நெஞ்சுக்கு நீதி
ராஜரத்னா விருது! · 350 / 391
கலைஞர் 38. ராஜரத்னா விருது! "ராஜரத்தினம் வாசிப்பது சிலநேரம் குழலோசை போலவும் சிலநேரம் மேல் நாட்டு இசை போலவும் இருக்கும்" என்று பாராட்டினார் பேரறிஞர் அண்ணா. பெ ருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் 15.7.1998 சென்னையில் அதற்காக எடுக்கப்பட்ட விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்திருந்தேன். ஆனால், அதற்கு முன்பே அன்றைய தினம் திருவண்ணாமலையில் அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த தம்பி பிச்சாண்டியின் இளவலின் திருமண விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருந்தேன்.
எனவே, முதல்நாளே திருவண்ணாமலை சென்று, அருணை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் பொதுக் கூட்டத்திலும் பேசிவிட்டு, அங்கே இரவு தங்கியிருந்து, மறுநாள் காலையில் திருமண விழாவிலே கலந்து கொண்டு, 15ஆம் தேதி மாலையில் சென்னையில் நடைபெறும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவிலே கலந்து கொள்வதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பிச்சாண்டியின் இளவலின் பெயர் என்னுடைய பெயர்தான்- கருணாநிதி.
அந்த மணவிழாவிலே கலந்து கொள்வதற்கு முன்பு-முதல் நிகழ்ச்சியாக அங்கேயுள்ள காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத்தான் மற்ற நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டேன். அது போலவே காமராஜரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, கிண்டியில் உள்ள அவரது நினைவகத்திற்குச் சென்று, அங்கே நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகளையெல்லாம் பார்த்து விட்டுத்தான் பிறந்த நாள் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டேன்.
அந்த விழாவிலே காமராஜர் பெயரால் ஒரு விழா மலர் தயாரிக்கப்பட்டு, அதனை ராஜேஷ் பைலட் அவர்கள் வெளியிட, அதனை நான் பெற்றுக் கொண்டேன். காமராஜர் பெயரால் அமைந்த விருதினை நான் அவருக்கு அந்த விழாவிலே அளித்தேன். நிகழ்ச்சியில் பேசும்போது, காமராஜர் அவர்களுக்கும், பெரியார், அண்ணா போன்றவர்களுக்கும் இடையே இருந்த நட்புறவு பற்றியும், பெருந்தலைவர் அவர்களுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு- மதிப்பு- மரியாதை-குறித்தும் நீண்ட நேரம் விளக்கினேன்.
அரசியலிலே எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், எதிர் எதிர் முனையில் இருந்தாலும், அவரவர்களுக்குத் தர வேண்டிய மரியாதையை எண்ணிப் பார்த்து அரசியல் நடைபெற்றது அந்தக் காலம். ஆனால், இந்தக் காலம் எப்படிப்பட்டது என்பதை படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும். காமராஜரின் பிறந்த நாள் விழாவிலே கலந்து கொண்டபோது, அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு - மதிப்பு - மரியாதை - குறித்து விளக்கிப் பேசினேன். உதாரணத்திற்காக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள், இந்தியா விடுதலை பெற்ற விழா நாடு முழுவதும் கொண்டாடப் பட்டபோது- அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதலமைச்சர் என்ற முறையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.
ஏற்றி வைத்தார். அப்போது அவர் உரையாற்றும்போது, "இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு கலைஞர் எந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு நல்லது செய்தால், அவர்களைப் போற்ற வேண்டியது மனிதத்தன்மை உள்ள ஒவ்வொருவருடைய கடமையாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தச் சுதந்திரக் கொடியை இங்கே ஏற்றி வைப்பது மேதகு ஆளுநர் என்ற முறையிலேதான் இருந்தது.
அந்த முறையை மாற்ற வேண்டுமென்று கோரி, அதற்காகப் போராடி, எல்லா மாநில முதல் அமைச்சர்களுக்கும் அந்த உரிமையைப் பெற்றுத் தந்த கலைஞர் கருணாநிதி அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று பலத்த கைதட்டலுக்கிடையே கூறினார்.
காமராஜர் விழாவிலே 'காமராஜர் விருது' முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டுக்கு வழங்கப்பட்டது. அதைப்போலவேதான், 1998 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று, சென்னையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகக் கட்டிடத்தில், எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையினை அப்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த கிருஷ்ணகாந்த், தமிழக ஆளுநர் பாத்திமா பீவி ஆகியோர் முன்னிலையில் நான் திறந்து வைத்தேன். எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரால் பல்கலைக் கழகம் ஒன்றைத் தொடங்குவது என்று எம்.ஜி.ஆர்.
அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே திட்டமிடப்பட்டு, சட்டமாக சட்டப் பேரவையிலே கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர்-அவர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு-அந்தப் பிரச்சினையை அப்படியே போட்டு விடாமல், 1989ஆம் ஆண்டு நான் முதலமைச்சர் பொறுப்பையேற்றவுடன், அந்தப் பல்கலைக் கழகத்தைத் தொடங்க வேண்டுமென்ற முனைப்போடு முயற்சித்து-அந்த முயற்சிக்கு உறுதுணையாக மற்றவர்களும் இருந்து-அப்போது இந்தியக் குடியரசுத் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில், மாணவ - மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கியபோது...
தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களை அழைத்து வந்து, எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பல்கலைக் கழக்க கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நான் நாட்டினேன். அந்தக் கட்டிடப்பணிகள் முடிவுற்று, அதன் திறப்பு விழா 1988 ஆம் ஆண்டுதான் நடைபெற்றது. அந்தப் பல்கலைக் கழகத்தினுடைய கட்டிட வடிவமைப்பைக் கூட நானேதான் அமைத்துக் கொடுத்தேன். 1990 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவிலும் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.
அதற்குப் பிறகு, 1997 ஆம் ஆண்டிலும் அந்தப் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றினேன். அதன் பிறகு, 1998 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டேன். எம்.ஜி.ஆர். அவர்களின் சிலையை அந்த விழாவிலேதான் நான் முதன் முதலாகத் திறந்தேன் என்பது சரியல்ல. அதற்கு முன்பே அறந்தாங்கியிலே திருநாவுக்கரசர் அழைத்ததன் பேரிலும் - கோபிச்செட்டிப்பாளையத்தில் அருளாளர் ஆர்.எம்.வீ., அவர்களின் அழைப்பின் பேரிலும்-எம்.ஜி.ஆர்.
நினைவகத்திலும் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலைகளை நான் திறந்து வைத்துள்ளேன். இவை எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பிறகும், அவரின்பால் நான் எந்த அளவிற்குப் பாசத்தோடு நடந்து கொண்டேன் என்பதற்கான சான்றுகளாகும். ★ ★ ★ கலைஞர் "மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞர் அவர்களை நான் பாராட்டுகிறேன்" என்றார், எம்.ஜி.ஆர்.
தி.மு.கழகத்திலே நான் எந்தக் கூட்டங்களுக்குச் சென்றாலும், எந்த விழாக்களில் கலந்து கொண்டாலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள். கழக அன்பர்கள் தங்களின் அன்பினை-பாசத்தினைக் காட்டுவதற்காக பல பொருட்களை- வெள்ளியாலான தங்கத்தாலானவைகளை என்னிடத்திலே வழங்குகின்றார்கள். முதலமைச்சர் என்ற முறையிலும், அரசு விழாக்களில் நான் கலந்து கொள்ளும்போது அப்படிப்பட்ட பொருட்கள் எனக்கு வழங்கப்பட்டது உண்டு.
ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற நேரத்தில், அரசு விழாக்களில் வழங்கப்பட்டவைகளை அரசு தலைமைச் செயலகத்திலே அவ்வப்போது நான் ஒப்படைத்து வருகிறேன். அந்தப் பொருட்கள் தலைமைச் செயலகத்திலே வைக்கப்பட்டு வருகின்றன. அதைப்போலவே கழகச் சார்பிலே நடை பெறுகின்ற நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட எந்தப் பொருளானாலும் கழகத்திற்கே உரியது என்ற அளவிலே தலைமைக் கழகத்தில் வழங்கி வந்திருக்கிறேன். அவ்வாறே 98ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற என்னுடைய பவள விழாவினை முன்னிட்டு வழக்கம்போல் வைக்கப்பட்ட நிதி வசூல் உண்டியலில், ஏறத்தாழ 11 இலட்சரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்தது.
கழகத்தலைவர் என்கின்ற முறையிலே அளிக்கப்பட்ட நிதியாக அது இருந்தபோதிலும், அப்போது நான் முதலமைச்சராக இருந்த காரணத்தினால், அந்த 11 லட்சம் ரூபாய் நிதியினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அரசாங்கத்திடம் நிதித்துறையிலே ஒப்படைத்து விட்டேன். அதுபோலவே கழகத் தலைவர் என்ற முறையிலே எனக்கு வழங்கப்பட்டிருந்த 26 லட்சத்து 3 ஆயிரத்து 607 ரூபாய்க்கான நகைகள் மற்றும் பொருட்களை 1.8.1998 அன்று நடைபெற்ற பொதுக் குழுவிலே பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களிடம் ஒப்படைத்து கழகப் பொருளாளரிடமிருந்து அதற்கான ரசீதையும் பெற்றுக் கொண்டேன்.
