நெஞ்சுக்கு நீதி
தமிழன்னைக்கு மகுடம்! · 355 / 391
கலைஞர் 43. தமிழன்னைக்கு மகுடம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக அறிமுகப் படுத்த கழக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது! பே ரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது, 24.1.1968 அன்று பிறப்பித்த அரசாணை எண். 105இன்படி தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கையின்படி பள்ளிகளில் நடைமுறைக்கு வந்த மொழிக் கொள்கை பின்வரும் விதத்தில் அமைந்திருந்தது.
பகுதி அ : வட்டார மொழி (Regional Language) அல்லது தாய் மொழி (வட்டார மொழியில் இருந்து மாறுபடும் போது) (1-5 வரை) பகுதி ஆ : ஆங்கிலம் அல்லது இந்திய மொழி அல்லாத பிறமொழி (1-5) கல்விக் கூடங்களில் பின்பற்றப்பட வேண்டிய மொழிக் கொள்கையை உருவாக்கிட அறிஞர் அண்ணா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக- தமிழ் பாட மொழி குறித்து முடிவெடுப்பதற்காக என்னுடைய முன்னிலையில் அப்போது கல்வித் துறை அமைச்சராக இருந்த பேராசிரியர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு, 16.11.1998 அன்று நடைபெற்றக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
1. தமிழை ஒரு பாடமாகச் சொல்லித் தரும் (As a subject) பள்ளிகளுக்குத்தான் ஏற்பளிக்கப்படும். 2. 1999-2000ஆம் ஆண்டு முதல் பூகோளம், வரலாறு, கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்களைத் தமிழ் வழியில் ( through the medium of Tamil ) கற்பிக்க வேண்டும். 3. தமிழ்மொழி வழியில் பல மழலையர் பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றிற்கு (அ) ஏற்புக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தல் (ஆ) இவ்வகைப் பள்ளிகளுக்கும் அரசின் பாடநூல்களை இலவசமாக விநியோகித்தல் ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
4. ஏற்கனவே உள்ள விதிகள் 37(அ) யின்படி, அரசின் ஏற்பு பெறாத பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளை, அரசு ஏற்புப் பெற்ற பள்ளிகளில் சேர்க்கக்கூடாது என உள்ளது. இந்த விதியில் எந்த வகையான தளர்வும் செய்யாமல், தொடர்ந்து கடைப் பிடிக்கப்படும். 1.1.1998 அன்று வெளியிட்ட விளம்பரத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அரசின் ஒப்புதல் பெறாத மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதை அரசு அனுமதிக்காது.
5. தமிழகத்தில் தமிழ் படிக்காமலேயே ஆங்கிலத்தோடு தத்தம் தாய்மொழியை மட்டுமே படிக்கும் தொடக்க-மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மொத்தம் 1008. இந்தப் பள்ளிகள் அனைத்திலும் தமிழ் ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு, அவரவர் தாய்மொழி, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வகை செய்யப்படும். அதற்கான வகுப்பு நேரங்களை அனைத்துத் தரப்பினரின் கலந்துரையாடலுக்குப் பின்னர் முடிவு செய்யப்படும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், தமிழ் ஒரு பாடமாக சொல்லித் தரும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமே இனி அங்கீகாரம், மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அது போலவே தமிழக தமிழாசிரியர் கழகத்தின் சார்பிலும் வரவேற்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. கலைஞர் இவ்வாறு பலராலும் வரவேற்கப்பட்ட அந்த முடிவுகளின் மீது சிலர் அய்யங்களை எழுப்பியிருந்தார்கள். அவைகளைப் பற்றி ஆய்வு செய்திட 12.1.1999 அன்று என்னுடைய தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பேராசிரியர், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், முனைவர் தமிழ்க்குடிமகன், முனைவர் க.பொன்முடி, தா.கிருட்டிணன், இரகுமான் கான் மற்றும் முன்னாள் துணை வேந்தர்கள், வா.
