நெஞ்சுக்கு நீதி
சிங்கை-மலேசியா நிகழ்ச்சிகள்! · 357 / 391
45. சிங்கை-மலேசியா நிகழ்ச்சிகள்! "இந்தப் பெருங் கூட்டம் கலைஞரைத் தவிர வேறுயாருக்குக் கூடும்?" என்று வியந்தார். கவிப் பேரரசு வைரமுத்து. நெ ல்லை, குமரி மாவட்டங்களில் மூன்றுநாள் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, 31.12.1998 அன்று சென்னை திரும்பினேன். 3.1.1999 அன்று நான் மலேசியா-சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்லவிருந்ததையொட்டி-31.12.1998 தலைமைச் செயலகத்தில், அதிகாரிகள் எல்லாம் என்னைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்கள்.
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்திருந்த "தமிழ் முரசு" ஆசிரியர் திருநாவுக்கரசு -இவரும் திருவாரூர்க்காரர்தான்-அன்று காலையில் என் இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவரிடம், "சிங்கப்பூரில் பத்திரிகை சுதந்திரம் எப்படி?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அங்கே செய்திகளை ஜாக்கிரதையாக எழுத வேண்டும்-கண்டதை எழுத முடியாது!"
என்றும் கூறினார். நான் உடனே அவரிடம், "எங்கள் நாட்டில் (இந்தியாவில்) காணாததை எல்லாம் எழுதுகிறார்கள்-உங்கள் நாட்டிலே கண்டதை எழுதக் கூடாது என்று சொல்கிறீர்களே?" என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். இந்தியாவிற்கே முன்னோடியாகத் தமிழகம் திகழும் வண்ணம் ஏராளமாக - ஆக்கப்பூர்வமாக திட்டங்களைத் தீட்டி அதனை வெற்றிகரமாக செயல்படுத்திய கழக அரசு 2.1.1999 அன்று சென்னையில்-குறிப்பாக சேப்பாக்கம் தொகுதியில்- கலைஞர் மகளிர் சிறு வணிகக்கடன் திட்டத்தை கூட்டுறவுத் துறையின் சார்பில் தொடங்கி வைத்தேன்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் வாழும் ஏழை எளிய மக்கள், சிறு வியாபாரம் செய்து, அதன் வாயிலாக தமது வருமானத்தைப் பெருக்கிடப் போதுமான கடன் வசதிகள் முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் இருந்ததை எண்ணிப் பார்த்து, அத்தகைய ஏழை எளிய மக்கள், அதிக வட்டிக்குக் கடன் பெற்று, அல்லல்பட்டு தொழில் செய்து. வருங்காலத்திற்கு சேமிக்கவும் இயலாத நிலையில் இருப்பதனைப் போக்க வேண்டுமென்பதற்காகவே குறைந்த வட்டியில் சிறு கடன்கள் கூட்டுறவுத் துறையின் வாயிலாக வழங்கிட முடிவு செய்தது.
எந்தவொரு சிறு தொழில் தொடங்க வேண்டுமென்று விரும்புவோருக்கும் அந்தக் கடன் உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விழாவிற்கு அன்றைய கூட்டுறவுத் துறை அமைச்சர் தம்பி கே.என்.நேரு தலைமை தாங்கினார். தம்பி முரசொலிமாறன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.பாலு எம்.பி., சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின், செ.குப்புசாமி எம்.பி., ப.ரெங்கநாதன் எம்.எல்.ஏ. சட்டப்பேரவை துணைத்தலைவர் பரிதி இளம்வழுதி , அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, சற்குணப் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
★ ★ ★ 1996இல் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தொழில்துறை பெரும் பின்னடைவை அடைந்திருந்தது. கழகம் 96இல் பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகம் தொழில் துறையில் மூன்றாவது இடத்திற்கு வந்தது. அந்த நேரத்தில்தான் 14.11.1998 அன்று சிங்கப்பூர் நாட்டுத் தகவல், கலை மற்றும் தொழில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த திரு.ஜார்ஜ் இயோ அவர்கள் தமிழ்நாட்டிற்கும். சிங்கப்பூருக்கும் இடையே வேகமாக வளர்ந்து தழைத்துவரும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவிடும் வகையில், சிங்கப்பூர் நாட்டிற்கு என்னை வரவேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதைப்போலவே மலேசிய நாட்டுத் தொழில் முனைவோரில் பலர் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல திட்டங்களில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும், நான் ஒரு முறை வருகை தந்தால், அது இரு நாட்டிற்கும் இடையேயான உறவை மேலும் வளர்த்திட உதவும் என்றும், 16.11.1998 அன்று மலேசிய நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீசாமிவேலு அவர்களும், அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீஅப்துல்லா ஹாஜி அஹ்மத் படாவி அவர்களும் அழைப்பு விடுத்திருந்தனர். எனவே அந்த அழைப்புகளையேற்று, தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளைத் தேடிப் பெறுகின்ற நோக்கத்தோடு சிங்கப்பூர்-மலேசியா நாடுகளில் ஒரு வாரகாலம் சுற்றுப் பயணம் செய்திட முடிவெடுத்து, 3.1.1999 அன்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்டேன்.
