உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/தங்கமான தம்பி பாண்டியன்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

தங்கமான தம்பி பாண்டியன் · 336 / 391

24. தங்கமான தம்பி பாண்டியன் மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகத்தை நிறுவியது நமது கழக அரசு மனோன்மணியம் சுந்தரனார் நினைவு நூற்றாண்டு விழா - மறைமலை அடிகளார் குடும்பத்தாருக்குப் பரிவுத்தொகை வழங்கும் விழா - தேவநேயப் பாவாணர் தொகுத்த அகரமுதலி மூன்றாம் தொகுதி வெளியீட்டு விழா - ஆகிய மூன்று விழாக்களும் இணைந்து 4.8.1997 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் தலைமையில் நடைபெற்றது.

அகரமுதலி மூன்றாம் தொகுதியை நான் வெளியிட, கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் பெற்றுக்கொண்டார். விழா நாயகர்கள் மூவரில் இருவரிடத்திலே நான் நெருங்கிப் பழகியவன். மறைமலை அடிகளாரை நன்கு உணர்ந்தவன். மறைமலை அடிகளாருடைய சிலையை நாகப்பட்டினத்தில் திறந்து வைத்த பெருமையும் எனக்குண்டு. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் அவர். அவர் மேடைகளிலே ஆற்றிய பல உரைகளை பல முறை நான் கேட்டிருக்கிறேன். பெண் குரல் - ஆனால் அது சிங்கமாகச் சீறுகின்ற குரலாக இருக்கும்.

தமிழுக்கு ஒரு இன்னல் என்றால், அந்தக் குரல் எவ்வளவு வலிவோடு ஒலிக்கும் என்பதை நான் பல நேரங்களிலே கேட்டிருக்கிறேன். அந்தத் தோற்றத்தின் கம்பீரத்தையும் கண்டிருக்கிறேன். அவருடைய நினைவைப் போற்றும் வகையில் பல இடங்களுக்கு அவருடைய பெயர்களை நான் சூட்டியிருக்கிறேன். "மர்மலாங் பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்ட அந்த பாலத்தின் பெயரை, "மறைமலை அடிகள் பாலம்" என்று மாற்றி அமைக்கப்பட்டது கழக ஆட்சியிலேதான்.

"மறைமலை நகர்" என்ற பெயர் - பேராசிரியர் அவர்கள் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் என்ற அந்தத் துறையின் பொறுப்பிலே இருந்த காலத்தில், அவரும் நானும் கலந்து பேசி வைத்தப் பெயராகும். தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் புகழப்படுவர் மறைமலை அடிகளார். அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்குவது குறித்து நிதி நிலை அறிக்கையில் அந்த ஆண்டு, "நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலாவாக தமிழ் வானில் ஒளி விட்டவரும்.

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சீறியெழுந்த செந்நாப் புலவருமான செந்தமிழ் வித்தகர் - இனமான ஏந்தல் தமிழறிஞர் மறைமலை அடிகளார் - அவர்கள் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கவும் - அவரது குடும்பத்தினருக்குக் காப்பு நிதி வழங்கவும், ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்திருந்தேன்.

சேலம் மாநாட்டிலிருந்து திரும்பியதும், அந்த அறிவிப்பின்படி மறைமலை அடிகளாரின் வாரிசுகளாக இருந்த 11 பேருக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் காப்பு நிதியை வழங்கிட ஆணை பிறப்பித்தேன். மனோன்மணியம் சுந்தரனார் அவர்களைப்பற்றி நினைக்கும்போது - பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு காலத்திலே அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே ஆற்றிய பேருரையின் தலைப்புதான் என் நினைவிற்கு வரும். "ஆற்றோரம்" என்ற தலைப்பிலே அண்ணா உரையாற்றினார்.

அந்தத் தலைப்பிலே பேசும் போது அண்ணா அவர்கள், "வின்சென்ட் ஸ்மித் இந்தியாவின் வரலாறு கங்கைக் கரையிலேயிருந்து எழுதப்பட்டிருக்கக்கூடாது - காவேரி ஆற்றங்கரையிலிலேயிருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும்" என்று சொன்னதையும் - அதையேற்று மனோன்மணியம் சுந்தரனார் எழுதியதையும் எடுத்துக்காட்டி பேசிய உரை வரலாற்றுப் புகழ்மிக்க உரையாகும்.

