நெஞ்சுக்கு நீதி
அன்பும் கருணையும் · 325 / 391
13. அன்பும் கருணையும் திருவாரூர் தேரும் திருவள்ளுவர் கோட்டமும் தி ராவிட முன்னேற்றக் கழகம், கடவுள் பற்றியும், மூட நம்பிக்கைகள் பற்றியும் கொண்டுள்ள கருத்துக்களை ஆட்சிப் பொறுப்பிலே இருந்த காலத்தில் எல்லாம், அரசின் செயல்பாடுகளில் திணிக்க எந்தவித எந்தவித முயற்சியையும் எப்போதும் எடுத்ததில்லை என்பதை ஆத்திகப் பற்றும், நம்பிக்கையும் உள்ளவர்கள் நன்கறிவார்கள். ஆன்மிகவாதிகளையும். கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களையும் கொண்டு திருக்கோயில் ஆலோசனைக் குழுவினை ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அமைத்து, முறைப்படி அவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்திலே கூட்டி, கருத்துக்களை அறிந்து, அதன்படி செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
அந்த வகையில் 96ஆம் ஆண்டு கழகம் ஆட்சிக்கு வந்ததும். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் புலவர் செங்குட்டுவன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஏ.நம்பியார், குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், அருள்மிகு திருவண்ணாமலை ஆதின கர்த்தர், அருள்திரு திருப்பனந்தாள் மடாதிபதி, அருள்திரு மாதவாச்சாரி சுவாமிகள், அருள்திரு ஆண்டவன் ஆஸ்ரமம், திருவரங்கம், அருள்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், பேரூர் அருள்திரு தவத்திரு சுந்தர மூர்த்தி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனகர்த்தர், திருமதி சவுந்தரா கைலாசம், திருநெல்வேலி மேயர் திருமதி உமாமகேஸ்வரி, மதுரை கருமுத்து கண்ணன் மற்றும் அதிகாரிகளைக் கொண்டு திருக்கோயில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் முதல் கூட்டம் 4.3.1997 அன்று நடைபெற்றபோது, அதனைத் துவக்கி வைத்து நான் பேசும்போது, "இந்த அரசுக்கு தலைமை தாங்குகின்ற நானும், அமைச்சர்களும் பெரியார் அவர்களாலும், அண்ணா அவர்களாலும் வளர்க்கப்பட்டவர்கள். எனவே பெரியார் வழியிலும், அண்ணா வழியிலும் நான் தொடர்ந்து பாடுபடுகிறவன் என்பதை ஒளிவு மறைவில்லாமல் ஒப்புக் கொள்கிறவன். இருந்தாலும் அவரவர்களுக்குரிய கொள்கையிலே அவரவர்கள் ஈடுபடுவதில் இந்த அரசு என்றைக்கும் குறுக்கிடாது என்பதை நான் திட்டவட்டமாகச் சொல்வது மாத்திரமல்ல - செயல்முறையிலே இந்த அரசு கடைப்பிடித்தும் வருகிறது."
"கடந்த காலத்தில் கழக அரசு அண்ணா அவர்கள் தலைமையிலே தொடங்கி, பிறகு நான் பொறுப்பேற்றவுடன், நான் செய்த முதல் காரியம், திருவாரூரில் பல ஆண்டு காலமாக "கோயில் கூடாது என்பதல்ல - கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது" என்பதுதான் என் கருத்து! ஓடாமல் இருந்த தேரை பக்தர்கள் பலர் வைத்த வேண்டுகோளுக்கிணங்க, ஓட வைத்தேன். அந்தத் தேரின் வடிவிலேயே சென்னையில் வள்ளுவருக்குக் கோட்டமும் அமைத்தேன் - அதுமட்டுமின்றி, சென்னையிலே கபாலி கோயில் திருக்கோயில் திருப்பணியைச் செய்தது மாத்திரமல்லாமல், கபாலி கோயில் திருக்குளத்தைத் தூர் வாரிச் சுத்தப்படுத்தியதும் - அதன் தொடர்பாக பல கலைஞர் குடமுழுக்குகள் - பல கோயில் விழாக்கள் நடைபெற உதவி செய்ததும் இந்த அரசுதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்."
"இப்போதுகூட திருவண்ணாமலையில் எரிந்து விட்ட ஆலயத்தின் ஒரு பகுதியைச் சீரமைக்க பல இலட்சம் ரூபாய் இந்த அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நான் ஒரு படத்திலே எழுதியதைப் போல - "கோயில் கூடாது என்பதல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது - என்பது தான் என்னுடைய கருத்து. இந்த அரசின் கருத்து. அந்த விழாவில் ஆலயங்கள் நிர்வகிக்கப்பட அறவழியில் மக்களைப் பயிற்றுவிக்க ஆலயங்கள் பயன்பட நாம் நம்முடைய ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டேன்.
