நெஞ்சுக்கு நீதி
கறுப்பு நாள் · 317 / 391
5. கறுப்பு நாள் "அந்தக் கொடிய சம்பவம் பொது வாழ்வில் கிடைத்த பொற்பதக்கப் பரிசு" நா ட்குறிப்பையே விரிவுபடுத்தி, வாரக் குறிப்பாக, மாதக் குறிப்பாக, ஆண்டுக் குறிப்பாக என் பொது வாழ்க்கை வரலாற்றை - "நெஞ்சுக்கு நீதி"யாக்கும் நிலையில் - ஒரு சில சம்பவங்கள் - நாள் கணக்கில் வரிசைப்படி தொடர்ச்சியாகவும் வரலாம் - சில சம்பவங்கள் பின்னால் நடந்தவை முன்னாலும் வருவதற்கான மாறுதலும் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, அத்தகைய ஒரு சம்பவத்தைத்தான் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடவுள்ளேன்.
96ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு கழகம் வந்தபோது நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதிக் கொண்டு வந்த நான், இந்த அத்தியாயத்தில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொடிய சம்பவத்தை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். 2001ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி நள்ளிரவில் நான் கைது செய்யப்பட்டு, என் கண் எதிரிலேயே என் துணைவியார் ராஜாத்தியும், மகள் கனிமொழியும் கடுமையாக மிரட்டப்பட்டு, எங்குதான் கொண்டு சென்றார்கள் என்னையென்று அறியாமல் துணைவியர் தயாளுவும் ,ராஜாத்தியும், தம்பிகள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலுவும் மற்றும் மருமகன் அரவிந்தும் என்னை இழுத்துச் சென்ற போலீஸ் வண்டியைப் பின்பற்றி ஓடிவந்தபோது; அவர்களை முன்னேற விடாமல்; போலீஸ் அதிகாரிகள் தடுத்து முட்டியைக் குறி பார்த்துத் தாக்கிடவே; மாப்பிள்ளை அரவிந்த் சாலையிலே உருண்ட காட்சியை நான் காண நேரிட்டது.
கனிமொழி கடுங்கோபத்துடன் ஓடிப்போய் கணவனைக் காப்பதற்கும், என்னைத் தொடர்வதற்கும் பட்டபாடு, மீண்டும் நினைத்துப் பார்க்க இயலாத நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சியாகும். என் மூத்த மகள் செல்வியும், தயாளுவும், ராஜாத்தியும் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு போலீஸ் வண்டிக்குப் பின்னால் ஓடிவந்த காட்சியையும் - அவர்களின் பதற்றத்தையும் - இந்த அல்லோலகல்லோலத்திற்கிடையே சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குள் தன்னந்தனியாக அந்த இருளில் போலீசார் என்னைத் தள்ளி விட்டுச் சென்ற கொடுமையையும் - பொது வாழ்வில் கிடைத்த "பொற் பதக்கப் பரிசு" என்று எண்ணிக் கொண்டே; அங்கிருந்த ஓர் ஓட்டை நாற்காலியில் உட்கார்ந்து எனக்குள்ளாகப் புன்னகை புரிந்த வண்ணமிருந்தேன்.
வீட்டில் கைது செய்யப்பட்டபோது, காவல் துறை அதிகாரிகள் சிலரால் முறுக்கப்பட்ட கையில் வலி தாங்க முடியவில்லை. அந்தப் பெரிய அலுவலகத்தின் மாடிப்படிகள் குலுங்கும் அளவுக்குப் போலீசாரின் முரட்டுப் பூட்சுகளின் ஒலிகள். அங்கிருந்து மற்றொரு வண்டியில் எங்களை மாற்றி அழைத்துச் செல்ல போலீசார் ஏற்பாடு - "எங்கே கொண்டு போகிறீர்கள்?"
என்று மாறன் கேட்ட குற்றத்திற்காக அவரை வண்டியிலிருந்து மல்லாக்கத் தள்ளிவிட்ட அந்த மாபாதகச் செயல் இருக்கிறதே; அதை யார் மன்னித்தாலும் அவர்களை அவர்தம் மனச்சாட்சி மன்னிக்காது. கதவை உடைத்து, காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் செல்லும் காவலர் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம், ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. அந்த நாளைப் பற்றித்தான் அன்றைக்கே "மாலை முரசு" நிர்வாக ஆசிரியர் திரு.
பா. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், அந்த இதழின் முதல் பக்கத்திலேயே தானே கையொப்பமிட்டு ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை வருமாறு: "ஜூன் 30. சுதந்திர இந்தியச் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள். தன் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த தமிழகத்தின் மூத்த தலைவர் கலைஞரைத் தட்டி எழுப்பி, அவரை அரக்கத்தனமாக போலீஸ் உயர் அதிகாரிகள் அடித்து இழுத்துச் சென்று சிறையில் தள்ளிய கொடுமை நிகழ்ந்த நாள்.
