உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நம்ப முடியாதது;
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நம்ப முடியாதது; · 359 / 391

47. நம்ப முடியாதது; ஆனால் நடந்தது! அருந்ததியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழி வகுத்துத் தந்தமைக்காக, அந்தச் சமுதாயத்தினர் என்னைச் சந்தித்து "உங்களுக்கு என்றும் துணையாக நிற்போம்" என்று நன்றி கூறினார்கள். பீ கார் மாநிலத்தில், ரன்வீர்சேனா என்கிற வன்முறை அமைப்பு ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த அமைப்புக்கு பீகார் மாநில அரசு தடை விதித்திருந்தது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அப்பாவி மக்களைக் கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்தார்கள்.

பீகார் மாநிலத்தில், ஜெகனாபாத் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஆதிதிராவிட மக்களின்மீது ரன்வீர்சேனா அமைப்பினர், 25.1.1999 அன்று துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் 22 பேரைக் கொன்றுவிட்டார்கள். இந்தச் சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் கடுமையாகப் பேசப்பட்டது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, அதே ஜெகனாபாத் மாவட்டத்தில், நாராயணபூர் என்ற கிராமத்தில், 10.2.1999 அன்று, 12 அப்பாவி ஆதிதிராவிட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதும் ரன்வீர்சேனா அமைப்பினர் தான். "நிலச்சுவான்தார்களின் நிலத்தில் குறைந்த கூலிக்கு வேலைக்குப் போகக்கூடாது-என்று ஆதி திராவிட மக்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியதால், நிலச்சுவான்தார்களின் கலைஞர் கூலிப்படையான ரன்வீர்சேனாவினர் ஆதிதிராவிட மக்களைச் சுட்டுக் கொன்றார்கள்!"

என்று அப்போது கூறப்பட்டது. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, புதுடெல்லியில் பீகார் மாநில சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசிக்க, மத்திய அமைச்சரவை 12.2.1999 அன்று கூடியது. மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி தலைமையில் கூடிய அமைச்சரவை, பீகார் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த லல்லு பிரசாத் யாதவ் அவர்களின் துணைவியார் ராப்ரி தேவியின் அரசைக் கலைக்கக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தும்-அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டும் தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த முடிவினை அப்போது ஜமைக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் வாஜ்பாய்க்கும் தெரிவித்தார்கள். அமைச்சரவையின் முடிவு மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, அவர் பீகார் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்தி, ஆணை பிறப்பித்தார். பீகார் மாநிலத்தில் வன்முறைச் சம்பவம் நடைபெற்ற போதே, அதனைக் கண்டித்து அறிக்கை விட்ட நான், "பல்வேறு மாநிலங்களில் இது போன்ற தீவிரவாதிகளே சட்டத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு செய்து வரும் கொடுமையான கொலைகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு மற்ற மாநில அரசுகளையும் கலந்தாலோசித்து, தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால், அந்தச் சம்பவத்திற்காக பீகார் மாநில அரசை மத்திய அரசு கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய ஆணை பிறப்பித்ததையும், கண்டித்து அறிக்கை விடுத்தேன். அந்த அறிக்கையில், "பீகாரில் நிலப்பிரபுக்களின் கூலிப்பட்டாளம் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களைத் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொன்று குவிப்பது பெரிய அநியாயம். அதற்காக மத்திய அரசு அந்த மாநில ஆட்சிமீது 356 என்ற துப்பாக்கிச் சூட்டை நடத்தி, அதை வீழ்த்தி உள்ளதை நியாயப்படுத்த முடியாது" என்று கூறி இருந்தேன்.

பீகார் அரசு கலைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், 16.2.1999 அன்று பீகார் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்தப்பட்டது. லல்லூ பிரசாத்யாதவும், ராப்ரி தேவியும், கட்சியின் தொண்டர்களும் தங்கள் வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்றனர். தடையை மீறி ஆளுநர் மாளிகை அருகே மறியலில் அவர்கள் ஈடுபட்டதால், லல்லு பிரசாத், ராப்ரி தேவி உள்பட 100 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

பீகாரில் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூறி, "தமிழக அரசையும் கலைக்க வேண்டும்" என்ற ஜெயலலிதா அவசர அவசரமாக ஒரு அறிக்கையை 13.2.1999 அன்று விடுத்தார். அந்த அறிக்கைக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், "சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் எந்தவித பாரபட்சமும் பீகார் மாநில ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் தி.மு.க.

அரசைக் கலைக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள், ஜெயலலிதாவும் - சுப்பிரமணிய சுவாமியும். இன்றி காவல்துறை நடந்து கொள்ள வேண்டுமென்று அரசு அறிவித்துள்ளது. கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில், புலன் விசாரணையைத் தமிழகக் காவல்துறை மிகவும் செம்மையாகச் செய்து, 176 குற்றவாளி களை ஏற்கனவே கைது செய்து, முதற்கட்டக் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளது குறித்து மத்திய அரசும், கலைஞர் 1999-2000 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு நிதியமைச்சர் பேராசிரியருடன் வருதல் மத்திய அரசு நிறுவனங்களும், தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் தமது பாராட்டுதலைத் தெரிவித்துள்ளன.

29.12.1998 அன்று மத்திய உள்துறை செயலாளர் எழுதிய கடிதத்தில்- "1997ஆம் ஆண்டு இந்தியாவில், சென்னை மாநகரத்தில் தான், குற்ற நிகழ்வுகள் மிகவும் குறைவாக உள்ளன என்று புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் குற்ற நிகழ்வுகள் ஒரு லட்சம் மக்களுக்கு 18.31. ஆனால், டெல்லி நகரில் குற்ற நிகழ்வுகள் ஒரு இலட்சம் மக்களுக்கு 56.45. மும்பை நகரத்தில் 30.82.1998 இல் கடந்த ஆண்டைவிடத் தமிழகத்தில் குற்றங்கள் மேலும் குறைந்துள்ளன.

