நெஞ்சுக்கு நீதி
சோனியா காந்தியின் அரசியல் · 354 / 391
42. சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம் "ஈராக் மீது நடைபெற்ற தாக்குதல் மனிதாபிமானத்திற்கு எதிரானது - இதனால் ஒரு பெரும் நாகரிகமே அழியும்" என்றார் முரசொலி மாறன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணியினரில் ஒருவரான திருப்பூர் சுப்பராயன் அவர்கள், 23.11.1998 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். காஞ்சிபுரத்தில் 25.11.1998 அன்று நடைபெறவிருந்த ஒரு ரயில்வே விழாவுக்கான அழைப்பிதழ், மதச்சார்புள்ள முறையிலே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அழைப்பிதழ் திருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
காரணம் அந்த அழைப்பிதழில் சங்கராச்சாரியாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் என்ற முறையில் அதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். சங்கராச்சாரியாரிடத்தில் நமக்கு எப்பகையும், வெறுப்பும் கிடையாது. எல்லா மதக் குருமார்களிடத்திலும் என்ன மதிப்பு வைத்திருக்கிறோமோ, அதே மதிப்பு சங்கராச்சாரியாரிடத்திலும், அவருக்கு அடுத்த நிலையிலே உள்ளவர்களிடத்திலும் நமக்கு உண்டு. அப்படி மதிப்பு என்பது வேறு-அதே நேரத்தில் அரசு நிகழ்ச்சியில் மதத்தைப் புகுத்துவதை ஏற்பதா, இல்லையா என்பது வேறு-எனவே நான் அவையிலே பதில் கூறும்போது, "தி.மு.க.வும், தி.மு.க.அரசும் ஒருக்காலும் மதச்சார்பற்ற நிலைக்கு மாறான எந்த கலைஞர் நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ளாது" என்று குறிப்பிட்டேன்.
மதச் சார்புடையவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்று ரயில்வேயும், டெல்லியிலே உள்ள அமைச்சர்களும்- இங்கேயுள்ள ரயில்வே அதிகாரிகளும் விரும்பியிருந்தால், அதில் இஸ்லாமிய, கிறித்துவப் பெரியவர்களையும் கலந்து கொள்ளச் செய்திருக்க வேண்டும். அப்போது எல்லா மதத்தினரும் கலந்து கொண்டார்கள் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். அப்படிச் செய்யாமல், சங்கராச்சாரியாரை மட்டும் அழைப்பது என்பது, இன்றைக்கு பா.ஜ.க.வின் மீது தெரிவிக்கப்படுகிற குற்றச்சாட்டுக்கு அவர்களை இலக்கு ஆக்குவதாகும்.
இதற்காக அவையில் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்றனர். "தீர்மானம் தேவையில்லை. நாளைக்குள் அழைப்பிதழில் உரிய திருத்தம் செய்யாவிட்டால், அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழகப் போக்குவரத்துதுறை அமைச்சர் 1998ஆம் ஆண்டு தமிழக அரசின் பாரதியார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தன், என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, 1998இல் அறிவிக்கப்பட்ட அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்திற்கு, மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தோம்.
க.பொன்முடி அந்த விழாவில் கலந்து கொள்ளமாட்டார்" என்று அவையிலே அறிவித்தேன். எனது இந்த அறிவிப்புக்குப் பிறகு, ரயில்வே விழாவிற்கான அழைப்பிதழில் மாற்றம் செய்யப்பட்டது. ரயில்வே துறை சார்பில் அதிகாரி ஒருவர், "தமிழக அரசின் கருத்துக்கு மதிப்பளித்து, காஞ்சிபுரத்தில் நடைபெறுகின்ற அகல ரயில் பாதைத் திட்டத் துவக்க விழாவில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தென்னிந்திய திருச்சபை ஆலயப் போதகர் மார்ட்டின் ஜே.பிலிப் அவர்களும், ஜும்மா மசூதித்தலைவர் ஜனாப் அஸ்லாம் பாஷா அவர்களும் கலந்துகொள்வார்கள்- அவர்களுடைய பெயர்களும் அழைப்பிதழில் சேர்த்து புதிதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்படும்" என்றும் அறிவித்து, அவ்வாறே செய்தார்.
