நெஞ்சுக்கு நீதி
"எதையும் வெல்லும் எழுத்து · 351 / 391
கலைஞர் 39. "எதையும் வெல்லும் எழுத்து வல்லமை!" தமிழினமே! கலைஞரை உன் தலைமகனை - என் அன்பு நண்பனை - வாழ்த்துங்கள்! உங்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன்" என்று பாராட்டினார், சிவாஜி கணேசன். என்னுடைய அன்புப் பெயர்த்தியும்-மு.க.அழகிரியின் இளைய மகளுமான அஞ்சுகச்செல்விக்கும் மதுரை டாக்டர் ஆர். இரத்தினவேலு அவர்களின் இரண்டாவது மகன் விவேக்கிற்கும் 9.9.1998 அன்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மணவிழா, கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையிலே நடைபெற்றது.
கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பி முரசொலி மாறன் வரவேற்புரையாற்றினார். மணமக்களை வாழ்த்தி த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நாஞ்சிலார் , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, அப்துல் சமது, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அப்துல் லத்தீப், அய்யண்ணன் அம்பலம், பேராயர் எஸ்றா சற்குணம், கோவை செழியன் , அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் தீரன், திண்டிவனம் ராமமூர்த்தி, இயக்குநர் பாரதிராஜா, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், எஸ்.திருநாவுக்கரசர், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தியாகி செங்கல்வராயன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜி.ஏ.வடிவேலு, புதுவை முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் , பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் இல.கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக நான் நன்றி கூறினேன். மணமக்களு க் கு க் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் , முன்னாள் பிரதமர் வி.பி. சிங் , முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் , முன்னாள் பிரதமர் தேவகவுடா, மராட்டிய மாநில ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ஜஸ்வந்த்சிங் , மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். மணவிழாவில் முன்னாள் ஆளுநர் சி.சுப்பிரமணியம், தமிழக தலைவர் வீரமணி, தனுஷ்கோடி ஆதித்தன், கருமுத்து கண்ணன், ஆனூர் ஜெகதீசன், நடிகர் பார்த்திபன், நடிகர் நெப்போலியன், "துக்ளக்" ஆசிரியர் சோ, நடிகர் நாகேஷ், நடிகர் விஜயகுமார், சுதர்சனம் எம்.எல்.ஏ.,ஜி.பழனிச்சாமி எம்.எல்.ஏ., நடிகர் தியாகு, திரைப்படத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் - மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
முதல்நாள் மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் பாத்திமா பீவி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் எம்.பி, கோபண்ணா, ஆர்.சொக்கர், தெய்வநாயகம், அழகர் ராஜா, ப.ரங்கநாதன், டாக்டர் ராமன், பொள்ளாச்சி மகாலிங்கம், நல்லி குப்புசாமி, எம்.ஜி.முத்து, ஜே.கே.கே.சுந்தரம், நீதியரசர் கோகுல கிருஷ்ணன், க.ராஜாராம், ப.உ.சண்முகம், வி.சி.குழந்தை சாமி, வின்சென்ட் சின்னதுரை, சிலம்பொலி செல்லப்பன்-மற்றும் கலை உலகத்தைச் சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமலா அம்மாள்,ஏ.வி.எம். சரவணன், ஏ.வி.எம்.
ராஜேஸ்வரி, ஏ.வி.எம்.குமரன், சிந்தாமணி முருகேசன், எஸ்.பி.முத்துராமன், சந்திரசேகர், ஐ.வி.சசி, சங்கர் கணேஷ், லியாகத் அலிகான், ஜெய்சங்கர், சிவகுமார், விஜயகாந்த், ஜெயராமன், அரவிந்த்சாமி, கலைஞர் விஜய், அருண் குமார் மற்றும் பலர் வந்திருந்து மண மக்களை வாழ்த்தினர். கலைஞரை, மக்களின் இதய சிம்மாசனத்தில் உயர்த்தி உட்கார வைத்துப் போற்றச் செய்தது, அவரது எழுத்தாற்றல்தான் என்று எழுதியது "தினமணி" ★ ★ ★ கழகத்தின் பொன் விழாவினையொட்டி, தொடக்க சிறப்பு மாநாட்டினை நெல்லையிலே 1998 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17,18 ஆகிய நாட்களில் நடத்துவதென்று முடிவெடுத்து- அப்போது நெல்லை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த இன்றைய சட்டப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பனை வரவேற்புக் குழுத் தலைவராகவும்-அமைப்புச் செயலாளராக இருந்த பொன்.
முத்துராமலிங்கத்தை மாநாட்டுப் பொறுப்பாளருமாக அறிவிக்கப்பட்டனர். மாநாட்டுப் பணிகளை முதற்கட்டமாகப் பார்வையிட பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோர் நெல்லை சென்று வந்தனர். அந்த நெல்லை மாவட்டச் சிறப்பு மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்றிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, 1949ஆம் ஆண்டு, செப்டம்பர் 17இல் கழகம் தொடங்கப்- எனது பெயர்த்தியும் - மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி - விவேக் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
பட்டு-அதற்கடுத்த அக்டோபர் மாதம் 17 ஆம் நாள்-தமிழகம் முழுவதும் கழகக் கிளைகளின் துவக்க விழாக்கள் நடத்தப்பட்ட போது, அண்ணா அவர்கள் என்னை ஒன்றுபட்டிருந்த நெல்லை மாவட்டத்திற்குச் சென்று, 17.10.1949 அன்று தூத்துக் குடியிலும், 18.10.1949 அன்று கோவில்பட்டியிலும் கழகக் கிளைகளைத் தொடங்க ஆணையிட்டது தான் ஞாபகத்திற்கு வந்தது. அதே நெல்லைச் சீமையில்-பாளையங்கோட்டை தனிமைச் சிறைச்சாலையின் கதவுகள் என்னை இழுத்துச் சாத்திக் கொண்டு " தன்னை வெல்வான், தரணியை வெல்வான் " எனும் அறிவுரை கூறின!
