நெஞ்சுக்கு நீதி
சூப்பர் ஸ்டார் சூளுரை · 315 / 391
3. சூப்பர் ஸ்டார் சூளுரை ஆம் ஆண்டு, மே திங்களில் பதவிப் பொறுப்பை ஏற்றதன் தொடர்ச்சியாக, "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில ஏடு என்னைச் சந்தித்து நீண்ட பேட்டி ஒன்றினை எடுத்து வெளியிட்டது. அந்தப் பேட்டியில் சில முக்கிய கேள்விகளும், அதற்குநான் அளித்த பதில்களும் இந்தத் தொடரில் இடம் பெறுவது முக்கியமெனக் கருதுகிறேன். அவை வருமாறு- செய்தியாளர்:- இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த் பங்குபற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
ஏனென்றால், ரஜினி அலை என்று எதுவும் இந்த மாநிலத்தில் கிடையாது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே? நான்:- தி.மு.க., தமிழ் மாநிலக் காங்கிரஸ், ரஜினிகாந்த் மற்றும் முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்து அமைப்புகள், எம்.ஜி.ஆர். மன்றம் என அனைத்திற்கும் இந்த வெற்றியில் சமமான பங்கு உண்டு. செய்தியாளர்:- அப்படியானால் ரஜினிகாந்த் முக்கியப் பங்கு ஆற்றியிருக்கிறார் அல்லவா? நான்:- தேர்தல் பிரச்சாரத்தில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும், வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக, மாநிலம் முழுவதும் ரஜினி மன்றத்தினர் மிகப் பொறுப்பாக வேலை செய்துள்ளனர்.
இந்தப் பேட்டியினைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு நாளேடுகளும், கிழமையேடுகளும் மட்டுமன்றி, வட மாநிலங்களைச் சேர்ந்த ஏடுகள் எல்லாம் முதலமைச்சர் என்ற முறையில் என்னை அணுகி பேட்டி கண்டார்கள். ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையில் அரசு இயந்திரம் இருந்தது. அரசுப் பணிகளை நிறைவேற்ற 'காண்ட்ராக்ட்டு'கள் விடுவதில் உள்ள முறைகேட்டினைத் தவிர்ப்பதற்காக வேண்டி, புதிய டெண்டர் முறை ஒன்று அறிவிக்கப்பட்டது.
அதுவரை அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் பொதுப்பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும்போது, விதிகளுக்கு முரணாக "ஒரேயொரு ஒப்பந்தப்புள்ளிதான் ஒரு வேலைக்கு வழங்கப்படும்" என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக, "அமைச்சர் யாரைச் சுட்டிக் காட்டுகிறாரோ அவருக்குத்தான் பணிகள் தரப்படும்" என்றிருந்த நிலையை மாற்றி, எந்தத் துறையைச் சார்ந்த எந்தப் பணியாக இருந்தாலும், திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதைப்பற்றி 18.5.1996 அன்று "தினமணி" இதழ் எழுதிய தலையங்கத்தில், "தூய்மையான நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கத்துடன், அதிகார வர்க்கத்தில் அப்பழுக்கு இல்லாதவர்களாகப் பார்த்து, தேர்ந்தெடுத்து, நிர்வாக இயந்திரத்தைப் புதுப்பித்துள்ளார் கருணாநிதி. அடுத்த மரபை மதித்து ஜானகி அம்மையார் படம் மாட்டப்பட்டது! நடவடிக்கையாக, ஊழல்களின் ஊற்றுக்கண் போல - கடந்த ஆட்சியில் விளங்கி வந்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் முறையை மாற்றி அமைத்திருக்கிறார்.
