உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஏரி உடைப்பும்; என் கடமையும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஏரி உடைப்பும்; என் கடமையும்! · 361 / 391

49. ஏரி உடைப்பும்; என் கடமையும்! செங்குன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு - சென்னைக்கே மாபெரும் ஆபத்து உண்டாகவிருந்த செய்தியறிந்து, அதிகாலையிலேயே ஓடி அவ்விபத்தைத் தடுத்து நிறுத்தினேன் வா ஜ்பாய் அரசு தோல்வியடைந்ததையொட்டி, மாற்று அரசு அமைப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு கட்சித் தலைவர்களிடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அந்த நிலையில், குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான திருமதி சோனியா காந்தி சந்தித்துப் பேசினார்.

அப்போது குடியரசுத் தலைவர் மாற்று அரசு அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படிச் சோனியா காந்தியிடம் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருமதி சோனியா காந்தி, "காங்கிரஸ் கட்சி தனியாக ஆட்சி அமைக்கும்- தோழமைக்கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிப்பார்கள்!"

என்று கூறினார். அதற்கு காங்கிரசின் ஆதரவுக் கட்சிகளிடைய கடும் எதிர்ப்பு தோன்றியது. என்றாலும், காங்கிரஸ் அவர்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை. அப்போது 20 உறுப்பினர்களைக் கொண்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, "காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சிக்கும் எங்கள் கட்சி ஆதரவு அளிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் இடதுசாரிக் கட்சிகளான புரட்சி சோஷலிஸ்ட் கட்சி , பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவற்றின் கலைஞர் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, "காங்கிரஸ் கட்சி மாற்று அரசு அமைத்தால், "நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம்" என்று தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் சட்ட வல்லுநர்களை அழைத்து, "என்ன செய்யலாம்?" என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார். நிலையான ஆட்சி ஒன்று மத்தியில் நடைபெற்று வந்ததை மாற்றி, தமிழகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா தனது பிடிவாதம் காரணமாக நிலைகுலைந்த ஒரு நிலைமையைக் கோற்றுவித்தார். அதன் காரணமாக, தி.மு.க., பா.ஜ.க.விற்கு ஆதரவு காட்ட வேண்டிய ஒரு கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. பா.ஜ.க. ஆட்சிக்கு தி.மு.கழகம் அப்போது அளித்த ஆதரவு தேர்தல் கூட்டணியில் போய் முடியுமா?

என்ற ஒரு கேள்வி எழுந்தபோது - "இந்தச் சூழ்நிலையிலே தி.மு.க.அப்படியொரு நிலை எடுத்திருக்கிறது-தேர்தல் வருகின்ற நேரத்தில் கலந்து பேசி கூட்டணி எப்படி அமைப்பது என்பதைப் பற்றி யோசிப்போம்!" என்று கூறினேன். மேலும் தொடர்ந்து, "எங்கள் இயக்கம் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையில் உருவானது. சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை-கடவுளைப்பற்றி, மதத்தைப்பற்றி, செங்குன்றம் ஏரியில் ஏற்பட்ட இந்த அபாயகரமான உடைப்பை, அடைக்க, தொழிலாளர்கள் போராடினார்கள்.

ஏரி உடைப்புச் சரி செய்ய தீவிரப் பணி சாதிகளைப் பற்றி-இவைகளைப்பற்றிச் சொல்லுகிற வழிகளாக இருந்தாலும்-நாங்கள் எங்களுடைய சுயமரியாதையை-தனிப்பட்ட கருணாநிதியின் சுயமரியாதையை அல்ல- தி.மு.கழகம் எனும் இந்த அமைப்பின் சுயமரியாதையை இழந்துவிட முடியாது. அதையும் சேர்த்துத்தான் நாங்கள் சுயமரியாதை இயக்கம் என்று சொல்கிறோம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை ஒரு பேச்சு வார்த்தைக்குக்கூட காங்கிரஸ் இயக்கம் அழைக்கவில்லையே-என்பதை நாங்கள் எப்படி எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியும்?

அது உள்ளபடியே எங்களுக்கு வேதனை தரக்கூடிய செய்திதான்" என்று நான் கூறினேன். அப்படியென்றால், "பா.ஜ.க.வுடன் தேர்தல் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறீர்களா?" என்று செய்தியாளர் தொடர்ந்தார். அதற்கு நான், "நான் இப்போதே இல்லை என்றும் சொல்ல முடியாது-உண்டு என்றும் சொல்ல முடியாது. அதை எங்களுடைய செயற்குழு, பொதுக்குழு தான் தீர்மானிக்கும்" என்று கூறினேன்.

