உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மாறனும்,மாநில சுயாட்சியும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மாறனும்,மாநில சுயாட்சியும்! · 332 / 391

கலைஞர் 20. மாறனும்,மாநில சுயாட்சியும்! மாறன் என்றால் என்ன? சாமான்யமா? என் தம்பியல்லவோ? - பேரறிஞர் அண்ணா. தெ ன் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள் பற்றி தமிழக அரசு முழு மூச்சோடு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்தக் காலக் கட்டத்தில், 1997 ஆம் ஆண்டு மே திங்களில், பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து, பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியின் சார்பில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக டோனி பிளேர் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

அதற்கு முன்பு 18 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியிலே இருந்து வந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு இரண்டாம் இடமும், லிபரல் டெமாகிரடிக் கட்சிக்கு மூன்றாம் இடமும் கிடைத்தன. அதற்கு முன்பு பிரதமராக இருந்த ஜான் மேஜர் நலிவுற்றிருந்த பிரிட்டிஷ் பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்தியவர் ஆவார். அவருக்கு முன்பு அந்தப் பதவியை வகித்த தாட்சரின் மிகக் கடுமையான கொள்கைகளை மேஜர் முற்றாக கைவிடா விட்டாலும், அவற்றைச் சிறிது எளிமைப்படுத்தினார்.

பெரும்பாலான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அந்த மேஜருக்கு எதிராகத் திரும்பின. "மாற்றத்திற்கு வாக்களியுங்கள்" என்பதே தேர்தல் முழக்கமாக ஒலித்தது. மேஜரின் கட்சி அந்த முறை கடுமையாக தேர்தல் பணியாற்றிய போதிலும், மக்களின் எழுச்சிக்கு முன் அது எடுபடவில்லை. மேஜர் வெற்றி பெற்றார் எனினும், அவரது நண்பர்கள் பலர் தோல்வி அடைந்தனர். தொழிற்சங்கங்களை மையமாக வைத்து இயங்கிக்கொண்டிருந்த இடதுசாரிக் கட்சியை அனைவரும் ஏற்கத்தக்க நடுநிலைக் கட்சியாக மாற்றி அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றார் டோனி பிளேர்.

இந்தியாவின் சார்பில் நேரில் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் - இந்திய - இங்கிலாந்து உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காகவும் - பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அவர்கள், தனது பிரத்யேகத் தூதுவராக மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் அவர்களை 18.5.1997 அன்று இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார். லண்டன் சென்ற முரசொலி மாறன், 20ஆம் தேதியன்று இங்கிலாந்தின் பிரதமர் டோனி பிளேயரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வரும்படி டோனி பிளேருக்கு அழைப்பும் விடுத்தார். மேலும் அந்த நாட்டின் லிபரல் கட்சித் தலைவர் திரு. ஆஷ் டவுன் அவர்களை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாற்றினார். முரசொலி மாறனின் அந்தப் பயணம் குறித்து ஆங்கில நாளேடுகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பாராட்டி எழுதி இருந்தன. குறிப்பாக "இந்துஸ்தான் டைம்ஸ்" நாளேடு, "காஷ்மீர் பிரச்சினை பற்றி முரசொலி மாறனைப்போல வேறு எந்த அமைச்சரும் இவ்வளவு தெளிவாக ஒரு போதும் விளக்கியதில்லை" என்று எழுதியது.

இந்தப் பயணத்தின் போது லண்டனிலிருந்து 1997 ஆம் ஆண்டு மாறன் எழுதிய ஒரு கடிதம் - நான் முன்பே ஒருமுறை சொன்னதைப்போல - என்னிடத்தில் எந்த அளவிற்கு மாறன் அன்பு வைத்திருந்தார் - நான் அவரை வளர்த்ததற்கு - ஆளாக்கியதற்கு - அவர் அளித்த வெகுமதி - பரிசு அந்தக்கடிதம் தான். இலண்டனில் பிரதமரைச் சந்தித்த பிறகு முரசொலி மாறன் அங்கிருந்து எனக்கு எழுதிய கடிதம் இது: முரசொலி மாறன், தொழில் அமைச்சர், இந்திய அரசு.

