உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நடுநிலை தவறாத நல்லாட்சி!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நடுநிலை தவறாத நல்லாட்சி! · 329 / 391

கலைஞர் 17. நடுநிலை தவறாத நல்லாட்சி! முரசொலி அறக்கட்டளை சார்பில் 1997-ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற கலைஞர்கள். தமிழ்ச் சான்றோர்களையும் ஆன்றோர்களையும் தமிழக அரசின் சார்பில் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள், பொற்கிழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தி.மு. கழக அரசு எவ்வெப்போதெல்லாம் பொறுப்பிலே இருக்கிறதோ, அப்போதெல்லாம் இத்தகைய விழாக்கள் முறையாக நடத்தப்பட்டு, சான்றோர் பெருமக்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

அந்த வரிசையில், 96 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தந்தை பெரியார், திரு.வி.க. பாவேந்தர் ஆகியோர் பெயரிலான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 96ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருது திருவாரூர் தங்கராஜ் அவர்களுக்கும், திரு.வி.க. விருது பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்களுக்கும், பாவேந்தர் விருது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

பொற்கிழியாக வைரமுத்துவிற்கு அளிக்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாயுடன் கையிலிருந்த 5 ஆயிரம் ரூபாயைச் சேர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் என்னிடமே அதனை வெள்ள நிவாரண நிதிக்காக அளித்துவிட்டார். பெரியார் விருதினைப் பெற்ற திருவாரூர் தங்கராசு தனக்கு அளிக்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாயைத் திருச்சியிலே உள்ள பெரியார் குடிலுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். அரசின் சார்பில் இவ்வாறு விருதுகள் வழங்குவதைப் போலவே, முரசொலி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும், தமிழ்மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்தோரைத் தேர்ந்தெடுத்து, முரசொலி மற்றும் முரசொலி அறக்கட்டளை நிறுவனர் என்ற முறையில் என் பெயரால் விருதும், ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்குவதென்று முரசொலி மாறன் உயிரோடு இருந்த போதே முடிவெடுத்து, அதன்படி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 1997 ஆம் ஆண்டு ஜனவரி திங்களையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு) அவர்களுக்கும், பிரபல தமிழறிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் கலைஞர் விருதினையும், தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான பொற்கிழியினையும் வழங்கினேன். 1997 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற விழாதானே, இந்த ஆண்டை மட்டும் ஏன் சிறப்பாக குறிப்பிட வேண்டுமென்று நினைக்கலாம். அதற்கொரு காரணம் உண்டு. அந்த ஆண்டு நான் உரையாற்றும்போது, "திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த நாள், தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற நாள். பொங்கல் திருநாள் கொண்டாடுகின்ற அந்த நாள்தான் தமிழர்களுடைய ஆண்டு தொடக்க நாள் என்ற குறிப்பை நானல்ல - இங்கே வீற்றிருக்கின்றவர்களல்ல - கடந்த காலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சான்றோர், ஆன்றோர் பலர் கூடிக் கலந்து விவாதித்து, தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டைத்தான் தங்களுடைய ஆண்டுக் கணக்காகக் கொள்ள வேண்டும்.

பொங்கல் திருநாள் என்பது தமிழர் திருநாள் - தமிழர்களுடைய புத்தாண்டுத் தொடக்க நாள் என்று அறிவித்திருக்கின்றார்கள். "அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?" என்று நீங்கள் கலைஞர் 1996 ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் விருதினைப் பெறும் கவிப்பேரரசு வைரமுத்து கேட்கக்கூடும். படிப்படியாகச் செய்யப்பட வேண்டிய செயல்களில் இதுவும் ஒன்று. படிப்படியாக என்றால் அடுத்த ஆண்டா? அதற்கடுத்த ஆண்டா? இன்றைக்கு விதைக்கப்படுகின்ற இந்த விதை முளைத்து செடியாகி, மரமாகி, கிளைகள் விட்டு தருவாக செயல்படக்கூடிய காலம் வர வேண்டுமென்பதற்காகத் தான் இந்த விதையை நான் இங்கே விதைக்கின்றேன்.

இது நான் தயாரித்த விதையல்ல - பேராசிரியர் தயாரித்த விதையல்ல - இந்த விதை பல தமிழ்ச் சான்றோர்களும், ஆன்றோர்களும் ஏற்கனவே தயாரித்த விதை, இதற்கு மேல் இதை வைத்துக்கொண்டே இருந்தால் விதை வீணாகிவிடும் என்பதற்காகத் தான், இந்த நேரம் பார்த்து திருவள்ளுவர் நாளில் தமிழர்கள் தங்களுடைய ஆண்டுத் தொடக்கத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு பொன்னாள் வந்திட வேண்டுமென்ற என்னுடைய ஆசையை இந்த விழாவில் நான் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டேன்.

