நெஞ்சுக்கு நீதி
கைக்கு எட்டியது... ஆனால் · 347 / 391
35. கைக்கு எட்டியது... ஆனால் வாய்க்கு? மூன்று பிரதமர்கள் காலத்திலும் நான்தான் தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பிலே இருந்தேன். கா விரி நதி நீர் பிரச்சினையிலே மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள்-நடவடிக்கைகள் பற்றியெல்லாம் இந்தத் தொடரில் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். 1998ஆம் ஆண்டுவரை காவிரி பிரச்சினைபற்றி தமிழக அரசும், கர்நாடக அரசும் 26 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலனளிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் ஒரு நடுவர் மன்றத்தை அமைக்கக் கோரியதால்-1990 ஆம் ஆண்டு, சூன் திங்களில், நடுவர் மன்றத்தினை மத்திய அரசு ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றம் சட்டப்படி நடுவர் மன்றத்தினை ஏற்படுத்த ஆணை பிறப்பித்த பிறகே, மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. நீண்ட சட்ட விவாதங்களுக்குப் பிறகும்-உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படியும் 25.6.1991 அன்று காவிரி நடுவர் மன்றம் அதன் இடைக்கால ஆணையைத் தந்தது. அந்த ஆணையை மத்திய அரசு 10.12.1991 ஆம் நாளன்று அரசிதழில் வெளியிட்டது. இத்தனைக்கும் பிறகுகூட, நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை செயலாக்க கர்நாடகா முன்வரவில்லை.
மாறாக, 'கர்நாடக காவிரிப் படுகை பாசன பாதுகாப்பு அவசரச் சட்டம்-1991' என்று ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து (பிறகு அது சட்டமாக இயற்றப்பட்டது) இடைக்கால ஆணைக்கு விளக்கம் கோரி நடுவர் மன்றத்தில் கலைஞர் மனுச் செய்தும் - நடுவர் மன்ற இடைக்கால ஆணை செல்லாது என்று ஆணை பிறப்பிக்கக் கோரியும்-உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடுத்தது.
இறுதியாக-இந்தியக் குடியரசுத் தலைவர்-உச்சநீதி மன்றத்தின் கருத்தினை அளிக்கும்படிக் கோரியதன் பேரில், கர்நாடகாவின் அவசரச் சட்டம்-அந்த அரசின் சட்டம் இயற்றும் வரம்பிற்குள் இல்லை என்றும்-அவைகள் அரசியல் சாசன சட்டத்தின்படி செல்லத்தக்கது அல்ல என்றும்-உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியது. நடுவர் மன்றத்திற்கு இடைக்கால ஆணை வழங்க அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் கருத்து கூறியது. நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் ஆணைகளுக்குப் பிறகும், நடுவர் மன்ற இடைக்கால ஆணையினைச் செயல்படுத்தாமல் இருப்பதில் கர்நாடகா உறுதியாக இருந்து வந்தது.
அந்தச் சூழ்நிலையில் இடைக்கால ஆணையினைச் செயல்படுத்துவதற்காக ஒரு திட்டத்தைத் தீட்டி, அரசிதழில் வெளியிடுமாறு தமிழக அரசு மத்திய அரசைக் கோரி வந்தது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சட்டம், 1956, பிரிவு 6ஏ-இன்படி-நடுவர் மன்றத்தின் ஆணையினை செயலாக்குவதற்காக, ஒரு திட்டத்தை மத்திய அரசு தீட்ட, சட்டப்படி கடமைப்பட்டுள்ளது. பிரிவு 6-நடுவர் மன்றத்தின் ஆணையை மத்திய அரசு அதன் அரசிதழில் அறிவிக்கையாக வெளியிட வேண்டும்.
அப்படி வெளியிடப்பட்டால் அந்த ஆணையானது-இறுதியானது காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட, கலைஞர் கோரிக்கை விடுத்தார். மற்றும் தாவாவில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதைச் செயற்படுத்த சட்டப்படி கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதனைச் செயலாக்கம் செய்யவும் வேண்டும். பிரிவு-6ஏ(1) பிரிவு 6ன் கீழ் உள்ள ஷரத்துகளுக்குப் பாதகம் இல்லாமல், நடுவர் மன்றத்தின் தீர்ப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு ஒரு திட்டத்தைத் தீட்டி, அதை அறிவிக்கை மூலம் அரசிதழில் வெளியிடலாம்.
