ "மேற்கூறியவற்றின் அடையாளமாக எந்த அணி, தனி ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், மாநிலக் கட்சிகளுடனும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதாகத் தேர்தலுக்கு முன்பே பிரகடனம் செய்திருக்கிறதோ - ★ "எந்த அணியில் எல்லைப்புறத்தில் பீரங்கிகள் முழங்கும் நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில், திறமையும் அனுபவமும் தியாக வரலாறும் பெற்ற தலைவர் இருக்கிறாரோ - ★ "அந்த அணியோடு கூட்டுச் சேர்வதுதான் தி.மு.க.
பயணம் மேற்கொள்வதற்கேற்ற நல்ல துணை என்று கருதுவதோடு; அதுவே நாட்டின் நன்மைக்கும், ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி நடைமுறைக்கும் உகந்தது என்றும் உணர்கிறது. ★ "எனவே, நல்லவரும், வல்லவருமான (Gentleman Politician) ஆகத் திகழ்கிற திரு. அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் செயல்பட முனைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) என்கிற அமைப்பில், தி.மு. கழகமும் சேர்வதென்கிற முடிவினை இப்பொதுக்குழு முழு மனதுடன் ஆதரித்து ஏற்றுக்கொள்கிறது.
★ "இந்த N.D.A.என்பது முற்றிலும் புதிய அமைப்பு (A New Entry) அது முற்றிலும் மதச் சார்பற்று இயங்கும் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். ★ "இது, மூதறிஞர் ராஜாஜி தலைமையில் இயங்கிய சுதந்திராக் கட்சியோடு முன்பு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இயங்கிய தி.மு.க. தேர்தல் உடன்பாடு செய்துக்கொண்டது போன்றதுதான். ★ "அதை அப்போதே தந்தை பெரியாரே - ஏன்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்கூட - திராவிடர் இயக்கத்தைப் பேரறிஞர் அண்ணா தனது 'குலவைரி'யான ராஜாஜியிடம் அடகு வைத்து, அடிமையாகிவிட்டதாக வர்ணித்தது நினைவிருக்கலாம்.
கலைஞர் ★ "அத்தகைய பிரச்சாரம் இப்போதும் செய்யப்படுகிறது. முடிவில் அறிஞர் அண்ணா அவர்களோ - அவருக்குப் பின் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்களோ திராவிடர் இயக்க இலட்சியத்தில் கடுகளவையும், விட்டுக் கொடுக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். ★ "அன்று 1967 இல் அந்தப் பிரச்சாரம் எப்படி மக்களால் தோற்கடிக்கப்பட்டதோ, அதுபோலவே இன்றும் இந்தப் பிரச்சாரம் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏனெனில், சமூகத் தீண்டாமை (Social Untouchability) எவ்வளவு தீங்கானதோ - அது போன்றதே அரசியல் தீண்டாமையும் (Political Untouchability) ஆகும். ★ "இந்திய அரசியல் வானில் உதயசூரியனாய் உதித்திருக்கும் N.D.A. என்கிற புதிய அரசியல் அமைப்பு குறித்தும், இந்திய அரசு ஏறத்தாழ இரு அணிகளாக (bi- polar) மாறி வருவது குறித்தும், இந்திய ஜனநாயத்தில் அக்கறை கொண்டோர் அகமகிழ்வு கொள்ள வேண்டுமே தவிர; அதைச் சாக்காக வைத்துக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு வித மத வெறிக்குத் துணை போவது - தூபம் போடுவது சரியல்ல - என்கிற கருத்தினையும் இப்பொதுக்குழு பணிவன்புடன் மக்கள்முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறது.
