உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கறுப்பு நிலாவும், கலைவாணர் நினைவும்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கறுப்பு நிலாவும், கலைவாணர் நினைவும்! · 322 / 391

10. கறுப்பு நிலாவும், கலைவாணர் நினைவும்! -3-1997 அன்று, தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி வந்தார். குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா அவர்கள் மண்டேலாவிற்கு வரவேற்பு விருந்து அளித்தார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன் , வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் ஆகியோரையும் மண்டேலா சந்தித்துப் பேசினார்.

28ஆம் தேதியன்றி பிரதமர் தேவகவுடா அளித்த விருந்தில் கலந்து கொண்டதோடு, இரண்டு நாடுகளின் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைப் பிரகடனம் 28-3-1997 அன்று டெல்லியில் கையெழுத்தாகியது. அதில் இந்தியப் பிரதமர் தேவகவுடா அவர்களும், தென் ஆப்பிரிக்க அதிபர் மண்டேலா அவர்களும் கையெழுத்திட்டனர். அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சரியாகச் சொல்ல வேண்டுமேயானால், 1990ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 11ஆம் நாள் காலை, திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழக மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையிலே ஒரு பெருக்கியின் முன்னால் வந்து நின்று நான் கூறினேன்.

"தமிழ்ப் பெருங்குடி மக்களே! கழக உடன்பிறப்புக்களே! எல்லையற்ற மகிழ்ச்சியை ஏந்தி வந்துள்ள செய்தி - 27 ஆண்டு காலம் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த தென் ஆப்பிரிக்க நாட்டின் கறுப்பர் இனத் தலைவன் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு விட்டார் - இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட மாநாட்டுப் பந்தலில் குழுமி இருக்கும் அனைவரும் எழுந்து நின்று, தொடர்ந்து கையொலி செய்யுங்கள்."

"நான் போதும் போதும்" என்று கையமர்த்தும் வரையில்; கடலில்லா திருச்சியில் கடலலைகளின் முழக்கத்தைச் செய்தனர். 1918 ஜூலை 18 மண்டேலா பிறந்த நாளாகும் - கறுப்பின மக்களிடையே நெல்சன் மண்டேலா குடும்பத்தினர் ஃகோஸா இன வகையைச் சேர்ந்தவர்கள். அக்குலத்தின் தலைவராக மண்டேலாவின் தந்தை இருந்தார். அவர் பெயர் ஹென்றி கான்யிஸ் வா காட்லா என்பதாகும். அவருக்கு நான்கு மனைவிகள் - பனிரெண்டு குழந்தைகள் - மூன்றாம் மனைவியின் மகன்தான் நெல்சன் மண்டேலா.

குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர்! குடும்பத்துக்கு மொத்தம் மூன்று சின்னஞ்சிறு குடில்கள் - ஒன்று சமைத்திட! ஒன்று பொருள்களைச் சேமித்திட - ஒன்று உறங்கிட! பாய்களில் தான் படுக்கை அவர்கள் அனைவருக்கும்! இந்தியா வந்த நெல்சன் மண்டேலாவை வரவேற்கும் சங்கர் தயாள் சர்மா, தேவகவுடா நெல்சன் மண்டேலா பிறந்த குடில் ஆரம்ப வயதில் ஆடு மாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர்- ஆயினும் மகனைப் பள்ளிக் கூடத்துக்கும் அனுப்பி வைத்தார்.

1928ஆம் ஆண்டுக்குள் மண்டேலாவின் தந்தை இறந்துவிடவே, அந்தத் தந்தையின் மைத்துனரான ஜோன் கிண்டாபா என்பவர், மண்டேலாவின் படிப்பைக் கவனித்துக் கொண்டார். க்யூனு எனப்படும் மண்டேலா பிறந்த ஊரில், ஓய்வு நேரங்களில் பெரியோர்கள் கூறும் தமது இனத்தவர் பற்றிய பழைய கதைகளையும், வெள்ளையர்களால் தம்மின வரலாறுகள் மறைக்கப்பட்டதையும், வெள்ளையர் நுழைவுக்கு முன்பு அங்கிருந்த கலை - கலாச்சாரம் - வாழ்க்கை முறைகளையும் - பெரியோர்கள் கூறிடக் கேட்டு புத்துணர்ச்சி பெற்ற மண்டேலா, படிப்பையும் விடவில்லை - ஆடு, மாடு மேய்க்கும் வேலையையும் தொடர்ந்தார்.

அதே சமயம் தமது இனத்தாரின் துயர் துடைத்து, உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்று அந்த இளம் வயதிலேயே அழுத்தமான உறுதி பூண்டார், மண்டேலா. 27 ஆண்டு காலம் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன் கிண்டாபா முயற்சியினால், மண்டேலா முதலில் "கெல்ட் டவுன்" கல்லூரியிலும் பிறகு "போர்ட்ஹேர்" கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர்விடத் தொடங்கியது.

அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது! ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது! "மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம்" என்று கூறப்பட்டது.

