நெஞ்சுக்கு நீதி
ஜெயின் கமிஷன் · 327 / 391
கலைஞர் 15. ஜெயின் கமிஷன் நேரு குடும்பத்திற்கும் எனக்குமுள்ள ஆழமான உறவும், நட்பும் என்றுமே மாறாது! ஆம் ஆண்டு முதலமைச்சராக நான் இருந்த நேரத்தில், ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன் நான் சாட்சியம் சொல்ல வேண்டுமென்று அழைக்கப்பட்டேன். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நேரத்தில் தி.மு.கழகம் பதவியிலே இல்லை என்றபோதிலும், அந்தக் காலக் கட்டத்தில் அந்தப் பழியைத் திட்டமிட்டு வேண்டுமென்றே தி.மு.க.மீது சுமத்துவதற்காக அகில இந்திய அளவில் பலரும் முயற்சித்தனர்.
எனவே ஜெயின் கமிஷன் முன் நான் சாட்சியம் கூறவேண்டுமென்பதில் பலரும் குறியாய் இருந்தனர். அந்தச் சாட்சியத்தின் போது என்னிடம் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும் இந்தத் தொடரில் இடம்பெறுவது முக்கியமெனக் கருதுகிறேன். கேள்வி : நீங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று குற்றச்சாட்டுக்கு தங்கள் பதில் என்ன? பதில் : அந்தக் குற்றச்சாட்டு பொய் என்று கூறுகிறேன். நான் ஒரு தகவலைத் தர விரும்புகிறேன்.
28-9-1993 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு (அ.தி.மு.க. ஆட்சியில்) ஒரு கடிதம் எழுதுகிறது. அந்தக் கடிதத்தில் "According to uncon- firmed report, the LTTE plans to eliminate M.Karunanidhi, Leader of the DMK. The above information is being shared with you for action as deemed appropriate to review and suitably augment the security arrangements with shri M. Karunanidhi" (உறுதி செய்யப்படாத ஒரு தி.மு.க.
மீது எந்தக் குற்றமும் காணாத சி.பி.ஐ.யிடம் தாக்கல் செய்யப்பட்ட ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை தகவலின்படி. தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆயுளை முடித்துவிட எல்.டி.டி.ஈ. திட்டமிட்டுள்ளது. இது உரிய முறையில் மறுஆய்வு செய்து, திரு. எம். கருணாநிதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தல் அவசியம் என்பதால் இத்தகவல் தங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் பாஸ்கரதாஸ் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரிவித்ததன்பேரில், அதனை ஏற்றுக்கொள்வதாக நானும் அறிவித்துவிட்டேன். இந்தக் கடிதங்களிலிருந்து நான் விடுதலைப் புலிகளுக்கு ஒரு காலத்தில் வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டேன் என்பதும், அவர்களுக்கு ஆதரவாளனாக நான் இல்லை என்பது தெளிவாகும். கேள்வி : பத்மநாபா கொலை வழக்கில் நாகராஜன் அளித்த வாக்குமூலத்தில், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிற நேரத்தில், தாங்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதன் மூலமாக தலையிட்டதாக உங்கள்மீது அவர் குற்றச்சாட்டு கூறியிருக்கிறாரே?
பதில் : நாகராஜனின் அந்த வாக்குமூலமே பத்மநாபாவின் கொலையைப் பற்றியதாகும். அந்த வாக்குமூலத்தில் நாகராஜன் கூறிய அனைத்தும் பொய்யானவை என்று நான் சொல்லுகிறேன். பத்மநாபா கொலை செய்யப்பட்ட செய்தி டெல்லியில் இருந்த எனக்குத் தெரியவந்தது. உடனடியாக அப்போது உள்துறை செயலாளராக இருந்த நாகராஜனிடம் கூறி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் - கலைஞர் கொண்டேன். அந்தச் செய்தியை மறுநாள் என்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களிடமும் கூறியிருக்கிறேன்.
டெல்லியில் நான் செய்தியாளர்களிடம் சொன்னது "இந்து" பத்திரிகையில் 20-6-1990 அன்று வெளிவந்திருக்கிறது. 30-11-1991 அன்று திரு. நாகராஜன் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த அந்த வாக்குமூலத்திலும் - இந்தக் கமிஷனில் அந்த வாக்குமூலம் கொடுத்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திச் சொல்வதற்கும் காரணம், முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் தூண்டுதல்தான் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அவர் திருச்சியில் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தபோது, அவர் தடாக் கைதியாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்த நேரமாகும்.
