நெஞ்சுக்கு நீதி
ஓய்வுக்கு ஓய்வு · 313 / 391
1. ஓய்வுக்கு ஓய்வு "வயதில் ஐந்தாம் பாகம் படைக்கப் பொதுவாழ்வின் "லகான்" எல்லார் கையிலும் இருப்பதில்லை" என்று கவிப்பேரரசு தம்பி வைரமுத்துவின் வியப்பு, இதோ வாழ்த்தாக வந்துள்ளது. அந்த "லகான்" என் கையில் இல்லாமல், என் பொதுவாழ்வின் கையில் இருப்பதால்தான் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு இந்த வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வேதனைகளையும், சோதனைகளையும் கடந்திடாத சாதனைகள் இருக்க முடியுமா? அப்படியிருந்தால், அவை சாதனைப் பட்டியலில்தான் இடம் பெற முடியுமா?
இதோ, இந்த 5ஆம் பாகத்தை எழுதிடத் தொடங்கும் சமயத்தில், என்னைச் சுற்றியுள்ள இந்திய நாட்டின் தமிழ் மாநில வட்டத்துக்குள்ளிருந்து; என் தமிழர்களை வட்டத்துக்கு வெளியேயும் பல்வேறு நாடுகளில் பார்க்கிறேன். அவற்றில் ஒன்று இலங்கை என்பதையும், அங்கே ஏறத்தாழ ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ் மக்கள் உரிமைக் குரல் எழுப்பி வருவதையும் -உயிர்ப்பலி கொடுத்து வருவதையும்- நினைத்து நினைத்து நித்தம் நித்தம்- நெஞ்சு வெடித்திடும் - நிலை இன்னமும் நீடிப்பதா என்ற ஏக்கத்தின் எதிரொலியாக, 2008 ஏப்ரல் 23ஆம் நாள் தமிழகச் சட்டப் பேரவையில், "இலங்கையில் இலங்கையில் அமைதி காண மத்திய அரசு உதவ வேண்டுமென்ற தீர்மானத்தை முன்மொழிந்து, தாங்கள் ஆற்றிய, உருக்கமான உரை உலகத் தமிழர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!
-தமிழறிஞர் வா.செ. குழந்தைசாமி 85வயதில் 5ஆம் பாகம் படைக்கப் பொதுவாழ்வின் "லகான்" எல்லார் கையிலும் இருப்பதில்லை... உங்கள் பெருவாழ்வு தனிமனித நிகழ்வல்ல - சரித்திரத்தின் பதிவு! -கவிப்பேரரசு வைரமுத்து அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டுவரும் இரு பிரிவினரிடையேயும் பேச்சு வார்த்தைகளுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த, முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காகப் பயனுள்ள பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்" என்றத் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்தும் - மற்ற கட்சியினர் எடுத்துரைத்த கருத்துக்களை வழிமொழிந்தும் -அப்போது நான் ஆற்றிய உரை குறித்து சிறந்த தமிழறிஞரும், சிந்தனையாளருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் எனக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:- "இலங்கையில் அமைதிகாண மத்திய அரசு உதவ வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, தாங்கள் ஆற்றிய, உருக்கமான, சொற் பொழிவைப் படித்தேன். ஈழத்தமிழர் தலைவிதியை எண்ணிக் கலங்கி இருக்கும் உலகத் தமிழ் நெஞ்சங்கள், தங்கள் சொற்பொழிவைப் படிக்கும் போது மௌனமாகத் தேம்பி இருக்கும்.
தமிழர் ஒரு மொழியினர்; பல நாட்டினர். எல்லா நாட்டிலும் சிறுபான்மையர். இலங்கையில் தங்கள் நிலத்தை ஆண்ட தமிழர், இன்று சிறுபான்மை ஆகிவிட்ட ஆதிக்குடியினர், தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடினர்; அரசியல் பிழைத்தோர் ஆட்சி நடந்ததால், அறவழியினரைப் புறந்தள்ளி ஆயுதம் தாங்கியோர் தலைமை ஏற்கும் சூழ்நிலையை ஆட்சியிலிருந்தோர் உருவாக்கினர். எது எப்படி இருப்பினும் தமிழர்தம் கோரிக்கை எவ்வளவு நியாயமானது அவர்கள் உரிமை எவ்வளவு புனிதமானது; உலகின் ஒருமித்த ஆதரவுடன் தங்கள் வேட்கைக்கு வெற்றி கண்டிருக்க வேண்டியவர்களுடைய இன்றைய நிலையை எண்ணிக் கலங்கியிருக்கும் தங்கள் சொற்பொழிவு, ஒரு கட்சித் தலைவனின் சட்ட மன்றச் சொற்பொழிவு அன்று; அது ஒரு தமிழ் உள்ளம் படைத்த கவிஞனின் ஏக்கத்தின் எதிரொலி.
சூழல் வேறாயினும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கனின் புகழ்மிக்க "கெட்டிஸ் பர்க்" சொற்பொழிவு போன்ற இந்த உரை, உலகத் தமிழர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்." கலைஞர் ஆற்றல் மிகுந்த தலைவர்! எத்தனை சோதனைகள் வந்தாலும் பாறைபோல் உறுதி உடையவர்!- ப.சிதம்பரம் இது போன்ற பாராட்டுரைகள்தான் - என் பாலைவனப் பயணத்தில் பசுஞ்சோலையாகவும் - பத்தரை மாற்றுத் தங்கப் பதக்கங்களாகவும் -எனக்கு உற்சாகமூட்டுகின்றன.