அந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் பரிதவித்தனர். பெண்கள் ஒரு திகில் காட்சியைப் பார்த்த பீதியுடன் அலறித் துடித்தனர். கதறி அழுதனர். அரசியல் சட்டம் ஒரு மாநில முதல் அமைச்சருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஜனநாயக மரபுகளையும் சட்ட விதிகளையும் மீறி முதல்வர் ஜெயலலிதா, கலைஞர் மீது வரம்பு மீறிய இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் ஜெயலலிதா மீது கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை, இன்று ஒரே நாளில் உருக் குலைந்துபோய்விட்டது.
தமிழக கவர்னர் பாத்திமா பீவி அவர்கள் அரசியல் சட்டரீதியான அறிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு தலையிட்டு கலைஞர் மீது மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவரது மீதும் வன்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும" அவரது இந்த அறிக்கையுடன் தான் "நெஞ்சுக்கு நீதி" நாலாம் பாகம் நிறைவுற்றது என்று முடித்திருந்தேன் என்பதை மறந்திருக்க முடியாது.
காயங்களுடனும் - கை கால்களை அசைக்க முடியாத வலியுடனும் சிறையில் அடைப்பட்டிருந்த என்னைப் பல்வேறு கட்சித் தலைவர்களும் வந்து பார்த்தார்கள் - அனுதாபம் தெரிவித்தார்கள் - ஆறுதல் கூறினார்கள் - அந்த நாளையொட்டி தமிழகத்து சிறைச்சாலைகள் நிரம்பி, மேலும் இடமில்லாத அளவுக்கு வழிந்தன என்று ஏடுகளில் செய்திகள் வரும் வண்ணம் கழகத்தினர் ஆங்காங்கு களம் கண்டனர். என்னைக் கைது செய்வதற்கு எந்த விதமான "வாரண்டை"யும் போலீசார் கொண்டு வரவில்லை.
நள்ளிரவில் நான் கைது செய்யப்பட்டது குறித்து பிரதமர் வாஜ்பாய் தனது கண்டனத்தை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தமிழகத் தலைமைச் செயலாளராக இருந்த பி. சங்கருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாக தனது கண்டனத்தைத் தெரிவித்து, கைது குறித்து முழுமையான தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டுமென்றும் உத்தரவிட்டார். துருக்கி நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த அத்வானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் "கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் கவலை அளிப்பதாக உள்ளது - ஜனநாயக நாட்டில் இது போன்ற கொடூரமான தனி மனிதப் பழி வாங்கும் நடவடிக்கைக்கு இடம் இல்லை" என்று கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை டெல்லியிலேயே அவசரமாகக் கூட்ட வேண்டுமென்று பிரதமரிடமும் தொலைபேசியிலே அத்வானி கேட்டுக்கொண்டார். அப்போது அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளராக இருந்த டி. ராஜா மற்றும் அந்தக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பரதன் ஆகியோர் "போலீஸ் நிர்வாகத்தில் தமிழக அரசின் அணுகுமுறையில் மாற்றம் தேவை" என்றும், மத்திய சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி "போலீசார் கைது செய்த விதம் கண்டிக்கத்தக்கது" என்றும், வெங்கய்ய நாயுடு அவர்கள் என்னைக் கைது செய்தது "காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, ஜனநாயக நாட்டில் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்றும், மத்திய தொலைத் தொடர்புத் தகவல் துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் நான் கைது செய்யப்பட்டது "சட்டவிரோதமானது" என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் திரு. ஜெய்பால் ரெட்டி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர், தமிழகப் போலீஸார் அத்துமீறி நடந்த விதத்தைக் கண்டித்து அறிக்கைக் கொடுத்தார்கள். ஐக்கிய ஜனதா தலைவரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான சரத்யாதவ் அவர்கள் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு உடனடியாகக் கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கருத்து தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் பிரதமர் சந்திரசேகர், பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, சிவசேனை தலைவர் பால்தாக்கரே ஆகியோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். தமிழகத் தலைவர்கள் எல்லாம் நான் கைது செய்யப்பட்டது குறித்துத் தொடர்ந்து கண்டன அறிக்கைகளை விடுத்தனர். குறிப்பாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.
சங்கரய்யா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த இல. கணேசன், குமரி அனந்தன், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, எஸ். திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.