★ "அது போலவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அருமைச் சகோதர, சகோதரிகளுக்கு இந்தப் பொதுக்குழு ஒன்றைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. ★ "சிறுபான்மையினரின் தோழனாக - தொண்டனாக - பாதுகாவலனாகத் தி.மு. கழகம் தொடர்ந்து செயல்படும் என்கிற உறுதிமொழியை தி.மு. கழகம் மீண்டும் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஒரு தீங்கென்றால், கழகத்தின் ஒவ்வொரு செயல்வீரனும் பொங்கியெழுந்து, தன் உயிரையும் கொடுத்துப் போராடுவான் என்கிற வாக்குறுதியையும் மீண்டும் அளிக்கிறது.
★ "இந்தியாவில் உருவாகியிருக்கும் இந்தப் புதிய சூழ்நிலைகளைப் புரிந்துக்கொண்டு - புதிய கொள்கைத் திட்டத்தோடு, சுமார் நூறு கோடி மக்கள் வாழும் துணைக் கண்டம்போல் பரந்து கிடக்கும் இந்நாட்டை ஆள்வதற்குத் தகுதியும் அனுபவமும் பெற்ற ஒரு ஆற்றலாளர் தலைமையில் புதிதாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் தங்கள் முழு ஆதரவையும் நல்கி வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை இப்பொதுக்குழு விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறது. ★ "சில சொல்லிக் சந்தேகங்களுக்கு, விளக்கம் கொள்கிறோம் - சிறுபான்மையினருக்கு எப்பக்கமிருந்து தீங்கு வந்தாலும், அதை தி.மு.க.
பார்த்துக்கொண்டிருக்காது; ஆட்சிப் பொறுப்பையும் தூக்கி யெறிந்துவிட்டு அவர்களுக்குக் கவசமாக இருக்கும் என்கிற எங்கள் வாக்குறுதியை மீண்டும் அளித்து; இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு என்கிற புதிய பேரமைப்பினைத் தமிழ்நாட்டு மக்களிடம் அர்ப்பணிக்கிறோம்" ★ ★ ★ 2.8.1999 அன்று அண்ணா அறிவாலயக் கழக அலுவலகத்தில், தி.மு.க., பா.ம.க., தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று, அந்த இரண்டு கட்சிகளுக்குமாக 1. மயிலாடுதுறை, 2.
சிதம்பரம், 3. வந்தவாசி, 4. வேலூர், 5.தர்மபுரி, 6.பாண்டிச்சேரி, 7. செங்கற் பட்டு, 8. ராசிபுரம், 9. சேலம் ஆகிய தொகுதிகள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டன. 3.8.1999 அன்று தி.மு. கழகத்திற்கும், பா.ஜ.க.விற்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று, 1. திருச்சி, 2. கோவை, 3.நீலகிரி, 4.நாகர்கோவில், 5. தென்காசி, 6. சிவகங்கை கலைஞர் சோனியாவுடன் பேசவிருந்த கூட்டத்தை, ஜெயலலிதா புறக்கணித்தது குறித்து - 'தினமணி' வெளியிட்ட கேலிச் சித்திரம்.
ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடுவதென்று முடிவெடுக்கப்பட்டது. அரக்கோணம் தொகுதியில் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்றும் ஆர்.எம். வீரப்பன் அவர்களோடு ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது. அதுபோலவே எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வுடன் பேசி, புதுக்கோட்டைத் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 7.8.1999 அன்று தாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளுக்கான கழக வேட்பாளர்களின் முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
8.8.1999 அன்று தி.மு.க., ம.தி.மு.க. இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று, 1. சிவகாசி. 2. திண்டிவனம், 3. பழனி, 4. திருச்செங்கோடு, 5. பொள்ளாச்சி ஆகிய தொகுதிகள் ம.தி.மு.க.விற்கு என்று பகிர்ந்துகொள்ளப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எந்தெந்த கட்சிகள் - எந்தெந்த கூட்டணியில் இடம் பெற்றன என்ற விவரங்களை நான் இவ்வாறு கூறுவதற்குப் பதிலாக, 21.8.1999 தேதிய "தினமணி" தலையங்கத்தைக் குறிப்பிட்டாலே இந்த விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.
