உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தாண்டிய தடைக்கற்கள்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தாண்டிய தடைக்கற்கள்! · 348 / 391

கலைஞர் 36. தாண்டிய தடைக்கற்கள்! அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரசாமி ராஜா மக்கள் நலனுக்காக இரண்டு முறை கொடிய சிறைவாசம் அனுபவித்தார். கா விரிப் பிரச்சினையில் ஓர் உடன்பாடு காணப்பட்ட நேரத்தில், சுதந்திரத் திருநாள் பொன்விழா ஆண்டு நிறைவு விழா அரசின் சார்பிலும், தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பிலும் இணைந்து, சிறப்பாக மூன்றுநாள் நிகழ்வுகளாக சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சீரணி அரங்கத்தில் நடைபெற்றது.

என்னுடைய தலைமையில், முதல்நாள் தமிழக ஆளுநராக இருந்த செல்வி பாத்திமா பீவி அவர்கள் தொடங்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக மாநில ஆளுநர் திரு.குர்ஷித் ஆலம்கான் அவர்களும், புதுவை துணைநிலை ஆளுநர் திருமதி ரஜினிராய் அவர்களும், கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அவர்களும், அறநிலையத்துறை-தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முனைவர் தமிழ்க் குடிமகன் அவர்களும், சென்னை மாநகர மேயராக அப்போதிருந்த தம்பி மு.க.ஸ்டாலின், செய்தித் துறை அமைச்சராக இருந்த தம்பி முல்லை வேந்தன் ஆகியோரும் தொடக்க விழா நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார்கள்.

அந்த விழாவில் நான் பேச்சைத் துவக்குகின்ற நிலையில்- "இந்த விழாவில் ஒரு மாநிலம் தான் பாக்கி, தமிழ் மாநிலம், கர்நாடக மாநிலம், புதுவை மாநிலம் கலந்து கொள்ளும் விழாவில், கேரள மாநிலம் தான் வரவில்லை. அதை ஓரளவிற்குத் தமிழ் மாநில ஆளுநர் அவர்கள் நிறைவு செய்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். (ஆளுநர் பாத்திமா பீவி கேரளாவைச் சேர்ந்தவர்) கர்நாடக மாநில ஆளுநர் மேதகு குர்ஷித் ஆலம்கான் அவர்களும் இங்கே வந்திருக்கின்ற காரணத்தால், நான் இந்தச் செய்தியை கூறும்போது அவரும் மகிழ்வார் என்பதற்காக அறிவிக்கின்றேன்.

I Want to inform you all that the DRAFT for the Cauvery issue has been approved and notified by the Central Government just half an hour back. I have received this information from Delhi and I want to thank all concerned, Particularly our Prime Minister of India on behalf of the people of Tamil Nadu (காவிரிப் பிரச்சினையின் வரைவுத் திட்டம் மத்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கெல்லாம் தெரிவிக்க விரும்புகிறேன்.

அரைமணி நேரத்திற்கு முன்புதான் டெல்லியிலிருந்து எனக்கு இந்தச் செய்தி கிட்டியது. இதிலே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சுதந்திரப் பொன்விழா ஆண்டில், சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றிய போது... குறிப்பாக நம்முடைய இந்தியப் பிரதமர் அவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் என்னுடைய நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.) சுதந்திரம் பெறுவதற்கு எவ்வளவு கஷ்ட நஷ்டங்களைப் பட்டோமோ, அதைப் போலவே இந்தக் காவிரி ஒப்பந்தத்தை- இந்தத் தீர்வை- அடை வதற்கும் பல கஷ்ட- நஷ்டங்களை நாம் பட்டிருக்கிறோம்.

