உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நிவாரணம் வழங்கிட நீதிபதி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நிவாரணம் வழங்கிட நீதிபதி · 330 / 391

கலைஞர் 18. நிவாரணம் வழங்கிட நீதிபதி நியமனம் மூப்பனாருக்கும் எனக்கும் இருந்த நட்பு - நீண்ட கால ஆழமான நட்பு! தே வகவுடா தலைமையிலான ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நரசிம்மராவ் இருந்தவரை அளித்துவந்த ஆதரவை - நரசிம்மராவ் அவர்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீதாராம் கேசரி வந்தவுடன், திடீரென்று 97 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் தேதியின்று திரும்பப் பெற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று பிரதமர் தேவகவுடா அவர்களுக்கு குடியரசுத் தலைவர் அறிவித்தார். காங்கிரஸ் கட்சி தனது ஆதரவினைத் திரும்பப் பெறுவது பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "அது துரதிருஷ்டவசமானது" என்று கூறினேன்.

டெல்லியிலிருந்து வரிசையாக வந்த தொலைபேசியினை அடுத்து 31.3.1997 அன்று காலை விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றேன். நான் சென்ற அதே விமானத்தில் மத்திய தொழில் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக இருந்த என்.வி.என். சோமுவும் என்னுடன் வந்தனர். த.மா.கா. தலைவர் அருமை நண்பர் மூப்பனாரும், மத்திய இணை அமைச்சராக இருந்த தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ் எம்.பி., ஜெயந்தி நடராசன் எம்.பி., ஆகியோரும் அதே விமானத்தில் வந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, டி.ஜி.வெங்கட்ராமன், நாடாளுமன்ற தேவகவுடா இல்லத்தில் நடைபெற்ற வழிகாட்டும் குழுக்கூட்டத்தில் என் கருத்துரைகளைக் கூறினேன் உறுப்பினர்கள் கோவை ராமநாதன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் என்னை வரவேற்று தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். நான் வந்தது அறிந்ததும் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து அரசியல் நிலவரங்களை விளக்கிச் சென்றார்.

பீகார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ் அவர்களும், காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா அவர்களும் நான் கூறிய மாதிரியே காங்கிரசின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்திருந்தார்கள். 1.4.1997 அன்று டெல்லியில் பிரதமர் தேவகவுடா அவர்கள் இல்லத்தில் ஐக்கிய முன்னணியின் வழிகாட்டும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. நான், பிரதமர் தேவகவுடா, மூப்பனார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டோம்.

அன்று பிற்பகல் தமிழ்நாடு இல்லத்தில் என்னை அஸ்ஸாம் மாநில முதல்வர் மகந்தா சந்தித்தார். டெல்லியில் என்னைச் செய்தியாளர்கள் சந்தித்தபோது, "நாடாளுமன்ற இடைத் தேர்தலை நாட்டு மக்களே கலைஞர் விரும்பவில்லை, அதையும் மீறி தேர்தல் வந்தால் சந்திக்கத் தயார்" என்று கூறினேன்.

மீண்டும் 9.4.1997 அன்று டெல்லியில் பிரதமர் தேவகவுடா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முன்னணியின் வழிகாட்டும் குழுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். பிரதமர் தேவகவுடா, நான், மூப்பனார், மேற்கு வங்க முதல்வர், ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், மத்திய அமைச்சர் தம்பி முரசொலி மாறன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பரதன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

அன்று மாலையில் தமிழ்நாடு இல்லத்திற்கு பஞ்சாப் மாநில முதல்வரும், அகாலி தளக் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் அவர்களும், அகாலிதள நாடாளுமன்றக் குழுத் தலைவராக அப்போது இருந்தவரும். தற்போது தமிழக ஆளுநராக இருப்பவருமான பர்னாலா அவர்களும், சிரோன்மணி குருத்துவாரா பிரபந்த கமிட்டியின் தலைவரான குர்சரன் சிங் டோரா அவர்களும் வருகை தந்து அப்போதுள்ள நிலவரங்கள் குறித்து விவாதித்தார்கள். 11.4.1997 அன்று பிரதமர் தேவகவுடா அவர்கள் ஐக்கிய முன்னணி அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், ஐக்கிய முன்னணி அரசின் சாதனைகள் பற்றியும், காங்கிரஸ் கட்சி திடீரென்று எடுத்த நிலைகள் குறித்தும் சுருக்கமாக உரையாற்றினார். தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 11 மணி நேரம் பேசினர். அதற்குப் பின் பிரதமர் தேவகவுடா சுமார் ஒன்றரை மணி நேரம், பத்து மாதங்களில் ஐக்கிய முன்னணி அரசு மேற்கொண்ட நலத் திட்டங்களையெல்லாம் விவரித்தார். அதன் பின் மக்களவைத் தலைவர் சங்மா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடப்போவதாக அறிவித்தார்.

வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 나துடெல்லியில், தமிழ்நாடு இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த து. ராஜா என்னைச் சந்தித்து உரையாடினார். ஆதரவாக 158 உறுப்பினர்களும், எதிர்ப்பாக 292 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 6 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தேவகவுடா அரசு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மக்களவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை அடுத்துக்கூடி விவாதித்த பின், தேவகவுடா அவர்கள் அன்றிரவே குடியரசுத் தலைவரைச் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

12.4.1997 அன்று காலையில் நானும், தம்பி மாறனும் டெல்லியில் உள்ள அப்போலா மருத்துவனைக்குச் சென்று, அங்கே சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அதன்பின் அவரிடம் நீண்ட நேரம் இந்திய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினோம். ஐக்கிய முன்னணி தலைமையில் எந்தவித மாற்றமும் செய்வதில்லை என்றும், பா.ஜ.க. வோ, காங்கிரஸ் கட்சியோ மத்தியிலே ஆட்சி அமைக்க ஐக்கிய முன்னணி ஆதரவு அளிப்பதில்லை என்றும் 12.4.97 அன்று காலையில் நடைபெற்ற வழிகாட்டுக் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழுக்கூட்டம் அன்று மாலையிலும் நடைபெற்றது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஐக்கிய முன்னணியின் தலைமையில் மாற்றம் செய்ய வேண்டுமென்று ஒரு நிபந்தனை தெரிவித்திருந்ததால், அதைப்பற்றி வழிகாட்டுக் குழுவிலே விவாதித்து, காங்கிரஸ் விதித்துள்ள நிபந்தனையின்படி ஐக்கிய முன்னணியின் தலைமையில் மாற்றம் செய்ய இயலாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் எப்படியோ, விளைவை அறியாத குழந்தை விளக்கை எடுத்து வீட்டுக்குள்ளேயிருக்கும் திரைச் சீலையின் மீது பிடித்துவிட்டதைப் போன்றதொரு நிகழ்ச்சி டெல்லிப் பட்டினத்தில் நடைபெற்றது - தீயைத் தடுக்கும் பணியிலும் - வீட்டைக் காப்பாற்றும் பணியிலும் பொறுப்பை உணர்ந்து ஈடுபடுவதற்காக - ஒரு சில நாட்கள் டெல்லியிலேயே தங்கியிருந்தேன்.

அதற்கிடையிலே தமிழகத்தில் இருந்த சில ஏடுகள் எனக்கும் மூப்பனாருக்கும் மனத்தாங்கல் என்றும் - நான் பா.ஜ.க. பக்கம் போகப் போவதாகவும் - தங்கள் தங்கள் கற்பனைக்கேற்றவாறு செய்திகளை வெளியிட்டன. அதிலே வேடிக்கை என்னவென்றால் நானும், மூப்பனார் அவர்களும் ஒன்றாகவே அமர்ந்து, விடிய விடிய விவாதித்துக்கொண்டிருக்கும் போதுதான் இப்படிப்பட்ட செய்திகள் வந்தன. 13.4.1997 அன்று இரவு ஐக்கிய முன்னணியின் வழி காட்டுக் குழுக் கூட்டம் மீண்டும் தேவகவுடா இல்லத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய தேவகவுடா அவர்கள், பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காணப்பட வேண்டுமென்ற அடிப்படையில், ஐக்கிய முன்னணித் தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், பதவி விலகவும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 17.4.1997 அன்று மீண்டும் டெல்லியில் ஐக்கிய முன்னணியின் வழி காட்டுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதென்ற முடிவோடு சென்னை திரும்பினேன்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து கேட்ட முதல் கேள்வியே "மூப்பனார் பிரதமராக ஆவாரா?" என்பதுதான். "இப்போது எதுவும் சொல்ல இயலாது. 17ஆம் தேதி மறுபடியும் ஐக்கிய முன்னணியின் வழி காட்டுதல் கூட்டம் கூடுகிறது. அதன் பிறகுதான் எதுவும் அறிவிக்கப்படும்" என்று கூறினேன்.

"ஐக்கிய முன்னணி ஆட்சி நீடிக்க வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?" என்று செய்தியாளர் கேட்டபோது, "ஐக்கிய முன்னணி ஆட்சி நீடிக்க எல்லாம் வல்ல ஜனநாயகம் அருள் புரியுமாக!" என்று சிரித்தவாறே கூறினேன். 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய முன்னணியின் வழி காட்டுதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்ட நேரத்தில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் என்னைச் சந்தித்த செய்தியாளர்கள், "நீங்கள் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து அதிகமாகப் பாடுபட்டுக்கொண்டு வருகிறீர்கள் - ஒரு தமிழர் இப்போது முதன் முறையாக பிரதமராக வர வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் - மூப்பனார் வரப்போகிறார் என்றும் வெளியே பேச்சு நடைபெறுகிறது - அதில் தங்களின் கருத்து என்ன?"