17.8.1998 அன்று மதுரையில் எனக்கு பவளவிழா நடத்தப்பட்ட போது, மதுரை மாநகர மாவட்டக் கழகத்தின் சார்பில், மூன்று இலட்ச ரூபாய் என்னிடம் வழங்கப்பட்டதை, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளை ஒன்று தொடங்கிட, பல்கலைக் கழகத்தின் பதிவாளர் திரு.ராமசாமி அவர்களிடம் அளித்தேன். ★ ★ ★ எம்.ஜி.ஆர்.சிலையை, எம்.ஜி.ஆர். அப்போதைய குடியரசு துணைத் தலைவர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் கிருஷ்ணகாந்த் - தமிழக ஆளுநர் பாத்திமா பீவி முன்னிலையில் திறந்து வைத்தபோது....
தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழாவிலே 25.8.1998 அன்று கலந்து கொண்டேன். அந்த விழா அன்றைய தினம் கொண்டாடப்பட்டதற்கே ஒரு காரணம் உண்டு. ராஜபாளையத்தில் குமாரசாமிராஜா நூற்றாண்டு விழா நடை பெற்றபோது, மேடையிலே நான் குமாரசாமி ராஜா பற்றிய மலர் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த மலரில் குமாரசாமி ராஜா அவர்கள் ராஜபாளையத்தில் கலைஞர் கழகத் தலைவர் என்ற முறையில், வழங்கப்பட்ட தங்கம் - வெள்ளியிலான பரிசுப் பொருட்களை கழகத்திற்கே உரியது என்ற அளவில், அறிவாலயத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
நடத்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்கு அவரே வரவேற்பாளராக இருந்தார் என்றும்-அந்த மாநாட்டில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், பெருந்தலைவர் காமராஜரும், மற்றவர்களும் கலந்து கொண்டார்கள் என்ற ஒரு செய்திக் குறிப்பும் இடம் பெற்றிருந்தது. அப்போது நான், அருகிலே இருந்த மூப்பனார் அவர்களிடம், "ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நூற்றாண்டு விழா எப்போது?"
என்று கேட்ட நேரத்தில், "ஏற்கனவே அவருடைய நூற்றாண்டு விழா முடிந்திருக்க வேண்டுமே" என்று கூறியதன் பேரில், அதைப்பற்றி மேடையில் இருந்தவாறே விசாரித்து, அந்த விழா நடத்தப்படாமல் விடப்பட்டு விட்டது என்றும், 1995 ஆம் ஆண்டிலேயே- அ.தி.மு.க.
ஆட்சியிலேயே அவருடைய விழா நடத்தப்பட்டிருக்க வேண்டுமென்றும், அந்த விழா அரசின் சார்பில் நடத்துவதற்காக 3 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் கூட அந்த விழா நடத்தப்படவில்லை என்பதையும் அறிந்து, அந்த விழாவினை தற்போது தமிழக அரசு நடத்தும் என்று குறிப்பிட்டு, அந்த அடிப்படையிலேதான் 25.8.1998 அன்று அந்த விழா வள்ளுவர் கோட்டத்திலே நடைபெற்றது. அந்த விழாவிலே நான் பேசும்போது, "காலம் கடந்து அந்த விழா நடத்தப்படுவதற்குக் காரணம், ஓமந்தூரார் காலங்களைக் கடந்த தலைவர் என்பதால்தான்" என்று பலத்த கைதட்டலுக்கிடையே கூறினேன்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றிருக்க வேண்டிய விழா எப்படியோ தவிர்க்கப்பட்டு-முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓமந்தூராருக்கு விழா எடுக்கும் வாய்ப்பு எனக்கே கிடைத்தது. அவருக்கு மட்டுமல்ல- பேரறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.கழகத்தின் முதல் முதலமைச்சர். அவர் மறைந்த பிறகு, அவருக்கு நினைவு மண்டபங்கள்-நினைவுச் சின்னங்கள்-அவர் பெயரால் என்றைக்கும் அவர் பெயரை எண்ணிக்கொள்ளக் கூடிய அளவிற்கு நினைவகங்களை தமிழகத்திலே உருவாக்கும் வாய்ப்பினை நான் பெற்றேன்.
அதுபோலவே பெருந் தலைவர் காமராஜர் அவர்கள் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தவர். அவர் மறைந்து கலைஞர் எனக்கு வழங்கப்பட்ட 26,03,607 ரூபாயை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் குழுவில், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களிடம் ஒப்படைத்தபோது... விட்டாலும், என்றைக்கும் மறையாத உருவமாக நம் உள்ளத்தில் இருப்பார் என்ற நம்பிக்கையோடு, அவருக்கு நினைவு மண்டபம் எழுப்புகின்ற அந்த வாய்ப்பும்-அந்தப் பேறும் எனக்கே கிட்டியது.
மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இரண்டு முறை இருந்தவர். அகில இந்திய அரசியலிலே நிரந்தரமான இடத்தைப் பிடித்திருந்தவர். என்னிடம் தனிப்பட்ட முறையிலே அன்பு கொண்டவர். அவர் மறைந்த பிறகு அவருடைய நினைவு நிலைத்திருக்கும் வகையில், நினைவகம் எழுப்பிய பெருமையும். இன்னும் சொல்லப் போனால் அந்த நினைவகத்தின் கோபுரம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று நிர்மாணிக்கும் வாய்ப்பையும் நான்தான் பெற்றிருந்தேன்.
பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக இருந்தபோது, அரசியல் ரீதியாக எனக்கும், அவருக்கும் எவ்வளவோ கருத்து மாறுபாடுகள் இருந்தாலும்கூட, நிர்வாகத் துறையில் அவருடைய அரும்பணிகள் என்னால் இன்றைக்கும் பாராட்டக் கூடியவை. அவருக்கு நினைவு மண்டபம் எழுப்புகின்ற வாய்ப்பும்-பேறும் எனக்கேதான் கிட்டியது. தியாகச் சீலராக வாழ்ந்த தமிழகத்தினுடைய முன்னாள் முதல்வர்களிலே ஒருவரான குமாரசாமி ராஜாவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ராஜபாளையத்தில் நடைபெற்ற போது, அதிலே கலந்து கொள்ளவும், அவருடைய பெயரால் நினைவு சின்னம் எழுப்பவுமான பாக்கியமும் எனக்குக் கிட்டியது.
அதுபோலவே ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா தி.மு.கழக ஆட்சியிலே வராவிட்டாலும், அப்போது ஆட்சியிலே இருந்தவர்கள் அதனைக் கொண்டாடத் தவறியதால்-தி.மு.கழக ஆட்சியில் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடியதோடு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிகள் மற்றும் ராஜாஜி மண்டபம், கலைவாணர் அரங்கம் போன்றவைகளை உள்ளடக்கிய அரசினர் தோட்டத்திற்கு " ஓமந்தூரார் அரசினர் தோட்டம் " என்று அந்த விழாவிலே பெயர் சூட்டிப் பெருமை பெற்றேன்.
அத்தகைய ஓமந்தூரார் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் "திராவிடநாடு" இதழிலே ஒரு கட்டுரையே தீட்டியிருந்தார். அந்தக் கட்டுரையின் தலைப்பு- "காந்தி ராமசாமியும்- பெரியார் ராமசாமியும்" என்பதாகும். அந்தக் கட்டுரையிலே அண்ணா:- சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவு மண்டபம். "கள்ளம் கபடமற்ற கிராமவாசி-அரசியல் சூதாட்டத்திற்கு அப்பாற்பட்டவர்-தியாக முத்திரையை அரசியல் சந்தையிலே விற்கத் துணியும் வணிகராக இருக்க மறுப்பவர்-சொந்த வாழ்க்கையையும், நலனையும் மிக மிகக் குறைவான அளவினதாக ஆக்கிக் கொண்ட துறவு மனப் போக்கினர்-நெடுங்காலமாக நாட்டுப்புற வாழ்வை நேரடியாக அவர்களுடன் பழகியது மட்டுமின்றி, அவர்களில் ஒருவராக இருந்து அறிந்து கொண்டவர்-உள்ளொன்று வைத்து வெளி ஒன்று கொண்டுழலும் உலுத்தர் போலன்றி, "ஊருக்கு உழைப்பேன்-அதனால் வந்துறும் இன்னலுக்குப் கலைஞர் பொறுப்பேற்பேன்" என்ற உறுதி படைத்த உள்ளத்தினர் எளிய வாழ்க்கையும், சீரிய குணங்களும் கொண்டவர்-இவரே நம் முதலமைச்சர் என்று சொன்னால் ஒழிய, யாராலும் அவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்து இருப்பவர் என்று கண்டதும் உணரக்கூடிய விதமான உருவமோ-உடையோ-நடையோ கொண்டவர் அல்லர்-தன்னடக்கம் உள்ள தமிழர் ஓமந்தூரார்."
என்று எழுதினார். தி.மு.க. அரசால், சென்னையில் அமைக்கப்பட்ட ராஜாஜி அவர்களின் நினைவகம் இப்போது தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாக இருக்கிறதே-அந்தக் கோபுரச் சின்னம்-அந்தச் சின்னத்தை யார் உருவாக்கினார்க
ள் என்று பலருக்குத் தெரியாது. சென்னை அரசாங்கத்திற்கு ஒரு இலச்சினை வேண்டும்- (இலச்சினை என்றால் அடையாளச் சின்னம்) என்று விரும்பியபோது, இப்போதிருக்கின்ற அந்தச் சின்னத்தை உருவாக்கி, "இப்படி இருக்கட்டும்" என்று வழங்கியவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்தான்.
அதை ஓமந்தூரார் அறிவித்தவுடன், "ஒரு குறிப்பிட்ட சமயத்தாரின் சின்னம் அது-எனவே அது சமய சார்பற்ற அரசுக்கு நல்லதல்ல-கோபுரச் சின்னம் கூடாது-அதனை இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது!" என்று பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்குச் சிலர் கடிதம் எழுதியதன் பேரில்-நேரு அவர்கள் முறையீடுகள் வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, ஓமந்தூராருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதினார். அதற்கு ஓமந்தூரார் எழுதிய பதிலில்:- "கோபுரம் என்பது சமயச் சின்னம் அன்று-இந்த மாநிலத்தின் தனிச்சிறப்பாக விளங்கும் திராவிடக் கட்டிடக் கலையின் அடையாளம்.