செ.குழந்தைசாமி, அனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:- தமிழன்னைக்கு மகுடம் சூட்ட, அனைத்துத் துறைகளிலும் நான் மேற் கொண்ட முயற்சிகள் என்றும் தொடரும் 16.11.1998 அன்று தமிழக அரசின் சார்பில் அறிவித்தவாறு, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக நடத்துவதோடு, பிற பாடங்களை ஆங்கில மொழியில் நடத்துவதை மாற்றி, குறைந்தது மூன்றில் இரண்டு பாடங்களையாவது- அதாவது சமூகவியல் (பூகோளம், வரலாறு உள்ளடங்கிய), கணிதம், அறிவியல் ஆகிய மூன்றில் இரண்டு பாடங்களைத் தமிழ் வழியில் (Through the Medium of Tamil) அடுத்தக் கல்வி ஆண்டு முதல் கற்பிக்க வேண்டுமென்று அரசு வலியுறுத்துகிறது.
ஏற்கனவே கல்வித் துறையினுடைய ஏற்பு பெற்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளானாலும் அடுத்தக் கல்வி ஆண்டில் மூன்றில் இரண்டு பாடங்களை தமிழில் பயிற்றுவிக்க முன் வருகின்ற பள்ளிகளுக்குத்தான் தொடர்ந்து ஏற்பு வழங்கப்படும். இவ்வாறு ஏற்பு வழங்கப்பட்ட பள்ளிகளில் படிக்கிற-படித்த மாணவ மாணவியர்தான் அரசு அங்கீகரித்த பள்ளிகளில் சேருவதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஏற்பு பெறாத பள்ளிகளில் படித்தவர்கள் யாராயினும், அவர்கள் சேர விரும்புகிற பள்ளிகளில் நடத்தப்படுகின்ற தேர்வின் அடிப்படையில்தான் உரிய வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.
தமிழ் மொழி வழியில் இயங்குகின்ற மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஏற்புக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படுவதோடு, இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூல்கள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும். இத்தகைய அறிவிப்புகளைச் செய்த போதிலும், தமிழ் மொழிக் கல்விக்கு எதிராக ஒரு தரப்பினரால் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு, அதனை ஏடுகளும் பெரிது படுத்தி வெளியிட்டுக் கொண்டே வந்தன. ஆனால், மழலையர் பள்ளி உட்பட உயர் கல்விவரை தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகச் செயல்படுத்தக் கோரி, தமிழ்ச் சான்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை அளித்து வந்ததை அடுத்து, நீதியரசர் திரு.எஸ்.மோகன் அவர்கள் தலைமையில்-3.5.1999 அன்று கழக ஆ ஆட்சியில் அரசாணை எண்.
117இன் படி குழு ஒன்று அமைக்கப்பட்டது. பின்னர் அந்தக் குழு கழக அரசுக்குச் கலைஞர் சமர்ப்பித்த பரிந்துரைகள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, அரசாணை எண் 324 பள்ளிக் கல்வித்துறை, நாள் 19.11.1999 இல் பின் வருமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 1. அரசின் பயிற்று மொழிக் கொள்கை குறித்து வெளியிடப்பட்ட அரசாணைகள் செல்லும் என நீதி மன்றங்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதால், மொழிக் கொள்கைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என அரசு கருதுகிறது.
தொடர்ந்து அரசு ஆணைகள் மூலமே மொழிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். 2. அனைத்துப் பள்ளிகளிலும் (மெட்ரிகுலேஷன் பள்ளிகள், மாநில அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள், மற்றும் அரசினுடைய நிதியுதவி பெறாத ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும்) தமிழ் அல்லது தாய்மொழியே முதல் மொழியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். 3. முதல் வகுப்பிலிருந்து 5ஆம் வகுப்புவரை அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் மாநில அரசு (State Board) பாடமுறை பின்பற்றும் பள்ளிகளில், தாய்மொழி அல்லது தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
4.மூன்றாண்டு காலத்திற்குள் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 5 வகுப்புகளில் தாய்மொழி அல்லது தமிழைப் பயிற்று மொழியாக மாற்றியமைக்க வேண்டும். 2000-2001 ஆண்டு முதல், முதல் வகுப்பில் தாய்மொழி அல்லது தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். படிப்படியாக மேல் வகுப்புகளுக்கும் பயிற்று மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும். 5.ஆறாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்து தற்போதுள்ள நடைமுறையே தொடர்ந்து கடைப்பிடிக்கப் படும்.
