நெஞ்சுக்கு நீதி
கலைத்துறையினர் பிரச்சினையும் - காட்டு வீரப்பன் தேடலும்! · 335 / 391
23. கலைத்துறையினர் பிரச்சினையும் - காட்டு வீரப்பன் தேடலும்! 'பராசக்தி' திரைப்படத்தை உயிரோட்டமுள்ள திரைக் காவியமாக இயக்கிய இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சு 8-7-1997 அன்று காலையில் தலைமைச் செயலகத்தில், என்னைத் திரைப்படத் துறையைச் சேர்ந்த முன்னணியினர் சந்தித்தார்கள். நடிகர்கள் சார்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், நெப்போலியன், கார்த்திக், தியாகு ஆகியோரும் - திரைப்பட இயக்குநர்கள் சார்பில் கே.
பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், இராம. நாராயணன், பி. வாசு,வி. சேகர், விக்ரமன், கே. சுபாஷ் ஆகியோரும் - திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் கே.ஆர்.ஜி., ஆர்.பி.சவுத்ரி, இப்ராகிம் ராவுத்தர், கே.ஆர்.,கே. ராஜன், கோவை முருகேசன் ஆகியோரும் - திரைப்பட வர்த்தக சங்கத்தின் சார்பில் எம். பாலசுப்பிரமணியம், எல். சுரேஷ், கிருபாசங்கர் ஆகியோரும் - பெப்சி சார்பில் விஜயன், எம்.டி. சுந்தர், ரோணி டேவிட், வி.சுந்தரம், எம்.
பிச்சுமணி ஆகியோரும் - காலை 10 மணி முதல் 1 மணி வரையில் என்னைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அந்தச் சந்திப்பின்போது அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, முல்லை வேந்தன் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் துறையின் அதிகாரிகள் கலைஞர் இருந்தனர். இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள முடிவு "பெப்சி" உள்ளிட்ட அனைத்துக் குழுவினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த முடிவு:- "தமிழ்நாடு திரைப்படப் படைப்பாளிகள் கூட்டமைப்பு என்றும், தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்றும் தனித்தனியாக அமைப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
அந்த அமைப்புகளுக்கு "பெப்சி" ஆட்சேபணை தெரிவிக்காது. எனினும் "பெப்சி" அமைப்பிலே உள்ள தொழில் புரிவோர் புதிதாக உருவாகும் இரு அமைப்புகளின் சார்பில் நடக்கும் படத் தயாரிப்புகளில் இடம் பெற மாட்டோமென்று "பெப்சி" சார்பில் கூறியது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதே சமயம் இந்த இரு புதிய அமைப்புகளிலும் பணியாற்ற அவர்களாகவே விருப்பத்துடன் வருகிறவர்களை மட்டுமே இரு புதிய அமைப்புகளும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு விருப்பப்படி புதிய அமைப்புகளில் சேருகிறவர்களை பெப்சி தடுத்திடக் கூடாது.
என்பதையும் பெப்சி ஏற்றுக்கொண்டது. பெப்சி, மற்றும் தமிழ்நாடு திரைப்படப் படைப்பாளிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளுக்கிடையே எந்த மோதுதலும் வரக்கூடாது என்றும், அப்படி வருமேயானால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எழாமல் கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்படுகிறது."
இந்த முடிவினை அனைத்துத் தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், இந்த முடிவை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒரு மாத காலத்திற்கு மேல் படப்பிடிப்பே நடைபெறாமல் இருந்தது. அதனால் திரைப்படத் துறையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தைச் (பெப்சி) சேர்ந்த தொழிலாளர்களைப் பயன்படுத்தி "அவ்வை சண்முகி" படத்தின் இந்திப் பதிப்பின் படப்பிடிப்பை கலைஞானி கமல்ஹாசன் நடத்தி வந்தார்.
அதனால் அவர்மீது அதிருப்தி அடைந்த தமிழ்நாடு திரைப்படப் படைப்பாளிகள் கூட்டமைப்பினர் சிலர், வேண்டுமென்றே அவரைக் கேலி செய்யும் வகையில், பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, கமல்ஹாசன் ஓராண்டு காலத்திற்கு நடிக்கக் கூடாது என்று முடிவு செய்ததாகவும் ஏடுகளில் செய்தி வந்தன. அதனைக் கண்டித்து சினிமா ஆர்டிஸ்ட் யூனியனைச் சேர்ந்த நடிகர்கள் கூடினர். அந்தக் கூட்டத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகுமார், பிரபு, கார்த்திக், முரளி, சந்திரசேகர், நெப்போலியன், ராம்கி, சின்னி ஜெயந்த் உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.