இந்த விவரங்களையெல்லாம் நானே ஒரு கடிதமாக எழுதி, கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் அனுப்பினேன். நாடாளுமன்றத்திலே இந்தக் கருத்துக்களை எடுத்துரைத்து, நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தும் திட்டத்தை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி உரையாற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். மேலும் அவர்கள் காவிரி பிரச்சினைப் பற்றி முழு விவரங்களையும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில் அது பற்றிய விவரங்களையும் தெரிவித்தேன்.
இடைக்கால ஆணையினைச் செயற்படுத்த கர்நாடகாவிற்கு ஆணையிடவும், 1992ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை,தமிழ்நாடு அரசு தொடர்ந்தது. ★ ★ ★ பல விவாதங்களுக்குப் பிறகு, கணிசமான சட்ட நுணுக்கம் மற்றும் அரசியல் அமைப்பிற்கு விளக்கங்கள் தேவை கலைஞர் ஏற்படுவதால் அந்த வழக்கினை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள 1997, மார்ச் மாதம் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவு, இந்த வழக்கின் விசாரணையை 1997, ஏப்ரல் மாதம் துவங்கியது. "நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை பாரதீய ஜனதா கூட்டணி அரசு நடைமுறைப் படுத்தவில்லை" என்று நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார், முரசொலி மாறன் உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற விசாரணை மற்றும் விவாதத்தின் முடிவில், மத்திய அரசு சட்டப்படி ஒரு திட்டத்தைத் தீட்ட முன்வருகிறது என்று 9.4.1997 அன்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எழுத்து மூலமாகக் கூறினார்.
உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு, மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்து 30.5.1997 ஆம் நாளன்று சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. தமிழ்நாடு அந்த வரைவுத் திட்டத்தை சட்டத்திற்கு உட்பட்டு, ஒரு சில கருத்துக்களுடன் பொதுவாக ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசுக்கு 23.6.1997 அன்று தெரிவித்தது. 20.8.1997 அன்று உச்சநீதிமன்றம் திட்டத்தை மத்திய அரசு இறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு, உச்சநீதி மன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும்-வழக்கு உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.
நடுவர் மன்றத்தின் ஆணையை செயல்படுத்துவதில் தாமதத்தை தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டும் என்று 9.7.1997, 23.7.1997, 29.9.1997, 1.11.1997, 6.11.1997 ஆகிய நாட்களில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களிலும், 27.7.1997 மற்றும் 29.9.1997 ஆகிய நாட்களில் பிரதமரை நேரில் சந்தித்தும் வரைவுத் திட்டத்தை விரைவில் இறுதி செய்து அரசிதழில் வெளியிடும்படிக் கேட்டுக் கொண்டேன். "15 மாதங்கள் ஆகியும், ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?"
என்று வினா எழுப்பினார், -டி.ஆர்.பாலு. 10.11.1997 அன்று, மத்திய அரசு வரைவுத் திட்டத்தை இறுதி செய்து, மேற்படி திட்டத்தை அரசிதழில் வெளியிட அக்கறை செலுத்தாத நிலையில், மத்திய அரசுக்கு அப்படியொரு ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து, தமிழக அரசு முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதன் பின்னரும் மத்தியஅரசு ஒரு முடிவுக்கு வராத நிலையில், 28.3.1998, 6.4.1998, மற்றும் 31.5.1998 ஆகிய நாட்களில் பிரதமருக்குக் கடிதம் மூலமாகவும் 7.4.1998 அன்று நேரில் சந்தித்தும் வரைவுத் திட்டத்தை விரைவில் இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
இந்த விவரங்களையெல்லாம் குறிப்பிட்டு கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதி, பாராளுமன்றத்தில் அது குறித்து வாதிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். மேலும் 16.7.1998 அன்று, பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில் 25.6.1991 அன்று நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தும் திட்டத்தை, ஜூலை 21 ஆம் தேதிக்குள் அதாவது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக-அரசிதழில் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.
