நெஞ்சுக்கு நீதி
சென்னைக்குக் கிருஷ்ணா! · 323 / 391
11.சென்னைக்குக் கிருஷ்ணா! மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர் என்ற சிறப்பைப் பெற்ற தளபதி மு.க.ஸ்டாலின் தி. மு.கழகம் தேர்தல் அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்துவோம்" என்று அறிவித்ததற்கிணங்க, 96ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இதற்கான வேட்புமனு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல், ஊராட்சி மன்றம் - ஊராட்சி ஒன்றியம் - மாவட்ட ஊராட்சி - என்ற மூன்றடுக்கு முறையில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 6 மாநகராட்சிகள் - 104 நகராட்சிகள் - 635 பேரூராட்சிகள்- 12,584 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு 96ஆம் ஆண்டு அக்டோபரில், 9 மற்றும் 12ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவதென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் என்னவென்றால், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில், திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. மொத்தம் 474 மாநகராட்சி வட்டங்களில், பெண்களுக்கு 161 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35 என்றும் - மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் மொத்தம் 28இல் பெண்களுக்கு 10 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 என்றும் -மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649-ல் பெண்களுக்கு 242 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 97 என்றும் - நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106-ல் பெண்களுக்கு 35 என்றும்,- தாழ்த்தப் பட்டவர்களுக்கு 6 என்றும் - இவ்வாறே ஒவ்வொரு பதவியிலும், பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் கூட்டம் அண்ணா அறிவாலய கழக அலுவலகத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி முன்னிலை வகிக்க, அமைச்சர்களும், தலைமைக் கழகச் செயலாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் பற்றி முடிவு செய்ய, கழகத் தோழமைக் கட்சிகளின் பூர்வாங்கக் கூட்டத்தினை, 3.9.1996 அன்று நடத்துவதென்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.
அதன்படி நடைபெற்ற கூட்டத்தில், த.மா.கா.சார்பில் கழகத்தாருடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார், மு.க.ஸ்டாலின்! அருமை நண்பர் மூப்பனார், எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.நல்லக்கண்ணு, எஸ்.எஸ்.தியாகராசன், ஏ.எம்.கோபு, ஜி.பழனிச்சாமி எம்.எல்.ஏ., இந்திய தேசிய லீக் சார்பில் அப்துல் லத்தீப் எம்.எல்.ஏ., திருப்பூர் அல்தாப், கமுதி பஷீர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் அய்யணன் அம்பலம், இல.
சந்தானம் எம்.எல்.ஏ, பி.என். வல்லரசு எம்.எல்.ஏ. , ஆகியோர் கலந்து கொண்டார்கள். கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளரும், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும் அந்தக் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். கூட்டத்தில் தி.மு.க., த.மா.கா., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் நடந்து முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது போலவே, உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதென்றும் - சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு தந்த எம்.ஜி.ஆர்.
மன்றம் போன்ற கட்சிகளையும் சேர்த்து கொள்வதென்றும் முடிவு எடுக்கப்பட்டது. தோழமைக் கட்சிகளுடனான பேச்சு வார்த்தையில், முதலில் த.மா.கா. வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 36 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. அதுபோலவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 நகராட்சிகள், 24 பேரூராட்சி மன்றங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்திய தேசீய லீக் கட்சிக்கு 2 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் பகிர்ந்து உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியல் 8.9.1996 அன்று வெளியிடப்பட்டது.
சென்னை மாநகர மேயர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மதுரை மாநகர மேயர் பதவிக்கு பெ.குழந்தைவேலு - சேலம் மாநகர மேயர் பதவிக்கு டாக்டர் சூடாமணி - ஆகியோர் மேயராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின்! பெயர்கள் முதல் பட்டியலிலேயே வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஜெயக்குமாரும், மதுரை மாநகராட்சிக்கு காளி முத்துவும் என்று செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து 9.9.1996 அன்று சென்னை மாநகர மேயர் பதவிக்கு தி.மு.க.
சார்பில் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமாரும் மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சென்னை மேயர் பதவிக்கு தமிழக ஜனதா கட்சித் தலைவராக அப்போதிருந்த திருமதி சந்திர லேகாவும், ம.தி.மு.க. சார்பில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரனும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர். ஆனால் இரண்டொரு நாட்களிலேயே அ.தி.மு.க. திடீரென ஒரு முடிவினை எடுத்தது. சென்னை மேயர் தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர் மு.க.ஸ்டாலினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்ற நல்ல (?)