அது வருமாறு:- ★ "நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அணிகள் தமிழ் நாட்டில் அமைந்துவிட்டன. இவற்றை முழுமையான கூட்டணிகள் என்று கூறுவதைவிட, தொகுதி உடன்பாடு கண்டுள்ள கட்சிகளின் அணிகள் என்பதே பொருத்தமாக இருக்கும். ★ "தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணியே முதலில் உருவானது. அதில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொடக்கத்தில் இருந்து தமது நிலையில் தெளிவாக இருந்தன.
தொகுதிப் பங்கீட்டில் பா.ம.க., பா.ஜ.க. ம.தி.மு.க., த.ரா.கா., ஆகிய ஒவ்வொன்றும் கடந்த தேர்தலில் தாம் போட்டியிட்டதைவிட, மிகுதியான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றுள்ளன. ஆர்.எம். வீரப்பன், எஸ். திருநாவுக்கரசு தலைமையிலான கட்சிகளுக்கும் ஒவ்வொரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இம்முறை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி, பரந்த அடிப்படையிலான உறவு ஏற்படப் பெருந்தன்மையுடன் நடந்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
வாஜ்பாய்தான் பிரதமர் என்பதை முன்னரே சொல்ல முடிந்துள்ளது. அத்துடன், வெற்றிபெற்றால் மாநிலக் கட்சிகள் உள்ளிட்டக் கூட்டணி ஆட்சிதான் என்று திட்ட வட்டமாக அறிவித்திருப்பதும், செயல் திட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதும் இந்த அணிக்கு வலு சேர்த்திருக்கிறது. ★ "அ.தி.மு.க. அணி முதலிலேயே பங்கீட்டை முடித்துவிட்ட போதிலும், அவர்களுக்குள் உடன்பாடு என்பது ஜெயலலிதாவின் அறிவிப்புகள்தான். அ.தி.மு.க.விடம் கலைஞர் அடைக்கலம் புகுந்த பல கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
இதனால் ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் வெளியேற வேண்டியதாயிற்று. தனிக்கட்சி ஆட்சி அமைக்க விழையும் காங்கிரஸ், ஆட்சியில் பங்கு கொண்டு தன்னைக் காத்துக் கொள்ளத் துடிக்கும் அ.தி.மு.க., வெளியிலிருந்தே ஆதரவு தர முயலும் கம்யூனிஸ்டு கட்சிகள் என்ற இந்த அணியில் உள்ள கட்சிகளின் நிலைகள் வேறு வேறாக உள்ளன. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர்களால் தெளிவாக விளக்க முடியவில்லை" - இதுவே "தினமணி" தலையங்கம்.
★ ★ ★ தி.மு. கழகம் இடம் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா, 16.8.1999 அன்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் கழகத்தின் சார்பில் நானும், தம்பி முரசொலி மாறனும் பா.ம.க. சார்பில் டாக்டர் இராமதாஸ், ம.தி.மு.க. சார்பில் வை.கோ. தமிழக ராஜீவ் காங்கிரஸ் சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தி, பிஜூ ஜனதாதளம் சார்பில் நவீன் பட்நாயக், லோக் சக்தி சார்பில் இராமகிருஷ்ண ஹெக்டே, அகாலிதளம் சார்பில் பிரகாஷ் சிங் பாதல், சமதா கட்சியின் சார்பில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிவசேனா சார்பில் பால் தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் பரூக் அப்துல்லா, மற்றும் மேனகா காந்தி ஆகியோர் கலந்துக்கொண்டோம்.
மேலும், மத்திய அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி, பா.ஜ.க. தலைவர் குஷாபால் தாக்கரே, சிக்கந்தர் பக்த், சுர்ஜித் சிங் பர்னாலா, ஜஸ்வந்த் சிங் ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள். டெல்லியிலிருந்து திரும்பிய நான், 18.8.1999 முதல் செப்டம்பர் 9 ஆம் தேதிவரை, தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டேன். 22.8.1999 அன்று தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டேன். ★ ★ ★ 23.8.1999 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா சோனியா காந்தியும், ஜெயலலிதாவும் கலந்துக்கொள்வதாக பெரும் ஏற்பாடுகளும் விளம்பரங்களும் செய்யப் பட்டிருந்தன.