பின்னர் அந்தக் குழுக்கூட்டத்தில் திருக்கோயில் நிலங்கள், காலி மனைகள் மற்றும் கட்டிடங்களின் பாதுகாப்பு - அதன் மூலம் திருக்கோயில் வருவாயைப் பெருக்குதல் - திருக்கோயில் கலைச் சிறப்பு - நித்தியபடி பூஜைகள் - திருவிழாக்கள் முதலியவற்றை ஒலி, ஒளி நாடாக்கள் தயாரித்தல் - திருமுறை ஓதுவார்கள், அர்ச்சகர்கள், நாதசுர இசைக் கலைஞர்கள் ஆகியோருக்குப் புத்தொளி பயிற்சி அளித்தல் - ஒரு கால பூஜைத் திட்டம் - திருக்கோயில் நகைகள் மற்றும் சிலைகள் பாதுகாப்பு ஆகிய பொருட்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு - தகுந்த ஆலோசனைகளைக் குழுவின் உறுப்பினர்கள் வழங்கினார்கள். இந்தக் கூட்டம் நடைபெற்ற அதே மாதத்தில், தி.மு.கழக அமைச்சரவையிலே இருந்த ஓர் அமைச்சரும், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் பெரியார் மாவட்டம், சத்திய மங்கலம் அருகேயுள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் தீ மிதித்தலில் பங்கேற்றனர் என்ற செய்தி எனக்குக் கிடைத்த போது, அதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கவும் நான் தவறவில்லை.
"பெரியார், அண்ணா வழி என்று வாயளவில் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது - செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று எண்ணுகிறவர்கள்தான் நாம். ஆனால், இன்றைக்குப் பெரியார் வழியையும், அண்ணா வழியையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சில பேர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்திலேயே மூகாம்பிகையிலே தொடங்கி - பிறகு ஜெயலலிதா ஆட்சி நீடிக்க வேண்டுமே என்பதற்காக. அவருடைய அமைச்சர்கள் எல்லாம் தீ மிதித்து - வேப்ப இலைச்சேலைகளைக் கட்டிக் கொண்டு - மண் சோறு சாப்பிட்டு - அங்கப் பிரதட்சணம் செய்து - இத்தனை அலங்கோலமாக காட்டு மிராண்டித்தனமான காரியங்களை எல்லாம் செய்து - ஜெயலலிதா ஆட்சியை வாழ வைக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அது வாழ்ந்ததா, இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைக்குக்கூட காலையிலே ஒரு பத்திரிகையிலே என்னுடைய தலைமையிலே இருக்கிற ஒரு அமைச்சரே கூட தீ மிதித்தார் என்று கேள்விப்பட்டு, அவரிடம் கேட்டபோது, "ஆட்சி நீடிக்க வேண்மென்பதற்காக தீ மிதித்தேன்" என்று சொல்லியிருக்கிறார்.
கருணாநிதி ஆட்சி எத்தனை நாள் நீடித்தது என்பது எனக்குள்ள கவலை அல்ல - எத்தனை நாள் பகுத்தறிவோடு ஆட்சி இருந்தது என்பதுதான் என்னுடைய கவலை. இப்படிப்பட்ட அமைச்சர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இப்படிப் பட்ட அமைச்சர்களுக்கு என்னுடைய அமைச்சரவையிலே இடம் இல்லை."
சென்னை கிருஷ்ணா நதிநீர் திட்டத்திற்கான 200 கோடி ரூபாய் செலவை ஏற்றார் சத்ய சாய்பாபா! "சில பேருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. பெரியார் கடவுளே இல்லை என்று சொல்பவர்; கடவுள் உண்டா இல்லையா என்ற இந்த இரண்டு கருத்துக்களுக்கிடையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னார், "உண்டென்பார் சிலர், இல்லை என்பார் சிலர், எனக்கில்லை கடவுள் கலைஞர் கவலை," என்று.
என்னைப் பொறுத்தவரை நான் பெரியார் வழியில் வந்த நாத்திகன்தான். இன்றைக்கும் நாத்திகன்தான். ஆனால், அந்தக் கொள்கையை இன்னொருவருடைய உள்ளத்திலே திணிக்க வேண்டுமென்று எண்ணுகிற நாத்திகனல்லன். ஜவகர்லால் நேரு - வீரன் பகத்சிங் ஆகியோர் நாத்திகர்கள். இப்படிப் பல பேர் இருக்கிறார்கள். நாத்திகக் கருத்தை மற்றொருவர்மீது திணிப்பது தவறு என்ற எண்ணம் உடையவன் நான்."
"பக்தி உள்ளவர்கள் இருக்கலாம். அவர்கள் தி.மு.க.விலே கூட இருக்கலாம். பகுத்தறிவு இயக்கம் என்பது வேறு. தி.மு.க. என்ற அரசியல் இயக்கம் வேறு. நான் தி.மு.க.விலே இருக்கிற பகுத்தறிவுவாதி. என்னைப் போன்றவர்கள் சில பேர் தி.மு.க.வில் இருக்கின்ற பகுத்தறிவுவாதிகள். தி.மு.கழகத்திலே கடவுள் நம்பிக்கை - பக்தி உள்ளவர்கள் சில பேர் இருக்கலாம். ஆனால், அதற்காக மூட நம்பிக்கைச் செயல்களை நான் அனுமதிக்க மாட்டேன்."
-என்று விரிவாகவும், விளக்கமாகவும் உரையாற்றினேன். ஏன், கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நான் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதைப் பற்றியும், சத்ய சாய்பாபா அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வந்தது பற்றியும் பலர் விமர்சனம் செய்தார்கள். சத்ய சாய்பாபா அவர்கள் பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வருகை தந்தார். அவர் சென்னைக்கு வருவதையொட்டி, அவருடைய பக்தர்கள் பெருமளவிற்கு வரவேற்பு ஏற்பாடுகளையெல்லாம் செய்திருந்தனர்.
