நெஞ்சுக்கு நீதி
ஜீவாவும்- ஈ.எம்.எஸ்.ஸும்! · 345 / 391
கலைஞர் 33. ஜீவாவும்- ஈ.எம்.எஸ்.ஸும்! "இந்தியாவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்த ஒரே ஒரு இடம் தமிழ்நாடுதான்" என்று கூறினார், நம்பூதிரிபாத் செ ன்னை தொலைக்காட்சியில் நான் எழுதிய "தென்பாண்டிச் சிங்கம்" 15.3.1998 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பப்பட்டது.
"தென்பாண்டிச் சிங்கம்" "குங்குமம்" வார இதழில் வெளியாகி இலட்சக் கணக்கான வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றதோடு, 1989 ஆம் ஆண்டு நான் எழுதிய வரலாற்றுப் புதினமான " தென் பாண்டிச் சிங்கம் " சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஒரு இலட்ச ரூபாய் விருதான மாமன்னன் இராஜ இராஜன் விருதினையும் பெற்ற புதினமாகும். இதற்கான பரிசளிப்பு விழா 25.5.1990 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அப்போதும் தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக அப்போது இருந்தவரும், ஆங்கிலத்தில் தலை சிறந்த புலமை பெற்றவருமான திரு.சங்கர்தயாள் சர்மா அவர்கள் அந்த விழாவிலே கலந்து கொண்டு இராஜராஜன் விருதினையும் படைப்பிலக்கியப் பரிசாக ஒரு இலட்சம் ரூபாயையும் எனக்கு வழங்கினார். அந்த விழா பற்றியும்-அதிலே சங்கர்தயாள் சர்மா பேசியது பற்றியும், அவர் எனக்கு தன் அன்பின் அடையாளமாக அழகிய பேனா ஒன்றை வழங்கியது பற்றியும், அந்த நிதியினை நான் பல்கலைக்கழகத்தில் "அன்னை அஞ்சுகம் முத்துவேலர் அறக்கட்டளை" நிறுவுவதற்காக அளித்தது பற்றியும், "நெஞ்சுக்கு நீதி"யின் நான்காம் பாகத்திலே எழுதியிருந்தேன்.
200 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களை எதிர்த்து நின்ற வீரபாண்டிய கட்டபொம்மன், சின்னமருது, பெரிய மருது. பூலித்தேவன், கோபாலநாயக்கர் வரிசையில் வரும் வாளுக்குவேலி, பாகனேரி நாட்டுத் தலைவன் . அந்த வாளுக்கு வேலியின் வரலாற்றைத்தான் தென்பாண்டிச் சிங்கம் என்ற பெயரில் எழுதியிருந்தேன். சின்னத் திரையில் ஒளிபரப்பான அந்தக் காவியத்தில், நடிகர் நாசர் வாளுக்கு வேலியாக நடித்தார். மேலும் கீதா, கோடை மழை வித்யா, வினோதினி, மௌனிகா, பாலாசிங், அமரசிகாமணி, வாத்தியார் ராமன், கம்பர் ஜெயராமன், வி.கே.ஆர்.
ரமணி போன்ற திரைப்பட முகங்களும், பேராசிரியர்களான மு.ராமசாமி, இரா.இராஜூ, அ.ராமசாமி, கூத்துப்பட்டறை பசுபதி ஆகியோரும் கலைஞர் தீட்டிய "தென்பாண்டிச் சிங்கம்" புதினத்திற்கு ராஜராஜன் விருதினை அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் சங்கர் தயாள் சர்மா வழங்கினார். கலைஞர் நடித்தார்கள். இசைஞானி இளையராஜா அவர்கள் அந்தத் தொடருக்கு இசை அமைத்திருந்தார். 2007ஆம் ஆண்டிற்கான முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருதுகளை வா.செ.
குழந்தைசாமி, நடிகர் நெப்போலியன், வாகை சந்திரசேகர், ஜே.பி.கிருஷ்ணா ஆகியோருக்குக் கலைஞர் வழங்கினார். ★ ★ ★ "முரசொலி" அறக்கட்டளை சார்பில் தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்தோரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முரசொலி நிறுவனர் மற்றும் முரசொலி அறக்கட்டளை நிறுவனர் கலைஞர் பெயரால் விருதும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்குவதென்று தீர்மானித்து, 1996 ஆம் ஆண்டிற்கான விருதுகள் பழம்பெரும் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு) மற்றும் தமிழறிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகிய இருவருக்கும் 1.3.1997 அன்று வழங்கப்பட்டது பற்றி நான் ஏற்கனவே இந்தத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன்.
அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்களையும் தொகுத்து வழங்கிட விரும்புகின்றேன். 1997ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி , பத்திரிகை ஆசிரியர் சாவி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு 13.1.1998 அன்றும்- 1998ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் கவிஞர் சுரதா , இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ,இயக்குநர் பாரதி ராஜா ஆகியோருக்கு 13.1.1999 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் முனைவர் வ.அய்.சுப்ரமணியம் , இயக்குநர் ஸ்ரீதர் , ஓவியர் கோபுலு ஆகியோருக்கு 15.1.2000 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு , இயக்குநர் கே.பாலச்சந்தர் ,கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோருக்கு 27.1.2001 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருது பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன், காவியக் கவிஞர் வாலி, இசைமுரசு நாகூர் ஈ.எம்.அனிபா ஆகியோருக்கு 12.1.2002 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் எழுத்தாளர் சு.சமுத்திரம் , மணவை முஸ்தபா , கவிஞர் கா.வேழ வேந்தன் ஆகியோருக்கு 28.6.2003 அன்றும்- 2003ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் டாக்டர் பி.ராமமூர்த்தி , இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், சு.செல்லப்பன் ஆகியோருக்கு 20.1.2004 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் கணபதி ஸ்தபதியார் , எழுத்தாளர் கோவி.மணிசேகரன், முரசொலி சொர்ணம் ஆகியோருக்கு 28.1.2005 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் எழுத்தாளர் சின்னக்குத்தூசி, கவிஞர் மு.மேத்தா, ஓவியர் ஜெயராஜ் ஆகியோருக்கு 30.1.2006 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன் , நடிகை மனோரமா ஆகியோருக்கு 30.1.2007 அன்றும்- ஆம் ஆண்டிற்கான கலைஞர் விருதுகள் முனைவர் வா.செ.குழந்தைசாமி , நடிகர் நெப்போலியன், ஜே.பி.கிருஷ்ணா கலைஞர் ஆகியோருக்கும், முரசொலிமாறன் சிறப்பு விருது வாகை சந்திரசேகருக்கும் 15.2.2008 அன்றும் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
★ ★ ★ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், என்னிடம் மிகுந்த அபிமானம் கொண்டவருமான தோழர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் சலியாத படிப்பாளி-எழுத்தாளர். மார்க்சிஸ்ட் கட்சியின் வார ஏடான "பீப்பிள்ஸ் டெமாக்ரசி" ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். " வேதங்களின் நாடு", "இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள் " என்ற தனது சுயசரிதை உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். பண்டித ஜவகர்லால் நேரு குறித்து எஸ்.கோபால் என்பவர் எழுதிய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து " நேரு கொள்கையும் நடைமுறையும் " என்ற புத்தகம் எழுதியுள்ளார்.
அரசியல் வாழ்வில் பல ஆண்டுகளைச் சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர் நம்பூதிரிபாத். இந்திய அரசியல் வானில் எந்தக் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத அப்பழுக்கற்ற தலைவராக நம்பூதிரிபாத் திகழ்ந்தார். இறுதிக்காலம் வரை " தேசாபிமானி ". "ப்ரண்ட்லைன் " பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். அவருக்கு 2 மகன்கள்-2 மகள்கள் உண்டு. 20.3.1998 அன்று, தமிழகச் சட்டப் பேரவையில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இரங்கல் தீர்மானத்தில் நான் பேசும்போது, "ஈ.எம்.எஸ். என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற அந்த மூன்று எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராக விளங்கிய தலைசிறந்த மார்க்சீயவாதியும், புரட்சியாளரும், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவருமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்களுடைய மறைவுச் செய்தி எனக்குக் கிடைத்தபோது நான் அதிர்ச்சியுற்றேன். "ஈ.எம்.எஸ். அவர்கள் இந்தியத் தொழிலாளர்கள் இயக்கத்தினுடைய இதயங்களில் எல்லாம் இடம் பெற்று விளங்கியவர்.
