நெஞ்சுக்கு நீதி
இரத்த வெறியாட்டம்! · 310 / 391
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வன்முறை- அராஜகம்- இரத்த வெறியாட்டம்! ஜெ யலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சியினர் அடக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டதுகூட அதிசயமல்ல; அவரது சொந்தக் கட்சியின் முக்கிய நபர்கள் - குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களே கூட ஆளுங்கட்சியின் குண்டர்களால் தாக்குண்டு, ரத்தம் சிந்தி, அவை குறித்துக் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்ணை மூடிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளும் ஏராளம்.
மதுராந்தகம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரே சென்னையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து உருட்டுக் கட்டைகளால் அடிக்கப்பட்டு பலத்த காயத்துடன், சென்னை அரசினர் மருத்துவமனையிலே தங்கி சிகிச்சையும் பெற்றார். அந்தச் சம்பவம் குறித்து யாருமே கைது செய்யப்படவே இல்லை. அதைப்போலவே 1993ஆம் ஆண்டு தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை அ.தி.மு.க. உறுப்பினர் வி.பி.ஆர்.ரமேஷ் வடபழனியிலிருந்து காரிலே வரும்போது வேனில் வந்த ஒரு கும்பல் இவரைத் தாக்கியது.
வேனில் அ.தி.மு.க. கொடி பறந்தது. இந்தச் சம்பவத்திலும் யாரும் கைது செய்யப்படவில்லை. திருச்சி உப்பிலியாபுரம் சட்டப் பேரவை உறுப்பினராக ஆளுங்கட்சி சார்பிலே இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் 1994ஆம் ஆண்டில் சென்னையில் காரில் மன்றோ சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவரைத் தாக்கியது. பலத்த காயமடைந்த இவர் ராயப்பேட்டை மருத்துவமனையிலே நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகவும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வரிசையில் 1995ஆம் ஆண்டிலும் குறைவைக்கவில்லை. ராணிப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை அ.தி.மு.க. உறுப்பினர் மோகனன் என்பவரை அரிவாளால் வெட்டி அவர் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டார். இந்தத் தாக்குதலிலும் வழக்கம்போல யாரும் கைது செய்யப்படவில்லை. இதிலே வேடிக்கை என்னவென்றால் தாக்கப்பட்டவர்கள் யாரும் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்றோ, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றோ கோராதது தான்.
காரணம், இவர்கள் எல்லோரும் ஆளுங்கட்சியின் தலைமையின் கோபத்திற்கு ஆளான காரணத்தால்தான் தாக்கப்பட்டார்கள் என்று அப்போது ஏடுகளில் எல்லாம் செய்தி வந்தது! மார்ச் திங்கள் இறுதியில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப் பேரவையிலிருந்து தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அவர்களே மருத்துவமனையிலே அனுமதிக்கக்கூடிய அளவிற்குத் தாக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவி விலக வலியுறுத்தி காங்கிரசார் சென்னையிலே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் காரணமாக 31 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும், திருநாவுக்கரசு அவர்களும் கைது செய்யப்பட்டனர். அதே நாளன்று தமிழகத்திலே உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்த மறுத்து வந்த ஜெயலலிதா அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் தி.மு.கழகமும், அதன் தோழமைக் கட்சிகளும் மாவட்ட, வட்டாட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்னால் இலட்சக்கணக்கிலே கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கழகத்தின் சார்பில் ஒரேயொரு உறுப்பினர் பரிதி இளம்வழுதி மட்டும் இருந்த காரணத்தினால் ஆளுங்கட்சி தரப்பிலே யார் பேசினாலும் தி.மு.கழகத்தை மிகத் கலைஞர் தரக்குறைவாகத் தாக்கிப் பேசுவதும், குறிப்பாக என்னைப் பற்றியும் என் குடும்பத்தினரைப் பற்றியும் தரம் தாழ்ந்து பேசுவதும், அதற்கு ஆதாரத்தோடு மறுப்பு தெரிவிக்க இளம்வழுதி எழுந்தால் அவரைப் பேசவிடாமல் தடுப்பதும், இல்லாவிட்டால் அவையிலிருந்து வெளியேற்றுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வந்தன. உதாரணமாக ஒன்றைக் கூற வேண்டுமேயானால் பழனி சுப்புரத்தினம் என்ற அ.தி.மு.க.
