நெஞ்சுக்கு நீதி
ஒட்டு மாங்கனி · 334 / 391
22. ஒட்டு மாங்கனி தேர்தல் நிதியாக நான் திரட்டிய ரூ 11 இலட்சத்தை அண்ணா அவர்களிடம் வழங்கினேன். 17-6-1997 அன்று டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான குழுவின் கூட்டத்திலே - இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவினை நீக்க வேண்டுமென்று கருத்தினைத் தெரிவித்து, சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் பேசினார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், 356 ஆவது பிரிவு குறித்து தி.மு. கழகத்தின் கருத்தினை தெளிவாக்கியும் நான் ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.
அந்தக் கருத்து நீண்ட நாட்களாக என்னுடைய உணர்வுகளோடு ஒன்றுபட்ட கருத்து என்பதால், இந்தத் தொடரில் அந்தக் கடிதத்தின் சில முக்கிய பகுதிகள் இடம் பெறுவது பொருத்தமுடையதாகவே இருக்கும். அது வருமாறு: "இதுவரை 105 முறை தகாத வழியிலும், தவறான வழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் நிலைக் குழுக் கூட்டத்தில் நீங்கள் கருத்து வெளியிட்டுள்ளது குறித்துக் கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
"நிலைக் குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் (இ) மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே அரசியல் சட்டப் பிரிவு 356 ஐ தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக எனக்குத் தெரிய வந்துள்ளது. இப்போதைய கலைஞர் புதுடெல்லி ஐக்கிய முன்னணி உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டேன். நிலை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுமேயானால், சீர்திருத்தங்களை எல்லாம் எதிர்க்கும் பிற்போக்குத்தனமான அரசு - அதுவும் தேவையான பெரும்பான்மை இல்லாத ஒரு அரசு மத்தியில், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருமேயானால், இடதுசாரி கருத்துக்களைக் கொண்டிருக்கிற காரணத்தால் இடதுசாரி அரசை டிஸ்மிஸ் செய்யலாம்.
இது அனுபவ ரீதியில் இல்லாவிட்டாலும் நடக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம். 17-6-1997 அன்று நிலைக் குழுக் கூட்டத்தில் - உங்கள் நிலை குறித்து கேள்விப்பட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஐக்கிய அமைப்பில் அதிக நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில், பின்வரும் கருத்துக்களை நீங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் சட்டப் பிரிவு 356ல் உள்ள "இல்லாவிடில்" (Otherwise) என்கிற வார்த்தை நீக்கப்படவேண்டும்.
ஆளுநரிடம் மட்டுமே அறிக்கை பெற்று, "தவறு செய்த அரசு" என்று கருதப்படும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு காரணம் கேட்டு அறிக்கை (Show cause Notice) அனுப்பப்படவேண்டும். எதிரி நாடுகளோடு எந்த ஒரு மாநில அரசாவது ரகசியத் தொடர்பு கொண்டிருப்பது போன்ற பரபரப்பு தகவல் ஏதாவது மத்திய அரசுக்குக் கிடைக்கப் பெற்றால், அப்போது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஆளுநரை டெல்லிக்கு வரச் செய்து, கிடைத்த தகவல்களை அவரிடம் தெரியப்படுத்தி, அவரை திருப்திப்படுத்தி, அதுகுறித்து அறிக்கை அனுப்ப ஆளுநரை மத்திய அரசு கேட்டுக்கொள்ளவேண்டும்.
"ஆளுநர் போன்ற ஒருவரை மத்திய அரசு திருப்திப்படுத்த முடியாவிட்டால், எப்படி நாடாளுமன்றத்தையோ, உலகத்தையோ மத்திய அரசு திருப்திப்படுத்த முடியும்? "மாநில ஆளுநருக்கும் தெரிவிக்காமல், மத்திய அரசு மாநில அரசுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால், அப்போது சுயமரியாதை உள்ள எந்த ஒரு ஆளுநரும் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் - ராஜ்பவனில் ஒரு நிமிடம்கூடத் தொடர்ந்து தங்கியிருக்கமாட்டார். மிகவும் முக்கியமாக, காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதற்கான அதிகாரம் ஆளுநரிடம் இருக்கக் கூடாது.