சென்னைக்கு தட்டுப் பாடின்றி கிருஷ்ணா தண்ணீர் கிடைக்க ஆந்திர மாநிலம் கண்டலேறுவிலிருந்து பூண்டிவரை கால்வாய் அமைத்துத் தருவதாக சாய்பாபா ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, 150 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைப்பதற்கு ஆகும் 200 கோடி ரூபாய் செலவுத்தொகையை சாய்பாபா அவர்களே ஏற்றுக்கொண்டார். எனது இல்லத்தில் சாய்பாபா 21.1.2007 அன்று, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், சென்னை வாழ் மக்களுக்கு கிருஷ்ணா நதி நீர் கிடைக்கப் பெரிதும் உதவிகரமாக இருந்த அருள்மிகு சத்ய சாய்பாபா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடைபெற்ற விழாவில், நான் கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்தேன்.
20ஆம் தேதி மாலையில் சாய்பாபா அவர்கள் என்னுடைய இல்லத்திற்கே வருவதாகக் கூறி, அதன்படி வருகை தந்தார். நான் எழுதிய 'குறளோவியம்' மற்றும் 'தாய் காவியம்' ஆகியவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலை அவருக்கு வழங்கினேன். சுமார் ஒரு மணி நேரம் என்னுடன் அமர்ந்து பல்வேறு பொருட்கள் குறித்து சாய்பாபா அவர்கள் பேசிக் கொண்டிருந்தார். அதற்கடுத்த நாள் 21ஆம் தேதி காலையில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான பாராட்டு விழாவில், நானும் சாய்பாபா அவர்களும் கலந்து கொண்டோம்.
அதாவது ஆதரவாளர்கள் மேடைக்கு எதிரே ஆங்கிலத்திலே "service to Man is Service to God" என்று எழுதி வைத்திருந்தார்கள். அதையே நான் அவர்களிடம் சுட்டிக்காட்டி, "அந்தப் பொன் மொழிக்கு மதிப்பளிக்கின்றவன்தான்!" என்று குறிப்பிட்டேன். கலைஞர் சாய்பாபா செய்வது "ஆண்டவன் பணி!"
என்றால், நான்செய்வது "ஆளுகின்றவன் பணி" என்றேன் நான் மேலும் பேசும்போது, "பல பேருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும், என்ன இந்த இரண்டு பேரும் ஒரு விழாவிலே கலந்து கொள்கிறார்கள் என்று! இது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, காவேரியும், கொள்ளிடமும் ஒன்றாகப் போகிறதே, அது எப்படி ஆச்சரியத்திற்குரியதில்லையோ, அதுபோல், 'காவேரி' என்று பெயர் தனியாக இருக்கலாம், மற்றொன்றுக்கு 'கொள்ளிடம்' என்று பெயர் தனியாக இருக்கலாம், ஆனால் இரண்டிலும் ஓடுவது தண்ணீர்தான்!
அந்த இரண்டு தண்ணீரும் பாய்வது கழனிக்குத்தான் - அந்தக் கழனியிலே விளைவது கதிர்தான் - அந்தக் கதிரிலே கிடைப்பது நெல்தான் - அந்த நெல்லுக்குள் இருப்பது அரிசிதான் - அந்த அரிசிதான் எல்லோருக்குமே உணவு! அதைப்போலத்தான் காவேரியும், கொள்ளிடமும்போல இங்கே நாங்கள் இருவரும் அமர்ந்திருக்கிறோம்" என்று தெரிவித்தேன்.
சென்னை சிட்டிசன் கான்கிளேவ் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற அந்த விழாவில், தமிழகம், மராட்டியம். கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் முதலமைச்சர்கள், தமிழக ஆளுநர் மற்றும் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய தொழிலதிபர் வேணு சீனிவாசன் அவர்கள், சாய்பாபா இலவசமாக ஏராளமானவர்களுக்கு உதவிகளைச் செய்து வருவதைப் பற்றியெல்லாம் விவரித்தார். அதுபற்றி என் பேச்சில் குறிப்பிட்டு, தமிழக அரசும் அவ்வாறுதான் இலவசமாக ஏராளமான உதவிகளைச் செய்து உண்மை ஒன்றே தெய்வம்!
வருகிறது என்பதை ஒப்பிட்டுக்காட்டி, "சாய்பாபா அந்தப்பணிகளை 'ஆண்டவன் பணி' என்று கருதி நிறைவேற்றுகிறார். ஆனால், நானோ அவைகளை 'ஆளுகின்றவன் பணி' என்று கருதி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்!" என்று சொன்னேன். ★ ★ ★ நான் மேலே மஞ்சள் சால்வை அணிவது பற்றி, அது ஏதோ தெய்வீக மகத்துவத்திற்காக அணிந்து கொள்வதாகப் பலரால் பிரச்சாரம் செய்யப் பட்டது உண்டு. அதற்கு பல முறை நான் பதிலும் சொல்லியிருக்கிறேன். 1994-95ஆம் ஆண்டில் ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக்கொண்டிருந்தபோது, என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகத் தொடங்கியது.
நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். வலது கன்னத்தில் உமிழ்நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு, அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது. வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள், என்னை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.
அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. அப்போது டாக்டர்களுக்குள் ஒரு சிறிய பிரச்சினை. அறுவை சிகிச்சையால் எதிர் விளைவுகள் ஏதும் ஏற்படுமோ என்ற சந்தேகம் - விவாதம் தொடர்ந்து கலைஞர் உண்டென்பார் சிலர் - இல்லையென்பார் சிலர் - எனக்கில்லை கடவுள் கவலை! கொண்டிருந்தபோதே, வலது கன்ன வீக்கமும், சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. அதையும் விவாதமாக்கி, அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று மருத்துவர்கள் முடிவுக்கு வந்து, சில நாட்களில் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டு மென்று கூறி, என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
அதற்குள்ளாகவே மலர் மருத்துவமனை வாசலில் பெருங் கூட்டம்! தொடர்ந்து தொலைபேசி விசாரிப்புகள்! பத்திரிகையாளர்கள் படையெடுப்பு! அந்த நேரத்தில்தான் கழுத்துப்பகுதியும், முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும், அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாக கம்பளிச் சால்வையை கழுத்தின் மேல் பட்டுக் கொண்டிருக்கும் படியாக அணிவது நல்லது என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்க, அதனையேற்றுத்தான் நானும் சால்வை கொண்டு வரச்சொன்னபோது, அது மஞ்சள் சால்வையாக அமைந்து, அதைப் பார்த்த வீட்டாரும் நண்பர்களும் அந்த நிறம் அழகாகவும் எடுப்பாகவும் இருப்பதாகவும் கூறவே, அது முதல் அந்த நிறச் சால்வையைத் தொடர்ந்து அணிந்து வருகிறேன்.
ஆனாலும் சிலர் அதற்கு மூக்கு, காது எல்லாம் வைத்து, ஏதோ தெய்வீக மகத்துவத்திற்காக அதனை அணிந்து வருவதாகப் பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில், அதனைப் படித்து நான் எனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டு போய் விடுகிறேன். பதவியில் நிலைக்க வேண்டுமென்பதற்காகத் தான் நான் மஞ்சள் சால்வையை அணிவதாகவும் ஒரு பிரச்சாரம். 1957ஆம் ஆண்டிலும், 1962ஆம் ஆண்டிலும் நான் தேர்தலில் நின்று வெற்றி பெற்றபோது, நான் அணிந்திருந்தது ஒளியும் - தெளிவும் உள்ளவன் எவனோ அவன்தான் மஞ்சளாடை அணியலாம்!
வெள்ளை நிறத்துண்டுதான்! 1967இல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதும், 1969இல் முதலமைச்சராக ஆனபோதும், 1971இல் தேர்தலில் நின்று வெற்றி பெற்றபோதும் நான் அணிந்திருந்தது வெள்ளை நிறத்துண்டு தான்! 1994ஆம் ஆண்டுதான் மஞ்சள் சால்வை அணியத் தொடங்கினேன். அது இன்றளவும் தொடருகிறது. புத்த மதத்தினர் - குறிப்பாக புத்தர் மஞ்சள் ஆடை அணிந்தார் என்பதைப் பற்றியும் - ஓஷோ அவர்கள் எழுதிய "தம்மபதம்" என்ற நூலிலே உள்ள விவரத்தைப் பற்றியும் - நான் ஏற்கனவே
பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறேன். மஞ்சளாடை பற்றி புத்தர் என்ன சொல்கிறாரோ அதையே நானும் சொல்ல விரும்புகிறேன். "சேறு படிந்த சிந்தனைகளும் ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சளாடை அணிவது பொருந்துமா? தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையானவன் எவனோ அவனே மஞ்சளாடை அணியலாம்."
இதைத் தவிர, இந்த மஞ்சள் சால்வைக்கு வேறெந்த மூட நம்பிக்கைக் காரணமும் இல்லை என்பதை குறை தேடி அலையும் குட்டை மனம் படைத்தோர் தவிர்த்து, அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர். கலைஞர் சாய்பாபா என்னைச் சந்தித்தபோது, "இந்த மஞ்சள் துண்டை பல ஆண்டுகளாக அணிந்திருக்கிறீர்கள். யார் யாரோ என்னென்னவோ சொல்லியும் கவலைப்படாமல் அணிந்திருக்கிறீர்களே?"
என்று கேட்ட நேரத்தில், "புத்தருடைய அங்கவஸ்திரமே மஞ்சள் துண்டுதான்!" என்று நான் பதில் சொன்னபோது, அவர் சிரித்துக்கொண்டார். சென்னையில் சாய்பாபா அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவினைப் போலவேதான், அதே மாதத்தில், 31.1.2007 அன்று நாகப்பட்டினத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதா அமிர்தானந்தமயி அவர்கள் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் திறப்பு விழா நடைபெற்றபோது - அந்த அம்மையாரின் அழைப்பின் பேரில் மாதா அமிர்தானந்தமயி அவர்களும், நானும் அந்த விழாவிலே கலந்துகொண்டோம்.
ஏடுகளிலே அந்தச் செய்தி பரபரப்பாக வெளியிடப்பட்டது. அதைப்பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அந்த விழாவிலே கலந்து கொண்டு, ஏழைகளுக்காகக் கட்டப்பட்ட அந்த இல்லங்களையெல்லாம் திறந்து வைத்ததோடு, அவைகள் கட்டப்பட உதவிய மாதா அமர்தானந்தமயி அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன். கழகத்தின் கடவுள் கொள்கை பற்றி குறிப்பிடுகின்ற இந்த நேரத்தில், அண்மையில் 16.2.2008 அன்று, வேலூரில் அமைந்துள்ள நாராயணி பீடம் சார்பில், ஏழை எளிய 320 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தினைத் தொடங்கிவைத்த விழாவில், அதைப்பற்றி சற்று விரிவாகவே எடுத்துக்கூறினேன்.
