உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அண்ணாவே வந்து
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அண்ணாவே வந்து · 338 / 391

26. அண்ணாவே வந்து வாழ்த்தியதுபோல! "நெஞ்சுக்கு நீதி" மூன்றாம் பாகம் வெளியீட்டு விழாவில், மூத்த காங்கிரஸ் தியாகி செங்கல்வராயன் என்னைப் பாராட்டியது, அண்ணாவே திரும்பி வந்து பாராட்டியதுபோல் இருந்தது. செ ப்டம்பர் 5- ஆசிரியர் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படும் நாள். அந்த நாள் இந்தியாவின் முதல் துணைத் குடியரசுத் தலைவராகவும் - இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் திறமையாகப் பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.

1997 ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுவதற்காக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதிலே நானும், கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியரும் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். 1989 - 90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டுதான் - சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வள்ளுவர் கோட்ட நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அந்த காலத்தில் அந்த வள்ளவர் கோட்டம் என்னுடைய முயற்சியால் கட்டப்பட்டது என்பதற்காகவே, எந்த விதமான பராமரிப்புமின்றி, கேள்வி கேட்பாரற்ற நிலையில் இருந்தது.

இன்னும் அதிலே வேதனை - அந்த வள்ளுவர் கோட்டம் அ.தி.மு.க. ஆட்சியிலே - வள்ளுவர் யாத்த முப்பாலில் மூன்றாவது பாலுக்குரிய இடமாகத்தான் செயல்பட்டது என்பதை நானல்ல - அந்தக் காலத்திய நடுநிலை கலைஞர் வார ஏடுகளே பல முறை புகைப் படங்களோடு வெளியிட்டன. ஆனால் 97 ஆம் ஆண்டு, வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு பெற்று புத்தொளியுடன் மாற்றப்பட்ட நிலையில்தான், நான் அந்த ஆசிரியர் தின நிகழ்ச்சியிலே கலந்து கொண்டேன்.

சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்றும். டாக்டர் ராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்ட அவர் தமிழகத்தில் திருத்தணியிலே பிறந்தவர். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவர் தனது இளமைக் காலத்தினை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில்தான் முதுகலைப் பட்டம் பெற்றார். மிகச் சிறந்த தத்துவஞானி. மேற்கத்திய நாடுகளின் தத்துவங்களுக்கும், கிழக்கத்திய நாடுகளின் தத்துவங்களுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர்.

அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றதும், அவரது மாணவர்கள் பலர் அவரைச் சந்தித்து, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியைக் கொண்டாட வேண்டுமென்று அனுமதி கேட்டனர். அதற்கு அவர், "என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைவிட, அந்த நாளை "ஆசிரியர் தினம்" என அறிவித்து, அதற்காக விழா எடுத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைவேன்" என்று கூறியதற்கிணங்க - அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி - ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1954 ஆம் ஆண்டு அவருக்கு "பாரதரத்னா" விருது வழங்கப்பட்டது. அவரது நினைவாகக் கொண்டாடப்படும் நாளில் 1996-97 வரை சிறந்த பணியாற்றிய சிறந்த பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களுக்கு "நல்லாசிரியர் விருதுகள்" ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலே வழங்கப்பட்டு வந்தது. 1997ஆம் ஆண்டு மேடையிலே நான் அமர்ந்திருந்தபோதுதான், எனக்கொரு யோசனை தோன்றியது. ஒரு சிலரைத் சிறந்த ஆசிரியருக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன்" விருது வழங்கினேன்.

தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "நல்லாசிரியர் விருது" வழங்குவதால், மற்ற ஆசிரியர்கள் எல்லாம் நல்ல ஆசிரியர் அல்லவா என்று கேட்கத் தோன்றுமே என எனக்கு நானே கேட்டுக் கொண்டு, அந்த ஆண்டு முதல் அந்த விருதுக்கு "நல்லாசிரியர் விருது" என்பதற்குப் பதிலாக "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" என்ற பெயரே இருக்கலாமென்று அறிவித்தேன். அந்த நடைமுறைதான் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகப் புகழ் பெற்ற "ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்" டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பெயரால் விருதுகளும், மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளும் வழங்கி வருவது இந்திய நாட்டிற்கும் - குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.

பொதுவாக ஆசிரியர்கள் என்றால் அவர்கள் ஏணிகளாகப் பயன்படக் கூடியவர்கள் என்று சொல்வார்கள். டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து, தன்னுடைய அறிவுத் திறனால், ஆற்றலால் உயர்ந்து, உயர்ந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராகவே உயர்ந்தவர் என்பதை எண்ணும்போது, ஆசிரியர்கள் ஏணிகளாக மட்டுமல்ல - கோபுரத்தின் சிகரங்களாகவும், கலசங்களாகவும் ஆகக்கூடும் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலைஞர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்குப் பரிசு வழங்கினேன்.

