நெஞ்சுக்கு நீதி
கரும்பு தேசத்து இரும்பு மனிதன்! · 324 / 391
12. கரும்பு தேசத்து இரும்பு மனிதன்! போ ராட்டங்கள் - அடக்குமுறைகள் - சோதனைகள்- தியாகத் தீ - இத்தனையும் தாண்டிடவும், தாங்கிடவும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வாழ்பவர்களுக்கு, அவர்ளைப்போலவே வாழ்ந்து காட்டுகிறவர்கள் தான் வழிகாட்டுகிறார்கள், வரலாறுகளாக விளங்கி! அந்த வரலாறுகளில் நேரிடையாக இடம்பெறுகிற வாய்ப்பில்லாமற்போய்விடினும், வேறு ஏதோ ஒரு வகையில் - அதே வழியில் நடந்து தீர வேண்டிய நிலைக்கு ஆளான என் போன்றோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் அறிவாற்றலால் - அயராத உழைப்பால் - அணுவளவும் அவிழ்ந்து போகாத கட்டுப்பாடு காத்திடும் உணர்வால் - அவர் தொடங்கிய தன்மான இயக்கம், தமிழகத்தில் மட்டுமின்றி, தரணியெங்கும் தழைத்துச் செழித்து தமிழகத்தை ஆளுகின்ற வாய்ப்பையும் பெற்று, அந்த இயக்கத்தின் இலட்சியங்களைச் செயல் வடிவில் வெற்றிபெறச் செய்துள்ள இந்தக் காலகட்டத்தில், அறிஞர் அண்ணா வழி நின்று, அவற்றின் பயன்களைத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் உயர்நிலை கண்டு உவகை கொண்டு - உற்சாகம் பெறும் இந்த வேளையில், இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த புரட்சியாளர்களில் ஒருவரான பிடல் காஸ்ட்ரோவின் அந்தக் கம்பீர உருவம் என் கண்முன்னே காட்சியளிக்கிறது.
கரீபியன் கடலில், அமெரிக்காவின் மியாமி கரையிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில், இரண்டு பெரிய தீவுகளையும் 1500 சிறிய தீவுகளையும் கொண்ட ஒரு சிறு நாடுதான் கியூபா . அதன் மக்கள்தொகை சுமார் ஒரு கோடிக்குமேல் இருக்கும். கலைஞர் ஐரோப்பாவிலிருந்து வந்து குடியேறிய பெரும்பான்மை மக்களையும் - கருப்பின சிறுபான்மை மக்களையும் கொண்ட கியூபா- ஸ்பெயின் நாட்டின் காலனியாக பல ஆண்டு காலம் இருந்து - அதனை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியது.
1898ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஸ்பெயின் தோற்றது. அதன் தொடர்ச்சியாக, கியூபாவைவிட்டு ஸ்பெயின் வெளியேறியது. ஆயினும் கியூபாவிற்கு சுதந்திரம் கிடைக்காமல், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அமெரிக்கா அதனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததற்குக் காரணமே, வளம் நிறைந்த கியூபாவின் இயற்கைச் செல்வங்களின்மீது கொண்ட பற்றினால் தான்! உலகின் கரும்பு வயல் என்றும், சர்க்கரைக் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் நாடுதான் கியூபா!
1940 முதல் 1944 வரை ஜனாதிபதியாக இருந்த பாடிஸ்டா என்பவர், 1952இல் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். அவரது ஆட்சியில் ஊழலும், வறுமையும் தலைவிரித்தாடியது. எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் சிறையிலே அடைக்கப்பட்டு, சித்ரவதைக்கு பேரறிஞர் அண்ணாவின் வழி நின்று ஆட்சி நடத்தும் இந்த வேளையில், மிகச் சிறந்த புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோவின் கம்பீர உருவம் என் கண்முன் காட்சி அளிக்கிறது.
ஆளாக்கப்பட்டனர். அந்த நேரத்தில் கியூபாவின் சுதந்திரப் போராட்ட வீரர் ஜோஸ்மார்ட்டி யின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மனம் கொதித்து எழுந்த இளைஞன்தான் பிடல் காஸ்ட்ரோ. பிடல் காஸ்ட்ரோ, இருபத்தோராவது வயதில் ஹவானா தன்னாட்சிப் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்லூரியில் பயின்று வந்தார். அவர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், காஸ்ட்ரோவின் தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ உயரம் தாண்டுவதிலும் பிறரைத் தோற்கடித்தவர்.