சுதந்திரம் கிடைக்கின்ற நேரத்தில் எவ்வளவு இடையூறுகள் இருந்ததோ, கலைஞர் டெல்லியில் சுதந்திரப் பொன்விழா பேரணியில் பங்குபெறச் சென்ற 50 தியாகிகளுக்கு கதராடை போர்த்தி, பொற்கிழி வழங்கினேன். அதைப் போலவே காவிரிப் பிரச்சினை தீருகின்ற நேரத்திலும் பல இடையூறுகள் விளைந்தன. "தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோள் உண்டெனச் சிரிப்போம்" என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய கவிதை வரிகளுக்கேற்ப தடைக்கற்களையெல்லாம் கடந்து, இன்று நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்பதைப் பெருந்தன்மையோடு- பெருமிதத்தோடு அறிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டிற்கு மாத்திரம் வெற்றி என்று நான் சொல்லமாட்டேன்-சொல்லவில்லை. இந்த ஒப்பந்தம் கர்நாடக மாநிலத்திற்கும்-கேரள மாநிலத்திற்கும்-புதுவை மாநிலத்திற்கும்-இந்த மாநிலங்களிலே உள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்துள்ள நல்ல செய்தி என்பதை இந்தப் பொன்விழா ஆண்டின் நிறைவு விழாவிலே அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.

சுதந்திரப் பொன்விழா ஆண்டின் நிறைவு நாளாகவும்-51 ஆம் ஆண்டு சுதந்திர தின நாளாகவும் கொண்டாடப்பட்ட ஆகஸ்ட், 15, 1998 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில், கோட்டையில், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினேன். 1972ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டபோதும் 1997 ஆம் ஆண்டு தொடங்கி சுதந்திரப் பொன்விழா கொண்டாடப்பட்டபோதும்- தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்து, அதனை நடத்திய பெருமை எனக்கு உண்டு.

தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நான் உரையாற்றும் போது-கழக ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டன என்ற பட்டியலை யெல்லாம் தொகுத்துக் கூறினேன். குறிப்பாக, 1997 ஆம் ஆண்டு சுதந்திர தினப்பொன்விழா ஆண்டில், திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை சென்று உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவு கூரும் வகையில், யாத்திரை ஒன்றை 8.8.1997இல் திருச்சியில் நான் தொடங்கி வைத்தது குறித்தும்- டெல்லியில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் பொன்விழா பேரணியில் பங்கு பெறச் சென்ற 50 தியாகிகளுக்கு, சென்னை ராஜாஜி மண்டபத்தில் வழியனுப்பு விழா நடத்தி, அந்தத் தியாகிகள் ஒவ்வொருவருக்கும் அரசின் சார்பில் நானே கதராடையைப் போர்த்தி, பொற்கிழி வழங்கியதையும்- திருநெல்வேலி மாவட்டத்தில், நெற்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவன் மாளிகை ஒன்றை அமைக்க 50 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது குறித்தும்- தியாகச் செம்மல் கக்கன் அவர்களுக்கு மதுரையில் 31.8.1997 அன்று சிலை திறந்தது பற்றியும்- வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்கள் வாழ்ந்த திருமங்கலம் வீட்டினை அவர் நினைவைப் போற்றும் கலைஞர் வகையில் 60 இலட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபம்-நூல் நிலையம் ஆகியவைகளை அமைக்க ஒப்புதல் அளித்ததை விளக்கியும்- சுதந்திரப் பொன்விழாவினையொட்டி, சென்னையில் தியாகிகள் மணிமண்டபம் ஒன்றை எழுப்ப முடிவு செய்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததையும்- பொன் விழாவின் நினைவாக போர் நினைவுச் சின்னம் அருகில் பொன்விழா நினைவுச் சின்னம் அமைத்ததையும்- பொதுவுடைமை வீரர் ஜீவாவுக்கு நாகர்கோவிலில் நினைவுச் சின்னம் உருவாக்கியதையும்- நேதாஜிக்கு சென்னையில் காமராஜர் சாலையில் முழு உருவச் சிலை எழுப்பியதையும்- வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து, தமிழ்நாட்டில் வேலூரில் 1806ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சிப்பாய் கலகத்தின் போது-உயிர் நீத்தோர் தியாகத்தைப் போற்றிட வேலூரில் நினைவுத் தூண் அமைக்க ஏற்பாடு செய்ததையும்- எழும்பூரில் போராட்ட வீராங்கனை ருக்குமணி லட்சுமிபதிக்குச் சிலை திறந்து, அவர் வாழ்ந்த மார்ஷல் சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்டியதையும்- ருக்மணி லட்சுமிபதிக்கும், சர்தார் வேதரத்தினம் பிள்ளை க்கும் அஞ்சல் தலை வெளியிடச் செய்ததையும்- முன்னாள் முதல்வர் பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நினைவகம் அமைத்ததையும்- முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் நூற்றாண்டு விழாவினை ராஜபாளையத்தில் கொண்டாடி, சென்னையில் அவர் வாழ்ந்த சாலைக்கு அவர் பெயர் சூட்டியதையும்- 1995ஆம் ஆண்டிலேயே கொண்டாடி இருக்க வேண்டிய முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை-கழக ஆட்சி வந்ததும், சுதந்திரப் பொன்விழா நினைவாக, ஒரு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்தேன்.