அதன் பின்னர் அந்த விழாவில் அமைச்சர் பொன்முடி அவர்களும், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ்குமார் அவர்களும், அழைப்பிதழில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மதத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் விழா தொடங்கும்வரை சங்கராச்சாரியாரின் வருகை எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், அவருக்காக தனி இருக்கை போடப்பட்டிருந்தும் அவர் விழாவிற்கு வரவில்லை. ஆனால் விழா முடிந்ததும், மத்திய அமைச்சர் நிதீஷ்குமார் அவர்கள் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றபோது, கலைஞர் அங்கே விஜயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்கள் அமைச்சரை வரவேற்று கோயிலைச் சுற்றிக் காட்டினார்.
அதன்பின் அமைச்சர் சங்கரமடம் சென்று சங்கராச்சாரியாரைச் சந்தித்து விட்டுச் சென்றார். அதன் பின்னர் சங்கராச்சாரியார் விழா நடைபெற்ற மேடைக்கு வந்து அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டுக்கு குங்குமப் பொட்டு வைத்தார் என்று செய்தி வெளிவந்தது. ★ ★ ★ மத்தியில் பா.ஜ.க ஆட்சியின் கொள்கைகளையும், மற்றும் செயல்பாடுகளையும் கண்டித்து அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்ட பொது வேலை நிறுத்தத்தையொட்டி, தமிழ்நாட்டிலும் தொழிற்சங்கங்களும், விவசாயச் சங்கங்களும், மாணவர், இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய தேசிய மேடையின் சார்பில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திடவும்-இந்தியப் பொருளாதாரச் சுயச்சார்புச் தன்மையைக் காத்திடவும்-பொதுத் துறைகளைக் காப்பாற்றிடவும் ஆலை மூடல், ஆட்குறைப்பைத் தடுத்திடவும்-விவசாயத் தொழிலாளர் நலன் காக்கச் சட்டங்கள் இயற்றிடவும் - வேலையின்மையைப் போக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும்- அனைவருக்கும் தொடக்கக் கல்வி, அடிப்படை சுகாதார வசதிகள் கிடைத்திடவும்-பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் நிறைவேற்றிடவும்-ஆதிதிராவிடர், பழங்குடியினர் உரிமைகளைப் பாதுகாத்திடவும்-வகுப்புவாத சக்திகளின் சீர்குலைவு முயற்சிகளைத் தடுத்து நிறுத்திடவும்- மத்திய பா.ஜ.க.
அரசின் கொள்கைகளை எதிர்த்தும் 98ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்திட முடிவு செய்யப்பட்டது. இதனை ஆதரித்து நானும், த.மா.கா. தலைவர் அருமை நண்பர் மூப்பனார் , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா , தமிழக ஜனதாதளத் தலைவர் ஜி.ஏ.வடிவேலு ஆகியோர் 4.12.1998 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக மக்கள் முழு ஆதரவு தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம்.
பொது வேலை நிறுத்தம் குறித்து 7.12.1998 அன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தினில், பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, மூப்பனார், என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, எம்.சி.டேவிட், மற்றும் எஸ்.எஸ்.தியாகராசன், ஏ.எம்.கோபு, என்.வரதராஜன், டி.கே.ரங்கராசன், கி.வரதராசன், ஜி.கே.தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பொது வேலை நிறுத்தத்தை அமைதியாக நடத்த வேண்டுமென்று அனைவரின் சார்பிலும் வேண்டுகோள் அறிக்கை விடப்பட்டது.
அவ்வாறே தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. மாநிலம் முழுவதும் அசம்பாவிதச் சம்பவம் எதுவுமின்றி பொது வேலை நிறுத்தம் தமிழகத்தில் முழு அமைதியுடன் நடைபெற்றது. ★ ★ ★ தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்ற பெரியார் விருது, அம்பேத்கர் விருது, திரு.வி.க.விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது ஆகிய ஐந்து விருதுகளை - முறையே திரு.நாத்திகம் ராமசாமி, திரு.எல்.இளையபெருமாள், புலவர் திரு.மருதவாணன், திரு.குமரி அனந்தன், மலேசியக் கவிஞர் திரு.முரசு.நெடு மாறன் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவித்தேன்.