அந்தக் கதவுகளின் அனுமதி பெற்று என்னைக் காண வந்த பேரறிஞர் அண்ணாவின் கண்ணீரையும்-அதே நாள் அந்த நகரில் அவர் பேசிய பொதுக் கூட்டத்தில்- " என் தம்பி கருணாநிதி அடைப்பட்டிருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை எனக்கு யாத்திரை ஸ்தலம் " என்று என் இதயத்தில் தெளித்தாரே-அந்தப் பன்னீரையும் ஒருக்கணம் எண்ணினாலே அந்த அன்புத் தலைவனின் ஆறுதலும், அரவணைப்பும் கிடைப்பதற்குக் காரணமாக இருந்த அந்த மண்ணை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளத் துடிக்கத்தானே செய்யும் என் நெஞ்சம்!
★ ★ ★ அண்ணா அவர்கள் தன் கைப்பட எனக்கொரு கடிதத்தை 1951ஆம் ஆண்டு எழுதினார்கள். மூதறிஞர் ராஜாஜி கலைஞர் அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது தஞ்சாவூர் வந்த நேரத்தில் கழகத்தின் தீர்மானப்படி அறவழியில் கறுப்புக்கொடி காட்டுவதற்கு நாங்கள் முனைந்து முற்பட்டபோதுதான், அந்த அறப்போர் எப்படி நடைபெற வேண்டுமெனக் குறிப்பிட்டு அண்ணா அவர்கள், "அன்புள்ள தம்பி" என விளித்து அந்தக் கடிதத்தை எனக்கு எழுதினார்.
அந்தக் கடிதத்தை என் நண்பன் திருவாரூர் தென்னன், நீண்ட நாள் பாதுகாப்பாக வைத்திருந்து, பின்னர் ஒரு வார இதழுக்கு அந்தக் கடிதத்தைக் கொடுத்து - அந்த ஏடு அந்தக் கடிதத்தை அப்படியே அண்ணாவின் கையெழுத்தோடு வெளியிட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் வாசகங்களை ஏற்கனவே ஒருமுறை "முரசொலி"யிலே எழுதியிருக்கிறேன் என்ற போதிலும்- இந்தத் தொடரில் அந்த வாசகங்கள் இடம்பெறுவது பொருத்தம் தானே? அன்புள்ள கம்பி, தோழர் என்.எஸ்.இளங்கோவும் , நீயும் தஞ்சை மாவட்டத்திலே தக்க ஏற்பாடுகள் செய்து வருவது கண்டு நம்பிக்கையும்.
மகிழ்ச்சியுமடைகிறேன். திருவையாறு நிகழ்ச்சியின்போது கருப்புக்கொடி காட்டுவதை விட, அதற்காக ஆச்சாரியார் செல்கிறபோது பள்ளியக்கிரகாரத்திலோ அல்லது வேறு தக்க இடத்திலோ கருப்புக்கொடி காட்டுவதுதான் சிறந்த முறை. நெல்லை மாவட்டம், பொன்னாக்குடியில் சமத்துவபுரத்தைத் திறந்து வைத்தேன். நெல்லை பாளையங்கோட்டையில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்தேன். அருகே, முரசொலி மாறன் ஆலடி அருணா, ஆர்வம் போதுமான அளவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு-கட்டுப்பாடாகவும், கண்ணியம் கெடாத முறையிலும், காரியத்தை நடத்த வேண்டுகிறேன்.
தஞ்சை மாவட்டம், அடித்து அடித்துப் பழகிப் போன போலீஸ்படை இருக்கும் இடம்-தூண்டிவிடும் பார்ப்பனத் தலைவர்கள் வாழும் இடம்-காங்கிரசிடம் புதிய மோகம் கொண்டுள்ள மிட்டா மிராசுகள் உள்ள மாவட்டம்-எனவே, அங்கு அடக்குமுறை பல உருவில் வெளிப்படக்கூடும். நிலைமையை நன்கு அறிந்து நடந்து கொள்ள வேண்டுகிறேன். ஏதாவது ஓர் இடத்தில் மட்டும் கருப்புக்கொடி காட்டினால் போதும். போலீஸ் பரேடின் போது வேண்டாம். விழாப் பந்தலுக்கருகிலேயும் வேண்டாம்.
