உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சாதனைச் சிகரம்; சமத்துவபுரம்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சாதனைச் சிகரம்; சமத்துவபுரம்! · 339 / 391

27. சாதனைச் சிகரம்; சமத்துவபுரம்! தமிழன் மானத்தோடு வாழ்வதற்கு கலைஞரின் ஆட்சித்தான் தேவை - தந்தை பெரியார் ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்திய ஒரு அற்புதமான திட்டம்தான் "பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்" . அந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, புகழ்பெற்ற ஆங்கிலவார ஏடான "அவுட் லுக்" இதழில் அதன் செய்தியாளர் ஏ.எஸ். பன்னீர்ச் செல்வம் திருநெல்வேலியிலிருந்து ஒரு கட்டுரை தீட்டியிருந்தார்.

அந்தக் கட்டுரையைப் படித்தாலே சமத்துவபுரம் திட்டம் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்கிக் கொள்ளலாம். அந்தக் கட்டுரைக்குத் தலைப்பே "D.M.K. as Social Engineer - Chief Minister M. Karunanidhi flags off his dream project, Samathuvapuram - Villages of Harmony" "இது திராவிட இயக்கத்தில் ஒரு புதிய திட்டம் என்று தி.மு.க. ஆதரவாளர்களால் கூறப்படுகிறது. ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் சமூக நீதிக்காகப் போராடியபின், தற்போது தி.மு.கழகம் தீண்டாமையையும், தலித்துகள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்துப் போராட தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியால் 15 நாட்களுக்குமுன் அறிவிக்கப்பட்ட பேராவலுடன் கூடிய சமுதாய நிர்மாணத் திட்டமான "சமத்துவபுரம்" அந்தத் திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும்." "மாநிலத்தின் தென் மாவட்டங்களில் கடுமையான சாதிக் கலவரங்கள் பீடித்திருந்த நேரத்தில் இந்த "நல்லிணக்க கிராமங்கள்" திட்டம் வந்தது. கருணாநிதியால் இந்த கலைஞர் மாபெரும் திட்டத்தின்படி அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் 100 கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.

இந்தச் சமத்துவபுர கிராமங்களில் 100 குடும்பத்தினர் வாழ்வார்கள். அவர்களில் 40 பேர் தலித்துக்களாக இருப்பர். இந்தக் கிராமங்கள் ஒவ்வொன்றையும் 10 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க முடியும் என்று அரசு நம்புகிறது. ஒவ்வொரு ஒதுக்கீட்டாளரும் 5 சென்ட் நிலத்தையும், ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள ரூ.35 ஆயிரம் மானியத்தையும் பெறுவர். ஒரு முக்கியமான முன் நிபந்தனை - அடுத்த வீட்டுக்காரர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்."

"இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் . 3321 மக்கள் தொகையைக் கொண்டது அந்தக் கிராமம். இந்த மாவட்டத்தில் சாதி வன்முறை தலை விரித்தாடியபோது ஒரு சமாதானத்திற்கான பாலைவனச் சோலையாகத் திகழ்ந்தது இந்தக் கிராமம். மிகவும் பாதிப்படையக்கூடிய இரு நகரங்களான ராஜபாளையத்திற்கும், கொடியங்குளத்திற்கும் இடையில் இந்த ஊராட்சி சிக்கிக் கொண்டிருந்தாலும், அந்தக் கிராமத்தில் உள்ள முதியவர்கள் சகோதரத்துவ வன்முறையைத் தவிர்ப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் இந்த ஊராட்சி வன்முறை வெறியிலிருந்து தப்பியது."

"இங்கே வசிப்பவர்கள் திருமணங்கள் மற்றும் சடங்குகளை இந்தக் கிராமத்தில் கட்டப்படும் சமுதாயக் கூடத்தில்தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சமுதாயக் கூடம் ஒரு பொதுவான வழிபாட்டுத்தலமாக இருக்கும். அங்கே ஒரே ஒரு இடுகாடும், ஒரே ஒரு சுடுகாடும் மட்டுமே இருக்கும். அங்கே வசிக்கும் மக்கள் இந்தப் பொதுவான இடுகாடு அல்லது சுடுகாட்டைத்தான் பயன்படுத்த வேண்டும்."

- கட்டுரை மிகவும் நீளமானது. இத்துடன் அதனை நிறுத்திக் கொள்கிறேன். இந்தச் சமத்துவபுரங்களை நிர்மாணிக்கும் எண்ணம் எனக்குத் தோன்றியதற்கான மூல காரணம், நான் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய "ஒரே இரத்தம்" என்ற புதினம். தம்பி மு.க.ஸ்டாலின் நடித்து அது திரைப்படமாகக்கூட வெளிவந்திருக்கின்றது. அந்தப் படத்தில் உயர் சாதிக்கார வாலிபன் ஒருவன் முற்போக்குக் கருத்துக்களைச் சொல்வான். "சாதி கூடாது - மதம் கூடாது - எல்லோரும் ஓர் குலம் - ஒன்றே குரல் - ஒருவனே தேவன்" என்ற கருத்தைச் சொல்வான்.

ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வார்கள். அவர்களுக்கிடையே நுழைந்து அந்த உயர் சாதிக்கார வாலிபன் சொல்வான் - "என்னை - எங்களைக் குற்றம் சொல்கிறீர்களே, நீங்கள் உங்களுக்குள் மோதிக் கொள்கிறீர்களே. நியாயமா?"

