உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சிங்காரவேலர் மாளிகை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சிங்காரவேலர் மாளிகை · 328 / 391

16. சிங்காரவேலர் மாளிகை சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரால் கழக அரசு அமைத்த மாளிகை 5.12.1996 அன்று எனது தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில் "1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை ஆட்சியிலே இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவருடைய அமைச்சர்கள், மற்றும் சில இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், மற்றும் பிற பணி அலுவலர்கள் - முன்னாள் அமைச்சர்களின் நேர்முக உதவியாளர்கள் - வாரியத் தலைவர்கள் - ஆகியோர் அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள் குறித்த வழக்குகளில் புலன்விசாரனை நடந்து வருகிறது.

ஒவ்வொரு வழக்கிலும் புலன்விசாரணை முடிந்தவுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இப்போது குற்றப் பத்திரிகைகள் ஒவ்வொன்றாக பதிவாகும் நிலைமை இருக்கிறது - பெரும்பாலான வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கலான பிறகு அவற்றை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கலாம்" என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவினை அரசு எடுப்பதற்குள் தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், எதிர்க்கட்சிகளும் "ஏன் முன்னாள் ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? தி.மு.கவுக்கும், அ.தி.மு.க. வுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதா?" என்ற அளவிற்கு பேசவும் எழுதவும் முற்பட்டுவிட்டனர். ஆனால் கழக அரசு அதிலே அவசரப்பட்டு எந்த முடிவினையும் எடுக்கவில்லை. ஒன்றுக்குப் பலமுறை நன்கு ஆராய்ந்து, கலைஞர் "ஒரு யோக்கியரை இழந்துவிட்டோம்" - என்று மூதறிஞர் ராஜாஜி குறிப்பிட்ட சிங்காரவேலரின் சிலை!

ஆதாரங்களையெல்லாம் சரி பார்த்து, அதன் பிறகே நடவடிக்கை எடுக்க முன் வந்தது. இந்த முடிவெடுக்கப்பட்ட அதே நாளில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த ஏழு முன்ஜாமீன் மனுக்களும் நீதிபதி சிவப்பா அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக வாங்கியது - தெற்காசிய விளையாட்டுப் போட்டி நடந்தபோது விளம்பரம் செய்வதற்காக மீனா விளம்பர நிறுவனத்திற்கு சலுகை காட்டி ஊழல் செய்தது - கொடைக்கானல் பிளசண்ட்ஸ்டே ஓட்டலுக்கு சுயலாப நோக்கத்தோடு முறைகேடாக அனுமதி அளித்தது - உள்ளாட்சி மன்றங்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் கோடிக்கணக்கில் அன்னியச் செலவாணி சட்டத்திற்குப் புறம்பாக மூன்று இலட்சம் அமெரிக்க டாலர்களைப் பெற்றது - வருவாய்க்கு மீறி சிங்கார வேலர் மாளிகை திறப்பு விழாவில்...

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கிக் குவித்தது - நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற ஊழலில் சம்பந்தப்பட்டது - ஆகிய 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெயலலிதா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றின் மீது ஒட்டுமொத்த ஜாமீன் மனு ஒன்றினை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்து ஏற்கனவே நீதிபதி அதனை நிராகரித்திருந்தார். மீண்டும் அதே உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக ஏழு வழக்குகளையும் குறிப்பிட்டு, ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்து, அவற்றின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவப்பா அவர்கள் - "வேண்டுமென்றே அரசியலில் காழ்ப்புணர்ச்சியோடு தன்மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாக ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது.

இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆரம்ப ஆதாரங்கள் உள்ளன. ஒரு முக்கியமான வழக்கில் குற்றம் சாட்டப்படுபவரை கைது செய்யக்கூடாது என்று கூற முடியாது. அப்படி கைது செய்து விசாரிப்பது காவல் துறையின் கடமையாகும். முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பவருக்கு முன் ஜாமீன் கொடுப்பதால் காலம் விரயமாகும். குற்றம் சாட்டப்பட்டவர் ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படும். அரசுத் தரப்பு ஆவணங்களை ஆராய்ந்தபோது இந்த வழக்குகள் உள் நோக்கத்துடன் போடப்படவில்லை என்று தோன்றுகிறது.

ஜெயலலிதாவை கைது செய்தால், அவருடைய அரசியல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் ஆரம்ப ஆதாரங்கள் உள்ளன. அவருக்கு முன் ஜாமீன் கொடுத்தால் விசாரணைக்கு இடையூறு செய்யலாம். சாட்சிகளைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடலாம்!"