எனவே, மாணவர்கள் மத்தியில் கவர்ச்சியுள்ள ஒருவராகவே இருந்தார். ஆனால், நான்கு பேரோடு சேர்ந்து வேலை செய்யும் பக்குவம் பெறாதவராக இருந்ததால், அவர் தனித்தே நடமாடிக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் மாணவர்கள் உட்பட எல்லோரும் அவருடன் நட்பாகப் பழகுவது வழக்கம். பிடல், சட்டக் கல்லூரியில் இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படிக்கும் வழக்கமுடையவராக இருந்தார். அந்தப் பருவத்தில் அவர் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் நூல்களை நிறையப் படித்தார்.
ஆர்த்தோடக்சோ கட்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் பிடல் போய் வந்தார். இளைஞர்கள் கூட்டம் அவரைச் சுற்றியே வளையமிட்டது. "இந்தத் தேர்தல் நாடகங்கள் மூலம் கியூபாவை என்றைக்கும் விடுவிக்க முடியாது! இப்போதுள்ள அரசியல் சட்டத்தை வைத்துக் கொண்டு எந்த அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. புரட்சி ஒன்றுதான் வழி! புரட்சியின் மூலம் அமையும் அரசினால்தான் ஏழைகளை வாழ்விக்க முடியும்!"
என்று பேசி வந்தார். ஆர்த்தோடக்சோ கட்சியின் முக்கியப் பிரச்சாரகர்களில் இவரும் ஒருவராக ஆனார். பின்னர் ஆர்த்தோடக்சோ கட்சியை விட்டு விலகி, புரட்சிகர இளைஞர் குழுக்களை உருவாக்கினார். 1953ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 26ஆம் தேதி இரவு 120 இளைஞர்களுடன் பாடிஸ்டாவின் மான்கடா படைத் தளத்தின்மீது தாக்குதலை நடத்தி, அதிலே தோல்வியடைந்து, சிறை பிடிக்கப்பட்டனர் கஸ்ட்ரோவும் அவரது தோழர்களும்! சாண்டியாகோ நகரின் ஒதுக்குப் புறத்தில் இருந்த மான்கடா இராணுவ முகாமை 20 போராளிகளுடன் தாக்குதல் நடத்தியபோது பிடல் காஸ்ட்ரோவுக்கு இருபத்து கலைஞர் தாயார் லினா ரஸ் ஏழு வயதுதான்.
சிறையிலே வைத்தே அவர்களைக் கொன்றுவிட முயற்சிகள் நடந்த போதும், நாட்டிலே நடைபெற்ற மக்கள் இயக்கங்கள் காரணமாக பிடல் காஸ்ட்ரோ விடுதலையாகி மெக்சிகோ சென்றார். அங்கேதான் அர்ஜெண்டைனாவைச் சேர்ந்த இளைஞன் சேகுவேராவின் நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து புரட்சிப் பணியைத் தொடர்ந்தனர். 1956ஆம் ஆண்டு கிரான்மம் என்ற கப்பலில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில், கியூபாவிற்கு வந்த புரட்சிப் படை 3 ஆண்டுகள் தொடர்ந்து கொரில்லாப் போர் நடத்தி, பாடிஸ்டாவை நாட்டை விட்டுத் துரத்தியது.
1959ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 1ஆம் தேதி. பிடல் காஸ்ட்ரோ புரட்சிகர அரசாங்கத்தை அமைத்தார். 1961ஆம் ஆண்டு, டிசம்பர் 2ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோ "நான் ஒரு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்! இறக்கும்வரை நான் அவ்வாறே இருப்பேன்!" என்று பிரகடனம் செய்தார். பிடல் காஸ்ட்ரோ புரட்சிக்காகத் தன்னை தயாரித்துக் கொண்ட முறையும், நம்பிக்கைக்குரிய இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்த முறையும், ஒரு திட்டவட்டமான பாதையில் முன்னேறியது.
அது இளமைச் சவடால் பேர்வழிகளின் இயக்கமாக வளரவில்லை. திட்டமிடப்பட்ட புரட்சிகரக் குழுக்களாக வளர்ந்து கொண்டிருந்தது. குழுக்களில் சேர்ந்து போராடுவதற்கு விரும்பும் தோழர்களுக்கு உள்ள வீரப் பண்புகள் குறித்து பிடல் கூறும்போது, "திறமை - தெளிவு - துணிவு - அர்ப்பணிப்பு - தன்னுயிரையும் பலியிடத் தயாராகும் தியாகம் - ஆகியவை இருத்தல் வேண்டும். சோதனைகள், தோல்விகள் வரும்போது பள்ளி மாணவனாக காஸ்ட்ரோ குழம்பாமல், குழப்பாமல், களத்தில் நிற்கும் வீரப் பண்பு வேண்டும்" என்று தெரிவித்தார்.
