நெஞ்சுக்கு நீதி
ஆட்சியைக் கலைக்க ஆடிய ஆட்டம் · 342 / 391
30. ஆட்சியைக் கலைக்க ஆடிய ஆட்டம் வாஜ்பாயின் கட்சியுடன் எனக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவரது குணநலன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்! ஜெ யலலிதா 14.3.1998 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி மத்தியிலே அமைவதற்கு, அ.தி.மு.கவும், அவர்களின் கூட்டணிக் கட்சிகளும் ஆதரவுக் கடிதங்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டதாகவும், "ஆட்சி அமைக்க ஆதரவு உண்டு- ஆனால், அமைச்சரவையிலே சேர மாட்டோம்- என்னை பா.ஜ.க.மதிக்கவில்லை- அவமதித்து விட்டது பா.ஜா.கவின் அந்தப் போக்கு சரியில்லை" என்றும் கூறினார்.
இந்தக் கருத்தும் அடுத்த நாளே மாறியது. 15.3.1998 அன்று ஜெயலலிதா செய்தியாளர்களைச் சந்தித்து, "அமைச்சரவையில் அ.தி.மு.க. பா.ம.க. வாழப்பாடி காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கும்" என்று அறிவித்தார். முதல்நாள் "பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
அடுத்த நாளே பதவியேற்பு விழாவிற்குப் புறப்பட்டு விட்டார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக திருமதி சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குடியரசு தலைவரைச் சந்தித்து, "அரசு அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோராது" என்று கூறினார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் அணித்தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை காங்கிரஸ் கட்சித்தலைவராக சரத்பவாரும், மாநிலங்களவை கலைஞர் காங்கிரஸ் கட்சித்தலைவராக மன்மோகன்சிங் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 15ஆம் தேதி வாஜ்பாய் குடியரசுத் தலைவரைச் சந்தித்தபோது, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதம் அவரிடம் தரப்பட்டது. 72 வயதான வாய்பாய் அவர்கள், 19.3.1998 அன்று இந்தியாவின் 13வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.
வாஜ்பாய் அவர்களின் கட்சியோடு எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் உண்டு என்றபோதிலும், தனிப்பட்ட வாஜ்பாய் அவர்களின் குணநலன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த கவிஞர்- பத்திரிகையாளர்- அரசியல்வாதி- வாஜ்பாய் பிற்காலத்தில் பிரதமராக ஆவார் என்று, ஜவகர்லால் நேரு அவர்களால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டவர்-சிறந்த பேச்சாளர்-- சிறந்த இலக்கியவாதி-இசை ரசிகர்- திரைப்படங்களையும் விரும்பிப் பார்க்கக் கூடியவர்.
அவர் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றார். முதலில் 1996 ஆம் ஆண்டு மே திங்களில் பிரதமரான வாஜ்பாய், 13 நாட்கள் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்தார். 1977 இல் நெருக்கடி நிலைக்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாகட்சி அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். 15.12.1926 அன்று குவாலியரில் வாஜ்பாய் பிறந்தார். தந்தை கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் . பள்ளி ஆசிரியர். தாயார் கிருஷ்ணா தேவி .
மாணவராக இருந்தபோதே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவரான பாபு ராவ் தேவரஸுடன் தொடர்பு கிடைத்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக ஆனார். கான்பூர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். "ராஷ்ட்ரதாரம்" என்னும் ஆர்.எஸ்.எஸ். இதழில் பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். பா.ஜ.கவின் முந்தைய அரசியல் அமைப்பான 1951 இல் தொடங்கப்பட்ட ஜனசங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் வாஜ்பாய் அவர்களும் ஒருவர்.
அதன் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் சீடர். 1950ஆம்,ஆண்டு, முதன் முதலாக லக்னோ தொகுதியிலே போட்டியிட்டு வாஜ்பாய் தோல்வி கண்டார். 1957 இல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வென்று மக்களவைக்குள் அடியெடுத்து வைத்தார். அந்தத் தேர்தலில் வென்ற நான்கு ஜனசங்க உறுப்பினர்களில் வாஜ்பாய் அவர்களும் ஒருவர். 1962ஆம் ஆண்டு தேர்தலில், மீண்டும் தோல்வி. பிறகு 1967 இல் வெற்றி பெற்றார். 1968 இல் ஜனசங்கத்தின் தலைவரானார்.