தமிழகத்தில் குற்றங்கள் கூடியுள்ளன - என்று கூறுவது சரியல்ல" என்று விளக்கம் தரப்பட்டது. பீகாரிலே 8.3.1999 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக 24 நாட்களாக பீகாரில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழ் ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டு, அது ரத்து செய்யப்படுவது என்பது அதுதான் முதல் முறை.

இது குறித்து செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "அரசியல் சட்டப்பிரிவு 356ஐ எதிர்த்துப் பல ஆண்டுகாலமாக தி.மு.க.குரல் கொடுத்து வந்துள்ளது. அப்பிரிவு இன்று ஜனநாயகத்திற்கு முன்பு முடங்கிப் போய் விட்டது என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். பீகார் கலைப்பு மசோதாவை ஆதரிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தபோதே, இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் சோனியா காந்தியும் இறுதிவரைத் தங்களது முடிவில் உறுதியாக இருந்து, 356ஆவது பிரிவின் மூக்கை அறுத்ததற்காகப் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அரசியல் பிரிவு 356 ஐக் கொண்டு, தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று சில கட்சிகள் வற்புறுத்துவதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. கீழ்ப்பாக்கம் வழியாகச் சென்றால் உள்ளேயிருந்து எத்தனையோ குரல்கள் கேட்கும்- அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது - அது செல்பவர்களின் குற்றமே தவிர, உள்ளேயிருந்து குரல் கொடுப்பவர்களின் குற்றமில்லை" என்று கூறினேன்.

★ ★ ★ தமிழகச் சட்டப் பேரவையில் ஆளுநர் நீதிபதி செல்வி பாத்திமா பீவி அவர்கள், 17.2.1999 அன்று உரை நிகழ்த்தினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 38 உறுப்பினர்கள் உரையாற்றிய பிறகு, 23.2.1999 அன்று நான் ஒன்றரை மணி நேரம் பதில் உரையாற்றினேன். அருந்ததியருக்காகப் பாடுபடுபவர்கள் நாங்கள் தான் என்றும்-அவர்களின் நல்வாழ்வுக்காகக் குரல் கொடுத்ததில் ஏராளமான சலுகைகளையும், அறிவிப்புகளையும் உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையைப் படித்தேன்.

கலைஞர் நாங்கள்தான் அனைவரையும் முந்திக் கொண்டு குரல் கொடுத்ததாகவும் இப்போது பல பேர் குரல் எழுப்புகிறார்களே 23.2.1999 அன்று நான் ஆளுநர் உரைக்குப் பதில் உரை ஆற்றியபோதே- "மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் இழிவைப் போக்குவது தி.மு.க. அரசின் முக்கியமான கொள்கை-அதற்கான சட்டத்தைக் கழக அரசே நிறைவேற்றும்" என்று உறுதி கூறியிருக்கிறேன்.

பேரவையின் நடவடிக்கைக் குறிப்பை, யார் வேண்டுமானாலும் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அந்த ஆண்டு ஆளுநர் உரையிலேயே அந்தத் திட்டம் பற்றிக் கூறப்பட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால் அந்த ஆண்டு ஆளுநர் உரையாற்றி, அது ஏடுகளில் வெளிவந்த மறுநாளே " தினமணி " பத்திரிகையிலே ஆசிரியர் கடிதத்தில் ஒரு கடிதம் வெளிவந்தது. அந்தக் கடிதத்தின் வாசகங்கள் இந்தத் தொடரில் இடம் பெற வேண்டிய ஒன்றாகும்!

"மனிதன் கழித்ததை மனிதனே சுமக்கும் அவலத்தை - கங்கை வெள்ளமே கழுவ இயலாத களங்கத்தை - துடைக்கும் கலைஞரின் அறிவிப்பால், வைக்கம் வீரரின் ஆவி வாழ்த்தும்" என்று வா.செ. குழந்தைசாமி 'தினமணி'யில் கடிதம் எழுதினார். ★இந்த ஆண்டு ஆளுநர் உரையில் பாராட்டத்தக்க அம்சங்கள் பல இருக்கலாம். ஆனால், என் நெஞ்சைத் தொட்ட ஓர் அறிவிப்பு-இனம் அறிய இயலாத ஒரு மனநிறைவு அங்கம் முழுவதும் அலை போலப் பரவச் செய்த ஒரு பிரகடனம்- "மனிதக் கழிவுகளை மனிதன் சுமக்கும் அவலம் தமிழ் மண்ணிலே இருந்து விரைவில் மறையும்" என்பது தான்.

மாந்தர் கழித்ததை மாந்தர் சுமக்கும் அவலத்தை அகற்றும் இந்த முடிவு, ஒரு நிகழ்ச்சியை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது. 1989-90 நிதியாண்டில் கலைஞர் தலைமையில் நடந்த தமிழகத் திட்டக் குழுக் கூட்டம் ஒன்றில், இக்கொடுமை ஒழிக்கப் படவேண்டும் என்ற கருத்து முன் வைக்கப் பட்டது. அப்போது மைய தேசிய அளவில் இந்த கொடுமையை ஒழிக்கும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இருப்பதாக அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.

அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் , தேசிய அளவில் அந்தப் பழக்கத்தை ஒழிக்கும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த இருப்பதை முதல்வர் கலைஞரிடம் கூறினார். எனவே, அதைப்பற்றிக் குழு விவாதிக்கவில்லை. பின்னர் மைய அரசு கவிழ்ந்தது. மாநில அரசும் கலைக்கப்பட்டது. இந்த சாபக்கேடு தொடர்ந்தது. கங்கை வெள்ளமும் கழுவ இயலாத இந்தக் களங்கத்தைத் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து, வயிற்றைக் கழுவி, வாழ்க்கை நடத்தும் அப்பாவி மக்களின் உள்ளக் குமுறல்களின் உருவகமாக அமைந்தது.

