உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சுய சொரூபம் வெளிப்பட்டது!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சுய சொரூபம் வெளிப்பட்டது! · 341 / 391

29. சுய சொரூபம் வெளிப்பட்டது! "எங்கள் கூட்டணியின் தலைவர், கலைஞர் தான் - அவரே கூட்டணியை வழி நடத்திச் செல்வார்" என்றார் மூப்பனார். மக்களவைத் தேர்தலில் கூட்டணி கொண்ட அ.தி.மு.க. - பா.ஜ.க - பா.ம.க.- ம.தி.மு.க., ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டு, 1998ஆம் ஆண்டு திருநெல்வேலியிலே மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் பேசிய தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு என்னைத் திட்டித் தீர்த்தார்கள்.

என்னைத் "தீய சக்தி" என்று விமர்சனம் செய்ததோடு, "நோன்புக் கஞ்சி குடித்ததைத் தவிர, கருணாநிதி இஸ்லாமிய மக்களுக்காக என்ன செய்துவிட்டார்? தாழ்த்தப்பட்டவர்கள் தலைமைச் செயலாளர்களாக - காவல்துறை தலைவர்களாக வர அருகதை இல்லையா? வந்தால் கோட்டை வெடித்து விடுமா?"

என்றெல்லாம் வேகமாகப் பேசி, அந்தப் பேச்சு அப்போது ஏடுகளில் வெளிவந்தது. அதற்கெல்லாம் அப்போதே நான் பதில் அளித்தேன். உருது பேசும் முஸ்லீம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்தபோது, அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராஜாராம் "சட்டத்தில் அதற்கு இடமில்லை" என்று கூறியபோது, "சட்டத்திலே இடம் இல்லாவிட்டாலும், என் இதயத்தில் இடம் இருக்கிறது."

என நான் பதில் அளித்து, அதனை அமல்படுத்தியதையெல்லாம் அவர்களுக்கு அப்போதே பதிலாக அளித்தேன். கலைஞர் மேலும், 1989ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக ஆனபோது, "மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எம்.ராஜேந்திரன் அவர்களைத்தான் தலைமைச் செயலாளராகவும், ஸ்பிக் நிறுவனத் தலைவராகவும் நியமித்தேன் என்பதையும், காவல் துறையில் டி.ஜி.பி.யாக ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த துரை ஐ.பி.எஸ். அவர்களைத்தான் நியமித்திருந்தேன் என்பதையும், 1996ஆம் ஆண்டு முதலமைச்சரானபோது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத் தலைவராக ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த முருகராஜ் ஐ.ஏ.எஸ்.

அவர்களைத்தான் நியமித்தேன். ஏன் என்னுடைய சிறப்புச் செயலாளராக விசுவநாதன் என்ற ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவரைத்தான் நியமித்துக் கொண்டேன். அதற்குப் பின்னரும் கூட, ஏ.பி. முத்துசாமி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைமைச் செயலாளராகவே நியமனம் செய்து கொண்டிருந்தேன்" என்ற இந்த விளக்கங்களை எல்லாம் அளித்திருந்தேன். அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அந்தத் தேர்தலில், "பா.ஜ.க.

ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் தி.மு.க. அரசைக் கலைக்கக் கோருவோம்" என்ற அறிவிப்பையும் செய்தார். அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் உறவு கொண்டது பற்றி ம.தி.மு.க.வும் "தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியோடு அதனை வரவேற்கின்றார்கள்" என்ற அறிக்கை விடுத்தது. அந்தத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஏ.பி.பரதன் அவர்கள், ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் குறிப்பிட்ட கருத்து நினைவிலே கொள்ளக் கூடியதாகும்.

"பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடிப் போட்டி உள்ள இடங்களில், பா.ஜ.க.வை முறியடிக்க காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக ஆதரிப்பது சரியான நடவடிக்கையாக அமையும். எங்களுடைய முதல் முழக்கம் ஐக்கிய முன்னணிக்குப் பெரும்பான்மை பலம் என்பதுதான். அதேசமயம் தேர்தல் களத்தில் சில இடங்களில் முக்கிய "மதவெறி காரணமாக குண்டு வெடிப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது எவராக இருந்தாலும் எந்த மதத்தினராக இருந்தாலும்- கடுமையாக நடவடிக்கை எடுப்போம்" போட்டி என்பது காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் இருக்கும்.