இதன் மூலம் ஊழலுக்கு இடம் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் முதல்வருக்குள்ள கவலை நன்றாகத் தெரிகிறது. இது பாராட்டத்தக்க நல்ல திருப்பம்" என்று எழுதியது. 96ஆம் ஆண்டு, தி.மு.கழகம் வெற்றி பெற்ற பிறகு அமைச்சரவை கூட்ட அறைக்குச் சென்ற நான் அங்கே முதலமைச்சராக சில மாதங்கள் இருந்த ஜானகி அம்மையாரின் புகைப்படம் மட்டும், அதற்கு முன்பிருந்த ஆட்சியில் தவிர்க்கப்பட்டதைக் காண நேரிட்டது. பொதுவாக எல்லா முதல் அமைச்சர்களின் படமும் அமைச்சரவைக் கூட்ட அறையில் வரிசையாக மாட்டப்பட்டிருக்கும்.
ஆனால் ஜானகி அம்மையாரின் படம் அங்கே இல்லாததைக் கண்டு, உடனடியாக அவர்களின் படத்தை அங்கே மாட்ட வேண்டுமென்று கூறி, அது இன்றளவும் அமைச்சரவைக் கூட்ட அறையில் மாட்டப் பட்டுள்ளது. மரபுகளுக்கு ஊனம் வந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் காட்டிய அக்கறைக்கு இது ஓர் உதாரணமாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு, பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஆகியவை முடிந்த பிறகு, தமிழகச் சட்ட மன்றத்தில் அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அவர்கள் அவை மரபுப்படி அரசின் கொள்கைகளை வெளியிடும் உரையினை ஆற்றினார்.
கழக அரசின் சார்பில் அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்டு, ஆளுநர் அவர்களால் அவையிலே படிக்கப்பட்ட உரை எத்தகையது என்பதற்கு. அந்த நேரத்தில் "தினமணி" நாளிதழில் 25.5.1996 அன்று எழுதப்பட்ட தலையங்கத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். அந்தத் தலையங்கத்தின் சில பகுதிகள் வருமாறு:- "தி.மு.க. அரசு இந்த ஆண்டு நிறைவேற்ற இருக்கும் திட்டங்களை ஆளுநர் சென்னாரெட்டி சட்டப் பேரவையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
சமுதாய மேம்பாட்டிற்கான பல நல்ல வழிமுறைகளும் அவரது உரையில் இடம் பெற்றுள்ளன. பருவ மழை பொய்த்ததால் மாநிலத்தின் பல பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் நிலவரி ரத்து செய்யப்பட்டு, உரிய கடன் நிவாரணமும் வழங்கப்படும் என்று உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை விவசாயிகள் நிச்சயம் வரவேற்பர்."
இவர் உங்களவரும் இல்லை - எங்களவரும் இல்லை நம்மவர்! தமிழகத்திற்கும், அதற்குப் பக்கத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக போராடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை இருந்த போதிலும், தி.மு.கழகத்தைப் பொறுத்த வரை அண்டை மாநிலங்களோடு அனுசரித்துப் போக வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்டு வீண் வம்பை விலை கொடுத்து வாங்கிடாமல், விட்டுக் கொடுத்து, அனைத்து மாநில மக்களும் அமைதியோடு வாழ்ந்திட வேண்டு மென்பதில் நாட்டம் உடையதாய் செயல்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக 1996ஆம் ஆண்டு தி.மு.கழகம் பதவிப் பொறுப்புக்கு வந்தபோது, ஆந்திர முதலமைச்சர் நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்கள், அடிக்கடி என்னுடன் தொடர்பு கொள்ளவும், நான் அவருடன் தொடர்பு கொள்ளவும், அகில இந்தியப் பிரச்சினைகளிலே இருவரும் ஒன்றுபட்டு செயல்படவுமான நிலைமை இருந்தது. அந்த நிலையில், நான் பொறுப்பேற்ற மே 25ஆம் தேதியன்றே சந்திரபாபு நாயுடு அவர்கள், சென்னை வந்து என்னை இல்லத்தில் சந்தித்தார்.