அதை "மானப் பிரச்சினை" என்று கூறி மறுத்துவிட்டார் மண்டேலா. பின்னர் தனது மாமன் மகன் ஜஸ்டிஸ் என்பவருடன் சேர்ந்து ஜோகன்ஸ்பெர்க் நகருக்குச் சென்று, தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்தார். அங்கிருந்தும் அவரது உறவினர் தூண்டுதலால் வெளியேற்றப்பட்டதால், மண்டேலா சட்டம் படித்திட முனைந்தார். லாசா சிடிங்ஸ்கி என்ற வெள்ளைக்கார வழக்கறிஞரிடம் சட்டக் கல்வியில் பயிற்சி பெற்று திறமையாளர் ஆனார். மண்டேலா வாழ்க்கை கட்டுப்பாடு மிக்கது என்றும் -அதிகாலையில் எழும் வழக்கமுடையவர் என்றும் - நாளும் தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொண்டவர் என்றும் - எளிமையான உணவே அருந்தி, எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர் என்றும் - பெண்களுக்குத் துணையாக அடுக்களை வேலைகளில்கூட ஈடுபடுவார் என்றும் - அவரது சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

கறுப்பர் இன மக்களுக்கும் வெள்ளையருக்குமிடையே கடுமையான புகைச்சலும் - மோதுதல்களும் இருந்தபோதிலும் மண்டேலா இரு இரு தரப்பு மாணவர்களிடமும் பரந்த மனத்துடனும் பண்பாட்டுடனும் நேசமாகப் பழகி, அமைதியாகக் காந்திய வழியிலே அறப்போர் நடத்தி இன வேற்றுமைக் கொடுமையை அகற்ற நினைத்தார்! 1948ஆம் ஆண்டு மண்டேலா இளைஞர் அணியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் கறுப்பின மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் அவர் கண்களை உறுத்தின.

"காஃபிர்" என்ற இழிந்த வார்த்தையினால் கறுப்பின மக்கள் அழைக்கப்பட்டதையும் - தெருக்களில் நடமாட முடியாமல் தடுக்கப்பட்டதையும் - மண்டேலாவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமா? கறுப்பின மக்களின் நிலங்களை வெள்ளையர் பறித்துக் கொண்டனர் - வெள்ளையர் கறுப்பரிடையே காதல் மற்றும் கலப்பு மணங்கள் சட்ட விரோதமாயின - இனப்பகை பெரும்பகை - கறுப்பினத்தாருக்கு வேலைகள் மறுக்கப்பட்டன - கேளிக்கை இடங்களில் அவர்களுக்கு அனுமதி இல்லை - மீறினால் கடும் தண்டனை!

இந்தக் கொடுமைகளை எதிர்த்து, 1948ல் இளைஞர் அணியின் செயலாளரான மண்டேலா, 1949ல் கூட்டிய மாநில மாநாடு ஒன்றில், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தத் தீர்மானம் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து, அவர் 1951ல் இளைஞர் அணியின் தலைவராகவே தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்றுதான்! வெள்ளையர் வெறித்தனத்தை எதிர்த்து அமைதியாக அரும்பிய மண்டேலாவின் அறப்போர், புரட்சி மலராகவும் பூத்திடத் தவறவில்லை.

புரட்சிகள் - கிளர்ச்சிகளின் விளைவாக - சிறைப்பட்ட மண்டேலாவை நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தால், விடுதலை செய்வதாக தென்னாப்பிரிக்கா வெள்ளையர் அரசு கூறியது. அதற்கு மண்டேலா மறுப்புரைத்து, "எங்களுக்குச் சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக்கூடியது" என்று கூறிவிட்டார்.

அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. சிறையில் ஆரம்ப நிலையில் கேவலமான உணவு - அதுவும் பசியை அடக்கக் கூடியதல்ல - கல் தரையின்மீது உறங்குவதற்கு ஒரு பாய் - நாளேடுகள் வைத்திருந்தால் சிறை சட்டப்படி தண்டனை - நாள் முழுவதும் வேலை - ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும் உடைகள் அவிழ்க்கப்பட்டு சோதனை - இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த மண்டேலா, இளமை முதல் அவர் கொண்ட வைராக்கியத்தின் எதிரொலியாக, சிறைக் கொடுமைகளைப் பற்றி அவர் சொன்ன வாசகம் பின் வருமாறு: "சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை.

சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்" - என்பதாகும். தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு, சுமார் 27 மாதங்களுக்குப் பிறகுதான் அவர்கள் மீதான வழக்கு விசாரணக்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரும் தாங்கள் எந்த விதமான குற்றமும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.

அவர்களுக்குத் தரப்பட்ட குற்றப் பத்திரிகை மட்டும் 2000 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. 210 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட வேண்டுமென்று கோரப்பட்டத்தில், 200 பேர் காவல் துறையைச் சார்ந்தவர்கள். வழக்கு விசாரணை திருச்சபை அமைந்துள்ள பழைய காலக் கட்டிடம் ஒன்றிலே தொடர்ந்து நடைபெற்றது. அந்தத் திருச்சபையின் பாதிரியாருடைய அறைதான் உணவருந்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் திருமதி தையநாயகி பிள்ளை என்ற ஒரு அம்மையார்தான் தொண்டர் அணியினருடன் இணைந்து, இந்திய முறைப்படி உணவுப் பொருட்களைத் தயாரித்து விசாரணைக் கைதிகளுக்கு அளித்து வந்திருக்கிறார்.