"மாந்தர் கழித்தலை மாந்தர் சுமந்திடும் வாழ்வு தொடர்ந்திடும் நாட்டினிலே- போந்த சுதந்திரம், பேசும் சமத்துவம் பொய்யடா; யாவையும் ஏட்டினிலே" ★ "ஆளுநர் உரையில் ஒரு நீண்ட வாக்கியத்தின் சிறுபகுதியாக மட்டுமே இடம் பெற்றிருக்கும் இந்த அறிவிப்பு, ஒரு சாதாரணத் திட்டம் அன்று- தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய வாழ்வில் ஒரு மகத்தான திருப்பம்-வரலாறு பதிவு செய்யத் தவறாது இதனை, இதன் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கும். வைதீக மொழியில் கூறுவதானால், " வைக்கம் வீரரின் ஆவி வாழ்த்தும் " என்று அந்தக் கடிகத்தில் எழுதப் பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தை எழுதியது யார் தெரியுமா? அண்ணா பல்கலைக் கழகத்திலும், இந்திராகாந்தி பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராகப் பணியாற்றிய பெருந்தகை வா.செ. குழந்தைசாமி அவர்கள் தான் அதனை எழுதி இருந்தார். கழக கலைஞர் ஆட்சிக்கு அவர் தந்த நற்சான்றாக அதனை நான் எடுத்துக் கொண்டேன். அவர் கூறியவாறே, 1989 இல் கனவு கண்ட அந்தத் திட்டம்- 1999 இல் ஆளுநர் உரையில் இடம் பெற்ற அந்தத் திட்டம் -2009 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளது என்பதை எண்ணும்போது எத்தகைய மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது என்பதை என்னால் உணரமுடியும்.

கழக அரசின் அறிக்கையைப் பாராட்டி சி.சுப்பிரமணியம் தன் கைப்படவே எனக்குக் கடிதம் எழுதினார். அந்தச் சமூகத்தினரைக் கைதூக்கிவிட வேண்டு மென்பதற்காகவே, எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து- அமைச்சரவையிலும் விவாதித்து- அதற்கான ஆணையைப் பிறப்பிப்பது குறித்து, தலைமைச் செயலாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது, "இத்திட்டத்தை சில நாட்கள் கழித்து அறிவிக்கலாமே" என்று எனக்கு அதிகாரிகள் யோசனை கூறிய நேரத்தில், "முடியாது.

இப்போதே அறிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி, அதனை நடைமுறைக்கு வரச் செய்தேன் என்பதை எண்ணும்போது எனக்கு இனிக்கிறது. அரசியலில் எத்தனையோ பேர் என்னைப் பாராட்டுகிறார்கள்- எத்தனையோ பேர் தூற்றுகிறார்கள்- அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அருந்ததியச் சமுதாயத்தினர் முன்னேற வேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்தேன் என்று என் மனச்சாட்சிக்குத் தெரிகிறதே அது போதும்! அண்மையில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்டிற்கு வழி வகுத்து, அரசு சார்பில் அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்க, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மாநிலம் முழுவதும் உள்ள 50 பிரதிநிதிகள் என்னைத் தலைமைச் செயலகத்திலே சந்தித்தார்கள்.

அப்போது, அவர்கள் ஒட்டுமொத்தமாக- ★ "தாங்கள் எடுத்துள்ள இந்த முயற்சியில் அருந்ததியச் சமுதாயம் உங்களுக்குத் துணையாக என்றும் பின் நிற்கும்" என்று என்னிடம் கூறியது இன்னமும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.

வீரபாண்டியக் கட்டபொம்மனின் 200ஆவது நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கு சிவாஜி எனக்கு நன்றி கூறினார். ★ ★ ★ 1999-2000 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை, 17.3.1999 அன்று நிதி அமைச்சர் என்ற முறையில் தாக்கல் செய்தேன். ஏராளமான அறிவிப்புகளையும், சலுகைகளையும் உள்ளடக்கியதாக நிதி நிலை அறிக்கை அமைந்தது. த.மா.கா., சி.பி.எம்., சி.பி.ஐ., எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்.கழகம், திராவிடர் கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் பாட்டாளி மக்கள் கழகம்-ஆகிய கட்சிகளின் சார்பில் நிதிநிலை அறிக்கையை வரவேற்று அறிக்கை கொடுத்தனர்.

அந்த நிதி நிலை அறிக்கையைப் பெரிதும் பாராட்டி, மத்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சரும், மராட்டிய மாநில முன்னாள் ஆளுநருமான சி.சுப்பிரமணியம் தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், நிதிநிலை அறிக்கையில்- அவர் ஏற்கனவே ஒரு விழாவிலே கேட்டுக்கொண்டதற்கிணங்க, வீரபாண்டிய கட்ட பொம்மனின் 200ஆவது நினைவு நாளை அரசு விழாவாக நடத்தப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.