என்று கேட்டபோது, "பிரதமர் பதவிக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமேயானால், தி.மு. கழகம் மூப்பனாரின் பெயரைத் தவிர வேறு யார் பெயரைச் சொல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று பதில் கூறினேன். டெல்லி சென்றதும் ஒரு துயரச் செய்தி. ஒரிசா மாநில முன்னாள் முதல்அமைச்சரும், என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த நேரத்தில் தமிழகத்திற்கு வருகை தந்து தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் ஒன்றாக இணைக்க வேண்டுமென்று அரும்பாடுபட்டவரும், அதற்காக என்னைப் பலமுறை சந்தித்து வலியுறுத்தியவருமான பிஜு பட்நாயக் அவர்கள், டெல்லி மருத்துவமனையிலே இயற்கை அடைந்து விட்டார் என்று செய்தி கிடைத்தது.

உடனடியாக நானும், மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு, டி.ஜி. வெங்கட்ராமன், என்.வி.என். சோமு மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி. ராமலிங்கம், சண்முகசுந்தரம், டி.எஸ்.ஏ. சிவப்பிரகாசம் ஆகியோரும் டெல்லியிலே இருந்த பட்நாயக் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம். கலைஞர் லல்லு பிரசாத் யாதவ், ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோருடன் நான் ஐக்கிய முன்னணியின் நிலைக்குழுவின் அவசரக் கூட்டம் 18.4.1997 அன்று டெல்லியில் அதன் கட்சி அலுவலகத்தில் கூடியது.

"ஐக்கிய முன்னணிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்தத் தலைவரை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும்!" என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சீதாராம் கேசரி அவர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் நகலை ஐக்கிய முன்னணியின் நிலைக்குழுவிற்கும் காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்திருந்தது. அந்தக் கடிதம் குறித்து ஐக்கிய முன்னணியின் நிலைக் குழு விவாதித்தது. "காங்கிரஸ் கட்சி தருகிற ஆதரவு மீது ஐக்கிய முன்னணி தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுமேயானால், புதிய அரசு அமைப்பதற்கு தான் குறுக்கே தடையாக இருக்க மாட்டேன்!"

என்று பிரதமர் தேவகவுடா அந்தக் கூட்டத்தில் கூறினார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடைபெற்றன. பல மாநில முதல் அமைச்சர்களும், கட்சிகளின் தலைவர்களும் என்னைத் தனித்தனியாகச் சந்தித்து அவரவர்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ரால், நிதியமைச்சர் ப. சிதம்பரம், த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார், மத்திய அமைச்சர் அருணாசலம், பீகார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத் யாதவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் என்னைச் சந்தித்து விவாதித்தனர்.

இறுதியாக ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழுக்கூட்டம் 19.4.97 அன்று இரவு 7.30 மணியளவில் கூடியது. அதில் ஐக்கிய முன்னணியின் புதிய தலைவராக ஐ.கே.குஜ்ரால் பொதுக் கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சீதாராம் கேசரிக்கு ஐக்கிய முன்னணியின் அமைப்பாளர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 20.4.1997 அன்று காலையில் டெல்லியிலுள்ள ஆந்திர பவனில் ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடி, முறைப்படி குஜ்ரால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் நானும். ஏனைய ஐக்கிய முன்னணித் தலைவர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து விவரங்களை விளக்கினோம். சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியைச் சந்தித்துப் பேசினார். ஐக்கிய முன்னணியின் புதிய அரசின் செயல்பாடுகள் பற்றி உறுதி செய்ய பத்துப்பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதென்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. பிரதமர் குஜ்ரால் தலைமையிலான இந்தக் குழுவில் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த ஐந்துப்பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்துப்பேரும் இடம் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.கே. குஜ்ரால் குடியரசுத் தலைவர் சர்மா அவர்களை 20 ஆம் தேதி இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து உரையாடினார். அப்போது அவரை பிரதமராக நியமித்ததற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் அளித்ததாகவும், 22 ஆம் தேதியன்று மக்களவையிலே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாகவும் குஜ்ரால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய முன்னணியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குஜ்ரால், டெல்லி தமிழ் நாடு இல்லத்திற்கு வருகை தந்து, என்னைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்துக்கொண்டார். நானும் அவருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக் கூறினேன். கலைஞர் புதுடெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வி.பி. சிங் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தேன் இதற்கிடையில் "மத்தியில் ஐக்கிய முன்னணி அரசில் பங்கேற்க மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு தருவோம்!"

என்று த.மா.கா. சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டது. அதைப்பற்றி செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "எதிர் பாராதது- வருந்தத்தக்கது - மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழுக்கூட்டத்திலேயே மூப்பனாரிடம் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது. தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்படும். நாட்டின் நன்மைக்காக அவர்கள் எடுத்துள்ள முடிவை திரும்பப் பெறுமாறு வேண்டுகிறேன்" என்று கூறினேன்.

