நெஞ்சுக்கு நீதி
ஒரு வாக்கு வித்தியாசத்தில் · 360 / 391
48. ஒரு வாக்கு வித்தியாசத்தில் உச்ச கட்ட சோகம் "தி.மு.க.வின் உதவியோடு தான் திருமதி இந்திராகாந்தி, மன்னர் மானியத்தை ஒழித்தார் - வங்கிகளை தேசிய மயமாக்கினார் - பொறுப்புள்ள வகையில் தி.மு.க. தன் பங்கினை அளித்திருக்கிறது." என்று பாராளுமன்றத்தில் முழங்கினார் முரசொலி மாறன். ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் இறுதியில் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள், "சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் அளித்த ஒரு தேநீர் விருந்தில் ஜெயலலிதா, சோனியா காந்தியைச் சந்தித்து உரையாடி பிறகு, மத்திய ஆட்சியிலே பொறுப்பேற்றிருந்த அ.தி.மு.க அமைச்சர்களை ராஜினாமா செய்யுமாறு கட்டளையிட்டுள்ளாரே" என்று என்னைக் கேட்டபோது- "ஓராண்டுக் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கோமாளிக்கூத்தில் இது ஒரு காட்சி" என்று கூறினேன்.
இதற்கிடையே பிரதமராக இருந்த வாஜ்பாய் , உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி போன்றவர்கள் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, ஜெயலலிதா பா.ஜ.க. ஆட்சியிலே இருந்துகொண்டே காங்கிரசோடு உறவு கொள்ள முயற்சிப்பது குறித்தும், அதற்காகவே சோனியா காந்தி அம்மையாரிடம் பேசியிருப்பது குறித்தும் விளக்கி, "தி.மு.கழகம் பா.ஜ.க.ஆட்சிக்குத் துணைபுரிய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள்.
கலைஞர் மேலும் பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களும் என்னை நேரிலே சந்தித்துப் பேசினார்கள். அதைப்பற்றி செய்தியாளர்கள் என்னிடம் விவரம் கேட்டபோது- "நான் தனியாக ஒன்றும் சொல்ல முடியாது-எங்கள் கட்சியின் செயற்குழுவையோ-நிர்வாகக் குழுவையோ பொதுக் குழுவையோ கூட்டி அதிலே கலந்து பேசித்தான் எந்த முடிவையும் அறிவிக்க முடியும்" என்று கூறினேன்.
"பா.ஜ.க.வானது தி.மு.க.கொள்கைக்கு எதிரானது-எப்படி ஆதரவு தரமுடியும்?" என்று விளக்கம் கேட்டபோது -"அதைப்பற்றிய வாதம் எங்கள் செயற்குழுவிலோ, பொதுக்குழுவிலோ நடைபெறும் என்றும், அதன் பிறகுதான் முடிவெடுப்போம்" என்றும் கூறினேன். "காங்கிரஸ் கட்சியோடு ஜெயலலிதா உடன்பாடு கொள்ளும் நேரத்தில், தி.மு.கழகமும் காங்கிரசோடு உறவு கொண்டிருக்குமா?"
என்று மேலும் அவர்கள் விளக்கம் கேட்டபோது, "ஜெயலலிதா இருக்கின்ற இடத்தில் நாங்கள் எப்படி இருக்க முடியும்?" என்று கூறினேன். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் கழகம் என்ன முடிவெடுப்பது என்பதைப் பற்றி ஆய்வு செய்திட, 13.4.1999 "தி.மு.க.ஆட்சியைக் கலையுங்கள் - என்று பாரதீய ஜனதா அரசை வற்புறுத்துவதால், எல்லா ஆபத்துகளையும்விட 'ஜெயலலிதா ஆபத்தே' நாட்டிற்குப் பேராபத்து" என்று தீர்மானம் நிறைவேற்றியது, தி.மு.க.
தலைமைச்செயற்குழு "தன் மேல் சுமத்தப்பட்ட வழக்குகளில் இருந்து தப்ப முடியாமல் போனதால், பா.ஜ.க. அரசைக் கவிழ்த்தது அ.தி.மு.க." என்றது 'தினமணி' அன்று கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:- ★ "இந்திய அரசியலில்- குறிப்பாக மத்திய அரசில் உருவாகியுள்ள நிலைமைகள் குறித்து செயற்குழு விரிவாக விவாதித்தது.
கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, மத்தியில் நிலையான ஆட்சி அமைப்போம் என்று மக்களுக்கு உத்தரவாதமளித்து- வாக்குகளைப் பெற்று- பாரதீய ஜனதா தலைமையில் கூட்டணி ஆட்சி ஒன்று அமைந்தது. ஆனால், அந்த ஆட்சி அமைவதற்கு முன்பே அந்தக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா மத்தியில் நிலையற்ற தன்மை உருவாகிடக் காரணமாக விளங்கியதையும்- குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆதரவுக் கடிதத்தைக் கூட அனுப்பி வைக்காமல் முரண்டு- பிடித்ததையும் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சுயநலத்துக்காகவும் அவர் மீதுள்ள ஊழல் மற்றும் அந்நியச் செலாவணி வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவும், நித்தம் நித்தம் ஏதாவதொரு பிரச்சினையை எழுப்பி, பா.ஜ.க.
அரசு செயல்பட முடியாத அரசாக ஆகிவிட்டதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்." கலைஞர் "1996இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவும், அவரது கூட்டத்தாரும் செய்த இமாலய ஊழல்கள் தமிழக மக்கள் முன் வைக்கப்பட்டு, அவற்றுக்குச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுதான் நமது கூட்டணி தமிழக மக்களிடம் எடுத்துவைத்த உறுதிமொழியாகும். அந்த ஒரே அடிப்படையில்தான் 1996 சட்டமன்றத் தேர்தலே நடைபெற்றது.