நிதி நிலை அறிக்கையின் கூட்டத் தொடரின்போது, தமிழகச் சட்டப்பேரவையில் 25.3.1999 அன்று, உறுப்பினர்கள் புரசை ரெங்கநாதன், கே.சுப்பராயன், நிஜாமுதீன், ஜி.கே.மணி, எல்.சந்தானம், எஸ்.திருநாவுக்கரசு, டி.மணி, வேலாயுதம், பி.வெங்கடசாமி, டாக்டர் கிருஷ்ணசாமி, பேராசிரியர் தீரன் ஆகியோர் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். கலைஞர் என்ன பிரச்சினை குறித்து என்றால், "ஜெயலலிதாவிடம் ஆடிட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜசேகரன் என்பவரைத் தோட்டத்திற

்கு அழைத்து ஜெயலலிதாவும், சசிகலாவும் காலணிகளால் அடித்ததாகவும்-அதன் பின்னர் மகாதேவன் என்பவர் தடியுடன் வந்து ராஜசேகரனைத் தாக்கியதாகவும்-வெள்ளைப் பேப்பரில் கையெழுத்திட்டுத் தருமாறு வலியுறுத்தியதாகவும்- தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?"

என்பதற்கு விளக்கம் கேட்டிருந்தனர். இந்தப் பிரச்சினையில் பேசிய அனைவரும் தங்கள் கருத்துக்களைச் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள் என்ற போதிலும், எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. சார்பில் பேசிய திருநாவுக்கரசரின் பேச்சு நினைவில் கொள்ளத்தக்கது. அவரது நீண்ட பேச்சின் சில பகுதிகள் வருமாறு:- ★ "ஒரு ஆடிட்டர் வீட்டிலே புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி, "எங்கே போகிறீர்கள்?"

என்று கேட்கிறார். உடனே ஆடிட்டர் "நான் யாருக்குப் பணியாற்றுகிறேனோ, அவர் வரச்சொல்லியிருக்கிறார்-பார்க்கப் போகிறேன்" என்று சொல்கிறார். உடனே அவருடைய மனைவி, "போகாதே, போகாதே என் கணவா-பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று சொல்லி, போக வேண்டாமென்று தடுத்து, பாட்டுப் பாடுவதாக நண்பர் சோ அவர்கள் தன்னுடைய "துக்ளக்" பத்திரிகையிலே அட்டைப் படத்திலே கார்ட்டூன் வெளியிட்டிருப்பதை இங்கே நினைவு கூரக் கட மைப் பட்டிருக்கிறேன்."

★ "சமீபத்தில் ஒரு நீதிபதி வீட்டுத் திருமணத்திற்குப் போய் உட்கார்ந்திருந்தேன். சுற்றி சில வழக்கறிஞர்கள் இருந்தார்கள்-சில நீதிபதிகளும் இருந்தார்கள். அதிலே ஒரு வழக்கறிஞர் விளையாட்டாகச் சொன்னார். "முதல் டர்ன் ஆடிட்டர்-அது முடிந்திருக்கிறது. அடுத்த டர்ன்-வழக்கறிஞர்களுக்கு வரப் போகிறது" என்று சொன்ன உடனே, அந்த வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இதை நான் சொல்லக் காரணம், ஆடிட்டர் சங்கத்தின் சார்பிலே அவர்களுக்கு வந்த செய்தியின் அடிப்படையில், அவர்கள் சென்று ராஜசேகரனைப் பார்த்துவிட்டு, ஒரு கண்டன அறிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள். "நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தச் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது."

★ "ஆடிட்டர் நல்ல சிவப்பு ஐயர்-அடிபட்டபின் 'கறுப்பு ஐயராக மாறியிருக்கிறார். காலிலே இருந்து அடி-எங்கே பார்த்தாலும் கன்னிப் போய் இருக்கிறது. உடம்பெல்லாம் தடித்துத் தடித்து மிகவும் பரிதாபகரமான நிலையில் படுத்திருந்தார். பயப்படுகிறார். அவருடைய சகோதரரும் உடன் இருந்தார். அவர் ஆடிட்டரைவிட அதிகம் பயப்படுகிறார்."

★ "ஒரு முன்னாள் அமைச்சர் திருச்சியில பேசியிருக்கிறார்- "ஆடிட்டருடைய குடும்பத்தையே கொலை செய்து விடுவோம்-தொலைத்து விடுவோம்-காணாமல் ஆக்கிவிடுவோம்- அம்மா கண் அசைத்தாலே போதும்-விரல் அசைத்தாலே போதும் ஆடிட்டர் குடும்பமே காணாமல் போய்விடும்" என்று பேசியிருக்கிறார்.

இன்னொருவர் "எங்க அம்மாவா அடிக்க வேண்டும்? நான்கு ஆட்களை அனுப்பி, இரண்டு போடு போட்டுவிட்டு வாங்கடா என்றால், போட்டுவிட்டுப் போகிறார்கள்!" என்று துணைப் ஜி.கே.மணி, கே.சுப்பராயன், டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர், ஜெயலலிதா தனது ஆடிட்டரைத் தாக்கியதுபற்றி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். கலைஞர் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிற ஒருவர் அறிக்கை விடுகிறார்."

ஆடிட்டர் ராஜசேகரன் மட்டுமல்ல - வக்கீல் சண்முகசுந்தரம் தாக்குதல் - ஏ.ஆர்.லெட்சுமணன் மருமகன் மீது கஞ்ஜா வழக்கு - இவைகளைத் தொடர்ந்து ஜெயலலிதா நடத்திய அராஜகங்களை நீண்ட பட்டியலிட்டார். அவரது கட்சியின் முன்னாள் பொருளாளர் திருநாவுக்கரசர் ★ "இதையெல்லாம் பார்த்து, நாம் அடிபட்டது மட்டுமல்லாமல், எங்கே தன்னுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்ற சூழ்நிலையில், ஆடிட்டர் ராஜசேகரன் பயந்து போயிருக்கிறார்.

கொடுமையான சம்பவம் போயஸ் தோட்டத்திற்குள்ளே நடைபெற்றிருக்கிறது." சில பேர் "போயஸ் தோட்டத்திற்குள்ளே இப்படி நடக்குமா? அந்த அம்மா பெண் ஆயிற்றே - இப்படி யெல்லாம் செய்யக் கூடியவரா? காலணி கொண்டு அடித்து ஒரு மனிதனைக் காயப்படுத்த முடியுமா?"