அத்தகைய சூழ்நிலைகளில் மதச்சார்பற்ற வாக்குகளைப் பிரிப்பது முறையானதாக இராது. அப்படிப் பிரித்தால், அதன் பலனை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டு போய்விடும். பல மாநிலங்களில் காங்கிரசுக்கும், ஐக்கிய முன்னணிக்கும் இடையேதான் முக்கிய போட்டி நடக்கும். ஆனால் சில பகுதிகளில் ஐக்கிய முன்னணிக் கட்சிகள் பலவீனமாக உள்ளன. கடுமையாக நடவடிக்கை அத்தகைய இடங்களில் காங்கிரசுக்கு முறைமுகமாக ஆதரவளிப்பதே சரியானதாக அமையும்" என்றார்.

7-1-1998 அன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்கள் முதலமைச்சர் கலைஞருடன் தற்போதுதான் பேசிவிட்டுத் திரும்புவதாகவும், தங்களது கூட்டணியின் தலைவர்கள் கலைஞர்தான் என்றும், அந்த வகையில் கூட்டணியைக் கலைஞரே வழி நடத்திச் செல்வாரென்றும், பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார். கலைஞர் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல், பிப்ரவரி 16, 22, 28 மார்ச் 7 ஆகிய தேதிகளில் நான்கு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிப்பு வந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பிப்ரவரி மாதம் 16 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஐக்கிய முன்னணியின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் 19-1-1998 அன்று ஐதராபாத்தில் தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் நான் கலந்து கொண்டேன். என்னுடன் மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறனும் , கழகப் பொறுப்பாளர் ஆர்க்காடு வீராசாமியும் வந்திருந்தனர்.

மேலும் அந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் குஜ்ரால், முன்னாள் பிரதமர் தேவ கவுடா. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு , கர்நாடக முதல்வர் ஜெ.எச். பட்டேல் . காஷ்மீர் முதலமைச்சர் பரூக் அப்துல்லா , அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் மகந்தா , மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் , மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஹர்கிஷன் சிங் கர்ஜித், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.

பரதன், அமர்சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பியதும், வேட்பாளர் நேர்காணல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன். கூட்டணிக் கட்சியினரின் முதல் தேர்தல் பிரச்சாரம், ஐதராபாத்தில் துவங்கியது. 23-1-1998 அன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த பொன்.முத்துராமலிங்கம் அந்தக் கட்சியிலிருந்து விலகி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் கழகத்தில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவருடன் போடி முத்து மனோகரன் , ராமனாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த இ.மோகன், பெ.மு.அப்பாசாமி, சே.பசும்பொன் பாண்டியன், தோடனேரி சுப்பிரமணியன் உட்பட பல்வேறு பொறுப்புக்களிலே இருந்தவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் கழகத்திலே தங்களை இணைத்துக் கொண்டார்கள். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு ம.தி.மு.க.விலிருந்து விலகி கழகத்திலே தன்னை மீண்டும் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளராக இருந்த மதுராந்தகம் ஆறுமுகம் தலைமையில் 5000க்கும் மேற்பட்டவர்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ம.தி.மு.க.வை கூண்டோடு கலைத்து விட்டு, கழகத்திலே வந்து சேர்ந்தார்கள். அவரைத் தொடர்ந்து, ம.தி.மு.க.வின் ஆட்சி மன்றக் குழ உறுப்பினரும், நாகை மாவட்டச் செயலாளருமான வேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் , முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர்.

முன்னணித் தலைவருமான எஸ்.ஆர்.ராதா , திருவாரூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் அய்யா தமிழரசன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கழகத்திலே இணைந்தார்கள். தோழமைக் கட்சிகள் இடையே 40 இடங்களை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதில் பெரிய பிரச்சினை. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, நாடாளுமன்றத்திற்கு 20 இடங்களில் த.மா.கா. போட்டியிடுவதென்றும், இடங்களில் தி.மு.க. போட்டியிடுவதென்றும், 2 இடங்களில் கலைஞர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதே நிலை 1998ஆம் ஆண்டு தேர்தலிலும் தொடரலாம் என்று எண்ணியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த அணியில் இணைந்து போட்டியிட முன்வந்தது. அதனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கான இரண்டு இடங்களில், ஒரு இடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடலாம் என்றும், அதற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி "ஏற்கனவே 2 இடங்களைப் பெற்றிருந்ததை எப்படி விட்டுக் கொடுப்பது?"

