நெஞ்சுக்கு நீதி
பீகாரும்-பெர்னாண்டசும் · 352 / 391
40.பீகாரும்-பெர்னாண்டசும் "இருள் மண்டிய வேளையில், கலங்கரை விளக்கம் போல், அரசியல் சட்டம் 356ஆவது பிரிவு பற்றிய அம்பேத்கரின் கருத்தை நிலைநாட்டி விட்டீர்கள்" - என்று குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைப் பாராட்டினார், முரசொலி மாறன். ரா ப்ரிதேவி தலைமையில் நடைபெற்ற பீகார் மாநில அரசைக் கலைக்கும்படி மத்திய அமைச்சரவை, 22.9.1998 அன்று குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தது. பீகார் மாநில ஆளுநராக அப்போது இருந்த பண்டாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், ரப்ரிதேவி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதள ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்யலாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது.
பிரதமர் வாஜ்பாய் , உள்துறை அமைச்சர் அத்வானி , பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து அமைச்சரவையின் முடிவினைத் தெரிவித்தார்கள். அத்வானி செய்தியாளர்களிடம் கூறும்போது, சட்டப் பேரவையைக் கலைக்காமல் முடக்கி வைக்கப் பரிந்துரை செய்திருப்பதாகக் கூறினார். முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் தலைமையில் ஜனதாளம் கட்சித் தலைவர்கள் ஜெய்பால்ரெட்டி, எஸ்.ஆர்.பொம்மை, சுரேந்திரமோகன் ஆகிய நான்கு பேரும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, "பீகார் அரசைக் கலைக்கக் கூடாது" என்று வலியுறுத்தினார்கள்.
மத்திய கலைஞர் அரசுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். இந்த முடிவு குறித்து கலந்து பேசுவதற்காக, 25.9.1998 அன்று தி.மு.கழக அலுவலகத்தில் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினேன். ஜெயலலிதா , "பீகார் மாநில அரசைக் கலைப்பதற்கு பா.ஜ.க. அரசு கூறியுள்ள காரணங்களைவிட அதிகமான காரணங்கள் தமிழக அரசைக் கலைப்பதற்கு இருக்கின்றன!"
என்று அறிக்கை விடுத்தார். "அ.தி.மு.க.வின் அந்த வஞ்சகப் போக்கினை ஜனநாயக சக்திகள் எல்லாம் கண்டிக்க வேண்டும்" என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக அப்போதிருந்த பெரியவர் நல்லகண்ணு அவர்கள் அறிக்கை விடுத்தார்.
மாநில அரசுகளைக் கலைக்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவு பற்றி தி.மு.கழகத்தின் கருத்து எப்போதும் ஒன்றுதான். ஆளுங்கட்சியாக இருந்தால் ஒரு கருத்து-எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு கருத்து என்பதில்லை. உதாரணமாகச் சொல்ல வேண்டுமேயானால், 1974 ஆம் நான் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் "ஜனநாயகத்திற்கு விரோதமாக பீகாரில் ராப்ரிதேவியின் அரசைக் கலைக்கக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பீகார் அரசைக் கலைக்க, 2வது முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும் அத்வானியுடன் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய போது, நான் முதலமைச்சர். அப்போதும் 356ஆவது பிரிவு கூடாது என்பதே நமது கொள்கை. 1983ஆம் ஆண்டு தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது, பேரவையிலே நான் உரையாற்றிய போதும் அதே கொள் கையைத்தான் எதிரொலித்தேன்.
1998ஆம் ஆண்டு பீகார் மாநில அரசைக் கலைத்திட முயற்சி நடைபெற்ற போதும், "அது ஜனநாயகத்திற்குக் களங்கம் விளைவிக்கும் செயல்" என்று நான் அறிவித்தேன். 25.9.1998 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு , தமிழக ஜனதாதளத் தலைவர் ஜி.ஏ.வடிவேலு, முரசொலி மாறன் எம்.பி., என்.வரதராசன், ஏ.எம்.கோபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக் விரோதமாகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் மத்திய பா.ஜ.க. அரசு, பீகாரில் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி கலைஞர் நடத்தும் திருமதி ராப்ரிதேவியின் ஆட்சியைக் கலைக்குமாறு முடிவு செய்து, குடியரசுத் தலைவருக்குச் சிபாரிசு செய்திருப்பதை அந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன்-அந்தச் செயலுக்கு தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், 28.9.1998 அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் நடைபெறும்!"