நல்லக்கண்ணு, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழ் பா.ம.க. தலைவர் பேராசிரியர் தீரன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மக்கள் தமிழ் தேசத் தலைவர் எஸ். கண்ணப்பன், பேராயர் எஸ்றாசற்குணம் போன்றவர்கள் அ.தி.மு.க. அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். திரைப்படத் துறையினர் பலரும் நான் கைது செய்யப்பட்டது குறித்து அறிக்கைகள் மூலமாக தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "தென்னிந்தியாவின் மூத்த அரசியல் தலைவரை, 78 வயது முதியவரை, 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தன்னை சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவரை அநாகரிகமான முறையில் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டது என்னை மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் உள்ளத்தையும் கலங்க வைத்துள்ளது" என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நான் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டதை நேரில் கண்ட அதிர்ச்சியில் மரணமடைந்த என் மாமியார் சிவபாக்கியம் அம்மையார் உடலுக்கு மரியாதை செலுத்துகிறார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்! கலைஞானி கமல்ஹாசன் விடுத்த அறிக்கையில், "ஒரு சாதாரண குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயங்கள் கூட இல்லாமல் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட நேரமும், விதமும் அநாகரிகமாகத் தெரிகிறது. மூத்த தலைவர் என்றில்லாவிட்டாலும், மூத்த தமிழன், இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதைகள்கூட நிராகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கட்சி சார்பற்ற என் இந்தக் கருத்து எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இவ்வாறாகவே இருக்கும். இன்னமும் ஜனநாயகத்தில் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்கும் என் போன்றவர்களின் பெரும்பான்மை கருத்தும் இதுவாகவே இருக்கும் என்றே நம்புகிறேன்" என்று எழுதியிருந்தார்.
ராஜாத்தி அம்மையாருக்கும் கனிமொழிக்கும் ஆறுதல் சொல்லும் தயாளு அம்மாள், செல்வி, சாந்தா ஸ்டாலின், மோகனா தமிழரசு. கவிப்பேரரசு வைரமுத்து, "இதை எப்படிச் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இரண்டு நிமிடம்கூட தொடர்ந்து நிற்க முடியாத வயது முதிர்ந்த தலைவருக்கு நேர்ந்துள்ள கொடுமையை என்னவென்று சொல்வது? இது தமிழுக்கு நேர்ந்த அவமானம்! தேசிய அவமதிப்பு!"
என்று கூறினார். சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் கூறும்போது, "தமிழகமே வேதனையான கண்ணீரோடு நிற்கிறது. கலைஞர் அவர்கள் 78 வயது முதுபெரும் தலைவர். மாபெரும் தமிழறிஞர். நான்கு முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த முன்னாள் முதல்வர். 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்களுக்காகப் பாடுபட்ட அற்புத மனிதர். அவரை அடித்துப் பலவந்தமாக இழுத்துச் சென்றதைத் தொலைக்காட்சியில் பார்த்து என் நெஞ்சம் வெடித்துச் சிதறியது.
ரத்தம் உறைந்து போனது. தமிழகத்தின் தன்மானத்தை தரம் தாழ்த்தி இழுத்துச் சென்றார்கள். நீதியை நிலைகுலைய வீழ்த்தி, ஜனநாயகத்தின் பெருமையைச் சிறுமைப்படுத்தி இழுத்துப் போனார்கள். அந்தத் தமிழ்ப் பெருமகன் நலத்தோடு திரும்பும் வரை தமிழகம் தேங்கிய கண்ணீரோடு நிற்கும்" என்று சொல்லியிருந்தார்.
ஜனநாயக நாட்டில், இதுபோன்ற கொடூரமான தனி மனித பழிவாங்கும் நடவடிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், "ஓர் அரசியல் தலைவர் கைது செய்யப்படுவதையோ அதற்கான முகாந்தரங்களையோ இயக்குனர்கள் சங்கம் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், கலைஞர் கைது செய்யப்பட்ட போது அவர் நடத்தப்பட்ட முறையைத்தான் எங்கள் சங்கம் கண்டிக்கிறது" என்று தெரிவித்து இருந்தார்.
நடிகர்கள், பார்த்திபன், சிவகுமார், நெப்போலியன், விஜயகுமார், மணிவண்ணன், நாசர், வடிவேலு, பாண்டியன், சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து, நடிகைகள் ராதிகா, ரேவதி, லதா, ஸ்ரீபிரியா ஆகியோர் கையெழுத்து இட்டு வெளியிட்ட அறிக்கையில், "மக்களின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள கலைஞரைக் கைது செய்தபோது மனிதாபிமானம் இல்லாமல் காவல் துறையினர் நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தனர்.
எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் சார்பில் எஸ்.வி.ராஜதுரை, இரா.பாலசுப்பிரமணியன், பா.ஜெயப்பிரகாசம், எஸ்.அருண்மொழி, சுப.வீரபாண்டியன், இந்திரன், வ.கீதா, மருது, அப்துல் ரகுமான், சரஸ்வதி, இன்குலாப், ஈரோடு தமிழன்பன், பழ.கருப்பையா, பிரபஞ்சன், இராம. சிவசங்கர், அன்பு தெள்ளரசன், சுந்தரராமசாமி, ரவிக்குமார், பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியன், தி.சு.நடராஜன், நா.முத்துமோகன், இ.முத்தையா, காஞ்சனை, சீனிவாசன், மனுஷ்யபுத்திரன், குட்டி ரேவதி, இரா.அமுதன் ஆகியோர் கையெழுத்திட்டு என்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
நீதிபதியின் உத்தரவை மீறிய காவல்துறையினரின் போக்கைக் கண்டித்து, சிறைச்சாலை வாயிலில் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கலைஞர். அருகே கனிமொழி. பிரபல பத்திரிகையாளர் 'இந்து' ராம் அவர்கள், "என்மீது நாகரிகமற்ற முறையில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு"மென்று தெரிவித்தார். மேலும் இந்து நாளேட்டில் 1.7.2001 அன்று எழுதிய தலையங்கத்தில் "அராஜகத்தின் ஓர் அதிர்ச்சியூட்டும் செயல்" என்று வர்ணித்திருந்தார்.
"தமிழகத்தில் வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் தீட்டியது. "கை வசம் பதவி இருக்கும் ஆணவத்தில், வஞ்சம் தீர்க்கும் வன்மத்தோடு எதிரிகளை வீழ்த்த நினைக்கும் சர்வாதிகாரப் போக்கு என்றுமே - எங்குமே ஜெயித்ததாக வரலாறு இல்லை" என்று 8.7.2001 தேதிய ஆனந்த விகடன் தலையங்கத்தில் எழுதியது.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விடுத்த நீண்ட அறிக்கையில், தமிழக அரசையும் காவல் துறையினரையும் கடுமையாகச் சாடியதோடு, "உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார். ஜெயலலிதா ஆட்சியை உடனடியாகக் கலைத்துவிட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்! -சரத்யாதவ் கர்நாடக முதலமைச்சராக இருந்த நண்பர் எஸ்.எம்.கிருஷ்ணா அ
வர்கள் "தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்வதுதான் நியாயம்" என்று கூறினார். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலைஞர் சித்திரவதை செய்யப்பட்டது, ஜெயலலிதாவின் பழி வாங்கும் நடவடிக்கைதான் - அதிகாரம் நிரந்தரமானதல்ல- பொது வாழ்வில் கெளரவமாக நடந்து கொள்ள வேண்டும்! என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். ஒரிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் என்னைக் கைது செய்தது "துரதிருஷ்ட வசமானது, கண்டனத்திற்குரியது" எனக் கூறினார்.
என்ன காரணத்திற்காக கைது என்று முதலில் யாருக்கும் தெரியாத நிலையில், பின்னர் அரசின் சார்பில் ஒரு காரணத்தைக் கூறினார்கள். சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாகக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையாளராக அப்போதிருந்த ஆச்சார்யலு என்ற அதிகாரி மூலம் புகார் மனு ஒன்றினைக் கொடுக்குமாறு செய்து, அதன் மீதுதான் நான் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்கள். அதே வழக்கின் காரணமாக, சென்னை மாநகராட்சி மன்ற மேயராக இந்த மு.க.ஸ்டாலின் முதலாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் என்னை ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக வைத்திருந்தனர். என்னைப் பார்ப்பதற்குக்கூட யாரையும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. நான் அப்போது வைக்கப்பட்டிருந்த சி.பி.சி.ஐ.டி. அலுவலகம், தற்போது நான் இந்த ஐந்தாம் பாகத் மு.க.ஸ்டாலின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையிலே அடைக்கப்பட்டார். தொடரை எழுதிக் கொண்டிருக்கும்போது; இடிக்கப்பட்டு வருகிறது.
