நெஞ்சுக்கு நீதி
"கூனி மந்தரை" என்று கூறியது · 343 / 391
31. "கூனி மந்தரை" என்று கூறியது "தினமணி" தி.மு.கழக அரசைக் கலைக்க வேண்டுமென்று அ.தி.மு.க.வினர் கூறுவது நகைப்புக் குரியது - ப.சிதம்பரம் பி ரதமர் வாஜ்பாய் அவர்களைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி, கடுமையான நிபந்தனைகளை விதித்து, ஜெயலலிதா நேரடியாகப் பிரதமருக்கு எழுதிய கடிதம்பற்றி 20.4.1998 அன்று தலையங்கம் எழுதிய "தினமணி", "ஜெயலலிதாவின் சொல்லிலும், செயலிலும் வேகம் காணப்படுகிறதே தவிர, விவேகம் இல்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய வந்த மத்திய அதிகாரிகள் குழு, தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டுச் சென்றது ஜெயலலிதாவின் ஆத்திரத்தை அதிகப்படுத்தி விட்டது- எப்படியாவது தமிழகத்தில் தி.மு.க.
அரசை நீக்க வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் குறிக்கோள்" என்றும் எழுதியது. ஆனாலும் வாஜ்பாய் அவர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவுகாண வேண்டுமென்ற எண்ணத்தோடு, அமைச் சரவையிலிருந்து பூட்டாசிங் அவர்களை, 20.4.1998 அன்று நீக்கினார். மேலும் ஹெக்டே, ஜெத்மலானி ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதைப்பற்றி தமிழக ஏடுகள் எழுதும்போது, "தமிழகத்தில் தி.மு.க. அரசைக் கலைத்து விட்டால், தன் மீதுள்ள ஊழல் வழக்குகளை வாபஸ் பெறச் செய்து விடலாம் என்பதே ஜெயலலிதாவின் ஓர் அம்சத் திட்டம்.
பா.ஜ.க. ஜெயலலிதாவின் திட்டத்திற்குத் துணை போகலாமா?" என்று எழுதின. கலைஞர் மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே அவர்கள், ஜெயலலிதாவின் பிளாக் மெயில் வேலையைத் தடுக்க, மக்களவையைக் கலைத்து மீண்டும் தேர்தல் நடத்த பிரதமர் வாஜ்பாய் முன்வர வேண்டும்- தி.மு.க. அரசைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்" என்றும் கூறினார்.
அவரை அமைச்சரவையிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டிருக்கச் சொல்ல வேண்டுமென்றும் அ.தி.மு.க.வினர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்கள். 25.4.1998 அன்று காலையில் மத்திய திட்டக்குழு துணைத்தலைவராக இருந்த ஜஸ்வந்த் சிங் அவர்கள், சென்னைக்கு வந்து ஜெயலலிதா அப்போது தங்கியிருந்த மாமல்லபுரம் அருகே உள்ள பையனூர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார்.
வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, விரைவில் கூடவுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க ஜெயலலிதா ஒப்புக் கொண்டதாகக் கூறினார். அந்தச் செய்தியைத் தாங்கி வெளிவந்த 26.4.1998 தேதிய "தினமணி" நாளிதழ், முதல் பக்கத்தில், " கைகேயி வெற்றி - மக்களின் தோல்வி " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் சுருக்கம் இதோ:- "மந்தரை என்கிற கூனி ராமாயணத்தில் இடம் பெறும் ஒரு சாதாரணமான கதாபாத்திரம்தான்.
இன்றைய மொழியில் சொன்னால்- "மக்களவையில் ஓர் உறுப்பினர் கட்சி" என்பதைப் போல! கைகேயிக்கு இந்தக் கூனி வெறும் வேலையாள் மட்டுமே. ஆனாலும் ஒரேயொரு முறை அவள் தன் இருப்பை உணர்த்தினாள். அவளது தனிப்பட்ட தலையீட்டினால், "சூரிய" வம்ச வரலாற்றின் போக்கே மாறியது. "அயோத்தி" ராமனின் வரலாறும் மாறியது. தனது தலைமகன் ராமனுக்கு முடிசூட்ட வேண்டும் என்று தசரதன் விரும்பினான். அயோத்தி நகர் முழுதும் கோலாகலம். கொண்டாட்டம்.
மக்கள் பங்கேற்புடன் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகள் மும்முரமாக நடந்தன. நாடு நகரமெல்லாம், ராமன் அரசனாகப் போவதை எண்ணி மகிழ்ந்திருக்க, ஒரு இதயத்திற்கு மட்டும் மனக் காய்ச்சல் கண்டது. அது மந்தரை என்கிற கூனி, ராமனை முடியேற்க விடாமல் செய்து விடுவதன் மூலம் திருப்தியடைய நினைத்தாள். வாழ்க்கையில் தனித்துப் போனதால் மக்களவையில் ஒரு உறுப்பினர் கட்சியைப்போல வெறுத்துப் போயிருந்தாளோ என்னவோ? "தனது திட்டம் நிறைவேறினால் கைகேயிக்கு கிடைக்கும் நன்மைகளையெல்லாம் பட்டியலிட்டாள் கூனி.