1-8-1997 அன்று நடிகர் சங்க வளாகத்தில் திரைப்பட நடிகர்கள் சிலரைக்கொண்டு ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, அந்தக் கூட்டத்தில் "சினிமா ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் விஜயகுமார் ஒரு சில நடிகர்களை மட்டுமே கலந்தாலோசித்து பெப்சிக்கு ஆதரவு என்று எதேச்சாதிகார முடிவு எடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனால் இந்தக் கூட்டத்திற்கு வந்துள்ள நாங்கள் எல்லாம் அந்த யூனியனிலிருந்து விலகுகிறோம்" என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அதிலே கலந்துக்கொண்ட சரத்குமார், விஜயகாந்த், அர்ஜுன், பார்த்திபன், ஆனந்தராஜ், ராமராஜன், ராஜசேகர், விசு, ரேவதி, ரோஜா, குஷ்பு, ஊர்வசி, இந்து உள்ளிட்ட 52 பேர் நடிகர் நடிகையர் ஆகும். திரைப்படத் துறையின் மோதல்களைத் தீர்க்க, நடிகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். கலைஞர் இந்த அணியினர் திரைப்படப் படைப்பாளிகள் - தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதென முடிவெடுத்தனர். இதற்கிடையே பெப்சி தொழிலாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தி, நடிகர் ராதாரவி படங்களுக்கு பெப்சி ஒத்துழைக்காது என்று அறிவித்தனர்.
இருவருக்குமிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டுமென்று திரைப்படத் துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில், 7-8-1997 அன்று தலைமைச் செயலகத்தில் அவர்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டேன். அவ்வாறே 7ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2.45 மணிவரையில் தலைமைச் செயலகத்தில், திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரையும், முதலில் தனித் தனியாகவும், பின்னர் இறுதியாக ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று பேர் வீதமும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினேன்.
பெப்சி சார்பாக நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், கார்த்திக், பிரபு, நெப்போலியன், தியாகு, சந்திரசேகர், அஜித்குமார், விஜயகுமார் ஆகியோரும் படைப்பாளிகள் சங்கத்தின் சார்பாக நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி, அர்ஜுன், பார்த்திபன், ஆனந்த்ராஜ், சிவகுமார், நடிகைகள் ரேவதி,நக்மா, ஊர்வசி, மனோரமா ஆகியோரும் - தமிழ்நாடு படைப்பாளிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே. பாலசந்தர், எஸ்.ஏ.
சந்திரசேகர், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், பாலு மகேந்திரா, இராம. நாராயணன், கங்கை அமரன். அகத்தியன், இராமதாஸ், பி.என்.சுந்தரம், ஹேமச்சந்திரன் ஆகியோரும் - தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் கே.ஆர்.ஜி., கே.ஆர்., இப்ராகிம் ராவுத்தர், ஆர்.பி. சவுத்திரி, ஹென்றி, ஏ.எல். அழகப்பன், முரளீதரன், சீனிவாசன், பாரதிராஜா, இராமநாதன், எம்.ராஜாராம் ஆகியோரும் - அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சார்பாக ர வி சங்கர் பிரசாத், சீமா சசி, மோகன், சுகுமாரன், சங்கையா, ஜாக்பாட் சீனிவாசன் ஆகியோரும் - தென் இந்திய திரைப்பட வர்த்தக சங்கம் சார்பாக எம்.
பாலசுப்பிரமணியம், ஜி.வெங்கடேஸ்வரன்,எல். சுரேஷ், எஸ்.வி.ஆர்.எம். இராமநாதன், எஸ். கிருபாசங்கர், கே.என். வெங்கடேஸ்வரன் ஆகியோரும் - பெப்சி சார்பாக விஜயன், எம்.டி. சுந்தர், கே.எஸ். சின்னத்தம்பி, பால்ராஜ், ரோணி டேவிட்,டி. ராஜேந்திரன், வி. சுந்தரம், ஜி. சேகர், ஜூடோ ரத்தினம், முரளி ஆகியோரும் கலந்துக்கொண்டனர். ஒவ்வொரு தரப்பினருடன் தனித்தனியாகவும், பின்னர் ஒவ்வொரு தரப்பினரின் சார்பில் மூவர் வீதமும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும், சமரச முடிவிற்கு வரவில்லை.
எனவே அவர்கள் மத்தியில் நான் பேசும்போது - "எடுத்த முயற்சி எதுவும் வெற்றி முகட்டை எட்டவில்லை. எனவே கடந்தமுறை எடுத்த முடிவின்படி பெப்சி ஆதரவாளர்களும் - தமிழ்த் திரைப்பட படைப்பாளிகள் ஆதரவாளர்களும் - இரு சாராரும் தனித் தனியே இயங்குவது என்ற நிலைமை தான் இப்போது எடுக்கப்பட்டுள்ளது. இரு சாராரும் திரைப்படத் தொழிலில் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளாமல், ஒருவர் தொழிலில் இன்னொருவர் இடையூறு விளைவிக்காமல், குறுக்கிட்டுத் தடைகளை ஏற்படுத்தாமல், தனித்தனியாக திரைப்படங்களை எடுக்கின்ற முயற்சியில் ஈடுபடலாம்.
திரையுலகப் பிரச்சினையைத் தீர்க்க, தயாரிப்பாளர்களும் என்னைச் சந்தித்தனர். "இரு சாராராக நீங்கள் பிரிந்திருந்தாலுங்கூட, பேரறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் சம்பந்தமாக சொன்ன ஒரு கலைஞர் திரைப்படத் தொழிலாளர்கள் நலனுக்காக, ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் என்னைத் தொடர்பு கொண்டனர். உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். அண்ணா அவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்த பிறகு - "நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கி" என்றார்.
நான் பெரியாரிடமிருந்து பிரிந்து விட்டேனென்றாலும், தனியாக தி.மு. கழகத்தை ஆரம்பித்துவிட்டேன் என்றாலும், திராவிடர் கழகமும், தி.மு. கழகமும் நாங்கள் தனித்தனியாக இயங்கினாலுங்கூட, சமுதாயத் துறையிலே இரட்டைக் குழல் துப்பாக்கியாகப் பாடுபடுவோம்" என்றார்.
