உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நேபாளத்தில் ஒரு பூபாளம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நேபாளத்தில் ஒரு பூபாளம் · 318 / 391

6. நேபாளத்தில் ஒரு பூபாளம் நா ன் வேண்டுகோள் விடுத்தும் கேட்காமல் எனது 85ஆவது பிறந்த நாளை பல்வேறு அமைப்புகளும் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தை முடிக்கின்றபோது தந்தை பெரியார் அவர்கள் என்னுடைய 49ஆவது பிறந்த நாள் விழாவிற்கு அவர் கையெழுத்திட்டு எழுதிய வாழ்த்துச் செய்தியை தாய்க் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், பாதுகாத்து வைத்திருந்து என்னிடம் கொடுத்தது பற்றி எழுதியிருந்தேன்.

அந்த வாழ்த்துச் செய்தியிலே தந்தை பெரியார் அவர்கள்; பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:- "மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சியடைந்தேன். டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவதிலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன்.

டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட காரியங்கள் பயப்படும்படியான என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார். இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம் டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும், வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல், எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல், துணிந்து காரியமாற்றி வருகிறார்.

பொதுவாகவே சமுதாயத் துறையில் சீர்திருத்தத் தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடையவும், பழமை விரும்பிகளுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல், துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி, அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்" தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு என்னை வாழ்த்தியது 1972ஆம் ஆண்டு என் 49ஆவது பிறந்த நாள் விழாவினை யொட்டியாகும்.

இதே 1972ஆம் ஆண்டுதான் - இன்று பிரச்சினையாகப் பேசப்படுகின்ற நேபாளத்தின் மன்னராக பீரேந்திரர் வீர விக்கிரம ஷா தேவ் பட்டத்திற்கு வந்தார். மன்னர் பீரேந்திராவிற்கும், அந்த நாட்டில் நடைபெற்று வந்த மன்னராட்சிக்கும் ஏற்பட்ட முடிவு பற்றி எழுதுவதில், எனக்குத் தனி உற்சாகம்! தந்தை பெரியாரின் வாழ்த்துச் செய்தியை தாய்க் கழகத் தலைவர் வீரமணி என்னிடம் தந்தார்! 1972ஆம் ஆண்டு நேபாளத்தின் மன்னராக பீரேந்திரா பொறுப்புக்கு வந்தபின், வாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் அரண்மனையில் விருந்தளிக்கும் வழக்கம் தொடங்கிற்று.

அந்த விருந்தினை ஒவ்வொரு வாரமும் அளிப்பவர்கள் சுற்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2001ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் நாள் வெள்ளிக்கிழமை விருந்தினை அளிக்க வேண்டியவர் இளவரசர் தீபேந்திரா. ஆனால் அவரோ; தன் குடும்பத்தினர் அனைவருக்கும் துப்பாக்கிக் குண்டுகளையே விருந்தாகப் படைத்தார். 1.6.2001 அன்று காட்மாண்ட் நாராயண் ஹிட்டி அரண்மனையின் "த்ரிபுவன் ஸதன்" மண்டபத்தில் வழக்கமான வாராந்தர விருந்துக்கு ஏற்பாடாகி இருந்தது.

இரவு 8 மணிக்குத்தான் தீபேந்திரா அரண்மனைக்கு வந்து சேருகிறார். மற்ற அரச குடும்பத்தினர் அருகிலேயிருந்த வேறொரு அறையில் இருக்கிறார்கள். அங்கே சென்று தாயுடன் தன் காதலியான தேவயானி ராணாவை மணந்து கொள்ள ஒப்புதல் கேட்டு வாக்குவாதம் செய்கிறார். அப்போது இளவரசர் தீபேந்திராவிற்கு வயது 29. காதலி தேவயானிக்கு வயது 32. ராணி ஐஸ்வர்யா, ஜோதிடர்கள் இளவரசருக்கு 35 வயதான பிறகே திருமணம் செய்ய வேண்டுமென்றும், அதற்கு முன்பு அவருக்குக் குழந்தை பிறந்தால் மன்னரின் உயிருக்கு ஆபத்து என்று சொல்லியிருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