என்று கேட்டபோது, நாகை தொகுதியிலும் போட்டியிடலாம் என்றும், சிவகாசி தொகுதிக்குப் பதிலாக சில மாதங்களில் வரவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தி.மு.க. சார்பில் உறுதியளித்தேன். "இந்த அணியிலே புதிதாக இணைத்துக் கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - அவர்கள் விரும்பிய கோவைத் தொகுதியிலே மாத்திரம் போட்டியிடலாம்" என்று கூறினேன்.

"சூரிய ராகங்கள்" எனும் பெயரில் பிரச்சார ஒலிநாடா தயாரித்த டி. ராஜேந்தரை கலைஞர் கௌரவித்தார். ஆனால் அவர்கள் அதனை ஏற்காமல், ஐந்தாறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு செய்தார்கள். அவர்கள் தங்கள் முடிவினைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டேன். மூப்பனார் அவர்களும் தங்கள் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு சில மாதங்களில் ஓர் இடம் கிடைக்க உள்ளது என்றும், அந்த இடத்தை மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கொடுக்க ஒப்புதல் தருவதாகவும், அதையேற்றுக் கொண்டு கூட்டணிக்கு வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் வெளியிட்டார், அருகே பேராசிரியர் அதனையும் ஏற்காமல், வட சென்னை, மதுரை ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் சி.பி.எம். போட்டியிடுவது என்றும், மற்ற தொகுதிகளில் தி.மு.க. தா.மா.கா. வேட்பாளர்களைத் தனி மேடையிலிருந்து ஆதரிப்பதென்றும் முடிவெடுத்து அறிவித்தார்கள். 24-1-1998 அன்று புதுவை உட்பட 18 மக்களவைத் தொகுதிகளில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைப் படித்தேன்.

மத்திய சென்னையில் முரசொலி மாறன் , எம்.ஏ., தென் சென்னையில் டி.ஆர்.பாலு , பி.எஸ்.ஸி., வட சென்னையில் செ.குப்புசாமி , செங்கற்பட்டில் கு.பரசுராமன், திருப்பெரும்புதூரில் த.நாகரத்தினம் பி.ஏ.,பி.எல், திண்டிவனத்தில் டி.ஜி.வெங்கட்ராமன் பி.ஏ.,பிஎல்., சிதம்பரத்தில் வெ.கணேசன் , எம்.ஏ.,பி.எட்., வேலூரில் தி.அ. முகமது சகி , பி.ஏ.பி.எல்., திருப்பத்தூரில் த.வேணுகோபால், திருச்செங்கோட்டில் டாக்டர் கே.பி.ராமலிங்கம், கோபிச்செட்டிப்பாளையத்தில் ந.இராமசாமி , பி.ஏ.பி.எல்., கோவையில் க.ரா.சுப்பையன் , பி.எஸ்ஸி., பி.எல்., தஞ்சையில் பழனிமாணிக்கம், எம்.ஏ.,பி.எல்., புதுக்கோட்டையில் என்.சிவா எம்.ஏ., பெரம்பலூரில் ஆ.ராஜா, பி.எஸ்ஸி., எம்.எல்.

பெரியகுளத்தில் திருமதி இரா.காந்திமதி, பி.ஏ. திருநெல்வேலியில் சரத்குமார் , பி.எஸ்ஸி., பாண்டிச்சேரியில் எஸ்.ஆறுமுகம் , பி.காம்., பி.எல். ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 29-1-1998 அன்று கழகத்தின் சார்பில் 12ஆவது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை அண்ணா அறிவாயலயத்தில் வெளியிடப்பட்டது. அதே நிகழ்ச்சியில் இயக்குநர் தம்பி கலைஞர் டி.ராஜேந்தர் தயாரித்த தேர்தல் பிரச்சார ஒலிநாடாவும் வெளியிடப்பட்டது.

2-2-1998 அன்று பிரதமர் குஜ்ரால் அவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சென்னை கடற்கரையிலே ஏற்பாடு செய்யப்பட்டு, அதிலே நானும் கலந்து கொண்டேன். 3-2-1998 அன்று காலையில், அண்ணா நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டேன். 20-2-1998 வரை தேர்தல் சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. அணியின் சார்பில் அ.தி.மு.க. 23 இடங்களிலும் பா.ஜ.க. 5 இடங்களிலும், பா.ம.க. 5 இடங்களிலும், ம.தி.மு.க. 5 இடங்களிலும், தமிழ்நாடு ராஜிவ் காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஜனதா கட்சி ஒரு இடத்திலும் என்ற அளவில் போட்டியிட்டன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதுபற்றி பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் அவர்கள் விளக்கம் அளிக்கும் வகையில் "ஊழல் புகார்கள் கூறப்பட்டோர் மீதான குற்றங்கள் உரிய நீதி மன்றங்களில் நிரூபிக்கப்பட்டால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட குற்றம் சாட்டப்பட்ட கட்சித் தலைவர்களுடனான உறவை பா.ஜ.க.