அதற்கான விழா 24.12.1998 அன்று கலைவாணர் அரங்கத்தில், பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் முனைவர் மு.தமிழ்க்குடிமகன், எம்.ஆர்.கே. பன்னீர்ச்செல்வம், சமயநல்லூர் செல்வராஜ், வ.முல்லை வேந்தன் ஆகியோர் விழாவிலே கலந்து கொண்டு கலைஞர் உரையாற்றினார். அந்தத் துறையின் செயலாளராக இருந்த ராஜரெத்தினம் ஐ.ஏ.எஸ். நன்றி கூறினார். விழாவிலே கலந்து கொள்வதற்கு முன்பு, அன்றைய தினம் காலையில் எனக்குக் கடுமையாக உடல் நலம் சரியில்லை.
அந்த விழாவிற்குச் செல்ல முடியுமா என்பதே கேள்விக் குறியாக இருந்தது. மருத்துவர்கள் எல்லாம் ஒரு நாள் ஓய்வெடுத்துக் கொள்ளும்படிக் கூறியபோதிலும் கேட்காமல் விழாவிலே கலந்து கொண்டேன். ★ ★ ★ ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டெல்லி, மிஜோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோற்று, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றவுடன், மத்தியிலே உள்ள பா.ஜ.க. அரசைப் பதவி விலகக் கோரி மக்களவையில் சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி.
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டதால், 30.11.1998 அன்று மக்களவை செயலிழந்தது. பிரதமரைப் பதவி விலகக் கோரி எதிர்க் கட்சியினர் கோஷமிட்டனர். பொது வேலைநிறுத்தம் பற்றி ஆலோசிக்க, அறிவாலயத்தில் நான் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து பா.ஜ.க. அரசைப் பதவி விலக வேண்டும் என்று கோருவதைப் பற்றி செய்தியாளர்கள் தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்துக் கேட்டபோது.
"எப்போதுமே வாக்காளப் பெருமக்கள் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கும் - சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கும் ஒரே விதமான கருத்தோட்டத்துடன் வாக்களிப் பதில்லை. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி , மார்ச்சில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில். தி.மு.க.கூட்டணி பத்து இடங்களை மட்டுமே பெற்றபோது-தி.மு.க.அரசு பதவி விலக வேண்டுமென்று சிலர் குரல் எழுப்பியபோது நான் அளித்த பதிலை மறந்து விடவில்லை. நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டுமென்பதும் - சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமென்பதும் சரியல்ல என்றும் நான் கூறியிருக்கிறேன்.
அது இப்போதும் பொருந்தும். எப்போதும் பொருந்தும். மத்தியில் நிலையான ஆட்சி என்ற பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், கூட்டணிக் கட்சிகள் நித்ய கண்ட ஆட்சி என்ற நிலையை ஏற்படுத்திவிட்டன. சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இடையே ஒரு புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் உருவாக்கியுள்ளது" என்று கூறினேன்.
இதைப்பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் வாஜ்பாய் அவர்கள், "நான்கு மாநிலப் பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததால், மத்தியிலே உள்ள பா.ஜ.க. அரசு விலக வேண்டிய அவசியம் இல்லை-சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்காக மத்தியில் உள்ள அரசு பதவி விலகியதாக வரலாறே கிடையாது" என்று கூறினார்.
★ ★ ★ ஐதராபாத் ஓய்வுக்குச் சென்று விட்டு, சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் 7.12.1998 அன்றிரவு செய்தியாளர்களிடம், "அ.தி.மு.க. யாருடனும் கூட்டணி பற்றிப் பேசவில்லை - மற்றவர்கள் பேசியுள்ளனர்- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கத் தேடி வருகின்றனர்- கூட்டணி பற்றி சோனியா காந்தியுடன் பேசவில்லை- எங்களுடன் கூட்டணி பற்றி அவர்கள் பேசினர்-காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வருமா என்ற கேள்வி இப்போது எழவில்லை-தற்போது பா.ஜ.க.
