உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அலை மோதிய அரசியல்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அலை மோதிய அரசியல்! · 340 / 391

கலைஞர் 28. அலை மோதிய அரசியல்! எனது பொது வாழ்க்கையில் என்மீது கற்கள் வீசப்படும் போதும், மலர்கள் தூவப்படும் போதும், இரண்டையும் ஒன்றாகக் கருதித்தான் என் பயணத்தைத் தொடர்கிறேன். 24.11.1997 அன்று பிரதமர் அவர்கள், காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரிக்கு அனுப்பிய கடிதத்தில், தி.மு.கழகத்தை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென்ற சிலரது கோரிக்கையை நிராகரித்திருந்தார். ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையில், ஐக்கிய முன்னணியில் உள்ள எந்தவொரு கட்சியின்மீதும் எந்த ஒரு வழக்கும் கூறப்படவில்லை என்பதால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க.

அமைச்சர்களை நீக்கும் கேள்வியை எழவில்லை - என்று பிரதமர் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார். சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ராஜா விஜய் அவர்கள் ராஜீவ் சர்மா என்ற ஒரு பத்திரிகையாளர் எழுதிய "புலிகளுக்கு அப்பால்" என்ற புத்தகத்தின் முன்னுரையில் - " ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியையோ அல்லது தி.மு.க. வையோ தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்று எழுதியிருந்தார்.

அந்த நூலில் அவர் மேலும் எழுதும்போது, 'நான் சி.பி.ஐ. இயக்குநராக இருந்தபோது, விசேஷப் புலனாய்வுக் குழுத் தலைவராக இருந்த டி.ஆர்.கார்த்திகேயனுடன், அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பான புலன் விசாரணையின் முக்கிய அம்சங்களை ஜெயலலிதாவிடம் விவரித்தேன்."

"ஆனால், அவர் என்னிடம் ஆவலுடன் கேட்ட கேள்வி, "கருணாநிதியை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?" என்பதுதான்." "இந்தக் கொலை வழக்கில் கருணாநிதிக்குத் தொடர்பு இருப்பதாக ஏதாவது ஆதாரங்கள் கிடைத்தால் அவரைக் கைது செய்யத் தயங்கமாட்டோம் என்று ஜெயலலிதாவிடம் நான் கூறினேன். மேலும், "மிகவும் பரபரப்பான ஒரு வாழ்க்கை நாங்கள் ஒளிவு மறைவு இன்றி விசாரணை செய்து வருகிறோம். உங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ ராஜீவ் கொலைவழக்கில் தி.மு.க.வுக்கோ அல்லது கருணாநிதிக்கோ தொடர்பு இருந்ததாக ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்தால், அதை எங்களிடம் கூறுங்கள் - அதன் பிறகு நடவடிக்கை எடுக்கிறோம்" என்று தெரிவித்தேன்."

"ஆனால், ஜெயலலிதா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கும் இது தொடர்பாக எந்த ஆதாரப் பூர்வமான சாட்சியங்களும் கிடைக்கவில்லை. எனவே, "ராஜீவ் கொலை வழக்கில் தி.மு.க. வுக்கோ, கருணாநிதிக்கோ தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை!"

என்று கரண் எழுதியிருந்தார். இந்தச் செய்தியினை "தினமணி" நாளிதழ் 31.7.1998 தேசிய இதழில் முதல் பக்கத்தில் பெரிதாக வெளியிட்டிருந்தது. இதற்குப் பின்னர், ஜெயின் கமிஷன் அறிக்கையை நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைத்து, அவர்கள் அதைப்பற்றி அபிப்பிராயம் கூறும் வரையில், 'தி.மு.கழகம் ஐக்கிய முன்னணி - மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியிருந்தாலே போதும்' என்று ஒரு நிபந்தனை சிலரால் கூறப்பட்ட போதிலும், ஜெய்பால் ரெட்டி, அதற்குப் பதிலாக அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாதென்றும், வாழ்த்தாலும், வீழ்ந்தாலும் தி.மு.க.வுடன்தான் ஐக்கிய முன்னணி செயல்படும் என்றும் கலைஞர் தெரிவித்தார்.

அதற்கான கடிதம் எழுதப்பட்டு விட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஜெயின் அறிக்கை தமிழ் மக்கள் மீதே குற்றம் சாட்டுகிறது" என்று நிருபர்களிடம் கலைஞர் விளக்கினார் அருகே முரசொலி மாறன். மக்களவையில் நவம்பர் 20ஆம் தேதியன்று ஜெயின் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தி.மு.க. மீது குறை சொல்லும் விதமாக சில வார்த்தைகள் இருப்பதாக ஒரு சிலரால் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதற்கு சில நாட்களுக்குப் பிறகு, தமிழகத்திலே உள்ளாட்சித் தேர்தல்களில் எஞ்சியிருந்த இடங்களுக்கும், காலியான இடங்களுக்கும் நடைபெற்ற தேர்தல்களில், தி.மு.கழகம் அதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து, கழகத்தின்மீது ஜெயின் கமிஷன் வாயிலாகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்பதை உலகத்திற்கு பறைசாற்றிக் காட்டியது.