1997 ஆம் ஆண்டு நான் தெரிவித்த ஆசை - விருப்பம் நிறைவேற பத்தாண்டுகளாகிவிட்டது. ஆம், 2008 ஆம் ஆண்டு தான் 97ஆம் ஆண்டு நான் தெரிவித்த கருத்து நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழக அரசின் கொள்கை அறிவிப்பாக ஆளுநர் அவர்கள் 23.1.2008 அன்று ஆற்றிய உரையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. "பெரும் புலவரும், தனித் தமிழ் இலக்கியத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921 ஆம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்குகென்று ஒரு "தனி ஆண்டு" தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே "தமிழ் ஆண்டு" எனக்கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.

அந்தக் கருத்தினை 37 ஆண்டுகளுக்கு முன்பே மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப் படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது."

முனைவர் மா. நன்னன் திரு. விக. விருதினைப் பெறுகிறார் ஆளுநர் உரையில் கொள்கை அறிவிப்பாக இதைச் செய்ததோடு விட்டு விடாமல், அரசாணையாக இதை அறிவித்தால் மட்டும் போதாது எனக்கருதி 1.2.2008 அன்று தமிழகச் சட்டப்பேரவையிலே இதனை அரசினர் மசோதாவாகக் கொண்டுவந்து சட்டமாகவே ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறோம். ★ ★ ★ 1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் தேர்தலில் வெற்றி பெற்ற பெரியண்ணன் ஒரு சில மாதங்களிலே மறைந்துவிட்ட காரணத்தினால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதி 8.2.1997 கலைஞர் என்று அறிவிக்கப்பட்டது.

தி.மு. கழக மாவட்டச் செயலாளர் பெரியண்ணன், கழக வேட்பாளராக த.மா.கா. ஆதரவுடன் போட்டியிட்ட போது, 79,205 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுவாமிநாதன் 36, 422 வாக்குகளையும், ம.தி.மு.க. வேட்பாளர் வி.என்.மணி 14,165 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர். அ.தி.மு.க. வினர் மீது, தி.மு.கழக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியா அல்லவா என்பதைப் பற்றி பொதுமக்களே முடிவு செய்யக் கிடைத்த வாய்ப்பாக அந்த இடைத் தேர்தல் ஏடுகளால் விமர்சிக்கப்பட்டது.

மேலும் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்ற முறையில் அந்தத் தேர்தல் மக்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்டது. 97 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 மற்றும் 2ஆம் தேதிகளிலும், பிறகு 4,5 மற்றும் 6 ஆம் தேதிகளிலும் புதுக்கோட்டையில் முகாமிட்டு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நானும் மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களும் ஈடுபட்டோம். இம்முறை கழக வேட்பாளராக நிறுத்தப்பட்ட மாரி அய்யாவை ஆதரித்து ஒவ்வொரு கிராமமாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் பணியிலே நான் ஈடுபட்டேன்.

11 ஆம் தேதி புதுக்கோட்டையில் வாக்குகள் எண்ணப்பட்டு, அந்தத் தொகுதியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது. கழகக் கூட்டணி வேட்பாளர் மாரிஅய்யா 12,024 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். "கழக அரசின் எட்டு மாத கால சாதனைகளுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு!"

என ஏடுகள் அதனை பாராட்டி எழுதின. குறிப்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு "புதுக்கோட்டையில் தி.மு. கழக அணிக்குக் கிடைத்த இடைத் தேர்தல் வெற்றி, தி.மு. கழக அரசு ஜெயலலிதாமீது எடுத்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்!"

என்று எழுதியது. ★ ★ ★ தந்தை பெரியார் விருதினைப் பெறும் திருவாரூர் தங்கராசு இதற்கிடையில், 1997 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் தமிழகத்தின் புதிய ஆளுநராக நீதிபதி பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற அவர் தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினராக இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் நான் டெல்லிக்கு ஒரு கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காகச் சென்றிருந்தேன். அப்போது தம்பி முரசொலி மாறன் என்னிடம் பாத்திமா பீவியைப் பற்றிக் கூறி, என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

நானும் அவரைச் சந்தித்தேன். மகளிருக்கு முன் உரிமை எதிலும் வழங்கப்பட வேண்டும் என்பதை முக்கிய கொள்கையாகக் கொண்ட நான், தமிழக ஆளுநராக முதன் முதலாக ஒரு பெண் வருவது சிறப்பாக இருக்குமென்று எண்ணினேன். மேலும். உச்சநீதிமன்றத்தில் நீதியரசராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஆளுநராகப் பொறுப்பேற்றதும் அதுதான் முதல் முறை. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆளுநராகப் பொறுப்பேற்றதும் அதுதான் முதல் முறை.