1971இல் குவாலியர் தொகுதியில் வெற்றிபெற்றார். இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்துத் சிறை சென்றார். காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட ஜனதா கட்சியில் ஜனசங்கத்தை இணைத்தார். 1977 தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார். ஜனதா கட்சி உடைந்து உருவான பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக ஆனார் வாஜ்பாய். 1984இல் நடைபெற்ற தேர்தலில் குவாலியர் தொகுதியில், மாதவராவ் சிந்தியாவிடம் வாஜ்பாய் தோல்வி கண்டார்.
அதையடுத்து லக்னோ தொகுதிக்கு மாறி அங்கே வெற்றி பெற்றார். வாஜ்பாய் பத்ம விபூஷண் விருது பெற்றவர். வாஜ்பாய் அமைச்சரவையில் 43 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பிதுரை, சேடப்பட்டி முத்தையா, வாழப்பாடி ராமமூர்த்தி, ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை, ஜனார்த்தனம், ஆர்.கே.குமார் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். வாஜ்பாய் அவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
டெல்லியிலே பா.ஜ.க வின் ஆட்சி ஏற்பட்டு, அ.தி.மு.க அணியைச் சேர்ந்தவர்கள் மத்திய ஆட்சியிலே அமைச்சர்- கலைஞர் 1988-இல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோனியா காந்தி அம்மையார் "அரசு அமைக்கக் காங்கிரஸ் உரிமை கோராது" என்றார்.
களாகப் பொறுப்பேற்ற பிறகு, "தமிழகத்திலே தி.மு.கழக ஆட்சி, 356 வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன் படுத்தி, எந்த நேரத்திலும் கலைக்கப்படும்" என்று தாங்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் எல்லாம் பேச முற்பட்டார்கள். ஏடுகள் சிலவும் "அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பிரதமரிடம் மறைமுகமாகத் தமிழக அரசினைக் கலைத்திட வலியுறுத்திக் கொண்டுள்ளார்கள்" என்று எழுதி வந்தன.
2.4.1998 அன்று அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா டெல்லி சென்று, பிரதமரைச் சந்தித்தார். அவர் டெல்லி சென்றது பற்றி பல பத்திரிகைகள் தங்களுடைய யூகங்களையெல்லாம் செய்திகளாக்கின. டெல்லி சென்ற அதே நாளில், அவர் சென்னை திரும்பி விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், "தி.மு.க. அரசுமீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தி.மு.க அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.கவின் முக்கியமான கோரிக்கை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முன் வைத்து தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்" என்றெல்லாம் கூறினார். ஆனால் அதே 2.4.1998 அன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் குறுக்கிட்டு, "தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தி.மு.க.
ஆட்சியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்" என்று மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலம் சென்னையிலே பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதுபற்றி பிரதமரின் கருத்து என்னவென்று கேட்டார். வாஜ்பாய் இந்தியாவின் 13ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் வாஜ்பாய் அவர்கள், "அரசியல் சட்டம் 356ஆவது பிரிவை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். எந்த மாநிலத்திலும் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை எங்கள் அரசு கடுமையாக எதிர்க்கும்" என்று திட்டவட்டமாகப் பதில் கூறினார்.
அப்போது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எல்லாம் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பாராளுமன்றத்தில் இவ்வளவு திட்டவட்டமாக தெரிவித்த பிறகும், ஜெயலலிதாவோ "தி.மு.க. அமைச்சரவையை நீக்குவதற்கான நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன" என்று சொன்னதையே திரும்பத் திரும்ப அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தார்.
இதுபற்றி "இந்துஸ்தான் டைம்ஸ்" என்ற ஆங்கில நாளேடு எழுதிய "வரவேற்கத்தக்க உறுதிமொழி" என்ற தலையங்கத்தில்- "அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது என்று மாநிலங்கள் அவையில் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உறுதி மொழி கொடுத்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும். தமிழகத்தில் கலைஞர் தி.மு.க. அரசுக்கு எதிராக நிலவி வரும் தேவையற்ற எர்ச்சரிக்கைகளும், அதையடுத்து உருவாகியுள்ள வதந்திகளும் உள்ள இத்தருணத்தில் பிரதமரின் மேற்காணும் அறிவிப்பு குறிப்பிடத்தக்கதும், நம்பிக்கைக்கு உரியதாகவும் இருக்கிறது.