அப்படி இருந்து விட்டால் ஆளுநர் பெரிய தடி வைத்துக்கொண்டிருக்கும் ஒரு சிறிய சர்வாதிகாரி போலவும், முதல் அமைச்சர்கள் எல்லாம் பள்ளி மாணவர்கள் நிலைக்கு தாழ்ந்தவர்கள் போலவும் இருக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய "இல்லாவிடில்" (Otherwise) என்கிறவார்த்தை நீக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். "விபரீதகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விபரங்கள் தொடர்பான காரணம் கேட்டு அனுப்பப்படும் அறிக்கைகளை விநியோகிப்பது தொடர்பாக சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தப் பகுதி அனுமதிக்கப்பட்டால், காரணம் கேட்டு அனுப்பப்படுகின்ற அறிக்கைகளை ரத்து செய்ய அதுவே போதுமானதாக கலைஞர் மானதாக அமைந்து விடும். எதையுமே விபரீத விளைவுகள் ஏற்படுத்தக் கூடியவை என்று எடுத்துக்கொள்ளலாம். "அரசியல் அமைப்புப் பேரவையில் (Constituents Assembly) திரு.எம்.வி. காமத் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, தேநீர் கடையில் இரண்டு பேர் மோதிக்கொண்டால்கூட, விபரீத விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய சம்பவம் என்று அதை எடுத்துக்கொள்ளலாம்.
(உண்மையில் பல சாதிச் சண்டைகள் அவ்வாறு தான் ஆரம்பமாகின்றன) எனவே தான் விபரீத விளைவுகள் என்று குறிப்பிடப்படும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்பதற்காக நாம் போராடியாக வேண்டும். எப்பேர்ப்பட்ட விளைவுகளானாலும், மத்திய அரசு ஒரு வாரம் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடில், அந்தப் பிரிவுக்காகக் காத்திராமல், தேவை ஏற்பட்டால் ராணுவத்தை அனுப்பி நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யலாம்.
எதுவும் அதை தடைபடுத்திவிட முடியாது. "தவறு" செய்யும் மாநில சட்ட மன்றங்களை மத்திய அரசு உடனடியாகக் கலைத்து விடக்கூடாது. மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பின்னரே அதைச் செய்ய வேண்டும். கவனிக்கத்தக்க மிக முக்கிய அம்சம் இதுதான். "மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறிப்பிட்ட நான்கு வாரத்திற்குள், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப் படாவிட்டால், அந்த மாநில சட்ட மன்றம் தானாகவே உயிர் பெற்று செயல்பட்டதாகக் கொள்ளவேண்டும்.
முடக்கி வைக்கப்பட்ட சட்டமன்றம் தாமாக மீண்டும் செயல்படுவதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் எதுவும் தேவையில்லை என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டும். "அரசியல் சட்டப் பிரிவு 356 தவறாகவும், முறையற்றும் பயன்படுத்தப்படாமல் தடுக்கப்பட மேற்காணும் முறைகள் மிகவும் அரசியம் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். எனவே, நடவடிக்கை குறிப்பேட்டில் முடிவுகள் எழுதப்படுவதற்குள் நீங்கள் மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலுக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் மேற்காணும் வரிகளை வலியுறுத்தி கடிதம் எழுதுங்கள் என்று ஜனநாயகத்தின் பேரிலும் - ஐக்கிய அமைப்பின் பேரிலும் உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
"ஜனநாயகத்திற்கும், ஐக்கிய அமைப்பிற்கும் எதிரான அந்தப் பிரிவை நாம் நீக்கத் தவறிவிட்ட காரணத்தால், 356 ஆவது பிரிவு குறித்து விவாதிக்கப்பட்ட நிலைக் குழுக்கூட்டத்தில் நீங்கள் எடுத்த திடமான முடிவு குறித்து மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசுக்கு உடனடியாகக் கடிதம் எழுத உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" - இவ்வாறு நான் கடிதம் எழுதியதின் தொடர்ச்சியாக, 17-7-1997 அன்று டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான குழுக்கூட்டத்தில், "மாநில அரசுகளைக் கலைக்க வகை செய்யும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356 ஆவது விதியை மத்திய அரசு தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கான எந்த விதியையும் நாங்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை" என்றும், அதில் உள்ள "அல்லது பிற காரணங்களுக்காக - என்ற சொற்றொடர் அடியோடு நீக்கப்பட வேண்டும்" என்றும் வலியுறுத்திப் பேசினேன்.