தி.மு.கழகத்தின் தலைவர் பணி - தமிழகத்தின் முதலமைச்சர் பணி - சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் - கட்சியிலே கிளைக் கழகச் செயலாளர் முதல் தலைமைக் கழகம் வரை பொதுத் தேர்தல் - எழுத்துப் பணி-சுற்றுப் பயணங்கள் - இவற்றுக்கிடையே "நெஞ்சுக்கு நீதி" ஐந்தாம் பாகம் தொடங்கும் என்று ஏடுகளில் அறிவிப்பு செய்து விட்டேன். நேரம் கிடைக்குமா? என்ற கவலை பெரிதாக கருணாநிதி ஆதரித்தாலும் உறுதியாக ஆதரிப்பார் - எதிர்த்தாலும் உறுதியாக எதிர்ப்பார்!
- இந்திரா காந்தி உள்ளது. தொடங்கி விட்டால் பின்னர் எப்படியும் எழுதித்தானே தீர வேண்டும் என்ற உறுதியோடு அறிவிப்பு வெளி வந்துவிட்டது. ஐந்தாம் பாகத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை வெளிவந்துள்ள நான்கு பாகங்களைச் சற்றுத் தொட்டுப் பார்த்துச் செல்வது நலம் என்று கருதுகின்றேன். நான்காம் பாகத்தினை 55 அத்தியாயங்களோடு முடித்திருந்தேன். அதனை முடிக்கும்போது, கடைசி பத்தியாக "ஐந்தாம் பாகம் எழுதும் வாய்ப்பை எனக்கு இயற்கை வழங்காவிடில்; அதனை யாரேனும் எழுதி வெளிவந்தால், அத்துடன் இணைத்துக் கொள்ளத்தான் 1996 முதல் 2001 வரையிலான கழக ஆட்சி சாதனைகளை, "சாதனைச் சரித்திரம்" என்ற பெரிய புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்" என்று முடித்திருந்தேன்.
முதல் அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்து, 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை கழக அரசின் சார்பிலே துறை வாரியாக செய்யப்பட்ட சாதனைகளின் தொகுப்பே "சாதனைச் சரித்திரம்" அந்த ஆவணத் தொகுப்பு இன்றளவும் ஆராய்ச்சிக்குரிய தொகுப்பாக - கடந்தகால கழக ஆட்சியில் தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் எவற்றையெல்லாம் செய்தோம் என்று இன்றைக்கும் எடுத்துப் பார்த்து ஒப்பீடு செய்து தெளிவு பெறக்கூடிய அளவிற்கு சாதனைக் காவியமாக விளங்கிக் கொண்டுள்ளது. "நெஞ்சுக்கு நீதி" யின் முதல் பாகம் என்பது நான் பிறந்த 1924ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு, நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வரையில், தந்தை பெரியார் அவர்களின் அடியொற்றிய தொண்டனாகவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்குப் பாத்திரமான ஆயிரம் காலத்துப் பயிரான இந்தக் கழகத்தைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்பதே எனக்கு என்றுமே தணியாத ஆசை!
தம்பியாகவும் இருந்து ஆற்றியப் பணிகள் பற்றிய சம்பவங்களை உள்ளடக்கியதாகும். அந்த முதல் பாகம் மொத்தம் 755 பக்கங்களைக் கொண்டது. 141 அத்தியாயங்களோடு முடிந்தது. அண்ணா அவர்கள் மறைந்தபோது, நான் எழுதி வானொலியில் படித்த இரங்கல் கவிதை பற்றி மறைந்த எஸ்.எஸ்.வாசன் அவர்கள், "அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டிருக்கிறீர்கள். அது இதுவரை எந்தக் கவிஞருக்கும் தோன்றாத கற்பனை" என்று எழுதிய மடலுடனும், அந்த இரங்கல் கவிதையுடனும் முடித்திருந்தேன்.
"நெஞ்சுக்கு நீதி" யின் இரண்டாம் பாகம் 1969 முதல் 1976 வரையிலான ஏழாண்டு காலத்தில், என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட - மற்றும் கழக வரலாறு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்தது. "நெஞ்சுக்கு நீதி" யின் முதற்பாகத்தை அருமை நண்பர் மறைந்த சாவி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர் ஆசிரியராகப் பணியாற்றிய "தினமணி கதிர்" வார இதழில் தொடர்ந்து எழுதினேன். அவர் பின்னர் "தினமணி கதிர்" இதழிலிருந்து விலகி "குங்குமம்" இதழில் பணியாற்றியபோது, "நெஞ்சுக்கு நீதி" யின் இரண்டாம் பாகத்தினை "குங்குமம்" இதழிலே எழுதினேன்.
நானும் கருணாநிதியும் ஒரே ராசி. அது எங்களை இணைத்து வைக்கும்- நாங்கள் சேர்ந்தே இருப்போம்! -சென்னா ரெட்டி இரண்டாம் பாகத்தினை நான் எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து விட்டேன். அதுவே நூலாக வெளிவர முயற்சி எடுத்து, அதற்காக என் முன்னுரையைக் கேட்டபோது, என் வயது 62. இரண்டாம் பாகத்திற்கான முன்னுரையில், "இந்த அறுபத்து இரண்டு ஆண்டுகளில் - மிகப் பெரும் பகுதி - பொது வாழ்வுக்கே செலவாகியிருக்கிறது என்பது, என் இதயத்துக்கு ஆறுதலைத் தரவல்லதாகும்.
