உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு · 346 / 391

34. மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி ஒதுக்கீடு! முத்துச்சிற்பி வடிவில் அமைக்கப்பட்ட பவள விழா மேடை தமிழ்த் தென்றல் திரு.வி.க., பேராசிரியர் கல்கி ஆகியோரின் நூல்கள் தி.மு.கழக ஆட்சியிலே நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை வழங்கும் விழா, 15.5.1998 அன்று கலைவாணர் அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் தலைமையிலே நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு இருவரது குடும்பத்தினருக்கும் தலா இருபது இலட்ச ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கி நான் உரையாற்றினேன்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனும் , ஆசிரியர் சாவியும் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பரிவுத் தொகையைப் பெற்றுக் கொண்டு கல்கி இராஜேந்திரனும் , முனைவர் வனசாட்சியும் நன்றி கூறினார்கள். குறிப்பாக கல்கி ராஜேந்திரன் அத்த விழாவில் பேசும்போது, கல்கி இதழில் "மனோகரா" திரைப்படத்திற்கு நான் எழுதிய வசனம் குறித்து, கல்கி அவர்கள் எழுதிய விமர்சனத்தைக் கொண்டு வந்து நிகழ்ச்சியிலே படித்துக் காட்டினார்.

அந்தப் பாராட்டினை, திரைப்படம் வெளிவந்த காலத்திலேயே நான் படித்திருக்கிறேன் என்ற போதிலும், நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதை அந்த விழாவில் கி.ராஜேந்திரன் கொண்டு வந்து படித்துக் காட்டியபோது, மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. மனோகராவுக்கு மாத்திரமல்ல-பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய " வேலைக்காரி " திரைப்படம் கலைஞர் தமிழறிஞர் திரு.வி.க., எழுத்தாளர் கல்கி - இருபெரும் சான்றோரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, இருவரின் வாரிசுகளுக்கும் தலா 20லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கினார்.

கலைஞர் வெளிவந்தபோதும், கல்கி அவர்கள் அதனைப் பெரிதும் பாராட்டி, கல்கி இதழிலே விமர்சனம் எழுதியிருக்கிறார். இன்னும் கூற வேண்டுமேயானால், தஞ்சையில் அண்ணா அவர்கள் எழுதிய " ஓர் இரவு " நாடகத்திற்கு கல்கி அவர்கள்தான் தலைமை தாங்கினார். அந்த விழாவில் அவர் உரையாற்றும் போதுதான், அண்ணா அவர்களை " தென்னாட்டு பெர்னாட்ஷா " என்று பெருமைபடக் குறிப்பிட்டார்.

பேராசிரியர் கல்கி அவர்கள், அந்த அளவிற்குப் பெருந்தன்மையோடும், எங்கே திறமை மிகுந்திருக்கிறதோ, அதை எடுத்துக் சொல்லத் தயங்காத உறுதியோடும் அவர்களைப் பாராட்டத் தவறாதவர்-மறவாதவர். அந்தக் கல்கி அவர்கள் மறைந்த போது, பேரறிஞர் அண்ணா அவர்கள் 12.12.1954 தேதியிட்ட "திராவிட நாடு" இதழில் " அமரதாரா போயிற்று " என்ற தலைப்பில் பின் வருமாறு எழுதியிருந்தார். "தமிழ் நடையில் ஒரு நகைச்சுவையையும், சரித்திர நிகழ்ச்சிகளின் மீது சமையல் கட்டுக்குக்கூட ஒரு ஆவலையும், தூண்டி விட்ட எழுத்தாளர் அவர்.

அவரது எழுத்து, செயல் பற்றி கருத்து வேறுபாடுகள் நிறைய உண்டு. ஆனால், அவரது திறமை செயல்வன்மை நிச்சயம் பாராட்டுக்குரியதாகும். தேசியக் கூடாரம் முழுவதும் எரிச்சல் கணைகளைப் பூட்டினாலும், சில சமயங்களில் நமது சேவைகளை அவர் புகழ்ந்ததும் உண்டு. எழுத்துத் துறையில் நமது இயக்கம் உண்டாக்கியிருக்கும் மறுமலர்ச்சி, பல தேசீய எழுத்தாளருக்கு எரிச்சலையும், கோபத்தையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், கல்கி வரவேற்றார்-மகிழ்ந்தார்.

அதேபோல மாற்றாரிடம் இருக்கும் சில நற்பண்புகளை அவர் பாராட்டத் தயங்கியதில்லை-வாழ்த்தப் பயந்ததில்லை. அதனால்தான் அவருடைய மறைவு இன்று பலருக்கும் வருத்தத்தைக் கொடுக்கிறது. அதிலும் நமக்கு அவரது மறைவு உண்மையில் வேதனையைத் தருகிறது" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்றுப் புதினங்களை மாத்திரமல்ல-வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய புதினங்களை உருவாக்கித் தந்தவர். அவருக்குத் தமிழ் மொழியின் மீது மாத்திரமல்ல-தமிழர்கள் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அளவற்ற பற்று உண்டு. பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் கண்டவர் கல்கி அவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பலமுறை சிறைச்சாலைக்குச் சென்றவர், கல்கி அவர்கள் கல்கி அவர்கள் தமிழுக்காக பட்ட பாட்டினைப் பெருமைப் படுத்தும் வகையிலேதான் தி.மு.கழக அரசு அன்றைய தினம் அந்த விழாவினை எடுத்து, அவருடைய நூல்களை நாட்டுடைமையாக்குவதாக அறிவித்ததோடு, அதற்காகப் பரிவுத் தொகையாக இருபது இலட்சம் ரூபாயையும் கி.இராஜேந்திரன் அவர்களிடம் நான் வழங்கினேன்.

