உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கூறாததைக் கூறியதாக...
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கூறாததைக் கூறியதாக... · 349 / 391

கலைஞர் 37. கூறாததைக் கூறியதாக... கலைஞர் அரசைக் கலைக்க முயற்சிப்பது நேர்மையற்றது என்றார் வி.பி.சிங்! தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமுறை டாக்டர் ஹண்டே அவர்கள் வேகமாகப் பேசியபோது குறுக்கிட்ட நான், "தமிழகத்திலே உள்ள மிக மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமென்றாலும் போட்டுக் கொள்ளலாம். - அத்தகைய மிக மிகப் பின்தங்கிய சமுதாயத்திலே பிறந்தவன் நான் என்று சொல்லியிருக்கிறேன். அந்த மிக மிகப் பின் தங்கிய சமுதாயத்து மக்களை வாழ்வில் முன்னேற்ற என்னுடைய உயிரையும் பணயம் வைத்துப் பாடுபடுவேன்" என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதனைச் செயல்முறைப் படுத்திடவும் முயன்றிருக்கிறேன் என்பதற்கு ஒரு சில உதாரணங்களைத் தெரிவித்திட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் பிரச்சினை பலமுறை எழுப்பப்பட்டு வந்தாலும், முதல்முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் 1969 ஆம் ஆண்டில், திரு.ஏ.என்.சட்டநாதன் அவர்கள் தலைமையில், 13.11.1969 அன்று பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காகவும் அவர்தம் நிலையை மேம்படுத்தவும் அரசு அதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆராயவும், கல்வி வசதிகள், அரசுப் பணிகளில் பிரதிநிதித்துவம், வீட்டு வசதி, மானிய உதவிகள், சமுதாய நல வளர்ச்சி ஆகிய முனைகளில் அவர்களுடைய நிலையை மேம்படுத்த மாநில அரசு என்னென் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யவும், தமிழ்நாட்டு வரலாற்றில், முதன்முதலில் அமைக்கப்பட்ட குழு அதுதான்.

அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அதுவரை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16 சதவீதம்- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 25 சதவீதம் - பொதுப் போட்டிக்கு 59 சதவீதம் - என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை மாற்றியமைத்து, 7.6.1971 அன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவீதம் - பொதுப் போட்டிக்கு 51 சதவீதம் - என்று ஆணை வெளியிடப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகுப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்குரிய பங்கினைப் பெற முடியவில்லையென்ற உணர்வு மேலோங்கி, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்க்குத் தனி ஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வந்ததையொட்டி, பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டார் மற்றும் சீர்மரபினர்க்கு 20 சதவீதம் ஒதுக்கியும்-மீதமுள்ள 30 சதவீதத்தைப் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியும்-நான் மூன்றாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர், 28.3.1989 அன்று ஆணையிடப்பட்டது; 1990-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பினையொட்டியும், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினர் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும்-பொதுப் போட்டிக்கான ஒதுக்கீட் டி வி ருந்து தனியே ஒரு விழுக்காடு பழங்குடியினருக்கும்-18 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும் - 20 விழுக்காடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கும்-30 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 31 விழுக்காடு பொதுப் போட்டிக்கும் என 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கலைஞர் மிக - மிக மிகப் பின்தங்கிய சமூகத்திலே பிறந்த நான், பின்தங்கிய சமுதாய மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்த செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். கழக ஆட்சியில்தான் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியாக ஓர் இயக்குநரகம் 1969 ம் ஆண்டு கழக அரசால் தொடங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கென தனியே ஓர் அமைச்சரை நியமித்ததும், அதற்கென மானியக் கோரிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியதும் 1971ஆம் ஆண்டு கழக அரசியல் தான்.

