நெஞ்சுக்கு நீதி
மனித நேயம் வளர்த்திட! · 331 / 391
19. மனித நேயம் வளர்த்திட! மனித நேயம் வளர்த்திட மயிலை கபாலி கோயிலில் கழக அரசு நடத்திய சமபந்தி விருந்து 1989, 1990 ஆம் ஆண்டுகளிலே நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியிலே ஊழல் நடைபெற்றுவிட்டதாகக் கூறி, அதன்மீது விசாரணை நடத்துவதற்காக ஜெயலலிதா ஆட்சியிலே விசாரணைக் கமிஷன் ஒன்று 13.8.1992 அன்று அமைக்கப்பட்டது. விசாரணைக் கமிஷன் நியமித்ததோடு மட்டுமல்லாமல், அதுபற்றி ஒரு முழுபக்க விளம்பரம் அனைத்து ஏடுகளிலும் 21.9.1992 அன்று காலையில் வெளியிடப்பட்டது.
விசாரணைக் கமிஷன் நியமித்தது குறித்து அரசு செலவில் பத்து இலட்சம் ரூபாய் செலவழித்து முழுப்பக்க விளம்பரங்கள் செய்தது, அதற்கு முன்பும் நடந்ததில்லை, அதற்குப் பிறகும் நடந்ததில்லை. 21 ஆம் தேதி வெளிவந்த விளம்பரத்திற்குப் பிறகும், கழக அரசின்மீது புகார்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வராத காரணத்தால், மீண்டும் ஒருமுறை அதுவும் முழுப்பக்க விளம்பரமாகவே செப்டம்பர் 28ஆம் தேதியன்றும் வெளியிடப்பட்டது என்றால், எந்த அளவிற்குப் பழி வாங்கும் தன்மையோடு அ.தி.மு.க.
ஆட்சியினர் நடந்துக்கொண்டனர் என்பதை அறிந்து கொள்ளலாம். குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வாக்குமூலத்தைத் தர விரும்புகின்றவர்கள், 15.10.1992க்கு முன்னர் தாக்கல் செய்யலாம் என்றும் அந்த இரண்டு விளம்பரங்களிலும் தெரிவிக்கப்பட்டது. அதிகம் பேர் முன் வராததால், கால வரம்பு 5.11.1992 வரை என்று மீண்டும் ஒரு கலைஞர் சமபந்தியில் விருந்தினர்க்கு உபசரிப்பு முறை நீடிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் ஆறு உறுதி மொழிப்பத்திரங்கள் தான் வரப்பெற்றன.
அந்தக் கமிஷன் நீதிபதியாக உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சிவசுப்ரமணியம் அவர்களும் நியமிக்கப்பட்டு, விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்தியது. 1996 மே திங்களில் மீண்டும் தி.மு. கழக ஆட்சி தமிழகத்திலே பதவியேற்ற போதும், அ.தி.மு.க. அரசு அமைத்த அந்த நீதி விசாரணைக் கமிஷனை கலைக்காமல் - அந்தக் கமிஷன் தொடர்ந்து நடைபெற்று - கழக ஆட்சிமீது தரப்பட்ட அனைத்துப் புகார்களையும் விசாரித்து அரசாங்கத்திற்கு அறிக்கை தந்தது.
15.3.1997 அன்று நீதிபதி சிவசுப்ரமணியம் அரசிடம் அளித்த 75 பக்கங்களைக்கொண்ட அறிக்கையைப் பேரவையிலேயே வைக்கும்படி தெரிவித்தேன். அந்த அறிக்கையின் முடிவுகளைப் பற்றி தலைமைச் செயலாளர் கையெழுத்திட்டு அரசாணை ஒன்றையே வெளியிட்டார். அந்த விசாரணைக் கமிஷன் முன்பாக - என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும், அந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி நீதிபதி சிவசுப்பிரமணியம் அவர்களின் முடிவுகளும் வருமாறு - 1. தொழில்முறை பொறுப்பையும் வகித்த முதலமைச்சர் திரு.மு.
கருணாநிதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மகன் - மருமகன் ஆகியோருக்கு கிரானைட் தொழில் நடத்துவதற்கு சலுகை காட்டினார் என்பது முதல் குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி சிவசுப்பிரமணியன் கமிஷன் முடிவு. 2. இரண்டாவது குற்றச்சாட்டும் தொழில்முறை பற்றியதுதான் - அதிலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதுதான் கமிஷன் முடிவு. 3. மூன்றாவது குற்றச்சாட்டு - தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்திடமிருந்து 75 லட்சம் ரூபாய் விற்பனை வரிச்சலுகை காட்டுவதற்காக கையூட்டுப் பெற்றதாக - இந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். 4.மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக 40 லட்சம் கையூட்டுப் பெற்றதாக ஒரு குற்றச்சாட்டு. இதுவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று நீதிபதி தீர்ப்பு கூறினார். இதே போன்றுதான் மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டதில் ஒன்று கூட நிரூபிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் நீதிபதி முடிவுகளை அளித்தார்.
இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், 1969 முதல் 1976 வரை உள்ள ஆட்சிக் காலத்திலும், 1989 - 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அறிக்கை விடுத்தார். அதைப்பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, "சுதந்திரம் கிடைத்த நாளிலேயிருந்தே விசாரணை நடத்தலாம்" என்று பதில் கூறினேன்.
சிவசுப்பிரமணியம் கமிஷன் குறித்து முழுப்பக்க விளம்பரங்கள் செய்யப்பட்ட கட்டணம் மட்டும் 10 லட்சத்து 74 ஆயிரத்து 783 ரூபாய் - இது தவிர விசாரணைக் கமிஷன் நீதிபதியின் சம்பளம் மற்றும் தொலைபேசிக் கட்டணம் கலைஞர் போன்ற செலவினங்கள் 20 லட்சத்து 41 ஆயிரத்து 270 ரூபாய் - இந்த விசாரணைக் கமிஷனிலே பணிபுரிந்த ஏனைய அதிகாரிகளுக்கான ஊதியம் மற்றும் அவர்களுக்கான செலவுகள் என்ற முறையில் 20 லட்சத்து 21 ஆயிரத்து 330 ரூபாய் - இது தவிர, இந்தக் கமிஷனால் நியமிக்கப்பட்ட புலனாய்வுத்துறை அதிகாரிகளின் செலவுகள் 46 இலட்சத்து 429 ரூபாய் ஆக மொத்தச்செலவு 97 இலட்சத்து 37 ஆயிரத்து 812 ரூபாய்! சென்னை வடபழனி முருகன் கோயிலில் கலந்துக்கொண்ட தளபதி ஸ்டாலின் அ.தி.மு.க ஆட்சியிலே கூறப்பட்ட நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து விசாரணை செய்வதற்காக சந்துர்கர் கமிஷன் ஒன்றை நியமித்தார்கள்.
ஆனால் அந்தக் கமிஷனின் விதிமுறைகள் குறித்து எந்தப் பத்திரிகையிலும், ஏன் ஒரு பத்திரிகையிலேகூட முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. அரசுமீது ஜெயலலிதா பிறப்பித்த கமிஷனுக்காக அனைத்து ஏடுகளிலும் முழுப்பக்க விளம்பரங்களுக்கான செலவு உள்ளிட்ட மொத்தச் செலவு 97 இலட்சம் ரூபாய்! ★ ★ ★ எதிர்க்கட்சிகளைப் பழி வாங்க இந்த அளவிற்கு வீண் விரயம் செய்யப்பட்டதைப் போலவே, பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின் போதும் - கேள்வி நேரங்களின் போதும் - அ.தி.மு.க.
ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய நடைமுறை ஏற்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினரோ, அல்லது அமைச்சர்களோ பேச்சினைத் தொடங்குவதற்கு முன்பு, ஜெயலலிதா குறித்து ஒரு நீண்ட புகழாரத்தைத் தொடுத்து, அதற்குப் பிறகு பேச்சைத் தொடங்குவது என்ற பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அந்தப் பழக்கம் இன்றளவும் அ.தி.மு.க உறுப்பினர்களால் பேரவையிலே நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தி.மு.கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அ.தி.மு.க.வைப் போல பேச முற்பட்டு தங்கள் உரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, என்னைப் பற்றி பலபடப் புகழ்ந்துரைத்து, அதற்குப் பிறகே பேச்சினைத் தொடங்க முற்பட்டார்கள்.