மேலும் அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போது, ஒவ்வொரு பொருள் வாரியாகத் தனித்தனியாகக் கருத்துக்களை எடுத்து வைத்து அதனை வலியுறுத்தினேன். ஆனால் அந்தக் கருத்துக்கள் குறித்து இதுவரை மத்திய அரசு அளவில் எந்த வகையான தீர்வும் காணப்படாமல் உள்ளது என்பது என் மனதிலே இன்றளவும் உள்ள ஒரு குறைதான். அந்தக் குறை தீர்க்கப்படாத போதிலும், அப்போது நானும், என்னைப் போன்ற மாநில முதல் அமைச்சர்களும் தெரிவித்த கருத்துக்களின் காரணமாக, 356 விதியைப் பயன்படுத்தும் நிகழ்வுகள் மிகவும் குறைந்துவிட்டன என்பதும், அதற்கு என்னைப் போன்றவர்கள் எழுப்பிய கேள்வியும் காரணம் கலைஞர் என்பதும் ஓரளவிற்கு மனதிற்கு ஆறுதலைத் தரக்கூடியவையாக உள்ளன.
டெல்லியில் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துக்கொண்டு சென்னை வந்தவுடன், கழகத்தின் முன்னணி எழுத்தாளர்களின் ஒருவரும், மேலவையில் கழக உறுப்பினராக இருந்தவருமான ஏ.கே. வில்வம், 21-6-1997 அன்று மறைந்துவிட்டார் என்ற செய்திதான் என்னை வரவேற்றது. உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், உடல் நலம் தேறாமலே மறைந்தார். அவர் இறக்கும்போது அவருடைய வயது 65. பேரறிஞர் அண்ணா அவர்களுடனும், என்னுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
முரசொலி, முத்தாரம், தென்றல், முல்லை, தென்னகம் - ஆகிய ஏடுகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டமன்ற மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றியவர். சந்திரோதயம், ஓடும் நதி, நம்பிக்கை நட்சத்திரம் போன்ற திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். அவருடைய சொந்த ஊர் வேலூர் மாவட்டம். அவருடைய துணைவியார் அருண்மொழி வில்வம், அவர் இறப்பதற்கு சில திங்கள்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.
இருவரும் காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டவர்கள். என்னுடைய தலைமையிலேதான் அவர்களுடைய திருமணம் 1956 ஆம் ஆண்டு கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. வில்வம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நான், அவரது இல்லம் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினேன். மேலும் பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கழக முன்னணியினர் ஏ.கே.
வில்வம் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு குறித்து நான் எழுதிய இரங்கல் செய்தியில் - "எழுத்தழகன் ஏ.கே. வில்வம் இந்த இயக்கத்தின் ஈட்டி முனையாகப் பேனா முனையைப் பயன்படுத்திய தம்பி!" "இன்று அவர் இல்லை - இயற்கையுடன் கலந்துவிட்டார்."
"இன்னும் பல்லாண்டு இயக்கத் தொண்டும் - இனிய தமிழ்த் தொண்டும் ஆற்றிட வேண்டியவர். ஆயுட் காலத்தை அவரே சுருக்கிக்கொண்டு பூமிக்குள் சுருண்டுவிட்டார். அவர் எழுத்தின் புகழுக்கு இறப்பு இல்லை - அந்தச் சிறப்பு என் தம்பிக்கு உண்டு"! என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கிடையிலே, 1997 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 27,28,29 ஆகிய நாட்களில், சேலம் கலைஞர் மாநகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சிறப்பு மாநாடு என்னுடைய தலைமையிலே நடைபெற்றது.
மாநாட்டு வளாகம் - பேரறிஞர் அண்ணா நகர் - சி.வி.எம். அண்ணாமலை பந்தல் - புதுக்கோட்டை பெரியண்ணன் அரங்கம் - நெல்லை இளைஞரணி கோட்டையப்பன் கொடிமேடை - மாணவமணி ஷேக் தாவூது முகப்பு - சின்னசேலம் வாசுதேவன், நாட்ராம்பள்ளி என்.கே. ராஜா நுழைவு வாயில் - நீல நாராயணன் தியாகிகள் மணி மண்டபம் - கீரை தமிழ்ச் செல்வன் திராவிட இயக்க வரலாறு கண்காட்சிக் கூடம் - என்று பெயர்கள் முறையே சூட்டப்பட்டிருந்தன. மாநில மாநாடு என்ற முறையில் மாநாட்டுத் தலைவராக நானும் - திறப்பாளராக பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியரும் - வரவேற்புக் குழுத் தலைவராக மாவட்டக் கழகச் செயலாளரான தம்பி வீரபாண்டி ஆறுமுகமும் பொறுப்பேற்றோம்.