தமிழகத்திற்கு அரிசி வழங்க ஆந்திர அரசின் சார்பில் ஒப்புதல் தெரிவித்ததோடு, டிசம்பருக்குள் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர ஏற்பாடு செய்வதாகவும் உறுதி கூறினார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் காழ்ப்புணர்ச்சியோடு கடுஞ்சொல் வீசி அவையே அமளிக்காடாக இருந்த நிலைமாறி, 96ஆம் ஆண்டு மே திங்களுக்குப் பிறகு, தமிழகச் சட்டப் பேரவை அமைதிப் பூங்காவாகவும், கருத்தாழம் மிக்க விவாதங்கள் நடைபெறும் அவையாகவும் விளங்கியதோடு, நகைச்சுவை ததும்பும் உரையாடல்கள் அதிகமாக நடைபெறும்.
உதாரணமாக ஒருசில சம்பவங்களைக் குறிப்பிடலாம். ஆளுநர் உரை விவாதத்தின்போது உரையாற்றிய த.மா.கா. உறுப்பினர் சிதம்பரம் அழகிரி பேசும்போது, "முதல்வரும் பேரவை முன்னவரும், இந்த வயதான காலத்திலும் எப்படி இளமையாக இருக்கிறார்கள் என்ற இரகசியத்தை எங்களுக்கும் தெரிவித்தால் நாங்களும் அவ்வாறே இருக்க முயற்சிப்போம்" என்று கேட்டபோது, "நாட்டையும், சமுதாயத்தையும் காக்க உங்களைப்போல இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தாலும், நம்பிக்கையாலும் நாங்கள் இளமையாக இருக்கிறோம்" என்று பலத்த சிரிப்பொலிக்கிடையே கூறினேன்.
ஆளுங்கட்சி சார்பில் அதே நாளில், கடலூர் தம்பி புகழேந்தி பேசும்போது என்னை மிகவும் புகழ்ந்து பேசினார். அப்போது நான் எழுந்து "சிதம்பரம் த.மா.கா. உறுப்பினர் அழகிரி பேசும்போது ஒரு பாடலைச் சொன்னார். அந்தப் பாடலில், அதிகமாகப் புகழ்ந்து கொண்டே இருந்தால், புகழ்ச்சிக்குரியவர்கள் நிலை குலைந்து போய் விடுவார்கள் என்றார். எனவே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை நிலை குலையச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்- அதாவது என்னைப் புகழ்வதன் வாயிலாக" என்று பதிலளித்தேன்.
30.5.1996 அன்று, பேரவையில் கழக உறுப்பினராக இருந்த டி.ராஜேந்தர் உரையாற்றி முடித்ததும், தமிழ் மாநிலக் காங்கிரஸ் உறுப்பினர் சிதம்பரம் அழகிரி எழுந்து, "பேசியவர் உங்களவரா? அல்லது எங்களவரா? என்பதைத் தெரிவிக்க வேண்டும்" என்றார். அப்போது நான் குறுக்கிட்டு, "அவர் உங்களவரும் இல்லை - எங்களவரும் இல்லை, நம்மவர்" என்று பல சிரிப்பொலிக்கிடையே கூறினேன்.
இதே நாளன்று காங்கிரஸ் உறுப்பினராக இருந்த ரங்கநாதன் தனது பேச்சில் "பொய்" என்று உச்சரித்தபோது, அ.தி.மு.க. தலைவராக இருந்த திருநாவுக்கரசு குறுக்கிட்டு, பொய் என்ற வார்த்தை "அன்பார்லிமெண்டரி" ஆகும் என்றார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நான் எழுந்து "பொய் என்ற வார்த்தை எப்பொழுது பாராளுமன்ற கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வர ஏற்பாடு செய்வதாக சந்திரபாபு நாயுடு உறுதி கூறினார்! வார்த்தையாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று பொருள்படும் என்றால், ஒரு உறுப்பினர் சொன்னது பொய் என்று குறிப்பிட்டுச் சொல்லும் போதுதான் பொய் என்ற வார்த்தை "அன்பார்லிமெண்டரி" என்றாகும்.