ஆனால் மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராத நிலையில் 20.7.1998 அன்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. கலைஞர் மற்றும் த.மா.கா. உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தியதோடு, இரு அவைகளிலேயிருந்தும் வெளிநடப்பு செய்தனர். மக்களவையிலே இதுபற்றி பேசிய முரசொலி மாறன் "நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஐக்கிய முன்னணி அரசு ஒரு திட்டத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை" என்றார்.
தம்பி டி.ஆர்.பாலு "உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்தும் திட்டத்தை உருவாக்கி, எட்டு வாரங்களுக்குள் மாநில அரசுகளின் கருத்தை அறிந்து இறுதி செய்யப்படுவதற்கு அட்டார்னி ஜெனரல் உறுதியளித்திருந்தும், 15 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்பதை எடுத்துக் காட்டினார். உச்சநீதி மன்றத்தில் காவிரி பற்றிய வழக்கு 21.7.1998 அன்று வந்து - உச்சநீதிமன்றம் அதுதான் கடைசி தவணை என்று கூறி, ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.
மேலும் நீதிபதிகள், "பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கப் போவதாக மத்திய அரசு உறுதியளித்து. 15 மாதம் ஆகிறது. இன்னமும் இணக்கமான திட்டம் உருவாக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்துக் கொண்டே போவதை அனுமதிக்க முடியாது" என்று கூறினர். ★ ★ ★ 28.7.1998 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், காவிரிப் பிரச்சினையிலே நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பினை அமல்படுத்துவது பற்றி, உச்சநீதிமன்றம் அண்மையிலே தெரிவித்த அறிவுரையின்படி, மாறுபாடுகளைக் குறைத்து, ஒப்புக் கொள்ளக்கூடிய முடிவுகளை நட்புத் தன்மையோடு எடுப்பதற்காக 6.8.1998 அன்று டெல்லியிலே உள்ள பிரதமர் அலுவலகத்தில் என்னுடனும், சம்பந்தப்பட்ட மற்ற மாநில முதல்வர்களுடனும் கலந்து பேசிட இருப்பதாகவும், அதற்கு என்னுடைய முழுமனதான ஒத்துழைப்பை நாட்டின் நலன் கருதி கோரியும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாகத் தீராமல் இருக்கும் காவிரிப் பிரச்சினைக்கு இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய முடிவுகளை எடுப்பதற்காக வழி வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
"டெல்லியில் பிரதமர் கூட்டிய முதல்வர்கள் மாநாட்டில், கலைஞர் பங்கேற்க வேண்டும்" என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் முடிவு செய்தனர். அந்தக் கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை 3.8.1998 அன்று கூட்டியிருந்தேன். அந்தக் கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தொடர்ந்து நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 41 கட்சியினர் கலந்து கொண்டனர். இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் "6.8.1998 அன்று பிரதமர் கூட்டியிருந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ளலாம்-உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்" என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அந்தத் தீர்மானத்திற்கு எதிராக அ.தி.மு.க.சார்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "டெல்லிக் கூட்டத்திற்குச் செல்லக்கூடாது" என்று தெரிவித்திருந்தார்.
ஆனாலும், 6ஆம் தேதி டெல்லியில் பிரதமர் கூட்டியிருந்த கூட்டத்தில், நானும், கர்நாடக முதல்வர் ஜே.எச்.பட்டேல் கலைஞர் அவர்களும், கேரள முதல்வர் நாயனார் அவர்களும், புதுவை முதல்வர் ஜானகிராமனும் கலந்து கொண்டோம். முதல் சுற்றுப்பேச்சு நான்கு மணி நேரம் நடந்தது. முதல்வர்களுடன் தனித்தனியாகவும், அதிகாரிகளுடனும் பிரதமர் விவாதித்தார். அந்தப் பேச்சு வார்த்தையில் அப்போது ராணுவத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும், திட்டக்குழுத் துணைத்தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் அவர்களும் பங்கேற்றனர்.
இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் சுமூகத் தீர்வு காண இயலாத காரணத்தால், இரண்டாவது நாளாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் பேசிய பேச்சின் சுருக்கம் வருமாறு:- "காவிரி நீர் (1991 ஆம் ஆண்டு ஆணை அமலாக்கல்) திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிடுவதற்காக - காவிரிநதி பாயும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டதற்காக முதலில் நான் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தொடர்ச்சியாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் தாவா நடுவர் மன்றமே உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் பேரிலேயே அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் குறுக்கீட்டின் பேரிலேயே நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை பிறப்பிக்கப் பட்டது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களுக் கிடையிலான நதிநீர் தாவா சட்டத்தின் 6-ஏ பிரிவின்கீழ் இந்திய அரசுக்கு சட்டப் பூர்வ கடமை இருந்த போதிலும், நடுவர்மன்றத்தின் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குச் சென்ற கலைஞரை வரவேற்றார்.
பிரதமர் வாஜ்பாய் ஆணையை அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு முன் வரவில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இது தொடர்பாக ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு இடைவிடாமல் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பிரதமர் அறிந்துள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."
"தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம், 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி, உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் முன்னிலையில், இந்திய அரசு தானாகவே அளித்த உறுதி மொழியை நிறைவேற்றுவது தொடர்பான கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு கடைசி ஒத்திவைப்பு இந்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. "கர்நாடக மாநில அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதியின் பொருளாதாரத்தையே சீரழித்து விட்டது.
சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் விசாரணை நடத்திய பிறகுதான் நடுவர் மன்றம் அதன் இடைக்கால ஆணையை வழங்கியது. இந்த ஆணையால் வருத்தமடைந்த கர்நாடக அரசு, சில பிரச்சினைகளில் விளக்கம் கோரி நடுவர் மன்றத்தை அணுகியது. அதனால் நடுவர் மன்றம் பிரச்சினை முழுவதையும் மறுபடி ஆய்வு செய்து, கர்நாடக அரசால் எழுப்பப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் விளக்கம் அளித்து, இடைக்கால ஆணையை உறுதி செய்தது."
"உச்சநீதி மன்றத்தில் இந்தப் பிரச்சினை 12.8.1998 ஆம் தேதி பரிசீலனைக்கு வருவதற்கு முன்பாக, மத்திய அரசின் வரைவுத் திட்டத்தை அரசிதழில் வெளியிட பிரதமர் உதவிட கலைஞர் வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றேன். காவிரிநதி நீர்ப் பிரச்சினையை விசாரிப்பதற்கு நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க இந்தியஅரசுக்கு உத்தரவிட்ட தீர்ப்பை, 1990ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்தபோது- நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கூறிய கருத்துக்களை நான் நினைவூட்ட விரும்புகிறேன்."
★ "இதில் சட்டப்பூர்வமாக தேவைப்படும் நிர்வாக நடவடிக்கை எடுப்பதை மேலும் தாமதப்படுத்துவது உணர்வுகளை மேலும் மோசமாக்கி, மேலும் அதிக அளவில் விரோதக்கை வளர்க்கும். எனவே பிரச்சினை பெரிதாகும் முன், சட்டப் பூர்வமான அமைப்பை அமைத்து, அகைச் சட்டரீதியில் செயல்படச் செய்ய வேண்டியது அவசியம். தொடக்கத்திலேயே சீர் செய்தால் அதிக இழப்பை தவிர்க்கலாம். இது தனிப்பட்ட மனிதனுக்கு மட்டுமல்ல-ஒரு நாட்டுக்கும் இது மிகவும் பொருத்தமாக இருக்கும்" - என்று நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்."
"எனவே மேலும் தாமதம் ஏ
ற்படாத வகையில், இந்தத் திட்டத்தை சட்டப்படி அரசிதழில் வெளியிடுமாறு பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று நான் பேசினேன். - பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் நடத்திய இந்தக் கூட்டத்தின் இறுதியில், கலந்து கொண்ட மாநிலங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்ட அளவில், ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணைக்கு விடுவிக்கப்பட வேண்டும்.
இதன்படி பிரதமர், காவிரி பாயும் நான்கு மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். பிரதமர் அவர்கள் ஆணைக்குழுவின் தலைவராக விளங்குவார். இதுதான் அன்று முடிவான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பிரதமர் அவர்களுக்கும், மத்திய திட்டக் குழுத் துணைத்தலைவர் ஜஸ்வந்த்சிங் டெல்லி முதல்வர்கள் கூட்டத்தில், கர்நாடக முதல்வர் ஜே.எச். பட்டேல் அவர்களுடன் கலைஞர் அவர்களுக்கும், மத்திய மாநில அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
காவிரி பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்று அறிக்கைகளைக் கொடுத்தன. புதுடெல்லியில் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள், "காவிரிப் பிரச்சினையில் சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதை நீங்கள் வெற்றியாகக் கருதுகிறீர்களா?"