என்றெல்லாம் குறிப்பிட்டு ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தார். இதன் பின்னரும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பத்துநாட்கள் வரை ஜெயலலிதா மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க தடை விதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்க, அதனையும் நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். கலைஞர் 1400 கோடி ரூபாய் முதலீட்டில் ஹுண்டாய் கார் ஆலையின் பூமி பூஜை! இந்த நிலையில் 8.5 கோடி ரூபாய் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை தமிழகக் குற்றப்பிரிவு போலீசார் 7.12.1996 அன்று கைது செய்தனர்.அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு டி.ஐ.ஜி.

ராதாகிருஷ்ண ராஜா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அவரது இல்லத்திற்குச் சென்றனர். அவர் கைது செய்யப்படும் செய்தி, அவருடைய கட்சியினருக்குத் தெரிவிக்கப்பட்டு, அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் அவரது இல்லத்திற்கு வருகை தந்ததோடு, "ஜெயலலிதாவைக் கைது செய்யக்கூடாது!"

என முழக்கமிட்டனர். காலை 7.15 மணி அளவிலேயே காவல் துறையினர் சென்றபோதிலும், காலை 9.45 மணிக்குத்தான் ஜெயலலிதா மாடியிலிருந்து கீழே இறங்கி வர, அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் நீதிமன்ற விடுமுறை என்பதால், நீதிபதியின் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டு, டிசம்பர் 21 ஆம் தேதிவரை ஜெயலலிதாவை சிறையிலே அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன், எம்.ஜி.ஆர்.

மன்றக் காப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராம்தாஸ், கிறித்துவ ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தமிழ் மாநிலத் தலைவர் ஜேம்ஸ், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வை.கோ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்.சங்கரய்யா, ஜனதா தள மாநிலத் தலைவர் ஜி.ஏ. வடிவேலு ஆகியோர் வரவேற்று அறிக்கைகளை அளித்தனர். "தினமணி" நாளிதழ், தனது 7.12.1996 தேதிய தலையங்கத்தில் ஜெயலலிதாவைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.

அது வருமாறு:- "அறிக்கைகள் மூலம் தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்ளக்கூடியவர் அரசியலில் ஒருவர் உண்டென்றால் அவர் ஜெயலலிதாவே. அவருடைய முன்னாள் உடன்பிறவாச் சகோதரி சசிகலாமீது பாசமழை பொழிந்தும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது வசைமாரி பெய்தும் அவர் இப்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கை அவருடைய மனக் குழப்பத்தை - ஆத்திரத்தை - தவிப்பை - விரக்தியைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன், கட்சி நலனுக்காக சசிகலா உறவைத் துண்டித்துக் கொள்வதாகக் கூறினார்.

இப்பொழுதோ சசிகலாவுடன் இருந்து வந்த உன்னத நட்பை - பாசப்பிணைப்பை அறுத்துக்கொண்டதற்காக மனம் வருந்துகிறார். "சசிகலா மென்மையான உணர்வுடைய குடும்பப் பெண். பொதுவாழ்வில் ஈடுபடுவதற்குரிய நெஞ்சுறுதியோ, துணிவோ இல்லாதவர். ஆங்கில அறிவோ, சட்ட நுணுக்கங்களோ அறியாதவர்" என்பது அறிக்கையின் சுவையான பகுதி. சசிகலாவிடம் இல்லாததெல்லாம் அரசியலில் ஈடுபட்டுள்ள ஜெயலவிதாவிடம் இருக்கிறது என்று பொருள்படுகிறது. போயஸ் தோட்டத்தில் சசிகலா குடியேறுவதற்குமுன், சாதாரண அரசு ஊழியர் ஒருவரின் மனைவி.

ஜெயலலிதாவின் ஐந்தாண்டுக் கால ஆட்சியில், இக்குடும்பப் பெண்ணுடன், அரசியல் பெண்மணியும் சேர்ந்து கூட்டாக சில சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரையில் இந்திரலோகத்து அரண்மனைகளைப் போல, பல சொகுசு மாளிகைகள் எழுப்பப்பட்டுள்ளன. பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கலைஞர் ஹுண்டாய் ஆலை திறப்பு விழாவில்... இவ்வளவையும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியிருந்தபடியே செய்ய முடிந்திருக்கிறது.

அரசியல் தெரிந்த ஜெயலலிதா, ஆட்சி நடத்துவதிலேயே மூழ்கி இருந்ததால் இவையெல்லாம் அவருக்குத் தெரியாதாம். தன்னுடைய வீட்டில் நடப்பதே தெரியாமல் இருந்த எல்லாம் தெரிந்த பெண்மணி, எந்தவிதமாக ஆட்சி புரிந்திருப்பார் என்பது இதிலிருந்தே தெரிகிறது. தெரியாமல் நடந்ததாக எல்லோரும் நம்ப வேண்டுமென எதிர்பார்க்கிறார்."