எண்ணத்தோடு, மேயர் தேர்தலில் தங்களது வேட்பாளராக ஜெயக்குமாரை அறிவித்து, வேட்பு மனுவையும் தாக்கல் செய்த பிறகு, அ.தி.மு.க. வேட்பாளர் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்றும், இரண்டு கட்சிகளும் இணைந்து ஸ்டாலினை எதிர்த்தால் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்றும் திட்டமிட்டு அறிவித்தார்கள். தாங்கள் போட்டியிலிருந்து விலகியது மாத்திரமல்லாமல், தி.மு.கழகத்தைத் தவிர்த்த ஏனைய கட்சிகளும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு, ஜனதா வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்றும், தி.மு.கழக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.
ஜெயலலிதா இவ்வாறு அறிக்கை விடுத்த நேரத்தில், தமிழகத்திலே உள்ள முக்கிய ஏடுகள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி நான்கு வழக்குகளைத் தாக்கல் செய்து - வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக எழுதின. மேலும் சில ஏடுகள் - ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளரை போட்டியிலிருந்து விலக்கிக் கொண்டிருப்பது அவரது பலவீனத்தையே காட்டுகிறது என்றும் அ.தி.மு.க.
உடைந்துள்ள நிலையில், ஜெயலலிதா அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளதால் அந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும், என்றும், தோல்வியைத் தவிர்க்கவே அந்த முடிவினை எடுத்திருக்கிறார் என்றும், சுப்பிரமணியம் சுவாமியின் தீவிரத்தைக் குறைப்பதற்காகக்கூட அந்த முடிவினை எடுத்திருக்கலாம் - என்றும் எழுதின. சந்திரலேகா மீது திராவகம் வீசியவர் ஜெயலலிதாதான் என்று வழக்கு தொடர்ந்து சுப்பிரமணியம் சுவாமி, தனது வேட்பாளருக்கு ஜெயலலிதா ஆதரவு தருகிறார் என்றதும் அதனை ஏற்றுக் கொண்ட விசித்திரத்தை அப்போது தமிழ் நாடு கண்டது.
இருவரும் எத்தனை சந்தர்ப்பவாதிகள் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொண்டார்கள். சென்னை மேயர் தேர்தலில் பிரச்சாரம் மிகவும் கடுமையாக இருந்தது. எதிர்க் கட்சிகள் எல்லாம் இணைந்து, எப்படியாவது ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டுமென்ற வெறியோடு பணியாற்றிய போதிலும், ஸ்டாலினைப் பொறுத்த வரையில் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்குக் கேட்பதிலேயே குறியாக இருந்தார். சென்னை மேயர் தேர்தல் நடைபெற்று இருபதாண்டு களுக்குப் பின்னர், அந்தத் தேர்தல் நடைபெற்றதால் பிரச்சாரம் மிகவும் கடுமையாக இருந்தது.
மேலும் முதல் முறையாக மேயரை வாக்காளர்களே நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்ற முறை அப்போதுதான் நடைபெற்றது. சென்னையில் மேயர் பதவிக்கு மொத்தம் எட்டுப் பேர் போட்டியிட்டனர். 155 கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுக்க 1136 பேர் களத்திலே நின்றனர். தி.மு.க., த.மா.கா. கூட்டணி சார்பில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலினை ஆதரித்து நானும், பேராசிரியரும், மூப்பனார் அவர்களும், ஆர். நல்லக் கண்ணு அவர்களும், அப்துல் லத்தீப் அவர்களும் பிரச்சாரம் செய்தோம்.
மத்திய அமைச்சர்கள் தம்பி முரசொலி மாறன் ,எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், டி.ஆர்.பாலு, என்.வி.என்.சோமு ஆகியோர் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச் சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். மு.க. ஸ்டாலினையும், தி.மு.க., த.மா.கா- வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகர் சரத்குமார் - "பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற தி.மு.க., த.மா.கா.கூட்டணிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் மகத்தான வெற்றியை அளிக்க வேண்டும்.
பொதுத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிக்கேற்ப, உள்ளாட்சித் தேர்தலை தற்போது முதல்வர் நடத்துகிறார். குடும்ப அரசியல் நடத்துகிறது என்று சிலர் பேசுகிறார்கள். அது சரியல்ல. ஸ்டாலினைப் பொறுத்தவரை நல்ல அரசியல் குடும்பத்தின் வழியில் வந்தவர். ஸ்டாலினும் அரசியல்வாதி தான். அவரும் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். அவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நல்ல பணிகளை மாநகராட்சியில் நிறைவேற்ற முடியும்" என்று குறிப்பிட்டார்.
மூப்பனாரிடம் வாழ்த்து பெறும் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பத்திரிகையாளர் சோ அவர்கள் தனது "துக்ளக்" இதழில் "சென்னை மேயர் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? ஏன்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த- போது, "ஸ்டாலினுக்கு! அவருக்கு எதிராக நிற்பவர்களின் அணுகுமுறைகளைப் பார்க்கும்போது இருப்பதற்குள் நல்ல வேட்பாளர் ஸ்டாலின்தான் என்ற முடிவுக்கு நான் வருகிறேன். அவர், கலைஞரால் திணிக்கப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை.