"ஒருவரையொருவர் சுடுகின்ற துப்பாக்கியாக இல்லாமல், இருவரும் சேர்ந்து நல்லதை உருவாக்கும் பணியிலே செயல்பட வேண்டும். அந்த வகையில் ஒருவர் பணியிலே இன்னொருவர் குறுக்கிடாமல், இடைஞ்சல் செய்யாமல், தடுத்திடாமல், வன்முறைக்கு சிறிதும் இடமில்லாமல், பணியாற்ற வேண்டும். எந்தத் தரப்பிலிருந்தாவது வன்முறைச் செயல்கள் அரும்புமேயானால், அதனைத் தடுக்க வேண்டிய கடமையும் - தடுத்த பிறகும் மீறி நடக்குமேயானால், அதனைச் சட்டப்படி அணுக வேண்டிய கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது என்பதை, எந்தக் கலைத் துறையோடு நண்பனாக நான் இருக்கிறேனோ, அந்தக் கலைத் துறை நண்பர்களிடம் இதனைச் சொல்லும்போது எனக்கு மிகுந்த சங்கடமாகத்தான் இருக்கிறது என்பதை வேதனையோடு சொல்லிக்கொள்கிறேன்" என்று கூறினேன்.
ஆனாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. உண்மையில் பெப்சி அமைப்பு - மற்றும் புதிதாக உருவான தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகள் சங்கம் - மற்றும் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் என்ற அமைப்புகளுக்கிடையே ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக நான் ஒரு நாள் முழுவதும் செலவிட்டு, அனைத்துத் தரப்பினரையும் தனித்தனியாகவும், ஒட்டு மொத்தமாகவும் அழைத்துப் பேசினேன். முடிவாக அவர்கள் விருப்பப்படியே "திரைப்படத் துறையில் தனித்தனியாக இயங்குவோம்" என்று அவர்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டு, ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளாமல், ஒருவர் படப்பிடிப்பிற்கு மற்றவர் இடைஞ்சல் செய்யாமல், சட்டம் ஒழுங்கிற்குப் பாதகம் வராமல் நடந்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.
அதற்குப் பிறகும் அவர்களுக்கிடையே பிரச்சினை தீராத காரணத்தால், கலைஞானி கமல்ஹாசன் என்னைச் சந்தித்து, மீண்டும் ஒருமுறை இரு இரு சாராரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று கூறினார். அவர் விரும்பியவாறே ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று இரண்டு தரப்பிலும் உள்ள பல்வேறு குழுவினரோடு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினேன். பெப்சி தொழிலாளர்கள் - தமிழ்த் திரைப்பட படைப்பாளிகள் படப்பிடிப்பிலே கலந்துக்கொள்வதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும், அதே சமயம் படைப்பாளிகள் சங்கத்தினுடைய கார்டை பெற்றுக்கொண்டால் போதுமானது என்றும் படைப்பாளிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் திரு. கமல்ஹாசன் அவர்கள் "பெப்சி தொழிலாளர்கள், படைப்பாளிகள் சங்கத்தின் கார்டை பெறாமலேயே அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்" என்ற கருத்தை என்னிடத்தில் சொன்னார். எல்லாக் குழுவினரையும் நான் அழைத்து இறுதியாக அதே நாளில் பேசியபோது, பெப்சி சார்பாக பேசிய விஜயன், "படைப்பாளிகள் கார்டு வாங்க வேண்டுமென்ற நிபந்தனை கலைஞர் இல்லாவிட்டாலும்கூட, படைப்பாளிகள் சங்கச் சார்பில் உள்ளவர்கள் எடுக்கின்ற படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள மாட்டோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இது முதலில் திரு. கமல் அவர்கள் சொன்னதற்கு முற்றும் மாறுபாடாக இருந்தது. எனவே "பழைய நிலையிலேயே இரு சாராரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளாமல்,சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு இடம் தராமல், திரைப்படத் துறையில் தங்கள் பணிகளை ஆற்றிக் கொள்ளலாம்" என்று நான் குறிப்பிட்டேன்.
அதற்குப் பிறகு விஜயனும், அவருடன் நான்கைந்து தோழர்களும் என்னைச் சந்தித்து, "கேமரா யூனிட் வைத்திருப்பவர்கள் பெப்சி கலந்துக்கொள்ளும் படப்பிடிப்புகளுக்குக் கேமரா தர மறுக்கிறார்கள் - அப்படி அதை அவர்கள் மறுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
மறுநாள் திரு. ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசியிலே என்னோடு தொடர்பு கொண்டு அது பற்றிப் பேசினார். கேமரா யூனிட்காரர்கள் பெப்சிக்கும் கேமரா தரவேண்டுமென்று பெப்சி விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். அப்போது அவர் வீட்டில் இருந்தே, அவருடன் பேசிக்கொண்டிருந்த பெப்சி அமைப்பைச் சேர்ந்த திரு. ஜூடோ ரத்தினம், அந்தத் தொலைபேசியிலேயே என்னோடு தொடர்புக்கொண்டு, "கேமரா யூனிட், பெப்சிக்கும் கேமரா கொடுத்தால் பிரச்சினை தீர்ந்து விடும் - அதுதான் எங்கள் கோரிக்கை" என்று கேட்டுக்கொண்டார்.