தமிழக ஆளுநராக இருந்த டாக்டர் சென்னா ரெட்டியின் திடீர் மறைவு காரணத்தால் பாத்திமா பீவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். 24.1.1997 அன்று பாத்திமா பீவி கலைஞர் தமிழகத்தின் 16 வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஏ.சுவாமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக முதல் அமைச்சராக இருந்த என்னுடைய பரிந்துரையோடு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்ட அவரை "அரசியல் வாடை இல்லாத ஆளுநர்" என்று 27.1.1997 அன்றைய தலையங்கத்தில் "தினமணி" எழுதி வரவேற்றது.

ஆனால் 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுக்குப் பிறகு அதே ஆளுநரைப்பற்றி தமிழக ஏடுகள் எல்லாம் ஆளுநரின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு முறை தவறியது என்பதைப் பற்றி எழுதியதை இந்தத் தொடரில் 2001 ஆம் ஆண்டு பற்றிய என் வரலாற்றை எழுதும்போது விளக்குகிறேன். ★ ★ ★ திரை உலகச் சேவையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிர மணியத்தின் 30 ஆண்டு காலச் சாதனையையும், 39 ஆயிரம் திரைப்பாடல்களைப் பாடியதையும் பாராட்டி, 9.2.1997 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நான் கலந்து கொண்டு, "பாடும் நிலா பாலு" என்ற நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினேன்.

லதா மங்கேஷ்கர், ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.விசுவநாதன், கே.பாலச்சந்தர், கமலஹாசன், "முரசொலி" அறக்கட்டளை சார்பில், கலைஞர் விருதுடன் லட்சம் ரூபாய் பொற்கிழி பெறும் இயக்குநர் கிருஷ்ணன் (பஞ்சு) வாலி, இளையராஜா, ரஜினிகாந்த் - ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்திப் பேசினர். அந்த விழாவில் உரையாற்றிய ரஜினியும், கமலும் அவரைப் பாராட்டியதைவிட, என்னை அதிக அளவிற்குப் பாராட்டியது என் நினைவிலே உள்ளது. அந்தக் காலத்திலிருந்தே இதுபோன்ற திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதும், அதிலே நான் கலந்து கொள்வதும் இயற்கையான ஒன்று என்றபோதிலும், அப்போ தெல்லாம் அதைப் பற்றி யாரும் எதுவும் சொன்னதில்லை.

ஆனால் அண்மைக் காலத்தில் ஒருசிலர் நான் திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைப் பற்றிக் கூட விமர்சனம் செய்திருக்கிறார்கள். ★ ★ ★ 97 ஆம் ஆண்டு பிப்ரவரி 21,22 ஆகிய நாட்களில் டெல்லி சென்ற நான் திட்டக்குழுவின் துணைத்தலைவராக அப்போதிருந்த மதுதண்டவதே அவர்களையும், உறுப்பினர்களையும் சந்தித்து 97 - 98 ஆம் ஆண்டிற்கான திட்டங்களுக்காக 4,334 கோடி ரூபாய்க்கான ஒதுக்கீட்டிற்கு அனுமதி பெற்றேன். அதற்கு முந்தைய ஆண்டினைவிட 17 சதவிகிதம் அது அதிகமாகும் இதைப்பற்றி "இந்து" நாளேடு பாராட்டு தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அப்போது தான் டெல்லி திரும்பியிருந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் டெல்லியிலே சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். அன்றைய தினம் மாலையில் புதுடெல்லி தமிழ்ச் சங்கப் பொன்விழாவையொட்டி தடைபெற்ற திருவள்ளுவர் கலையரங்கத் திறப்பு விழாவிலும் கலந்துக்கொண்டேன். மத்திய இணை அமைச்சராக இருந்த எஸ்.ஆர். பால சுப்பிரமணியம் அவர்களும் அந்த விழாவில் என்னுடன் பங்கேற்றார்.