கூட்டணியில் இருக்கிறோம்- கூட்டணி பற்றி த.மா.காவுடன் பேச நான் யாரையும் கலைஞர் அனுப்பவில்லை-அவர்கள் பேசவந்தால் பரிசீலிப்போம்- அ.தி.மு.க. கூட்டணியில் இன்னமும் இருப்பதாக பா.ம.க., ம.தி.மு.க., கூறுவது பற்றி எனக்குப் புரியவில்லை. ஜனதாகட்சி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. பா.ஜ.க. அரசு செயல்பாடு பற்றி திருப்தி இல்லை. பலமுறை இதுபற்றி தெரிவித்துள்ளேன். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பற்றி அ.தி.மு.க.
அதிருப்தி கொண்டுள்ளது. இதனால் மத்திய அமைச்சரவையிலிருந்து அ.தி.மு.க.விலகாது. மக்களவைக்கு இடைத் தேர்தல் வந்தால் அதற்கு அ.தி.மு.க பொறுப்பாகாது" என்றெல்லாம் கூறினார். மக்களவையின் துணைத்தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு பிரச்சினை அப்போது எழுந்தது. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சியாக இருந்த ஜெயலலிதா, "மக்களவைத் துணைத் தலைவராக எதிர்க்கட்சிகளே தேர்ந்தெடுக்க வேண்டும்-பா.ஜ.க. யாரையும் நியமிக்கக் கூடாது" என்றார்.
அதே கால கட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான திருமதி சோனியா காந்தி , "மத்தியில் உள்ள பா.ஜ.க. கூட்டணி அரசைக் கவிழ்த்துவிட்டு, மாற்று அரசை அமைப்பதற்கு காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கவில்லை. பல மாநிலங்களில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதே கட்சியின் முன்னுரிமை" என்று கூறினார்.
★ ★ ★ பொது வேலை நிறுத்தத்தின் போது சென்னை நகரம் வெறிச்சோடிக் கிடந்தது சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம், காங்கிரசாரிடையே புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் உருவாக்கி இருக்கிறது. மத்திய ஆளுங்கட்சியோடு தோழமை கொண்டு, மத்திய அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றிருந்த நிலையில், அ.தி.மு.க. மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் 11.12.1998 அன்று நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தத்தில், அ.தி.மு.க.வும் பங்கேற்குமென்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
அதைப் பற்றி செய்தியாளர் கேட்டதற்கு, "இது மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கை அல்ல-தொழிற் சங்கங்களுக்கு ஆதரவான நடவடிக்கை" என்றார். இது பற்றி 11.12.1998 தேதிய "தினமணி" நாளிதழ் எழுதிய தலையங்கத்தில்- "காங்கிரசல்லாத எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா, இப்போது மக்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முடிவெடுத்து விட்டார். அமைச்சரவையில் பங்கேற்றாலும்கூட வாஜ்பாய் அரசு நெடுநாள் நீடிக்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்த அவர் முனைந்திருக்கிறார்.
தயக்கத்துடன் இருக்கும் காங்கிரசை எப்படியாவது மாற்று அரசை அமைக்க ஆயத்தமாக்கிவிட வேண்டும் என்ற அவசர உணர்வு அவருக்கு ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததில், மத்தியில் பெயருக்கு இரு அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தவிர அ.தி.மு.க.வுக்கு எவ்வித லாபமும் இல்லை என ஜெயலலிதா நினைத்திருக்கலாம்."
"மத்தியில் வழக்கமான தோழமைக் கட்சியான காங்கிரசை விடுத்து பா.ஜ.க.வுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்ததற்குக் காரணம் உண்டு. சரியான தலைமை இல்லாமல் பலவீனமாக நிலையில் அப்போது காங்கிரஸ் கட்சி இருந்தது. ஏற்கனவே சில கலைஞர் "கூட்டணிக் கட்சிகளுடனுள்ள உறவை, விருப்பப்படி முறிப்பது ஜெயலலிதாவின் தொடர் வியாதி" என்றார், வாழப்பாடி ராமமூர்த்தி வட மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.க.மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்ததால், அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் ஜெயலவிதா.
"கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் தன் மீதும் தனக்கு நெருக்க மானவர்கள் மீதும் உள்ள ஊழல் வழக்குகளைக் கைவிடச் செய்யலாம் - அதற்கு முன் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி தி.மு.க. ஆட்சியைக் கலைத்து விடலாம் என அவர் நினைத்திருக்கலாம். கோவைக்குண்டு வெடிப்புச் சம்பவங்கள், ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கை மீதான அரசின் நடவடிக்கை அறிக்கை ஆகிய இரு வாய்ப்புகளையும் வாஜ்பாய் அரசு நழுவ விட்டதாக நினைத்து ஜெயலலிதா கோபமடைந்தார்."
மேலும் ஜெயின் அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையில் சந்தேகத்துக்குரியவர்களின் பங்கு என்ற தலைப்பில் கருணாநிதியின் பெயர் தவறுதலாகச் சேர்க்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறனுக்கு
உள்துறை அமைச்சர் அத்வானி கடிதம் எழுதியதும் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். சேடப்பட்டி முத்தையாவை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ள பிரதமர் வாஜ்பாய் முடிவெடுத்த போதே ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க இயலாது என்பது ஜெயலலிதாவுக்குத் தெரிந்துவிட்டது. அதனால்தான் அப்பிரச்சினை அப்போது பூதாகாரமாக உருவெடுத்தது. வழக்கு விசாரணை துரிதப்பட்டிருப்பதால், ஒரு வழக்கில் தண்டனை கிடைத்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்படலாம்.
இதை எப்படியாவது தவிர்க்கவே காங்கிரசுடனான பழைய உறவைப் புதுப்பிக்க நினைக்கிறார் ஜெயலலிதா" என்று எழுதியது. ஆனால் ஜெயலலிதாவோடு அதுவரை கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, மத்தியிலும் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி 98 ஆம் ஆண்டு, டிசம்பர் 12 ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், "பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்துள்ள ஜெயலலிதா, வாஜ்பாய் அரசாங்கத்தில் பங்கேற்பது முறையல்ல. மனைவி பிடிக்கவில்லை என்றால் விலகி விடுதல் அல்லது விவாகரத்துப் பெறுதலே சரியான அணுகுமுறையாக இருக்கும்" என்றார்.
மேலும் அவர், "நாளை வருகிற பலாப்பழத்தை எண்ணிக் கொண்டு இன்று இருக்கிற கிலாப் பழத்தை வாரிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பும் கூட்டணிக் கட்சிகளுடன் உள்ள உறவை இஷ்டப்படி முறித்து வந்தார். அவருக்குள்ள தொடர் வியாதி இது" என்றும் கூறினார்.
★ ★ ★ இந்திய அரசியல் இவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த நேரத்தில், 16.12.1998 அன்று அமெரிக்க, பிரிட்டன் போர் விமானங்கள் இராக் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தின. அதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர். இராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் மீது நூற்றுக்கும் அதிகமான ஏவுகணைகளைப் போர் விமானங்கள் வீசித் தாக்குதல் நடத்தின. அணு ஆயுதச் சோதனை தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை ஆய்வாளர்களுடன் ஒத்துழைக்க இராக் தவறியதை அடுத்து, கலைஞர் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா அப்போது கூறியது.
அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் பலமாகத் தாக்குதல் நடத்தும்படி உத்தரவிட்டதைத் தொடர்ந்து தாக்குதல் தொடங்கியது. அமெரிக்காவின் " ஆபரேஷன் டெஸர்ட் ஃபாக்ஸ் " - " பாலைவன நரியை அழித்தல் " நடவடிக்கையில் பிரிட்டனும் இணைந்து கொண்டதாக லண்டனிலிருந்து வெளியான செய்தி தெரிவித்தது. பாக்தாத் மீது டொமஹாக் ரக ஏவுகணைகளை அமெரிக்க, பிரிட்டன் விமானங்கள் அதிகாலை 3.20 மணிக்கு வீசித்தாக்குதலைத் தொடங்கின. ஏவுகணைகளில் ஒன்று அதிபர் சதாம் ஹுசேன் மாளிகை அருகில் விழுந்தது.