ஏன் தெரியுமா? அந்த இடத்திலேதான் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகமும், சட்ட மன்றப் பேரவைக்கான அலுவலகமும் கட்டப்படவிருக்கின்றன. அவைகளைக் கட்டுவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி (க்ளோபல் டெண்டர்) கோரப்பட்டு - அதற்கான வரைபடங்களை யெல்லாம் பரிசீலித்து - தற்போது ஜி.எம்.பி. இண்டர் நேஷனல் என்ற ஜெர்மன் கம்பெனி ஒன்றுக்கு அந்தப் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அங்கேயுள்ள பழைய கட்டிடங்களை இடிக்கும் வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
ஆனால், அன்றைய தினம் அந்த அலுவலகத்தின் இருண்ட அறையிலே, தனிமையிலே நான் என் அவயவங்களின் வலி தாங்காமல் அமர்ந்திருந்ததையும் - தற்போது அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் தமிழக வரலாற்றில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தலைமைச் செயலகமாகவும், சட்டமன்ற அலுவலகமாகவும் பிரம்மாண்டமான அளவில் விளங்கிடப் போகும் கட்டிடங்களைக் கட்டுவதற்கான கோப்பிலே கையெழுத்திடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதையும் எண்ணிப் பார்க்கின்றேன். ஆனால், தனிமையில் அப்போது கலைஞரை அநாகரிகமான முறையில் கைது செய்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உலகம் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் உள்ளத்தையும் இக்கொடிய நிகழ்வு கலங்க வைத்துள்ளது. உடைந்த நாற்காலியிலே அமர்ந்திருந்தபோது, எனக்கு மீண்டும் இத்தகைய வாய்ப்பு வந்திடும் என்று நினைத்திடக்கூட இல்லை. ஆனால், அன்றைய தினம் நான் கொடுமைப் படுத்தப்பட்டதைப் புகைப்படங்களிலும், தொலைக் காட்சியிலும் கண்ட இந்திய நாட்டு மக்கள் எல்லாம் எனக்காகக் கண்ணீர் சிந்தியதை நான் நன்றாகவே அறிவேன். முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக அப்போதிருந்த எஸ்.
அசோக்குமாரின் இல்லத்திற்கே காவல் துறையினர் என்னை அழைத்துச் சென்றிட, ஜூலை 10ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர் எனது உடல் நிலையைக் கருதி, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகே சிறைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று நீதிபதி கூறினார். ஆனால், காவல் துறையினர் என்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், நேராக சென்னை மத்திய சிறைச்சாலைக்கே அழைத்துச் சென்றனர்.
அங்கே அழைத்துச் சென்ற பிறகு, காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வந்து, உடனடியாகத் தயாராகும் படியும், வேலூர் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டுமென்றும் கூறினார். "நீதிபதி அவ்வாறு கூறவில்லையே! சென்னை பொது மருத்துவமனையிலே டாக்டர்களைப் பார்த்த பிறகு சென்னை சிறைச் சாலையில்தானே இருக்க வேண்டுமென்று கூறினார்கள்" என்று நான் கூறியதை அவர் ஏற்க மறுத்தபோது, நான் சிறைச் சாலைக்குள் செல்ல மறுத்து, சிறைச்சாலை வாயிலிலேயே காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து விட்டு, அங்கேயே அமர்ந்து விட்டேன்.
என்னோடு டாக்டர் கோபால், கனிமொழி இருவரும் அந்த மணல் வெயிலிலேயே உட்கார்ந்து கொண்டனர். கலைஞர் கைது செய்யப்பட்ட நேரமும். விதமும் அநாகரிகமாகத் தெரிகிறது. மூத்த தமிழன், இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவருக்குரிய மரியாதை நிராகரிக்கப்பட்டுள்ளது. நான் கைது செய்யப்பட்ட செய்தி சென்னை நகருக்குள் பரவி, அந்த விடியற்காலை நேரத்தில் சென்னை சிறைச்சாலைக்கு வெளியே பல்லாயிரக் கணக்கில் பொது மக்கள் திரளத் தொடங்கி விட்டார்கள்.
ஆனால், அவர்களையெல்லாம் ஒரு பர்லாங்க் தொலைவிற்கு அப்பால் இருந்தவாறு காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்தார்கள். அவர்களின் தடியடிக்கு பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியினரும் தப்பமுடியவில்லை. புகைப்படம் எடுக்க வந்தவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். மத்திய அரசின் சார்பாக உள்துறை சிறப்புச் செயலாளர் எம்.பி., கெளஷல் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து நிலைமைகளை ஆய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை தரவும் ஆணையிடப் பட்டது.
தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில், 30.6.2001 அன்று அண்ணா அறிவாலயத்தில் கூடி, ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு, 2.7.2001 அன்று தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்தக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பேராசிரியர், வீரபாண்டி ஆறுமுகம், ஆலடி அருணா, இரகுமான்கான் ஆகியோரும், பா.ஜ.க.