பொய் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே தவறு அல்ல. அப்படியானால் "பொய்மையும் வாய்மையிடத்த" என்ற வள்ளுவருடைய குறளைக்கூட நாம் சொல்ல முடியாமல் போய்விடும். எனவே ஒருவர் சொன்னது பொய் என்று இங்கே உள்ள ஒரு உறுப்பினரைப் பார்த்துக் குற்றம் சாட்டினால்தான் அப்பொழுது பொய் என்ற வார்த்தை அன்பார்லிமெண்டரி ஆகும். ஆகவே பொய்யான குற்றச்சாட்டு என்று சொல்வது தவறல்ல" என்று கூறினேன்.
1989-90ஆம் ஆண்டில் தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது, "பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் போடப்பட்டிருந்த வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறப்படும்" என்று நான் கூறி, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதற்கு முன்பாக, தி.மு.கழக ஆட்சி 1991 ஜனவரி மாதமே கலைக்கப்பட்டு விட்ட காரணத்தினால், அதற்குப் பின்பு வந்த ஆட்சியிலே திரும்பப் பெறப்படாத வழக்குகள் எல்லாம் அப்படியே இருந்து வந்தன. 96ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், பா.ம.க. சார்பில் அப்போது அவையிலே பேசிய பேராசிரியர் தீரன் இந்த வழக்குகளை எல்லாம் திரும்பப் பெற வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பிலும், இது போன்ற வேண்டுகோள்கள் பா.ம.க.வினர் மீதும் மற்ற அரசியல் கட்சிகளின் மீதும் அதற்கு முன்பிருந்த ஆட்சிக் காலத்திலே அரசியல் ரீதியாகப் போடப்பட்ட வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற வேண்டுமென்று என்னிடம் பல கோரிக்கைகள் வந்திருந்தன. அந்தக் கோரிக்கைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டு, அதற்கு முன்பிருந்த ஆட்சியில் போடப்பட்டிருந்த 722வழக்குகளில், ஒன்றிரண்டு கொலை வழக்குகளைத் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென்று 1996ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஆணை பிறப்பித்தேன்.
29.5.1996 அன்று கொரியா நாட்டைச் சேர்ந்த ஹுண்டாய் கார் தயாரிக்கும் தொழிற்சாலையின் தலைவர் பார்க் அவர்கள் தலைமையில், எக்சிகியூட்டிவ் மேனேஜிங் டைரக்டர் என்.எம்.கின் என்பவரும், இன்னொரு இயக்குநர் ஒய்.கே.ஜங்க் என்பவரும் வந்திருந்தார்கள். அந்தத் தொழிற்சாலை சார்பில் சென்னையில் ஒரு கார் தொழிற்சாலை தொடங்குவது குறித்து அன்றுதான் முதன் முதலாகப் பேசப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு ஆரம்ப முதலீடு 2450 கோடி ரூபாய் என்றும், பின்னர் மேலும் 1400 கோடி ரூபாய் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது, வாக்குப் பதிவு நடைபெற வேண்டிய மொடக் குறிச்சி தொகுதியில், 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், அந்தத் தொகுதியின் வாக்குப் பதிவை ஜூன் மாதம் முதல் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்திருந்தது. 1033 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், அவர்களுக்காக 65 பக்கங்களைக் கொண்ட வாக்குச் சீட்டுகள் புத்தக வடிவில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, மிகப் பெரிய வாக்குப் பெட்டிகள் எல்லாம் தயாரிக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை 2. 6.1996 அன்று நடைபெற்று, கழக வேட்பாளராகப் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1. 6.1996 அன்று, மூத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவரும். முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழகத்தின்பாலும், என்பாலும் மிகுந்த அக்கறை கொண்டவருமான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் பெங்களூரில் தனது 82ஆவது வயதில் மறைந்தார். நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நிலை தேறாமலே இயற்கை அடைந்தார்.