நான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திரு. ஜூடோ ரத்தினம் அவர்களிடம் சொல்லிவிட்டு, உடனடியாக அதை திரு. ரஜினிகாந்த் அவர்களிடமும் தெரிவித்தேன். நான் வாக்களித்தவாறே அரசின் செய்தித்துறை அதிகாரி மூலமாக கேமரா யூனிட்டுக்குத் தொடர்பு கொள்ளச் செய்து, அவர்களும் பெப்சிக்கு கேமரா தருவதாக ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆனால் வள்ளுவர் கோட்ட வாசலில் ஒரு உண்ணாவிரதம் நடைபெற்றது. அதனை கமல்ஹாசன் அவர்களை அழைத்துத் தொடங்கி வைக்குமாறு செய்தனர்.
உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்து ரஜினிகாந்த் அனுப்பிவைத்த கடிதத்தைக்கூட உண்ணாவிரதம் இருந்த பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் பந்தலிலே படித்துக் காட்ட மறுத்து விட்டார்கள் என்ற தகவல் எனக்கு வந்தது. இதற்கிடையில் திரைப்படத் துறையினர் பிரச்சினையிலே அரசியல்வாதிகள் சிலர் புகுந்துகொண்டு, அவர்களின் பிரச்சினை தீரவே கூடாது - அதனைப் பெரிதாக்கி அரசுக்கு பிரச்சினை தரலாம் என்ற எண்ணத்தோடு அறிக்கைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
★ ★ ★ திரைப்படத் துறையிலே இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சியும், மோதல்களும் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில்,15-7-1997 அன்று என்னுடைய அன்பிற்குரிய இரட்டையர்களில் ஒருவரான திரைப்பட திரைப்பட இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு) அவர்கள் இயற்கை எய்தினார். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சு அவர்கள் மறைந்து விட்டார். நான் எழுதிய "பராசக்தி" படத்தை உயிரோட்டமுள்ள திரைக் காவியமாக இயக்கி, அனைவரின் மறைந்த இயக்குநர் கிருஷ்ணன் அவர்களுடைய உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினேன் கலைஞர் உள்ளங்களிலும் என்றும் நிலைபெறச் செய்தவர்கள், இறுதிவரை இணை பிரியாதிருந்த இந்த இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சு.
கிருஷ்ணன் மறைந்தபோது அவருடைய வயது 88. தஞ்சையில் 1909 ஆம் ஆண்டு பிறந்தவர். 1935 இல் இயக்குநர் கே. ராம்நாத் அவர்களிடம் பிலிம் லேபரட்டரியில் சீப் பிரிண்டராக வேலை செய்தார். அதன் பிறகு புகழ் பெற்ற இயக்குநர்கள் ராஜா சாண்டோ, எல்லிஸ் ஆர். டங்கன் போன
்றவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அந்த நேரத்தில் பஞ்சு அவர்கள் எடிட்டிங் துறையில் பணி செய்துக்கொண்டிருந்தார். இருவரும் இணைந்து முதன் முதலில் இயக்கிய படம் "பூம்பாவை". என்னுடைய வசனத்தில் நடிகர் திலகம் முதன் முதலாக நடித்த "பராசக்தி" படம்தான் இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவை தமிழகத்திற்கு அடையாளம் காட்டியது. நான் எழுதிய நாடகங்களிலும், கதைகளிலும் இருந்த சில காட்சிகளை பராசக்தியில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை கூறி, சிறப்பாகச் சேர்த்த பெருமை கிருஷ்ணன் அவர்களுக்கு உண்டு.
அவர்கள் இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்களின் எண்ணிக்கை 80. அதிலே ஏ.வி.எம். தயாரிப்பில் மட்டும் இயக்கிய படங்கள் 22. இவர்கள் இயக்கி குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம் "குழந்தையும் தெய்வமும்" இந்திய அரசின் தகுதிச் சான்றிதழ் பெற்ற படங்கள் குலதெய்வம், அன்னை, தெய்வப்பிறவி, சர்வர் சுந்தரம். தமிழ் மாநில விருது பெற்ற படம் "உயர்ந்த மனிதன்."
1996 ஆம் ஆண்டு தி.மு. கழக அறக்கட்டளை நிதியை இயக்குநர் கிருஷ்ணன் அவர்களுக்கு, நான் அளித்து கௌரவித்தேன். இயக்குநர் கிருஷ்ணன் அவர்களுக்கு 6 மகன்கள், 5 மகள்கள். இயக்குநர் கே. சுபாஷ் அவருடைய மகன்தான். டெல்லியில் ஐக்கிய முன்னணியில் லல்லு பிரசாத் யாதவ் அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன். கிருஷ்ணன் மறைந்த செய்தி கிடைத்தவுடன், நான் அவருடைய இல்லத்திற்குச் சென்று மலர் மாலை வைத்து எனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினேன்.
★ ★ ★ இதற்கிடையே அகில இந்திய அரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றியும், அவற்றில் தி.மு. கழகம் எந்த அளவிற்குப் பங்கேற்றது என்பது பற்றியும் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி ஜனதாதள கட்சி துவக்கப்பட்டது. அதன் முதல் தலைவரான வி.பி. சிங், ராஜீவ் காந்தி தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து நாட்டின் பிரதமராக ஆனார். 1990 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ஜனதா தளத்தின் தலைவராக எஸ்.ஆர்.
பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990, நவம்பர் 5 ஆம் தேதி சந்திரசேகர், தேவிலால் உள்ளிட்டோர் ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சென்று சமாஜ்வாதி கட்சியைத் துவக்கினர். அயோத்திப் பிரச்சினையின்போது மக்கள் அவையில் 1990 நவம்பர் 7ஆம் தேதி கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தால், வி.பி.சிங் ஆட்சியை இழந்தார். ராஜீவ் கலைஞர் தலைமையிலான காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆனார். மீண்டும் 1992 பிப்ரவரியில் அஜித்சிங் தனது ஆதரவாளர்களுடன் ஜனதா தளத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் 1995ல் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதிஷ் குமார் ஆகியோர் ஜனதா தளத்திலிருந்து விலகி சமதாக் கட்சியைத் துவங்கினார். ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து எஸ்.ஆர். பொம்மை 1996, ஜனவரி 29 ஆம் தேதி விலகினார். அவருக்குப் பதிலாக லாலு பிரசாத் யாதவ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு மே 20ஆம் தேதி 14 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி உருவானது. தேவகவுடா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரைத் தேர்ந்தெடுத்ததைக் குறை கூறிய ராமகிருஷ்ண ஹெக்டே கட்சியிலிருந்து ஜூன் 14ஆம் தேதி நீக்கப்பட்டார். ஜூலை 17ஆம் தேதி ஜனதா தளத்தின் செயல் தலைவராக சரத் யாதவ் நியமிக்கப்பட்டார். தேவகவுடாவை விமர்சித்த மேனகா காந்திக்கு 1996 ஜூலை 2ஆம் தேதி காரணம் கோரும் நோட்டீஸ் அனுப்பப் பட்டு - 6 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப் பட்டார். ஜூலை 30ஆம் தேதி முப்தி முகமது சயீத் கட்சியிலிருந்து விலகினார். இப்படி பல்வேறு மாற்றங்களைக் கண்ட ஜனதா தளத்திற்குத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 1997ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியானது.
லாலுவும், சரத் யாதவும் களத்தில் குதித்தனர். மே 30 ஆம் தேதி தனது ஆதரவாளர்கள் 50 பேரைக் கட்சிக் கமிட்டியில் லாலு சேர்த்தார். அவர்கள் கட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் ஆனார்கள். கட்சித் தேர்தல் பிரச்சினையில் நீதிமன்றம் குறுக்கிட்டது. மது தண்டவதே, ஜெய்பால் ரெட்டி ஆகியோரை பிரச்சினைக்குத் தீர்வு காண யோசனை கூறுமாறு டெல்லி நீதிமன்றம் கேட்டது. ஜூன் 7 ஆம் தேதி கட்சித் தேர்தலை நடத்தவும் டெல்லி உயர் நீதிமன்றம் கர்நாடக முதல்வர் ஜே.எச்.
படேல் அவர்கள் சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைவது பற்றி என்னிடம் ஆலோசித்தார். உத்தரவிட்டது. கட்சித் தேர்தல் அதிகாரி சமந்த் ராய் உச்சநீதிமன்றத்தை அணுகி அதற்குத் தடை உத்தரவு பெற்றார். பின்னர் ஜூலை 3 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு தேர்தல் அதிகாரியாக மது தண்டவதேயை நியமித்தது. தேர்தலை லாலு ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். லாலு ஆதரவாளர்கள் கூடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உதயமானது.
அதன் தலைவராக லாலு பிரசாத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தளத்தில் புதிய தலைவராக சரத் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதிவான மொத்த வாக்குகள் 758. அதில் சரத்யாதவுக்கு ஆதரவாக 691 வாக்குகளும், லாலுவுக்கு ஆதரவாக 58 வாக்குகளும் பதிவாயின. பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை ஐக்கிய முன்னணியில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அப்போது பெரிய பிரச்சினை மத்திய அரசு அளவில் ஏற்பட்டது.
"லாலுவின் கட்சியை ஐக்கிய முன்னணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று அறிக்கை ஒன்றினை நான் விடுத்தேன். எனது கருத்தை பிரதமர் குஜ்ரால், த.மா.கா. தலைவர் மூப்பனார், கர்நாடக முதலமைச்சர் படேல் போன்றவர்கள் ஆதரித்தனர். தேவகவுடா, சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் லாலுவின் கட்சியை ஐக்கிய முன்னணியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற நிலையை எடுத்தனர். ஐக்கிய முன்னணித் தலைவராக இருந்த தேவகவுடா அவர்களையே மாற்ற வேண்டுமென்ற குரலும் தீவிரமாக எழுந்தது.
ஐக்கிய முன்னணி அரசைக் கலைஞர் கவிழ்ப்பதற்கான அனைத்து திரைமறைவு வேலைகளிலும் தேவகவுடா அவர்கள் ஈடுபட்டதாக அப்போது செய்தி பல ஏடுகளில் வெளி வந்தது. வீரப்பனைச் சந்திக்க தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார் "நக்கீரன் கோபால்" ஜனதா தளத் தேர்தலில் போட்டி ஏற்பட்டு, அதன் காரணமாக ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியைத் தொடங்கிய அன்றே பீகார் மாநிலத்தில் லாலு அரசு சிறுபான்மை அரசாக ஆகிவிட்டது. பா.ஜ.க.