தி.மு.க.அரசு நீக்கப்பட்டாக வேண்டும் என்று வெளிப்படையாகவே ஆளும்கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமரது உறுதிமொழி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்று எழுதியது. மீண்டும் அதே "இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில நாளேடு, "மிரட்டல் அரசியல்" என்ற தலைப்பில் 17.4.1998 அன்று எழுதிய தனது தலையங்கத்தில்- "ஒருவரைக் கடத்திச் சென்றவன் பணயத் தொகை கேட்டு மிரட்டல் கடிதங்கள் அனுப்புவதுபோல, அடல்பிகாரி வாஜ்பாயின் பிரதமர் பதவி தன்னிடம் பணயமாக இருப்பதை அவர் மறந்துவிட, ஜெயலலிதா அனுமதிப்பது இல்லை.
தனக்கு ஆக வேண்டிய காரியங்கள் காலதாமதம் ஆவதையும், அ.தி.மு.க தலைவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் கருணாநிதி அரசைப் பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு விருப்பம் இல்லாததினால் அவருக்குக் கோபம். "பொது வாழ்க்கையில் நெறிமுறைகளையும், நேர்மையையும் மதிக்காத காரணத்திற்காக ஜெயலலிதா மீதும் குற்றம் சாட்டப்படலாம். மக்களை முட்டாள்கள் என நினைத்து, இன்றுபோல் அன்றும் ஜெயலலிதா அடித்த 'அந்தர் பல்டிகள்' ஜெயலலிதா கட்சியின் ஆதரவு திரும்பப் பெறப்படுவதனால் நெருக்கடி ஏற்பட்டாலும், அவரது மிரட்டல்களுக்கு வாஜ்பாய் பணிந்து விடக் கூடாது.
மேலும் நடவடிக்கை எடுப்பதில் வளைந்து கொடுக்கவோ- தட்டிக் கழிக்கவோ கூடாது. தி.மு.க. அமைச்சரவையை நீக்க வேண்டும் என்று இடைவிடாது வலியுறுத்தும் ஜெயலலிதாவின் கோரிக்கை விஷயத்திலும் இதேபோல வாஜ்பாய் நடந்து கொள்ள வேண்டும். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 356ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்திப் பதவி நீக்கம் செய்யமாட்டோம் என்ற கொள்கையை, பாரதீய ஜனதா கட்சித் தலைமையிலான அரசு இதுவரை பேணிக் காத்து வருகிறது.
துரதிருஷ்டவசமாக கடந்த சில வாரங்களாக, ஜெயலலிதாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு வளைந்து கொடுப்பது போன்ற அறிகுறிகள் தெரிகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை மதிப்பிடுவதற்காக மத்தியக் குழுவை அனுப்பியது தவறு" என்று கடுமையாக எழுதியிருந்தது.
இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு தெரிவித்ததைப் போலவே, மத்திய அரசினால் அனுப்பப்பட்ட மத்தியக்குழு தமிழகத்தின் பல பகுதிகளையும் பார்வையிட்டு, பலரோடு கலந்து உரையாடிய பிறகு, என்ன அறிக்கை கொடுத்தது என்பதை அப்போது பல ஏடுகள் என்ன தலைப்புகளிலே செய்தி வெளியிட்டன தெரியுமா? நன்றி : "தி இந்து" 'தி.மு.க. ஆட்சியைக் கலைத்தால் தான், வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு' என்றார் ஜெயலலிதா கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் " தி டெலிகிராப் " ஏடு, "Team gives Law and Order Certificate.