ஜெயின் கமிஷன் அறிக்கை குறித்தும், அதனைப் பயன்படுத்தி தி.மு.கழகத்தை மத்திய ஐக்கிய முன்னணி ஆட்சியிலிருந்து விலக்க வேண்டுமென்றும், அப்போது சில காங்கிரஸ்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டதற்கு எதிரான கருத்து பொதுவாக இந்தியா முழுவதும் இருந்தது. அதைப்பற்றி பல்வேறு ஏடுகளும் தலையங்கங்கள் தீட்டியிருந்தன. குறிப்பாக தமிழகத்திலே உள்ள நாளேடுகள், டெல்லியிலே உள்ள காங்கிரசார் மத்திய அரசைக் கலைக்க முற்பட்டதற்குக் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

அகில இந்திய அளவிலேகூட பா.ஜ.க. தலைவர் ஏ.பி.வாஜ்பாய் அவர்கள், 'ஜெயின் கமிஷனின்' இடைக்கால அறிக்கை வெறும் அரசியல் ஆவணம்தான். அதில் இடம் பெற்றுள்ளவை ஆபத்தானதும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப் பாட்டுக்குத் தீங்கு விளைவிப்பதுமாகும். நாட்டின் நலனை நினைக்காதவர்களே ஜெயின் கமிஷன் அறிக்கையைக் கடுமையாகக் கருதுவர். ஒரு காலத்தில் பிரிவினை இயக்கமாகச் சித்தரிக்கப்பட்ட தி.மு.கழகத்தின் இப்போதைய நிலையே வேறு.

வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் வகையில் தேசிய நீரோட்டத்தில் இப்போது அது இணைந்து விட்டது" என்றார். 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், காங்கிரசின் முடிவுக்கு மாறாக தமிழகத்தில் ஒரு முடிவெடுத்து, தி.மு.கழகத்தோடு தோழமை கொண்டு, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்த மூப்பனார் அவர்களை, வட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சந்தித்து, "தி.மு.க. இல்லாத ஐக்கிய முன்னணியும், காங்கிரசும் இணைந்து மாற்று அரசை மத்தியிலே அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்- மக்களவை கலைக்கப்படுவதை; தவிர்க்க வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால், தி.மு.க.வை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கும் முடிவுக்கு ஐக்கிய முன்னணி ஒப்புதல் தர மூப்பனார் முயற்சிக்க வேண்டுமென்று அவர்கள் கேட்டதற்கு, மூப்பனார் - "அது தொடர்பாக தன்னால் எதுவும் செய்ய இயலாது - தி.மு.கழகத்துடனான உறவை முறித்துக் கொள்வது குறித்து தன்னால் அப்போது முடிவெடுக்க முடியாது" என்று கூறிவிட்டதாகவும் அவரைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்கள்.

முதன் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒன்று சேர்ந்து "இரண்டு கலைஞர் ஆண்டுகளுக்குள் மற்றொரு தேர்தல் வேண்டாம்" எனக் குடியரசுத் தலைவரிடம் கட்சி பேதமின்றி வலியுறுத்தினர். இருந்தாலும், ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவைக்கு அதுவரை காங்கிரஸ் கட்சி அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், மக்களவையைக் கலைக்காமல் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, அப்போது காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென்றும், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து காங்கிரஸ் தலைவர் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய முன்னணியின் மையக் குழுவின் கூட்டம் நடைபெற்று மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க.வை விலக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க இயலாது- ராஜீவ் கொலையில் தி.மு.க.விற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, மத்திய அமைச்சரவை பதவி விலகுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதமர் குஜ்ரால் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, தனது ராஜினாமாக் கடிதத்தை அளித்தார். அந்தப் பதவி விலகல் கடிதத்தில் பிரதமர் குஜ்ரால் எழுதியது வருமாறு:- ஜெயலலிதா ஆவலுடன் கேட்ட கேள்வி "கருணாநிதியை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?"