நன்மை தரும் முடிவுகளைக் காட்டி, கைகேயியின் பலவீனத்தில் கைவைத்தாள். பரதனை நினைவூட்டினாள். முன்பு தலை தப்பிக்கச் செய்த செயலுக்காக தசரதன் அளித்த இரு வரங்களுக்கு புதிய வடிவம் கொடுத்தாள் கூனி. கூனியின் புத்திசாலித்தனம், "ராமன் அரசனாவதைத் தடுப்பதோடு, பரதன் முடியேற்கும்போது ராமன் காட்டுக்குப் போக வேண்டும்" என்றும் வரம் கேட்க வைத்தது.
வரத்தினால் குழப்பங்கள் எழுந்தன. தசரதன் மனமுடைந்து மயங்கி விழுந்தான். மாண்டே போனான். "தாயைக் கொல்லாமல் கொன்ற பரதன், அவள் கோரிக்கையை புறந்தள்ளி, அண்ணனைத் தேடி காடு நோக்கிச் சென்றான். அண்ணனின் பாதக்குறடுகளுடன் நாடு திரும்பினான். காலணி ஆட்சி நடத்தினான். காடு சென்ற ராமனை மேலும் மேலும் துன்பங்கள் சூழ்ந்தன. மந்தரைக்கு இதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். சுப்பிரமணியன் சுவாமிக்குப் பிரதமர் பதவிக்குக் குறைவான எந்தவொரு சுயலாப ஆசையும் இல்லை என்று கற்பூரத்தில் அடித்துச் சொல்லலாம்.
இது வெறும் அலங்கரிப்பு வேலைதான். நவீன கைகேயியின் வேலையாளான அவருக்கு, மாற்றார் புண்படச் செய்வதும், சுற்றியிருப்போர் திடீர் பீதி கொள்ளச் செய்வதும் மகிழ்ச்சிக்கான ஒருவழி. அவர் கைகேயியை மதி நுட்பத்துடன் தூண்டி விட்டார். கைகேயி கொண்டிருந்த பலவீனத்தை (வழக்குகளை ஒன்றுமில்லாமல் கலைஞர் செய்தல்-எதிரியான தி.மு.க. அரசைக் கலைத்தல்) அறிந்திருந்தார். "முதல் வரம்-நிதி அமைச்சர் பதவி. கைகேயி கேட்டவரங்கள் அநியாய முடிவுக்குக் கொண்டு செல்லும் என்ற அடிப்படையில், தசரதன் அவள் வரங்களை மறுத்திருக்கலாம்.
ஆனால், அவன் கடமை உணர்வு அவ்வாறு செய்யவிட வில்லை. தனது நேர்மையின் விளைவு துயரம்தான் என்பதை அறிந்திருந்த போதிலும், அவன் வரங்களை மறுக்கவில்லை. அன்றைய கைகேயி போன்றே சதுரங்க ஆட்டத்தில் அபத்தமான வெட்டுக்காய் நகர்த்தலை விளையாடுகிறாள், இன்றைய நவீனராணி , மற்றவர்கள் தோற்கும் போது மந்தரை வெல்வாள். கைகேயி வெற்றி பெறும்போது மக்கள் தோற்றுப் போவார்கள்."
-ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்து அப்போதைய நாளேடுகள் எந்த அளவிற்கு விமர்சனம் செய்தன என்பதற்கு இது ஒன்றே போதும் என்று கருதுகிறேன். இதற்கிடையே அப்போது ராஜஸ்தான் மாநில முதலமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான பெய்ரோன் சிங் ஷெகாவத் பீகாரில் ராப்ரி தேவி தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தள அரசையும், பிரச்சினைக்கு முடிவாக, பூட்டாசிங்கை அமைச்சரவையிலிருந்து நீக்கினார், வாஜ்பாய் தமிழகத்தில் தி.மு.க.கழக அரசையும் கலைக்க வேண்டுமென்று அவருக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத பிரச்சினையில் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.
அதைப்பற்றி 27.4.1998 அன்று சட்டசபையில், "ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இன்னொரு மாநில முதலமைச்சரைப் பற்றி எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் மனம் போன போக்கில் பேட்டிக் கொடுத்திருப்பது சரியல்ல" என்று நான் பதில் அளித்தேன். 5.5.1998 அன்று மத்திய அரசில் கூட்டணியிலே இருந்த ஜெயலலிதா, "மின்வாரிய சீரமைப்புத் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்து தோழமைக் கட்சிகளோடு பா.ஜ.க. கலந்தாலோசிக்க வில்லை-மத்திய மின்சார சீரமைப்புக்குழு, மாநில மின்சாரச் சீரமைப்புக் குழு நிறுவவேண்டும் என்று ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதை பத்திரிகையில் பார்த்துத்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் - மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் எங்களுக்கு உடன்பாடானதல்ல" என்று அறிக்கை விடுத்தார்.