அதன் சுருக்கம் வருமாறு:- "அன்பு, கருணை என்ற இந்த இரண்டு அருமையான சொற்களுக்கு விடை கண்டு, அவற்றின் வேறுபாடு என்ன என்பதைப் புரிந்துகொண்டு, செயல்படுகின்ற இடங்களிலே ஒன்றாக இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. அன்பு என்பது நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு, மாதா அமிர்தானந்தமயி கட்டிக்கொடுத்த வீடுகளைத் திறந்து வைத்தேன் நான்! ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது - நான் அன்பு காட்டினால், அதைப்போல அன்பு காட்டப்படுகின்றவர் என்னிடம் அன்பு காட்டினால் அவ்விடம் பரிமாறிக்கொள்ளப்படுகின்ற ஒன்றாக ஆகிவிடுகிறது.
கருணை என்பது ஒருவர் கொடுப்பது - அவர் திரும்பப்பெறுவதில்லை. திரும்பத்தராத நிலையில் ஒருவர் பெற்றுக்கொள்வது - அது கருணை. "எனக்கும் இந்த பீடத்தினுடைய அதிபருக்குமிடையில் இருப்பது அன்பு. நான் அவரிடத்திலே அன்பு காட்டுகிறேன். அவரும் என்னிடத்திலே அன்பு காட்டுகிறார். நான் அன்பு காட்டுவதற்குக் காரணம், அவர் ஏழை, எளிய, நலிந்த மக்களிடத்திலே கருணை காட்டுகிறார். ஆகையால், நான் அவரிடத்திலே அன்பு காட்டுகிறேன்.
இப்போது, அன்புக்கும், கருணைக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரிந்திருக்கும். "இங்கே பேசிய சில சொற்பொழிவாளர்களும், பீடத்தின் அதிபரும், ஆன்மிகம் - அறிவு என்ற இரண்டையும் இணைத்துப் பேசினார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகம், அறிவு இரண்டும் இரட்டைக் குழந்தைகள். அதிலே எந்தவிதமான வேறுபாடும் இல்லை. இரட்டைக் குழந்தைகளைத் தவிர, ஒட்டிப்பிறந்த குழந்தைகள் இல்லை - தனித்தனியான குழந்தைகள் - ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்!
கலைஞர் ஒன்று ஆன்மிகம், ஒன்று அறிவியக்கம். ஆன்மிகத் துறை, அறிவியக்கத் துறை என்ற இரண்டு துறைகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்." "ஆனால், அதே நேரத்தில், ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், ஒன்றுமே செயல்பட முடியாமல் போய் விடும். ஏதாவது செயல்பட வேண்டுமேயானால், இரண்டும் தனித் தனியாக இருந்தால்தான் செயல்பட முடியும். அதனால்தான் சென்னையிலே அண்ணா அறிவாலயம் இருக்கிறது - வேலூரில் இந்த பொற்கோயில் இருக்கிறது என்கின்ற முறையில் இரண்டும் தனித்தனியாக இருந்து மக்களுக்கு - ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்கின்றன."
"நாராயணி பீடத்திற்குக் கருணாநிதி வருகிறானே என்று சிலபேர் அதிர்ச்சி அடைவார்கள் என்றெல்லாம் அடிகளார் சொன்னார். நாராயணி என்பதாலேயே - நான் நாராயணியின் உருவத்திலே இருக்கின்ற கடவுளை ஏற்றுக்கொண்டேன் என்பதல்ல. பல மடாதிபதிகள், பண்டார சன்னதிகள், துறவிகள் எல்லாம் கலந்து கொண்ட ஒரு மாநாடு சென்னை கற்பகாம்பாள் மண்டபத்தில், 1970 ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்றது. அப்போது அங்கே பேசிய ஒரு மடாதிபதி, "முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ!"
என்று சொன்னார்." அதைப்பற்றி பிறகு நான் பேசும் போது, "கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறானா என்பதல்ல பிரச்சினை. கடவுள் கருணாநிதியை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு அவன் கடமை ஆற்றுகிறானா என்பதுதான் பிரச்சினை. நாம் நல்ல உள்ளத்தோடு நம்முடைய காரியங்களைச் செய்தால், அதுதான் கடவுள்!"
"உண்மை ஒன்றே தெய்வம்" என்று பாரதி பாடினார். ராமலிங்க அடிகளும் அதைத்தான் சொன்னார் "அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங் கருணை" என்று பொழிந்த 320 ஏழைக்குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேலூர் நாராயணி பீடம் வடலூர் வள்ளலார், "அறிவு ஒளியைத்தான், உண்மை ஒளியைத்தான் தெய்வம்" என்றார்."
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே, சுத்தி வந்து மொணமொண வென்று சொல்லும் மந்திரம் ஏதடா! நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்" என்றார் சிவவாக்கியர். அவரை சிலர் சித்தர் என்கிறார்கள் - ஆனால் அதை நாங்கள் எடுத்துச்சொன்னால், எங்களைப் பித்தர் என்கிறார்கள்."