1953ஜூலை மாதத் தொடக்கத்தில், மான்கடா ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான இறுதித் தயாரிப்புப் பணிகள் முழுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாக்குதல் நடத்த ஜூலை 26ஆம் தேதி என்று நாள் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று, ஜோஸ் மார்ட்டி தனது முதல் சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கிய நாள் ஜூலை 26. இரண்டாவது, ஜூலை மாதத்தில் இயேசு நாதர் உயிர்த்தெழுந்த பண்டிகை நாட்கள் என்பதால் - ராணுவ அதிகாரிகள் அந்த நாட்களில் முகாமைவிட்டு நிகழ்ச்சிக்குப் போய் விடுவார்கள் என்பதால் - அந்த நாள் தாக்குதலுக்கு ஏற்றது என்று முடிவு செய்தனர்.
ஜூலை 23ஆம் தேதி பயணம் புறப்படுவதற்கு முன்பு, தனது வீட்டிற்குச் சென்று நான்கு வயதான மகனை மடியில் தூக்கி வைத்து முத்தமிட்டார், காஸ்ட்ரோ. அப்போது அவரது கண்ணாடி நழுவி கீழே விழுந்ததைக் கவனிக்காமல் சென்று விட்டார். பாதி தூரம் சென்ற பிறகுதான் பத்திரிகை படிக்க கண்ணாடியைத் தேடியபோது தவறவிட்டது தெரிந்தது. திரும்பச்செல்ல நேரம் இல்லை. வழியிலே ஒரு கண் மருத்துவரைச் சந்தித்துப் புதிதாக கண்ணாடி ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.
தாமதத்தைத் தவிர்க்க காரை வேகமாக ஓட்டிச் செல்ல, காவல் துறையினரிடம் பிடிபட்டார். அப்படி பிடிபட்டதால், காவல் துறை அலுவலகத்திற்கே வண்டியை எடுத்துச் சென்று, சோதனை செய்த பிறகே, அபராதம் பெற்றுக் கொண்டு காரை விடுவித்தனர். பயணத்தின்போது மீண்டும் ஒரு ஆபத்து! பிடல் காஸ்ட்ரோ ஒரு நகரத்தைக் கடக்கிறபோது, ராணுவச் சோதனைச் கலைஞர் சாவடிக்கருகில் அவரது வண்டி தடுத்து நிறுத்தப்பட்டது. சோதனை செய்தால், ஆபத்தான ஆயுதங்கள் வண்டியிலே இருப்பது தெரிந்திருக்கும்.
ஆனால், ராணுவ வீரர்கள் இருவர் காருக்கு அருகே நெருங்கி வந்து கதவைத் திறக்குமாறு கூறினர். அந்த இரண்டு வீரர்களில் ஒருவர், காஸ்ட்ரோவின் கார் ஓட்டுனரான மிட்சலின் ஊரைச் சேர்ந்தவர். இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டவுடன் காரை மறந்துவிட்டு, கட்டிப் பிடித்துக்கொண்டு சொந்த ஊர்ப் பிரச்சினைகளைப் பேசிட முற்பட்டு விட்டனர். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு காஸ்ட்ரோ தப்பி ஓடுவதற்கு எண்ணிய நேரத்தில் - அந்த ராணுவ வீரர், "நீ போகலாம், மிட்சல்!"
என்று கூறி காரை சோதனையிடாமல் அனுப்பி வைத்துவிட்டார். வாகன ஓட்டுநரால் அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது. 1953 ஜூலை 26ஆம் நாள் நடைபெற்ற புரட்சிப் படையினரின் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அப்போது பிடல் காஸ்ட்ரோ, "நமது தாக்குதல் தோல்வி அடைந்து விட்டது. இனி அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வேண்டாம் - மலைப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்து கொரில்லா யுத்தத்தைத் தொடங்க வேண்டும். இப்போது தோற்று விட்டோம் - ஆனால், இந்தத் தோல்விப் படியை வெற்றிக்கான படியாகக் கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!"
என்று கூறினாராம். 1953 ஆகஸ்ட் முதல் தேதி. காவல் படையின் குழு ஒன்று பெட்ரோ மானுவேல் சாரியா தலைமையில் குடிசையில் பதுங்கியிருந்த பிடல் காஸ்ட்ரோவையும், அவருடன் இருந்த மூன்று புரட்சி வீரர்களையும் சுற்றி வளைத்தது. சாரியாவின் வீரர்கள் அவர்களைச் சுடுவதற்குத் துப்பாக்கியை நீட்டியபோது, சாரியா உரத்த குரலில், "அவர்களைச் சுட வேண்டாம் - உயிருடன் பிடிக்க வேண்டும்!"