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று சென்னையிலே கொண்டாடியதையும், அரசினர் தோட்டத்திற்கு ஓமந்தூரார் வளாகம் எனப்பெயர் சூட்டியதையும்- தமிழகத்தில் சாதி சமயப் பிணக்குகளை அகற்ற கழக ஆட்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் பற்றியும்- தியாகிகளும், சான்றோர்களும் எழுதிய நூல்கள் எல்லாம், அரசின் சார்பில் அரசுடைமையாக்கப்பட்டு, அவர்களின் வாரிசுகளுக்குப் பரிவுத்தொகைகள் வழங்கப்பட்டதையும் தொகுத்துக் கூறினேன். கொடியேற்றுவதற்கு முன்பு காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை முதல்வர் என்ற முறையில் ஏற்றுக் கொண்டேன்.

முப்படை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளைத் தலைமைச் செயலாளர் எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். நாட்டுடைமை ஆக்கப் பட்ட நூல்களை எழுதிய 11 தேசிய தமிழ் எழுத்தாளர்கள் குடும்பங்களுக்குப் பரிவுத் தொகைகளை அந்த நிகழ்ச்சியின் போது வழங்கினேன். 50 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தேன். ★ ★ ★ 1998ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, காவிரி டெல்டா பகுதியில் தூர் வாரும் கலைஞர் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியதோடு- அரசினர் தோட்டத்திற்கு அவரது பெயரையும் சூட்டினேன்.

பணியினை முதன் முதலாக எடுத்துக் கொண்டு, அதிலே பெரும் கவனம் செலுத்தியது. காவிரி டெல்டா பகுதியில் மொத்தம் 14,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாசன ஆதார நீர்வரத்துகளும், வடிகால் ஆகார வாய்க்கால்களும் இருக்கின்றன. இவை அனைத்திலும் 1934 ஆம் ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்ட காலத்திலிருந்து 1997 ஆம் ஆண்டுவரை, அவ்வப்போது செய்யப்பட்ட குடிமராமத்து அளவிலான சிறு சிறு தூர் வாரும் பணிகளைத் தவிர, பெருமளவிற்குத் தூர்வாரும் பணி நடத்தப்படவே இல்லை.

98ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான்- பெருமளவில் தூர்வாரும் பணியை நிறைவேற்ற - 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. 14ஆயிரம் கிலோ மீட்டர் நீர் வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்கள் "ஏ" மற்றும் "பி" என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டது. இரண்டுமே பொதுப் பணித்துறைக்கு உட்பட்டவை ஆகும். தயாரிக்கப்பட்ட 154 கோடி ரூபாய் மதிப்பீட்டுக் திட்டத்தில், முதல் கட்டமாக 1997 ஆம் ஆண்டு பத்து கோடி ரூபாய் செலவில் ஆறுகளிலும், வடிகால்களிலும் "ஏ" மற்றும் "பி" பிரிவு பாசன வாய்க்கால்களிலும் -1998ஆம் ஆண்டு 20 கோடி ரூபாய்ச் செலவில் ஆறுகளிலும், வடிகால்களிலும், பாசன கால்வாய்களிலும் தூர்வாரும் பணி மேற்கொள்ளப் பட்டு பெரும் பகுதி நிறைவேற்றப்பட்டது.