Centre clean Chit to Karunanidhi" என்று பெரும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. ஐதராபாத்திலிருந்து வெளிவரும் " நியூஸ் டைம் " என்ற பிரபலப் பத்திரிகை, 'Set back for Jayalalitha's Campaign. Central Team's clean chit to Tamil கலைஞர் Nadu' என்ற தலைப்பிலே நீண்ட செய்தியை வெளியிட்டது. டெல்லியிலிருந்து வெளிவரும் " டைம்ஸ் ஆப் இந்தியா " ஏடு, "Central Team Gives Clean Chit to D.M.K.Government" என்ற தலைப்பிலே செய்தியை வெளியிட்டிருந்தது.
"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகை, "Central Team gives clean chit on Law and Order" என்ற தலைப்பில் செய்தியும், நீண்ட தலையங்கமும் தீட்டியிருந்தது. "தினமணி" ஏட்டில்- "சட்டம், ஒழுங்கில் அதிருப்தி-பயங்கரவாத மாநிலம் என்பது நியாயமற்றது" என்று அந்தக் குழுவினர் வெளியிட்ட கருத்தைத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டதோடு, அந்த ஏடு எழுதிய தலையங்கத்தில், "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை மிகவும் மேம்பட்டிருக்கிறது.
கோவை குண்டு வெடிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை. அரசியல் சாசன 356ஆவது பிரிவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவை எல்லாம் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆராய்ந்து, இரண்டு உறுப்பினர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழு சென்னையில் தெரிவித்த கருத்துக்கள்" என்று தொடங்கி- இடையில் "வெடி குண்டுகளைக் கைப்பற்றுவதிலும், தீவிரவாதிகளைக் கைது செய்வதிலும் முனைப்போடு செயல்படும் தமிழகக் காவல் துறையினருக்கு உதவ வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது" என்றும் குறிப்பிட்டிருந்தது.
த.மா.கா. தலைவர், அருமை நண்பர் மூப்பனார் அளித்த பேட்டியில், "சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் நன்றாக இருக்கிறது - ஆகவே, மத்திய அரசு ஆட்சிக் கலைப்பிலே ஈடுபட்டால், தமிழகத்தில் போராட்டம் நடத்திடத் தயங்கமாட்டோம்" அதற்கு வாஜ்பாய் அளித்த பதில், "முடியாது" என்பது தான். என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கிடையில், 27.3.1998 அன்று தமிழக அரசின் சார்பில், அந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை அவையிலே நான் தாக்கல் செய்தேன்.
தமிழக மக்களின் அனைத்துப் பிரிவினராலும், பல்வேறு கட்சிகளாலும், ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக அது அமைந்தது. அந்த அறிக்கையினைத் தயாரிக்க ஒவ்வொரு ஆண்டிலும் நான் பல நாட்கள் முயற்சி எடுத்துக் கொள்வதைப் போலவே, அந்த ஆண்டிலும் முயற்சி எடுத்துக்கொண்டேன். அப்போது நிதித்துறை செயலாளராக இருந்த திரு.பி.வி.ராஜாராமன் அவர்கள் பல நாட்கள் என்னோடு பகல் என்றும் இரவு என்றும் பாராமல் உழைத்தார்.
★ ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் ஏராளமான உணவுப் பொருட்களுக்கான வரி விகிதங்கள் அப்போது குறைக்கப்பட்டன- அல்லது அறவே நீக்கப்பட்டன. ★ மத்திய அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட திருத்திய ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்த முதலாவது தென்னிந்திய மாநில அரசு தமிழக அரசுதான் என்ற பெருமைக்கு நிதி நிலை அறிக்கையிலே வழிவகுக்கப் பட்டது. ★ அந்த ஆண்டு சுதந்திரப் பொன்விழா ஆண்டு என்பதையும் மனதிலே கொண்டு, 1987ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி, போராடி, துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 23 பேருக்குக் குடும்ப நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
★ சென்னையிலுள்ள காந்தி மண்டபம் அருகில் தியாகிகள் மணி மண்டபம் கட்ட 30 வட்ச ரூபாய் வழங்கப்பட்டது. சுதந்திரப் பொன்விழா ஆண்டு நினைவுச் சின்னம் ஒன்றும் காமராஜர் சாலையில், போர் நினைவுச் சின்னம் அருகே அமைக்கப்பட்டது. கலைஞர் ★ தியாகி விஸ
்வநாத தாஸ் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பிக்கவும், அதில் திருமணமண்டபம், நூல் நிலையம் நிறுவவும், அரசு 50 லட்ச ரூபாய் அனுமதித்தது. ★ திருநெல்வேலி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமத்தில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் வாழ்ந்த மாளிகையினை பழமை மாறாமல் புதுப்பித்து, நினைவுச் சின்னமாக்கவும், திருமணமண்டபம், பூங்கா அமைக்கவும் 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. ★ தூத்துக்குடி மாவட்டத்தில், பாஞ்சாலங்குறிச்சியை அடுத்துள்ள கவர்னகிரியில் வாழ்ந்த விடுதலை வீரர் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு 200 வீடுகள் மற்றும் சாலை, பூங்கா, நூலகம், மின்சாரம் போன்ற வசதிகளை வழங்கும் "வீரன் சுந்தரலிங்கம் நினைவு கிராமம்" ஒன்றை கவர்னகிரியில் அமைக்க ஒரு கோடியே 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
★ பொதுவுடைமை வீரர் ஜீவாவின் நினைவைப் போற்றும் வகையில் குமரிமாவட்டம், நாகர்கோவிலில் 15 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம்- ★ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நூற்றாண்டையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், ரூ.7.40 லட்சம் செலவில் சிலை- ★ வள்ளுவர் கோட்டத்தைப் புதுப்பிக்க 8.5 லட்சம் ரூபாய். ★ நெசவாளர்கள், மீனவர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், உடல் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத்தொகைகள் உயர்வு- ★ அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக நலவாரியம்- ★ சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட முட்டை, வாரம் ஒருமுறை என்று வழங்குவதற்கு அறிவிப்பு-(இந்த அறிவிப்புதான் இந்த ஆண்டு வாரம் மூன்று முட்டைகள் என்ற அளவிற்குப் படிப்படியாக உயர்ந்துள்ளது.)
★ தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களுடைய நூல்களை அரசுடைமையாக்கி, அவரது வழித்தோன்றல்களுக்கு 20 லட்ச ரூபாய் காப்பு நிதி. ★ கல்கி அவர்களின் நூல்களை அரசுடமையாக்கிட, இருபது இலட்ச ரூபாய் நிதி. ★காரல் மார்க்சின் "மூலதனம்" மற்றும் " மிகை மதிப்பு" ஆகிய நூலினை தமிழில் புத்தகமாக வெளியிட வேலூர் க.ராகவன் ஜமதக்கினி அவர்களுக்கு ஐந்து இலட்ச ரூபாய் நிதி. ★ முதன் முறையாக ஜவுளிக்கொள்கை இவ்வாறு பலப்பல திட்டங்களையும் அறிவிப்புகளையும் தாங்கி அந்த நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது.
★ நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையிலே நடைபெற்று, 6.4.1998 அன்று நான் பதிலளித்தேன். ★ அப்போது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நிதிநிலை அறிக்கையிலே அறிவித்த தலா ஒரு இலட்சம் ரூபாய் என்பதை மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தினேன். ★ மேலும் அந்தப் போராட்டத்திலே ஈடுபட்டு உயிர் நீத்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியும் வழங்கிடவும் உத்தரவிட்டேன்.
★ அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு நிலவரி அறவே ரத்து செய்யப்படும் என்றும் பிறிதோர் அறிவிப்பு செய்தேன். ★ ★ ★ 6.4.1998 அன்று பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து விட்டு, 7 ஆம் தேதியன்று புதிய பிரதமர் வாஜ்பாய் அவர்களை முதலமைச்சர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக டெல்லி சென்றேன். கலைஞர் மாலை 4 மணி அளவில் நேரம் கொடுத்து, என்னை வாஜ்பாய் சந்தித்தார். தமிழகத்திற்குத் தேவையான மின் திட்டங்கள்-காவேரி பிரச்சினை-சேது சமுத்திரத்திட்டம்-இட ஒதுக்கீடு-மீனவர் பிரச்சினை போன்றவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக்கூறி, அவைகளுக்கெல்லாம் தீர்வு கண்டிட உதவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.