உறுப்பினர் அவையிலே பேசும்போது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொடைக்கானலுக்குச் சென்றிருந்த என்னுடைய குடும்பத்தினர் மல்லிகைப்பூ வேண்டுமென்று விரும்பியதாகவும், அதைக் கொண்டு வருவதற்காகக் கொடைக்கானலில் இருந்து ஜீப்பில் சென்றபோது விபத்து ஏற்பட்டு பத்து போலீசார் உயிர் இழந்ததாகவும் கூறினார். உடனே பரிதி இளம்வழுதி எழுந்து இப்படியொரு சம்பவம் நடைபெற்றதே கிடையாது. ஆளுங்கட்சி உறுப்பினர் இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகத் தயார், நிரூபிக்கா விட்டால் அந்த உறுப்பினர் தனது பதவியை விட்டு விலகத் தயாரா என்று பேரவையிலே கேட்டார்.
அதற்கு எந்தவிதமான பதிலும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து கூறப்படவே இல்லை. இந்தக் காலகட்டத்தில்தான் ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது வழக்குப் போடுவதற்கான அனுமதியை சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு கடிதத்தின் மூலம் வழங்கினார். இதன் காரணமாக கோபமடைந்த ஆளுங்கட்சியினர் 6-4-95 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற ஜனதா கட்சிப் பொதுக் கூட்டத்தில் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் மீதும், முன்னாள் ஐ.ஏ.எஸ்.
அதிகாரி சந்திரலேகா மீதும் கற்களையும் செருப்புகளை வீசியதோடு டியூப் லைட்டுகளையும் எல்லாம் உடைத்தும் ரகளை செய்தனர். இவ்வளவிற்கும் அந்த நேரத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு மத்திய அமைச்சர் அளவிற்கான அந்தஸ்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மத்திய அரசினால் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்திற்கு தி.மு.கழகத்தின் சார்பில் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தேன்.
சுப்பிரமணிய சுவாமி ஆளுநர் சென்னாரெட்டி அவர்களைச் சந்தித்து இந்த நிகழ்ச்சி குறித்து முறையிட்டார். ஆனால் ஆளுநர் சென்னா ரெட்டிக்கு அதற்கடுத்த நாள் நேர்ந்த கதி இதைவிட மோசமானது. ஆம், புதுவைக்கு ஆளுநர் சென்னா ரெட்டி அவர்கள் காரிலே 10-4-95 அன்று சென்றுகொண்டிருந்த போது, திண்டிவனம் அருகே ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஜெயலலிதா கட்சியினர் ஆளுநரின் காரை முற்றுகையிட்டனர். அதை போலீசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் மாவட்ட போலீஸ் அதிகாரியை ஆளுநரே நேரில் அழைத்துப் பேசியதற்குப் பிறகு, அவரது கார் தொடர்ந்து புதுவைக்குச் செல்ல முடிந்தது. இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட நான் இரவு 10-30 மணி அளவில் புதுவைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதைப்பற்றி அவரிடம் கேட்டறிந்தேன். 15.4.1995 அன்று ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு தொடர தி.மு.கழகத்தின் சார்பில் அனுமதி கோரி தமிழக ஆளுநர் மேதகு சென்னாரெட்டி அவர்களை நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் சந்தித்து 539 பக்கங்கள் கொண்ட ஊழல் குற்றச்சாட்டுப் பட்டியலைக் கொடுத்தோம்.
எங்களுடன் அப்போது முரசொலி மாறன், நாஞ்சிலார், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், என்.வி. என்.சோமு, ரகுமான்கான், சி.டி. தண்டபாணி ஆகியோர் உடன் வந்தனர். ஏப்ரல் திங்கள் இரண்டாவது வாரத்தில் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக அரும் பணியாற்றிய இயக்கத்தின் சண்ட மாருதமெனப் புகழப்பட்ட இளம்பரிதி அவர்களும், இந்தியப் பிரதமராக இருந்த மூத்த காந்தீய அரசியல்வாதியான மொரார்ஜி தேசாய் அவர்களும், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் இயற்கை எய்தினார்கள்.