என்று கேட்டு விட்டுத் தொடர்வான். "ஐயா! புராண காலத்திலே புலியும், மானும் ஒரே துறையில் தண்ணீர் குடித்ததாகக் கதை எழுதுவார்கள். இந்தக் காலத்தில் புலியும், மானும் கூட ஒரே துறையிலே தண்ணீர் குடிக்க வேண்டாம் - மானும் மானுமாவது ஒரே துறையிலே தண்ணீர் குடிக்கக் கூடாதா?"

என்று கேட்பான். இதனை 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருக்கிறேன். அந்த எண்ணத்தை மனதிலே வைத்துத்தான் தமிழகமெங்கும் சமத்துவபுரங்களை உருவாக்கும் திட்டத்தை சாதி வன்முறை ஒழிய உருவாக்கப்பட்ட சமத்துவபுரங்கள் சாதனைச் சிகரம்! கலைஞர் வேறு யாரும் செய்ய நினைக்காத காரியங்களை - யாராலும் செய்ய முடியாத காரியங்களை கலைஞர் உற்சாகமாக செய்து முடிக்கிறார். -தந்தை பெரியார் அறிவித்தேன். அது மாத்திரமல்ல - என்னுடைய வீட்டை எடுத்துக் கொண்டால் அதுவே ஒரு சமத்துவ புரம்தான்.

என்னுடைய வீட்டில் நாடார் உண்டு - நாயுடு உண்டு - என்னுடைய மருமகள் ஆதிதிராவிடப் பெண், அதைப் போலவே ஒரு ஆதி திராவிட வாலிபனுக்கு என் பேத்தியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன். எனவேதான் என் வீடே ஏறத்தாழ ஒரு சமத்துவ புரம் என்று கூறினேன். என் வீட்டைப் போலவே தமிழ்நாடே சமத்துவ புரமாக மாற வேண்டுமென்பதுதான் என் கனவு. 1997ஆம் ஆண்டு என்னால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பெரியார் நினைவு சமத்துவபுரத்திட்டம் 2001ஆம் ஆண்டு ஆட்சி மாறுவதற்கு முன்பு வரையில் 145 சமத்துவபுரங்கள் தமிழகத்திலே அமைந்தன.

பிறகு அந்தப் புரட்சித் திட்டம் அப்படியே கிடப்பிலே போடப்பட்டு விட்டது. ஆனால் 2006ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி அமைந்த பிறகு, பெரியார் வாழ்ந்த 95 வயதினை நினைவிலே கொண்டு, மேலும் 95 புதிய சமத்துவபுரங்களை அமைப்பதோடு - ஏற்கனவே அமைந்த, மற்றும் தற்போது அமையவுள்ள 240 சமத்துவபுரங்களின் முகப்பிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் நிறுவப்படும் என்று நான் அறிவித்ததின் அடிப்படையில் முதற்கட்டமாக 2008-2009இல் சென்னை, நீலகிரி மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு சமத்துவபுரம் வீதம் 29 சமத்துவபுரங்களை அமைப்பதற்கு அரசு முடிவு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சமத்துவபுரங்களின் வெளி முகப்பிலே வைப்பதற்கான தந்தை பெரியார் அவர்களின் சிலையின் மாதிரி வடிவத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கொண்டு வந்து காட்டினார். சிற்பி தீனதயாளனிடம் சில திருத்தங்களைச் செய்யச் சொல்லியிருக்கிறேன். பெரியார் நினைவு சமத்துவபுரங்களைப் பற்றி எழுதும்போது - தந்தை பெரியார் அவர்கள் நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த போது.

புலவர் கா. முத்துசாமி அவர்கள் ஆசிரியராகக் கொண்டு மதுரையில் இருந்து வெளிவரும் "நமது நல்லாசிரியர் குரல்" என்ற இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றை சில நாட்களுக்கு முன்பு காணுகின்ற வாய்ப்பினைப் பெற்றேன். பெரியார் அளித்த பேட்டியில் சில பகுதிகள்:- கேள்வி:- கலைஞர் அவர்கள் தங்களிடம் பணியாற்றியபோது, அவரிடம் தாங்கள் கண்ட நிறை என்ன? குறை என்ன? பெரியார்:- சொன்னதை எல்லாம் ஒழுங்காகவும், சிறப்பாகவும் செய்வார்.

பாராட்டும்படி பணி புரிந்தார். அவரிடம் நிறைவைக் கண்டேன்- குறை இல்லை. கேள்வி:- கலைஞர் அவர்களுடைய எழுத்தாற்றலைப் பற்றி தங்கள் கருத்து என்ன? பெரியார்:- எந்த விஷயத்தையும் எழுதுவார். திறமையாகவும் எழுதுவார். கேள்வி:- கலைஞர் அவர்களுடைய கலைப் பணியைப் பற்றி தங்கள் கருத்து என்ன? பெரியார்:- அவருடைய நாடகம், சினிமா எல்லாம் சிறப்பாக இருக்கு - மக்கள் கூட்டம் கூட்டமாக ரசிக்கிறார்கள் என்று பலர் என்னிடம் கூறியிருக்காங்க.