எங்கும் இல்லாத அதிசயமாக, தடாக் கைதியாக அவர் சிறை வைக்கப்பட்ட சில நாட்களிலேயே ஜாமீனில் விடப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் இருந்த போதே, செய்தியாளர்களைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டார். மாஜிஸ்திரேட்டிடம் அவர் இந்த பொய்யான வாக்குமூலத்தைக் கொடுத்த அதே நேரத்தில், போலீசார் அந்த வாக்குமூலத்தை வெளியிலே பத்திரிகையாளர்களுக்கு திருச்சியில் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் செய்தி அன்றைய தினம் மாலையிலேயே வெளிவந்தது. நாடாளுமன்றத்தில் வைப்பதற்கு முன்பே, தனது அறிக்கையை 'இந்தியா டுடே' ஆசிரியர் பிரபு சௌலாவிற்கு ஜெயின் தரும் காட்சி! பகல் சுமார் மணியளவில் அந்த ஸ்டேட்மென்ட் தரப்பட்டது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் ஸ்டேட்மென்ட் கொடுத்த அதே 30-11-1991 அன்று, அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நான் தங்கள் அனுமதியுடன் படிக்க விரும்புகிறேன்.
R.Nagarajan, I.A.S., Tiruchirapalli, Respected Madam chief Minister, I have done my duty and i will stand by it all the time to come. I feel that I have unloaded a heavy weight from my heart. Once again i am grateful for your noble and kind gesture. Awaiting for your further orders and instructions. My respectful regards, Yours, sincerely, R. Nagarajan. (மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு, நான் என்னுடைய கடமையை நிறைவேற்றிவிட்டேன்.
வரும் காலத்தில் எப்போதும் நான் அதில் உறுதியாக இருப்பேன். என் இதயத்திலிருந்து ஒரு பெருஞ்சுமையை இறக்கி வைத்துவிட்டதாக நான் கொலை செய்யப்பட்ட பத்மநாபா உணர்கிறேன். உங்களுடைய மேன்மையான, அன்பான நல்லெண்ணத்திற்கு மீண்டும் நான் நன்றி கூறுகிறேன். மேலும் உங்களுடைய உத்தரவுகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் காத்திருக்கிறேன்.) இந்தக் கடிதத்தை நான் படித்துக் காட்டியதும், நீதிபதி ஜெயின் குறுக்கிட்டு, "அந்தக் கடிதத்தின் ஒரிஜினல் இருக்கிறதா?"
என்று கேட்க, நான் அதனை அவரிடம் ஒப்படைத்தேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டு, அந்தக் கடிதத்தில் உள்ளவை நாகராஜன் எழுதியதுதானா என்று என்னிடம் கேட்டபோது, "அந்த அதிகாரி என்னிடம் செயலாளராக இருந்திருக்கிறார். நான் ஆட்சியிலே இருந்தபோது உள்துறை செயலாளராகவும் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் அவருடைய கையெழுத்தை நான் பார்த்திருக்கிறேன். இது அவருடைய கையெழுத்துதான்" என்று உறுதிகூறினேன்.
கலைஞர் இந்த நேரத்தில் ஜெயலலிதாவிற்கு வேண்டிய வழக்கறிஞர் ஒருவர் எழுந்து, "இந்தக் கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது?" என்றார். ஆனால் நீதிபதி ஜெயின் குறுக்கிட்டு "அதையெல்லாம் கேட்கக்கூடாது. ஒருவேளை ஜெயலலிதாவே கொடுத்திருப்பார்" என்றார்.
தொடர்ந்து நான் கூறும்போது, "நாகராஜன் இந்த அளவிற்கு கடிதம் எழுதியிருக்கக் காரணம், அ.தி.மு.க. ஆட்சியில் முதலில் அவரை "தராசு" பத்திரிகை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தி, அவரைக் கைது செய்தார்கள். தொடர்ந்து அவர்மீது துறை வாயிலாக பத்மனாபா கொலை போன்ற விவகாரங்களில் 'ஏன் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை?'
என்று விளக்கம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதிலில், எந்த இடத்திலும் என்னைப் பற்றி எந்தவிதமான குற்றச்சாட்டினையும் கூறவில்லை" என்று சொன்னேன். உடனே நீதிபதி ஜெயின் அவர்கள், "இந்தக் கமிஷன் முன்பு அவர் கொடுத்த வாக்குமூலத்தில் அதைப்பற்றி எந்தப் புகாரும் சொல்லவில்லையே!"
என்றார். பின்னர் அ.தி.மு.க. வழக்கறிஞர் என்னிடம் குறுக்கு விசாரணை செய்தபோது, "நாகராஜன் முதல் அமைச்சருக்கு எழுதிய ஒரு கடிதத்தை இன்று தாக்கல் செய்தீர்களே - அது தங்களுக்கு எப்படி கிடைத்தது?" என்று கேட்டார். அதற்கு நான், "நான் இந்நாள் முதலமைச்சராக இருக்கின்ற காரணத்தால் கோப்பிலிருந்து அந்தக் கடிதம் கிடைத்தது!"