சார்பில் இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் ஆகியோரும், எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. சார்பில் எஸ்.திருநாவுக்கரசர், எம்.பி. எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ஆர்.எம்.வீரப்பன், ஜெகத்ரட்சகன் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் சார்பில் குமரி அனந்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாவெல், அய்யாசாமி, மக்கள் தமிழ்த்தேசம் சார்பில் எஸ்.கண்ணப்பன், தமிழக ஐக்கிய முஸ்லீம் ஜமாத் கட்சியின் சார்பில் எஸ்.கே.நவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதே நாளில், டெல்லியிலும் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலைமையில், அவரது இல்லத்திலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கூட்டம் கூடி, தமிழக நிலவரம் குறித்து விவாதித்ததோடு, என்னைக் கைது செய்தது பற்றிய அறிக்கையை தமிழக ஆளுநர் உடனடியாக மத்திய அரசுக்கு 1.7.2001 அன்று காலை 9 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்றும் மத்திய அரசின் சார்பில் கேட்டுக் கொண்டார்கள். மேலும், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மத்திய அமைச்சர் சுக்தேவ்சிங் திண்ட்ஷா, மூத்த பா.ஜ.க.
தலைவர் வி.கே.மல்கோத்ரா ஆகியோர் 1ஆம் தேதியன்று காலையில் சென்னை சென்று, நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமென்றும், அது தவிர அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றினை உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனுப்பவும் பிரதமர் உத்தரவிட்டார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் குழுவினர் சென்னை சிறைச்சாலைக்கு வருகை தந்து என்னைச் சந்தித்தனர். வெளியே சென்றபோது அவரைச் சந்தித்த பத்திரிகையாளர்களிடம் "மத்திய சிறையில் கலைஞர் அவர்கள் மிகச் சிறிய அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கப் படவில்லை. அவருக்கு ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது என்று சில பத்திரிகைகள் கூறுவது பொய்யான தகவல். அங்கு ஒரே ஒரு மின் விசிறி மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அனல் காற்று வீசுகிறது. கலைஞர் அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது. முழுத் தகவலையும் பிரதமரிடம் தெரிவிப்பேன்" என்று கூறினார்.
அந்தக் குழுவினர் என்னைச் சந்திக்க வருவதற்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் மாறனைச் சந்தித்தார்கள். அப்போது அங்கேயிருந்த முரசொலி செல்வத்தையும், மாறனின் மகள் டாக்டர் அன்புக்கரசியையும் உடன் வருமாறும், கலைஞரை சிறையிலே சந்திக்கலாம் என்றும் கூறி அழைத்து வந்தனர். மத்திய அரசினால் அனுப்பப்பட்ட குழுவினர் சிறைச்சாலைக்கு என்னைப் பார்க்க வந்தபோது. அவர்களை மட்டும் பார்க்க அனுமதித்துவிட்டு, செல்வத்தையும், என் பேத்தி அரசியையும் என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
என்னை விடுதலை செய்யக்கோரி 2.7.2001 அன்று தமிழகம், புதுவை மாநிலங்களில் முழு அடைப்பு நடைபெற்றது. டெல்லியில் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடை பெற்று, தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், 4ஆம் தேதியன்று சென்னையில் நூறுக்கு மேற்பட்ட செய்தியாளர்கள் கூடி பெரியதோர் நிருபர் கூட்டத்தில், "அ.தி.மு.க.
ஆட்சியை மத்திய அரசு அரசியல் சட்டம் 356ஐப் பயன்படுத்திக் கலைக்கலாமா?" என்று என்னிடம் கேட்டபோது, "அரசியல் சட்டப்பிரிவு 356ஐப் பயன்படுத்துவதை என்றுமே நான் ஏற்றுக்கொள்ள முடியாது; அது எங்கள் கொள்கை" என்று விடையளித்தேன். நள்ளிரவில் வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு காவலர் உள்ளே நுழைந்து, என்னைத் தாக்கி கைது செய்து இழுத்துச் சென்றதை நேரில் கண்ட எனது மாமியார், ராஜாத்தியின் அன்னையார் திருமதி சிவபாக்கியம் அம்மாள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், நான் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாள் விடியற் காலையில், ஜூலை 1ஆம் தேதி அதிகாலையில் இயற்கை எய்தினார்.