கேள்வி:- கலைஞர் அவர்கள் தங்களிடம் ஆலோசனைக் கேட்பது உண்டா? கலைஞர் பெரியார்:- நிறையக் கேட்பார்; கேட்டுக் கொண்டு இருக்கிறார். கேள்வி:- அவைகளில் முக்கியமானது எது? பெரியார்:- எல்லாமே முக்கியம்தான்! கேள்வி:- உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுச் செயல் படுகிறாரா? பெரியார்:- நான் சொன்னாலும் அவருக்குச் சரி என்று பட்டால்தான் செய்வார். கேள்வி:- கலைஞர் அவர்களுடைய செயல்களில் தங்களுக்கு விருப்பமானது எது? பெரியார்:- நிறைய இருக்கு.

அவருடைய தமிழ் உணர்வு - பகுத்தறிவு - மக்களுக்காக நிறைவேற்றும் திட்டங்கள் - எல்லாம் எனக்கு விருப்பமானவை. கேள்வி:- கலைஞர் அவர்கள் மக்களில் ஒருவராக - மக்களோடு தொடர்பு கொண்டு செலாற்றுகிறார். அவரிடம் முதலமைச்சர் என்ற அதிகார வெறி இல்லை. ஆனால், சிலர் ஆர்ப்பாட்டம் செய்து அவர்களுக்குச் தொல்லை கொடுத்திருக்கிறார்களே ஏன்? பெரியார்:- எதிரிகளுக்கு வேறு வழியில்லை. எப்படியாவது, யாரையாவது தூண்டி விட்டு, பதவிக்கு வர முயற்சி செய்கிறார்கள்.

அதனால் சிலரைத் தூண்டி விடுகிறார்கள். புரியாமல் சிலர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கேள்வி:- கலைஞர் அவர்களுடைய ஆட்சியைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன? பெரியார்:- வேறு யாரும் செய்ய நினைக்காத காரியங்களை -வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களை கலைஞர் உற்சாகத்தோடும். - ஊக்கத்தோடும் நன்றாகச் செய்கிறார். தமிழன் மானத்தோடு வாழ்வதற்கு கலைஞரின் ஆட்சிதான் தேவை. ★ ★ ★ "சாதி கூடாது - மதம் கூடாது- எல்லோரும் ஓர் குலம் - ஒன்றே குலம்- ஒருவனே தேவன்"- என்று நான் எழுதி, ஸ்டாலின் நடித்த திரைப்படம் 'ஒரே இரத்தம்' இதற்கிடையே இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் தனது கணவர் எடின்பரோ கோமகனுடன் 15.10.1997 அன்று இரவு சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் சிறப்பான முறையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்திற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்த அவரை ஆளுநர் பாத்திமா பீவி, நான், மற்றும் தமிழக அமைச்சர்கள் வரவேற்றோம். அதற்கடுத்த நாள், 16.10.1997 அன்று கலைஞானி கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க முயற்சித்த "மருத நாயகம்" திரைப்படத்தின் தொடக்க விழாவில் நானும், மூப்பனார் அவர்களும், ராணி எலிசபெத் அவர்களும் கலந்து கொண்டோம்.

வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு புளிய மரத்தில் தூக்கில் தொங்கிவிடப்பட்ட நாள் அக்டோபர் 16ஆம் நாள். கட்ட பொம்மனின் நினைவு நாளான அதே அக்டோபர் 16ஆம் நாள் "மருதநாயகம்" திரைப்படத்திற்கான தொடக்க விழா நடத்தப்பட்டது. அந்த விழாவிலே பேசும்போதுதான் கமல்ஹாசன் அவர்களுக்கு "கலைஞானி" என்ற விருதினைச் சூட்டினேன். கமல் தொடங்கிய அந்த மகத்தான கலைச் சித்திரம் அவருக்கு நேரம் கிடைக்காத காரணத்தாலோ- அல்லது வேறு என்ன காரணத்தாலோ முழுமை பெறாமல் உள்ளது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராசன் அவர்களின் மூத்த மகனும் - மத்திய அரசின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராகத் திறம்படப் பணியாற்றிக் கொண்டிருந்தவரும் - என்னுடைய அருமைத் தம்பியுமான என்.வி.என்.சோமு அவர்கள் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக கலைஞர் 13.11.1997 அன்று டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்டார். கொல்கத்தா வழியாக, அருணாசலப் பிரதேசம் சென்றடைந்த அவர், 14.11.1997 அன்று காலை 8.25 மணியளவில், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள சவாங் எனும் இடத்திலிருந்து விமானப் படையின் "சேடக்" ரக ஹெலிகாப்டர் மூலம் பணி காரணமாகப் புறப்பட்டார்.

காலை 9.05 மணியளவில் சோமு பயணம் செய்த ஹெலிகாப்டருக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்குமிடையேயிருந்த தொடர்பு அறுந்தது. அதன் பின்னர் பகல் 12 மணி அளவில் தான் சோமு பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது கண்டுபிடிக்கப் பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிக் கிடந்தது தெரிந்தது. அந்த விபத்தில் என்.வி.என்.சோமு அவர்களும், அவருடன் பயணம் செய்த மேஜர் ஜெனரல் ஆர்.சி.நக்பால் , விமானப் படையைச் சேர்ந்த விமான ஓட்டிகள் அகர்வால், சர்மா ஆகியோரும் உயிர் இழந்தனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து என்.வி.என். சோமுவின் உடல் தேஜ்பூர் எனும் இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து விமானப் படை விமானம் மூலம் சென்னைக்கு 14.11.1997 அன்றிரவு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் சென்னை மாநகர மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் , அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி. தரைப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் நக்ரா ஆகியோர் சோமுவின் உடலைப் பெற்று. புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு சென்றார்கள்.

கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர், முன்னாள் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் கழகக் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடவும், கழக நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் தலைமைக் கழகம் அறிவிப்பு செய்தது. கலைஞானி கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலைஞரும் - கமலும் நான் விடுத்த இரங்கல் செய்தியில், முன்னேற்றக் கழகத்தின் முன்னணி வீரர்களில் ஒருவரும் - கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் - கழக அமைப்புச் செயலாளராக திறம்படப் பணியாற்றிய வரும் - மத்திய அரசின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக விளங்கியவருமான என்னுடைய அருமைத் தம்பி என்.வி.என்.

சோமு அவர்கள், அருணாசலப் பிரதேசத்திற்குப் பாதுகாப்புப் பணி குறித்த அலுவல் காரணமாகச் சென்றபோது. ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகி அவரும், அவருடன் நான்கு பேரும் உயிரிழந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறேன். தம்பி சோமு இந்த இயக்கத்திற்கு இரத்த நாளமாக இருந்து ஆற்றியுள்ள அரும் பணியை யாராலும் மறக்க முடியாது. இனிய சுபாவம், எளிய வாழ்க்கை முறை, எல்லோரிடத்திலும் சகோதரப் பாசத்தோடு பழகுகின்ற பண்பு - இதற்கெல்லாம் உறைவிடமாக இருந்த என் உயிரனையே அந்த உடன் பிறப்பு இன்று இல்லை.

திடீரென்று மரணம் அவரை மாயமாய்த் தழுவிக் கொண்டது. அவருடைய குடும்பத்தாருக்கும் - மனைவி, மக்களுக்கும் - அவரை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்ற இந்தப் பெரும் குடும்பமாம் கழகக் குடும்பத்தில் உள்ள உடன் பிறப்புகள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

தம்பி என்.வி.என். சோமுவை மத்திய அமைச்சராக ஆக்கியதே நான்தான். இன்னும் சொல்லப் போனால், அவர் இவ்வாறு அகால மரணமடைவதற்குச் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் 11.9.1997 அன்று தான் என்.வி.என். சோமுவின் அன்பு மகள் கனிமொழியின் திருமணத்தை நான் சென்னையிலே தலைமையேற்று நடத்தி வைத்தேன். அந்த கலைஞர் மணவிழாவிற்கு வருகை தந்த முலாயம் சிங் யாதவ் அவர்கள் எனக்கு பக்கத்திலே அமர்ந்திருந்தபோது, "சோமு உங்களுக்கு மிகவும் விசுவாசமானவர்" (Somu is very loyal to you) என்று சொன்னார்.

அவரிடம் நான், "அவர் எனக்கு விசுவாசமாக இருப்பது மாத்த

ிரமல்ல, இந்தக் கட்சிக்கு விசுவாசமானவர், கொள்கைக்கு விசுவாசமானவர்" என்று கூறினேன். அதையே மண விழாவில் பேசும்போதும் கூறி, "நாமெல்லாம் சோமுவினுடைய மன உறுதியை, கொள்கை உறுதியைப் பாராட்டுவதைவிட - அவர் தலைமையிடத்திலே வைத்திருக்கின்ற விசுவாசத்தை நமக்கு நாமே பாராட்டிக் கொள்வதை விட - வடக்கே இருந்து வந்து முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் பாராட்டுகின்ற நேரத்திலேதான் - நம்முடைய குழந்தையை நாம் எடுத்து கண்ணல்ல, ராஜா அல்ல, மணியல்ல என்று கொஞ்சும்போது பெறுகின்ற இன்பத்தைவிட, பக்கத்து வீட்டிலே உள்ளவர்கள் - எதிர் வீட்டிலே உள்ளவர்கள் எடுத்துக் கொஞ்சுகின்ற நேரத்திலே ஒரு தாய்க்குப் பிறக்கின்ற இன்பத்தைப்போல.

தம்பி சோமுவைப் பற்றி முலாயம்சிங் யாதவ் இங்குக் குறிப்பிட்டபோது, நான் அந்த அளவிற்குப் பெருமை கொண்டேன்- பெருமிதம் கொண்டேன் - பெரு மகிழ்ச்சி கொண்டேன்" என்றெல்லாம் பேசினேன். "மேலும் சோமுவைப் போன்றவர்கள் இந்த இயக்கத்திலே இருக்கின்ற காரணத்தால்தான் - அவருடைய தந்தையார் என்.வி.என். அவர்களைப் போன்றவர்கள் இருந்த காரணத்தினாலே தான் - எத்தனையோ சோதனைகள், சோதனைகள், சுழன்றடித்த சூறாவளிகள், குலுங்க வைத்த பூகம்பங்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்கு வந்த போதும்கூட அத்தனையையும் சமாளித்து இன்றைக்கு நிமிர்ந்து நின்று நடைபோடுகிறது என்றால், அதற்குக் காரணம் சோமுவைப் போன்ற ஏராளமான தொண்டர்கள், தூய உள்ளம் படைத்தவர்கள் இந்த இயக்கத்திலே இருப்பதால்தான்!

என்.வி.என். அவர்களின் இறுதிக் கட்டத்தில் - கடைசியாக மருதநாயகம் பட விழாவில் வருகை தந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் முதல்வர் கலைஞர் அவர் நீள்துயில் கொள்ளப் போகிற அந்த நேரத்தில் - என்னை அழைத்து, அவருடைய குடும்பத்தாரையும் பக்கத்திலே வைத்துக் கொண்டு, தம்பி சோமுவின் கையையும் என்னுடைய கையையும் இணைத்து, சோமுவிடத்திலும், அவரது குடும்பத்தாரிடத்திலும் ஒரு உறுதிமொழியைச் சத்தியம் செய்து பெற்றார்.