அப்போது ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு , தங்களுடைய ஆதரவு கலைஞர் பா.ஜ.க. அரசுக்குத்தான் என்றும், பா.ஜ.க.என்ற கட்சிக்கு அல்ல என்றும் ஒரு கருத்தை வெளியிட்டார். அதைக் குறிப்பிட்டு செய்தியாளர், "நீங்களும் அப்படித்தானா?"

என்று வினா எழுப்பியபோது- "நாங்கள் எடுக்கிற நிலையும் அரசு அமைப்பது குறித்த நிலையாகத்தான் இருக்க முடியும். கொள்கை அளவில் நாங்கள் பா.ஜ.க.வுடன் சமரசம் செய்து கொள்ளும் அளவிலே இருக்காது. அந்த அரசுக்கு ஆதரவாக இருப்போம். அரசிலே இருந்துகொண்டு எங்கள் கொள்கைக்கு மாறாக நடந்தால், அது குறித்து விவாதிப்போம்-என்று எப்படி 1998 இல் கூட்டணியில் இருந்துகொண்டே, சில புரட்சிகரமான கட்சிகள் கருத்து சொன்னார்களோ, அதே நிலையைத்தான் எடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினேன்.

★ ★ ★ கணிப்பொறி இணையத்தின் மூலம் "இந்தியா வேர்ல்டு சமாச்சார்" பத்திரிகை ஒரு கருத்துக் கணிப்பினை அந்த நேரத்தில் நடத்தியது. அதில், "இந்தியாவில் ஏற்பட்ட அந்த நிலைக்கு முக்கிய காரணமான வில்லன் யார்?" என்பதுதான் தலைப்பு. 8,352 பேர் அதிலே கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை அனுப்பியிருந்தனர். அவர்களில் 5,588 பேர் "ஜெயலலிதாதான் முக்கிய காரணம்" என்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர் என்றால், எந்த அளவிற்கு அவருடைய 'பெருமை' ( ?

) ஓங்கியிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கொள்கை மாறுபாடு கொண்ட தி.மு.க.-பா.ஜ.கவிற்கு எந்தக் கட்டத்தில் எப்படி ஆதரவு அளிக்க முன்வந்தது என்பது பெரிய பிரச்சினையாக அப்போது ஏடுகளில் எழுதப்பட்டது. என்னிடமும் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டார்கள். அவர்களிடம் நான் அளித்த விளக்கத்தின் சுருக்கம்:- ★ "எங்கள் கூட்டணிக் கட்சிகள் எங்களோடு கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளத் தயாராக இல்லை.

ஆங்காங்கு அவ்வப்போது கூடிப்பேசுகிற நிலைமையில் இல்லை. சந்திக்கும் இடத்திலே இந்தக் கருத்துக்களைச் சொன்னபோது - அதாவது ஜெயலலிதா இருக்கின்ற அணியிலே இருக்கக்கூடாது என்ற கருத்தை அவர்களும் வலியுறுத்திச் சொன்னார்கள். நானும் அந்தக் கருத்தை வலியுறுத்திச் சொன்னேன். அதற்கு யாரும் மறுப்புச் சொல்லவில்லை. தமிழ் நாட்டிலே உள்ள தோழமைக் கட்சிகள், த.மா.கா. வாக இருந்தாலும், சி.பி.எம்.ஆக இருந்தாலும், சி.பி.ஐ.ஆக இருந்தாலும், யாரும் இந்தக் கருத்தை மறுத்துச் சொல்லவில்லை.

என்னுடைய கருத்தை ஆதரிப்பது போல்தான் பேசினார்கள். அவர்கள் முடிவெடுப்பதற்கு முன்புகூட, இன்ன முடிவெடுக்கப் போகிறோம் என்று யாரும் என்னிடத்திலே சொல்லவில்லை. ★ "இதற்கிடையில், ஜெயலலிதா டெல்லிக்குச் சென்று, எங்களுடைய தமிழ்நாட்டிலே உள்ள கூட்டணிக் கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்களைச் சந்திக்கின்ற செய்திகள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. அப்போது கூட அவர்கள் யாரும் எங்களைக் கலந்து பேசவில்லை. எங்களை ஓரம் கட்டி விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

★ "இதையெல்லாம் விட நாங்கள் ஏன் காங்கிரசை ஆதரிக்கவில்லை என்றுகூட நீங்கள் கேட்கலாம். காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமிருந்து ஒரு தொலைபேசிச் செய்தி கூட எனக்குக் கிடையாது. சென்னையிலே தொலைபேசியிலே அழைக்கா விட்டாலும்கூட, டெல்லியிலே உள்ள முரசொலி மாறன் இடத்திலேகூட அவர்கள் யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் த.மா.கா. தலைவரை அழைத்துப் பேசக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொண்ட போது கூட என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