ஆவார்கள். அவர் ஏணியாக இருந்து பல மாணவர்களை ஊக்கப் படுத்தினார் - ஏற்றி விட்டார். பிறகு அந்த ஏணியே கலசமாக மாறி, இந்தியத் திருநாட்டின் கோபுரக் கலசமாக ஒளிவிட்டது. 1949ஆம் ஆண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் ரஷ்யாவின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அந்த அறிவிப்பு இந்தியாவிலும், ராதாகிருஷ்ணனை நன்கறிந்த பல்வேறு வெளிநாடுகளிலும் வியப்பாக பேசப்பட்டது. காரணம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மதம் தொடர்பான தத்துவங்களிலும், கருத்துமுதல் வாதத்திலும் ஆழ்ந்த நம்பிக்கையும் புலமையும் மிக்கவர்.

அப்படிப்பட்ட ஒருவர், பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யூனிஸ்ட் ரஷ்யாவிற்குத் தூதராக நியமிக்கப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் ரஷ்யாவிற்குச் சென்றதும், அப்போது ரஷ்யப் பிரதமராக இருந்த ஜோசப் ஸ்டாலின் அவர்களைச் சந்திக்க அழைக்கப்பட்டார். அவர்களது முதல் சந்திப்பே, மிகச்சிறப்பாக அமைந்தது. ஸ்டாலினைச் சந்தித்ததும், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,எங்கள் நாட்டிலும் ஒரு பேரரசர் இருந்தார், அவர் பெருமளவுக்கு ரத்தம் சிந்தப்பட்ட போருக்குப் பிறகு, இனி போரே வேண்டாம் என்று போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்.

நீங்களும் பலத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறீர்கள். எங்கள் பேரரசுக்கு நேர்ந்ததைப் போல உங்களுக்கும் நிகழலாம்." என்று கூறிட - அதற்கு ஜோசப் ஸ்டாலின், "நம்ப முடியாத நிகழ்ச்சிகள் சில நேரங்களில் வாழ்க்கையில் நடைபெறத்தான் செய்கின்றன. நானும் நான்கு ஆண்டுகள் மதம் தொடர்பான மடம் ஒன்றில் வேலை பார்த்தவன்" என்றார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மூன்றாண்டு காலம் ரஷ்யாவில் தூதராகப் பணியாற்றிவிட்டு, 1952இல் இந்தியாவிற்குத் திரும்புவதற்கு முன்பு - ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து விடை பெற நினைத்தார். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஸ்டாலினைச் சந்தித்து அவர் கன்னத்திலும், முகத்திலும் தட்டிக் கொடுத்தார். அப்போது உணர்ச்சி வயப்பட்ட ஸ்டாலின், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் "என்னை மனிதனாக நடத்திய முதல் மனிதர் நீங்கள்தான், மற்றவர்கள் எல்லாம் என்னை ஒரு ராட்சசனாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து செல்வது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். எனக்கு நீண்ட நாள் வாழ விருப்பமில்லை" என்று கூறினார். அதற்குப் பிறகு ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் இயற்கை எய்தினார். சோவியத் ரஷ்யாவிற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் பின் நாளில் ஏற்பட்ட நெருக்கமான உறவுக்கும், நட்புக்கும் அடித்தளமிட்டவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்தான்.

ராதாகிருஷ்ணன் பெயரால் அமைந்த அந்த விருதுகளை அந்த விழாவிலே வழங்கி, ஆசிரியர்களின் பெருமைகளைப் பற்றியும், கழக அரசு ஆசிரியர்களுக்கு எந்த அளவிற்குச் சலுகைகளை வழங்கியுள்ளது என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தேன். குறிப்பாக அந்த விழாவில் நான் பேசும்போது, என்னுடைய தலைமையில் அப்போது அமைந்திருந்த அமைச்சரவையில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் மட்டும் ஏழு பேர் என்றும் - அந்த அளவிற்கு எந்த அமைச்சரவையிலும் ஆசிரியர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டதோடு, கலைஞர் அவ்வாறு ஆசிரியர்களாக இருந்த ஏழு பேர் என்று பேராசிரியர்.