27-6-1997 அன்று மாபெரும் பேரணி நடைபெற்று பேரணியின் முடிவில் மாநாட்டுத் தலைவரான நான் கொடியேற்றி வைத்தேன். 28-6-1997 அன்று இளைஞர் அணி மாநாடு; அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த தம்பி மு.க. ஸ்டாலின் தலைமையிலே நடைபெற்றது. இளைஞர் அணி மாநாட்டின் திறப்பாளர் வி.பி. இராசன் எம்.எல்.ஏ., - வரவேற்புரை இரா. இராசேந்திரன் பி.ஏ.,பி.எல்., - நன்றியுரை ஆ. செழியன் (ஆமாம், இளம் வயதில் நம்மையும், தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தையும் கண்ணீரில் மிதக்க விட்டுச் சென்ற கழகத்தின் புலிப்போத்து செழியன்தான்).
27 ஆம் தேதி இரவு போலீஸ் கண்ணன் குழுவினர் நடித்த நாடகமும், 28 ஆம் தேதி இரவு ராதாரவி குழுவினர் நடித்த நாடகமும் சிறப்பாக நடைபெற்றன. சேலத்தில் நடைபெற்ற அந்த மாநில மாநாடு பற்றி எழுதும்போது, 1951 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னின்று நடத்திய கழகத்தின் முதல் மாநாடு நினைவிற்கு வருகிறது. அதற்கு முன்பு மாவட்டந்தோறும் பனிரெண்டு மாநாடுகளை நடத்தி முடித்த கையோடு, சென்னையிலே மாநில மாநாடு நடைபெற்றது.
அந்த மாநில மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் என்.வி. நடராசன். அந்த மாநாட்டில் நான் எழுதி நடித்த "இளைஞன் குரல்" நாடகம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது 27. சென்னையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டிலே அண்ணா அவர்கள் பேசும்போது - "நீங்கள் அனைவரும் என்மேல் வைத்துள்ள நம்பிக்கை கெடாமல் இதுவரை நடந்து வந்துள்ளேன். எதிர் காலத்திலும் நடந்துக்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். நான், நானாக ஏதும் செய்வதில்லை.
உங்களில் பலரின் கருத்துக்களைக் கேட்கிறேன் - தொகுத்துப் பார்க்கிறேன் - பிறகு முடிவுக்கு வருகிறேன்." "உங்கள் பேராற்றலை நம்பித்தான் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறேன். அளவு கடந்த பொறுமையுடன் பணியாற்றுகின்றேன். நம்மைப் பற்றி ஆரூடம் கணித்தவர்களின் ஆருடம் பொய்த்துவிட்டது. அந்த அவசர ஆரூடக்காரர்கள் நிச்சயம் மனம் வெதும்பிப் கலைஞர் போவார்கள். இதிலிருந்து நமக்குத் தெரிகிறது - அவர்களிடம் இருப்பது அவசர அகராதியே தவிர, அனுபவ அகராதி அல்ல...!
சிலர் நம்மைச் சந்தேகிக்கிறார்கள் - ஐயம் அவர்களை வாட்டுகிறது. அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் கண்ணியத்திற்குத் தோழன் - கொள்கைக்கு நண்பன் - இடையிலே வரும் பிரச்சினைகளுக்காக நாம் எதற்காக உருவாகி உழைத்து வருகின்றோமோ. அந்த அடிப்படை இலட்சியத்தை இழந்து விட மாட்டோம்" என்று உரைத்திட்ட வாசகங்கள், கழகக் கொள்கை கல்வெட்டுக்கள்.
சென்னை முதல் மாநில மாநாட்டிற்குப் பிறகு, ஐந்தாண்டுகள் கழித்துத்தான் திருச்சியிலே அன்பில் தர்மலிங்கத்தின் அயரா உழைப்பினால் இரண்டாவது மாநில மாநாடு - 1956 ஆம் ஆண்டு, மே திங்கள், 17 முதல் 20 ஆம் தேதி வரையிலே நடைபெற்றது. "திராவிட முன்னேற்றக் கழகம் பொதுத் தேர்தலிலே போட்டியிடுவதா? புறக்கணிப்பதா?"