கலைஞர் இந்தியப் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களின் தூதுவராக லண்டன் புறப்படும் முன் அவரிடம் வாழ்த்து பெற்றார், முரசொலி மாறன் உயர்திரு மாமா அவர்கட்கு, வணக்கம். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரைச் சந்திக்க நான் புறப்பட்டுக்கொண்டிருந்த போது பேசினீர்கள். உங்கள் இனிய வாழ்த்து கிடைக்கவில்லை. (நான் பேசிய போது நான் செய்த தவறு, "பிரதமரைச் சந்திக்கப் போகிறாயா? வாழ்த்துக்கள்" என்று சொல்லாமல், செய்தியை மட்டும் கேட்டேன்.

"வாழ்த்துக்கள்" என்று சொல்லவில்லையாம் (தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு அழுதேன்.) (மாறன் எழுதுகிறார்) நேற்று உங்கள் கடிதத்தைப் படித்துவிட்டு அழுதேன் - அது ஆனந்தக்கண்ணீர்! திருக்குவளையில் நான் சிறுவனாக இருந்தபோது, சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மறைந்ததும், "அய்யா சிறு பெண்" என்ற சினிமாப் பாட்டு மெட்டில் "எமது அண்ணலரே புகழும் பன்னீர் செல்வமே துரையே! இந்தியாவின் யோசனைக்கே மந்திரியாகி விண்ணுலகில் போய் மறைந்தீரே" என்று கோடை விடுமுறைக்கு திருக்குவளை வந்திருந்த நீங்கள் எழுதிக்கொடுத்து நான் பாடியது நினைவிற்கு வந்தது.

10 முதல் 12 நிமிட நேரம் கொடுத்திருந்த பிரதமர், 20 நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார். வெளியில் வந்ததும் என் உரையாடல் பற்றி நமது தூதுவர் "Great - Marvel- Lous - Superb" என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு சப்தமே போட்டார்.

லண்டனில் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரைச் சந்தித்தார். வெளிநாட்டு மந்திரி ராபின் குக் (மிகவும் முரட்டுப் பேர்வழி) "காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது எந்த நிலையில் இருக்கிறது?" என்று கேட்டார். "மாநில சுயாட்சிக் குரல் முதன் முதலில் எழுந்த பூமி தமிழ்நாடு! நான் அந்த தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவன். இப்போது இந்தியாவில் உள்ள 25 மாநிலங்களும் மாநில சுயாட்சி கோருகின்றன..."

என்று விளக்கிவிட்டு, "நீங்கள் ஸ்காட்லாந்திற்கும் வேல்சிற்கும் என்ன செய்யப் போகிறீர்கள்? அந்த மக்கள் கோரிக்கை எழுப்பிக் கொண்டிருக்கிறார்களே?" என்று நான் ஆரம்பித்ததும், அவர் சங்கடத்துடன் "அதிகாரத்தைப் பரவலாக்குவது (Decentralization) பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். அவ்வளவுதான். "நான் கூட்டாட்சி முறையைப் பயிலும் மாணவன். அதிகாரத்தைப் பரவலாக்குவது வேறு, Autonomy என்கிற மாநில சுயாட்சி வேறு" என்று ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

என் உடன் வந்த தூதுவரும், அதிகாரிகளும் அசந்து விட்டனர். 10 டவுனிங் தெருவிற்குள் நுழையும் போது தன்னம்பிக்கைக்காக, "ஆத்தா, தாத்தா" (அதாவது பாட்டி, பாட்டனார்) என்று மனதிற்குள் முனகிக்கொண்டே நுழைந்தேன். புறப்படுவதற்கு முன் திரு.குஜ்ராலைச் சந்தித்து "எப்படிப் பேசுவது? என்ன பேசுவது?"

என்று கேட்பதற்காகப் போயிருந்தேன். கலைஞர் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ராபின் குக்குடன் முரசொலி மாறன் "எனக்கு நேரமில்லை - நீயே பார்த்துக்கொள்" என்று குஜ்ரால் கூறிவிட்டார். "இது Policy Matter ஆயிற்றே, விளக்கம் வேண்டுமே" என்றேன். "பரவாயில்லை - நீ சொல்வதுதான் பாலிசி" என்று கூறிவிட்டுக் களைப்புடன் சென்றுவிட்டார்.