கலைஞர் அந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலேயே ஒரு பல்கலைக் கழகத்தை தி.மு. கழக ஆட்சியிலே நெல்லை மாவட்டத்திலே நிறுவியதையெல்லாம். கலைவாணர் அரங்கிலே நடைபெற்ற அந்த விழாவிலே நான் எடுத்துக்காட்டி உரையாற்றினேன். சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதிய மனோன்மணியம் கதாபாத்திரங்கள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை. அதிலே ஜீவகன் என்று ஒரு கதாபாத்திரம் - அவன் பாண்டிய மன்னன். புருஷோத்தமன், என்று ஒரு கதாபாத்திரம் - அவன் சேர மன்னன்.

ஜீவகனுடைய ஆட்சியைக் கவிழ்த்து, தன் ஆட்சியைக்கொண்டு வருவதற்காக குடிலன் என்பவன் சூழ்ச்சி செய்கிறான். சேரனுக்கும், பாண்டியனுக்கும் - அதாவது புருஷோத்தமனுக்கும் ஜீவகனுக்கும் இடையிலே போர் நடைபெறுகிறது. அந்தப் போரில் புருஷோத்தமன் வெற்றி வாகை சூடக்கூடிய சூழ்நிலை. அப்போது ஜீவகன் ஒரு குகையிலே தங்கி, அங்கிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில்: குடிலன் தன்னுடைய வஞ்சக சூழ்ச்சியினால் மன்னனை ஏமாற்றி, அவனுக்குத் தெரியாமல் அமைத்த குகை வழிப்பாதை ஒன்றின் வழியாக வெளியே சென்று, பகை மன்னனான புருஷோத்தமனைச் சந்தித்து - "இந்த வழியாக நீ வந்தால், உடனடியாக ஜீவகனைப் பிடித்துவிடலாம், கைது செய்துவிடலாம், எனவே என்னோடு வா" மனோன்மணியம் சுந்தரனார் உருவாக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை!

என்று அந்த ரகசிய வழியைக் காட்டுகிறான். எதிரி நாட்டு மன்னன் உடனடியாகக் குடிலனைப் பாராட்டிவிட்டு, அந்த வழியாகச் சென்று ஜீவகனைக் கைது செய்து வெற்றிக் கொடியை பறை சாற்றுவான் என்றுதான் அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை படைத்த அந்தப் புருஷோத்தமனுடைய பாத்திரம் அவ்வாறு செயல்படவில்லை. வேறு என்ன செய்தான் தெரியுமா? குடிலன் தன்னை அணுகி, அவ்வாறு குகைப் பாதை பற்றி விவரங்களைச் சொன்னதும் - தன்னுடைய வீரர்களைக் கைதட்டி அழைத்து, "துரோகி குடிலனை உடனடியாகக் கைது செய்யுங்கள்" என்று கூறுகிறான்.

குடிலன் அசந்துப்போய், "என்ன மன்னா? உனக்கு உதவி செய்வதற்காக வந்த என்னைக் கைது செய்யச் சொல்கிறாயே, இது நியாயமா?" என்று கேட்கிறான். அப்போது மன்னன் புருஷோத்தமன் சொல்கிறான்: "உன்னை நம்பி உன்னைத் தளபதியாக வைத்திருந்த ஜீவகனுக்குக் கஷ்டம் வந்த நேரத்தில் அவனுக்குத் துரோகம் செய்துவிட்டு, என்னிடம் வந்திருக்கின்ற நீ - எனக்குத் துரோகம் செய்ய எவ்வளவு நாளாகும்? நான் எப்போதும் துரோகிகளை ஆதரிக்க மாட்டேன்" என்று கூறுவதாக மனோன்மணியத்தில் சுந்தரம் பிள்ளை எழுதியிருப்பார்.

அப்படிப்பட்ட கதாபாத்திரத்தைப் படைத்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதியது தான் "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்" என்று தொடங்கும் பாடல். அந்தப் பாடல்தான் இன்று தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக முழுதும் பாடப்படுகிறது. அந்தப் பாடலை நான் தேர்ந்தெடுத்து, என்னுடைய அருமை நண்பர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் அவர்களிடம் கொடுத்து, இதற்கான மெட்டினை அமைத்துத் தர வேண்டுமென்று கூறினேன்.