"திரும்பிப்போ" என்பது தவிர வேறு ஆபாசக் கூச்சலிட யாரையும் அனுமதிக்காதீர்கள். பலாத்காரம் துளியும் தலைகாட்டக்கூடாது. தோழர்களிடம் இதைக் கண்டிப்பாகக் கூறவும், முன்கூட்டியே கைது செய்தால் பரவாயில்லை. பொறுப்பான காரியம்-இதைத் தக்க விதத்திலே நடத்தித் தருவதற்கு ஏற்ற ஆற்றலும், பண்பும் உள்ளவர்கள் எனது கலைஞர் தம்பிமார்கள் என்ற பூரிப்பும் நம்பிக்கையும் எனக்கு நிரம்ப நிரம்ப! உடனுக்குடன் தகவல் கொடுங்கள்!
26ஆம் தேதி நான் திருச்சியில் இருக்கிறேன். தகவல் அங்கும், சென்னை " மாலை மணி "க்கும் தரவும் அன்பன், அண்ணாதுரை -இவ்வாறு எனக்குப் பாசத்தோடும் பற்றோடும், என்னுடைய 27ஆம் வயதில் கடிதம் எழுதிய அண்ணனுக்கு, 1998ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 அன்று 90ஆவது பிறந்தநாள். ★ ★ ★ அண்ணாவின் 90ஆவது பிறந்த நாளினையொட்டி, பத்தாண்டு காலம் தண்டனை முடிந்த 109 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட கழக அரசின் சார்பில் முதல்வர் என்ற முறையில் ஆணை பிறப்பித்தேன்.
தி.மு.கழகம் ஆட்சியிலே எப்போதெல்லாம் இருக்கிறதோ- அப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஆயுள் கைதிகளை இவ்வாறு விடுதலை செய்து கொண்டிருக்கிறது. ஏன், இந்த ஆண்டு-அண்ணா அவர்களின் நூற்றாண்டு என்பதால், பத்தாண்டு காலம் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகள் என்பதற்குப் பதிலாக-ஏழு ஆண்டு காலம் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்திட ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன் காரணமாக, 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தன்னுடைய பிறந்த நாளையொட்டியே சிறைக் கைதிகளை விடுதலை செய்த கொடுமையும் இந்த நாட்டிலே உண்டு! அப்படிப்பட்ட அவர் இந்த ஆண்டு அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, சிறைக் கைதிகள் விடுதலை நெல்லை மாநாட்டில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பேரணி 16 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. செய்யப்பட்டதற்கு-யாரோ ஓரிரு தி.மு.க.வினரை விடுதலை செய்வதற்காகத்தான் பத்தாண்டு காலம் சிறைத் தண்டனை என்பதை ஏழு ஆண்டுகள் என்று குறைத்ததாக அறிக்கை விடுத்தார்கள்.
அரசின் சார்பில் அதற்கான விளக்கமும் தரப்பட்டது. ★ ★ ★ அறிஞர் அண்ணாவின் 90ஆவது பிறந்த நாளையொட்டி, 15.9.1998 அன்று வள்ளுவர் கோட்ட முகப்பிலே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன். பொதுச்செயலாளர் பேராசிரியரும், மற்றும் கழக முன்னணியினரும் என்னுடன் வந்திருந்தார்கள். வழக்கம் போல் தொண்டர் அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சிறப்பாகப் பணியாற்றிய தொண்டர் அணி அமைப்பாளர்களுக்கு பதக்கங்களை அளித்தேன்.
பின்னர் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து வணங்கினோம். அந்த ஆண்டு முப்பெரும் விழாவினையொட்டி வழங்கப்படும் பெரியார் விருது பூவாளூர் பி.சின்னத் துரைக்கும் - அண்ணா விருது திரு.வைகுண்டம் செகவீர ராசேந்திரனுக்கும் -கலைஞர் விருது கோவை மணியனுக்கும் கலைஞர் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. கடற்கரையில் அண்ணன் துயில் கொள்ளும் நினைவிடத்தில், 33 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை அன்றைய தினம் திறந்து வைத்தேன்.
நெல்லை மாநாட்டில் மீதப்பட்ட தொகை 86 லட்சம் ரூபாய் கட்சி நிதியாகத் தரப்பட்டது. சென்னையிலே அண்ணனின் 90ஆவது பிறந்தநாளை கொண்டாடி முடித்துவிட்டு, நெல்லையிலே 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த பொன்விழா மாநாட்டில் கலந்து கொள்ளப் புறப்பட்டேன். 16ஆம் தேதியே நெல்லையை அடைந்து சமத்துவபுரம் திறப்பு உட்பட அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொண்டேன். 17 ஆம் தேதியன்று, இளைஞர் அணிச் செயலாளர் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில், 25 லட்சம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொன்விழாப் பேரணி நடைபெற்றது.
நெல்லை மாநகரம் மட்டுமல்ல-நெல்லை மாவட்டமே ஸ்தம்பித்தது. மதுரையிலிருந்து நெல்லைவரை கழகத்தினரின் வாகனங்கள் ஊர்வலமாகவே வந்தடைந்தன. நெல்லைப் பேரணி குறித்து " தினமணி " நாளிதழ் " 16 மணி நேர தி.மு.க.பேரணி " என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில்- "திருநெல்வேலியில் தி.மு.க.பொன்விழா தொடக்கச் சிறப்பு மாநாட்டையொட்டிய பேரணி 16 மணி நேரம் நடந்தது. பிற்பகல் 3 மணிக்குப் பேரணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2.30 மணிக்கே பேரணி தொடங்கி விட்டது. வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய பேரணி, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு முடிவடைந்தது. பேரணி விடிய விடிய நடந்த போதிலும், தொண்டர்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். பேரணி ஓர் இடத்தைக் கடக்க 11 மணி நேரம் ஆயிற்று" என்று எழுதியிருந்தது.