அதே விழாவில், தமிழ்த்தென்றல் திரு. வி.க.அவர்களது நூல்களையும் நாட்டுடைமையாக்கி, அவருடைய சந்ததியினருக்கு அரசின் பரிவுத் தொகையாக இருபது இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டுதான் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து தந்தை பெரியார் வெளியேறினார். அந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதே திரு.வி.க.அவர்கள்தான், அந்த மாநாட்டிலே தந்தை பெரியார் கொண்டு வந்த தீர்மானம்தான் கலைஞர் வகுப்புவாரி உரிமையை வலியுறுத்துகின்ற தீர்மானம்.

அதனை அந்த மாநாடு ஏற்றுக் கொள்ளவில்லை. மாநாட்டுத் தலைவரான திரு.வி.க. அவர்களே ஏற்றுக் கொள்ளத் தயங்கியபோதுதான். தந்தை பெரியார் காங்கிரசிலிருந்தும், அந்த மாநாட்டிலிருந்தும் வெளியேறினார். ஆனால், திராவிட இயக்கத்தினுடைய வெற்றிக்குச் சான்றாக-அதே தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் பெரியாருடைய வகுப்பு வாரிக் கொள்கையைப் பின்னர் ஏற்றுக்கொண்டார் என்றால், அது பெரியாரின் வெற்றியாகும்- திராவிட இயக்கத்தினுடைய வெற்றியாகும்.

மூதறிஞர் ராஜாஜி, தமிழ்த் தென்றல் திரு.வி.க.போன்றவர்கள் அந்தக் காலத்தில் பெரியாரும், அண்ணாவும் எடுத்துச் சொன்ன "திராவிட நாடு" என்ற சொற்றொடரையே கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள். அந்த ராஜாஜி, பிறகு கல்கி இதழிலேயே "திராவிட நாடு கிடைத்தால்கூட நான் அதற்காக சந்தோஷப்படுவேன். திராவிட நாட்டிற்காக நான் சண்டை போடுவேன்" என்று எழுதுகின்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்டது.

அதுபோலவே திராவிட நாடு என்று சொற்றொடரையே ஏற்றுக்கொள்ளாத திரு.வி.க. அவர்கள், கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிட நாடு படத்தையே திறந்து வைத்து உரையாற்றினார். திரு.வி.க. அவர்கள் எதையும் மூன்று முறை சொல்வார். அவ்வாறே அன்றைய தினமும் "திராவிட நாடு-திராவிட நாடு-திராவிட நாடு" என்று மூன்று முறை சொன்னார்.

ஆனால், அதற்குப் பிறகு அண்ணா அவர்களே திராவிட நாடு கொள்கையைக் கைவிட்ட நிகழ்ச்சி எல்லாம் தமிழகம் நன்கு அறிந்த ஒன்றாகும். திரு.வி.க.வின் தொண்டு பல முகப்புகளைக் கொண்டது. இலக்கியம்-சமயம்-மேடைப் பேச்சு-பத்திரிகை உலகம்- தொழிற்சங்கம் ஆகியவற்றில் வல்லவர். விடுதலை இயக்கத்தின் முரசாக அவருடைய எழுத்தும், பேச்சும் முழங்கின. அவர் அடக்கம், எளிமை ஆகிய இரண்டின் சின்னமாக விளங்கினார். கல்கியின் புதல்வர் கி.ராஜேந்திரனிடம் பரிவுத் தொகை ரூ.

20 லட்சத்தை வழங்கினார் கலைஞர் அவருடைய பொதுவாழ்வு, தூய்மையின் இலக்கணம்! பணத்தைப் பற்றிய நினைப்பே இல்லாமல் ஏழையாகவே வாழ்ந்தவர். அவருடைய அந்திம காலத்தில் நோய் வாய்ப்பட்டு வறுமையில் உழன்றார். அதை அறிந்த மதுரை தொழிலதிபர், தமிழ்ப் புரவலர் ஒருவர், அவருக்குக் கணிசமான தொகையை அந்தரங்கத் தூதர் மூலம் அனுப்பி வைத்தார். அந்த உதவியை இங்கிதத்துடன் மறுத்துவிட்ட திரு.வி.க. அதற்குக் கூறிய காரணம்- அவருடைய வைர நெஞ்சை வெளிப்படுத்தியது.

"என்னுடைய நெடிய பொது வாழ்வில், எவரிடமும் கைநீட்டி எந்த உதவியையும் பெற்றதில்லை. அந்த விரதத்தை என் அந்திம காலத்தில் குலைத்துக் கொள்ள விரும்பவில்லை. உதவிக்கு மிக்க நன்றி" என்றாராம். திரு.வி.க. பழகுவதிலும், உரையாடுவதிலும் திரு.வி.க. அவர்கள் மென்மையானவர். தூய்மையைக் காப்பதிலும் ஆர்வமுடையவராகவே விளங்கியிருக்கிறார். ★ ★ ★ தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் புயலாகவும் விளங்கிய காலமும் உண்டு. சென்னையில் இருந்த பி அன்ட் சி மில்லில் பணியாற்றிய 13 ஆயிரம் தொழிலாளர்களின் சங்கத்திற்குத் திரு.வி.க.

தான் தலைவராக இருந்தார். இந்தியாவிலேயே முதன் முதலாக தொழிற்சங்கம் உருவானது சென்னையிலே தான். அந்தச் சங்கத்திற்குத் தலைமையேற்றிருந்தவர் திரு.வி.க. தான். கலைஞர் அவர் அந்தத் தொழிற் சங்கத்தை நடத்தியபோது, பெரும் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்றது. அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் வெலிங்டன் பிரபு . அவர் தொழிலாளர்களை அடக்குவதற்காக பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிட்டார். அவற்றிற்கெல்லாம் தலைதாழாமல், தோள் உயர்த்தி நின்று தொழிலாளர்களை அணிவகுக்கச் செய்து, போராட்டக் களத்திலேயே நின்றவர்.