டெல்லி தமிழ்ச் சங்கக் கட்டிட, நிதிக்காக தமிழக அரசின் சார்பில் பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அந்த விழாவிலே தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினேன். ★ ★ ★ கலைஞர் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு கலைஞர் விருதும் பொற்கிழியும் வழங்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டுதான் தி.மு. கழகம் முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. அந்தத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில்தான் போட்டியிட தீர்மானித்து - அந்தத் தொகுதியிலே உள்ள இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு - அண்ணாவிடம் அதனைத் தெரிவிக்கலாம் என்று சென்னை வந்த நேரத்தில் அண்ணா அவர்கள் என்னிடம், "உன்னைக் குளித்தலை தொகுதியில் நிறுத்தியிருக்கிறேன்" என்று கூறினார்.

மறு பேச்சு பேசவில்லை. அந்தத் தேர்தலில் கன்னியாகுமரியிலிருந்து திருச்சிவரை தி.மு.கழகத்தின் சார்பில் நான் ஒருவன்தான் வெற்றி பெற்றேன் என்பதும், அது முதல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் 1962இல் தஞ்சை தொகுதியிலும், 1967 இல் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1971இல் அதே சைதாப்பேட்டை தொகுதியிலும், 1977இல் அண்ணாநகர் தொகுதியிலும், 1980இல் மீண்டும் அதே அண்ணா நகர் தொகுதியிலும், 1989 இல் துறைமுகம் தொகுதியிலும், 1991இல் மீண்டும் துறைமுகம் தொகுதியிலும், 1996இல் சேப்பாக்கம் தொகுதியிலும், 2001இல் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியிலும், 2006இல் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியிலும் என்று 11 தடவைகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஒருமுறைகூட தோற்காமல், அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவன் என்ற பெருமையும் எனக்கு உண்டு என்பதை தமிழகம் நன்கறியும்.

திருவள்ளுவர் நாள்தான் தமிழர்களின் ஆண்டுத் தொடக்க நாள்" என்று அறிவிக்கிறார், ஆளுநர் பர்னாலா அதுபோலவே வேறு சில பெருமைகளும் எனக்கு உண்டு. தமிழகத்திலே பல முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை வந்த முதல் அமைச்சர்களில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்தவன் என்ற பெருமை எனக்குத்தான் உண்டு. அது மாத்திரமல்ல; 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்து - ஆட்சி கவிழ்க்கப்பட்டு - என்மீது பல வழக்குகள் கொடுக்கப்பட்டு - கழகத்தினர் 500 க்கு மேற்பட்டவர்கள் மிசா சட்டத்தின் கீழ் சிறையிலே அடைக்கப்பட்ட பிறகு பிறகு "நான் இனிமேல் தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் பதவிக்கு வரமுடியாது" என்று கூறப்பட்டது.

ஆனால் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்ட

ும் முதல் அமைச்சராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றேன். ஆனால் இரண்டாண்டு காலத்தில் ஏதோவொரு காரணத்தைக் கூறி ஆட்சியைக் கலைத்தார்கள். பிறகும் "என்னுடைய கதை அவ்வளவுதான்" என்றார்கள். ★ ★ ★ 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்தியாவின் இளந்தலைவர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட காரணத்தினால் - கழகத்தின் மீது மாப்பழி சுமத்தப்பட்டதால், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. ஆனால் அப்போதும்கூட நான் மட்டும் வெற்றி பெற்றேன்.

பின்னர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மகத்தான கலைஞர் வெற்றி பெற்று நான்காவது முறையாக மீண்டும் முதலமைச்சர் பொறுப்பிற்கு வந்தேன். ஐந்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு. கழகத்தை எதிர்த்து மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டதால், தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. அப்போதும்கூட "அவ்வளவுதான் நான்" என்று கூறப்பட்டது.

ஆனால் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு. கழகம் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக நான் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன். இவ்வாறு ஐந்து முறை மாறி, மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவன் என்று பார்த்தால், அந்தப் பெருமையும் எனக்கு மட்டுமே உரிய ஒன்றாகும். அரசின் சார்பில் வைக்கப்படும் நிதிநிலை அறிக்கைகள், ஆளுநர் உரைகள் போன்றவை எந்த ஆட்சிக் காலத்திலுமே துறையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு - முதல்வர், ஆளுநர் துறையின் அமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுக்காக மட்டுமே வைக்கப்படும்.

ஆனால் நான் பொறுப்பிலே இருந்த எல்லா காலத்திலும் ஆளுநர் உரையாக இருந்தாலும் சரி, நிதி நிலை அறிக்கையாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றுக்கும் பல நாட்கள் மூத்த அதிகாரிகளுடன் விவாதித்து, நானே பக்கம் பக்கமாக எழுதி - முடியாத நேரத்தில் "டிக்டேட்" செய்து, அதனை பலமுறை படித்துப் படித்து திருத்தித்தான் தயாரிக்கப்பட்டது என்பதை தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் நன்கறிவார்கள். இந்த வரிசையில் மற்றும் ஒரு சிறப்பு தமிழகச் சட்டமன்றத்தில் 13 முறை நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த ஒருவன் என்ற பெருமையும் எனக்கு மட்டுமே உரிய ஒன்றாகும்.