24 ஆம் தேதி வெளிவந்த ஏடுகளில் காந்தி கலந்து கொண்ட மேடையில், ஜெயலலிதாவிற்காகப் போடப்பட்டிருந்த நாற்காலி காலியாக இருந்ததையும் எடுத்துக்காட்டி, "சோனியா கூட்டத்தை ஜெ. புறக்கணிப்பு" என்றே எடுத்துக் காட்டியிருந்தார்கள். சோனியா காந்தியின் கூட்டத்தை ஜெயலலிதா புறக்கணித்ததற்கான காரணங்கள் என்று ஏடுகள் வெளியிட்டிருந்ததில் முதல் காரணம் - தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி - லாலுவாக இருந்தாலும் சரி - ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் தண்டனை அடைந்துதான் தீர வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், ஊழல்வாதிகளைத் தப்பவிடமாட்டோம்" என்று மன்மோகன் சிங் அப்போது கூறியதுதான் என்று ஏடுகள் வெளியிட்டிருந்தன. "தொண்டர்கள் அதிர்ச்சி; அதிருப்தி" என்ற தலைப்பில் ஜெயலலிதாவின் புறக்கணிப்பு பற்றி "தினமணி" எழுதும்போது - "ஒரே கூட்டணியில் இருந்தாலும், அ.தி.மு.க. - காங்கிரஸ் இடையே மறைமுகமாக இருந்த கசப்புணர்வு, இப்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. விழுப்புரம் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவார் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதை அவர் புறக்கணித்தது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தபடியே, 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அவர் தனது பயணத்தைத் துவக்கவில்லை. மூன்றரை மணிக்குத்தான் துவக்கினார். காங்கிரஸ் கட்சிக்கு கலைஞர் முக்கியத்துவம் தந்து பிரச்சாரம் செய்வதை இக்கூட்டணி ஏற்பட்ட நாள் முதலாகவே ஜெயலலிதா தவிர்த்து வருகிறார். தி.மு.க.வை சோனியா திருச்சி கூட்டத்தில், காந்தி விமர்சிக்காததும் ஜெயலலிதாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரத்தில் 4 மணி கூட்டத்துக்குச் சென்னையிலிருந்து 3.21 மணிக்குத்தான் ஜெயலலிதா புறப்பட்டார்.
ஜெயலலிதா பேசிய கூட்டங்களில், "காங்கிரஸ் கட்சியால் நிலையான ஆட்சியைத் தர முடியும்" என்று அவர் பேசவில்லை. "சோனியாதான் பிரதமர்" என்றும் ஜெயலலிதா குறிப்பிடவில்லை என்று காங்கிரசார் வருத்தப்படுகின்றனர். ஓரணி தான் என்றாலும், இரு கட்சிகளின் தலைமைகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கவில்லை. இதன் வெளிப்பாடுதான் விழுப்புரம் சம்பவம்" என்று "தினமணி" எழுதியிருந்தது.
காங்கிரஸ் கட்சியோடு தேர்தல் கூட்டணி கொண்டபோது எந்த அளவிற்கு அ.தி.மு.க.வும், அதன் தலைவியும் நடந்துக்கொண்டார்கள் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே அப்போது சான்றாகத் திகழ்ந்தது. ★ ★ ★ 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம், கொண்டு போட்டியிட்ட பா.ஜ.க.வுடன் தோழமை காரணத்தால், உள்ள தமிழகத்திலே எதிர்க்கட்சிகள், "தி.மு.கழகம் இனி சிறுபான்மையினருக்கு எதிராகத்தான் செயல்படும்!"