என்று கூறினார். காவலர்கள் சுட வேண்டுமென்று பிடிவாதமாகக் கூறியபோதும், சாரியா அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அவர்களைக் கைது செய்து காரில் ஏற்றச் செய்தார். பிடல் காஸ்ட்ரோவை முன் இருக்கையில் தன்னருகே சாரியா அமர்த்திக் கொண்டார். பிடல் காஸ்ட்ரோ சாரியாவின் காதருகில், "நான்தான் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் மனிதன்!"
என்று கூற, அதற்கு சாரியா அமைதியாக, "அது எனக்குத் தெரியும்!" என்றார். "பிறகு, ஏன் என்னைச் சுடவில்லை? சுட்டுக் கொன்றிருந்தால், பதக்கமும் பதவி உயர்வும் கிடைத் திருக்குமே!" என்று பிடல் கேட்க - "குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறையே, குற்றங்களை இழைக்கக்கூடாது என்பது என் கொள்கை" என்று சாரியா பதிலளித்தார்.
எதிரே வந்து உப தளபதி கைது செய்யப்பட்டவர்களைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்க, அதற்கு சாரியா மறுத்துவிட்டார். அவனிடம் அவர்களை ஒப்படைத்தால், வழியிலேயே அவர்களைக் கொன்றுவிடக் கூடுமென்று நன்கு தெரியும். வழியில் வந்த பிஷப், புரட்சிக்காரர்களைச் சுட்டுவிட வேண்டாமென்றும். அவர்களைச் சரணடையச் செய்ய தான் தயாராக இருப்பதாகவும் உறுதி கூறி, அவ்வாறே சரணடையவும் செய்தார். பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும் செய்தியை அவரது தோழர்களுக்கும், உறவினர்களுக்கும் பிஷப் தெரிவித்தார்.
ஏனென்றால், பிடல் காஸ்ட்ரோ கொல்லப்பட்டுவிட்டதாக, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் வானொலியில் செய்தி ஒலிபரப்பப்பட்டிருந்தது. பானியாட்டோ சிறையில் தனிக் கொட்டடியில் பிடல் காஸ்ட்ரோ அடைக்கப்பட்டார். அவர் சிறைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட அவரது மனைவி மிர்தா, மகனுடன் சிறையில் அவரைச் சந்தித்தார். அவளது கண்கள் குளமாயின. துணிச்சலை சற்றும் இழக்காத பிடல், தனது மனைவிக்குத் தைரியமூட்டி அனுப்பி வைத்தார்.
விசாரணை அறிவிக்கப்பட்டது. இட்லரின் நீதிமன்றத்தை ஜார்ஜ் டிமிட்ரோவ் எப்படி மக்களின் கொள்கை விளக்க கலைஞர் மேடையாகப் பயன்படுத்திக் கொண்டாரோ, அதுபோலவே பாடிஸ்டாவின் நீதி மன்றத்தை பிடல் காஸ்ட்ரோவும் பயன்படுத்திக் கொண்டார். 21.9.1953 நீதிமன்ற விசாரணை தொடங்கப்படும் என்று அறிவிப்பு! குற்றம் சாட்டப்பட்டவர்கள் 122 பேர் - அவர்களுக்காக வாதாட வந்திருந்த வழக்கறிஞர்கள் 22 பேர் - நீதிபதிகள் மூன்று பேர் - ஆறே ஆறு பத்திரிகையாளர்கள்!
போர் அவர்களுக்கான நிபந்தனை - விசாரணை முழுவதையும் காதால் கேட்கலாம் - ஆனால், கைகளால் ஒரு வரிகூட எழுதக்கூடாது - புகைப் படமும் கூடவே கூடாது! விசாரணை நடத்த நீதிமன்றம் 50 அடி நீளமும், 15 அடி அகலமும் கொண்ட பரப்பளவு கொண்டது. கைதிகள் எல்லாம் கை விலங்குடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தளபதி சாவியானோ பிடல் காஸ்ட்ரோவை ஒரு ஜீப்பில் விலங்குடன் அழைத்து வந்திருந்தார். ஹவானா கல்லூரியில் காஸ்ட்ரோ விசாரணை தொடங்குவதற்கு முன்பு, விலங்கு பூட்டப்பட்டிருந்த தன் கைகளை உயரத் தூக்கிக் காட்டியபடி.