என்னை வரவேற்ற சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங் அவர்களுக்கு வள்ளுவர் கோட்டத்தின் மாதிரி உருவப் பரிசினை வழங்கினேன். விமான நிலையத்திற்கு பேராசிரியர் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும், சட்டப் பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர்.பழனி வேல்ராஜன் அவர்களும், தோழமைக் கட்சித் தலை வர்களும், வருகை தந்து என்னை வாழ்த்தி வழியனுப்பினர். என்னுடன் எனது மனைவி ராஜாத்தியும், அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், தொழில் கலைஞர் துறைச்செயலாளர் எம்.எஸ்.சீனிவாசன் ஐ.ஏ.எஸ்., அவர்களும் வந்திருந்தனர்.
மலேசியப் பிரதமர் மகாத்தீர் முகம்மது அவர்களுக்கு 'சங்கத் தமிழ் "குறளோவியம்" ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வழங்கினேன். சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு 4.1.1999 அன்று விடியற்காலையில் சென்றடைந்த எனக்கு சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகளின் சார்பிலும், இந்தியத் தூதரகத்தின் சார்பிலும் சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது. வர்த்தக வளர்ச்சிக் கழகம் சார்பில் டான் வீ வென், ஓ பூன் குவான் ஆகியோர் எனக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தூதுவரகத்தின் சார்பில் இந்தியத் தூதர் பிரேம் சிங் , அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் வரவேற்றனர். "தமிழ் முரசு" பத்திரிகை சார்பில் ஆசிரியர் திருநாவுக்கரசு , தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் அமலதாசன் , தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் நா.ஆண்டியப்பன், கிருஷ்ணன், இந்திரா கிருஷ்ணன் ஆகியோரும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அந்த நேரத்தில் சிங்கப்பூர் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த என் மகள் கனிமொழியும் , மருமகன் அரவிந்தனும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
விமான நிலையத்தில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் கூறும்போது, "நீண்ட காலமாக தமிழகத்திற்கும், சிங்கப்பூருக்கும் கலாச்சாரத் தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையில் என்னுடைய இந்தப் பயணம் அமையும் என்று நம்புகிறேன். இந்தப் பயணத்தில் இங்குள்ள தமிழக மக்களைச் சந்திப்பதிலும், பொதுவாக சிங்கப்பூர் பொதுமக்களைச் சந்திப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடு, அரசாங்கத்தின் முக்கியப் பிரமுகர்கள், தொழில் முனைவர்களுடனான சந்திப்பும் பயன் உடையதாக இருக்குமென்று கருதுகிறேன்.
சிங்கப்பூர் பயணம் என்பது என்னுடைய நீண்டகாலக் கனவு, அது இன்று நிறைவேறுவதில் பூரிப்பு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டேன். "சிங்கப்பூருக்கு வருவது என் நீண்டகாலக் கனவு" என்று நான் அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டதுபற்றி கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், " சிங்கப்பூர் மலேசியாவில் சங்கத்தமிழ் " என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில்- சிங்கப்பூருக்கு வருவது என் நீண்ட காலக்கனவு என்று சிங்கப்பூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.
அது ஒருவர் கண்ட கனவு-ஆனால், சிங்கப்பூருக்கு கலைஞர் வர வேண்டும் என்பது பல்லாயிரம் தமிழர்கள் கண்ட கனவு. இரு தரப்புக் கனவுகளும் ஒரு பொழுதில் பலித்தன" என்று எழுதியிருந்தார். தூதுவரகத்தின் சார்பில், இந்தியத் தூதர் பிரேம்சிங் என்னை வரவேற்றார் சிங்கப்பூர் சென்றடைந்த அதே நாளில் ஓய்வெடுக்கக்கூட நேரம் இல்லாமல், சிங்கப்பூர் தொலைக்காட்சி சார்பில் சிறப்புப் பேட்டிக்காக வந்து காத்திருப்பதாகக் கூறினார்கள்.
முழுப் பேட்டியும் மிகவும் நீளமானது என்பதால், முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். கலைஞர் செய்தியாளர்:- சிங்கப்பூருக்குத் தங்கள் குழுவுடன் வந்திருக்கிறீர்கள். சிங்கப்பூர்-தமிழ்நாடு என்ற இரண்டு நாடுகளுக்கும் இடையே எந்த விதமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கப்போகிறீர்கள்? நான்:- நான் சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் வந்திருப்பது நீண்டகாலக் கனவாகும். மலேசியாவுக்காவது ஒருமுறை வந்திருக்கிறேன்.