என்னிடம் மிகப் பெரியமரியாதை கொண்டவர். அவர் உடலை அடக்கம் செய்யக்கூட நான் செல்ல முடியாமல் சிறையில் அடைப்பட்டிருந்தேன். என் கண் எதிராக வருவதுகூட மரியாதை அல்ல என்று நினைத்த பெருமாட்டியின் நாகரிகமற்ற முறையில் கலைஞர்மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -இந்து ராம் இறுதி யாத்திரையைக்கூட நான் காணமுடியவில்லை. சிறையிலே என்னைக் காண வந்த பெர்னாண்டஸ் அவர்கள் இந்தச் செய்தியைக் கேள்வியுற்று, அவர் அங்கிருந்து நேரடியாக என் இல்லத்திற்குச் சென்று, அந்த அம்மையாருக்கு மரியாதை செய்ததோடு, ராஜாத்திக்கும், கனிமொழிக்கும் ஆறுதல் கூறிவிட்டு, நான் படுத்து உறங்கிய அறை, அங்கே என்னைக் கைது செய்து அழைத்துச் சென்ற விதம் பற்றியெல்லாம் அங்கிருந்தவர்களிடம் நேரடியாக விசாரித்தறிந்தார்.
பக்கத்தில் இருந்த செய்தியாளர்களிடம் "ஒரு பெண் ஆட்சியில் இப்படிப்பட்ட கொடுமையான சம்பவம் நடந்திருப்பது அதிருப்தியும் வேதனையும் அளிக்கிறது" என்றார். பின்னர் அந்தக் குழுவினர் அண்ணா அறிவாலயம் சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழுவினரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நான் கைது செய்யப்பட்டதை தொலைக் காட்சியில் கண்ட உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவனத் தலைவர் வன்னிய அடிகளார் உடனடியாகக் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, "கலைஞருக்கா இந்தக் கதி?"
என்று கேட்ட வண்ணமே இயற்கை யடைந்த செய்தியினை ஏடுகள் வாயிலாக சிறையிலே இருந்த நான் படித்துக் கண்ணீர் சிந்தினேன். நான் கைதான செய்தியைக் கேட்டு திருவாரூர் அரசவனங்காட்டினைச் சேர்ந்த சம்பந்தப் பத்தர், கரூர் பஞ்சமாதேவி தீர்த்தம் தனம்மாள், விருதாசலம் தொலார் கிராமத்தைச் சேர்ந்த பூமாலை ஆகியோர் தீக்குளித்து இறந்தார்கள். உடுமலைப்பேட்டை குமார் என்பவர் தீக்குளித்து கவலைக்கிடமான சூழ்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
"அதிர்ச்சியடைந்த கோவை மாவட்டம், காளப்பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்த ஞானவேல் என்ற கழகத் தோழர் அதிர்ச்சியின் காரணமாக மூளை நரம்பு வெடித்து சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார்" என்ற செய்தியும் எனக்கு சிறைச் சாலைக்கு வந்தது. நான் ஆட்சியிலே இருந்தபோது, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவரும், திறமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு பொறுப்புக்களில் சிறப்பாகப் பணியாற்றியவருமான திரு.நம்பியார், ஐ.ஏ.எஸ்., அவர்களையும் ஜெயலலிதா அரசு என்னைக் கைது செய்த அன்றே கைது செய்தது.
அவர் பதவி ஓய்வு பெற்ற பிறகு என்னைச் சந்திக்காமல் கூட இருந்தார். நீதிபதியின் இல்லத்தில் அவரைச் சந்தித்ததும், "ஓய்வு பெற்ற பிறகு என்னைச் சந்திக்காமல் கூட இருந்தீர்களே, உங்களை இப்போது சந்திக்க வைத்துவிட்டார்கள் பார்த்தீர்களா?"
என்று நான் அவரிடம் கேட்டபோது, அந்த நேர்மையான அதிகாரி, "அய்யா, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?" என்று மட்டும் கேட்டுவிட்டு சிறைக்குள் போய்விட்டார். நான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி, சேப்பாக்கம் ஏ.கே.ஜெகதீசன், சைதை ஸ்ரீதரன் மற்றும் சில அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். நான் கைதான சம்பவத்தில் தொடர்ந்து தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு உரிய தகவலை, உரிய நேரத்தில் தராமல் இருந்ததையொட்டி, அவரைத் திரும்பப் பெற மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநர் பாத்திமா பீவியை திரும்ப அழைக்க உத்தரவிட்டதோடு, ஆந்திர மாநில ஆளுநராக இருந்த ரங்கராஜனுக்கு தமிழக ஆளுநராகக் கூடுதல் பொறுப்பினை அளித்து உத்தரவிட்டார். அந்தச் செய்தியினைக் கேள்விப்பட்ட பாத்திமா பீவி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். அவர் தமிழகத்திற்கு ஆளுநராக வர வேண்டுமென்று 1997ஆம் ஆண்டு விரும்பி பரிந்துரை செய்த நானே, அவர் பதவி விலகிச் செல்வதற்கும் காரணமாக அமைந்து விட்டேன்.