பிடல் உரத்த குரலில், "கனம் நீதிபதி அவர்களே! இந்தக் காட்சியைப் பாருங்கள். இது நீதி வழங்கும் மன்றம். நீங்கள் நீதி வழங்க இங்கே வந்திருக்கிறீர்கள். கொடும் கைதிகளுக்குக்கூடத் தரப்படாத தண்டனையாக எங்களைக் கைவிலங்குடன் வைத்து விசாரித்தால், அது நீதி ஆகுமா?"
என்று முதல் தாக்குதலைத் தொடுத்தார். உடனடியாக நீதிபதியின் உத்தரவுப்படி, கைதிகளின் விலங்குகள் அகற்றப்பட்டன. "நீதிமன்ற வளாகத்திற்குள் விலங்குடன் யாரையும் அழைத்து வரக்கூடாது" என்றும் தீர்ப்பு கூறினார். கியூபாவின் சுதந்திரப்போராட்ட வீரர் ஜோஸ் மார்ட்டி- காஸ்ட்ரோவின் வழிகாட்டி! பிடல் காஸ்ட்ரோ தனக்காக வழக்கறிஞர் யாரையும் வைத்துக்கொள்ளாமல், தானே வாதாடினார். மிக நீண்ட உரை அது. அதனை முடிக்கும் நேரத்தில், "நீதிபதி அவர்களே!
எனக்கு எவ்வளவு கடும் தண்டனை வழங்கினாலும் அதை நான் ஏற்பேன். ஏனெனில், பாடிஸ்டாவின் சட்டத்தை அல்ல - உங்களை |நான் மதிக்கிறேன். அதற்காக, நீங்கள் என்னை ஏதாவது ஒரு காரணம் காட்டி விடுவித்தாலும், மீண்டும் ஆயுதம் ஏந்தி இந்த ஆட்சியைத் தூக்கி எறியப் போராடவே செய்வேன்!"
என்று கூறினார். மேலும் அவர் நீதிமன்றத்தில், "நீதிபதி அவர்களே! இப்பொழுது நடைபெறும் அரசு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல - இது சட்டவிரோத அரசு! நானும் எனது தோழர்களும் இதனை எதிர்க்கிறோம். பள்ளியில் படிக்கும்போது, தாய்நாட்டை நேசிக்கும்படி கற்பிக்கப் பட்டோம். சட்டம் பயிலும்போது. சட்ட மீறுதலை எதிர்க்கக் கற்பிக்கப் பட்டோம். இதன்படி சட்ட விரோத அரசை, தூக்கியெறியப் போராடினோம். எங்களுக்கு இராணுவ சர்வாதிகாரியைத் தூக்கியெறிய வழியில்லாமல் போய் விட்டது!
தேர்தல் நடந்திருந்தால், தேர்தல் மூலம் தோற்கடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும். தேர்தலை ரத்து செய்து விட்டார். நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். நாட்டையும், மக்களையும் காக்க நாங்கள் போர
ாடுகிறோம்!" என்று பிடல் காஸ்ட்ரோ வாதாடியது இன்றைக்கும் புகழ்பெற்று விளங்குகின்றது. கலைஞர் நீதிமன்றத்தில் காஸ்ட்ரோ வெளிப்படுத்திய கருத்துகளால், அவரது புகழ் கியூபா முழுவதும் பரவியது. பலர் விடுதலை பெற்றனர். ஆனாலும், காஸ்ட்ரோவுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினர். சிறை அமைந்த பைன்ஸ் தீவு, கியூபாவின் கடலில் இருந்து 50 மைல் தொலைவில் அமைந்திருந்தது. தன்னையும், தனது தோழர்களையும் தயாரித்துக் கொள்ளும் இடமாக அந்தச் சிறை வாழ்க்கையை பிடல் மாற்றியமைத்துக் கொண்டார்.
மக்களிடம் ஏற்பட்ட மாபெரும் எழுச்சியால், பிடல் 1955ஆம் ஆண்டில் - அதாவது அவரது இருபத்தொன்பதாவது வயதில் விடுதலை செய்யப்பட்டார். பைன்ஸ் தீவுச் சிறையிலிருந்து மீண்ட பிடல் காஸ்ட்ரோ மெக்சிக்கோ சென்றார். பிறகு, அங்கிருந்தபடியே புரட்சிக்குத் தயார் செய்தார். ஆள் வசதி - பண வசதி ஏதுமின்றி தன்னம்பிக்கையுடன் இயங்கி, கியூபாவிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் நிதியையும், ஆட்களையும் திரட்டினார். கியூபா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய மூன்று இடங்களில் ஆயுதப் பயிற்சி பெற்ற குழுக்களை உருவாக்கினர்.