அந்த இரண்டாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 4000 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் நிறைவேற்றப்பட்டன. 22.6.1998 அன்று தஞ்சை, திருவாரூர்,நாகை மாவட்டங்களில் காவிரியின் கடைமடைப் பகுதிகளில் ஏரிகளிலும், வாய்க்கால்களிலும், குளங்களிலும் நடைபெற்று வந்த தூர்வாரும் பணிகளை நான் நேரடியாக நடந்தே சென்று பார்வையிட்டேன். தூர்வாரும் பணி பாதியில் நின்று விட்டால், தண்ணீர் வரும் போது பணி நின்ற இடத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணி முழுமையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, மேட்டூர் அணை திறப்பதை ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கச் செய்தேன்.

காவிரி பாசனப் பகுதியில் முழு வீச்சில் தூர்வாரும் பணி வரலாறு காணாத அளவில் நடைபெற்றதால்-மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டவுடன், எவ்விதத் தடங்கலும் இன்றி வேகமாக விவசாயத்திற்குத் தண்ணீர் சென்று பாய்ந்திட வழிவகை உண்டாயிற்று. திருச்சியிலிருந்து புறப்பட்டு திருவெறும்பூர், துவாக்குடி, வலத்தங்குடி, திருமலை சத்திரம், வல்லம் வழியாக தஞ்சையை அடைந்து-அங்கிருந்து பள்ளி அக்ரஹாரம், கண்டியூர், திருப்பலகம், வீர மாங்குடி ஆகிய இடங்களுக்குச் சென்று, தூர்வாரும் பணி நடைபெற்ற இடங்களையெல்லாம் பார்வையிட்டேன்.

பின்னர் பேரளம், பூந்தோட்டம் வழியாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாஞ்சியம் திருவிடைச்சேரி, நாரணமங்கலம்,புத்தாறு, நெடுஞ்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளைப் கலைஞர் பார்வையிட்டேன். திருவாரூர் அருகே கச்சநகரம் என்ற இடத்தில் சோழவதி ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்ட போது செய்தியாளர்கள் என்னை அங்கேயே கண்டு பேட்டி கேட்டனர். அதன் விவரம் வருமாறு:- செய்தியாளர்:- காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளில் இதுவரை ஐந்து கோடி ரூபாய்க்குத் தான் பணிகள் நடைபெற்றுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் பணிகளைப் பார்வையிட நியமிக்கப்பட்ட அ.தி.மு.க. குழுவினர் 8 கோடி ரூபாய்க்குப் பணிகள் நடைபெற்றிருப்பதாகக் கூறியுள்ளனர். இது முரண்பாடாகத் தெரிகிறதே? நான்:- நீங்களே நேரில் நடைபெற்றுவரும் பணிகளைப் பார்த்துக் கொண்டு வருகிறீர்கள். இதில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. செய்தியாளர்:-இந்தப் பணிகளால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும்? நான்:-இத்திட்டத்தினால், பன்னிரெண்டரை இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்.

இதில் மூன்றின் ஒரு பகுதி நிலங்கள் தற்போது நடை பெற்று வரும் பணிகளால் பயனடையும். மேலும் வெள்ளச் சேதங்கள் அடிக்கடி ஏற்படாது. பயிர்கள் பாதிக்கப்படாது. விளைச்சல் அதிகமாகும். நீர்ப்பாசன வசதி அதிகரிக்கும். உணவு உற்பத்தி பெருகும். செய்தியாளர்:- ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில இந்தப் பணிகள் குறித்து குறை கூறியிருக்கிறாரே? நான்:- ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கோ.சி.மணியின் புதல்வர் மதிவாணனுக்கு டெண்டர் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கோ.சி.மணிக்கு மதிவாணன் என்ற பெயர் கொண்ட பிள்ளையே கிடையாது. அதற்காக அமைந்த ஐந்து பேர் கொண்ட குழுவில், முன்னாள் அ.தி.மு.க. எம்.எல். ஏ.துரை. கோவிந்தராஜனும் இருக்கிறார். அவரது மகன் டி.ஜி.பாண்டியன் என்பவர் கல்லணைக் கால்வாய் சீரமைப்புப் பணியில் பத்து கிலோமீட்டர் தூர்வார, சுமார் 14 லட்ச ரூபாய்க்குக் காண்ட்ராக்ட் எடுத்துள்ளார். அதில் அவர் இதுவரை 8 லட்ச ரூபாய் அளவிற்கான பணிகளைத் தான் முடித்திருக்கிறார்.