காமராஜர் - நிஜலிங்கப்பா - சஞ்சீவ ரெட்டி ஆகிய மூவரும் அகில இந்திய காங்கிரசின் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவர்கள் மட்டுமல்ல, பொது வாழ்க்கையில் தூய்மையையும் நேர்மையையும் கட்டிக் காத்தவர்கள். மூவரும் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்ட மொடக்குறிச்சி தொகுதியில் வென்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன் நெருங்கிய நண்பர்களும்கூட. ஒருகால கட்டத்தில் தமிழகத்தில் காமராஜரும், ஆந்திராவில் சஞ்சீவ ரெட்டியும், கர்நாடகத்தில் நிஜலிங்கப்பாவும் முதல்வர்களாக ஆட்சி புரிந்தார்கள்.
அப்பொழுது தென்னக மாநிலங்களிடையே அற்புதமான நல்லுறவு நிலவியது. அகில இந்திய காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டதற்கு, ஒரு விதத்தில் சஞ்சீவ ரெட்டியே காரணம். 1969ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் மேலிடத்தில் மற்ற தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சஞ்சீவ ரெட்டியைக் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தி வைத்தார். ஆனால் தேர்தல் வந்தபோது, கடைசி நிமிடத்தில், மனசாட்சியைக் காரணமாகக் காட்டி, ரெட்டியை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வி.வி.கிரியைப் பகிரங்கமாக ஆதரித்தார்.
இதன் விளைவாகவே காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. அந்த நேரத்தில் நான் டெல்லியிலே இருந்த காரணத்தால், கழகத்தின் சார்பில் பேராசிரியர் அவர்களையும், தம்பி துரைமுருகனையும் பெங்களூர் சென்று இறுதி அஞ்சலி செலுத்திடச் செய்தேன். 1989 ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது, நீலம் சஞ்சீவரெட்டி அவர்கள் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவர் என்னிடம்தான் சென்னை தலைமைச் செயலகத்தில், கோட்டையில், தான் அமர்ந்து அமைச்சராகப் பணியாற்றிய அந்த அறையைப் பார்க்க வேண்டுமென்று கூறினார்.
நானும், பேராசிரியர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் அவர் தங்கியிருந்த இடம் சென்று, அவரை அழைத்து வந்து, கோட்டையில் விருந்தளித்து, அவர் தங்கிப் பணியாற்றிய அமைச்சர் அறையைக் காட்டிய போது, நின்ற நிலையிலேயே நெகிழ்ந்து போனார். குழந்தைபோல, அந்த நாற்காலியிலே சற்று நேரம் உட்கார்ந்து விட்டு, "எழுந்திருக்கிறேனப்பா" என்று என்னிடம் சொல்லி விட்டு, அவ்வாறே செய்தார்.
அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, தமிழகத்தின் மீது ஒரு பாச உணர்வை மனதிலே பதிய வைத்திருந்தார். அவர் ச
ுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு எத்தனை முறை சிறை சென்றார் என்ற எண்ணிக்கை அவருக்குக்கூடத் தெரியாது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய திருவுருவப் படத்தைத் திறப்பதற்காக அன்னாள் முதலமைச்சர் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களால் அழைக்கப்பட்டு, அவர் தமிழகச் சட்ட மன்றத்திற்கு வருகை தந்த நேரத்தில், நான் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருந்தேன். அப்போது காமராஜரின் படத்தைத் திறந்து வைத்த சஞ்சீவரெட்டி அவர்கள் என்னைப் பற்றியே அதிகமாகப் பேசினார்.
இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இடம் தமிழகம்தான் என்றார் காமராஜர்! காமராஜர் மறைந்தபோது நெருக்கடி நிலை அமலில் இருந்தால், அவர் மறைவுச் செய்தி கேட்டதும், உடனே தன்னால் சென்னைக்கு வர முடியவில்லை என்றும், சாதாரண சஞ்சீவ ரெட்டிக்கு விமான டிக்கெட் எப்படிக் கிடைக்கும் என்றும், இருந்தாலும் கடைசி நேரத்தில் தாமதமாக சென்னை வந்து சேர்ந்ததாகவும், கருணாநிதியும் அவருடைய அரசும் தன்னை விமான நிலையத்திலிருந்து காமராஜருடைய இறுதி யாத்திரை நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவினார்கள் என்றும், காமராஜருக்காக அனந்தபூரில் ஓர் இரங்கல் கூட்டம் நடத்த விரும்பி ஏற்பாடு செய்தபோது, அதற்கு அங்கே அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அந்தக் கூட்டத்தை சென்னையிலே நடத்தியிருந்தால் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அனுமதி வழங்கியிருப்பார் என்றும், அந்த நிகழ்ச்சியையும் பத்திரிகையிலே இடம் பெறச் செய்திருப்பார் என்றும் பேசினார்.
இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான், பெருந்தலைவர் காமராஜரிடமும், நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களிடமும் தொடர்பு கொண்டு நெருக்கடி நிலையை எதிர்த்து, தமிழக அமைச்சரவையே பதவி விலகத் தயாராக உள்ளது என்று சொன்னபோது, சஞ்சீவ ரெட்டி அவர்கள், காமராஜரிடமும் கலந்து கொண்டு கூறுவதாகச் சொல்லிவிட்டு - அவ்வாறு கலந்து பேசிவிட்டு, பிறகு என்னை அழைத்து "காமராஜர் சொல்கிறார், இப்போது இந்தியாவிலேயே சுதந்திரக் காற்றை சுவாசிக்கக்கூடிய இடமாக தமிழகம் தான் இருக்கிறது. அதையும் கெடுத்துவிடக்கூடாது என்று கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்று என்னிடத்திலே காமராஜர் சொன்னார்" என்று குறிப்பிட்டார்.
15.7.1996 அன்று, தமிழகச் சட்டமன்றத்தில் சஞ்சீவ ரெட்டி அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலே நானும் கலந்து கொண்டு மறைந்த அந்த பெருமகனுக்கு புகழாரங்களைச் சூட்டினேன். ஆண்டுதோறும் என்னுடைய பிறந்தநாளை, ஜூன் 3ஆம் தேதியன்று, தமிழகமெங்கும் கழகத் தோழர்கள் கொண்டாடுவதைப் போல அந்த ஆண்டிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதை ஏடுகளின் மூலம் அறிந்த நான், உடனடியாக நான் விடுத்த அறிக்கையில், என்னுடைய பிறந்த நாள் விழாவினை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாமென்று கேட்டுக் கொண்டேன்.
அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாள் ஆடம்பரம் எதுவும் இல்லாமல், கொடியேற்று விழாக்கள், இலவச மருத்துவ முகாம்கள், கண் தானம், இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சிகள், ஏழை எளியோருக்கு அன்னதானம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள், புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதோடு, குறிப்பாக எனது ஆந்திர மாநிலத்தலைவராக இருந்தாலும், தமிழகத்தின்மீது மிகுதியான பாச உணர்வைக் கொண்டிருந்தார் நீலம் சஞ்சீவரெட்டி வேண்டுகோளினையேற்று மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் பெருமளவில் நடைபெற்றன. அப்போது தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி அவர்கள் என் பிறந்த நாளையொட்டி வீட்டிற்கே வந்திருந்து கட்டிப் பிடித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
பிறந்த நாளினை யொட்டி, தி.மு.கழக அறக்கட்டளைக்காக சிவானந்தா குருகுலம் மற்றும் ஆதரவற்றோர்க்கான நிதியாக கழகத் தோழர்கள், மற்றும் அமைப்புகள் சார்பில் தனித்தனியே என்னிடம் உண்டியல் மூலமாக வழங்கிய நிதி மட்டும் ரூ. 6,86,277. இதில் காட்டாங்குளத்தூர் சிவானந்தா குருகுலத்திற்கு மட்டும் ஐந்து இலட்சம் ரூபாயும், உதவும் கரங்கள் நிறுவனத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. இது தவிர, முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக என் பிறந்த நாளையொட்டி ரூ.9,14,002 குவிந்தது.