என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ★ ★ ★ ஆனால், இந்தியத் திருநாடே மகிழ்ச்சியில் திளைக்கத் தக்க வகையில், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் பீகார் அரசைக் கலைக்க மத்திய அரசு எடுத்த முடிவைத் திருப்பி அனுப்பினார். அதைப் பற்றி செய்தியாளர்கள் என் கருத்தைக் கேட்டபோது, "டாக்டர் அம்பேத்கருடைய கருத்தைக் குடியரசுத் தலைவர் "தமிழ்நாட்டில் தி.மு.க. அரசைக் கலைக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன" -என்று பொய் அறிக்கை விடுத்தார், ஜெயலலிதா திரு.கே.ஆர்.நாராயணன் அப்படியே பிரதிபலித் திருக்கிறார்.
356ஆவது பிரிவை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், அப்படி துஷ்பிரயோகம் செய்தால், அந்தப் பிரிவையே தூக்கி எறிந்து விடலாம் என்றும் அம்பேத்கர் சொன்னார். அதை நெஞ்சில் பதிய வைத்துக் கொண்டு, இப்போது குடியரசுத் தலைவர் நாராயணன் அவர்கள் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலம் இருக்கும் "அ.தி.மு.க.வின் வஞ்சகப் போக்கினை, ஜனநாயக சக்திகள் எல்லாமே கண்டிக்க வேண்டும்" - என்றார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர்.நல்லகண்ணு பீகார் மாநில அரசைக் கலைப்பதை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்" என்று நான் கூறினேன்.
"குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினாலும் மீண்டும் சிபாரிசு செய்து வலியறுத்துவோம் என்று சில பா.ஜ.க. தலைவர்கள் சொல்லு கிறார்களே?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு- "அப்படி அவர்கள் செய்யக்கூடாது என்பது என் கருத்து. முன்பு இப்படித்தான் குஜ்ரால் அரசு, உ.பி. அரசைக் கலைப்பதற்குச் சிபாரிசு செய்தது. இதே கே.ஆர்.நாராயணன் அவர்கள் அதைத் திருப்பி அனுப்பினார். அதை மீண்டும் அனுப்பக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்தக்கூடாது என்று தி.மு.கழகம் குஜ்ரால் அரசை வற்புறுத்தியது.
குஜ்ரால் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க. அமைச்சர் முரசொலி மாறனும் "அப்படி மீண்டும் வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும்" என்று நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தார். எனவே, குஜ்ரால் அரசு அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், உத்திரப்பிரதேச அரசைக் கலைக்காமல் விட்டு விட்டது. அப்போது வாஜ்பாய் போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க.விற்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்கள். அதை மறந்துவிடாமல் இன்றைய சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதை ஏற்றுக் கொண்டு, பீகார் அரசைக் கலைக்க வேண்டுமென்று மீண்டும் பா.ஜ.க.அரசு வலியுறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினேன்.
"அப்படியென்றால் நீங்கள் அறிவித்துள்ள "பந்த்" நடக்குமா?" என்று கேட்டதற்கு- கலைஞர் "அண்ணா அவர்கள், மத்திய - மாநில அரசுகளுக்கிடையே நல்ல ஒத்துழைப்பு இருக்க வேண்டும்" என்று சொன்னார் - "அந்த நிலையிலிருந்து தி.மு.க.மாறாது" என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டுக்கு பேட்டியளித்தேன்.
"எதிர்க் கட்சிகளின் நியாயமான கோரிக்கைக்கு வெற்றி கிடைப்பதுதான் சிறந்த ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தைக் காப்பாற்றிய குடியரசுத் தலைவருக்கும் அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட மத்திய அரசுக்கும் நன்றி கூறுகிறேன். இந்த முடிவைப் பாராட்டி வரவேற்று, 28 ஆம் தேதி நடைபெறவிருந்த கடையடைப்பு-வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்படுகிறது என்பதை அறிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினேன்.
நாடாளுமன்றக் கழகக் குழுவின் தலைவராக இருந்த முரசொலி மாறன் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், "நம்முடைய இந்திய நாட்டில் ஆரோக்கியமான மரபுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துபவர்களின் சார்பாக, மீண்டும் ஒரு முறை ஜனநாயகத்தையும், கூட்டாட்சி முறையையும் காக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். 356ஆவது பிரிவைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் அவர்கள் என்ன நினைத்திருந்தார்களோ, அதை நீங்கள் நிலைநாட்டி விட்டீர்கள்.
356வது பிரிவு ஜனநாயகத்திற்கு விரோதமான கொள்கை. அதை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குவதற்காக தி.மு.கழகம் கடுமையாகப் போராடி வருகிறது. அதுவரை அம்பேத்கர் விரும்பிய படியே அது முகவரி இல்லாத கடிதமாகவே இருக்கட்டும். இரண்டாவது முறையாக நீங்கள் சரித்திரம் படைத்திருப்பீர்கள். உத்தரப்பிரதேச மாநிலம் தொடர்பாக மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பினீர்கள். அது குறித்து நீண்ட நேரம் விவாதம் நடந்த போதிலும், ஐக்கிய முன்னணி அரசு அதை கவுரவத்துடன் ஏற்றுக் கொண்டது.