அது போல இன்னும் அ.தி.மு.க. பிரமுகர்கள் கூட காண்ட்ராக்ட் எடுத்துள்ளார்கள். சசிகலாவின் உறவினர்களும் காண்ட்ராக்ட் எடுத்துள்ளார்கள். அவர்கள் தான் இந்தப் பணிகளில் சுணக்கம் காட்டுகிறார்கள். செய்தியாளர்:-சசிகலாவின் உறவினர்களுக்கும், அ.தி.மு.க. வினருக்கும் எப்படி காண்ட்ராக்ட் கொடுக்கப்படுகிறது? நான்:-நாங்கள் ஆட்சிக்கு வந்த போது ஒளிவு மறைவில்லாத திறந்த வெளி ஒப்பந்த முறைதான் கடைப்பிடிக்கப்படும் என்று கூறியிருக்கிறோம்.

அதன் அடிப்படையில் கட்சி வேறுபாடு இல்லாமல், இவ்வாறு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுகின்றன. கலைஞர் - இவ்வாறு பேட்டியளித்தேன். முதல் நாள் சுமார் 400கி.மீ. தொலைவுக்குத் தூர்வாரும் பணிகளை இரவு 7 மணிவரை பார்வையிட்டேன். தொடர்ந்து மறுநாளும், அதாவது 23.6.1998 அன்றும் திருவாரூரிலிருந்து பயணத்தைத் தொடங்கி, பாப்பனாறு கால்வாய்ப் பணிகளைப் பார்வையிட்டேன். பிறகு கச்சனம் வழியாக திருக்குவளை சென்றேன். அங்கிருந்து எட்டுக்குடி சென்று, அங்கேயுள்ள வடக்கு காட்டாறில் தூர்வாரும் பணிகளைப் பார்த்தேன்.

பின் சீராவட்டம், அருந்தவபுலம் அடப்பாறிலும், மரைக்காகோரையாற்றிலும், பாமணியாற்றிலும், வீரக்குறிச்சி காட்டாற்றிலும், ஒரத்தநாட்டில் காரிமுத்து ஏரியிலும் நடைபெற

்று வந்த தூர்வாரும் பணிகளைப் பார்த்தேன். 22.6.1998 தேதிய திருச்சி "மாலைமுரசு" நாளிதழ். " 100 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரும் பணி செய்து விவசாயிகளுக்கு அருமருந்தானார் சரித்திர சாதனை படைத்த கலைஞர்" என்ற தலைப்பில், தூர்வாரும் பணி குறித்து நீண்டதோர் கட்டுரையினை எழுதியிருந்தது. அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் நினைவில் கொள்ளத் தக்கவை. "அகத்தியன்தான் காவிரி நதியை தனது கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்தான் என்றும், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க, விநாயகப் பெருமான் காகம் உருவெடுத்து கமண்டல நீரைக் கொட்டிவிட, அது பிரவாகம் எடுத்து சீறிப்பாய்ந்து, அகண்ட காரிவியாக மாறி, தமிழகத்தில் ஓடி நாட்டுக்கு வளம் சேர்த்து, காவிரிப்பூம்பட்டினத்தில் வங்கக்கடலோடு கலந்தது என்று கூறுகிறது புராண வரலாறு."

"இந்தப் புராண வரலாற்றில் காவிரி நதிதான் மற்ற ஒன்பது நதிகளுக்கெல்லாம் சிறந்தது என்றும், மற்ற நதிகளில் வணங்கத்தக்கவள் காவிரித்தாய் என்றும் வர்ணிக்கப்படுகிறது. புராண வரலாறு ஒரு பக்கம் இருக்கட்டும். கரிகால் சோழன் கல்லணையைக் கட்டுவதற்கு முன்பே சசிசேகர சோழன் என்பவன் கல்லணை இருக்கும் இடத்தில், அந்த அணை உருவானதற்கு முன்னதாகவே, காவிரியில் வெள்ளம் வந்ததால் காவிரியில் ஐம்பொன்னால் அணையைக் கட்டினான் என்று வரலாற்றுச் செய்தி கூறுகிறது."