இந்தியாவிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே ஜனநாயக ரீதியிலே முதன் முதலாக ஒரு அரசை நிறுவிய பெருமை அவருக்கு உண்டு. அதேபோல அரசியல் சட்டத்தினுடைய 356ஆவது பிரிவின் தாக்குதலுக்கு ஆளான பெருமையும் அவருக்கு உண்டு. அதிலே சோர்ந்து விடாமல், அடுத்து பல தேர்தல்களில் ஈடுபட்டு, ஒரு ஐக்கிய முன்னணியைக் கேரள மாநில அளவிலே உருவாக்கி, 1969 ஆம் ஆண்டு வரையிலே கேரள முதலமைச்சராகத் திகழ்ந்தார்கள். கலைஞர் அந்தக் கால கட்டத்திலேதான், தமிழக அரசோடு ஒத்துழைத்து உருவாக்கப்பட்ட, பரம்பிக்குளம்-ஆளியாறு திட்டத்திலேயிருந்த சில பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு, நான் கேரளாவுக்குச் சென்று, திருவனந்தபுரத்தில் அவரோடு ஒரு நாள் முழுதும் விவாதிக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
அந்தப் பிரச்சினையில் அதிகாரிகளோடு உட்கார்ந்து கலந்து பேசிய போது, எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியவில்லை. நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த திரு.ஈ.எம்.எஸ். அவர்கள், திடீரென்று என்னைப் பார்த்து, "கொஞ்ச நேரம் தனியாகப் பேசினால் பிரச்சினை முடிந்து விடும். இரண்டு அரசுகளுடைய அதிகாரிகளையும் தயவு செய்து வெளியே இருக்கச் சொல்லிவிட்டு நாம் பேசுவோமா?"
என்றார். "சரி" என்று ஒப்புக்கொண்டேன். இருவரும் பேசினோம்-இரண்டு நிமிடங்களில் சுமுகமாக முடிவுற்றது பரம்பிக்குளம்-ஆளியாறு பிரச்சினை. ஒரே நேரத்தில் இரண்டு மாநில முதலமைச்சர்கள் என்கிற முறையிலே மாத்திரமல்லாமல், எதிர்க்கட்சிகளுடைய தலைவர்கள் என்கின்ற முறையிலேகூட எங்கள் இருவரிடையே நீண்ட காலப் பழக்கம் உண்டு. 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, சென்னையிலே நானும், ஈ.எம்.எஸ். அவர்களும் ஒரு கூட்டத்திலே பேசினோம்.
அப்போது அவர் பேசும்போது. "நான் ஏன் இங்கே வந்து கருணாநிதியுடன் கூட்டத்திலே கலந்து கொள்கிறேன் என்றால், இந்தியாவிலே சுதந்திரக் காற்றை சுவாசிக்கக்கூடிய ஒரே இடம் இப்போது தமிழ்நாடாகத்தான் இருக்கிறது-எனவேதான் அந்தச் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தமிழகத்திற்கு வந்திருக்கிறேன்" என்று அன்றைக்கு தன் வேதனையை வெளிப்படுத்தினார் என்பது போன்ற அவரது நினைவுகளை யெல்லாம் எடுத்துக் கூறினேன்.
★ ★ ★ 19.4.1998 அன்று முக்கூடல் சங்கமிக்கும் குமரிமுனையில் அறிவுக் கடல் திருவள்ளுவருக்கு தி.மு.கழக அரசு, விண்முட்ட 133 அடி உயரத்தில் நிர்மாணித்து வந்த சிலை அமைக்கும் பணியினை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தேன். சிலை அமைக்கும் பணி குறித்த விபரங்களையும், அதன் நுட்பங்களையும், அந்தப் பணியை மேற்கொண்டு வெற்றிகரமாகச் செய்த அருமை நண்பர் கணபதி ஸ்தபதி அவர்கள் என்னிடம் கூறினார். என்னுடன் அந்தப் பயணத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்.