திரு.வி.க. அவர்கள். அடங்காத ஆத்திரம் அடைந்த ஆளுநர் வெலிங்டன் பிரபு, திரு.வி.க. அவர்களை நாடு கடத்த ஆணை பிறப்பித்தார். அப்போது நீதிக்கட்சியின் ஆட்சிதான் நடைபெற்றது. பனகல் அரசர் அன்றைய சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சர். அப்போது அந்தப் பதவிக்குப் பெயர் பிரிமியர். திரு.வி.க ஆளுநரால் நாடு கடத்தப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார் ஆகியோர் பனகல் அரசரைச் சந்தித்து, "நீங்கள் உடனடியாக ஆளுநரைப் போய்ப் பார்த்து, திரு.வி.க.வை நாடு கடத்துவதை திரும்பப் பெறச் செய்யுங்கள்- அதற்கு ஆளுநர் செவிமடுக்க மறுத்தால் அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து விடுங்கள்-ஆட்சிப் பொறுப்பு நமக்கு வேண்டாம்" என்று சொல்லி அனுப்பினார்கள்.

அதன் பேரில் பனகல் அரசரும், அமைச்சர் பெருமக்களும், ஆளுநரைச் சந்தித்து "திரு.வி.க.வை நாடு கடத்தக்கூடாது" என்று கண்டிப்பாகச் சொல்ல-அதற்கு ஆளுநர், "திரு.வி.க.நாடு கடத்தப்படக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? நாடு கடத்தியே தீருவேன்" என்று வேகமாகப் பேசினார்.

"அப்படியா? அப்படியென்றால் இதோ எங்களுடைய பதவியின் ராஜினாமா கடிதங்கள்"-என்று கூறிய பிறகுதான் வெலிங்டன் பிரபு இறங்கி வந்து - திரு.வி.க.வை நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெற்றார் என்பது திரு.வி.க.வின் வாழ்க்கைச் சரித்திரமாகும். அந்த இரண்டு பெரும் சான்றோர்களின் நூல்களை யெல்லாம் கழக அரசு நாட்டுடைமையாக்கியதோடு, அவர்களின் சந்ததியினருக்கு 20 லட்சம் ரூபாய் வீதம் பரிவுத்தொகையும் வழங்கிப் பெருமைப்படுத்தியது.

★ ★ ★ அந்த விழா முடிந்த அடுத்த சில நாட்களிலேயே 20.5.1998 அன்று, கழகப் பொதுச்செயலாளர் பேராசிரிய ர் அவர்கள், ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டார். அதில் என்னுடைய பவள விழா (75ஆவது பிறந்தநாள்) 3.6.1998இல் தொடங்குவதை முன்னிட்டு. அதனைக் கழக வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும்- ஓராண்டு காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை கிராமங்கள் தோறும், நகரங்கள்தோறும் நடத்திட வேண்டுமென்றும்-கழகத்தின் பல்வேறு அணியினர் தனித்தனியாக விழாக்களை ஏற்பாடு செய்திட வேண்டுமென்றும்-அந்த அறிக்கையிலே கேட்டுக்கொண்டார்.

மேலும் அந்த அறிக்கையில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் பார்வை இழந்தோர்க்குக் கண்ணொளி வழங்கும் முகாம்களைப் பரவலாக நடத்த வேண்டுமென்றும்- வேளாண்மைத் துறையின் மூலம் நாடெங்கும் மரக்கன்றுகளை நடும் விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்-சமூக நலத்துறையின் சார்பில் நலிந்த ஏழையெளிய மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவுகின்ற திட்டங்களை நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பவள விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக சூன் 1ஆம் தேதியன்றும், 2ஆம் தேதியன்றும் சென்னை மாநகரில் கழகத்தின் இளைஞரணி, மகளிர் அணி, இலக்கிய அணி, மாணவர் அணி, மீனவர் அணி, உள்ளிட்ட அணிகளின் சார்பில் கருத்தரங்குகள்-சுழலும் சொற்போர்- "கலைஞர் ஒரு காவியம் என்னும் நாட்டிய நாடகம்-பட்டி மன்றம்-இசை அரங்கம்-கவியரங்கம் முதலான நிகழ்ச்சிகள் நடைபெறுமென்றும் அறிவிக்கப் கலைஞர் பட்டது.

ஜூன் திங்கள் 3ஆம் தேதியன்று சென்னை கடற்கரையில் பிரதமர் குஜ்ரால் அவர்களும், மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும் அறிக்கையில் தெரிவித்தார். ★ ★ ★ 1.6.1998 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள், முதலில் எனக்குப் பவளவிழா வாழ்த்துக்களைச் செய்தியாளர்கள் சார்பில் தெரிவித்ததோடு-பவள விழாச் செய்தியினையும் தர வேண்டுமென்றார்கள்-அப்போது நான் வழங்கிய பவள விழாச் செய்தி வருமாறு:- "நிர்ணயிக்கப்படாததும், நாமே நிர்ணயித்துக் கொள்ள முடியாததுமான இயற்கையான மனித ஆயுட்காலத்தில் எழுபத்து நான்கு ஆண்டுகளைக் கடந்து, எழுபத்து ஐந்தில் நான் அடியெடுத்து வைக்கிற நாள், இந்த ஜூன் மூன்றாம் நாளாகும்.

"நான் பிறந்த பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழியும் தமிழர் உரிமையும் காத்திட மூண்டெழுந்த இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம், 1938 ஜூன் மூன்றாம் நாள்தான் தொடங்கப்பட்டது என்பதையும், அந்நாளில் அப்போர்க்களத்து இளஞ் சிப்பாய்களில் ஒருவனாக என்னை இணைத்துக் கொண்டு திரு.வி.க.வின் வழித் தோன்றல் வனசாட்சியிடம் பரிவுத் தொகை ரூ.20 இலட்சத்தை வழங்கினார் கலைஞர். அருகில் சாவி பொது வாழ்வில் புகுந்தேன் என்பதையும் எண்ணிடும்போது எத்துணையோ இன்ப அலைகள் இதயத்தில் மோதுகின்றன."