★ "எங்களைப் பொறுத்தவரையிலே, நாங்கள் மொரார்ஜிதேசாய் தலைமையிலே ஜனதா கட்சி ஆட்சி கலைஞர் அமைத்த போது- அப்போதும் நாங்கள் மொரார்ஜி தேசாய் அவர்களின் ஜனதா கட்சியை ஆதரித்த நிலை இருந்தது. அப்போது, ஜனதா கட்சியை ஆதரித்த கட்சி வாஜ்பாய் அவர்களின் ஜனசங்கம் கட்சி. ஏரிப் பகுதியில் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிடும் - மேயர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ★ "அதற்குப் பிறகு வி.பி.சிங் அவர்களின் தேசிய முன்னணியில் இருந்தோம்.

அந்த தேசிய முன்னணி ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்தது பா.ஜ.க. எனவே நாங்கள் இருந்த ஒவ்வொரு அணியிலும் பா.ஜ.க.இருந்திருக்கிறது. எனவே இப்போது ஒன்றும் புதிதல்ல-அதாவது, வாஜ்பாய் தலைமையிலே உள்ள அணியிலே நாங்கள் இருந்தால், அது ஒன்றும் புதுமையல்ல. வாஜ்பாய் அணியோடு நாங்கள் இருந்திருக்கிறோம். இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. தொடர்ந்து இருந்தால் அது ஒன்றும் புதிதல்ல" என்று பதிலளித்தேன்.

செய்தியாளர் :-மூன்றாவது அணியிலே இடம் பெற்றிருந்த உங்களிடம் பேசாமல், ஜோதிபாசு, சுர்ஜித், பரதன், முலாயம் , லல்லு போன்றவர்கள் அந்த அணியிலே இல்லாத ஜெயலலிதாவிடம் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன? நான் :- நான் முலாயம், லல்லுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், ஜெயலலிதாவை அவர்கள் நேரடியாக எதிர்த்துப் பேசியவர்கள் அல்லர். அதனால் அவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தது என்பது இயல்பான ஒன்றாகக் கூட இருக்கலாம்.

ஆனால், சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் எங்களோடு சேர்ந்து ஜெயலலிதாவை அவருடைய செயல்களை-அவருடைய அமைச்சர்கள் இருவர் பா.ஜ.க. அரசில் இருந்து கொண்டு செய்த சேட்டைகளை-தொடர்ந்து கண்டித்து வந்தவர்கள். இந்தச்சூழ் நிலையில் குறைந்த வாக்குகளில் பா.ஜ.க. அரசு கவிழ்கிறது என்பதற்காக மாத்திரம் ஜெயலலிதாவை அவர்கள் அழைத்துப் பேசியது எனக்கு வருத்தம் அளிக்கக் கூடியதுதான். பழகிக் கொண்டிருந்த நம்மைப் புறக்கணித்து விட்டு, நம்மோடு சேர்ந்து கடைசி நிமிடம்வரை எந்தக் கருத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களோ, அந்தக் கருத்துக்கு மாறாக, டெல்லியிலே ஜெயலலிதாவை சுர்ஜித் சந்தித்துப் பேசியது, அவர்களோடு சேர்ந்து ஒரு அரசைக் கவிழ்க்க முனைந்தது என்பதிலேகூட அல்ல- ஜெயலலிதாவோடு சேர்ந்து கொண்டு என்கிற போதுதான் என்னுடைய மனதிற்கு வேதனையைத் தருகிறது.

ஊழலின் ஒரு உலைக்களத்தை தமிழ்நாட்டில் மறுபடியும் உலவவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும். சி.பி.ஐ.தோழர்களும் எப்படி அனுமதித்தார்கள் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அதிலே எனக்கு மிகுந்த மன வேதனை உண்டு. "அதிகாலையிலேயே எழுந்து சென்று ஏரி உடைப்பை அடைக்க அளப்பரிய காரியங்களைச் செய்த முதல்வர் கலைஞரை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அவரை மனதாரப் பாராட்டுகிறேன்."

-என்றார் கோ.க.மணி செய்தியாளர் :- அ.தி.மு.க.தலைவர்களின் 46 வழக்குகள் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் உறவு வைத்துக்கொண்டால் அது எவ்வாறு இருக்கும்? நான் :- அது மக்களிடத்தில் நிச்சயமாக எடுபடாது என்பதுதான் என்னுடைய கருத்தாகும். செய்தியாளர் :- பா.ஜ.க.அரசுக்கு ஆதரவு தருவது என்று ஒரு முடிவு எடுத்தது எந்தக் கட்டத்தில்? ஜெயலலிதா, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி அளித்த தேநீர் கலைஞர் விருந்தில் கலந்துக்கொண்ட பிறகா?