முனைவர் தமிழ்க் குடிமகன், முனைவர் பொன்முடி. தங்கப்பாண்டியன், முல்லைவேந்தன், சமயநல்லூர் செல்வராஜ், புலவர் செங்குட்டுவன் என்று பெயர்களை சொல்லியபோது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆசிரியப் பெருமக்கள் எல்லாம் தாங்களே அமைச்சர்களாக ஆனதைப்போல பெரிதும் மகிழ்ந்து அதனை வரவேற்றனர். செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஆசிரியர் தினத்தைச் சிறப்புடன் கொண்டாடிவிட்டு, செப்டம்பர் 15ஆம் தேதியன்று, வழக்கம்போல் அண்ணா அவர்களின் 89வது பிறந்த நாளினை சீரும் சிறப்புமாகத் தமிழகமெங்கும் கொண்டாடினோம்.

சென்னையில் நானும் பொதுச் செயலாளர் பேராசிரியரும்; மத்திய மாநில அமைச்சர்களும், கழக முன்னணியினரும் அண்ணா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். முன்னதாக, வள்ளுவர் கோட்ட வாயிலில் தென்சென்னை, வட சென்னை மாவட்ட தொண்டரணியினரும், மகளிர் தொண்டரணியினரும், வழங்கிய அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டேன். அணி வகுப்பையும் பார்வையிட்டேன். அதே மேடையில் கழகத் தொண்டரணியில் சிறப்பாகப் பணியாற்றிய அபுபக்கர், அந்தோணி சேசு, செல்வம் ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தேன்.

அதே நாளில், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்டு அப்போது 13 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட 384 புதிய வாகனங்களைத் தமிழகத்திலே உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் பயன்படுவதற்காக வழங்கினேன். அப்போது பேசும்போது- "இன்றைய தேதி செப்டம்பர் 15 - 384 ஒன்றியங்களுக்கும் வேன் வழங்கப்படுகிறது - 384 என்ற எண்கள் மூன்றையும் கூட்டினாலும் 15 தான் வரும் - அதுவே நல்ல பொருத்தம்!"

என்று கூறியது என் நினைவில் உள்ளது. அண்ணா பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். முப்பெரும் விழாவினை யொட்டி தி.மு.கழக மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, இளைஞர் அணி ஆகியவற்றின் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், மற்றும் கவியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முப்பெரும் விழாவில் அந்த ஆண்டு பேராசிரியர் நன்னன் அவர்களுக்குப் பெரியார் விருதும் , பெங்களூர் சோழன் அவர்களுக்கு அண்ணா விருதும் , புலவர் ஆடலரசு அவர்களுக்குக் கலைஞர் விருதும் வழங்கப்பட்டன.

தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப்பள்ளி தேர்வில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முரசொலி அறக்கட்டளை சார்பில் - பாவேந்தர் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிக்கும் விழா நடைபெற்றது. அன்றைய தினமே திராவிட மறுமலர்ச்சி மாமன்ற அஞ்சல் வழிக் கல்லூரிப் பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் நன்னன் அவர்கள் " திராவிட இயல் மாணவர் " என்ற பட்டம் பெறும் 77 மாணவர்களின் பெயர்களைப் படிக்க, அவர்களுக்கெல்லாம் நான் பட்டயம் வழங்கினேன். சென்னையில் அண்ணாவின் 89ஆவது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடி விட்டு - 17ஆம் தேதி தந்தை பெரியாரின் 119ஆவது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடுவதற்காக சேலம் மாநகருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அன்று காலையில் நானும், பேராசிரியரும், கலைஞர் ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரை முருகன் ஆகியோரும் சேலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

அதே நாளில் சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. அதனையொட்டி சேலம் மாநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. சேலம் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பெரியார் பல்கலைக் கழக அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. மேடையிலிருந்த என்னிடம் பல்கலைக் கழகப் பதிவுப் புத்தகத்தை நீட்டினார்கள். அதிலே நான், "இன்று பெரியார் பிறந்த நாள் - மனித சமுதாயத்திற்குச் சுயமரியாதை பிறந்த நாள் - இந்நன்னாளில் பெரியார் பல்கலைக் கழகம் சேலத்தில் தொடங்குவது பெரும் சிறப்பு" என்று எழுதினேன்.

பெரியார் பல்கலைக் கழகத் தொடக்க விழாவினையொட்டி, சேலம் மாநகரில் பள்ளி, கல்லுரி மாணவர்களும், பொது மக்களுமாக பல லட்சம் பேர் பங்கேற்ற எழுச்சிமிகு அணிவகுப்பு ஒன்றும் நடைபெற்றது. தனி மேடையில் இருந்து 3 மணி நேரத்திற்குமேல் நானும், அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி அவர்களும், பேராசிரியரும், மற்ற அமைச்சர்களும் பார்வையிட்டோம். 17ஆம் தேதி சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகத்தைத் திறந்து வைத்த நான், சென்னையில் 20ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தை அப்போது குடியரசுத் தலைவராக இருந்த மேதகு கே.ஆர்.நாராயணன் அவர்களை அழைத்து வந்து, ஆளுநர் முன்னிலையிலே தொடங்கி வைக்கச் செய்தேன்.