21.4.1997 அன்று காலையில் ஐக்கிய முன்னணி அரசின் புதிய பிரதமராக ஐ.கே. குஜ்ரால் அவர்கள் பதவியேற்றார். அவருடன் முரசொலி மாறன் உள்ளிட்ட 33 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் நானும் கலந்துக்கொண்டு விட்டு சென்னை திரும்பினேன். ஆனால் அதற்குள் "மூப்பனாரை

பிரதமராக்க இடதுசாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை!" என்ற ஒரு கருத்தும், தி.மு.க. மீது குறை கூறி மற்றொரு கருத்தும் தமிழகத்தில் பரவலாக ஒரு சில ஏடுகளில் வெளி வந்திருந்தது. விமான நிலையத்திலேயே செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்தே முதல் கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு நான், "பிரச்சினைகளை உருவாக்கியதும், உருவாக்கிக் கொண்டிருப்பதும் சில பத்திரிகைகள்தான். நான் எல்லா பத்திரிகைகளையும் சொல்லவில்லை.

ஏடுகளில் வெளி வந்துள்ள செய்திகள் எல்லாம் வதந்திகள்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடைய ஆதரவை மூப்பனாருக்குத் தரவில்லை. வேறு ஒரு வேட்பாளருக்குத் தந்தார்கள். அப்படி ஆதரவு கொடுக்கும் போது அவர்களுடைய நிலையைச் சொன்னார்களே தவிர, தனிப்பட்ட முறையில் தமிழ்மாநிலக் காங்கிரசைப் பற்றியோ-மூப்பனாரைப் பற்றியோ-எதுவும் சொல்லவில்லை. அப்படியிருந்தும் சில பத்திரிகைகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய நேர்மையைச் சந்தேகிப்பதைப் போல செய்தியை வெளியிட்டார்கள்.

அதுபற்றி ஜோதிபாசு அவர்களும், நானும், சந்திரபாபு நாயுடு அவர்களும் வழிகாட்டும் கூட்டத்திலும் சொல்லியிருக்கிறோம். "நேற்றையதினம் இரவு 11 மணியிலிருந்து சுமார் 12 மணிவரையில் நானும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், முரசொலி மாறனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தோழர் சீத்தாராம் எச்சூரி அவர்களும் மூப்பனாரை அவர் தங்கியிருக்கும் இடத்தில் சந்தித்து, பத்திரிகைகளில் தவறாக வந்த செய்திகளைப் பொருட்படுத்த வேண்டாமென்று எடுத்துக்கூறி - மத்திய அமைச்சரவையிலே தமிழ் மாநிலக் காங்கிரசார் பங்குக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இன்று காலையில் 8.30 மணி அளவில் மூப்பனார் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் பேசுவதாகச் சொன்னார். அதன்படி இன்று காலையில் தொலைபேசியில் பேசினார். அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும், மற்றும் அவருடைய கட்சியையும் கலந்துக்கொண்டு சொல்வதாக என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் மத்திய அரசில் பங்கு கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நான் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றபோதே, நாங்கள் மூப்பனாரை ஆதரிப்பதாகக் கூறி விட்டுத்தான் டெல்லி சென்றேன்.

அதன்படி முயற்சி எடுத்துக்கொண்டு டெல்லியிலே மார்க்சிஸ்ட் கட்சியைச் சந்தித்தேன் - ஜனதா தளத்தைச் சந்தித்தேன் - எல்லாக் கட்சிகளையுமே சந்தித்தேன் - அங்கேயுள்ள சூழ்நிலைக்கேற்ப பல வேட்பாளர்கள் கலைஞர் ஐக்கிய முன்னணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.கே. குஜ்ரால் அவர்களுக்கு முரசொலி மாறன் மரியாதை போட்டியிட்டதில், இறுதியாக ஒருமித்த கருத்து குஜ்ராலுக்கு என்று முடிவானபோது அந்தக் கருத்தை வழி காட்டும் கூட்டத்தில் எல்லோரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம்" என்று விரிவாகப் பதில் சொன்னேன்.

தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், "த.மா.கா.வைச் சேர்ந்த சித்தன் போன்றவர்கள், நீங்களும் சந்திரபாபு நாயுடுவும் முடிவு பண்ணியிருந்தால், மூப்பனாரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கடுமையாகப் பேசுகிறார்களே?" என்று கேள்வி கேட்டதற்கு - "ஐக்கிய முன்னணியில் 13 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மூப்பனாருக்காக மற்ற கட்சிகளோடு பேசத்தான் நான் 17ஆம் தேதி டெல்லிக்கு வந்தேன். அன்று பிஜு பட்நாயக் காலமானதால் எந்தத் தலைவர்களையும் சந்திக்க இயலவில்லை.