அதற்கு மக்கள் அளித்த மகத்தான உத்தரவை நிறைவேற்றுவதற்காகவே, அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இன்னும் சொல்லப்போனால், நமது அணியின் நன்கு அறிமுகமில்லாத ஒரு வேட்பாளர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவையே தோற்கடித்தார் என்பது மக்கள் அவர்மீது கொண்டிருந்த கோபத்திற்கு அடையாளமாகும்."
★ "எனவே, மக்கள் உத்தரவின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுதான் அந்த அம்மையார் இன்று பாரதிய ஜனதா அரசைக் கவிழ்த்திடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது நாடறிந்த உண்மையாகும். திடீரென்று அவர் மதவாத அரசியலை எதிர்க்கிறார் என்று கூறினால், அதனைச் சிறு பிள்ளையும் ஒப்புக் கொள்ளாது, ஜெயலலிதாவின் முயற்சி, மேற்சொன்ன சுயநலத்தை முழுக்க, முழுக்க அடிப்படையாகக் கொண்டது என்பதாலும், 1991 முதல் 1996 வரையில், தமிழக நலன்களைத் தரைமட்டமாக்கி பா.ஜ.க.
அரசுக்கு அ.தி.மு.க. கொடுத்த நெருக்கடி பற்றி ஏராளமான பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்து, கேள்வி கணைகளைத் தொடுத்தனர். விட்டு, தழைத்துச் செழித்துக் கொழித்துள்ள லஞ்ச லாவண்ய ஊழல் கொள்ளைக்கு இனியும் தமிழ் நாட்டில் இடம் தரக்கூடாது என்பதாலும், தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அப்பழுக்கற்ற கழக ஆட்சிக்கு எப்படியும் தீங்கு விளைவிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே ஒரு திட்டம் (The one and only agenda) என்பதாலும்.
இவை அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் கருதிப் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டிருக்கிறது." "இத்தகைய பின்னணியில் இதர ஆபத்துகளைவிட, ஜெயலலிதா ஆபத்தே நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பெரிய ஆபத்து என்றும் தி.மு.கழகம் கருதுகிறது. அதை எப்படியும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும், அதற்கே முன்னுரிமை தர வேண்டும் என்றும் தி.மு.கழகம் உணருகிறது."
"எனவே, கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் அண்மையில் செய்தியாளர்கள் பேட்டியில் கூறியது போல, ஒரு தீய சக்தியான ஜெயலலிதா இருக்கும் அணியிலோ - அல்லது அவர் வேறு எந்த வகையில் ஆதரவு தந்தாலும் அதைப் பெறும் அணியிலோ-தி.மு.கழகம் இடம் பெறுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. மேற்கொண்டு எடுக்க வேண்டிய முடிவுகளுக்கும் அதிகாரத்தைக் கழகத் தலைவர் கலைஞருக்கும், பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும் இச்செயற்குழு வழங்குகிறது."
- என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ★ ★ ★ செய்தியாளர்கள், "ஜெயலலிதாவிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.அரசை ஆதரிப்பீர்களா? " என்று கேட்டனர். அதற்கு, "இந்தக் கேள்விக்கு இப்போது நான பதில் சொல்ல முடியாது. எந்த முடிவை எடுப்பது என்பதற்குத்தான் எனக்கும் பொதுச் செயலாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. கலைஞர் நாங்கள் இருவரும் கலந்து பேசி, டெல்லியிலே தொடர்பு கொண்டு, அங்கே உள்ள நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் முரசொலி மாறனிடத்திலே சொல்லி, எந்த நடவடிக்கை எடுப்பது உசிதமோ அந்த நடவடிக்கையை எடுக்குமாறு அவருக்கு ஆணையிடுவோம்.
"ஜெயலலிதாவின் ஊழல்களுக்காக பெரியார், அண்ணா ஆகியோரின் திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக பா.ஜ.க.விற்கு ஆதரவு கொடுக்கலாமா?" என்று செய்தியாளர் ஒருவர் மிகுந்த அக்கறையோடு கேட்டார். "நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம். இந்த நேரத்தில் எங்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்-எங்கள் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்-எங்களுடைய தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டும் - அகில இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும்-எனவே எந்த முடிவானாலும் சிந்தித்து எடுப்போம்" என்றேன்.
தன் கைப்பட எழுதிய ஏராளமான கோரிக்கைகளை வைத்து, வாஜ்பாய் அரசை நிர்ப்பந்தித்தார் ஜெயலலிதா. "கடந்த ஓராண்டு காலமாக பார்க்கும்போது, அது மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்ததாக நினைக்கிறீர்களா?" என்று கேட்ட போது, "அதற்கான முயற்சிகளில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் அவர்களுக்குப் பின்னால் இருக்கும் சில சக்திகள் சங்க் பரிவார் போன்ற அமைப்புகள்-அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டார்கள். அதை அவ்வப் போது கண்டித்திருக்கிறோம்.
எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறோம்" என்றும் நான் கூறினேன். ஜெயலலிதாவின் டில்லி விஜயத்தை இப்படி கேலிச்சித்திரம் வரைந்து கிண்டல் செய்தது 'தி பயோனியர்' ஆங்கில நாளிதழ். இதற்கிடையே ஜெயலலிதா குடியரசுத் தலைவரைச் சந்தித்து, பா.ஜ.க. ஆட்சிக்கு அளித்து வந்த தனது ஆதரவைத் திரும்பப் பெற்றார். அந்தச் செய்தி வந்தவுடன் செய்தியாளர்கள் என்னைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் கேட்ட சில முக்கியமான கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும் வருமாறு:- செய்தியாளர் :- ஜெயலலிதா குடியரசுத் தலைவரைச் சந்தித்து, ஆட்சிக்குத் தனது ஆதரவை வாபஸ் வாங்குவதாகச் செய்தி வந்திருக்கிறது.
