உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பூனைக் குட்டியும், யானையும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பூனைக் குட்டியும், யானையும்! · 333 / 391

கலைஞர் 21. பூனைக் குட்டியும், யானையும்! குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற கே.ஆர். நாராயணனை நான் வாழ்த்தினேன் - நட்புணர்வுடன் என்னைத் தழுவிக்கொண்டார். கு டியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா அவர்களின் பதவிக் காலம் 1997 ஆம் ஆண்டு, ஜூலை திங்கள், 24 ஆம் தேதியோடு முடிவடைவதாக இருந்ததையொட்டி. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 9-6-1997 அன்று வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையாளர்களாக அப்போது இருந்து டாக்டர் எம்.எஸ். கில், ஜி.வி. கிருஷ்ணமூர்த்தி, ஜெ.எம். லிங்டோ ஆகியோர் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை மாதம் 14 ஆம் தேதி தேர்தல் நாள் என்று அறிவித்தனர். மக்களவை உறுப்பினர்கள் 543 பேர் - மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் - அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் 4072 பேர் அந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

6-6-1997 அன்று இந்தப் பிரச்சினை குறித்து நான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஜூலை மாதம் நடைபெற இருக்கின்ற குடியரசுத் தேர்தலில் வேட்பாளராக - அப்போது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த திரு.கே.ஆர். நாராயணன் அவர்களை தி.மு. கழகம் ஆதரிப்பதென்றும், அந்தக் கருத்தை ஐக்கிய முன்னணிக்கு பரிந்துரைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தேன்.

ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எச்.டி. தேவகவுடா அவர்களுடைய தலைமையில், 16-6-1997 அன்று டெல்லியில் நடைபெற்று, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பற்றி விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த தேவகவுடா அவர்கள், தனக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் இல்லை என்றும் - அதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபடவில்லை என்றும், திட்டவட்டமாகத் தொடக்கத்திலேயே அறிவித்துவிட்டார்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு உடனடியாக வெளியிடப்படவில்லை. "ஏகமனதாக முடிவெடுக்கப்பட்ட போதிலும், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு அறிவிக்கப்படும்" என்று ஐக்கிய முன்னணியின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார்.

ஐக்கிய முன்னணியின் அமைப்பாளரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியை சந்தித்துப் பேசினார். அப்போது ஐக்கிய முன்னணி காங்கிரஸ் கூட்டு வேட்பாளராக குடியரசுத் துணைத் தலைவர் கே.ஆர். நாராயணனை நிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டு, அது ஏடுகளுக்கு அறிவிக்கப்பட்டது. பி.டி.ஐ. செய்தியாளர் உடனடியாக என்னிடம் தொடர்பு கொண்டு, "நீங்கள் தான் முதல் முதலாக கே.ஆர். நாராயணன் பெயரை அறிவித்திருந்தீர்கள்.

இப்போது அவருடைய பெயரையே ஐக்கிய முன்னணியின் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறாரே?" என்று கேட்ட போது, "தி.மு.க. சார்பாக தலைமைக் குழு கூடி ஏற்கனவே ஐக்கிய முன்னணிக்கு திரு. நாராயணன் அவர்கள் பெயரைச் சிபாரிசு செய்துள்ளோம். அதேபோல த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்களும் சிபாரிசு செய்தார். அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு ஐக்கிய முன்னணி அவரை வேட்பாளராக நிறுத்தியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐக்கிய முன்னணி மாத்திரமல்லாமல், காங்கிரஸ் கட்சியும் அவரை ஆதரிப்பது கலைஞர் 1997 குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் வாக்களிக்க, அருகே மூப்பனார். வரவேற்கத் தக்கது - பாராட்டத்தக்கது. அந்த முடிவை எடுத்த காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரிக்கு நன்றி" என்று கூறினேன்.

20-6-1997 அன்று ஐக்கிய முன்னணி - காங்கிரஸ் கூட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குடியரசு துணைத் தலைவர் கே.ஆர். நாராயணன் தனது வேட்பு மனுவை பிரதமர் குஜ்ரால் , காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி ஆகியோருடன் சென்று தாக்கல் செய்தார். தி.மு. கழகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் முன்மொழிந்தார். மொத்தம் 60 பேர் வேட்பு மனுவை முன்மொழிய, 60 பேர் வழி மொழிந்திருந்தனர். 14-7-1997 அன்று இந்தியாவின் 10 ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

17-7-1997 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. கே.ஆர். நாராயணன் அவர்களை முதன் முதலாக வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்றும், ஆதரவு தர வேண்டுமென்றும் கோரியது தி.மு.க. தான். அந்தத் தேர்தலில் பின்னர் அவரை ஐக்கிய முன்னணியிலே உள்ள கட்சிகள், காங்கிரஸ் கட்சி, த.மா.கா., பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் ஆதரித்தன. சிவசேனா மற்றும் ஐக்கிய முன்னணி வேட்பாளர் கே.ஆர். நாராயணன் பெற்ற வாக்குகள் 94.97 சதவிகிதம் சில சுயேச்சைகள் ஆதரவுடன் டி.என்.