என்று கேட்டார்கள். "ஏற்பட்டுள்ள முடிவில் நான்கு மாநில முதல்வர்களுக்கும் மகிழ்ச்சியே தவிர, ஒருவருக்கொருவர் வெற்றி என்று கூறிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்று நான் கூறினேன். மேலும் நான் கூறும்போது, "1990 ஆம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பு 91 ஆம் ஆண்டு வெளியாகி, ஏழு ஆண்டு காலமாக அந்த இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை இருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான திட்டம் குஜ்ரால் பிரதமராக இருந்தபோது வகுக்கப்பட்டது.
வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அந்தத் திட்டம் அமலுக்கு வரவும், நடுவர்மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பான 205 டி.எம்.சி. தமிழகத்திற்குக் கிடைக்கவுமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த மூன்று பிரதமர்களுடைய காலத்திலும் நான் முதலமைச்சர் பொறுப்பிலே கலைஞர் இருந்திருக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினேன்.
5.8.1998 தேதிய " தினமணி " நாளேட்டில் வெளிவந்த தலையங்கத்தில் - ★ "அனைத்துக் கட்சியினரின் சம்மதத்துடன் டெல்லி செல்ல முதல்வர் முடிவெடுத்ததில் தவறு ஏதுமில்லை. கட்சிகளிடையே தொடர்ந்து பொதுக் கருத்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வாயிலில் காத்திருந்து, அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளையும் முதல்வர் வரவேற்றார். தமிழக விவசாயிகளின் நலன் தொடர்பான பிரச்சினை அரசியலுக்கு அப்பாற்பட்டதாகத் தானே இருக்க வேண்டும்?
தமிழகத்தின் ஓர் எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையிலும், வாய்பாய் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பெரிய கட்சியின் தலைவர் என்ற வகையிலும். ஜெயலலிதா இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆக்கப்பூர்வாமான ஆலோசனை வழங்கியிருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும். இத்தனைக்கும் அவர் சென்னையில்தான் இருந்திருக்கிறார். ஆனால் தனது பிரதிநிதியை அனுப்பி வைத்த அவர், ஆகஸ்டு ஆறாம் தேதி, "டெல்லியில் பிரதமர் கூட்டியுள்ள கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளக்கூடாது" என பின்னர் அறிக்கை விடுத்திருக்கிறார்."
"ஆனால் புதுவையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அந்த மாநில முதல்வர் எடுக்கும் முடிவை ஏற்பதாக அ.தி.மு.க. பிரதிநிதி ஒப்புதல் அளித்திருக்கிறார். இதை அப்பட்டமான சந்தர்ப்ப அரசியல் என்று தானே கருத முடியும்?" "காவிரி நீருக்காக சென்னை மெரினா கடற்கரையில் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. அவர் விரும்பியிருந்தால், பா.ஜ.க.கூட்டணி அரசின் தேசிய செயல் திட்டத்திலேயே காவிரி நீர் பிரச்சினையைச் சேர்த்திருக்கலாம்.
இப்பிரச்சினையில் "மத்திய அரசு காலம் தாழ்த்தவே முதல்வரின் பயணம் உதவும்" என்ற அவரது கருத்து கற்பனையானது-அரசியல் நோக்கம் கொண்டது. இப்பிரச்சினையைப் பயன்படுத்திக் கொண்டு, ஓர் அரசைக் கலைத்து விட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒருகட்சி காத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் ஜே.எச்.பட்டேல் கூறியிருப்பதை வழிமொழியும் வகையில் தான் அ.தி.மு.க.அணியின் நடவடிக்கைகள் இருக்கின்றன."
இவ்வாறு " தினமணி " தலையங்கம் எழுதியிருந்தது. ★ ★ ★ டெல்லியில் காவிரி பிரச்சினையில் ஒரு ஒப்பந்தத்தைக் கண்டுவிட்டு, 8.8.2008 அன்று சென்னை திரும்பிய என்னை, விமான நிலையத்தில் கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும், அமைச்சர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் திரண்டிருந்து வரவேற்றனர். காவிரி நதிநீர் பிரச்சினையில் ஜெயலலிதா அடித்த "அந்தர் பல்டி"கள் விமான நிலையத்திலேயே செய்தியாளர்கள் என்னைச் சந்தத்து பல்வேறு விளக்கங்களைக் கேட்டுப் பெற்றார்கள்.