மகனை அமைதிப்படுத்த அறைக்குச் செல்லும்படி தாயார் கூறுகிறார். இளவரசர் தீபேந்திரா போதையில் இருந்திருக்கிறார். கீழே விழுவதும், உளறுவதுமான நிலை. தீபேந்திராவை குடும்பத்தினர் மூவர் அவருடைய அறைக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அங்கே சென்றதும் கதவை உள்பக்கமாக சாத்திக் கொண்டு மேலும் விஸ்கியையும், கஞ்சாவையும் இளவரசர் தீபேந்திரா பயன்படுத்திக் கொண்டதாக செய்திகள். காதலி தேவயானிக்கு போன் செய்ததை அவருடைய மொபைல் போன் பதிவு செய்திருந்தது.

இரவு 9 மணி. தீபேந்திரா படிகளில் இறங்குகிறார். முன்னறையில் இளவரசர் பாரஸ், இளவரசி பூஜா, ஷாஹி, ஜெனரல் ரவி ஷம்ஷேர் ராணா. ராஜ மாதா ரத்னாவின் சகோதரியை மணந்த இந்தியாவைச் சேர்ந்த மகேஷ் குமார் சிங் ஆகியோர் இளவரசர் துப்பாக்கியுடன் நுழைவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இளவரசர் பாரஸ் எதிரே சென்று தடுக்க முயலுகிறார். அவரை "வெளியே போ" என்று பிடித்துத் தள்ளிவிட்டு உள் அறைக்குள் தீபேந்திரா நுழைகிறார்.

அங்கே அரசரும், அரசியும் இருக்கிறார்கள். தீபேந்திரா அரசர் பிரேந்திராவை நோக்கிச் சுடுகிறார். மீண்டும் தன் அறைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறார். இந்த முறை அவர் கையில் இருந்தது 5.56மி.மீ. ஹெக்லர் அண்ட் கோச் ரைஃபிள். தீபேந்திரா வெறி பிடித்தவர் போல் கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்து விடுகிறார். உறவினர்களான ஷார்தா, ஷாந்தி, ஜயந்தி ஷார்தாவின் கணவர் குமார் கட்கா எல்லோரும் சுருண்டு விழுந்து விடுகின்றனர்.

தீபேந்திரா அத்துடன் திருப்தி அடையவில்லை. தோட்டத்திற்கு வருகிறார். அவருடன் வாக்குவாதத்தில் இறங்க தாய் ஐஸ்வர்யா இளவரசரை நோக்கி வருகிறார். எதையும் கேட்கின்ற நிலையில் இல்லாத அவர், தாய் ஐஸ்வர்யாவையும் நீரஜன் ராணியையும் நோக்கிச் சுடுகிறார். இறுதியாக அவர் துப்பாக்கியை திருப்பி தன்னையும் இரண்டு முறை சுட்டுக் கொள்ள, அதன் காரணமாக கீழே விழுகிறார். எனினும் கோமா நிலையில் அவர் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் நினைவில்லாமல் இருந்து அப்படியே அவரும் இறந்து விடுகிறார்.

மன்னர் பீரேந்திரா சுடப்பட்டதும், அடுத்துப் பட்டத்திற்கு வர வேண்டிய இளவரசரும் தனக்குத் தானே சுட்டுக் கொண்டு கோமா நிலையில் இருந்ததால், மன்னரின் தம்பியாகிய ஞானேந்திரா மன்னராக நியமிக்கப்படுகிறார். நேபாள மன்னர் குடும்பத்தினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்ட அந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1768ஆம் ஆண்டு காட்மாண்ட் மீது மன்னர் பிருத்வி நாராயண் ஷா படையெடுத்து வெற்றி கண்டதைத் தொடர்ந்து நேபாளத்தில் மன்னர் ஆட்சி தொடங்கியது.