அவர் ஐந்து மெட்டுக்களில் இந்தப் பாட்டை கலைஞர் மறைமலை அடிகளாரின் வாரிசுகளுக்கு பரிவுத் தொகை ரூ. 20 இலட்சத்தை, 30 இலட்சமாக உயர்த்தி வழங்கினேன். அமைத்து - டி.எம். சவுந்தர ராசன், பி. சுசீலா ஆகியோரைக்கொண்டு பாடச் செய்து - அதைக் கொண்டு வந்து என்னிடம் காட்டியபோது, தற்போது பாடப் படும் மெட்டினையும் நான்தான் தேர்ந்தெடுத்து, அதுதான் இன்றளவும் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடப்படுகிறது. அது பற்றிக்கூட பலமுறை மெல்லிசை மன்னர் கொடுத்த பேட்டியிலே, அவருக்குப் பிறகும் அவர் மெட்டமைத்த இந்தத் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தமிழகம் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

அவருக்கு எப்படி அந்தப் புகழ் அவருக்குப் பின்னரும் இருந்துக்கொண்டிருக்குமோ - அதுபோலவே அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்த என்னுடைய பெயரும் - எனக்குப் பின்னரும் இந்தத் தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கும்வரையில் நிலைத்திருக்கும். அந்தப் பாடலை எழுதிய சுந்தரம் பிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழாவினையும், மறைமலை அடிகளாரின் விழாவினையும் இணைத்துத் தான் அன்று விழா நடைபெற்றது. மறைமலை அடிகளின் நூல்களையெல்லாம் நாட்டுடைமை ஆக்கியபோது அதற்குப் பரிவுத் தொகையாக இருபது இலட்ச ரூபாய் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என்று ஏற்கனவே நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருந்ததை மாற்றி - அந்தக் குடும்பத்தினரின் வாரிசுகள் அதிகம்பேர் - என்று பிறகு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் - பரிவுத் தொகை இருபது இலட்சம் ரூபாயை, முப்பது இலட்சம் ரூபாயாக உயர்த்தி அந்த விழாவிலே அறிவித்தேன்.

அகர முதலி மூன்றாம் தொகுதியை நான் வெளியிட, பேராசிரியர் அதைப் பெற்றுக்கொண்டார். மேலும் மறைமலை அடிகளாரின் நூலகத்திற்கு 1970 ஆம் ஆண்டு முதல் அதுவரை வழங்கப்பட்டு வந்த பத்தாயிரம் ரூபாய் உதவித் தொகையை 1997 ஆம் ஆண்டு முதல் ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தேன். ★ ★ ★ இதற்கிடையே, வணிக வரித்துறை அமைச்சரும் - விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் - என்னுடைய அன்பு உடன்பிறப்புக்களில் ஒருவருமான - பழகுதற்கு இனிய தம்பி வே.

தங்கபாண்டியன் அவர்கள், 31.7.1997 அன்று திடீரென மாரடைப்பின் காரணமாக இயற்கை அடைந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தொடர்ந்து அமைதிக் குறைவு ஏற்பட்டதையொட்டி, அமைச்சர் தங்கபாண்டியன் அமைதியை நிலைநாட்டுவதற்காக சொந்த மாவட்டம் என்ற முறையில் அங்கே சென்றிருந்தார். அங்கே எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருடனும் - மற்றும் அதிகாரிகளுடனும் ஆலோசித்து அமைதியை நிலைநாட்டுவதற்கான பணிகளை அங்கேயே தங்கியிருந்து தங்க பாண்டியன் நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விரைந்து வந்து அமைச்சருக்குச் சிகிச்சை அளித்தனர். தங்கபாண்டியனுக்கு உடல் நலம் சரியில்லை என்றதுமே எனக்குத் தொலை பேசி வாயிலாக உடனடியாகத் தகவல் தெரிவித்தார்கள். நான் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த ஆர்க்காடு வீராசாமியிடம் கூறி, மதுரையிலிருந்து கலைஞர் மருத்துவ நிபுணர்களையெல்லாம் விரைந்து ராஜபாளையம் செல்லுமாறு ஏற்பாடுகளைச் செய்தேன்.

என்ன செய்து என்ன? என் அன்புத் தம்பி - புன்னகை மாறாத முகத்துக்குச் சொந்தக்காரர் - என்னையும், அவனது குடும்பத்தினரையும் கண்ணீர்க் கடலிலே தள்ளிவிட்டு மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார். இப்போதிருக்கும் விருதுநகர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், ராமனாதபுரம் மாவட்டம் - ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒன்றாக முகவை மாவட்டம் என்ற பெயரில் இருந்தபோதே - அந்தப் பெரிய மாவட்டத்தின் கழகச் செயலாளராகத் திறம்படப் பணியாற்றியவர் தங்கபாண்டியன்.