தா.கிருட்டிணன், ஆலடி அருணா, முல்லைவேந்தன், ரகுமான்கான், சமயநல்லூர் செல்வராஜ், சுரேஷ்ராஜன் மற்றும் கழக அமைப்புச் செயலாளராக இருந்த பொன்.முத்துராமலிங்கம், டாக்டர் ஆல்பன் எம்.எல்.ஏ., ஆகியோரும் வந்திருந்தனர். ★ ★ ★ கலைஞர் அதே நாளில், நாகர்கோயிலில் கழக அரசு சார்பில் கட்டப்பட்டிருந்த பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்களின் நினைவு மண்டபத்தினைத் திறந்து வைத்தும்-அந்த மண்டபத்திற்குள்ளே வைக்கப்பட்டிருந்த ஜீவானந்தம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தும் வணங்கினேன்.
நான் எனது வாழ்க்கையில் பேரறிஞர் அண்ணா அவர்களுக்குத் தம்பியாகி, அவரை " அண்ணா, அண்ணா " என்று அழைத்து மகிழ்ந்தவன் என்ற போதிலும்,விரல்விட்டு எண்ணத்தக்க வேறு சிலரைத்தான் அண்ணன் என்று அழைத்துப் பழக்கப்பட்டவன். குறிப்பாக தளபதி அழகிரி அவர்களை எப்படி அண்ணன் என்று அழைப்பேனோ, அதைப்போலவே பொதுவுடைமை வீரர் ஜீவா அவர்களையும் அண்ணன் என்று அழைப்பதுதான் வழக்கம். நாகர்கோவிலில் ஜீவானந்தம் அவர்கள் பெயரால் ஒரு மணிமண்டபம் அமைய வேண்டுமென்று என்னிடத்தில் தனியாகவும், பேரவையிலே பேசும்போதும், கோரிக்கை வைத்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் திரு.டி.மணி அவர்களாகும்.
அண்ணன் ஜீவானந்தம் அவர்களை நான் இளமைக் காலம் தொட்டே நன்கறிவேன். அவர் தந்தை பெரியார் வழியில் சுயமரியாதைக்காரராக விளங்கியவர். அவர் அரசியலிலே காங்கிரஸ் இயக்கத்திலே இருந்து பணியாற்றினார் என்றாலும்கூட, இறுதிக்காலம் வரையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்தவர். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஜீவா அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டவர். ஜீவா அவர்களின் எளிமையான வாழ்க்கை, பொது வாழ்வில் கலைஞர் ஈடுபட்டிருக்கின்ற அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டிய ஒன்றாகும்.
ஜீவானந்தம் அவர்கள் காங்கிரசிலே இருந்தபோது, வத்தலக்குண்டில் 39ஆவது தமிழ் மாநில அரசியல் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நடைபெற்றது. முக்கியமான அந்தப் பொறுப்புக்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர் உள்ளிட்ட அனைவரைக் காட்டிலும், அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர் அண்ணன் ஜீவானந்தம் அவர்களாகும். 1927ஆம் ஆண்டு ஜீவா அவர்கள் நடத்தி வந்த ஆஸ்ரமத்திற்குக் காந்தியடிகள் வருகை புரிந்தார்.
அப்போது ஜீவா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது காந்தியடிகள் ஜீவாவிடம், "உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது?" என்று கேட்டபோது, ஜீவா அவர்கள், " இந்தியா தான் என் சொத்து " என்று பதில் கூறியிருக்கிறார். உடனே காந்தியடிகள், அதனை மறுத்து, " இல்லை, இல்லை- நீங்கள்தான் இந்தியாவின் சொத்து " என்று உருக்கத்தோடு கூறினாராம்.
இத்தகைய புகழுக்குரியவர் தான் அண்ணன் ஜீவா அவர்கள். சிலம்பொலி செல்லப்பன் 1963ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம்-ஒருநாள் "ஜனசக்தி" அலுவலகத்தில் ஜீவானந்தம் எழுதிக் கொண்டிருக்கிறார். 17 வயதான பெண் ஒருவர் உள்ளே வந்தார். ஜீவா அந்தப் பெண்ணிடம், "நீ யாரம்மா?"
என்றார். உடனே, அந்தப்பெண் ஒரு துண்டுக் காகிதத்தை ஜீவாவிடம் நீட்ட, அதில் "என் தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ்-எனது அன்னையின் பெயர் கண்ணம்மா -உங்கள் மகள் நான் " என்று எழுதியிருந்தது. அதைப் படித்துவிட்டு, இறுதியில் "என் மகள்தான்" என்று அந்தத் துண்டுச் சீட்டிலேயே எழுதி, அதை அந்தப் பெண்ணிடம் திரும்பக் கொடுத்தார்.