"ஆன்மிகமும், அறிவாயுதமும் இரண்டும், ஒன்றுதான் என்கிறபோது - எப்போது இரண்டும் ஒன்று என்றால், ஒரு குறிக்கோளை நிறைவேற்றினால் - இரண்டையும் ஒரே மாதிரியாக நிறைவேற்றும்போது, இரண்டும் ஒன்றுதான். இதை வேறாக நிறைவேற்றி, அதை வேறாக நிறைவேற்றி, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால், அப்போது இரண்டும் ஒன்றில்லை. அதனால்தான் சொல்கிறேன். அன்பு, பரிமாறிக்கொள்ளக்கூடியது. கருணை ஒருவர் கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்ளக் கூடியது.
அன்புக்கும், கருணைக்கும் வேறுபாடு தெரிந்து நடைபெறுவது தான் இந்த அருமையான ஆலயம்" என்று குறிப்பிட்டேன். ★ ★ ★ பேரறிஞர் அண்ணா அவர்களின் 88ஆவது பிறந்த நாளினை, 96ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாளன்று சென்னையில் விமரிசையாகக் கொண்டாடினோம். கலைஞர் எப்போதும்போல அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும், வள்ளுவர் கோட்டத்தின் அருகேயுள்ள அண்ணா சிலைக்கும் நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும், துணைப் பொதுச் செயலாளராக இருந்த நாஞ்சிலாரும் மற்றும் கழக முன்னணியினரும் மாலை அணிவித்து வணங்கினோம்.
வள்ளுவர் கோட்டத்தின் முன்னால், கழகத்தொண்டரணியினரின் அணிவகுப்பு மரியாதையையும், மகளிர் தொண்டரணியினரின் அணிவகுப்பு மரியாதையையும், தனி மேடையில் இருந்தவாறு நான் ஏற்றுக்கொண்டேன். அண்ணா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, 15ஆம் தேதி காலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் பட்டிமன்றம் தொடங்கியது. தென்சென்னை, வடசென்னை மாவட்டக்கழக இளைஞரணி அமைப்பாளராக இருந்த மா. சுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார்.
பட்டிமன்றத்தை இளைஞர் அணிச் செயலாளர், தம்பி மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்து உரையாற்றினார். "பேரறிஞர் அண்ணாவிடம் விஞ்சியிருப்பது "அரசியல் விவேகமா? மனித நேயமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அமைச்சர் துரைமுருகன் நடுவர் பொறுப்பேற்றார். "அரசியல் விவேகமே" என்ற என்ற தலைப்பில் தம்பிகள் இரா. வெற்றி கொண்டானும், கோ.வி. செழியனும் வாதிட -"மனித நேயமே" என்ற தலைப்பில் தம்பிகள் புலவர் ஆடலரசு , நெல்லிக்குப்பம் புகழேந்தி ஆகியோர் வாதிட்டனர், "அண்ணாவிடம் மனித நேயமும் இருந்தது.
ஆனால், அதையும் விஞ்சியிருப்பது அரசியல் விவேகம் தான்" - என்று பல்வேறு ஆதாரங்களை எடுத்துக்கூறி தீர்ப்பளித்தார். அந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் விழாவினையொட்டி, நடிகர் திரு. விஜயகாந்த் அவர்கள் முரசொலியில், "தமிழால் வளர்ந்தவர் - தமிழையும் வளர்த்தவர்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினைத் தீட்டியிருந்தார். அந்தக்கட்டுரையில் சில பகுதிகள் நினைவிலே வைக்கத்தக்கவை அவை:- "ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தி.மு.க.
நடத்துவது உணர்ச்சிப் பெருவிழா! நான் மதுரையிலே இருந்தபோது அங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழாவைப் பார்த்து பிரமித்திருக்கிறேன் - அது பக்தர்கள் கடவுள் மேல் வைத்திருக்கும் பக்தி! நடிப்பதற்காக சென்னை வந்தபிறகு தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவினைப் பார்த்து பிரமித்திருக்கிறேன் - இது தொண்டர்கள் கழகத்தின் மேல் வைத்திருக்கும் பக்தி!"
"பெரியார் - அண்ணா - தி.மு.க. மூன்றையுமே கலைஞர் உருவில் பார்த்துக் கொண்டிருக்கும் தொண்டர்களின் உற்சாகம்! மூன்றையுமே கலைஞர் உருவில் ஏற்றுக் கொண்டிருக்கும் தமிழ் உணர்வு கொண்டவர்களின் உற்சாகம்! எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் - எத்தனை சோதனைகள் வந்தாலும் - எவராலும், எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத இயக்கம் தி.மு.க. என்ற லட்சிய வெறி கொண்டவர்களின் உற்சாகம்! இவைகளின் சங்கமம்தான் முப்பெரும்விழா.
வாழ்வு வந்த போதும், தாழ்வு வந்த போதும், வளர்த்து விட்டவர்களை மறக்காத இயக்கமும், மறக்காத தலைவனும் இந்த உலகத்தில் உண்டு என்றால், அது தி.மு.கவும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும்தான்!" "அவர் எந்தச் சூழ்நிலையிலும் பெரியாரை மறந்ததில்லை - எந்தச் சூழ்நிலையிலும் அண்ணாவை மறந்ததில்லை - எந்தச் சூழ்நிலையிலும் தொண்டர்களை மறந்ததில்லை!"
"கலைஞர் அவர்களை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்த காலத்திலும் சரி, பக்கத்தில் இருந்து நேசித்துக் கொண்டிருக்கும் காலத்திலும் சரி, எனக்குத் தோன்றுவதெல்லாம் "தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா" என்று உணர்வினை வளர்த்துக்கொண்டிருக்கும் கலைஞர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நானும் கழக முன்னணியினரும்!