1974 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மாவட்டக் கழகச் செயலாளராக இருந்துவந்து அவர், தென்பாண்டி மண்டலத்தில் கழகத்தை வளர்த்த முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். பின்னர் அந்த மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு, விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி, 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கழகத் தேர்தலிலும் விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தங்க பாண்டியன். 1968 ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டுவரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

தனது வாழ்வில் தொடக்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துக்கொண்டு சிறை சென்ற பெருமைக்கு உரியவர். நெருக்கடி நேரத்தில் மிசா கைதியாகவும் ஓராண்டு காலம் சிறையிலே இருந்தவர். தொடர்ந்து 23 ஆண்டு ஆண்டு காலம் மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றியவர் தங்கபாண்டியன். கழகம் சோதனைகளைச் சந்தித்த நேரத்தில், மனம் தளராது, சலனத்திற்கோ, சபலத்திற்கோ இடம் தராமல், இரும்பு இதயத்துடன் நின்று இயக்கத்தைக் காத்து என் பேரன்பிற்குப் பாத்திரமானவர்.

காரியாபட்டி ஒன்றிய பெருந்தலைவராகவும் - மல்லாங்கிணறு பேரூராட்சி மன்றத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றிய தங்கபாண்டியன் 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள் கழக அரசு பொறுப்பேற்ற நேரத்தில், எனது தலைமையிலான அமைச்சரவையில் கூட்டுறவுத் கூட்டுறவுத்துறை அமைச்சராகத் தங்கபாண்டியன் பதவியேற்றார்.

பின்னர் வணிக வரித்துறை பொறுப்பு அவரிடம் தரப்பட்டது. அவரது மறைவுச் செய்தியறிந்த நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமியையும், துரைமுருகனையும் அழைத்துக்கொண்டு அந்த மாவீரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மல்லாங்கிணறு புறப்பட்டேன். ஆம், புறப்படுவதற்கு முன்பு - நான் என் கைப்பட எழுதிக்கொடுத்த கண்ணீர் அஞ்சலி இதோ:- "என்னால் நம்பவே முடியவில்லை - என் தம்பி தங்கபாண்டியன் மறைந்து விட்டாராம்!

அந்த இனிய முகம் - எதிரிகளிடமும் கனிவைப் பொழியும் அந்தக் கள்ளம் கபடமற்ற புன்னகை - என்னை "அண்ணே" என்றழைக்கும்போது பொங்கும் பாசம் - இத்தனைக்கும் மேலாக அந்தத் தம்பிக்கு இருந்த கொள்கை உறுதி - இலட்சிய உணர்வு - தியாக மனப்பான்மை - என் குடும்பத்தில் ஒருவராக ஒன்றிவிட்ட பாங்கு - இவற்றை யெல்லாம் எப்படி மறக்க முடியும் என்னால்? விருதுநகர் மாவட்டச் செயலாளர் பணியேற்று வீரமிகு பாண்டியனாகவும், அமைச்சர் பொறுப்பில் பத்தரை மாற்றுத் தங்கமாகவும் திகழ்ந்த தங்கபாண்டியனை இழந்து தவிக்கும் எனக்கும், யாருக்கும் ஆறுதல் கூறும் சக்தியில்லை.

ஆற்றல்மிகு தளபதியின் இழப்பால் அதிர்ச்சியுற்று, மெல்ல மெல்ல மனத்தை ஆற்றிக் கொள்வோர், எனக்கும் ஆறுதல் கூறிட வேண்டுகிறேன். இனிய தம்பியின் மறைவால் வாடும் கலைஞர் சுதந்திரதினப் பொன்விழா பற்றி விவாதிக்க நடைபெற்ற உயர்மட்ட செயல்பாட்டுக் குழுக் கூட்டம் குடும்பம்; அவர் குடும்பம் மட்டுமல்ல - இந்தக் கழகக் குடும்பமே கண்ணீர்க் கடலில் மிதக்கிறது."

- என்று குறிப்பிட்டிருந்தேன். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்களே, அதைப்போல என் தம்பி தங்கபாண்டியன் மறைந்து விட்டாலும். இந்தக் கழகத்திற்காக தொடர்ந்து உழைத்திட தன் அன்புச் செல்வங்களை அர்ப்பணித்து, அவர் மகன் தங்கம் தென்னரசும், மகள் தமிழச்சியும் இப்போது கழகத்திலே முக்கிய பொறுப்புகளிலே இருந்து பணியாற்றி வருகிறார்கள். 1.8.1997 அன்று பகல் 12 மணி அளவில் நான் மல்லாங்கிணறு சென்றடைந்தேன்.