சிங்கப்பூருக்கு நான் இதுவரை வந்தது இல்லை. இப்போது வந்திருப்பது தொழில் தொடர்புக்காக மாத்திரமல்ல - சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ள என் வருகை பயன்படும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். இந்தக் கலாச்சாரத் தொடர்பு மேலும், மேலும் வளர வேண்டும் என்ற அந்த நம்பிக்கையோடு, சிங்கப்பூர்-மலேசியாவிலுள்ள தொழில் முனைவோருடைய உதவியும், ஒத்தாசையும் தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் வளரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
செய்தியாளர்:- தமிழ்நாட்டில் எத்தகைய தொழில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிப்பீர்கள்? நான்:- எல்லா வகையான தொழில்களுக்கும் தான்! தமிழ்நாட்டில் இப்போது எங்களுக்கு மிக அதிகமாகத் தேவைப்படுவது மின் உற்பத்தி, எனவே நாங்கள் தொழில் வளர்ச்சிக்காக முனைப்பு காட்டுவது, மின் உற்பத்தி செய்ய வருகிறவர்களை வரவேற்பதில்தான். அடுத்து மோட்டார் கார் உற்பத்தித் தொழில், தமிழ்நாட்டில் மிக அதிகமாக வளரக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
ஒரே ஆண்டு காலத்தில் ஹூண்டாய் கார் உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கப்பட்டு நிறைவடைந்து, இப்போது கார் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடிப்படைக் கட்டுமான வசதிகள் பலவற்றை எல்லாத் தொழில்களுக்கும் தேவையான வகையில் செய்து கொண்டிருக்கிறோம். தொழில் முனைவோர் எந்தெந்த தொழில் தொடங்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க தமிழ் நாடு அரசு தயாராக இருக்கிறது. சிங்கப்பூரில் குடியிருந்த எனது மகள் கனிமொழியின் இல்லத்திற்கு என் துணைவியாருடன் சென்று, அவரது பிறந்த நாளில் வாழ்த்தினேன்.
அருகே மருமகன் அரவிந்தன் செய்தியாளர்:- தமிழ் நாட்டில் சிங்கப்பூர் சாளரம் என்ற பேச்சு அதிகமாக அடிபட்டது. ஆனால் அது பெங்களூருக்குப் போய் விட்டது. அதைப் போலவே வேறொன்று தமிழ் நாட்டில் மீண்டும் வர வாய்ப்புண்டா? நான்:- சிங்கப்பூர் தாழ்வாரம் 1996 ஆம் ஆண்டுக்கு முன்பு அப்போது நடைபெற்ற ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட ஒன்றாகும். அது தமிழகத்திற்கு வரும் என்று வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், தமிழ்நாடு தொழில் வளம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அது வரவில்லை. என்ன காரணத்தாலோ கர்நாடகத்திற்குப் போய்விட்டது. ஆனால், அங்கு எப்படிச் செயல்படுகிறதென்று தெரியவில்லை. சிங்கப்பூர் தாழ்வாரம் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டாலும், சிங்கப்பூர் கூடமாவது தமிழ்நாட்டிற்கு வர வேண்டுமென்ற ஆசை எனக்குள்ளது. செய்தியாளர்:- சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடைமுறை சிரமம் காரணமாகத் தயக்கம் ஏற்படுகிறது.
எனவே, சிங்கப்பூர் சார்பாக தொழில் தொடங்க வருபவர்களுக்குத் தனி வசதி செய்து தரப்படுமா? நான்:- நான் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், உள்ள தொழில் முனைபவர்களைச் சந்திக்க இருக்கிறேன். இன்று கூடச் சிலரை சந்திக்க உள்ளேன். 9ஆம் தேதிவரை தொடர்ந்து கலைஞர் சந்திக்கவிருக்கிறேன். அவர்கள் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு, நிச்சயமாகத் தட்டிக் கழிக்க மாட்டேன்.
தமிழ்நாட்டில் தொழில் வளர வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதால் தட்டிக் கழிக்காமல் உரிய உதவிகளைச் செய்வேன். ★ ★ ★ நான் சிங்கப்பூர் தொலைக்காட்சிக்கான சிறப்புப் பேட்டியை முடித்ததுதான் தாமதம்-சிங்கப்பூர் வானொலிக்கும் சிறப்புப் பேட்டி என்று வந்து விட்டார்கள். அவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றினேன். அடுத்து இந்திய வர்த்தகக் குழுத்தலைவர் தேவேந்தர் சிங், நான் தங்கியிருந்த மாண்டரின் ஓட்டலுக்கு வந்த என்னைச் சந்தித்தார்.
அவருடன் சிங்கப்பூரில் உள்ள இந்தியத்தூதர் பிரேம் சிங் அவர்களும் வந்திருந்தார். மதிய உணவு சாப்பிட அரைமணி நேரத்தைத் தாராளமாக ஒதுக்கினார்கள். பிற்பகல் 2 மணிக்கு சிங்கப்பூர் நாட்டுத் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மா.போ.டான் அவர்கள் வந்திருப்பதாகவும், அவரைச் சந்திக்க வேண்டுமென்றும் கூறினார்கள். அவரைச் சந்தித்தபின், சிங்கப்பூர் துறைமுகக் கழகத்தின் துணைத்தலைவர் திரு.கூன் கோக் லூன் அவர்களுடனும், துறைமுகக் கழகத்தினருடனும் உரையாடினேன்.