காந்தி அடிகளின் இனிய நண்பரும், கிறித்தவப் பெருமகனுமான மேனாட்டார் சி.எப்.ஆண்ட்ரூஸ் என்ற வணக்கத்துக்குரிய மதகுருவின் ஆதரவோடு, வடஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் கோபுரத்துடன் கூடிய தேவாலயம் கட்டப்பட்டு இருப்பதையும் இந்தியப் பிரதம மந்திரிக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்து, நேருவின் மௌனத்தைப் பதிலாகப் பெற்றார்.
ஓமந்தூராரின் அஞ்சா நெஞ்சத்திற்கு, ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு - புதுவையை அடுத்த சொர்ணாவூரில் காங்கிரஸ் மாநாடு ஒன்றை அவர் ஏற்பாடு செய்தார். அந்த மாநாட்டில், குழிகள் தோண்டப்பட்டு, மரங்கள் நடப்பட்டு, அதிலே காங்கிரஸ் கொடிகளைப் பறக்கவிடக் கூடாதென்று ஆங்கிலேய சர்க்கார் ஆணை பிறப்பித்தது. "குழிகள் தோண்டி மரங்கள் நட்டுக் கொடிகளை கட்டக்கூடாது என்கிறாய்- பரவாயில்லை" என்று காங்கிரஸ் கொடிகளை எல்லாம் அங்கிருந்த பனைமரங்கள் தென்னை மரங்கள் - மற்ற மரங்களின் கிளைகளில் எல்லாம் கட்டி, அந்த மாநாட்டை எழில் பெறச் செய்தவர் ஓமந்தூரார்.
1934ஆம் ஆண்டிலேயே மேல் சாதி, கீழ் சாதிக் கொடுமை கூடாது என்பதற்காக ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு சிதம்பரம், ஓமந்தூர் போன்ற இடங்களிலே உள்ள ஆலயங்களுக்குள் ஆலயப் பிரவேசம் செய்து காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. உப்புச் சத்தியாகிரகத்திலே ஈடுபட்டு-அந்த யாத்திரையில் வேதாரண்யம் வரையில் ராஜாஜியின் தலைமையிலே சென்று சிறைப்பட்டவர். 42ஆம் ஆண்டு " வெள்ளையனே வெளியேறு " இயக்கத்திலும் கலந்து கொண்டு 15 மாதங்கள் வேலூர், தஞ்சை, திருச்சி ஆகிய சிறைகளிலே தண்டனையை அனுபவித்தார்.
அவருடைய சொந்த குடும்ப வாழ்க்கையிலும் பல கலைஞர் ஆண்டுதோறும் முத்தமிழ்ப் பேரவை விழாவில், சிறந்த இசை மேதைகளுக்கு 'ராஜரத்னா' விருது வழங்கப்பட்டு வருகிறது. துயரங்களை அனுபவித்தவர் அவர். இளமையிலேயே அவருடைய மனைவியை இழந்தவர்-அடுத்து தன் பெண் குழந்தையை இழந்தவர்-அதற்குப் பிறகு வாலிப வயது வரையிலே வளர்க்கப்பட்ட தன் மகன் சுந்தரத்தையும் இழந்தவர். சோக மயமான அந்த வாழ்க்கையைப் பற்றி அதிகக் கவலைப்படாமல், 'மகன் பெங்களூரிலே இறந்து விட்டான்' என்று கேள்விப்பட்ட பிறகும், அங்கே செல்லாமல், துயரத்தை மறைத்துக் கொண்டு பணிகளிலே ஈடுபட்ட பெருமகன் தான் ஓமந்தூரார்.
அவருடைய மகன் இளம் பிராயத்தில் சேரன்மாதேவி குருகுலத்தில் சேர்க்கப்பட்டிருந்தான். வ.வே.சு.அய்யரால் நடத்தப்பட்ட அந்தக் குருகுலத்தில் சாதிப் பாகுபாடு - உயர்ச் சாதிக்காரர்கள், உயர் சாதி அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டு- உயர்ச் சாதிக்காரர்கள் குடிக்கின்ற தண்ணீர் பானையிலே கூட-மற்றவர்கள் தண்ணீர் மொண்டு குடிக்கக் கூடாது என்கிற அளவிற்கு விதிமுறைகள் இருந்தன. அதன் காரணமாக அங்கே கிளர்ச்சி ஏற்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் முன்னின்று அந்தக் கிளர்ச்சியை நடத்தினார் என்பதெல்லாம் வரலாறு! அந்தக் குருகுலத்தில் ஓமந்தூராரின் மகன் சுந்தரம் படித்துக் கொண்டிருந்த போது, ஒருநாள் தன் தந்தையாரிடம், "அப்பா! அங்கே தண்ணீர் பானை தனித்தனியாக வைத்திருக்கிறார்கள். எங்களுக்கொரு பானை-உயர் சாதிக்காரர்களுக்கு ஒரு பானை என்று வைத்திருக்கிறார்கள். நான் உயர்ச்சாதிக்காரர்களுக்காக வைக்கப்பட்ட பானை என்று தெரியாமல், அதிலிருந்து ஒரு குவளை தண்ணீர் மொண்டு, பாதி தண்ணீர் குடிப்பதற்குள்- அங்கே வந்த உயர் சாதிக்கார ஆசிரியர் என் கன்னத்திலே பளார் என்று அடித்துவிட்டார்.