"கழகத்திற்கும், கலைஞருக்கும் எந்தக் காலத்திலும் நாங்கள் துரோகம் செய்யமாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுங்கள்" என்று சொன்னார். அந்த உறுதியை கடைசிவரையிலே தம்பி சோமு ஒருவர்தான் காப்பாற்றி வருகிறார் - காப்பாற்றி வந்திருக்கின்றார். எனவே அந்த உறுதிக்கு என்னுடைய பாராட்டுக்களை - வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றெல்லாம் அந்த மணவிழாவிலே பாராட்டி உரையாற்றினேன். என்.வி.என்.சோமு அவர்கள் சின்னஞ் சிறு குழந்தையாக இருந்தபோதே, குழந்தைப் பருவத்திலேயே தன்னுடைய தாயாரோடு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் 1938ஆம் ஆண்டு சிறைச்சாலையிலே இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

1968ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1973ஆம் ஆண்டுவரை அந்தப் பொறுப்பிலே இருந்தவர். 1971-72ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் துணை மேயராகவும் சோமு பொறுப்பேற்றிருந்தார். 1980 ஆம் ஆண்டு பூங்கா நகர் தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு - 84ஆம் ஆண்டுவரை சிறப்பாகப் பணியாற்றியவர் அவர். கலைஞர் 1984ஆம் ஆண்டு தமிழகச் சட்ட மன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்திரா காந்தி மறைந்து, எம்.ஜி.ஆர். அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்த நேரம் அது. அந்தத் தேர்தலில் வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட என்.வி.என்.சோமு மட்டுமே தி.மு.கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, இரண்டாம் முறையாக வெற்றி பெற்று ஜூலை மாதம் 3ஆம் தேதியன்று, மத்தியில் தேவகவுடா அமைச்சரவையிலும், அதன்பின் ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராகவும் இருந்த சோமு அவர்கள், நான்கரை மாதங்கள் மட்டுமே அந்தப் பதவியிலிருந்துவிட்டு இயற்கை எய்தினார்.

கழகப் பணியில் தீவிர ஆர்வத்துடன் பணி புரிந்த சோமு, தலை சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தார். "இந்து" நாளேட்டின் தொழிற்சங்கத் தலைவராக 1967ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பொறுப்பு வகித்து வந்த பெருமையும், சிறப்பும் அவருக்குண்டு. மேலும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" அசோக் லேலண்ட், எம்.ஆர்.எப்., சிம்சன் - உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்களிலும் தலைவராக இருந்து அரும்பணியாற்றியவர் அவர்.

என்.வி.என். சோமுவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் ஐ.கே.குஜ்ரால், திருமதி ஷீலா குஜ்ரால் , முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் சென்னைக்கு வருகை தந்திருந்தனர். பிரதமர் குஜ்ரால் அவர்களும், வாஜ்பாய் அவர்களும், மத்திய அரசில் இருவரும் எதிரெதிர் கட்சிகளுக்குத் தலைவர்கள். எனினும் இருவரும் ஒரே விமானத்தில் சென்னைக்கு வந்து அதே விமானத்தில் திரும்பினர் எனும்போது எந்த அளவிற்கு ஜனநாயகமும், நட்புணர்வும் அந்த இரண்டு தலைவர்களிடத்திலும் இருந்தது என்பதற்கு அது உதாரணமாக விளங்கியது.

இரண்டு தலைவர்களும் விமானத்திலிருந்து இறங்கி, நேராக என்னுடைய இல்லத்திற்கு வந்து எனக்கு ஆறுதல் கூறிவிட்டு - பிறகு என் வீட்டிலேயே சிறிது நேரம் "பத்தரை மாற்றுத் தங்கக்கட்டி பறிபோனதே!" -விபத்தில் காலமான என்.வி.என்.சோமுவைப் பற்றி கலைஞர் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் சோமுவின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினோம். சோமுவின் உடலுக்கு மரியாதை செலுத்த மத்திய ராணுவத் துறை அமைச்சராக அப்போதிருந்த முலாயம் சிங் யாதவ் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை தந்து, அனைவருக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் சோமுவின் உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பெற்றுக் கொண்ட ராணுவ மூத்த அதிகாரிகள், சோமுவின் உடலைத் தோளில் சுமந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ பீரங்கி வண்டியில் ஏற்றினர். அதிகாரிகளின் மற்றொரு குழு என்.வி.என். சோமு உடல் மீது தேசியக் கொடியைப் போர்த்தி, உடல் இருந்த பெட்டியின் அருகே அமர்ந்திருந்தனர். தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சோமுவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மாலிக், கடற்படைத் தலைமைத் தளபதி விஷ்ணுபகத், விமானப்படை தலைமைத் தளபதி ஆகியோர் சென்றனர். ராணுவ அணிவகுப்பின் முன்னே கழகத் தோழர் ஒருவர் கழகத்தின் இரு வண்ணக் கொடியையும் கறுப்புக் கொடியையும் ஏந்தி வந்தார். இறுதி ஊர்வலத்தில் எங்களுடன் த.மா.கா. தலைவர் மூப்பனார், மத்திய மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் இடுகாட்டை அடைந்ததும் ராணுவ சோக கீதம் இசைத்தவாறு துப்பாக்கியைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு சோமுவின் உடலை அங்கே இருந்த சிதைமேடையில் ராணுவத்தினர் வைத்தனர்.