அதிபர் மாளிகை அருகே அரசு அலுவலகம் இயங்கும் கட்டிடம் புகை மண்டலமாகக் காட்சி அளித்ததாகப் பொதுமக்கள் கூறினர். சர்வதேச ஆயுதச் சோதனைக் குழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்று காரணம் காட்டி, இராக்மீது தாக்குதல் நடத்தியிருப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. இந்தப் பிரச்சினை குறித்து கழகத்தின் சார்பில் மக்களவையில் உரையாற்றிய தம்பி முரசொலி மாறன்- "ஈராக்கில் நடந்து வரும் கொடூரத் தாக்குதல் நாகரிக உலகின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஈராக்கைத் தண்டிக்கப் போவதாக அமெரிக்க அரசின் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதை நான் பார்த்தேன். குறிப்பிட்ட ராணுவ இலக்கை நோக்கி நடத்தப்படும் தாக்குதல் என்று இதைக் கூறிவிட முடியாது. மாறாக மனிதாபிமான இலக்கிற்கு எதிரான தாக்குதல் என்றுதான் இதைக் கூற வேண்டும். இது ஒரு கண்டிக்கத் தக்க குண்டு வீச்சுத் தாக்குதலாகும். அதிகார வெறி கொண்டவர்களின் தாக்குதல் இது. அமெரிக்கா ஒன்றும் உலகைக் காவல் காக்கும் போலீஸ்காரர் அல்ல.
மனிதாபிமானத்தை எதிர்த்துத் தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு யாரும் உரிமம் வழங்கவில்லை. இதனால் ஒரு பெரும் நாகரிகம் அழியப் போகிறது" என்று கூறினார். "ஐ.நா.வின் எண்ணங்களுக்கு எதிரான நடவடிக்கை இது" என்று ரஷ்யாவும், சீனாவும் கூறியதோடு, தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் கூறின.
இராக் அதிபர் சதாம் ஹுசேன் கடவுளின் எதிரிகளை எதிர்த்துப் போராடும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார். "அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல் எதிர்பார்த்ததுதான்- 8 ஆண்டுகளுக்குப் பின் இராக் மண்ணைக் கோழைகள் மீண்டும் தாக்கியுள்ளனர்- அவர்களை எதிர்ப்பதுடன், கடவுள் மற்றும் நாட்டின் எதிரிகளை எப்போதும் போல் எதிர்த்துப் போராட வேண்டும்" என்றும் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் எழுப்புவதற்காக வேலூர் மாவட்டத்தின் சார்பில் ரூ.40 இலட்சம் வழங்கப்பட்டது தொடர்ந்து 17.12.1998 அன்றும், இரண்டாவது நாளாக அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் இராக்மீது தாக்குதலை நடத்தின. முதல்நாள் தாக்குதலை விட மறுநாள் தாக்குதல் கடுமையாக இருந்தது. மருத்துவமனைகள், கல்லூரிகள் மீதும் முக்கிய துறைமுகமான உம்கசார் மீதும் தாக்குதல் நடை பெற்றது. அந்தத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 75 பேர் காயமடைந்ததாகவும் கலைஞர் செய்திகள் வந்தன.
டீகோ கார்ஸியா களத்திலிருந்து அமெரிக்க குண்டு வீசும் விமானங்களும். யு.எஸ். எண்டர்பிரைசஸ் கடற்படை கப்பல் தளத்திலிருந்து ஜெட் போர் விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டன: குவைத்தளத்திலிருந்து பிரிட்டிஷ் டொரண்டோ ஜெட் விமானங்கள் இரண்டாம் நாள் தாக்குதலில் ஈடுபட்டன. ★ ★ ★ வேலூர் சிப்பாய்க் கலகத்தில் உயிர் நீத்த தமிழக வீரர்கள் நினைவாக நினைவுத்தூணைத் திறந்து வைத்தேன். இந்திய அரசின் நீதித் துறையில்.
98ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற சில சம்பவங்கள் முக்கியமானவையாகும். நீதித்துறை வட்டாரங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகப் பேசப்பட்ட இருவர் மாறுதலுக்கு ஆளானார்கள். ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி மன்மோகன்சிங் லிபரான் . மற்றொருவர் நீதிபதி டி.ராஜு இவர்களின் பெயர் திடீரென்று அனைத்து ஏடுகளிலும் இடம் பெறுவதற்கு மூன்று சம்பவங்கள் தொடர்புடையதாக அமைந்தன. முதல் சம்பவம், முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவு க்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இவர்கள் விசாரித்ததாகும்.