அந்த விவாதத்தில் என்னுடைய பங்கை நான் நினைவு கூர்கிறேன். அப்போது உங்களுடைய சரியான முடிவு குறித்து பா.ஜ.க.தலைமை மகிழ்ச்சியடைந்தது. அதே போன்று அவர்களும் கூட தவறான கவுரவத்தைப் பற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். மீண்டும் ஒரு முறை என்னுடைய கட்சியின் சார்பிலும், என் சார்பிலும் இருள் மண்டிய வேளையில் கலங்கரை விளக்கம் போன்ற தங்களுடைய சரித்திரப் பூர்வ முடிவுக்காக நான் இதயப் பூர்வமாகப் பாராட்டுகிறேன்" என்று எழுதியிருந்தார்.
★ ★ ★ அ.தி.மு.கவும், அதன் தலைவி ஜெயலலிதாவும் படாத பாடுபட்டு, எப்படியாவது தமிழகத்திலே உள்ள தி.மு.கழக அரசைக் கலைக்க வேண்டுமென்று முயற்சித்த நிலையில்- "மத்தியிலே உள்ள ஆட்சியே போகின்ற நிலைமை வந்தாலும், அதற்காகப் பெரும்பான்மை பலத்துடன் நடைபெற்று வரும் தி.மு.கழக ஆட்சியைக் கலைக்க மாட்டோம் என்பதில் பா.ஜ.கவும் அதன் தலைவர்களும் உறுதியாகக் கடைசி வரை நடந்து கொண்ட காரணத்தினால், திராவிட முன்னேற்றக் கழகம் பின்னர் தனது வரலாற்றிலே ஒரு களங்கத்தைச் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது கூடட தி.மு.க.
தன்னிச்சையாக அந்தத் தவறை செய்துவிடவில்லை என்பதையும், பலத்த நிபந்தனைகளோடு தான் அந்த முடிவினை எடுக்க நேரிட்டது என்பதையும், ஏன் அப்படிப்பட்டதொரு முடிவினை எடுக்க நேர்ந்தது?" என்பது பற்றியும் நான் பின்னர் விரிவாக எழுதுகின்றேன். இதற்கு முன்னோடியாக " இந்தியன் எக்ஸ்பிரஸ் " நாளேட்டில் என்னுடைய பேட்டி 98ஆம் ஆண்டு, செப்டம்பர் 14மற்றும் 15 ஆகிய நாட்களில் வெளிவந்ததில் பல விவரங்களை நான் தெரிவித்திருந்தேன்.
அந்தப் பேட்டியின் சில முக்கிய பகுதிகள் வருமாறு:- கலைஞர் என்மீது மிகுந்த அன்பு கொண்ட ஐ.கே. குஜ்ரால், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பெரிதும் முயற்சித்தவர் செய்தியாளர்:- ஐக்கிய முன்னணியின் தற்போதைய நிலை என்ன? நீங்கள் அதன் தூண்களில் ஒருவராக இருந்தீர்கள். இப்போது அது எங்கே இருக்கிறது? நான்:- ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஐக்கிய முன்னணி நல்ல முறையில் செயல்படும் என்று நான் நம்பிக்கை கொண்டிருந்தேன்.
அதில் பல கட்சிகள் இருந்தாலும், குறைந்தபட்சம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.கழகம், த.மா.கா. ஆகிய கட்சிகள் தேசிய அளவில் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். கூட்டங்கள் நடைபெற்று, கூட்டாக முடிவுகள் எடுக்கப்பட்டன. இப்போது அத்தகைய நம்பிக்கையை நான் பெற்றிருக்கவில்லை. இது இன்றைய சூழ்நிலை-இப்போது ஐக்கிய முன்னணி இல்லை. செய்தியாளர்:-மத்திய அரசுடன் உள்ள உறவு குறித்து?
நான்:-எங்கள் தலைவர் அண்ணா அவர்கள், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சில தலைவர்கள் மத்திய அரசுடன் மோதல் ஏற்படுத்திக் கொள்ளலாம்-ஆனால் தி.மு.கழக அரசு மத்திய அரசுடன் மோதிக்கொள்ளாது. எங்கள் கருத்துக்களையும், கொள்கைகளையும் வலியுறுத்துவது என்பது வேறு-மத்திய அரசுடன் நாட்டின் நிர்வாகம் தொடர்பாக ஒத்துழைப்பு அளிப்பது என்பது வேறு.
நாங்கள் அண்ணாவின் நிலையிலிருந்து மாறிவிடவில்லை. இது சிலரால் தவறாகத் திரித்துக் கூறப்படுகிறது. அவர்கள் தான் பா.ஜ.கவும்., தி.மு.க.வும் ஓர் உடன்பாடு கொண்டுள்ளன என்ற வதந்தியைப் பரப்புகின்றனர். "அரசியலில் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருப்பார் கருணாநிதி" என்று சொன்னார், இந்திரா காந்தி.