ஏற்பளிக்கப்படாத/ அங்கீகாரம் அளிக்கப்படாத பள்ளிகளில் படித்தவர்களுக்கும், தனியே பயின்றவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அளவிலேயே நுழைவுத் தேர்வு நடத்தித் திறமை தகுதி கண்டு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். தமிழ் பயிற்று மொழி குறித்து முடிவெடுக்க, என் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் 6.மெட்ரிகுலேஷன் வாரிய விதிகளில் ஆங்கிலத்துடன் தமிழ் மற்றும் தாய் மொழியும் பயிற்று மொழியாகச் சேர்க்கப்படும்.
இதற்கான மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் விதிகளுக்குத் திருத்தங்கள் தனியாக வெளியிடப்படும். 7. அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளிலும், அரசு நிதி உதவி பெறாத பள்ளிகளிலும், ஏற்பளிக்கப்பட்ட பள்ளிகளிலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் முதன்மை மொழி அல்லது தாய்மொழி என்று பள்ளிகளின் மொழி பற்றிய விதி மாற்றி அமைக்கப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளைப் பொறுத்தவரை 3 ஆண்டு காலத்திற்குள் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை தமிழ்மொழி அல்லது தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்கான மேற்படி அரசாணையை செல்லுபடி அற்றதென விலக்கக் கோரி (Quash) தமிழ்நாடு மழலையர், தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை நிர்வாகிகள் சங்கங்களும், மற்றும் சில பெற்றோர்களும் சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்வேறு 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டதில் உயர்நீதிமன்றம் பயிற்றுமொழித் தொடர்பான அரசு ஆணை நிலை எண்.324 பள்ளிக் கல்வி, நாள் 19.11.1999ஐ ரத்து செய்து, 20.4.2000 அன்று தீர்ப்பு வழங்கியது.
பின்வரும் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உயர் நீதிமன்றம் மேற்கூறிய ஆணையை ரத்து செய்தது: கலைஞர் மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரை தமிழ் மொழியைப் பயிற்றுமொழியாக்க, நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 1. அரசு ஆணை முறையற்றது-ஆதாரமற்றது. 2.ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், மத்திய வாரிய செயல்பாட்டின் கீழ் வரும் பள்ளிகள் (CBSE) ஆகியவற்றில் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டில்லாதவர்களும் ஆங்கில வழியில் படிக்க வாய்ப்பிருப்பதால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பது அரசியல் அமைப்பின் சட்டத்தின் கீழ் அனைவரும் ஒரே சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14க்கு இவ்வரசாணை முரணாக உள்ளது.
3. பல ஆண்டுகளாக இக்கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருவதால், தொடர்ந்து ஆங்கிலத்தில் கற்பிக்க அனுமதி உண்டு என்ற எதிர்பார்ப்பு நியாயமானதாகக் கருதப்படுவதால், ஆணை வெளியிடுவதற்கு முன் அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும், பெற்றோர்களும் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். 4. மத்திய அரசு பன்னாட்டு மனித உரியை ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது. அதில் நம் குழந்தைகள் எத்தகைய கல்வி பெற வேண்டுமென்பது பெற்றோரின் உரிமை என்று குறிப்பிட்டுள்ளதால், அரசியல் அமைப்புச் சட்டத்தில் 16வது பிரிவின் கீழ் வெளியிடப்படும் ஆணை சட்டமாகக் கருத இயலாது.