அந்த வார்த்தைகளையே அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தத் துண்டு காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார். அந்தப் பெண் கொடுக்க மறுத்து விட்டார். அந்தப் பெண் வேறு யாருமில்லை. ஜீவா பெற்றெடுத்த மகள் குமுதாதான்! முரசொலி சொர்ணம் பிறந்தது முதல் 17 ஆண்டு காலம் தந்தையைக் காணாமல், தாயாரைப் பெற்றெடுத்த தாத்தா-பாட்டி வீட்டிலேயே இருந்து விட்டு, அப்போதுதான் தந்தையைக் காண வந்துள்ளார்.
ஜீவாவின் முதல் மனைவியார் திருமதி கண்ணம்மா . அவரது தந்தைதான் குலசேகரதாஸ். அவர் கலைஞர் ஈ.எம்.எஸ். இறுதி ஊர்வலத்தில் திரண்ட கூட்டம் கடலூரிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர். குமுதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் தாயார் கண்ணம்மா மறைந்து விட்டதால், குமுதா தாய்மாமன் வீட்டிலே வளர்ந்து தனது 17ஆவது வயதில் தந்தையைச் சந்திக்க வந்த காட்சியைத்தான் இவ்வாறு எழுதியிருக்கிறேன்.
அதன் பின்னர் குமுதாவைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஜீவா தனது இரண்டாவது மனைவியான பத்மாவதியிடமும், மற்ற குழந்தைகளிடமும் அறிமுகம் செய்து வைத்தார். ஜீவானந்தம்-பத்மாவதி திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமல்ல, காதல் திருமணமும் கூட. ஜீவா சிறையிலே இருந்த காலத்தில் பத்மாவதி
அம்மையார் மாகாணத் தொழிற் சங்க காங்கிரஸ் அலுவலகத்தை நிர்வகித்து வந்தார். 1952இல் ஜீவா சிறை மீண்ட பிறகு, திருமதி பத்மாவதி அரசுப் பணியில் அமர்ந்தார். விடுமுறை நாட்களில் மட்டுமே கணவனும் மனைவியும் தாம்பரத்தில் இருந்த தங்கள் வீட்டில் சந்திப்பார்கள். ஜீவாவின் வாழ்க்கைக் குறிப்பு இது. ★ ★ ★ சிராவயலில் காந்தியின் பெயரால் ஜீவா அவர்கள் நடத்தி வந்த ஆசிரமத்தைக் காண வ.உ.சிதம்பரனார் ஒருமுறை வந்தபோது, சிறுவர், சிறுமியர் ராட்டைச் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து, "என்ன முட்டாள்தனம்?
வாளேந்த வேண்டிய கைகளை நூலேந்த வைத்திருக்கிறீர்களே?" என்று கோபமாகக் கேட்டபோது, அண்ணன் ஜீவா அவர்கள், "தாங்கள் சொல்வது சரி-வீர வாளேந்தி இரத்தம் சிந்தினாலொழிய இந்தியாவுக்கு விடுதலையில்லை என்றால், என் போன்ற கணக்கற்ற காளைகள் களம் ஏகி, பிறந்த நாட்டிற்காகப் பெரும் தியாகங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், வேறு வழியில்லாததால்தான் இந்தப் பணியில் இறங்கியுள்ளோம். இத்தகைய ஒரு ஸ்தாபனத்தைத் தாங்கள் ஒரேயடியாக அவமதித்துப் பேசுவது எங்களுக்கு மன வேதனையைத்தருகிறது" என்றாராம்.
வ.உ.சி. அவர்களும் பிறகு அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டாராம். ஜீவாவைப் பற்றி இன்னும் எழுதிக்கொண்டே செல்லலாம். எனக்கும் ஜீவாவிற்கும் உள்ள தொடர்புகள் பற்றி-குறிப்பாக அவரை நான் கலைவாணர் இல்லத்திலே சந்தித்தது பற்றியும்-அத்தகைய பெருமகன் என்னுடைய பேச்சைக் கேட்பதற்காக ஒருமுறை பரமக்குடி நகரிலே கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வெகுதூரத்தில் இருந்து கேட்டது பற்றியும்-இந்தத் தொடரில் முதல் பாகத்திலேயே நான் விரிவாக எழுதி விட்ட காரணத்தால், மீண்டும் அதனை இங்கே எழுதவில்லை.