செய்தியாளர்: பா.ஜ.க.அரசு மதச்சார்பின்மைக்கு ஓர் அச்சுறுத்தலாக இருப்பதால், மிக விரைவாக அது அகற்றப்பட வேண்டுமென்று இடதுசாரிகள் கருதுகின்றனர். மதச்சார்பின்மையின் அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். காங்கிரசால் குறைவான தீமையாக இருப்பதால், இதே போன்றதோர் நிலையை தி.மு.கழகமும் பின்பற்றுமா? நான்:- இதை நான் விரிவாக விளக்க வேண்டும். ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது, ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெறும் திட்டத்தை கம்யூனிஸ்டுகள் எதிர்த்தன.
அது எல்லோரும் அறிந்த உண்மை. இப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கலாம் என்று சொல்லுகிறார்கள். பா.ஜ.க. ஒரு வகுப்புவாதக் கட்சி-காங்கிரஸ் ஒரு மதச் சார்பற்ற ஆட்சியை அளிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் எங்களைக் கலந்து ஆலோசிக்காமல், ஒரு தலைப் பட்சமாகவே பேசி வருகிறார்கள். என்ன நடக்கிறது என்று நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். செய்தியாளர்:- காங்கிரஸ் தலைமையிலான மாற்று அரசு மத்தியிலே ஆட்சிக்கு வந்து, சோனியா காந்தி பிரதமரானால் தி.மு.க.
ஆதரவு அளிக்குமா? நான்:- எந்த அரசாக இருந்தாலும், அது வாஜ்பாய் தலைமையிலோ-சில தரப்பினர் உருவாக்க முயற்சிப்பதைப் போல சோனியா காந்தி தலைமையிலோ - அல்லது வேறு ஒரு அரசோ-எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், மீண்டும் புதிதாகத் தேர்தல் நடத்தத் தேவை ஏற்படாமல், ஐந்தாண்டுகள் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. கலைஞர் எனது கோரிக்கையை ஏற்று, சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா- காமராஜர் பெயர்களைச் சூட்டினார், வி.பி.சிங் செய்தியாளர்:- பா.ஜ.க.
அரசில் சேருவது பற்றியோ, அதை ஆதரிப்பது பற்றியோ தி.மு.கழகம் பரிசீலனை செய்யுமா? நான்:-இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் இந்தியர்கள்தான். அவர்களுக்கிடையே எந்த பேதமும் இருக்கக் கூடாது என்று நம்புகிற மதச் சார்பற்ற நிலையை ஏற்றுக் கொள்கிற எவரையும் நான் ஆதரிப்பேன். அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றுகூட, அயோத்திப் பிரச்சினையிலே அவர்களுடைய நிலை மாறாமலே உள்ளது.
அங்கு ராமர் கோயில் கட்டும் பிரச்சினை உள்ளது. பா.ஜ.க.தான் ஒரு மதச்சார்பற்ற அமைப்பு என்பதை நிரூபிக்கவேண்டும். அது அவ்வாறு நிரூபித்தால்- அத்தகைய மாற்றம் ஏற்பட்டால்- அதன் பிறகு இந்தியாவின் நலனுக்காக-ஜனநாயகத்தின் நலனுக்காக அவர்களை நாங்கள் ஆதரிப்போம். செய்தியாளர்:- மத்தியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நிலைத்த தன்மை என்ற அடிப்படையில் பா.ஜ.க.அரசை ஆதரிக்க தி.மு.க. தயாராக உள்ளதா? நான்:-நிலைத்த தன்மை பற்றிய கேள்வியில் மதச் சார்ப
ின்மை என்ற பிரச்சினையும் அடங்கியுள்ளது. அதை மறந்து விடக்கூடாது. அரசின் நிலைத்த தன்மை மட்டுமே முக்கியமானதல்ல-மிகவும் முக்கியமானது எதுவென்றால் நாட்டின் நிலைத்த தன்மைதான். நாட்டின் நிலைத்த தன்மைக்கு மதச் சார்பின்மைதான் அடித்தளம் அமைக்கிறது. செய்தியாளர்:- வேறு சொற்களில் கூறுவதானால் நீங்கள் ஆதரவு அளிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டுமானால்-பா.ஜ.க. சிறுபான்மை சமூகத்தினருக்கு உத்தரவாதங்களும், சிறப்புச் சலுகைகளும் அளிக்க வேண்டும்-அது அவர்களைப் பாதுகாக்க வேண்டும்-மதச்சார்பின்மையை அதன் கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்-என்கிறீர்களா?