என்று பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். அது உண்மையோ என்றஞ்சி, தமி
ழகத்தைச் சேர்ந்த சிறுபான்மை சமுதாயத்தினரின் பிரதிநிதிகள் சிலர் என்னைச் சந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில், 27-9-1999 அன்று என் இல்லத்தில் தமிழக சிறுபான்மையினர் ஐக்கியப் பேரவை - தமிழக ஆயர் பேரவை - தமிழக துறவியர் பேரவை - மற்றும் தமிழக கிறித்தவர்கள் சார்பாக சென்னை பேராயர் அருள் தாஸ் ஜேம்ஸ், பாண்டிச்சேரி பேராயர் மைக்கேல் அகஸ்டின், துணை ஆயர் லாரன்ஸ் பயஸ், அருட்திரு எபனேசர் இம்மானுவேல், அருட் தந்தை வின்சென்ட் சின்னதுரை , அருட்தந்தை சாமுவேல் ஜேக்கப், அருட்தந்தை ஆரோக்கிய தாஸ், எபினேசர் சுந்தர்ராஜ், அருட் சகோதரி எல்சா, அருட் சகோதரி டெய்சி மற்றும் வலம்புரி ஜான் ஆகியோர் என்னைச் சந்தித்தனர்.
அவர்களுடைய கோரிக்கைகளையெல்லாம் கேட்டறிந்த நான், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் - "தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது வேறு யாருடைய அரசியல் கரமும் அல்ல - அது இந்திய மக்களின் ஒன்றாக இணைந்த அரசியல் கரம். எனவே யாரும் ஒதுக்கி வைக்கப்படமாட்டார்கள். அனைவருக்கும் நீதியும் நேர்மையும் வழங்கப்படும். எவர் ஒருவருக்கும் எந்த அளவு பாரபட்சமும் ஏற்படுத்தப்படமாட்டாது" என்று குறிப்பிட்டிருப்பதை விளக்கிக் கூறினேன்.
"தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை சிறு பான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட என்றைக்கும் பாடுபடும்!" என்றும் உறுதியளித்தேன். ★ ★ ★ செப்டம்பர் மாதம், 5 மற்றும் 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் முடிவுற்று, அக்டோபர் 6 ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் தி.மு.கழகக் கூட்டணி 26 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 13 இடங்களிலும் வெற்றி பெற்றன.
அகில இந்திய அளவில் தி.மு.க. இடம் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 134 இடங்களிலும், இடதுசாரிக் கட்சிகள் 42 இடங்களிலும், மற்றவர்கள் 58 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 8-10-2009 அன்று டெல்லியில் நடை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் நான் கலந்துக்கொண்டேன். முரசொலி மாறனும், ஆர்க்காடு வீராசாமியும் என்னுடன் வந்திருந்தார்கள். குடியரசுத் தலைவரைச் சந்தித்து, கலைஞர் ஆட்சி அமைக்க உரிமை கோருவதென்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
10ஆம் தேதியன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள், வாஜ்பாய் அவர்களை நாடாளுமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். 12-10-1999 அன்று, டெல்லியில் உள்ள தமிழ் நாடு மாளிகையில் கழக எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்று, முரசொலி மாறன் நாடாளுமன்றத் தி.மு.க. கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 13-10-1999 அன்று வாஜ்பாய் தலைமையில் புதிய மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றது.
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணகாந்த், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் குஜ்ரால் ஆகியவர்களோடு, நானும், சந்திரபாபு நாயுடு, பரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரும் கலந்து கொண்டோம். கழகத்தின் சார்பில் முரசொலி மாறன், டி.ஆர். பாலு, ஆ.