பிற்படுத்தப்பட்டோர்- மிகப்பிற்படுத்தப்பட்டோர். நலனுக்குக் தனியே திட்டங்களையும், செயல் முறைகளையும் வகுத்தளித்திடத் தலைமைச் செயல கத்தில் தனியாக ஒரு துறை 1989 ஆம் ஆண்டிலேதான் தோற்றுவிக்கப்பட்டது. மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்களைச் செயலாக்குவதில் தனிக்கவனம் செலுத்தும் பொருட்டு, 1989ஆம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இயக்குநரகம் கழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது.

1989இல் முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றபோது, மிகப் பிற்படுத்தப்பட்டோர். சீர் மரபினருக்கு எந்தவித நிபந்தனையுமின்றி இளங்கலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியையும் - 1990 ஆம் ஆண்டில் ஆண்டு வருமான வரம்பு 12 ஆயிரம் ரூபாய் வரையுள்ள பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இளங்கலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வியையும்-பிறகு அந்த வருமான வரம்பை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் சலுகை அளித்த தெல்லாம் கழக ஆட்சிதான்.

அரசுத் துறைப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தேன் அனைத்துத் தொழில் கல்வியிலும் ஆதி திராவிட-பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட கிராமப்புற மாணவர்கள் பயனடைய 15 சதவிகித தனி இடஒதுக்கீடு செய்ததும் தி.மு.கழக ஆட்சியிலேதான். ஆனால் பின்னர் அது நீதி மன்றத்தினால் தடை செய்யப்பட்டு விட்டது.

கிராமங்களிலே உள்ளவர்கள் பயனடைய வேண்டுமென்பதற்காகப் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகளாக அதுவரை இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட-மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து இலவசக் கல்வி பெறுவதற்காக அதுவரை இருந்த எண்ணிக்கை வரம்பை அறவே நீக்கினோம். அதுவரை ஒரு பட்டதாரிகூட இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு-அவர்கள் எந்த வகுப்பினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்-மருத்துவக் கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரியிலோ, கால்நடை மருத்துவக் கல்லூரியிலோ, பல் மருத்துவக் கல்லூரியிலோ, வேளாண்மைக் கல்லூரியிலோ, சட்டக் கல்லூரியிலோ சேர விரும்புவார்களானால், அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலே ஒவ்வொரு பிரிவிலும், முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு - அவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து-அதன் மூலம் பட்டதாரிகளே அதுவரை இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற வழிவகுத்துக் கொடுத்தோம்.

கலைஞர் "பெரியார் விருது" 5 சவரன் தங்கப் பதக்கம் என்பதை, படிப்படியாக உயர்த்தி - தங்கப் பதக்கத்துடன் பரிசுத் தொகையாக 1 இலட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டேன். அதுபோலவே ஒரு பட்டதாரிகூட இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் கல்விக்கு விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாக அனுமதிக்கக் கழக ஆட்சியிலே அனுமதிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் அடுத்து வந்த ஆட்சியிலே நீதி மன்றத்தின் பெயரால் கைவிடப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர்-மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அரிய பணி ஆற்றியுள்ள ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு 5 சவரன் தங்கப் பதக்கம் மட்டுமே என்றிருந்ததை மாற்றி, 1996 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் இவ்விருது பெறுவோருக்கு ரூபாய் 20,000 ரொக்கமும், மூன்று சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு, 1998 ஆம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, அத்துடன் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அரசில் திரு.திருவாரூர் கே.தங்கராசு, திரு.எஸ்.தவமணி இராசன், திரு.நாத்திகம் இராமசாமி, திரு.நன்னிலம் நடராசன், திரு.திருச்சி என்.