அல்லது அத்வானி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் உங்களுடன் தொலைபேசியில் பேசிய பிறகா? நான்:- பா.ஜ. வின் கொள்கையில் நாங்கள் சமரசமாகி, அந்த அடிப்படையில் இந்த முடிவை எடுக்கவில்லை. தி.மு. கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் அப்படியே இருக்கின்றன. அவைகளை அப்படியே சிந்தாமல், சிதறாமல் காப்பாற்றக்கூடிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு என்றைக்கும் உறுதியாக உண்டு. அதே நேரத்தில், இந்தியாவினுடைய அரசியலில்-ஜனநாயகத்தில் - எங்களுக்கு ஒரு உறுதியான நிலை இருக்க வேண்டுமென்ற கோட்பாடும் உண்டு.

வாஜ்பாய் அவர்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் ஒரு நல்ல மனிதர் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். பா.ஜ.க. விற்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அவருடைய குணத்தால் நான் ஈர்க்கப்பட்டவன். "வாஜ்பாய் ஆட்சி கவிழக் காரணமான வில்லன் யார்?"

என்று கருத்துக்கணிப்பு நடத்தி 'ஜெயலலிதா தான் முக்கிய காரணம்' என்று கேலிச்சித்திரம் வெளியிட்டது, 'இந்தியா வேல்ட் சமாச்சார்' ஆங்கில ஏடு. இதற்கிடையே, பா.ஜ.க. அரசு கவிழ வாக்களித்த கட்சிகளில் ஒரு கட்சியாக இருந்த த.மா.கா. தலைவர்களில் ஒருவரான நண்பர் ப. சிதம்பரம் அவர்கள், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, அதிலே அ.தி.மு.க. பங்கேற்றால், அதனை எதிர்த்து வாக்களிப்போம்!"

என்று கூறினார். மூப்பனார் அவர்களோ, "காங்கிரஸ் ஆட்சிக்கு மற்றக்கட்சிகள் வெளியிலேயிருந்து ஆதரிக்கட்டும்" . என்றார். வாஜ்பாய் ஒரு நல்ல மனிதர் பா.ஜ.க.விற்கும் எங்களுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் அவரது உயரிய குணத்தால் ஈர்க்கப்பட்டவன் நான். "காங்கிரஸ் தலைமையில் மாற்று அரசு அமைப்பதற்கு ஆதரவு அளிக்க | முடியாது!"

என்று புரட்சிகர சோஷலிசக் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சிகள் திட்ட வட்டமாக அறிவித்தன. மாற்று அரசில் தாங்களும் வேண்டும் என்று ஜெயலலிதா, முலாயம்சிங், லாலு பிரசாத் ஆகியோர் பிடிவாதமாகத் தெரிவித்தனர். அதனால் புதிய அரசு அமைக்கும் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையில் அமையும் சிறுபான்மை அரசுக்குப் பிற கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தின.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் ஜெயலலிதா, "மாற்று அரசுக்கு தலைமையேற்று பிரதமராக ஜோதிபாசு முன் வந்தால் அ.தி.மு.க. அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்கும்!" என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்த தி.மு.க. இந்திய தேசிய லோக்தளம், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் வாஜ்பாய் தலைமைக்குத் தொடர்ந்து ஆதரவைத் தருவோம் என்ற முடிவிலே இருந்தன. உள்துறை அமைச்சர் அத்வானி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ., பா.ம.க.

நிறுவனத் தலைவர் டாக்டர் ராம்தாஸ், அகாலித்தளத் தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஜனதாதளத் தலைவர் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த எரன் நாயுடு ஆகியோர் ஒன்றாகக் கூடி, வாஜ்பாய் தலைமைக்கு ஆதரவு தருவதாக அறிவித்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளாவிட்டாலும், சென்னையிலிருந்து கலைஞர் முரசொலி மாறன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, தி.மு. கழகத்தின் ஆதரவை உறுதி செய்தார். அதன் அடிப்படையில் அத்வானி அவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, 270 ஆதரவு உறுப்பினர்களின் பட்டியலை அளித்தார்.