எனினும் இரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சுர்ஜித் போன்றவர்களை அவர்களது இல்லத்துக்கே சென்று சந்தித்தேன். லல்லு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோரை மறுநாள் சந்தித்து. மூப்பனாருக்காக ஆதரவு கேட்டேன். ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் தேவகவுடா பதவி விலகுவதால், அவருக்குப் பதிலாக ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்தான் பிரதமராக வர வேண்டுமென்று அவர்கள் உறுதியாக இருந்தனர். பெரிய அணியாக இருந்த இடதுசாரி அணியும், ஜனதாதள அணியும் வேறு கருத்துக்கொண்டிருக்கும் போது நான் என்ன செய்ய இயலும்?

இதற்கிடையே அஸ்ஸாம் மாநில முதல்வர் மகந்தாவும் என் கருத்துக்கு இணங்கவில்லை. முலாயம் சிங் யாதவ் தனக்கே ஆதரவு தரவேண்டுமென தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் மூப்பனாருக்கு ஆதரவு குஜ்ராலுக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அருகே சந்திரபாபு நாயுடு. திரட்டுவதற்காகத்தான் கடந்த ஆண்டைப்போல தமிழ்நாடு மாளிகையில் அனைவரையும் சந்தித்து முடிவெடுக்கிற நிலையைத் தவிர்த்தேன். அதாவது நானே ஒரு வேட்பாளரை - மூப்பனாரை ஆதரித்து ஆதரவு கேட்கும் போது மற்ற கட்சித் தலைவர்களை தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துப் பேசுவது முறையல்ல என்பதால் நானே அவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று ஆதரவு கோரினேன்" என்று விளக்கமாகப் பதில் கூறினேன்.

தொடர்ந்து செய்தியாளர், "முடிவாக குஜ்ரால் பெயர் எப்படி வந்தது?" என்று கேட்டதற்கு, "அந்தப் போட்டியிலே இறுதியாக ஒரு நடுநிலையான வேட்பாளர் என்ற வகையில் அவருடைய பெயர் சொல்லப்பட்டது. ஒவ்வொரு கட்சியாக அழைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதில் குஜ்ராலின் பெயர் ஒருமித்த கருத்தாக உருவானது. வழிகாட்டும் கூட்டத்தில் அவரது பெயரை சந்திரபாபு நாயுடு அறிவித்தார். அது ஏற்கப்பட்டது" என்று சொன்னேன்.

22.4.1997 அன்று நாடாளுமன்ற மக்களவை கூடியபோது, பிரதமர் குஜ்ரால் அவர்கள் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அந்தத் தீர்மானத்தின் மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு குஜ்ரால் பதில் கூறினார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பி.ஏ. சங்மா குரல் வாக்கெடுப்புக்கு விட்டார். பா.ஜ.க. மட்டும் தீர்மானத்தை எதிர்த்தது. எனினும் அந்தக் கட்சியும் டிவிஷன் வாக்கெடுப்பு கோரவில்லை.

நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறியதாக மக்களவைத் தலைவர் அறிவித்து, அவையை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மூப்பனாருக்குக் கிடைக்க விருந்த வாய்ப்பினை நான் ஏதோ கெடுத்து விட்டதாக எதிர்க்கட்சியினர் உறுதியாகப் கலைஞர் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவின் முன் பதவிப் பிரமாணம் ஏற்கிறார். பிரச்சாரம் செய்து, அதனைக் கேட்டு த.மா.கா.விலே உள்ள ஒரு சிலர் அதில் உண்மையிருக்குமோ என்ற வகையில் நினைத்த போது, தொடர்ந்து நான் அது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து வந்தேன்.

நான் டெல்லியிலிருந்து திரும்பிய பின் அதற்கு அடுத்த நாளே, 'குமுதம்' வார இதழுக்காக அதன் பொறுப்பாசிரியராக அப்போதிருந்த மாலன் என்னை ஒரு பேட்டி கண்டார். அந்தப் பேட்டி முழுவதுமே மூப்பனார் பிரச்சினை குறித்தே அமைந்தது என்பதால் அந்தப் பேட்டியின் சாராம்சத்தை இதிலே இணைப்பது நம்மை பயங்குமென்று எண்ணுகிறேன். குமுதம் :- தமிழர் ஒருவர் பிரதமராவதற்கு நீங்கள் தீவிர முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

நான்:- அது அப்பட்டமான பொய். எல்லாவிதமான முயற்சிகளையும் நான் மேற்கொண்டேன். ஆனால் அந்த முயற்சி எனக்கு வெற்றி அளிக்கவில்லை என்பது தான் வருந்தத் தக்க விஷயம். குமுதம்:- என்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்? நான்:- முதலில் மூப்பனார் அந்தப் பதவிக்குப் போட்டியிடுகிறாரா என்று தெரிந்துக்கொள்வதற்கே நான் பெரிய முயற்சியில் ஈடுபட வேண்டியதாயிற்று. நான் நேரடியாகக் கேட்டால் சொல்வதற்குக் கூச்சப்படுவார் என்பதற்காக, முரசொலி மாறனை விட்டுக் கேட்கச் சொன்னேன்.