"சித்திரதன்வன் " என்ற சோழ மன்னன் " காவிரிப் புனல் கொணர்ந்த சோழன் " என்று அழைக்கப்படுகிறான். இவனது காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம். சித்திரதன்வன் காலத்தில் தடைப்பட்ட காவிரி நீரைக் கொணர்ந்து புகழ் பெற்று இருக்கிறான் இம்மன்னன். பிற்காலத்தில் சோழநாட்டை அரசாண்ட சோழன் " கரிகால் வளத்தான் இன்றைய கல்லணையைக் கட்டினான்."

"இப்படி காவிரிக்கு வளம் சேர்த்தவர்கள் வரிசையில் பல நூற்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்பு நமது முதலமைச்சர் கருணாநிதி இடம் பெறுகிறார். இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. எல்லோரும் வரலாற்றில் இடம் பெற்றுவிட முடியாது-அனைவராலுமே செயற்கரிய சாதனைகளைப் படைத்துவிட முடியாது."

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விட வேண்டும்" என்பது வள்ளுவர் கருத்து. ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்-அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் என்பதைவிட, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதே வரலாற்றைப் படைப்பதற்குக் கருப்பொருளாக இருக்கும்."

கலைஞர் "ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சீமைக் காட்டாமணக்கு வெட்ட டெல்டா பகுதிக்கு மட்டும் ரூ.50 லட்சத்திற்கு மேல் செலவிடப்பட்டன. சீமைக் காட்டாமணக்குச் செடியை வெட்டாமலேயே அப்போதைய ஆளும் கட்சியினர் பலர் பொதுப்பணித் துறையில் பில்களை வெட்டிப் பணம் பறித்தனர். சிலர் வெட்டினர். ஆனால் மேலோட்டமாக வெட்டி, பில் தொகையைக் கேட்டனர். பில் தொகையை அனுமதிக்க அதிகாரிகள் ஆறுகளைப் பார்வையிட்ட போது, வெட்டிய இடத்தில் முன்பிருந்த உயரத்தை விட சீமை காட்டாமணக்குச் செடிகள் அதிக உயரம் வளர்ந்திருந்தன.

வெட்டாமல், பில் வெட்டியவர்கள் பயன் அடைந்தார்கள்." "1989 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணி வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஒவ்வொரு கிராமமாக எடுத்து, பாசனத்திற்கு வரும் தண்ணீர் வீணாகாமல் தடுக்க, பாசன வடிகால்களில் சிமெண்ட் தடுப்புச் சுவர்-பாசனத் தடுப்புகள்- திறப்புகள் அமைத்தார். இப்பணிகளுக்கு முதல்வருடைய முழு ஆதரவும், கோ.சி.மணிக்குக் கிடைத்தது. திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்குள் குமாரசாமி ராஜா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினேன் "தேசத் தலைவர்களை - தேசத் தியாகிகளை - மதிக்கின்ற இயல்பு படைத்தவர் கலைஞர்" என்றார், குமரி அனந்தன் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டது.

அடுத்து வந்த ஜெயலலிதா விவசாயிகளுக்காக என்ன செய்தார் என்பதை நாடு நன்கறியும்." "ஆறுகள், கால்வாய்கள் தூர் எடுத்த பகுதிகளைப் பார்வையிட முதல் அமைச்சர் கருணாநிதி இன்று தஞ்சை டெல்டா பகுதிக்கு வந்துள்ளார். நெல்லுக்கு ஆங்காங்கே இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு இனி புசியாது. நெல்லுக்கு இறைத்த நீர் குறைவாக வந்தாலும், கடைமடைப் பகுதி வரைச் சென்று நெல்லுக்கே அங்கு பாயும். இனி வெள்ளம் வராது-உடைப்பு ஏற்படாது- உயிர்ச் சேதமும் இல்லை- பயிர்ச் சேதமும் வராது-உழவர்கள் மகிழ்ச்சியோடு கருணாநிதியை வரவேற்றார்கள்.

நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்குச் சேராதவாறு ஆறுகளை தூர் எடுத்தது போன்று இப்பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியும், விழலுக்கு இறைத்த நீராக மாறாமல்-கறந்த பால் கறந்தபடி என்ற நிலையில், நூற்றுக்கு நூறு அப்பழுக்கு இன்றி நிறைவேறி இருக்கின்றன."

