நெஞ்சுக்கு நீதி
படைத்தோம்! · 312 / 391
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) சாதனை சரித்திரம் படைத்தோம்! நா ன் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் இரண்டு நாட்கள் இடையிலே வாக்குகளை தெருவாரியாகச் சென்று கேட்டுவிட்டு மீண்டும் எனது தேர்தல் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தேன். தூத்துக்குடி கூட்டத்தை முடித்து விட்டு 19-4-96 அன்று நெல்லை நகரத்திற்கு நான் திரும்பிக் கொண்டிருந்தபோது சுமார் 12.45 மணி அளவில் வல்லநாடு என்ற இடத்தில் என்னுடைய வேன் அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் செல்வதற்கு முன்பு என் வேனுக்கு முன்னால் சென்ற கழகத்தினரின் கார்கள் மீது அ.தி.மு.க.வினர் சிலர் கற்களையும், ஆசிட் கலந்த முட்டைகளையும் வீசியும், கம்புகளை வீசியும் தாக்கினார்கள்.
நான் அந்த இடத்தை நெருங்கும்போது மிகப் பெரிய அளவிற்குத் தாக்குதல் நடத்துவதற்காக இரண்டு மூன்று தார் டின்களை சாலையிலே குறுக்காகக் கொண்டு வந்து போட்டிட முற்பட்டார்கள். நாங்கள் உடனடியாக சமயோசிதமாக அந்த இடத்தில் சாலை சற்று அகலமாக இருந்த காரணத்தினால் அப்படியே வேனைத் திருப்பிக் கொண்டு திருவைகுண்டம் வழியாக திருநெல்வேலி வந்து சேர்ந்தோம். இந்தச் சம்பவம் குறித்து ஆர்க்காடு வீராசாமி குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் தந்திகள் கொடுத்தார்.
காவலரின் ஒத்துழைப்போடு அ.தி.மு.க.வினர் நடத்தும் தேர்தல் அராஜகங்களைத் தடுத்து நிறுத்த கேட்டுக் கொண்டார். வல்லநாட்டில் நடைபெற்ற இந்தக் கொடுமைக்கு த.மா.கா. சார்பிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், இந்திய தேசிய கலைஞர் லீக் கட்சி சார்பிலும் கண்டனம் தெரிவித்தார்கள். அ.தி.மு.க.வினர் உட்பட 20 பேரை அந்தப் பகுதி காவல்துறையினர் இந்தச் சம்பவத்திற்காக கைது செய்திருந்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா இந்தச் சம்பவமே ஒரு நாடகம் என்று பொய் கூறினார். கழக முற்போக்கு அணிக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சன் தொலைக்காட்சி மூலமாக சிறப்பானதோர் உரையாற்றினார். அந்த உரையாடலின் போதுதான் என்னை மூத்த அண்ணன் என்றே விளித்து நன்றி கூறியிருந்தார். திரு. சோ அவர்கள் அந்த நேரத்தில் நான் ஓவர்-கான்பிடண்ட் ஆக (அளவுகடந்த தன்னம்பிக்கை) இருப்பதாகக் கூறியதைப் பற்றி ரஜினி விமர்சிக்கும்போது, கலைஞர் "ஓவர்-கான்பிடண்ட்" ஆக இல்லை.
"ஓவர்-காஷியஸ்" (அதிகமான எச்சரிக்கை உணர்வோடு) ஆக இருக்கிறார். இதிலிருந்து அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதி, எவ்வளவு பெரிய அறிவாளி என்பது தெரிகிறதல்லவா? என்றெல்லாம் விளக்கியிருந்தார். கழக முற்போக்குக் கூட்டணி ஜெயலலிதாவை வீழ்த்தும் பிரம்மாஸ்திரம் என்றும் அந்தப் பேச்சினூடே குறிப்பிட்டிருந்தார். இந்து இதழ்- சி.எஸ்.டி.எஸ். இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு மூலமும், சன் தொலைக் காட்சி, நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற பல இதழ்கள் நடத்திய கருத்துக் கணிப்பு மூலமும் தி.மு.கழக அணியே மகத்தான வெற்றி பெறும் என்று தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
மேலும் என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் அலைஅலையாக வந்து குவிந்தனர். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு 30-4-96 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் போயஸ் தோட்டத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வசிக்கும் வீட்டிலிருந்து டெல்லி மற்றும் சண்டிகார் பதிவு எண்களைக் கொண்ட 6 மூடப்பட்ட லாரிகள் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றன என்றும், அந்த மூடப்பட்ட லாரிகள் ஐதராபாத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகின்றன என்றும், அந்த வாகனங்கள் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஜெயலலிதா வீட்டில் இருந்தன என்பதையும், அவை ஐதராபாத்துக்குச் சென்றன என்பதையும் அதிகார வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன என்றும் கூறப்பட்டிருந்தது.
தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடக்காமல் இருந்த நேரத்தில் அண்ணா அவர்களின் துணைவியார் இராணி அம்மையார் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். உடனடியாக அவர்கள் இல்லம் சென்று இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். மே திங்கள் 8ஆம் நாளன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. துவக்கம் முதல் கழக முற்போக்கு அணியே மகத்தான வெற்றியைப் பெற்றது. வாக்கு எண்ணிக்கை வெற்றிகரமாக வந்து கொண்டிருந்தபோதே டெல்லியிலிருந்து முன்னாள் பிரதமர் வி.பி.
சிங் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். கலையுலகப் பெருமக்கள் எல்லாம் அறிவாலயத்திற்கு வந்து நேரடியாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். த.மா.கா. தலைவர் மூப்பனார் அவர்களும் அறிவாலயத்திற்கு வந்து என்னைக் கட்டித் தழுவி வாழ்த்து கூறினார். நேபாளத்திற்குச் செல்லும் வழியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து கூறினார்.
பிரதமர் நரசிம்மராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் லல்லு பிரசாத்யாதவ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இந்திரஜித் குப்தா, அன்பு நண்பர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார் மற்றும் பல கட்சித் தலைவர்களும், ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்த்துகளைக் குவித்தனர். 233 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு. கழகம் 172 இடங்களிலும், த.மா.கா.
39 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. மொத்தம் 220 இடங்களில் தி.மு.கழக முற்போக்குக் கூட்டணியும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. 4 இடங்களிலும், பா.ஜ.க., ஜனதா கலைஞர் தளம், ஜனதா கட்சி, சி.பி.எம்., சுயேச்சை ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு இடங்களிலும் வெற்றி பெற்றன. நாடாளுமன்றத்தைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் கழக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களே வெற்றிபெற்றனர்.
12-5-96 அன்று அண்ணா அறிவாலயத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் கூடியது. அந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கழக முன்னணியினரும் கலந்து கொண்டார்கள். சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை ஆளுநர் மாளிகை சென்று நேரடியாகக் கொடுத்தோம். ஆளுநர் அதனைப் பெற்றுக் கொண்டு ஆட்சி அமைக்கு மாறு கேட்டுக் கொண்டார்.
அமைச்சரவையில் பங்கேற்பவர்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்தேன். 13ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பையேற்ற என்னுடைய அமைச்சரவையில் என்னைத் தவிர 25 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். பேராசிரியர் கல்வி அமைச்சராகவும், ஆர்க்காடு வீராசாமி மக்கள் நல்வாழ்வு மற்றும் மின் துறைக்கும், நாஞ்சிலார் வருவாய்த் துறைக்கும், கோ.சி.மணி உள்ளாட்சித் துறைக்கும், வீரபாண்டி ஆறுமுகம் வேளாண்மைத் துறைக்கும், துரைமுருகன் பொதுப்பணித் துறைக்கும், டாக்டர் பொன்முடி போக்குவரத்துத் துறைக்கும், டாக்டர் தமிழ்க்குடிமகன் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்கும், கே.என்.நேரு உணவுத் துறைக்கும், கே.சுந்தரம் பால்வளத் துறைக்கும், ரகுமான்கான் தொழிலாளர் நலத்துறைக்கும், ஆலடி அருணா சட்டத் துறைக்கும், வே.தங்கப் பாண்டியன் கூட்டுறவுத் துறைக்கும், என்.கே.கே.