செல்வேந்திரன் ஆகியோருக்குப் பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர்-மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.12,000 என்று 1989 ஆம் ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, பயன் பெறுவோர் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என்றும் நோக்கத்தில், 1996இல் ரூ.25,000 ஆகவும்-31.5.2000இல் ரூ.50,000 ஆகவும் உயர்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அதிகமாகப் படிக்க முன்வர வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, அவர்களது கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 1999-2000 ஆண்டிலிருந்து மூன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை படிக்கும் அறுபதாயிரம் மிகப் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 500 என்றும், ஆறாம் வகுப்பு படிக்கும் முப்பதாயிரம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய் என்றும் வழங்க, ஆறு கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட-மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் சேர்வதற்குக் குடும்ப வருமான வரம்பு ரூ.15,000 என்பது ரூ.50,000 ஆக 1998-99இல் உயர்த்தப்பட்டது. 1998இல் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள். 2000-2001 முதல் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரில் மேல் நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று. தொழிற் கல்வியில் சேரும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்க்கு ஆண் டொன்றுக்கு ரூ.1500 வீதம் ஐந்தாண்டுகள் அல்லது முதல் பட்டப் படிப்பு முடியும்வரையில் சிறப்பு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

கலைஞர் பொதுக்குழுவில் "நீதிபதி ஜெயின் தனது இடைக்கால அறிக்கையில், எந்த ஒரு இயக்கத்தையும் தனிப்பட்ட எவரையும் குறிப்பிட்டுக் குற்றம் சுமத்தவில்லை" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1998 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப் பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சார்ந்த குடும்பங்களின் முதல் நபருக்கு பாலிடெக்னிக் நிறுவனங்களில் பட்டயப் படிப்பில் (டிப்ளமா கோர்ஸ்) இலவசக் கல்வி வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கு பிற்படுத்தப்பட்ட- மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் தனிப் பயிற்சி நிலையத்தில் தங்கியுள்ள மாணவரின் மாத உணவுக் கட்டணம் ரூ.250 என்பது ரூ.500 ஆக 1996ல் உயர்த்தப் பட்டது. 1998 ல் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை 50 என்பது 100 ஆகவும் உயர்த்தப்பட்டது. 1998-99ஆம் ஆண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட- மிகப் பிற்படுத்தப்பட்ட - சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த 2000 பேருக்கு 3 மாத பயிற்சிக் காலத்திற்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணத்தொகை தலா ரூ.9,000 லிருந்து ரூ.12,200 ஆக உயர்த்தி அரசால் வழங்கப்பட்டது.

இந்தப் பயிற்சிக் கட்டணத்தை 30.12.1999 முதல் 15,500 ஆக உயர்த்தி, அதனால் ஏற்படும் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் கூடுதல் செலவுத் தொகையை அரசே ஏற்பதற்கு ஒப்புதல் அளித்து ஆணையிடப் பட்டது. 2000-2001 முதல் மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் இயற்கை எய்தினால், இறுதிச் சடங்கிற்கு ரூ.500 வழங்கப்படுகிறது. 20 விழுக்காடு இட ஒதுக்கீடுக் கோரி 1987இல் நிகழ்ந்த சமூக நீதிப் போராட்டத்தில் பலியான 23 தியாகிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், 3 இலட்ச ரூபாய் நிவாரண உதவியும், அவர்களின் குடும்பத்தினருக்கு மாத ஓய்வு ஊதியமாக ரூ1,500 வீதமும் அனுமதித்து 7.4.1998 அன்று ஆணையிடப்பட்டது.

அ.தி.மு.க.ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகளில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டிருந்தார்கள். அந்த வழக்குகளையெல்லாம் தி.மு.க.ஆட்சிக்கு வந்ததும் ஒரே உத்தரவில் திரும்பப் பெற்றது. ஆதி திராவிடர்களுக்கு வழங்கியது போலவே, இலவச வீட்டு மனைகள் ஒட்டர், நரிக் குறவர், முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர் ஆகிய நான்கு பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததை விரிவுபடுத்தி-வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் அனைத்து மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்கிட தி.மு.கழக ஆட்சியிலேதான் உத்தரவிடப்பட்டது.