என்று கூறினேன். அ.தி.மு.க. வழக்கறிஞர் மீண்டும் என்னிடம், "ஜெயலலிதா தூண்டுதல் காரணமாகத்தான் உங்களுக்கு எதிராக நாகராஜன் குற்றச்சாட்டு கூறினார் என்று சொன்னது தவறு!" என்றார். அதற்கு நான், "அப்படித்தான் நான் கருதுகிறேன். நம்புகிறேன். ஏனென்றால் அந்தக் கடிதத்தில் "நீங்கள் சொன்னதை நான் செய்து முடித்துவிட்டேன், அடுத்த ஆணையை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்றெல்லாம் எழுதியிருப்பதால், அதை நான் நம்புகிறேன்!"
என்று கூறினேன். 4-5-1986 அன்று மதுரையில் நான் முன்னின்று நடத்திய டெசோ மாநாடு பற்றியும், அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போது, "இலங்கைப் போராளிக் குழுக்கள் ஒன்றுபடும்வரை ஒற்றுமையாக இணைந்து செயல்படும்வரை, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன்!"
என்று பேசியது பற்றியும் ஜெயின் கமிஷன் முன்னால் எடுத்துக் கூறினேன். 1986ஆம் ஆண்டு என்னுடைய பிறந்த நாள் அன்று உண்டியலில் கிடைத்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு போராளிக் குழுவிற்கும் ஐம்பதாயிரம் ரூபாய்வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, விடுதலைப் புலிகள் மட்டும் அதனை வாங்கிக் கொள்ள முன் வராததைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். இந்திரா காந்தி அம்மையாரின் குடும்பத்திற்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியெல்லாம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் "உங்கள் உத்தரவை முடித்துவிட்டேன் - அடுத்த ஆணைக்குக் காத்திருக்கிறேன்" என்று ஜெயலலிதாவிற்கு உள்துறை செயலாளர் நாகராஜன் கடிதம் எழுதினார்.
பதிலளித்தேன். 1986ஆம் ஆண்டு, "தமிழ் ஈழம் என்பது சர்வாதிகார நாடாகத்தான் இருக்கும்" என்று பிரபாகரன் கூறியதற்கு, "அந்தக் கருத்தை நான் ஏற்கமாட்டேன்" என்று நான் பதிலளித்ததையும் எடுத்துக் கூறினேன். 1987ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு நான்கு கோடி ரூபாய் அரசின் சார்பில் நிதி வழங்கியதைப்பற்றியும் - 21-3-1988 தேதியில் ஜெயலலிதா "இந்து" நாளிதழுக்கு விடுதலைப் புலிகளை ஆதரித்துக் - கலைஞர் கொடுத்த பேட்டி பற்றியும் விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர்.
செய்த உதவி அளவுக்கு கருணாநிதி செய்தாரா? என்று "இந்தியன் எக்ஸ்பிரஸ்" கேள்வி கேட்டதற்கு, "கருணாநிதி உதவியதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று ஜெயலலிதா கொடுத்த பேட்டி பற்றியும் - 8-10-1990இல் ஜெயலலிதா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக 'எக்ஸ்பிரஸ்'க்கு அளித்த பேட்டி பற்றியும் ஜெயின் கமிஷன் முன்னால் பத்திரிகை ஆதாரங்களுடன் எடுத்து விளக்கினேன்.
ஜெயின் கமிஷன் முன்னால் நான் அப்போது அளித்த சாட்சியம் பற்றி பிரபல ஆங்கில ஏடான "ப்ரண்ட் லைன்" பின்வருமாறு எழுதியிருக்கிறது. "முதல்வர் கருணாநிதி தமிழில் அளித்த சாட்சியம் தான் இந்தச் சுற்றில் கமிஷனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது. அவர் உண்மைகளின் உச்சியில் இருந்து முரண்பாடில்லாத தொடர்ச்சியான - விளக்கமான - இடையிடையே நகைச்சுவையுடன் கூடிய கருத்தை விளக்கும் சொற்களைப் பயன்படுத்தி, காரசாரமான முறையில் சாட்சியம் அளித்தார்.