என்று இப்படிப்பட்ட வியப்புக்குரிய கேள்விகள் வெளியே சிலரால் கேட்கப் படுகின்றன. போயஸ் தோட்டத்தில் இதுமாதிரி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. எனக்கு எதுவும் நடக்க வில்லை- அதற்கான துணிச்சல் அந்த அம்மாவுக்குக் கிடையாது. அப்பாவிகள் பல பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்."

"இன்னும் சொல்ல வேண்டுமானால், பத்திரிகையில் வந்த ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்த உடனே, முன்னாள் எம்.எல்.ஏ.பாப்பா சுப்பிரமணியம்-இப்போது பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கிறார்- அவருடைய வீட்டுக் கல்யாணத்திற்குச் சென்று வந்தோம். நானும், பண்ருட்டியாரும் காரின் பின் பக்கத்திலே அமர்ந்திருந்தோம். அந்த அம்மா காரின் முன் பக்கத்திலே அமர்ந்திருந்தார்கள். வழியிலே தஞ்சாவூர் பக்கத்தில், ரோட்டில் விவசாயிகள் கட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த அம்மா வண்டியை நிறுத்தி, "எவ்வளவு கூலி வாங்குகிறீர்கள்?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அவர் இறங்கிச் சென்றபோது, அவரது செக்யூரிட்டி ஆட்கள் அவர் பின்னாலே ஓடுகிறார்கள். எங்களது காருக்குப் பின்னால் வந்த ஆட்களும் இறங்கி ஓடுகிறார்கள். அப்படி ஓடும்போது, ஒருவருக்கொருவர் கால் இடறி விழுந்து விடுகிறார்கள். அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுகிறது. அதிலே பண்ருட்டியாரின் உதவியாளர் மோகன் , ஜெயலலிதாவிடமிருந்த சசிகலா நியமித்த ஒரு ஆள்மீது மோதிவிட, அவர் கீழே விழுந்து விடுகிறார்.

சிலநாட்கள் கழித்து பொதுக்குழு நடைபெறுகிறது." ★ "ஜெயலலிதாவிற்கு உதவியாக நடராஜன் நியமித்தவர்கள் பத்து, பதினைந்து பேர் அவரிடம் வேலை பார்த்தார்கள். புதுக்கோட்டையிலிருந்து பத்து பதினைந்து பேரை நாங்கள் பாதுகாவலுக்காக நியமித்திருந்தோம். நடராஜன் நியமித்த ஆட்கள், நாங்கள் போட்டிருந்த ஆட்களிடம், "பொதுக் குழுவிற்குப் போய்விட்டு வரும்போது, பண்ருட்டியாரின் உதவியாளர் மோகனை வசமாக அடித்து விடுங்கள்-என்று ஜெயலலிதாவும் சசிகலாவும், சொல்லியிருக்கிறார்கள்!"

என்று தெரிவிக்க-அவர்கள் அப்படியே அடிக்க மறுத்த காரணத்தால், வீடு திரும்பியவுடன், "ஏன் அடிக்கவில்லை?" என்று கேட்டு அவரை அடித்திருக்கிறார்கள்." ★ "இன்னொரு சம்பவம் சொல்கிறேன் -உப்பிலியாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்-அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைப் பார்த்து விட்டுக் கீழே இறங்கினார். அங்கேயிருந்த நான், "என்ன பதட்டமாக இருக்கிறீர்கள்?"

என்று கேட்டேன். "நான் போனேன்- அந்த அம்மா என்னை அடித்து விட்டார்கள்" என்றார். "ஏன்?" என்று கேட்டேன். காவல் நிலையத்திற்குச் சென்று, கைதாகி இருந்த தன் கட்சிக்காரர்கள் சிலரை கலைஞர் மீட்டு வந்ததற்காக அவருக்கு இந்தத் தண்டனையாம்-இது மாதிரி பல சம்பவங்கள்."

அத்வானிக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' நோய் என்று கிண்டல் செய்தார், ஜெயலலிதா. ★ "தன்னைக் கண்ணியத்திற்குரிய பெண்மணி என்று பேட்டி கொடுப்பார். அவர் சொன்ன பொய்களை அடுக்கிக் கொண்டே போகலாம்-நேரம் கருதிச் சுருக்கமாகச் சொல்கிறேன்." ★ "முதல் பொய், எம்.ஜி.ஆர். இறந்தவுடனே "நான் ஓர் அனாதை" என்றார்.

அவருக்குக் கூடப்பிறந்த அண்ணன், அண்ணி, பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். அண்ணன் ஜெயக்குமார் கொஞ்ச காலத்திற்கு முன்புதான் இறந்தார். "எம்.ஜி.ஆர். நான் வளருவதைப் பொறுக்காமல், என்னை அரசியல் ரீதியாக அழிக்கப் பார்க்கிறார்" என்று பிரதமருக்கு அவர் கைப்படவே எழுதினார்.

பிறகு அவரே என்ன சொன்னார் என்றால், "எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு, நான் இறக்கப்போகிறேன்- கட்சியை நீதான் வளர்க்க வேண்டும்-வெளியிலே போய் விடமாட்டேன் என்ற சத்தியம் வாங்கினார்!" என்று அடுத்த பொய்யைக் கூறினார்." ★ "திருச்சியில் அவர் ஒரு கூட்டத்தில் பேசும் போது ஒரு சிறு அசம்பாவிதம். உடனே "அதற்குக் காரணம் த.மா.கா.தலைவர் மூப்பனார் தான்" என்று முதல் நாள் சொன்னார்.