எஞ்சியிருக்கும் நாட்களும் சிறப்பாக தமிழுக்கும், தமிழின மக்களுக்கும் - பொதுவாக மக்கட்பணிக்கே பெரிதும் பயன்பட வேண்டுமென்பது என் தணியாத ஆசை" என்று எழுதியிருந்தேன். அந்த ஆசை முற்றிலும் நிறைவேறியுள்ளது என்ற மன திருப்தியோடுதான் ஐந்தாம் பாகத்தைத் தொடங்குகின்ற இந்த நேரத்தில் என் எண்ண ஓட்டம் அமைந்துள்ளது. இரண்டாம் பாகம் 586 பக்கங்களைக் கொண்டது. 81 அத்தியாயங்கள். நெருக்கடி நிலை முடிந்தும் முடியாத நிலையில் - அதனையொட்டி கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் - மிசாக் கைதியாக சிறையில் வாடிய மாவீரன் சிட்டிபாபுவின் மரணத்தோடு இரண்டாம் பாகத்தை நிறைவு செய்திருந்தேன்.
1976க்குப் பிறகு 1991 வரையிலான 15 ஆண்டு கால சரித்திர நிகழ்வுகளைத் தொகுத்து, மூன்றாம் பாகத்தை எழுதியபோது 1988ஆம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் தான் அதிலே முழுமையாக எழுதப்பட்டன. இந்த மூன்றாவது பாகம் நூலாக வெளியிடப்பட்டபோது, 16.5.1997 அன்று எழுதிய முன்னுரையில், "நான்காவது பாகத்தை நானே எழுதுவேனா? அல்லது நான் எழுதாமலே நாட்டு மக்கள் இதயத்தில் இந்த வரலாற்றுக் குறிப்புகள் வரிகளாக வடிவங் கொள்ளுமோ என்பதை நிர்ணயிக்கப் போவது இயற்கை தானே?"
என்று எழுதியிருந்தேன். ஆனால், அந்த நான்காவது பாகத்தை நானே எழுதி, அதுவும் புத்தகமாக வெளியிடப்பட்டு, தற்போது ஐந்தாவது பாகத்தையும் நான் எழுதத் தொடங்குகின்ற அளவிற்கு இயற்கை இடம் கொடுத்துள்ளது. மூன்றாம் பாகம் 612 பக்கங்களைக் கொண்டது. மொத்தம் 74 அத்தியாயங்கள். அந்த மூன்றாம் பாகத்தை முடிக்கும்போது, "ஆயிரம் காலத்துப் பயிராம் இந்தக் கழகத்தைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்பதே எனக்கு என்றுமே தணியாத ஆசை" என்று முடித்திருந்தேன்.
அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளேனா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் கூற வேண்டும். 1989 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு - 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த சில முக்கிய நிகழ்வுகள் கடைசி அத்தியாயத்தில் இணைக்கப்பட்டு வெளி வந்திருப்பதே நான்காம் பாகம். 2003ஆம் ஆண்டு நான்காம் பாகம் நூலாகவே 633 பக்கங்களைக் கொண்டு 55 அத்தியாயங்களோடு வெளி வந்துள்ளது. ஆக, இந்த நான்கு பாகங்களிலுமாகச் சேர்ந்து என் வாழ்க்கை வரலாறு 2586 பக்கங்கள் இதுவரை எழுதப்பட்டு, 2587ஆவது பக்கத்திலிருந்து ஐந்தாம் பாகமாக தொடங்கப்படுகிறது.
நான்காம் பாகத்தை என் எண்பதாவது அகவையில் அடியெடுத்து வைத்தபோது நூலாகத் தந்த நான், ஐந்தாம் பாகத்தை 84ஆம் வயதில் எழுதத் தொடங்குகிறேன். 1996ஆம் ஆண்டு முதல் என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் - நான் தலைவனாகப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தில் நடைபெற்ற சம்பவங்களும் இணைந்து வெளிவரவிருப்பது தான் "நெஞ்சுக்கு நீதி" தொடரின் ஐந்தாம் பாகம் ஆகும். எனது வாழ்க்கை வரலாற்று நூல் என்று இது அழைக்கப்பட்டாலும், என் வாழ்க்கை வேறு, தி.மு.கழகத்தின் வாழ்க்கை வேறு என்ற வித்தியாசம் இல்லாமல் இரண்டுமே கலைஞரும் சென்னா ரெட்டியும் இரண்டு சிங்கங்கள்.
இருவரும் சேர்ந்தே இனி கர்ஜனை புரிவார்கள்! -முரசொலி மாறன் இரண்டறக் கலந்த ஒன்று என்பதால், இந்த இரண்டையும் கலந்துதான் இந்த நான்கு பாகங்களும் எழுதப்பட்டு வெளி வந்துள்ளன. நான்காம் பாகத்தின் இறுதியில், 1995ஆம் ஆண்டு டிசம்பர் வரை விரிவாக எழுதி விட்டு, இறுதியாக முடிக்கும்போது, 1996ஆம் ஆண்டுக்குப்பின் நடைபெற்ற ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக சில பத்திகள் மட்டுமே எழுதியிருந்தேன்.
1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் முடிவுற்ற நிலையில் தமிழகத்திலே தி.மு.கழக ஆட்சி அமைந்தது குறித்தும், பதவியேற்ற பின் நான் டெல்லி சென்று, மத்தியிலே ஆட்சி அமைக்கும் பணியிலே ஈடுபட்டது குறித்தும் எழுதி முடித்திருந்தேன். அவற்றின் தொடர்ச்சியாக தற்போது "நெஞ்சுக்கு நீதி" யின் ஐந்தாம் பாகம் தொடங்குகின்றது. 1996ஆம் ஆண்டு மத்திய அரசுக்கும், தமிழக மாநில அரசுக்கும் இணைந்தே பொதுத் தேர்தல் நடைபெற்றது என்பதும், அந்தத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் இரு பிரிவாகப் பிரிந்து, மூப்பனார் தலைமையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற ஒரு புதிய அமைப்பு உருவாகி, அந்த காங்கிரஸ் தி.மு.கழக அணியை ஆதரித்தது.