சோமுவின் அருமை கலைஞர் மகன் திருமாறன் தீ மூட்டினார். 21 குண்டுகளை முழங்க ராணுவ முறைப்படி மரியாதை செய்யப்பட்டது. கழகம் வளர்க்க அரும்பாடுபட்டு, இளம் வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்த என்.வி.என். சோமுவைப் பற்றி, "பத்தரை மாற்றுத் தங்கக் கட்டி பறி போனதே" என்ற தலைப்பில் ஒரு உடன்பிறப்பு மடல் எழுதி என்னை நானே தேற்றிக் கொள்ள முயன்றேன். அதன் பிறகு 27.11.1997 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.வி.என்.சோமுவின் திருஉருவப் படத்தினைத்திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினேன்.

அந்த நிகழ்ச்சியில் என்னுடன் பேராசிரியர், ஆர்க்காடு வீராசாமி , சென்னை மாநகர மேயராக இருந்த தம்பி மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். ★ ★ ★ சென்னையில் என்.வி.என். சோமுவிற்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு, டெல்லியில் 17.11.1997 அன்று நடைபெற்ற ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழுக் கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றேன். கூட்டம் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் நானும், ஐக்கிய முன்னணி அமைப்பாளர் சந்திரபாபு நாயுடுவும், தேவ கவுடாவும், ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும், ஏ.பி. பரதனும், மூப்பனாரும் மத்திய அமைச்சர்கள் ஜெய்பால் ரெட்டி, முரசொலி மாறன், முலயாம் சிங் யாதவ் ஆகியோரும் கலந்து கொண்டோம். ஜெயின் கமிஷன் அறிக்கை தொடர்பாகவும், அதனால் ஏற்படக் கூடிய நிலைகள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியிடம், தான் நடத்திய பேச்சு வார்த்தையின் விவரங்களைப் பிரதமர் குஜ்ரால் அவர்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர்களிடம் விளக்கினார்.

அதைப் போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுர்ஜித் அவர்களும் தான் சீதாராம் கேசரியோடும் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை விளக்கினார். ஜெயின் என்.வி.என். சோமு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்கிறார். கமிஷனின் இடைக்கால அறிக்கையில் என்ன தெரிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், நாடாளுமன்றக் கூட்டத்திலேயே தாக்கல் செய்யலாம் என்று ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

ஐக்கிய முன்னணியிலிருந்து தி.மு.கழகத்தை எப்படியாவது விலக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்த சிலர் செய்த தூண்டுதல் காரணமாகவும் - 1996ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது காங்கிரசிலிருந்து மூப்பனார் தலைமையில் பெரும்பான்மையோர் விலகி, தி.மு.கழகத்தோடு உறவு கொண்டதை மனதிலே கொண்டும் - காங்கிரஸ் கட்சியிலே அப்போது முக்கிய இடத்திலே இருந்த ஒரு சிலர் "ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை வைத்து ஏதாவது செய்யலாமா?"

என்று நினைத்து, அதற்கேற்பச் செயல்பட்டார்கள். ஆனால் ஐக்கிய முன்னணியிலே உள்ள தலைவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக எந்தக் காரணத்திற்காகவும் தி.மு.கழகத்தை ஐக்கிய முன்னணியிலிருந்து இழப்பதற்குத் தயாராக இல்லை. "ஆட்சி போனாலும் பரவாயில்லை - ஒரு சிலரின் சூழ்ச்சிக்கு இரையாக மாட்டோம்" என்று உறுதியாக இருந்தார்கள்.

இதற்கிடையே நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டம் 19.11.1997 அன்று கூடியது. ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் கூட்டம் 19.11.1997அன்று மீண்டும் பிரதமர் குஜ்ரால் அவர்களின் இல்லத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் "காங்கிரஸ் கட்சியின் முடிவிற்கேற்ப ஐக்கிய முன்னணி தன் திட்டங்களை வகுக்கலாம்" என்று பேசி முடிவெடுக்கப்பட்டது.

கலைஞர் நாடாளுமன்றத்தில் ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓர் அறிக்கை - ஜெயின் கமிஷன் அறிக்கையிலே இடம் பெறாத வார்த்தைகளையெல்லாம் குறிப்பிட்டுப் பழி சுமத்தியிருந்தார்கள். அதிலே எழுதப்பட்ட ஐயங்களுக்கெல்லாம் நான் டெல்லியிலே சந்தித்த செய்தியாளர்கள் பேட்டியில் விளக்கமாகப் பதில் அளித்தேன். "ஜெயின் கமிஷன் அறிக்கையும் - புதைக்கப்பட்ட உண்மைகளும்" என்ற தலைப்பில் சென்னையிலே உள்ள சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில் பல்வேறு செய்திகள் தொகுக்கப்பட்டு, அது அனைத்து ஏடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு, அது அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது.

டெல்லியிலிருந்து 20.11.1997 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையின் சில பகுதிகளை நான் படித்தேன். தி.மு.க.மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் முற்றிலும் ஆதாரமற்றது - உள் நோக்கம் கொண்டது. உண்மையைச் சொல்வதென்றால், தமிழக மக்கள் அனைவரையுமே இந்த இடைக்கால அறிக்கை குற்றம் சாட்டுகிறது. ஜெயின் அறிக்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுகிறேன். "விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் இடையே ஆழமான உறவு..."