நம்பூதிரி மறைவு குறித்து 'தினமணி' வெளியிட்ட 'கார்ட்டூன்' ஜீவா அவர்கள் குற்றாலத்தில் இருந்த போது, அவரைக் காணவரும் ஏழை எளிய மக்களிடம் முட்டை, நெய், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு வரும்படிச் சொல்வார். அவர்களும் கொண்டு வந்து கொடுக்கும் போது, ஒரு சிலர் "இதென்ன பணக்காரர்களிடம் இதையெல்லாம் கேட்காமல், கலைஞர் ஏழைகளிடம் கேட்கிறீர்களே?"
என்று கேட்கும் போது, "பணக்காரர்கள் என் காலடியில் கொண்டு வந்து கொட்டினாலும், அதை ஏற்கமாட்டேன்- ஏழைகள்தான், அவர்களிடம் உள்ளதில் ஒரு பங்கை மனம் உவந்து தருவார்கள் என்று கூறினாராம். நாகர் கோவிலில், கலைஞர் திறந்து வைத்த பொதுவுடைமை வீரர் ஜீவாவின் மணிமண்டபம் ஜீவாவிற்குத் தெய்வ நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நண்பர்களுடன் சேர்ந்து கோவிலுக்குச் செல்வார். அங்கே சாப்பிடக் கொடுக்கும் பதார்த்தங்களை வாங்கிச் சாப்பிடுவார்.
ஆனால், திருநீறோ-குங்குமமோ கொடுத்தால் அதைக் கையில் வாங்கிக் கொண்டு, பிறகு தனியாகச் சென்று, அதை கீழே போட்டு விடுவாராம். கொடுப்பவர்கள் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதில் அந்த அளவிற்கு கவனத்தோடு இருப்பாராம். ★ ★ ★ ஜீவா அவர்கள் மறைந்தபோது மருத்துவமனையில், பக்கத்திலேகூட யாரும் இல்லாத சூழ்நிலையில், இரவு நேரத்தில் அவர் மறைந்து விட்டார். விடியற்காலையில், 'ஜீவா மறைந்து விட்டார், சென்னை மருத்துவமனையிலே அவருடைய உடல் இருக்கிறது' என்று எனக்குச் செய்தி வந்தது.
உடனே நான் அண்ணாவினுடைய வீட்டிற்குச் சென்று, அண்ணாவை அழைத்துக் கொண்டு நானும், அண்ணாவும், என்.வி.நடராசனும் மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கே அந்த எளிய மனிதர் - இரும்பு மனிதர்-எழுச்சி யுகம் காண்பதற்கு புரட்சி கீதங்களைப் பாடிய பெருமகனின் உடல் பிணக்கிடங்கிலே வைக்கப்பட்டிருந்தது. அங்கேயே இருந்து அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகளை எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்களோடு சேர்ந்து கவனித்து விட்டு, அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து விட்டுத் திரும்பினோம்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், மாறுவேடத்தில் கலைவாணர் வீட்டிலிருந்த ஜீவானந்தத்தைக் கலைஞர் சந்தித்தார். ஜீவா அவர்களிடம் பொதுவுடைமை இயக்கக் குணங்கள் அமைந்ததற்கு ஒரு காரணமாக ஒரு உதாரணம் கூறுவார்கள். ஜீவா தனது இளம் பிராயத்தில், அவருடைய சொந்த கிராமமான பூதப்பாண்டியிலே-கோவிலுக்குச் சென்று சுண்டல் பெற்று-அதனை தான் மட்டும் அருந்தாமல், மற்ற சிறுவர்களையெல்லாம் அழைத்து பகுத்துண்டுதான் சாப்பிடுவோம்.