முற்பகலில் வடையும் தேநீரும் என்றும் - பிற்பகலில் அது போலவே ஏதாவது சிற்றுண்டியும் தேநீரும் என்றும் - மதியம் இந்திய முறைப்படியான உணவு என்றும் - அந்த அம்மையார் பரிமாறியிருக்கிறார். இவ்வாறு தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்ட வீரர்களுக்கு வழக்கு நடைபெற்ற நாட்களில் எல்லாம் உணவளித்து - உபசரித்த அந்த திருமதி தையநாயகி பிள்ளை என்பவர் யார் தெரியுமா? அவர் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவரின் வழி வந்தவர் என்பதை நெல்சன் மண்டேலா பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களில் காணும்போது, நம்மையும் அறியாமல் ஒரு மகிழ்ச்சி நம் உள்ளத்தில் ஏற்படத்தான் செய்யும்.

மாவீரன் நெல்சன் மண்டேலா இந்தியாவிற்கு வருகை தந்ததை இந்தத் தொடரில் குறிப்பிடுகின்ற நேரத்தில், 2007ஆம் ஆண்டு "வெள்ளை இருட்டை விலக்க வந்த கறுப்பு நிலா" என்ற தலைப்பில், நான் எழுதிய மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றில் சில பக்கங்களைப் புரட்டினேன். அவ்வளவுதான் தொடர்ந்து தொடருக்கு வருகிறேன். தமிழக அரசின் சார்பில், 1994ஆம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா 18-8-1996 அன்று மாலையில், சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது ஆளுநராக இருந்த சென்னாரெட்டி அந்த விழாவிற்குத் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் விருது 1994ஆம் ஆண்டின் சிறப்பு நடிகராகத் தேர்வு செய்யப்பட்ட சரத்குமார்! பெற்றவர்கள் சார்பில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் உரையாற்றினர். துறையின் அமைச்சர் என்ற முறையில் முல்லைவேந்தன் வரவேற்பு உரையாற்றினார். விருதுகளை அனைவருக்கும் வழங்கி நான் பாராட்டினேன்.

சிறந்த படத்திற்கான விருது முதல் பரிசாக "நாட்டாமை" படத்திற்கு வழங்கப்பட்டது. அதனை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி பெற்றுக் கொண்டார். இரண்டாம் பரிசு "நம்மவர்" படத்திற்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு "பவித்ரா" படத்திற்கு வழங்கப்பட்டது. சிறப்புப் பரிசு "கருத்தம்மா" படத்திற்கு வழங்கப்பட்டது. விருதினை இயக்குநர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். கலைத்துறை வித்தகர்களுக்கான விருதாக அறிஞர் அண்ணா விருதினை வசனகர்த்தா ஆரூர்தாசிற்கும் - பாவேந்தர் பாரதிதாசன் விருது பாடலாசிரியர் வாலிக்கும் - ராஜா சாண்டோ விருது இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் - கலைவாணர் விருது நகைச்சுவை நடிகர் செந்திலுக்கும் எம்.ஜி.ஆர்.

விருது எழுச்சிக் கலைஞர் விஜயகாந்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது சரத்குமாருக்கும் -சிறந்த நடிகைக்கான விருது "கருத்தம்மா" படத்தில் நடித்த ராஜஸ்ரீக்கும் - சிறந்த நடிகர், சிறப்பு விருதினை "நம்மவர்" படத்தில் நடித்தற்காக நாகேஷுக்கும் - சிறந்த நடிகை சிறப்பு விருதினை "மகளிர் மட்டும்" படத்தில் நடித்த ஊர்வசிக்கும் சிறந்த இயக்குநர் விருதினை நாட்டாமை பட இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிறந்த கதாசிரியர் விருதினை ஈரோடு சௌந்தருக்கும் , சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது பாலகுமாரனுக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரகுமானுக்கும் , சிறந்த பாடலாசிரியர் விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் , சிறந்த பின்னணிப் பாடகர் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் மற்றும் பலருக்கு பல தலைப்புகளிலும் வழங்கப்பட்டன.

1994ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகள் எல்லாம் 1995ஆம் ஆண்டிலே வழங்கப்பட்டிருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ, அந்த ஆட்சியிலே இந்த விருதுகள் வழங்கப்படாத காரணத்தினாலே, 96ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால். 1994ஆம் ஆண்டுக்கான திரைப்படத் தேர்வுக் குழு அ.தி.மு.க. ஆட்சியால் அறிவிக்கப்பட்டு, அந்தக் குழு யார் யாருக்கு விருதுகளை வழங்க வேண்டுமென்று தேர்வு செய்து, அவர்களின் முடிவுகளை ஒரு உறையிலிட்டு அரசிடம் ஒப்படைத்தும், அந்த உறை பிரிக்கப்படாமலே அப்படியே கிடந்தது.