அதற்கடுத்த நாள் "நான் அவ்வாறு சொல்லவில்லை-பத்திரிகையிலே தவறாக வந்துவிட்டது" என்றார். இதற்கடுத்து வன்முறைகள் எவை என்று பார்த்தால், வக்கீல் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது- விஜயன் தாக்கப்பட்டது-ஏன், முத்து கைது செய்யப்பட்டது-என்ற விவகாரத்திற்குள் சென்றால், மிக அசிங்கமாக இருக்கும். முத்து கஞ்சா வழக்கிலே உள்ளே போடப்பட்டார். நீதிபதி. ஏ.ஆர்.லெட்சுமணன் மருமகனை கஞ்சா வழக்கிலே போட்டார்கள். பின்னர் விடுதலை செய்தார்கள்.

அதற்குப் பிறகு பார்த்தால், மதுராந்தகம் சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி ரமேஷ், காட்பாடி மோகன் என்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அடி வாங்கினார்கள். மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் தாக்கப் பட்டபோது, நான் சட்டமன்றத்திலே அதைப் பற்றிய பிரச்சினையை எழுப்பினேன். அப்போது ஜெயலலிதா எழுந்து, "என் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அடி வாங்கினால் இவருக்கு என்ன?"

என்று கேட்டார். அதற்கு நான், "சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டால், எந்த சட்டமன்ற உறுப்பினரும் அதைப்பற்றி அவையிலே கேட்கலாம்" என்று பதில் கூறினேன்." 'திருச்சியில் ஜெயலலிதா பேசிய கூட்டத்தில் நிகழ்ந்தம்அசம்பாவிதத்திற்கு மூப்பனார்தான் காரணம்' என்று ஜெயலலிதா பழி சுமத்தினார்.

★ "அதே மாதிரி சேஷன் -அவர் ஒரு காலத்திலே இந்தியாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தவர். அவர் சென்னையிலே வந்து இறங்கி 'ஆடி'ப் போனார். விமான நிலையத்திற்குள்ளேயே காக்க வைத்தது, அதற்குப் பின்னாலே அவர் தங்கியிருந்த ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் கமிஷனருக்கே இந்தக் கதி!"

★ "சகோதரர் சுப்பிரமணியன் சுவாமி -அவர் வெளிநாடு எல்லாம் போனவர். அவர் "இங்கே நான் வந்து பார்த்த காட்சிகளை, வேறு எந்த நாட்டிலேயும் பார்க்கவில்லை!" என்று சொல்லக் கூடிய அளவிற்கு அவரைப் கலைஞர் பயமுறுத்தி-போகிற இடத்தில் எல்லாம் அடித்து- கல்வீசி- பல சம்பவங்கள் நடந்தன. சுப்பிரமணியன் சுவாமி திருச்சியில் ரயில் ஏறினார். அவரைத் தாக்குவதற்காக அ.தி.மு.க. குண்டர்கள் மன்னார்குடியிலிருந்து அனுப்பப்படுகிறார்கள்.

செய்தி அறிந்த காவல் துறை அதிகாரி காவலர்களை அனுப்பிக் காப்பாற்றினார். ஆனால், அந்த அதிகாரி-அவர் கக்கன் அவர்களின் உறவினர் - அங்கிருந்து மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டது பற்றி நான் அவையிலே கேட்ட போது "அதிகாரிகள் மாற்றலை எல்லாம் திருநாவுக்கரசைக் கேட்டு கொண்டு போட முடியுமா?"

என்று முதலமைச்சர் கேட்டார்." "ஒரு நாட்டின் பிரதமர் இரவு 10 மணிக்கே தூங்கப் போகலாமா?" என்று ராஜீவ்காந்தியை இழிவுபடுத்தினார். ஜெயலலிதா. ★ "திருமதி சந்திரலேகா ஐ.ஏ.எஸ் . அதிகாரி-அவர் மீது ஆசிட் வீசப் பட்டது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், அடைக்கலராஜ் போன்றவர்கள் திருச்சியிலே தாக்கப்பட்டார்கள். அதெல்லாம் வெளியிலே தெரிந்த உண்மை."

★ "மதுரையில் ராஜா முத்தையா மண்ட பத்திலே எம்.ஜி.ஆர். அறக்கட்டளை தொடங்க இருந்தோம். அங்கே இரவில் புகுந்து அடித்து, மண்டபத்தை மூடினார்கள். பண்ருட்டியார் இந்தச் சட்ட மன்றத்திலேயே தாக்கப்பட்டார். "அருமை நண்பர் முன்னாள் அமைச்சர் அருணாசலம் , ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அம்மையார் செல்லும் தனி விமானத்தில் ஏறப் புறப்பட்டபோது, என்னையும் கூப்பிட்டார். நான் அவரிடம் விளையாட்டாக, "அந்த அம்மாள் என்னிடம் கோபமாக இருக்கிறார்.

கண்டிப்பாக நீங்கள் போய்ச் சேருவீர்களா என்பது சந்தேகம். நான் வந்தேன் என்றால், என்னை விமானத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார் என்று சொன்னாலும் சொல்லுவார்-நான் வரவில்லை-நீங்கள் போங்கள்" என்று சொல்லிவிட்டு நான் போய் விட்டேன்.

அன்று மாலையில், அருணாசலம் எனக்கு போன் செய்து, "என்ன திருநாவுக்கரசு- நீங்கள் சொன்னது போலவே நடந்துவிட்டது- நல்லவேளை- நீங்கள் வரவில்லை!" என்று சொன்னார். அந்த அளவிற்கு அருணாசலம் விமானத்திற்குள் சென்றவுடன், சத்தம் போட்டு, காவல்துறை அதிகாரியான விஜயகுமாரை அழைத்து, "Who is he?"