7.12.1996 அன்று "தினமணி"யிலே இந்தத் தலையங்கம் வந்ததென்றால், அதற்கு மறுநாள் 8.12.1996 அன்று டெல்லியிலிருந்து வெளிவரும் "தி ஆசியன் ஏஜ்" என்ற இதழ் தனது தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது. "சென்னை உயர்நீதி மன்றம் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த ஏழு முன்ஜாமீன் மனுக்களையும் நிராகரித்த பிறகு, அவரது கைது தவிர்க்க முடியாததாகும். தன்னுடைய கைதுக்கு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையைத் தவிர வேறு காரணமில்லை என்று அறிவித்து விட்டு, அவர் மத்திய சிறைக்குச் சென்றிருக்கிறார்.

அவரால் குவிக்கப்பட்ட பணம், அவர் இந்த மாநிலத்தின் அரசியல் தலைவராக பதவி வகித்தபோது அந்த அந்தஸ்திலே சேர்க்கப்பட்டதாகும். ஆனால் பதிலளிக்க வழியில்லாத நிலையிலே அரசியல்வாதிக்கு உள்ள ஒரே பதில் பழிவாங்கும் நடவடிக்கை என்று போலியாகக் கூறுவதுதான். செல்வி ஜெயலலிதா சட்டத்தின் நீண்ட கரங்களில் மாட்டிக்கொண்டுவிட்டார். முடிவில்லாத லஞ்ச ஊழலுக்கு தனது நீண்ட ஆட்சியை செலவிட்ட ஜெயலலிதாவிற்காக யாரும் கண்ணீர் வடிக்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் கைது அரசின்மீது களங்கம் ஏற்படுத்தாது. ஜெயலலிதா கட்சியிலே தன்னைத் தொடர்ந்து யாரும் தலைவராக உருவாவதை விரும்பாமல் சர்வாதிகாரப் போக்கிலே நடந்து கொண்ட காரணத்தால் அவருடைய கைதுக்குப் பிறகு அந்தக் கைதை அந்தக் கட்சி தாங்குமா என்ற நிலை உள்ளது. அ.தி.அ.தி.மு.க எப்போதுமே தனி நபரை அடிப்படையாகக் கொண்ட இயக்கம் என்பதால் தற்போது அதற்கான விலையை அது செலுத்தப் போகிறது."

ஏடுகள் எல்லாம் இந்த அளவிற்கு எழுதியபோதிலும், சிறையில் இருந்த ஜெயலலிதாவிற்கு எந்தவிதமான வசதிகளோ - பாதுகாப்பு ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அறிக்கை மூலமாக சொல்லப்பட்டு, அதற்கு அரசின் சார்பில் அவருக்கு சிறையிலே அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஜெயலலிதா வைக்கப்பட்டிருந்த பெண்கள் வார்டுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் - ★ போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் ஒரு பெண் அதிகாரி; ★ தலைமைக் காவலர் தகுதி பெற்ற பெண் தலைமை வார்டர்; ★ காவலர்கள் தகுதியில் ஏழு பெண் வார்டர்கள்; ★ இவர்கள் 24 மணி நேரமும் பெண்கள் வார்டை காவல் புரிவார்கள்.

★ சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள ஒரு துணை ஜெயிலர்; ★ இரண்டாவது கிரேடு தகுதி பெற்ற ஏழு ஆண் வார்டர்கள் - ஆகியோரும் 24 மணி நேரமும் அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தார்கள். கலைஞர் ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிறைச்சாலைக்கு வெளியே பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர காவல் துறையைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் - மாநகர காவல் துறையைச் சேர்ந்த இரண்டு தலைமைக் காவலர்கள் - ஆறு காவலர்கள் - ஆயுதப் போலீஸ் பிரிவைச் சேர்ந்த பத்து காவலர்கள் - ஒரு தலைமைக் காவலர் - மற்றும் ஒன்பது காவலர்கள்.