ஏராளமான ஊழல்களில் சிக்கிய ஜெயலலிதா சுப்பிரமணியன் சுவாமியின் உளறல்படி, மத்திய அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றம் சாட்டினார். பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பண்பாட்டோடும், பழைய நாள் நண்பர்கள் என்ற உணர்வோடும் என்னிடம் பேசினார். டெல்லிப் பயணத்தையொட்டி குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி அவர்களையும், முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களையும், அப்போது உணவு அமைச்சராக இருந்த பர்னாலா அவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்களையும் சந்தித்தேன்.
நான் டெல்லி சென்றது குறித்தும், நான் அளித்த பேட்டி குறித்தும், அதனையொட்டிய சம்பவங்கள் குறித்தும் வட இந்திய நாளேடுகள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு செய்திகளைத் தொகுத்திருந்தன. குறிப்பாக "எகனாமிக் டைம்ஸ்"- "தி பயனீர்"- "இந்துஸ்தான் டைம்ஸ்"- "டைம்ஸ் ஆப் இந்தியா" - "ஸ்டேட்ஸ்மென்"- "தி ஏசியன் ஏஜ்" போன்ற நாளேடுகள் நான் அளித்த பேட்டியை விரிவாக வெளியிட்டிருந்தன. "ஸ்டேட்ஸ்மென்" நாளேடு வெளியிட்ட செய்தியில்- "மத்திய அமைச்சரவையில் ஜெயலலிதாவின் நியமனங்களாக இடம் பெற்றுள்ள நால்வரில், கட்சித் தலைவியின் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதில், சட்ட அமைச்சர் தம்பிதுரை தான் மற்ற மூவரைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறார்."
"ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவரை உறுப்பினராகக் கொண்ட வருமான வரி மேல் முறையீடு தீர்ப்பாயத்தின் தனிப்பிரிவு ஒன்றை அமைக்க தம்பிதுரை உத்தரவிட்டிருக்கிறார். இவர்தான் சட்டத்துறை சார்பில் ஜெயலலிதாவின் வருமான வரி வழக்குகளை விசாரிக்கிறார். வருமான வரி ஏமாற்றுக்காரர்களை விடுவிப்பதில் அந்த உறுப்பினர் புகழ் பெற்றவர் என்பதால், வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது நியமனம் குறித்து ஆச்சரியப்படவில்லை. இதற்கு முன்னதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசின் வழக்குகளை நடத்த, ஜெயலலிதா தேர்ந்தெடுத்த 33 அ.தி.மு.க.
வழக்கறிஞர்களுக்கு தம்பிதுரை நியமன உத்தரவுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இவர்கள் மூன்றாண்டு காலம் அல்லது மறு உத்தரவு வரும்வரை அந்தப் பதவியில் இருப்பார்கள். இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கூடுதல் சட்ட ஆலோசகர் யு.கே.ஜா கையெழுத்திட்ட இந்த நியமனக் கடிதங்களை ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவிடம் தம்பிதுரை வழங்கினார். ஆதரவுக் கடிதம் தராமல், வாஜ்பாயைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தினார் ஜெயலலிதா இந்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கே ஒவ்வொருவருக்கும் அந்த நியமன உத்தரவை ஜெயலலிதா வழங்கினார்."
கலைஞர் "தேர்ந்தெடுக்கப்பட்ட 33 பேரில் ஒருவர் ஆர்.முத்துக் குமாரசாமி. இவர் மூத்த வழக்கறிஞர் அல்ல-ஆனால் ஜெயலலிதா வழக்குகளில் அவருக்காக ஆஜரானவர். இன்னொரு வழக்கறிஞரான எஸ்.பி.லோகநாதன் , ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு ஆஜராகி வருகிறார். மற்றொரு வழக்கறிஞரான டி.வி.கணேஷ் , அ.தி.மு.க.வின் தலைவரான இரா.நெடுஞ்செழியனுக்காக ஆஜராகி வருகிறார். நீதித்துறையைக் கேலி செய்யும் விதத்தில், எதிரி வழக்கறிஞர்களாக இருந்தவர்கள்.