என்பதுதான்! அன்பார்ந்த குடியரசுத் தலைவர் அவர்களுக்கு, "முற்றிலும் நியாயமற்ற காரணங்களுக்காக தி.மு.க.வின் மூன்று அமைச்சர்களை நீக்குமாறு காங்கிரஸ் கட்சி என்னிடம் கேட்டுக் கொண்டது. எந்த விதமான முகாந்தரமும், விவரமும் இல்லாத ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் ஒரு கட்சியைக் குற்றம் சாட்டுவது என்பதும், ஒரு கட்சியின் நல்ல பெயரை அழிக்கும் விதத்தில் செயல்படுவது என்பதும், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முதல்வர் கருணாநிதியையோ - தி.மு.க.வையோ தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை" என்றேன் நான்.

-டி.ஆர்.கார்த்திகேயன் (சி.பி.ஐ) நியாயமற்றது - நீதியற்றது. அதுவும் தவிர, ஒட்டுமொத்த தமிழ் மக்களின்மீது குற்றம் சாட்டியிருப் பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளேன். நாட்டு நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உங்களிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தைத் தருவது என்கிற முடிவிற்கு இப்போது நான் வந்துள்ளேன். நானும், எனது அமைச்சர்களும் எங்களுடைய ராஜினாமாக் கடிதங்களை உங்களிடம் அளிக்கிறோம்.

இது நாள் வரையில் எங்களுக்கு அளித்து வந்த ஒத்துழைப்பிற்காகவும், வழி காட்டுதல்களுக்காகவும், நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். -ஐ.கே.குஜ்ரால், பிரதமர்" இதன்பின் ஐக்கிய முன்னணித் தலைவர்கள் கூட்டமாகச் செய்தியாளர்களைச் சந்தித்து, "மாற்று ஆட்சி அமைக்க எந்த வாய்ப்பும் இனி இல்லை - ஒரே அணியாக இருந்து தேர்தலைச் சந்திப்போம்" என்று கூறினார்கள்.

ஒரு மாத கால இழுபறி நிலைக்குப் பிறகு, 29.11.1997 அன்று இரவு, 7.30 மணியளவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சீதாராம் கேசரி அவர்கள், குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர்.நாராயணன் அவர்களைச் சந்தித்து, ஐக்கிய முன்னணி அரசுக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான கடிதத்தைக் கொடுத்தார். இந்தச் செய்தியினை அறிந்த பிரதமர் குஜ்ரால், அவர்கள் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டினார். ராஜினாமா செய்வதென்ற முடிவு அப்போது எடுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று தனது அமைச்சரவையின் ராஜினாமாக் கடிதத்தைப் பிரதமர் கலைஞர் "வாழ்ந்தாலும் - வீழ்ந்தாலும் தி.மு.க.வுடன்தான் மத்திய அரசு செயல்படும்" என்றார், ஜெய்பால் ரெட்டி. அளித்தார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்வரையில் பொறுப்பில் நீடிக்குமாறு குஜ்ராலிடம் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால், மக்களவையைக் கலைப்பதுபற்றி அதிலே எந்தப் பரிந்துரையையும் பிரதமர் செய்யவில்லை.

மாற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி உடனடியாக ஆலோசனை நடத்தத் தொடங்கிய குடியரசுத் தலைவர், ஐக்கிய முன்னணி -பா.ஜ.க.-காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகளின் தலைவர்களையும் தலா இரண்டு முறை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், ஐக்கிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே சமரசம் செய்வதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. எனினும் தி.மு.க.தொடர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று ஐக்கிய முன்னணி திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதால், அந்தப் பேச்சு வார்த்தை பலனளிக்கவில்லை.

அதற்குப் பிறகு 3.12.1997 அன்று பிரதமர் குஜ்ரால் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி, மக்களவையைக் கலைக்கும்படி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்ய முடிவெடுத்து, அவ்வாறே தெரிவிக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையைக் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் ஏற்று, 11ஆவது மக்களவையைக் கலைத்து 4.12.1997 அன்று உத்தரவிட்டார். இடைத் தேர்தல் நடைபெற்று, புதிய மக்களவை 1998 மார்ச் 15ஆம் தேதி அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்புக்குப் பின்னர், மக்களவைத் தேர்தலில் யார் யாருடன் உறவு கொள்வது என்பது பற்றி ஏடுகள் தங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப செய்திகளை வெளியிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு 12 தொகுதிகளை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க விருப்பம் தெரிவித்துள்ளதாக டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக வட இந்திய நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, தி.மு.கழகத்திற்கும் த.மா.காங்கிரசிற்கும் இடையே தோழமை பாதிக்கப்பட்டு, த.மா.கா.

மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே இணைந்து விடும் என்று காங்கிரசார் எதிர்பார்த்தார்கள். ஆனால், சாதகமான பதில் கிடைக்கவில்லை. காங்கிரசுடன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள ஜெயலலிதா சம்மதம் தெரிவித்து, 12 தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறார் என்று ஏடுகளில் செய்திகள் வந்தன. செய்தியாளர்கள் த.மா.கா. தலைவர் மூப்பனாரைக் கண்டு, "தி.மு.க., த.மா.கா. கூட்டணி மக்களவைத் தேர்தலிலும் தொடருமா?"