அதற்கு அன்றைய தினமே மத்தியில் மின்துறை அமைச்சராக இருந்த ரெங்கராஜன் குமாரமங்கலம், "அந்த அவசரச் சட்டம் குறித்து அமைச்சரவையிலே விவாதிக்கப் பட்டது-அமைச்சரவையிலே இடம் பெற்றிருந்த எல்லா கட்சிகளும் அந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டன!"
என்று பதிலளித்தார். மத்திய அரசு கொண்டு வந்த அந்த அவசரச் சட்டம், குறிப்பாக இலவச மின்சாரம் வழங்குவதைக் கட்டுப்படுத்து- கலைஞர் வதற்கான சட்டம் என்று அப்போது கருதப்பட்டது. அதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான் ஜெயலலிதா முந்திக்கொண்டு, அந்த அவசரச் சட்டத்தை தங்களுக்குத் தெரியாமலே மத்திய அரசு கொண்டு வந்து விட்டதாக அவர்கள்மீது பழியைப் போட்டார். மத்திய மின்துறை அமைச்சரோ அ.தி.மு.க.
சார்பில் அமைச்சரவையிலே பங்கு பெற்றதாக பதில் கூறினார். இதுகுறித்து என்னைக் கேட்டபோது, "ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் போது சட்டத்துறை அமைச்சருக்குத் தெரியாமல் கொண்டு வரமுடியாது. மத்தியில் சட்டத் துறையின் அமைச்சராக இருப்பவரே அ.தி.மு.க வைச் சேர்ந்த தம்பிதுரைதான். எனவே அவர்களுக்குத் தெரியாமல் விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்க முடியாது!"
என்று கூறினேன். தமிழகச் சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் இந்த அவசரச் சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபோது நான் குறுக்கிட்டு, தமிழக அரசின் எதிர்ப்பையும் எடுத்துக்கூறி, விவசாயிகளுக்கு "இலவச மின்சாரம் தமிழகத்திலே எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது!"
என்று உறுதி கூறினேன். ஆனால் எந்த ஜெயலலிதா மத்திய அரசு அவசரச் சட்டத்தைத் தங்களுக்குத் தெரியாமலே கொண்டு வந்துவிட்டது என்று எதிர்ப்புத் தெரிவித்தாரோ, அவரே 6.5.1998 அன்று "மத்திய அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல" என்று அறிக்கை மூலம் தெரிவித்தார்.
மத்திய அரசின் தோழமைக் கட்சியான அ.தி.மு.க. சார்பாக அமைச்சராக இருந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஆர்.கே.குமார் என்பவர் , 7.5.1998 அன்று ஒரு ஆணை பிறப்பித்து, அது ஏடுகளில் எல்லாம் பெரிதாக வெளிவந்தது. அது என்ன உத்தரவு தெரியுமா? "சென்னையில் ஜெயலலிதாவின் வருமான வரி வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரிகள் உட்பட, நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்- பட்டுள்ளனர்" என்ற உத்தரவாகும்.
"மொத்தம் 89 துணை ஆணையர்களும், 108 உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அந்த இடமாற்ற நடவடிக்கை பற்றி, இணை அமைச்சர் ஆர்.கே.குமார் மூத்த நிதி அமைச்சரிடமோ-வருவாய்த் துறை செயலரிடமோ கலந்தாலோசிக்கவில்லை" என்றும் ஏடுகள் எழுதின.
இதனைத் தொடர்ந்து 9.5.1998 அன்று டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா, வாழப்பாடி ராமமூர்த்தி, டாக்டர் ராமராஸ், வைகோ போன்றவர்களும் கலந்து கொண்டதோடு, பிரதமர் வாஜ்பாய் அவர்களையும் கூட்டம் முடிந்த பிறகு தனியாகச் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழகத்திலே தி.மு.க. அரசு நீடித்தால் நிலைமை மோசமாகிவிடும் என்றும், அ.தி.மு.க அணியிலே உள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களையும் அந்த அணியினர் சந்தித்து, "தமிழகத்தில் தி.மு.க அரசை உடனடியாக நீக்க வேண்டியது அவசியமானது" என்று வலியுறுத்தினார்கள். அதற்கு அவர்கள் முக்கிய காரணமாகக் கூறியது, கோவையில் நடைபெற்ற வெடிகுண்டு விபத்தைத்தான். ஆனால் அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் "இந்து" நாளிதழில் 30.4.1998 அன்று சென்னை வளர்ச்சி ஆய்வுக கழகத்தின் ஆலோசகராகப் பணியாற்றி வந்த ஜெ.ஜெயரஞ்சன் , (ஆமாம், அவரும் ஜெ.ஜெ.தான்) அந்த ஜெ.ஜெ.விற்குப் பதிலளித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே தொகுத்துத் தருவது அந்த நேரத்துப் பிரச்சினைக்கான பதில் என்பதற்காக மட்டுமல்லாமல், பொதுவாகத் தமிழகத்தின் நிலை குறித்தது அந்தக் கட்டுரை என்பதாலும் அவசியம் என்று கருதுகிறேன். "கோவையில் 55 அப்பாவி உயிர்களைப் பலி கொண்ட குண்டு வெடிப்புகளை தற்போதைய தி.மு.க. ஆட்சியில் கலைஞர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போன சம்பவமாக மட்டுமே ஜெயலலிதாவும், அவரது ஆதரவாளர்களும் கருதுகிறார்கள்.