அதுபற்றி தங்கள் கருத்து? நான் :- எதிர்பார்த்தது தான். நாடாளுமன்றத்தில் நிலையற்ற தன்மையை எப்படியோ உருவாக்கி விட்டார்கள். நாடாளுமன்றம் தொடர்ந்து நடந்தால்-குறிப்பாக தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய 29 சதவிகித வரிப் பங்கீடு மசோதா நிறைவேறி யிருக்கும். அதன் மூலம் நம் மாநிலத்திற்குக் கூடுதலாகக் கிடைக்க வேண்டிய சுமார் 540 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். இந்தச் சூழ்நிலையால், அந்த 29 சதவிகித வரிப்பங்கீடு மசோதா நிறைவேறுவது கேள்விக்குறியாக நிற்கிறது.
இதன் மூலம் தமிழ்நாடு மாத்திரமல்ல - எல்லா மாநிலங்களுமே இந்தப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. செய்தியாளர் :-வாஜ்பாய் அரசை எதிர்த்து ஜெயலலிதா டெல்லியில் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி தி.மு.க. என்ன செய்வது என்று இறுதி முடிவு எடுத்து விட்டதா? அந்த நடவடிக்கைகளை ஆதரிப்பீர்களா? அல்லது எதிர்ப்பீர்களா? நான் :- தி.மு.கழக ஆட்சியைக் கலைப்பது என ஒரே அம்சத் திட்டத்துடன் ஜெயலலிதா டெல்லியில் முகாமிட்டு கலைஞர் வாஜ்பாய் அரசுக்குப் பதிலாக-மற்ற கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார்.
அந்த முயற்சியை ஆதரித்தால், எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட்டுக் கொள்வதாக ஆகிவிடும். எனவே அந்த முயற்சிக்கு ஆதரவு தரமுடியாது. செய்தியாளர் :- நாட்டிலே ஒரு நிலையான ஆட்சி இருக்கவேண்டுமென்று சொல்லி வந்தீர்களே...? நான் :- இப்போதும் சொல்கிறேன். ஒரு நிலையான ஆட்சிதான் ஜனநாயகத்தில் இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆட்சி யாருடைய ஆகரவுடன் அமைக்கப்பட்ட தென்றால், தி.மு.கழக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதா தான் அந்தக் கூட்டணியில் முக்கிய இடம் பெற்றிருந்தார்.
ஜெயலலிதாவின் முதல் கோரிக்கையே தி.மு.கழக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதுதான். அவருடைய இரண்டாவது நோக்கம், அவர் மீதிருந்த ஊழல் வழக்குகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போக வேண்டும் -அதற்காகத்தான் அவர் பாடுபட்டாரே தவிர, அவர் இந்தியாவிற்காகவோ, மாநிலத்திற்காகவோ எதுவும் செய்யவில்லை. அதற்காகக் கவலைப்படவும் இல்லை. செய்தியாளர் :-மத்திய பா.ஜ.க.அரசு, ஜெயலலிதா தமிழக ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கேட்டதற்கு பணியவில்லை அல்லவா?
நான் :- ஜெயலலிதாவின் கோபத்திற்கு-பா.ஜ.க பணியாததும் ஒரு காரணம். செய்தியாளர் :-அப்படிப்பட்ட பா.ஜ.க. ஆட்சியின் பிரதமர்-நல்ல மனிதர் என்று நீங்களே பாராட்டியவரின் ஆட்சியை இழப்பதற்கு தி.மு.க.காரணமாக இருக்கலாமா? நான் :- அவரை நான் பாராட்டியபோது இருந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. அவர் பிரதமராக ஆவதற்கு முன்பே கூட அவர் நல்ல மனிதர் என்று சொல்லியிருக்கிறேன். அவர் பிரதமராக ஆன பிறகுகூட அவரைப் பற்றி பாராட்டிச் சொல்லியிருக்கிறேன்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் ஐந்தாண்டு காலம் நீடிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறேன். அதனால்தான் 356ஆவது அரசியல் சட்டப் பிரிவே கூடாது என்றும் சொல்லியிருக்கிறேன். "48 பெட்டிகளை எடுத்துக் கொண்டு டில்லி சென்றார், ஜெயலலிதா" -என்றுதகவல்கள் வெளிவந்தன. செய்தியாளர் :- பா.ஜ.க.அரசு தி.மு.கழக அரசைக் கலைக்கவில்லை- ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை- மேலும் நீங்கள் ஒரு ஆட்சி ஐந்தாண்டு காலம் நீடிக்க வேண்டுமென்ற கொள்கையை உடையவர்கள்-இந்த நிலையிலே பா.ஜ.க.அரசு நீடிக்க நீங்கள் உதவுவீர்களா?