என்று கேட்டபோது, "தி.மு.க., த.மா.கா. தேர்தல் கூட்டணி தொடர வேண்டுமா - வேண்டாமா என்று குறித்து தி.மு.க.தான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என நாங்கள் கூறவில்லை" என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மூப்பனார் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- கலைஞருக்கும், உங்களுக்கும் இடையேயான நட்பின் முன்புபோல நெருக்கம் இல்லை என்று கூறப்படுகிறதே?

மூப்பனார்:- இது உங்களுடைய கற்பனை. கேள்வி:- அப்படியானால் டெல்லியில் நீங்கள் இருவரும் ஏன் சந்தித்துக் கொள்ளவில்லை? மூப்பனார்:- டெல்லியின் நாங்கள் நிறைய சந்தித்துப் பேசியிருக்கிறோம். நாங்கள் சந்திக்கவில்லையென யார் கூறியது? நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள். கலைஞர் கேள்வி:- கடந்த தேர்தலில் இருந்ததைப் போன்ற நல்லுறவு உங்களுக்குள் உள்ளதா? மூப்பனார்:- எங்களுக்குள் ஒன்றும் கருத்துவேறுபாடு இல்லை.

நாங்கள் உறவை முறிக்கவில்லை. ஆனால், முதல்வர்தான் உறவைப் பரிசீலனை செய்வதாகக் கூறினார். நாங்களாகக் கூட்டணியை முடிவு செய்ய முடியாது. நாங்கள் சிறிய கட்சிதான். இன்னும் சொல்லப்போனால், நேற்று பெய்த மழையில் முளைத்தவர்கள். நாங்களாகவே எப்படி முடிவு செய்ய முடியும்? கேள்வி:- கூட்டணி தொடர்பாக கருணாநிதியுடன் பேசுவீர்களா? மூப்பனார்:- அவருடன் எனக்கு எந்தச் சண்டையும் இல்லையே - எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அவருடன் பேசியுள்ளேன்.

கேள்வி:- அ.தி.மு.க.வுடன் கூட்டு வைப்பீர்களா? மூப்பனார்:- காங்கிரசில் இருந்தபோது அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருந்தோம். காங்கிரசிலிருந்து வெளியேறி, த.மா.கா.வை நாங்கள் தொடங்கினோம். அதற்கான அடிப்படைக் காரணம் அனைவருக்கும் தெரியும். இந்தப் பேட்டிக்குப்பின் மறுநாளே செய்தியாளர்கள் என்னைச் சந்தித்தனர். "திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைமைக்கும் இடையில் எந்தவிதமான பிரச்சினைக்கும் இடம் இருந்ததில்லை.

ஆனால் இரு சார்பினர் இடையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களிடையே சிறு கசப்புணர்வு ஏற்பட்டது உண்மை. அந்தக் கசப்புணர்வுகூட மூப்பனார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு அறவே அகன்றுவிட்டது. அதற்குப் பிறகு, தி.மு.க.சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆர்க்காடு வீராசாமி மூப்பனாரைச் சந்தித்துப்பேசினார். நானும் மூப்பனாரும்கூட தொலை பேசியில் பேசினோம். அந்

த அடிப்படையில் 1996இல் "தி.மு.க.கழகம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில், தேசிய நீரோட்டத்தில் இணைந்து விட்டது!" என்றார் வாஜ்பாய் ஆரம்பமான உறவு தொடருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினேன். அந்தத் தேர்தலில் தி.மு.கழகமும், த.மா.கா.வும் கூட்டணி அமைத்திட வேண்டுமென்பதில் அக்கறை காட்டி, அதற்கொரு காரணமாகவும் அமைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், பொங்கல் வாழ்த்து தெரிவித்தபோது, வெளிப்படையாகவே அந்தத் தேர்தலில் தன்னுடைய ஆதரவு தி.மு.க.- த.மா.கா.

கூட்டணிக்கே தொடரும் என்று அறிவித்தனர். தனது ரசிகர்களையெல்லாம் தவறாமல் வாக்களிக்குமாறு அதிலே கேட்டுக் கொண்டார். நானும் அவருக்கு அன்றைய தினம் நடைபெற்ற விழா ஒன்றில் நன்றி தெரிவித்துக் கொண்டேன். இதன் தொடர்ச்சியாக, 14.2.1997 அன்று கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் எனது தலைமையில் தேனாம் பேட்டையில் உள்ள ஸ்ரீலேகா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முன்னணியின் ஆட்சி மத்தியில் மீண்டும் அமைவதற்கேற்ற வகையில் நம்முடன் ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கும், அணியில் உள்ள கட்சித் தலைமைகளுடன் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதற்கும், கழகத்தின் சார்பில் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் , அமைப்புச் செயலாளர் விடுதலை விரும்பி ஆகிய மூவர் கொண்ட குழு ஒன்றும் அந்தச் செயற்குழுக் கூட்டத்தில் அமைக்கப்பட்டது.