சேஷன் அவர்கள் எதிர்த்துப் போட்டியிட்டார். பல்வேறு மாநிலச் சட்டப் பேரவைகளிலும் தேர்தல் நடைபெற்று, அந்த வாக்குப் பெட்டிகள் எல்லாம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குக்கொண்டு வரப்பட்டு, அங்கே தான் தேர்தல் அதிகாரி எஸ். கோபாலன் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அந்தத் தேர்தலில் கே.ஆர். நாராயணன் அவர்கள். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என். சேஷனைவிட பெருமளவிலான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

கே.ஆர்.நாராயணன் அவர்களுக்கு 4,231 வாக்குகளும், டி.என். சேஷனுக்கு 240 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்குகளுக்கான மதிப்பு என்ற அடிப்படையில் கணக்கிட்டபோது, நாராயணன் அவர்களுக்கு கிடைத்த வாக்குகளின் மதிப்பு 9,56,290. டின்.என். சேஷனுக்குக் கிடைத்த வாக்குகளின் மதிப்பு 56,631. அதாவது நாராயணன் அவர்களுக்கு 94.97 சதவிகித வாக்குகளும், டி.என். சேஷனுக்கு 5.03 சதவிகித வாக்குகளும் கிடைத்தன. அதிலே வேடிக்கை என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அளித்த வாக்குகளில் 171 வாக்குகள் செல்லாதவை என்றால், எந்த அளவிற்கு நமது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம்.

வெற்றிச் செய்தி கிடைத்தவுடன் கே.ஆர். நாராயணனுக்கு நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் "உலகிலேயே மிகுந்த மக்கள் தொகைக்கொண்ட ஜனநாயகத் திருநாடான இந்தியாவின் குடியரசுத் தலைவராக, இதுவரை இல்லாத கலைஞர் சிவசேனா ஆதரவுடன் எதிர்த்து - தோல்வியுற்ற டி.என். சேஷன் பெற்றது 5.03 சதவிகிதம் அளவிற்கு மிக அதிகமான வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு என்னுடைய இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தங்களுக்கு உரித்தாக்குகின்றேன்.

இந்தத் தேர்தல் இந்திய நாடாளுமன்றமும், மாநிலச் சட்டமன்றப் பேரவைகளும் தங்களுடைய அரசியல் நுட்பம் வாய்ந்த தலைமையில் கொண்டுள்ள நல்ல நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் உங்கள் வெற்றி, நாட்டின் ஒருமித்த விருப்பத்தையும் நமது ஜனநாயகத்தில் நலிந்த பிரிவினரின் வெற்றிச் சரித்திரத்தையும் வெளிப்படுத்துகிறது. சமூக நீதி புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தங்களுடைய தலைமையில் நமது நாடு மேலும் வளர்ச்சியையும், அமைதியையும் பெற்று சிறந்து விளங்கும் என்று நம்புகிறேன்" என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன். குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவிற்கு நான் அவசியம் வரவேண்டுமென்று அழைத்ததின் பேரிலும் - தமிழ்நாட்டிற்கு ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து திட்டக்குழு துணைத் தலைவர் மதுதண்டவதேயுடன் விவாதம் நடத்த வேண்டியிருந்ததாலும், 24-7-1997 அன்று டெல்லி சென்றேன்.

டெல்லி சென்றதும், நேராக கே.ஆர். நாராயணன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். என்னுடன் வந்திருந்த முரசொலி மாறனும். ஆற்காடு வீராசாமியும் கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். அந்தப் பயணத்தின்போது, திட்டக் குழுவினருடன் கலந்து பேசி ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்தின் திட்ட மதிப்பீட்டுத் தொகையை 25 ஆயிரம் கோடி ரூபாய் என்று கேட்டுப் பெற்றேன்.

தமிழ்நாடு இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் தலைவர் சுர்ஜித் அவர்கள் வருகை தந்து, என்னுடனும் த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்களுடனும் நீண்ட நேரம் இந்திய அரசியல் குறித்து பேசிக்கொண்டிருந்தார். 25-7-1997 அன்று மாலையில் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்திட மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்.

1997 ஆம் ஆண்டு என்று மாத்திரமல்ல - அதற்கு முன்பு பல ஆண்டு காலமாகவும், அதற்குப் பிறகு இன்றளவும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவதைப் பற்றி தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைப்பது நின்றபாடில்லை. நாம் தொடர்ந்து இந்தக் கோரிக்கையை ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்ற நேரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கோரிக்கை வைப்பதும், ஆனால் நிற்காமல் அந்தச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்றளவும் இருந்து வருகின்றன.

அதை மனதிலே கொண்டுதான் தற்போது 17-7-2007 ஆம் நாளன்று, அதாவது 97 ஆம் ஆண்டு சம்பவம் நடைபெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகும் தற்போதும் அந்தச் சம்பவம் நடந்திருப்பதையொட்டி, உறுதியாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பதற்காக தி.மு.க. வின் தலைமை நிலைய உயர்நிலை செயல் திட்டக்குழுவினைக் கூட்டி விவாதித்து கடுமையான தீர்மானமும் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். கலைஞர் ஆனால் என்ன செய்தும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்படுவது நின்றபாடில்லை.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக கே.ஆர். நாராயணன் 25-7-1997 அன்று காலையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதியாக இருந்த ஜே.எஸ். வர்மா அவர்களால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். பொறுப்பேற்ற பின் அவர் முதன் முதலாக நாட்டிற்காக ஆற்றிய உரையில் - "சாதி மத பேதமின்றி அனைத்துப் பிரிவு மக்களும் அதிகாரத்தில் பங்கேற்கும் நிலை உருவாக வேண்டும் - பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம் கொண்ட இந்தியா வளமுடன் திகழ ஒன்றுபட்டு உழைப்போம்" என்று கூறியதோடு - தன்னுடைய எல்லையற்ற நன்றி உணர்வை அவர் மீது வைத்துள்ள இந்திய மக்களுக்கும், அவரைத் தேர்ந்தெடுத்த அரசியல் கட்சிகளுக்கும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முன்னணி - காங்கிரஸ் கட்சியின் பொது வேட்பாளராக திரு. கிருஷ்ணகாந்த் தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்வதைத் தடுத்து நிறுத்திட பிரதமர் குஜ்ராலிடம் வற்புறுத்தினேன். அவர்கள் நிறுத்தப்படுவதாக பிரதமர் குஜ்ரால் அவர்களும் சந்திரபாபு நாயுடு அவர்களும், சீதாராம் கேசரி அவர்களும் கூட்டாக அறிவித்தார்கள். அப்போது கிருஷ்ணகாந்த் அவர்கள் ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்.