கழகத்தின் முன்னணியினர் அத்தனை பேரும், ஏன் - அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அங்கே குழுமியிருந்து அந்த மாவீரனுக்கு தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர். தங்கபாண்டியனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் நிலையிலே நானில்லை - காரணம் எனக்கே அதற்கு மற்றவர்கள் தேவைப்பட்டனர். அமைச்சர் என்ற முறையில் அரசு மரியாதையுடன், அவரது உடல் தேசியக் கொடி போர்த்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ★ ★ ★ தங்கபாண்டியனின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவிட்டு, சென்னை திரும்பியதும், 1997 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற ஐம்பதாண்டு என்ற வகையில் சுதந்திரத் திருநாள் பொன் விழாக் கொண்டாட்டங்கள், மற்றும் பொதுமக்களுக்கு நிலையான பயன்தரத்தக்க திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பா

க உயர்மட்டச் செயல்பாட்டுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு - அந்தக் குழுவின் கூட்டம் 4.8.1997 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதில் கலந்துக்கொண்டேன். என்னுடைய தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பேராசிரியர், கோ.சி. மணி, முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முல்லை வேந்தன், சமயநல்லூர் செல்வராஜ், தலைமைச் செயலாளர் கே.ஏ. நம்பியார், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான எஸ். நாராயணன், பி.வி.

ராஜா ராமன், எஸ்.பி. இளங்கோவன், கௌரிசங்கர் எஸ். மாலதி, வை. பழனிச்சாமி, கிறிஸ்துதாஸ் காந்தி, எஸ். இராஜரத்தினம், டி. சபிதா, வி.கே. ராஜகோபாலன், நந்த கிஷோர், அதுல்ய மிஸ்ரா, அஷோக்வர்தன் ஷெட்டி, ஆர். சிவகுமார், சுதந்திர தினப் பொன்விழாவையொட்டி சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினேன். கே.இராமலிங்கம், தெய்வமணி, கே.கே. ராஜசேகரன் நாயர், தேவராஜ் - ஆகியோர் கலந்துக்கொண்டனர். பொன் விழா ஆண்டினையொட்டி நடைபெறும் கொண்டாட்டங்களுடன் தமிழகத்தைப் பொறுத்தவரை மலைவாழ் மக்கள், ஆதிதிராவிட மக்கள், மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு நிரந்தரப் பயன்தரத்தக்க நிலையான பின்வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதென்று முடி வெடுக்கப்பட்டது.

சுதந்திரத் திருநாள் பொன்விழாவினையொட்டி ஆதிதிராவிட மக்கள் உட்பட அனைத்துச் சமூகத்தினரும் நல்லிணக்கத்தோடு சமத்துவமாக ஒரே குடியிருப்பில் ஒற்றுமையாக வாழும் கலைஞர் வகையில், தலா 100 வீடுகளைக்கொண்ட 50 குடியிருப்புகள் தமிழகம் முழுவதும் "சமத்துவபுரம்" என்ற பெயரால் உருவாக்கப்படும். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாகத்தான், தமிழகத்திலே இன்று 145 இடங்களில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைந்துள்ளன.

இந்த நிதியாண்டிலேகூட மேலும் 29 சமத்துவ புரங்களை அமைத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கது. டெல்லியிலே அந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் பொன்விழாவின் தேசிய அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து 50 விடுதலைப் போராட்ட வீரர்களைத் தமிழக அரசே தனது செலவில் அழைத்துச் சென்றிடுவதற்கான ஆணையினை அரசின் சார்பில் பிறப்பித்தேன். அவர்களை வழியனுப்பும் வகையில் 11.8.1997 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் அவர்களுக்கெல்லாம் தேநீர் விருந்தளித்து, நானே கதராடை அணிவித்து மரியாதை செய்தேன்.

டெல்லி சென்ற தியாகிகளை டெல்லியில், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வரவேற்று அவர்கள் தங்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்தார். டெல்லியிலே நடைபெற்ற சுதந்திரப் பொன் விழா அணிவகுப்பிலே மகிழ்ச்சியோடு பங்கேற்ற பின்னர், அந்தத் தியாகிகள் தமிழகம் திரும்பினார்கள். திரும்பிய பிறகு என்னையும், கழக அரசையும் பெரிதும் பாராட்டி, அந்த தியாகிகள் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்கள். குறிப்பாக, "சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மதிப்பதில் முதல்வர் கலைஞருக்கு ஈடானவர் எவருமில்லை" என்று தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தனர்.