25.3.1971, 1.3.1972, 26.2.1973, 4.3.1974, 1.3.1975, 25.3.1989, 17.3.1990, 17.7.1996, 5.3.1997, 27.3.1998, 17.3.1999, 24.3.2000, 29.1.2001 என்று 13 முறை நிதிநிலை அறிக்கையை நானே தாக்கல் செய்தேன். இது தவிர 2006, 2007, 2008 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் தயாரிப்புக்கு நான் முழு முதல் காரணம் என்றபோதிலும், பேரவையில் என் சார்பாக நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் அதனைத் தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இவ்வளவு முன்னுரையும் எதற்காக என்றால் 1997 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதியன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை அவையிலே அளித்தேன். அந்த நிதிநிலை அறிக்கை குறித்து அதற்கடுத்த நாளே "சலுகைகள் நிறைந்த தமிழக பட்ஜெட்" என்ற தலைப்பில் "தினமணி" நாளேடு எழுதிய தலையங்கத்தின் சில வரிகளைப் படித்தாலே நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். சென்ற ஆண்டைப் போலவே 1997 - 98 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டும், சாமானிய மக்கள் மற்றும் மத்தியதர வகுப்பினர் நலனைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களின் மீது விற்பனை வரியை முதல்வர் கருணாநிதி குறைத்திருப்பதுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஆதாரங்களை அதிகரிக்கச் செய்துள்ளார். "தமிழகத்தில் வேளாண்மை - தொழில் துறை - வணிகம் ஆகியவற்றின் நலனைக் கருத்திற்கொண்டு, விற்பனை வரிச் சீரமைப்புக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பல இனங்கள் மீது விற்பனை வரி குறைக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் பயன்படுத்தும் யூரியா உரத்துக்கு விற்பனை வரி 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அதோடு, சொட்டு நீர்ப்பாசன சாதனங்களுக்கு வரி 11 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. கால்நடைத் தீவனங்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அடுத்து கிராமியத் தொழில் புரிவோருக்கும் பல சலுகைகள் - மூங்கிலால் செய்யப்படும் தட்டி, முறம், கூடைகள். சீயக்காய் பொடி, தொன்னை, சாம்பிராணி, சிப்பியினால் செய்யப்படும் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள், 39 வகையான நாட்டு மருந்துகள், ஊனமுற்றோர் கலைஞர் பயன்படுத்தும் சைக்கிள் வாகனங்கள், செங்கல் - ஓடு செய்யப் பயன்படும் களிமண், வெள்ளியினால் ஆன மெட்டி, கொலுசு, அரைஞாண் கயிறு, ரூ.50க்குக் குறைவான காலணிகள் ஆகிய பல இனங்கள் மீது வரிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இது போலவே கைப்பெட்டிகள், ஆயில் என்ஜின் பாகங்கள். மேஜை, நாற்காலி, பனியன், பின்னலாடைகள் போன்றவற்றின் மீது வரிகள் கணிசமாகக் குறைக்கப்படுகின்றன." எனது பரிந்துரையோடு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பாத்திமா பீவி புதிய திக்கில், முக்கிய நடவடிக்கை ஒன்றை முதல்வர் கோடிட்டுக் காட்டியுள்ளார். மக்களுக்கு நிர்வாகம் பற்றிய தகவல்களைத் தெரிந்துக்கொள்ளும் உரிமையை வழங்க (அரசிடமிருந்து) தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்படும் என்பது சாதாரண நடவடிக்கை அல்ல.

பல நிலைகளில் உள்ள அரசு அலுவலர்கள் எடுக்கும் முடிவுகள் பற்றிய தகவல்கள் பொது மக்களுக்குக் கிடைக்குமாறு செய்வது இச்சட்டத்தின் நோக்கம். இதன் மூலம், மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையை அலுவலர்கள் ஏற்றுத் தீர வேண்டும். "சமுதாய சீர்த்திருத்த இயக்கத்தலைவர் பெரியார் ஈ.வே.ரா.வின் பெயரில் சேலத்தில் புதிய பல்கலைக்கழகம் இந்த ஆண்டில் நிறுவப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். பெரியாரின் சீடர்களின் பெயர்களில் பல்கலைக்கழகங்கள் அமைந்திருக்கும் பொழுது, அவருடைய பெயரில் பல்கலைக்கழகம் அமையாததை ஒரு குறையாக பெரியாரின் இயக்கத்தவர் கூறி வந்தார்கள்.