பல்கலைக் கழகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உரையை நான் நிகழ்த்தினேன். அந்த விழாவில் மத்திய தொழில் அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மன்மோகன் சிங் லிபரான், முப்பெரும் விழாவில் தொண்டரணி அணிவகுப்பைப் பார்வையிட்டேன். மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்த இராமகாந்த் டி. காலப் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடங்குவதற்கான சட்ட முன் வடிவு தமிழகச் சட்டப் பேரவையிலே நிறைவேற்றப்பட்டு - ஏறக்குறைய ஓராண்டு காலம் ஆகியும் மத்திய அரசின் அனுமதி கிடைக்காமல் இருந்த நிலையில் - அதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென்று நான்தான் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு 97ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் ஒரு கடிதம் எழுதினேன்.

அதனைத் தொடர்ந்துதான் மத்திய அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி அளித்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் 20ஆம் தேதியன்று பல்கலைக் கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த விழாவில் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர்.நாராயணன் அவர்கள் தனது உரையை இவ்வாறு தொடங்கினார்:- "குடியரசுத் தலைவர் என்ற முறையில் என்னை முதன் முறையாக சென்னைக்கு இந்தச் சிறப்பு வாய்ந்த சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் தொடக்க விழாவிற்கு அழைத்ததற்காக தமிழக அரசுக்கு - குறிப்பாக தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சட்டத் துறை பணிகளிலும், சட்டக்கல்வியிலும் தமிழ்நாடு மிகச் சிறப்பான சாதனைகளைப் பெற்றுள்ளது.

அது மாபெரும் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளது. இந்த வகையில் இந்தியாவிலே முதலாவது பல்கலைக் கழகமான கலைஞர் இந்தப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைக்கும் மகிழ்ச்சியை நான் இன்று பெற்றிருக்கிறேன்." "2000 ஆண்டுக்களுக்கு முன்பாக மனித குலத்துக்கு வழி காட்டி, நெறிகளை வகுத்துத் தந்த மாபெரும் புலவர் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் வகையில், நம்முடைய முதல்வர் அவர்கள் தானே வடிவமைத்து, உருவாக்கப்பட்ட இந்த மங்களகரமான - அற்புதமான -

பெரிய அளவிலான வளாகத்தில் இந்தத் தொடக்க விழா நடைபெறுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில்தான் சமூகப் புரட்சிக்கான முதல் குரல் கொடுக்கப்பட்டது. மாபெரும் தலைவர்கள் பெரியார், அண்ணாதுரை, காமராஜர், இப்போது கலைஞர் திரு.கருணாநிதி! இவர் சமூகப்புரட்சியின் பாரம்பரியத்தை நடைமுறை அரசியலிலும், அமைப்பு மற்றும் நிர்வாகத்துறைகளிலும்கூட கடைப்பிடித்து வருகிறார். இவரை நான் பாராட்ட விரும்புகிறேன்.

இவரும், இவருடைய சகாக்களும், தமிழ்நாடு அரசும் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் தொடங்குவது என்ற தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய முயற்சியை எடுத்ததற்காக நான்பாராட்டுகிறேன்." "இங்கேகுறிப்பிட்டதைப்போல இது ஒரு தனித்துவமான பல்கலைக் கழகம். இந்தியாவிலேயே இந்த வகையில் இதுதான் முதலாவது பல்கலைக் கழகம்."

- என்று குறிப்பிட்டார். டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகத் தொடக்க விழாவில், மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்த தம்பி முரசொலி மாறன் பேசும்போது "குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் வடிவில் நாங்கள் அம்பேத்கரைப் பார்க்கிறோம். சமூக நீதி பிறந்த இடம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே முதல் முறையாக துவக்கப்பட்டிருக்கிற ஒரு சட்டப் பல்கலைக் கழகத்தினை - அதுவும் அந்தச் சட்டப் பல்கலைக் கழகம் பாபா சாகிப் அம்பேத்கர் பெயரைத் தாங்கியுள்ள நிலையில் - குடியரசுத் தலைவர் திறந்து வைப்பது சாலப் பொருத்தமுடையதாகும்.