எதிர்ப்பு என்ற வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கலந்துக்கொள்ளாததால், லாலு எளிதாக வெற்றி பெற முடிந்தது. பிரதமர் குஜ்ரால் மத்திய தொழில் அமைச்சராக இருந்த முரசொலி மாறனை அழைத்து, "ஐக்கிய முன்னணி அரசிலிருந்து விலகும் முடிவை எந்தக் காரணத்தைக் கொண்டும் தி.மு.க. எடுத்து விடக்கூடாது" என்று வலியுறுத்தினார்.
மாநிலங்களிடையேயான குழுக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக 17.7.1997 அன்று டெல்லி செல்வதற்காகத் திட்டமிட்டிருந்த என்னுடைய சுற்றுப் பயணத்தையொட்டி, அன்றைய தினமே ஐக்கிய முன்னணி வழிகாட்டுக் குழுக் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள். ஐக்கிய முன்னணியின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் - ஜனதா தளத்தில் உள்ள ஒரு சில தலைவர்களே செயல்பட்டு வருவது தி.மு.க.விற்குக் கவலையை அளித்துள்ளதாக நான் தெரிவித்த கருத்தினை முரசொலி மாறன் பிரதமரிடம் நேரில் விளக்கினார்.
அதைப்பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் குஜ்ரால் மாறனிடம் உறுதியளித்தார். 17.7.1997 அன்று நான் டெல்லி சென்றபோது ஐக்கிய முன்னணியின் மூத்த தலைவர்கள் எல்லாம் என்னைச் சந்தித்து, ஐக்கிய முன்னணியில் ராஷ்ட்ரிய ஜனதாதளத்தை ஏன் சேர்க்கக் கூடாது என்பதற்கான காரணங்களையெல்லாம் விளக்கினார்கள். அன்றைய கூட்டத்தின் முடிவில் நானும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சுர்ஜித் அவர்களும் இந்தப் பிரச்சினைகுறித்து விவாதித்துத் தீர்வு காண வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.
நாங்கள் இருவரும் அவ்வாறே அனைத்துத் தலைவர்களிடமும் ஓரளவிற்கு பேசி சமாதானம் செய்து, வேறெந்த மாற்றமும் செய்யாத அளவில், மத்திய அரசு ஒரு சுமூகமான நிலையில் தொடர்ந்து நடைபெற வழி வகுத்தோம். ஆனால் அந்த அமைதி எத்தனை மாதங்களுக்கு நீடித்தது என்பதை பின்னர் எழுதுகிறேன். ★ ★ ★ இதற்கிடையில் மைசூர் மாவட்டம், சாம்ராஜ் நகரில் உள்ள புரடே காட்டுப் பகுதியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் 10 வனத்துறை ஊழியர்களை 12.7.1997 அன்று கடத்திச் சென்ற தகவல் வந்தது.
பின்னர் சில நிபந்தனைகளை விதித்து, ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். கடத்தப்பட்டவர்களை விடுவிக்க ரூ. இரண்டு கோடி நிபந்தனை என்று கூறப்பட்டது. கடத்தப்பட்டவர்களில் வனக் காவலர்கள் (பாரஸ்டர்கள்) 2பேர், வனத் துறை கார்டுகள் 6 பேர், ஜீப் ஓட்டுநர்கள் 2 பேர். விடுவிக்கப்பட்ட வனஊழியர் பெங்களூர் நகருக்கு அழைத்து வரப்பட்டு, உயர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். தனக்குப் பொது மன்னிப்பு அளிக்கா விட்டால் பிடிபட்ட வனத்துறை ஊழியர்களைச் சுட்டுக் கொன்றுவிடுவதாக வீரப்பன் எச்சரிக்கை விடுத்திருப்பதாகச் செய்திகள் ஏடுகளிள் வெளிவந்தன.
அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த அருமை நண்பர் படேல் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் கலைஞர் தொடர்புக்கொண்டு விவரங்களையெல்லாம் தெரிவித்தார். தான் விடுவித்த நபரிடம் வீரப்பன் இரண்டு ஆடியோ கேசட்டுகளைக் கொடுத்து, கர்நாடக முதல்வரிடம் அளிக்கும்படிக் கூறி இருந்தார். அந்த கேசட்டில், தான் சரணடைய விரும்புவதாகவும், தனது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்றும் தன் மீதான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசிடம் விட்டுவிட வேண்டும் என்றும் வீரப்பன் கூறியிருந்தார்.
அந்தக் கேசட்டுக்கு பதிலளிக்கும் வகையில் - கர்நாடக முதலமைச்சர் படேல் செய்தியாளர்களிடம். "வீரப்பன் சரணடைய விரும்பினால் அதனையேற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் - ஆனால் சட்டரீதியாக விளைவுகளை அவர் சந்தித்தே ஆகவேண்டும் - சரண் அடைவதற்கு முன்பு கடத்திச் சென்றவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் - சரண் அடைவது தொடர்பான நடைமுறைகள் தமிழகத்திடம் விடப்படும்" - என்றும் கூறினார். பொறுப்பை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைத்த நிலையில், தமிழக அரசின் சார்பில் வீரப்பனுடன் தொடர்புக்கொள்வதற்கான முயற்சியில் தமிழக அரசு "நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் மூலமாக ஈடுபட்டது.