அந்தக் குறையையும் முதல்வர் சாதுரியமாகக் களைந்துவிட்டார். ("பட்ஜெட் என்றாலே என்ன புது வரியோ என்ற அச்சம் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அது தற்போது மாறி, என்ன சலுகைகள் என எதிர்பார்க்கும் நிலை உருவாகி வருகிறது." என்றது தினமணி. )டெல்லியில், திட்டக்குழு துணைத் தலைவர் மது தண்டவதே அவர்களுடன் நான் "தினமணி" நாளிதழ் மட்டுமல்ல, வேறுபல ஏடுகளும் நிதிநிலை அறிக்கையை வெகுவாகப் பாராட்டியிருந்தன. 97 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் கடைசி பத்தியை இவ்வாறு எழுதியிருந்தேன்.

"பேரவைத் தலைவர் அவர்களே! இந்தியத் திருநாட்டின் தென்கோடி முனையில் - சோழ சாம்ராஜ்யத்தின் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்த தஞ்சைத் தரணியில் - திருக்குவளை என்ற கிராமத்தில் - வேளாண் தொழில் ஈடுபாடும், இசைத் திறனும் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்து இளம் வயதிலேயே தன்மான உணர்வும், தமிழ்மொழிப் பற்றும் மிகக் கொண்டு, தந்தை பெரியாருக்குத் தொண்டனாகவும் அறிஞர் அண்ணாவுக்குத் தம்பியாகவும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்காக உழைக்கும் உடன்பிறப்பாகவும் என்னை ஆக்கிக்கொண்டுள்ள இந்த அறுபதாண்டு காலப் பொது வாழ்வில் எழுபத்து மூன்று வயதுடைய நான் "வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற சூளுரையுடனும், "கடலில் தூக்கி எறிந்தாலும், தமிழ் மக்கள் ஏறிச் சவாரி செய்யும் கட்டு மரமாக மிதப்பேன்" என்ற கடமை உணர்வுடனும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, அடக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வு ஒன்றையே கலைஞர் அல்லும் பகலும் நினைவிற்கொண்டு - அவர்களின் அணிவகுப்பில் ஒரு சிப்பாயாகப் பணியாற்றும் பேறு பெற்று.

அவர்களின் உயர்வுக்கும், உரிமைக்கும் வழிவகுக்கும் ஆற்றலும், அக்கறையும் உள்ளவர்கள் முன்னேறிய பிரிவினரில் இருப்பின், அவர்களையும் அடையாளம் கண்டு, அரவணைத்து அவர்தம் துணையுடன் ஒடுக்கப்பட்டோர் உன்னத வாழ்வுக்காகவும், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" எனும் சபதம் என்றைக்கு நிறைவேறும் என்ற என் ஏக்கத்தை, தூக்கத்திலும் கனவாகக் கண்டு, அக்கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காகவும். என் காலத்தில் அமைதியானதும், அரிய வளம் கொழிப்பதும், அறிவாற்றல் சிறந்தோங்குவதுமான தமிழ்ச் சமுதாயத்தைக் காண வேண்டுமென்பதில் தணியாத ஆர்வத்தின் காரணமாகத் தயாரிக்கப்பட்டதே இந்த நிதிநிலை அறிக்கை.

இதனை நாட்டு மக்களும், கட்சித் தலைவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களும் விமர்சிக்கும்போது, "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு" எனும் குறளுக்கேற்ப வரவேற்று மகிழ்ந்து குறை திருத்தி, நிறைதோன்ற பாடுபடுவேன் என்று உறுதி கூறி இந்த நிதி நிலை அறிக்கையை அவை முன் வைக்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். ★ ★ ★ டெல்லியில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் கலையரங்கம் 24.4.1997 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் காவல்துறை மானியம் மீதான விவாதத்தில் கலந்துக்கொள்ள வேண்டுமென்ற நிலையில், டெல்லியில் அமைந்திருந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அங்கே தங்கியிருந்த நான் சென்னை திரும்பினேன்.

காவல்துறை மானியம் மீதான விவாதத்தில் பேசிய சில உறுப்பினர்கள் சர்க்காரியா கமிஷன் விசாரணை குறித்தெல்லாம் ஏடுகளில் எதிர்க்கட்சிக்காரர்கள் கடுமையாக விமர்சித்திருப்பதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது நான் குறுக்கிட்டு, சர்க்காரியா கமிஷனுடைய அறிக்கை அப்போதே அளிக்கப்பட்டது. அதைப் பற்றிய பிரச்சினை வரும் என்று தெரிந்துதான் ஆதாரத்தோடு வந்திருக்கிறேன். சர்க்காரியா கமிஷனின் அறிக்கையின் அடிப்படையில் அப்போதிருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் என்மீது வழக்குத் தொடர்வதற்காக இரண்டு முறை முயற்சித்தார்.