5. ஒரு மனிதனுக்குக் "கல்வி" என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு கல்வி அடிப்படை உரிமையாகக் கருதப்படும் பொழுது, அதனுடன் பயிற்று மொழி என்பதும் அடங்கியதாகக் கருதப்பட வேண்டும். அதனால் கற்பிக்கும் மொழியைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமையாகவே கருதப்பட வேண்டும். 6. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மொழியை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அவர்கள் விரும்பும் எந்த வகையான கல்வியைக் கற்பிக்கவும் முழு உரிமை உள்ளது.
மொழி வழிக் கல்வியை நிர்ணயிக்கும் வழக்கில் உள்ள அரசின் ஆணை சிறுபான்மையினரின் உரிமையைப் பாதிப்பதாகக் கருதப்படும். உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பிற்கு எதிராக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் சிறப்பு அனுமதி மனுக்கள் (SLP) 10.7.2000 அன்று (SLP. Civil No: 13299-13301/2000) தாக்கல் செய்யப்பட்டன. 31.7.2000 அன்று மேற்படி சிறப்பு அனுமதி மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, எதிர்வாத உரை (Counter Affidavit) நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து, வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய 20.4.2000 நாளிட்ட தீர்ப்புக்கு, அரசு தடையாணை கோரியிருந்ததை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழ்ச் சான்றோர் பேரவை தாக்கல் செய்துள்ள சிறப்பு அனுமதி மனு, ஏற்கனவே அரசு தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவிற்கு மாறுபட்டதாக இல்லாத பட்சத்தில், அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என புதுடெல்லியில் உள்ள அரசு வழக்கறிஞர் அறிவுறுத்தப்பட்டார். பிரதிவாதிகள் தாக்கல் செய்த பிரதிவாத மனுமீது மறுப்பு பதில் 2.1.2002 அன்று கலைஞர் தாக்கல் செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த முகாந்தரங்களின் அடிப்படையில் வழக்கினை வாதிடுமாறு, புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்குக் கடிதம் எழுதப்பட்டது. மாநில அரசால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையிலிருந்து வருகிறது. நமது மாநில மொழிக் கொள்கையை ஒரு சிலர் பிற மாநிலங்களின் மொழிக் கொள்கையோடு-குறிப்பாக மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையினைப் பிற மாநில மொழிக் கொள்கையுடன்-அதாவது மராட்டிய மாநில மொழிக் கொள்கையுடன் ஒப்பிட இயலாது. மராட்டிய மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகின்றது. மராட்டிய அரசு, மராத்தி அல்லாத பள்ளிகளில் மராட்டிய மொழியினை ஐந்தாம் வகுப்பிலிருந்து கட்டாயமாகக் கற்றுக் கொடுக்க வேண்டுமென ஆணை பிறப்பித்தது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராக, குஜராத்தி மொழி பேசும் மொழிச் சிறுபான்மையினரால் நடத்தப்படும் ஆங்கிலப் பள்ளிகளில் 4 மொழிகளில் பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
(இந்தி, ஆங்கிலம், மராத்தி, தாய்மொழி) இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மராட்டிய அரசின் கொள்கை முடிவு சரியானதென உச்சநீதிமன்றம் 5.5.2004 ல் ஆணை பிறப்பித்தது. இத்தகைய மொழிக் கொள்கைகளில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு 30.5.2002இல் திருத்தங்கள் செய்து ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போதைய நிலவரம் என்னவெனில் - அ. மாணவர்களின் தாய்மொழியான கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம் (அ) கன்னட மொழியில் 1 முதல் 5 வகுப்புகளில் பயிற்று மொழி இருக்கும்.
6ஆம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வி அனுமதிக்கப்படும். ஆ. 6ஆம் வகுப்பிலிருந்து முறையாக இரண்டாம் மொழி அறிமுகப் படுத்தப்படும். அவ்வாறான நிலையில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை இரண்டாவது மொழியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கன்னடமொழியை முதல் மொழியாக எடுக்க இயலாத குழந்தைகள் அம்மொழியை இரண்டாவது மொழியாக அவசியம் பயில வேண்டும்.