பொன் விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக 14.8.1997 அன்று மாலையில் நேரு விளையாட்டரங்கில் மாநில விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் தொடக்க விழாவும் நடைபெற்றது. அதே இடத்தில் அன்று மாலை 5 மணி அளவில் 50 நாதசுர மற்றும் 25 தவில் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்திய சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் விளையாட்டுச் சுடரை வீரர்களிடம் வழங்கினேன்.

தொடர்ந்து 1000 விளையாட்டு வீரர்கள், மற்றும் மாணவ மாணவியரின் அணி வகுப்பும் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் பிரபல பாடகர்கள் கலந்துக்கொண்ட தேசிய பாடல்கள் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7.30 மணியிலிருந்து இரவு 10.30 மணிவரை பிரபல திரைப்பட இசை அமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட பாடகர்கள் சுமார் 125 பேர்கள் கலந்துக்கொண்ட இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் நானும் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அவர்களும் கலந்துக்கொண்டு, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று - தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தோம்.

மேலும் கல்வி அமைச்சர் பேராசிரியர், மேயர் மு.க. ஸ்டாலின் ஆகியோரும் விழாவில் கலந்துக்கொண்டனர். 15.8.1997 அன்று காலை 8.30 மணிக்கு சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஆயிரக்கணக்கில் குழுமியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் ஏற்றி வைத்து, விடுதலை நாள் விழா உரையினை ஆற்றினேன். அதன்பின் முதுபெரும் சுதந்திரப் போராட்ட தியாகி செங்கல்வராயன் உட்பட, 50 சுதந்திரப் போராட்ட கலைஞர் பொன்விழா மேடையில் ஆளுநர் பாத்திமா பீவியுடன் நான் தியாகிகளுக்கு கதராடைகள் அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தேன்.

சுதந்திரப் பொன் விழாவினை முன்னிட்டு, 554 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். 3300 சிறைக் கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. ★ ★ ★ சுதந்திரத் திருநாள் பொன் விழாவை முன்னிட்டு, 31.8.1997 அன்று தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்னுடைய தலைமையில் மதுரையில் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்த மாநாடு, த.மா.கா. தலைவர் ஜி.கே.மூப்பனார், பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனி வேல்ராஜன், ஆகியோர் முன்னிலையிலே நடைபெற்றது.

மதுரை தமுக்கம் மைதானம் அன்றைய தினம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மைதானத்தில் இடம் இல்லாமல் வெளியேயும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அந்த மாநாட்டில் பா.ஜ.க. சார்பில் கோபால், மேயர் குழந்தைவேலு, குமரி அனந்தன், இளைய பெருமாள், சரோஜினி வரதப்பன், வை.பாலசுந்தரம், பேராசிரியர் தீரன், ஜி.கே.மூப்பனார், அப்துல் லத்தீப், ஆர்.எம்.வீரப்பன், அப்துல் சமத். கே.வி.தங்கபாலு, ஜி.ஏ.வடிவேலு, மதுரை பேராயர் ஆரோக்கியசாமி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஆர்.- சுதந்திரப் பொன்விழாவில் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நல்லக்கண்ணு, என்.சங்கரய்யா, எதிர்க்கட்சித் தலைவர் சோ.

பாலகிருஷ்ணன், பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் - ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அதன் பிறகு நான் உரையாற்றினேன். அமைச்சர் சமய நல்லூர் செல்வராஜ் நன்றி கூறினார். மாநாட்டின் துவக்கத்தில் நான் தீண்டாமை உறுதிமொழியைப் படிக்கப் படிக்க கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் எழுந்து நின்று அந்த உறுதி மொழியை அவர்களும் வழி மொழிந்து ஏற்றுக் கொண்டனர்.

அந்த உறுதி மொழி வருமாறு:- "இந்திய அரசியல் அமைப்பின்பால் இடைவிடாது உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகனாகிய நான் நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீது சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதி அளிக்கிறேன். அரசியல் அமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க சாதி, சமய வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும்.

"மேலும் தீண்டத்தகாதவர்கள் என்ற கொடுமைக்கு ஆளாகியுள்ள மக்களிடையே காணப்படும் தீண்டாமை கலைஞர் தியாகி செங்கல்வராயன் உட்பட 56 தியாகிகளுக்கு கதராடை அளித்து, பொறிகிழி வழங்கினேன். உணர்வையும் போக்குவது நமது சமூகக் கடமை என்பதையும் உணர்ந்து செயல்படுவேன். இந்திய அரசியல் அமைப்பின்பால் எனக்குள்ள முழுப் பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் இதனால் உளமார உறுதி அளிக்கின்றேன்."