அதே வழக்கில்-ஒரே இரவில் அரசு வழக்கறிஞர்களாக மாறியிருக்கிறார்கள். "நல்லாட்சி வழங்குவோம்" என்று தேர்தலின்போது உறுதியளித்த வாஜ்பாயின் பாரதீய ஜனதா கட்சி அரசு, அ.தி.மு.க அமைச்சர்களால் ஒவ்வொரு நாளும் களங்கம் அடைந்து கொண்டே இருக்கிறது."
இவ்வாறு "ஸ்டேட்ஸ்மென்" நாளேடு அ.தி.மு.க. விற்குப் பாராட்டு (?) மழை பொழிந்திருந்தது. அ.தி.மு.க. சார்பில் சேடப்பட்டி முத்தையா மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோதிலும், ஒரு சில நாட்களிலேயே அவர் மீதுள்ள ஒரு வழக்கின் காரணமாக, அவர் பதவியிழக்க நேரிட்டது. அவருக்குப் பதிலாக அ.தி.மு.கவைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் என்பவரை மத்திய அமைச்சராக்கிட ஒப்புக்கொண்ட ஜெயலலிதா, "ஊழல் வழக்கிலே தொடர்புடையோர் அனைவரும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும்.
இல்லாவிட்டால் அவர்களை அமைச்சரவையிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும்" என்று 15.4.1998 அன்று செய்தியாளர்களிடம் கூறினார். 'ஜெயலலிதா மிரட்டல்களுக்கு வாஜ்பாய் அரசு பணிந்துவிடக்கூடாது' என்று எச்சரித்தது 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஏடு மேலும் அவர், அந்த விஷயத்தில் சேடப்பட்டி முத்தையாவுக்கு ஒரு நீதியும், மற்றவர்களுக்கு ஒரு நீதியும் இருக்க முடியாதென்றும் கூறினார்.
"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாகவே இருக்கிறது - மத்திய அரசு ஆட்சிக் கலைப்பில் ஈடுபட்டால், போராட்டம் நடத்துவோம்" என்றார், மூப்பனார் "தமிழகத்தில் தி.மு.கழக அரசைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு பாரதீய ஜனதா அரசு ஒப்புக்கொள்ளாததால் ஜெயலலிதா இப்படியெல்லாம் கூறுகிறார்" என்று ஏடுகள் எல்லாம் விமர்சனம் செய்து எழுதின.
ஜெயலலிதா தெரிவித்த நிபந்தனையை அந்தக் கட்சி ஏற்க வேண்டுமென்றால், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, பூட்டாசிங், ராம் ஜேத் மலானி ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டுமென்றும் ஏடுகள் தெரிவித்தன. வேறு சில ஏடுகள் "பா.ஜ.க. அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென்பது ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம் இல்லை. ஆனால் பூட்டாசிங், ஜேத்மலானி, ஹெக்டே போன்றவர்கள்தான் அவரது குறி" என்றும் எழுதின.
இந்தச் செய்திகளை உறுதியாக்குகின்ற வகையில் 18.4.1998 அன்று பிரதமருக்கு ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதிவிட்டு, அந்தக் கடிதத்தை ஏடுகளுக்கும் வழங்கினார். தோழமைக்கட்சியிலே உள்ள ஒருவர், அந்தக் கூட்டணியின் தலைவருக்கு குரங்கு கையில் பூவைப்போல், அமைந்தது, பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி - அதாவது பிரதமருக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தார் என்பதைத் தெளிவாக்கும் வகையிலே அந்தக் கடிதம் அமைந்தது. அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் இதோ:- "வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சேடப்பட்டி கலைஞர் ஜெயலலிதாவின் தொல்லை தாங்க முடியாமல் வருந்தினார் வாஜ்பாய் முத்தையாமீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமைச்சராக மார்ச் 19 ஆம் தேதி முத்தையா பொறுப்பேற்ற போதே இந்த விவரம் பிரதமருக்கும் தெரியும். குற்றச்சாட்டை முழுமையான ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதால் முத்தையாவும் அவரைப் போன்ற வேறு சிலரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். முத்தையா மீது சென்னை சிறப்பு நீதி மன்றம் கடந்த 6 ஆம் தேதி குற்றப் பத்திரிகையைப் பதிவு செய்தது. இதையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு முத்தையாவை நான் கேட்டுக்கொண்டேன்.