இ. முதல்மொழி மற்றும் இரண்டாம் மொழி தவிர, 6 ஆம் வகுப்பிலிருந்து மூன்றாம் மொழி பயிலவும் வழிவகை செய்யப்படும். அத்தகைய மொழியானது கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம், அராபிக், பெர்சியன் ஆகிய மொழிகள் அடங்கும். மூன்றாம் மொழியில் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் கட்டாயமோ- மாணவர்களின்
தரம் வரிசைப்படுத்தவோ கணக்கிடப்படமாட்டாது. இடைநிலைக் கல்வி நிலையில் அதாவது 8-10 வகுப்புவரை மூன்று மொழிகள் கட்டாயமாகும். அவற்றில் ஒன்று கன்னட மொழியாக அவசியம் இருத்தல் வேண்டும். கலைஞர் மூன்று மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப் படுவதோடு, அவற்றினில் தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். தமிழ்நாட்டில் எந்தவொரு மாணவ, மாணவியரும் தமிழ்மொழி கற்காமல் பள்ளியை விட்டு வெளியேறக் கூடாதென்பதை உறுதிப்படுத்தும் வகையில் "அறிவியல் தமிழ்" என்ற பாடத்தினை அறிமுகப்படுத்தி, 2003-2004 கல்வி ஆண்டு முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி.
முதல் +2 வரை மற்ற பாடங்களுடன் அறிவியல் தமிழ் என்ற பாடத்தினை கற்பிக்க ஆணையிட்டு, அதற்கெனப் பாடப் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. எனினும் இந்தத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதுவரை நடைபெற்ற அனைத்தையும் கருத்திலே கொண்டுதான் தி.மு.க. அரசு ஐந்தாம் முறையாக, 2006ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதற்குப் பிறகு, 9.6.2006 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக, தமிழைக் கற்றுக் கொள்வதற்கு வகை செய்கின்ற சட்டம் ஒன்றை இயற்றியது.
அந்தச் சட்டத்தின் பெயர் "2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டம் " என்பதாகும். இந்தச் சட்டத்தின் முக்கிய கூறுகளாவன:- தமிழ் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 வரையிலான வகுப்புகளில் ஒரு பாடமாக - 1ஆம் வகுப்பிற்கு 2006-2007 ஆம் கல்வி ஆண்டில் இருந்தும், 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு 2007-2008 ஆம் கல்வியாண்டில் இருந்தும் தொடங்கி, படிப்படியான முறையில் கற்பிக்கப்படுதல் வேண்டும்.
மற்றும் அதைப் போன்றே பத்தாம் வகுப்பு வரையிலும் நீட்டிக்கப் படுதல் வேண்டும். கல்வி வடிவமைப்பானது பின்வருமாறு இருத்தல் வேண்டும்:- பகுதி | - தமிழ் (கட்டாயம்) பகுதி II - ஆங்கிலம் (கட்டாயம்) பகுதி III - (கணிதம், அறிவியல், சமூக அறிவியல் முதலான) பிற பாடங்கள். பகுதி IV - தமிழ் அல்லது ஆங்கிலத்தைத் தமது தாய்மொழியாகக் கொண்டிராத மாணவர்கள் அவர்தம் தாய்மொழியை ஒரு விருப்பப் பாடமாகக் கற்கலாம். அரசு இவ்வாறு சட்டம் இயற்றிய பின்னர், இந்தப் பிரச்சினையில் எந்த விதமான பின்னடைவும் ஏற்படாமல் நல்ல முறையிலே செயல்பட்டு வருகிறது.