இந்த மாபெரும் பொறுப்பு என்னை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டது. என்னாலேயே நம்ப நான் வெற்றிகரமாகச் முடியவில்லை மாமா - இப்படி செயல்படுவேன் என்று. என்ன இருந்தாலும் நான் உங்கள் தயாரிப்பல்லவா? என் சிந்தை - அணு ஒவ்வொன்றிலும் குடியிருந்து, என் இதயத் துடிப்புக்களாக இருந்து என்னை ஆட்டுவிக்கும் உங்கள் காலடிகளில் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன். இப்படி நீங்களும் நானும்தான் கண்ணீர் பெருக்கோடு உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

ஏனெனில் இது இரத்த பாசம் - "நமது திருக்குவளைப் பின்னணி" - நமது மாநிலக் கட்சியின் சூழ்நிலை! ஆனால் பிரதமர் குஜ்ரால் என்ன சொன்னார் தெரியுமா? எனக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் - நான் பிரமாதமாக இந்தியாவின் கருத்தை எடுத்துச் சொன்னதற்காக - நான் ஒப்புக்கொண்டு லண்டன் சென்று வந்ததற்காக. மீண்டும் தங்கள் காலடிகளைத் தொட்டு வணங்கி... அன்பன், மாறன் இப்படியொரு கடிதம் 97ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அந்த முரசொலி மாறன் பெயரால்தான் முரசொலி அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு முதல் ஒரு விருது வழங்குவதென்று முடிவெடுத்து அந்த மிகச் சிறப்புக்குரிய விருது, நடிகர் தம்பி வாகை சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மாறனின் இந்த உருக்கமிகு கடிதம் வந்த அதே நேரத்தில், பிரபல ஆங்கில வார இதழான "அவுட் லுக்" 1997 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த மத்திய அமைச்சராக மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனைத் தேர்வு செய்திருக்கிறது - என்ற செய்தி எனக்குக் கிடைத்து மேலும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. 5.1.1998 நாளிட்ட "அவுட்லுக்" இதழில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவந்தது. வெளிநாட்டு மூலதனம் எளிதில் கிடைப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும், பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிக்கும் பத்தாம் பசலித்தனமான சட்ட விதிகளை ஒழித்ததற்காகவும், முரசொலி மாறன் 1997 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அமைச்சர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக "அவுட்லுக்" அறிவித்திருந்தது.

மத்திய தொழில் துறை அமைச்சராகப் பதவியேற்றவுடனே தொழில் துறை அமைச்சகத்தின் செயல்பாட்டில் "கிடு கிடு" மாற்றங்களை மாறன் அறிமுகப்படுத்தினார். பிரதமரின் பிடியிலிருந்து "அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தை" தனது அமைச்சரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விண்ணப்ப படிவங்களுடன் "கியூ" வில் காத்திருக்கும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று காலக் கெடுவை நிர்ணயித்தார்.

இதனால், அந்நிய முதலீட்டின் வருகை அதிகரித்தது. பல கோடி ரூபாய் இலாபம் ஈட்டித் தரும் பொதுத் துறை நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் தொழில் துறை அமைச்சகத்தை எதிர்பார்க்கும் நிலையையும் ஒழித்துக்கட்டினார். ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களை அவர் தேர்ந்தெடுத்து, கலைஞர் "அவுட் லுக்" ஏடு முரசொலி மாறனை மிகச் சிறந்த மத்திய அமைச்சராகத் தேர்ந்தெடுத்தது. "நவரத்தினங்கள்" என்று அறிவித்து, அவைகளுக்குச் சுயநிர்வாக அதிகாரங்களை வழங்கினார்.

இவ்வாறு தொழில் துறை வளர்ச்சிக்கு அதிரடி நடவடிக்கைகள் எடுத்த அமைச்சர் முரசொலி மாறனை "ஃபார் ஈஸ்டர்ன் எகனாமிக் ரிவ்யூ" போன்ற வெளிநாட்டு ஏடுகள் மட்டுமல்லாது, உள்நாட்டு ஏடுகளும் ஒருமித்த குரலில் பாராட்டின. தொழில் துறை பிரமுகர்களும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மாறனைப் பற்றி எழுதும்போது, அவர் எழுதிய, "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?"

என்ற நூலிற்கு பேரறிஞர் அண்ணா 8.5.1957 இல் எழுதிய தனது அணிந்துரையிலே "மாறன் என்றால் என்ன சாமான்யமா? என் தம்பி அல்லவோ? அதனால் தான், ஏடு, கனிவும், தெளிவும், சுவையும், பயனும் குலுங்கும் நிலையில் இருக்கிறது" என்று எழுதிய வார்த்தைகள் மறக்கக் கூடியவைகளா?