'அந்தப் பானையைத் தீட்டாக்கி விட்டாயே' என்று சொல்லி அடித்தார். அப்பா! தீட்டு, தீட்டு என்று சொல்லி அடித்தாரே, தீட்டு என்றால் என்ன அப்பா?" என்று கேட்டான். "ஹம்ஸத்வனி" சார்பில் நடத்தப்பட்ட திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நூற்றாண்டு விழாவில், அதன் செயலாளர் இராமச்சந்திரன் சால்வை அணிவித்து வாழ்த்தினார். அதைக் கேட்டதும் ஓமந்தூராருடைய முகம் சிவந்தது. தாங்க முடியாத வேதனைப் பட்டார். அதன் விளைவாகத்தான் பெரியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க.
போன்றவர்களோடு ஓ.பி.ஆரும் சேர்ந்து சேரன்மாதேவி போராட்டத்தில் கலந்து கொண்டதன் காரணமாக- தன்னுடைய மகனையே அங்கிருந்து வெளியேறச் செய்து, வேறு பள்ளியிலே சேர்க்கச் செய்தார். பாரதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கு ஓமந்தூரார்தான் காரணம். அவருடைய ஆட்சிக் காலத்திலே தான் பாரதியின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு, பரிவுத் தொகையாக 15 ஆயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே வழங்கப்பட்டது. கலைஞர் என்னுடைய மைத்துனர் - இசைச் சித்தர் சி.எஸ்.
ஜெயராமனுடைய தங்கை பத்மாவதிக்கும் எனக்கும் 1944இல் திருமணம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஓமந்தூராரின் நூற்றாண்டு விழாவிலே த.மா.கா. தலைவர் மூப்பனார், நீதியரசர் என்.கிருஷ்ணசாமி ரெட்டியார், திண்டிவனம் இராமமூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அவருடைய திருவுருவப் படத்தினை நான் திறந்து வைத்துப் பேசினேன். அதற்கடுத்த நாள், சென்னையில் "ஹம்ஸத்வனி" அமைப்பின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் நூற்றாண்டு விழாவிலே கலந்து கொண்டேன்.
அந்த விழாவில் செம்மங்குடி சீனிவாச அய்யர், எம்.ஏ.எம்.ராமசாமி , நல்லி குப்புசாமி ஆகியோரும் என்னுடன் கலந்து கொண்டார்கள். திருவாவடுதுறை டி.என்.ஆர்.என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை 1898 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27ஆம் நாள் பிறந்தவர். அவர் தன்னுடைய 58ஆவது வயதிலே 1956 ஆம் ஆண்டு இயற்கை அடைந்தார். அவர் மறைந்தே 52 ஆண்டுகளாகின்றன. அவருடைய நூற்றாண்டு விழாவினை அவர் பிறந்த தேதியிலேயே நடத்தியாக வேண்டுமென்ற விழைவுடன் ஹம்சத்வனி அமைப்பின் செயலாளர் இராமச்சந்திரன் என்னை வலியுறுத்த, நானும் ஒப்புக்கொண்டு அந்த விழாவிலே கலந்து கொண்டேன்.
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களை எல்லோரும் அறிந்ததைப்போல அல்ல-மிகவும் நெருங்கி அறிந்தவர்களிலே நான் ஒருவன். அவரைப் பற்றிக் கூறும்போது, எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், கச்சேரிக்காக வந்து சேருகின்ற வரையில்-அவர் வருவாரா, கலந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான். அரசியலிலேகூட- பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு அண்ணா அவர்கள் ஒப்புக்கொண்டால்-நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களைப் பல மணி நேரம் காக்க வைத்து விடுவார்.
பல நிகழ்ச்சிகளிலே காலம் தாழ்ந்து வந்து கலந்து கொள்வார். சில நிகழ்ச்சிகளிலே வராமலேகூட இருந்து விடுவார். அரசியல் துறையிலே அண்ணா இருந்ததைப் போலத் தான் இசைத் துறையிலே டி.என்.ஆர். விளங்கினார். அண்ணா அவர்களைப் போலவே. டி.என்.ஆர். அவர்களும் நிகழ்ச்சியிலே வந்து கலந்து கொண்டு வாசிக்க ஆரம்பித்து விட்டால், ஐந்து நிமிட நேரத்தில் அங்கேயுள்ள அத்தனை பேரையும் தன் இசையால் கட்டுப்படுத்தி விடுவார். அதைப் போலவேதான் அண்ணா அவர்கள் பேச ஆரம்பித்தால், ஐந்து நிமிட நேரத்திற்குள், அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும் அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்.