மாணவர்களின் கல்வி முறையில் தமிழைத் தவறாமல், கற்றுக் கொள்வதற்கான இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட கழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. "உயர் நீதி மன்றத்தின் கீழுள்ள எல்லா நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் அனைத்தும் தமிழிலேயே இருந்திட வேண்டும்" என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அந்த வகையில் தற்போது ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு. இதன் அடிப்படையில் 11.3.2007 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் கலைஞர் சிங் அவர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சராக அப்போது இருந்த சிவராஜ் பட்டீல் , சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் ஆகியோருக்கும் விரிவாக ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய விவரங்கள் வருமாறு:- "1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், தமிழகத்திலுள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் அனைத்திலும் பதிவு செய்யப்படும் சாட்சியங்கள் தமிழிலேயே இருந்து வருகின்றன.
உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தில், 1976ஆம் ஆண்டு உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அவை நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்தத் திருத்தங்களையும், அறிவிக்கைகளையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுக்கள் (Writ Petitions) அனைத்தையும் முழு ஆயம் (Full Bench) 21.4.1994 அன்று தள்ளுபடி செய்தது.
"தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தின் 4-ஆ பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் கீழுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் தீர்ப்புகள் மற்றும் தீர்ப்பாணைகள் தமிழிலேயே இருந்திட வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ்.
"சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் - என்ற எனது கோரிக்கைக்கு கூடிய விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முயற்சிக்கிறேன்" என்று எனக்குக் கடிதம் எழுதினார். கே.ஏ.சுவாமி அவர்கள் 5.1.1994 அன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். எனினும், தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக இருந்துவரும் தமிழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்து வருவது குறித்து, பொதுவாகத் தமிழர்களும், தமிழ்ச் சான்றோர்களும், குறிப்பாக தமிழ்நாட்டின் வழக்கறிஞர்களும் நீண்ட காலமாகவே போராடி வருகின்கிறார்கள்.
"சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தமிழ் மன்றச் செயலாளர். மேதகு ஆளுநர் அவர்களுக்கு முகவரியிட்ட மனுவில்- தமிழ் மொழியைப் பயன்படுத்தக் கோரி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ் மன்றம் சார்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டபிள்யூ.ப்பி.எண் 16939/2001 என்ற ரிட் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும். அந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 348(2) ன் கீழ் அதற்கான ஆணை பிறப்பிக்கக் கூடிய அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உண்டு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கருத்துரைத்த நிகழ்வு குறிப்பிடப் பட்டிருந்தது."
"இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும், இலட்சக் கணக்கான தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கொண்டிருக்கும் பேராவலை நிறைவேற்றிடும் வகையிலும், குறிப்பாகவும், சிறப்பாகவும் இந்திய மொழிகளிலேயே முதல்மொழியாகத் தமிழ்மொழியை மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செம்மொழி எனப் கலைஞர் பிரகடனப்படுத்தியிருக்கும் சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 348(2) உடன் இணைந்த 1963 ஆம் ஆண்டு ஆட்சி மொழி சட்டப் பிரிவு 7ன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள்-தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாநில ஆட்சிமொழியாகிய தமிழை அறிமுகப்படுத்துவதற்கு உரிய தீர்மானம் ஒன்று 6.12.2006 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் என்னால் கொண்டு வரப்பட்டு, அந்தத் தீர்மானம் மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
"பின்னர், அந்தத் தீர்மானத்திற்கு மேதகு தமிழ்நாடு ஆளுநரின் பரிந்துரையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மேதகு குடியரசுத் தலைவரின் மேலான ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டுமென்று மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது. 'சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்துவது சட்டப்படி சரியான நடவடிக்கையே' என்று மேதகு தமிழக ஆளுநர் கருதினார்.
அவ்வாறே சென்னை உயர் நீதிமன்றமும்கருதியது." "தற்பொழுது, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக அரசின் முன்மொழிவுகள் உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கப் பட்டதாகவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வட்டார மொழியை அறிமுகம் செய்வது தற்போதைக்குச் சரியாக இருக்காது என்றும்; உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதி கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் புத்தகத்தில் உரிய பகுதிகள் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இருந்து வரும் நிலையில்; மத்திய அரசின் கடிதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வினோதமான நிலைப்பாடு, சம்பந்தப்பட்ட அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது."
"இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 348(2), ஆட்சி மொழிச் சட்டம் பிரிவு 7 ஆகிய இரண்டும் தெளிவான பொருள் கொண்டவை; அவற்றை இரு வெவ்வேறான வகைகளில் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. அவை இரண்டும் மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திடும் நிலையில்; இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் அவற்றின் துணையை நாடிப் பயன்படுத்திக் கொள்ள இயலும். அந்த இரண்டு சட்டப்பிரிவுகளின் துணையைக் கொண்டுதான் பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் இந்தியைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது (12.12.2005 அன்று டெல்லி மாநிலங்கள் அவையில் விடையளிக்கப்பட்ட நட்சத்திரக் குறியிட்ட வினா எண்.279 மற்றும் அதற்கான விடை ஆகியவற்றைக் காண்க) எனவே உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழியைக் குறித்து இந்த நான்கு மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாடும் தமிழ்நாட்டுக்கென ஒரு நிலைப்பாடும் மேற்கொண்டிட முடியாது.
"உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழியைப் பற்றி 1965ஆம் ஆண்டில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது. 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் நிலைமைகள் முற்றிலுமாக மாறிவிட்டன. மனப்போக்கு, கண்ணோட்டம், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மாறிவிட்டன. வட்டார விருப்பங்கள் மேலோங்கி அவை முதன்மை பெற்று விட்டன. பல மொழிகள் பேசப்படும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், மொழிப் பயன்பாடு பற்றி நிரந்தரமான இலக்கணம் எதனையும் வகுத்திட இயலாது."
"18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளை நாம் அறிவோம். துல்லியமும் செறிவும் நிறைந்த கலை, அறிவியல் சொற்கள் ஏராளமானவற்றை பிரெஞ்சு மொழி பெற்றிருந்தும் கூட, நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்த கலைஞர் மொழி இறுதியில் ஆங்கில மொழிக்கு வழிவிட வேண்டியதாயிற்று. ஐந்து நூற்றாண்டுப் போராட்டத்திற்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் இறுதியானதாகவும், உறுதியானதாகவும் அமைந்தது.
எனவே, மாற்றம் என்பது தவிர்த்திட இயலாதது. "இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 348(2) மற்றும் ஆட்சி மொழிச் சட்டம் பிரிவு 7 ஆகியவற்றைப் பொறுத்த வரையில் பீகார், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு விரும்புகிறது. 6.12.2006 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் வேட்கையை நிறைவேற்றித் தருவதற்கு உடனடி நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்வீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு.
தமிழ்நாட்டின் சட்டப் பூர்வமான கோரிக்கை யைத் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கு; மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான ஒப்புதலை வெகு விரைவில் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு 11.3.2007 அன்று நான் அனுப்பிய கடிதத்திற்கு உடனடியாக 12.3.2007 அன்றே மத்திய சட்டம்-மற்றும் நீதித் துறை அமைச்சர் மாண்புமிகு பரத்வாஜ் அவர்கள் எனக்கு- Dear Shri M.Karunanidhiji, "I thank you very much for your letter dated 11.3.2007 regarding introduction of Tamil as the Official Language for Proceedings in the Madras High Court in terms of Article 348 (2) of the Constitution of India."
"I have carefully gone through the letter and i have asked my department to process the matter afresh keeping in view the points raised by you in this,matter and obtain the consent of the President of India as expeditiously as possible."
With kind regards," -என்று பதில் எழுதினார். கடிதப் பரிவர்த்தனையோடு விட்டுவிடாமல், மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் இந்தப் பிரச்சினை குறித்து வலியுறுத்தி வருவதோடு, ஆளுநர் உரை, நிதி நிலை அறிக்கைவாயிலாகவும் தொடர்ந்து நினைவூட்டி வருகிறோம்.