இந்தப் பாதுகாப்பு மட்டுமன்றி தமிழ்நாடு சிறப்புக் காவல் பிரிவைச் சேர்ந்த பின்வரும் அதிகாரிகள் இருபத்து நான்கு மணி நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ★ 2 சப் இன்ஸ்பெக்டர்கள்-2 ஹவில் தார்கள்-15 போலீஸ்காரர்கள் முழுக்க முழுக்க ஆயுதமேந்தி பாதுகாப்புப் பணியில் உட்படுத்தப்பட்டார்கள். நீதிபதியால் சிறையில் சாதாரண வகுப்பு மட்டுமே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருந்தும் கூட, அவருக்கு ஒரு கட்டிலும் - அவர் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு மெத்தை - இரண்டு தலையணைகள் - அமர்வதற்கு ஒரு நாற்காலி - எழுதுவதற்கு வசதியான ஒரு மேஜை - பைகள் - புத்தகங்களை வைத்துக்கொள்ள வசதியாக ஒரு சிறு பெஞ்ச் - ஒரு மின் விசிறி - அத்துடன் நின்ற நிலையில் இயங்கும் ஒரு மின் விசிறி - இரவு நேரங்களில் பயன்படுத்த கொசுவிரட்டிச் சுருள்கள் போன்றவைகளும் அளிக்கப்பட்டன.

மேலும் ஜெயலலிதா இருந்த அறை, குளியல் அறை-நவீன கழிப்பிட வசதியும் செய்யப்பட்ட அறையாகும். அவர் குடிப்பதற்காக தேவையான அளவு நல்ல குடிநீர் பாட்டில்கள் அனுமதிக்கப்பட்டன. பார்வையாளர்களை அவருடைய விருப்பப்படி சந்திக்க அவருக்கு முழு உரிமை தரப்பட்டிருந்தது. அன்றாடம் ஒரு மருத்துவர் அம்மையாரைப் பரிசோதனை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தனது அறையிலிருந்து பார்வையாளர்களைச் சந்திக்க வருகின்ற நேரத்தில், அவருடைய பாதுகாப்பிற்காக ஜெயில் சூப்பிரண்டே உடன் வரவும்.

அவருடன் துணை சூப்பிரண்டு - பணியிலே உள்ள ஜெயிலர்கள் - தலைமை பெண்வார்டன் மற்றும் பெண் வார்டர்கள் உடன் வரவும் பணிக்கப்பட்டிருந்தார்கள். 7.12.1996 அன்று கைது செய்யப்பட்ட அவருக்கு 8ஆம் தேதியிலிருந்தே இந்த வசதிகள் எல்லாம் செய்து தரப்பட்டன. இவைகள் எல்லாம் அப்போதே ஏடுகளில் வெளிவந்த செய்திகள். ஏடுகளில் வராத செய்தி ஒன்றையும் இப்போது தெரிவிக்கின்றேன். அவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினம் சிறைத்துறை அதிகாரியை நானே தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, "கைது செய்யப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர் இருக்கும் அறையில் எந்தவிதமான வசதிக் குறையும் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவைகள் எல்லாம் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு, எனக்கு தொலைபேசியில் மீண்டும் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூறி, அந்த அதிகாரியும் அதையெல்லாம் சரி பார்த்துவிட்டு, பிறகு என்னிடம் தொடர்பு கொண்டு, "அந்த வசதிகள் எல்லாம் செய்து தரப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா கைதானதைத் தொடர்ந்து அவருடைய இல்லத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனையில் கண்டறியப்பட்ட பொருட்களின் சிலவற்றின் கலைஞர் பட்டியலை - சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் - நீதிபதி ஏ. ராமமூர்த்தி முன்பாக புலனாய்வுப் போலீசார் தாக்கல் செய்தார்கள். அவையாவன:- ★ 28 கிலோ தங்க நகைகள், (மதிப்பு 3.5 கோடிரூபாய்) ★ 800 கிலோ வெள்ளி, (மதிப்பு 10 லட்சம் ரூபாய்) ★ 10,500 சேலைகள், (90 லட்ச ரூபாய் மதிப்பு) ★ 750 ஜோடி காலணிகள் (2.25 லட்ச ரூபாய் மதிப்பு) ★ 25 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்கள்.

★ 70 சொத்துக்கள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்கள். ★ 91 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் (7.61 லட்ச ரூபாய் மதிப்பு) ★ 13.2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 44 குளிர்சாதன இயந்திரங்கள். ★ 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 19 கார்கள். ★ 3 வெள்ளித் தட்டுகள் ★ 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம். வீட்டைச் சோதனையிடு

ம்போது தனது செயலாளர் வி.பாஸ்கர், தனி உதவியாளர் விஜயன் ஆகியோர் உடனிருக்க வேண்டுமென்று ஜெயலலிதா எழுதிக்கொடுத்தார். அதன்படி எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி திறப்பு விழா 7.12.1996 அன்று போயஸ் தோட்டத்தில் வி.பாஸ்கர், மற்றும் ஜெயலலிதாவின் தாய்வழி சித்தி திருமதி ஜெயலட்சுமி கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் - ஐதராபாத் பண்ணையில் விஜயன், சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் தொடங்கியது. சோதனைக்குப் பின்னர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றில் அனைவரது கையெழுத்துக்களும் பெறப்பட்டன.