சந்தர்ப்பவசத்தால் ஏற்பட்ட இந்தக் குறைபாடு, பலமுறை அநியாயமாகப் பயன்படுத்தப்பட்ட 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசைப் பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தும் அரசியல் ரீதியான வாய்ப்பை தி.மு.க.வின் எதிரிகளுக்கு வழங்கியிருக்கிறது. அதே நேரத்தில் இந்த மாநிலத்தில் தீவிரவாத இயக்கத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக முக்கிய அரசியல் நிகழ்வுகளை எவர் கண்ணுக்கும் புலனாகாமல் மறைக்கவும் செய்கிறது.
இவை தெரியாமல் இருந்தால், எதிர்காலத் தமிழக அரசியலில் கடும் விளைவுகள் ஏற்படும்." "1980களிலும் 1990களிலும் அ.தி.மு.க. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மிக்ககுறைந்த காலம்தான் தி.மு.க. பதவியில் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் திராவிட இயக்கத்தின் சமயச் சார்பற்ற அரசியல்-மெதுவாக-ஆனால் தொடர்ந்து சிதைக்கப்பட்டது. இந்தச் சிதைவை திராவிட இயக்கத்தின் பெயரால் அ.தி.மு.க.வே உறுதி செய்தது. மேற்பார்வையிட்டது."
"அண்ணா, கலைஞர் போன்ற தி.மு.க. தலைவர்கள் தங்களுக்கு எந்த மதத்தின்பாலும் ஒட்டுதல் இல்லை என்று மறுத்தார்கள். பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களைத் "தமிழர்கள்" என்ற பரந்த உணர்வின் கீழ் ஒன்று படுத்தினார்கள்." "ஆனால், அ.தி.மு.க. தலைவர்கள் இந்து மத வெறியர்ளைச் சேர்ந்தவர்களாக பகிரங்கமாகவே காட்டிக் கொண்டார்கள். மூகாம்பிகை பக்தர்கள் என்பதை அவர்கள் மறைக்கவில்லை. அவர்களது அமைச்சர்களில் பலர் இந்து மத வெறியர் என்பதில் பகிரங்கமாகவே பெருமைப்பட்டுக் கொண்டனர்."
"தி.மு.க. அரசைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்ப்போம்" -என்றார், ராமகிருஷ்ண ஹெக்டே "இந்தச் சூழ்நிலையில் தாணுலிங்கம் நாடார், ராமகோபாலன் ஆகியோரால் 1981இல் நிறுவப்பட்ட இந்து முன்னணி தமிழ்நாட்டில் மத உணர்வு மிகுந்த தென்பகுதிகளில் வேரூன்றியது. அதன் விளைவாக, 1982இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காட்டில் உள்ளூர் இந்துக்களுக்கும், கிறித்துவ மீனவர்களுக்கும் இடையே மதக்கலவரம் மூண்டது.
தமிழர்களை மத அடிப்படையில் இந்து முன்னணி வெற்றிகரமாகப் பிரிப்பதற்கு முதல் வாய்ப்பாக அமைந்த பெரிய சம்பவம் அதுதான். அ.தி.மு.க. வின் ஆட்சி, தனது அரசியலுக்கு உதவிகரமாக இருப்பதையும் இந்து முன்னணி அறிந்துகொண்டது." "1984 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இந்து முன்னணி ஆதரவு அளித்தது. முதல்வராகப் பதவியேற்றவுடனேயே கோயில் நிர்வாக வாரியம் அமைக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார். அதற்குத் தலைமை வகிக்கும் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டார்.