கழக ஆட்சியில்தான் அந்த உறை பிரிக்கப்பட்டு, விருதுகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விழாவும் நடைபெற்றது. அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் போது. "முதல்வர் கலைஞர் அவர்களை வாழ்த்திப் பேசுவதற்கு எனக்கு வயதோ அறிவோ இல்லை. ஆண்டவன் ரூபத்தில் வந்து இந்தத் தமிழ்நாட்டை கலைஞர்தான் காப்பாற்றியிருக்கிறார். இப்போது கலைஞர் எப்படி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை மயிலாப்பூரிலும், சைதாப் பேட்டையிலும், டெல்லி நாடாளுமன்ற வட்டாரத்திலும் பேசிக் "கழகம்தான் கலைஞரின் மூச்சு - உடம்பு - உயிர் - கோவில் - எல்லாமே" என்றார், ரஜினிகாந்த்!

கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்குள் பேசுகிற காலமும் வரும். ஒரு பெரிய அரசியல் தலைவர், அவருடைய பெயரை இங்கே சொல்லக் கூடாது - "இந்த மாதிரி சூழ்நிலையில் - கால கட்டத்தில் கலைஞர் அவர்கள் மாதிரி ஒரு அறிவாளி - ஒரு அனுபவசாலி ஆட்சிக்கு வரவில்லை என்றால், ஒன்றுமே செய்திருக்க முடியாது.அவரை வாழ்த்துவதற்கு அரசியல்ரீதியாக நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், அவரை நான் பாராட்டுகிறேன் என்று மட்டும் சொல்லுங்கள்!"

என்று சொன்னார். "இந்த மாநில நிர்வாகத்தை சீர்படுத்துவதற்கே இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிடும். ரொம்ப கஷ்டம்!" என்றும் அவர் சொன்னார். நான் அவருடைய பெயரை கலைஞர் அவர்களிடம் தனியாகச் சொன்னேன். தி.மு.கழகத் தொண்டர்களுக்கு கழகம் என்பது தோளில் போடும் துண்டு அல்ல - உடலில் ஓடுகிற ரத்தம். தொண்டர்களுக்கே ரத்தம் என்று சொன்னால், தலைவருக்கு? அந்தக் கழகம்தான் மூச்சு - உடம்பு - உயிர் - கோயில் - குடும்பம் எல்லாமே!

அந்தக் கலைஞர் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் - நல்ல மன நிம்மதியுடன் வாழ்கிற வரையிலும் முதலமைச்சராகவே வாழ்ந்து மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்!" என்று கூறினார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன் முதலாக 24-8-1996 அன்று தமிழகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் தேவகவுடா அவர்கள், சென்னை கலைவாணர் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெறுபவர் நடிகை ராஜஸ்ரீ! அரங்கத்தில் நடைபெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் "ஜீவன் சுரக்ஷா" என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு தமிழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களும், நானும், அமைச்சர் பெருமக்களும், த.மா.கா. தலைவராக இருந்த அருமை நண்பர் மூப்பனார் அவர்களும், மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்களும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றோம். என்னையும், மூப்பனார் அவர்களையும் அழைத்து பக்கத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டு, புகைப்படக்காரர்களை அழைத்து, படம் எடுக்கும்படி பிரதமர் தேவகவுடா அவர்களே கேட்டுக் கொண்டார். விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் நானும், பிரதமரும், ஆளுநரும் ஒரே காரில் கலைவாணர் அரங்க நிகழ்ச்சிக்குச் சென்றோம்.

கலைவாணர் அரங்க விழாவில் என் பேச்சை முடிக்கும்போது, "ஐந்தாண்டு காலம் இருட்டிலே கிடந்த மாநிலம் இந்த மாநிலம் - இன்றுதான் அதற்கு உதய சூரியனின் வெளிச்சம் கிடைத்திருக்கிறது! ஐந்தாண்டு காலம் இருட்டிலே வீசிய ஊழல் புயல் - மழை - வெள்ளம் காரணமாக இந்த மாநிலம் சேறும் சகதியுமாகப் போய் - நடப்பதற்குக்கூட சாலை வசதி இல்லாமல் போய்விட்டது. சைக்கிளிலே போகின்ற ஒற்றையடிப் பாதைதான் இருக்கின்றது. உதயசூரியன் வெளிச்சத்தில் நான் நடந்தும், மூப்பனார் சைக்கிளிலும், அந்த ஒற்றையடிப் பாதையில் சென்று, புதிய தமிழகத்தை உங்கள் முன்னால் இன்றைக்குக் காட்டுகின்றோம்.

இந்த சவலைப் பிள்ளைமீதும் உங்களுடைய கண்பார்வையை வையுங்கள் என்று பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறன்" என்று கூறினேன். பிரதமர் தேவகவுடா அவர்கள் தனது உரையில், "இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதன் முதலாக இப்போதுதான், மத்தியிலே அகில இந்தியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைந்திருக்கின்றன. அதுதான் ஐக்கிய முன்னணிஅரசு . இந்த ஆட்சி அமைய கலைஞர் கருணாநிதியும், மூப்பனாரும் பெரும் பங்கேற்றனர்.

அவர்கள் இருவரும் மத்திய ஆட்சிக்கு வலுவான இரண்டு தூண்கள் என்றால் மிகையாகாது. மாநிலக் கட்சிகளின் ஒத்துழைப்போடு, நாங்கள் மத்தியிலே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் உங்கள் மாநிலத்தின் நலன்களைக் கைவிட்டு விடுவோம் என்று கேள்விக்கே இடமில்லை!"