செயற்குழு நடைபெற்ற அதே நாளில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மு.தென்னவன் கலைஞர் ஆகியோர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் அ.தி.மு.க.விலிருந்து விலகி என் முன்னிலையில் தி.மு.கழகத்தில் சேர்ந்தனர். வேறு கட்சிகளிலே பணியாற்றிவிட்டு, கழகத்திலே வந்து சேர்பவர்களுக்கு உரிய மரியாதை எப்போதும் தி.மு.கழகத்தில் வழங்கப்படும் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்றாக, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

ராமச்சந்திரன் கழகத்தில் இணைந்த அதே மாதத்தில், அவர் விருதுநகர் மாவட்டக் கழக பொறுப்பாளராகத் தலைமைக் கழகத்தினால் அறிவிக்கப்பட்டார். அதைப்பற்றிக் கூட அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் - அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.கழகத்திலே சேர்ந்தவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என்றும், அதற்கு உதாரணமாக சேடப்பட்டி அவர்களும், சேலம் செல்வகணபதி அவர்களும் என்று கூறி, மறுநாளே அதற்கு விளக்கமாகவும், விரிவாகவும் அவர்கள் இருவருமே மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

அது மாத்திரமல்ல - அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.கழகத்தில் இணைந்தவர்களுக்கு எந்த அளவிற்கு மரியாதையும், மதிப்பும், உரிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதற்கும், அதே நேரத்தில் ஏற்கனவே கழகத்தில் தொடர்ந்து இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதையும், மதிப்பும், பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கும் எத்தனையோ சான்றுகள் உண்டு. ★ ★ ★ ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து, மத்திய அரசு கவிழ்வதற்கே ஒரு சிலர் இந்திய அரசியலில் காரணமாக இருந்தார்கள்.

ஆனால், ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை என்ன கூறியது? 3.4.1998 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அப்போது தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவரும், என்னுடைய கெழுதகை நண்பர்களில் ஒருவருமான சுப்பராயன் பேரவையில் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பினார். அவர் கூறியதாவது:- "தி.மு.க. மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது - நீதியற்றது" என்று குடியரசுத் தலைவரிடம் ஐ.கே.

குஜ்ரால் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிற்குப் பாதித்த ஒரு விஷயமாக ஜெயின் கமிஷனுடைய அறிக்கை வந்தது நமக்குத் தெரியும். அது ஒரு இடைக்கால அறிக்கை என்று கூடக் கருதாமல், ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய காரணத்தால், மத்திய அரசில் ஐக்கிய முன்னணி அதிகாரத்தை இழந்து தேர்தல் நடைபெற்றதும், அந்தத் தேர்தலின் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் பொது மக்களுக்குச் செலவு ஏற்பட்டதும் நமக்குத் தெரியும்.

இப்போது முழு அறிக்கை மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. "ஆனால் முழு அறிக்கை கொடுக்கப்பட்டுவிட்ட நிலையிலும், அதிகாரப்பூர்வமாக அது வெளியிடப்படவில்லை. "தினமணி" ஒரு வால் போஸ்டர் - வெளியிட்டிருக்கிறது. அதில் "கருணாநிதிமீது குற்றம் இல்லை ஜெயின் இறுதி அறிக்கை" என்று இருக்கிறது.

இதை தினமணி வெளியிட்டு, பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டது ஏன் என்று புரியவில்லை. ஜெயின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஜெயின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் அதை வெளியிடவில்லை என்றால், அதிகாரப்பூர்வமாக அது வெளியிடப்படக்கூடாது என்ற நாகரிகமற்ற நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு வந்திருக்கிறதா - அதுவும் டெல்லி சென்று திரும்பியிருக்கிற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று பத்திரிகையாளர்களிடம் சொல்கிறபோது, "ஜெயின் கமிஷன் அறிக்கை வந்துள்ளதே.

அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டபோது, ஆட்சிக் கலைப்புக்கு மட்டும் நீட்டி முழங்குகிற ஜெயலலிதா "இந்த விஷயம் பற்றி எனக்கு ஒரு விவரமும் தெரியாது." என்று கலைஞர் சொல்கிறார் என்றால், முழு விவரமும் தெரிந்து மத்திய அரசை நிர்பந்தித்து, தி.மு.க. அரசின் மீது குற்றம் சாட்டியது, வரலாற்றில் மிகப்பெரிய தவறு என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அதை வெளியிடாமல் நிர்ப்பந்திக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

எனவே மாநில அரசுக்கு - முதலமைச்சர் அவர்களுக்கு - மத்திய அரசுக்கு - இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் இருக்கிறது என்கிற விவரம் ஏதாவது தெரியுமா? அப்படி மாநில அரசுக்கு தெரியுமானால், நாட்டு மக்களுக்கு அதுபற்றி அறிவிக்க வேண்டும்" என்றார்.

அதற்கு நான் பதிலளித்தபோது, "மத்திய அரசுக்கு எத்தனையோ நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன என்பது தெரியும். இந்த நிர்ப்பந்தம் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. எனவே, வேறு தகவல் என்னிடத்திலே இல்லை. சுப்பராயன் அவர்கள் இங்கு சொன்ன தகவலைத் தவிர வேறு தகவல் எனக்குத் தெரியவில்லை" என்று பதில் கூறினேன்.

செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து, "உங்கள்மீது குற்றம் இல்லை என்று ஜெயின் கமிஷன் சொல்லியிருக்கிறதே, அதைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறீர்களா?" என்று கேட்டபோது "என்னுடைய பொதுவாழ்க்கையில் என்மீது கற்கள் வீசப்படும்போதும், மலர்கள் தூவப்படும்போதும் இரண்டையும் ஒன்றாகக் கருதித்தான் என்னுடைய பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.

இதே கேள்வியை த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்களிடமும் செய்தியாளர் கேட்க, "இந்தத் தகவல் எனக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ தரவில்லை. ஜெயின் இறுதி அறிக்கை பற்றி எனக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பே சில தகவல்கள் தெரிய வந்தது. அப்போதே தி.மு.க.மீது எந்தக் குற்றச் சாட்டும் இல்லை என்று கூறியிருப்பது எனக்குத் தெரியும்" என்று கூறினார்.

16.12.1997 அன்று பா.ஜ.க. தலைவர்கள் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி தலைமைச் செயற்குழுவில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், வீடுதலைவிரும்பி ஆகிய மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அமைப்பது குறித்துப் பேசினார்கள். அத்வானி அவர்களும் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ஏடுகளில் செய்தி வந்தது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.

ஜ. க. வு ம் , அ.தி.மு.க.வும் இணைந்து போட்டியிடப் போவதாகவும், இருவருக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும், அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டது. பா.ஜ.க.விற்கு எதிரிடையாக உள்ள காங்கிரஸ் கட்சியோடுதான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்போகிறது என்றும், இருவருக்கும்மிடையே எத்தனை இடங்கள் என்றெல்லாம் கூட பேசப்பட்டு விட்டதாகவும் கருதப்பட்டு வந்த நிலைக்கு மாறாக, இந்த முடிவு தமிழகத்திலே பேசப்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் தி.மு.கழகத்தோடுதான் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்று கடுமையாகக் கேட்டுக் கொண்டும்கூட, அதனைப் புறக்கணித்து விட்டு, ஜெயலலிதாவோடு தோழமை கொண்டு போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முகத்தில் கரியைப் பூசுவதைப்போல, ஓராண்டு காலத்திற்குள் காங்கிரஸ் கட்சியை, 'அம்போ' வென்று விட்டுவிட்டு அத்வானியோடு பேசி மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் தோழமை கொண்டார் ஜெயலலிதா. செய்தியாளர்கள் ஜெயலலிதாவிடம் அது பற்றிக் கேட்டபோது, "நாடு முழுவதும் காங்கிரஸ் துண்டு துண்டாக உடைந்து சின்னாபின்னமாகி பலவீனப்பட்டுக் கிடக்கிறது.

கூட்டணி குறித்து காங்கிரசுடன் நான் ஒருபோதும் கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களையெல்லாம் தவறாமல் தி.மு.க.- தா.மா.கா.கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்! என்று கேட்டுக் கொண்டார். விவாதிக்கவில்லை. மரியாதை நிமித்தமாகத்தான் விஜய பாஸ்கர ரெட்டி என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குறித்தும் அவர் பேசினார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பிறகுதான் அது குறித்துப் பேச முடியும் என்று கூறினேன்.

கூட்டணி குறித்து ஒரு உறுதியான கருத்தை நான் அப்போது சொல்லவில்லை" என்றார். ★ ★ ★ பா.ம.க.வும் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், அதற்கு அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்த பேராசிரியர் தீரன் எதிர்ப்புத் தெரிவித்தார். "மிகவும் பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட -தாழ்த்தப்பட்ட - சிறுபான்மையின மக்களின் நலன் காக்கும் உரிமைக்குப் போராடும் இயக்கம்தான் பா.ம.க. என்று உருவாக்கிவிட்டு - அடிப்படைக் கொள்கைக்கே வேட்டு வைக்கும்படி, தேர்தல் சீட்டுக்காக யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்றால், பா.ம.க.