அந்த உறவுக்கு வித்திட்டவர் நண்பர் "துக்ளக்" சோ என்றுதான் சொல்ல வேண்டும். காங்கிரசின் மற்றொரு பிரிவு, அப்போது டெல்லியில் பிரதமராக இருந்த நரசிம்மராவ் அவர்களின் விருப்பப்படி அ.தி.மு.க. அணியை ஆதரித்தது. அப்போது நான் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட போது, நண்பர் ப.சிதம்பரம் அவர்கள், "கலைஞர் ஆற்றல் மிகுந்த தலைவர். ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவம்.
எத்தனை சோதனை வந்தாலும் பாறை போல் உறுதி உடையவர். "கருணாநிதி ஆதரித்தாலும் உறுதியாக ஆதரிப்பார் - எதிர்த்தாலும் உறுதியாக எதிர்ப்பார்" என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறுவார். கலைஞர் தலைமையில் நல்ல அரசு அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அடுத்த பிரதமர் யார் என்பதை இந்தியாவில் உள்ள ஏழு, எட்டுத் தலைவர்கள் கூடிப் பேசப் போகிறார்கள். தமிழ் மாநிலக் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேர், தி.மு.க.
எம்.பி.க்கள் 17 பேர், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் 2 பேர் - ஆக 39 பேரும் டெல்லி செல்வோம். அங்கிருந்து இரண்டு தமிழர்களுக்கு அழைப்பு வரும். ஒருவர் கலைஞர், மற்றொருவர் மூப்பனார். இந்த வேட்டி கட்டிய தமிழர்கள் யாரைச் சுட்டிக் காட்டுகிறார்களோ அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார்" என்று குறிப்பிட்டார்.
கே.ஆர். நாராயணன் தேர்தலுக்கு முன்பு இவ்வாறு சொன்னதோடு மட்டுமல்லாமல், தேர்தலுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியிலும், மத்தியில் புதிய பிரதமரைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக கலைஞரும், மூப்பனாரும் விளங்குவார்கள் என்றும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு நரசிம்மராவ்தான் முழு முதற்காரணம் என்றும், அதற்கு அவரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
தேர்தல் நாள் நெருங்க, நெருங்க பல்வேறு கருத்துக் கணிப்புகள் ஏடுகள் வாயிலாக வெளி வந்தன. அந்தக் கருத்துக் கணிப்பில் எனக்கு நம்பிக்கையில்லை என்று நான் தெரிவித்தபோதிலும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தி.மு.கழகக் கூட்டணி வெற்றி பெறும் என்றே வெளியிட்டன. "எகனாமிக் டைம்ஸ்" நாளேடு வெளியிட்ட "சி.எம்.எஸ். -டைம் போல்" கருத்துக் கணிப்பில், 220 இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று அரசு அமைக்கும் என்று செய்தி ஜி.கே.
மூப்பனார் பீட்டர் அல்போன்ஸ் லல்லு பிரசாத் யாதவ் ஜோதி பாசு வெளியிட்டார்கள். பிரபல நாளேடான "டைம்ஸ் ஆப் இந்தியா" அகில இந்திய அளவில் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் ஒரு இடம்கூடக் கிடைக்காது என்றும் இந்தியாவிலேயே பொத
ு மக்களின் வெறுப்புக்கு ஆளான ஒரே அரசியல்வாதி ஜெயலலிதாதான் என்றும் தெரிவித்திருந்தது. இந்தக் கருத்துக் கணிப்புகள் குறித்து - தி.மு.க.வுடனும் இல்லாமல், அ.தி.மு.க.வுடனும் இல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து, 96ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ம.தி.மு.க. போட்டியிட்டது. அந்தத் தேர்தல் குறித்து, ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வை.கோ. செய்தியாளர்களிடம் கூறும்போது, உண்மையான தி.மு.க.
எது என்பதைக் காலம் விரைவில் தீர்மானிக்கும் என்றும், ம.தி.மு.க. கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்றும் ம.தி.மு.க. வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், முரசொலி மாறன் மூலமாக தி.மு.க. தலைவர் தயாரித்த கருத்துக் கணிப்பு எத்தகைய மோசடி என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என்றும் கூறியதோடு மாத்திரமல்லாமல், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா பற்றிக் கூறும்போது, "முதல்வர் ஜெயலலிதாவை தேர்தலில் தோற்கடித்தால் மட்டும் போதாது - அவரும், அவருடன் இருப்பவர்களும் முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
அந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து கொள்ள, ஜெயலலிதாவும், அவரது உடன் பிறவா சகோதரி என அவரால் கூறப்பட்ட சசிகலாவும், 31.3.1996 அன்று சென்னையிலிருந்து அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் திருப்பதி சென்று திரும்பினார்கள். இதற்காக அ.தி.மு.க. கட்சியிலிருந்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அரசுக்கு செலுத்தப்பட்டது மாத்திரமல்லாமல், அந்தத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரைப் பயன்படுத்திய வகையில், ஒரு கோடியே 75 ஆயிரம் ரூபாயை அ.தி.மு.க.
முன்தொகையாகக் கட்டி, பின்னர் அதற்காக 45 லட்சம் ரூபாய் போக, மீதத் தொகையாக 55 லட்சம் ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாயின. சென்னை சேப்பாக்கத்தில் போட்டியிட்ட நான், ஒன்பதாவது முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். 1957ல் திருச்சி மாவட்டம் குளித்தலையிலும். 1962ல் தஞ்சாவூரிலும், 1967ல் சென்னை சைதாப் பேட்டையிலும் 1971ல் மீண்டும் சைதாப்பேட்டையிலும், 1977ல் அண்ணாநகரிலும், 1980ல் மீண்டும் அண்ணாநகரிலும், 1989ல் துறைமுகத்திலும், 1991ல் மீண்டும் அதே துறைமுகத்திலும், 1996ல் சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் வெற்றி பெற்றேன்.
தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து 10 - 5 -1996 தேதிய "தினமணி" நாளிதழில் வெளிவந்த தலையங்கம் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதன் முக்கியப் பகுதிகள் மட்டும் வருமாறு:- "தமிழகத் தேர்தல் அரசியல் பிரளயமாக மாறி, அராஜக - ஆர்ப்பாட்ட ஆட்சியை விழுங்கி விட்டது. ஜனநாயகம் பிழைத்தது. ஊழல்மயமான - ஊதாரித்தன அரசு அஸ்தமித்து விட்டது. தி.மு.க. - தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி இந்த நம்ப முடியாத சாதனையைப் படைத்திருக்கிறது."
வி.பி.சிங் தேவகவுடா சந்திரபாபு நாயுடு முலாயம் சிங் யாதவ் "தமிழ் மாநில காங்கிரசை கடைசி நிமிடத்தில் மூப்பனார் முன்னின்று உருவாக்கியதே ஓர் அபூர்வ சாதனை. தமிழ்நாட்டின் எல்லாத் துறைகளையும் அரித்து வரும் ஊழலாட்சியை நடத்தி வந்த ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேருவதென நரசிம்மராவ் எதேச்சாதிகாரத்துடன் திணித்த முடிவை எதிர்த்து, தமிழ்நாட்டையும், தமிழரின் மானத்தையும் காப்பதற்காக புதிய தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை மூப்பனார் துவக்கினார்.
உடனடியாக தி.மு.க.வுடன் கூட்டணியும் அமைத்தார். அப்பொழுதே தமிழக அரசியலில் பிரம்மாண்டமான புதிய சக்தி பிறந்து விட்டது." "இக்கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் முழு ஆதரவைத் தந்தவுடனே இக்கூட்டணி அரசியல் சூறாவளியாக மாறிவிட்டது. கடைசி நேரத்தில், தம்மை வந்தடைந்த மூப்பனாருக்கு 20 மக்களவைத் தொகுதிகளையும், 40 சட்டசபைத் தொகுதிகளையும் அளித்ததன் மூலம், இதை உயிர்ப்புடைய அணியாக ஆக்கிய கருணாநிதியின் அரசியல் மதிநுட்பம் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் தி.மு.க., த.மா. காங்கிரஸ் கூட்டணி தமிழக வரலாற்றில் மகத்தான திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது. ஊழல், எதேச்சாதிகார, அராஜக ஆட்சியிலிருந்து தமிழகத்துக்கு விடுதலை பெற்றுத் தந்துவிட்டது. அதோடு தேசிய அளவிலும், இக்கூட்டணி மகத்தான பணியாற்றுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய கட்சிகளில் எதற்கும் மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், மக்களவையில் கணிசமான இடங்களைப் பெற்றுள்ள இக்கூட்டணி - மத்தியில் புதிய ஆட்சியை அமைப்பதிலும் சிறந்த பங்காற்ற முடியும்.
ஆக, தமிழக அளவில் தமிழரின் மானத்தை மீட்ட இக் கூட்டணி, தேசிய அளவில் புதிய பாத்திரத்தை ஏற்க இருப்பது தமிழ் மக்கள் பெருமையடையத் தக்கதாகும்." அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும், தி.மு.க., த.மா.கா. அணியே வெற்றி பெற்றது. சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில், 175 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 167 இடங்களிலும்; 40 இடங்களில் போட்டியிட்ட த.மா.கா.39 இடங்களிலும்; 11 இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும்; அப்துல் லத்தீப் தலைமையிலான இந்திய தேசிய லீக் 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்து இடங்களிலும்; அகில இந்திய பார்வர்டு பிளாக் 2 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 163 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும், பா.ம.க. 140 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும், பா.ஜ.க. 145 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், ஜனதாதளம் 1 இடத்திலும், தேவேந்திர குலவேளாளர் கூட்டமைப்பு 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றன. குறிப்பாக, ம.தி.மு.க.அந்தத் தேர்தலில் 175 இடங்களில் போட்டியிட்டு, 168 இடங்களில் (ஆம்) டெபாசிட் தொகையை பறிகொடுத்தது.
1994ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு, சுமார் 10,000 வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்த மயிலாப்பூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ம.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஜனதாதள வேட்பாளர் 2,332 வாக்குகளைப் பெற்றார். அதைப் போலவே பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. வேட்பாளர் 22,000 வாக்குகள் பெற்று, இரண்டாவது இடத்திற்கு வந்ததால், அடுத்து தமிழ்நாடே தங்களுடைய ஆட்சியின் கீழ் தான் என்றார்கள்.
ஆனால் 96ஆம் ஆண்டு தேர்தலில், அதே தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் 7,992 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்குச் சென்றார். அந்தத் தேர்தலில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வாக்குகள் என்று எண்ணிக்கையில் பார்த்தபோது, தி.மு.க., த.மா.கா. அணி 1 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரத்து 494 வாக்குகளை (55.02 சதவிகிதம்)யும்; அ.தி.மு.க. அணி 70 லட்சத்து 95 ஆயிரத்து 650 வாக்குகளை (26.12 சதவிகிதம்)யும்; ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், ஜனதா தள அணி 21 லட்சத்து 31 ஆயிரத்து 592 வாக்குகளை (7.85 சதவிகிதம்)யும்; பா.ம.க.