இளைஞர் அணிச் செயலாளர் தம்பி ஸ்டாலின் தலைமையிலே புறப்பட்ட அந்தப் பேரணி முடிவில்லாமல் வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு மாவட்டமும் வரிசையாக ஒரு மாவட்டத்தை மற்றொரு மாவட்டம் மிஞ்சுகின்ற வகையிலே அந்த அணிவகுப்பு நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர், தியாகு ஆகியோரும் திறந்த ஜீப்பில் கலந்து கொண்டார்கள். மாலை 4 மணி அளவில் தொடங்கிய பேரணி, மறுநாள் காலை 7 மணிவரை சுமார் 15 மணி நேரம் நடைபெற்றது.
மாநாட்டின் இரண்டாம் நாள் காலையில், 75 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியினை நான் ஏற்றி வைத்தேன். இசை முரசு நாகூர் அனீபாவின் வழக்கமான இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. வரவேற்புக் குழுத் தலைவர் தம்பி ஆவுடையப்பன் வரவேற்புரையாற்றினார். என்னை மாநாட்டிற்குத் தலைமையேற்கக் கேட்டு அவர் முன்மொழிய, மூத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தம்பி வீரபாண்டி ஆறுமுகம், தம்பி கோ.சி.மணி , தம்பி பொன்.முத்துராமலிங்கம் , தம்பி என்.பெரியசாமி ஆகியோர் வழி மொழிந்தனர்.
"என் தம்பி அடைப்பட்டிருக்கும் பாளைச் சிறைதான் எனக்கு யாத்திரை ஸ்தலம்" என்று அண்ணா பேசியதை நினைவுபடுத்திய அலங்கார ஊர்தி பின்னர் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று, கழகச் சொற்பொழிவாளர்களின் உரைகள் தொடர்ந்து- பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
மாலையில் கலைஞர் கழக முன்னணியினர் சிறப்புரையாற்றிட, துணைப்பொதுச் செயலாளர் நாஞ்சிலார் , பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, முரசொலி மாறன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் நான் தலைமையுரையாற்றினேன். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாநாட்டுப் பொறுப்பாளர், அமைப்புச் செயலாளர் பொன்.முத்துராமலிங்கம் , வரவேற்புக்குழுத் தலைவர் இரா.ஆவுடையப்பன் , மாநாட்டுப் பொருளாளர் அமைச்சர் ஆலடி அருணா , மாநாட்டுச் செயலாளர்கள்.
என்.பெரியசாமி, டாக்டர் வே.ஆல்பன் மற்றும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்கள். தி.மு.கழக வரலாற்றில் நெல்லை மாநாடு முத்திரை பதிக்கும் வகையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கட்டணம் செலுத்தி சிறப்புக் கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்கு வருவது திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாத்திரமே வெற்றிகரமாக நடைபெறுகின்ற ஒன்றாகும். அந்த ஆர்வம் அந்த மாநாட்டில் மிக அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது.
கழகப் பொன்விழா சிறப்பு மாநாட்டில் வ
சூலான தொகை 146 லட்சம். அதிலே செலவுத் தொகை 60 லட்சம் போக மீதப்பட்ட தொகை 86 லட்சம் ரூபாய். 1998இல் நெல்லையில் நடைபெற்ற அந்த மாநாட்டை, 2007இல் நடைபெற்ற இளைஞர் அணியின் மாநில மாநாடுதான் வெற்றி கொண்டது என்பதைப் பின்னர் எழுதுகிறேன். நெல்லை மாநாட்டினை வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பியதும், எனது ஐம்பதாண்டு கால கலையுலகப் பணியை முன்னிட்டும்-75ஆவது வயது தொடக்கத்தை முன்னிட்டும் முறையே பொன்விழா - பவளவிழா என விழா நடத்த வேண்டுமென்றும், அதிலே நான் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கலைத்துறையினர் தேதி கேட்டு வலியுறுத்தியதால், 27.9.1998 அன்று கலந்து கொள்வதாக ஒப்புதல் தெரிவித்திருந்தேன்.