சிங்கப்பூர் துறைமுக வளாகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். அங்கிருந்து புறப்படும் போது, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் துணைத்தலைவர் கூன் கோக் லூன் அவர்கள் சிங்கப்பூர் துறைமுக வளர்ச்சி குறித்து தொகுப்பு ஒன்றையும், அழகான "டை" ஒன்றையும் என்னிடம் வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட நான்-தமிழகத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையே தொழில் வளர்ச்சிக்கு "டை" (முடிச்சு) போடுவதற்காக வந்துள்ள எனக்கு நீங்கள் "டை" அளித்திருப்பது பொருத்தம்தான்" என்று கூறினேன்.
★ ★ ★ சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் கூன் கோக் லூன் எனக்கு அழகான டை ஒன்றை வழங்கினார். என் மகள் கனிமொழிக்கு 5.1.1999 அன்று பிறந்த தினம் என்பதால்-அன்று காலையிலேயே நானும், என் மனைவியும் புறப்பட்டு, சிங்கப்பூருக்கு வெளியே ஒரு பலமாடிக் கட்டிடத்தில் குடியிருந்த அவரது வீட்டிற்குச் சென்று வாழ்த்து கூறினேன். பிறந்த நாளன்று நான் அவருடைய வீட்டிற்கு வந்ததில் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் பெரிய மகிழ்ச்சி.
பகல் உணவை அவர்கள் இல்லத்தில் வைத்துக் கொள்ள வலியுறுத்தினார்கள். இருந்தாலும் 5.1.1999 அன்று பகல் ஒரு மணிக்கு சிங்கப்பூர் நாட்டின் கலை, தகவல் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ஜார்ஜ் இயோ அவர்கள் அளித்த விருந்தில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்ததால், நிலைமையை விளக்கி விட்டுப்புறப்பட்டோம். மதிய விருந்தின்போது அமைச்சர் ஜார்ஜ் இயோ பேச்சின் இடையே-சென்னை மாநகர மேயரைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருப்பதாகவும், சிங்கப்பூரைப் பார்வையிட அவரை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னக் கருப்பன் , சிங்கப்பூர் அமைச்சரிடம் சென்னை மாநகர மேயராக முதலமைச்சர் கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் தான் பதவி வகிப்பதாகத் தெரிவித்ததும், அமைச்சர் தனது பெருமகிழ்ச்சியை வெளியிட்டார். அன்று மாலையில் சிங்கப்பூர் இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கழகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு, கலைஞர் தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த தொழில் வளர்ச்சி குறித்து விரிவாக நீண்ட நேரம் உரையாற்றினேன்.
சிங்கப்பூர் தொழில் அதிபர்கள் பலர் அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு, தமிழகத்திலே தொழில் தொடங்குவது பற்றியும், என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது பற்றியும் நீண்ட நேரம் கேள்வி கேட்டு பதிலைப் பெற்றனர். அதே நாளில் சிங்கப்பூரில் உள்ள பத்திரிகைய
ாளர்களுக்கெல்லாம் ஒரு நீண்ட பேட்டியும் கொடுத்தேன். சிங்கப்பூர் நாட்டின் மூத்த தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.ஜார்ஜ் இயோ அளித்த பகல் விருந்தில் கலந்து கொண்ட போது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும், அதற்கு சிங்கப்பூர் அரசு எந்த வகையில் எல்லாம் உதவிடலாம் என்பது பற்றியும், அவ்வாறு உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். 5ஆம் தேதி மாலை 4 மணிக்கு, சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் திரு.கோ.சோக் டோங் அவர்களைச் சந்தித்து 45 நிமிடங்கள் உரையாடினேன்.
இந்தியநாட்டின் பொருளாதாரக் கொள்கை குறித்தும், அரசியல் நிலவரங்களைப் பற்றியும் விரிவாக உரையாடி னோம். வேலை வாய்ப்பு தேடி சிங்கப்பூருக்கு வந்து அவதிப்படும் இளைஞர்களைப் பற்றி பிரதமரிடம் விளக்கி, அவர்களுக்கு உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். பிரதமருக்கு தமிழகத்தின் சார்பில் சந்தன மாலை அணிவித்ததோடு, சந்தனத்தால் செய்யப்பட்ட வள்ளுவர் கோட்டத்தின் உருவ அமைப்பினைப் பரிசாக வழங்கினேன். 6.1.1999 அன்று காலையில், இந்திய வர்த்தகக் குழு ஏற்பாடு செய்திருந்த நெறிகாட்டும் குழுவினருடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கு கொண்ட நான், தொழில் முனைவோர் எழுப்பிய கேள்விகளுக்கும் அய்யப்பாடுகளுக்கும் தெளிவுரைகளைத் தந்தேன்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து மத்திய அரசு அப்போது வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றையும் அவர்களிடம் அளித்தேன். இந்திய வர்த்தகக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில் முனைவோரின் கேள்விகளுக்குப்பதில்அளித்தேன். எனது சிங்கப்பூர் வருகையையொட்டி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் இலக்கிய உரை ஒன்றினை நான் ஆற்ற வேண்டுமென்ற விருப்பத்துடன் 6.1.1999 அன்று அதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சிங்கப்பூரில் உள்ள பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும் அந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனர். சிங்கப்பூர் சரித்திரத்திலேயே அந்த அளவிற்கு ஒட்டு மொத்தமாக பெரும் கூட்டம் ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததில்லை என்று அடுத்தநாள் அங்குள்ள ஏடுகள் எல்லாம் செய்தி வெளியிட்டன. அரசியல் கலப்பற்ற முறையில் ஒருமணி நேரத்திற்கு மேல் அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றினேன். கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பலத்த மழை பொழிந்தபோதிலும், அதனைப் பொருட்படுத்தாமல், தமிழ்ப் பெருங்குடி மக்கள் அந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.