இடையில் 1846ஆம் ஆண்டு ஜங் பகதூர் ராணா என்பவர் பிரதமரானபோது, மன்னர்களின் அதிகார மையம் ஆட்டம் காணத் தொடங்கியது. 1960ஆம் ஆண்டு அந்த நாட்டில் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டது. 1972இல் புதிய மன்னராக பீரேந்திரா பதவியேற்றார். 1990இல் அங்கே அரசியல் கட்சிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாவோயிஸ்டுகள் பெரும் போராட்டத்தை தொடங்கினர்.

2006ஆம் ஆண்டு அதிகாரத்தை மன்னர் விட்டுக்கொடுத்தார். பிரதமராக கிரிஜா பிரசாத் கொய்ராலா மன்னர் பீரேந்திராவும் சுட்டுக் கொல்லப்பட்ட ராணி ஐஸ்வர்யாவும் மற்றும் குடும்பத்தினரும் பதவியேற்றார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த 2007இல் இடைக்கால நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, மன்னரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. கடந்த மாதம் ஏப்ரல் 10ஆம் தேதி அங்கே நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 601 இடங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கம் பங்கேற்று 220 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியானது.

வேறு இரண்டு கட்சிகளின் ஆதரவுடன் அங்கே கூட்டணி ஆட்சி அமையவுள்ளது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27.5.2008 அன்று பதவியேற்றனர். காட்மாண்டில் உள்ள பீரேந்திரா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 28.5.2008 அன்று தொடங்கியபோது மன்னராட்சி நேபாளத்தில் ஒழிக்கப்பட்டு, குடியரசு நாடாக அறிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போதுவரை அங்கே மன்னராக இருந்த ஞானேந்திரரும் சாதாரணக் குடிமகன் என்ற நிலையை அடைந்தார். இதுவரை பிரமாண்ட அரண்மனையில் வசித்து வந்த அவர் இனி எங்கே குடியேறப் போகிறார் என்பதெல்லாம் தெரியவில்லை. மாவோ இயக்கம் அவர் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டுமென்று வலியுறுத்துகிறது. மன்னர் அதற்கு செவிசாய்க்க மறுத்ததால், புதிய ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவர் அரண்மனையைக் காலி செய்ய 15 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

அவர் அரண்மனையைக் காலி செய்த பிறகு அதை அருங்காட்சியகமாக மாற்றவும் புதிய அரசு திட்டமிட்டுள்ளது. மன்னரைப் போற்றிப் பாடும் கீதம் தடை செய்யப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட உள்ளது. அரண்மனையில் மன்னரது கொடி இறக்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. "குடை நிழலிருந்து "குஞ்சரம்" ஊர்ந்தோர் நடை மெலிந்து ஒரூர் நண்ணினும் நண்ணுவர்" என்று "வெற்றி வேற்கை" யில் வரும் தமிழ்ப் பாடல் எவ்வளவு பொருத்தமாக ஒலிக்கிறது!

இதற்கிடையில் 28ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையின் கூட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, கூட்டம் நடக்கவிருந்த இடத்தின் வெளியே வெடி குண்டு தாக்குதல் கொல்லப்பட்ட மன்னரின் குடும்பம் எரியூட்டப்பட்ட காட்சி. இறுதியில் மன்னராக நியமிக்கப்பட்ட ஞானேந்திரா ஒன்று நடைபெற்ற போதிலும், நல்ல வேளையாக அதிலே யாரும் காயமடையவில்லை. 2001ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களை நினைவூட்டுகையில், 1996ஆம் ஆண்டு தி.மு.கழகம் பதவிப் பொறுப் பேற்ற அந்த ஆண்டு, அதே காலக் கட்டத்தில், உலக அளவில் நடை பெற்ற சில முக்கிய தேர்தல்களையும், நிகழ்வுகளையும் பற்றி இத்தொடரில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றில் அந்த 1996ஆம் ஆண்டுதான் அதிபர் தேர்தல் நடைபெற்றது. "நெஞ்சுக்கு நீதி"யின் நான்காம் பாகத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன் என்றபோதிலும் 96ஆம் ஆண்டு அங்கே நடைபெற்ற அதிபர் தேர்தலைப் பற்றி சுருக்கிச் சொல்லிட விரும்புகிறேன். அமெரிக்காவில் அதிபரை மக்களே தேர்ந்தெடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில், முதல் செவ்வாய்க்கிழமை அன்று இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று அரசியல் சாசனத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

96ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வில்லியம் ஜெஃபர்சன் கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவருடன் அப்போது துணை அதிபராக இருந்த ஆல்பர்ட் கோர், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்டார். குடியரசுக் கட்சியின் சார்பில் பாப் டோல் என்பவர் அதிபர் பதளிக்கும், ஜாக் கெம்ப் என்பவர் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிட்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு முக்கியமான அம்சம்- தேர்தலுக்கு முன்பு போட்டியிடுபவர்கள் ஒரே மேடையில் வாக்காளர்களுக்கு முன்பு வாதிட வேண்டும்.

6.10.1996 அன்றும், 16.10.1996 அன்றும் கிளிண்டனுக்கும், பாப் டோலுக்கும் இடையே ஹார்ட்போர்டு என்ற இடத்திலும், 9.10.1996 அன்று துணை அதிபருக்குப் போட்டியிடுபவர்களுக்கு இடையேயும் விவாதங்கள் நடைபெற்றன. பரபரப்பாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியானது. பில்கிளிண்டன் 4 கோடியே 74 லட்சத்து 2 ஆயிரத்து 357 வாக்குகள் பெற்று - 49.2 சதவிகித மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

இவருக்கு அடுத்து, பாப் டோல் 3 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரத்து 755 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சிறு கட்சியினரில் ராஸ் பெராட் என்பவர் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் 80 இலட்சத்து 85 ஆயிரத்து 402 வாக்குகள் பெற்றார். எஞ்சிய வேட்பாளர்கள் யாரும் ஒரு சதவிகித வாக்குகள் கூடப் பெறவில்லை. துணை அதிபராக அல்கோர் தேர்வு பெற்றார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 1936இல் அந்தப் பெருமையைப் பெற்றார். 16.6.1996 அன்று ரஷ்ய அதிபர் பதவிக்கான தேர்தல் அதிபர் நடைபெற்றது. தேர்தலுக்கு பத்துப் பேர் போட்டியிட்ட போதிலும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்த்சின் அவர்களுக்கும், கம்யூனிஸ்ட் தலைவர் ஜென்னடி ஸூய்கனோவ் ஆகிய இருவருக்கிடையே தான் பலத்த போட்டி. 80 சதவிகித மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அங்கும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த எல்த்சின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ஸூய்கானோவ் இடையே மீண்டும் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் பில் கிளிண்டன் இரண்டாவது முறையாகத் குடியரசுத் தலைவராக எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதைப் போலவே ஜூலை 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், போரிஸ் எல்த்சின் ரஷ்ய அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று பதவியேற்றார்.

அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் இவ்வாறு அதிபர்கள் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கால கட்டத்தில்தான் தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அவர்கள் அதிபர் தேர்தலில், தான் இரண்டாவது முறையாகப் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்தார். 96ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 12ஆம் தேதி பங்களாதேஷில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. கலீதா ஜியாவின் தலைமையிலான வங்க தேச தேசிய கட்சியும், ஷேக் ஹசீனா தலைமையிலான வங்க தேச அவாமி லீக் கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி.

தேர்தலுக்கு முந்தைய வன்முறைச் சம்பவங்களில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் பலியாகவும், பலர் காயமடையவுமான நிகழ்ச்சிகள். அரசியல் கட்சிகளிடையே துப்பாக்கி மோதல்கள் வரை நடைபெற்றன. வன்முறை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் எதுவும் பேரணி நடத்தக் கூடாதென தடை விதிக்கப்பட்டது. தேர்தல் களத்தில் மொத்தம் 2574 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். 60 சதவிகிதம் வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலைமை ஏற்பட்டது. ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் 133 இடங்களிலும், முன்னாள் பிரதமர் பேகம் கலீதாஜியா தலைமையிலான வங்க தேச தேசிய கட்சி 102 இடங்களிலும், அப்போது சிறையிலே இருந்த முன்னாள் அதிபர் எர்ஷாத் தலைமையிலான ஜாதீயக்கட்சி 29 இடங்கள