அதன் மூலம் ஜெயலலிதா தனக்குள்ள வேதம் சார்ந்த இந்து மத ஒட்டுதலை மக்களிடம் உறுதிப்படுத்தினார். அந்த நிதிக்குப் பணம் திரட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் வலியுறுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான ரூபாய் திரட்டப்பட்டு, மாநிலத்தின் உள்ள பல பெரிய, சிறி கோயில்களின் புனரமைப்புக்குச் செலவிடப்பட்டன. கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தில் ஜெயலலிதா நேரடியாகப் பங்கேற்றது, காஞ்சி மடத்திற்குச் சென்றது (திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த எந்தத் தலைவரும் அங்க
ு சென்றது கிடையாது) ஆகியவை அவரது அரசியலுக்குத் கலைஞர் தெளிவான இந்து சாயத்தைப் பூசியது. கோயில் பூசாரிகளுக்கு வேதாமகப் பாடங்களில் பயிற்சி வகுப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு வேத அறிவியல் கழகம் நிறுவப்படுவதாகவும் அவர் அறிவித்தார். கோயில் பூசாரிகளுக்கு வேதாகமப் பாடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதும், சமஸ்கிருதத்திலிருந்து ஆகமப் பாடங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதும்தான் இந்தக் கழகத்தின் பிரதான பணிகளாகும்."
"பாபர் மசூதி-ராமஜன்ம பூமி சர்ச்சை நாட்டில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தபோது, ஜெயலலிதா மேற்கொண்டிருந்த இந்து ஆதரவு பகிரங்கமாக வெளிப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் அயோத்தியில் கரசேவை நடைபெறுவதற்கு ஆதரவாக ஜெயலலிதா வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களும், போதிய பாதுகாப்பின்றித் தவித்தவர்களும், சிறுபான்மையினருமான முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா பேசவில்லை. "ராமர்கோயிலை கட்டியே தீரவேண்டும்!"
என்று வலியுறுத்தினார். பாரதிய ஜனதா கட்சி-சிவசேனை நீங்கலாக நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே அயோத்தியில் கரசேவை நடைபெறுவதற்கு ஆதரவு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதித்துறை மேற்கொண்ட நிலைக்கு எதிரானது என்று தெரிந்தும் கரசேவையை ஆதரித்தார். உத்தேச ராமர் கோயிலை ஆதரித்து, தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலம் ஏராளமான பொதுக் கூட்டங்களையும் நடத்தவும் அவர் ஏற்பாடு செய்தார்.
கோயில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. ஏராளமான அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கோயில் கட்டுவதை ஆதரித்துக் கையொப்பமிட்டார்கள். ராமர்கோயில் பிரச்சினையில் ஜெயலலிதா மேற்கொண்ட நிலைக்காகப் பெருமகிழ்ச்சி அடைந்த இந்து முன்னணி, அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தது. தமிழ்நாடெங்கும் நன்றி தெரிவிக்கும் போஸ்டர்களை ஒட்டியது. "சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்காக அல்லது தீவிரவாதம் தலைதூக்கியதற்காக தி.மு.க.
அரசைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறவர்கள், அ.தி.மு.க. செய்த பாவங்களுக்கான விலையை, தி.மு.க. கொடுக்க வேண்டுமென்று கேட்கிறார்கள்." - இவ்வாறு "இந்து" நாளிதழில் அந்தக் கட்டுரை தீட்டப்பட்டிருந்தது. "இந்து" நாளிதழ் மட்டுமல்ல-பல நாளேடுகளும், வார ஏடுகளும் தமிழக அரசைக் கலைப்பதற்கு எதிரான கருத்துக்களை வேக வேகமாக எழுதின. ★ ★ ★ மத்திய அமைச்சரவையிலிருந்து அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் ஒரே வார காலத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது மாதத்தில் மற்றொரு அமைச்சரவைப் பணியாற்றி வந்த ஆர்.கே.குமாரும் அமைச்சரவையிலிருந்து விலகினார் என்ற செய்தி வந்தது.
அந்தச் செய்தியை வெளியிட்ட "தினமணி" நிதித்துறையிலே இணை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த ஆர்.கே.குமார் நினைத்திருந்தால், ஜெயலலிதாவை வழக்குகளிலிருந்து தப்புவிக்கச் செய்திருக்கலாம் என்றும், அமைச்சர் அந்தப் பணியிலே சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் அவரைப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டதாகவும், அப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையிலே இருந்த குமாரிடம் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச் செல்ல அனுமதிக்க கலைஞர் வேண்டுமென்றும், அங்கிருந்து விலகல் கடிதத்தை அனுப்பி விடுவதாகவும் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதனையேற்க ஜெயலலிதா மறுத்துவிட்டதாகவும் நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன.
மத்திய அமைச்சரவையில் அங்கம் பெற்றிருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலிருந்தும் இரண்டாவது நாளாக 5.6.1998 அன்று வெளிநடப்பு செய்தனர். அதற்குக் கூறிய காரணமே, "தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசு தீவிரவாதிகளின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது" என்பதாகும். மீண்டும் 8.6.1998 அன்றும் அதே கோரிக்கையை வைத்து இரண்டு அவைகளிலிருந்தும் அ.தி.மு.க வெளி நடப்பு செய்தது.