நானும் சில நாட்கள் பொறுத்துப் போனேன். பழிவாங்கும் வெறியோடு - விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து - 10 இலட்சம் ரூபாய் செலவிட்டு - ஏடுகளில் முழுப்பக்க விளம்பரங்கள் தந்தார், ஜெயலலிதா! 15.4.1997 அன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம். அப்போது அந்தத் துறையின் அமைச்சராக இருந்த சமயநல்லூர் "செல்வ ராஜ் - தனது பேச்சினை இவ்வாறு தொடங்கினார் - சாதாரண மிகச் சாதாரண - சாமானிய - ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த என்னை - நன்றி நதிக்கரையாம் வைகை நதி தீரத்தில் பிறந்த என்னை - சரஸ்வதி பூஜையன்று மட்டுமே புத்தகத்தைத் தேடுகின்ற முழுக்கல்வி அறிவு பெறாத சமுதாயத்தில் பிறந்த என்னை - பொதுவாழ்வில் பொன்விழா கண்ட கலைஞருடைய அரசியல் வயதை எட்டிப்பிடிக்காத என்னை - ஆதி திராவிடர் கலைஞர் நலத்துறை அமைச்சராக இந்த மாமன்றத்தில் அமரச் செய்து, இத்துறைக்கான மானியக் கோரிக்கையினைச் சமர்ப்பிக்கின்ற பெரும் வாய்ப்பினை வழங்கிய ஈடில்லா கழகத்தின் தலைவர், இணையில்லா கழக ஆட்சியின் முதல்வர்" என்று பேசிக்கொண்டேயிருந்த நிலையில் - நான் எழுந்து குறுக்கிட்டு, "அமைச்சர்கள் தங்களுடைய மானியக் கோரிக்கை அல்லது உரை இவைகளை நிகழ்த்தும்போது என்னைப் பற்றி ஒரு ஐந்து நிமிடமாவது பேசினால்தான் அது அவையின் மரபு என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
பொருத்தமான நேரத்தில், எப்போதாவது தேவைப்படுகின்ற நேரத்தில், குறிப்பிட வேண்டிய சமயத்தில் பெயரைக் குறிப்பிட்டால் போதுமானது. முதல்வரைக் குறிப்பிட்டால் போதுமானது. ஒரு சாங்கியமாகவே ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதுவதைப் போல என்னைப் பற்றி அவர்கள் முன்னுரை எழுதிவிட்டு - இவர்கள் நல்ல எண்ணத்தோடு முன்னுரை எழுதுகிறார்கள். ஆனால் பலர், பத்து நாள் அதற்காக பல பத்திரிகைகளில் என்னைத் திட்டுகிறார்கள்.
இவர்களுடைய முன்னுரையை வைத்துக்கொண்டு - ஒரு வேளை அப்படி திட்டப்படுவதற்காக முன்னுரை எழுதுகிறார்களோ அமைச்சர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனவே தங்களை நான் மிகுந்த பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்போது அவர் பேசிய வாசகங்களில் என்னைப் பற்றி குறிப்பிட்ட வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும்படித் தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!"
என்று பேரவைத் தலைவரை நோக்கிக் குறிப்பிட்டேன். பேரவைத் தலைவர் எனக்கு சமாதானம் அளிக்கும் வகையில், "ஆண்டுக்கு ஒரு முறைதான் அமைச்சர்களு வாய்ப்பு. முதல் அமைச்சர் சொன்னதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறை போனால் போகிறது. இந்த அளவிலே குறிப்பிலே இருக்கலாம்!"
என்று தீர்ப்பளித்தார். அதன் பிறகு தான் கழகத்தின் சார்பில் பேசுபவர்களால் இவ்வாறு புகழாரங்கள் சூட்டப்பட்டது முடிவுக்கு வந்தது. 97 இலட்சம் ரூபாய் செலவான கமிஷன், குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் என்று சமர்ப்பித்த அறிக்கை! ★ ★ ★ 1995 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சாதிக் கலவரங்கள் ஏற்பட்டு. அதன் பின்னர் அந்தப் பிரச்சினை சற்று அடங்கியிருந்த நிலைமாறி, 1997 ஆம் ஆண்டு மே திங்கள் வாக்கில், "மீண்டும் சாதிக் கலவரங்கள் தென்மாவட்டங்களில் விசுவரூபம் எடுத்தன" என்ற செய்திகள் எனக்கு வரத் தொடங்கின.
95ஆம் ஆண்டில் கடைசி ஆறு மாதங்களில் திருநெல்வேலி - கட்டபொம்மன், சிதம்பரனார், காமராஜர் ஆகிய மாவட்டங்களில் இரு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். சொத்துக்களுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது. 1997 ஆம் ஆண்டில் மீண்டும் சாதிக் கலவரம் தோன்றியது. ஒரு சிறிய சம்பவம் நடந்தாலே, உடனே அதை ஊதிப் பெரிதாக்கிட சில சுயநலவாதிகள் திட்டமிட்டுச் செயல்பட்டார்கள்.
கலவரங்களுக்கு சாதி உணர்வு மட்டுமல்லாது, சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் காரணமாக அமைந்தன. உதாரணமாக அதுவரை பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்த அடித்தள மக்கள், கலைஞர் சாதிக் கலவரங்கள் பற்றி விவாதிக்க நான் கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வசதியான நிலையை எட்டும்போது அது பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மனதில் பொறாமை உணர்வை ஏற்படுத்தியது. சில சாதி சங்கத் தலைவர்கள் தங்களுடைய சுயநல லாபத்திற்காக கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மன வேற்றுமையைப் பெரிதாக்கி, ஆதாயம் தேடத் தலைப்பட்டுள்ளதால்தான் கலவரத்தை அடியோடு ஒழிக்க முடியவில்லை.