லண்டனிலிருந்து முரசொலி மாறன் எழுதிய அந்த உருக்கமிகு கடிதத்திலும் அவரைப் பற்றிய பாராட்டுச் செய்திகளிலும் நான் மூழ்கியிருந்த நேரத்தில் - 16.5.1997 அன்று 1995 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கலைத்துறை விழாவில் மிகழ்ச்சியோடு பேச வேண்டிய நான் தென்மாவட்டக் கலவரங்கள் பற்றித் தான் பேச நேரிட்டது. அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

அதைப்பற்றி அவர் பேசும்போது, அந்த நாள் அவருடைய வாழ்க்கையில் பொன்னான நாள் என்றும், மறக்க முடியாத நாள் என்றும், அவர் திரைப்பட உலகத்திற்குள் நுழைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், அதுவரை அவருக்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததே இல்லை என்றும், தற்போது அவருக்கு மாநில அரசு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ரஜினி முதலில் நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெற்றி விழா கண்டு அதன் விழாகூட என்னுடைய தலைமையிலேதான் நடைபெற்றது.

ஆனால் அந்த விழாவில் நான் கலந்துக்கொண்டபோது, வேறொரு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் என்ற முறையில் செல்ல வேண்டியிருந்ததால், அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்த ஒரு சிலருக்கு மட்டும் நான் பரிசுகளைக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு அந்த விழாவிலே கலந்து கொண்ட ஏ.வி. மெய்யப்ப செட்டியார் அவர்களைவிட்டு பரிசுகளை வழங்குமாறுக் கூறிவிட்டுச் சென்று விட்டேன். அதனால் அந்த விழாவிலும் ரஜினி அவர்களுக்கு என் கையால் விருது கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு, அது ரஜினி அவர்களை நீண்ட நாட்களாக உறுத்திக்கொண்டிருந்ததாகவும், அந்த எண்ணம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, என் கையாலேயே சிறந்த நடிகர் என்பதற்கான விருதினைப் பெற்றிருப்பதாகவும் அவர் பேசும்போது குறிப்பிட்டுத் தெரிவித்தார்.

அந்த விழாவில் ரஜினி வேறொரு கருத்தையும் என்னைப் பற்றிச் சொன்னார். அவர் நடித்த "அருணாச்சலம்" திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு, என்னை அழைத்துப் போட்டுக் காண்பித்தார். படம் மிகவும் நீளமாக இருந்தது. முடித்தவரையில் நீளத்தை அவர்களே குறைத்துவிட்டு, பிறகு வேறொன்றும் செய்வதற்கில்லை என்று விட்டுவிட்டார்கள். நான் அந்தப் படத்தைப் பார்த்தபோது - அதிலே ஒரு வசனம் - "படம் ரொம்ப குப்பை" என்ற ஒரு சொற்றொடர் - அந்தப் படத்திலே இடம் பெற்றிருந்தது.

நான் படம் பார்த்து முடித்த பிறகு "அந்தச் சொற்றொடர் அந்தப் படத்திலே இருக்கத் தேவையில்லை" என்று நான் கூறி கலைஞர் "நான் உங்கள் தயாரிப்பல்லவா மாமா?" என்று என்னை அழவைத்த. லண்டனிலிருந்து மாறன் எழுதிய கடிதம் அதனை எடுத்துவிட்டார்கள். அதை ஞாபகத்திலே வைத்துக்கொண்டு, விருது வழங்கும் நிகழ்ச்சியிலே அதைப் பற்றியும், படம் பார்த்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவரிடம் நான் தொலைபேசி வாயிலாக வேறு சில காட்சிகளிலே கூறிய மாற்றங்கள் பற்றியும் அந்தக் கூட்டத்தில் பேசியதோடு, தென் மாவட்டங்களிலே நடைபெற்று வந்த சாதிக் கலவரங்கள் பற்றியும் விவரமாகக் குறிப்பிட்டு, அங்கே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் என்னிடம் வழங்கினார்.

எனவே, அந்த விழாவில் என்னுடைய பேச்சும் தென் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்தே அமைந்தது. அந்த விழாவில் கலைத்துறை வித்தகர்களுக்கான விருதுகளாக அண்ணா விருது, திரு.டி. ராஜேந்தருக்கும், கலைவாணர் விருது திரு. கவுண்டமணிக்கும் , எம்.ஜி.ஆர் விருது திரு. சத்யராஜுக்கும், ராஜா சாண்டோ விருது இயக்குநர் திரு.வி. சேகருக்கும், கண்ணதாசன் விருது திரு. பூவை செங்குட்டுவன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - சிறந்த நடிகையாக குஷ்பூ - சிறந்த நடிகராக (சிறப்புப் பரிசு) விஜயகுமார் - சிறந்த நடிகையாக (சிறப்புப் பரிசு) ராதிகா - சிறந்த இயக்குநராக வசந்த் - சிறந்த உரையாடல் ஆசிரியராக கே.எஸ்.