நீதிபதி அவர்களே! எனக்குக்கடும் தண்டனை விதித்தாலும் ஏற்பேன் - என்னை விடுவித்தால், மீண்டும் ஆயுதம் ஏந்தி ஆட்சியைத் தூக்கியெறியப் போராடுவேன்! 1956, நவம்பர் 26இல் கிரான்மா என்ற படகில் 81 பேர் ஆயுதங்களுடன் கியூபா வந்து சேர்ந்தனர். இராணுவ முகாமைத் தாக்கி பாடிஸ்டா இராணுவத்திற்குப் பெரும் சேதத்தை விளைவித்தனர். பாடிஸ்டா இராணுவத்தினரே பிடலுக்கு ஆதரவாகத் திரண்டனர். பிடல் காஸ்ட்ரோ தலைமையிலும் அவரது தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆருயிர் நண்பன் சேகுவேரா ஆகியோர் தலைமையிலும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, போரிட்டு சாண்டியா கோவைக்கைப்பற்றி ஹவானா நோக்கி முன்னேறினார்.
பிடல் காஸ்ட்ரோ இளம் பிராயத்திலேயே எழுச்சி முரசு! புரட்சிக் கனல்! இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்! 1958, டிசம்பரில் பாடிஸ்டா நாட்டை விட்டு ஓடினார். புரட்சி வெற்றி அடைந்தது. பிடல் தனது முப்பத்து இரண்டாவது வயதில் பிரதமராகப் பொறுப்பேற்றார். இவ்வாறு அந்தச் சின்னஞ்சிறிய நாட்டில், புரட்சிக்காரராக மலர்ந்து மனம் கமழத் தொடங்கினார். அந்த மாவீரன் இன்று வாழ்கிறார் என்றாலும் வாடிக் கொண்டுதான் இருக்கிறார், அவருடைய உடல் நலிவு காரணமாக!
நலிவு நீங்கி நாடு மதித்திட - நானிலம் போற்றிட - அவருக்கு வாழ்த்துச் சொல்லி, அவரது உயிருக்குயிராய் இருந்த உத்தமத் தோழர் சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்களைப் கலைஞர் கியூபா சிறிய நாடு - ஆயிரக்கணக்கான தீவுகளைக்கொண்ட அழகிய தேன்கூடு! அமெரிக்கா கை வைக்கும் போதெல்லாம் கொட்டிவிடும் தேனீக்கள்தான் கியூபா மக்கள்! புரட்டிக் காட்டா விட்டால், கியூபாவின் புரட்சி வரலாறு முழுமையானதாக ஆகாது என்பதால், அவரைப்பற்றியும் அடுத்தடுத்த தொடர்களில் எழுதுகிறேன் என்று கூறி, கியூபாவிலிருந்து உங்களையெல்லாம் தமிழகத்திற்கு அழைத்து வருகிறேன்.
அதற்கு முன்பாக இரும்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ பற்றி - "கியூபா நாட்டின் பெருமை பெருமை போற்றும் விழா" ஒன்று, 2006ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் சென்னையில் நடைபெற்றபோது, அந்த மாநாட்டில் நான் வழங்கிய கவிதையில் சில வரிகளை மட்டும் இந்த நேரத்தில் நினைவூட்டிட விரும்புகின்றேன். என்னிடம் - "உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக" என்றனர்.
"உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர்தான் பிடல் காஸ்ட்ரோ!" என்றேன். இளம் பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்! இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்! இருளில் சர்வாதிகாரியாகவும். வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும் இரட்டை வேட அரசியல் நடத்திய 'பாடிஸ்டா'எனும் பசுத்தோல் வேங்கை; அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து - அதற்கோர் அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று - சிறைப்பட்டு; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதுதான் "வரலாறு என்னை விடுதலை செய்யும்" எனும் வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில் வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!
பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்குப் பதினைந்தாண்டு சிறை என்றதும் - பற்றி யெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் சிறைக் கதவு திறந்தது- சிங்கம் வெளியே வந்தது! அந்த சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா! தங்கத் தம்பியாம் ரால் காஸ்ட்ரோவையும், தம்பி போன்ற சேகுவோராவையும், அங்கம் வகிக்கச் செய்து, ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே; பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி - இனி கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு; நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழிவிட்டு!