அந்தக் குணத்தினால்தான் அவர் பெரியவராக ஆன பிறகும் சமத்துவம்-சமதர்மம் வேண்டும் என்றெல்லாம் பாடுபட்டார். அவருடைய மணி மண்டபத் திறப்பு விழாவிற்கு அவருடைய குடும்பத்தினர் எல்லாம் வந்திருந்தார்கள். நேரில் என்னைக் கண்டு நன்றி கூறினார்கள். ★ ★ ★ 1935ஆம் ஆண்டு கோவை ஸ்டேன்ஸ் மில்லில் ஒரு முறை வேலை நிறுத்தம். காலை 6 மணிக்குத் தொழிலாளர் கூட்டம். 5 மணிக்கு ஜீவா ஒரு பாடல் எழுதி, அந்தப் பாடல் அந்தக் கூட்டத்தில் பாடப்பட்டது.
அந்தப் பாடல் தமிழகம் எங்கும் தொழிலாளர்களிடையே பரவி, அந்தப் பாடல் பாடப்படாத கலைஞர் இடமே இல்லை என்ற அளவிற்குப் புகழ் பெற்றது. ஜீவா எழுதிய அந்தப் புகழ் பெற்ற பாடலில் ஒரு பகுதி இதோ:- காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக்குக் கூழுமில்லை பாழுக் குழைத்தோமடா-என் தோழனே பசையற்றுப் போனோமடா! குண்டிக்கொரு துண்டுமில்லை கொல் வறுமை தாளவில்லை ஒண்டக்குடிசையில்லை-என் தோழனே உழைத்திளைத்துப் போனோமடா!
பாலின்றிப் பிள்ளை அழும்- பட்டினியால் தாயழுவாள்- வேலையின்றி நாமழுவோம்-என் தோழனே வீடு முச்சூடும் அழும்! கையிலொரு காசுமில்லை கடன் கொடுப்பார் யாருமில்லை செய்யும் தொழில் கிட்டவில்லை-என் தோழனே திண்டாட்டம் கொல்லுதடா! இப்படி எழுதிய அண்ணன் ஜீவானந்தம் அவர்கள் மறைந்தபோது, 21.3.1963 அன்று நான் எழுதி "நம் நாடு" இதழில் வெளியான இரங்கல் கவிதை இதோ:- நாமணக்கும் நல்ல தமிழ் மணக்கும் நாஞ்சில் என்ற பேர் மணக்கும் பாமணக்கும் பூதப்பாண்டி யெனும் ஊர் மணக்கும் பண்பாளர் ஜீவா புகழ் பாடுகின்ற வாய் தேன் மணக்கும்!
ஆட்டம் போடும் வாலிபத்தின்-பனி மூட்டம் கலையா வயதினிலே நாட்டம் கொண்டார் பொது வாழ்வினிலே நாட்டை நினைத்தார் முதலிடமாய்! தோட்டம் நிறையப் பூ இருந்தும் தொலைவில் பறந்த வண்டினைப் போல் தொண்டே என்றன் வாழ்வென்று சுற்றிப் பறந்தார் நாட்டினிலே வீட்டில் சிலநாள் தங்கிடுவார்!-சிறைக் கூட்டில் பலநாள் வதங்கிடுவார்! மேடையில் முரசு கொட்டிடுவார் - வாழ்வின் கோடையில் பயணம் சென்றிடுவார்! "தாமரை" மலரைத் தந்திடுவார்- அதில் தமிழாம் அமுதை உண்டிடுவோம்!
கையை ஓங்கிப் பேசிடுவார்-அங்கே கடும்புயல் வீசக் கண்டிடுவோம்! வாரீர் என்று அழைத்திடுவார்-அந்த வாஞ்சை கண்டு சிலிர்த்திடுவோம்! குன்றாம் அவர்தம் தோளெங்கே? குன்றா அவர்தம் திறமெங்கே? நன்றாம் அவர்தம் குணமெங்கே? நாட்டுக் குழைக்கும் பண்பெங்கே? வீரம் செறிந்த முகம் எங்கே? விழிகள் கொட்டும் ஒளி எங்கே? குமரி முனையில், வான்முட்டும் திருவள்ளுவர் சிலை அமையும் பணியினைப் பார்வையிட்டார் கலைஞர் கலைஞர் குருதியெலாம் புரட்சி மணம் கமழுகின்ற வரிப் புலியைக் கொள்கையிலே உறுதி கொண்ட தமிழ்க் கவியைக் கொள்ளையடித்து மகிழ்ந்ததோ கொடுஞ்சாவு-எனக்கேட்டுக் குமுறுகின்றார் நாட்டு மக்கள்!