ிலும், ஜாமாத் இ இஸ்லாமி கட்சிக்கு 5 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. 23.6.1996 அன்று வங்க தேசப் பிரதமராக அவாமி லீக்கின் தலைவர் ஷேக் ஹசீனா பதவியேற்றார். வங்க தேச முன்னாள் சர்வாதிகார அதிபர் ஹுசைன் முகமது எர்ஷாத் சிறையிலிருந்து பரோலில் வெளிவந்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். சிறையில் இருந்தவாறே ஐந்து இடங்களில் போட்டியிட்டு, ஐந்து இடங்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவிலிருந்து 96ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஏவப்பட்ட ராக்கெட்டு தறிகெட்டுச் செல்லத் தொடங்கியதால் விஞ்ஞானிகளே அதை வெடித்துச் சிதற வைத்தனர். ஆள் இல்லாமல் அனுப்பப்பட்ட அந்த ராக்கெட் வெடித்துச் சிதறியது, விஞ்ஞானிகளுக்கு பெருத்த பின்னடைவாகக் கருதப்பட்டது. மன்னரின் சிலைமேல் நின்று "அரண்மனையை காலி செய்!"

என்று வலியுறுத்தும் ஒரு போராட்ட வீரர்! 96ஆம் ஆண்டு ஜூன் திங்கள் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் சபையில் இந்தியா குறித்து ஒரு முக்கியமான தீர்மானம் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டான் பர்ட்டன் என்பவர் இந்தியாவிற்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 1997ஆம் ஆண்டிற்கு இந்தியாவிற்கு வளர்ச்சி நிதியாக 5 கோடியே 70 லட்சம் டாலர் வழங்க அமெரிக்க அரசு திட்டமிட்டிருந்தது.

அதிலே 60 லட்சம் டாலரைக் குறைக்க வேண்டுமென்று கூறித்தான் டான் பர்ட்டன் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கான விவாதம் நடைபெற்ற போதுதான் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்தியாவின் மீது எந்த அளவிற்கு பற்று கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வந்தது. தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இந்தியாவிற்கு எதிராக 120 உறுப்பினர்களும், ஆதரவாக 297 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 1996ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஐ.நா.

சபையின் பாதுகாப்புக் குழுவில் ஈராக் நாட்டிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி அமெரிக்கா குரல் எழுப்பியது. ஆனால் அதற்கு உலக நாடுகளில் ஆதரவு கிடைக்கவில்லை. ஈராக் என்பதுதான் பண்டைக் காலத்தில் "மெசபடோமியா" என்று அழைக்கப்பட்டதாகும்.

1958ஆம் ஆண்டு அந்த நாட்டின் மன்னராக 23 வயதான இரண்டாம் ஃபைசல் என்பவர் இருந்தபோது, ஜெனரல் அப்துல் கரீம் காசிம் தலைமையில் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் மன்னர் கொல்லப்பட்டார். ராணுவ ஆட்சியை ஈராக்கில் முக்கிய கட்சியாக இருந்த "பாத்" கடுமையாக எதிர்த்தது. அந்தக் கட்சியிலேதான் சதாம் உசேன் முக்கிய உறுப்பினர். 1963ஆம் ஆண்டு பாத் கட்சியினருடைய ஆதரவுடன் ராணுவ அதிகாரிகள் அப்துல் கரீம் காசிம் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு, அப்துல் சலாம் ஆரிப் 1996ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம் ஜெபர்சன் கிளிண்டன்!

என்பவரை அதிபராக்கினர். அவர் சதாம் உசேன் உட்பட தன் கட்சியினரையே கைது செய்து சிறையிலே அடைத்தார். 1968இல் நடைபெற்ற "ரத்தம் சிந்தாத புரட்சி"யில் ஆரிப் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, அகமது ஹசன் அல் பக்கர் அதிபராகவும், சதாம் உசேன் துணை அதிபராகவும் பதவியேற்றனர். சதாம் உசேன் துணை அதிபராக இருந்த போதிலும், கட்சியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டார்.