என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு அந்த மாநாட்டிலேதான் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு மதுரை மூதூரில் திருப்பரங்குன்றத்தில் மதுரைமுத்து அவர்களின் முயற்சியால் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்றது. அதற்கடுத்துத்தான் 1967 ஆம் ஆண்டு சென்னையில் விருகம்பாக்கத்தில், டிசம்பர் 29,30,31 ஜனவரி 1 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்ற மாநாடு. மாநாட்டின
் தலைவர் பேரறிஞர் அண்ணா. மாநாட்டின் திறப்பாளராக நான். கழகப் பொருளாளர் என்ற முறையில் அந்த மாநாட்டில்தான் 11 இலட்சம் ரூபாயை தேர்தல் நிதியாகத் திரட்டி அண்ணா அவர்களிடம் நான் ஒப்படைத்ததும், கழக வேட்பாளர்களின் பெயர்களை அந்த மாநாட்டில் படித்த அண்ணா அவர்கள், "சைதைத் தொகுதியின் வேட்பாளர்" என்று கூறிவிட்டு - சில நிமிடங்கள் யார் பெயரையும் அறிவிக்காமல் இருந்து - அதன் பிறகு "சைதைத் தொகுதியில் தம்பி பதினொரு இலட்சம்" என்று லட்சக் கணக்கான மக்களின் கையொலிக்கிடையே அறிவித்ததும் ஆகும்.
அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிதான் எத்தகையது? ஓ, அந்த நாட்கள்...! இந்த வரிசையிலேதான் 1997 ஆம் ஆண்டு சேலத்திலே மாநில மாநாடு. சேலம் என்றால் ஒரு காலத்தில் அண்ணன் சித்தையன் நினைவுதான் வரும். அவர் பேளுகுறிச்சிப் பெரியவர் ஜி.பி. சோமசுந்தரம் அவர்களுக்கு எழுதிய ஓர் அஞ்சலட்டை யை ஒருமுறை என்னிடம் தம்பி நாகநாதன் கொண்டுவந்து காட்டினார். 28-10-1937 அன்று சேலத்தில் நடைபெற்ற மூன்றாவது மாவட்ட சுயமரியாதை மாநாட்டுக்கு ஜி.பி.
சோமசுந்தரம் அவர்களை வரவேண்டுமென்று சித்தையன் எழுதிய அஞ்சலட்டைதான் அது. அந்தச் சேலம் மாநாட்டிற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்தான் தந்தை பெரியார் பெண்ணுரிமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றியதும் - அந்தத் தீர்மானத்திற்கு இணங்கத்தான் 1989 இல் - அதாவது தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு - அதற்கு அறுபதாண்டுகளுக்குப் பிறகு - எனது முயற்சியினால் - பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தைச் சட்டப் பேரவையில் நான் நிறைவேற்றியதுமாகும்.
ஐந்து முறை பதவிப் பொறுப்புக்கு வந்துள்ள நான், அதை நினைத்து அதிக அளவிற்கு மகிழ்ச்சியோ, இறும்பூதோ எய்துவதில்லை என்ற போதிலும், இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமாக்குவதற்கான வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடையத்தான் செய்கின்றேன். 1997 ஆம் ஆண்டு தி.மு. கழகத்தின் மாநில மாநாடு நடைபெற்ற அதே சேலத்தில்தான். 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாளன்று தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நமது திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டிக்கொண்ட மாநாடு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.
அதே 27 ஆம் தேதியன்றுதான் 97 ஆம் ஆண்டு நடத்திய மாநில மாநாடும் சேலத்தில் தொடங்கியது. கலைஞர் சேலம் மாநாட்டில் மகளிரணியின் அணிவகுப்பு சேலம் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் முதல் நாள் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி பொன்னை கிராமத்தில் முதன் முதலாகக் கழக அரசின் சமத்துவக் கொள்கைக்கான திட்டமான அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை முரசொலிமாறன், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி. மணி, ராணிப்பேட்டை காந்தி எம்.எல்.