பொது வாழ்வில் நீண்ட அனுபவம் பெற்றவர். சுதந்திரப் போராட்ட வீரர். 1975 ஆம் ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்தை எதிர்த்த இளந்துருக்கியர்களில் கிருஷ்ணகாந்த் அவர்களும் ஒருவராவார். ★ ★ ★ ஜனநாயகத்தில் கட்சித் தேர்தல்களை முறையாக நடத்துகின்ற ஒரே கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் கட்டுக்கோப்போடு காட்சி அளிக்கின்றது என்று அகில இந்திய ஏடுகளால் பாராட்டப்படும் தி.மு. கழகத்தின் 10 ஆவது பொதுத் தேர்தல், 1997 ஆம் ஆண்டு மிகுந்த எழுச்சியோடு, எதிர்பார்த்ததற்கு மாறாக அமைதியாக நடைபெற்றது.

அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தான் முதன் முதலாக கணிப்பொறி மூலமாக கழக உறுப்பினர்கள் அட்டை தயாரிக்கப்பட்டு - 62 லட்சம் உறுப்பினர்களுக்கு லேமினேஷன் செய்யப்பட்ட அட்டைகள் முறைப்படி வழங்கப்பட்டன. முதன்முதலாக, இந்தியாவிலேயே கணிப்பொறி மூலம் கட்சி உறுப்பினர்களின் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே தான். இவ்வாறு உறுப்பினர் அட்டைகள் தயாரிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டபின், கிளைக் கழகச் செயலாளர்கள் தேர்தல் முறைப்படி நடைபெறத் தொடங்கி, அதன் அனைத்து முடிவுகளும் ஏடுகளில் விளம்பரப்படுத்தப்பட்டன.

கிளைக் கழகச் செயலாளர்கள் தேர்தல் தொடங்கி, படிப்படியாக ஒன்றிய - நகர - பேரூர் - நகரியக் கழகத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. அதன் அடுத்த கட்டமாகத் தான் மாவட்டக் கழக - மாநகரக் கழகச் செயலாளர்கள், மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 192 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தத் தேர்தலில் 252 பொதுக்குழு உறுப்பினர்களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் 99 பேரும், ஒன்றிய - நகர - பேரூர் - நகரியக் கழக நிர்வாகிகள் 528 பேரும், மொத்தம் 1.071 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்தத் தேர்தலைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, கலைஞர் 7 ஆவது முறையாக கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடன் பொதுச் செயலாளர் க. அன்பழகன் - பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி அவ்வப்போது ஏற்பட்ட சிறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட புது பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்துக்கொண்டு, கட்சித் தலைமைக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறும் கூட்டம், 26-7-1997 அன்று கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் புதிய பொலிவோடும்.

உற்சாகத்தோடும் கூடியது. அந்தக் கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 27-7-1997 அன்று நடைபெற்ற தேர்தலுக்கு மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அக்கினிராசு அவர்கள் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்த வேண்டுமென்று துரைமுருகன் முன்மொழிய, சைதை கா. கிட்டு அதனை வழி மொழிந்தார். கழகத்தின் தலைவராக நானும், பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியரும், பொருளாளராக ஆர்க்காடு வீராசாமியும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டோம்.

அமைச்சர் நாஞ்சிலார் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 7 ஆவது முறையாக கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை பல்வேறு கட்சித் தலைவர்களும், முன்னணியினரும், சட்டமன்றப் பவள விழாவில் பேராசிரியருக்கு விருது வழங்கினேன் கலைத் துறையைச் சேர்ந்தவர்களும், கழக முன்னணியினரும் நேரில் சந்தித்தும், தொலைபேசியின் வாயிலாகவும் வாழ்த்தினர். கழகத்தின் தேர்தல் இவ்வாறு கிளைக் கழகத்திலிருந்து படிப்படியாக நடைபெற்று, தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்வரை முறைப்படி வேறு எந

்தக் கட்சியிலாவது நடைபெறுகிறதா என்றால் எங்கேயும் கிடையாது. அ.தி.மு.க. விலே சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது - பொதுச் செயலாளர் பொறுப்புக்கு மட்டும் தேர்தல் நடத்துகிறார்களாம், அதற்கு ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஜெயலலிதாவின் பெயரை முன் மொழிந்திருக்கிறார்களாம். ஆனால் அங்கே கிளைக் கழகச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் உண்டா? ஒன்றியச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் உண்டா? பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர் பதவிக்கு தேர்தல் உண்டா என்றால் கிடையாது.

எல்லாமே தன்னிச்சையான நியமனங்கள்தான். இன்று ஒருவர் மாவட்டக் கழகச் செயலாளராக இருப்பார். எத்தனை ஆண்டு காலம் என்று எந்த வரையறையும் கிடையாது. தலைமை "கட்டம்" கட்டுகின்றவரை அவர்தான் மாவட்டக் கழகச் செயலாளர். தலைமை எப்போது கட்டம் கட்டும் என்று எவருக்கும் தெரியாது. வேறொருவரை தலைமை விரும்பினால், அவர் பெயரை நியமனம் செய்துவிட்டு, ஏற்கனவே இருந்தவருக்கு கட்டம் கட்டப்பட்டு விடும். அடுத்து நடைபெறவுள்ள பொதுக்குழுவிற்கு யார் யாரை அழைக்கலாம் என்று தலைமையே முடிவு செய்து, அவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்புமாம்.