அனைத்துக் காரணம் கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் காவிரி ஒப்பந்தத்தை வரவேற்று அறிக்கை கொடுத்தனர். குறிப்பாக த.மா.கா. தலைவர் அருமை நண்பர் ஜி.கே.மூப்பனார் கலைஞர் அவர்கள், நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் அரசுக்கும், எனக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வெளியிட்டிருந்தார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மராட்டிய மாநில ஆளுநராக இருந்தவருமான திரு.சி.சுப்பிர மணியம் அவர்கள் உடனடியாக எனக்கனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில்- "நண்பர் கலைஞர் அவர்களுக்கு, காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
அரசியல்வாதிகளால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது என்ற என் கருத்தினை தாங்கள் பொய்ப்பித்து விட்டீர்கள். இந்த முடிவின் மூலம் லட்சக் கணக்கான விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளீர்கள். உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்-அன்புடன் சி.சுப்பிரமணியம்" வட இந்தியப் பத்திரிகைகள் எல்லாம், "அ.தி.மு.க. கூட்டணியைத் தவிர, தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
- காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு அமல்படுத்திட கர்நாடக மாநிலம் ஒத்துக்கொண்டதே மிகப்பெரிய வெற்றி" என்றும் எழுதின. "தி டைம்ஸ் ஆப் இந்தியா " நாளேடு, "நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை அமல் படுத்துவதற்காக காவிரி ஆணையம் அமைப்பது பற்றி கர்நாடகம் இறங்கி வந்த காரணத்தால், நீண்ட காலமாக முடிவுறாமல்-தெற்கே உள்ள விவசாய மாநிலங்களிடையே ஏழாண்டு காலமாக விடை தெரியாமல் நிலவி வந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காணப்பட்டது" என்று எழுதியிருந்தது.
"நான்கு மாநில முதல் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட காவிரி புதிய திட்டம்" என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்ட "தி ஏசியன் ஏஜ்" ஆங்கில நாளேடு, "தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு காவிரி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகாவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலே கிடைத்துள்ள வெற்றியைப் போல வேறொன்று இருக்க முடியாது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையில் சொல்லப்பட்ட 205 டி.எம்.சி.
நீர் தமிழகத்திற்கு வழங்க கர்நாடகாவை ஒப்புக் கொள்ள வைத்தது, தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரை, பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவரது அரசியல் எதிரிகளை வெற்றி கொள்ள உதவி இருக்கின்றது. டெல்லியிலே காணப்பட்டுள்ள முடிவானது. கருணாநிதி அவர்களுக்கும், வாஜ்பாய் அவர்களுக்கும் ஒரு பெரிய தீர்வை ஏற்படுத்தியுள்ளது. இது நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணையை நிறைவேற்றுவதோடு-தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் அதாவது கருணாநிதியின் வெற்றியினால் அதிக அளவிற்கு ஆத்திரம் அடைந்துள்ள அ.தி.மு.க.
கூட்டணி கட்சியினரைத் தவிர்த்து-அனைவரையும் மகிழச் செய்யும் ஒன்றாகும்." டெல்லி சென்று சென்னை திரும்பிய கலைஞரை, பேராசிரியரும், கழகத்தவரும் வரவேற்றனர். கலைஞரின் இந்த வெற்றி, அதிக அளவில் ஆத்திரம் அடைந்துள்ள அ.தி.மு.க. கூட்டணியைத் தவிர்த்து, மற்ற அனைவரையும் மகிழ்விக்கவே செய்யும்! "தி இந்துஸ்தான் டைம்ஸ்" ஏடு, " Karunanidhi Scores diplomatic victory " என்ற தலைப்பில், "காவிரிப் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தையின் முடிவு தமிழக முதல் அமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றியாகும்.
நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அமல் படுத்த கர்நாடகம் ஒத்துக் கொண்டதே மிகப்பெரிய வெற்றியாகும். ஜூன் 1990 முதல்-அதாவது கலைஞர் அ.தி.மு.க. "கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தையே கூடாது" என்று கூறியதை, கருணாநிதி வெற்றிகரமாக உடைத்தெறிந்து விட்டார் நடுவர் மன்றம் 205 டி.எம்.சி.
தண்ணீரைத் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்த அந்த நாள் முதல்-கர்நாடகத்தில் தொடர்ந்து இருந்து வந்த அரசுகள் இடைக்காலத் தீர்ப்பை ஒத்துக் கொள்ளவும் இல்லை- ஏன், அப்படி ஒரு தீர்ப்பு இருப்பதை காட்டிக் கொள்ளவும் இல்லை. கர்நாடகத்தை இடைக்காலத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் செய்து, நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்கிட வேண்டிய தண்ணீரின் அளவு பற்றிய இறுதித்தீர்ப்பை வெளியிடும் போது 205 டி.எம்.சி.
தண்ணீர் என்பது அடிப்படை அளவு கோலாக இருக்கும் என்பதையும் திரு.கருணாநிதி உறுதி செய்து கொண்டுள்ளார். அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் "கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தையே கூடாது" என்று எடுத்திருந்த அணுகுமுறையை திரு.கருணாநிதி வெற்றிகரமாக உடைத்தெறிந்து விட்டார்.
அதன் மூலம் பிரச்சினைகளை வழக்குகளின் மூலம் அல்லாது, பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்வது சிறந்தது என்பதையும் நிரூபித்துக் காட்டி விட்டார். பேச்சு வார்த்தைக்குக் கதவடைக்க மறுத்ததன் மூலம், திரு.கருணாநிதி தன்னுடைய மிகப்பெரிய அரசியல் முதிர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார். ஆணையத்திற்குப் பிரதமரைத் தலைவராக அமைத்துக் கொண்டதன் மூலம், மத்திய அரசில் நடுவர் மன்றத்தீர்ப்பினை கர்நாடகம் அமல்படுத்துவதை உறுதி செய்து கொள்வதற்கான ஒரு உத்தரவாதத்தினை ஏற்படுத்திக் கொண்டார்" என்று எழுதியது.
தமிழக விவசாயிகளை மகிழ்வித்த, காவிரி நதிநீர் ஒப்பந்தம் 9.8.1998 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினர். பின்னர் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். முதல் கேள்வியாக காவிரிப் பிரச்சினையில் தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாட்டை ஜெயலலிதா நிராகரித்திருப்பதைப் பற்றி என் கருத்தினைக் கேட்டனர். "மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது கூட்டணி ஆட்சி. அதன் தலைவராக இருப்பவர் பிரதமர் வாஜ்பாய்.
கூட்டணி ஆட்சியின் அமைச்சரவையில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன.அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு என்பது நியதி. மத்திய அரசுக்கு தலைமையேற்றுள்ள பிரதமர் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறார் என்றால்-அதுவும் நான்கு மாநில முதல் அமைச்சர்களை அழைக்கிறார் என்றால்-கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்குமே பிரதமரின் அழைப்பில் பங்கும், பொறுப்பும் உண்டு என்றுதான் பொருள்.
இதற்கு மாறாக, மத்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாது என்று சொல்வதும், பிரதமரும் நான்கு மாநில முதல் அமைச்சர்களும் மூன்று நாட்களாகத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, 30 ஆண்டு காலமாகத் தீராதிருந்த காவிரி நீர்ப் பிரச்சினைக்கு சுமூகமானதோர் தீர்வு கண்டுள்ளதை நிராகரிக்கிறோம் என்பதும்-அந்தத் தீர்வை ஏற்க மாட்டோம் என்பதும்-கூட்டணி ஜனநாயகத்தைக் கேலி செய்வதாகும்-கூட்டுப் பொறுப்புக்கு எதிர் மறையான நிலையாகும். இந்த விநோதமான விபரீதத்தை இந்த நாடு இன்று கண்டு கொண்டிருக்கிறது.