முறித்துக் கொள்ளும்." என்று செய்தியாளர்களிடம் கூறினார். பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக இருந்த கோவிந்தாச்சார்யா கூறும் போது, தமிழ்நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் பாரதீய ஜனதா தேர்தல் உடன்பாடு செய்து கொண்டது வழுவல்தான் என்றார். மேலும், "உத்தரப்பிரதேச அமைச்சரவையில் தேவையற்ற நபர்களை அமைச்சர்களாக்கியது, அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்தது என்று இரண்டு வழுவல்களை பா.ஜ.க. செய்து விட்டது.

தற்காப்பின் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார். தி.மு.கழக வேட்பாளர்கள் பட்டியலை கலைஞர் வெளியிட்டார். பேராசிரியர். துரைமுருகன், முரசொலி மாறன் உடன் உள்ளனர். தேர்தல் பிரச்சாரம் மிகவும் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான், தமிழகச் சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்குக் கோவையிலே 14-2-1998 அன்று மாலை 4 மணியளவில் குண்டு ஒன்று வெடித்தது. அதையடுத்து 13 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.

50க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பா.ஜ.க.தலைவர் அத்வானி அவர்கள் பேசுவதற்காக இருந்த மேடை அருகே இரண்டு குண்டுகள் வெடித்தது. அங்கே மட்டும் பத்து பேர் இறந்தனர். அத்வானி அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தினால் அவர் தப்பினார். கூட்டம் சரியான நேரத்தில் நடைபெற்றிருக்குமேயானால் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த விபத்திலே மாண்டிருக்கக்கூடும். செய்தி கிடைத்ததவுடன் நான் விடுத்த அறிக்கையில் "ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட தமிழ்நாட்டு மக்கள் முதல் கட்டத் தேர்தலை 16ஆம் தேதியன்று சந்திப்பதற்கு இருக்கும் நேரத்தில், இத்தேர்தல் அமைதியாக நடக்கக்கூடாதென்ற கெடுமதியுடன் தீவிரவாத இயக்கத்தினர் ஒரு சிலர், கோவை மாநகரில் நடத்தியுள்ள குண்டு வெடிப்புச் சம்பவங்களும் - அதன் காரணமாக முப்பதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுமான கொடிய நிகழ்ச்சிகளும் - என்னைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றன.

"இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகளும், சில அரசியல் கட்சியினரும் கோவை நகரில் கலைஞர் கலவரங்களைச் செய்வதும், தூண்டிவிடுவதுமான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுள்ளது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கின்றதென்பதையும் வேதனையு

டன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வன்முறை நிகழ்ச்சிகள் பரவாதிருப்பதற்கும் - நடந்துவிட்ட வன்முறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் அரசு சிறிதுகூட தயக்கம் காட்டப் போவதில்லை." "தமிழ்ப் பெருங்குடி மக்கள், அரசுடன் ஒத்துழைத்து - அரசு எடுத்திடும் சட்டப் ஈடியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மத வெறியும் அதன் காரணமாக விளையும் கொடுமைகளும் கூடாது என்பதுதான் நானும் என் தலைமையில் உள்ள கழக ஆட்சியும் நீண்ட காலமாக எடுத்துரைத்து வரும் கருத்தாகும்.

சிறுபான்மையினரோ - பெரும்பான்மையினரோ, இது போன்ற வன்முறைக் கொடுமையில் யார் ஈடுபட்டாலும், அதனை இந்த அரசு அனுமதிக்காது - அனுமதிக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமருடன் இது குறித்துத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். இந்தச் சதி வெளி நாட்டிலிருந்து தூண்டிவிடப்பட்டு, ஜனநாயக் ரீதியில் இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் - செய்யப்படுவதாக சந்தேகம் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்திய ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நோக்குடன் செய்யப்படும் வெளிநாட்டுச் சதி குறித்து மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே, இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் அரசுடன் எல்லா வகையிலும் ஒத்துழைத்து, அமைதி நிலவிட துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கோவைச் சம்பவத்துக்கு என் ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதுடன், சதிகாரர்கள் நடத்தியுள்ள இந்த நாச வேலைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு என் கண்ணீருடன் கூடிய இரங்கலைத் தெரிவிப்பதுடன் - அந்தக் குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுமென்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தேன். டெல்லியில் இப்படித் திலகமிட்டு வரவேற்ற வாஜ்பாய்க்கு... த மி ழ க அரசின் சார்பில் அல் - உம்மா, ஜிகாத் கமிட்டி ஆகிய இரண்டு தீவிரவாத இயக்கங்களும் சட்ட விரோதமான அமைப்புகள் என்று தமிழக அரசால் தடை செய்யப்பட்டன.