அவர்கள் அடுத்தப் பொதுக் குழுவிற்கு வர உரிமைப் படைத்தவர்களா என்றால் கிடையாதாம். அந்தப் பொதுக்குழுவுக்கு யார், யார் வரலாம் கலைஞர் என்பதைப் பற்றி அப்போது மீண்டும் தலைமை முடிவு செய்து, அவர்களுக்கு அழைப்பு அனுப்புமாம்! இப்படியும் ஒரு கட்சி! அவர்களும் தேர்தலில் நிற்கிறார்கள், அவர்களுக்கும் மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள்! இந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தேர்தல், தி.மு.கழக கட்சித் தேர்தல் என்று வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், 8-6-1997 அன்று தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடைபெற்று வந்தன.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்தப் புராதன கோவிலின் குட முழுக்கு விழாவைக் காணுவதற்காகப் பல்லாயிரக் கண்ககான மக்கள் தஞ்சை மாநகரில் திரண்டனர். குடமுழுக்கை ஒட்டி வாண வேடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையின் பந்தலில் திடீரென்று எதிர்பாராத வகையில் 9 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியதற்காக ஆளுநர் பாத்திமா பீவி எனக்கு விருது வழங்கினார்.

தீ விபத்து ஏற்பட்டு மக்கள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓட முயற்சித்தபோது, பெரும் நெரிசல் ஏற்பட்டு - தீ விபத்தின் காரணமாகவும் நெரிசலின் காரணமாகவும் 50 பேர் பலியாகிவிட்டார்கள் என்ற செய்தி 8-6-1997 அன்று நள்ளிரவில் எனக்குக் கிடைத்தது. அதிகாலை 4 மணி அளவிலேயே சென்னையிலிருந்து காரிலேயே தஞ்சைக்கு விரைந்தேன். என்னுடன் ஆர்க்காடு வீராசாமியும், துரைமுருகனும் உடன் வந்தனர். நான் வருகின்ற செய்தி கிடைத்து, தஞ்சை மாவட்ட எல்லையில் அமைச்சர்கள் கோ.சி.

மணி, பொன்முடி, கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பழனிமாணிக்கம் எம்.பி., செங்குட்டுவன் , மத்திய அமைச்சராக இருந்த டி.ஜி. வெங்கட்ராமன், அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த ராமனாதன், மற்றும் கழக முன்னணியினர் என்னைச் சந்தித்தார்கள். தஞ்சையை அடைந்த நான் முதலில் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தீவிர சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டேன்.பின்னர் அந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களுக்கெல்லாம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.

அங்கிருந்து தீ விபத்து நடந்த யாக சாலையைச் சென்று பார்வையிட்டேன். தஞ்சைக் கோவிலின் பரம்பரை அறங்காவலர் ராஜா போன்ஸ்லே தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி கேட்டு, அங்கே சென்று அவரைப் பார்த்து ஆறுதல் கூறினேன். இதற்கிடையே தஞ்சை செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து விபத்து பற்றிய விவரங்களைக் கேட்டனர். 40 பேர் அதுவரை இறந்திருக்கிறார்கள் என்றும், அதிலே பெண்கள் 31 பேர் என்றும், ஆண்கள் 4 பேர் என்றும் குழந்தைகள் 5 பேர் என்றும் கூறியதோடு இறந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு இலட்ச ரூபாய் வீதம் முதலமைச்சர் நிவாரண நிதிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயம் அடைந்தவர்கள் மொத்தம் 85 பேர் என்றும் விளக்கினேன்.

தஞ்சைக் கோயிலின் விபத்து காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக தஞ்சை கோவில் திருப்பணிக் கலைஞர் குழுவிற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தேன். பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அவர்களும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களும், தஞ்சை தீ விபத்து குறித்து கடிதம் எழுதியிருந்தார்கள். கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடம் கோவிலின் பின்புறம் என்பதால், நான் தீ விபத்தைப் பார்வையிடச் சென்றபோது, காவல் துறையினர் கோயிலின் பின்புற வழியாக அங்கே அழைத்துச் சென்றார்கள்.

அதையும் ஒரு பிரச்சினையாக ஆக்கி, கோயிலுக்குள் நேர் வழியாகச் சென்றால் அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகத்தான் பின்புற வழியாகச் சென்றேன் என்றும் அப்போது ஒரு பிரச்சாரம் நடைபெற்றது. அதைப் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "நான் யாகசாலைக்கு விபத்தைக் காண்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது. எது முன் பக்கம், எது பின்பக்கம் என்பதே எனக்குத் தெரியாது. பாதுகாப்புப் போலீசார் அழைத்துச் சென்ற வழியிலேதான் சென்றேன்.

அவர்களும் யாகசாலைக்கு மிகவும் குறைந்த தூரத்தில் எளிதாகச் செல்லக்கூடிய வழியில் அழைத்துச் சென்றார்கள். அது மாத்திரமல்ல, நான் தஞ்சை கோயிலுக்குள் போன பிறகுதான் ஆட்சிப் பொறுப்பிற்கே முதன் முதலில் வந்தேன். இன்னும் சொல்லப்போனால் அந்தக் கோயிலுக்குள் போய் வந்த பிறகுதான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவே ஆனேன். தஞ்சை தொகுதியிலே போட்டியிட்டபோதும், அந்தக் கோயிலுக்குள் சென்றிருக்கிறேன்.