திவாரி காங்கிரஸ் அணி 11 லட்சத்து 81 ஆயிரத்து 351 வாக்குகளை (4.43 சதவிகிதம்)யும்; பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டு 7 லட்சத்து 94 ஆயிரத்து 251 வாக்குகளை (2.92 சதவிகிதம்)யும் பெற்றன. ஆளுநராக இருந்த சென்னா ரெட்டிக்கும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கும் இடையே ஒரு வெறுப்புணர்வு தான் அதுவரை நீடித்து வந்தது. பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போதுகூட ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை- வணக்கம் கூட கூறிக் கொள்வதில்லை என்ற நிலையிலேயே தான் இருந்தார்கள்.
12-5-1996 அன்று தி.மு.க.வின் சட்டப் பேரவை கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், கவர்னரைச் சந்திக்கச் சென்றபோது, என்னைப் பெரிதும் மன மகிழ்ச்சியோடு வரவேற்ற ஆளுநர் சென்னா ரெட்டி அவர்கள், செய்தியாளர்களிடம் கூறும் போது, "நானும் கருணாநிதியும் ஒரே ராசி. அது எங்களை இணைத்து வைக்கும். நாங்கள் சேர்ந்தே இருப்போம்" என்று தெரிவித்தார்.
அப்போது அங்கிருந்த முரசொலி மாறன் "இந்த இரண்டு சிங்கங்களும் (கருணாநிதியும், சென்னா ரெட்டியும்) சேர்ந்தே இனி கர்ஜனை புரியும்" என்று கூறினார். தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எனது நன்றியுரையில், "நல்லாட்சியை நடத்த சட்டப் பேரவை தி.மு.க. உறுப்பினர்கள் மனமார்ந்த இதயம் நிறைந்த தூய்மையான ஒத்துழைப்பை எனக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் வரையில் நான் இப்பொறுப்பில் நீடிப்பேன்.
யாரேனும் வழங்கத் தவறினால் அதற்குப் பிறகு இப்பொறுப்பில் நான் நீடிக்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள உரிமையும், கடமையும் எனக்கு உள்ளது" என்று கூறியதோடு, "நேர்மை, நியாயம், நியாயம், ஒழுங்கு, தூய்மை, வாய்மை ஆகியவைகளைக் கொண்ட ஒரு நல்லாட்சியைத் தருவோம்.
1989 - 1991ல் நாம் வழங்கிய ஆட்சியை இத்தரணி போற்றிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்கூட அந்த இரண்டாண்டு கால ஆட்சியைப் பற்றி எக்குற்றமும் சொல்லவில்லை. அதைப் போன்ற தூய்மையான குற்றமற்ற ஆட்சியைத் தர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றும் தெரிவித்தேன்.
13-5-1996 அன்று பதவியேற்பு முடிந்ததும், அன்று மாலையிலேயே சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. மாநில மாநாடு ஒன்றுக்குக் கூடுவதைப் போல தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திலே திரண்டிருந்தார்கள். கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் நான், த.மா.கா. தலைவர், அருமை நண்பர் மூப்பனார், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பீட்டர் அல்போன்ஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆர்.
நல்லக்கண்ணு, அப்துல் லத்தீப், ஆர்.எம். வீரப்பன், மக்கள் நல உரிமைக் கழகத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் அய்யணன் அம்பலம், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., ஆகியோர் உரையாற்றினோம். இசைமுரசு நாகூர் அனிபாவின் கழக இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க.
தலைவி "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் மிகப்பெரிய தில்லுமுல்லு தில்லுமுல்லு நடந்ததாகவும், அதனால்தான் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததாகவும், தி.மு.க. வுக்கும் அவர்களது கூட்டணி கட்சிகளுக்கும் கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பீடத்தில் இருப்பவர் துணையோடுதான் சதிவேலை நடந்துள்ளது என்றும் கூறினார். அப்போது தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பீடத்தில் இருந்தவர் சேஷன் அவர்களாவார்.
சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா மீது கொடுத்த ஊழல் புகாரை, அப்போது ஆளுநராக இருந்த சென்னாரெட்டி அவர்கள், தேர்தல் ஆணையரான சேஷனுக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த மனுவை சேஷன் விசாரித்தால், தனக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி, உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதா முறையீடு செய்து, அந்த மனுவினை சேஷன் விசாரிக்க முடியாமல் தடையாணை பெற்றார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், ஜெயலலிதா மீதான ஊழல் புகாரை தேர்தல் கமிஷனின் ஏனைய இரு ஆணையர்களான கிருஷ்ணமூர்த்தியும், கில்லும் விசாரிக்கலாம் என்றும், அந்த இரண்டு பேரும் விசாரித்து எடுக்கின்ற முடிவினை ஆளுநர் சென்னா ரெட்டிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், இரண்டு பேருக்குமிடையில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் போனால், அப்போது சேஷனே அதில் தலையிட்டு தனது கருத்தைக் கூறலாம் என்றும் தீர்ப்பு அளித்தது.
இதனை மனதிலே வைத்துக் கொண்டு தான், ஜெயலலிதா அப்போது சேஷன் தேர்தலில் முறைகேடு செய்தார் என்று அறிக்கை விடுத்தார் என்று "தினமணி" எழுதியது. 13-5-1996 அன்று பதவியேற்றுக் கொண்டு, தலைமைச் செயலகத்திற்கு சென்று, நான் முதல் கையெழுத்தாக தேர்தல் அறிக்கையிலே கூறியிருந்தவாறு, ஒரு கோடியே 25 லட்சம் குடும்பங்கள் பயன் பெறத்தக்க வகையில் மனைவரி, தலவரி போன்றவைகளை ரத்து செய்து கையெழுத்திட்டேன். 15-5-1996 அன்று அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க.