"இதற்கு என்ன அர்த்தம்? ஒட்டுமொத்தமாக எல்லா தமிழக மக்கள் மீதும் ஜெயின் குற்றம் சாட்டுகிறார்." "ஓர் அரசியல் கட்சி அல்லது ஓர் அமைப்பு ஜனநாயக் வழியிலும் செயல்படலாம் - பாசிச வழியிலும் செயல்படலாம்." "தி.மு.க. முழுக்க முழுக்க ஜனநாயக வழியில் செயல்படும் கட்சி."

"முழுமையாக ஒரு கட்சியின்மீது குற்றம் சாட்டுவதில் அர்த்தமே இல்லை - தனிநபர்கள் மட்டுமே குற்றம் இழைக்க முடியும்." "மத்திய அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு, திரு.ராஜீவ் காந்தி படுகொலைபற்றி முற்றிலும் புலன் விசாரணை நடத்தியுள்ளது. வழக்கு விசாரணையும் முடிந்துவிட்டது. 41 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்தவர் ஒருவர்கூட கிடையாது. வரும் ஜனவரி 28ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

எனவே அறிவுள்ள எவரும் தி.மு.க.மீது எப்படி குற்றம் சாட்ட முடியும் - அவ்வாறு எண்ணுவதே பயங்கரமானது - நினைத்துப் பார்க்கவும் இயலாதது - மனிதத் தன்மையற்றது. என்னுடைய ஆட்சிக் காலத்தில் திரு.ராஜீவ் காந்தி எட்டு முறை தமிழகத்திற்கு வந்து சுற்றுப் பயணம் செய்து விட்டு, பத்திரமாகத் திரும்பிச் சென்றார். ஆனால், குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது அவர் படுகொலை செய்யப்பட்டார், இதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இப்போது நடப்பவை அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவையே. நாங்கள் தவறேதும் செய்யவில்லை. எங்கள் மனசாட்சி தெளிவாக இருக்கிறது. எங்கள் அமைச்சர்கள் பதவி விலகச் சரியான காரணம் ஏதுமில்லை. நாங்கள் மக்களிடம் செல்வோம். மக்களே முடிவு செய்யட்டும்" என்று தெரிவித்திருந்தேன்.

21.11.1997 அன்று நான் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும், சென்னை விமான நிலையத்திலேயே செய்தியாளர்கள் என்னைச் சந்தித்தார்கள். முதல் கேள்வியே, "ஐக்கிய முன்னணியிலே உள்ள அருணாசலப் பிரதேசத்திற்குப் பாதுகாப்புப் பணி குறித்துப் பயணம் மேற்கொண்டார் என்.வி.என். சோமு கட்சிகள் - ஏறத்தாழ எல்லாக் கட்சிகளும் தங்களுடைய ஒற்றுமையைத் தெரிவிக்கும் கலைஞர் என்.வி.என். சோமு உடலுக்கு பேராசிரியர் அஞ்சலி செலுத்தினார்.

வகையிலே தி.மு.கழகத்தை ஐக்கிய முன்னணியிலிருந்து விலக்க மாட்டோம் என்பதில் உறுதியைத் தெரிவித்திருக்கிறார்களே?" என்பதுதான். நான் இதற்கு அளித்த பதிலில்- "ஏறத்தாழ என்பது சரியல்ல. ஐக்கிய முன்னணியிலே உள்ள எல்லாக் கட்சிகளும் ஒருமனதாக ஒரு முடிவு எடுத்துள்ள காரணத்தால், அந்த முன்னணியில் தி.மு.கழகம் இடம் பெற்றிருப்பதற்கு நான் பெருமையடைகிறேன். அதைப் போலவே ஐக்கிய முன்னணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் பெருமை அடைகின்றது.

இப்போது உருவான ஒற்றுமையும், உறுதிப்பாடும் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று கூறினேன். 21.11.1997 அன்று நடைபெற்ற ஐக்கிய முன்னணியின் மையக்குழு "ஐக்கிய முன்னணி அரசிலிருந்து தி.மு.கழகத்தை நீக்க வேண்டுமென்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று ஒருமனதாக முடிவு செய்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த தேவகவுடா அவர்களிடம் செய்தியாளர்கள் அணுகியபோது. "ஐக்கிய முன்னணி, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தி.மு.கழகத்தை வெளியேற்றும் கேள்வியே எழவில்லை" என்று தெரிவித்தார். அருகேயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சதுராணன் மிஸ்ரா அவர்கள், "எது வந்தாலும், நாங்கள் தி.மு.க.வைக் கைவிட மாட்டோம்" என்று கூறினார்.

ஜெயபால் ரெட்டி அவர்கள், "ஜெயின்

கமிஷன் அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் உடனடியாகத் தி.மு.க. பற்றி குறை கூறுவது முறையல்ல" என்றார். ஜெயின் கமிஷன் அறிக்கையை முழுமையாகப் படிக்காமல், உடனடியாகத் தி.மு.க. பற்றி குறை கூறுவது முறையல்ல" என்றார். மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி கர்நாடக முதல்வராக இருந்த ஜே.எச்.பட்டேல் , "அரசைக் காப்பதற்காக தி.மு.கழகத்தைக் கைவிட முடியாதென்று ஐக்கிய முன்னணி முடிவு செய்துள்ளது" என்றார்.