அப்போதும் வெற்றி பெற்றேன். பொதுவாக எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. மேலும் நான் "சாரப்பள்ளம் சாமுண்டி" அல்லது "ஓர் உளியின் ஓசை" என்ற குறு நாவல் எழுதினேன். அதுதான் தற்போது திரைப் படமாக வெளி வந்துள்ளது. அந்தக் கதையை நான் எழுதிய போது, அந்தக் கோவிலுக்குள் உள்ள சிற்பங்களையும், ஓவியங்களையும் அடிப்படையாக வைத்து எழுதிய குறுநாவல் என்பதால், அதற்காக அந்தக் கோயிலுக்குள் பலமுறை சென்றிருக்கிறேன்.

அதனால் எனக்கு எந்தக் கெடுதியும் ஏற்படவில்லை. அந்தக் கோயிலைக் கட்டிய ராஜராஜனுக்கே எந்தக் கெடுதியும் ஏற்படாதபோது. வேறு யாருக்கு என்ன ஏற்பட்டு விடப்போகிறது?" என்று பதில் அளித்தேன். ★ ★ ★ தஞ்சையிலிருந்து அன்றைய தினமே சென்னைக்குப் புறப்பட வேண்டியிருந்தது. சட்டமன்ற பவள விழாவினைச் சிறப்பாக எப்படி நடத்துவது என்பது குறித்து கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு வரவேண்டியிருந்ததால், தஞ்சையிலே ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் உடனடியாகச் சென்னைக்குத் திரும்பினேன்.

சட்டமன்ற பவளவிழா பற்றி எழுதுகின்ற நேரத்தில், அந்த விழாக்கள் பற்றிய ஒன்றை நான் ஞாபகப்படுத்த வேண்டும். தி.மு. கழகம் - குறிப்பாக நான் எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறேனோ. அப்போதெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான தலைவர்களையொட்டிய நிகழ்ச்சிகள் - சம்பவங்கள் விழாக்கள் நடைபெறுவது என்பது இயற்கையாகவே அமைந்த ஒன்றாகும். உதாரணத்திற்கு, இத்தொடரை எழுதிக்கொண்டிருக்கும் காலகட்டத்திற்கு முன்பும், பின்பும் நான் கலந்துள்கொண்ட விழாக்களில் ஒரு சிலவற்றை - என் நினைவிலே உள்ளவரை ஞாபகப்படுத்திட விரும்புகிறேன்.

2-10-1969 அன்று சென்னையில் அண்ணல் காந்தியடிகள் நூற்றாண்டு விழா - 15-8-1972 அன்று சுதந்திர தின வெள்ளி விழா (இந்த விழா தமிழகச் சட்டப் பேரவையில் நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்றது) - 9-8-1990 அன்று சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா நூற்றாண்டு விழா - 14-4-1990 அன்று அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு விழா - 29-4-1990 அன்று சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா - 1-5-1990 அன்று சென்னையில் மே தின நூற்றாண்டு விழா- 19-2-1997 அன்று சென்னையில் தமிழறிஞர்கள் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை, மே.வி.

வேணுகோபால் பிள்ளை ஆகியோரின் நூற்றாண்டு விழாக்கள் - 14-7-1997 அன்று சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றப் பவள விழா மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை வைரவிழா - 20-7-1997 அன்று கலைஞர் மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவில் அணையா விளக்கை ஏற்றி வைத்தேன் சென்னையில் பட்டதாரி ஆசிரியர் கழக வெள்ளி விழா - 4.8.1997 அன்று சென்னையில் மனோன்மணியம் சுந்தரனார் நூற்றாண்டு விழா - 5.8.1997 அன்று சென்னையில் நெடுஞ்சாலைத் துறை பொன் விழா - 7.8.1997 அன்று சென்னையில் ருக்மணி லட்சுமிபதி நூற்றாண்டு விழா - 15-8-1997 அன்று சுதந்திர தினப் பொன் விழா - 9.9.1997 அன்று சென்னையில் அன்னை வேளாங்கண்ணி ஆலய வெள்ளி விழா - 13.9.1997 அன்று சென்னையில் கன்னிமரா பொது நூலக நூற்றாண்டு விழா - 18.4.1998 அன்று மதுரையில் மதுரை வழக்கறிஞர் சங்க 125 ஆவது ஆண்டு விழா - 18.7.1998 அன்று பேராயர் எஸ்றா சற்குணம் மணிவிழா - 19.7.1998 அன்று கவிக்கோ அப்துல் ரகுமானின் மணிவிழா - 27.8.1998 அன்று சென்னையில் டி.என்.

இராஜரத்தினம் பிள்ளை நூற்றாண்டு விழா - 28.11.1998 இல் சென்னையில் கும்பகோணம் பிடில் இராஜமாணிக்கம் பிள்ளை நூற்றாண்டு விழா - 16.10.1999 அன்று சென்னையில் வீரபாண்டிக் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 200 ஆவது ஆண்டு நினைவு நாள் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு - 30.10.1999 அன்று இராய. சொக்கலிங்கம் நூற்றாண்டு விழா - 13.3.2000 அன்று சென்னையில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நூற்றாண்டு விழா - 26.1.2001 அன்று சென்னையில் இந்தியக் குடியரசு தினப் பொன் விழா - 1.7.2006 அன்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