தமிழ்நாட்டிற்கு அவர்கள் வருகை தந்திருப்பதால் பெரியார் விருது மா. நன்னனுக்கும், அண்ணா விருது பெங்களூர் சோழனுக்கும், கலைஞர் விருது புலவர் ஆடலரசுவுக்கும் வழங்கப்பட்டது. நாங்கள் எல்லாம் வேறு யாரையும்விட பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால், தமிழ்நாட்டில் இருந்துதான் அவர் குடியரசுத் தலைவராக ஆக வேண்டும் என்கிற குரல் புறப்பட்டது. எனவே அந்த விதத்திலே மகிழ்ச்சி அடைகிறோம். அது மட்டுமல்ல - சமூக நீதி பிறந்த இடமே இந்தியாவிலேயே தமிழ்நாடுதான்" என்று குறிப்பிட்டார்.

அந்த விழாவில் நான் ஆற்றிய உரை வருமாறு - "இன்று ஓர் இனிய நாள். இதயமெலாம் பூரிக்கின்ற நாள். நீண்ட நெடுநாளைய கனவு நிறைவேறுகின்ற நாள். இந்த நாளை மேலும் சிறப்பிக்கின்ற வகையில் நம்முடைய குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். நான் அவரை தமிழக மக்களின் சார்பாக "வருக-வருக-வருக" வாயார - மனமார வரவேற்கிறேன். "நம் இந்தியாவினுடைய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று முதல் தடவையாகத் தமிழகத்திற்கு வந்துள்ள அவர்கள் இந்தியாவிலேயே முதன் முதலாகத் தொடங்கப்படுகின்ற - அண்ணல் அம்பேத்கர் பெயரால் தொடங்கப்படுகின்ற சட்டப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைப்பது மேலும் ஒரு சிறப்பு.

இந்தியாவிலே உள்ள மாபெரும் அரசியல் தலைவர்களில் பெரும் பொறுப்பில் இருந்தவர்கள் என்றில்லாமல், மக்கள் பாராட்டுகின்ற அரசியல் தலைவர்களில் இரண்டு நாராயணன்கள் என்னைக் கவர்ந்தவர்கள். ஒருவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். கலைஞர் மற்றொருவர் கே.ஆர்.நாராயணன் இந்த இரு நாராயண்களுமே ஏழையெளிய மக்கள்பால் அன்பு கொண்டவர்கள் - எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவர்கள். "மேதகு கே.ஆர். நாராயணன் அவர்கள் இந்தியாவிலேயே பெரிய மாளிகையான ராஷ்டிரபதி மாளிகையில் இன்றைக்கு வாழ்ந்தாலும்கூட - அவருடைய எண்ணம் எல்லாம் - அன்றைக்குச் சொல்வார்களே - கிரெம்ளின் மாளிகையிலே உலவினாலும், லெனினுடைய எண்ணம் எல்லாம் ஏழை எளிய மக்கள்பால்தான் இருக்குமென்று!

அதைப்போல இவருடைய எண்ணம் எல்லாம் இந்தியத் திருநாட்டிலே உள்ள சாதாரண - சாமான்ய - ஏழை எளிய - நடுத்தர - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களையே சுற்றி வருகின்ற எண்ணங்களாகும். அப்படிப்பட்ட பெருமைக்குரிய குடியரசுத் தலைவர் அவர்கள் இன்று வருகை தந்திருப்பது நமக்கெல்லாம் பெரும் மகிழ்வைத் தருகின்ற ஒன்றாகும். "அம்பேத்கருடைய கருத்துக்களோடு எங்களுக்கு உள்ள ஈடுபாட்டிற்குக் காரணமே எங்களை ஆளாக்கிய தந்தை பெரியார் அவர்களும், வழி நடத்தி வழிகாட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களும், எந்தக் கொள்கைகளை எங்களுக்குக் கற்றுத் தந்தார்களோ அதே கொள்கைகளை உடையவர் அம்பேத்கர் என்ற காரணத்தினால், எங்களுக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களிடத்திலே தணியாத ஆர்வமும், ஈடுபாடும் என்றென்றும் உண்டு."

- இவ்வாறு நான் உரையாற்றிய அந்தச் சட்டப் பல்கலைக் கழகத் துவக்க விழாவிற்காக வருகை தந்த குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாரதிய வித்யா பவனின் விருதுகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டார். பாரதிய வித்யா பவனின் புத்தகங்களை அவர் வெளியிட - அதனை நான் பெற்றுக் கொண்டேன். அந்த விழாவிலே ஆளுநர் செல்வி பாத்திமா பீவி அவர்களும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஊராட்சி ஒன்றியங்களுக்காக வாங்கப்பட்ட 384 வாகனங்களை அமைச்சர் கோ.சி.

மணியிடம் வழங்கினேன். ஆர்.வெங்கட்ராமன் அவர்களும், முன்னாள் ஆளுநர் சி.சுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்கள். குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை தந்துவிட்டுச் சென்ற அடுத்த வாரமே 28-9-1997 அன்று இரவு 11.50 மணி அளவில் இந்தியப் பிரதமராக இருந்த குஜ்ரால் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்தார். 29ஆம் தேதியன்று காலையில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோளைப் பார்ப்பதற்காக அவர் வருகை தந்தார்.