மாறன் கேட்டபோது கூட, அவர் "என்னுடைய தோழர்கள் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களது மனம் புண்படும் என்பதற்காக வாயை மூடிக்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார். அதன் பிறகு நானே. 14 ஆம் தேதியன்று டெல்லியிலிருந்து சென்னைக்குத் திரும்பும் போது, "என்ன? உங்களுக்கு அந்தக் கருத்திருக்கிறதா?"

என்று கேட்டேன். "என்ன, மூன்று மாதப் பதவி - விடுங்கள்" என்று சொல்லி விட்டார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் 17 ஆம் தேதியன்று டெல்லி போய்ச் சேர்ந்தேன். அன்றைக்கு பிஜு பட்நாயக் இறந்து விட்டதால், டெல்லியிலுள்ள பல தலைவர்கள் பிஜு பட்நாயக் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்வதற்காக புவனேஸ்வர் சென்று விட்டார்கள். அவர்கள் சென்ற பிறகுகூட நான் சும்மாயிராமல், இரவு 11 மணி அளவில் நானும் மாறனும், சுர்ஜித் அவர்களது இல்லத்திற்குச் சென்று பேசினோம்.

மறுநாள் காலை அவர் ரஷ்யா போவதாக இருந்தது. அதற்குள் அவரைச் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என்பதற்காக அந்த நேரத்தில் அவர் வீட்டுக்குச் சென்று பேசினோம். மூப்பனார் அவர்களை ஆதரிக்க வேண்டுமென்ற என் கருத்தினை அவரிடத்திலே வற்புறுத்திச் சொன்னேன். அப்போது அவர் "மூப்பனார் இடத்திலே தனிப்பட்ட முறையிலே எங்களுக்கு வேறுபாடு கிடையாது. ஆனால் கொள்கை அளவில் முடிவெடுத்து விட்டோம். முலாயம் சிங் இல்லாவிட்டால் குஜ்ரால் என்பது அந்த முடிவு.

இது முரசொலி மாறன் - டி.ஜி.வெங்கட்ராமன் - என்.வி.என். சோமு - டி.ஆர். பாலு ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர் கலைஞர் எங்களுடைய முடிவு மட்டுமல்ல. இடது சாரி முன்னணியிலே உள்ள 52 பேரும் இப்படி முடிவெடுத்து விட்டனர்!" என்று அவர் என்னிடத்திலே சொன்னார். மறுநாள் காலையில், ஜனதாதளத்தினுடைய தலைவர், பீகார் முதல் அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் இல்லத்திற்குச் சென்று பேசினோம். அப்போது சில த.மா.கா.

உறுப்பினர்கள் கூட அங்கிருந்தார்கள். அப்போது அவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பொம்மை அவர்களைப் பிரதமராக ஆக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டார். "நான், இப்போதுதானே கர்நாடகம் ஒரு பிரதமரைப் பெற்றிருந்தது. ஆகவே ஏன் இப்போது தமிழ்நாட்டிற்கு அந்த உரிமையைக் கொடுக்கக் கூடாது?"

என்று அவரிடத்திலே வலியுறுத்திக் கேட்டபோது, அவர் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அதற்குப் பிறகு முலாயம் சிங் அவர்கள் தமிழ்நாடு இல்லத்திற்கே என்னைச் சந்திக்க வந்தார். அவரிடத்திலே 17 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர் தன்னையே ஒரு வேட்பாளராகக் குறிப்பிட்டுத் தனக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்று கேட்டார். அவரிடத்திலேயும் நான் மூப்பனார் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னேன். அவர், "நானே ஒரு வேட்பாளராக இருக்கிறேன்- என்னிடத்திலேயே ஆதரவு கேட்கிறீர்களே" என்று தட்டிக் கழித்துவிட்டார்.

இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் பார்த்த பிறகு இதற்குமேல் ஆதரவு திரட்டுவதிலோ யாரையும் வலியுறுத்துவதிலோ பயனில்லை என்று எனக்குத் தோன்றியது. குமுதம்:- பிரதமர் தேர்வில் எழுந்த மனத்தாங்கல்கள் காரணமாகத் தமிழ்நாட்டு அரசியல் போக்குகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நான்:- இந்தப் பிரச்சினையை வைத்து மாத்திரம் அல்ல. சமீப காலமாகவே மூப்பனாரும், நானும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று கருதுகிற சில நல்லவர்கள் சிண்டு முடிகிற வேலைகளில் இற்கியிருக்கிறார்கள்.

அது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நாட்டுக்கும் தெரியும். அதற்கேற்றாற்போல் சில நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சில இடங்களில் இரு கட்சிகளிலும் இருக்கிற அடிமட்டத் தொண்டர்களிடையே அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டுப் பரஸ்பரம் வேட்பாளர்களைத் தோற்கடிக்கிற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதெல்லாம் சாதாரணமான விஷயங்கள். அவற்றைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை.