★ ★ ★ தொடர்ந்து பல நாட்கள் டெல்லியிலேயே முகாமிட்டிருந்த ஜெயலலிதா. 24.4.1999 அன்று குடியரசுத் தலைவரையும், சோனியா காந்தியையும், ஜோதிபாசுவையும் மாறி மாறி சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம், "மாற்று அரசு அமைக்க காங்கிரஸ் கட்சியால் போதுமான பலத்தைத் திரட்ட முடியவில்லை. எனவே, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைப்பதற்கு வாய்ப்புகள் முழுமையாக இல்லை. எனவே, காங்கிரஸ் கட்சி வெளியேயிருந்து அளிக்கும் ஆதரவுடன், மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது.

அது குறித்து சோனியா காந்திதான் முடிவைத் தெரிவிக்க வேண்டும்!" என்றார். டெல்லியிலே முறையாக நடைபெற்று வந்த மத்திய அரசை - 'தேன் கூட்டைக் கலைத்தே தீருவேன்' என்று "தேன் கூட்டைக் கலைத்தே தீருவேன்." என்று வாஜ்பாய் அரசைக் கலைத்துவிட்டுப் பலனடையச் சதி

செய்த ஜெயலலிதா தானே வீழ்ந்தார். சூளுரைத்து, அங்கேயே முகாமிட்டு, மத்திய அரசு தன்னுடைய துணையோடு நடைபெறும் என்றும், அங்கே தன் மீதான வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நம்பிக்கையோடு, டெல்லி சென்று பல நாட்கள் முகாமிட்டிருந்த ஜெயலலிதா, தேன் கூட்டைக் கலைத்தும் தேன் கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தோடு சென்னை திரும்பினார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, மாற்று அரசு அமைந்திட - தான் கடுமையாகப் பாடுபட்டதாகவும், ஆனால் அந்த முயற்சியில் தோற்றுவிட்டதாகவும், வெளியிலிருந்து மாற்று அரசுக்கு ஆதரவு கொடுக்கக்கூடத் தயாராக இருந்ததாகவும், ஆனால் நடைபெறவில்லை என்றும் கூறினார்.

"தினமணி" நாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் படத்தில், ஜெயலலிதா - சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் படத்தைப் போட்டு, அவர்கள் "விரைவில் வருகிறது அரசியல் பூகம்பம்" என்று சொல்லிவிட்டு டெல்லி சென்றதையும், அதன் பிறகு அந்தப் பூகம்பத்தில் அவர்களே சிக்கிக்கொண்டு, கீழே விழுவதைப் போலவும் வெளியிட்டிருந்தார்கள்.

முலயாம்சிங் யாதவ், ஜெயலலிதா போன்றவர்கள் மூன்றாவது அணி என்று ஒன்றை அமைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசுவைப் பிரதமராக்கும் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சகட்ட அமைப்பு அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அந்த நிலையில் சோனியா காந்தி அவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, மாற்று அரசு அமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் தன்னால் திரட்ட முடியவில்லை என்று கூறினார்.

அதன்பின் குடியரசுத் தலைவர் பிரதமர் வாஜ்பாய் அவர்களை அழைத்தார். அவர்கள் பேசியதைத் தொடர்ந்து, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, அந்தக் கூட்டத்தில் மக்களவையைக் கலைத்து கலைஞர் விட்டுத் தேர்தலை நடத்தக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையேற்று குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதற்கிடையே, "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர், ரெங்கராஜன் என்னைச் சந்தித்தார்.

அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு:- செய்தியாளர்:- தேசிய முன்னணி அல்லது மூன்றாவது அணி உங்களுக்குத் தாய் வீடு என்றால், பா.ஜ.க. ஆதரவு, புகுந்த வீடு என்று கொள்ளலாமா? நான்:- ஜனதா ஆட்சிக் காலத்தில் மொரார்ஜி தேசாயை ஆதரித்தோம். அப்போது ஜனதாக்கட்சியை வாஜ்பாயின் ஜனசங்கம் கட்சி ஆதரித்தது. அதற்குப் பிறகு, வி.பி. சிங்கின் தேசிய முன்னணியில் அங்கம் வகித்தோம். அதற்கு வெளியிலிருந்து ஆதரவளித்தது பா.ஜ.க.

அந்த வகையில் வாஜ்பாய் அணியில் நாங்கள் இருப்பது புதுமையல்ல. அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கூட்டணி தொடர்ந்தால், அது ஒன்றும் புதிதல்ல. செய்தியாளர்:- திராவிட இயக்கக் கட்சிகள் ஒரு காலத்தில் பா.ஜ.க.வுடன் உறவு என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால், அ.தி.மு.க., ம.தி.மு.க - தற்போது பா.ஜ.கவுடன் தி.மு.க.வும் உறவு வைத்துக்கொள்ளும் நிலை ஏன்? நான்:- அரசு நிலையாக இருக்க வேண்டும் -அப்போதுதான் மக்கள் சங்கடங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்-என்ற அந்தச் சூழ்நிலைதான்.