வித்தியாசமான கட்சி என்று இது நாள் வரை நாம் சொன்னதற்கு அர்த்தமென்ன?" என்று வேகமாக அறிக்கை விடுத்தார், பேராசிரியர் தீரன். "மேலும், "இட ஒதுக்கீட்டிற்காக 25 உயிர்களைத் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் தியாகம் செய்து உருவான பா.ம.க.வை இட ஒதுக்கீடு, மதச் சார்பற்ற தன்மை இவைகளுக்கெல்லாம் எதிரான பா.ஜ.க.வோடு சேர்ந்து, தமிழ்நாட்டில் மாபெரும் வரலாற்றுக் களங்கத்தை ஏற்படுத்திய பழிக்கு நாம் ஆளாக வேண்டாம் என டாக்டர் அய்யாவை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அறிக்கை விடுத்தார்.

இவ்வாறு கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், பேராசிரியர் தீரன் பா.ம.க.விலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் அ.தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு கொண்டவுடன் விடுத்த அறிக்கையில், தி.மு.க. புறக்கணித்ததால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே தி.மு.கழகக் கூட்டணியுடன் பா.ம.க. இருந்திருக்க வேண்டும்.

அப்போது 2 நாடாளுமன்றத் தொகுதிகள் - 25 சட்டமன்றத் தொகுதிகள் என்று அந்தக் கட்சியின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் பேசிவிட்டுச் சென்ற பிறகு - திரும்ப வந்து பதில் சொல்லாமலேயே, தி.மு.க.வுடன் கூட்டணி இல்லையென்று பா.ம.க.சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு ஆட்சி அமைந்தபின், டாக்டர் ராமதாஸ் அவர்களும், அந்தக் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருந்த பேராசிரியர் தீரனும், அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அளித்த கோரிக்கையை தி.மு.கழக அரசு ஏற்று - பாட்டாளி மக்கள் கட்சியினர்மீது அ.தி.மு.க.

ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்டிருந்த 400க்கு மேற்பட்ட வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டன. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த பா.ம.க.வின் தொண்டர்கள் கமார் 5000 பேர் இருக்கும் - அவர்கள் எல்லாம் தி.மு.கழக ஆட்சியிலேதான் விடுவிக்கப்பட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில், பா.ம.க. சார்பில் பேராசிரியர் தீரன் அவர்களும், கோ.க.மணி அவர்களும் பேசுவதற்காக என்னிடம் வந்தார்கள்.

அதற்கு முதல் நாள், அவர்கள் கட்சியின் செயற்குழு வேலூரில் நடைபெற்று முடிந்தவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ் அவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டு சேரும்" என்று கூறி, அது ஏடுகளிலே வெளி வந்திருந்தது.

நான் அந்தச் செய்தியை தீரன் அவர்களிடம் காட்டி, "இது எப்படிச் சரியாக இருக்க முடியும்? நேர் எதிரான இரண்டு கட்சிகளின் பெயர்களைச் சொல்லி, இரண்டில் ஒன்றுடன் கலைஞர் கூட்டணி என்பது பொருத்தமாகத் தெரியவில்லையே?" என்று கேட்டேன். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், மு.தென்னவனும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் தி.மு.கழகத்தில் இணைந்தனர். "ஏதோ நிருபர்கள் மடக்கி, மடக்கி கேள்வி கேட்டார்கள். அதனால், அப்படிச் சொல்ல வேண்டிய நிலை" என்று தீரன் அவர்களும், மணி அவர்களும் சமாதானம் சொன்னார்கள்.

அதையும் ஏற்றுக் கொண்டு, "தேர்தல் அறிவிப்புக்கே இன்னும் நாட்கள் அதிகம் இருக்கின்றன. அறிவிப்பு வரவே இன்னும் இருபது நாட்களுக்கு மேலாகும். ஜனவரி முதல் வாரம்தான் அறிவிப்பு வரும். பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தான் வேட்புமனு தாக்கல் என்பது இருக்கக்கூடும். மார்ச்சில்தான் தேர்தலே முடிவடையும் என்று கூறப்படுகிறது. எனவே நாம் கலந்து பேசிட நேரம் நிரம்ப இருக்கிறது. கடந்த முறைபோல் ஆகாமல் இந்த முறை நமது அணியில் பா.ம.க.