அவர் சாந்தமாகவும் - கேள்விகளுக்கு உடனுக்குடன் தெளிவாகவும் - சுருக்கமாகவும் பதில் அளித்தார். நவம்பர் 22ஆம் தேதி கமிஷன்முன் சாட்சியமளித்த தமிழக முதல் அமைச்சர், எல்.டி.டி.ஈ. மீதான மற்ற கட்சிகளுடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்ட தன்னுடைய அனுதாபம், மற்ற தமிழ் குழுக்கள் போராளிகள், பிற மிதவாதிகள் மீது எல்.டி.டி.ஈ.யால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒவ்வொரு கொலைக்குப் பிறகு எவ்வாறு படிப்படியாக குறைந்து மங்கியது என்பதை விபரமாகத் தெரிவித்தார்."
"கருணாநிதியின் வாக்குமூலமும், குறுக்கு விசாரணையில் அளித்த பதில்களும்; அவருடைய மூத்த வழக்கறிஞரும் புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞருமான என். நடராஜன், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறியதும், இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியாவின் ஆதரவு அரசியலின் பரிணாம வளர்ச்சி பற்றிய பாடமாக அமைந்தது."
"டெசோ கூட்டத்திற்கு அடுத்தநாளே அதாவது 1986மே 6ஆம் தேதி "டெலோ" தலைவர் சிறீ சபாரத்தினம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டார்.அது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. எனவே போராளிகள் தங்கள் விரோதத்தைக் கைவிடும்வரை மவுனமாக இருப்பது என்று நான் முடிவு செய்தேன் என்று கருணாநிதி நினைவுகூர்ந்தார்."
"இந்திய அமைதிப்படை தாயகம் திரும்பியபோது, அவர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை - என்று கேட்கப்பட்டபோது, ஒரு கிரிக்கெட் ரசிகரான அவர், கிரிக்கெட் தொடர்பான கற்பனையோடு பதிலளித்தார். "பொதுவாக ஒரு கிரிக்கெட் அணி வெளிநாட்டுக்குச் சென்று வெற்றியோடு திரும்பும்போது, எல்லோரும் அதை வரவேற்கச் சென்று, அதைப் பாராட்டுவார்கள். ஆனால் ஒரு கிரிக்கெட் அணி மோசமாக தோல்வியடைந்து திரும்பும்போது, அதை விமான நிலையத்தில் வரவேற்க ஒருவரும் செல்ல மாட்டார்கள்.
அதுபோல, அமைதி காக்க அனுப்பப்பட்ட படை அதை நிறைவேற்றாமல் உண்மையில் அதற்கு மாறாக செயல்பட்டுத் திரும்பியது!" என்று அவர் தெரிவித்தார். பத்மநாபா உடலுக்கு மலரஞ்சலி "இலங்கை இனப்பிரச்சினையில் உங்கள் கொள்கை எப்படி இருந்தது?" என்று குறிப்பிட்டுக் கேட்டபோது, தான் எப்போதும் ஆதரித்து வரும் தேசியக் கொள்கையிலிருந்து தான் ஒருபோதும் விலகியதில்லை என்பதே அவருடைய பதிலாக இருந்தது."
"கமிஷன் முன் சாட்சியம் அளித்தபோது வெடிகுண்டு போல அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஆவண சாட்சியம் ஒன்றை கருணாநிதி வெளியிட்டார். கலைஞர் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த பத்மனாபாவும் மற்ற தலைவர்களும் சென்னையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்காமல் தடுக்கும்படி, தான் வாய்மொழியாக உத்தரவிட்டதாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.நாகராஜன் கூறியுள்ள குற்றச்சாட்டு பற்றிக் கேட்டபோது, நாகராஜனின் குற்றச் சாட்டுகள், 'முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் தூண்டி விடப்பட்டது' என்று கருணாநிதி கூறினார்.
அது தொடர்பாக நாகராஜன் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் ஆதாரமாக அளித்தார்." ஜெயின் கமிஷன் விசாரணையும் அதில் என்னை விசாரணைக்கு அழைத்ததும் இந்திய அளவில் பெரிதாகப் பேசப்பட்டது. ஆனால் அந்த விசாரணையின்போது நான் அளித்த சாட்சியம் உலகத்திற்குத் தி.மு.கழகத்தின் மீது சாற்றிட நினைத்த ஒரு பெரிய குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் வகையிலே அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. 7-12-1991 தேதியிட்ட "பிசினஸ் ஸ்டாண்டர்டு" இதழில் டி.வி.ஆர்.
ஷெனாய் எழுதும்போது "முறையான காரணங்கள் இன்றி கருணாநிதிக்கு மேலும் தொல்லை கொடுத்தால், அதன் விளைவாகப் புதுடெல்லிக்குத்தான் மிகவும் தர்மசங்கடமான நிலை ஏற்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு. அதனைப் பற்றி "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளேடு 11-11-1997 தேதிய தலையங்கத்தில் "ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்க
ையில் உள்ள கண்டுபிடிப்புகள் மிகவும் அற்பமானவை. உண்மையில் பொதுவான அபிப்பிராயங்களின் தொகுப்பாக அந்த அறிக்கை தெரிகிறதே தவிர, நீதி சார்ந்த ஒரு அமைப்பு ஆழ்ந்து பரிசீலித்து வெளியிட்ட கருத்தாகத் தோன்றவில்லை" என்று எழுதியிருந்தது.