1997-98ஆம் ஆண்டு இதே திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் பிற்படுத்தப்பட்டோருக்கும், முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வீட்டுமனை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியிலேதான். அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்- கலைஞர் பட்டோர் பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு செய்ய பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் தலைமையில், 1.6.1998 அன்று உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வ.வேலுச்சாமி, மீ.அ.வைத்தியலிங்கம், வாசுகி முருகேசன், ஆர்.ஆர்.சேகரன், பி.வேல்துரை, நா.பெரியசாமி, ஏ.வி.அப்துல் நாசர், இரா.தாமரைக்கனி, ஜி.கே.மணி, எல்.சந்தானம், டி.மணி, ஆ.ராசேந்திரன் என்கிற தீரன், ஆ.வெங்கடாசலம், ஆகிய சட்டமன்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகச் செயல்பட்டார்கள். இந்த உயர்நிலைக்குழு வழங்கிய பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு, பத்தும் அதற்கு மேலும் எண்ணிக்கை உள்ள பணிநிலைப் பிரிவுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்னும் விதி 21.9.1999 அன்று மாற்றப்பட்டது.

"ஆதரவை வாபஸ் பெறுவேன்" என்ற மிரட்டலுக்கு பா.ஜ.க. அரசு பணிந்தது குறித்து வெளிவந்த கார்ட்டூன். ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை உள்ள பணி நிலைப் பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றலாம் என்று 21.9.1999 அன்றும், பணிமாறுதல் முறை மூலம் செய்யப்படும் நியமனங்களில் நிரப்பப்படாத பணியிடங்களை முன் கொணர்முறை (Carry Forward) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உள்ளது போல், பிற்படுத்தப் பட்டோர்-மிகப் பிற்படுத்தப்பட்டோர்-மற்றும் சீர்மரபினருக்கும் விரிவுபடுத்தலாம் என்று 2.5.2000 அன்றும், நேரடி நியமன முறையில், தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும்- மிகப் பிற்படுத்தப் பட்டோர் - மற்றும் சீர்மர பினருக்கும் உள்ள முன் கொணர் முறையை, பிற்படுத்தப்பட்டோருக்கும் விரிவுபடுத்தலாம் என்று 2.5.2000 அன்றும், இட ஒதுக்கீட்டு முறையை குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லாத நிலையில், அ.தி.மு.க.

வற்புறுத்தலால் விசாரணைக்கு பா.ஜ.க. அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஜெயலலிதாவின் சதியைப் பறைசாற்றியது. 'இந்து' நாளேடு. பல்கலைக் கழகங்கள், தலைமைக் கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்று 28.10.1999 அன்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - பிற்படுத்தப் பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர்-மற்றும் சீர்மரபினர் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லைய

ெனில், எத்தனை பணியிடங்கள் குறைகின்றதோ, அப்பணியிடங்களை ஒவ்வொரு பதவியிலும் 1.4.89 முதல் கணக்கில் கொண்டு அத்துறையிலுள்ள நுழைவுப் பதவியில் (Entry Level Post) படிப்படியாக ஐந்தாண்டு காலத்திற்குள் நியமனம் செய்யலாம் என்று 2.5.2000 அன்றும், எங்கெல்லாம் இட ஒதுக்கீட்டு முறைக்கு வகை செய்யப்பட் டிருக்கிறதோ அங்கெல்லாம் இன சுழற்சி முறையைப் பின்பற்றாதவர்கள் மீது குடிமைப்பணி விதியின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை வழங்கலாம் என்று 21.9.1999 அன்றும் முடிவு செய்யப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அரசுப் பணிகளுக்கு நியமனம் செய்யப்படும்போது, முதல் 10 இடங்களில் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 13.8.1992 முதல் வழங்கப்பட்டு வந்த ஒரு இடம் என்பது, 2000-2001இல், இரண்டு இடங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் மூலம் ஒவ்வொரு பத்து இடங்களிலும் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரண்டு இடங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. 2000-2001 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, 24.3.2000 அன்று சட்டமன்றப் பேரவையில் வைத்து ஆற்றிய உரையில் நான் குறிப்பிட்டபடி, மாநில அரசுப் பணியிடங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்- பிற்படுத்தப்பட்டோர்- மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் கலைஞர் கூறாததைக் கூறியதாகச் சொல்லி, குற்றமற்றவரை விசாரிக்கச் சொல்வது, அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்றார்.