அதியமான் - சிறந்த கதையாசிரியராக கே. பாக்யராஜ் - சிறந்த இசை அமைப்பாளராக தேவா - சிறந்த பாடலாசிரியராக கவிப்பேரரசு வைரமுத்து - சிறந்த நகைச்சுவை நடிகராக மணிவண்ணன் - என்ற வரிசையில் அவர்களுக்கும், மற்றும் பலருக்கும் அந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டன. 1.6.1997 அன்று மாலையில், மத்திய ரயில்வே

அமைச்சராக அப்போது இருந்த மாண்புமிகு ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் தலைமையில், பழவந்தாங்கல் புதிய சுரங்கப் பாதையினைத் திறந்து வைக்கும் விழாவிலே கலந்துக்கொண்டேன். மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு, தமிழக அமைச்சர் டாக்டர் பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் கண்டோன்மென்ட் சி.சண்முகம், ஆலந்தூர் நகராட்சித் தலைவர் ஆலந்தூர் பாரதி ஆகியோர் அந்த விழாவில் கலந்துக்கொண்டனர். பழவந்தாங்கலில் அன்று திறந்துவைக்கப்பட்ட பாலம் 11 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சி, நான்கு கோடி ரூபாய் செலவில் அந்தச் சுரங்கப்பாலம் கட்டப்பட்டது.

அந்தப் பாலத்திறப்பு விழாவில் நான் உரையாற்றும்போது, "பாலம் கட்டப்பட வேண்டியது பரங்கிமலையிலும், பழவந்தாங்கலிலும் மட்டுமல்ல - தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சாதிகளுக்கிடையே பாலம் கட்ட வேண்டிய நிலைமைதான் உள்ளது" என்று குறிப்பிட்டேன்.

அந்த விழாவிற்கு தலைமை தாங்கிய அருமை நண்பர் ராம் விலாஸ் பாஸ்வான் எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரிந்தவர். என்னிடம் மிகுந்த பரிவும் பாசமும் கொண்டவர். இந்தியாவிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறுபவர்களில் அவர் ஒருவர். அவர் என்னை பீகாருக்கே அழைத்துச் சென்று அங்கே நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேச வைத்தவர். 2.6.1997 அன்று சென்னையில் இராகவேந்திரா திருமண மண்டபத்தில், கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்று, பல முக்கியமான தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டன.

2.6.1997 அன்று மாலையிலும் 3.6.1997அன்று முழுவதும் என்னுடைய 74ஆவது பிறந்த நாள் விழா நடத்தப்பெற்றது. கலைஞர் 1995ன் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்ட ரஜினிகாந்த், தென் மாவட்டக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகையாக ரூ.5லட்சம் வழங்கினார். 2.6.1997 அன்று பிற்பகலில் முதல் நிகழ்ச்சியாக கழகத்தின்மகளிரணி சார்பில் பொற்செல்வி இளமுருகு தலைமையில் "மின்னும் கலைஞர்" என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அந்தப் பொதுத்தலைப்பின் கீழ், "அரசியல் உலகில்" என்ற தலைப்பில் வண்ணை தேவகியும் - "ஆட்சித் திறனில்" என்ற தலைப்பில் நூர்ஜகான் பேகமும் - "இயக்கத் தலைமையில்" என்ற தலைப்பில் சங்கரி நாராயணனும் - "இலக்கிய உலகில்" என்ற தலைப்பில் புதுக்கோட்டை விஜயாவும் - "திரைஉலகில்" என்ற தலைப்பில் வாசுகி முருகேசனும் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, கழக இளைஞரணி சார்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அதற்கு நடுவராக இருந்தார்.