இருபதாண்டுகளாக அரசியலில் இருக்கிறார். கட்சியில் பொறுப்புகளை; வகித்திருக்கிறார். இப்போதும்கூட மக்கள் ஆதரவிருந்தால் தான் அவர் மேயராக முடியும். ஆகையால் இதில் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருப்பதாக நான் நினைக்கவில்லை. தன்னுடைய தொகுதியில் அவருக்கு நல்ல பெயரே இருக்கிறது. மேயர் தேர்தலில் என் ஓட்டு அவருக்கே!"
என்று எழுதியிருந்தார். சென்னையில் மேயர் தேர்தலில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு, சந்திரலேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுத்த போதிலும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் சந்திரலேகாவுக்காக பிரச்சாரம் செய்யவில்லை. "மக்களின் எதிர்பார்ப்புகளை ஸ்டாலின் நிச்சயமாகப் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு" என்றார், ரஜினிகாந்த்!
உள்ளாட்சி மன்றத் தேர்தலையொட்டி, 96ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியன்று விழுப்புரம், 2ஆம் தேதி கடலூர், 3ம்தேதி தஞ்சாவூர், 4ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி, 5ஆம் தேதி மதுரை, 6ஆம் தேதி கோயம்புத்தூர், 7ஆம்தேதி சேலம், 8ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் சென்னை மாநகரம் என்ற அளவில் நிகழ்ச்சிகளை வகுத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். 6ஆம் தேதியன்று கோவைக்கு நான் சென்றது குறித்து, 7.10.1996 தேதிய "தினமணி" நாளிதழ் "முதல்வர் வருகை" -"அன்றும், இன்றும்" என்ற தலைப்பிலே ஒரு ஒப்பீட்டுச் செய்தியை வெளியிட்டிருந்தது.
"முதல்வர் வருகை என்றால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, எந்த வழியிலும் செல்ல முடியாமல், ஐந்து ஆண்டுகளாக அவஸ்தைப்பட்டு வந்த கோவை நகர மக்களுக்கு தற்போது வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னையில் அவர் புறப்படுகிறார் என்றால், கோவையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும்! அந்த அளவுக்குக் கெடுபிடிகள் இருக்கும். பொதுத் தேர்தலின்போது, பிரச்சாரத்துக்காக உடுமலைக்கு ஹெலிகாப்டரில் வந்த ஜெயலலிதா, அங்கிருந்து உடுமலை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக் கடவு வழியாக கோவை வந்தார்.
உடுமலையில் மாலை 6.30 மணிக்கு ஹெலிகாப்டரில் இறங்கினார். ஆனால் கோவையில் 6 மணிக்கே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. நேரம் செல்லச் செல்ல, இரு சக்கர வாகனங்கள் கூடச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. இதனால் பல இடங்களில் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. கோவை சுந்தராபுரத்தில் பஸ் டிரைவர் ஒருவர் டிரைவர் ஒருவர் அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார். பெண்கள் கைக்குழந்தையுடனும், மூட்டை முடிச்சுகளுடனும் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து 6 மணிக்கே நிறுத்தப்பட்டாலும், ஜெயலலிதா கோவை வந்து சேர்ந்தபோது இரவு 12.30 மணி." வெற்றி பெற்ற ஸ்டாலினை வாழ்த்துகிறார் பேராசிரியர் "ஞாயிற்றுக்கிழமை தலைகீழாக நிலைமை இருந்தது. கருணாநிதி முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கோவை வந்தார். ஆனால் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. உக்கடத்தில் முதல்வரின் வாகனம் நின்று கொண்டிருந்த போதிலும், மறுபுறம் பஸ்கள் சென்று கொண்டிருந்தன.
பல பேருக்கு முதல்வர் வந்திருக்கிறார் என்பதையே நம்ப முடியவில்லை! இதேபோல், உடுமலையிலும், பொள்ளாச்சியிலும் வழக்கமான போக்குவரத்து தடைபடவில்லை. கோவை உக்கடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முதல்வரைப் பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் காத்திருந்தனர்!"
இந்தச் செய்தியை நான் ஏதோ பெருமைக்காக வெளியிட்டுள்ளேன் என்று நினைக்கத் தேவையில்லை. மக்களுக்காகத்தான் நாமிருக்கிறோம் - நமக்காக அவர்கள் இல்லை என்ற எண்ணம் பொறுப்பிலே உள்ளவர்களுக்கு வர வேண்டும். இதைத்தான் இப்போதுகூட நாம் சென்னையில் வெளியிலே செல்கின்ற நேரத்தில், "போக்குவரத்தை எந்தக்காரணத்தாலும் நிறுத்தக்கூடாது" என்று எனது பாதுகாவலர்களிடம் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறேன்.