நான் :- நீங்கள் இதனை அடிப்படைக் காரணங்களைச் சொல்லி இந்தக் கேள்வியைக் கேட்கின்ற காரணத்தால், இதையெல்லாம் சிந்தித்து நாங்கள் முடிவெடுக்கிறோம். 15.4.1999 அன்று ஏராளமான செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து, பா.ஜ.க. அரசுக்கு ஜெயலலிதா கொடுத் நிர்ப்பந்தம் பற்றி கேள்விக் கணைகளைத் தொடுத்த போது, அவர்களிடம் நான் ஒரு நீண்ட அறிக்கையினை அளித்தேன். அதன் சுருக்கத்தை இப்போது குறிப்பிடுகிறேன். "பா.ஜ.க.கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த அ.தி.மு.க.வின் தலைவி நாட்டுக்காகவும், மாநிலத்திற்காகவும் பா.ஜ.க.
அரசின் முன்னால் வைத்த கோரிக்கைகள்- 1. அரிபாஸ்கர் ஐ.ஏ.எஸ் (முன்னாள் தலைமைச் செயலாளர்) அவர்களின் தற்காலிக வேலை நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். 2. சி.ராமச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களின் தற்காலிக வேலை நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். கலைஞர் 3. சுதந்திரப் போராட்ட தியாகி சாந்தாராமின் ஐம்பதாண்டு மறைவு தினத்தையொட்டி மரியாதை தெரிவிக்கும் வகையில், அஞ்சல் தலை வெளியிட வேண்டும். 4. நெய்வேலி நிலக்கரி நிறுவன முன்னாள் தலைவரும்.
நிர்வாக இயக்குனருமான பூபதி அவர்களின் இடைக்கால வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அவரது வருமான வரிக்கணக்கை ஏற்றுக்கொள்ள, வருமான வரித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். 5. பின்வரும் துறைமுக அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவர் எஸ்.மச்சேந்திரநாதன் பாரதீப் துறைமுகத்துக்கும், நியூ மங்களூர் துறைமுகக் கழகத் துணை துறைமுகத் தலைவர் பி.கே.மொஹாந்தி தரத்துக்குடி துறைமுகத்திற்கும், பாரதீப் துறைமுகத் தலைவர் எஸ்.கே.மகாபத்ரா நியூ மங்களூர் துறைமுகத்திற்கும், நியூ மங்களூர் துறைமுகத் தலைவர் ஆர்.ராம்குமார் காண்ட்லா துறைமுகத்துக்கும் மாற்றப்பட வேண்டும்.
6. ஏற்கனவே அளித்துள்ள பட்டியலின் அடிப்படையில் பின்வரும் நிறுவனங்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும். நிலையான அரசு அமைக்க பா.ஜ.க.வுக்கு உதவுவதாக உறுதியளித்த ஜெயலலிதா, பிறகு... அந்த அரசை
யே கவிழ்த்தார். ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, டிரட்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட், இந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிடெட், ஹூக்ளிடக் அண்ட் போர்ட் இஞ்சினீயர்ஸ் லிமிடெட், சென்ட்ரல் இன்லெண்ட் வாட்டர் டிரான்ஸ் போர்ட் கார்ப்ப ரேஷன் லிமிடெட் 1. மும்பையில் இணை இயக்குநராக (ஆய்வு) உள்ள எஸ்.கே.மண்டல் பெங்களூரில் கம்பெனிப் பதிவாளராக நியமிக்கப் பட வேண்டும். ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி கவிழ்ந்தபின், பாராளுமன்றத்தில் இருந்து வெளிவரும் வாஜ்பாய் - அருகே எல்.கே.அத்வானி 2.
பெங்களூரில் கம்பெனிப் பதிவாளராக உள்ள பி.கே.பன்சால் மும்பையில் இணை இயக்குநராக (நிர்வாகம்) நியமிக்கப்பட வேண்டும். 3. சென்னையில் உதவி ஆய்வு அதிகாரியாக உள்ள சுக்லா பெங்களூரில் உதவி கம்பெனிப் பதிவாளராக நியமிக்கப்பட வேண்டும். 4. டெல்லியில் பொது இணை இயக்குநராக (புலனாய்வு) உள்ள தன்ராஜ் ஐதராபாத் கம்பெனிப் பதிவாளர் அலுவலகத்திற்கும், பம்பாய் அலுவலகத்தில் துணை கம்பெனிப்பதிவாளராக உள்ள ஜெயசேகர் , ஐதராபாத் உதவி கம்பெனிப் பதிவாளராகவும், அகமதா பாத்தில் ஓ.எல்.ஆக இருக்கும் பிரிஜ் கிஷோர் மும்பை கம்பெனிப் பதிவாளராகவும் மாறுதல் செய்யப்பட வேண்டும்.
5. கல்கத்தாவில் இணை இயக்குநராக (சட்டம்) உள்ள பிரமோத் சென்னை கம்பெனிப் பதிவாளர் அலுவலகத்திற்கும், புதுவையில் கம்பெனிகளுக்கானப் பதிவாளர் ராமநாதன் சென்னையில் உதவிப் பதிவாளராகவும், சென்னையில் கூடுதல் பதிவாளராக உள்ள ஹென்றி ரிச்சர்ட் கலைஞர் என்பவரை துணை இயக்குநர் (ஆய்வு) பதவிக்கும், கல்கத்தாவில் கம்பெனி பிராசிகியூட்டராக (கிரேடு 1) உள்ள மனுநீதி சோழன் சென்னையில் கூடுதல் பதிவாளராகவும், சென்னையில் உதவிப் பதிவாளராக உள்ள திருமலைமுத்து.