இரண்டாவது சம்பவம், பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்ததும், சட்ட அமைச்சகம் தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அதனை அ.தி.மு.க. பெற்றது - சட்டத் துறையில் மிகவும் நிபுணர் என்ற பெருமைப்படும் அளவுக்கு அ.தி.மு.க.வில் யாரும் எம்.பி.யாக இல்லாத நிலையில் கூட அந்தப் பதவி அந்தக் கட்சிக்குக் கிடைத்தது- அதன் காரணமாக மிகத் திறமையான வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி வீட்டு வசதித் துறைக்கு அமைச்சராக நேர்ந்தது.
மூன்றாவது சம்பவம், இந்த நீதிபதிகள் இருவருமே வேறு உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்ட சம்பவம். சிறப்பு நீதிமன்றத்தை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவைப் பாதி விசாரித்து முடித்த நிலையில், மாற்றலுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அவர்கள் இருவரின் மாற்றலுக்கான உத்தரவைப் பிறப்பித்தவர் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எம்.எம்.பூஞ்சி . தனக்கு அளிக்கப்பட்ட மாற்றல் உத்தரவை நீதிபதி ராஜு ஏற்றுக் கொண்டதால் அதிலே பிரச்சினை உருவாகவில்லை.
ஆனால் லிபரான் விஷயத்தில் பிரச்சினை உருவெடுத்தது. சக நீதிபதிகளைக் கலந்தாலோசிக்காமல் நீதிபதி பூஞ்சி இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என்று கருதப்பட்டதே அதற்குக் காரணம். அதே காரணத்தைக் காட்டி, அவர் பிறப்பித்த மாற்றல் உத்தரவை வாஜ்பாய் அரசு எதிர்த்தது. மிகப்பெரிய சட்டப் பிரச்சினையில் ஒரு பகுதியாக இந்த மாற்றல் கருதப்பட்டது. நீதிபதிகள் மாற்றல் விஷயத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, தானே முடிவெடுக்க முடியுமா-அல்லது தனது சகாக்களைக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டுமா-என்பதைத் தெளிவாக்குமாறு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
மாற்றல் விஷயத்தில் கருத்து தெரிவித்தவர்களில் பூஞ்சிக்குப் பின் தலைமை நீதிபதியான ஏ.எஸ்.ஆனந்தின் கருத்து மத்திய அரசுக்கு அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மாற்றப்படுவதற்கு முன்னதாக லிபரானின் கருத்தையும் தலைமை நீதிபதி பூஞ்சி கேட்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. கலைஞர் நீதிபதிகளின் மாற்றலுக்கு முன்னதாக தன்னுடைய சகாக்களைத் தலைமை நீதிபதி கலந்தாலோசித்து அவர்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதன் மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்து, லிபரானின் மாற்றல் ஒருமுறை ரத்து செய்யப்பட்டது.
பூஞ்சி ஓய்வு பெற்றபின் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றத்தில் பொறுப்பேற்றவர் ஏ.எஸ்.ஆனந்த், அவரைச் சந்தித்தவர்களில் முதல் இடத்தைப் பெற்றவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிற நிலையிலும்-இது தொடர்பாக இரண்டு நீதிபதிகள் இட மாறுதல் பெற்றிருக்கின்ற நிலையிலும்-அந்தச் சந்திப்பு அப்போது நடைபெற்றது. அந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்ட போதிலும்.
அப்போது அது பலரின் கவனத்தை ஈர்த்தது. நீதிபதி இ.பத்மநாபனுடன் இணைந்து மறு விசாரணை நடத்திய நீதிபதி லிபரான். "ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கப் பட்டது சரியே" என்று தீர்ப்பு வழங்கிய ஆறுவார காலத்திற்குள் லிபரான் மாற்றப்பட்டார்.
மாறுதல் உத்தரவைக் கூட வழக்கமான முறைப்படி தமிழகத் தலைமைச் செயலாளர் மூலம் அனுப்பாமல், நேரடியாக லிபரானுக்கு அனுப்பும் அளவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் மிகுந்த ஆர்வத்துடன் அப்போது செயல்பட்டது. இதுபற்றியெல்லாம் அந்த நேரத்தில் செய்தியேடுகள் அனைத்தும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. அதனையொட்டி 19.12.1998 அன்று நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். அதன் விவரம் வருமாறு:- "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீதுள்ள பல கோடி ரூபாய் ஊழல் வழக்குகளில் பா.ஜ.க.