கூட்டம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே என்னை அங்கே அழைத்துச் சென்று, தனியானதொரு ஹாலில் அமரச் செய்து, பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் பொன்னாடைகளும், சால்வைகளும், மலர் மாலைகளும், பூங்கொத்துகளுமாக வழங்கிய நிகழ்ச்சி முடியவே இரண்டு மணி நேரம் ஆயிற்று. மேடை புதுமையான வகையில் நன்றாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஒரு நாற்காலி கூட மேடையிலே போடப்படவில்லை. விழாப் பொறுப்புகளை தலைமையேற்று நடத்திய கலைஞர் திருநாவுக்கரசு மேடைக்குச் சென்று என்னை உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சி குறித்து தம்பி வைரமுத்து தன் கட்டுரையில்- "நிமிடங்கள் பொன்னாகும் சிங்கப்பூரில் ஒரு வேலை நாளில், பிற்பகல் 4.30 மணிக்கு அத்தனை பெரிய திருக்கூட்டம் கலைஞருக்கன்றி வேறு யாருக்குக் கூடக்கூடும்? அரங்கில் ஒலி முழங்க-அத்தனை கண்களிலும் மின்னல் துலங்க - அத்தனை கரங்களும் அனிச்சைச் செயலாய்க் கரவொலி வழங்க- ஆனந்தத்துக்கும். அழுகைக்கும் மத்தியில் இதயம் குழைய-சிங்கப்பூர்த் தமிழர்களின் கனவு மெல்ல மெல்ல நடந்து மேடையேறுகிறது!
நாற்காலியற்ற-ஒலிபெருக்கி மட்டுமே கொண்ட தனிப்பெரும் மேடையில் தமிழ் பேசத் தொடங்குகிறது, தமிழ்! சிங்கைத் தமிழர்களுக்கு கலைஞரைப் பார்த்த பரவசம்-கலைஞருக்கோ சிங்கைத் தமிழர்களின் பாசம் கண்டு பரவசம்! கண்ணீரில் நீந்திக் கரையேற முடியாமல் வார்த்தைகள் மூழ்கி மூழ்கித் தலைகாட்டுகின்றன."
"இப்போது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். பேசாமல் உங்களையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது" என்று தொடங்குகிறார். நிறைந்து போயிருந்த அவை நெகிழ்ந்து போய் நிற்கிறது. " என்னை நீங்கள் தன்னந்தனியாக நிறுத்தினாலும், உங்களை நான் தன்னந்தனியனாக ஆக்கமாட்டேன்" என்று அவர் உறவு மொழியால் கொடுத்த உறுதி மொழியை என் சிங்கப்பூர் நண்பர்கள் தொலைபேசியில் சொல்லிச் சொல்லித் திளைக்கிறார்கள்."
'மலேசிய நண்பன்' இதழில் மலேசியாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே இருவழி வர்த்தகம் காண கலைஞரின் வருகை நல்ல தொடக்கம்" என்று எழுதியிருந்தார், அதன் ஆசிரியர் அ.ஆதிகுமணன் - என்றெல்லாம் எழுதி விட்டு, அந்தக் கட்டுரையை முடிக்கும்போது, அன்று கடாரம் கொண்டவன் கூட அந்த மண்ணை மட்டுமே வென்றான்- கலைஞரோ மனங்களை வென்றிருக்கிறார்.