புதுவை கம்பெனிப் பதிவாளராகவும் நியமிக்கப்பட வேண்டும். 6.கோவை கம்பெனிப் பதிவாளர் அலுவலகம் மூன்று மாதங்களுக்குப் பிறகு மாற்றப்பட வேண்டும். 7. ஐதராபாத்தில் உதவி கம்பெனிப் பதிவாளர் அலுவலராக உள்ள விஜய பாஸ்கர் சென்னையில் பெஞ்ச் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். 8. சென்னையில் கம்பெனிப் பதிவாளர் அலுவலராக உள்ள விஜயா மேனன் சென்னை கணக்குப் பதிவு அலுவலகத்தில் இணை இயக்குநராகவும், துணை இயக்குநர் (கணக்குப் பதிவு) அதிகாரி சுப்பராயலு கான்பூருக்கு இணை இயக்குநராகவும், ஐதராபாத் கம்பெனி பதிவாளர் செல்வராஜ் கல்கத்தாவில் இணை இயக்குநராகவும், சென்னையில் உள்ள பெஞ்ச் அதிகாரி சந்தானமுத்து நாக்பூருக்கு ஓ.எல்.ஆகவும், மும்பையில் இணை இயக்குநர் (ஐ) ஆர்.வாசுதேவன் கல்கத்தாவில் இணை இயக்குநராகவும், மும்பையில் உதவி ஆய்வு அதிகாரியாக உள்ள டி.பாண்டியன் கல்கத்தாவில் தணிக்கை அதிகாரியாகவும் மாறுதல் செய்யப்பட வேண்டும்.
"தி.மு.கழகம் பா.ஜ.க. ஆட்சிக்குத் துணைபுரிய வேண்டும்" -என்றார் வாஜ்பாய். இந்த அளவிற்கு சிபாரிசுத் தலைவியாக விளங்கி-தன்னைப் பயங்கரமான பல கோடி ரூபாய் ஊழல் வழக்குகளிலேயிருந்து விடுவித்துக் கொள்ள முயன்று, அதில் தோல்வியுற்ற காரணத்தால், பா.ஜ.க.அரசின் மீது கொண்டுள்ள கோபத்தில் ஆதரவை விலக்கிக் கொண்டு-அதற்கு மற்ற கட்சிகளையும் துணை சேர்த்துக் கொள்ள எடுத்துள்ள முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் துணை போகாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவிப்பதோடு மற்ற கட்சிகளும் உண்மை உணர்ந்து ஜெயலலிதா வலையில் சிக்காதிருக்குமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையிலே தெரிவித்திருந்தேன். அதனைப் படித்த செய்தியாளர்கள், "அந்த அம்மையார் தன்கைப்பட எழுதிய அந்தப் பரிந்துரைகளை எல்லாம் எப்படி வெளியே கொண்டு வந்தீர்கள்? அதையும் ஒரு "பால் கமிஷன் அறிக்கை போலத் தெரிவித்திருக்கிறீர்களே?"
என்று கேட்டதற்கு- "அதே பதில்தான்-பால் கமிஷன் அறிக்கை கிடைத்ததைப் போலத்தான் இதுவும் கிடைத்தது" என்று கூறினேன். வாஜ்பாயை வீழ்த்திய பின் ஜெயலலிதா காங்கிரசுடன் இணைந்து விட நடத்திய சாகசம். தொடர்ந்து செய்தியாளர்கள், "ஜெயலலிதா டெல்லி சென்றபோது அவருடன் 48 பெட்டிகள் எடுத்துச் கலைஞர் சென்றதாகவும், அதில் கோடிக்கணக்கில் பணத்தைத் தான் கொண்டு போனதாகவும் பரவலாகப் பேசப்படுகிறதே-அந்தப் பண பலம் வெற்றிபெறும் என்று கருதுகிறீர்களா?"
என்று கேட்டதற்கு, "அவர் எடுத்துக்கொண்டு போனது பணமா என்று எனக்குத் தெரியாது" என்று கூறினேன். ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து அகில இந்திய ஏடுகள் எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. குறிப்பாக " தினமணி " நாளேட்டில் 15.4.1999 அன்று வெளிவந்த தலையங்கம் வருமாறு:- ★ "வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்துள்ள ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக ஒரு வார காலமாய் மிரட்டி வந்த ஜெயலலிதா கடைசியில் விலக்கிக் கொண்டேவிட்டார்!
இது எதிர்பாராததல்ல-எனினும் இதை அவர் செய்த விதம் எதிர்பாராததே! ஒரு வாரத்துக்கு முன், அ.தி.மு.க. அமைச்சர்கள் தம்பித்துரையையும், கடம்பூர் ஜனார்த்தனத்தை யும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகச் செய்தார். அதன் பிறகு, மூன்று நாட்கள் கழித்து பா.ஜ.க. கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து அ.தி.மு.க.வை இழுத்துக் கொண்டார். இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, தில்லிக்குச் சென்று, குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து, வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் கடிதத்தை அளித்து விட்டார்.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான அரசியல் நாடகத்தின் கடைசிக் காட்சி முடிந்து விட்டது. ஆயினும், இக்காட்சியின் முடிவில், வீர வசனம் பேச அவர் தயங்கவில்லை. நாட்டின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் கட்டிக்காப்பதற்காகவே இம்முடிவைச் செய்துள்ளாராம்! 'வாஜ்பாய்-அரசு தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஆகிவிட்டது. நாட்டின் இறையாண்மையைக் கட்டிக் காப்பதில் அதற்கு அக்கறையில்லை' என்பது சுவையான காரணம்.
"இரண்டு வாரங்களுக்கு முன் சுப்பிர மணியன் சுவாமி அளித்த தேநீர் விருந்தில்- சோனியா காந்தியைச் சந்திப்பதுவரையில், வாஜ்பாய் அரசு நாட்டின் பாதுகாப்பைப் பேணக்கூடிய ஆட்சியாகத்தான் இருந்தது. அடுத்த ஓரிரு நாட்களில், அந்த அரசு பாதுகாப்புக்கே ஆபத்தாகி விட்டதாம்! எந்த அடிப்படையில் இந்த அவதூறைக் கூறுகிறார்? அது அவருக்கே வெளிச்சம்."