நூற்றாண்டு விழா - 10.7.2006 அன்று வேலூர் சிப்பாய்க் கழகம் 200 ஆம் ஆண்டு நினைவு நாள் - 30.7.2006 அன்று சென்னையில் ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் நூற்றாண்டு விழா - 4.9.2006 அன்று சென்னைப் பல்கலைக் கழக 150ஆவது ஆண்டு விழா - 1.12.2006 அன்று தமிழ் மாநிலம் அமைந்த பொன் விழா - 4.1.2007 அன்று சென்னையில், சென்னை மாநகரக் காவல் துறையின் 150 ஆவது ஆண்டு விழா 17.1.2007 அன்று சென்னை துறைமுகத்தின் 125 ஆவது ஆண்டு விழா - 29.1.2007 அன்று மதுரையில் தியாகராயர் கல்லூரி பொன்விழா - 26.3.2007 அன்று அகில இந்திய கட்டுநர், வல்லுநர் சங்க வெள்ளி விழா - 2.7.2007 அன்று மின் வாரியப் பொன் விழா - 30.6.2007 அன்று புத்தர் மகாபரி நிர்வாணம் அடைந்த 2550ஆம் ஆண்டு நிறைவு விழா - 19.8.2007 அன்று இந்தியன் வங்கியின் நூற்றாண்டு விழா - 21.8.2007 அன்று சென்னையில் ஜீவா நூற்றாண்டு விழா - 30.10.2007 அன்று மதுரையில் பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழா - 17-1-2008 அன்று சென்னையில் எல்.வி.

பிரசாத் நூற்றாண்டு விழா - 10.5.2008 அன்று சென்னையில் காரைக்குடி இராம. சுப்பையா நூற்றாண்டு விழா - 21.6.2008 அன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மணி விழா - 24.6.2008 அன்று தஞ்சை மாவட்ட நீதி மன்றத்தின் 200 ஆவது ஆண்டு விழா என்று பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும். அது போலவே, பெருந்தலைவர்கள் மறைந்தபோது அவர்களை அடக்கம் செய்கின்ற நிகழ்ச்சிகள் - நல்லதோ கெட்டதோ - நான் பொறுப்பிலே இருந்த போது நடைபெற்றுள்ளன.

எடுத்துக்காட்டாக 24-12-1973 அன்று தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோதும், 2-10-1975 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைந்தபோதும். 25-12-1972இல் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மறைந்தபோதும், 4-4-1972 அன்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் மறைந்தபோதும் நான் தான் பொறுப்பிலே இருந்துள்ளேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் - அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடம் - பெரியவர் பக்தவத்சலம் அவர்களின் நினைவிடம் - நாகர்கோவிலில் ஜீவா நினைவிடத்தில் மணி மண்டபம் - சென்னையில் 4 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கர் மணி மண்டபம் - காயிதே மில்லத் அவர்களின் மணி மண்டபம் - மதுரை திருமங்கலத்தில் கலைஞர் இந்தியக் குடியரசு பொன்விழாவை முன்னிட்டு சென்னை காமராசர் சாலையில், என்னால் திறந்து வைக்கப்பட்ட நினைவுத் தூண் வீரத்தியாகி விசுவநாததாஸ் நினைவில்லம் - திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்கட்டும் செவல் கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பூலித்தேவன் நினைவகம் - கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கம் நினைவாக அவரது கிராமத்தில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் சுந்தரலிங்கம் நகர் - காந்தி மண்டப முகப்பில் காந்தியடிகளுக்கு மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டதுபோல, ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்.

ஆகியோர் நினைவிடங்களின் முகப்பில் அவரவர்தம் மார்பளவுச் சிலைகள் திறப்பு - குமரி முனையில் பெருந்தலைவர் காமராசரின் பெயரில் 50 லட்சம் ரூபாய் செலவில் மணி மண்டபம், தியாகிகள் மணி மண்டப முகப்பில் சுதந்திரப் போராட்ட தியாகி ஆர்யா என்ற பாஷ்யம், மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் சிலைகள் திறப்பு - டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலைத் திறப்பு - திருச்சியில் வ.வே.சு.

அய்யருக்கு நினைவில்லம் - பட்டுக்கோட்டையில் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு மணி மண்டபம் - உடுமலையில் நாராயண கவிராயர் மணி மண்டபம் என்று இத்தனைப் பணிகளையும் நான் பொறுப்பிலே இருந்த காலத்திலே நிறைவேற்றினேன் என்பதை பெருமைக்காகச் சொல்லவில்லை - இவைகளையெல்லாம் உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாகத்தான் கருதுகிறேன். இவை மாத்திரமல்ல, தியாகிகளுக்கு நினைவுச் சின்னங்கள் அமைப்பது என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால்கூட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெருமை எனக்குண்டு.

அதற்கும் சான்றுகள் இதோ:- 18.8.1974 அன்று பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டையை எழுப்பி அதனை திறந்து வைத்தது நான்தான். 1997ஆம் ஆண்டு கடற்கரை காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் அருகே சுதந்திரப் பொன் விழா நினைவுச் சின்னத்தை எழுப்பி அதனை திறந்து வைத்ததும் நான்தான். 2.10.1998 இல் 30 லட்சம் ரூபாய் செலவில் கிண்டியில் தியாகிகள் மணி மண்டபத்தை அமைத்துத் திறந்து வைத்ததும் நான்தான்.