அவரை எப்படி ஏற்றினீர்கள்?" என்றெல்லாம் கூறி, விமானத்திலிருந்து இறக்கி விட்டார்." ★ "அதேபோல் ராஜீவ்காந்தி -அவர் பிரதமர்-இந்த அம்மாள் போன் செய்தபோது அவர் கிடைக்க வில்லையாம். " இந்த நாட்டின் பிரதமர் 10 மணிக்குத் தூங்கப் போகலாமா? " என்று கேட்டார்.

பிரதமர் நரசிம்மராவைப் பற்றி " செயலற்ற பிரதமர் " என்றார். அத்வானிக்கு "செலக்டிவ் அம்னீஷியா " என்றார். அவருடைய கட்சியில் ஆர்.கே.குமார் என்பவர் அமைச்சராக இருந்தார். திடீ ரென்று பார்த்தால் அவர் மருத்துவமனையிலே படுத்துக் கிடக்கிறார். "பணியாற்ற முடியாது-ராஜினாமா செய்கின்றேன்" என்று செய்தி வருகிறது.

ஆனால் டெல்லியில் விசாரித்தால், குமார் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார் என்று கூறுகிறார்கள். நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரைப் பார்த்து " உதிர்ந்த மயிர் - தெரு நாய்" என்றெல்லாம் விமர்சனம் செய்தது அனைவருக்கும் தெரியும். ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களை, "என்னிடம் தகாத முறையிலே நடக்க முயன்றார்" என்று சொன்னார்.

அவர் சென்ற காரைத் கலைஞர் திண்டிவனத்திற்கு அருகில் அடித்து நொறுக்கினார்கள். இந்தச் சம்பவம் எல்லாம் ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் நடந்திருக்க முடியுமா? சோனியா காந்தி அம்மையாரை "வெளிநாட்டுக்காரப் பெண்மணி-அவர் எப்படி கட்சிக்குத் தலைவராக வரலாம்.?"

என்று கேட்டார். பிறகு தூதுக்கு மேல் தூது விட்டுக் கொண்டிருந்தார். நீதிபதிகளையும் அவர் விட்டு வைக்கவில்லை." "வெளிநாட்டுப் பெண்மணி எப்படி ஒரு கட்சிக்கு தலைவராக முடியும்?" என சோனியாகாந்தியைத் தூற்றினார் ஜெயலலிதா. ★ "ஒருமுறை பொதுக்குழுவிலே கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். "அ.தி.மு.க.வைக் காப்பாற்றுவதற்காக அண்டா, குண்டா, நகை எல்லாம் விற்றுக் கட்சியை நடத்திய புரட்சித் தலைவிக்குப் பாராட்டு!"

என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் போலீஸ் ரெய்டுக்குப் போனபோது, தங்கமும், வெள்ளியும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு உள்ளே இருந்தது. எப்படி என்றால், "மைசூர் மகாராஜா எங்களுடைய தாத்தாவிற்குக் கொடுத்தது" என்று சொன்னார்.

மகாராஜா தாத்தாவிற்கு ஒட்டியாணம், வளையல் ஆகியவைகளையெல்லாம் கொடுத்திருக்கிறாராம்- அப்படி அவர் செய்த- மோசடிகள் ஏராளம்!" ★ "இந்தியாவிலேயே-உலகத்திலேயே எந்த அரசியல் கட்சித் தலைவரும், கட்சிப் பணத்தை தங்களுடைய குடும்பச் செலவிற்காகவும், தங்களுடை தோழிக்காகவும் கையாடிருக்க மாட்டார்கள். 1989ஆம் ஆண்டு அங்கு நான் பொருளாளர்-என் பெயரிலும் அவர் பெயரிலும் சேர்ந்து "ஜாயிண்ட்" அக்கவுண்ட். மூன்றரை கோடி ரூபாய் பணம் போடப்பட்டது.

டிக்கெட் கேட்கிறவர்கள் எல்லாம் பணம் கட்டுகிறார்கள். கட்சி தோற்றுப் போய் 26 பேர்தான் வருகிறோம். இதற்கிடையில் அந்த மூன்றரை கோடி ரூபாய் எடுத்

துச் செலவழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நான் கையெழுத்து போடவில்லை. கட்சி தோற்றவுடன் எல்லோரும் என்னிடம் வந்து "எனக்கு சீட்டு கொடுக்க வில்லை-பணத்தைக் கொடு" என்று கேட்டு தகராறு-பின்னர் அப்போது, அங்கேயிருந்த மாதவன் அவர்களிடம் கூறி, எம்.ஜி.ஆர்.

கட்சிக் கணக்கிலே இருந்த பணத்தை எடுத்து, நிலைமை சரிக்கட்டப்பட்டது. எனவே இப்படியெல்லாம் செய்யக்கூடியவர் தான் அவர். ★ "நான் முதலமைச்சர் அவர்களைக் கேட்கிறேன். நீங்கள் மிகவும் யோசித்து, யோசித்து காரியங்களைச் செய்கிறீர்கள். அதனாலே தான் பல பேர் தப்பியிருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் அவரைக் கைது செய்ய வேண்டாம். சசிகலாவிற்கு என்ன வந்தது? அவரை ஏன் நீங்கள் பிடிக்கக் கூடாது? மகாதேவனுக்கு முன்னால் அமைச்சர்கள் எல்லாம் போய் நிற்கிறார்கள்.