அவரும் அந்த முயற்சியில் ஈடுபடுவதாக ஒப்புக்கொண்டார். சந்தனக் கடத்தல் வீரப்பனை தமிழக அரசு சார்பில் சந்திக்கச் சென்ற கோபால், 23.7.1997 புதன்கிழமை அன்று சென்னை திரும்பி, தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்தார். வீரப்பன் கொடுத்தனுப்பிய வீடியோ கேசட்டையும் கொடுத்தார். கர்நாடக அரசு அலுவலர்கள் 9 பேரை விடுவிப்பதற்கான நிபந்தனைகளும் கேசட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனக்கும், கர்நாடக முதல்வருக்கும் அந்த 9 பேரும் அனுப்பிய கடிதங்களையும் நக்கீரன் கோபால் என்னிடம் கொடுத்தார்.
அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தனக்கு பொது மன்னிப்பு அளித்தால் தான் அரசு அலுவலர்கள் ஒன்பது பேரையும் விடுவிப்பேன் என்று வீரப்பன் வீடியோவில் தெரிவித்திடவே, இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, "வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கக் கூடாது" என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.
26.7.1997 அன்று மாலையில் கர்நாடக முதலமைச்சர் ஜே.எச். படேல் அவர்கள் சென்னைக்கு வருகை தந்தார். அவரும், நானும், மற்றும் அதிகாரிகளும் தலைமைச் செயலகத்தில் வீரப்பன் பிரச்சினை குறித்து இரவு 10 மணி வரையில் பேசினோம். பேச்சின் முடிவில் நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் - "இரு மாநில முதல்வர்களும், இரு மாநில அரசுகளும் இப்பிரச்சினையை எவ்வளவு விரைவில் தீர்க்க முடியுமோ அவ்வளவு விரைவில் தீர்க்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
இதில் ஒரு முடிவைக் காணவும், நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் வீரப்பன் உடனடியாக ஒன்பது பேரையும் விடுதலை செய்ய வேண்டும். பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்வதில் சிக்கலான சட்டப் பிரச்சினைகளும், தடைகளும் உள்ளன. வீரப்பன் சரணடைந்ததும், அவர் உயிரின் பாதுகாப்புக்கு இரு மாநில அரசுகளும் உத்தரவாதம் அளிக்கும். இரு மாநிலங்களிலும் வீரப்பனுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன.
அவைகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டாக வேண்டும். அந்த வழக்குகளைத் தமிழகத்தில் நடத்த தன்னுடைய ஒத்துழைப்பைத் தர கர்நாடக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு உச்சநீதி மன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இதற்குச் சிறிது காலமாகும். அதனால், பிடித்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நக்கீரன் கோபால் வீரப்பனைச் சந்திக்க அனுப்பப்படுவார்" என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதன் பேரில், வீரப்பனைச் சந்திக்கச் சென்ற கோபால், அங்கே பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஒன்பது பேரில் கலைஞர் கடத்தப்பட்ட வனத்துறை ஊழியர்களை மீட்டு வந்த கோபாலுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தேன். வனக்காவலர் ராஜு உடல் நலம் குன்றியிருந்த காரணத்தால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அவரை மட்டும் 6.8.1997 அன்று அழைத்துவந்து என்னிடம் ஒப்படைத்தார்.
நான், சென்னையிலே அவரை ஒரு மருத்துவ மனையிலே சேர்த்து சிகிச்சை அளிக்கும் படிக் கூறினேன். 9.8.1997 அன்று கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சரும் - வனத்துறை அமைச்சரும் அந்த மாநில அதிகாரிகளுடன் என்னைச் சந்தித்து, வீரப்பனிடம் பிடிபட்டுள்ள கர்நாடக மாநில அலுவலர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு தங்களுடைய நன்றியைத் தெரிவித்ததோடு, பணயக் கைதிகளை விடுவிக்க மேலும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டுமென்று கோரினார்கள்.
அனைத்து உதவிகளையும் செய்வதாக நானும் அவர்களுக்கு உறுதி கூறினேன். பயணக் கைதிகளை விடுவிக்க மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இரண்டு மாநில அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் - "தமிழ்நாடு அரசும், கர்நாடக மாநில அரசும் ஆழ்ந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நக்கீரன் கோபால் மூலமாக சந்தனக் கடத்தல் வீரப்பனிடம், ஏற்கனவே தெரிவித்த வேண்டுகோளை மீண்டும் தெரிவித்து, உடனடியாக பயணக் கைதிகளை விடுதலை செய்திட வேண்டும் என்ற கருத்தினைத் தெரிவிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிணைத் தொகை கொடுப்பதில்லை என்று அரசுகள் வீரப்பன் கொடுத்தனுப்பிய 'கேசட்டை' தமிழகத்திலே தனி சிறப்பு என்னிடம் தந்தார் 'நக்கீரன்' கோபால் முடிவெடுத்துள்ளன. வீரப்பன் சரண் அடைவாரேயானால், அவருடைய உயிருக்குப் பாதுகாப்பு தரப்ப
டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், முகாமில் ஒரு குறைந்த அளவு காலக் கட்டத்திற்கே சட்டப்படி வீரப்பன் வைக்கப்பட நேரிடும். சட்ட விதிகளின்படி ஏற்கனவேயே அதிகபட்ச சலுகைகள் வீரப்பனுக்கு வழங்க அரசாங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. எனவே பெருந்தன்மையோடு தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முறைகளையேற்று, பிணைக் கைதிகளை விடுவித்து, வீரப்பன் சரணடைய வேண்டும். இந்தப் பெருந்தன்மையான அறிவிப்புகளை வீரப்பன் ஏற்க மறுத்தால், இரண்டு அரசாங்கங்களுக்கும் சட்டப்படி நட வடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை.