1997ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் "இந்தியா டுடே" இதழில் ஜெயின் கமிஷன் அறிக்கையில் உள்ள செய்திகள் என்ற வகையில் சிலவற்றை வெளியிட்டன. ஆனால் ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை என்ற ஒன்றை அரசிடம் தந்ததே தவிர, அதில் உள்ளவை பற்றி ஏடுகளுக்கு எதுவும் வெளியிடாத நிலையில், "இந்தியா டுடே" இதழ் வெளியிட்ட செய்திகளை நீதிபதி ஜெயின் அவர்களே மறுத்துக் கண்டனம் தெரிவித்தார். எனினும் பத்திரிகையாளர்கள் என்னைச் சந்தித்து, "விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தது போல ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையிலே கூறப்பட்டுள்ளது என்று இந்தியா டுடே ஏடு எழுதியிருக்கிறதே?"
என்று 9-11-1997 அன்று கேட்டார்கள். அதற்கு நான் நீண்டதோர் விளக்கமளித்தேன். அந்த விளக்கம் வருமாறு: "ஜெயின் கமிஷன் முன் நானும் சாட்சியம் அளித்திருக்கிறேன். வேறு பலரும் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ஏன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாகூட அங்கே சாட்சியமளித்திருக்கிறார். இந்தச் சாட்சியங்களைப் பொறுத்து, 1981ஆம் ஆண்டிலிருந்தே - இந்திரா காந்தியில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும், இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு கொடுத்ததோடு, போராளிகளுக்கும் ஆதரவு அளித்திருக்கின்றன.
இந்திரா காந்தி காலத்தில் எத்தனை பயிற்சி முகாம்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலைப் போராளிகளுக்காக இந்தியாவில் இருக்கின்றன என்ற புள்ளி விவரத்தையும், வரைபடத்தையும் இதே இந்தியா டுடே பத்திரிகை அப்போதே வெளியிட்டுள்ளது. "இந்து" பத்திரிகையைச் சேர்ந்த "பிரண்ட் லைன்" இதழில் பிரபாகரனை சிம்மாசனத்தில் உட்காரவைத்து, அவரை தமிழ் ஈழத்தினுடைய தளபதி தலைவர் என்பது போல படத்தையே வெளியிட்டார்கள்.
இதை நான் குற்றச்சாட்டாகக் கூறவில்லை.அப்போதிருந்த நிலவரத்தையும் - எல்லாக் கட்சிகளும் பத்திரிகைகளும் இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெற்ற உரிமைப் போராட்டத்தை ஆதரித்தன என்பதை விளக்குவதற்காகத்தான் இதைக் குறிப்பிடுகிறேன்." கலைஞர் நான் நடத்திய டெசோ மாநாட்டிற்கு வாஜ்பாய் - என்.டி. ராமாராவ் - கீ. வீரமணி உள்ளிட்ட தலைவர்களை வரவேற்கிறேன். "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற பிரச்சினையை ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன் - கொலைக்குப்பின் என்று இரண்டு அத்தியாயங்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும்.
விடுதலைப் போராளிகளுக்கு, ராஜீவ்காந்தியின் கொலைக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த ஆதரவு - கொலைக்குப் பின்பு அந்த ஆதரவில் ஏற்பட்ட மாற்றம் - என்று எண்ணிப் பார்ப்பதற்காகத்தான் இப்படி இருவேறு அத்தியாயங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறேன்."
"21-3-1988 அன்று ஜெயலலிதா செய்தியாளர்கள் கூட்டத்தில், "இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான தன்னுடைய ராணுவ நடவடிக்கைகளையெல்லாம் உடனடியாக நிறுத்திக் கொண்டு பிரபாகரனை பேச்சுவார்த்தைக்காக அழைக்க வேண்டும்.பிரபாகரனுக்கு இந்திய அமைதிப்படையினால் வேண்டுமென்றோ அல்லது எதிர்பாராத விதமாகவோ ஏதாவது தொந்தரவு ஏற்படுமேயானால் தமிழகத்தில் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.