நான்:-மதச் சார்பின்மை தொடர்பாக பா.ஜ.க.தன்னுடைய அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். பா.ஜ.க. ஒரு மதச்சார்பற்ற அமைப்புதான் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர்கள் செயல்பட வேண்டும். அதன் பிறகுதான் ஆதரவு அளிப்பது பற்றி பரிசீலிக்க தி.மு.க.வால் இயலும். செய்தியாளர்:-பா.ஜ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையிலான ரகசிய உடன்பாட்டின் விளைவாக-உங்களுக்கு உதவி செய்வதற்காகவே பிரதமர் காவிரி உடன்பாட்டைக் கொண்டு வந்தார் என்று அ.தி.மு.க.
குற்றம் சாட்டுகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன? நான்:-இது முற்றிலும் தவறானது. கேரள முதலமைச்சர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். கர்நாடக முதலமைச்சர் ஜனதாதளத்தைச் சேர்ந்தவர். தி.மு.க.சார்பில் இரண்டு முதலமைச்சர்கள்-நானும் பாண்டிச்சேரி முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமனும் இடம் பெற்றிருந்தோம். எல்லோரும் பா.ஜ.க.விலிருந்து வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். கலைஞர் என்னுடைய வேண்டுகோளையேற்று.
மத்தியப் பணியிலிருந்த கே.ஏ.நம்பியாரை தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளராக நியமித்தார் நரசிம்மராவ் செய்தியாளர்:- மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சோனியா காந்தியை "ஒரு வெளிநாட்டுக்காரர்- அவர் நாட்டை ஆளக் கூடாது" என்று கூறிய ஜெயலலிதா, இப்போது அவருடனும் காங்கிரஸ் கட்சியுடனும் உறவு ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருகிறார்.
இந்த மாற்றம் பற்றி என்ன கருதுகிறீர்கள்? நான்:-இது பற்றி சோனியா காந்திதான் பதில் சொல்ல வேண்டும். செய்தியாளர்:- கடந்த மக்களவைத் தேர்தலில் உங்கள் கூட்டணி மோசமாகத் தோல்வி அடைந்தது. கடைசி நேரத்தில் கூட்டணியில் சேர்க்கப்படாத கட்சிகளை அடுத்த தேர்தலில் சேர்த்துக் கொள்ள நீங்கள் கருதியிருக்கிறீர்களா? நான்:-ஆமாம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் போன்ற கட்சிகளைச் சேர்த்துக் கொள்ளாதது தவறு என்று நாங்கள் உணர்ந்து கொண்டோம்.
அடுத்த தேர்தலில் தமிழ்நாடு அளவில் மட்டுமாவது, கூட்டணியில் ஒரு சில கட்சிகளை சேர்த்துக் கொள்ள நாங்கள் திட்டமிட்டுள்ளோம். செய்தியாளர்:- உங்கள் அரசைக் கலைப்பதை வை.கோ. எதிர்ப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? நான்:-தி.மு.க.வைப்போலவே வை.கோ.வும் அரசியல் சட்டத்தை 356ஆவது பிரிவைப் பயன்படுத்துவதை எதிர்க்கிறார். செய்தியாளர்:-பொதுப் பிரச்சினைகளிலோ சட்டத்தைஅல்லது திராவிட இயக்கப் பிரச்சினைகளிலோ ம.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா?
நான்:-பொதுப் பிரச்சினைகளிலோ-திராவிட இயக்கத்திற்குப் பொதுவான பிரச்சினைகளிலோ ஒன்றுபடுவதில் தவறு எதுவும் இல்லை. செய்தியாளர்:- ஐக்கிய முன்னணி மற்றும் பா.ஜ.க.கூட்டணி அரசுகளை நீங்கள் எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்? நான்:-ஐக்கிய முன்னணியிலும் சில பிரச்சினைகள் இருந்தன-எனினும் இதைப் போல் அல்ல. ஆனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் குடியரசுத் தலைவருக்கு ஆதரவுக் கடிதம் அனுப்புவதிலிருந்து, ஒவ்வொரு நாளும் ஜீவ மரணப் போராட்டமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் வாஜ்பாய் என்ன-எந்த ஆட்சியாளராலும் எதையும் சாதிக்க முடியாது. செய்தியாளர்:-உங்களுடைய 75 ஆண்டு கால நீண்ட பொது வாழ்வில் எத்தனையோ அரசியல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். சரித்திரத்தின் பக்கங்களைப் பின்னோக்கிப் பார்த்து, சில சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று நீங்கள் இப்போது கருதுகிறீர்களா? நான்:-மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களை தி.மு.க.விலிருந்து நீக்குவது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்த போதே, அன்றைய தி.மு.க.பொதுச் செயலாளர் நாவலர் அவர்கள் அவசரப்பட்டு, பத்திரிகையாளர்களிடம் எம்.ஜி.ஆர்.
நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்குப் பத்திரிகை நிருபர்களை மீண்டும் அழைக்க நானும், மற்றவர்களும் முயற்சித்தபோது, காலம் கடந்து விட்டது என்பதும், அதைத் தடுத்து நிறுத்த நாங்கள் முயன்றோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்-எம்.ஜி.ராமச்சந்திரனும் அறிவார். அது ஒரு தவிர்த்திருக்கக் கூடிய சம்பவம். செய்தியாளர்:- இந்திரா காந்தி யில் தொடங்கி, பிரதமர்களுடன் உங்களுடைய தொடர்பு பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?
கலைஞர் என்னுடைய அழைப்பையேற்று, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, மதுரையில் நடந்த கூட்டத்திற்கு வருகை தந்தார், வாஜ்பாய் நான்:- இந்திரா காந்தி - "அரசியலில் நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் நான் மிகவும் உறுதியாக இருப்பவன்" என்பது அவர் என்னைப் பற்றி கொண்டிருந்த கருத்து. அவர் என்மீதும் என் குடும்பத்தினர் மீதும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். நான் டெல்லி செல்லும் போதெல்லாம் அவர் என்னையும், என் குடும்பத்தாரையும், உணவு உண்ண அவர் இல்லத்திற்கு அழைப்பார்.
அவரது இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி (அப்போது ராஜீவ் காந்தி அரசியலில் ஈடுபடாததால் அவரை நான் நன்றாக அறியவில்லை) - டெல்லியில் நான் தங்கியிருந்த மாறன் இல்லத்திற்கு ஆலோசனைக்காக அடிக்கடி வருவார். அவர் ஒரு அன்பார்ந்த நண்பராக இருந்தார். நான் இந்திராகாந்தியுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு கொண்டிருந்தேன் என்பதும் சில வேளைகளில் மோதல் ஏற்பட்டதும் உண்டு என்பதும் எல்லோரும் அறிந்ததே. மொரார்ஜி தேசாய் - கடுமையான, நேர்மையான மனிதர்.
அவருக்குக் கூட்டணித் தலைவர்களால் சிரமங்கள் ஏற்பட்டதில்லை. ஆனால் அவருடைய அமைச்சர்களாலேயே சிரமங்கள் ஏற்பட்டு ஆட்சியை இழந்தார். 1973ஆம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது பற்றி ஆராய கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அலகாபாத்தில் நடத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் ராஜ் நாராயணனின் அழைப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகு மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வி.பி.சிங்கால் அமல்படுத்தப்பட்டது.
சரண்சிங்: - நீண்ட காலம் ஆட்சியில் இல்லை. எனவே அவர் எவ்வாறு பிரதமராகச் செயல்பட்டார் என்பதை என்னால் கூற முடியவில்லை. சரண்சிங் விவசாயிகளின் பிரச்சினைகளை வெகுவாக வெளிப்படுத்தினார். சந்திரசேகர் -இவரும் குறைந்த காலமே ஆட்சியில் இருந்த போதிலும்-எங்கள் அரசைக் கலைத்தார். ஆனால், வேறு வகையில் அவருடன் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ராஜீவ் காந்தி -இவர் என்னை அன்புடன் நடத்தினார். 1989ஆம் ஆண்டு எனக்கு எதிராக அவர் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதிலும், நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே, மரியாதை நிமித்தம் அவரைச் சந்திப்பதற்காக நான் டெல்லி சென்றேன்.
அப்போது அவர் மிகுந்த அன்புடன் நடத்தி, - டெல்லியிலே மேலும் சில நாட்கள் தங்கும்படிக் கூறினார். இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்கும்படி ராஜீவ் என்னைக் கேட்டுக் கொண்டார். பல்வேறு காரணங்களால் அது வெற்றி பெறா விட்டாலும் அது தொடர்பான அமைச்சர்களையும், அதிகாரிகளையும் என்னுடன் விவாதிக்கும்படி அவர் கூறினார். பிரபாகரனைச் சந்திக்க வை.கோ. ரகசியமாக இலங்கைக்குச் சென்றது பற்றி நான் அவரிடம் வருத்தம் தெரிவித்த போது, அவர் எத்தகைய பெருந்தன்மையான மனம் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், "அதை, நான் ஒரு பெரிய பிரச்சினையாக்கப் போவதில்லை-வை.கோ.
பத்திரமாக வந்து சேரவேண்டும்!" என்றும் கவலை தெரிவித்தார். பின்னர் ஜெயலலிதாவின் தூண்டுதலால், சந்திரசேகர் மூலம் எங்கள் அரசு ஜனநாயக விரோதமான முறையில் கலைக்கப்பட்டது. அப்போதுகூட இதுதான் அரசியல் என்று நான் கருதினேனே தவிர, ராஜீவ் மீது வருத்தம் கொள்ளவில்லை. வி.பி.சிங் -என் சகோதரர் போன்றவர். நாங்கள் ஒரு போதும் பிரதமர்-முதல்வர் என்ற நிலையில், அல்லது ஒரு கலைஞர் முன்னணியின் தலைவர்-அதன் தோழமைக் கட்சித் தலைவர் என்ற நிலையில் பழகியதில்லை.