மார்க்சிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா ஆகியோரின் இடஒதுக்கீடு, அவர்களின் தற்போதைய பிரதிநிதித்துவம் மற்றும் அதன்மீது அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் பற்றிய வெள்ளை அறிக்கை 11.5.2000இல் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் என்று தெரிவிக்கப்பட்ட 5263 பணியிடங்களை ஐந்து ஆண்டு காலத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டதோடு, அதற்கான நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்- மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இவ்வளவு சலுகைகளையும் தி.மு.கழக ஆட்சியிலே செய்தேன் என்பது அந்த வகுப்பிலே உள்ள மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சித் தலைவர்கள் ஞாபகத்திலே வைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ- அந்த வகுப்பைச் சேர்ந்த மக்களும், அந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டவர்களும், நிச்சயமாக மனதிலே வைத்துக் கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அவர்கள் அவ்வாறு நினைவிலே கொள்ளாவிட்டாலும் கூட அந்த மக்களுக்காக இத்தனை சலுகைகளை நாம் செய்தோம் என்ற மனத்திருப்தி எனக்குள்ளது.

★ ★ ★ திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு 1.8.1998 மற்றும் 2.8.1998 ஆகிய நாட்களில், சென்னையில், ஸ்ரீராகவேந்திரா திருமணமண்டபத்தில் கூடியது. அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் முக்கியமான ஒரு தீர்மானமாகும். "தி.மு.க. மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படாத நிலையில் ஜெயலலிதாவின் நிர்ப்பந்தத்திற்கு பா.ஜ.க. அரசு பணிந்துவிட்டது" என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் ஆர்.நல்லக்கண்ணு ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையைத் தொடர்ந்து, தி.மு.கழகத்தின் மீது-குறிப்பாக என் மீது விசாரணை நடத்தப்படக் குழு ஒன்று அமைக்கப்படுமென்று பா.ஜ.க.அரசு முடிவு செய்ததையொட்டி, முதல் தீர்மானம் கழகப் பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தின் வாசகங்கள் வருமாறு:- "நீதிபதி ஜெயின் தனது இடைக்கால அறிக்கையைத் தந்தபோது, அதில் எந்த ஒரு இயக்கத்தையும், தனிப்பட்ட எவரையும் குறிப்பிட்டு குற்றம் சுமத்தவில்லையென்று ஜெயின் அவர்களே தனது இறுதி அறிக்கையில் தொகுதி 6,பக்கம் 60, பத்தி 4இல் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

(There is no indictment in the interim report of any individual or organisation or party regarding any criminal conspiracy to assassinate shri Raji Gandhi). "இறுதி அறிக்கையிலும்கூட, தொகுதி 5, பக்கம் 361, பத்தி 7 இல் சிறப்புப் புலனாய்வுக் குழு சந்திராசாமி மற்றும் மதன் சேவாதாஸ்சிங் ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று புலன் விசாரணை செய்திருந்தால், அது இந்தக் கமிஷன் விசாரணைக்கு உதவிகரமாக இருந்திருக்கும்.