என்றுரைத்தார். 1996ஆம் ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையில் எதிக்கட்சித் தலைவராக இருந்தவர் அருமை நண்பர் சோ.பாலகிருஷ்ணன் அவர்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்றால், எதையும் எதிர்ப்பதுதான் கொள்கை என்று இல்லாமல், நல்லவைகளை ஆதரிப்பார். நல்லது என்றால் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கிடுவார். அவையிலே அதிகம் பேசமாட்டார் ஆனால், பேசுகிற ஒவ்வொரு நேரத்திலும் ஆழமான பல கருத்துக்களை - பல செய்திகளை - அகழ்ந்தெடுத்துத் தருவார்.

பேரவை இல்லாத நேரங்களில், அவர் சந்திக்கும் பொதுமக்கள் அவரிடம் தருகின்ற கோரிக்கை மனுக்களை எல்லாம் முறையாகத் சிறந்த பாடலாசிரியர் விருதினைப் பெறுகிறார், கவிப்பேரரசு வைரமுத்து! தொகுத்து, அதைப்பற்றிப் பேரவையில் உரிய நேரத்தில் எடுத்துக் கூறி, அவைகளைப்பற்றி கவனித்திட வேண்டுமென்று கூறுவார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் அவை அமைதியாக நடைபெறும். காவல்துறை மானியத்தின் மீதான விவாதம் 96ஆம் ஆண்டு நடைபெற்ற போது, டி.ஜி.பி.

அலுவலகக் கட்டிடத்தை இடிக்க அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முயற்சிகளையெல்லாம் எடுத்துக் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சென்னை கடற்கரைமீது அளவு கடந்த ஆசை கொண்டவர். "சென்னை மெரீனா கடற்கரைதான் சென்னை மாநகரத்திற்கே சுவாசப் பை" என்று அடிக்கடி சொல்வார்.

கடற்கரை ஓரத்திலே உயரமான கட்டிடங்கள் கட்ட யாராவது முற்பட்டால், உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் அறிக்கை வெளியிடுவார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, கடற்கரை சாலையிலே டி.ஜி.பி. அலுவலகத்தை இடிப்பதற்கான முயற்சியிலே ஈடுபட்டபோது, பலரும் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அந்த நேரத்தில் சிலர் நீதிமன்றம் சென்று, "அந்தக் கட்டிடத்தை இடிக்கக்கூடாது" என்று தடையாணை பெற்ற காரணத்தால், அந்தக் கட்டிடம் இடிக்கப்படாமல் தப்பியது.

காவல் துறையின் தலைவராக ஒரு காலத்தில் இருந்த, புகழ்பெற்ற அதிகாரி எப்.வி.அருள், ஐ.பி.எஸ். , அவர்கள் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் "விரிந்த நீலக் கடலைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் நமது அலுவலகத்தைப்போல - காவல் துறையின் தலைமை அலுவலகத்தைப்போல - இந்தியாவில் மட்டுமல்ல - உலகில் எந்தப் போலீஸ் தலைமை அலுவலகமும் இவ்வளவு அழகான சூழ்நிலையிலே அமையவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், அந்தப் புத்தகத்தில் "அந்த அலுவலகத்திற்கு அருகில் "மசானிக் லாட்ஜ்" என்று ஒன்று இருந்ததாகவும் - அதாவது ரோட்டரிக் கிளப் போன்று உலகம் முழுவதும் கிளைகள் உள்ள ஒரு அமைப்பாகவும் இருந்தது என்றும் - 1850இல் இருபத்து ஐயாயிரம் ரூபாய் கொடுத்து, அந்தக் கட்டிடத்தை பிரிட்டிஷ் அரசு விலைக்கு வாங்கியது" என்றும் எழுதியிருக்கிறார்.

இத்தகைய புகழுக்குரிய கட்டிடத்தைத் தான் அ.தி.மு.க. ஆட்சியில் இடிப்பதற்கு முன்வந்து, நீதிமன்றத் தடையாணை காரணமாக, அந்தப் பணியை நிறுத்தி வைத்திருந்தார்கள். 96ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி வந்த போது, இதைப் பற்றியெல்லாம் அதிகாரிகளை அழைத்துக் கலந்து பேசி, "புகழுக்குரிய அந்தக் கட்டிடம் இடிக்கப்படக்கூடாது - காவல் துறையின் தலைமை அலுவலகம் அந்தக் கட்டிடத்திலேதான் தொடர்ந்து இயங்க வேண்டும் - இடப் பற்றாக்குறை இருக்குமேயானால், தற்போதுள்ள கட்டிடத்திற்குப் பின்புறமுள்ள காலி இடத்திலே தனியாக ஒரு கட்டிடத்தைக் கூடுதலாகக் கட்டிக் கொள்ளலாம்!"