வருமானத்தை மீறி அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளதாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வழக்கு தொடர்ந்திருந்தது. அவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி டேவிட் கிறிஸ்டியான் 5.2.1997 அன்று ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தொடர்புள்ள 43 கோடி ரூபாய் மதிப்புள்ள 39 சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்கி வைக்க உத்தரவிட்டார். ஜெயலலிதா வீடு சோதனை இடப்பட்டது பற்றிய செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென்று ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி ஜே.

கனகராஜ் - "பத்திரிகை சுதந்திரத்தில் நீதி மன்றம் தலையிட விரும்பவில்லை" என்று கூறி தள்ளுபடி செய்தார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனுக்கள் (நிலக்கரி இறக்குமதி - வருமானத்துக்கு அதிகமான சொத்து) மீதான விசாரணை 2.1.1997 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி நீதி மன்ற நடவடிக்கைகளை அ.தி.மு.கவினர் மோசமாக விமர்சனம் செய்திருப்பதை நீதிபதியின் கவனத்துக்கு அரசு வழக்கறிஞர் நடராஜன் அவர்கள் கொண்டு சென்றார்.

"ஜெயலலிதாவை வெளியே விடவில்லையெனில் ரத்த வெள்ளம் ஓடும்" என்றும், "ஆளுங்கட்சியின் கைப்பாவையாகப் புலனாய்வுத் துறையினரும், அரசு வழக்கறிஞரும் செயல்படுகின்றார்கள்" என்றும் அ.தி.மு.க.வினர் செய்த விமர்சனங்களையெல்லாம் ஆதாரமாக அவர் எடுத்துக்காட்டினார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, "ஒருபெரிய கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா செயல்படுகிறார், கலைஞர் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கொரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம்! தொண்டர்களை அவர் கட்டுப்படுத்த வேண்டும் - ஜாமீனில் விடவேண்டும் என உண்ணாவிரதம் இருந்தால் நீதிமன்றம் செயல்படுவதன் பயன் என்ன? இத்தகைய செயல்கள் மிகவும் வேதனை தருகின்றன" என்றார்.

இறுதியாக 3.1.1997 அன்று 28 நாட்கள் சிறைக்குப் பிறகு ஜெயலலிதாவை சென்னை உயர்நீதி மன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. நிபந்தனையாக "விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் - நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இல்லாமல் சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது - சாட்சிகளைக் கலைக்கக் கூடாது - புலனாய்வைத் தடுக்கக் கூடாது - சட்டத்தின் செயல்பாடுகளைக் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்ச்சிக்கக் கூடாது" என்று நீதிபதி கூறினார்.

இது குறித்து செய்தியாளர் என்னிடம் கருத்து கேட்டபோது "முன்ஜாமீன் கேட்டு சிறைக்குப் போனார் - இப்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்" என்று கூறினேன். கழக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் கைது படலம் இவ்வாறு முடிவடைந்தது. இதற்கிடையில் 10.12.1996 அன்று சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில், 2,450 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஹூண்டாய் புதிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவிலே நானும், மத்திய தொழில் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனும், மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் கலந்து கொண்டோம்.

தி.மு.கழக அரசு பொறுப்பேற்ற போதெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு ஒவ்வொரு முறையும் செயல்பட்டது என்பதை பல்வேறு தொழிற் சாலைகளையும் தொழில் வளாகங்களையும் எடுத்துக் காட்டி விளக்கிட முடியும். அந்த வரிசையில் 96 ஆம் ஆண்டு நான்காம் முறையாக நான் ஆட்சிக்கு வந்தபோது தொடங்கப்பட்ட அந்தத் தொழிற்சாலைதான் இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகின்ற ஹூண்டாய் தொழிற்சாலை.