கலை உலகினர் எனக்கு நடத்திய பவள விழாவில் 110 கிலோ எடையுள்ள ரோஜா மாலையை அணிவித்தனர். அந்த விழாவினை நடத்திய கலைத்துறையினர் தேர்ந்தெடுத்து- விளம்பரங்கள் செய்து- அழைப்பிதழ்களிலும் குறிப்பிட்ட இடம்- சென்னை நேரு ஸ்டேடியம்! அதே நேரு ஸ்டேடியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் 24.2.1994இல் நடைபெற்று, அதிலே ஜெயலலிதாவே கலந்து கொண்டதைத் தொடர்ந்து, 98ஆம் ஆண்டிலும் அதே இடத்தில் எனக்கும் விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அம்மையாரால் பொறுத்துக்கொள்ள முடியுமா? உடனே நேரு ஸ்டேடியத்திலே என்னுடைய விழா நடை பெற்றால், ஸ்டேடியம் பாழாகிவிடும் என்று ஜெயலலிதா சென்னை உயர்நீதி மன்றத்தில் 14.9.1998 அன்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எந்தவொரு முடிவும் தெரியாத நிலையில், 21.9.1998 அன்று நான் விடுத்த அறிக்கையில் வழக்கு முடிவடையாத நிலையில் யாருக்கும் என்னால் தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்பதற்காக 27ஆம் தேதி நேரு ஸ்டேடிய விழாவினை ஒத்தி வைத்து, வேறொரு நாள் வேறொரு இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு கலையுலகத் தினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும்-என்மீது கலை உலகப் பெருமக்கள் கொண்டுள்ள அன்பும், பாசமும் போதுமானது என்றும்-விழாவே தேவையில்லை என்பது என் தாழ்மையான வேண்டுகோளாகும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால், பவள விழாக்குழுத் தலைவர் ஏ.வி.எம். சரவணன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி. , விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சிந்தாமணி முருகேசன் , திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலைஞர் கலையுலகப் பணியைப் பாராட்டி, எனக்கு அளிக்கப்பட்ட 52 சவரன் தங்கச் சங்கிலியைக் கழற்றவே கூடாது - என்று தடுத்தார், நடிகர் திலகம் சிவாஜி அண்ணாமலை, அபிராமி ராமநாதன் , விநியோகஸ்தர்கள் கவுன்சில் தலைவர் சுரேஷ் , தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் விஜய குமார், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் என்னை வந்து சந்தித்து- "விழா திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதே தேதியில்- அதே இடத்தில் விழா நிகழ நீங்கள் ஒப்புதல் தரவேண்டும்" என்று வலியுறுத்தினார்கள். இதற்கிடையே ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில், "நேரு ஸ்டேடியத்திலேயே விழா நடத்தத் தடையில்லை" என்று நீதியரசர் தீர்ப்பு கூறிவிட்டார்.
தீர்ப்பு வந்ததும் திரைப்பட உலகத்தினர் என்னை மீண்டும் சந்தித்து கடிதம் ஒன்றையே கைப்படக் கொடுத்தார்கள். அந்தக் கடிதத்தில்- "தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு, கலையுலகத்தார் எழுதும் கனிவான கடிதம் இது. நேற்று கலை உலகுக்கு தாங்கள் விடுத்த வேண்டுகோளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் உணர்வுகளை உடனே பகிர்ந்து கொள்ளவும், நீதிமன்றத் தீர்ப்பு கலை உலகுக்குச் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களை நேற்று சந்தித்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு எந்த நிபந்தனையுமின்றி, கலையுலகுக்குச் சாதகமாகக் கிட்டியிருக்கிறது." பவள விழாக் குழுவினர் எனக்கு வழங்கிய 5 அடி உயரமுள்ள எனது உருவ வெள்ளிச் சிலை "தங்கள் அறிக்கையில் யாருக்கும் என்னால் தர்ம சங்கடம் ஏற்படக்கூடாது என்று சொன்ன தங்கள் நல்லுள்ளத்திற்கு நன்றி சொல்கிறோம். ஆனால், அதே வேளையில் இந்த விழா நிகழ்ந்தாக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தங்களின் வேண்டுகோளின்படி நேற்று முதல் எங்கள் பணிகளை நிறுத்தி வைத்திருந்தோம். நீதி மன்றத்தின் சாதகமான தீர்ப்புக்குப் பிறகு, எங்கள் பணிகள் மீண்டும் தொடர, தங்களின் அன்பான ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். பவளவிழா காணும் தாங்கள், தங்கள் வாழ்வின் அறுபது ஆண்டுகளைப் பொதுப் பணிக்கும் கலைப் பணிக்கும் அர்ப்பணித்திருக்கிறீர்கள். கலையுலகத்தின் எல்லாத் துறைகளும் ஒன்றிணைந்து தங்களுக்கு நன்றி பாராட்டுவதே இந்த விழாவின் லட்சியம்."
"எனவே தடைகள் தாண்டி வந்திருக்கும் எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதே செப்டம்பர் 27ஆம் நாள்-அதே நேரு விளையாட்டரங்கில் தங்களுக்கான எங்கள் விழா நிகழத் தாங்கள் மீண்டும் ஒப்புதல் தர வேண்டும். தாங்கள் கலந்து கொண்டு எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நெகிழ்ந்த நெஞ்சோடு கேட்கிறோம். கலை உலகத்தின் மொத்தக் குரலாக இதைக் கருத வேண்டும் என்றும் வேண்டுகிறோம். நிச்சயம் ஒப்புதல் தருவீர்கள் என்று கனத்த நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்" என்று எழுதி இருந்தார்கள்.
இந்தக் கடிதத்திற்கு என்னுடைய ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பாகவே, அவர்களே செய்தியாளர்களை அழைத்து, 27ஆம் கலைஞர் தேதி திட்டமிட்டபடி நேரு அரங்கில் விழா நடைபெறும் என்றும் தெரிவித்து விட்டார்கள். கர்நாடக முதல்வர் ஜே.எச்.படேல் எனக்கு அளித்த சந்தனச் சிலை. அருகே புதுச்சேரி முதல்வர் ஜானகிராமன். அவ்வாறே 27.9.1998 அன்று, சென்னை நேரு, அரங்கத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில் எனது பவளவிழாவும், 52 ஆண்டு கலைப்பணி பாராட்டு விழாவும் நடைபெற்றது.