என்று சட்டப் பேரவையில் அறிவித்தேன். அந்த நடவடிக்கை இன்றளவும் நடைமுறையிலே இருந்து வருவதோடு, புகழுக்கும் பழமைக்கும் உரிய அந்தக் கட்டிடம் இன்றளவும் அந்த இடத்திலே நீடித்து வருகிறது. "ஜீவன் சுரக்ஷா" திட்டத்தினை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமர் தேவகவுடாவை. என்னுடன் இணைந்து வரவேற்கும் மூப்பனார், ப.சிதம்பரம்! 1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் அறிக்கையிலே கூறியவைகளையும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்து ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் தெரிவித்த அறிவிப்புகளையும் பட்டியலிட்டு, துறை வாயிலாக ஒவ்வொரு அமைச்சருக்கும் அவற்றை அனுப்பி, அவர்களின் துறை சார்பில் அந்த அறிவிப்புகளுக்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டனவா - ண்என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது - எடுக்கப்படவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் - என்பதைப் பற்றியெல்லாம் முதல் அமைச்சர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு அமைச்சரும் விளக்கமளிக்க வேண்டுமென்று கோரி, நானே எல்லா அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினேன்.

தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததற்காகவும், வரலாறு படைத்த நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ததற்காகவும், தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பில் 27-8-1996 அன்று, தலைமைச் செயலகத்திலே எனக்கொரு பாராட்டுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய அந்தச் சங்கத்தின் செயலாளர் பத்மநாபன் , என்னை யாரோடு ஒப்பிடுவது - எதோடு ஒப்பிடுவது - என்றெல்லாம் தேடி, நிலவோடு ஒப்பிட முடியுமா என்று அவரே கேட்டு - இறுதியாக இதயத்தோடு ஒப்பிட்டு, "நீங்கள் எங்களின் இதயம்" என்று அந்த விழாவிலே கூறினார்.

அதைப்பற்றி நான் கூறும்போது, "என்னதான் இதயம் துடித்துக் கொண்டிருந்தாலும், இதயம் மாத்திரம் துடித்துக் கொண்டிருந்தால் மனிதனுக்கு உயிர் இருக்கும்! அதே நேரத்தில், மூளை பணியாற்றாமல் இருந்தால் - மூளை வேலை செய்யாமல் இருந்தால் - மனிதன் "கோமா" நிலையிலேதான் இருப்பான். அவனால், செயல்பட முடியாது. எனவே தலைமைச் செயலகத்து அலுவலர்களே! நான் இதயம் என்றால், நீங்கள் தான் மூளை!"

என்று பலத்த கையொலிக்கிடையே தெரிவித்தேன். "தலைமைச் செயலகத்திலிருந்து கிளம்புகின்ற அரசாணைகள் - அதனால் பயனடைபவர்களுக்குச் சென்றடைய வேண்டுமேயானால் - தலைமைச் செயலகம் என்கின்ற மூளை ஒழுங்காக இருக்க வேண்டும் - சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்!"

என்றும் அந்த விழாவிலே நான் கேட்டுக் கொண்டேன். மேலும், "அரசாங்கத்தின் கோப்புகள் சிகப்பு நாடாவினால் கட்டப்பட்டு, உறங்கிக் கொண்டிருந்தால், ஊழல் எழுந்து நின்று ஊர் கற்றக் கிளம்பிவிடும்!" என்றும் தெரிவித்து, அதற்கு முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சியினால் எத்தனை கோப்புகள் தேக்கி வைக்கப்பட்டிருந்தன என்பதற்கான விவரங்களையும் அங்கே தெரிவித்தேன். ஆண்டு வாரியாகக் கணக்கெடுத்து, நான்கரை ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த கோப்புகளின் எண்ணிக்கை 60 என்றும் - 4 ஆண்டுகளாகப் பார்க்கப்படாமல் இருந்த கோப்புகளின் எண்ணிக்கை 120 என்றும் - மூன்றரை ஆண்டுகளாகக் கையெழுத்திடாமல் கிடந்த கோப்புகளின் எண்ணிக்கை 150 என்றும் - 3 ஆண்டு காலம் தூங்கிய கோப்புகள் 457 என்றும் - இரண்டரை ஆண்டு காலம் ஒய்வெடுத்த கோப்புகள் 238 என்றும் - 2 ஆண்டுகள் மட்டுமே கவனிக்கப்படாமல் இருந்த கோப்புகள் 229 என்றும் - ஒன்றரை ஆண்டுகளாக ஏங்கிக் கிடந்த கோப்புகளின் எண்ணிக்கை 276 என்றும் - ஓராண்டு காலம் மட்டுமே ஓய்விலே இருந்தவை 184 கோப்புகள் என்றும் -இப்படி மொத்தத்தில் 2681 கோப்புகள் அ.தி.மு.க.

ஆட்சியில் கிடப்பிலே போடப்பட்டிருந்தன என்றும் - அந்த நிகழ்ச்சியிலே குறிப்பிட்டுக் காட்டினேன். அதே நேரத்தில் ஒரு சில கோப்புகள் மின்னல் வேகத்தில் கையெழுத்தாகித் திரும்பியுள்ளன. இன்னும் சொல்லப் போனால், ஒரே நாளில் கீழேயிருந்து மேலேவரை அதிகாரிகளும், அமைச்சர்களும், முதல் அமைச்சரும் கையெழுத்திட்ட கோப்புகளும் இருந்தன. 1996ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள், 31ஆம் நாள் தமிழகச் சட்டப் பேரவையில், சென்னை நகரை அனைத்து மொழிகளிலும் "சென்னை" என்றே அழைக்க வகை செய்யும் சட்ட முன் வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