ஆண்டு ஒன்றுக்கு தொடக்கத்தில் ஒரு லட்சம் கார்களையும், இரண்டாவது கட்டம் தொடங்கிய பிறகு, ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கார்களையும் தயாரிக்கக்கூடிய அளவிற்கு அந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. 96ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிறகு 550 கோடி ரூபாய் முதலீட்டில் இங்கிலாந்து நாட்டின் பில்கிங்டன் நிறுவனத்தின் மிதக்கும் கண்ணாடி தொழிற்சாலை - மறைமலைநகரில் ஜப்பானைச் சேர்ந்த பியூஜிகுரா நிறுவனம் ஏற்படுத்திய பைபர் கேபிள் தொழிற்சாலை - 350 கோடி ரூபாய் முதலீட்டில் கொரியாவைச் சேர்ந்த கும்ஹா டயர் கம்பெனி ஏற்படுத்தும் ரீ டயல் டயர் தொழிற்சாலை என்று இந்தப் பட்டியல் அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தொடர்ந்து கொண்டே வந்தது.

குறிப்பாக திராவிட முன்னேற்றக்கழகம் எவ்வெப்போதெல்லாம் ஆட்சிக்கு தமிழகத்திலே வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் தொழில் வளம் பூத்துக் குலுங்கியது. 1996 ஆம் ஆண்டுக்கு முன்பு அ.தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற தமிழ்நாட்டின் தொழில்துறை எப்படிப்பட்ட பின்னடைவுகளை எல்லாம் சந்திக்க நேர்ந்தது - தொழில்துறை எப்படி அடியோடு நாசமாகிப் போனது என்பதை, அந்தக் காலத்திலேயே, "பிசினஸ் இந்தியா" என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கட்டுரையில், "சென்னையைச் சார்ந்த தொழில் அதிபர் சொல்வது எனக் குறிப்பிட்டு குப்பன், சுப்பன், முனியனை எல்லாம் நீங்கள் தாஜா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மூலவிக்கிரகத்தை - ஜெயலலிதாவை தாஜா செய்து விட்டாலே போதும் - உங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும். கலைஞர் மாதம் ஒரே ஒரு ரூபாய் சம்பளத்தில், நகைக்கடையாக நடமாடிய சகோதரிகள்! அதிலிருந்து தவறி விட்டாலோ உங்களுடைய வாழ்க்கை முழுவதுமே குழப்பம்தான். ஜெயலலிதாவின் நிர்மூலமான குணாம்சங்கள் பல பெரிய தொழிலகங்களை வரவிடாமலேயே செய்துவிட்டன" என்று அந்த ஆட்சியின் தொழில்துறை அலங்கோலத்தை விமர்சித்து விளக்கியுள்ளது.

இன்னும் இது போன்ற ஏராளமான சான்றுகள் அ.தி.மு.க. ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்கு (?) இருந்த போதிலும், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இது ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டியுள்ளேன். 1996, மே மாதம் கழக அரசு பொறுப்பேற்றதற்குப் பின்னர், தொழில் முன்னேற்றத்திற்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளித்திட முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் தொழில் மயமான மாநிலம் என்ற பெருமையை மீண்டும் அடைதல் - இந்தியா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாகத் தமிழ்நாட்டை உருவாக்குதல் - தொழில் முனைவோருக்கு உலகத் தரம் உலகத் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல் - தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிமையாக்குதல் - முதலீட்டாளர்கள் விரும்பும் ஒளிவுமறை- வில்லாத நடைமுறையைப் பின்பற்றுதல் - மாநிலத்தில் உள்ள அளப்பரிய மனித சக்தியை உகந்தவாறு பயன்படுத்துதல் - என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய தொழில் கொள்கை ஒன்றை வகுத்து அமல்படுத்த முற்பட்டது.

தமிழகத்தின் தொழில் வரலாற்றில், ஒரே இடத்தில் பல தொழில்கள் உருவாவதற்கு வகை செய்யும் தொழில் வளாகங்களை முதன்முதல் அமைத்த பெருமை கழக அரசிற்குத்தான் உண்டு. இதற்காக 1971 ஆம் ஆண்டில் கழக அரசு, தமிழகத்தில் "சிப்காட்" என்னும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தை (State Industrial Promotion Corporation of Tamil Nadu) உருவாக்கியது. ★ அதன்மூலம், 1973 ஆம் ஆண்டில் இராணிப்பேட்டையில் 729.78 ஏக்கர் பரப்பில் ஒரு தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு, அங்கே 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 புதிய தொழில்கள் அப்போதே தொடங்கப்பட்டன.