10.6.1998 அன்று காலையில் அ.தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, தமிழக ஆட்சிக் கலைப்பு குறித்து பேசிய பிறகும், இரண்டு அவைகளிலிருந்தும் வெளி நடப்பு செய்தனர். நான்காவது நாளாக 11.6.1998 அன்றும் வெளிநடப்பு செய்தனர். 13.6.1998 அன்று சென்னையில் ப.சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியில், "தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அ.தி.மு.க.
சொல்லி வருகிறது. அவர்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்கு ஓர் அம்சத் திட்டம். அதற்காக எல்லாவிதமான சாம, பேத, தான, தண்டங்களையும் கையாள அவர்கள் தயார். அதற்கு பா.ஜ.க. அரசு பலியாகுமா இல்லையா என்பது தான் கேள்வி. ஆனால் பா.ஜ.க தலைவர்கள் ஒன்றைப் புரிந்து வைத்துள்ளார்கள். டிஸ்மிஸ் எளிது-ஆனால் சட்டப் பேரவையைக் கலைக்க முடியாது. கலைத்தால் உடனடியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மக்களவையில் தீர்மானம் நிறைவேறுமா என்பதே கேள்விக்குறி. மாநிலங்களவையில் நிச்சயமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அப்படியென்றால் மீண்டும் சட்டப் பேரவைக்கு உயிர் வந்து விடும். மீண்டும் உயிர் வந்தால் கருணாநிதியை முதல்வராகச் சட்டப் பேரவை தேர்ந்தெடுக்கும். இதை பா.ஜ.க உணர்ந்திருக்கிறது. அதை அ.தி.மு.க.வுக்கு அக்கட்சியால் உணர்த்த முடியவில்லை. அதுதான் சிக்கல். பா.ஜ.க. ஏதோ நெறி முறைகளுக்கு உட்பட்ட கட்சி என்பதை நான் ஏற்கத் தயாராக இல்லை.
சட்டப் பேரவையைக் கலைத்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்றால், அதை அக்கட்சி செய்துவிடும். சட்டம் தடையாக இருப்பதால் யோசிக்கிறது. தமிழகத்தில் பெருமளவு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி உள்ளனர். குற்றவாளிகளை - அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களைக் கண்டு பிடித்துள்ளனர். தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்று கூறுவது நகைப்புக்குரியது" என்று கூறினார்.
18.6.1998 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டமும், தீவிரவாதமும், தேச விரோதச் செயல்களும் பெருகி விட்டதாகவும், அந்தக் காரணங்களுக்காக தி.மு.க. அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும் அறிக்கை விடுத்தார். அதற்கடுத்த நாள் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறும்போது, "தி.மு.கழகத்துடன் பா.ஜ.க. ரகசிய தொடர்பு கலைஞர் வைத்துள்ளது. அ.தி.மு.க.வைப் பிளக்க பா.ஜ.க. சதி செய்கிறது, எங்கள் கூட்டணிக்குள்ளும் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது- இது நடக்காது.
பா.ஜ.க. வின் மாநிலப் பொதுச் செயலாளர் இல.கணேசன் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசியுள்ளார். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கூட்டணிக் கட்சிகளுடன் பா.ஜ.க. அரசு ஆலோசனை நடத்தும் என்று எதிர் பார்த்தோம், ஆனால் பல விஷயங்கள் பத்திரிகை செய்தி வாயிலாகத்தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. "பெரிய அண்ணன்" தோரணையில் பா.ஜ.க நடந்து கொள்கிறது. கருணாநிதியுடன் ரகசிய தொடர்பை பா.ஜ.க. வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் வி.எச்.பி.யுடன் கருணாநிதி நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் கருத்தை அறிந்து பா.ஜ.க. செயல்பட வேண்டும்" என்றெல்லாம் கூறினார். இதற்குப் பதிலளித்த பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவர், "தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதாக எந்த வாக்குறுதியையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பா.ஜ.க. அளிக்கவில்லை. எமது கட்சியின் தோழமைக் கட்சி அ.தி.மு.க.தான். எனவே. நாங்கள் ஏன் தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்க வேண்டும்?"
என்று கேட்டார். பா.ஜ.க.வைப் நோக்கி மட்டுமல்ல-மற்றொரு தோழமைக் கட்சியான ம.தி.மு.க. வைப் பற்றியும் ஜெயலலிதா கருத்துக் கூறத் தவறவில்லை. அதிலே "ஆரம்பத்தில், தி.மு.க. ஆட்சி போக வேண்டும்" என்றார் வை.கோ. ஆனால் இப்போது, "356ஆவது பிரிவைப் பயன்படுத்தக்கூடாது" என்கிறார். தி.மு.க. ஆட்சியை நீக்க வேண்டும் என்பதில் முன்பு தீவிரமாக இருந்தார்-இப்போது முரண்பாடாக உள்ளார். இவரது பேச்சை மக்களாலும், அவரது கட்சித் தொண்டர்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
356ஐப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்து தேர்தல் வந்தால் ம.தி.மு.க. தேர்தலில் நிற்கக் கூடாது" என்றெல்லாம் வர்ணித்திருந்தார். அம்மையாரைவிட ஒருபடி மேலே போய் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக அப்போதிருந்த செங்கோட்டையன் மிகவும் கடுமையாக வை.கோ.வைத் தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "நான் எந்தக் காலத்திலும் 356ஆவது பிரிவினை ஆதரித்ததில்லை" என்று வை.கோ.