25 லட்சம் ரூபாய் செலவில் பெரியவர் பக்தவத்சலம் அவர்களின் நினைவிடத்தை அமைத்து 13.3.1998 அன்று திறந்து வைத்ததும் நான்தான். மருதூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு -சிவகங்கை மாவட்டத்தில் தவத்திரு குன்றக்குடி தெய்வ சிகாமணி அருணாசல தேசிகர் மணிமண்

டபம் - சென்னையில் மகாகவி பாரதியார் நினைவில்லம் புதுப்பிப்பு - மதுரையில் தியாகி கக்கன் அவர்களுக்கு சிலை திறப்பு - மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியில் தியாகசீலர் கக்கன் மணி மண்டபம்- சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் திருவுருவச் சிலை - சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை திருவுருவச் சிலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மன்னர் ராஜகோபால தொண்டமானுக்கு சிலை -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக மாற்றம் - என்று எழுதிக்கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் 1997 ஆம் ஆண்டு சட்டமன்றத்தின் பவள விழா மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர கலைஞர் விழாவினைக் கொண்டாட நேர்ந்தது. இந்த விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக விழாக் குழு ஒன்று சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்கள் தலைமையில் அமைக்கப் பட்டது. அந்தக் குழுவில் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி. மணி, பரிதி இளம்வழுதி, டி. சாலமன் ஜெயபால், எஸ். ராஜரத்தினம், சந்திரசூடன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.

குழுவின் தலைவரும். உறுப்பினர்களும் 12.6.1997 அன்று என்னைச் சந்தித்து, விழாக்களை எந்த அளவிற்குச் சிறப்பாகவும், சீராகவும் நடத்துவதென்பது குறித்து கலந்துரையாடினார்கள். 14.7.1997 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி அவர்கள் தலைமையில், என்னுடைய முன்னிலையில் தமிழகச் சட்டமன்றப் பவள விழாவும் பேரவையின் வைர விழாவும் நடைபெற்றது. சட்டப் பேரவைத் தலைவராக அப்போதிருந்த பி.டி.ஆர்.

பழனிவேல் ராஜன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி மன்மோகன் சிங் லிபர்ஹென் அவர்கள் துவக்க உரையாற்றினார். சட்டமன்றப் பவள விழா மற்றும் பேரவை வைர விழா மலரினை நான் வெளியிட - குடியரசு முன்னாள் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அதனைப் பெற்றுக்கொண்டார். தமிழக அரசின் சார்பில் ஆர். வெங்கட்ராமன், பாத்திமா பீவி, மன்மோகன் சிங் லிபர்ஹென், ஆளுநர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், பா.

ராமச்சந்திரன், அவை முன்னவர் பேராசிரியர், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், பேரவைத் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி ஆகியோருக்கு முதலமைச்சர் என்ற முறையில் பொன்னாைடை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினேன். தமிழகச் சட்டப் பேரவைக்கு 9 முறையும், மேலவைக்கு 1 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற முறையில் எனக்கு ஆளுநர் பாத்திமா பீவி அவர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.

பேரவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப் பெற்றோர், 6 முறை தேர்ந்தெடுக்கப் பெற்றோர். 5 முறை தேர்ந்தெடுக்கப் பெற்றோர், 85 வயதிற்கு மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள், பேரவை முன்னாள் தலைவர்கள், முன்னாள் பேரவை, மேலவைத் துணைத் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள் சங்கத் தலைவர், செயலாளர் என தனித்தனியாகப் பட்டியலிட்டு - மேடைக்கு அழைக்கப்பட்டு - அனைவருக்கும் என் கரங்களால் பொன்னாடை அணிவிக்கப் பெற்று, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

85 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர் என்ற பட்டியலில் திருமதி லூர்தம்மாள் சைமன் மேடைக்கு வர இயலாமல் எதிரே அமர்ந்திருந்ததால், அவரது இடத்திற்கே நான் சென்று விருதினை வழங்கினேன். விழா சிறப்பாக நடைபெறவும் மலர் சிறப்பாக வெளிவரவும் பாடுபட்ட பேரவைச் செயலக அதிகாரிகள், மற்றும் அலுவலர்கள் சார்பில் பேரவைச் செயலாளர் சாலமன் ஜெயபாலுக்கு நான் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினேன். அந்த விழாவில் நான் என்னுடைய உரையைத் தொடங்கும்போது - "1972 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர கலைஞர் வெள்ளி விழாவைக் கொண்டாடும்போதும்.

நான்தான் இங்கே முதலமைச்சராக இருந்தேன் - 1989 இல் சட்டமன்றப் பேரவையினுடைய பொன் விழாவைக் கொண்டாடிய போதும், நான்தான் முதல் அமைச்சராக இருக்கிறேன் - இன்று இந்தப் பவள விழா, வைர விழாவைக் கொண்டாடும் போதும் நான் முதல் அமைச்சராக இருக்கிறேன்! எனவே நீங்கள் எனக்கு "விழா முதல் அமைச்சர்" என்று பட்டம் கொடுக்கலாம்" என்று பலத்த சிரிப்புக்கு இடையே கூறினேன்.

தமிழகச் சட்டமன்றத்திலே பணியாற்றி மிகப் பெரிய பொறுப்புக்கு பின்னர் வந்தவர்களைப் பற்றிய பட்டியல் ஒன்றையும் அன்றைய தினம் என் பேச்சில் குறிப்பிட்டுக் காட்டினேன். உதாரணமாக தமிழகச் சட்டமன்றத்தில் நிதி அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்கள் மத்திய அரசுக்கே நிதி அமைச்சரானார். அதன் பின்னர் மராட்டிய மாநில ஆளுநராகவும் ஆனார். தமிழகத்திலே அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மத்திய அரசிலே அமைச்சரானார்.