2.7.2001 அன்று "அநாகரிகத்தின் உச்சம்" என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டிய "தினமணி" அதனை முடிக்கும்போது "ஜெயலலிதாவை முறையற்ற விதத்தில் முதல்வராக்கி வைத்த பாத்திமா பீவி, கடைசியில் ஜெயலலிதா அரசின் வரைமுறை கடந்த நடவடிக்கையினாலேயே பதவியை இழக்க நேரிட்டிருக்கிறது" என்று எழுதியது.
சட்டம் - ஒழுங்கு - சமநீதி பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் சொந்த வாழ்வுக்கு மட்டுமே வழி வகுத்துக் கொண்டு - முரண்பட்ட நிர்வாகம் நடத்தி, என் போன்றோரின் வியப்புக்கும், வெறுப்புக்கும் ஆளானார் என்றாலும்கூட; கவர்னர் பாத்திமா பீவி அவர்கள் அவரை அறியாமல் ஒரு நற்காரியம் செய்தார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், சென்னையில் வாழும் கேரள மக்களின் அன்பைப் பெற்றிட "ராஜ்பவன்" மாளிகையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினார்.
கவர்னரே முன் நின்று ஓணம் பண்டிகையை நடத்தி எங்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பியிருந்தார். இசை மேதை ஜேசுதாஸ் அவர்களின் இசை விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவரை ஓணம் ப
ண்டிகையைப் பற்றிய முழு விபரம் நான் அறிந்திருக்கவில்லை. அந்த விழாவில் அச்சிட்ட ஒரு சிறு புத்தகம் போன்ற வெளியீடு வழங்கப்பட்டது. அதைப் படித்த பிறகுதான் "ஓணம் பண்டிகை" பற்றிய வரலாறு எனக்கு முழுமையாக விளங்கிற்று. மலையாள மொழியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும் அந்த வெளியீடு அச்சிடப்பட்டிருந்தது. "மகாபலி" என்ற அசுரச் சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து வதைத்த கதைதான் "ஓணம்" என்று சொல்லப்பட்டதற்கு மாறாக; அந்த வெளியீட்டில் பின்வரும் சுருக்கமான வரலாறு எழுதப்பட்டிருந்தது.
"மலையாள ராஜ்யத்தை மாவலி என்ற மாமன்னன் ஆண்டு வந்தான். அவன் ஆட்சிக் காலம் மக்களுக்குப் பொற்காலமாக இருந்தது. அவனை அப்படியே விட்டுக் கொண்டிருந்தால், இன்னும் பல சாதனைகளைச் செய்து சரித்திர புருஷனாகி விடுவான், ஆகவே அவனை இப்போதே ஒழிக்க வேண்டும்- ஒழித்தால்தான் தேவர்கள் எனப்படும் பூசுரர்கள் வாழ முடியும் என்று மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள். அதைக் கேட்ட விஷ்ணு; வாமனாவதாரம் எடுத்து, வஞ்சகச் சூழ்ச்சியால் மாவலி மன்னனை மண்ணோடு மண்ணாகும்படி வதைத்து விடுகிறார்.
நல்லவன் ஒருவன் ஆட்சி நடத்துவதும்- அது தொடர்வதும் பிடிக்காமல் பூசுரராம் தேவர்கள் அவனை வீழ்த்தி விட்டார்கள். உயிர் விடும்போது அந்த மாவலி மன்னன் மகாவிஷ்ணுவிடம் கேட்ட வரம்தான்; அவன் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாகும். எனவே, ஆளுநர் மாளிகையில் நடத்தப்பட்ட அந்த ஓணம் பண்டிகை - ஒரு நல்ல விஷயத்தை - அதாவது நமது இனத்தை எப்படியெல்லாம் சூழ்ச்சியினால் தீர்த்துக் கட்டி; அதைத் திருவிழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்ற உண்மையை எனக்கு உணர்த்திட உதவிற்று!
மக்களோடு மக்களாக இருந்து, அவர்களுக்காகவே சாதனை புரிந்து நல்லாட்சி நடத்துகிறவர்களின்மீது காழ்ப்பு மிகுதியால் எதிர்ப்புக் கிளம்புவதையும்- அந்த நல்லோர் வீழ்ந்தால் தான் நிம்மதி என்ற நினைப்புடனே அந்த எதிரிகள் செயல்படுவதையும் எனக்குச் சுட்டிக்காட்டி "துணிந்து தொண்டாற்றுக!"
என எனது 49ஆவது பிறந்த நாளிலேயே என்னை வாழ்த்தி தந்தை பெரியார் அவரது கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையை தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் என்னிடம் பத்திரப்படுத்திக் கொடுத்திருந்தார்.