செய்தியாளர்:- நாட்டின் ஸ்திரத்தன்மையைக் கருதி பா.ஜ.க.வுடன் உறவு வைத்துக்கொண்டீர்களா? நான்:- நாட்டின் ஸ்திரத்தன்மை என்பது நாட்டின் பொருளாதர ஸ்திரத்தன்மை - சமூக வாழ்வின் ஸ்திரத்தன்மை - இவைகள் எல்லாம் அடங்கியதுதான். அதற்குப் புறம்பாக ஆட்சி அடிக்கடி கவிழ்வதும், அடிக்கடித் தேர்தல் வருவதும் நல்லதல்ல - என்ற கருத்தின் அடிப்படையில்தான். செய்தியாளர்:- வாஜ்பாய் அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றதால், மக்களின் அனுதாபம் அவருக்கு இருப்பதாக உங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதா?

அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு, வாஜ்பாய் அரசு கலைப்புக்கு உதவிய சுப்பிரமணியன் சுவாமி. நான்:- பொது மக்களிடத்திலே வாஜ் பாய்க்கு நிறைய அனுதாபம் உள்ளது. ஒரு வாக்கு வித்தியாசம்கூட இல்லை. சபாநாயகரின் வாக்கைச் சேர்த்துக்கொண்டால், இரண்டு பக்கமும் 270 தான். செய்தியாளர்:- முரசொலிமாறனும் வை.கோ.வும் ஒரே காரில் சென்று குடியரசுத் தலைவரைச் கலைஞர் டில்லியிலே முகாமிட்டு புதிய கூட்டணி அமைக்கும் சதியில் ஈடுபட்டார் ஜெயலலிதா.

சந்தித்திருக்கிறார்கள். ம. தி. மு.க.வுடன் கூட்டணி ஏற்படுவதற்கு இது முன்னோடியா? நான் :- மாறனும், வை.கோ.வும் ஒரே காரில் செல்வது வழக்கமான ஒன்றுதான். அது இடையில் தடைபட்டிருந்தது. எதிர்காலத்தில் வை.கோ. ம.தி.மு.க. என்ற நிலையிலும், நாங்கள் தி.மு.க. என்ற நிலையிலும், ஒரே வண்டியில் பயணிக்கச் சாத்தியம் உள்ளது. செய்தியாளர்:- மூன்றாவது அணியிலே இடம் பெற்றிருந்த உங்களிடம் பேசாமல் ஜோதிபாசு, சுர்ஜித், முலாயம், லாலு போன்றவர்கள் அந்த அணியிலே இல்லாத ஜெயலலிதாவிடம் பேசியது குறித்து உங்கள் கருத்து என்ன?

நான்:- நான் முலாயம், லாலு பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை ஏனென்றால் ஜெயலலிதாவை அவர்கள் நேரடியாக எதிர்த்துப் பேசியவர்கள் அல்லர். அதனால் அவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தது இயல்பான ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால், சி.பி.எம்., சி.பி.ஐ., கட்சிகள் எங்களோடு ஜெயலலிதாவை - அவருடைய செயல்களை - அவருடைய அமைச்சர்கள் இருவர் பா.ஜ.க.அரசிலே இருந்துக்கொண்டே செய்த சேட்டைகளை - தொடர்ந்து கண்டித்து வந்தவர்கள்.

இந்தச் சூழ்நிலையில் குறைந்த வாக்குகளில் பா.ஜ.க. அரசு கவிழ்கிறது என்பதற்காக மாத்திரம் ஜெயலலிதாவை அவர்கள் அழைத்துப் பேசியது எனக்கு வருத்தம் அளிக்கக் கூடியதுதான். - இவ்வாறு செய்தியாளர் ரெங்கராஜனின் கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன். ★ ★ ★ 1.4.1999 அன்று காலையில், சேலம் சென்று ஒரு தொழிற்சாலைத் திறப்பு விழாவிலே கலந்துக்கொள்வதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்த நான், முதல்நாள் இரவு 11 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட்டேன்.