மண்ணை வென்றவன் தற்காலிக வெற்றி பெறுகிறான். மனங்களை வெல்லுகிறவனே நிரந்தர வெற்றி பெறுகிறான். கலைஞர் வெற்றி -நிரந்தர வெற்றி" என்று குறிப்பிட்டிருந்தார். அன்றைய தினம் நான் ஆற்றிய உரையை சிங்கப்பூர் தமிழ்முரசு ஏடு " கலைஞர் பொழிந்த தமிழ் மழை " என்று புகழ்ந்து செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்திக் கட்டுரையின் சில பகுதிகள் மட்டும் இதோ:- "வெளியில் மழை கொட்டியது. அதில் நனைந்தபடி சிங்கப்பூர் உள்ளரங்கில் குவிந்த 6000 தமிழ் மக்கள் கலைஞர் மு.கருணாநிதியின் இலக்கியச் சுவை நிறைந்த சொல் மழையில் மீண்டும் நனைந்தனர். நகைச்சுவையும், உணர்வும் செறிந்த கலைஞரின் சொல் மழையில் மக்கள் மெய் சிலிர்த்தனர். அவருடைய 75 நிமிட பேச்சின் போது, இடையிடையே கையொலி எழுப்பி, அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு வந்த பயணத்தின் கடைசி நாளான நேற்று, தமிழ் முகங்கள் பல்லாயிரத்தை ஒரு சேரக் கண்டதில் தமிழக முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்தார். கலைஞர் கல்விமான்கள், இலக்கியவாதிகள், ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் வந்தனர்."
"சிலர் குடும்பத்தோடு, சின்னஞ்சிறுசுகளை அழைத்து வந்தனர். இளமையிலேயே இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி விடலாம் என்பது அந்தப் பெற்றோர்களின் எண்ணமாக இருக்கும்." "தமிழ் மொழியின் இனிமையையும், பழமையையும் சுட்டிக்காட்டி தம் பேச்சைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதி, திருக்குறள், அகநானூறு, புறநானூறு, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களை மேற்கோள் காட்டினார். தமிழ் இலக்கியச் சிறப்பை எளிமையாகவும், சுவையாகவும் விளக்கி, அவையில் குழுமியிருந்த தமிழ் உள்ளங்களைக் கவர்ந்தார்.
"என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்று கலைஞர் வாய் நிறைய அழைத்தது அவையில் கூடியிருந்த தமிழ் உள்ளங்களை அன்பு மழையில் நனைத்தது. கலைஞர் கருணாநிதி, தமிழக சுகாதார மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் மற்றும் தமது மனைவி மகளுடனும் கெட்டி மேளம் முழங்க அரங்கினுள் வந்து சேர்ந்தார். அப்போது கெட்டி மேள முழக்கத்திற்குப் போட்டியாக முழங்கியது. தமிழ்மக்களின் கரவோசையும் சீட்டி ஒலியும்!"
"இலக்கியச் சொற்பொழிவைத் தொடங்குவதற்கு மேடை ஏறிய கலைஞர் சற்றுத் திகைத்துப் போனார். "பொது விழாவில் கலந்து கொள்ளும் போதும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் மேடையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் நிரம்பியிருப்பது வழக்கம். ஆனால், இன்றோ தன்னந்தனியாக என்னை அனைவரும் விட்டுவிட்டனர். ஆனால், நானோ என்றும் என் இனிய தமிழ் மக்களைத் தனியாக விட்டுவிடமாட்டேன்- என்ற கலைஞரின் வாசகம் மனதைத் தொட்டது.
நடைமுறைக்கு ஏற்ப சங்க காலப்பாடல்களை அவர் எடுத்துரைத்த முறை மிக நன்று. முதியவர்களுக்கு மட்டுமே முதல்வர் பேச்சு சுவைக்கும் என்று நினைத்திருந்த எனது அறியாமை நேற்றைய உரையைக் கேட்டபின் விலகியது." "கலைஞரின் பேச்சு முடிந்த பிறகு உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவி கமலாவை அணுகி, அவரது கருத்தைக் கேட்டேன். "முதல்வரின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதோடு நான் இதுவரை படித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாத திருக்குறள் இப்போது எனக்கு மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கலைஞர் பேசும்போது "போதும்" என்று எண்ணாமல், "இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே" என்ற ஆதங்கமே எல்லோரது நெஞ்சிலும் மிஞ்சியிருந்தது." என்று தமிழ் முரசு எடு அந்த கட்டுரையை முடிந்திருந்தது. ★ ★ ★ சிங்கப்பூரில் 6ஆம் தேதி மாலையில் நடைபெற்ற இந்த விழாவினை முடித்துக்கொண்டு. மறுநாள் 7ஆம் தேதியன்று காலையில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு, மலேசிய நாட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
விமான நிலையத்தில் மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் தலைமையில் இந்தியத் தூதுவர் சகாய் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் வருகை தந்து வரவேற்றனர். கோலாலம்பூரில் மலேசியாவின் வாணிபம்-தொழில்துறை அமைச்சர் ரபீதா அஜீஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன் "தமிழ் நேசன்" பத்திரிகை முழுவதிலும் என்னை வரவேற்று பல்வேறு விளம்பரங்கள் வெளிவந்திருந்தன. "மலேசியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான இருவழி வர்த்தகம் ஏற்றம் காண்பதற்கு கலைஞரின் வருகை நல்ல தொடக்கம்" என்ற தலைப்பில் கட்டுரை கலைஞர் டத்தோ சாமிவேலு தனது குடும்பத்தினருடன் என் குடும்பத்தினருக்கு விருந்தளித்தார்.