"அதிகமான சலுகைகளை அள்ளித் தந்த குற்றம்" என்ற தலைப்பை வைத்து வழக்கு தொடுத்து, அரிய கருத்துக்களை எடுத்துவைத்து, அவையில் திரண்டிருந்த அனைவரையும் சிந்திக்கவும் வைத்து இரா. வெற்றிகொண்டான் வாதாடினார். அதனை மறுத்த, அடுக்கடுக்கான வாதங்களை எடுத்துவைத்து, அரங்கமே அதிரும் அளவிற்கு கைத்தட்டல்களைப் பெற்று உணர்ச்சி பொங்க வாதாடினார் முனைவர் பொன்முடி. இளைஞரணியைத் தொடர்ந்து, மாணவரணி சார்பில் திருச்சி சிவா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

அதற்கு சிலம்பொலி செல்லப்பன் நடுவராக இருந்தார். "கலைஞரின் பணிகளில் விஞ்சி நிற்பது அரசியல் பணியா? இலக்கியப் பணியா?" என்ற தலைப்பில் - அரசியல் பணியே என்று விடுதலை விரும்பி, சற்குணப் பாண்டியன், பரிதி இளம்வழுதி ஆகியோரும் - இலக்கியப் பணியே என்று ரகுமான் கான், புலவர் செங்குட்டுவன், தாயகம் கவி ஆகியோரும் வாதாடினார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் இறுதியாக, இலக்கிய அணி சார்பில், கவி அரங்கம் நடைபெற்றது.

அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் நடுவராக இருந்தார். கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் நிர்மலா சுரேஷ் ஆகியோர் கவிதை வாயிலாக என்னை வாழ்த்தினர். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்னை மாவட்டக் கழகச்செயலாளர்களாக இருந்த சைதை கிட்டு, எல். பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3ஆம் தேதியன்று காலை 8 மணியிலிருந்தே தொண்டர்களைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டேன்.

குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, குடியரசு துணைத்தலைவர் கே.ஆர். நாராயணன், மத்திய அமைச்சர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆன்றோர், சான்றோர் வாழ்த்துக்களை நேரிலும், தொலைபேசியிலுமாகத் தெரிவித்தனர். 74 ஆவது பிறந்த நாளையொட்டி, உண்டியல் மூலமாகவும், காசோலையாகவும் என்னிடம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 16 லட்சத்து 12 ஆயிரத்து 976 ரூபாய் குவிந்தது. கலைஞர் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில், அண்ணாநகர் புல்லாரெட்டி அவென்யூவில், 3 ஆம் தேதி மாலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மத்திய தொழில் அமைச்சர் முரசொலி மாறன், துரைமுருகன், சத்தியவாணி முத்து, என்.வி.என். சோமு, டி.ஆர். பாலு, கோ.சி. மணி, ஆலடி அருணா, சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம், முனைவர் தமிழ்க்குடிமகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் சார்பில், மாத இதழான "உழைப்பாளி" இதழைப் பேராசிரியர் வெளியிட முதல் பிரதியை நான் பெற்றுக்கொண்டேன்.

மாவட்டக் கழகச் செயலாளர் சைதை கிட்டு வரவேற்புரை ஆற்றினார் அண்ணா நகர்ப் பகுதிக் கழகச் செயலாளராக அப்போதிருந்த சோ.மா. ராமச்சந்திரன் அந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய மாநாடு போல அலங்காரம் செய்து சிறப்பாக நடத்தினார். இறுதியாக நான் ஏற்புரை ஆற்றினேன். 74 ஆவது பிறந்த நாள் என்பதால், "மாலை மலர்" நாளிதழ் 74 கேள்விகளுக்கு, ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற வேண்டுமென்று கேட்டு, நான் பதிலளித்தேன். அந்தக் கேள்வி பதில்கள் வருமாறு:- 1.

மாலைமலர்:- அறிஞர் அண்ணா அவர்களிடம் பிடித்தது? நான்:- அடிகளை அளந்து வைக்கும் நிதானம். 2. மாலைமலர்:- பிடித்த உணவு? நான்:- முன்பு அசைவம் - இப்போது சைவம். 3. மாலைமலர்:- பிடித்த பழமொழி? நான்:- ஆடுகள் முட்டிக்கொண்டால் ஓநாய் இரத்தம் குடிக்கும். 4. மாலைமலர்:- பிடித்த நண்பர்? நான்:- சோதனையிலும் இருப்பவர். 5. மாலைமலர்:- பிடித்த எதிரி? நான்:- முதுகில் குத்தாதவர். 6. மாலை மலர்:- பிடித்த உடை? நான்:- வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, மஞ்சள் சால்வை.