நிச்சயம் இருக்கும் - இருக்க வேண்டும்." என்று நான் அவர்களிடம் கூறினேன். "மதவாதம் பேசும் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதா? என்று தொண்டர்களும், அனுதாபிகளும் யோசிக்க வேண்டும்" என்றது 'குமுதம்'. 14.12.1997 அன்று கழகச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நான் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, டாக்டர் ராமதாஸ் என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தொலைபேசிச் செய்தி வந்தது. அதற்கு நான் - "செயற்குழுவில் கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை.

எல்லா கட்சிகளுடனும் பேசி விட்டுத்தான் முடிவெடுக்க இருக்கிறோம். அதனால் இன்று செயற்குழு முடிந்ததும் சந்திக்கிறேன்" என்று ராமதாஸ் அவர்களுக்கு அறிவிக்கச் சொல்லி விட்டு, செயற்குழுவிற்குச் சென்று விட்டேன். செயற்குழு முடிந்த பிறகு கழகப் பொருளாளர் ஆற்காடு வீராசாமியிடம் டாக்டர் ராமதாஸ் அவர்களுடன் சந்திப்புக்கான நேரம் கேட்குமாறு சொன்னேன். அவரும் பல முறை முயன்று, டாக்டர் ராமதாஸ் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே எனக்கொரு செய்தி வந்தது. அதில் இரண்டு மாதங்களுக்கு முன்பே, பா.ம.க. சார்பில் ஒரு முக்கியமான தலைவர் மூலம் அ.தி.மு.க.வுடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை முயற்சி, தி.

மு.க. மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் கட்சியின் தொண்டர்களை நம்ப வைப்பதற்கான முயற்சி என்றும் கூறப்பட்டது. இந்தச் செய்தியை நான் கேள்விப்பட்ட பிறகுகூட, நான் பா.ம.க. போய்விட்டது என்பதற்காக மகிழ்ச்சியடையவில்லை. 2.1.1998 தேசிய "முரசொலி"யில் "விளக்கமளிக்க விடுக்கும் நீட்டோலை" என்ற தலைப்பில் - நான் எழுதிய உடன்பிறப்பு மடலில் - அதனை முடிக்கும்போது, "எல்லாவற்றையும் கடந்த "நரித்தனம்" இரு கட்சிகளுக்குமிடையே புகுந்து அவரை நம்மிடமிருந்து மட்டுமல்ல - அவர் கட்டிக் காத்த புரட்சிகரமான கொள்கைகளிடமிருந்தும் பிரித்து கலைஞர் விட்டதே - கூடாதோர் நட்புக்குக் கூட்டி வைத்து விட்டதே என்ற கவலையுடன்தான் இந்தக் கடிதம் எழுதியுள்ளேன்.

கண்டன மடல் அல்ல இது - விபரமறியாமல் இருப்போர்க்கு விளக்கமளிக்க விடுக்கும் நீட்டோலை- அவ்வளவுதான்" என்று குறிப்பிட்டிருந்தேன். பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது பற்றி, 8.1.1998 தேதிய குமுதம் தனது தலையங்கத்தில்- "தினந்தோறும் செய்தித்தாள்களைப் புரட்டும்போது, நேர்மையான எளிய இந்தியனின் மனதில் எழும் கேள்வி - இந்த அரசியல் கட்சிகளுக்கு மனசாட்சி என்று ஒன்று உண்டா? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற லட்சியத்தை முன்வைத்து, அதற்காகச் சில உயிர்களையும் பலி கொடுத்து, தன்னை வளர்த்துக் கொண் கட்சி பா.ம.க.- வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முற்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்துவதற்காக பாபர் மசூதிப் பிரச்சினையைக் கிளப்பி, ரத யாத்திரை துவக்கி, மசூதி இடிப்பு வரை கொண்டு சென்ற கட்சி பாரதீய ஜனதா கட்சி.

இந்தத் தேர்தலில் இரண்டும் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றன. எதற்காக? ஒரு சில எம்.பி. சீட்டுக்களுக்காக. "மதவாதம் பேசுகிற கட்சியைப் பதவியில் அமர்த்துவதற்காகவா பா.ம.க. துவக்கப்பட்டது? இத்தனை நாள் அதன் தொண்டர்கள் குடும்பத்தை, தொழிலை, சொந்த வாழ்வின் முன்னேற்றங்களைப் புறக்கணித்து உழைத்ததெல்லாம் சமூக விரோத சக்தி என்று கடந்த ஆண்டு வரை தங்கள் தலைவரால் கட்டிக் காட்டப்பட்ட கட்சியை உயிர்ப்பிக்கவா? தலைவர்கள் யோசிக்கமாட்டார்கள்- ஆனால் தொண்டர்களும், அனுதாபிகளும் யோசிக்க வேண்டும்.

ஏனெனில் அவர்களுக்கு மனசாட்சி உண்டு" இவ்வாறு எழுதியிருந்தது.