பெரியசாமி கைத்தறித் துறைக்கும், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கும், பொங்கலூர் பழனிசாமி வனவளம் மற்றும் கால்நடைத் துறைக்கும், நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கே.பிச்சாண்டி வீட்டு வசதித் துறைக்கும், இ.பெரியசாமி ஊரகத் தொழில் துறைக்கும், வ.முல்லைவேந்தன் செய்தித் துறைக்கும், புலவர் செங்குட்டுவன் அறநிலையத் துறைக்கும், திருமதி எஸ்.பி.சற்குணம் சமூகநலத்துறைக்கும், சமய நல்லூர் செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத் துறைக்கும், என்.சுரேஷ்ராஜன் சுற்றுலாத் துறைக்கும், அந்தியூர் செல்வராஜ் கதர் மற்றும் அச்சுத் துறைக்கும், திருமதி எஸ்.
ஜெனிபர் சந்திரன் மீன் வளத் துறைக்கும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். பதவியேற்பு விழா முடிந்து தலைமைச் செயலகம் சென்றதும் நத்தம் நிலவரித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பட்டாக்களுக்காக உரிமையாளர்களிடமிருந்து மனை வரி, தல வரி, கூடுதல் தல வரி எதுவும் இனி விதிப்பதில்லை என்ற முடிவினையெடுத்து அது பற்றிய கோப்பில் முதலாவதாக கையெழுத்திட்டேன். 13ஆம் தேதி மாலையில் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெற்ற தேர்தல் வெற்றி நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்திற்குப் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமை வகித்தார்.
அந்தக் கூட்டத்தில் நானும், மூப்பனார், நல்லக்கண்ணு, அப்துல் லத்தீப், இராம. வீரப்பன், அய்யணன் அம்பலம், பண்ருட்டி ராமச்சந்திரன், வை.பாலசுந்தரம், எஸ்றா சற்குணம் ஆகியோரும் உரையாற்றினோம். 13ஆம் தேதியன்று பதவியேற்பு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 14ஆம் தேதி டெல்லி சென்றேன். இந்தியாவின் புதிய தலைமை அமைச்சராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கழகம் அந்த முறையும் பெரும் பங்கினை ஏற்றது.
மக்களவையில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 545 இடங்களுக்கு 535 இடங்களுக்கு அப்போது தேர்தல் நடைபெற்றது. அதில் பா.ஜ.க. தனித்து 160 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 136 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்தார்கள். தேசிய முன்னணி இடது சாரி கூட்டணியின் சார்பில் 111 இடங்களில் அந்த கலைஞர் அணி வெற்றி பெற்றிருந்தது. இது தவிர த.மா.கா.
20 இடங்களிலும், தி.மு.க. 17 இடங்களிலும், தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், அகாலி தளம் 8 இடங்களிலும், பகுஜன் சமாஜம் 11 இடங்களிலும் முக்கியமாக வெற்றி பெற்றிருந்தன. 14ஆம் தேதி காலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் தேவகவுடா, மூப்பனார், ப. சிதம்பரம், அஸ்ஸாம் கணபரிஷத் பொதுச் செயலாளர் ஆகியோர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் என்னை வந்து சந்தித்தனர். அன்று பிற்பகலில் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹரிகிருஷ்ண சிங் சுர்ஜித், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா, பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் கூடிப் பேசி விவாதித்தோம்.
வி.பி. சிங் அவர்கள் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ள அவரது இல்லத்திற்கு நானும், தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, முரசொலிமாறன், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரும் சென்று நேரில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கேட்டுக் கொண்டோம். ஆனால் பிரதமர் பதவியை ஏற்க அவர் இசைவு அளிக்கவில்லை. மீண்டும் திரும்பி தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து அனைவரும் ஆலோசனை நடத்தினோம். இதற்குப் பிறகு மூன்றாவது அணியின் சார்பாக கர்நாடக முதல் அமைச்சர் தேவகவுடா அவர்களை தலைமை அமைச்சர் பதவிக்கு உரியவராகத் தேர்வு செய்து அந்த முடிவினை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்களைச் சந்தித்து தெரிவித்தோம்.