அந்தக் காலக் கட்டத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தினரின் ஊதிய உயர்வு சம்பந்தமான பிரச்சினையில் தீர்வு ஏற்படாததால், பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பிருந்தே படப்பிடிப்புகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், திரையுலகப் பிரமுகர்கள் சிலர் என்னைச் சந்தித்து திரையுலகத்தினரின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
அப்போது செய்தித்துறை அமைச்சராக இருந்த முல்லைவேந்தனிடம் கூறி, மூன்று தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திடுமாறு கூறினேன். அந்தப் ஆளுநர் சென்னா ரெட்டி எனது பிறந்த நாளன்று வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்! பேச்சுவார்த்தையில் உடன்பாடு வராத நிலையில், இந்தப் பிரச்சினை குறித்து, 4-6-1996 அன்று மாலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபைப் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பிரதிநிதிகள், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் ஆகிய மூன்று தரப்பினரையும் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, நான்கு மணி நேரத்திற்கு மேல் உரையாடினேன்.
குறிப்பாக, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை பிரதிநிதிகள் என்ற முறையில் தாசரி நாராயணராவ், புண்டரி காட்சய்யா, கே.ஆர்., தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கே.ஆர்.ஜி., இப்ராகிம் ராவுத்தர், முக்தா சீனிவாசன், கே.எஸ்.பிரகாசம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன், சி.வி.ராஜேந்திரன், பாலு மகேந்திரா, பி.வாசு, விசு. கே.எஸ்.ரவிக்குமார், ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் விஜயன், மோகன் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது சம்பளப் பிரச்சினை குறித்து மூன்று பிரிவினரும் தெரிவித்த சம்பள விகிதங்கள் பற்றி திரைப்படத் தொழிலாளர் பிரச்சினையைத் தீர்க்க, திரையுலகப் பிரமுகர்களுடன் கலந்தாய்வு! அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி சில நாட்களில் தீர்த்துக் கொள்வதென்றும், அடுத்த நாள் முதல் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு மூன்று தரப்பினரும் முன்வந்ததோடு, அரசுக்கு முன்னறிவிப்புக் கொடுக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.
அன்றைய கூட்டத்தில்தான் முக்கிய முடிவான சண்டைப் பயிற்சியாளர்கள் பணி நேரத்தின்போது உயிரிழக்க நேரிட்டால், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் நான் எடுத்த முயற்சிக்காக திரைப்படத் துறையினர் அனைவரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்று விட்டு சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து மலர்ச்செண்டு கொடுத்து, தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
புகைப்படக்காரர்கள் எங்கள் இருவரையும் பார்த்து "க்ளோஸ்" ஆக வரவேண்டுமென்று சொன்னார்கள். அவர்களிடம் "நாங்கள் இருவருமே ஏற்கனவே "க்ளோஸ்" ஆக இருந்து வருகிறோம்" என்று சிரித்துக் கொண்டே கூறினேன். என்னைப் பார்த்த பிறகு ரஜினி வெளியே செல்லும்போது, செய்தியாளர்கள் அவரைப் பார்த்தபோது, "தேர்தலுக்கு முன்பே, வெற்றி பெற்ற பின் கோட்டையிலே கலைஞரைச் சந்திப்பேன், என்று கூறியிருந்தேன். அவ்வாறே இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, "தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதா மீதான எதிர்ப்பு அலை மட்டும் ஒரு காரணம் அல்ல; கருணாநிதி, மூப்பனார் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் இன்னொரு காரணம். மக்களை யாரும் விலை பேச முடியாது. ஏமாற்ற முடியாது. இந்த மகத்தான வெற்றிக்கு என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்கள்தான் காரணம். தி.மு.க. ஆட்சி நன்றாக இருக்கிறது. போகப் போகப் பாருங்கள். கலைஞர் நல்லாட்சி நடத்துவார்."