ராஜா ஆகியோரும், ம.தி.மு.க. சார்பில் மு. கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரும். பா.ம.க. சார்பில் என்.டி.சண்முகம், ஈ.பொன்னுசாமி ஆகியோரும், பா.ஜ.க. சார்பில் ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்களும் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். ★ ★ ★ கடந்த ஓராண்டு காலமாக வாரந்தோறும் நான் எழுதி வந்த "நெஞ்சுக்கு நீதி" யின் ஐந்தாவது பாகம், இந்த 50 ஆவது அத்தியாயத்துடன் நிறைவு பெறுகிறது. ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு, கோப்புகளின் மத்தியில் இதற்கும் நேரம் கிடைக்குமா என்ற அய்யப்பாட்டோடு தொடங்கப்பட்டு, இந்தக் கடைசி இரண்டு மாத காலம் என்னுடைய உடல் நிலையையும் ஆபத்தான அறுவை சிகிச்சையினால் மோசமாக இருந்த நேரத்திலேகூட, இந்தத் தொடரைத் தொடர்ந்து எழுதி, இந்தக் கிழமையோடு தற்காலிகமாக சற்று இடைவெளி விடவிரும்புகிறேன்.
மூன்றாவது பாகம் நூலாக வெளிவந்தபோது. அதற்கு நான் எழுதிய முன்னுரையில், "நான்காவது பாகத்தை நான் எழுதுவேனா?" என்று கேட்டிருந்தாலும், நான்காவது பாகத்தையும் எழுதி, அது நூலாகவும் வெளிவந்து, தற்போது ஐந்தாவது பாகத்தையும் தொடர்ந்து எழுதிட இயற்கை உதவியிருக்கிறது. இந்த ஐந்தாவது பாகத்தை 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளோடு முடித்திருக்கிறேன். 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற நான் - என் உடல் நிலையையும் சமாளித்துக் கொண்டு - கழக வேட்பாளர்களின் நேர்காணலில் - நான் சிறிது நேரம் மட்டுமே இருந்துவிட்டுச் சென்றால் போதும் - நாங்கள் பார்த்துக்கொள்கிறோமென்று கழக முன்னணியினர் எல்லாம் தெரிவித்த நேரத்தில் - தேர்தல் வெற்றியை எனது உடல் நிலை தடுத்து விடக்கூடாது என்பதற்காக - சக்கர நாற்காலியிலேயே ஐந்து மணி நேரம் - ஆறு மணி நேரம் என்று தொடர்ச்சியாக அமர்ந்திருந்து - கழக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியிலே பகலிலே ஈடுபட்டு - இரவிலே இந்தத் தொடரை எழுதுகிறேன்.
எனது "வாழ்க்கை வரலாற்று நூல்" என்ற தலைப்பில் இது எழுதப்பட்டாலும் - என்னுடைய வாழ்க்கையோடு இணைந்து நம்முடைய இயக்கத்தின் வரலாறும், அந்த இயக்கம் இடம் பெற்றுள்ள இந்த நாட்டின் வரலாறும் ஒன்றிக் கலந்துதான் - இதனை எழுதி வருகிறேன். நான்காம் பாகத்தை, 1996 ஆம் ஆண்டு தி.மு. கழகம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததையொட்டி முடித்த நான் - இந்த ஐந்தாம் பாகத்தை, 1996 ஆம் ஆண்டில் கலைஞர் தொடங்கி, 1999 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி முடித்திருக்கிறேன்.
சில மாதங்கள் இடைவெளிக்குப்பின், பா.ஜ.க. அரசின் ஆட்சியில் தி.மு. கழகம் எந்த அளவிற்குப் பணியாற்ற முடிந்தது - அடிப்படைக் கொள்கையிலே எதிரெதிராக இருந்த நிலையில் எவ்விதம் பணியாற்றியது - பின்னர் அடிப்படைக் கொள்கை மாற்றம் காரணமாக எப்படி வெளியேற நேர்ந்தது என்பதை "நெஞ்சுக்கு நீதி" தொடரின் ஆறாவது பாகத்தில் தொடங்கி எழுதுவேன். (ஐந்தாம் பாகம் முற்றிற்று) கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது வெளியிடப்பட்டது.