-இவ்வாறு ' தினமணி ' ஜெயலலிதாவை நிறம் பிரித்துக் காட்டியது. ★ ★ ★ பா.ஜ.க. அரசைக் கலைத்து விட்டு சோனியாகாந்திக்குத் தனது விஷ நாக்கை நீட்டினார், ஜெயலலிதா. வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அ.தி.மு.க. திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து, குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் நம்பிக்கை வாக்கினைக் கோரும்படி பிரதமர் வாஜ்பாயைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறு 15.4.1999 அன்று பிரதமர் வாஜ்பாய் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதன்மீது இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. 16.4.1999 அன்று நாடாளுமன்ற மக்களவையில், பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நாடாளுமன்ற கழகக் குழுத்தலைவர் முரசொலி மாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரை தி.மு.கழகத்தின் ஒட்டுமொத்தக் கருத்தாக அமைந்த உரையாகும். அந்த உரையின் சுருக்கம் வருமாறு:- கலைஞர் ★ "நான் பழைய நண்பர்களுக்கும், புதிய நண்பர்களுக்கும் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனெனில் பிசாசு இடம் மாறிவிட்டது. எனவே அதற்காக நான் வருத்தப்படுகிறேன். என்னுடைய ஆழ்ந்த துயரத்தை எப்படி வர்ணிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நான் நாடாளுமன்ற உறுப்பினராக இந்த அவையிலும், மாநிலங்களவையிலும் கடந்த 31 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். எங்களுடைய அன்பிற்குரிய தலைவர் அறிஞர் அண்ணா அவர்களால், இங்கு 1967 ஆம் ஆண்டில் அனுப்பப் பட்டேன். கடந்த 31 ஆண்டுகளில் நான் பல விஷயங்களை இந்த அவையிலும், மாநிலங்களவையிலும் பார்த்திருக்கிறேன்.
அப்போது தி.மு.க.25 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன். அந்த 25 தி.மு.கழக எம்.பி.க்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உதவியோடும், திருமதி இந்திரா காந்தி தனது சிறுபான்மை அரசை அமைத்தார். திருமதி இந்திரா காந்தி தி.மு.க.வின் உதவியோடுதான் மன்னர் மானியத்தை ஒழித்தார். தி.மு.க.வின் ஆதரவோடுதான் வங்கிகளை தேசிய மயமாக்கினார். மக்கள் தேசிய நலனுக்காகப் பயன்படுத்துவதற்காக எங்களுக்கு அதிகாரத்தை அளித்தார்.
அதன்படி பொறுப்புள்ள வகையில் தி.மு.க. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. எந்தக் காலத்திலும் யாரையும் ' பிளாக் மெயில் ' செய்ய அதைப் பயன்படுத்தியதில்லை. ★ "நெருக்கடி நிலையின்போது நாங்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி விட்டோம். அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் அப்போது என்ன நடந்தது? நாங்களும். பா.ஜ.க. உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் தோழர்களும் சிறைத் தோழர்களானோம். நாங்களும், பா.ஜ.க.உறுப்பினர்களும் பத்தாண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சிகளாக இருந்தோம்.
நானும் ஆளுங்கட்சி வரிசையிலே இருந்திருக்கிறேன். பா.ஜ.க.மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவோடு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது நானும் இங்கே ஒரு அமைச்சராக இருந்திருக்கிறேன். அவர்கள் இருவருமே அந்த அரசை ஆதரித்தனர். பின்னர் ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது நான் அமைச்சராக இருந்தேன். மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் உதவி செய்தன. அவர்கள் ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் அந்த ஆட்சி நீடித்திருக்க முடியாது.
இப்போது எல்லா இடத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களில் யாரை ஆதரிப்பது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது மிகவும் கடினமான தேவையாகும். ★ "கடந்த வாரம்வரை மூன்றாவது அணி என்று கூறப்படும் அணியில் நான் இருந்தேன். அது தீவிரமாக இருந்தது. தீவிரமாக இருக்கும் என்று நம்புகிறேன். திடீரென்று ஒரு மாற்றம் ஏற்பட்டது. எங்களை விட்டு விலகி விட்டார்கள். எனவே தேசிய மற்றும் மாநில நலன்களைக் கருத்தில் கொண்டு, நாங்களாகவே முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது."
★ "எங்களுடைய நீண்ட கால அரசியல் வரலாற்றில், காரணம் எதுவாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளித்து பாதுகாத்து வந்திருக்கிறோம். அந்தப் பெருமைகளில் யாரும் எங்களைச் சந்தேகப்பட முடியாது. அவ்வாறு செய்வதற்கு நாங்கள் ஏற்றுக்க கொண்டுள்ள உறுதியை இன்று மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஏனெனில் எங்களுடைய இயக்கம் 1916இல் சிறுபான்மையினரையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் உயர்வடையச் செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டது.
அது எங்களுடைய உறுதிமொழி. அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். கலைஞர் ★ "அதே நேரத்தில், நான் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். தேவகவுடாவும் இங்கே இருக்கிறார்- குஜ்ரால்ஜியும் இருக்கிறார்-மூப்பனார் போன்ற மூத்த தலைவர்களும் நம்முடன் இருந்தனர். ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்குபெற வேண்டுமென்று எல்லோரும் விரும்பினர். ஒரு நிலையான அரசை அமைக்க வேண்டும் என்பதற்காக எல்லோருமே காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற வேண்டுமென்று விரும்பினர்.