"பாச உணர்வும், அன்புப் பிணைப்பும் கொண்ட நேசமிகு பெரி யோர்களும், தாய்மார்- களும் என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளும் இதனை என் பவள விழா ஆண்டு எனக் கூறி வாழ்த்துகின்றனர். "இந்திய நாட்டு சுதந்திரப் பொன் விழா ஆண்டின் நிறைவையும்-என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ள இந்தக் கழகத்தின் பொன்விழா ஆண்டின் முகப்பையும் இணைத்துக் கொண்டுள்ளது என் பவளவிழா என்கிறபோது ஓர் உணர்ச்சிப் பிரவாகம்-பெருமிதம் என்னுள்ளத்தைக் கொள்ளை கொள்ளத்தான் செய்கிறது."

"திரு.வி.க.நாடு கடத்தப்படுவார்" என்ற செய்தியறிந்து வெகுண்டெழுந்த திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் "உலக அளவில் சமாதானத்தையும்-நாட்டின் ஒற்றுமையையும் சமுதாய அளவில் அறிவியல் எழுச்சியையும்- அதன் தாக்கமாக அமைதி சூழ் வளமிகு எதிர்காலத் தலைமுறையையும் உருவாக்கிட மனிதநேய அடிப்படையில் அமைந்திட வேண்டிய வலிமைசேர் மாளிகையின் அடித்தளத்துக் கற்களில் ஒருவனாக இருக்கிறோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு, அவ்வாறு இருப்போர் அனைவரையும் என் உடன்பிறப்புக்களாகக் கருதி என் பொது வாழ்வுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். "இந்தப் பயணத்தில் இடர்- துயர்- இன்பம்-துன்பம் - எதிர்ப்பு- ஆதரவு- ஏச்சு- பேச்சு- இழிவு- பழி என எத்தனையோ விதவிதமான நிகழ்ச்சிகளை எதிர்கொள்ளும் போது என்னை ஆளாக்கிய பெரியாரையும், அரவணைத்து வழி நடத்திய அண்ணாவையும் நினைத்துக் கொண்டு-இலட்சியத்தில் இம்மியளவும் சறுக்கல் கலைஞர் இல்லாமல்-எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறேன்."

"அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட கழக உடன் பிறப்புக்களையும் - அன்பெனும் அமுதூட்டி ஆதரவுக் கரம் நீட்டித்துணை நிற்கும் கோடிக்கணக்கான தமிழ்ப் பெரு மக்களையும் - அரசியலுக்கும், கட்சிப் பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டு வாழ்த்தி அருளுகின்ற அன

ைத்து நெஞ்சங்களையும்-தூய துணைகளாகக் கொண்டு-எழுபத்து நான்கு ஆண்டுகளைத் தாண்டி விட்டோமே என்ற மலைப்புடன் திரும்பிப் பார்க்கிறேன். என் விழிகள் மட்டும் விரிந்திடவில்லை-பெருமூச்சு காரணமாக என் சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன." "இந்தத் துணைகள் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் - இருக்க வேண்டுமென்ற வேண்டுகோளுடன், எஞ்சியுள்ள பயணத்தைத் தொடருகிறேன். என் கடன், பணி செய்து கிடப்பதே!"

-இவ்வாறு பவள விழாச் செய்தியினை அளித்த என்னிடம் ஒரு செய்தியாளர், "என் பிறந்த நாளினையொட்டி, ஆயுள்சிறைக் கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படுமா?" என்று கேட்டார். அதற்கு நான், "என்னுடைய பிறந்த நாளைக்கு அதைச் செய்வதாக இல்லை-எப்போதும் ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாளின் போதுதான் அவ்வாறு அறிவிப்பது நான் மேற்கொண்டுள்ள வழக்கம். எனவே இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாள் விழாவின் போது அதனை அறிவிப்பேன்" என்று கூறினேன்.

★ ★ ★ பிறந்தநாளினையொட்டி ஏராளமான வாழ்த்துச் செய்திகள்-அதிலே என்னைக் கவர்ந்த ஒரு வாழ்த்துச் செய்தி, கர்நாடக மாநில முதலமைச்சராக அப்போதிருந்த ஜே.எச்.பட்டேல் அவர்கள் அனுப்பியதாகும். அதிலே அவர், "சுதந்திரத்திற்குப் பிந்திய சரித்திரத்தில், பல்வேறு எழுச்சிகளைச் சந்தித்துள்ள கருணாநிதி அவர்கள் தன்னுடைய உறுதியான லட்சியங்கள்-மதிப்பீடுகள்- மற்றும் மக்கள்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக நிலைத்து நிற்கிறார்.

அவருடைய தலைசிறந்த அரசியல் வாழ்க்கை அரை நூற்றாண்டுக்கு மேலான தனது பொது வாழ்வை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒப்படைத்து உயர்ந்து நிற்கும் இந்தத் தலைவரின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அன்புக்கும், பாசத்திற்கும் அடையாளமாகும். அண்டை மாநிலங்களுடன் நல்லிணக்கத்துடன் கூடிய உறவுகளை அவர் எப்போதும் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். அவருடைய எதிர்கால முயற்சிகளில் இறைவன் அவரோடு இருந்து மக்களுக்கு தொண்டாற்றிட நீண்ட வாழ்வை அருள்வானாக" என்று எழுதியிருந்தார்.