வேலூர் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தலைவிக்குப் பதில் அளித்திருந்தார். இதற்கிடையே 21.6.1998 அன்று டெல்லியிலே மத்திய உள்துறை அமைச்சராக இருந்த திரு.எல்.கே.அத்வானி அவர்கள் அளித்த ஒரு பேட்டியில், "மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு நீடிக்க வேண்டுமென்பதற்காக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி எந்த மாநில அரசையும் கலைக்க மாட்டோம்- தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்று கோரும் அ.தி.மு.க.
தலைவி ஜெயலலிதாவுக்கு "முடியாது" என்பதுதான் பதிலாக இருக்கும், இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல-இதேபோல் 356 வது பிரிவைப் பயன்படுத்தி வேறு சில மாநிலங்களும் கலைக்கப்பட வேண்டுமென்று வலுவாக கோரிக்கை எழுப்புகின்றவர்களுக்கும் பொருந்தும்!"
என்று தெரிவித்தார். "நவீன கைகேயியாக" ஜெயலலிதாவைச் சித்திரித்து "கைகேயி வெற்றி மக்களின் தோல்வி" என்று கட்டுரை வெளியிட்டது, தினமணி மேலும் அவர், "ஜெயலலிதா கூறுவதைப்போல தி.மு.க. அரசைக் கலைப்பதாகத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வுக்குப் பா.ஜ.க. உறுதி எதுவும் அளிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்த போதுகூட ஒரு போதும் அவ்வாறு கூறியதாக எனக்கு நினைவில்லை. அது ஜெயலலிதாவினுடைய - அல்லது தமிழ்நாட்டில் உள்ள சிலருடைய எண்ணமாக இருக்கலாம்.
இந்தப் பிரச்சினையில் தேர்தலுக்கு முன்னும், பின்னும் மத்திய அரசு தெளிவாகவே உள்ளது. பா.ஜ.க-தி.மு.க. இடையே ரகசிய உறவு இல்லை- கலைஞர் உறவு இருந்தால் அது வெளிப்படையாகத்தான் இருக்கும்" என்றும் தெரிவித்தார். "மின்வாரியச் சீரமைப்புச் சட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை - என்றார். ஜெயலலிதா. ஆனால், அப்போது சட்டத்துறை அமைச்சர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தம்பிதுரைதான் இந்தப் பேட்டி ஜெயலலிதா தரப்பினருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க.வினர் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களின் கொடும்பாவியைத் தமிழகத்தில் ஆங்காங்கு கொளுத்துவதாக ஏடுகளில் செய்தி வரச் செய்தது. மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்துக் கொண்டே அத்தகைய மோசமான காரியங்களில் அ.தி.மு.க. ஈடுபட்டது. அத்வானி கொடுத்த பேட்டியைப் பற்றி ஜெயலலிதா, தேசிய பாதுகாப்பிலே அக்கறை இல்லாத ஒருவர் உள்துறை அமைச்சராக மத்தியிலே இருப்பதற்காக வேதனைப்படுவதாகத் தெரிவித்தார். அதற்குக் காரணம் தி.மு.கழக ஆட்சியைக் கலைக்காததுதான் என்றும் கூறினார்.
"தி.மு.க ஆட்சியைக் கலைக்கவில்லை என்பது தேசப்பாதுகாப்பிற்குக் குந்தகமான காரியமா?" என்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவில்லை என்பதற்காக ஏற்கனவே தன்னால் புகழ்ந்து போற்றப்பட்ட தலைவர்களில் ஒருவரான அத்வானி அவர்களை தேச விரோதி என்பதும் - வாஜ்பாய் அவர்களின் உருவப்பொம்மையைக் கொளுத்துவதும் ஜெயலலிதாவின் இயல்பு என்ன என்பதை உலகத்திற்கு "அ.தி.மு.க.வினர், நாங்கள் இந்து மத வெறியர்கள்தான் என்பதில் பகிரங்கமாகவே, பெருமைப் பட்டுக் கொண்டனர்" - என்றது இந்து நாளேடு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி, தி.மு.கழக அரசின்மீது அபாண்டமாகக் களங்கம் சுமத்தினார், ஜெயலலிதா உணர்த்தக் கூடியவை.