"கருணாநிதியைப் பாராட்ட வேண்டும் என்ற கடமைப் பாடு எதுவும் நமக்கு இல்லை. ஆனால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்த ஆறுகள்-கால்வாய்கள் கரையைக் கண்டறிய முடியாது இருந்த பாசன வடிகால்கள்-ஆகியவற்றை மீட்டு வெளிக் கொணர்ந்து, பாசனத்திற்கு வழி வகுத்த முதல்வர் கருணாநிதியை உழவர்களும், உழவே தலை என நம்பியிருக்கும் தமிழர்களும் பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?"

- இவ்வாறு தூர்வாரும் பணியைப் பற்றி திருச்சி "மாலைமுரசு" நீண்ட கட்டுரை தீட்டிப் பாராட்டியிருந்தது. கலைஞர் தமிழகம் முழுவதும் முடுக்கி விடப்பட்ட தூர்வாரும் பணிகளைப் பல நாட்கள் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினேன். மாலை முரசு மட்டுமல்ல-ஆங்கில நாளிதழ்களான " இந்து ", " இந்தியன் எக்ஸ்பிரஸ் " போன்ற ஏடுகளும் தூர்வாரும் பணியை மேற்கொண்ட கழக அரசினைப் பெரிதும் பாராட்டி எழுதியிருந்தன. 5.7.1998 அன்று மீண்டும் ஒருமுறை டெல்டா பகுதிகளுக்குச் சென்று, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தஞ்சை, கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டேன்.

அதுபோலவே 8.7.1998 அன்று தென் மாவட்டங்களுக்குச் சென்று அங்கே தூர்வாரும் பணிகளை மேற்பார்வையிட்டேன். மதுரைக்கு தூர்வாரும் பகுதிகளைக் காணச் சென்ற நான், 9.7.1998 அன்று - மறைந்தும் மறையாமல் - நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த இருக்கின்ற பெரியவர்- தேசத்தியாகி - நல்லவர் - வல்லவர் - பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவிலே - ராஜபாளையத்தில் கலந்து கொண்டேன். ராஜபாளையம் நகரமே அன்றைக்கு விழாக்கோலம் பூண்டிருந்தது.

ராஜபாளையத்திற்கு வருகின்ற சாலைகள் எல்லாம் ஆர்த்தெழுந்து அலங்காரம் பூண்டு நின்றன. த.மா.கா. தலைவர் மூப்பனார் , குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா , இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், அழகர் ராஜா ஆகியோரும் அந்த காவிரி கடைமடைப் பகுதிகளில் நடைபெறும் பணிகளை அமைச்சர்களுடன் பார்வையிட்டேன் விழாவிலே கலந்து கொண்டனர். குமாரசாமி ராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி மக்களுக்குப் பயன்படக்கூடிய அளவிற்குத் திருமண மண்டபம், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் நிறைந்த ஒரு நூலகம்-ஆகியவையும் ராஜபாளையத்தில் திறக்கப்பட்டன.

அந்த விழாவில் பேசிய குமரி அனந்தன், "தேசத் தலைவர்களை - தேசத் தியாகிகளை மதிக்கின்ற இயல்பு படைத்தவர் முதலமைச்சர் கலைஞர்" என்று குறிப்பிட்டார். இன்று நேற்றுல்ல-என்றைக்குமே எத்தனை ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, நாட்டிற்காக மொழிக்காக- இனத்திற்காக- தங்களை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்ட வர்கள் யாராக இருந்தாலும்-அவர்களைப் போற்றுவதிலும்- புகழ்வதிலும்- அவர்களுடைய நினைவு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றெண்ணி காரியமாற்றுவதிலும் -நான் என்றைக்கும் யாருக்கும் பின்வாங்கியவன் அல்லன்.