★ ★ ★ திரு.வி.க.நாடு கடத்தப்பட்டால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த பனகல் அரசர் கலைவாணர் அரங்கத்திலே அமர்ந்து பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையிலே செய்தியாளர்களும் என்னைச் சந்தித்து வாழ்த்துக் கூறியதோடு, ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புவதாகக் கூறினர். சரி என்றேன். கேள்வி:- 75 வயதாகிவிட்டது-இனிமேல் பொது வாழ்க்கையிலே அக்கறை செலுத்துவீர்களா?

அல்லது குடும்ப வாழ்க்கையிலே அக்கறை செலுத்துவீர்களா? நான்:- 75 வயதுக்குமேல் நிச்சயமாக குடும்ப வாழ்க்கை இருக்க முடியாது. இனி மேல் முழுக்க முழுக்க இருக்கின்ற காலம் எல்லாம் பொது வாழ்க்கையிலேதான். கேள்வி:- இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருப்பீர்கள் -எந்த மாற்றத்தை முக்கியமாகக் கருதுகிறீர்கள்? கலைஞர் நான்:- மாற்றங்களையும் கண்டதுண்டு-ஏமாற்றங்களையும் கண்டதுண்டு. மாற்றங்கள் என்பது நிலையானது - அதை உணர்ந்துதான் செயல்படுகிறேன்.

கேள்வி:- திராவிட இயக்கத் தாக்கம் என்பது எப்படி இருக்கும்? நான்:- அங்கொன்றும், இங்கொன்றுமாக அதற்குச் சோதனை ஏற்படுகின்றதென்றாலும், அதைத் தூக்கி நிறுத்துகின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டாக வேண்டும். வருங்காலம் உணர்வுப் பூர்வமானதாக இருக்கும். எதிர்காலத் தலைமுறை இந்த உணர்வைச் செயற்படுத்தத் தயாராக இருக்கிறது. திராவிட இயக்கத்திற்கு என்றைக்கும் தோல்வி கிடையாது. கேள்வி:- பவள விழா நாளன்று சிறப்புச் செய்தி...?

நான்:- இந்திய மக்களுக்கும், இந்தியாவில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கும், உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் மக்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா என்றைக்கும் ஒற்றுமையோடும், பலத்தோடும் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கேள்வி:- தி.மு.கழகம் இந்த அளவிற்கு இருக்கக் காரணம் நீங்கள் தலைமை வகிப்பது தான் என்று கூறலாமா? நான்:- 'நெய்க்கு தொன்னை ஆதாரமா?

தொன்னைக்கு நெய் ஆதாரமா?' என்று ஒரு பழமொழி உண்டு. அதையே தொண்டர்களுக்குத் தலைவர் ஆதாரம்-தலைவருக்குத் தொண்டர்கள் ஆதாரம் என்று திருப்பிச் சொல்கிறேன். ★ ★ ★ என்னுடைய பவளவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழக ஆளுநர் அவர்கள் டெல்லி சென்றிருந்தார். உடனே ஆட்சியைக் கவிழ்ப்பதையொட்டி, அறிக்கை பெறுவதற்காகத்தான் அவரை டெல்லியிலிருந்து வரச் சொல்லியிருக்கிறார்கள் என்று எங்கும் பேச்சு எழுந்தது.

ஏடுகளும் எழுதின, எதிர்த்தரப்பினரும் தங்கள் விருப்பம் ஈடேறப் போகிறதென்ற எண்ணத்தோடு இருந்தனர். ஆனால், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கவர்னர், "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்தியாக இருக்கிறது" என்று கூறிய பிறகு, எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

மேலும் ஆளுநர் அவர்களும், மன்மோகன்சிங் அவர்களும், ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும், இந்திரஜித் குப்தா அவர்களும் தொலைபேசி வாயிலாக டெல்லியிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். கலைஞர் த.மா.கா.தலைவர் அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறியதோடு, தங்கச் சங்கிலி ஒன்றையும் எனக்கு அணிவித்தார். அவரோடு அருமை நண்பர்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன் ஆகியோரும் வந்து என்னை வாழ்த்தினார்கள்.

மேலும், அந்தக் கட்சியின் சார்பில் சோ.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.எஸ்.பொன்னம்மாள், வி.கே.இலட்சுமணன், சிதம்பரம் அழகிரி, சி.ஞான சேகரன், வேல்துரை, ரெங்கநாதன், ஆரூண், அமரமூர்த்தி, தலைவாசல் ராணி, பத்மா ஆகியோரும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களும் கலைவாணர் அரங்கத்தில் என்னைச் சந்தித்து, பிறந்தநாள் பரிசு வழங்கி, கட்டித் தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.நல்லகண்ணு, ஏ.எம். கோபு, ஜி.பழனிச்சாமி, கே.சுப்பராயன், நா.பெரியசாமி, வை. சிவபுண்ணியம், நாங்குநேரி கிருஷ்ணன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.வரதராசன், டி.கே.ரெங்கராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோரும், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் , பொதுச் செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் சமது, அப்துல் லத்தீப், மற்றும் ஜி.ஏ.வடிவேலு, டேவிட், வேங்கடசாமி எம்.எல்.ஏ., திண்டிவனம் ராமமூர்த்தி, அன்பரசு, இல.

கணேசன், மைத்ரேயன், திருநாவுக்கரசர், பேராசிரியர் தீரன் ஆகியோரும் நேரில் வந்து என்னை வாழ்த்தினர். கலைத்துறையின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியூரிலிருந்து வாழ்த்துக் கடிதம் அனுப்பியதோடு, தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நேரில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், டி.ராஜேந்தர் , புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்- திரன், ராதாரவி, வி.கே.ராமசாமி, நாகேஷ், சந்திரசேகர், தியாகு, ராதிகா, எம்.சரோஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், இசைமேதை டி.ஆர்.பாப்பா, லியாகத் அலிகான், தியாகி செங்கல்வராயன் ஆகியோரும் என்னை நேரில் வந்து வாழ்த்தினர்.