கேட்டைக் களைத்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழிகாட்டியானார்! கடமையும் பொறுப்பும் வந்தவுடன் கடந்த காலத்தை மறந்துவிடாமல்; சோதனைகளைச் சந்தித்து மறைந்த ஜோஸ் மார்ட்டியின் தலைமைக்கும் சாதனைகள் புரிந்து மறைந்த சிபாசின் வழிகாட்டுதலுக்கும் கலைஞர் மதிப்பும் மரியாதையும் அளித்திட மறக்காத மாவீரர்தான் பிடல் காஸ்ட்ரோ! "கியூபா" சின்னஞ் சிறிய நாடு - ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட அழகிய தேன் கூடு! தேன் கூடென்று ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தெரியாமல் அமெரிக்கா கைவைக்கும் போதெல்லாம் கொட்டி விடும் தேனீக்கள் கியூபாவின் மக்கள் - அந்தக் கூடு காக்கும் காவல்காரர்தான் பிடல் காஸ்ட்ரோ! நல்வாழ்வுச் சட்டங்கள் பலவும் - மக்கள் நலம் பெருக்கும் சாதனைகள் பலவும் இல்வாழ்வையும் துறந்து இலட்சியத்துக்காக வாழ்ந்திடும் காஸ்ட்ரோவின் புகழ்மிகு வரலாற்றின் பொன்னேடுகளாய் புதிய புதிய பக்கங்களாய்ப் புரண்டு கொண்டேயிருக்கின்றன! உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப் பேசுமளவுக்குக் கரும்பு வயல்களைக் கொண்ட கியூபாவில் சர்க்கரை வாங்குவதையே நிறுத்திப் பொருளாதாரச் சரிவு ஏற்படுத்த அமெரிக்கா ஆயத்தமானபோது; சீனாவும், சோவியத்தும்தான் சிநேக நாடுகளாய்க் காஸ்ட்ரோவுக்குக் கை கொடுத்த கதை உலகறியும்!
"வாழை தென்னை மரங்களை வலிமைமிகு துதிக்கையால் யானை முறித்துப் போட்டு விடும்! அந்த யானை போன்றதே அமெரிக்கா!" என்றனர். அதற்கு காஸ்ட்ரோ அஞ்சி நடுங்கவில்லை. வாழை மரம், தென் மரங்களை யானை வாயிலே போட்டுக் கொள்ளலாம் எளிதாக! ஆனால் அங்குசத்தை யானை விழுங்க முடியுமா? அங்குசந்தான் கியூபா - அமெரிக்க யானைக்கு! வெள்ளி விழா ஐ.நா. சபைக்கு நடந்தபோது - பல நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் முப்பத்தியிரண்டு வயது நிரம்பிய சிவப்பு நட்சத்திரமாக முதுபெரும் தலைவர்களால் பாராட்டப் பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டின் காலனி கியூபா - அடுத்த கட்டம் அமெரிக்காவின் காலுக்கு ஆணியாக ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்தபோது; அதுதான் முடியாது; அந்தக் காலையே முடமாக்குவோமென்றும்- மக்களைத் திரட்டினார் பிடல் காஸ்ட்ரோ - மலைப்புற்ற ஏகாதிபத்தியவாதிகள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடினர் என்றால்; அது பிடல் காஸ்ட்ரோவின் உறுதிக்கும் - அவரைப் பின்பற்றும் மக்களின் மகத்தான சக்திக்கும்; பின்பலமாய் மார்க்சின் தத்துவம் இருப்பதற்கும் - அடையாளம் என்பதையே இந்த அவையோரும் அறிவீர் - அடியேனும் அறிவேன்!
திறமை - தெளிவு - துணிவு - அர்ப்பணிப்பு - தன்னுயிரையும் பலியிடத் தயாராகும் தியாகம் - இவ்வளவும் ஒரு புரட்சி வீரனுக்குத் தேவை! நான் எழுதிய இந்தக் கவிதை ஆங்கிலத்திலே மொழியாக்கம் செய்யப்பட்டு - இந்தியாவிலே உள்ள கியூபா நாட்டுத் தூதுவர்களால் பிடல் காஸ்ட்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர் அந்தக் கவிதையை ரசித்து விட்டு, தனது அலுவலக மேஜையில் அதனை வைத்திருப்பதாகவும் எனக்கு பின்னர் தகவல்கள் கிடைத்தன!