இவர்கள் கூறிய கதைகள் பொய்யாக இருந்திருக்குமேயானால், அது கமிஷனின் பரிசீலனைக்கு வந்திருக்காது. அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையின் அடிப்படையில் அவற்றின் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டிருக்கும்." "சிறப்புப் புலனாய்வுக் குழு திருவாளர்கள் சந்திரசேகர், டி.என்.சேஷன், டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி, செல்வி ஜெயலலிதா மற்றும் பி.வி.நரசிம்மராவ் ஆகியோரையும் கலைஞர் விசாரிக்கவில்லை. ஏனெனில் அப்போது அது தேவையெனக் கருதப்பட வில்லை என்று டி.ஆர்.கார்த்திகேயன் கமிஷன் முன்பு சாட்சியம் அளித்திருக்கிறார்.

பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர் இந்திரஜித் குப்தா "நீதிபதி ஜெயின் அவர்கள் தனது இறுதி அறிக்கையில் மேற்கண்டவாறு தான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, அதில் அவர் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞர் விசாரிக்கப்பட வேண்டுமென்று நீதிபதி, ஜெயின் தனது இறுதி அறிக்கையிலே குறிப்பிடவில்லை.

ஆனால் அவர் அப்படி கூறியிருப்பதுபோலக் கற்பனை செய்து கொண்டு, அது எந்த வகையிலே என்று முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று பா.ஜ.க. அரசு தெரிவித்திருப்பது நிராகரிக்கத்தக்க ஒன்றாகும்." "ஜெயலலிதா போன்ற சிலரது நிர்ப்பந்தம் காரணமாகவே, வழியேதுமின்றி மத்திய அரசு இப்படியொரு குழுவை அமைப்பதாக அறிவித்துள்ளது என்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் தெளிவாகிறது."

"மத்திய பா.ஜ.க.அரசின் சார்பில் முதலில் தயாரித்த A.T.R. நடவடிக்கை குறிப்பில் கலைஞர் அவர்களைப் பற்றி எந்த விதமான குறிப்பும் இல்லை என்றும்-தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையிலே இடம் பெற்றுள்ள அ.தி.மு.க.வைச் சார்ந்த ஒரு சில அமைச்சர்களுடைய தூண்டுதலின் பேரில் அது போன்ற குறிப்பு-நடவடிக்கை அறிக்கையிலே பிறகு வேண்டுமென்றே சேர்க்கப்பட்டிருப்பதாகவும் டெல்லியிலிருந்து வெளிவந்த ஏடுகளிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

"தங்களுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு சிலருடைய தூண்டுதலின் காரணமாக, இப்படிப்பட்ட முறைகேடான செயலில் பா.ஜ.க. ஆட்சி ஈடுபட்டிருப்பதை இப்பொதுக்குழு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது." - இந்தத் தீர்மானம் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களால் முன்மொழியப்பட்டு, நாடாளுமன்ற கழக உறுப்பினர் தம்பி டி.ஆர்.பாலுவினால் வழிமொழியப்பட்டது. அனைத்திந்திய ஏடுகள் எல்லாம் இந்தத் தீர்மானத்தை பெரும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன.

இந்த முதல் தீர்மானம் தவிர வேறு பல முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் பொதுக்குழுவிலே நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவிற்குப் பிறகு செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து, ஜெயின் கமிஷன் குறித்து எழுப்பிய பல கேள்விகளுக்கு நான் விளக்கமளித்தேன். இறுதியாக அவர்கள், "ஆட்சியைக் கலைக்க குழி வெட்டுவதாக நினைக்கிறீர்களா?"

என்று கேட்டதற்கு- "அப்படி குழி வெட்டுவார்களானால், அந்தக் குழியிலே அவர்களே விழுவார்கள்" என்று சொன்னேன். அப்போது நாடாளுமன்றக் கழகக்குழுவின் தலைவராக இருந்த தம்பி முரசொலி மாறன் செய்தியாளர்களை அழைத்து-ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கையிலே மிகக் கடுமையான குற்றச்சாட்டிற்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று 21 பேர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும்-ஆனால் நாடாளுமன்றத்தில் ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கையோடு சேர்த்து, அரசின் சார்பிலே வைக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையிலே அந்த 21 பேர்களோடு என்னுடைய பெயரையும் வேண்டுமென்று சேர்த்திருக்கிறார்கள் என்றும், அது மிகப் பெரிய மோசடி என்றும் விளக்கினார்.