அலுவலகத்திற்கு ஜெயலலிதா வரப்போகிறார். என்று கூறப்பட்டு, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கிலே அங்கே திரண்டனர். முன்னாள் அமைச்சர்களும் கட்சியின் மூத்த தலைவர்களுமான நாவலர், சேடப்பட்டி முத்தையா, 10துசூதனன், இந்திரகுமாரி, எஸ்.திருநாவுக்கரசு, கண்ணப்பன், செங்கோட்டையன், செல்வகணபதி போன்றவர்கள் எல்லாரும் அங்கே வந்து காத்திருந்தனர். ஆனால், ஜெயலலிதா தொண்டர்களைத் தன் வீட்டிலேயே சந்திக்க இருக்கிறார் என்று வந்த தகவலை யொட்டி அனைவரும் அங்கே சென்றனர்.
அங்கே திரண்ட அ.தி.மு.க. வினர் சசிகலாவிற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். "ஒரு குடும்பத்துக்காக ஒரு கோடி அ.தி.மு.க. தொண்டர்களை அனாதையாக்கி விட்டாயே" என்று எம்.ஜி.ஆர். தொண்டர்கள் பெயரில் சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் "புரட்சித் தலைவி அவர்களே! லட்சக்கணக்கான தொண்டர்கள் சார்பாகக் கழகத்தைக் காப்பாற்ற கண்ணீருடன் வேண்டுகிறோம் -சசிகலாவை வெளியேற்றுங்கள் - அல்லது நீங்கள் கழகத்தை விட்டு வெளியேறுங்கள் - இப்படிக்கு எம்.ஜி.ஆர்.
தொண்டர்கள்" என்ற சுவரொட்டியும் ஒட்டப்பட்டது. முன்னால் அமைச்சர் எஸ்.டி. சோம சுந்தரத்தை அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ஜெயலலிதா இல்லத்தின் வாசலிலேயே தாக்கினார். அவரை எதிர்த்துக் கடுமையாக அ.தி.மு.க. வினர் குரல் எழுப்பினர். மக்களவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ, அணிக்கோ தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 545 இடங்களில் 535 இடங்களுக்கு அப்போது தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜ.க. தனித்து 160 இடங்களிலும், அதன் தோழமைக் கட்சிகள் 26 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள்.
இந்திரா காங்கிரஸ் 136 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய முன்னணி மற்றும் இடதுசாரி கூட்டணியின் சார்பில் 111 இடங்களில் வெற்றி பெற்றிருந்தார்கள். இவை தவிர, தி.மு.கழகமும், த.மா.கா.வும் முறையே 17 இடங்களிலும், 20 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. மேலும் தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், அகாலிதளம் 8 இடங்களிலும், பகுஜன் சமாஜம் 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. மத்தியிலே ஆட்சி அமைப்பது யார் என்ற பிரச்சினை அந்தக் காலக் கட்டத்தில் பூதாகாரமாக எழுந்தது.
பா.ஜ.க. தலைவர் அத்வானி தலைமையில் தூதுக்குழு ஒன்று அப்போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா அவர்களைச் சந்தித்து, தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. தேசிய முன்னணி, இடது சாரி கூட்டணிக் கட்சிகள் தனியாக குடியரசு தலைவரைச் சந்தித்து, தங்களையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென்றும் அவ்வாறு அ
ழைத்தால், மக்களவையில் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டுவதாகவும் கூறினார்கள். 13-5-1996 அன்று தமிழகத்திலே பதவிப் பிரமாண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, தொடர்ந்து டெல்லியிலிருந்து பல்வேறு கட்சித் தலைவர்களிடமிருந்து வந்த அழைப்பினையேற்று, 14-5-1996 அன்று காலையில் டெல்லி சென்றேன். ஆந்திர மாநில முதலமைச்சராக அப்போது இருந்த நண்பர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சராக இருந்த தேவகவுடா, த.மா.கா.
தலைவர் மூப்பனார், ப.சிதம்பரம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் என்னைச் சந்தித்தார்கள். முரசொலிமாறன், ப.சிதம்பரம், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அப்போதே சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சுர்ஜித்சிங்கைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 14ஆம் தேதி மாலையில் தமிழ்நாடு இல்லத்திற்கு மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, சுர்ஜித்சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இந்திரஜித் குப்தா, பீகார் முதல்வராக இருந்த லல்லு பிரசாத்யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங்யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா, மூப்பனார், சந்திரபாபு நாயுடு, ப.சிதம்பரம் ஆகியோர் வருகை தந்து ஆலோசனை நடத்தினோம்.
அந்த ஆலோசனையின் விளைவாக, வி.பி.சிங் அவர்களின் இல்லத்திற்கு நானும், முரசொலி மாறன், லல்லு பிரசாத்யாதவ், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா ஆகியோரும் நேரில் சென்று, வி.பி.சிங் அவர்களைத் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால், அவர் உறுதியாக அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் பின்னர், மீண்டும் தமிழ்நாடு இல்லத்தில் நான் மேலே குறிப்பிட்ட அனைத்துத் தலைவர்களும், ஒன்றுகூடி ஆலோசித்து, அனைவரும் கர்நாடக முதல்வராக இருந்த தேவகவுடா அவர்களைப் பிரதமர் பதவிக்கு உரியவராக முடிவு செய்து, குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து இந்த முடிவினைத் தெரிவித்தோம்.
அன்றிரவு 11 மணியளவில், திடீரென தமிழ்நாடு இல்லத்திற்கு திரு.வி.பி.சிங் அவர்கள் வருகை தந்து, என்னைச் சந்தித்தார். அப்போது பிரதமர் பதவிக்கு அவரது பெயரை வலியுறுத்தியதற்காக நன்றி கூறி, ஆனால் அதனை ஏற்க இயலாமைக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். டெல்லிக்குச் சென்ற நான், குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன், காங்கிரஸ் தலைவர் பி.வி.நரசிம்மராவ் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.
குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள், மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற முறையில், பா.ஜ.க.வின் தலைவரான திரு.வாஜ்பாய் அவர்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததோடு, அந்த மாத இறுதிக்குள்ளாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் கூறினார். தேசிய முன்னணி, இடதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணியின் சார்பில் பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட தேவகவுடா அவர்களுக்கு தங்கள் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவு உண்டு என்றும், அவரது தலைமையிலான அரசை வெளியிலிருந்து ஆதரிப்போம் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்ததோடு, குடியரசுத் தலைவருக்கும் அதற்கான கடிதத்தை அனுப்பி வைத்தது.
பாரதீய ஜனதா கட்சியை மத்தியில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தது, மக்கள் விருப்பத்திற்கு எதிரானது என்று நானும், ஏனைய மூன்றாவது அணித்தலைவர்களும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டோம். 18-5-1996 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் என்னுடைய தலைமையில் நாடாளுமன்ற மக்களவை கழக உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும், வெற்றி பெற்ற நாடாளுமன்ற கழக உறுப்பினர்களும் புதிய அமைச்சர்கள் துரைமுருகன், ரகுமான்கான், ஆலடி அருணா, எஸ்.பி.
சற்குணம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவராக முரசொலி மாறன் அவர்களை, என்.வி.என். சோமு முன்மொழிய, டி.ஆர்.பாலுவும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழிமொழிய ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். துணைத் தலைவராக என்.வி.என்.சோமு அவர்களை, கோவை மு.ராமநாதன் முன்மொழிய, பி.சண்முகம் வழிமொழிந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற தி.மு.க. கொறடாவாக டி.ஆர்.
பாலுவை முரசொலி மாறன் முன்மொழிய, திருச்சி என்.சிவா வழிமொழிய ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜி.வெங்கட்ராமன் அவர்களைக் துணைக் கொறடாவாகவும், தி.மு.க. நாடாளுமன்றப் பொருளாளராக மு.இராமநாதன் கோவை அவர்களும், நாடாளுமன்ற தி.மு.க. செயலாளராக டி.நாகரத்தினம் அவர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே 18-5-1996 அன்று மாலையில் புதுவை மாநில தி.மு.கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சித் தலைவராக - அதாவது புதுவை மாநில முதல்வராக ஆர்.வி.ஜானகிராமன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உயிர்மெய் எழுத்து! உன் கையெழுத்து! -வித்தகக் கவிஞர் பா.விஜய் நெஞ்சுக்கு நீதி! இது நவீனப் புறநானூறு! இது சிவப்பதிகாரம்! இது ஐந்தாவது பாகமுள்ள ஐம்பெரும் காப்பியம்! முரசு கட்டிலில் தமிழ்க் கவிஞனை வைத்து விசிறிவிட்டான் அன்றொரு மன்னன்! அரசு கட்டிலில் தமிழையே வைத்து கவரி வீசுகின்றார்.
இன்றொரு கவிஞர் கலைஞர்! ஆறுகோடி தமிழரை சுமப்பதற்காக ஒரு ஆணின் இதயம் கருவறையானது! அந்தக் கருவறை தனது கதை சொன்னதெல்லாம் நெஞ்சுக்கு நீதிஎனும் விரிவுரையானது! நெஞ்சுக்கு நீதி! செம்மொழியில் செதுக்கப்பட்டிருக்கும் தமிழின வரலாறு! தன்னம்பிக்கை சரித்திரம்! அடடா... பூமிப் பந்து கைதட்டுகிறது- உலகின் நீளமான சுயசரிதம் இதுவென்று! இங்கர்சாலின் இதயம்! சாக்ரடீசின் நுண்ணறிவு! ஐன்ஸ்டீனின் ஆற்றல்! இம்மூன்றின் கலவையல்லவா கலைஞரின் வாழ்க்கை!
நெஞ்சுக்கு நீதி என்பது 85 ஆண்டு வயது தனி மனித வரலாறல்ல! 85 ஆண்டு தமிழகத்தின் குரல்! அரசியலின் அசரீரி! இலக்கிய வேட்கை இதயம் கனக்கும்போது ஊற்றிய உயிர்த்தேன் உயிரெழுத்தானது! சூல்கொண்ட போராட்டம் சுவாசத்தை நெரிக்கையில் எழுந்த அழுத்தம் மெய் எழுத்தானது! ஆயிரம் துரோகங்கள் அடிமனதைக் குத்தியது! கசிந்த ரத்தத் துளிகள் கையெழுத்தானது! அதுதான் நெஞ்சுக்கு நீதிஎனும் நேரெழுத்தானது! - அது வித்தகக் கவிஞர் பா.விஜய் தமிழ் விருட்சத்தின் வேரெழுத்தானது!
தமிழினத்தின் தலையெழுத்தானது! திருக்குறள் படித்தால் ஓர் இளைஞன் நெடுவாழ்க்கை வாழலாம்! நெஞ்சுக்கு நீதி கற்றால் ஓர் இளைஞன் போராடப் பழகலாம்! அணுக்களில் எல்லாம் அறிவுணர்ச்சி ஏற வேண்டுமா? நுரையீரல் நிரம்ப நம்பிக்கை காற்று வேண்டுமா? உயிர்ச் சக்கரத்தை உருட்ட விசை வேண்டுமா? வாழ முடியுமா? என்போர்முன் வாழ்ந்து காட்ட வேண்டுமா? வாசிக்க வேண்டும் நெஞ்சுக்கு நீதி!