வாழ்க ஜீவா! வாழ்க என்றும்! பன்மொழிப் புலவர் சு.ரா.ஜமதக்னி மொழி பெயர்த்த காரல் மார்க்சின் மூலதன நூலைக் கலைஞர் வெளியிட்டார். அருகே பேராசிரியர் மு.நாகநாதன். ஜீவா மறைவு குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் வழங்கிய இரங்கல் செய்தியில், "கொள்கையிலே ஜீவாவுக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கையும், அதனை எடுத்து விளக்குவதில் அவர் பெற்றிருந்த திறமையும் எவரும் கண்டு வியக்கத் தக்கனவாக இருந்தது. எந்தப் பொதுநலத் தொண்டரையும் கலங்க வைக்கக்கூடிய எத்தனையோ வகையான கொடுமைமிகு அடக்குமுறைகளை அவர் கண்டவர் - அவற்றைத் தாங்கிக் கொண்டவர்-வென்றவர்!
அவருடைய "சம்மட்டி அடிகளை"ப் பெற்றுச் சரிந்த சூதுக் கோட்டைகள் பலப்பல! அவருடைய ஓயாத உழைப்பினால் மக்கள் மன்றம் பெற்ற உயர் தனிக்கருத்துகள் பலப்பல! அவர் பேசாத நாள் இல்லை- போகாத ஊர் இல்லை- காணாத எதிர்ப்பு இல்லை- பெறாத சீர்மிகு வெற்றியும் இல்லை! ஒளி விடு கணைபோல் விளங்கி வந்தார். அந்த ஒளியால் தமிழகம் புதுப்பொலிவு பெற்றது! ஒளி மறைந்ததால் அவருடைய இல்லமாக அவர் கொண்டிருந்த தமிழகம் இருள்சூழ்ந்த நிலை பெற்றிருக்கிறது."
-என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ★ ★ ★ திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நான், 2.5.1998 அன்று காரல் மார்க்சின் படைப்புகளான " மூலதனம் " மற்றும் " மிகைமதிப்பு " நூல்கள் வெளியீட்டு விழாவிலே கலந்து கொண்டேன். காரல் மார்க்ஸ் எழுதிய உலகப் புகழ் வாய்ந்த நூல்தான் " மூலதனம் " அதனை இந்தியாவிலேயே முதன் முதலாக நம்முடைய இந்திய மொழியில்- அதுவும் நம்முடைய தமிழ் மொழியிலே-முழுவதும் மொழியாக்கம் செய்து தந்த பெருமை, மொழிப்புலவர் ஜமதக்னி அவர்களைத்தான் சாரும்.
அந்த மொழியாக்க நூலை தமிழிலே வெளியிடுவதற்குத் தம்பி முனைவர் நாகநாதன் - திட்டக் குழுவின் துணைத் தலைவராக தற்போது இருப்பவர்-1998ஆம் ஆண்டில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அந்த விழாவிற்கு நான் தலைமையேற்று அந்த நூலினை வெளியிட, பொதுவுடைமை இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவராக இருந்த கே.டி.கே.தங்கமணி அந்த முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார். ஜமதக்னி அவர்களின் மருமகன் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் விழா ஏற்பாடுகளைச் செய்து, வரவேற்- கலைஞர் புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், முனைவர் தமிழ்க்குடிமகன், என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு, சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் முனைவர் ஜெகதீசன், வே.ஆனைமுத்து, முனைவர் செ.பாலசுப்பிரமணியம், பேராசிரியர் தீரன், முனைவர் திருமதி பி.நாகபூசணம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஜமதக்னி அவர்களின் மகளும், நாகநாதன் அவர்களின் துணைவியாருமான சாந்தி ஜமதக்னி நன்றி கூறினார். ஜமதக்னி அவர்கள் மொழி பெயர்த்த நூல் வெளியீட்டு விழாவில், காரல் மார்க்ஸ் பற்றியும், அவர் எழுதிய தத்துவங்கள் குறித்தும் நீண்டதோர் உரையாற்றினேன்.