ஏ., வேலு எம்.பி., ஆகியோர் கலந்துக்கொள்ள தொடங்கிவைத்து விட்டுத்தான் அப்படியே சேலம் சென்றேன். இரவு 11 மணி அளவில் சேலத்தை சென்றடைந்த நான், நேராக உணவிற்கோ படுக்கைக்கோ சென்றுவிடவில்லை. நேராக மாநாட்டுப் பந்தலுக்குச் சென்று அங்கே தம்பி வீரபாண்டியின் ஏற்பாடுகளைக் கவனித்து விட்டுத்தான் உறங்கச் சென்றேன் - இல்லை; உறங்க அனுமதிக்கப்பட்டேன். அந்த சேலம் மாநாட்டுப் பேரணியைப் பற்றி சென்னை மாலை முரசு ஏடு எழுதும்போது, "சேலம் தி.மு.க மாநாட்டுக்கு தி.மு.க.
தலைவரும், முதல் அமைச்சருமான கலைஞர் எழுதிய கடிதத்தில் "சேவலென நிமிர்ந்து வா- செங்கதிராய் கிளம்பி வா" என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது அழைப்பை ஏற்று, தி.மு.க. தொண்டர்கள் சேவலென நிமிர்ந்து வந்தனர் - செங்கதிராய் பிரகாசித்தனர். அவர்கள் கம்பீரமாக வந்த பேரணியின்போது அதிகாலையில் சேவலும் கூவிற்று - அதன் பிறகு செங்கதிரோனும் உதயமானது" என்று எழுதியிருந்தது.
சேலம் பேரணியில் விவசாய அணியைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் தலைப்பாகை அணிந்து, அதில் கறுப்பு சிவப்பு நிற பார்டர் போட்ட துண்டுகளை அணிந்து வந்தது சிறப்பான காட்சியாக அமைந்தது. சுமார் 100க்கு மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மஞ்சள் தலைப்பாகை அணிந்து ஏர் கலப்பையுடன் விவசாய அணியினர் கலந்துக்கொண்டனர். விவசாய அணியின் செயலாளர் தம்பி கே.பி. ராமலிங்கம் பேரணியில் மஞ்சள் தலைப்பாகை அணிந்து மாட்டு வண்டி ஓட்டியபடி வந்தார்.
அந்தப் பேரணியில் சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்றனர். 4.30 மணிக்குத் தொடங்கிய பேரணியின் தலைப் பகுதி இரவு 9 மணி அளவில் தான் நாங்கள் அமர்ந்திருந்த தனி மேடையை அடைந்தது. பேரணியை வரவேற்புக் குழுத் தலைவர் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கிவைத்தார். ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி, சென்னை மாநகர மேயராக இருந்த தம்பி மு.க. ஸ்டாலின் வழி நடத்தினார். திறந்த ஜீப்பில் வந்த ஸ்டாலினுடன் தம்பிகள் அன்பில் பொய்யாமொழி, ஆ.
செழியன் ஆகியோர் உடன் நின்றிருந்தனர். (இன்று இருவருமே இல்லை) மேடையில் இருந்தவாறு இளைஞர் அணியின் அணிவகுப்பு மரியாதையை நான் ஏற்றுக்கொண்டேன். பேரணியைப் பார்வையிட 27-6-1997 அன்று மாலை 5.30 மணி தளபதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியின் பேரணி அளவில் தனி மேடைக்கு நான் வருகை தந்தேன். 28-6-1997 அன்று காவை 8 மணிவரை அந்தக் தனி மேடையிலேயே விடிய, விடிய கண்விழித்துப் பேரணியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
மாலை 5.30 மணிக்கு தனி மேடைக்கு வந்து நாங்கள் கலைஞர் எல்லாம் அமர்ந்தோம். பத்து மணிவரை நாஞ்சிலார் இருந்தார். பிறகு நாங்களே அவரை "உங்களுடைய உடம்புக்கு ஆகாது, ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தோம். 12 மணி வரை பேராசிரியர் இருந்தார். மீண்டும் நான் திரும்பி அவரது இருக்கையை பார்த்தபோது அவர் இல்லை. அவருக்கும் உடல்நிலை தாங்காது என்பதால் அவரும் சென்று விட்டார். என்னுடைய இன்னொரு பக்கம் முரசொலி மாறன் அமர்ந்திருந்தார்.