அந்த அண்ணா அவர்களே டி.என்.ஆர். அவர்களைப் பாராட்டியதை நான் கேட்டு சிந்தை மகிழ்ந்திருக்கிறேன். ★ ★ ★ சென்னை மாநகரத்தில் எஸ்.எஸ்.பி.லிங்கம் என்பவர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பர். ஒருமுறை அவர் இல்லத்தில் ஒரு காதணி விழா. அந்த விழாவிலே ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரி. "ஒரு மணி நேரம்தான் வாசிக்கப் போகிறேன்" என்று சொன்னவர்.
மூன்று மணி நேரத்திற்குமேல் வாசித்தார். கலைஞர் அந்த விழாவிற்கு வந்திருந்த அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, "மேல் நாட்டுக்காரர்களின் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில், ஒவ்வொரு வாத்தியங்களில் வாசிக்கும்போது கேட்கின்ற அந்த இசை இன்பம் வேறு-அவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து வாசிக்கும்பொழுது கேட்கின்ற இசை இன்பம் வேறு. அதைப்போல தொலைவில் இருந்து கேட்டால், ராஜரத்தினம் வாசிப்பது சில நேரங்களில் குழலோசைபோல இருக்கும்-சில நேரங்களில் நாயனமாகத் தெரியும்-சில நேரங்களில் ஆர்க்கெஸ்ட்ரா குழுவினுடைய இசையாகத் தெரியும்-இந்தத் திறமை உலகத்திலே வேறு எந்த சங்கீத மேதைக்கும் கிடையாது.
ராஜரத்தினம் ஒருவருக்குத் தான் உண்டு" என்று குறிப்பிட்டார். டி.என்.ராஜரத்தினம் அவர்கள், நடுத்தர சாதாரண குடும்பத்திலேதான் பிறந்தார். இசைக் குடும்பம் என்றாலே சாதாரண எளிய குடும்பங்கள்தான். சமுதாயத்திலே இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரிய மதிப்பு- மரியாதை என்றெல்லாம் கிடையாது. மற்றவர்கள் கூறினால் தவறாகப் பொருள் கொள்ளப்படும். நானே எழுதுவதால் தவறாகாது. இந்தச் சமுதாயத்தில் பிறந்து அவர்கள் எவ்வளவு பெரிய வித்வான்களாக இருந்தாலும் கூட, அந்தக் காலத்தில் அவர்கள் சட்டை அணிந்து கொண்டு நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள முடியாது.
இன்னும் சொல்லப் போனால், மேல் துண்டுகூட அணிந்து நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ள இயலாது. மேலும் நாயன வித்துவான்களாக இருந்தாலும், அவர்கள் எல்லாம் தலையில் குடுமிதான் வைத்துக் கொள்ள வேண்டும். இதனையெல்லாம் மாற்றி- "குடுமி வைத்துக் கொண்டால்தான் நாயனம் வாசிக்க முடியும்? கிராப்பு வைத்துக் கொண்டு நான் வாசிக்கிறேன் பார்!"
என்று வாசித்தவர்தான் டி.என்.ஆர். அதைப்போலவே "சட்டை போட்டுக் கொண்டு நாயனம் வாசித்தால், அந்த நாதம் நாயனத்தில் வராதா? ஆலாபனம் செய்ய முடியாதா? ஆடைகளில்தான் ஆலாபனம் இருக்கிறதா?" என்று கேட்டு, சட்டை போட்டுக் கொண்டு நாயனம் வாசித்தார். காலணிகூட அணிந்து கொள்ளக் கூடாது என்று இருந்த அந்தக் காலக் கட்டத்தில் அவர் கால்களில் பூட்ஸ்களே போட்டுக் கொண்டு நாயனம் வாசித்தார். மகாராஜாக்களின் தர்பாரிலே டி.என்.ஆர்.
கச்சேரி வாசிக்கும்போது, மகாராஜாவைப் போல தலைப்பாகை அணிந்து, அவர்களைப் போலவே ஷேர்வானி உடுத்தி, உயர்ந்த அலங்கார ஆடைகளை அணிந்து, அவர்களுக்கு நிகராக மேடையிலே அமர்ந்து வாசித்த பெருமையும் ராஜரத்தினம் பிள்ளை அவர்களுக்கு உண்டு. அவருடைய இந்தச் சுயமரியாதைத் தன்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. காரணம்-நான் சிறுவனாக இருந்த போது, சங்கீதம் கற்றுக்கொள்ள என்னுடைய பெற்றோரால் உறவினர் ஒருவரிடம் அனுப்பப்பட்டேன்.