★ ★ ★ என் பவள விழாவினையொட்டி, ஜூன் 1 ஆம் தேதி முதல் மகளிர் அணியின் சார்பில் "கருத்தரங்கம்" -மாணவர் அணியின் சார்பில் "சுழலும் சொற்போர்"-மீனவர் அணியின் சார்பில் "பட்டி மன்றம்"-இளைஞர் அணியின் சார்பில் "கவியரங்கம்" இலக்கிய அணியின் சார்பில் "வாழ்த்தரங்கம்" என நடந்தேறிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல, கடல் பொங்கிக் கரையில் வழிந்ததோ எனும் அளவிற்குக் கழகக் கண்மணிகளும், தமிழ்ப் பெருமக்களும் குழுமியிருந்த பவள விழாப் பொதுக் கூட்டத்தை- முத்துச்சிப்பிக்குள் இருந்து நான் வெளிவருவது போன்ற காட்சியை உருவாக்கி, வாழ்த்தலைகளின் முழக்கங்களை என் செவி குளிரக் கேட்கச் செய்து-என் சிரம் நாணிக் குனியுமளவிற்குப் பாராட்டுப் புகழ் உரைகளை வாரி வழங்கிய சீர்மிகு நிகழ்ச்சியை சென்னையில் நடத்திக் காட்டிய அன்றைய சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் சைதை கிட்டு, எல்.பலராமன் ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.

இரண்டு மாவட்டக் கழகச் செயலாளர்களையும் பாராட்டி, " சைதை கிட்டு-செயலில் சிட்டு " என்ற தலைப்பில் அப்போது நான் கடிதம் ஒன்றையே முரசொலியில் எழுதியிருந்தேன். மாநில மாநாடுபோல அந்த விழா நடைபெற்றது. பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அரியதோர் உரை நிகழ்த்தினார். நெருக்கடி நிலை காலத்தில், நான் அடைந்த வேதனைகளையும், சோதனைகளையும் வரிசையாக அந்தக் கூட்டத்தில் தொகுத்து கலைஞர் அவர் உரையாற்றினார்.

முன்னாள் பிரதமர் குஜ்ரால் அவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசிய உரையின் சுருக்கம் வருமாறு:- கலைஞருக்குக் குவிந்த பவளவிழா வாழ்த்துகள் குறித்து 'தினமணி' வெளியிட்ட கார்ட்டூன் "நான் இங்கே வந்திருப்பதன் பிரதான நோக்கம் என்னுடைய அருமை நண்பர் கலைஞர் அவர்கள் நெடுநாட்கள் வாழ வேண்டும்" என்று வாழ்த்துவதற்காகத் தான்.

இந்த மகத்தான பூமியாகிய தமிழ் நாட்டிலிருந்து பல பெரிய மாற்றங்கள் தோன்றி இந்தியாவிற்கு வழிகாட்டியிருக்கின்றன. இன்று கலைஞர் அவர்கள் தலைமையேற்று நடத்துகிற திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு காலத்திலே பெரியார் அவர்களால் தலைமையேற்றுத் துவக்கி வைக்கப்பட்ட இயக்கமாகும். உண்மையிலேயே இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தாயாகிய அந்த இயக்கம் ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல. அது ஒரு இயக்கம். அந்த இயக்கத் தினுடைய நோக்கம் சமுதாய மாற்றம்!

சமுதாயத்திலே இருக்கிறவர்கள்- ஒடுக்கப்பட்டவர்கள்- அடக்கப்பட்டவர்கள்- தீண்டத் தகாதவர்கள் ஆகியோரைக் கைதூக்கி விடுவதற்குச் சமுதாய மாற்றம் காணுவதற்காக உருவாக்கப் பட்டதுதான் அந்த மகத்தான இயக்கமாகும்." "இன்னும் சொல்லப்போனால் இந்தக்கட்சி வெகு காலத்திற்கு முன்பு துவங்கப்பட்ட நீதிக்கட்சியினுடைய தொடர்ச்சி என்று சொல்லலாம். இந்தக் கட்சியின் மூலாதாரக் கொள்கை பின் தங்கியவர்களைக் கைதூக்கி விடுவதாகும்.

சமுதாய அநீதியை நீக்குவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். இன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களை வாழ்த்துகிறோம் என்றால், அவர் இந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர். கலைஞர் ஒரு அரசியல்வாதி மட்டு மல்ல - அரசியலுக்கு மட்டும் இந்த மாற்றத்தை அவர் பயன்படுத்தவில்லை. அவர் ஒரு இலக்கிய வாதியாகவும், நல்ல எழுத்தாளராகவும் விளங்குகிறார். அது மட்டுமல்ல - ஒரு சிந்தனையாளராகவும், அறிவாளியாகவும் அவர் விளங்குகிறார்.

தமிழ் மக்கள் இந்தியாவில் ஒரு பகுதியில் மட்டும் வாழ்பவர்கள் அல்லர் - உலகமெங்கும் வாழ்கிறார்கள். அந்தத் தமிழர்கள் டாக்டர் கலைஞர் அவர்களுடைய எழுத்துக்களை, திரைப்படங்களை ரசித்து மகிழ்கிறார்கள் - போற்றிப் புகழ்கிறார்கள். இன்று நான் அவரை நீண்ட நாள் வாழ்க, வாழ்க என்று வாழ்த்துகிற போது - அவர் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுமென்று வாழ்த்து தெரிவிக்கிற நேரத்தில், நான் நன்கு உணருகிறேன் - அவர் தோளில் சுமத்தப்பட்டிருக்கிற பொறுப்புக்கள் சாதாரணமானதல்ல - அவர் சுமக்கிற சுமை மிகவும் கனமானதாகும்.