பிணைக் கைதிகளின் உயிர்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமேயானால், அதற்கு வீரப்பன் மட்டுமே காரணம் என்பதோடு, அதற்கான விலையினை அவர்தான் தர வேண்டி இருக்கும்." என்று தெரிவிக்கப்பட்டது. 19.8.1997 அன்று சென்னையில் கர்நாடக மாநில அரசின் சார்பில் முதலமைச்சர் ஜே.எச்.படேல், வனத் துறை அமைச்சர் குருபாதப்பா, உள்துறை அமைச்சர் ரோஷன் பேக், சட்டத்துறை அமைச்சர் எம்.சி. நானையா மற்றும் அதிகாரிகள் என்னைச் சந்தித்து, வீரப்பன் சரண் அடைவது குறித்து நீண்ட நேரம் ஆலோசித்தனர்.
அந்த ஆலோசனைகளின் முடிவுகளை எடுத்துக்கொண்டு நக்கீரன் கோபால் வீரப்பனைச் சந்திக்க செல்வதென்றும், அதன் பின்னர் வீரப்பன் சரணடையும் கலைஞர் நாளும், இடமும் அறிவிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆறு வாரங்களாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநில வனத்துறையைச் சேர்ந்த பிணைக் கைதிகளில் மீதமிருந்த எட்டு பேரையும், 24.8.1997 அன்று இரவு நக்கீரன் கோபால் வசம் ஒப்படைத்து விட்டதாகவும், விடுவிக்கப்பட்டவர்களுடன் 25 ஆம் தேதி சென்னையில் சந்திப்பதாகவும் நக்கீரன் கோபாலிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது.
கர்நாடக முதல்வரையும் தொடர்புக்கொண்டு செய்தியைத் தெரிவித்தேன். அவரும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தார். 25.8.1997 அன்று எட்டு பேருடன் சென்னை திரும்பிய நக்கீரன் கோபால், சென்னை தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்து, அவர்கள் எட்டு பேரையும் என்னிடம் ஒப்படைத்தார். வீரப்பன் சரண் அடைவது குறித்து அவர் தெரிவித்த அத்தனை நிபந்தனைகளையும் அரசு சார்பில் ஒப்புக்கொள்ளாத காரணத்தால், அவர் சரண் அடைவதைப் பற்றி மறு பரிசீலனை செய்து கூறுவதாகச் சொன்னார்.
வீரப்பனால் விடுவிக்கப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த 8 வனத்துறை அலுவலர்களும் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். எட்டு பேரையும் பத்திரமாக அழைத்து வந்ததற்காக நக்கீரன் கோபாலுக்கு நான் பொன்னாடை போர்த்தி, பாராட்டு தெரிவித்தேன். கர்நாடக முதலமைச்சர் என்னைத் தொடர்புக்கொண்டு, தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாக மீண்டும், மீண்டும் கூறினார். மேலும் அவர் எழுதிய கடிதத்தில் "வீரப்பனால் பிடித்துச் செல்லப்பட்ட எட்டு பேரின் பாதுகாப்பு குறித்து கர்நாடக மாநில மக்கள் மிகுந்த கவலை கொண்டிருந்தனர்.
அவர்களைப் பத்திரமாக விடுவிக்க நீங்களும், தமிழக அரசு அதிகாரிகளும் இதயப்பூர்வமாக மேற்கொண்ட முயற்சிகள் மதிப்பிட முடியாதவை. உங்களது இந்த உதவிக்காகவும், பல ஆண்டு கால குற்ற நடவடிக்கைகளுக்கு நல்ல முடிவு ஏற்படுத்தியதற்காகவும், தனிப்பட்ட முறையிலும், கர்நாடக அரசு சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விஷயத்தில் முக்கிய பங்காற்றிய நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலுக்கு எனது நன்றியைத் தெரிவியுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
வீரப்பன் சரண் அடைவதைப் பற்றி - அப்படி சரண் அடைந்தால் தி.மு. கழக அரசுக்குப் பெயர் வந்துவிடுமோ என்று நினைத்து அதற்கு ஒரு சாரார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். "வீரப்பனை தனிமுகாமில் வைத்தால் வழக்கு தொடருவேன்" என்று ஒருவர் அறிக்கை விடுத்தார்.
மற்றொரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, "வீரப்பன் நீதிமன்றத்திற்கு வரும்போது துப்பாக்கியால் சுடுவேன்" என்று பகிரங்கமாகக் கூறினார். அனைத்திற்கும் மேலாக, ஜெயலலிதா "வீரப்பன் சரணடைவதை ஏற்கக் கூடாது" என்றே கூறினார். இத்தகைய எதிர்ப்புகளின் விளைவாக வீரப்பன் சரணடைகின்ற திட்டம் நிறைவேறாமலே போய்விட்டது என்பதுதான் உண்மை.