மாலை 4.15 மணி முதல் 6 மணி வரை இசை அமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் குழுவினரின் இசையில் பாடகர்கள் பாடல்களைப் பாடினார்கள். மாலை 5 மணி அளவில்தான் நான் விழா மேடைக்குச் சென்றேன். என்னை விஜயகாந்த், சரத்குமார், பாரதிராஜா மற்றும் திரை உலகினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து, பல நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.
நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, இசைஞானி அந்த நிகழ்ச்சிக்காகவே எனக்காகவே இசை அமைத்த "தமிழுக்குத் தன்னைத் தந்தானே" என்ற பாடலும்-அதைப் போலவே எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்த "கலைஞர் வாழ்கவே" என்ற பாடலும் அனைவரையும் ஈர்த்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காகவே கர்நாடக முதலமைச்சராக அப்போதிருந்த ஜே.எச்.பட்டேல் வருகை தந்திருந்தார். புதுவை மாநில முதல் அமைச்சராக இருந்த ஆர்.வி.ஜானகிராமனும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, டான்ஸ் மாஸ்டர் கலா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழா மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதனை கங்கை அமரனும், ஊர்வசியும் தொகுத்து வழங்கினார்கள். விழாவில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், கே.ஆர்.ஜி., சிந்தாமணி முருகேசன், ஆர்.எம்.எம். அண்ணாமலை, அபிராமி ராமநாதன், எம்.வி.ராமு, கே.விஜயகுமார், ஜி.விஜயகுமார், எல்.சுரேஷ், கே.முரளி தரன், ஏ.எல்.அழகப்பன், பழனியப்பச் செட்டியார், ஆர்.பி.சவுத்ரி, பிரமிட் வி.நடராசன், கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், விஷ்ணுராம், சுப்பு பஞ்சு, ஜே.வி.ருக்மாங்கதன், சந்திரபிரகாஷ் ஜெயின், செ.கண்ணப்பன், எஸ்.எல்.துரைராஜ், ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன், கோவைத் தம்பி, நாகராஜ ராஜா, சத்யஜோதி ஜி.தியாகராஜன், சிவசக்தி பாண்டியன், டி.சி.விஜயன், என்.ராமதுரை, கே.கண்ணன், சூரியநாராயணன், இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்தினம், எஸ்.பி.முத்துராமன், ராம.நாராயணன், அமிர்தம், எஸ்.ஏ.சந்திரசேகரன், பாலுமகேந்திரா, கே.சுபாஷ், ஆர்.கே.செல்வமணி, 'யார்' கண்ணன், விக்ரமன், சேரன், வி.சேகர் , மற்றும் நடிகர்கள் சரத்குமார், விஜயகாந்த், பிரபு, விஜய், நெப்போலியன், சந்திரசேகர், அர்ஜுன், சிவகுமார், முரளி, ராம்கி, சூர்யா, பார்த்திபன், ராதாரவி, பாண்டியராஜன், அருண்குமார், தியாகராஜன், மணிவண்ணன், விஜயகுமார், ராஜேஷ், பிரபுதேவா, ஆனந்தராஜ், ரகுமான், ராஜா, மன்சூர் அலிகான், அலெக்ஸ், தியாகு, பாண்டியன், ஆர்.சுந்தரராஜன், தேவிகா, மீனா, ஜெயசித்ரா, கனகா, சுவலட்சுமி, தேவயானி,சீதா, நக்மா, ப்ரீதா, ரசிகா என மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
கலைஞர் என்னுடைய அருமை நண்பர் செவாலியே நடிகர் திலகம் சிவாஜி விழாவிற்குத் தலைமை தாங்கினார். தலைமை தாங்கிய நடிகர் திலகம் சிவாஜி உரையாற்றிப் பேசும்போது, மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக தனக்கும், எனக்கும் உள்ள நட்பைப் பற்றி விளக்கிக் கூறி வந்தார். அவரது பேச்சின் சில பகுதிகள் வருமாறு:- "தமிழே! உன் தலைமகனை-என் அருமை நண்பனை-இந்த நாட்டின் சிறந்த அறிவாளியை -உயர்ந்த அரசியல்வாதியை- வாழவை. தமிழினமே!
கலைஞரை வாழ்த்துங்கள். உங்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன்-தமிழ்த் திரையுலகம் கலைஞர் அவர்களுக்கு-என் உயிர் நண்பனுக்கு ஒரு சிறந்த விழா எடுத்து, எவ்வளவோ பெரியவர்கள் இருந்தும், இதற்கு என்னைத் தலைமை தாங்க பணித்தார்களே, இதைவிட அவர்கள் எனக்கு மாபெரும் சிறப்பினைச் செய்ய முடியாது. கோடிகோடியாக எனக்குக் கொட்டிக் கொடுத்தாலும் இதைவிடச் சிறப்பு எனக்கு கிடைக்காது. "எப்போது கலை உலகம் கலைஞர் அவர்களுக்கு மாபெரும் கலை விழா எடுப்பது?
நான் எப்போது அதற்குத் தலைமை தாங்குவது? அப்படி ஒரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கலாம்- எனக்குக் கிடைக்கிறதோ-இல்லையோ? இந்த விழாவிற்குக் கலைஞர் அவர்கள் சிவாஜி தலைமை தாங்கலாம் என்று பெருமையோடு ஒரு நண்பனுக்கு வாய்ப்பு கொடுத்தாரே-அதை நான் மனமார வரவேற்கிறேன்."