சென்னை வாழ் மக்கள் பல முறை இதைக் கண்டிருக்கலாம். 14.10.1996 அன்று உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணி அறிவிக்கப்பட்டன. தி.மு.க., த.மா.கா. கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. வெற்றி பெற்ற தோழமைக் கட்சி மேயர்கள் மேயர் தேர்தலில் சென்னையில் ஒவ்வொரு கட்சியின் வேட்பாளரும் பெற்ற வாக்குகள்- மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) 8,24,526 சந்திரலேகா (ஜனதா) 3,87,401 எஸ்.எஸ்.சந்திரன் (ம.தி.மு.க.)
86,135 வே.கருப்பன் (சுயேட்சை) 27,958 இரா.சு.சிவப்பிரகாசம் (சுயேச்சை) 4,808 பூ.விசுவநாதன் கக்கன் (சு
யேச்சை) 4,473 கே.இ.விசுவநாதன் (சுயேச்சை) 3,290 மதுரையில் மேயராக தி.மு.க. வேட்பாளர் குழந்தைவேலு 1,80,122 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சர் காளிமுத்து அ.தி.மு.க. சார்பில் அங்கே போட்டியிட்டு. 1.06,098 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலைப் பொறுத்த வரையில், சென்னையில் மொத்தம் 155 இடங்களில், தி.மு.க., த.மா.கா..இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி 150 இடங்களிலும், அ.தி.மு.க.
2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள். ஏனைய மாநகராட்சிகளிலும் இதே போன்ற நிலைமைதான். அதுபோலவே தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 102 நகராட்சிகளில் தி.மு.க. 48 இடங்களிலும், த.மா.கா. 28 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றன. திருநெல்வேலியில் மேயராக தி.மு.க. வேட்பாளர் உமா மகேஸ்வரியும் - சேலத்தில் மேயராக தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சூடாமணியும் , கோவையில் மேயராக த.மா.கா..
வேட்பாளர் கோபால கிருஷ்ணனும் , திருச்சியில் மேயராக த.மா.கா., வேட்பாளர் புனிதவள்ளியும் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளிலும் தி.மு.க., த.மா.கா. கூட்டணியின் வேட்பாளர்களே மேயர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றனர். சென்னை மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் தலைநகரிலே உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்த நேரத்தில் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் சென்று வாழ்த்துப் பெற்றார்.
ஸ்டாலினை அன்புடன் வரவேற்று வாழ்த்திய ரஜினி, "மு.க.ஸ்டாலினிடம் மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது. மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை மு.க.ஸ்டாலின் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மு.க.ஸ்டாலின் யார் - அவரது திறமை என்ன -என்பதை நிரூபிக்க இது ஒரு பெரிய சந்தர்ப்பம்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
தேர்தல் முடிவுகள் குறித்து ஏடுகள் எழுதும்போது- "அ.தி.மு.க. எதிர்ப்பு அலை தமிழகத்தில் தொடர்கிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. கடந்த ஐந்து மாத கால ஆட்சியில், தி.மு.கழக அரசு குறிப்பிடத்தக்க தவறு எதையும் செய்யவில்லை. இதனால் இந்த அரசுமீது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. "பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்தித்த அ.தி.மு.க.
தோல்விக்கு தங்கள் ஆட்சியில் நடந்த தவறுகளே காரணம்" என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. "இந்திய தேர்தல் கமிஷனின் சதி" என்றும், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களின் "குழி பறித்தல் நடவடிக்கை" என்றும் துவக்கத்தில் ஜெயலலிதா காரணங்களைக் கூறினார்.
சசிகலாவுக்கு எதிராகக் கட்சியில் போர்க்கொடி உயர்ந்தவுடன் அவரது உறவைத் துண்டிப்பதாகக் கூறினார். "நடந்து விட்ட தவறுகள் இனிமேல் நடக்காது" என்று ஜெயலலிதா கூற முன்வரவில்லை. "அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் வகையில் பொய்யான வழக்குகளைத் தொடர்கிறார்கள்!"
என்று ஜெயலலிதா புகார் தெரிவித்தார். அவரது இப்புகாரை மக்கள் ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. "அவர் மீதும், தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை" என்று மக்கள் தீர்ப்பளித்திருப்பதாகக் கருதலாம்.
சென்னை மாநகராட்- -சியைப் பொறுத்த வரையில், தி.மு.க. தலைவர்மீது வாரிசு அரசியல் - குடும்ப அரசியல் என்ற புகார்கள் எடுபடவில்லை! அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., ஜனதா, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் எல்லாம் ஒரே அணியில் நின்று தேர்தலைச் சந்தித்திருந்தாலும், மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன!"