1979இல் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார். வளைகுடா பகுதியில் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தைப் பின்பற்றாத ஒரே நாடாக ஈராக் நாட்டினை மாற்றினார். ஈராக் நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த குர்த் இனப்போராளிகள் அண்டை நாடான ஈரான் உதவியுடன் போரிட்டதை சதாம் உசேன் கடுமையாக எதிர்த்து, ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறப்பதற்குக் காரணமாக இருந்தார். 1979 முதல் 1988 வரை சதாம் உசேன் தலைமையிலான ஈராக் நாட்டிற்கும் கோமெனி தலைமையிலான ஈரான் நாட்டிற்கும் இடையே போர் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

குவைத் நாட்டிடம் வாங்கியிருந்த 3000 கோடி டாலர் கடனை ரத்து செய்ய சதாம் உசேன் கோரி, குவைத் மறுத்த காரணத்தினாலும் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை உயர்த்த மறுத்த காரணத்தினாலும், அந்த நாட்டுடன் படையெடுத்து குவைத் நாட்டினைக் கைப்பற்றினார். ஈரான் நாட்டுடன் போர் புரிய உதவி புரிந்த அமெரிக்கா, குவைத் நாட்டை சதாம் உசேனிடமிருந்து மீட்க ஐ.நா. ரஷ்ய அதிபராக வெற்றி பெற்ற போரீஸ் எல்த்சின்!

சபையின் கூட்டணிப் படைகளுக்கு தலைமையேற்று 1991ஆம் ஆண்டு போரிட்டு - குவைத்தை விட்டு ஈராக்கை விரட்டியது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஈராக் நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா ஐ.நா.சபையின் மூலமாகக் கொண்டு வந்தது. 1996ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐ.நா. அமைப்பினைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்காட் ரிட்டர் என்பவர் ஈராக் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அமைப்பை திடீர் சோதனையிட முயன்றபோது ஈராக்கிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக ஈராக் பற்றியும் அதன் அதிபர் சதாம் உசேன் பற்றியும் இந்தத் தொடரின் பின் பகுதியில் எழுதுகிறேன். சூடான் நாட்டில் 1996ஆம் ஆண்டு பெரும் பஞ்சம் ஏற்பட்டு சுமார் 7 இலட்சம் பேர் பட்டினியால் வாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பின்னர் புரட்சிக்காரர்களாகமாறி, ரொட்டித் துண்டுக்காக தெருவில் இறங்கி போராட்டத்தைத் தொடுத்தார்கள். உலக அளவில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் "ஒலிம்பிக்" விளையாட்டுப் போட்டிகள் அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரில் 96ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கியது.

தலிபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகரான காபூல் நகரை 27.9.1996 அன்று கைப்பற்றினர். அந்த நாட்டின் தலைவர், முகமது நஜீபுல்லா தீவிரவாதிகளால் தூக்கிலிடப்பட்டார். அதிபர் ரப்பானி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் நஜீபுல்லா இந்திய நாட்டின் சிறந்த நண்பராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அதிபர் தேர்தலில், 2ஆவது முறையாகப் போட்டியிட மறுத்த நெல்சன்.

மண்டேலா! 2.10.1996 அன்று ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் அந்த நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி ஆண்ட்ரேய் லூக்கானோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். உலக நிகழ்ச்சிகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழகத்தில் ஆட்சியைத் தொடங்கிய தி.மு.க.வின் செயல்பாடுகள் சிலவற்றைத் தொடருகிறேன். 96ஆம் ஆண்டு, மே திங்களில் கழக அரசு பொறுப்பேற்றதும், மதுபான வகையறாக்களுக்கு 95 ரூபாய் என்று வரி உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 45 ரூபாய் மட்டுமே வரியாக வசூலித்து வந்தார்கள்.