அந்த "மகாதேவன் குடும்பத்தாலேதான் கெட்டப்பெயர் வந்தது. அந்தக் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறேன் ஒதுக்கி வைக்கிறேன்" என்று ஜெயலலிதா ஆட்சி போனவுடனே அறிக்கை கொடுத்தார். ஆனால், இப்போது அந்த உடன்பிறவாச் சகோதரியிலிருந்து அத்தனை பேரையும் வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறார். ஆடிட்டர் ராஜசேகரன் அடிபட்ட அந்த விவகாரத்தில், அரசு நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

ஜெயலலிதாவைக் கைது செய்யவில்லை என்றால் விட்டு விடுங்கள். ஏற்கனவே பண்ணியது போதும்-இருந்துவிட்டு வந்தாகிவிட்டது. பிறகு அதை வைத்துக்கொண்டு ஊருக்கு ஊராக அழுது-அது ஒரு நாடகம் நடக்கும். மற்ற கலைஞர் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."

-திருநாவுக்கரசர் பேசியதை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், அன்றைய தினம் அவையிலே பேசிய அத்தனை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதே கருத்தைத்தான் தெரிவித்தார்கள். காவல்துறையின் பொறுப்பை ஏற்றிருந்தவன் என்ற முறையில், நான் அந்தச் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பிலே இருந்தேன். நான் என்னுடைய பதிலை, திருநாவுக்கரசின் பேச்சின் அடிப்படையிலே தொடங்கினேன்.

★ "திருநாவுக்கரசு அவர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்றை-வரலாற்றுச் சம்பவங்களை-இங்கே அடுக்கடுக்காக எடுத்துக் காட்டியிருக்கிறார். மகாபாரதத்தை எழுதிய வேதவியாசர் அந்த மகாபாரதச் சம்பவங்களில் ஒரு கதாபாத்திரமாக இருந்த காரணத்தால், அந்த மகாபாரதம் மிக அருமையாக அமைந்தது என்று பாராட்டுவது உண்டு. அதே போல, வேதவியாசர் எழுதிய மகாபாரதத்தைப்போல, நம்முடைய தம்பி திருநாவுக்கரசு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தக்க உரையினை ஆற்றியிருக்கிறார், பா.ஜ.க.சார்பில் பேசிய வேலாயுதம், "சட்டம் தன்னுடைய கடமையை செய்யட்டும்" என்றார்.

பா.ம.க.சார்பில் பேசிய ஜி.கே.மணி. "ஒரு பெண்மணி இப்படிச் செய்வார் என்று நம்ப முடிகிறதா?" என்று கேட்டார். பெண்மணி நிச்சயமாக செய்ய மாட்டார். சந்தேகத்தைக் கேட்ட ஜி.கே.மணிக்கு ஒரு அறிக்கையினைப் படித்துக் காட்டுகிறேன். ★ "ஒரு சில தலைவர்களுக்குக் கூட்டம் போடத்தெரியும்- ஊர்வலம் நடத்தத் தெரியும்- தொண்டர்களைத் தூண்டிவிட்டு வன்முறையிலே ஈடுபடச் செய்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் தெரியும்!

ஆனால், காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டால், அவர்கள் பேசிய வசனங்கள் காற்றில் பறந்தோடிவிடும். தொண்டர்களின் நினைவு மறந்துவிடும். சிறையின் அசௌகரியங்களை சிறிதுநேரம்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல், எப்படியாவது வெளியே வந்துவிடத் தோன்றும். அதற்குத் தயாராக இடுப்புவலி-தலைவலி-திருகு வலி-நெஞ்சு வலி-என்று இது வரையில்லாத வலிகள் எல்லாம் திடீரென முளைத்துவிடும்."

"டாக்டர் ராமதாசைக் கைது செய்து ரிமாண்டு செய்யும்போது, அதை எப்படியும் தடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில், திடீரென இடுப்பு வலி, நெஞ்சுவலி என்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்." "அங்கு மருத்துவப் பரிசோதனையிலே அவருக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்த பின்பு, காவலர்கள் அவரை ரிமாண்டு செய்ய முற்பட்டவுடன், வேறு வழியின்றி சிறையில் உள்ள அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும், பழகிப்போன சுகங்களை விட்டு கொடுக்க முடியாமலும், தன்னை உடனே விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி தனது மனைவி மூலமாக எனக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறார்."

"டாக்டர் இராமதாசின் மனைவி எனக்கு அளித்துள்ள வேண்டுகோளை ஏற்று, ஒரு பெண்மணியின் துயரை இன்னொரு பெண்மணியால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதால், டாக்டர் இராமதாசை உடனடியாக வேலூர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளேன்" என்கிறது அந்த அறிக்கை."

★ "இந்த அறிக்கை நாகரிகம் தெரிந்த-நயத்தகு நாகரிகம் கற்ற-அவரா இப்படிச் செய்திருப்பார் என்று நண்பர் மணி அவர்களால் இங்கே ஐயப்பாட்டோடு வினா எழுப்பப்பட்டது - அம்மையார் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது, விடுத்த அறிக்கை அது. கலைஞர் அதனை மறுத்து டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய துணைவியார்- "நான் அப்படி ஒன்றும் மன்னிப்பு கேட்கவும் இல்லை-என் கணவருக்காக வேண்டுகோள் விடுக்கவும் இல்லை" என்று அப்போது அறிக்கை வெளியிட்டார்.

★ "ஆடிட்டர் ராஜசேகரன் தாக்கப்பட்டது குறித்து எழுத்து மூலமாகப் புகார் கொடுத்துள்ளார். அதிலே விவரமாக, தான் தாக்கப்பட்டது பற்றிய முழு விவரமும் உள்ளது. எழுத்து மூலமாக அந்தப் புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், 13.3.1999 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை" என்று கேட்டிருக்கிறார்கள்.

நியாயமான கேள்வியாக இருந்தாலும்கூட, புலன்விசாரணை முழுமையாக முடிவுற்ற பிறகு எடுக்கப்பட வேண்டிய சட்டப் பூர்வமான நட வடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." - இவ்வாறு எனது பதிலுரையைப் பேரவையிலே கூறினேன்.