- என்றெல்லாம் எழுதின. குறிப்பாக "தினமணி" நாளிதழ் தனது 16.10.1996 தேசிய தலையங்கத்தில்- "தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி மகத்தான வாகை குடியிருப்பது எதிர்பாராததல்ல. ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத் தேர்தலில், இக்கூட்டணி - ஊழல் மலிந்த அ.தி.மு.க. அரசைத் தூக்கி எறிந்ததுடன், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையைத் தோற்றுவித்தது. இந்த உள்ளாட்சித் தேர்தல்களோ - அரசியலின் அடித்தளமே மாற்றத்துக்குள்ளாகி இருப்பதற்கான அடையாளங்களைக் காட்டுகிறது.
ஆறு மாதத்திற்கு முன்புவரை பூதாகார ஆளும் கட்சியாக தர்பார் நடத்தி வந்த அ.தி.மு.க. பொதுத் தேர்தலில் நொறுங்கி விழுந்ததிலிருந்து எழுந்து நிற்க முடியவில்லை. ஜெயலலிதாவை நாலாபுறங்களிலும் விதவிதமான கிரிமினல் வழக்குகள் கொண்டிருக்கின்றன. அவருடைய முற்றுகையிட்டுக் வீட்டிலேயே இயங்கிக் கொண்டிருந்த அதிகார மையம் - நானும், சந்திரபாபு நாயுடுவும் கிருஷ்ணா நதிநீர்த் திட்டத்தை துவக்கினோம். தமிழக எல்லையில் பாய்ந்து வரும் கிருஷ்ணா நீர்!
நடத்திய திருவிளையாடல்கள் - நாள்தோறும் ஒரு கிரிமினல் வழக்காக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதாவின் முக்கிய அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்." "பத்து ஆண்டுகளுக்கும் மேலாக - அ.தி.மு.க. ஆட்சி பலப்பல சாக்குபோக்குகளைக் கூறியபடியே - உள்ளாட்சித் தேர்தல்களை தவிர்த்து வந்தது. டெல்லியிலிருந்து எத்தனையோ எச்சரிக்கைகள் வந்தபோதும், ஜெயலலிதா அசைந்து கொடுக்கவில்லை, அப்படியிருக்க, அதிகாரப் பொறுப்பை ஏற்ற ஆறே மாதத்துக்குள் இத்தேர்தல்களை நடத்தி முடித்ததே - தி.மு.க.
அரசின் சாதனை" -என்று எழுதியது. 25.10.1996 அன்று சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். சென்னை மாநகரின் 44ஆவது மேயராக பதவியேற்றபோதிலும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை ஸ்டாலின்தான் பெற்றார். சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி மன்றத்தில், சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற விழாவில் சென்னைப் பெருநகர முதன்மை நீதிபதி ராமமூர்த்தி அவர்கள் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அந்த விழாவில் நானும், மூப்பனார் அவர்களும், மத்திய மாநில அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டோம். எளிமையாகவும், அதே நேரத்தில் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் அந்த விழா நடைபெற்றது. சென்னை மாநகராட்சி தி.மு.க. வின் பொறுப்பிலே இருந்தபோதுதான், 1973ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த நானே அதனைக் கலைப்பதாக பேரவையில் அறிவித்தேன். அதே மாநகராட்சிக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி பெற்று மேயர் பொறுப்பேற்றது.
பதவியேற்பு விழாவிற்கு மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் நேரில் வந்ததோடு, குழுமியிருந்தவர்களிடையே பொறுமையாக நடந்து வந்து மூப்பனார், ஸ்டாலின் அருகே சென்று, தன் கையில் வைத்திருந்த பரிசுப் பொருளை அவருக்கு பரிசளித்து, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியிலே மட்டுமல்ல- என்னுடைய இல்லத்து நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தபோதிலும், மூப்பனார் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வோடு வாழ்த்தத் தயங்கியதே இல்லை.
குறிப்பாக, என் மகள் கனிமொழி கர்ப்பமாக இருந்தபோது, அதற்காக வளைகாப்பு வளையல்களைக்கூட அவரே வாங்கி அனுப்பியிருந்தார். எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர், சகோதரர் ஆர்.எம்.வீ. அவர்களின் 71ஆவது பிறந்த நாளையொட்டி, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் விருதுகள் வழங்கும் விழாவில், 9.9.1996 அன்று கலந்து கொண்டு அவரை வாழ்த்தினேன். அதே விழாவில் த.மா.கா. தலைவர் அருமை நண்பர் மூப்பனார் அவர்களும் கலந்து கொண்டு ஆர்.எம்.வீரப்பன் எழுதிய "புதிய சிந்தனைகள்" என்ற நூலினை வெளியிட்டு, உரையாற்றினார்.