அவர் இருக்கின்றாரா என்று நான் திரும்பிப் பார்த்தபோது, "மாமாவிடம் சொல்லாதீர்கள்" என்று வீராசாமியிடம் கூறிவிட்டு அவரும் போய் விட்டிருக்கிறார். நானும் வீராசாமியும். துரைமுருகனும், டி.ஆர். பாலுவும், திண்டிவனம் வெங்கட்ராமனும், வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த வீரபாண்டி ஆறுமுகமும் காலை 8 மணிவரை இருந்துவிட்டு . ஊர்வலம் முடிகிறவரை இருந்து பார்த்து விட்டுத்தான் செல்ல வேண்டுமென்று நான் கூறியபோது, அதற்கு பிற்பகல் 1 மணி ஆகும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டோம்.
சேலம் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நீலநாராயணன் தியாகிகள் மணி மண்டபத்தையும், கீரை தமிழ்ச் செல்வன் திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சிக் கூடத்தையும் நான் திறந்து வைத்ததோடு, அந்தக் கண்காட்சிக் கூடத்தையும் சுற்றிப் பார்த்தேன். முதல் நாள் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டைத் தொடங்கிவைத்து தம்பி ஸ்டாலின் பேசும்போது, "வேலியாக இருந்து இனத்தை, மொழியைக் காப்போம் - அதற்கு விலை உயிர்தான் என்றால் அதற்கும் தயாராவோம் - கலைஞர் தலைமையில் பொற்காலம் அமைந்திட திட்டமிட்டு உழைத்திடுவோம், வாரீர், வாரீர்" என்று அழைத்தார்.
வரவேற்புரையாற்றிய வீரபாண்டி ஆறுமுகமோ, "சேலத்தில் குவிந்தது வாடகைக் கூட்டம் அல்ல - செந்தமிழர் வாகை சூட உழைக்கும் கூட்டம் - உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரே கட்டளையிடுக - காரியமாற்றக் காத்திருக்கிறோம்" என்று முரசறைந்தார்.
சிறப்பு விருந்தினரான சந்திரபாபு நாயுடு பேசும்போது, "கலைஞருக்கு அறிஞர் அண்ணா எப்படித் தலைவரோ, அதைப்போல கலைஞர் எனக்குத் தலைவர் என்றும், "மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கலைஞரின் கனவு நனவாகி வருகிறது" என்றும், உணர்ச்சி மிக்கதோர் உரையாற்றினார்.
தமிழ் இன உணர்வை - பகுத்தறிவுக் கொள்கையை வளர்த்து, சாதி வெறிக்கு அப்பாற்பட்ட தமிழகத்தை உருவாக்கிட இளைய சமுதாயம் சூளுரைத்துப் புறப்பட வேண்டுமென்றும், தாழ்ந்து கிடக்கின்ற தமிழர் உரிமைகளை ஓங்கி ஒலித்திட கலைஞரின் கரத்தைத் தமிழர்கள் எல்லாம் வலிமைப்படுத்துவீர் என்றும் கழகச் சிறப்பு மாநாட்டினைத் திறந்து வைத்துப் பேராசிரியர் உரையாற்றினார். வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து செயல்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் பற்றி நான் மாநாட்டிலே குறிப்பிடும்போது - "கட்டபொம்மனுக்கு ஊமைத்துரையைப்போல எனக்கு வீரபாண்டி ஆறுமுகம்!"
"வீரபாண்டி ஆறுமுகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளபதிகளில் ஒருவர். நெருக்கடி நிலை காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னணியினரை - நாடாளுமன்ற உறுப்பினர்களை - சட்டமன்ற உறுப்பினர்களை அடக்குமுறை வாட்டிய நேரத்தில், அதற்கு விதிவிலக்கு இல்லாமல் அந்த அடக்கு முறைக் கொடுமைக்கு ஆளான குடும்பம் தம்பி வீரபாண்டியின் குடும்பம். இந்த இயக்கத்திற்கு ஒரு மதுரை முத்து கலைஞர் கிடைத்ததைப்போல - ஒரு மன்னை நாராயண சாமி கிடைத்ததைப்போல - ஒரு அன்பில் தர்மலிங்கம் கிடைத்ததைப்போல - தம்பி வீரபாண்டி ஆறுமுகம் கிடைத்திருக்கிறார்.
புராணிகர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால், முருகனுக்கு வீரபாகுவைப்போல எனக்கு வீரபாண்டி ஆறுமுகம். வரலாற்று வரிகளிலே சொல்ல வேண்டுமென்றால், கட்டபொம்மனுக்கு ஊமைத்துரையைப் போல, எனக்கு வீரபாண்டி ஆறுமுகம்" என்று கூறினேன். அவரை நோக்கி நான், "மாநாட்டிலே மிச்சம் எவ்வளவு?"