பின்னர் இந்திய அரசின் குடியரசுத் துணைத் தலைவராகவும் குடியரசுத் தலைவராகவும் ஆனார். சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் வங்காள மாநில ஆளுநராகவும், முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகவும் ஆனார்கள். தமிழகச் சட்ட மன்றத்தில் மாநில அமைச்சராக இருந்த வி.வி. கிரி அவர்கள், இந்தியாவின் குடியரசுத் தலைவராக பின்னர் ஆனார்கள். தமிழகத்தில் மாநில அமைச்சராக இருந்த திருமதி ஜோதி வெங்கடாசலம் கேரள மாநில ஆளுநராக ஆனார்கள்.

ஒன்றாக இருந்த தமிழகத்தில் அமைச்சராக இருந்த பிருமானந்த ரெட்டி பின்னர் ஆந்திர முதலமைச்சராக ஆனார்கள். பின்னர் ஆளுநராகவும் ஆனார்கள். நீலம் சஞ்சீவரெட்டி இங்கே அமைச்சராக இருந்தார்கள். பின்னர் ஆந்திர முதல்வராகவும், பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் ஆனார்கள் என்ற விவரங்களையெல்லாம் அந்த விழாவில் ஞாபகப்படுத்தினேன். இந்தியாவிலேயே பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய ஒரே சட்டமன்றம் தமிழகச் சட்டமன்றம்தான்.

எதிர்க் கட்சி பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறிய ஒரு கதையையும் அந்த விழாவிலே நான் நினைவூட்டினேன். அந்த கதை: கேரளத்திலே ஒரு திருவிழா. அந்தத் திருவிழாவிலே யானையின் துதிக்கையிலே ஒரு கம்பத்தைக் கொடுப்பார்கள். அந்த யானை அந்தக் கம்பத்தை குறிப்பிடப்பட்ட குழியிலே கொண்டுபோய் நடும். அது நட்டபிறகுதான் திருவிழா தொடங்கும். இப்படி ஒரு நாள் ஒரு திருவிழாவில் யானையின் துதிக்கையிலே இரும்புக் கம்பத்தைக் கொடுக்க - அந்த யானை குழிக்கு அருகே சென்று, அதை நட மறுத்துவிட்டது.

எல்லோரும் ஆச்சரியத்தால் அதிர்ச்சி அடைந்தார்கள். அது நாட்டிற்கே நல்லதல்ல என்று கவலை கொண்டார்கள். பல முறை பாகன் யானையை அடித்தும்கூட, அதைக் குத்தியும்கூட வதைத்தும்கூட அந்த அந்தக் குழியிலே அந்தக் கம்பத்தை நட மறுத்துவிட்டது. என்ன காரணம் என்று தெரியாத நிலையில் - கடைசியாக ஒருவர் அந்தக் குழி அருகே வந்து அதற்குள் எட்டிப் பார்த்தார். குழிக்குள்ளே ஒரு சிறிய பூனைக் குட்டி இருந்தது. அப்போதுதான் தெரிந்தது.

அதனால் தான் யானை, அந்தக் குழிக்குள் பூனையை வைத்து அதன்மீது கம்பத்தை நட்டால் அது இறந்துவிடும் என்பதற்காக - அந்தக் கம்பத்தை நட அவ்வளவு தீவிரமாக மறுத்துவிட்டது என்பது தெரிந்தது. இந்தக் கதையை பேரவையிலே சொன்ன அண்ணா அவர்கள், "நீங்கள் யானையாக இருக்கின்ற ஆளுங்கட்சிக்காரர்கள் - பூனையாக இருக்கின்ற எங்களை - எதிர்க் கட்சியாக இருக்கின்ற எங்களை அந்த யானை எப்படி மதித்ததோ அப்படி மதியுங்கள்" என்று சுட்டிக்காட்டினார்கள்.

பெரும்பான்மைக்கும் எதிர்க் கட்சிக்கும் இந்த உதாரணத்தைச் சொன்ன அண்ணா அவர்களே, தோழமைக் கட்சிக்கும் ஒரு முறை ஓர் உதாரணத்தைச் சொன்னார். அது - சுதந்திரா கட்சியில் திரு ஹண்டே அவர்கள் இருந்த நேரம்- ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. விற்குத் தேவையான கருத்துக்களை கொஞ்சம் மென்மையான முறையிலே எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த கலைஞர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு நண்பர் எழுந்து, "என்ன - ஹண்டே அவர்கள் இன்றைக்கு மிகவும் மென்மையாகப் பேசுகிறார்.

எப்போதும் வேகமாகப் பேசுபவர் ஆயிற்றே?" என்று கேட்டார். அப்போது அண்ணா அவர்கள் எழுந்து, "எப்போதும் எதிர்க் கட்சிதான் வேகமாகப் பேசும் - அது பூனை எலியின்மீது பாய்வதைப்போல இருக்கும். ஆனால் தோழமைக் கட்சி என்ற முறையில் ஹண்டே பேசுகிறார். அது பூனை, தன் குட்டியை வாயிலே கவ்விக்கொண்டு போவதைப் போல இருக்கிறது. சொந்தக் குட்டியை பூனை கவ்விக்கொண்டு போகும்போது மென்மையாகத்தான் போகும். எலியைக் கவ்விக்கொண்டு போகும்போது கடுமையாகப் பிடி இருக்கும்.

ஹண்டே அவர்கள் தன் குட்டியைத் தூக்கிக்கொண்டு போவதைப்போல எங்களைத் தூக்குகிறார்!" என்று சொன்னார்கள். இவ்வாறு அண்ணா அவர்கள் எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி ஆகியவற்றுக்கெல்லாம் பேரவையிலே பலமுறை விளக்கமளித்துள்ளார்கள்.