மூப்பனார் எப்போதுமே காங்கிரஸ் பங்கு பெற வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார். ஆனால், என்னுடைய இடதுசாரி நண்பர்கள் அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர் என்பதைக் குறிப்பிட நான் வருந்துகிறேன். அப்போது அதை நாங்கள் நிறைவேற்றியிருந்தால் நிலைமைகள் மாறியிருக்கும். பிரச்சினைகள் வேறாக இருந்திருக்கும். அதை நாங்கள் நிறைவேற்ற முடியவில்லை. அது சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. ★ "நேற்று வரை நான் இந்த அரசை எதிர்த்து வந்தேன்.
காவிரிப் பிரச்சினைச் சிக்கலைத் தீர்த்த இந்த அரசுக்குரிய பெருமையைத் தவிர, இந்த அரசின் எந்தச் சாதனைகளையும் நான் பாராட்ட முடியாது. இன்றுகூட பல பிரச்சினைகளில் என்னால் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. ஆனால், அ.தி.மு.க. புதிய நண்பர்களின் ஆதரவோடு மேற்கொண்டுள்ள முயற்சி, மாநிலத்தின் நலனுக்கும், தேசத்தின் நலனுக்கும் எதிரானது. எனவே, தற்போதைய அரசு தொடர்வதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை.
நாங்கள் அடல்ஜியை ஆதரிக்கிறோம். ஒரு போதும் ஊழலின் தாயை நாங்கள் ஆதரிக்க முடியாது." இவ்வாறு முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் தி.மு.கழகத்தின் கருத்தினை எடுத்து வைத்தார். ★ ★ ★ அதன் பின்னர் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்தனர். "திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடித் தலைவர் என்ற முறையில் தாங்கள் இப்போது எடுத்துள்ள முடிவு வருங்காலத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?"
என்று கேள்வி கேட்டனர். அதற்கு நான், "ஜெயலலிதாவின் ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானதல்ல-என்று நான் சொல்லியிருக்கிறேன். அதனால் மதவாதம் இனிமையானது என்று பொருள் அல்ல. பாம்பைவிட மோசம் என்று ஒரு பெண்ணையோ, ஆணையோ சொன்னால் என்ன அர்த்தம்? பாம்பு நல்லது என்று அர்த்தமா? பாம்புக்கும் விஷம் உண்டு என்றுதான் அர்த்தம். அதைப் போலத்தான் இதுவும்! தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் எவ்வளவு தீமைகள் நடைபெற்றன என்பதையும் லஞ்ச லாவண்யங்கள்-ஊழல்கள் எவ்வளவு நடைபெற்றன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பதிலளித்தேன்.
16.4.1999 அன்று நாடாளுமன்றத்தில், விவாதம் விடிய விடிய 17ஆம் தேதி காலை 5.30 மணிவரை நடைபெற்றது. தொடர்ந்து 17 ஆம் தேதி காலை 11 மணி அளவில் விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் வாஜ்பாய் பேசினார். அதைத் தொடர்ந்து, "ஒரிசா முதலமைச்சர் கிரீதர் கோமங்காவை வாக்களிக்க அனுமதிக்கலாமா?"
என்பதற்கான ஒரு விவாதம் நடைபெற்றது. "நாடாளுமன்றத்திலே நடைபெற்ற விவாதத்திலே முதலமைச்சர் ஒருவர் வாக்களிக்கலாமா?" என்பதற்கான விவாதம் நடைபெற்றது. "அவர் வாக்களிக்கலாம்" என்று மக்களவைத் தலைவராக இருந்த பாலயோகி தீர்ப்பளித்த பிறகு, வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாஜ்பாய் அவர்களின் தீர்மானத்திற்கு ஆதரவாக 269 வாக்குகளும்,எதிராக 270 வாக்குகளும் கிடைத்து, வாஜ்பாய் அரசு ஒரு வாக்கில் தோல்வியடைந்தது. ஒரிசா முதலமைச்சரை வாக்களிக்க அனுமதித்திருக்காவிட்டால், தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் 269 வாக்குகள் சமமாகக் கலைஞர் கிடைத்திருக்கும். எனவே அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவர் என்று யாரையும் சொல்ல முடியாத நிலை. மயிரிழை வித்தியாசம் என்பார்களே-அதைப்போல வாஜ்பாய் அரசு தோல்வி அடைந்ததைப் பற்றி பத்திரிகைகள் எல்லாம் பல விதமாக எழுதின.
"பா.ஜ.க. அரசு கவிழ என்ன காரணம்?" என்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்டதற்கு, "ஒரிசா மாநில முதலமைச்சரை ஓட்டுப் போட அனுமதித்த பெருந்தன்மைக்குக் கிடைத்த பரிசுதான் இந்தத் தோல்வி- ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகஜம்" என்று நான் பதிலளித்தேன்.
இந்துஸ்தா
ன் டைம்ஸ் 18.4.1999 தேதிய இதழில், "பலமாதங்களுக்கு முன்பே மாநில அரசுக்கு தலைமை தாங்கிச் சென்று விட்ட ஒரிசா முதலமைச்சரை, நாடாளுமன்றத்திற்கு வாக்களிக்க கொண்டு வந்ததன் மூலம், அரசு தோற்கடிக்கப் பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியைத் தரும் விஷயமல்ல!"