7. மாலைமலர்:- பிடித்த கலர்? நான்:- கறுப்பும், சிவப்பும். 8. மாலைமலர்:- பிடித்த நடிகர்? நான்:- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். 9. மாலைமலர்:- பிடித்த நடிகை? நான்:- பி. கண்ணாம்பா. கலைஞர் முரசொலி மாறன் பெயரால், 'முரசொலி அறக்கட்டளை' விருதைப் பெற்ற நடிகர் வாகை சந்திரசேகர் 10. மாலைமலர்:- பிடித்த அறிவியல் கண்டுபிடிப்பு? நான்:- அன்று வானொலி, இன்று கணிப்பொறி. 11. மாலைமலர்:- பிடித்த டி.வி. நிகழ்ச்சி? நான்:- செய்திகள் 12.மாலைமலர்:- பிடித்த செய்தி வாசிப்பாளர்?

நான்:- "ல" கர "ள" கரத்தை சுத்தமாக உச்சரிப்பவர். 13. மாலைமலர்:- பிடித்த எம்.ஜி.ஆர். படப்பாடல்? நான்:- "தூங்காதே தம்பி தூங்காதே!" 14.மாலைமலர்:- பிடித்த சிவாஜி படப்பாடல்? நான்:- "மனிதன் மாறி விட்டான்" 15.மாலைமலர்:- பிடித்த சினிமா படம்? நான்:- "தில்லானா மோகனாம்பாள்" 16. மாலைமலர்:- பிடித்த அறிஞர்? நான்:- ஜார்ஜ் பெர்னாட்ஷா. 17. மாலைமலர்:- பிடித்த இந்திய அரசியல் தலைவர்? நான்:- விசுவநாத் பிரதாப் சிங்.

18.மாலைமலர்:- பிடித்த உலக அரசியல் தலைவர்? நான்:- ஆப்ரகாம் லிங்கன். 19. மாலைமலர்:- பிடித்த நொறுக்குத் தீனி? நான்:- ஓமப்பொடி. 20. மாலைமலர்:- பிடித்த நாடு? நான்:- இந்தியா 21. மாலைமலர்:- மிகவும் பிடித்த பத்திரிகை? நான்:- முரசொலி. 22. மாலைமலர்:- பிடித்த விளையாட்டு வீரர்? நான்:- கவாஸ்கர். 23. மாலைமலர்:- பிடித்த விளையாட்டு வீராங்கனை? நான்:- ஸ்டெபி கிராப். 24.மாலைமலர்:- பிடித்த கவிஞர்? நான்:- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

25.மாலைமலர் :- மூப்பனாரிடம் பிடித்தது? நான்.- இனிமையாகப் பழகுவது. 26. மாலைமலர்:- மு.க. ஸ்டாலினிடம் பிடித்தது? நான்:- உழைப்பு. 27.மாலைமலர்:- பேராசிரியர் அன்பழகனிடம் பிடித்தது? நான்:- கொள்கை உறுதி. ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் பழவந்தாங்கல் சுரங்கப் பாதை திறக்கப்பட்ட போது, "பல்வேறு சாதிகளுக்கிடையேயும் பாலம் கட்ட வேண்டும்" என்று நான் குறிப்பிட்டேன் 28.

மாலைமலர்:- எம்.ஜி.ஆரிடம் பிடித்தது? நான்:- விருந்தோம்பல். 29. மாலைமலர்:- உங்களுக்குப் பிடித்த திருக்குறள்? நான்:- "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" கலைஞர் 30.மாலைமலர்:- உங்களுடைய வசனத்தில் பிடித்த வரிகள்? நான்:- "மனச்சாட்சி உறங்கும் போதுதான், மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பி விடுகிறது" 31: மாலைமலர்:- சுற்றுலாத் தலங்களில் பிடித்த இடம்? நான்:- ஈரோடு, காஞ்சிபுரம். 32. மாலைமலர்:- பிடித்த வாகனம்?

நான்:- கார் 33. மாலைமலர்:- பிடித்த பொய்? நான்:- "பொய்மையும் வாய்மையிடத்த" என்ற குறளில் சுட்டிக் காட்டப்படும் பொய். 34. மாலைமலர்:- முதல் மந்திரிகளில் பிடித்தவர்? நான்:- பி.சி. ராய். 35.மாலைமலர்:- பிடித்த காதல் ஜோடி? நான்:- அன்றில் பறவைகளின் ஜோடி. 36. மாலைமலர்:- பிடித்த இசை? நான்:- தமிழிசை 37. மாலைமலர்:- பிடித்த நாடகம்? நான்:- நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த நாடகம். 38. மாலைமலர்:- பிடித்த புது நடிகை?