இப்படித்தான் அவர் தன் பேச்சைத் தொடங்கினார். உண்மையான கலைஞனின் வாக்கு பொய்க்காது என்பார்கள். அதைப்போலத்தான் அந்தக் கலைஞன் அன்றைய தினம் சொன்னதைப்போல, அதற்குப் பிறகும் கலை உலகம் எனக்கு விழா எடுத்தது. ஆனால், அதற்குத் தலைமை தாங்கத்தான் என் நண்பர் இல்லாமல் போய்விட்டார். உணர்ச்சிகரமான ஓர் பேச்சினை, உரையாற்றி முடித்துவிட்டு தனது இருக்கைக்குத் திரும்பிய அவர், திடீரென்று எழுந்து வந்து என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு உணர்ச்சி மிகுதியால் விம்மி, விம்மி அழுத காட்சி, இன்னமும் அப்படியே என் கண்களிலே நிற்கின்றது.
அவர் அன்று அழுதார்-நானும் அழுதேன். பிறகு என்னை சுதாரித்துக் கொண்டேன். இன்று இதனை நான் எழுதும்போது அவரை நினைத்துக் கொண்டு அழுகிறேன். பவள விழாக் குழு சார்பில், ஐந்து அடி உயர என்னுடைய வெள்ளிச் சிலை ஒன்றை வழங்கினார்கள். என்னுடைய 52 ஆண்டு திரையுலக சேவையைப் பாராட்டி, 52 சவரன் தங்கச் சங்கிலி ஒன்றை எனக்கு அணிவித்தார்கள். மேலும், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 52 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும் விழாக் குழுவினர் வழங்கினார்கள்.
என் கழுத்திலே போடப்பட்ட அந்தச் சங்கிலியை நான் கழற்ற முனைந்தபோது, சிவாஜி தடுத்து, அதனை நான் கழற்றக் கூடாது என்று கூறியதோடு, அதனை நான் கழற்றி விடாமலும் பார்த்துக் கொண்டார். எனவே அந்த விழா முடிகின்ற வரை நான் அதனை அணிந்து கொண்டேயிருந்தேன். அந்த விழாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் 1,11,111 ரூபாய்க்கான காசோலை ஒன்றினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அளித்தார்கள். அந்தக் காசோலையைப் பெற்றுக் கொண்ட நான், அதிலே வரிசையாக ஒன்று ஒன்று ஒன்று என்று இருந்த காரணத்தால், எவ்வளவு ரூபாய் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, பக்கத்திலிருந்த சிவாஜி கிண்டலாக என்னிடம், "பழைய பொருளாளர் நினைப்புப் போகவில்லையா?"
என்று கேட்டது கூட எனக்கு நினைவிலே உள்ளது. இயக்குநர் பாலச்சந்தர் விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நடிகர் சிவகுமார், பாண்டியராஜன், சந்திரசேகர், நடிகை ஊர்வசி, இயக்குநர் மணிவண்ணன், ஆனந்தராஜ், விஜயகுமார், அர்ஜுன், நடிகை மீனா,பார்த்திபன், ராஜேஷ், நடிகை எம்.என்.ராஜம், சரோஜா தங்கவேல், பாலுமகேந்திரா, விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி, கலைஞர் இயக்குநர் பாரதிராஜா, கலைஞானி கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் மணிரத்தினம் , கர்நாடக அமைச்சராக இருந்த அனந்தநாக், நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் , புதுவை முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் , கர்நாடக முதலமைச்சர் ஜே.எச்.பட்டேல் ஆகியோர் என்னை வாழ்த்திப் பேசினர்.
நிறைவாக நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஏற்புரை ஆற்றினேன். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் விழாக் குழு சார்பாக நன்றி கூறினார். அந்த விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா அவர்கள், அந்த விழாவிற்கு இடையிலே ஏற்பட்ட சில தடங்கல்களையெல்லாம் குறிப்பிட்டு, அந்தத் தடைகளுக்குப் பிறகு விழா நடைபெறுவதாகக் கூறினார். அதைப்பற்றி நான் விழாவில் பேசும்போது ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டினேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்தில், ஒரு போராட்டத்தில் நான் சிறையிலே அடைக்கப்பட்டு, திருச்சி சிறைச்சாலையிலிருந்து வெளி வந்தேன்.
அப்போது என்னை வரவேற்க பேரறிஞர் அண்ணா அவர்கள் திருச்சி சிறைச்சாலைக்கே வந்து, சிறைவாசலில் என்னை வரவேற்றார். அன்றைக்கு திருச்சியிலே எனக்குப் பாராட்டுக் கூட்டம்- அதற்கடுத்த நாள் சென்னையிலே அண்ணா தலைமையிலே பாராட்டுக் கூட்டம். அண்ணா சொன்னார்- "நீ திருச்சியிலே பேசிவிட்டு, நாளைக்கு காஞ்சிபுரம் வந்து விடு, அங்கே வீட்டில் உனக்கு விருந்து, இருவரும் சேர்ந்து சென்னை பாராட்டு விழாவுக்குச் செல்லலாம்" என்று சொன்னார்.