"நாம் பிறந்த மண்ணுக்கு "தமிழ்நாடு" என்று பெயர் அமைத்த பேரறிஞர் அண்ணா வழியில் வந்துள்ள இந்த அரசு, இந்த நகரத்திற்கு மெட்ராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை என்ற சிங்காரத் தமிழிலே அழைக்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறது!" என்று குறிப்பிட்டேன். இந்த மசோதாவிற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். "நீங்கள் எங்களின் இதயம்" என்று என்னைப் பாராட்டிய தலைமைச் செயலக அலுவலர்கள் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, விடுதலை நாள் போன்ற முக்கியமான நாட்களிலும், முக்கியத் தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களிலும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டியும், சிறைக் கைதிகள் - ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு விடுதலை - தண்டனைக் குறைப்பு - என்றெல்லாம் வழங்கப்பட்டு வந்தது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் உயிரோடு இருந்தபோதே - 1967ல் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். 1977ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி, எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1989ல் நான் முதலமைச்சாரக இருந்த போது, அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டியும் 1990ல் தி.மு.கழக புரட்சிக் கவிஞர் ஆட்சியில் டாக்டர் அம்பேத்கர், புரட்சிக் விழாக்களை பாரதிதாசன் ஆகியோரின் நூற்றாண்டு யொட்டியும் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். இப்படி விடுதலை செய்வதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. என்னவென்றால், சிறையில் இருந்த காலத்தில் அவர்களது பொதுநடத்தை திருப்திகரமாக இருந்திருக்க வேண்டும்- அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் வெளியில் இல்லை என்ற நிலை இருக்க வேண்டும் - விடுதலை செய்யப்படுபவர்கள் கடுங்குற்றங்களான கற்பழிப்பு, கொள்ளை, கொடூரமான குற்றங்கள், ஏமாற்று வேலை, கள்ளக் கடத்தல், பொருளாதாரக் குற்றங்கள், பதுக்கல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், விபச்சாரம், மருத்துவச் சட்டம், மற்றும் உணவுக் கலப்படச் சட்டங்களின் கீழ் குற்றம் புரிதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருக்கக்கூடாது - அவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்.

இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு, 15-9-1996ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 88வது பிறந்தநாளையொட்டி, அந்தத் தேதியில் புத்தாண்டுகள் தண்டனையை அனுபவித்து முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 419 சிறைக் கைதிகள் அந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர். 1992, 1993, 1994 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது, அவருடைய பிறந்த நாளையொட்டி, அவரே சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

1996ஆம் ஆண்டு, 3-9-1996 அன்று சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் நினைவு நாள் விழா தமிழக அரசின் சார்பில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர், துரைமுருகன் , தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் ஆகியோர் விழாவிற்கு கலைவாணர் சிலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படம்! முன்னிலை வகித்தனர். நடிகர் சிவக்குமார், வி.கே.ராமசாமி, தொலைக் காட்சி இயக்குநராக இருந்த ஏ.நடராசன், நடிகர் செந்தில், சந்திரசேகர், திருமதி அரசு மணி மேகலை, நடிகர் ராதாரவி, சாரதா நம்பி ஆரூரன், நடிகை எம்.என்.ராஜம், நடிகர் நாகேஷ், நடிகர் விஜயகாந்த், கவிஞர் வாலி, இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோர் என்.எஸ்.கே.

அவர்களின் பெருமைகளைப்பற்றி உரையாற்றினார்கள். கலைவாணர் அவர்களுடன் எனக்கு நீண்ட நாட்கள் நெருக்கமுண்டு. கலைவாணர் அனைவரையும் சிரிக்க வைத்தார் - சிந்திக்க வைப்பதற்காகச் சிரிக்க வைத்தார் என்று சொன்னால் மாத்திரம் போதாது - அவர் சிரிக்க வைத்ததே சிந்திக்க வைப்பதற்காகத்தான் - அதுதான் பேருண்மையாகும்! 13-9-1944 அன்று என்னுடைய மண விழா. எனக்கும் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் தங்கைக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது ஒரு வழக்கிலே சிக்கி, சிறைச்சாலையில் இருந்து - ஜாமீனில் வெளியே வந்திருந்த கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், அந்தத் திருமண விழாவிற்கு வந்தது மாத்திரமல்லாமல், அன்றிரவு திருவாரூரில் தெரு வீதியில் திருமணத்தை முன்னிட்டு, கிந்தனார் கதாகாலட்சேபத்தையும் நடத்தினார். அதே நாளில்தான் சிதம்பரம் ஜெயராமன் அவர்களுக்கும் திருமணம். எனக்கு நடைபெற்

றது சுயமரியாதைத் திருமணம். அவருக்கு நடைபெற்றது. வைதீக முறை திருமணம். அந்த இரண்டு திருமணங்களுக்கும் பண்ருட்டியால் உருவாக்கப்பட்ட மோசடியான புகைப்படம்! சேர்த்துத்தான் கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் நிகழ்ச்சி. அதிலே வேடிக்கை என்னவென்றால், கலைவாணரின் நிகழ்ச்சியைக் கேட்க பல்லாயிரக் கணக்கான மக்கள் குழுமிய காரணத்தால், மாப்பிள்ளையான நானும், என் மைத்துனரும் கூட கச்சேரி நடந்த இடத்திற்கு அருகே செல்ல முடியாமல், பக்கத்திலே உள்ள ஒரு வீட்டின் இடிந்த சுவரிலே உட்கார்ந்து கொண்டுதான் கலைவாணருடைய கதாகாலட்சேபத்தைக் கேட்டோம் என்றால், எந்த அளவிற்கு செல்வாக்கு அந்த நகைச்சுவை அரசருக்கு அப்போது இருந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