நான்:- பேபி மோனிஷா 39. மாலைமலர்:- பிடித்த புது நடிகர்? நான்:- மாஸ்டர் மகேந்திரா. 40. மாலைமலர்:- பிடித்த சிரிப்பு நடிகர்? நான்:- டணால் தங்கவேலு. 41. மாலைமலர்:- சிவாஜியிடம் பிடித்தது? நான்:- பாத்திரமாகவே ஒன்றி விடும் நடிப்பாற்றல். 42. மாலைமலர்:- பிடித்த மலர்? நான்:- ரோஜா மலர். 43. மாலைமலர்:- பிடித்த சர்வாதிகாரி? நான்:- மார்ஷல் டிட்டோ. 44.மாலைமலர்:- சென்னையில் பிடித்த கட்டிடம்? நான்:- அண்ணா அறிவாலயம்.

45. மாலைமலர்:- பிடித்த கிழமை? நான்:- ஏழு கிழமைகளும் பிடிக்கும். 46.மாலைமலர்:- பிடித்த உறவினர்? நான்:- கழக உடன்பிறப்புக்கள் 47. மாலைமலர்:- பிடித்த தானம்? நான்:- நிதானம். 48. மாலைமலர்:- பெரியாரிடம் பிடித்தது? நான்:- குறித்த நேரம் தவறாமை. 49. மாலைமலர்:- பிடித்த பறவை? நான்:- காக்கை 50. மாலைமலர்:- பிடித்த விலங்கு? நான்:- நாய் 51. மாலைமலர்:- பிடித்த போராட்டம்? நான்:- கல்லக்குடி போராட்டம். 52. மாலைமலர்:- பிடித்த பழம்?

கலைஞர் நான்:- மாதுளை. 53.மாலைமலர்:- பிடித்த காய்கறி? நான்:- கேரட் 54.மாலைமலர்:- பிடித்த ஒப்பனைச் சாதனம்? நான்:- சீப்பு. 55. மாலைமலர்:- பிடித்த ஆராய்ச்சியாளர்? நான்:- தாமஸ் ஆல்வா எடிசன். 56. மாலைமலர்:- பிடித்த அணிகலன்? நான்:- அண்ணா அணிவித்த கணையாழி. 57. மாலைமலர்:- பிடித்த எண்? நான்:- மூன்று (ஜூன் 3 என் பிறந்த நாள்) 58. மாலைமலர்:- பிடித்த சாதனை? நான்:- ஏழைப்பெண்கள் திருமண உதவித் திட்டம். 59. மாலைமலர்:- பிடித்த நதி?

நான்:- காவேரி. 60. மாலைமலர்:- பிடித்த புத்தகம்? நான்:- காண்டேகர் நூல்கள். 61. மாலைமலர்:- காமராஜரிடம் பிடித்தது? நான்:- எளிமை. 62. மாலைமலர்:- பிடித்த எழுத்தாளர்? நான்:- புதுமைப்பித்தன். 63. மாலைமலர்:- பிடித்த பெண் எழுத்தாளர்? நான்:- லட்சுமி. 64.மாலைமலர்:- பிடித்த விருது? நான்:- பகுத்தறிவாளன் என்ற விருது. 65.மாலைமலர்:- பிடித்த விளையாட்டுகள்? நான்:- கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ். 66. மாலைமலர்:- பேச்சாற்றலில் பிடித்தவர்?

நான்:- அறிஞர் அண்ணா. 67.மாலைமலர்:- பிடித்த பொழுது போக்கு? நான்:- படிப்பதும், எழுதுவதும். 68. மாலைமலர்:- தமிழர்களிடம் பிடித்தது? நான்:- ஒற்றுமை (சிரிக்காதீர்கள்) 69.மாலைமலர்:- ரஜினியிடம் பிடித்தது? நான்:- புகழேணியின் உச்சியிலும் அடக்கம் கடைப்பிடிப்பது. 70. மாலைமலர்:- ஆட்சியில் பிடித்தது? நான்:- ஏழையின் சிரிப்பு. 71. மாலைமலர்:- பிடித்த எதிர்க்கட்சி? நான்:- விரோத உணர்வின்றி விமர்சனம் செய்யும் கட்சி.

72. மாலைமலர்:- பிடித்த மாவட்டம்? நான்:- எல்லா மாவட்டங்களுமே! 73. மாலைமலர்:- பிடித்த பண்டிகை? நான்:- பொங்கல். 74.மாலைமலர்:- பிடித்திருந்தும் பிடிக்காதது? நான்:- முதல்வர் பதவி.