இயக்கமாக - வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெருமைகளைக் கட்டிக் காத்துக்கொண்டிருக்கும் இயக்கமாக இன்பத்திலும், துன்பத்திலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக ஆறுதலாக அரவணைத்துச் செல்லும் இயக்கமாக தி.மு.க. இருந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்களிடம் இருந்து தி.மு.க.வையும், தி.மு.க.விடமிருந்து மக்களையும் பிரிக்க முடியவில்லை. நிரந்தரமாக ஆட்சியில் இருந்து இறக்கவும் முடிவதில்லை. மீண்டும், மீண்டும் விசுவரூபம் எடுக்கும் அதிசயம் தமிழகத்தில் மட்டும்தான் - அதை சாதித்துக் காட்டியது தி.மு.க.
மட்டும்தான்!" "நடந்து முடிந்த தேர்தலை மிகவும் சிறப்பாகவும், நேர்மையாகவும் நடத்திக் காட்டியதாக உலகமே பாராட்டிக்கொண்டிருக்கும் தேர்தல் கமிஷனர் சேஷன் அவர்களே, இன்று தி.மு.கவை பாராட்டிக்கொண்டிருக்கிறார், கட்டுக்கோப்பான கட்சி - கணக்குகளை ஒழுங்காக வைத்திருக்கும் கட்சி என்று! அந்த ஒட்டுமொத்தப் பெருமையும், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைத்தான் சாரும். அவர் தமிழால் வளர்ந்தவர் - தமிழையும் வளர்த்தவர்!
தொண்டர்களால் வளர்ந்தவர்! தொண்டர்களையும் வளர்த்தவர்! மன உறுதியும், தளராத விடா முயற்சியும் அவரை நிகரில்லாத் தலைவராக ஆக்கி வைத்திருக்கிறது. இந்த இயக்கத்தில் உள்ளவர்களும் சரி - என்னைப் போல் அவரது இதயத்தில் உள்ளவர்களும் சரி - எங்கள் இல்லத்தில் நடைபெறும் விழாக்களைவிட பெரிதும் நேசிக்கும் விழா முப்பெரும் விழா! அந்த விழா சிறக்க வாழ்த்துகிறேன்!"
"உலகத்தில் எத்தனையோ பேர் 37 வயதில் பிரதமராகி இருக்கும்போது, 44வயதில் ஸ்டாலின் மேயராவதில் என்ன தவறு?" என்றார், பேராசிரியர்! -இவ்வாறு தம்பி விஜயகாந்த் அந்த ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவிற்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அதற்குப் பிறகு கால ஓட்டத்தின் சுழற்சியில், அவர் என்னைப்பற்றி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒன்றிரண்டு கருத்துக்களைக் கூறியிருக்கலாம். ஆனால், அந்த வார்த்தைகள் எல்லாம் என் நினைவில் இல்லை.
நினைவில் நிற்கும் வார்த்தைகளைத்தான் இந்தத் தொகுப்பிலே சுட்டிக்காட்டியிருக்கிறேன். அண்ணா அவர்களின் 88ஆவது பிறந்த நாளினையொட்டி, பத்தாண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவ்வாறே மொத்தம் 419 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டு - கைதிகள் தண்டனை அனுபவித்த காலம் - அவர்கள் நடவடிக்கை - ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
15ஆம் தேதி மாலையில், அண்ணா அவர்களின் புகழ் பாடும் கவியரங்கம், அப்போது தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த தமிழ்க் குடிமகன் தலைமையிலே நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியை அரசு மணிமேகலை, கவிச்சுடர் கவிதைப்பித்தன், கவிஞர் ஜவஹர்லால் ஆகியோர் கவியரங்கில் கலந்து கொண்டனர். கவியரங்கம் முடிந்த பிறகு, பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் அந்த ஆண்டிற்கான பெரியார் விருதை விருதாசலம் எம்.
செல்வராசுவிற்கும், அண்ணா விருதினை மதுரை சொ. காவேரி மணியத்திற்கும், கலைஞர் கலைஞர் விருதினை போலீஸ் வெ.கண்ணனுக்கும் வழங்கி உரையாற்றினேன். அந்த விழாவில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் அவர்கள், அப்போது மாநகராட்சி மன்றத் தேர்தலில் மேயர் பதவிக்காகப் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் பற்றி எதிர்க்கட்சியினர் "குடும்ப அரசியல்" என்று குறைக்கூறிப் பேசியதற்குப் பதிலளித்தார்.