என்றேன். "உங்கள் வயதுதான்" என்றார். அதாவது அப்போது என்னுடைய வயது 74 என்பதைக் குறிக்கும் வகையில், 74 இலட்சம் ரூபாய் தலைமைக் கழகத்திற்கு மாநாட்டு நிதியாக வழங்கப்பட்டது. சேலம் மாநாட்டினைக் காண சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில முதல் அமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு அவர்கள் வருகை தந்ததைப் பற்றி நான் பேசும்போது, "அவருடைய வருகை என்னை மாத்திரமல்ல - திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர்களை மாத்திரமல்ல - தமிழ்நாட்டு மக்களையே பெருமைப்படுத்துகின்ற வருகை என்று சொன்னால் அது மிகையாகாது" என்று குறிப்பிட்டேன்.
அவர் மாநாட்டில் பேசும்போது, "அவருடைய வாழ்க்கையில் - இதைப் போன்ற ஒரு மாநாட்டைக் கண்டதே இல்லை" என்று குறிப்பிட்டார். சேலம் மாநாட்டில் நான் ஒண்ணே முக்கால் மணி நேரம் உரையாற்றினேன். மத்திய மாநில உறவுகள் - தமிழ்நாட்டில் அரசியல் நிலை - சேலம் மாநகரின் சிறப்புகள் - மாநாட்டின் பெருமைகள் பற்றிப் பேசினேன். என் பேச்சை இவ்வாறு முடித்தேன். "சேலம் சிறப்பு மாநாட்டுச் சிறப்புச் செய்தியாகச் சொல்கிறேன்.
தம்பிகளே! தங்கைகளே! உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே! "கலைஞருக்குப் பேரறிஞர் அண்ணா எப்படித் தலைவரோ - அதுபோல் கலைஞர் எனக்குத் தலைவர்!"- என சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார் "சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கேற்ப அமைத்திட வாரீர்! சாதி சமூகக் கொடுமைகள் களைந்து, சமதர்மத் தமிழ்ச் சமுதாயம் சமைத்திட வாரீர்! இங்கே பிறந்த தமிழன் சிங்கப்பூரில் - மலேசியாவில் உலகப் பிரஜையாக வாழ்கிறான் - உழைத்து வாழ்கிறான்.
உல்லாசமாக வாழ்கிறான். ஆனால் பிறந்த நாட்டிலே விதியை நொந்துக்கொண்டு, சாதிச் சனியனில் அகப்பட்டுக்கொண்டு வறுமையில் வாழ வேண்டுமா? இதை மாற்ற வேண்டாமா? மாற்ற வேண்டும்; மாற்றியே தீர வேண்டும்; அதை இப்போதே துவக்குவோம், வாரீர்! "Once again, I call upon my Dear D.M.K. Brothers and Sisters to re-&dedicate themselves to Social Reconstruction. "ஆட்சி என்பது தூக்கி எறிந்து விடக்கூடிய அங்கவஸ்திரம். நிலையானது, தமிழ்ச் சமுதாயத்தின் நல்வாழ்வுதான்.
தமிழ்ச் சமுதாயத்தைக் காப்போம் - தமிழர்களாக வாழ்வோம் - தமிழகத்தை இழக்க மாட்டோம் - இழக்க மாட்டோம் திராவிட முன்னேற்றக் கழகம் வளர்க! அண்ணாவின் புகழ் வெல்க, வெல்க என்று கூறி அமர்கிறேன்" எனது உரையைப் பற்றி 1-7-1997 தேதிய தினமணி நாளேடு "முதல்வரின் ஒட்டு மாங்கனி" என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில், "சாதிகளற்ற கலைஞர் சமுதாயத்தை 21 ஆம் நூற்றாண்டில் உருவாக்க வேண்டும் என்பதே சேலம் தி.மு.க.
மாநாட்டின் சிறப்புச் செய்தி என தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி அறிவித்திருப்பது மிகவும் ஏற்புடையது. புதிய ஒட்டு மாங்கனியைத் தோற்றுவிக்க வேண்டும் எனக் கனவு காண்பதாகவும், இதற்கு மக்களைத் தயார்படுத்துமாறும் தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பு அவரது கட்சியின் தொண்டர்களுக்கு மட்டுமின்றி, சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்குமே பொருத்தமானது" என்று குறிப்பிட்டிருந்தது.