விமானம் நள்ளிரவில் வந்து சேர்ந்த போது நானும், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஜெயந்தி நடராசன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், மற்றும் தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்த போது - விமானத்திலிருந்து - இறங்கிய பிரமதர் குஜ்ரால் அவர்கள் "இந்த நள்ளிரவு நேரத்தில் நீங்கள் வர வேண்டுமா?"

என்று அன்புடன் கேட்டு, என்னை அணைத்துக் கொண்டார். பிரதமரின் வருகையைப் பயன்படுத்திக் கொண்டு, அன்றைய தினம் ஆளுநர் மாளிகையில், பிரதமரை மாலையில் 4 மணி முதல் 5 மணி வரை சந்தித்து தமிழகத்தின் தேவைகள் பலவற்றை எடுத்துக் கூறினேன். குறிப்பாக தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவ தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று அன்றைக்கே நான் பிரதமரிடம் பேசும்போது குரல் கொடுத்து, அப்போதே கலைஞர் அது ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளது.

காவேரி பிரச்சினையில் சட்டப் பூர்வ ஆணையம் அமைக்கும் திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென்றும் - மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மைய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு மத்திய அரசு செய்ய வேண்டுமென்றும் - மத்திய அரசின் ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசு அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கத் தேவையான நிதியை மாநில அரசுக்கு மானியமாக அளிக்க வேண்டுமென்றும் -மற்றும் பல கோரிக்கைகளையும் பிரதமரிடம் விளக்கினேன். ஆளுநர் மாளிகையில் பிரதமர் அவர்களை நான் சந்தித்த நேரத்தில், த.மா.கா.

தலைவர் மூப்பனார் அவர்களும் ஆளுநர் மாளிகையில்தான் இருந்தார். அவர் என்னை அங்கே சந்தித்தபோது, தமிழகத்தின் தேவைக்காக என்னென்ன தேவைகளை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன் என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியின் முடிவிற்கு மாறாக - அ.தி.மு.க.வுடன் உறவு கொள்ள மறுத்த மக்கள் தலைவர், அருமை நண்பர் மூப்பனார் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு காங்கிரசிலிருந்து பெரும்பான்மையோர் பிரிந்து, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி என்றதோர் கட்சியினை உருவாக்கி, தேர்தலில் தி.மு.கழகத்தோடு உறவு கொண்டு போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு - அப்போது மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த மூப்பனார், பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாக இருந்தது.

அவர்கள் மூவர் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனை உறுப்பினர் சஞ்சய் நிருபம் மாநிலங்களவையில் ஒரு மனு கொடுத்திருந்தார். பெரியார் பல்கலைக் கழகத்தைத் திறந்து வைத்தேன் அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டும் வகையில், மாநிலங்களவையிலிருந்து மூவரும் ராஜினாமா செய்யலாமா என்று யோசித்து 9-9-1997 அன்று தங்கள் பதவி விலகல் கடிதங்கள் அப்போது மாநிலங்களவைத் தலைவராக இருந்த, குடியரசு துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த் அவர்களிடம் தாக்கல் செய்தனர்.

இதனால் மூன்று இடங்கள் காலியான நிலையில், இடைத் தேர்தல் வந்தால் அப்போது யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது தமிழகத்தில் பிரச்சினையாகப் பேசப்பட்டது. அப்போது தமிழகச் சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 164 பேர். த.மா.கா. உறுப்பினர்களின் எண்ணிக்கை 39. அந்த நிலையில் தி.மு.க.வின் ஆதரவு இருந்தால் மட்டுமே குறைந்த பட்சம் ஓர் இடத்தையாவது த.மா.கா. பெற முடியும். த.மா.கா. உறுப்பினர்கள் பதவி விலகி காலியான இடங்கள் என்பதால், தி.மு.க அந்தக் கட்சிக்கு ஓர் இடமாவது விட்டுக் கொடுக்குமா?

அல்லது மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டு மென்று எண்ணினால், அப்போது பதவி விலகியவர்களின் கதி என்னவாகும்? என்றெல்லாம் ஏடுகள் விரிவாக எழுதித்தள்ளின. நிலைமை இவ்வாறிருந்தபோது, சென்னையில் என்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் "மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு தி.மு.க. ஆதரவளிக்கும் - அதற்கான தேர்தல் நடக்கும்போது, ஆதரவு கேட்பது அவர்களது உரிமை - ஆதரவு தருவது தி.மு.க.வின் கடமை!"