கலைஞருக்குப் பவளவிழா வாழ்த்து தெரிவிக்கும், பேராசிரியர் "இந்த 75ஆவது பிறந்தநாளில் கலைஞர் அவர்கள் நாட்டுக்குத் தரக்கூடிய அன்பளிப்பு ஒன்று இருக்கிறதென்றால், அது ஒன்றுதான். அதுதான் சமாதான இயக்கத்திற்கு கலைஞர் அவர்கள் முன்னோடியாக விளங்க வேண்டுமென்று நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். சமாதானத்தை நாம் நிலை நாட்ட வேண்டும். சமாதான இயக்கத்தின் முன்னோடியாக இருக்குமாறு இங்கே கலைஞர் அவர்களையும், மூப்பனார் அவர்களையும், மேடையில் இருக்கக்கூடிய தலைவர்களையும் நான் வேண்டிக் கொள்கிறேன்.

கலைஞர் அவர்களுக்கு நல்வாழ்வும்-ஆரோக்கியமான வாழ்வும்-இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய வாழ்வும் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல-இந்தியாவும் ஒரு கலைஞர் நல்ல இலட்சியத்தை நோக்கி நடப்பதற்கு கலைஞர் அவர்கள் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று ஐ.கே.குஜ்ரால் அவர்கள் நீண்ட பாராட்டுரை நல்கினார்.

அந்தக் கூட்டத்தில் பிரதமர் மட்டுமல்ல, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.மூப்பனார் அவர்களும், அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.ஏ.பி.பரதன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராசன் அவர்களும், தியாகச் செம்மல் செங்கல்வராயன் அவர்களும், அப்துல் லத்தீப் அவர்களும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும், அருளாளர் ஆர்.எம்.வீ. அவர்களும், கோவை செழியன், ஜி.ஏ.வடிவேலு, பெரியவர் அய்யணன் அம்பலம், திருநாவுக்கரசர், பேராசிரியர் தீரன், பேராயர் எஸ்றா சற்குணம், வை.பாலசுந்தரம், டாக்டர் கிருஷ்ணசாமி, எழுத்தாளர் சாவி ஆகியோரும் என்னை மிகவும் பாராட்டி உரையாற்றினர்.

★ ★ ★ சென்னையில் பவளவிழா சிறப்பாக நடைபெற்று, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அதனைச் சீரும் சிறப்புமாக நடத்தியதை நான் பாராட்டியதும், திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி நேருவிற்குப்பொறுக்குமா? 7.6.1998 அன்று திருச்சியில் நடைபெற்ற பவள விழாவினையொட்டி, அவர் செய்திருந்த அலங்காரங்கள்...அப்பப்பா! சென்னையை வெற்றி கண்டு, செயலில் சிட்டு என்று அன்றைய சென்னை மாவட்டக் கழகக் செயலாளர் சைதை கிட்டுவை நான் பாராட்டியதைப் போல, "நானும் பாராட்டைப் பெற்றுக் காட்டுகிறேன் பார்" என்று ஏற்பாடு செய்திருந்தார், தம்பி நேரு.

அவர் செய்திருந்த அந்த அலங்காரங்களைப் பார்த்துவிட்டு, மேடையிலே மாவட்டச் செயலாளர்களுக்கு ஒரு குட்டு வைத்தேன். "பவள விழா, பவள விழாவாக நடைபெற வேண்டும் அல்லாமல், அது பகட்டு விழாவாக நடைபெறக் கூடாது!" என்று கூறினேன். திருச்சி நகரத்தையே அலங்கார விளக்குகளால் அழகுபடுத்தி இருந்தார் அவர். ஆர்வக்கோளாறு காரணமாக அவர் திருச்சியை அழகுபடுத்தியதைப் பாராட்டிய போதிலும், "இனிமேல் அவ்வாறு ஊர் முழுவதும் அலங்காரம் செய்து எனக்குப் பவளவிழா நடத்துவதாக இருந்தால்-அது எந்த மாவட்டமாக இருந்தாலும் அந்த மாவட்டக் கழகங்களுக்கு நிச்சயமாக அனுமதி தரமாட்டேன்" என்பதை திருச்சி விழாவிலே நான் தெளிவுபடுத்தினேன்.

அதுபற்றிக் கூறும்போது, "பவளவிழா பகுத்தறிவு விழாவாக இருக்க வேண்டும்-வெறும் பளபளப்பு விழாவாக இருந்து பயனில்லை. பவளவிழா அரசியல் விளக்க வெளிச்சம் தரும் விழாவாக மட்டும் இருக்க வேண்டும்-ஆடம்பரத்தை அள்ளித் தெளிக்கும் விழாவாக இருப்பதை நான் அனுமதிக்கப் போவதில்லை. பவளவிழா, பகுத்தறிவு, அரசியல், சமுதாய நலம், மக்களிடையே விழிப்புணர்வு-இவைகளுக்காகப் பயன்படுகிற விழாவாகத்தான் அமை

ய வேண்டுமேயல்லாமல், "விளக்கு அலங்காரங்கள் வெகுநேர்த்தி" என்று மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இத்தகைய விழாக்களை நடத்த வேண்டாம்" என்று திட்டவட்டமாகக் கூறினேன். "தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது- ஆட்சியைக் கலைக்க வேண்டும்" என்று தீவிரமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அண்ணா அவர்கள் அடிக்கடி கூறும் கதை ஒன்றையே எடுத்துக்காட்டி, அந்தக் கூட்டத்திலே நான் பதில் கூறினேன்.

"ஒரு நரி ஆற்றோடு வெள்ளத்தில் போய்க் கொண்டிருந்ததாம். "அய்யோ, உலகம் போய்விட்டது, உலகம் போய்விட்டது" என்று அந்த நரி கூச்சலிட்டதாம். ஆற்றின் கரையிலே நின்று கொண்டிருந்தவர்கள், நரி என்ன இப்படி உலகம் போய்விட்டதாகச் சொல்கிறது-அதைத் தூக்கி என்னவென்று கேட்கலாம் என்று நினைத்து, வெள்ளத்தில் போய்க்கொண்டிருந்த நரியைக் காப்பாற்றி மேலே கொண்டுவந்து- "அதென்ன உலகம் போய்விட்டது என்று கூச்சலிட்டாயே-அதற்கு என்ன பொருள்?