("India should immediately halt its military operations against the LTTE, and call its leader V. Prabakaran for discussions. If any harm comes to Mr. Prabakaran due to deliberate or accidental actions of the IPKF, it will have an adverse impact in Tamil Nadu" she warned.) "1991ஆம் ஆண்டு ஜெயலலிதா "இந்து" இதழுக்கு அளித்த பேட்டியில், "இனப் படுகொலை நிற்காமல் தொடருமேயானால், இந்திரா காந்தி வங்க தேசப் பிரச்சினையிலே எடுத்ததைப் போல இலங்கைப் பிரச்சினையிலும் இந்திய ராணுவத் தீர்வு காண்பதிலே எந்த விதமான தவறும் கிடையாதென்று நினைக்கிறேன்" என்றார்.
(If the genocide continues unabated; I think there will be nothing wrong, if India thinks of a military option as indira Gandhi did in the case of Bangladesh") "1990ஆம் ஆண்டு ஜூன் திங்களில் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலைக்குப் பிறகும், 4-10-1990 அன்று "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளேட்டுக்கு ஜெயலலிதா கொடுத்த பேட்டியில் - "இந்தக் கடைசி இரண்டு மாதங்களில் தமிழகத்திற்கு தொந்தரவு தரக்கூடிய வகையிலே விடுதலைப் புலிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
தற்போது விடுதலைப் புலிகள் ஒரு அரசாங்கத்தையே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு இமாலயப் பணியாகும். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டால், இலங்கையிலே உள்ள மொத்தத் தமிழ் இனமும் அழிந்துவிடும் என்பதை நாமனைவரும் மனதிலே கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகளின் வெற்றி என்பது இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக திரு. கருணாநிதி தன்னைக் காப்பாற்றிக்கொள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்துகிறார்.
அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்ய வேண்டும். மத்திய அரசும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலே ஒரு அமைதியான தீர்வு காண்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட வேண்டும்" என்று கூறியிருக்கிறார். "இதற்குப் பிறகு எக்ஸ்பிரஸ் ஏட்டில் "எம்.ஜி.ஆர். அளவிற்கு இல்லாவிட்டாலும் கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு உதவியே செய்யவில்லையா?"
என்றுகேட்டபோது, ஜெயலலிதா "I see no evidence of it" என்று பதிலளித்திருக்கிறார்." கலைஞர் - இந்த நீண்ட என்னுடைய பதிலுக்குப் பிறகு, செய்தியாளர் ஒருவர், "மத்திய அரசு உங்களிடம் தெரிவித்த ரகசியங்களை நீங்கள் வெளியிட்டு விட்டதாகக் கூறப்படுவதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?"
என்று கேட்டார். டெசோ மாநாட்டில், "இலங்கைப் போராளிக் குழுக்கள் ஒன்றுபடும்வரை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட மாட்டேன்!" என்று நான் பேசினேன்! அதற்கு நான் அளித்த பதில், "எந்த ரகசியமும் கிடையாது. இதே ஜெயின் கமிஷன் முன்னால், பிரதமராக இருந்த சந்திரசேகரின் முதன்மைச் செயலாளர் திரு. பி.ஜி.தேஷ்முக் அவர்கள் சாட்சியம் அளித்திருக்கிறார். அப்போது அவர் "To my knowledge, it did not come whether any information was leaked about the L.T.T.E.
to the D.M.K. Government - I cannot say Whether any Governmental Information was leaked to L.T.T.E., by D.M.K. No one came to complain to me" "என்னுடைய அறிவுக்குத் தெரிந்தவரையில் விடுதலைப் புலிகளைப் பற்றி தி.மு.க. அரசாங்கத்திற்கு எந்தச் செய்தியும் தெரிவிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் எந்தச் செய்தியும் விடுதலைப் புலிகளுக்கு தி.மு. கழகத்தினால் வெளியிடப்பட்டதா என்று என்னால் கூற இயலாது. என்னிடம் இதுபற்றி புகார் செய்ய யாரும் வரவில்லை" என்று சாட்சியம் அளித்தார் என்பதும் மனதில் கொள்ளத்தக்கது.
ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை குறித்து எகனாமிக் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ்மென் போன்ற நாளிதழ்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அதனைக் கண்டித்து தலையங்கங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார்கள். இந்திய அளவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்தார்கள். குறிப்பாக தி.மு.க. அரசைக் கலைத்த சந்திர சேகர் அவர்கள் கூறும்போது, "நான் தமிழகத்தில் தி.மு.க.
அரசைக் கலைத்தது பற்றியும், முதல்வர் கலைஞர் அவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தது பற்றியும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நான் கலைஞர் அவர்களையோ, தி.மு.க. வையோ எப்போதும் சம்பந்தப் படுத்தியதில்லை. அதற்கான ஆதாரங்களும் என்னிடத்தில் இல்லை."
மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் அளித்த பேட்டியில், "ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றே கூறினார். மேலும் அவர் "விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தி, தி.மு.க. அரசை மத்தியில் இருந்த சந்திரசேகர் அரசு கவிழ்த்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்தது என்பதை மறந்துவிடக் கூடாது" என்றும் கூறினார்.
அப்போது ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தவரும் ஐக்கிய முன்னணியின் அமைப்பாளராகச் செயல்பட்டவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் என் இல்லத்தில் என்னை வந்து சந்தித்து, ஒரு மணி நேரத்திற்குமேல் உரையாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ராஜீவ் காந்தி படுகொலை நடைபெற்றபோது தி.மு. கழகம் ஆட்சியிலே இல்லை. குடியரசுத் தலைவர் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, ராஜீவ் காந்தி பத்து முறை தமிழகத்திற்கு வருகை தந்து விட்டு, ஒவ்வொரு முறையும் பத்திரமாகத் திரும்பிச் சென்றிருக்கின்றார்.
குடியரசுத் தலைவர் ஆட்சியிலே நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு அப்போது பதவியிலேயே இல்லாத கலைஞர் மீது குற்றம் சாட்டுவது என்ன நியாயம்?" என்று கேட்டதோடு - கலைஞர் ஜெயின் அறிக்கை என்ற பெயரில் வெளியிட்ட இந்தியா டுடே பத்திரிகையின் ஆசிரியர் பிரபு சௌலா அவர்களும் நீதிபதி ஜெயின் அவர்களும் இணைந்து நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தையும் செய்தியாளர்களிடம் காட்டி, "அதற்குமேல் அந்த அறிக்கை எவ்வாறு வெளிவந்தது என்பதைப் பற்றி நான் விளக்க விரும்பவில்லை" என்றும் கூறினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ்மென், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற மிகப் பிரம்மாண்டமான ஏடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுடன் தி.மு.க.விற்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட சந்தேகம் அறவே நீக்கப்பட்டுவிட்டதாக எழுதின. குறிப்பாக "பயனீர்" ஆங்கில ஏடு, "ராஜீவ் காந்தி கொலையில் கலைஞருக்கோ, தி.மு.க.வுக்கோ தொடர்பு எனக் காட்ட ஆதாரம் எதுவும் ஜெயின் கமிஷன் அறிக்கையில் இல்லை என்று மத்திய அமைச்சரவையிடம் அளிக்கப்பட்டுள்ள சட்ட வல்லுநர் கருத்தில் கூறப்பட்டுள்ளது!"
என்று 19.11.1997 அன்று எழுதியது. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், மராட்டிய மாநில ஆளுநராக இருந்தவருமான திரு.சி. சுப்பிரமணியம் அவர்கள் "ராஜீவ் காந்தி கொலையில் தி.மு.க.விற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை!" என்று திட்டவட்டமாகப் பேட்டியளித்தார். அகில இந்திய ஏடுகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையிலே கூறப்பட்டதற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தபோதும், தி.மு.
கழகத்தின் மீது வெறுப்பு கொண்ட அன்றைய ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள். மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடந்து கொண்டிருந்த கூட்டணி அமைச்சரவையிலிருந்து தி.மு. கழகத்தை நீக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தனர். டெசோ மாநாட்டிற்கு மறுநாளே படுகொலை செய்யப்பட்ட சிறீ சபாரத்தினம் 30.11.1997 அன்று "தீக்கதிர்" நாளேட்டில் அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் எழுதிய நீண்ட கட்டுரையில் "ஜெயின் கமிஷன் அறிக்கையில் எந்தவகையிலும் குற்றம் சாட்டப்படாத தி.மு.க.வை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கை நியாயமற்றது" என்பதற்கு ஆதரவாக பல்வேறு வாதங்களை எழுப்பியிருந்தார்.
ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்கள் மறைந்துள்ள இந்த நேரத்தில், 1997ஆம் ஆண்டு அவர் எழுதிய அந்தக் கட்டுரையின் சில வாக்கியங்களை இத்தொடரில் இணைப்பது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். விடுதலைப் புலிகளுக்கு தமிழக அரசின் சார்பில் 4 கோடி ரூபாய் நிதியளித்த எம்.ஜி. ஆருடன் பிரபாகரன்! "ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையில் உள்ள விஷயங்கள் என்ன என்பதை முறைப்படி ஆராயாமல், காங்கிரஸ் கட்சி தானாகவே ஒரு முடிவுக்கு வந்தது.
அந்த முடிவை மத்திய அரசின் மீதும் மக்கள் மீதும் திணித்தது. ஜெயின் கமிஷன் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தி.மு.க.வை அமைச்சரவையிலிருந்து விலக்கவேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். ராஜீவ் காந்தி கொலையில் தி.மு.க.வுக்கோ - அதன் தலைவர்களுக்கோ எந்த வகையிலும் தொடர்பிருப்பதற்கான கலைஞர் ஒரு அறிகுறியும் ஜெயின் கமிஷன் அறிக்கை இல்லை.