தென் மாவட்டங்களில் முக்கிய அமைச்சராக இருந்த தம்பி தங்கபாண்டியன் அவர்களை உடனடியாக அந்தப் பகுதிகளுக்கு அனுப்பி, பாதிக்கப்பட்ட இரண்டு பிரிவினரையும் அழைத்துப் பேசி, அமைதி திரும்புவதற்கான வழிவகைகளைக் காணுமாறு பணித்தேன். "அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை சென்னையிலோ மதுரையிலோ விரைவில் கூட்டுவேன்" என்றும் அறிவித்தேன்.
போராட்டத்திற்கான ஆரம்பக் காரணம் தேவர்சிலை அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சாரார் போராட்டம் - இன்னொரு தரப்பினர் சுந்தரலிங்கனார் போக்குவரத்துக் கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு போராட்டம். மாவட்டந் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் கொண்டு அமைதிக் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். 10.5.1997 தேதிய "தினமணி" தலையங்கத்தில் "முதலமைச்சரின் முயற்சிகள் வரவேற்கத்தக்கது.
மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறையினரும் மிகவும் நிதானத்துடன் சிக்கலான நிலைமையை கையாளுகின்றனர் - அப்படியிருந்தும்கூட துப்பாக்கிச்சூடு நடத்தும் நிலை ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர்" என்று எழுதியது. தென் மாவட்டங்களில் அமைதி திரும்ப சமூகத்தின்பால் பற்றுள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்கள் அறிக்கை விடுத்தார். மேலும் அந்தக் கட்சியின் ஐந்து மூத்த தலைவர்கள் சோ.
பால கிருஷ்ணன், பாரமலை, அரு.சங்கர், கே.எஸ்.எம். ராமச்சந்திரன், கடையநல்லூர் மஜீத் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றினை பதற்றம் நிலவிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார். மே திங்கள் 5 ஆம் தேதியன்று திருநெல்வேலிக்கு அருகேயுள்ள துறையூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு வரையில் சென்று, இரண்டு பேர் உயிரிழக்க நேரிட்டது. மே 10 ஆம் தேதியன்று கலவரம் ராஜபாளையம் பகுதியில் பரவி, அங்கே ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அதற்கு முன்பு தொடர்ந்து டெல்லிப்பயணம், சட்டப்பேரவை என்று இடைவிடாத பணிகள் காரணமாக, ஓய்வே கிடைக்காத நிலையில், உதகையில் அப்போது நடைபெற்ற 102 வது மலர் கண்காட்சியையொட்டி சில நாட்கள் அங்கே தங்கி ஓய்வெடுக்கலாம் என்ற எண்ணத்தோடு சென்றிருந்தேன். ஆனால் நான் போய்ச் சேர்ந்த முதல்நாளே, தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் முற்றுகிறது என்ற செய்தி வந்த காரணத்தால், உடனடியாகச் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தேன்.
அங்கிருந்தவாறே டெல்லியில் இருந்த திரு. மூப்பனாரிடமும், சென்னையில் இருந்த தோழர் நல்லகண்ணுவிடமும் தொலைபேசியிலே பேசினேன். சென்னைக்குத் திரும்பியவுடன் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று அதிகாரிகளுக்கு போனிலேயே அறிவுரை கூறிவிட்டு, ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு சென்னை திரும்பினேன். கலைஞர் கலவரங்களைத் தடுப்பது பற்றி தேவர் - தேவேந்திரகுல சமூகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.
11.5.1997 அன்று திருவில்லிப்புத்தூர் அருகே மம்சாபுரத்தில் வன்முறைச் சம்பவங்கள் இரு தரப்பினரிடையே நடைபெற்று, 13 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதோடு, ஆறு பேருக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது. 12 ஆம் தேதி ராஜபாளையத்தில் செந்தட்டியாரபுரத்தில் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தங்கச்சாமியின் தந்தை பரமசிவம் வன்முறைக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். 14.5.1997 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கலவரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினேன்.
அதற்கிடையே மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் "சாதித் தலைவர்கள் பெயரில் மாவட்டங்களை அமைப்பதற்குப் பதிலாக, அவர்கள் பெயரில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கலாம்" என்று யோசனை தெரிவித்தார். நாளேடுகள் சிலவும்
, "திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சாதிப் பெயர்கள் சூட்டப்பட்டன. பெயர் வைக்கும் விஷயத்தில் ஆட்சியாளர்கள் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் ஏற்கனவே வைத்த பெயர்களைப் பொதுக்கருத்து அடிப்படையில் விலக்கிக் கொள்ளவும் அரசு தயங்கக்கூடாது" என்று எழுதின.
சிவகாசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும். கண்டமனூரில் தேவர் சிலை உடைப்பைக் கண்டித்தும், தேவர் பேரவை சார்பில் அன்றைய தினம் தென்மாவட்டங்களில் "பந்த்" நடத்த கோரிக்கை அறிவிக்கப்பட்டது. 14 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித்தலைவர்களும், பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். அ.தி.மு.க. மட்டும் கலந்துக்கொள்ளவில்லை.
கூட்டத்தில் த.மா.கா. தலைவர் அருமை நண்பர் ஜி.கே. மூப்பனார், எதிர்க்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர். நல்லகண்ணு, ஜி.பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் டாக்டர் ராமதாஸ், பேராசிரியர் தீரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என். சங்கரய்யா, கே.என். லட்சுமணன், பா.ஜ.க. சார்பில் டாக்டர் மைத்ரேயன், எம்.ஜி.ஆர். கழத்தின் சார்பில் ஆர்.எம். வீரப்பன், ஜெகத்ரட்சகன், போட்டி அ.தி.மு.க.
சார்பில் செ. அரங்கநாயகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திராவிடர் கழகத்தின் சார்பில் ஜி. சாமிதுரை, கலிபூங்குன்றன், இந்திய தேசிய லீக் சார்பில் அப்துல் லத்தீப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் சமது, தேவேந்திர குலவேளாளர் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, தேவர் பேரவை சார்பில் டாக்டர் வி. ராமகிருஷ்ணன், சி.கே. தமிழரசன், ஜான் பாண்டியன், எஸ்ஆர். சுப்பிரமணியம், ம.தி.மு.க.
சார்பில் அப்போது அந்தக் கட்சியிலே இருந்த பொன்.முத்து ராமலிங்கம், தங்கவேலு, கந்தசாமித் தேவர், சீனிச்சாமித் தேவர், கே.வி. தங்கபாலு, அய்யணன் அம்பலம், கிருஷ்ணபறையனார், ஐக்கிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தா. பாண்டியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆண்டித்தேவர், திருவாரூர் தங்கராசு, ஜி.ஏ. வடிவேலு, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்.பரமகுரு, எல். இளையபெருமாள், கோவை ராமகிருஷ்ணன், ஆனூர் ஜெகதீசன், சக்திதாசன், வை.
பாலசுந்தரம், கோபாலகிருஷ்ண யாதவ், திண்டிவனம் ஸ்ரீராமுலு, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. சார்பில் கலைஞர் தலைவர்கள் பெயரால் அறக்கட்டளைகளைத் ப. நெடுமாறன், வன்னிய துவங்குவதாக அறிவித்ததற்கு மூப்பனார் அடிகளார், குணங்குடி எனக்கு பேனா பரிசளித்து வாழ்த்தினார் எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ். பாலசுப்பிரமணியம், சே. நகைமுகன், எஸ்றா சற்குணம், கே. செல்ல முத்து, கோவை செழியன், கெங்கு சாமி நாயுடு, அனிபா, சந்தானம் எம்.எல்.ஏ., வல்லரசு, மணிகண்டன் ஆகியோரும் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர்.
பழனிவேல் ராஜன், அமைச்சர்கள் பேராசிரியர் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி. மணி, பொன்முடி, தமிழ்க்குடி மகன், ஆலடி அருணா, ரகுமான்கான், வே. தங்க பாண்டியன், ஐ. பெரிய சாமி, சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோரும், தலைமைச் செயலாளர் கே.ஏ. நம்பியார், உள்துறை செயலாளராக இருந்த பூர்ணலிங்கம், பொதுத்துறை செயலாளராக இருந்த தேவராஜ், காவல் துறைத் தலைவராக இருந்த கே.கே. ராஜசேகரன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் சாதிக் கலவரங்களைத் தடுப்பது குறித்து, "தேவர் பேரவைக் கட்சிப் பிரிவுகள் மற்றும் தேவேந்திரர் சங்கப் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டு தரப்பினருடன் 15.5.1997 அன்று காலையில் தலைமைச் செயலகத்தில் நான் விரிவான ஆலோசனை நடத்துவேன்" என்று அறிவித்தேன்.
மேலும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் மதுரையிலே ஒரு மாநாடு நடத்தப்படும் என்றும், அதிலே சமுதாயத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் நான் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு சாதித்தலைவர்களின் பெயரை வைப்பதற்கு கூட்டத்தில் கலந்துக்கொண்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அன்று நடைபெற்ற கூட்டத்தில் உயிரிழந்தோர்க்கும், உடைமைகளை இழந்தோர்க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள் வாயிலாக முறையாக ஆய்வு செய்து போதுமான நட்ட ஈடு வழங்க உறுதி அளிக்கப்பட்டது.
பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், அதனைப் பேசித் தீர்த்துக் கொண்டு அமைதி காத்திட வேண்டுமென்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் வன்முறை செயல்களிலே ஈடுபட வேண்டாமென்றும் அனைத்துச் சமுதாய மக்களையும் அந்தக் கூட்டம் கேட்டுக் கொண்டது. தீண்டாமை எனும் கொடுமை அணுகவிடாது எல்லோரும் ஓர் குலம் என்னும் கருத்தை உள்ளத்தில் பதித்து-சகோதர உணர்வுடன் சமத்துவம் காத்திட வேண்டும் என்று அனைத்துப் பிரிவு மக்களையும் அக்கூட்டம் வேண்டிக் கொண்டது.
14ஆம் தேதிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவிற்கிணங்க, 15.9.1997 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையில், தென்மாவட்டங்களில் சாதிக் கலவரங்களைத் தடுப்பது தொடர்பாக தேவர் மற்றும் தேவேந்திர குல சமூகத் தலைவர்களையெல்லாம் அழைத்து தனித்தனியே பேச்சு நடத்தினேன். தேவர் சமுதாயம் சார்பாக அய்யண்ணன் அம்பலம், ஆண்டித்தேவர், பொன்.பரமகுரு, டாக்டர்.
ராமகிருஷ்ணன், சீனிச்சாமி தேவர், அரப்பா, பி.என். வல்லரசு, சந்தானம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தேவேந்திரர் குலத்தினர் சார்பாக டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அரசு சார்பில் எடுத்த முயற்சியைப் பாராட்டி 16.5.1997 தேதிய "தினமணி" தலையங்கம் வருமாறு:- "தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி மற்றும் சமூகத் தலைவர்கள் கூட்டத்தில் சாதிக்கலவரங்களைத் தடுப்பது குறித்து சில நல்லமுடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
ராஜாஜி மண்டபத்தில் நிலவிய நல்லிணக்கமும், கலைஞர் தலைவர்கள் பெயர்களை மாவட்டங்களுக்குச் சூட்டியதை மாற்றியதற்காக, என்னை ஜனதாதளத் தலைவர் வடிவேலுவும் மற்றையோரும் வாழ்த்தினர். கருத்தொற்றுமையும் தென் மாவட்டங்களில் பிரதிபலிக்கும் என நம்புவோம். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் மதுரையில் சமுதாயத் தலைவர்கள் மாநாடு நடத்தும் முடிவும் சரியானதே. அ.தி.மு.க. தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், சமுதாயத் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துகளைத் தெரிவித்தது.
நல்லிணக்கம் நிலவுவதில் அவர்களுக்குரிய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. நேரடி மோதலில் ஈடுபட்ட இரு சமூகத்தவருடனும் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராம்தாஸ் கூறிய யோசனையை ஏற்று, மறுநாளே இரு தரப்பினருடனும் தனித்தனியே முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன் மூலம் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்பட்டு, பதற்றம் வெகுவாகத் தணிய வழி ஏற்படும்."
தலைநகரில் இவ்வாறு சமரசப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, 16.5.1997 அன்று மதுரையில் ஒரு பகுதியில் சாதிக் கலவரம் ஏற்பட்டு, அதனை அடக்க போலீசார் மூன்றுமுறை வானை நோக்கித் துப்பாக்கியால் சுட நேர்ந்தது. கல் வீச்சில் காவல் துறை துணை ஆணையர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். ஏராளமான குடிசைகளுக்கு அங்கே தீ வைக்கப்பட்டது. 11 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. திடீர்நகர்காவல் நிலையம் தாக்கப்பட்டதில், மாநகர் காவல் துறை ஆணையராக இருந்த சங்கர்ஜிவால், ஆய்வாளர் கமாலுதீன், மற்றும் காவலர்கள் கதிரவன், செல்லதுரை உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
16.9.1997 அன்று தலைமைச் செயலகத்தில் சமூக இயக்கத் தலைவர்களுடன் மீண்டும் மூன்றாவது நாளாகப் பேச்சுவார்த்தை நடத்தினேன். காமராஜர் மாவட்டத்தில் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பூலித்தேவர் பெயரில் போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்த வேண்டுமென்று தேவர் பேரவையினர் வலியுறுத்தினார்கள். சிவகாசி, துறையூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுபற்றி நீதிவிசாரணை நடத்த உத்தரவிட்டதோடு, மே திங்கள் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் கலவரம் நடந்த பகுதிகளையெல்லாம் நானே சென்று பார்வையிடுவதாக அறிவித்தேன்.