விழாவிற்கு முன்னிலை வகித்த அருமை நண்பர், மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் பேசும்போது - "சாதி மத வேறுபாடுகளைக் களைந்திட - தீண்டாமைக் கொடுமையை ஒழித்திட - தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுவோம் - இந்த நல்ல முயற்சியை எடுத்துள்ள முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நாம் எல்லோரும் துணை இருக்க உறுதி எடுத்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.

அதே நாள் காலையில், மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தி மதுரையில் மனிதச் சங்கிலி, சமபந்தி விருந்து போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அரசு விடுத்திருந்த அழைப்பை ஏற்று அந்த மனிதச் சங்கிலியில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், என்.சி.சி. என்.எஸ்.எஸ். மாணவர்கள், கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் அருகே மனிதச் சங்கிலியை கொள்கை உறுதி - இலட்சிய உணர்வு - தியாக மனப்பான்மை கொண்ட தம்பி தங்கபாண்டியனின் இறுதி ஊர்வலம் காலையில் நான் துவக்கி வைத்தேன்.

திருப்பரங்குன்றத்தில் துவங்கி புதூர் வரையில் மனிதச் சங்கிலியை ஒன்றரை மணி நேரம் நான் பார்வையிட்டேன். திருப்பரங்குன்றம் காவல் நிலையம் அருகிலும், மதுரை கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்திலும், கோரிப்பாளையத்திலும் காரைவிட்டு இறங்கி, மனிதச் சங்கிலியில் நான் பங்கேற்றேன். திருப்பரங்குன்றம் சன்னதித் தெரு, பசுமலை, பழங்கானத்தம் மேம்பாலம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், வைகை மேம்பாலம், கோரிப் பாளையம், புதூர் வரை மனிதச் சங்கிலி 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது.

அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், பேராசிரியர் அன்பழகனார், பொன்முடி, ரகுமான்கான், தமிழ்க் குடிமகன், பொங்கலூர் பழனிச்சாமி, முல்லைவேந்தன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆர்.நல்லக்கண்ணு, அய்யணன் அம்பலம், ஜி.ஏ. வடிவேல், சந்தானம், வல்லரசு உள்ளிட்ட பல தலைவர்கள் அந்த மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டனர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே மு.க.அழகிரி, மேயர் குழந்தைவேலு, வேலுச்சாமி, சிவராமன் ஆகியோருடன் கட்சியினரும் மனிதச் சங்கிலியில் பங்கேற்று நின்றனர். பசுமலை அருகில் தி.மு.க. விவசாய அணி சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் செ.ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் பங்கேற்றனர். அண்ணா சிலை அருகே ஐ.பெரியசாமி, சுந்தரம், துணை மேயர் பாண்டியன் ஆகியோரும் - சிம்மக்கல் அருகே ராம்பாபு எம்.பி.,தெய்வநாயகம் எம்.எல்.ஏ., சி.பி.எம்.

கட்சியைச் சேர்ந்த மோகன், நன்மாறன், ஜான் மோசஸ் ஆகியோரும் - கலைஞர் மதுரையில் தியாகி கக்கன் சிலையை திறந்து வைத்தேன். கட்டபொம்மன் சிலை அருகே மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஊழியர்களும் - பசுமலை அருகே நடிகர் விஜயகாந்த், நடிகர் சந்திரசேகர், இயக்குநர் இராம.நாராயணன் ஆகியோரும் மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர். ★ ★ ★ மதுரை ராஜா முத்தையா மன்றத்துக்கு எதிரே தியாகச் செம்மல் கக்கன் சிலையை அன்று காலையில் நான் திறந்து வைத்தேன்.

மதுரை மாநகரில் நடைபெற்ற இந்த விழாக்களில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பிய இரண்டு நாட்களுக்குள், மற்றொரு துயரச் செய்தி வந்து சேர்ந்தது. தர்மபுரி மாவட்டக் கழக முன்னோடிகளில் ஒருவரும், தம்பி முரசொலி மாறனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கிருஷ்ணகிரி தம்பி கமலநாதன் - சில நாட்கள் உடல் நலம் குன்றியிருந்தவர் - சென்னையிலே தனியார் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தவர் 17.8.1997 அன்று சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை அடைந்தார்.