ஒன்றும் அந்த இதழில் இடம் பெற்றிருந்தது. மலேசியநாட்டின் இன்னொரு இதழ் அ.ஆதி குமணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "மலேசிய நண்பன்" - அதிலும் பக்கம் பக்கமாக எனது வருகை பற்றி கட்டுரைகளும், விளம்பரங்களும் இடம் பெற்றிருந்தன. மலேசிய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த டத்தோ சாமிவேலு அவர்கள் அவரது இல்லத்தில், 7.1.1999 அன்று எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் மதிய விருந்தளித்தார். அன்று மாலையில் மலேசிய நாட்டின் பன்னாட்டு வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபீதா அஜீஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.
மலேசிய பொதுப்பணித்துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு 8.1.1999 அன்று காலையில் நான் சென்று பொதுப்பணித்துறை அமைச்சருடனும், மற்றும் பொதுப்பணித்துறை துணை அமைச்சர், செயலாளர், அதிகாரிகள் ஆகியோருடனும், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும்-குறிப்பாக சென்னை துறைமுகத்திலிருந்து விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாக உயரச் சாலை அமைக்கும் திட்டம் குறித்தும் விவாதித்தேன். சிங்கப்பூர் நகரில் 6ஆம் தேதி நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியினை மிஞ்சும் வகையில், 8ஆம் தேதியன்று மாலையில் மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் புத்ரா உலக வணிக மையத்தில், " மெர்தேகா " அரங்கத்தில், பொது வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கேயும் நிகழ்ச்சி 6 மணிக்குத்தான் தொடங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மாலை 4 மணி அளவிலேயே அனைத்துச் சாலைகளும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நின்றுவிட்டன. கூட்டம் நடைபெற்ற உள்ளரங்கமும் மாலை 4 மணி அளவிலேயே நிரம்பிவிட்ட காரணத்தால்-அரங்கத்திற்கு வெளியே உடனடியாக தொலைக்காட்சிப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டு, அங்கேயும் மக்கள் அமர வசதிகள் செய்யப்பட்டன. கூட்டம் 6 மணிக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மாலை 5 மணி அளவிலேயே டத்தோ சாமிவேலு அவர்கள் நான் தங்கியிருந்த இடத்திற்கு தொலைபேசியிலே தொடர் கொண்டு, உடனடியாக மேடைக்கு வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே நான் புறப்பட்ட போதிலும் போக்குவரத்து நின்றுவிட்ட நிலையில், என்னை அழைத்துச் செல்ல காவல் துறையினர் மிகவும் சிரமப்பட்டனர். வாயிற்புற வழியாக உள்ளே நுழைய முடியாத அளவிற்குக் கூட்டம் இருந்ததால்- பின்புற வழியாக நான் அழைத்துச் செல்லப்பட்டேன். 15 நிமிட நேரத்தில் வரவேண்டிய எனக்கு மேடையை அடைந்திடவே ஒரு மணி நேரம் ஆயிற்று. நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு வீடியோவில் என்னைப் பற்றித் தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று பத்து நிமிட நேரம் காட்டப்பட்டது.
பின்னர் மலேசியக் கவிஞர் டாக்டர் ப.பூபாலன் என்னை வரவேற்றுக் கவிதை ஒன்றினைப் படித்தார். மலேசியா அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் வரவேற்புரையாற்றி, " இப்போது தமிழ்க்கடல் வரப்போகிறது " என்று கூறி என்னை உரையாற்ற அழைத்தார். கலைஞர் சென்னையில் துறைமுகத்திலிருந்து விமான நிலையம் வரை 'உயரச் சாலை' அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர் டத்தோ சாமிவேலுவுடன் விவாதித்தேன். அதையே என் உரைக்குத் தொடக்கமாக எடுத்துக் கொண்டேன்.
பெருமதிப்புக்கும், மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய டத்தோ சாமிவேலு அவர்கள், "தமிழ்க்கடல் வரப் போகிறது" என்று கூறினார்கள். ஆமாம்-என் எதிரே கடலே வந்து நிற்கிறது. இந்தக் கடலில் நான் இருக்கின்ற இந்த மேடை ஒரு தெப்பமாக மிதந்து கொண்டிருக்கிறது" என்று கூறி உரையைத் தொடங் கினேன்.
இங்கேயும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசியல் கலப்பற்ற இலக்கிய உரையினை ஆற்றினேன். அன்றிரவு 8.30மணிக்கு மலேசிய - இந்திய வர்த்தகத் தொழில் கூட்டுறவுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் உரையாற்றினேன். மலேசிய நாட்டின் பிரதமர் டாக்டர் மகாத்தீர் முகமது அவர்களை 9ஆம் தேதி காலை 10மணி அளவில் நான் சந்தித்தேன். பிரதமருக்குப் பொன்னாடையையும், சந்தன மாலையையும் அணிவித்து, சந்தனத்தால் ஆன வள்ளுவர் கோட்ட மாதிரி ஒன்றையும், சங்கத் தமிழ், குறளோவியம் ஆகிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களையும் வழங்கினேன்.