★ ★ ★ 29.5.1997 அன்று சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மதுரை சென்றடைந்தேன். அப்போது நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 14 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி அளிக்கப்பட்டது. குன்றக்குடி பொன்னம்பல தேசிக அடிகளார் அவர்கள் மதுரையிலே என்னைச் சந்தித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட நிவாரணம் போதாது என்றும், வேறு சில நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதன் பேரில், உடனடியாக காமராஜர் மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேசி, அந்த மாவட்டத்திற்குக் கூடுதலாக பத்து இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அது போலவே தேனி, கண்டமனூர் பகுதிகளிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு 28 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அந்த கலைஞர் நேரத்தில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 66 இலட்சம் ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. எனது அறிவிப்பைப் பாராட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, ஏ.எம். கோபு. சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய என்னை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்கள், "தென் மாவட்டப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?"
என்று கேட்டனர். "இதிலே வெற்றி கரம் என்றெல்லாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? பொதுவாகப் பாதிக்கப்பட்ட மக்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறியது நிம்மதியைத் தருகிறது. நான் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மகத்தான வரவேற்பு தந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய குறைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தேன்.
★ ★ ★ தென் மாவட்டங்களில் சாதிக்கலவரங்கள் நடைபெற்றதை யொட்டியும், அதற்காக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும் 5.6.1997 அன்று ராஜாஜி மண்டபத்தில் என்னுடைய தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பிரச்சினை, மாவட்டங்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களைத் தொடரலாமா அல்லது மாற்றி விடலாமா என்பதைப் பற்றித்தான்.
அன்றைய விவாதத்தில் கருத்து தெரிவித்த 44 பேரில் 34பேர் பெயர்களை மாற்றி விடலாமென்றும் 10 பேர் பெயர்களை மாற்றத் தேவையில்லை என்றும் பேசினார்கள். இறுதியாகப் பேசிய மூப்பனார் அவர்களும், அப்துல் லத்தீப் அவர்களும், உடனடியாக முடிவெடுக்கத் தேவையில்லை என்றும், எல்லோருடைய கருத்துக்களையும் ஆய்ந்து பார்த்து அரசின் சார்பில் முடிவினை பின்னர் அறிவிக்கலாம் என்றும் சொன்னார்கள். நம்மால் பெரிதும் மதிக்கப்பட்டு - நமக்குத் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்களை எடுப்பதென்றால், எந்த அளவிற்கு அது வருத்தத்தைத் தரக்கூடியது என்பதையெல்லாம் விவரமாக அந்தக் கூட்டத்திலே நான் எடுத்துரைத்து - "பெயர் நீக்கம் பற்றி அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டோம் - மீண்டும் மீண்டும் உரியவர்களுடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவினை அறிவிப்பேன்" என்றும் இறுதியாக நான் பேசினேன்.
இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையின் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் பல தலைவர்களின் பெயரால் தமிழகமெங்கும் நடைபெற்று வந்த 21 போக்குவரத்துக் கழகங்களையும் சீரமைத்து - ஏழு போக்குவரத்துக் கழகங்களாக மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டு - அந்த ஏழு போக்குவரத்துக் கழகங்களுக்கும் சென்னை போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்து கழகம், கோவை போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக்கழகம், மதுரைப் போக்குவரத்துக் கலைஞர் சாதிக் கலவரங்கள் அடங்கி, அமைதி திரும்ப நான் அனுப்பிய அமைச்சர் தம்பி தங்கபாண்டியன் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம், சேலம் போக்குவரத்துக் கழகம் என்று பெயரிடுவது என்றும், அந்த ஏழு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் ஏற்கனவே நடைபெற்று வந்த 21 போக்குவரத்துக் கழகங்களையும் பகிர்ந்தளிப்பது என்றும் அரசின் சார்பில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
1.7.1997 அன்று சென்னையில் அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்று, தலைவர்களின் பெயர் மாற்றம் விவாதித்து பின்வரும் முடிவெடுக்கப்பட்டது. 5.6.1997 அன்று நான் கூட்டியிருந்த அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பாலான தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கிணங்க - மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் வைக்கப்பட்டுள்ள பெயர்களை அகற்றுவதென்றும், அகற்றப்பட்ட தலைவர்களின் பெயர்களால் - ஒவ்வொரு தலைவரின் பெயராலும் 25 இலட்ச ரூபாய் மதிப்பு நிதி வைத்து - 15 பல்கலைக்கழகங்களில் 28 அறக்கட்டளைகள் தொடங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு தலைவர் பெயரிலும் வைப்பு நிதியாக வைக்கப்படும் 25 இலட்ச ரூபாயிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து அந்தப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளின் சிறந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையில் கல்விக் கட்டணம், புத்தகச் செலவு மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவை அடங்கும். பல்வேறு பல்கலைக் கழகங்களில் தலைவர்களின் பெயரால் அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டன. தலைவர்களின் பெயரில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெயர்கள் அந்த மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களால் மாற்றி அமைக்கப்பட்டன.
இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று மாலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அவர்கள் என்னைச் சந்தித்து பாராட்டியதோடு, பேனா ஒன்றையும் பரிசாக அளித்து வாழ்த்தினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். நல்லகண்ணு அவர்களும், ஏ.எம். கோபு அவர்களும் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஜனதா தளக் கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் வடிவேலு, துணைத்தலைவர் எம்.சி.
டேவிட், பொதுச்செயலாளர் ஜி.கே. தாஸ், பொருளாளர் அய்யாத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்துப் பாராட்டினர். தாய்க் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் இனமான வீரமணி அவர்கள் அறிக்கை விட்டுப் பாராட்டினார். மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், ஆன்மிகவாதிகளும். சமயங்களின் சான்றோர்களும், கவிஞர்களும், பத்திரிகைத்துறை நண்பர்களும் தமிழக அரசின் அந்த அறிவிப்புக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக
்கொண்டனர். கலைஞர் குறிப்பாக "தினமணி" "மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இப்படி அகற்றப்படும் தலைவர்களின் பெயர்களில் தமிழகத்தில் உள்ள 15 பல்கலைக் கழகங்களில் 28 அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, மகிழ்ச்சியுடன் பாராட்டத்தக்கது. இப்பிரச்சினையில் கருத்தொற்றுமை ஏற்பட உதவிய அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
சாதித் தீயை அணைக்க உதவும் இந்நடவடிக்கை சுதந்திரப் பொன்விழா ஆண்டில் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. சாதிகளற்ற சமுதாயம் உருவாக இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கலாம். ஆனால் தேசத் தலைவர்களைச் சாதியின் பெயரால் இழிவுபடுத்தும் மடமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுவிட்டது. இது போன்ற துணிவான முடிவுகளை அரசு எடுக்கப் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று எழுதியது.
கலைஞானி நடிகர் கமலஹாசன் இதைப்பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது - "மாவட்டங்கள் மற்றும் பேருந்துகளுக்கு பெயர் நீக்கம் செய்திருப்பதற்கு கலைஞருக்கு நன்றி சொல்லத் தெரியாமல் திகைக்கிறேன் - பெரியாரால் ஒழிக்கப்பட்ட சாதி மீண்டும் தலை தூக்காமல் தடுப்போம்" என்று கூறினார்.
இந்த அறிவிப்பையொட்டி, இந்துக் கோயில்களிலும், கிறித்துவ ஆலயங்களிலும், இஸ்லாமியப் பள்ளிவாசல்களிலும் அனைத்துச் சமூகத்தினர், சமயத்தினர் கலந்துக்கொள்ளும் சமபந்தி விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. "அந்த சமபந்தி விருந்துகளில் அமைச்சர்களும், அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும்" என்று நான் கேட்டுக்கொண்டேன்.
பெயர் மாற்ற முடிவை இவ்வாறு பெரும்பாலான கட்சித் தலைவர்களும், கட்சி சார்பற்றவர்களும் வரவேற்றபோதிலும், பா.ம.க. தலைவரான டாக்டர் ராம்தாஸ், "அந்த முடிவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று அறிக்கை கொடுத்தார். அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா அது "மகிழ்ச்சி தரத்தக்கதல்ல" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இவர்கள் இருவரைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே அந்த முடிவினை அப்போது வரவேற்றன. சாதிக் கலவரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்னையில் 3.7.1997 அன்று மதியம் மயிலை கபாலீசுவரர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நான், ஜி.கே. மூப்பனார், ஆர். நல்லக்கண்ணு, ஆர்.எம். வீரப்பன், ஏ.எம். கோபு, ஜி. பழனிச்சாமி எம்.எல்.ஏ., ஜெகத்ரட்சகன், ஏ.சி. சண்முகம், பீட்டர் அல்போன்ஸ் எம்.பி., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவாவடு துறை முத்துக் குமாரசாமி தம்பிரான், கே.என்.
லட்சுமணன், இல. கணேசன், ஆர்.டி. சீத்தாபதி, சைதை கிட்டு, இராமஜெயம் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராசன், துறைமுகம் காஜா, ரெங்கநாதன் எம்.எல்.ஏ., சுதர்சனம் எம்.எல்.ஏ., இ.எஸ்.எஸ். ராமன் எம்.எல்.ஏ., மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டோம். மற்றக் கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் மற்ற அமைச்சர்களும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சியினரும் கலந்துக்கொண்டனர்.