22.11.1997 அன்று இந்தப் பிரச்சினை குறித்து "தினமணி" உள்ளிட்ட ஏடுகள் எழுதிய தலையங்கம் உண்மை நிலைமைகளை விளக்குவதாக இருந்தது. அதில் ஒரு பகுதி மட்டும் இதோ:- ★ "ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையில் தி.மு.க.வுக்கு எதிராகக் கூறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், அக்கட்சியை மத்திய அரசிலிருந்து விலக்கும்படி காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஐக்கிய முன்னணி நிராகரித்து விட்டது. ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது மன நிறைவளிக்கும் என்பது நிச்சயம்.

★ "பாதுகாப்பு அம்சத்தில் உள்ள குறைபாடுகளையே ஜெயின் கமிஷன் சுட்டிக் காட்டியுள்ளதே தவிர, சதி அம்சம் குறித்து எதுவுமே அந்த அறிக்கையில் இல்லை. எனவே தி.மு.க.மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவுக்கு அதில் எதுவுமே தெளிவாக இல்லை என்ற அரசின் வாதம் சரியானதே" "இந்தியன் எக்ஸ்பிரஸ்" அதே நாளில் எழுதிய தலையங்கத்தில்- "கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு அரசியல்வாதிகள் ஆதாரமின்றி பகிரங்கமாகச் சொல்லி வந்த குற்றச் சாட்டுகளைவிட நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையில் பெரிதாக ஏதுமில்லை.

பல கலைஞர் "அரசைக் காப்பாற்றிக் கொள்ள, தி.மு.கழகத்தைக் கைவிட முடியாது" என்று கர்நாடக முதல்வராக இருந்த ஜெ.எச்.பட்டேல் கூறினார். கோடி ரூபாய் செலவும், ஆண்டுக் கணக்கில் நடந்த விசாரணையும் 17 தொகுதிகளை நிறைக்கும் அளவுக்கு வார்த்தைகளைத் திரட்டித் தந்துள்ளன. ஆனால் அவற்றில் தெளிவும் இல்லை- நியாயமும் இல்லை என்பது அவமானகரமானதாகும். 1991மே மாதத்தில் ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றதற்குக் காரணமான முன் நிகழ்ச்சிகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை இந்தக் கமிஷன் மீண்டும் கட்டமைத்துச் சரியாகக் காட்டும் என்று இந்த நாடு பொறுமையுடன் காத்திருந்தது.

ஆனால், நாட்டுக்கு வழங்கப்பட்டது என்னவென்றால், மித மிஞ்சிய - பொறுப்பற்ற முறையிலான வார்த்தைகள் - தவறான வாதம் - அறிக்கையில் அனாவசியமாகச் சேர்க்கப்பட்ட மிகையான சொற்கள் - எல்லாம் இருந்த போதிலும் அதில் பெரும் ஓட்டைகளும் தெரிகின்றன. ★ "இதுவரை வெளியிடப்பட்ட ஜெயின் கமிஷன் அறிக்கையின் பகுதிகளில் குறைபாடுகள் அனைத்தும் இருக்கின்றன. அறிக்கையில் காணப்படும் கவனக் குறைவு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

மிகவும் பொறுப்பற்ற - எனவே மிகவும் அபாயகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதற்கு உதாரணம், "விடுதலைப்புலிகளுக்கும், தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் இடையிலான ஆழ்ந்த தொடர்பினை படுகொலையுடன் சம்பந்தப்படுத்தி," கோடிக்கணக்கான சாதாரண மக்களைச் சதிகாரர்களாக்கியிருப்பதாகும்."

என்று குறிப்பிட்டிருந்தது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்த் தலைவர் சகோதரர் கி.வீரமணி அவர்கள் அப்போது இந்தப் பிரச்சினை குறித்து கொடுத்த அறிக்கை முக்கியமான ஒன்றாகும். அந்த அறிக்கையில் முக்கியமாக, "நீதிபதி ஜெயின் இடைக்கால அறிக்கை தான் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் எந்தப் பரிந்துரைகளையும் சொல்லவில்லை. கமிஷனின் இறுதி அறிக்கையை இன்னும் மூன்று மாதத்தில் தாக்கல் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

ஜெயின் கமிஷன் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர், இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும்போது, இந்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அரசியல் ரீதியான காரணம்தான் இருக்க முடியும்."

"ஜெயின் தனது அறிக்கையில் உளவுத் துறையின் அறிக்கைகளைப் பின்பற்றிதான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். உளவுத்துறை அறிக்கை அவர்களுக்கு யார் தலைவராக இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தகுந்த மாதிரிதான் இருக்கும் என்றும் அவரே குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த அறிக்கை பத்திரிகைகளுக்குக் கிடைப்பதற்குக் காரணம், ஜெயின்தான் என்று உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவே குற்றம் சாட்டியிருப்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது."

"தி.மு.க.மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய எந்த ஆதாரமும் ஜெயின் கமிஷன் அறிக்கையில் இல்லை. இந்தக் கமிஷன் உண்மைகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கமிஷனே தவிர, இதுவே இறுதித் தீர்ப்பு கூறும் நீதிமன்றம் அல்ல. இந்த அறிக்கை ஏற்கப்படலாம் - ஏற்கப்படாமலும் போகலாம். தி.மு.க.மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றுதான் கருத வேண்டியுள்ளது" என்று அனைவருக்கும் புரியும் வகையில் நிலைமைகளை விளக்கியிருந்தார்."