கோவையில் நடந்த சம்பவங்களையொட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றியும், அமைதியைப் பாதுகாக்க மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஆய்வு செய்ய நானும், மூப்பனார் அவர்களும் மற்றும் தலைமைச் செயலாளர், சிறப்புத் தலைமைச் செயலாளர், காவல் துறையின் தலைமை இயக்குனர், உள்துறை செயலாளர் ஆகியோர் கோவைக்கு விரைந்தோம். கோவையில் குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளையெல்லாம் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் வழங்கினோம்.

அதன் பின்னர் நான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "கோவை மாநகரில் நடைபெற்றுள்ள இந்த வன்முறைச் சம்பவம் மிகவும் கொடுமையானது - கொடூரமானது. கடுகளவுகூட மனிதாபிமானமற்ற செயல். யுத்த காலங்களில் கூட மருத்துவ மனைகளில் குண்டு போடுவதில்லை. ஆனால், இங்கே மருத்துவமனையிலும் கலைஞர் குண்டு வீசி மூன்று செவிலியர்கள் படுகாயமடைந்து ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இன்னொருவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். இதை மிருகச் செயல் என்று சொல்வதைவிட வேறு வார்த்தையில்லை.

41 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த தீவிரவாதிகளின் வீடுகள் சோதனையிடப்பட்டபோது, அவர்கள் போலீசார் மீது எதிர்த் தாக்குதல் நடத்திய காரணத்தால் போலீசாருக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அங்கே அவர்கள் தயாரித்து வைத்திருந்த குண்டுகளும் அந்த இடத்தில் வெடித்து தீவிரவாதிகள் ஆறு பேர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி அங்கேயிருந்த தீவிரவாதிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மத வெறி காரணமாகவோ அல்லது இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்ற வெறி காரணமாகவோ - இத்தகைய கொடூரங்கள் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் - எந்த மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருந்தாலும், அவர்களை மிகக் கடுமையாக அடக்குவதற்கு சட்டரீதியில் முனைப்பான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும்" என்று கூறினேன்.

நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பிரமதர் குஜ்ரால் அவர்களோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கினேன். கோவைச் சம்பவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பரபரப்பான பேட்டி ஒன்றினை 15-2-1998 அன்று கொடுத்தார். அந்தப் பேட்டியில், "தி.மு.க. - த.மா.கா. கூட்டணி நல்ல முறையில் பாரதீய ஜனதாவுக்கு ஜெயலலிதா விதித்த கொடிய நிபந்தனை வந்து கொண்டிருக்கிறது. இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக இதைச் சிலர் செய்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தை வைத்து தி.மு.க. ஆட்சியைக் கலைக்கலாம் என்று சில பேர் நினைக்கிறார்கள். அப்படி நினைத்தால், தமிழ் நாட்டில் ஒரு புரட்சியே உருவாகும். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அதை எதிர்த்து முதல் குரல் நானே கொடுப்பேன். முதல்வர் கலைஞர் அவர்கள், தன்மானமுள்ள தலைவர். எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். "ஜெயலலிதா என்னைப் பார்த்து, "நீ கறுப்புப் பணம் வாங்கவில்லையா?"

என்று கேட்கிறார். சினிமாவில் இருந்தவர், இந்தக் கேள்வியைக் கேட்கிறார். இதனால் அவர் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார் என்பது புரிகிறது. ஒரு பெரிய கட்சிக்கு இப்படிப்பட்டவர் தலைமை தாங்கியிருக்கிறார். அதை அங்குள்ளவர்கள் எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் கூட ஜெயலலிதா அவர்கள் இன்னும் மாறவில்லை. இப்போது மாறாதவர், இப்போது நான் சொல்கிறேன், இனி அவர் வாழ்க்கையில் எப்போதும் மாறமாட்டார்.