1944-45ஆம் ஆண்டுகளில் அவர் மீண்டும் வழக்கின் தொடர்பாக சிறைபுக நேரிட்டபோது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது - தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள வள்ளியூர், கள்ளிக்குளம் ஆகிய இரண்டு ஊர்களில் கலைவாணரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் - பெரியாரிடத்திலே "குடியரசு" அலுவலகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த நான், பெரியார் தந்தி வாயிலாக என்னை அழைத்ததன் காரணமாகச் சென்று, கலைவாணரை விடுதலை செய்ய வேண்டுமென்று அந்தக் கூட்டங்களிலே கலந்து கொண்டு உரையாற்றினேன். தற்போது சென்னையில் உள்ள "கலைவாணர் அரங்கம்" அதற்கு முன்பு "பாலர் அரங்கம்" என்ற பெயரிலேதான் இருந்தது.

அந்த அரங்கத்தின் வடிவத்தையே மாற்றி அமைத்து, "கலைவாணர் அரங்கம்" என்று அதற்குப் பெயர் சூட்டியவன் நான்தான். அந்த அரங்கத்திற்குப் பெயர் வைப்பதற்கு முன்பே, பேரறிஞர் அண்ணா தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் குற்றாலம் சென்றிருந்தேன். அங்கேயிருந்த ஒரு மன்றத்திற்கு கலைவாணர் பெயரைச் சூட்டச் செய்தவனும் நான்தான். காரணம், குற்றாலம் என்றால் கலைவாணருக்கு மிகவும் பிடிக்கும். ஆண்டுதோறும் குற்றாலம் சென்று அந்தச் சாரலை அனுபவிப்பதில் அவருக்குத் தனி மகிழ்ச்சி உண்டு.

அதை அறிந்திருந்த நான், அங்கேயிருந்த மன்றத்திற்கு அவருடைய பெயரைச் சூட்டி, "கலைவாணர் மன்றம்" என்று அழைத்திடச் செய்தேன். உலகத் தமிழ் மாநாட்டினை அண்ணா அவர்கள் முன்னின்று நடத்தியபோது, கலை உலகப் பெருமக்கள் எல்லாம் அண்ணா அவர்களுக்குத் துணையாக இருந்து, அந்த மாநாட்டை நடத்திட உதவி செய்து, அதிலே இருபதாயிரம் ரூபாய் கலை உலகத்தினரிடம் வசூல் செய்த தொகை மீதப்பட்டது. அந்தத் தொகையை என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தபோது, அதனை நல்ல வழியில் செலவழிக்க வேண்டுமென்று எண்ணி எஸ்.எஸ்.வாசன் அவர்களிடத்திலும், என்னுடைய அன்பிற்கினிய நண்பர்களில் ஒருவராக இருந்த ஏ.எல்.

சீனிவாசன் அவர்களிடத்திலும், ஏனைய கலையுலக நண்பர்களிடத்திலும் எடுத்துச் சொல்லி - அந்த இருபதாயிரம் ரூபாயைக் கொண்டு, கலைவாணருக்கு ஒரு சிலை வடிக்கலாம் என்று என் விழைவினைத் தெரிவித்து - அவர்களையெல்லாம் ஒப்புக் கொள்ள வைத்தேன். அந்த வேண்டுகோள் வீண்போகாமல், உடனடியாக சிலை செய்யப்பட்டு - அதுவும் கலைவாணருடைய இல்லத்திற்கு அருகிலே - அவர் உயிரோடு இருந்தபோது பல நாடகங்களை நடத்திய வாணி மகாலுக்கு எதிரிலே - கலைவாணரின் சிலை இன்றளவும் நிற்கக் காரணமாக இருந்தேன்.

அதிலேகூட ஒரு வேடிக்கை. அந்தச் சிலை திறப்பு விழாவின் போது, சிலைக்குக் கீழே நின்று அண்ணா அவர்களுடன் நானும், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், வாசன், ஏ.வி.எம். செட்டியார் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் போன்றவர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டு - அந்தப் புகைப்படம் ஏடுகளில் எல்லாம் வெளிவந்தது. ஆனால் அதற்குப் பின்னர் வந்த ஆட்சியிலே சிலையைப் புதுப்பிக்கிறோம் என்று கூறி, கல்வெட்டிலே இருந்த என்னுடைய பெயரை அகற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டதும் - பண்ருட்டி ராமச்சந்திரன் பொறுப்பில் விழா மலர் ஒன்றினைத் தயாரித்தபோது - ஏற்கனவே கலைவாணர் சிலை திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்திலே இருந்த என்னுடைய உருவத்தை மட்டும் நீக்கிவிட்டு, மற்றவர்களைக் கொண்ட புகைப்படத்தினை அந்த மலரிலே வெளியிட்ட சூழ்ச்சியும் நடைபெற்றது.