ஏன் அப்படிக் கலைஞர் கூச்சலிட்டாய்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த நரி, "என்னை ஆறு அப்படியே அடித்துக் கொண்டு போயிருந்தால், என்னைப் பொறுத்த வரையில் உலகம் போயிருக்குமா- இல்லையா? அதைத்தான் நான் அப்படிச் சொன்னேன்" என்று கூறியதாம்.

அதனைக் காப்பாற்றியவர்கள் கோபமடைந்து மீண்டும் அந்த நரியைத் தூக்கி ஆற்றிலே போட்டுவிட்டுப் போனார்களாம். அதைப்போல அரசியலிலே பாதிக்கப் பட்டவர்கள்தான் தமிழகத்திலே சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூச்சலிடுகிறார்கள்" என்று அந்தக் கூட்டத்தில் கூறினேன்.

"தமிழ்நாடு மட்டுமல்ல - இந்தியாவும் முன்னேற கலைஞர் துணை நிற்க வேண்டும்" என்று கட்டித் தழுவி வாழ்த்தினார், ஐ.கே. குஜ்ரால் அதே நேரத்தில் அந்தக் கூட்டத்தில் பிரதமர் அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு கதையை-அந்தக் கால கட்டத்தில், ஆந்திர மாநிலத்தில் மருத்துவமனையிலே நடந்த ஒரு கண் அறுவை சிகிச்சை பற்றிய நிகழ்ச்சியை எடுத்துக்கூறி, "எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தேன்.

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு ஒரு கண்ணிலே புற்றுநோய் வந்து விட்டது. "அந்தப்புற்றுநோயை அகற்ற முடியாத நிலையில், கண்ணையே அகற்றிவிட்டால்தான், குழந்தை பிழைக்கும்-இல்லாவிட்டால் இன்னொரு கண்ணுக்கும் புற்றுநோய் பரவி குழந்தை குருடாக நேரிடும்-குழந்தை இறந்துவிடும்" என்று மருத்துவர்கள் புற்றுநோய் தாக்கிய கண்ணை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட முடிவு செய்தார்கள்.

கலைஞருக்கு பவளவிழா வாழ்த்து தெரிவிக்கிறார் இல.கணேசன் குறிப்பிட்ட நாளன்று குழந்தையை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, படுக்க வைத்து, அறுவை சிகிச்சை செய்யப்போன டாக்டரிடம், அங்கேயிருந்த யாரோ ஒருவன், தெரிந்தோ தெரியாமலோ "நோயுற்ற கண் இடது கண்" என்று சொல்லிவிட்டான்.

ஆனால், உண்மையில் வலது கண் தான் பாதிக்கப்பட்ட கண். டாக்டரும் புத்தி கெட்டு நன்றாக இருந்த கண்ணை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட்டார். புற்றுநோய் தாக்கிய கண் அப்படியே விடப்பட்டு விட்டது. குழந்தை இரண்டு கண்ணும் போய்விட்ட நிலைக்கு ஆளாகியது. இந்தக் கதையை அந்தக் கூட்டத்திலே நான் நினைவுபடுத்தி, "பிரதமர் அவர்களே! தமிழ்நாடு நல்ல கண்ணாக இருக்கிறது. புற்று நோய் கொண்ட கண் வேறெங்கோ இருக்கலாம். அதை விட்டுவிட்டு கண் பார்வை உள்ள கண்ணை எடுத்து விட்டால், குழந்தை மாத்திரம் குருடாகாது.

ஜனநாயகமே குருடாகி விடும்!" என்று எடுத்துச் சொன்னேன். ★ ★ ★ திருச்சியில் நடைபெற்ற பவளவிழா நிகழ்ச்சியில் ஆடம்பரங்கள் கூடாது என்று நான் எவ்வளவோ எச்சரித்த போதிலும், அதற்கடுத்த இரண்டாவது நாள் 9.6.1998 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற பவளவிழா நிகழ்ச்சியிலும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டேன். 7ஆம் தேதி விழாவில் நேரு கலைஞர் திருச்சி மாநகரைத் தான் அலங்காரம் செய்திருந்தார் என்றால், 9ஆம் தேதி விழுப்புரம் மாவட்டதையே அலங்காரம் செய்து விட்டார் தம்பி பொன்முடி.

"திருச்சியிலேதானே ஆடம்பரம் செய்ய வேண்டாமென்று சொன்னேன்" என்று நான் கேட்டபோது, "அண்ணே! அதற்கு முன்பே இந்த அலங்காரங்கள் எல்லாம் செய்யப்பட்டுவிட்டன. எதையும் எடுப்பதற்கு தொண்டர்கள் முன்வரவில்லை" என்றார். திருச்சியிலிருந்து விழுப்புரம் வருவதற்கு முன்பே இடையில் 8ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் கச்சிராயப் பாளையத்தில் ஒரு சர்க்கரை ஆலை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டுவிட்டு வந்தேன். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டபோது, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென தனி இட ஒதுக்கீடு கோரி அ.தி.மு.க.ஆட்சியிலே 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, துப்பாக்கிச் சூட்டிலே பலியானோர் குடும்பங்களுக்கெல்லாம் தலா மூன்று இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினேன்.

அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, தம்பி வீரபாண்டி ஆறுமுகம், தம்பி துரைமுருகன், தம்பி பொன்முடி, தம்பி எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் பேராசிரியர் தீரன் ஆகியோர் அந்த விழாவிலே கலந்து கொண்டனர். ★ ★ ★