அதைப் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் 'மீதி 50 ரூபாய் இதுவரை எங்கே போச்சு' என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் நாகரிகமாக "தோத்துப் போச்சு" என்று கூறினேன். ஆனால் அதைப்பற்றி ஜெயலலிதா அந்நிய நாட்டு மதுவிற்கு தனது ஆட்சியிலே குறைந்த அளவிலே வரியை வசூலித்ததிலே தவறு இல்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டார். அவர் அப்படிக் கூறியதால் அதுகுறித்து நான் விளக்கமளிக்க வேண்டியவனானேன். அந்த ஐந்தாண்டு காலத்தில் அந்தத் தொகை தனியார் தோட்டத்துக்குத்தான் சென்றது.

அந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 350 கோடி ரூபாய் - இந்த ஒன்றில் மட்டும் அரசாங்கத்திற்கு வர வேண்டிய Vend Fee வழி தவறிப் போயிருக்கின்றது என்றும், அந்தத் தொகை தான் தற்போது அரசாங்கத்திற்கே கிடைக்கும் விதத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது என்றும் கூறிய பிறகு எந்தப் பதிலும் வரவில்லை. தொடர்ந்து செய்தியாளர்கள் என்னிடம்; ஜெயலலிதா அடிக்கடி தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாகச் சொல்கிறாரே. அதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டார்கள்.

அதற்கு நான் அளித்த பதில், "தேர்தல் நடந்தபோது தமிழகத்திலே ஆட்சியிலே இருந்தவர் ஜெயலலிதாதான். அவருடைய காவல் துறைதான் பொறுப்பிலே இருந்தது. மத்தியிலே ஆட்சியிலே இருந்ததும் ஜெயலலிதாவோடு தேர்தல் உடன்பாடு கொண்டிருந்த நரசிம்மராவ் அவர்கள் தான். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலே இருந்து கொண்டு தேர்தலில் தில்லுமுல்லு என்றால் எப்படிச் சரியாக இருக்கும்?"

என்று கூறினேன். ஜூன் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் மாநாடு தலைமைச் செயலகத்தில் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் பேசும் போது என்னுடைய துவக்க உரை இவ்வாறு அமைந்தது. "புதிய ஆட்சி அமைந்தவுடன் கூட்டப்படுகின்ற முதல் மாநாடு இது. இங்கே பங்கு பெறுபவர்கள் பலருக்கு அந்தத் துறையில் அவர்கள் எதிர் கொள்கின்ற பல பிரச்சினைகளை எப்படிச் சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டிய மாநாடாகவும் இது அமைந்திருக்கின்றது.

முக்கியமாக நிர்வாகச் சீர்திருத்தத்தையும், தூய்மையான ஆட்சியையும் தருகின்ற சூளுரையை நாங்கள் மேற்கொண்டதன் அடிப்படையில், பல்வேறு நிலைகளில் தேவையான பணி மாற்றங்களைச் செய்து, அரசின் நிலைப்பாடுகளை வலுப்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டபிறகு, அவற்றின் பயன், மக்களுக்கு முழுவதுமாய்ப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்த போது.

நன்றி அறிவிக்கின்ற கூட்டத்தில் "எந்தத் தவறு நடந்தாலும் அதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்" என்று நான் உறுதிபடக் கூறியது உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். மக்கள் இந்த ஆட்சியிடம் நியாயமான, நேர்மையான, தூய்மையான, ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள். வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இந்த அரசின் கடமை. புல்லுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே நெல்லுக்கு நீர் திறந்து விடப்பட்ட மாய்மால நிலை மாறி, நெல்லுக்கு மட்டும்தான் போய்ச் சேர வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் குறிக்கோள்" என்று கூறினேன்.

காவல் துறை அதிகாரிகள் மத்தியிலே பேசும்போது, "காவல் நிலையங்கள் குற்றவாளிகளைக் கண்டிப்பதற்காகவே தவிர, தண்டிப்பதற்காக அல்ல. காவல் நிலையங்களே குற்றக் கூடங்களாக மாறக் கூடாது. காவல் துறை இதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும். பொது மக்களைப் பொறுத்தவரை தங்களுடைய உயிருக்கு பாதுகாப்பு என்று காவல் துறையையே நம்பியிருக்கிறார்கள். சீருடை அணிந்த சிப்பாயாக நின்று பாமர மக்கள் சுதந்திரத்துடனும், நிம்மதியுடனும் வாழ்வதற்கு காவல் துறைதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

சட்டம் மட்டும் இருக்கிறது, ஒழுங்கு இல்லை என்கிற நிலை கூடாது. பிரச்சினைகள் தோன்றிய பிறகு அவற்றைச் சரி செய்ய முனைவதை விட வரும் முன் காப்பதே நிர்வாகத்தின் அணுகு முறையாக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காய்தல், உவத்தல் அகற்றி அவர்களைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறினேன்.