அரசு இரட்டை நிலை மேற்கொண்டுள்ளது. ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான மூன்று சிறப்பு நீதிபதிகளை சென்னையில் நியாமித்ததை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் தாக்கலான மனுக்களில், மத்திய அரசின் அதிகாரி ஒருவர், "தமிழக அரசின் ஆணை சரியானது" என்று எழுத்து மூல உறுதிமொழி அளித்திருக்கும் நிலையில், வழக்குகளை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாக திடீரென்று பா.ஜ.க.
அரசு சொல்வது ஆச்சரியப்பட வைக்கிறது." "இவ்வாறு பா.ஜ.க. அரசு எடுத்துள்ள இரட்டை நிலை, தனக்கு வேண்டப்பட்டவர்கள் பெருமளவு ஊழல் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றங்களால் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தயங்காது என்பதனையே காட்டுகிறது. இந்தச் சூழ்நிலையில் நேர்மை விரும்பும் மக்கள் மனதில் எழும் வினாக்கள்: "சில வழக்குகள் எந்த நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறுவதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாக பி.ஜே.பி.
மத்திய அரசு எடுத்துக் கூறுவதற்கான அவசியம் என்ன?" "எந்த வழக்குகளுக்காக அவர்கள் கவலைப் படுகிறார்கள்? புதிய சட்ட அமைச்சர் பதவியேற்றவுடன், மத்திய அரசின் வழக்குகளைக் கையாளும் அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப் பட்டனவா?"
ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்க அனுப்பிய ராணுவ டாங்கிகள் கலைஞர் "புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய அரசின் வழக்கறிஞர்கள், மத்திய அரசினால் போடப்பட்ட வழக்குகளுக்கு உள்ளானவர்களின் வீட்டிலேயே சென்று, தங்களது நியமன உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. அரசு பதிலளித்ததா?"
"சி.பி.ஐ. போலீசாரால் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கான சிறப்பு நீதி மன்றங்களை நியமிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசினையே நாடியுள்ளது. உதாரணமாக 1983, 1995,1997 ஆகிய ஆண்டுகளில் இத்தகைய நீதிமன்றங்களை மாநில அரசே நியமித்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு தற்போது மாநில சி.ஐ.டி., மற்றும் விஜிலன்ஸ் போலீசாரால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தலையிட்டு குழப்ப முயற்சிப்பதன் காரணம் என்ன?"
என்று எனது அறிக்கையிலே நான் குறிப்பிட்டிருந்தேன். ★ ★ ★ பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கமாகப் பதிலளித்து 21.12.1998 அன்று வேலூரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில், ஏராளமான ஆதாரங்களோடு, பல நீதி மன்றத் தீர்ப்புகளை யெல்லாம் சுட்டிக்காட்டி நான் உரையாற்றினேன். அமெரிக்கக் குண்டுவீச்சால் பாழான ஒரு மருத்துவமனை அந்தக் கூட்டத்தில்தான் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் எழுப்புவதற்காக, வேலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் 40 லட்சம் ரூபாய் நிதியினை மாவட்டக் கழகச் செயலாளர் தி.அ.முகமதுசகி , அமைச்சர் துரைமுருகன் ,ஆர்க்காடு வீராசாமி , மாவட்டக் கழக நிர்வாகிகள், மா.மாரப்பன், ஆர்.காந்தி , எம்.எல்.ஏ., பூபாலன் மற்றும் கழகத்தினர் என்னிடம் வழங்கினார்கள்.
அதே நாளில் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக, வேலூர் நகரில் " சிப்பாய்க் கலகம் " என்ற முதல் சுதந்திரப் போராட்ட நினைவுத் தூணை நான் திறந்து வைத்தேன். விடுதலைப் போரிட்ட தியாகிகளைக் கழக அரசு எந்த அளவிற்கு மதித்து வருகிறது என்பதற்கான பல்வேறு சான்றுகளைக் குறிப்பிட்டேன்.