அறிக்கையில் எந்த வகையிலும் குற்றம் சாட்டப்படாத தி.மு.க.வைத் தண்டிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கோரியது." விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தி.மு.க.அரசைக் கவிழ்த்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்தது! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையே நாட்டு ஒற்றுமைக்கு இறையாண்மைக்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றியது. பிரதமர் குஜ்ரால் அவர்கள், "காங்கிரஸ் கோரிக்கையை ஏற்க இயலாது" என்று பேட்டியளித்தார்.
ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையில், தி.மு.க.வை மட்டுமல்ல - ஒட்டு மொத்த தமிழர்களையே குற்றஞ்சாட்டுவதைப் போலவும் எழுதியிருந்தார். ராஜீவ் காந்தி கொலையில் கலைஞரைப் பற்றியோ - தி.மு. கழகத்தைப் பற்றியோ - நான் சம்பந்தப்படுத்தவில்லை! ஆனாலும் ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 28.11.1997 அன்று காங்கிரஸ் விலக்கிக்கொண்டது. பிரதமர் குஜ்ரால், குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனைச் சந்தித்து, தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
அதனை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் மாற்று ஏற்பாடுகளைச் செய்யும்வரை பதவியில் நீடிக்கும்படி பிரதமர் குஜ்ராலை எதுவும் சரியாக வராத நிலையில், 3.12.1997 அன்று - இரவு பிரதமர் குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணியின் அமைச்சரவை செய்த பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் 11ஆவது மக்களவையைக் கலைத்து உத்தரவிட்டார். ராஜீவ் காந்தி கொலையில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை!
குடியரசுத் தலைவர் ஆட்சியிலே நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு. பதவியிலே இல்லாத கலைஞரைச் சம்பந்தப்படுத்துவது என்ன நியாயம்? அந்த உத்தரவு பற்றி "அரசியலில் ஒழுங்கும் கண்ணியமும் ஜனநாயக மாண்பும் கட்டிக் காக்கப்பட வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டவரும் - "ஆயாராம் காயாராம்" போன்ற குதிரை வியாபாரத்தின் மூலம் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்கிற முயற்சிகளுக்கு ஒரு துளியும் இடம் தராதவருமான நேர்மையாளர் ஒருவரைக் குடியரசுத் தலைவராகப் பெற்றுள்ள இந்திய நாட்டு மக்களும் - அவரது தேர்வுக்கு வாக்களித்த மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை ஆகியவற்றின் உறுப்பினர்களும் பெருமை கொள்ளத்தக்க முடிவாக இது அமைந்துள்ளது" என்று நான் கருத்து தெரிவித்தேன்.
எப்படியோ - கமிஷனின் இடைக்கால அறிக்கை என்ற பெயரால் தேவையில்லாமல் ஒன்றையளித்த
ு, அதன் காரணமாக சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த மத்திய ஆட்சியே கலைக்கப்படும் நிலைமைதான் ஏற்பட்டது. 11.12.1997 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்கள், "ராஜீவ் காந்தி கொலையில் தி.மு.க.வுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜெயின் கமிஷன் அறிக்கைப் பிரச்சினையில், தி.மு.க.வுக்கு எதிராக கலைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்படவில்லை!"
என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இவ்வாறு ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து மத்திய அரசைக் கவிழ்த்த போதிலும், 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிலே தி.மு.க.வைப் பற்றியோ, என்னைப் பற்றியோ எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் கிடையாது. இந்த உண்மையை உணர்ந்துள்ள காரணத்தினால் தான் அரசியல் வேறுபாடுகளுக்கிடையிலேயும், நேரு குடும்பத்தினருக்கும் எனக்குமுள்ள ஆழமான உறவும் நட்பும் ஒரு சிறிதும் மாறிவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான், கொள்கை மாறுபாடு வேறு, குடும்ப உறவு வேறு என்ற நிலையில் - இன்றைய அரசியல் சூழலில் அரசியலுக்கு அப்பாற்பட்ட பற்று பாசத்துடன் ஒரு தூய்மையான நட்பும் உறவும் திருமதி சோனியா காந்தி அவர்களிடம் என்னால் கண்டுணர்ந்திட முடிகிறது - நாட்டுக்கும் அது புரிகிறது - நாட்டின் முன்னேற்றத்திற்காக இப்போது நாங்கள் ஓரணியில் இருப்பதும் தேவையாகிறது!