ஒருவரை ஒருவர் நண்பராக மதித்தோம். காவிரிப் பிரச்சினையில், என் கோரிக்கையை ஏற்று, அவர் ஒரு நடுவர் மன்றத்தை அமைத்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் தமிழ்நாட்டிற்காக நிறையப் பணிகளை ஆற்றினார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய டெர்மினல்களுக்கு அண்ணா மற்றும் காமராஜர் பெயர்களைச் சூட்ட வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையை உடனடியாக ஏற்று, மகிழ்ச்சியோடு அறிவித்தார். பி.வி.நரசிம்மராவ் - இந்திராகாந்தி அமைச்சரவையில் ஏற்கனவே அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அவர் நல்ல நெருங்கிய நண்பராக இருந்தார்.
நான் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் பதவியிலிருந்து விலகிய அவர், பாதுகாப்புத் துறைச் செயலாளராக இருந்த கே.ஏ.நம்பியாரை தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக நியமிக்க அனுமதிக்க வேண்டும்- என்ற என்னுடைய கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டார். எப்போதும் நரசிம்மராவ் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். எச்.டி.தேவகவுடா - அவர் நீண்ட காலம் பிரதமராக இல்லாவிட்டாலும், ஒரு நல்ல நண்பர். ஐ.கே.குஜ்ரால் -அவரும் சில நாட்கள்தான் பிரதமராக இருந்தார்.
என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பெரிதும் முயற்சித்தவர். ஏ.பி.வாஜ்பாய் -அவரை நான் நெருக்கடி நிலை காலத்திலிருந்து நன்றாக அறிவேன். நெருக்கடி நிலையால் ஏற்பட்ட பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக டெல்லியில் இரா.செழியன் வீட்டில் நடந்த கூட்டத்தில் நான் வாஜ்பாயுடன் கலந்து கொண்டேன். பின்னர் அவர் என்னுடைய அழைப்பையேற்று தமிழ் ஈழ ஆதரவாளர்கள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரைக்கு வருகை தந்தார்.
நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள். தனிப்பட்ட முறையில், அரசியல்-கலாச்சாரம் மற்றும் கௌரவத்தின் அடிப்படையிலான உறவுகளைக் கொண்டிருக்கிறோம். வாஜ்பாயும், அத்வானியும் மிகவும் நல்ல மனிதர்கள்-நான் அவர்களை நேசிக்கிறேன்-ஆனால் அவர்களுடைய கட்சியை அல்ல. இதை நான் முன்னரே கூட கூறியிருக்கிறேன். நட்பு வேறு-அரசியல் வேறு. இன்னமும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். - என்னுடைய இந்த நீண்ட பேட்டி அப்போதுள்ள அரசியல் நிலைமைகளுக்கெல்லாம் ஒரு விளக்கமாக அமைந்தது.
★ ★ ★ பீகார் ஆட்சிக் கலைப்புக்கு முன்னதாகவே, 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைத்திருக்க வேண்டுமென்று ஜெயலலிதா அவசர, அவசரமாக ஓர் அறிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்து நான் ஓர் அறிக்கை விடுத்தேன். அதில்- "1992 இல் பொதுக் குழுவைக் கூட்டி, "356ஆவது பிரிவைப் பயன்படுத்துவோம்"-என மத்திய அரசு மிரட்டுவது கூட்டாட்சி முறைக்கு ஒவ்வாது-இது போன்ற அத்துமீறல்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கே ஊறு தேடும்" என்று கடுமையாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
அதை ஒரு கனவு போல் மறந்துவிட்டு, தி.மு.க.அரசைக் கலைப்பதற்கு மத்திய பா.ஜ.க.அரசை நோக்கி மிரட்டல் கணைகளைப் பொழியத் தொடங்கியிருக்கிறார். "தமிழக அரசைக் கலைப்பதற்கு அதிக காரணங்கள் இருக்கின்றன" என்கிறார், ஜெயலலிதா. அப்படி எந்தவொரு காரணமும் இல்லை. ஜெயலலிதாவுக்கு உள்ள ஒரே காரணம். தி.மு.க.அரசைக் கலைத்து விட்டால், அவர் மீதுள்ள பல கோடி ரூபாய் ஊழல் கொள்ளைகளுக்கான வழக்குகளும் இளைத்துவிடும் என்பதுதான்" என்று கூறினேன்.