கம்யூனிஸ்ட் நண்பர்கள் இப்படிச் சொன்னார்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தின விழா, சென்னை கலைவரணர் அரங்கத்தில், அரசு விழாவாக 7.9.1996 அன்று நடைபெற்றது. அந்த விழாவில் 230 தலைமை ஆசிரியர்கள் உட்பட 288 கலைஞர் பிடல் காஸ்ட்ரோ பற்றி நான் எழுதிய கவிதையை வழங்கிய "கியூபா நாட்டின் பெருமை போற்றும் விழா!"
ஆசிரியர்களுக்கும், பத்தாம் வகுப்பு. ப்ளஸ் 2 வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற 178 மாணவர்களுக்கும், நல்லாசிரியர் விருது வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன் பேரில், நான் வழங்கினேன். அந்த விழாவில் நான் பேசும்போது, "இந்த விருதுக்கு நல்லாசிரியர் விருது என்று பெயர் இருப்பதால், விருது பெறாத மற்ற ஆசிரியர்கள் எல்லாம், ஏதோ கெட்ட ஆசிரியர்கள் என்பதைப் போல பொருள் வந்து விடக்கூடும். எனவே, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை யொட்டி "ஆசிரியர் தினம்" கொண்டாடப்பட்டு, அந்த நாளில் இந்த விருதுகள் எல்லாம் வழங்கப்படுவதால்.
நல்லாசிரியர்கள் விருது இனிமேல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்றே அழைக்கப்படலாம்!" என்று அறிவித்தேன். அவ்வாறே அந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த விழாவில் தனித் தமிழ் இயக்கம் கண்ட தேவநேயப் பாவாணர் குடும்பத்துக்கு இருபது இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையை வாணரின் மருமகள் மனோன்மணி, மகன்கள் செல்வராஜு, தெ.மணிமன்ற வாணன், அடியார்க்கு நல்லான், மகள் மங்கையர்க்கரசி, பேரன் யோகவா எபனேசர் ஆகிய ஆறு பேருக்கும் தலா 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினேன்.
★ ★ ★ டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளன்று வழங்கப்படும் "நல்லாசிரியர் விருது" என்பதை "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" என்று மாற்றினேன்! கலாஷேத்திரா நிறுவன வளாகத்தில் உள்ள நூல் நிலையத்தில், டாக்டர் உ.வே.சா. அவர்களின் சிலையைப் பீடத்தில் நிறுவிட ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவித்து. "தினமணி" நாளிதழ் "பீடம் ஏறக் காத்திருக்கும் தமிழ்த் தாத்தா" என்ற தலைப்பில் ஒரு செய்தியினை வெளியிட்டிருந்ததைக் கண்ட நான், உடனடியாக அன்றைய தினமே, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் அந்தப் பணிக்காக வழங்கப்படும் என்று அறிவித்து, அதனை வழங்கிடச் செய்தேன்.
மக்களவையிலும், மாநில சட்டப் பேரவையிலும் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 81ஆவது அரசியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில், 12.9.1996 அன்று பிரதமர் தேவகவுடா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. கட்சி வேறுபாடின்றி, அனைத்துப் பெண் உறுப்பினர்களும் அந்த மசோதாவை அன்றைய தினமே நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அதற்காக அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் எல்லாம் அவையிலே முதல் வரிசையிலே அமர்ந்திட அனுமதிக்கப்பட்டார்கள்.
மசோதாவைத் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டுமென்று மம்தா கலைஞர் பானர்ஜியும், விவாதமின்றி நிறைவேற்ற வேண்டுமென்று கீதா முகர்ஜியும் கோரினர். இந்த மசோதாவை அவையிலே தாக்கல் செய்வதற்காகக் கேள்வி நேரத்தையே மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்கா ரத்து செய்தார். மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்று பிரதமர் தெரிவித்தார். அவ்வாறே பேரவைத் தலைவர் அறையில், அனைத்துக்கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
"கலாஷேத்திரா" நிறுவனத்தில், முதலமைச்சர் நிவாரண நிதி உதவியுடன் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா.வின் சிலை! கேள்வி நேரத்தை ரத்து செய்ததால், அந்த நேரத்தில் இந்தத் தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த அனைவரும் நடப்புக் கூட்டத் தொடரிலேயே அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசினார்கள். ★ ★ ★ 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, தி.மு.க.கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதிலும், ஜெயலலி - தாவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள்தான்.
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொண்டு வேறு காரணங்களாலோ டெல்லியிலே உள்ள காங்கிரஸ் செயல்பட்ட காரணத்தால் தான், 96ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது த.மா.கா. உதயமாகவே காரணமாயிற்று.