அவை அவரது சுயமரியாதை என்று சிலர் வாதிடக்கூடும். அது அவரது சுயமரியாதை உணர்வு அல்ல-சுயநல உணர்வு என்பது தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டு மல்ல - இந்திய மக்கள் அனைவருக்குமே புரிந்த உண்மையாகும்" என்று கூறினேன். நான் இவ்வாறு பேட்டி கொடுத்த அதே 24.6.1998 அன்று காலையில் எனது இல்லத்தில் எனது நண்பர்களில் ஒருவரும் மத்திய அமைச்சராக அப்போது இருந்த திரு.ராமகிருஷ்ண ஹெக்டே அவர்கள் என்னைச் சந்தித்து, தமிழகத்தில் வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்து வளர்ச்சி குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
அவர் என்னைச் சந்தித்தது பற்றியும் செய்தியாளர்கள் என்னைக் கேட்டனர். அதற்கு நான், "ஹெக்டே அவர்கள் எனக்கு நீண்ட கால நண்பர். அவர் மத்திய அரசில் அமைச்சராக இருக்கிறார். பொதுவாக மத்திய அமைச்சர்கள் மாநிலங்களுக்கு வரும்போது அவர்கள் துறை குறித்த பிரச்சினைகளை அந்தந்த மாநில முதலமைச்சர்ளைச் சந்தித்துப் பேசுவது என்பது மரபு. அவர் நீண்டகால அரசியல்வாதி என்பதால், அந்த ஆரோக்கியமான மரபினைப் பின்பற்ற வேண்டுமென்ற காரணத்தால் என்னைச் சந்தித்தார்" என்று கூறினேன்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அன்றைய தினம் என்னிடம் கேட்ட சில முக்கிய கேள்விகளும், அவைகளுக்கு நான் அளித்த பதில்களும் வருமாறு:- செய்தியாளர்:- ஜெயலலிதா இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து அத்வானி அவர்களைப் பேசிய பிறகும், அவருடைய கலைஞர் ஆதரவுடன் மத்தியிலே ஆட்சியிலே பி.ஜே.பி. தொடர்வது அவமானம் இல்லையா? முதல்வர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரான ராமகிருஷ்ண ஹெக்டே சந்தித்து உரையாடினார்.
அயோத்தியில் கரசேவை நடை பெறுவதற்கு ஆதரவு தெரிவித்த ஜெயலலிதா "ராமர் கோயிலைக் கட்டியே தீர வேண்டும்" என்று போராடினார். நான்:- என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வது? உங்கள் கேள்வி நியாயமான கேள்வி-ஆனால் கேட்கப்பட்ட இடம் தவறு. செய்தியாளர்:- மத்திய உள்துறை அமைச்சரையே தேச விரோதி என்கிறார். அதற்குப் பிறகும் மத்திய அரசு பொறுமையாக இருக்கிறது என்றால்...? நான்:- மீண்டும் அதே பதில்தான். செய்தியாளர்:- தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பது ஜெயலலிதா கூற்றின்படி தேசவிரோதமான காரியமா?
நான்:- தேசம் என்றால் என்ன? தேச பக்தி என்றால் என்ன? தேச விரோதம் என்றால் என்ன? இவற்றையெல்லாம் ஜெயலலிதா இனிமேல் பாலபாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய இலட்சியமே தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்பதுதான். அதற்குக் காரணம் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் ஆனால், அவர் மீதுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான ஊழல் வழக்குகள் டிஸ்மிஸ் ஆகிவிடும் என்பதுதான். மாநில அரசு தொடுத்துள்ள வழக்குகள் மாத்திரமல்ல-ஏற்கனவே மத்திய அரசின் மூலம் சில அன்னியச் செலவாணி வழக்குகளும் அவர்மீது இருக்கின்றன.
அந்த வழக்குகளும் சரி-மாநில அரசு வழக்குகளும் சரி-தி.மு.க. அரசு டிஸ்மிஸ் மூலம் தன்னை விட்டு வேகமாக விலகி விடும் என்று ஜெயலலிதா கனவு கண்டு கொண்டிருக்கிறார். அதனால்தான், 'டிஸ்மிஸ், டிஸ்மிஸ்' என்று ஒவ்வொரு நாளும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கு இணங்காதவர்களையெல்லாம் கர்ணகடூரமான வார்த்தைகளால
் தாக்கி வெளிப்படையான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். செய்தியாளர்:- பா.ஜ.க. தரப்பிலிருந்து தூதுவர்கள் யாராவது வந்து உங்களைச் சந்தித்தார்களா? நான்:- எந்தவிதமான தூதுவர்களும் வரவில்லை. பி.ஜே.பி.யில் உள்ள தலைவர்களும், தி.மு.கவிலே உள்ள தலைவர்களும் நீண்ட கால நண்பர்கள். ஆனால் பி.ஜே.பி.யும், தி.மு.க.வும் நண்பர்கள் அல்ல. இவ்வாறு நான் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தேன்.