இந்த அணிக்கு தங்களின் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதற்குத் தயார் என்று இ.காங்கிரஸ் கட்சியின் தலைவர் நரசிம்மராவ் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் குடியரசுத் தலைவர் பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் அவர்களை அமைச்சரவை அமைக்கும்படியும் மே மாத இறுதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். 16-5-1996 அன்று வாஜ்பய் அவர்கள் இந்தியாவின் 11வது பிரதமராகப் பதவியேற்றார்.
ஆனால் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் வாஜ்பய் அவர்களின் இந்த அமைச்சரவை 13 நாட்களில் பதவி விலகியது. அதைத் தொடர்ந்து ஐக்கிய முன்னணி தலைவர் தேவகவுடா அவர்களின் ஆட்சி காங்கிரஸ், தி.மு.கழகம், த.மா.கா., தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளின் ஆதரவோடு பதவியேற்றது. ஆனால் ஓராண்டு காலத்தில் 97ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அந்த அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றதால், தேவகவுடா பிரதமர் பதவியை இழந்தார்.
புதிய பிரதமராக ஐ.கே.குஜ்ரால் பதவியேற்றார். இந்த அமைச்சரவைகளில் முரசொலிமாறன், டிஆர்.பாலு ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். புதுவை மாநிலத்திலும் ஆர்.வி. ஜானகிராமன் தலைமையில் த.மா.கா. ஆதரவோடு தி.மு.கழக கூட்டணி ஆட்சி அமைந்தது. 1996ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுக் காலம் தமிழகத்திலே பொற்கால ஆட்சி என்று கூறத்தக்க வகையில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையில் கலைஞர் சாதனைகளைச் செய்து சரித்திரம் படைத்தது.
அவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகள் சில; இதோ:- ★ "மெட்ராஸ்" என்ற பெயர் "சென்னை" என்று மாற்றப்பட்டது. ★ திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் கன்னியா குமரியில் சிலை அமைக்கப்பட்டது. ★ காவிரி நதிநீர் ஆணையம் பிரதமர் தலைமையில் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டது. ★ அரசு அலுவலர்களுக்கு ஏராளமான சாதனைகள் மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம். ★ வணிகர்களுக்கு ஏராளமான சலுகைகள் - வரிகள் நீக்கம் - குறைப்பு.
அனைத்துப் பொருட்களுக்கும் ஒருமுனை வரி. ★ அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள். ★ மாணவர்களுக்கு அடுக்கடுக்கான சலுகைகள், இலவச பேருந்து வசதி, பள்ளிகளில் கணினி பயில நிதி ஒதுக்கீடு, ஒற்றைச் சாளர முறை அறிமுகம். ★ விவசாயிகளுக்குப் பல்வேறு சலுகைகளுடன் 1989 கழக ஆட்சியில் அறிமுகப்படுத்திய - இலவச மின்சாரம் நீடிப்பு, கடன்கள் தள்ளுபடி, கொள்முதல் விலை உயர்வு, உர விலை குறைப்பு. ★ உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் - மகளிருக்குத் தனி ஒதுக்கீடு.
★ தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலீடு - ஏற்றுமதி சாதனை - டைடல் பூங்கா. ★ தகவல் தொழில்நுட்பத்திற்கான தனித் துறை உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம். ★ காமராஜர், அம்பேத்கர், பக்தவத்சலம், காயிதே மில்லத் மணி மண்டபங்கள். ★ ஏழைப் பெண்கள் இலவச திருமண உதவித் திட்டம். ★ இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் - கைத்தறியாளர்களுக்கு வாழ்வளிப்பு. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ★ வருமுன் காப்போம் திட்டம், வாழ்வொளித் திட்டம்.