குறிப்பாக குடும்பத்துக்காக அரசியல் நடத்துவோர் பலருண்டு ஆனால் குடும்பத்துக்காக ஒரு நாளில் ஒரு மணி நேரம் செலவிட்டு, நாட்டுக்காக 12 மணி நேரமும் உழைப்பவர் என்று என்னைப் பாராட்டியதோடு "ஸ்டாலின் தேர்தலில் நிற்பதை இன்றைக்கு குடும்ப அரசியல் என்கிறார்கள். ஸ்டாலின் என்ன பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற பையனா? இல்லை, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாரா? ஏறத்தாழ 44 வயது அவருக்கு. (1996இல்) உலகத்திலே எத்தனையோ நாடுகளில் 37 வயதில் பிரதமர் ஆகியிருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி பிரதமராக வந்தாரே, என்ன 69 வயதில் வந்தாரா? அவர் அரசியல் பாரம்பரியத்தில், இந்திரா காந்தியின் மகன் இல்லை என்று யாராவது சொல்லத்தயாரா?" "ஸ்டாலினுக்கு அரசியல் பின்னணி உண்டு. மாணவராக இருந்த காலத்திலே இருந்து தொடர்ந்து இந்த இயக்கத்தில், இளைஞராகவோ - இளைஞரணியின் அமைப்பாளராகவோ - கட்சியின் பேச்சாளராகவோ - கட்சி போராடுகிற போத
ு சிறைக்குச் செல்பவராகவோ - திருமணமாகி இரண்டு மாதத்திற்கெல்லாம் மிசாக் கைதியாக இழுத்துச் செல்லப்பட்வராகவோ - கலைஞருடைய வரலாற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஸ்டாலினுக்கு என்று ஒரு வரலாறு உண்டு! கலைஞருடைய மகன் என்பதற்காக தூக்கிவைத்தால் அது தவறு. அவருக்குள்ள தகுதியை நாங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாதா? தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாதா? செட்டிநாடு அரசர் முத்தையா அவர்கள் சென்னை மாநகராட்சி மன்றத்தினுடைய மேயராக இருந்தபோது அவருக்கு என்ன வயது?
இளைஞராக இருந்தபோதுதான் அவர் மேயராக முப்பெரும் விழாவில் மகளிர் தொண்டரணியின் அணிவகுப்பு! வந்தார். ராமசாமி முதலியார் போன்றவர்கள் மேயரான போது என்ன வயது? மேயர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயராக ஸ்டாலினைப் பார்க்கிறபோது அவருடைய சொந்தத் தகுதியினால் மேயராக இருக்கிறார் என்பதை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் ஏன் அரசியல் ஆக்குகிறார்கள்? இதன் நோக்கம் என்ன? கலைஞருடைய செல்வாக்கு வளருகிறது, அதை நாங்கள் எப்படி பொறுத்துக்கொள்வோம் என்பது தான் அவர்கள் வேதனை.
நீங்கள் பொறுத்துக்கொள்கிறீர்களோ இல்லையோ, உங்களுடைய தலையெழுத்து அது!" என்று கர்ச்சித்தார். முப்பெரும் விழாவின் மற்றொரு சிறப்பாக, செப்டம்பர் 17ஆம் தேதியன்று, தந்தை பெரியாரின் 118ஆவது பிறந்த நாளினையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு நானும், பேராசிரியர் உள்ளிட்ட அமைச்சர்களும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நேராகத் தலைமைச் செயலகத்திற்கு காலை 8.45 மணிக்கே சென்று விட்டேன்.
அப்போது 'லிப்ட் ஆப்பரேட்டர்' கூட வேலைக்கு வரவில்லை. அதைப்பற்றி, "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளேடு பலர் வருவதற்கு மிகவும் முன்கூட்டியே நான் அலுவலகத்திற்கு வந்து, பகல் 1.30 மணி வரையில் அங்கிருப்பதாகவும் எழுதியதோடு - கோப்புகளைப் பார்வை இடுவதிலும், முடிவுகளை எடுப்பதிலும், முதல் அமைச்சருக்கு ஈடு கொடுத்து செயல்பட சில அதிகாரிகளால் முடியவில்லை என்றும் எழுதியது. கலைஞர் இன்றைய தினம், அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள எஸ்.வி.
சேகர் அவர்கள் சிறந்த நடிகர். தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு நடிப்பவர். 1996ஆம் ஆண்டு என்னை அணுகி, தனது நாடகக்குழுவின் 3500ஆவது நாடக விழாவில் வாழ்த்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். த.மா.கா. தலைவர் அருமை நண்பர் மூப்பனார் அவர்களும் என்னுடன் அந்த விழாவிலே கலந்து கொண்டார். பொதுவாக என்னுடன் இணைந்து கலந்துகொள்ளும் விழாக்களில் அவர் அதிகமாகப் பேசமாட்டார். அன்றும் மிகக்குறைவாகக் குறள் போலப் பேசிவிட்டு, நான் பேசுவதற்கு வழி விடுவதாகக்கூறி, அமர்ந்து விட்டார்.
அந்த விழாவிலே நான் பேசும்போது, "சேகர் தனது நாடகங்களில், தமிழ்நாட்டிலே - இந்தியாவிலே நடக்கும் செய்திகளையெல்லாம் சேகரித்து நாடகமாக ஆக்கி நடத்துகிறார். எனவே தான் சேகர் என்று அழைக்கப்படுகிறார்!" என்று குறிப்பிட்டேன். தந்தை பெரியாரின் பிறந்த நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! எஸ்.வி. சேகரை பொறுத்தவரையில், அவரிடத்தில் நான் கண்ட ஒரு திறமை - ஆங்கிலத்தில் "Timely Wits" என்பார்களே, அதில் அவர் தேர்ந்தவர் - அதாவது ஒருவர் பேசிக்கொண்டிருக்கின்றபோது, ஒரு நொடிகூட தாமதிக்காமல், "பளிச்" என்று பதில் சொல்லி, அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதில் வல்லவர்.
அதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் தி.மு. கழகத்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்ற போதிலும், அவர் அழைத்த நாடக விழாவில் கலந்துகொண்டு, அவரைப்பாராட்டி வாழ்த்தினேன்.