இவ்வாறு மத்திய ஆட்சியிலே பங்கேற்ற அ.தி.மு.க. ஆட்சி அமைத்த கட்சியான பா.ஜ.க.வுடன் முரண்பட்டு நின்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் தோழமை கலைஞர் வைத்திருந்த ம.தி.மு.க. போன்ற கட்சிகளோடும் உறவாக இல்லை. தான் விடுத்த அறிக்கை ஒன்றில், "ம.தி.மு.க., ஐந்து ஆண்டுக் குழந்தை" என்று கிண்டல் செய்திருந்தார்.
மேலும் 98ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளினையொட்டி, ம.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொள்வதாக ஒப்புதல் அளித்த ஜெயலலிதா, கலந்து கொள்ளவில்லை. அதைப்பற்றி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ- 8.4.1998 அன்று, தான் டெல்லியில் ஜெயலலிதாவை சந்தித்தபோது, பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும். ஜெயலலிதா வருவதாக ஒப்புக்கொண்டதாகவும், மற்ற தோழமைக் கட்சித் தலைவர்களையும் அழைக்க இருப்பதாகக் கூறியதாகவும் சொன்னார்.
விழாவிற்கு வருவதற்கு ஜெயலலிதாவும் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, 15.8.2008 அன்று பேசியபோது, பேரணிக்கு வருவதற்கில்லை என்று கூறியதாகவும்-வாஜ்பாய், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் கூடிய 3000 அழைப்பிதழ்களை ஏற்கனவே தயார் செய்து விட்டதாகவும்-எனவே முடிவினைப் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ம.தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்த நாள் விழாப் பேரணியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களை முதலமைச்சர் என்ற முறையில் வரவேற்க நான் மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றபோது-பிரதமரை வரவேற்க வந்த வை.கோ.,ஐந்தாண்டு காலத்திற்குப் பிறகு என்னை நேரில் சந்திக்க நேரிட்டது.
செய்தியாளர்களும், புகைப்படக்காரர்களும் அதற்குப் பெரிதும் முக்கியத்துவம் தந்து அந்தச் செய்தியினை வெளியிட்டனர். நான் வை.கோ.வைச் சந்தித்த நேரத்தில் பக்கத்தில் இருந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களும் அதனை ஆச்சரியத்தோடு பார்த்த நேரத்தில்- "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் சந்திக்கிறோம்" என்று பிரதமரிடம் நான் கூற- அவரும் "ஓ, அப்படியா?
மகிழ்ச்சி!" என்று புன்னகைத்தார். பின்னர் பிரதமரை வழியனுப்ப விமான நிலையத்திற்குச் சென்றபோதும் வை.கோ. என்னைச் சந்தித்தார். சென்னை வந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்தித்தபோது, ஜெயலலிதா நடந்து கொள்ளும் முறை பற்றி யெல்லாம் பல கேள்விகளைக் கேட்ட நேரத்தில், பிரதமர் அவற்றுக்கெல்லாம் பதில் அளிக்காமல், புன்னகையையே பதிலாகத் தந்தார். "அ.தி.மு.க. உறுதியான-நம்பத் தகுந்த கூட்டாளியா என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும்" என்று கூறிய பிரதமர், "மத்திய ஆட்சிக்கு தி.மு.க.
போன்ற கட்சிகள் ஆதரவு தர முன்வந்தால், அதை நாங்கள் ஏற்போம்-ஆதரவு வேண்டாம் என்று கூற மாட்டோம்-ஆதரவுபற்றி தி.மு.க.வுடன் நாங்கள் இதுவரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை" என்று கூறினார். மதச் சார்பற்ற கட்சி என்று பா.ஜ.க.நிரூபித்தால், அதற்கு ஆதரவு தரத்தயார்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அவரை நான் சந்தித்தபோது அது குறித்துக்கேட்டேன். "பா.ஜ.க.ஒரு மதச் சார்பற்ற கட்சிதான்" என்று வாஜ்பாய் செய்தியாளர்களிடமும
் விளக்கமளித்தார். ★ ★ ★ சென்னையில் 19.9.1998 அன்று நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பேரணியில் கலந்து கொள்ள வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் , செயலாளர் டி.ராஜா , தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு, ஏ.எம்.கோபு ஆகியோர் அதே நாளில் என்னை இல்லத்தில் வந்து சந்தித்தனர். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சென்னையில் கலைஞர் என்னைச் சந்தித்து, மூன்றாவது அணி ஒன்றினை அகில இந்திய அளவில் அமைப்பது குறித்துப் பேசினார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் பேச்சும் அமைந்தது. பேச்சின் தொடர்ச்சியாக மீண்டும் டெல்லியில் சந்தித்துப் பேசுவதென்று முடிவெடுத்தோம். இந்த அணியில் சேருவது குறித்து மூப்பனார், லல்லு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் ஆகியோருடன் தொடர்ந்து பேசுவதென்றும் முடிவு செய்தோம்.