என்று நானே பெருந்தன்மையாகக் கூறினேன். கலைஞர் தி.மு.க., அந்தத் தேர்தலில் தனக்குக் கிடைக்கக்கூடிய மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்தை விட்டுக் கொடுக்காது - தி.மு.க.விற்கும் த.மா.கா.விற்கும் இடையே உறவு முறிவு ஏற்படும் - என்றெல்லாம் நப்பாசையோடு செயல்பட்ட ஒரு சில கட்சிகள் அந்த என்னுடைய அறிவிப்பின் காரணமாக மலைத்துப் போயின. அவர்கள் மூன்று பேரும் மாநிலங்களவையிலிருந்து ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட காலி இடங்களுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி நடைபெறுமென்று அறிவிப்பு வெளிவந்தது.

காங்கிரஸ் கட்சி தி.மு.கழகத்திடம் ஆதரவு கோரி வேண்டுகோள் எதுவும் விடுக்காத நிலையில், தி.மு.கழகத்தின் சார்பில் நான், "மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவைக் கேட்பது அவர்களது உரிமை, அதனைக் கொடுப்பது எங்கள் கடமை" - என்று அறிவித்த பின்னர், மூப்பனார் அதற்காக தனது நன்றியை செய்தியாளர்களிடம் தெரிவித்துக் கொண்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. சோ.பாலகிருஷ்ணன் அளித்த ஒரு பேட்டியில் "மாநிலங்களவை இடைத் தேர்தலில் மூன்று இடங்களையும் நினைத்திருந்தால் தி.மு.கழகமே எடுத்துக் கொண்டிருக்கலாம் - ஆனால் த.மா.கா.விற்குக் கொடுத்து விட்டனர்.

த.மா.காவை எந்த அளவிற்குத் தி.மு.க. மதிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்று கூறினார். 1997ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி காலையில் தலைமைச் செயலகத்தில், மத்திய அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பதவி விலகிய பீட்டர் அல்போன்ஸ்சும் என்னைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று, மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் மூன்று இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்குப் பதிலாக இரண்டு இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை த.மா.கா.

தாக்கல் செய்தது. மூப்பனார் பதவி விலகிய இடத்தில் அவர் மீண்டும் நிற்பதற்கான வேட்பு மனு முதலில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் மூப்பனார் மீண்டும் நிற்காமல், அவரது இடத்தில் அப்துல் காதர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மூவரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கடுத்த வாரம், அதாவது 8-10-1997 அன்று நான் எழுதிய "நெஞ்சுக்கு நீதி" மூன்றாம் பாகத்தின் முதல் பதிப்பும் - இரண்டாம் பாகத்தின் மூன்றாம் பதிப்பும்- முதல் பாகத்தின் ஐந்தாம் பதிப்பும் மற்றும் எனது உரைகள் அடங்கிய "வழி மேல் விழி வைத்து" என்ற நூலும் சென்னையில் பேராசிரியர் தலைமையில் வெளியிடப்பட்டன.

நூல்களின் முதல் பிரதியை சுதந்திரப் போராட தியாகி செங்கல்வராயன் அவர்கள் பெற்றுக் கொண்டார். துரை முருகன் வரவேற்புரையாற்றினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், கவிக்கோ அப்துல் ரகுமான், ஆசிரியர் சாவி , முன்னாள் துணை வேந்தர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக நான் ஏற்புரையாற்றினேன். அப்போது நான் பேசும்போது, அந்த மூன்றாம் பாகத்தின் முடிவில் "நான்காம் பாகத்தை எழுதுவேன் என்ற நம்பிக்கை இல்லாமல் அதை எழுதுகின்ற சூழ்நிலையை இயற்கைக்கே விட்டு விடுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் அதன் பின்னர் நான்காம் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தைத் திறந்து வைக்க வந்த குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனை மூப்பனாரும், முரசொலி மாறனும் வரவேற்றனர். கலைஞர் கே.ஆர்.நாராயணன் நட்புணர்வுடன் என்னைத் தழுவினார். பாகத்தை நானே எழுதி முடித்து, அதன் வெளியீட்டு விழாவும் நடைபெற்று முடிந்து - தற்போது ஐந்தாவது பாகத்தையும் தொடர்ந்து எழுதி வருகின்றேன். மூன்றாம் பாகத்தின் வெளியீட்டு விழாவில், அண்ணாவின் நெருங்கிய நண்பரும், உண்மையான தியாகியும், கேட்கக் கேட்க இனிக்கும் விதத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசக் கூடிய பேச்சாளருமான பெரியவர் செங்கல்வராயன் அவர்கள் பேசியது இத்தொடரில் இடம் பெற்றாக வேண்டிய பேச்சாகும்.