பெரும்பாலான கட்சிகளின் தலைவர்களும், ஆன்றோர்களும், தமிழக விவசாயப் பெருமக்களும் மகிழ்ச்சியுடன் இந்த நல்ல தீர்வை வரவேற்றுள்ள நிலையில், கலைஞர் அரசியல் பகை காரணமாக, ஜெயலலிதாவும் அவரது குழுவினரும் காவிரி பிரச்சினையில் தெரிவித்து வரும் கருத்துக்கள், இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சுமூகமான தீர்வை நடைமுறைப்படுத்தும் போது குந்தகமான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதுதான் எனக்குள்ள கவலையாகும்" என்று கூறினேன்.
அதற்கடுத்த நாள் ஜெயலலிதா பத்திரிகையாளர்களைச் சந்தித்து, "காவிரி பிரச்சினையில் பழைய திட்டத்தை வாஜ்பாய் ஏற்றுக் கொள்ளாவிட்டால், மத்திய அரசோடு கூட்டணியில் நாங்கள் இருப்பதைப் பற்றி யோசிக்க வேண்டி வரும்" என்று மிரட்டிவிட்டு, "கருணாநிதி வாஜ்பாய் அவர்களோடு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்- ஒப்பந்தம் செய்து கொண்டு விலை போய்விட்டார்."
"வாஜ்பாய் கருணாநிதியின் தந்திரத்திற்கு ஆளாகி விட்டார். இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டிருக்கின்ற உடன்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்" என்றார். 10.8.1998 அன்று "இந்து நாளேடு தனது தலையங்கத்தில்- ★ "காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்துவதற்கான திட்டம் குறித்து, ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் பிரச்சினைக்குரிய மாநிலங்கள் எதார்த்த உணர்வுடன் செயல்பட்டுள்ளன என்பதைக் காட்டு வதால் பாராட்டுக்குரியது."
"இந்த ஒப்பந்தத்தின் மிகவும் ஆக்க பூர்வமான அம்சம், இதுவரை அங்கீகரிக்க மறுத்து வந்த நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைக்கு மதிப்பளிக்க கர்நாடகமே உறுதி அளித்துள்ளது. இதற்கு நடைமுறை அர்த்தம், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீர் தருவதற்கு கர்நாடகம் ஒத்துக்கொண்டுள்ளது என்பதாகும்."
"தமிழ்நாட்டின் தரப்பில் இது ஒரு லாபம் ஆகும்" என்று எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்திற்குத் தலைப்பே " எ வெல்கம் அக்ரிமென்ட் " என்பதாகும். இது போலவே வேறு பல நாளேடுகளும் காவிரி ஒப்பந்தத்தைப் பாராட்டி செய்திகளை வெளியிட்டிருந்தன. 10.8.1998 தேதிய " தினமணி " நாளிதழ் தனது தலையங்கத்தில்- ★ "காவிரி பிரச்சினையில் முதன் முறையாக ஆக்கப்பூர்வமான முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் தலைமையில் நான்கு மாநில முதல்வர்கள் கூடி, நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான திட்டத்தை இறுதி செய்தது பாராட்டத்தக்க சாதனை .
தமிழகத்துக்கு 205டி.எம்.சி. நீர் அளிக்க கர்நாடகம் சம்மதித்திருக்கிறது. பாசன அணைகளின் மீதான கட்டுப்பாடு பறிபோய் விடுமோ என்ற கர்நாடக விவசாயிகளின் அச்சம் நீக்கப்பட்டுவிட்டது. இரு மாநில விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காகக் கடந்த முறை இரு மாநில முதல்வர்கள் நடத்திய பேச்சு தோல்வியடைந்த போதிலும், இந்த முறை அந்த முயற்சியில் வெற்றி கண்டு விட்டனர். விவசாயிகளுக்குக் கிடைத்த சுதந்திரப் பொன்விழா பரிசாக இந்த உடன்பாட்டைக் கூறலாம்.
பா.ஜ.க. அரசின் தேசிய செயல் திட்டத்தில் காவிரிப் பிரச்சினையை இடம் பெறச் செய்ய முடியாத அ.தி.மு.க.தான் இந்த உடன
்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு உதவியுடன் ஏற்பட்ட உடன்பாட்டை, மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டு குறைகூறுவது நேர்மையான செயலாக இல்லை." "புதிய உடன் பாட்டினால் 80 சதவீதத் தீர்வு எட்டப்பட்டுவிட்டது" எனக் கேரள முதல்வர் நாயனார் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்" - என்று எழுதியது.