என்று எழுதியது. மேலும் அந்த ஆங்கில நாளிதழ், " ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவாமி என்ற இரட்டை அழிவு சக்தியால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தின் மூலம் ஓர் அரசு வெளியேற்றப்படுவது இந்திய ஜனநாயகத்தின் உச்ச கட்ட சோகமாகும். ஒரு தேசிய அரசை வீழ்த்த மாநிலக் கட்சித் தலைவர் ஒருவரின் குறுகிய, சுயநல வேட்கைகளைத் தடையேதுமின்றி ஏற்றுக் கொள்ள நேரிட்டது இந்நாட்டின் ஜனநாயக எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள, தோல்வியாகும்."
என்று எழுதியது. ஆம்-ஜெயலலிதாவையும், சுப்ரமணியசுவாமியையும் அந்த நேரத்தில் இரட்டை அழிவு சக்திகள் என்றே அந்த ஏடு எழுதியிருந்தது. மேலும் அந்த இதழ், "இழிவாகப் பேசப்பட்ட இரு பெண்மணிகளால் வாஜ்பாய் அரசு தோல்வி அடைந்துள்ளது. அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா இந்த இக்கட்டான சூழலை தோற்றுவித்தார் என்றால், பி.எஸ்.பி. தலைவி மாயாவதி கடைசித் தாக்குதல் நடத்தியுள்ளார். முதல் நாள் இரவு தாங்கள் யாருக்கும் ஓட்டளிக்கப் போவதில்லை என்று அறிவித்து, அதன் மூலம் அரசாங்கத்தை தூங்க வைத்துவிட்டு, கடைசி நேரத்தில் மாயாவதி தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டு அரசுக்கு எதிராக ஓட்டளித்து விட்டார்.
மேலும் எதிர்பாராத வகையில் ஒரிசா முதல்வர் பிரச்சினை வந்துவிட்டது. அதில் நாடாளுமன்றத் தலைவர் மேற்கொண்ட முடிவு எல்லா எதிர்ப்பார்ப்புகளையும் சாய்த்து விட்டது. அப்படி ஒரு முடிவு ஏற்பட்டிருக்காவிட்டால் ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சம எண்ணிக்கை கிடைத்திருக்கும். நாடாளுமன்றத் தலைவரும் தனது வாக்கைச் செலுத்தி கௌரவத்தைக் காத்திருப்பார்" என்றும் எழுதியது.
"டெக்கான் ஹெரால்ட்" இதழ் "மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக ஜெயலலிதா மீது தமக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தினர்" என்றும்- "தி பயோனியர் நாளேடு", "பா.ஜ.க அணியிலிருந்து ஜெயலலிதா, அரசை 'பிளாக் மெயில்' செய்ததும், முதுகில் குத்தியதும் எந்த நெறிமுறைக்கும் உகந்தது அல்ல.
ஜெயலலிதாவிடம் சரி எது-தவறு எது-என்று பிரித்துப் பார்த்து நடந்து கொள்ளக்கூடிய குணம் கிடையாது. பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் அவர்" என்றும் ஜெயலலிதாவிற்கு 'புகழாரங்கள்' சூட்டியிருந்தன.
சென்னையில் 21.4.1999 அன்று த.மா.காவும் இடதுசாரிக் கட்சிகளும், தனியாக ஒரு கூட்டம் கூட்டி, "பா.ஜ.க.விற்குத் தி.மு.கழகம் ஆதரவு தெரிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என வேண்டுகோள் ஒன்று வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றி என்னிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர்கள் தற்போது கூட்டிய கூட்டத்தை, அந்தக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்ததே-அதற்கு முன்பே கலைஞர் கூட்டி, தி.மு.கழகத்தையும் அதிலே கலந்து கொள்கிற சூழ்நிலையை உருவாக்கியிருப்பார்களேயானால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
கூட்டம் என்று நடத்தாவிட்டாலும், இந்திய தேசீய லீக் தவிர மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களோடு நான் சந்தித்த போதெல்லாம் -ஜெயலலிதா இருக்கும் அணியை ஆதரித்து ஜெயலலிதா நடத்திய ஊழல் கொள்ளைக்கும், அதன் காரணமாக நடைபெறுகின்ற வழக்குகளுக்கும் அந்த அம்மையாருக்குப் பாதுகாப்பு வேலியாக நாம் இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறேன். அவர்களும் என்னுடைய உணர்வை ஒத்துக்கொண்டுதான் என்னோடு பேசினார்கள்.
திரு அருணன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் இதுபற்றிப் பேசியபோது அவர்களும் என் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி என்னிடம் கூறாமலேயே அவர்களாக முடிவெடுத்துச் செயல் பட்டுவிட்டு, இப்போது கூட்டம் நடத்தி அதுபற்றிப் பேசுவதிலே என்ன பயன் இருக்க முடியும்? எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க. அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்தோம் என்பதை விட, ஜெயலலிதாவின் உள்ளார்ந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கெதிராக செயல்பட்டோம் என்பதுதான் உண்மை" என்று கூறினேன்.
தொடர்ந்து செய்தியாளர்கள், "காங்கிரஸ் கட்சி சார்பாக உங்களிடம் ஆதரவு கேட்டு யாராவது தொடர்பு கொண்டார்களா?" என்று கேட்டபோது- "அதுவரையில் யாரும் காங்கிரஸ் தரப்பிலிருந்து என்னிடத்திலே வரவும் இல்லை-பேசவும் இல்லை" என்று கூறினேன்.
மேலும் தொடர்ந்து, "தி.மு.கழகம் என்றைக்கும் சிறுபான்மைச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரணாகத் தான் இருக்கும்-மத வெறியை மாய்ப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல-அது எங்கள் குருதியோட்டத்தோடு கலந்த ஒன்று" என்றும் குறிப்பிட்டேன்.