மலேசிய நாட்டுத் தொழில் முனைவோருடன் இரண்டு நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி பிரதமரிடம் விளக்கினேன். தமிழ் நாட்டிற்கும், மலேசியாவிற்கும் வெகுகாலமாக நிலவி வரும் வலுவான சமூக மற்றும் கலாச்சார தொடர்புகளை வரலாற்றுச் சான்றுகளோடு நான் கூறியபோது, மலேசியப் பிரதமர் ஆர்வத்தோடு அதனைக் கேட்டார். அவருடன் நான் நடத்திய பேச்சு வார்த்தை நேச உணர்வுடனும், மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்தது. ★ ★ ★ வேர்ல்டுடெல் நிறுவனத் தலைவர் சாம் பிட்ரோடா தமிழகம் முழுவதும் இன்டர்நெட் மையங்கள் அமைப்பது தொடர்பான அறிக்கையை அளித்தார்.
அருகே முரசொலி மாறன். இவ்வாறு ஆறு நாட்கள் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அங்குள்ள தொழில் முனைவோரைத் தமிழ்நாட்டுக்கு வந்து தொழில் தொடங்கிட அழைப்பு விடுத்த நான், 9.1.1999 அன்றிரவு தாயகம் திரும்பினேன். சென்னை விமான நிலையத்தில் பல்லாயிரக் கணக்கான கழகத் தோழர்கள் திரண்டு என்னை வரவேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் ஆயிற்று, அவர்களின் வரவேற்பினை ஏற்றுக்கொள்ளவே!
அதன் பின்னர் 12.30 மணியளவில்தான் இல்லத்திற்கு வந்து சேர முடிந்தது. நான் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணம் குறித்து " சிங்கப்பூர்-மலேசிய நாடுகளில் சில நாட்கள் " என்ற தலைப்பில் தம்பி ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., "இராஜராஜன்" என்ற புனைப்பெயரில் நீண்டதோர் தொடர் கட்
டுரையை அப்போதே எழுதியிருந்தார். செய்தியாளர் நக்கீரன் காமராஜ் அவர்களும், புகைப்பட நிபுணர் யோகா அவர்களும், என்னுடைய அந்தச் சுற்றுப்பயணத்தை பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும், கலைஞர் புகைப்படம் எடுப்பதற்காகவுமே தங்கள் சொந்தச் செலவிலேயே இரண்டு நாடுகளுக்கும் வந்திருந்தனர். ★ ★ ★ 99ஆம் ஆண்டின் தொடக்கம் மலேசிய-சிங்கப்பூர் நாடுகளில் சுற்றுப் பயணம் என்ற அளவில் அமைந்ததைத் தொடர்ந்து-பிப்ரவரி திங்கள் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்னையில் " தமிழ்நெட் 99 " என்கிற உலகத் தமிழ் இணையக் கருத்தரங்க மாநாடு ஒன்றினை நடத்தினோம்.
இண்டர்நெட் மற்றும் சாப்ட்வேர்களில் பயன்படுத்தப்படும் தமிழுக்கு ஒரு தரப்படுத்தப்பட்ட முறையை உருவாக்குவதை முதன்மையாகக் கொண்டு, அந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டினை நான்தான் தொடங்கி வைத்தேன். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி., நகரில் அமைந்துள்ள "இமேஜ்" அரங்கத்தில்தான் மாநாடு நடைபெற்றது. தமிழ் இணையம் 99-மாநாட்டிற்கு வரவேற்புக் குழுத்தலைவர் தம்பி முரசொலி மாறன் . அவர்தான் வரவேற்புரையாற்றினார்.
அப்போது, தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அவர்கள் மாநாட்டிற்குத் தலைமைதாங்கி உரையாற்றினார். தமிழ் இணையம் 99 கருத்தரங்கைத் தொடங்கி வைத்து நான் உரையாற்றினேன். பேராசிரியர் தொடக்க உரையாற்றினார். 7ஆம் தேதி மாநாட்டில் மலேசிய எனது சிங்கப்பூர்-மலேசியப் பயணம்பற்றி 'ராஜராஜன்' என்ற புனைப்பெயரில் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ். தொடர்கட்டுரை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு, இலங்கை கால்நடை வளர்ப்பு மற்றும் தோட்டக் கட்டுமானத்துறை அமைச்சர் எஸ்.தொண்டைமான் , புதுவை மாநில முதல்வராக இருந்த தம்பி ஆர்.வி.ஜானகிராமன் ஆகியோர் உரையாற்றினர்.
8ஆம் தேதியன்று மாலையில் உலகத் தமிழ் இணையக் கருத்தரங்க மாநாட்டின் பரிந்துரைகளைத் தமிழகத் தகவல் தொழில் நுட்பத்துணைக்குழுத் தலைவர் டாக்டர் எம்.அனந்த கிருஷ்ணன் வெளியிட்டார். வேர்ல்டுடெல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாம் பிட்ரோடா சிறப்புரை ஆற்றினார். இறுதியாக நான் நிறைவுரையாற்றினேன்.