★ 1974 ஆம் ஆண்டில், ஓசூரில் 1236 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது தொழில் வளாகம் அமைக்கப்பட்டு, அதில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் 186 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இந்த இரண்டு தொழில் வளாகங்களிலும் ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன. ★ 1989 ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் இராணிப்பேட்டையில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் 133 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டு, அங்கே 99 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு 3400 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

★ ஓசூரிலும் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் 457 ஏக்கர் நிலப்பரப்பில் 64 புதிய தொழில்களுடன் தொடங்கப்பட்டு, அங்கே ஏறத்தாழ 6 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றனர். கலைஞர் ★ 1996 இல் நான்காவது முறையாக கழக அரசு அமைந்த பின், திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஏற்றுமதி வளாகம் ஆகிய இடங்களில் சிப்காட் நிறுவனத்தால் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம், குறிப்பாகச் சென்னை மாநகரம் "இந்தியாவின் டெட்ராய்டு" என்று சொல்லக்கூடிய அளவிற்கு சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பிரம்மாண்டமான கார் தொழிற்சாலைகளும், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டது தி.மு.

கழக ஆட்சிக் காலத்திலேதான். ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் - திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை - போர்டு மோட்டார் தொழிற்சாலை ஆகியவை இதற்குச் சான்றாகும். லண்டனில் இருந்து வெளிவரும் "பைனான்சியல் டைம்ஸ்" என்ற பத்திரிகை, 1997, ஏப்ரல் மாதத்தில் "சென்னை - இந்தியாவின் டெட்ராய்ட்" என்று வர்ணித்தது.

மார்க் நிக்கல்சன் என்கிற தலைசிறந்த பத்திரிகையாளர் அந்தப் பத்திரிகையில் 10.4.1997 அன்று "Tamil Nadu Raise Upto achieve car ambitions" எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் "Tamil Nadu's car industry is perhaps the most spectacular result of the race between states to attract foreign investment and develop new industries" அதாவது, "வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழில்களை உருவாக்கி வளர்ப்பதில் மாநிலங்களுக்கு போட்டியில், தமிழ்நாட்டின் கார் தொழில் வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா பல நூறு கோடி சொத்து சேர்த்தது பற்றி "தினமணி" தலையங்கம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி 1994-95ல் 8.7 சதவீத அளவிற்கு இருந்தது. கழக அரசு எடுத்த தொடர்ச்சியான தொழில் முனைவோர் நேயமிக்க நடவடிக்கைகளின் காரணமாக, 1999 - 2000 ஆண்டில் தொழில் வளர்ச்சி 15.02 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்தது. "இன்டஸ்ட்ரியல் ஹெரால்ட்" (ஏப்ரல் 2000) என்ற ஆங்கில நாளிதழ், "வாகன உற்பத்தி - வாகன உதிரி பாகங்கள் உற்பத்திப் பிரிவுகள் அமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்திடும் சென்னை மாநகரம் இந்தியாவின் டெட்ராய்ட்" எனக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.

7.2.2000 நாளிட்ட "எகனாமிக் டைம்ஸ்" நாளிதழில், "இந்தியாவில் பெரிதும் தொழில்மயப் படுத்தப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. நாட்டின் ஏற்றுமதிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் பெரியதாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1996-2001 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக எந்த அளவிற்கு தி.மு. கழக அரசு பாடுபட்டதோ, அதே அளவிற்குத்தான் 2006 ஆம் ஆண்டு மீண்டும் பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான அத்தனை முயற்சிகளிலும் கழக அரசு ஈடுபட்டுள்ளது. கலைஞர் 1996, டிசம்பர் 10 ஆம் தேதியன்று ஹூண்டாய் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா என்றால், அதற்கு முந்தைய நாள் 9ஆம் தேதியன்று அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.

பெயரால் அமைந்த "டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி அம்மையார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி" யின் திறப்புவிழாவிலே கலந்து கொண்டேன். அப்போது கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அவர்கள் அந்த விழாவிற்கு தலைமை வகித்தார். அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டபோது என் மனதில் எத்தனையோ நினைவுகள் நிழலாடின. எந்த இடத்தில் நானும், எம்.ஜி.ஆர் அவர்களும் மணிக்கணக்கிலே அமர்ந்து பேசினோமோ - எந்த இடத்தில் அவரும் நானும் கலைப் பணிகளை ஒன்றாக இருந்து ஆற்றினோமோ - அதே இடத்தில் எம்.ஜி.ஆருடைய பெயராலும், அவரது துணைவியார் பெயராலும் மகளிர் கல்லூரியைத் தொடங்கி வைத்தபோது பழைய எண்ணங்கள் எல்லாம் தோன்றின.

அந்த நினைவுகளை எல்லாம் அந்த விழாவிலே நான் உரையாற்றும்போது எடுத்துரைத்தேன். தொடர்ந்து 11.12.1996 அன்று சிங்காரவேலர் பெயரில் அமைந்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தை அமைச்சர்கள் பேராசிரியர், ஆர்க்காடு வீராசாமி, நாஞ்சிலார், துரைமுருகன், என். வி. என். சோமு, சற்குணப் பாண்டியன் மற்றும் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்துக்கொள்ள திறந்து வைத்தேன். ஊழல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட ஜெயலலிதா!