★ தொகுப்பு வீடுகள் - காங்க்ரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம். ★ பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். ★ உழவர் சந்தைகள். ★ அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். ★ நமக்கு நாமே திட்டம். அ.தி.மு.க. ஆட்சி இருந்த காலத்திலேயே அவர்மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு, வழக்கும் நடைபெற்று அதிலே உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் ஆதாரம் இருப்பதாக திட்டவட்டமாகத் தீர்ப்பளித்திருந்தனர். நீதிமன்றத்திலேயே அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்றெல்லாம
் கேள்விகள் எழுந்தன. அதன் காரணமாக அவர் பின்னர் கைது செய்யப்பட்டு வழக்குகள் எல்லாம் தன்னிச்சையாக எந்தவிதமான தலையீடுமின்றி நடைபெற்று சிலவற்றில் தீர்ப்புகளும், தண்டனைகளும் வழங்கப்பட்டன. பல வழக்குகள் இன்னும் முடிவடையாத நிலையில் மேல்முறையீடுகளில் உள்ளன. எனவே இந்த நிலையில் நான்காம் பாகம் முடிவுறுகின்ற நிலையில் அதைப்பற்றி உறுதியாக எழுதிட இயலவில்லை. யாரைத் தங்கள் அணியிலேயே சேர்க்கக்கூடாது என்று முடிவெடுத்து தங்கள் தாய்க் கட்சியிலிருந்து பிரிந்து த.மா.கா.
என்ற புது கட்சியைக் கண்டார்களோ அவர்கள் நாளடைவில் ஜெயலலிதாவின் பக்கம் சென்ற விபரீதமும் நடந்தது. எனவே 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழக அணியை எதிர்த்து அ.தி.மு.க.வும் த.மா.கா.வும், காங்கிரசும் ஒன்றாக கலைஞர் இணைந்து போட்டியிட்டன. கழகத்தைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியோடு உடன்பாடு கொண்டாலும் அந்தக் கட்சியின் நல்லது கெட்டது அனைத்திலும் பங்கு கொண்ட இயக்கம் என்பதை பலமுறை நிரூபித்திருக்கின்றோம்.
த.மா.கா.வுடன் உடன்பாடு கொண்டிருந்த போதிலும் அவர்களோடு எந்த அளவிற்கு உள்ளன்புடன் பழகியது என்பதற்கு ஒரேயொரு உதாரணம் வருமாறு:- காங்கிரஸ் கட்சியும், த.மா.கா.வும் ஒன்றாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பனார், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகிய மூவருக்கும் த.மா.கா. தனியாகப் பிரிந்த பிறகு கட்சித் தாவல் சட்டப்படி பதவி போகக்கூடிய நிலைமை 96-97இல் ஏற்பட்டது.
த.மா.கா. விற்கு அப்படி மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று பேரின் இடம் போய், மறு தேர்தல் அங்கே நடைபெற்றால் அந்த இடங்கள் தி.மு.கழகத்திற்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பிருந்தது. இருந்தாலும் டெல்லியிலேயிருந்த மூப்பனார் அவர்களோடு நான் சென்னையிலிருந்து தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, பதவி இழக்கின்ற நிலையே தேவையில்லை, நீங்கள் மூவரும் தைரியமாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகச் செய்யுங்கள், உடனடியாக அந்த மூன்று இடங்களுக்குத் தேர்தல் நடக்கும், நாங்கள் மீண்டும் உங்கள் மூவரையும் எங்கள் ஆதரவோடு வெற்றி பெற வைக்கிறோம் என்று உறுதியளித்து, அவ்வாறே அவர்கள் மூன்று பேரும் செப்டம்பர் 97இல் பதவி விலகி, அக்டோபர் 18ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் மூப்பனார் மீண்டும் போட்டியிட விரும்பாததால், தி.மு.கழகத்தின் ஆதரவோடு த.மா.கா. வேட்பாளர்களான பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன், அப்துல் காதர் ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கழகம் அந்த அளவிற்கு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தோழமைக் கட்சிக்காக முழு மனதோடு அவர்கள் ஆதரவு வேண்டுமென்று கேட்காத நேரத்திலேயே எந்தவிதமான நிபந்தனையுமின்றி தானாகவே முன்வந்து ஆதரவு கொடுத்தது.