1 ஆம் தேதி விடியற்காலை 4.30 மணி அளவில், புலனாய்வுத் துறை ஐ.ஜி.யால் மிகுந்த அவசரமான செய்தி என்ற பரபரப்புடன் எழுப்பப்பட்டேன். சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் ஏரிக்கரை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும் - அதன் காரணமாக சென்னையும், அதன் சுற்றுப்புறங்களும் மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படலாம் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தது. உடனடியாகத் தலைமைச் செயலாளருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டக் கலெக்டருக்கும் தொடர்பு கொண்டு, உடனே முன் எச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளும்படி - தாழ்வான பகுதியிலே மேற்கொள்ளும்படியும் - தாழ்வான பகுதியிலே உள்ள மக்களையெல்லாம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்படியும் எச்சரித்ததோடு - 5 மணி அளவில் தலைமைச் செயலகத்திற்கு விரைந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சோ. பாலகிருஷ்ணன், அவர்களையும், அமைச்சர்கள் ஆர்க்காடு வீரா சாமி, கோ.சி.

மணி, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரையும் அழைத்து அவசரக் கூட்டம் நடத்தினேன். "தானே பிரதமராகிவிடலாம்" என்ற நப்பாசையில் நயவஞ்சக நாடகம் நடத்தினார் ஜெயலலிதா கலைஞர் அப்போது அந்த மாவட்ட அமைச்சராக இருந்த சுந்தரம், உடனடியாக உடைப்பு ஏற்பட்ட இடத்திற்குச் சென்று, அங்கிருந்து எனக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். செங்குன்றம் ஏரியில், 31 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புழல் - அம்பத்தூர் சாலையில், வேலம்மாள் பாலிடெக்னிக் கட்டிடத்திற்கும், செங்குன்றத்தில் உள்ள சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் இடையே 30 அடி அகலம், 25 அடி ஆழத்திற்கு ஏரிக்கரையில் அந்த உடைப்பு ஏற்பட்டது.

அந்த உடைப்பு ஏற்பட்டபோது, ஏரியில் அதன் கொள்ளளவான 300 கோடி கன அடி தண்ணீர் முழுவதுமாக ஏரி நிரம்பி இருந்தது. இரவோடு இரவாக அதிகாரிகள் அளவில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பக்கத்தில் இருந்த காவாங்குளம், கொளத்தூர், லட்சுமிபுரம், தணிகாசலம் நகர், கொடுங்கையூர் ஆகிய ஊர்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இரவில் சிறு கசிவு என்று நிலையில் இருந்ததால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் அன்றிரவு எனக்குத் தெரிவிக்காமல் இருந்து விட்டார்கள்.

நள்ளிரவுக்குப் பிறகுதான் நிலைமை மோசமாகும் போல் தெரிந்ததால், என்னுடைய கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்கள். ராணுவத்திற்கும் தகவல் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டார்கள். பின்னர் காலை 6.30 மணி அளவில், தலைமைச் செயலகத்திலிருந்து நானும், அமைச்சர்களும், சென்னை மாநகர மேயராக இருந்த தம்பி மு.க. ஸ்டாலினும், தலைமைச் செயலாளரும், நேராக செங்குன்றம் சென்று உடைப்பெடுத்த இடத்தைப் பார்வையிடலாம் என்று புறப்பட்டோம் காவல்துறை அதிகாரிகள் சிலர் என்னிடம் நெருங்கி வந்து, நான் அங்கே வரவேண்டாமென்றும், மற்றவர்கள் மட்டும் சென்று நிலைமையை அறிந்து வருவதாகவும் கூறினார்கள்.

அவர்களின் பேச்சை அலட்சியப்படுத்திவிட்டு, அவர்களோடு சேர்ந்து நானும் புறப்பட்டுச் சென்று, உடைப்பெடுத்த இடத்தைப் பார்த்தபோது, சென்னைக்கு ஏற்படவிருந்த மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது நன்றாகத் தெரிந்தது. ஏரியின் கரை ஒரு ஆறு அளவுக்கு இடையில் உடைந்திருந்த நிலையில் இருந்தது. ஏரியிலே இருந்த உபரிநீரை உடனடியாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை, திருவள்ளூர் மாவட்டக் காவல் துறையினர், டி.ஜி.பி.

சென்னை மாநகர ஆணையர் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த தம்பி கோ.சி. மணி தலைமையில், குடிநீர் வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் போர்க்கால நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டனர். தமிழக அமைச்சர்களாக இருந்த தா.கிருட்டிணன், பிச்சாண்டி, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புரசை ரெங்கநாதன், செங்கை சிவம், திருவொற்றியூர் விஜயன் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரூண் அவர்களும் அங்கே இருந்தார்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சர் தம்பி துரைமுருகனின் மாமனார் அதற்கு முதல்நாள் இரவு மறைந்த செய்தி கேட்டுத் துக்கத்திற்காக சென்றவர், வழியிலேயே இந்தச் செய்தியைக் கேட்டு, சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் அறிந்து, நான் அவரைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு. இங்கே ஆபத்து தவிர்க்கப்பட்டு விட்டது என்றும், பிரதமராகி விடலாம் என்ற வெறியில் ஜெயலலிதா நடத்திய சதி பேரங்கள் ஏராளம். கலைஞர் இரங்கல் கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் என்றும் கூறி அவரைத் திருப்பி அனுப்பினேன்.