அது - "இந்த இனிய விழாவில் இந்த முதல் நூலினைப் பெறும் வாய்ப்பினை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பெருமையை எப்படித் தாங்க முடியுமென்று நான் எண்ணிப் பார்த்தபோது, ஒரே ஒரு தகுதிதான் எனக்கு இருக்கிறதென்று தெரியவந்தது. அது என்னவென்றால், டாக்டர் கலைஞர் அவர்களின் மீது நான் கொண்டிருக்கின்ற மதிப்பும், மரியாதையும், அன்பும், பாசமும் தான்."

"டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும் என்றால், ஒன்றைத்தான் உங்களுக்குச் சொல்ல முடியும். அறுபத்தி ஐந்தாண்டு கால என்னுடைய அரசியல் வாழ்வில் நான் கண்ட அரசியல் தலைவர்களில் மிகப் பெரிய தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள். கலைஞரைப் பற்றி என்னுடைய ஆத்ம நண்பர் பேரறிஞர் அண்ணா அடிக்கடி என்னிடத்திலே சொல்வதுண்டு, "கலைஞர் கொள்கைப் பிடிப்பாளர் - எதையும் திறமையாகச் செய்யக் கூடியவர் - "இந்த நள்ளிரவில் நீங்களும் வரவேண்டுமா?"

என்று கேட்டார், பிரதமர் குஜ்ரால் மக்கள் சேவையே தொண்டு என்று நினைக்கக் கூடியவர்" என்று கூறினார். அதெல்லாம் கலைஞரின் வாழ்க்கையில் எவ்வளவு உண்மையாக இருந்து வருகின்றதென்பதை கண்டு வருகிறேன்." "கலைஞர் அவர்கள் பெரியார் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்து, அண்ணா தலைமையில் தொண

்டாற்றி, சிறந்த முறையில் ஒரு அரசியல் பாதை வகுத்துக் கொண்டவர். கலைஞர் அவர்களின் துடிப்பு, திறமை அனைத்தையும் ஒன்று சேர்த்து தனக்கென்று வாழாமல் பொது மக்களின் முன்னேற்றத்திற்காக - தமிழ்நாட்டின் நல்வாழ்விற்காக அவர் எடுத்துச் செய்யும் மகத்தான காரியங்களைப் பார்க்கும்போது நான் மிகவும் பூரிப்படைந்து வருகிறேன்."

"கலைஞர் அவர்கள் தனது வாழ்க்கையில் எவ்வளவு அடர்ந்த காடுகளைக் கடந்தார்? எவ்வளவு குன்றுகளில் ஏறி இறங்கினார்?காயும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் அவர் எப்படி தன்னுடைய அரசியல் பாதையைக் கடந்தார் என்பதைப் பார்க்கும்போது, அந்த வரலாற்றுப் பெருமை சிலருக்குத்தான் கிடைக்கும்."

"அரசியல்வாதிகளுக்கு போராட்டங்கள் வருவதுண்டு - ஆனால் கலைஞர் அவர்களுக்கோ அவரது வாழ்க்கையே போராட்டமாக அமைந்தது. வேறு எந்த அரசியல்வாதிகளிடமும் அவர் துவண்டு விட்டாரா என்றால், இல்லை. கலைஞர் ஒரு பக்கம் கட்சியைக் கட்டிக் காத்து - இன்னொரு பக்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று - மற்றொரு பக்கம் நிர்வாகத்தைத் திறமையாக நடத்தி -தேசிய அளவில் மேலான கலைஞர் யோசனைகளைச் சொல்லி வரும் வேலைகளுக்கிடையே இந்த நூலையும் எழுதினாரே, இதை எப்படித்தான் எழுதினாரோ என்று வியந்தேன்.

"நெஞ்சுக்கு நீதி" மூன்றாம் பதிப்பைப் பேராசிரியர் வெளியிட தியாகி செங்கல்வராயன் பெற்றுக் கொண்டார். "சரித்திரம் எழுதுகின்றவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சரித்திரத்தைப் படைத்த சிலரில் கலைஞர் முன்னணியில் இருக்கின்றார் என்று நூலின் மூலமாகத் தெரிகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் மிகச் சிறந்த - போற்றுதலுக்குரிய தலைவர் ஒருவரைப் பார்க்க முடியுமென்றால் அது என் ஆத்ம நண்பர் கலைஞர் அவர்கள்தான்."

அண்ணாவின் சிந்தைக்கினிய நண்பர் செங்கல்வராயன் அவர்களின் வாழ்த்து, என்னை அண்ணாவே மீண்டும் வந்து வாழ்த்தியது போல் இருந்தது!