அதையேற்று முத்தையா உடனடியாக டெல்லிக்குச் சென்று சில மணி நேரங்களிலேயே ராஜினாமாவைச் சமர்ப்பித்தார். அந்த ராஜினாமா கடிதத்தை நீங்கள் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பினீர்கள். அவரும் அதை ஏற்றுக் பல்வேறு கட்சிகளாலும் வரவேற்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை 27-3-1998 அன்று கலைஞர் தாக்கல் செய்தார். நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ஜீவாவின் நினைவிடத்தைக் கலைஞர் திறந்து வைத்தார். கொண்டார். முத்தையா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 24 மணி நேரத்தில் இவையெல்லாம் நடந்து முடிந்தது.
உங்களது நல்லாட்சி நிர்வாகத் தூய்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முத்தையா ராஜினாமா செய்தார். ராஜினாமாவை ஏற்பதில் நீங்கள் காட்டிய வேகம், அரசாங்கத்தின் நன்மதிப்பைக் காப்பாற்றுவதில் உள்ள அக்கறையை வெளிப்படுத்தியது. ஆனால் இதே வேகத்தை இதேபோன்ற நிலைமையில் உள்ள மற்ற அமைச்சர்கள் விஷயத்தில் நீங்கள் காட்டாதது துரதிர்ஷ்ட வசமானது- விநோதமானது. உதாரணமாக ஜார்க்கண்ட் எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தாக மத்திய அமைச்சர் பூட்டாசிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் உலகறிந்த விஷயம். இதேபோல உச்சநீதிமன்றத்தின் பெஞ்ச் கடந்த 17ஆம் தேதி வெளியிட்ட தீர்ப்பில், பூட்டாசிங் மீதான விசாரணைத் தொடர வேண்டும் என்று குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. சேடப்பட்டி முத்தையாவை நீக்கும்போது பின்பற்றப்பட்ட உயர்ந்த லட்சியங்கள் பூட்டாசிங் விஷயத்தில் ஏன் பின்பற்றப்படவில்லை? அவரை அமைச்சர் பதவியில் நீடிக்கச் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முத்தையா விஷயத்தில் கடைப் பிடிக்கப்பட்ட அளவுகோலே பூட்டாசிங் விஷயத்திலும் கடைப்பிடிக்க வேண்டுமென்று கோர உங்கள் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.கவுக்கு உரிமை உள்ளது.
கலைஞர் இதேபோல் ஹெக்டே ரூ.2.5கோடி ஊழல் புரிந்ததாகப் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அவர்மீது வழக்கு வரவிருப்பது தவிர்க்க முடியாதது. அவர் மத்திய அமைச்சரவையில் தொடர்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. ராம் ஜெத்மலானி வெளிநாட்டிலிருந்த போது 2 லட்சம் அமெரிக்க டாலர்களைச் சட்டவிரோதமாக வாங்கியதாக மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் பதவியில் நீடிப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும், தருகிறது.
அமைச்சரவை விஷயத்தில் ஒரே சீரான - நிலையான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். குற்றப்புகார்களில் உள்ள அமைச்சர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் விலகாவிட்டால் நீங்கள் அவர்களை விலக்க வேண்டும். வெறும் புகார்களே ஆதாரங்கள் ஆகாது என்று நீங்கள் நினைத்தால், முத்தையாவை அமைச்சரவையில் சேர்ப்பது நியாயமானது."
- ஜெயலலிதாவின் இந்தக் கடிதத்தை ஏட்டிலே படித்து விட்டு, ராம் ஜெத்மலானி அவர்கள், "அ.தி.மு.க ஆதரவு இல்லாமல் பா.ஜ.க அரசு நீடித்திருக்க முடியும். எனவே அ.தி.மு.க அமைச்சர்களை வெளியேற்றிவிட்டு, அந்தக் கட்சியுடனான உறவைத் துண்டித்து விடுங்கள்" என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் அவர், "தி.மு.க. அரசைக் கலைக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு சட்ட அடிப்படை ஏதும் கிடையாது- ஜெயலலிதா ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சுவாமி சொல்கிறபடி யெல்லாம் செயல்பட்டு வருகிறார்" என்றும் கூறினார்.