அப்போது அட்வகேட் ஜெனரலாக இருந்த வி.பி. இராமன் அவர்கள் அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்து விட்டு, "வழக்கு தொடர்வதற்கான எந்த ஆதாரமும் கிடையாது" என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அறிக்கை கொடுத்தார். "அவர் கொடுத்த அந்த ஆலோசனை அறிக்கையை - ஏற்கனவே இங்கே த.மா.கா.உறுப்பினர்களுக்குக் கூட படித்துக் காட்டியிருக்கிறேன். திரு. சொக்கர் அவர்கள் அதை முழுவதும் படித்துப் பார்த்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடத்திலும் இதைக் காட்டியிருக்கிறேன்.

"திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் என்மீது வழக்குப் போட - சர்க்காரியா கமிஷன் விசாரணையின் அடிப்படையில் வழக்குப் போட இரண்டு முறை முயற்சித்தார். 15.11.1977 அன்று ஒரு முறையும், 24.10.1979 அன்று ஒரு முறையுமாக இரண்டு முறை முயற்சித்து - அன்றைக்கிருந்த அட்வகேட் ஜெனரல் வி.பி. இராமன் அவர்கள் அந்தக் கோப்பிலே கருத்துத் தெரிவிக்கிறார் - I have already expressed my opinion vide opinion 18/77 dated 15.11.1977.

I Will not see any reason to modify thei position" (அதாவது "என்னுடைய கருத்தை நான் மாற்றிக்கொள்ள இரண்டாவது முறையிலும் விரும்பவில்லை. இதிலே வழக்குப் போட எதுவுமே இல்லை" என்று அட்வகேட் ஜெனலராக கலைஞர் இருந்த வி.பி.இராமன், அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்.

அவர்களுக்கே அறிக்கை கொடுத்திருக்கிறார்" என்று விளக்கினேன்.) ஆனால் இதை மறந்துவிட்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்தக் குற்றச்சாட்டை திரும்பத் திரும்பக் கூற முற்படுவதும், அதற்குப் பிறகு வி.பி.இராமன் எழுதிய கருத்துக்களை யாராவது கவனத்திற்குக் கொண்டு வந்ததும் வாயை மூடிக்கொள்வதுமான நிலைக்கு ஆளானார்கள். ★ ★ ★ தி.மு. கழகம் பொறுப்பிலே இருந்த காலத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது தவறு செய்து, அது குறித்து என் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்ட நேரங்களில் எல்லாம் நான் அவர்கள் கட்சிக்காரர்கள் என்று பார்க்காமல் நடவடிக்கை எடுத்திருக்கிறேன் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

ஏன், சென்னை மாநகராட்சி தி.மு. கழகத்தின் பொறுப்பிலே இருந்தபோது, அங்கே மஸ்டர் ரோல் ஊழல் பற்றிய புகார் கூறப்பட்டு, அதிலே ஓரளவு உண்மை இருக்கிறது என்று தெரிந்தவுடன் மாநகராட்சி தி.மு. கழகத்தின் ஆளுகையின்கீழ் இருந்த நிலையிலும், மாநகராட்சி மன்றமே கலைக்கப்படும் என்று பேரவையிலேயே அறிவித்து, அவ்வாறே நடைமுறைப்படுத்தியவன் நான் என்பதை தமிழகம் நன்றாகவே அறியும். சிவகாசியில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் அந்த வகையிலேதான் 1997 ஆம் ஆண்டு பேரவை நடந்து கொண்டிருந்த போதே, சரியாகச் சொல்லவேண்டுமானால், பேரவையிலே காவல்துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில்-மதுரை மாநகரில், மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த திருமதி லீலாவதி என்பவர் தி.மு.