2.8.1998 தேதிய "இந்து" நாளிதழ் - "குற்றச்சாட்டுகளை ஜெயின் கமிஷன் நிராகரித்த பிறகும், அ.தி.மு.க வற்புறுத்தலால் கருணாநிதி மீது விசாரணைக்கு பா.ஜ.க அரசு ஒப்புதல் அளித்துள்ளது" என்று கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தது. "ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கை மீதான மத்திய அரசின் நடவடிக்கை அறிக்கை அரசியல் உள் நோக்கம் கொண்டது" கலைஞர் "தவறான தகவல்களைக் கூறுவது காற்றில்லாத பந்தை உதைப்பது போன்றது" என்று பா.ஜ.க.வின் அரசியலை சாடினார், வி.பி.சிங் என்று அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி கண்டனம் தெரிவித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் திரு.என்.சங்கரய்யா அவர்கள் விடுத்த அறிக்கையில்- "ஜெயின் கமிஷன் கூறாததைக் கூறியதாகச் சொல்லி கலைஞரை விசாரிக்க வேண்டுமென்பது அரசியல் உள் நோக்கம் கொண்டது" என்று கண்டித்திருந்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த பெரியவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள், "ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கையில் தி.மு.க. மீது எந்தக் குற்றமும் சுமத்தவில்லை - ஜெயலலிதாவின் நிர்ப்பந்தத்திற்கு மத்திய அரசு பணிந்து விட்டது" என்று அறிக்கை விடுத்தார்.

அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் இந்திரஜித் குப்தா அவர்களும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் அவர்களும் அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்து பேட்டி கொடுத்தார்கள். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் ஒரு நீண்ட அறிக்கையையே, ஜெயின் கமிஷன் அறிக்கை குறித்து வெளியிட்டிருந்தார்- அந்த அறிக்கையில் வி.பி.சிங் தெரிவித்திருந்ததாவது:- "கடந்த டிசம்பரில் வெளிவந்த பத்திரிகைச் செய்திக்குப் பதிலளித்த போது, நீதிபதி ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை, காற்றில்லாத கால்பந்தை உதைப்பது போன்றது என்று நான் தெரிவித்திருந்தேன்.

அவர் கொடுத்த இடைக்கால அறிக்கையின் "முடிவுகள்" பலவற்றில் அவரே பின் வாங்கியுள்ளார் என்பதைத் தவிர இறுதி அறிக்கையில் சிறப்பம்சம் ஏதுமில்லை. "தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், திரு.ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணம் என்று இடைக்கால அறிக்கையில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இறுதி அறிக்கையில் அவரே பின்வாங்கி, அது தமிழ் பேசும் தமிழர்கள் அனைவரையும் குறிப்பது அல்ல என்று விளக்கியுள்ளார். "அரசு தயாரித்து, நாடாளுமன்றத்திற்கு அளித்த நடவடிக்கை அறிக்கையில், ஜெயின் கமிஷனின் முடிவுகள் திரித்துக் கூறப்பட்டுள்ளன என்பதோடு, அது அப்பட்டமான அரசியல் நோக்கம் கொண்டதாகவும் உள்ளது.

திரு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசை நேர்மையற்ற முறையில் கலைப்பதற்காக வந்த வற்புறுத்தல்களைப் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் இது வரை தடுத்துள்ளார். இருப்பினும் நடவடிக்கை அறிக்கை வேறு விதமாகக் கூறுகிறது. இதில் வற்புறுத்தலுக்குப் பணிந்து செல்லும் அறிகுறிகள் தெரிகின்றன. "தொகுதி 5,பாகம் 3, அத்தியாயம் 8இல் ராஜீவ்காந்தி படுகொலையில் ஐயத்திற்குரியவர்களின் பங்கு பற்றி நீதிபதி ஜெயின் விவரித்துள்ளார்.