அந்தக் கூட்டத்தில் அன்றைய டி.ஜி.பி.யாக இருந்த ராஜ்மோகன் பேசும்போது நடுங்கிய நிலையிலே பேசினார். பேசி முடித்தபின் தான் முதல்வர்முன் பேசுவதால் நடுங்கிக் கொண்டு பேசுவதாக நினைக்க வேண்டாம் என்றும், "ஏ.சி.யினால் தான் நடுங்குகிறேன் என்றும் சொன்னார். உடனே நான் குறுக்கிட்டு, "ஒரு டி.ஜி.பி., "ஏ.சி."க்கு நடுங்கலாமா?"

என்று குறிப்பிட்டதும் மாநாட்டிற்கு வந்திருந்து அனைவரும் அந்த "ஜோக்"கை மிகவும் ரசித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதியாக நான் வலியுறுத்திய மற்றொரு கருத்து அனைத்து அதிகாரிகளும் அன்றாடம் பத்திரிகைகளை முறையாகப் படிக்க வேண்டுமென்பதாகும். அதைப் பற்றி 15.6.1996 தேசிய "தினமணி" தனது தலையங்கத்தில், ★ "காமராஜரிடம் இருந்த ஒரு பழக்கம் கருணாநிதியிடமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அது அன்றாடம், செய்திப் பத்திரிகைகளை ஒழுங்காகப் படிப்பது - அடுத்து, பத்திரிகையாளர்களுடன் தாராளமாகப் பழகும் குணம். நாள்தோறும் அரை மணி நேரமாவது பத்திரிகைகளை அதிகாரிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் 1996ஜுன் திங்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், "காவல் நிலையங்கள் குற்றவாளிகளை கண்டிப்பதற்காகவே தவிர, தண்டிப்பதற்காக அல்ல...

சட்டம் மட்டும் இருக்கிறது - ஒழுங்கு இல்லை என்கிற நிலை கூடாது!" என்கிறார்,கலைஞர்! நிறைவுரையாற்றிய கருணாநிதி, பத்திரிகை உலகம் 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்பதையும் நினைவுபடுத்தத் தவறவில்லை." ★ "பத்திரிகைகளின் சக்தி என்ன என்பதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - தேர்தலுக்குப் பிறகு புரிந்து கொண்டது - உண்மையிலேயே பரிதாபகரமானது தான். அவரை முன்னாள் ஆக்கியதில் பத்திரிகை உலகுக்கும் நிச்சயம் பங்கு உண்டு என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்."

★ "கருணாநிதி பத்திரிகைகளைப் படிப்பதோடு நின்று கொள்வதில்லை. அவருடைய நிர்வாகம் அல்லது அதிகாரிகள் வரம்பு மீறியதாகச் செய்திகள் எதிர்ப்பட்டால், உடனடியாகத் தலையிட்டு குறைபாடுகளைப் போக்குகிறார். இதைப் போலவே பத்திரிகைச் செய்திகளுக்கு தகுந்த மரியாதை அளிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். பழைய ஆட்சியில் நிருபர்களைப் பார்த்தாலே, அதிகாரிகள் பயந்து ஓடிப் பதுங்கிக் கொள்வது வழக்கம்.

கருணாநிதியின் இந்தப் புதிய கண்ணோட்டத்தையொட்டி பத்திரிகையாளர்களுக்கும் அதிகார வர்க்கத்துக்குமிடையே பரஸ்பர நட்புறவு மலரும் வாய்ப்புண்டு" என்று எழுதியிருந்தது.