கழகத்தினரால் கொலை செய்யப்பட்டார் என்று ஏடுகளில் செய்தி வந்தவுடன், அதைப்பற்றி பேரவையிலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். 23.4.1997 அன்று காலை சுமார் 8.15 மணி அளவில் மதுரை மாநகர 59ஆவது வார்டு உறுப்பினர் திருமதி லீலாவதி கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தைக் கண்ட அவருடைய கணவர் திரு.குப்புசாமி திரு. குப்புசாமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரில் தனது மனைவியைத் தேர்தல் விரோதம் காரணமாக கருமலையான் என்கின்ற அண்ணாதுரையும், அவரது சகோதரர் முத்துராமலிங்கமும், மற்றும் நான்கு பேரும் சேர்ந்து தாக்கியதாகவும், அதன் காரணமாக அவர் மனைவி மனைவி இறந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதைப் பற்றி 24ஆம் தேதியன்று நான் பேரவையில் நிலைமையை விளக்கியதோடு- "இந்தக் கொலையிலே சம்பந்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்த தி.மு.க.வினர் என்றாலும்கூட, எந்தவிதமான தயவு தாட்சண்யமும் காட்டாமல் பாரபட்சமின்றி அரசு காவல்துறை நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.

ஆனால் கடந்த ஆட்சியின்போது குடவாசலில் தங்கய்யன் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் கொலை செய்யப்பட்டபோது, குற்றவாளிகள் அந்த ஆட்சியிலே அமைச்சருடைய காரிலே பாதுகாக்கப்பட்டார்கள். தி.மு. கழக ஆட்சி வந்தப் பிறகு அந்த வழக்கையும் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மதுரை நிகழ்ச்சியைப் பொறுத்தவரை - குற்றவாளிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப் - கலைஞர் படுவார்கள்.

நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்" என்று உறுதி கூறினேன். அன்று நான் அளித்த உறுதிமொழி எந்த அளவிற்குக் காப்பாற்றப்பட்டது என்பதை அந்தக் கட்சியின் நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். அந்த வழக்கிலே குற்றஞ் சாட்டப்பட்ட தி.மு. கழக வட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட ஆறு பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த என். சங்கரய்யா அவர்கள் அந்த வழக்கினை சி.பி.ஐ.இடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், அதற்காக நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப் போவதாகவும் தெரிவித்து - அதைப்பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது "சி.பி.ஐ.

விசாரண

ை கோரி என். சங்கரய்யா நீதிமன்றத்திற்குச் செல்லத் தேவையில்லை. மாநில அரசிடம் அதுபற்றி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டாலே, அதற்கான பரிந்துரை செய்யப்படும்" என்று கூறினேன். அதனையொட்டி, என். சங்கரய்யா அவர்கள் 16.5.1997 அன்று அந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்குமாறு தமிழக முதல்வர் என்ற முறையில் எனக்கொரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட நான் 17.5.1997 அன்றே மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தில், அந்த வழக்கு பாடகர் எஸ்.பி.

பாலசுப்பிரமணியத்தின் 30 ஆண்டு காலச் சாதனையைப் பாராட்டி நடைபெற்ற விழாவில், லதா மங்கேஷ்கர் - கமல் - ரஜினியுடன் விசாரணையை சி.பி.ஐ. இடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் சார்பில் நீதிமன்றத்திலே வாதாட இன்னாரைத்தான் நியமிக்க வேண்டுமென்று வைத்த கோரிக்கைகூட கழக அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது தி.மு. கழகத்தினருக்கு எதிராக வாதாட தங்களுக்கு வேண்டிய மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று தி.மு.

கழக அரசிடமே கோரிக்கை வைத்து, அதனையும் ஏற்றுக்கொண்டு, அவர்கள் விரும்பிய வழக்கறிஞரையே நியமிக்கவும் ஏற்பாடு செய்தவன்தான் நான். அந்த வழக்கிலே குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்றளவும் சிறையிலே இருக்கின்றார்கள். ★ ★ ★ 28.5.1997 அன்று மதுரைக்கு சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிடச் சென்றபோது, மதுரையில் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர் லீலாவதியின் இல்லத்திற்குச் சென்று, அவரது கணவர் குப்புசாமி மற்றும் மகள்களிடம் ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.

காவல்துறை அதிகாரிகள் நான் நேரடியாக அந்த வீட்டிற்குச் செல்வது சரியாக இருக்காது என்று தடுத்த போதிலும், நான் கேட்காமல் அந்த வீட்டிற்குச் சென்றுவந்தேன். அது மாத்திரமல்ல; அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எனது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முறையாக நீதி கிடைத்திட ஒத்துழைப்பேன் என்று உறுதியும் அளித்து விட்டு வந்தேன். அது மாத்திரமல்ல, லீலாவதியின் குடும்பத்திற்கு உதவியளிக்க வேண்டுமென்று எண்ணி நிதியையும் அளித்தேன்.

அப்போது நிதியினை என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட போதிலும், பின்னர் "அந்த நிதியை ஏற்றுக்கொள்ள அவர்கள் கட்சி அனுமதிக்கவில்லை" என்று கூறி வாங்கிக்கொண்ட நிதியைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.