"உரையாற்றினார்" என்று நான் இங்கே எழுதினாலும், அவர் என்ன உரையை அந்த விழாவிலே ஆற்றினார் என்றால். "அடுத்து கலைஞர் பேச இருக்கிறார் - எனவே நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்" என்பதுதான் அவர் அன்று ஆற்றிய உரை. அந்த விழாவிலே அண்ணா பெயரால் அமைந்திருந்த விருதினைப் பெற்ற பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் அவர்கள் ஆற்றிய உரை சிறப்பானது. அண்ணா அவர்களின் நினைவைப் போற்றியும், அண்ணா அவர்களுக்கும், ராமானுஜர் அவர்களுக்கும் உள்ள வேறுபாடுகள், உடன்பாடுகள் - அவர்களுடைய காலத்தில் இருந்த ஒற்றுமை, வேற்றுமை- இவை பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி, "அண்ணா அவர்களின் வழித் தோன்றலாக நான் இருக்கிறேன்!"
என்று ஞானசம்பந்தனார் கூறினார். கூறினார் என்பதை விட எச்சரிக்கை செய்தாரென்றுதான் நான் எடுத்துக் கொண்டேன். "அண்ணாவின் வழித் தோன்றல் என்று உன்னைச் சொல்லி இருக்கிறேன் - அதற்கேற்ப நடந்து காட்டு!" என்று அறிவுரை கூறியதாகத் தான் நான் எடுத்துக் கொண்டு, அதற்கேற்பப் பணிகளையாற்றி வருகிறேன். அந்த விழாவில் அ.ச.ஞா. அவர்கள் என்னைத் தொடர்ந்து வாழ்த்தியபோது - அவரது வாழ்த்துரைகள் அங்கே தமிழாக வழிந்தபோது - அண்ணாவை நான் கண்டேன்.
அவருடைய உருவத்தைக் கண்டபோது, தந்தை பெரியாரைக் கண்டேன். அவர்கள் இருவரும் அந்த விழாவிற்கு வந்து என்னை வாழ்த்தியதாகவே எண்ணிக் கொண்டேன். அந்த விழாவில் சுப்பு ரெட்டியாருக்கும், மணவை முஸ்தபாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த விழாவில், ஆர்.எம்.வீ. அவர்களை நான் வாழ்த்தியபோது - "ஆர்.எம்.வீ.யைப் பொறுத்த வரையில் அவருடைய பிறந்தநாள் விழா என்பது விசுவாசத்திற்கு நடைபெறுகிற விழா - அவருடைய பிறந்தநாள் விழா உறுதி குலையாத நெஞ்சத்துக்கு நடைபெறுகிற விழா - அவருடைய பிறந்த நாள் விழா என்பது தவறு செய்தாலும் அதைத் திருத்திக்கொண்டு மற்றவர்கள் தவறு செய்யாமல் இருப்பதற்கு வழி காட்டுகின்ற ஒரு விழா - அந்த விழாதான் ஆர்.எம்.வீ.
அவர்களுடைய 71ஆவது பிறந்தநாள் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது! ஆர்.எம்.வீ. என்னைவிட வயதிலே இரண்டு வயது இளையவர். எனவே வாழ்த்துகின்ற தகுதி எனக்கு உண்டு என்பதால் வாழ்த்துகிறேன். முதலமைச்சர் என்பதால் வாழ்த்தவில்லை - அவரோடு பழகியவன் - தந்தை பெரியாருடைய கரம் பிடித்து வளர்ந்தவர்கள் - அறிஞர் அண்ணாவினுடைய கரம் பிடித்து - எம்.ஜி.ஆருடைய தோளோடு தோள் நின்று தோழமை கொண்டு வளர்ந்தவர்கள் நாங்கள்!
இந்த இயக்கத்திலிருந்து எம்.ஜி.ஆர்.அவர்கள் பிரிய வேண்டிய காலம் வந்த நேரத்தில், தன்னுடைய கண்ணீர்த் துளிகளால் அந்தக் காலத்தை வென்றிட முடியாதா என்று எண்ணியவர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். அதை முடியாமல் செய்தவர்கள் இன்றைக்கு எங்கே இருக்கிறார்கள் என்பது நாட்டுக்குத் தெரியும் - வரலாற்றுக்குத் தெரியும் - ஆர்.எம்.வீ. அவர்களுக்கும் தெரியும்! எனவே இந்த இயக்கத்திலே அன்றைக்கு நானும், எம்.ஜி.ஆரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பிய ஆர்.எம்.வீ.
அவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு - ஒரு இடைவெளிக்குப் பிறகு - இன்றைக்கு எம்.ஜி.ஆர். இயக்கமும், தி.மு.கழகமும் இணைந்து பணியாற்றுகின்ற ஒரு நிலையைக் காணுகின்ற அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றார் என்பதற்காக நான் அவரை வாழ்த்துகின்றேன். ஒரு பிரிவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள கூடல் இது. அதிக இன்பமான நிகழ்ச்சி; அந்த இன்பமான நிகழ்ச்சியில் என்னுடைய இளவலை வாழ்த்த என்னுடைய இதயம் விரிகிறது - மேலும், மேலும் விரிகிறது.
இந்த விரிந்த இதயத்தால் இளவல் ஆர்.எம்.வீ. அவர்களை வாழ்த்துகின்றேன்!" என்று குறிப்பிட்டேன். "என்றைக்கும் கருணாநிதியே எனக்குத் தலைவர்" என்றார். சந்திரபாபு நாயுடு. அருகே முரசொலி மாறன். சென்னை வாழ் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த கிருஷ்ணா நீர் 29.9.1996 அன்று பகலில், தமிழக எல்லைக்குள் நுழைந்தது. அதனையொட்டி. சென்னையில் பெருவிழா நடைபெற்றது. தமிழகத்தின் ஊத்துக் கோட்டை வட்டம், தாமரைக்குப்பம் அருகே ஆந்திர எல்லையை அது கடந்து, அங்கிருந்து கால்வாய் மூலம் பூண்டி நீர்த்- தேக்கத்துக்கு வந்து பயணம் வந்தது.
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைப் பெற்று - வழங்கும் விழா தாமரைக்குப்பம் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழா மேடையில் இருந்தபடி பொத்தானை அழுத்தி, கிருஷ்ணா நதி நீர்க் கால்வாயில், தமிழக ஆந்திர எல்லையில் அமைந்திருந்த தலை மதகை ஆந்திர முதலமைச்சராக அப்போதிருந்த சந்திர பாபு நாயுடு திறந்து வைத்தார். சம்பிரதாய முறைப்படி அவர் இப்படி அளித்த நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையில், நினைவுத் தூணை நான் திறந்து வைத்தேன்.
ஆந்திரக் கால்வாயிலிருந்து தமிழகக் கால்வாய்க்கு நீர் திறந்து விட்ட போது, நானும் நாயுடுவும் உற்சாகம் மிகுந்த நிலையில் காணப்பட்டோம். நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலத்த கரவொலி செய்து கிருஷ்ணா நதி நீரை வரவேற்றனர். கிருஷ்ணா நதிநீர்த் திட்ட விழாவில் நான் திறந்து வைத்த நினைவுத் தூண்! "தமிழ்நாடு -ஆந்திரத்தைப்போல அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து மக்களுக்குப் பயன்தரக் கூடிய பணிகளை நிறைவேற்ற வேண்டும்- அப்போதுதான் நாடு வாழ முடியும்!"
என்று நான் கூறினேன். மேலும் நான் பேசும்போது- "சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வரும் திட்டம் பல்லாண்டு காலத்திட்டம்! அதற்கு 1983ல் அடிக்கல் நாட்டியவர்கள் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும். என்.டி.ராமாராவும் என்பதை எண்ணி மெய் சிலிர்த்துப் போகிறேன். கலை, அரசியல் துறைகளில் ஈடுபட்ட இரண்டு நண்பர்கள் தொடங்கிய திட்டம் இது. இதை கலை அரசியல் துறையில் ஈடுபட்ட நான் வந்து நிறைவேற்றி முடிக்க சந்திரபாபு நாயுடு உதவியுள்ளார்!"
என்று தெரிவித்தேன். மேலும் அந்த விழாவில் பேசும்போது- "ஆந்திரத்திலிருந்து தண்ணீர் வருகிறது - எனக்கும் ஆனந்தக் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது! வாழ்விலோர் திருநாள் என்பார்கள் - அதைப்போல என்னுடைய பொது வாழ்க்கையில் இன்று ஒரு திருநாள்! இந்தத் திருநாள் என் திருமண நாளைவிட மகிழ்ச்சியைத் தருகின்ற நாள்! இந்த நாளில் என்னுடைய அருமைச் சகோதரர், ஆந்திரத்தினுடைய முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மிக உருக்கமாக - ஆனால் உண்மையான உளத் தூய்மையோடு தமிழகத்திற்கு இன்று வாரி வழங்கியுள்ள கிருஷ்ணா தண்ணீர் மாத்திரமல்ல - அவருடைய இனிய உள்ளத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்.