என்று கூறினார். அண்ணாவின் கணையாழிக்கு மேலாக... -அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை "நெஞ்சுக்கு நீதி" ஐந்தாம் பாகம் ஆரம்பமாகி விட்டது. அண்ணாவின் இதயம் வரைகின்ற தமிழோவியம் தமிழ் நிலத்திற்கு தவமாக வந்துவிட்டது. கோடானு கோடி தமிழர்களின் முகவரியும் - அகவழியும் ஒரு தலைவனின் இதயத்திலிருந்து இறங்கி வருகிறது. பஞ்சுப் பொதியில் பதுங்குவதற்கு நெருப்புத் துண்டுகள் நேரம் பார்க்கும் அரசியல் களத்தில் இருந்து கொண்டு...
உதடுகள் காயப்பட்டாலும், உண்மைகள் காயப்பட்டுவிடக் கூடாதென்கிற கவனக் காப்போடு... "நெஞ்சுக்கு நீதி"யை நெய்து முடிக்க ஏது நேரம்? இமைகளை நனைத்து விட்டுப் போனது நான்கு பாகங்கள்! இதயத்தைத் துவைத்துவிட வருகிறது ஐந்தாம் பாகம்! பனிப்புயல் ஏரியில் பனி நாட்டுப் பறவையின் பாடல் அல்ல... "நெஞ்சுக்கு நீதி" இரண்டு நூற்றாண்டுகளை இணைத்துக் கட்டியிருக்கிற யுகப் பொழுதில், பொது வாழ்வு - அரசியல்- திரைக்கதை - இலக்கியம்- என விரிந்து பரந்து 85 ஆண்டுகளைக் கடந்து நிற்கிற காவியத் தலைவனின் காலடித் தடங்கள்தான்- "நெஞ்சுக்கு நீதி" ஒரு தலைவனின் இதயத்தில் இத்தனை இடிகளா?
ஒரு தலைவனின் முதுகில் இத்தனை சுமைகளா? என்று ஒரு தலைவனின் குணங்களையும் - ரணங்களையும் பதிவு செய்கிற பட்டயம்தான்- "நெஞ்சுக்கு நீதி" ஒரு நதியின் நீளம் அறிகிற ஆய்வு அல்ல; ஒரு மாமனிதனின் மனதின் ஆழம் அறிகிற நேயம்தான்- "நெஞ்சுக்கு நீதி" சங்கத் தமிழ் படித்தோம் - தமிழின் இனிமை அறிந்தோம்! குறளோவியம் படித்தோம் - தமிழின் வலிமை அறிந்தோம்! தொல்காப்பியப் பூங்கா படித்தோம் தமிழன் தன்னை அறிந்தான்! உலக வரலாறுகளே!
உற்றுக் கேளுங்கள் ஆறுகோடித் தமிழர்களின் அடையாளம் ஐந்தாவது பாகத்திலும் பதிவாகிறது! திருக்குவளை தந்த திருக்குறளே! தீந்தமிழ் தேனெனும் பெருங்கடலே! விடுமுறைக்குப் போகாத நதி நீங்கள்! அறுவடை முடியாத நிலம் நீங்கள்! ஓய்வு அறியாத பறவை நீங்கள்! அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை வெளிச்சத்தின் கருவறையான கிழக்கு நீங்கள்! முடிவு இல்லாத வானம் நீங்கள்! ஊன்றுகோல் விரும்பாத எழுதுகோல் நீங்கள்! எங்களுக்காக வாழும் வரலாறு நீங்கள்!
உங்கள் "நெஞ்சுக்கு நீதி" எங்கள் நெஞ்சுக்கு நிதி! உங்களுக்கு நாங்கள் என்ன தந்துவிட முடியும், 'அண்ணாவின் கணையாழி'க்கு மேலாக?