சென்னை மாநகருக்கு ஏற்பட விருந்த பேராபத்து அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகத் தவிர்க்கப்பட்டதோடு, சென்னை மாநகருக்கு எதிர்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத அளவிற்கும் காப்பாற்றப்பட்டது. இதைப்பற்றி, "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில ஏடு. "அதிகாலையில் அவசரக் கூட்டம்" என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில்:- ★ "செங்குன்றம் புழல் ஏரியில் ஏற்பட்ட உடைப்பு பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அதிகாலை மணிக்கே மாநில அரசின் தலைமைச் செயலகத்திற்கு வந்து விட்டதன் மூலம், முதல்வர் முத்துவேல் கருணாநிதிக்குப் பொழுது மிகவும் விடியற் காலையிலேயே தொடங்கிவிட்டது.

75 வயதான முதல்வருக்கு விடியற்காலை 4.30 மணிக்கு, அவரை அவசரமாக எழுப்புவதற்கான அழைப்பு, சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் உருவானது. உடனடியாக அவர், தலைமைச் செயலாளர் ஏ.பி. முத்துசாமி, காவல்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, ஏரி உடைப்பு அடைக்கத் தொலைபேசி மூலம் உத்தரவுகளைப் பிறப்பித்தார்."

★ "காலை 7.30 மணியளவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெறுவதற்காக மாநில அரசு விமானம் மூலம் சேலத்திற்குப் புறப்படவிருந்த அவர், அதற்குப் பதிலாக தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அவருடைய பாதுகாப்பு அதிகாரியும், சில அதிரடிப்படை வீரர்களும் மட்டுமே அவருடன் வந்தனர். அவருடைய செயலாளர் கூட அவருடன் வரவில்லை. அந்த அதிகாலை நேரத்தில் "லிப்ட்" ஆப்பரேட்டர் யாரும் தலைமைச் செயலகத்தில் இல்லாததால், அவருடைய முதல்மாடி அறைக்குச் செல்வதற்காக முதல்வரின் பாதுகாப்பு அலுவலர்களே "லிப்டை" இயக்க முயற்சித்தபோது, முதல்வரின் பரபரப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.

அவர் படிக்கட்டுகளிலேயே ஏறிச் சென்றார். சில சமயம் ஒரே நேரத்தில் இரு படிகளையும் தாண்டிச் சென்றார்." ★ "ஒரு கோப்பை காப்பியோ, காலைச் சிற்றுண்டியோகூட உண்ணாமல், அவர் காலை 6.30 மணிக்கே நேரடியாகச் செங்குன்றம் ஏரிக்கு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நடந்துவரும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடச் சென்றார். காலை 8 மணி அளவில்தான் குளித்துத் தயாராவதற்காக அவர் தனது இல்லம் திரும்பினார். சம்பவம் பற்றி சட்டப் பேரவையில் தகவல் தெரிவிப்பதற்காக முதல்வர் மீண்டும் காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வந்தார்" - என்று எழுதியிருந்தது.

பேரவையில் இந்த நிகழ்வு குறித்து நான் விளக்கம் அளித்தபோது, பா.ம.க. சார்பில் பேசிய நண்பர் கோ.க. மணி, "ஏரி உடைப்பு சம்பவத்தில் முதல்வர் அவர்கள் தன்னுடைய வயதான காலத்திலேயும்கூட, நாட்டு நலன் கருதி, மக்கள் மாற்று அரசு அமைப்பது பற்றி, மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவைச் சந்தித்துப் பேசினார் சோனியாகாந்தி. கலைஞர் நலன்கருதி, அதிகாலையிலேயே எழுந்து, அதிகாரிகளை முடுக்கிவிட்டு, அளப்பரியக் காரியங்களைச் செய்ததை இதயம் உள்ள யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது என்ற காரணத்தினாலேயே, "செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார்" என்று சொன்னார் வள்ளுவர்.

அதைப் போல, அவர்களுடைய பணியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலே, இதயம் உள்ள நாங்கள் பாராட்டுகிறோம்" என்று கூறினார். எப்படியோ, சென்னைக்கு வரவிருந்த மாபெரும் ஆபத்து ஒன்று சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட காரணத்தால் தவிர்க்கப்பட்டது.