என்னைத் தன்னுடைய தலைவனாக அவர் இங்கே ஏற்றுக்கொண்டு, "என்றைக்கும் கருணாநிதி எனக்குத் தலைவர்" என்று அவர் குறிப்பிட்ட அந்தச் சொற்றொடர் என்னுடைய உள்ளத்தில் என்றும் பசுமையாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு நல்ல தளபதியைப் பெறுவதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தினுடைய பிரதமராக தேவகவுடா வீற்றிருக்கிறார் என்றால் - அந்தப் பெரு முயற்சியிலே ஈடுபட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படும்போது என்னுடைய பெயரும், த.மா.கா.வின் தலைவர் மூப்
பனாருடைய பெயரும் பெரும்பாலும் குறிப்பிடப் பட்டாலும்கூட - எங்கள் இருவரையும் அதற்காக உகப்பி விட்டு, அந்தக் காரியத்தை கடைசி நிமிடம் வரையிலே அயராமல் - ஓய்வு கொள்ளாமல் - உறக்கம் கொள்ளாமல்- உண்ணாமல் - ஓடியாடிப் பணியாற்றி வெற்றிகரமாக செய்து முடித்தவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்று சொன்னால், அதை இந்திய நாட்டுச் சரித்திரம் என்றைக்கும் மறக்காது - மறைக்கவும் செய்யாது" என்றுதான் எனது பேச்சைத் தொடங்கினேன்.
அந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பேச்சின் ஒரு பகுதி வருமாறு:- "இன்றைய தினம் தமிழகத்திற்கும் - ஆந்திர மாநிலத்திற்கும் - ஏன், இந்த தென்னிந்தியாவிற்கே ஒரு சரித்திர பூர்வமான நாள்! இன்று சென்னைப் பட்டிணத்திற்கு கிருஷ்ணா நதியிலிருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கின்றோம். இது 1983-ல் நினைத்த திட்டம். இதனுடைய மூலம் என்னவென்றால், முதன் முதலாக 15 டி.எம்.சி. தண்ணீர்விட வேண்டுமென்று, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய ஒரே மனிதர் திரு.டாக்டர் கருணாநிதி அவர்கள்.
எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமான தலைவர் என்.டி.ஆர். அவர்களின் காலத்தில்தான் இந்தத் திட்டம் தொடங்கப் பெற்றது. அன்றைய முதல்வர்கள் எம்.ஜி.ஆர். அவர்களும், என்.டி.ஆர். அவர்களும் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இப்படித் தொடங்கப்பெற்ற இந்தத் திட்டம் கொஞ்ச நாள் தாமதமாகியது. இந்தத் திட்டத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு என்பது நிர்ணயிக்கப்பட்டு, இதில் தமிழ்நாட்டின் பங்காக சுமார் 510 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.
இதை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், திரு.கருணாநிதி அவர்கள் முதல்வராக வேண்டுமென்பதற்காகவே இந்தச் சென்னைப் பட்டிணத்திற்கு ஆளுநர் சென்னாரெட்டி, தலைமையில், கிருஷ்ணா நதிநீரை என்னிடம் வழங்குகிறார், சந்திரபாபு நாயுடு! கலைஞர் தண்ணீர் விடும் திட்டம் காத்துக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என் கைகளால் சென்னைப் பட்டிணத்திற்கு தண்ணீர் விடுவதை என் பாக்கியமாக - என் பூர்வ ஜென்ம சாபல்யமாக - நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
நான் பெருமகிழ்ச்சியோடு டாக்டர் கருணாநிதி அவர்களை - "கருணாநிக்காரு" என்று அன்பாக அழைக்கும் அவர்களை - நிரந்தர முதல்வராக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நாம் ஒன்றாக இருக்கிறோம். வருங்காலத்திலும் நாம் ஒன்றாக இருப்போம். ஒருங்கிணைந்து செயல் படுவோம். நமது நட்பு நிரந்தரமானது. அரசியலில் பண்புள்ள தலைவர் டாக்டர் கடா கருணாநிதி. அவர்களை என்னுடைய தலைவர் என நான் நீண்ட நாட்களாகக் கூறி வருவதுண்டு.
எப்பொழுதும் எனக்கு டாக்டர் கருணாநிதிதான் தலைவர்! அவர் என்றென்றும் எங்களுக்குத் தலைவராக விளங்க வேண்டும்!" என்று உணர்ச்சியுடன் குறிப்பிட்டார், சந்திரபாபு நாயுடு. காலையில் நடைபெற்ற விழாவினைத் தவிர்த்து, அதே நாள் மாலையில் சென்னையில் கிருஷ்ணா நீரைப் பெற்றுக்கொள்ளும் விழா ராஜாஜி மண்டபம் எதிரில் உள்ள திடலில், தமிழக ஆளுநராக ஆளுநராக அப்போதிருந்த சென்னா ரெட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கிருஷ்ணா நதி நீரை வழங்கி உரையாற்றவும் - நான் அதனைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாற்றவுமாக விழா அமைந்தது. பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த தம்பி துரைமுருகன் வரவேற்புரையாற்றினார். மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், அருணாசலம், ஆந்திர மாநிலம் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவ பிரசாத் ராவ், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