ஜெயலலிதாவுக்கு முதலில் பணவெறி இருந்தது. இது முடிந்த பிறகு இப்போது பழிவெறி வந்திருக்கிறது. அது தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் நினைப்பது நடக்காது. ரஜினிகாந்த் பேச்சு இனி எடுபடாது என்று சொல்லியிருக்கிறார். தமிழக மக்கள் அதற்கு அவர்களின் வாக்குகள் மூலமாகப் பதிலளிப்பார்கள்" என்று கூறினார்.

கோவை வெடிகுண்டுச் சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக தமிழக அரசின் சார்பில், நீதியரசர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 14-2-1998 அன்று கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கும், மற்றும் காயம் அடைந்தோருக்கும் நிதி உதவி வழங்கிட, தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண கலைஞர் ம.தி.மு.க.

விலிருந்து ஏராளமான தோழர்களுடன் தி.மு.க.வில் இணைந்த பொன். முத்துராமலிங்கத்தை வரவேற்கிறார், கலைஞர் நிதியிலிருந்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்கியிருந்தேன். எனினும் இந்தச் சம்பவத்தின்போது உடைமைகளை இழந்தோருக்கு எந்தவிதமான நிதியும் வழங்கப்படாமல் இருந்தது. இழப்புத் தொகை எவ்வளவு என்பதை பரிந்துரை செய்திட நீதிபதி பி.ஆர். கோகுலகிருஷ்ணன் விசாரணைக் கமிஷன் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அந்த கமிஷனின் பரிந்துரைகள் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகும் என்பதைக் கருத்தில் கொண்டு உடனடியாக இடைக்கால நிவாரணமாக உடைமை இழந்தோருக்கு நிவாரண நிதியிலிருந்து ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கி ஆணை பிறப்பித்தேன். மேலும் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வெடிகுண்டு சம்பவத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கை திருப்திகரமாகவே உள்ளது. எனினும், விசாரணைக் கமிஷன் பரிந்துரை செய்தால் சி.பி.ஐ. விசாரணைப் பற்றியும் அரசு யோசிக்கும்" என்று தெரிவித்தேன்.

கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக அரசின் சார்பில் மின்னல் வேக நடவடிக்கை எடுத்ததற்குப் பெரும் ஒத்துழைப்பு தந்து கடமையாற்றிய காவல் துறையினர், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல்,ஊண் உறக்கமின்றி, ஓய்வு சிறிதுகூட இல்லாமல் விழிப்புடன் இருந்து வன்முறைத் தீவிரவாதிகளைப் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தியும், கைது செய்தும், வெடிக்கவிருந்த குண்டுகளைக் கைப்பற்றியும் - அதிலும் குறிப்பாகத் தேதி குறிப்பிட்ட அந்த நாளில் மேலும் வெடிகுண்டுச் சம்பவங்கள் நடைபெறுமென்று எச்சரிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் கவனமுடன் இருந்து பொது மக்களின் உயிரையும் உடைமைகளையும், பொதுச் சொத்துக்களையும் காப்பாற்றியதற்காக, காவல் துறையினருக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

மேலும் "எதிர் காலத்திலும் அதே விழிப்புணர்வோடு காவல்துறை பணியாற்றும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் பணியாற்ற வேண்டுமென்ற ஆவலோடு, காவல் துறையில் சாதாரணக் காவலர் முதல் டி.ஜி.பி. வரையில் உள்ள 85 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசாக அளிக்கப்படும்" என்று சட்டப் பேரவையில் நான் அறிவித்ததோடு, அந்தத் தொகையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

கோவை குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும், தி.மு.க.விற்கும், தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற போதிலும், அந்த வெடிகுண்டு நிகழ்ச்சி பா.ஜ.க. தலைவர் அத்வானி அவர்கள் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்திற்கு மிகவும் அருகில், அதுவும் அவர் வருவார் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த அதே நேரத்தில் நடைபெற்ற காரணத்தினாலும், அதனால் அப்பாவிகள் பலர் இறந்த காரணத்தினாலும், பத்திரிகைகளில் பெரிதாகச் செய்திகள் வெளிவந்த காரணத்தினாலும், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி தி.மு.கழகக் கூட்டணிக்குப் பெரிதும் பாதகமாக அமைந்தது.

அந்தச் சம்பவத்திற்கு முன்பு வெளிவந்த தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தி.மு.கழக அணி மகத்தான் வெற்றிபெறும் என்று வெளியிட்டதற்கு மாறாக, முடிவுகள் அமைந்தன. 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 55 சதவிகித வாக்குகளைப் பெற்ற தி.மு.க., த.மா.கா. கூட்டணி 12.26 சதவிகித வாக்குகளை இழந்து - 42.74 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று பத்து இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 47.23 சதவிகித வாக்குகளைப் பெற்று, 30 கலைஞர் ம.தி.மு.க.

அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளராக இருந்த மதுராந்தகம் ஆறுமுகம் தி.மு.க.வில் இணைந்தார். இடங்களில் வெற்றி பெற்றது. மொத்த வாக்குகள் என்ற அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க. அணி 1 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 246 வாக்குகளையும், தி.மு.க., த.மா.கா. அணி 1 கோடியே 11 லட்சத்து 5 ஆயிரத்து 267 வாக்குகளையும், காங்கிரஸ் தனியாக அணி அமைந்து 16 லட்சத்து 44 ஆயிரத்து 143 வாக்குகளையும் பெற்றன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போதிலும், அந்தத் தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற அருப்புக்கோட்டை, குன்னூர் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் ஆளுங் கட்சியான தி.மு.க.

அணிக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. மக்களவைத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 11 லட்சத்து 5 ஆயிரத்து 267 வாக்காளர்களுக்கும் - அணியின் வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளான த.மா.கா. இந்தியக் கம்யூனிஸ்ட், ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். எம்.ஜி.ஆர். கழகம், இந்திய தேசிய லீக், இந்தி யூனியன் முஸ்லீம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய மனித உரிமைக் கழகம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், தமிழ் தேசிய கட்சி, தீரன் அவர்களின் தலைமையிலான பா.ம.க..

சிறுபான்மையோர் இயக்கம் ஆகிய கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மேலும் குறிப்பாக அந்தத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஆதரவளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும், அரும்பாடுபட்டு உழைத்த ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களுக்கும், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ரசிகர் மன்றங்களுக்கும், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றங்களுக்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொண்டேன்.

அகில இந்திய அளவில் பா.ஜ.க. கூட்டணி 254 இடங்களிலும் - காங்கிரஸ் கூட்டணி 168 இடங்களிலும் - ஐக்கிய முன்னணி 93 இடங்களிலும் - மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றிபெற்றன. 1996ஆம் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து பதவி விலகிய நரசிம்மராவ் அவர்களின் இடத்திற்குத் தலைவராக வந்த சீதாராம் கேசரி அவர்கள், 98 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு. தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நாடாளுமன்ற பா.ஜ.க. தலைவராக வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை குண்டுவெடிப்பில் காயமுற்றோருக்கு மூப்பனாருடன் ஆறுதல் கூறினார் கலைஞர் 9-3-98 அன்று டெல்லி சென்று, பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் அவர்களை ஜெயலலிதா அவரது இல்லத்திலே சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாரதீய ஜனதாவுக்கு அ.தி.மு.க. அளிக்கும் ஆதரவு நிபந்தனையற்றது - முழுமையானது. தமிழகத்தில் தி.மு.க. அரசை பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்றெல்லாம் கூறியதோடு, சோனியாகாந்தி பற்றிக் கேட்டபோது, "இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் மையக் கருத்தாக சோனியா காந்தி இருப்பதை நான் விரும்பவில்லை.

அவரை அரசியல்வாதியாக நான் கருதவில்லை" என்றார். "காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு சோனியா காந்தி வரும் வாய்ப்பு இருக்கிறதே" என்று கேட்டதற்கும் "அத்தகைய நிலை ஏற்படுவது இந்த நாட்டுக்கு நேரும் துயரம். 98 கோடி மக்களைக் கொண்ட கலைஞர் இந்தியாவில் தலைமை வகிக்கும் திறமையும் தகுதியும் கொண்டவர்கள் எவரும் இல்லையா?"

என்று ஜெயலலிதா பதில் கூறினார். மத்தியில் அரசு அமைக்க நாடாளுமன்ற பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய்க்கு குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் 10-3-1998 அன்று அழைப்பு விடுத்தார். மேலும் நிலையான அரசு அமைப்பதற்கான ஆவணங்களையும், ஆதரவு எம்.பிக்களின் பட்டியலையும் 11ஆம் தேதியன்று அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆனால் 11ஆம் தேதியன்று வாஜ்பாய் அந்தப் பட்டியலுடன் குடியரசுத் தலைவரைச் சந்திக்க வேண்டியது நடைபெறாமல் ஒத்தி வைக்க நேரிட்டது.