இந்த ஒரு உதாரணத்திலிருந்து கழகம் எந்த அளவிற்குத் தோழமை கட்சிகளை அனுசரித்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்குப் பிறகும் த.மா.கா. அடுத்த தேர்தலில் கழகத்தின் உறவை அறுத்துக் கொண்டு அ.தி.மு.க. பக்கம் சென்று போட்டியிட்டது. மேலும் தேர்தல் சட்டத்திலே ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்குமேல் போட்டியிடக்கூடாது என்று வரையறுக்கப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்ட பிறகும், தான் இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி என்ற முறையில் போட்டியிட முடியாது என்ற காரணத்தால் வேண்டுமென்றே நான்கு இடங்களிலே வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் சட்டப்படி அவை நிராகரிக்கப்பட்ட காரணத்தை மக்களிடம் கூறாமல் கருணாநிதிதான் தன்னைப் போட்டியிட முடியாமல் தடுத்து விட்டார் என்ற பொய்க் காரணத்தை மக்களிடம் நம்புமாறு கூறி, சாதாரண பாமர மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக எந்தவிதமான குற்றச்சாட்டும், வழக்கும் இல்லாமல் வேண்டுமென்றே பழி தீர்க்கும் எண்ணத்தோடு நட்ட நடுநிசியில் என் படுக்கையறைக்குள்ளேயே காவல்துறை பட்டாளத்தை ஏவி விட்டு, என் மனைவி ராஜாத்தியம்மாளைக் கேவலமாக நடத்தி, என்னை அடித்து துவைத்து கைது செய்தனர். அந்தக் கொடுமையை ஏன் என்று கேட்க வந்த மத்திய அமைச்சர் என் மருமகன் தம்பி முரசொலி மாறன், மத்திய அமைச்சர் தம்பி டி.ஆர்.பாலு, போலீசாரால் தாக்கப்பட்டு கைது...
கலைஞர் செய்யப்பட்டனர். மதுரையில் என் மகன் மு.க.அழகிரியும் சென்னை மேயராக இருந்த என் மகன் மு.க. ஸ்டாலினும் மறுநாள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். மாநிலம் முழுதும் நடந்த கிளர்ச்சியையொட்டி கழகக் குடும்பத்தினராம் ஐம்பதாயிரம் உடன்பிறப்புக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அந்த இரவு நடத்தப்பட்ட அ.தி.மு.க. அரசின் அராஜக அடக்கு முறையை எதிர்த்து தமிழகம் கொதித்துக் குமுறியது. அனைத்துக் கட்சித் தலைவர்களும், கலையுலகத்தினரும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.
நெஞ்சு வெடித்தும் தீக்குளித்தும் 70க்கு மேற்பட்டோர் மாண்டனர். அந்தக் கொடிய நிகழ்ச்சி குறித்து அன்றைக்கே மாலை முரசு நிர்வாக ஆசிரியர் பா.இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள் அவரது மாலை முரசு இதழ் முதல் பக்கத்திலேயே அவரது கையொப்பமிட்டு; "ஜூன் 30, சுதந்திர இந்தியச் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள். தன் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த தமிழகத்தின் மூத்த தலைவர் கலைஞரை கலைஞரை தட்டி எழுப்பி, அவரை அரக்கத்தனமாக போலீஸ் உயர் அதிகாரிகள் அடித்து இழுத்துச் சென்று சிறையில் தள்ளிய கொடுமை நிகழ்ந்த நாள்.
அரசியல் சட்டம் ஒரு மாநில முதலமைச்சருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஜன நாயக மரபுகளையும் சட்ட விதிகளையும் மீறி முதல்வர் ஜெய- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) லலிதா கலைஞர் மீது வரம்பு மீறிய இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார். தமிழக கவர்னர் பாத்திமாபீவி அவர்கள் அரசியல் சட்டரீதியான அறிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
மத்திய அரசு தலையிட்டு கலைஞர் மீது மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவரது மீதும் வன்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார். இப்படி அராஜக முறையில் மீண்டும் ஆரம்பமான "ஜெயலலிதாவின் ஆட்சி" மேலும் பல அராஜகங்களுடனும் அடாவடியுடனும் போலீஸ் ராஜ்யமாக நடைபெற்று வரும் இந்தக்கால கட்டத்தில் - "நெஞ்சுக்கு நீதி" நான்காம் பாகம் நிறைவுறுகிறது. ஐந்தாம் பாகம் எழுதும் வாய்ப்பை எனக்கு இயற்கை வழங்காவிடில்; அதனை யாரேனும் எழுதி வெளிவந்தால் அத்துடன் இணைத்துக் கொள்ளத்தான் 1996 முதல் 2001 வரையிலான கழக ஆட்சி சாதனைகளை "சாதனைச் சரித்திரம்" என்ற பெரிய புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.
கலைஞர்