மூப்பனாருக்கும் இல்லை. மேல் மட்டத்தில் நாங்கள் சரியாக இருந்தால் இதுபற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால், என் மனதையோ - மூப்பனார் மனதையோ கலக்குகிற அளவிற்கு ஒரு முயற்சி மேற்கொண்டு, பத்திரிகைகளிலே சில பேர் திட்டமிட்டு எழுதி வருகிறார்கள். இந்தப் பிரதமர் பதவி நிகழ்ச்சிகள் அவர்களுக்கு உச்சகட்டமாகக் கிடைத்திருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்கிற கலகங்களுக்கு நான் நிச்சயமாகச் செவிசாய்க்க மாட்டேன்.

உறுதியாக இருக்கிறேன். ஏனென்றால், எனக்கும் மூப்பனாருக்கும் உள்ள நட்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல - நீண்ட காலமாக இருந்து வருகிற ஆழமான நட்பு. இவ்வாறு விளக்கமாக நான் பேட்டி அளித்த பிறகு தமிழக மக்கள் அனைவருக்கும், ஏன் த.மா.கா.வில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் உண்மை நிலை புரிந்தது. எனினும் நம்மை எப்போதும் பிடிக்காத ஒரு சிலர் மட்டும் அந்தப் பிரச்சினை குறித்து திரும்பத் திரும்ப தாங்கள் நினைத்ததையே சொல்லி வந்தார்கள்.

★ ★ ★ நான் இந்தத் தொடரின் 9ஆவது அத்தியாயத்தில் காஞ்சிபுரம் சி.வி.எம். அண்ணாமலை அவர்களைப் பற்றி விளக்கமாக எழுதியிருந்தேன். திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவர். பேரறிஞர் அண்ணா அவர்களோடு நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர். எனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். எங்களால் "சி.வி.எம்."

என்று அன்பொழுக அழைக்கப்பட்டவர். நான் டெல்லியில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியிலே ஈடுபட்டிருந்த போது, கலைஞர் 20.4.97 அன்று காலையில் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பாமரரும் படித்தோரும் உணர்ந்து ஒரு மறுமலர்ச்சித் தமிழகம் உருவாக்கிட அறிஞர் அண்ணா அவர்கள் எழுதி நடித்த "சந்திரோதயம்", "நீதி தேவன் மயக்கம்" ஆகிய நாடகங்களிலும், நான் எழுதி நடித்த "தூக்குமேடை", "பரப்பிரம்மம்" நாடகங்களிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்து, தமிழகம் முழுவதும் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் சி.வி.எம்.

அண்ணாமலை. பெரியார், அண்ணா ஆகியோர் அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் - அடுத்து என்னுடைய தலைமையில் கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டு - சிறைப் பறவையாக விளங்கியவர் அவர். அவருக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள். டெல்லியிலிருந்தவாறே நான் விடுத்த இரங்கல் செய்தி வருமாறு:- "கழகத்தின் பெரும் தலையொன்று உருண்டு விட்டது. திராவிட இயக்கத்தின் வலிவுமிக்க தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது.

தி.மு.க என்ற மூன்று எழுத்துக்களில் நம்மவர் கொண்டுள்ள பாசத்தையும், நேசத்தையும் போலவே - சி.வி.எம். என்ற அந்த மூன்று எழுத்துக்களில் நம்மவர் அனைவருக்கும் பாசம் உண்டு. இந்த இயக்கத்தில் ஒவ்வொரு அங்குல வளர்ச்சிக்கும் தங்களின் தியாகச் செயலாலும், ஓயாத உழைப்பினாலும் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவராகவும், மூத்த முன்னோடித் தளகர்த்தராகவும் விளங்கியவர்தான் காஞ்சி சி.வி.எம். அண்ணாமலை அவர்கள்.

அவர் மறைந்து விட்டார் எனும் செய்தி கேட்கும்போது, அந்தோ! எத்தனை எத்தனையோ நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகின்றன." "இயக்கத்தின் கொள்கைகளை எடுத்துரைத்திட அண்ணா அவர்கள் நடத்திய எழுச்சிமிகு நாடகங்களில் அவர் நடித்ததை மறக்க முடியுமா? என்னுடன் நூற்றுக்கணக்கான கொள்கைப் பிரச்சார நாடகங்களில் நடிப்பதற்காக தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, ஒரு தாயைப்போல என்னைப் பாதுகாத்த அந்தப் பரிவுமிக்க உள்ளத்தை

மறக்க முடியுமா? எந்தச் சோதனை கழகத்திற்கு வரினும் "அஞ்சாதே! நான் அருகிருக்கிறேன்!" என்று தோள் உயர்த்தித் துணை நிற்பாரே அந்த உறுதியைத்தான் மறக்க முடியுமா? தன்மானத் தங்கமாக - தமிழ் உணர்வுச் சிங்கமாக - திகழ்ந்த அந்தத் தீரரை - வீரரை இழந்து நின்று கண்ணீர் வடிப்பது அவரது குடும்பம் மட்டுமல்ல; கழகக் குடும்பமே கண்ணீரில் மிதக்கிறது என்பேன். "அவரது அஞ்சா நெஞ்சத்தையும், அயரா உழைப்பையும், தொண்டு செய்யும் தூய உள்ளத்தையும், இதயத்தில் பதிய வைத்துக் கொண்டு - அந்த இனியவர் விட்டுச் சென்றுள்ள பணிகளைத் தொடருவோம்" என்று அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