ஆனால், நான் அந்தப் பயிற்சியை மூன்று மாத காலத்திற்குப் பிறகு தொடரவில்லை. வீட்டிற்கு திரும்பி வந்து- "இனி நான் அந்தப் பயிற்சி பெறப்போக முடியாது" என்றேன். தந்தையார் ஆத்திரத்தோடு "ஏன்?" என்றார். நான் சொன்னேன்- "எனக்குப் பயிற்சி கொடுக்கின்ற வித்துவான் இந்த ஊரில் உங்களைப் போல இன்னொரு பெரிய வித்துவான். அவர் இந்த ஊரிலே மடாலயத்திலே கார்வார் வேலை பார்க்கின்ற ஒருவர் தெருவிலே வந்தால்-தன்னுடைய தோளிலே போட்டிருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக் கொள்கிறார்.
காலில் உள்ள செருப்பை நின்ற இடத்திலேயே கழற்றி வைத்துவிட்டு வெறும் காலோடு நின்று வணங்குகிறார். நானும் பெரிய வித்துவானாக வந்தால். இப்படித்தானே நடந்து கொள்ள வேண்டும்? இப்படி யெல்லாம் சுயமரியாதை இல்லாமல் என்னால் இருக்க முடியாது-எனவே இந்தப் பயிற்சிக்கு நான் போகமாட்டேன்" என்று கூறினேன்.
கலைஞர் அதற்குப் பிறகு என்னைப் படிக்க வைப்பதாகக் கூறி திருவாரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அதைப்பற்றி யெல்லாம் இந்தத் தொடரின் முதல் பாகத்திலேயே விரிவாக எழுதியுள்ளேன். என்னுடைய இளமைப் பருவத்திலேயே என்னுடன் ஊன்றிய அந்த சுயமரியாதை உணர்வுதான், இன்றளவும் என்னோடு இணை பிரியாமல் இருந்து வருகின்றது. ஒருமுறை டி.என்.ராஜரத்தினம் அவர்களோடு சிதம்பரத்திலே இருந்து காஞ்சிபுரம் வரையிலே பயணம் செய்கின்ற பேறு எனக்குக் கிடைத்தது.
சிதம்பரம் ஜெயராமன் அவர்கள்-இசைச் சித்தர் என்னுடைய மைத்துனர்-1944 ஆம் ஆண்டு அவருடைய தங்கை பத்மாவதியை நான் மணந்தவன். 1945 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அவர்களும், பொன்னப்பா என்ற நண்பரும் சேர்ந்து இசைவிழா என்று அந்த நிகழ்ச்சிக்குப் பெயர். அந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து பத்துநாட்கள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள டி.என்.ஆரும் அழைக்கப்பட்டிருந்தார். சி.எஸ்.ஜெயராமன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்.
நானும் அந்த நிகழ்ச்சிக்கு அவர்களோடு செல்ல நேரிட்டது. வழி எல்லாம் அவர்கள் இருவரும் பேசிய இசைப்பற்றிய அந்த விவாதங்களில் முழுமையாக என்னால் கலந்து கொள்ளக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லாவிட்டாலுங்கூட, அதைக் கேட்டுக் கேட்டு நான் இன்புற்றேன். திருச்சியிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதல் மாநில மாநாடு, திருவாவடுதுறையாரின் நாயன இசையுடன் தான் தொடங்கியது. இந்தியாவின் முதல் சுதந்திர இன்னிசை ராஜரத்தினம் அவர்களுடையதுதான்.
1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15 அன்று முதல் சுதந்திரப் பிரகடனம் செய்தபோது, நாதஸ்வரம் வாசித்த இசைமேதை அவர்தான். டி.என்.ஆர். அவர்கள் மறைந்த ஆண்டில், அவருடைய படத்திறப்பு திரு.சி.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த நான் பேசும்போது. அமைச்சரிடமும், விழா நடத்தியவர்களிடமும், "அகில இந்திய அளவில் பாரதரத்னா விருது வழங்கப்படுவதைப்போல- இசைமேதைக்கு " ராஜரத்னா " என்ற பெயரில் ஒரு விருதினை ஆண்டுதோறும் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.
ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேறாத கோரிக்கையாகவே பல ஆண்டுகள் இருந்து-பின்னர் நான் முதலமைச்சராக வந்த பிறகு ஆண்டு தோறும் நடத்தப்படுகின்ற முத்தமிழ்ப் பேரவை விழாக்களில் "ராஜரத்னா" விருது என்ற பெயரில் ஒன்றினை வழங்க வேண்டுமென்று கூறி-அது ஒவ்வொரு ஆண்டும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழாவில், என்னுடன் கலந்து கொண்ட பெரியவர் செம்மங்குடி சீனிவாசய்யர் தமிழக அரசையும்-குறிப்பாக என்னையும் பலபடப் பாராட்டி ஆற்றிய உரை என்றைக்கும் நினைவிலே கொள்ளத்தக்க ஒன்றாகும்.