காரணம், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய கட்சிகள் எல்லாம் தங்களது ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பா.ம.க., தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ், ஜனதா கட்சிகளிடமிருந்து பா.ஜ.க. அரசை ஆதரிப்பதாகத் தெரிவிக்கும் கடிதங்கள் வந்து சேராததால், வாஜ்பாய் குடியரசுத தலைவரைக் குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்கவில்லை. பதவியேற்பு விழாவரை டெல்லியிலே தங்கும் எண்ணத்துடன் சென்ற ஜெயலலிதா, அத்வானி, வாஜ்பாய் ஆகியோரைச் சந்தித்தவுடன் சென்னை திரும்பி விட்டார்.

அவரிடமிருந்து ஆதரவுக் கடிதம் வராத நிலையில், அத்வானி தொலைபேசியிலே தொடர்பு கொள்ள முயன்று வருவதாக செய்திகள் வந்தன. நிபந்தனையில்லாமல் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தருவதாகக் கூறிய ஜெயலலிதா, ஆதரவுக் கடிதம் தருவதற்கு முன்பு, தமிழகத்திலே தி.மு.க. அரசைக் கலைக்க பா.ஜ.க. உத்தரவ

ாதம் தர வேண்டுமென்றும், தன்மீதுள்ள வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற வேண்டுமென்றும், சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதி அமைச்சர் பொறுப்பும், வாழப்பாடி ராமமூர்த்திக்கு சட்ட அமைச்சர் பொறுப்பும் வழங்கிட வேண்டுமென்றும் நிபந்தனைகளைத் தெரிவித்திருப்பதாகவும், ஆனால் அந்த நிபந்தனைகளையேற்க பா.ஜ.க. தலைமை திட்டவட்டமாக மறுத்துவிட்டது என்றும், 13-3-1998 தேதியிட்ட ஏடுகள் கொட்டை எழுத்தில் செய்திகளை வெளியிட்டன.

ஆனால் ஜெயலலிதா, தான் அதுபோல எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும், தமிழக அரசின் தேவைகள் குறித்து சாதகமான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால்தான், ஆதரவுக் கடிதம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில், அவரோடு, கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பா.ம.க., ஜனதா கட்சி, தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவுக் கடிதங்களைக் கொடுக்க மறுத்துவிட்டன.

அது மாத்திரமல்ல, பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்த ம.தி.மு.க.வும் அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது. ஏடுகள் எல்லாம் கேலியாக பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பாகவே அதை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக எழுதியது. "தினமணி" போன்ற நாளிதழ்கள் அ.தி.மு.க.வுடன் தெரியாமல் கூட்டணி வைத்துக் கொண்டு விட்டதாக பா.ஜ.க. கருதுவதைப்போல கார்ட்டூன்களை வெளியிட்டன.

இந்த நிலையில், வாஜ்பாய் அவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கினார். குடியரசுத் தலைவர் அவரிடம் அரசியல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த நாள் முடிவு தெரிவிப்பதாகக் கூறினார். ஜெயலலிதாவின் போக்கு குறித்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து என் கருத்துக்களைக் கேட்ட போது, "நிலையான ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்பதற்காகவும், பிரதமர் பதவிக்கு வாஜ்பாய்தான் தகுதியானவர் என்றும் அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதா பிரச்சாரம் செய்து, தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்றார்.

இப்போது பழிவாங்கும் நோக்கத்தோடு, சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களுக்கு குறிப்பிட்ட சில அமைச்சர் கலைஞர் பதவிகளைக் கேட்டு, அந்தக் கோரிக்கை நிறைவேறாத காரணத்தால், ஆதரவுக் கடிதத்தைக் கொடுக்க முடியாதென்று அடம் பிடிக்கிறார். இந்த உண்மையை பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் வெளியிட்டதோடு, ஜெயலலிதா கேட்கும் குறிப்பிட்ட அமைச்சர் பொறுப்பு அளிப்பது பற்றியும், தி.முக. ஆட்சியைக் கலைப்பது பற்றியும், திட்டவட்டமாக "முடியாது" என்று மறுத்துள்ளார்.

அதன் பிறகு, 'தான் அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக திட்டங்களைத்தான் நிபந்தனைகளாக விதித்தேன்" என்று கூறி, மக்களை ஏமாற்ற முனைகிறார். ஜெயலலிதாவின் பேச்சை நம்பி வாக்களித்த மக்கள் இப்போதாவது அவருடைய உண்மை சொரூபத்தைப் புரிந்து கொண்டால் போதுமானது" என்று கூறினேன்.