இந்த அத்தியாயத்தில் திரு.கருணாநிதியின் பெயர் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை என்றாலும், நடவடிக்கை அறிக்கையில் திரு.கருணாநிதியின் பெயர் ராஜீவ் காந்தி படுகொலையில் ஐயத்திற்குரியவர்களின் பங்கு என்ற தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது. இது, அவரின் பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே உண்மைகளைத் திரித்துக் கூறியதாகும். ராஜீவ்காந்தி படுகொலையில் ஐயத்திற்குரியவர்களின் பங்கு பற்றி விவரிக்கப்பட்டுள்ள அத்தியாயத்தில், திரு.கருணாநிதியின் பெயரைக் காட்டும்படி நான் அரசுக்கு அறைகூவல் விடுக்கின்றேன்.

இது, தவறான தகவல்களை அளிப்பதன் மூலம் கருணாநிதி அரசைக் கலைப்பற்காகப் பொது மக்களின் மனதைத் தயார்படுத்துவதற்கான ஒரு முயற்சி இல்லையா? நீதிபதி ஜெயின் செய்யத் துணியாததை கேவலமாக மத்திய அரசு செய்துள்ளது." கலைஞர் "ஜெயின் கமிஷனுடைய இறுதி அறிக்கையிலே திரு.கருணாநிதி மீண்டும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு இவ்வாறு செய்யத் தீர்மானித்துள்ளது.

இது வெறும் அரசியல் உள் நோக்கம் கொண்டது-மற்றும் பாரபட்சமுடையது." என்று வி.பி.சிங்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ★ ★ ★ இதே போன்ற அறைகூவலை நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தம்பி முரசொலி மாறனும் கடுமையாகத் தொடுத்து, அரசு நிலைமையை விளக்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் உள்துறை அமைச்சராக இருந்த திரு.அத்வானி அவர்களுக்கு 7.8.1998 தேதியிட்டு, விவரங்களை யெல்லாம் தெளிவாக எழுதி கடிதம் மூலமாகவும் அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்திற்கு உள்துறை அமைச்சர் அத்வானி அவர்கள் 19.8.1998 தேதியிட்டு பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில்- "அன்புள்ள மாறன் அவர்களுக்கு, ஜெயின் விசாரணைக் கமிஷன் இறுதி அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கையில் திருத்தம் தொடர்பாக, 1998 ஆகஸ்ட் 7ஆம் தேதி தாங்கள் எழுதிய கடிதத்தை அன்புடன் கவனத்தில் கொள்ளவும். அது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறாகும்."

"எனவே மக்களவை மற்றும் மாநிலங்களவையின் செயலாளர்களுக்கும் இது தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்யும்படி நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மக்களவை மற்றும் மாநிலங்களவைச் செயலாளர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று எழுதியிருந்தார்.

இவ்வளவிற்கும் மேலாக, நீதிபதி எம்.சி.ஜெயின் அளித்த சிறப்புப் பேட்டியிலேயே-ராஜீவ் காந்தி கொலைச் சதி தொடர்பான தமது விசாரணை அறிக்கையில், சந்தேகத்திற்கு உரியவர்கள் பட்டியலில் எனது பெயரை, தான் ஒரு போதும் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்திருந்தார். ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித் திட்டம் பற்றி விசாரணை நடத்திய அவர், இது தொடர்பாக அளித்த சிறப்புப் பேட்டியில், என்னுடைய பெயரை, தான் குறிப்பிடாத நிலையில், மத்திய அரசு, தனது அறிக்கையைச் சரியாகப் படிக்காமல், நடவடிக்கை அறிக்கையைத் தயார் செய்திருப்பதாகப் புகார் கூறினார்.

என்மீது, "சந்தேகப்பட எவ்வித ஆதாரமும் இல்லை" என்றும், ஜெயின் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.