அதன்படி நான் திருச்சி விழாவிலே கலந்து கொண்டு விட்டு, மறுநாள் காலையிலே காஞ்சிபுரம் சென்று, மதிய உணவு அண்ணா வீட்டில் சாப்பிட்டுவிட்டு, மாலையிலே இருவரும் புறப்பட்டு சென்னைக்கு விழாவிற்கு வந்தபோது-வருகிற வழியிலே அன்பகத்திலிருந்து எங்களை வரவேற்று ஊர்வலம் புறப்பட்டுவிட்டது. அண்ணாவும், நானும் ஒரு ரதத்திலே அமர்த்தி வைக்கப்பட்டு, ஊர்வலம் கடற்கரைக்குச் சென்றது. அங்கே விழா நடைபெற்றது. அண்ணா பாராட்டிப் பேசினார்.
இரவு 10 மணிக்குமேல் அண்ணாவும், நானும் இல்லத்திற்குத் திரும்பினோம். அப்போது என்னுடைய அன்னையார் அஞ்சுகம் அம்மையார் அவர்கள் எங்களை வரவேற்று, கூடத்திலே அமர வைத்தார். அண்ணா, அம்மாவைப் பார்த்து "என்னம்மா சௌக்கியமா?" என்று கேட்டார். அப்போது, அம்மா, அண்ணா அவர்களைப் பார்த்து, "ஏன் தம்பி, நீங்கள் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானீர்கள். விடுதலையானவுடன் காஞ்சிபுரம் சென்று உங்கள் அம்மாவைப் பார்த்தீர்கள்.
அம்மாவைப் பார்த்துவிட்டு மறுபடியும் திரும்பி வேலூருக்குச் சென்று கூட்டத்தில் பேசினீர்கள்-இல்லையா?" என்று கேட்டார். "ஆமாம், அம்மா" என்றார் அண்ணா. "உங்களை உங்கள்
அம்மா ஒருநாள் கஷ்டப்பட்டு-ஒருநாள் பிரசவ வேதனைப்பட்டு பெற்றிருக்கிறார்கள் போலும் நான் என் பிள்ளையை 26 நாள் கஷ்டப்பட்டு, பிரசவ வேதனைப்பட்டு பெற்றேன். அதனால்தான் என் பிள்ளை திருச்சியிலே விடுதலை பெற்று-திருச்சி கூட்டத்திலே பேசிவிட்டு-காஞ்சிபுரம் வந்து -பிறகு சென்னைக்கு வந்தும் வீட்டுக்கு வராமல்-உங்களோடு கடற்கரைக் கூட்டத்திலே பேசிவிட்டு- இப்போதுதான் என்னைப் பார்க்க வந்திருக்கிறான்" என்று சொன்னார்கள்.
அப்போது அண்ணா கலகல வென்று சிரித்தார். இதை ஏன் இந்த நிகழ்ச்சியிலே சொல்கிறேன் என்றால், நான் பிறப்பதற்கே 26 நாள் கஷ்டம்-பிறந்ததே ஒரு போராட்டம்! பிறப்பதற்கே போராட்டம் நடத்தி வெளி வந்தவன்-அதே வழியில்தான் ஒரு விழாவிலே-அதுவும் பாராட்டு விழாவிலே கலந்து கொள்ள கலைஞர் வேண்டுமென்றால், பல தடைகளைக் கடந்து வர வேண்டுயுள்ளது என்று குறிப்பிட்டேன். கலையுலகம் நடத்திய அந்தப் பாராட்டு விழாவினை யொட்டி, " தினமணி " நாளேட்டில் " காலத்தை வென்ற கலைஞரின் திரைப்படங்கள் " என்ற தலைப்பில் அருமையானதொரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.
அந்தக் கட்டுரையின் தொடக்கம் இதோ:- "கலைஞரின் இன்றைய வெற்றிக்கு எதுவெல்லாம் காரணம் என்று பட்டியல் போட்டுப் பார்த்தால், அவருடைய எதிரிகள்கூட ரசித்து ஏற்றுக்கொள்ளும் அம்சம், அவருடைய எழுத்தாற்றலைத்தான்! "அதிலும், குறிப்பாக அவருடைய திரைப்பட வசனங்களுக்குக் கைதட்டாமல் தப்பி வந்த கரங்களின் எண்ணிக்கை சொற்பமே. பொது வாழ்க்கை-அரசியல் வாழ்க்கை-இலக்கிய வாழ்க்கை-கலை வாழ்க்கை-என அனைத்திலும் இவருக்கென்று ஒரு சிம்மாசனம் தனித்தனியே இருந்தாலும் -இவரை மக்களின் இதய சிம்மாசனத்துக்கு உயர்த்தி உடகார வைத்துப் போற்ற வைத்தது எழுத்தாற்றல்தான்.
"இனம்,மொழி, பண்பாடு, மனித நேய உணர்வுகள் இவரது எழுத்துகளில் மிகுந்து இருந்தன. திரைப்படங்கள் வசனத்துக்காக ஓடியதும் வெளிவந்த பல படங்களைத் தடை செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதும்-இவரது வசனத்துக்காகத்தான். ஒரு ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்தி விடக்கூடிய சக்தி இவரது எழுத்துகளுக்கு உண்டு என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் நம்பினார்கள்" -என்று "தினமணி" எழுதி இருந்தது.