பல போராட்டங்களைச் சந்தித்த கமலநாதனின் மறைவுக்குக் கதறியழும் துணைவியார் காஞ்சனா கமலநாதன் சென்னையிலே மறைந்த அவரது உடல் உடனடியாக அவருடைய சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு எடுத்துச் செல்லப் பட்டது. 1962-67ஆம் ஆண்டுகளில் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் கமலநாதன் இருந்திருக்கிறார். நெருக்கடி காலத்தில் ஓராண்டு கால மிசா கொடுமையில் சிறையில் இருந்தவர். பல போராட்டங்களில் ஈடுபட்டும் சிறையிலே இருந்தவர்.

இவரது துணைவியார் காஞ்சனா கமலநாதன் கணவரது மறைவுக்குப் பிறகு தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற பணிகளைச் செவ்வனே ஆற்றி வருகிறார். அவர் மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தியில்:- "கழகத்திற்குக் கிடைக்கும் வெற்றிகளில் மகிழ்ந்து, வேதனை சோதனைகளில் நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து நின்று, நெருக்கடி காலக் கொடுமையில் ஓராண்டுக் கால "மிசா" கைதியாக இருந்தபோதும் கலங்காமல், துவளாமல் இயக்கம் காத்து நின்ற என்னருமைத் தம்பி கமலநாதன் சில காலமாக உடல் நலிவுற்றிருந்து சிகிச்சை பலனளிக்காமல் மறைந்துவிட்ட செய்து தர்மபுரி மாவட்டக் கழகக் கண்மணிகளையும், என்னையும் ஆழ்ந்த துயரத்தில் வீழ்த்திய செய்தியாகும்.

சட்டமன்ற உறுப்பினராக - மாநிலங்களவை உறுப்பினராக அவர் ஆற்றிய பணியும் - கழகத் தலைமையிட்ட கட்டளைகள் கலைஞர் ஏற்று களங்கள் பலவற்றைக் கண்ட அவரது இலட்சியப் பற்றும் என்றுமே மறக்க முடியாதவை. "அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் குறிப்பாக சட்டப் பேரவை உறுப்பினர் காஞ்சனா கமலநாதன் அவர்களுக்கும் கழகத்தின் சார்பிலும் என் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கிறேன். ஓர் இனிய சகோதரனை மட்டுமல்ல - இலட்சிய வீரனையும் இழந்த நிகழ்ச்சி, இடிமேல் இடி ஆயிற்று எனக்கு!"

- என எழுதியிருந்தேன். கமலநாதனை இழந்த அடுத்த சில மணி நேரங்களில், கழகத்தின் முன்னாள் அமைப்புச் செயலாளரும், தென் ஆற்காடு மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரும், மாவட்டக் கழகச் செயலாளராக செயலாற்றியவருமான விருத்தாசலம் செல்வராஜ் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவரும் உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி 19.8.1997 அன்று இயற்கை அடைந்தார்.

செய்தி அறிந்ததும், நான் நேராக மருத்துவ மனைக்கே சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். நான் விடுத்த இரங்கல் செய்தியில் "விருத்தாசலம் என்றாலே நமது இயக்கத்தினருக்கு முதலில் நெஞ்சில் நிழலாடும் பெயர் விருத்தாசலம் செல்வராஜ் என்பது தான். சென்னை மருத்துவமனையில் அவரைக் கண்டு உடல் நலம் விசாரித்தபோது கூட அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தான் இருந்தார். அப்படித்தான் என் கரங்களைப் பிடித்துக் கொண்டு பேசினார்.

ஆனால் இன்று அவர் இல்லை. கழகம் வளர்த்த தூண்களில் ஒருவர் - களம் பல கண்டவர் - மிசா கொடுமையில் சென்னைச் சிறையில் சித்ரவதைகளைத் தாங்கிக் கொண்டவர்களில் ஒருவர் - சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், பல்வேறு நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்தும் மக்கள் பணியாற்றியவர் - மாசற்றவர் எனும் பெயர் பூண்டவர் - தலைமைக் கழகத்தில் இணை அமைப்புச் செயலாளராக இருந்து அரும் பணியாற்றி உடல் நிலை காரணமாக ஓய்வு பெற்றிருந்தவர் - இவ்வளவு விரைவில் நீண்ட ஓய்வு எடுத்துக் கொள்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மறைந்துவிட்டார் - எனினும் அவரது ஆர்வமிக்க இயக்கத் தொண்டு காரணமாக என்றென்றும் நமது நெஞ்சில் நிறைந்து விட்டார்

" என்று எழுதியிருந்தேன்.