இதனைக் கூறும்போது அந்தக் கட்டிடம் பற்றிய வரலாற்றினைக் கூறலாமென நினைக்கிறேன். 1793ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது என்பதைவிட, முழுமையாகவே புதிதாக எழுப்பப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாகக் கட்டப்பட வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் 13.2.1990. ஆம், அப்போதும் தி.மு. கழக ஆட்சிதான். 91ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி மாறிவிட்ட நிலையில் ஐந்தாண்டு காலம் இருந்த அ.தி.மு.க ஆட்சியில் அந்தப்பணி கிடப்பிலே போடப்பட்டுவிட்டது.

தொய்வுக்குக் காரணம், அந்தக் கட்டிடத்தை ஆரம்பித்தவரே வந்து திறந்து வைக்க வேண்டுமென்ற எண்ணம்தான். மாவட்ட ஆட்சியருக்குரிய அந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அதற்கு என்ன பெயர் வைப்பதென்று கேட்டு, அப்போது வருவாய்த் துறை அமைச்சராக இருந்த நாஞ்சிலார் அவர்கள் எனக்கொரு கோப்பினை அனுப்பி வைத்திருந்தார். அந்தக் கோப்பிலே, " வில்லியம் பெண்டிங் பிரபு காலத்திலே கட்டப்பட்ட கட்டிடம் அது. அவர் மிகவும் நல்லவர்.

அவருடைய நிர்வாகம், நேர்மைத் திறன் போற்றுதற்குரியது. கலைஞர் எனவே அவருடைய பெயரையே அந்தக் கட்டிடத்திற்கு வைத்து விடலாமா?" என்று நாஞ்சிலார் எழுதியிருந்தார். வில்லியம் பெண்டிங் அவர்கள்மீது நாஞ்சிலார் வைத்திருந்த அன்பைப்போல் நானும் அன்பு கொண்டவன்தான். அதிலே எந்தக் கருத்து மாறுபாடும் எனக்கில்லை. ஆனால் அந்தக் கட்டிடத்திற்கு "பெண்டிங்பில்டிங்" என்று பெயர் அமைந்து விடுமேயானால் அதன் பின்னர் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்படும் மனுக்கள் எல்லாம் "பெண்டிங்"காக வைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஏற்படும்.

"பெண்டிங் பில்டிங்கிற்கா? அவ்வளவுதான், பதில் "பெண்டிங்"காகத்தான் வரும்" என்று கிண்டல் செய்வார்கள். எனவே அந்தப் பகுதியிலே அந்தக் கட்டிடம் அமைந்துள்ள வட்டாரத்திலே - தொழிலாளர்களின் துணைவனாக விளங்கிய - சட்டமேதையாக உலவிய பகுத்தறிவுப் பாசறையாக ஒளிவிட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருடைய

பெயரை அந்தக் கட்டிடத்திற்கு சூட்டலாம் என்றும் - அந்தக் கட்டிடத்தின் வேறொரு புறத்திலே ஒரு சுவரிலே வில்லியம் பெண்டிங் பிரபுவினுடைய சிறப்பியல்புகளை எல்லாம் கல்வெட்டாக எழுதி வைக்கலாம் என்றும் நான் கூறி, அதன் பின்னர் அந்தக் கட்டிடத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டு, இன்றளவும் அது நல்ல முறையிலே இயங்கி வருகிறது. அந்த மாளிகை இருந்த இடத்திலே தான் 1817 ஆம் ஆண்டு முதல் 1862 ஆம் ஆண்டு வரையில் நீதிமன்றமும் இயங்கிவந்தது.

1862 முதல் 1892 வரையில் உயர் நீதிமன்றமாகவும் அந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. 1892க்கு பிறகு தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாறியது. அந்தக் கட்டிடத்திற்கு சிங்காரவேலர் பெயரை நான் சூட்டினேன் என்ற பெருமை எனக்கிருந்த போதிலும் - அந்தப் பெருமைக்குரிய சிங்காரவேலர் அவர்கள் மறைந்தபோது மூதறிஞர் ராஜாஜி "ஒரு யோக்கியரை இழந்து விட்டோம்" என்று கூறியதும் - அந்த யோக்கியருடைய பெயரால் அமைந்துள்ள கட்டிடத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருவதும் மகிழ்ச்சிக்குரியதுதானே?