அந்த வகையிலே எத்தனை நினைவுச் சின்னங்கள் தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சியிலே ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை சில நாட்களுக்கு முன்புகூட விரிவாக 'முரசொலி'யில் எழுதியிருந்ததை அனைவரும் அறிவார்கள். இதற்குச் சான்றாக, ராமசுப்பிரமணியராஜா பேசும்போது, குமாரசாமி ராஜா அவர்களுடைய பெயரை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சூட்டவேண்டு- கலைஞர் மென்று கோரிக்கை வைத்ததையும், அதனை நான் 1989-90 இல் ஏற்றுக்கொண்டதையும் கூறி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த முல்லை வேந்தன் பேசும்போது, "குமாரசாமி ராஜாவும் சில கொள்கைகளுக்காகத் தன்னுடைய பதவியை இழக்க நேரிட்டது-கலைஞரும் அவ்வாறே பதவியிழக்க நேரிட்டது" என்று குறிப்பிட்டார். பதவியிழந்த ஒரு சம்பவம் மாத்திரமல்ல-இளமைக் கால சம்பவங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டால், அவருக்கும், எனக்கும் சில பொருத்தமான நிகழ்வுகள் உள்ளதை அறியலாம். குமாரசாமி ராஜா உயர்நிலைப் பள்ளியிலே படித்தபோது, ராஜபாளையத்திலிருந்து திருவில்லிப்புத்தூருக்கு ஏழு மைல் தூரம் நடந்தே சென்றுதான் படித்தார்.

நானும்-ஏழு மைல் தூரம் நடந்து சென்றுதான் ரயிலேறி, திருவாரூர் சென்று படித்தேன். இன்னொன்று, அவரும் எஸ்.எஸ்.எல்.சி தேர்விலே பெயிலானவர்-நானும் அவ்வண்ணமே. அவர் பெயிலானவுடன், நண்பர்கள் வருத்தப்பட்டபோது, "ஏன் இதற்கெல்லாம் வருத்தப்படுகிறீர்கள்? இதற்கெல்லாம் வருத்தப்படலாமா?"

என்று சொன்னாராம். அதே மாதிரி தான் நானும் பெயிலானவுடன் நண்பர்களிடம், "பெரியாரோடு சேர்ந்து நான் சுற்றுப் பயணம் போனதனால்தான் பெயிலே ஆனேன்" என்றேன். அதைப் போலவே குமாரசாமி ராஜா அவர்களும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டதன் காரணமாகத் தான் பெயிலானார். அடுத்து குமாரசாமி ராஜாவிற்குக் கால்பந்து விளையாட்டிலேதான் அதிகப் பிரியம் என்றும், "அந்த விளையாட்டிலே கீழே விழுந்து ஒரு பாதிப் பல்லை உடைத்துக் கொண்டேன்" என்றும் அவருடைய இளமைக் கால வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனக்கும் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. திருவாரூரில் படித்த காலத்தில், கால்பந்து பந்தயங்கள் பலவற்றில் கலந்து கொண்டிருக்கின்றேன். பல்லை உடைத்துக்கொள்ளவில்லை- ஆனால் நெற்றியில் ஒரு காயம் இன்றைக்கும் இருக்கிறது. கால்பந்து விளையாட்டின் போது விழுந்ததால் ஏற்பட்ட தழும்பு அது. குமாரசாமி ராஜா-பெரிய ராஜா குடும்பத்திலே பிறந்தவர்-செல்வந்தர்-செல்வம் கொழிக்கின்ற அளவிற்கு நிலபுலன்களும் தோட்டம் துரவுகளும் கொண்டவர்!

அந்த இனிய வாழ்வை-சுக வாழ்வை விரும்பாமல், ஒருமுறை ஓராண்டு காலமும், இன்னொரு முறை ஒன்பது மாத காலமும் சிறையிலே அடைக்கப்பட்டு நாட்டிற்காக-மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அந்த விழாவிலே எனக்கு முன்னால் பேசியவர்கள். அமைச்சர்கள் எல்லாம் குடியிருக்கின்ற கிரீன்வேஸ் சாலைக்கு குமாரசாமி ராஜா சாலை என்று பெயர் வைக்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையினை ஏற்று-நான் இறுதியாக பேசும்போது "அந்தக் கோரிக்கை ஏற்கப்படும்" என்று அறிவித்தேன்.

அவ்வாறே அந்தக் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு, அந்தச் சாலைக்கு குமாரசாமி ராஜா சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.