★ ★ ★ கலைஞர் கழகக் குடும்பத்தையே கண்ணீரில் மிதக்க விட்டு மறைந்த தன்மானத் தங்கம் - தமிழ் உணர்வுச் சிங்கம் சி.வி.எம். அண்ணாமலை 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள், இந்தியாவின் முன்னாள் பிரதமர், இந்தியாவின் இளம் தலைவர், ராஜீவ்காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலே கலவரங்கள் ஏற்பட்டு - பொதுமக்கள் பலருடைய கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் நாசமாகின. அவர்களின் இழப்பைச் சரிக்கட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் அரசின் சார்பிலே இழப்பீடு கொடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தமிழகம் எங்கும் இருந்தது.

அ.தி.மு.க. ஆட்சியினர் அந்தக் கோரிக்கையை ஏற்காத காரணத்தினால், தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் பேராசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1991 ஆம் ஆண்டு ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "விசாரணைக் கமிஷன் ஒன்றினை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த பதிலில் அந்தக் கோரிக்கையை ஏற்க முன் வரவில்லை.

ஆனாலும் சென்னை உயர்நீதி மன்றம், கழகத்தின் சார்பில் போடப்பட்ட வழக்கினை ஏற்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, கே.ஜெ.எம். ஷெட்டி அவர்களை சிறப்பு ஆணையராக நியமித்து, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை எல்லாம் பரிசீலித்து நிவாரணத் தொகை குறித்து பரிந்துரை செய்ய வேண்டுமென்று ஆணையிட்டது. தமிழகத்திலே அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் - கே.ஜெ.எம்.ஷெட்டி அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முறையீடுகளை விசாரித்து - மாவட்ட ஆட்சியர்களால் டெல்லியில் பணிகளை முடித்து சென்னை திரும்பிய என்னை வரவேற்ற கழகத்தார் பரிந்துரை செய்யப்பட்ட 6328 மனுக்களைப் பரிசீலனை செய்து மொத்தம் 2 கோடியே 34 லட்சத்து 18 ஆயிரத்து 309 ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.

ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகையை - நாசத்தின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது - மிக மிகக் குறைவாக இருந்ததால், பாதிக்கப்பட்ட பலர் அந்த இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்ள மறுத்து நீதி மன்றத்திற்குச் சென்றார்கள். மேலும் கே.ஜெ.எம். ஷெட்டி பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு எவ்வித இழப்பீட்டுத் தொகையுமே பரிந்துரைக்காமல் விட்டுவிட்டார். அவர்களும் நீதி மன்றத்தில் முறையிட்டுக் கொண்டார்கள். இந்த மனுக்கள் எல்லாம் நீதி மன்றத்தினால் ஏற்கப்பட்டு - அரசின் பதிலை நீதி மன்றம் கோரியது.

அ.தி.மு.க. அரசு நீதி மன்றத்திற்கு தெரிவித்த தகவலில், அந்தக் கோரிக்கை மனுக்களையெல்லாம் நிராகரிக்கலாம் என்றது. வழக்கு நீதி மன்றத்திலே இருந்த நிலையில் - தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு. கழகம் பொறுப்புக்கு வந்தது. எனவே பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகளை மனதிலே கொண்டு 11.2.1997 அன்று அமைச்சரவையிலே இது பற்றி விவாதித்து - அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்த மனுவினைத் திரும்பப்பெற்று - புதிதாக பதில் மனு தாக்கல் செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவு நீதிமன்றத்திற்கும் அரசு வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றம் அதனை ஏற்றுக்கொண்டது. அதற்கேற்ப வழங்கிய நிவாரணத்தொகை போதாதென்று கூறி, தொகையைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தவர்களின் கோரிக்கைகளையும் - கலைஞர் குறைந்த அளவு நிர்ணயிக்கப்பட்ட நிவாரணத் தொகையை பெற்றுக்கொண்டு, மேலும் நிவாரணத்தொகை வழங்கப்பட வேண்டுமென்று மனு தாக்கல் செய்தவர்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, நிவாரணம் வழங்கிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.

மோகன் அவர்களைக்கொண்டு ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்படும் என்று தமிழகச் சட்டப் பேரவையில் 4.4.1997 அன்று அறிவித்தேன். இந்தக் கமிஷன் 1065 பேர்களின் மனுக்களை விசாரணை செய்து ஒரு கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 751 ரூபாய் மேலும் நிவாரணத்தொகையாக வழங்கி ஆணையிட்டு, அந்தத் தொகையும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டது.