தவத்திரு அடிகளார் மறைவு குறித்து நான் எழுதிய கலைஞர் இரங்கல் செய்தி என் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற வேண்டுமென்று எண்ணுகிறேன். அது வருமாறு:- "ஆன்மீகத் துறைக்கும் அறிவியக்கப் புரட்சிக்கும் இடையில் பாலமாக இருந்து நாட்டுக்கும், இனத்துக்கும், தாய் மொழியாம் தமிழுக்கும் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டவரும் எல்லோரிடமும் அன்புடனும் பண்புடனும் பழகிடும் இயல்பு வாய்ந்தவராகத் திகழ்ந்தவரும்- இந்நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமின்றி; வெளிநாட்டுத் தமிழர்களின் மத்தியிலும் "அடிகளார்" என்றால் இவர்தான் எனப் புரிந்து கொள்ளுமளவுக்குப் புகழ் செறிந்தவருமான- என் அன்புக்கும் மதிப்புக்குமுரிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டுத் துணுக்குற்றேன்.
பெரியாருடன், அறிஞர் அண்ணாவுடன், பெருந்தலைவர் காமராஜருடன் என் போன்றோருடன் அவர் கொண்டிருந்த அன்பும் மதிப்பும்; அதுபோலவே தமிழகத் தலைவர்கள் அனைவரும் அவர்மீது கொண்டிருந்த பற்றும் பாசமும் தமிழ்மக்கள் அனைவரும் அறிந்த உண்மையாகும். மூடநம்பிக்கையொழிந்த சமுதாயம் காண்பதில் தந்தை பெரியாருக்கு அவர் உடன்பட்டவராக இருந்தார். தமிழ்ச் சமுதாயம் ஒன்றுபட்டுத் திரளவேண்டுமென்பதில் அண்ணாவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார்.
இளைய தலைமுறையினர் கல்விக்கண் பெறவேண்டும் என்பதில் காமராஜருக்கு அவர் ஒரு கரமாக இருந்தார். கழக ஆட்சியில் என் வேண்டுகோளை ஏற்று; முறைப்படி அடிகளார் சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பொறுப்பேற்று- அறநிலையத் துறையில் மேலும் ஆக்கப் பணிகள் மிகுவதற்கு எத்தனையோ அரிய ஆலோசனைகளை சட்டமன்ற மேலவைப் பேச்சின்மூலம் வழங்கியிருக்கிறார். மடாலயம்- மகேசன்- என்று மாத்திரமில்லாமல்; இரண்டுமே மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்று வெறும் சொல் அளவில் இல்லாது செயல் அளவில் செய்தும் காட்டினார்.
அவர் ஆண்டுதோறும் நடத்திய பாரி விழா பலவற்றுக்கு என்னை அவர் அன்புடன் அழைத்ததும்; நான் சென்று அந்த விழாக்களில் இலக்கிய உரைகள் நிகழ்த்திய- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தும் கவியரங்கம் நடத்தியதும் இன்றைக்கும் என் அகக்கண்களில் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு துறவியாகத் தன்னை முடக்கிக் கொண்டிராமல்- மக்களுடன் ஒன்றிக் கலந்த நிலையில்; அவர் ஏற்றுக் கொண்ட இறைப் பணியை இடைவிடாது ஆற்றி; இன்று புகழ் விளக்காக ஒளிமழை பொழியும் அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையுடன்; அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை உணர்த்துகிறேன்."
அத்தகைய மாபெரும் மனிதர் அடிகளார் மறைந்தபோது பேரவை நடந்து கொண்டிருந்தது. அவருக்கு அவையிலே இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுமென்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில் - அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைத்த பிறகும் கூட அது ஏற்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைத்த பிறகு நாளைக்கு தீர்மானம் கொண்டு வருவதாக இருக்கிறோம் என்று கூறினார்கள்.
முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் செய்திகூட வெளியிடவில்லை. அடிகளார் மறைந்த ஒரு வாரத்திற்குள் நான் குன்றக்குடி சென்று அவர் மறைந்த இடத்திலே அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். அ.தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஜி.விசுவநாதன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ம.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டதாக அறிவித்தார்கள். இதற்கு எதிராக ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் பேரவைத் தலைவரிடம் கொடுத்த புகார் மீது 20-4-1995 அன்று தீர்ப்பளித்த பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அரசமைப்புச் சட்டம் 191(2) பிரிவின்படியும் பத்தாவது அட்டவணைப்படியும் இருவரும் பதவி இழப்புக்கு ஆளானதாக அறிவித்தார்.
கலைஞர் தமிழக ஆளுநர் - முதல் அமைச்சர் மோதலின் உச்சகட்டமாக 27-4-1995 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களைத் திரும்பப் பெறக் கோரும் தீர்மானம் ஒன்று நிதி அமைச்சரும் அவை முன்னவருமான நாவலர் அவர்களால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்துக் கடுமையாகப் பேசிய பரிதி இளம்வழுதியை ஆளுங் கட்சியினர் பேசவே விடவில்லை. கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு வெளிநடப்புச் செய்தார்.
இந்த நாளில்தான் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது ஆளுநர் சென்னா ரெட்டியை அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்திக்கச் சென்றபோது தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற அசிங்கமான குற்றச்சாட்டைக் கூறியதாகும். அந்தக் குற்றச்சாட்டின் காரணமாகத் தமிழ்நாட்டிற்கே பெரும் தலைகுனிவு ஏற்பட்டது. அ.தி.மு.க.வினர் தூத்துக்குடியில் நடத்திய மேதின விழா ஊர்வலத்தின் முடிவில் பிரதமர் நரசிம்மராவின் கொடும் பாவியைக் கொளுத்தினர்.
அதுகுறித்து ஒரு ஒழுங்குப் பிரச்சினையை 4-5-1995 அன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலே எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அப்படியொரு சம்பவம் நடைபெற்றதாகத் தகவல் இல்லை என்றும், காரணம் நாட்டிலே பிரதமர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற சந்தேகமே மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், அப்படியொருவர் இல்லை என்ற எண்ணம்தான் மக்களுக்கு உள்ளது என்றும், அந்த நிலையில் எப்படி பிரதமர் நரசிம்மராவ் அவர்களின் கொடும்பாவி கொளுத்தப்பட்டிருக்க முடியும் என்றும், செயலற்ற ஒருவர்தான் பிரதமராக இருக்கிறார் என்றும் அவையிலேயே சாடினார்.
இதைத் தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பேரவை அமளிக்காடாயிற்று. மைக்குகள் உடைந்தன. உறுப்பினர்கள் கட்டிப் புரண்டு சண்டை போட்டனர். உறுப்பினர்களின் சட்டைகள் கிழிந்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் பேரவைத் தலைவரால் வெளியேற்றப்பட்டனர். நான்கு உறுப்பினர்கள் தொடர் முழுவதற்கும் நீக்கப்பட்டனர். ஜெயலலிதா மீது வழக்குத் தொடர தமிழக ஆளுநர் சுப்பிரமணிய சுவாமிக்குக் கொடுத்த அனுமதியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கினை நீதிபதிகள் சீனிவாசன், எஸ்.
சுப்பிரமணியம் ஆகியோர் தள்ளுபடி செய்தனர். 14-5-95 அன்று இரவு சேலம் அருகே ஒரு பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 60 பேர் அதில் உயிர் இழந்தனர். சென்னையிலிருந்து சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரசும், சேலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயிலும் இரவு 10.30 மணிஅளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது. சுமார் 100 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
கொலை, கொள்ளை, விபத்து, அமைச்சர்கள் மாற்றம், அதிகாரிகள் மாற்றம், ஊழல், லஞ்சம், முறைகேடு, வன்முறை, அராஜகம் போன்றவை எப்படி ஜெயலலிதா ஆட்சியிலே தொடர் நிகழ்ச்சிகளோ அதைப் போலவே அதிகாரிகளுக்குப் பதவி நீடிப்பு வழங்குவதும் ஒரு சம்பிரதாய நிகழ்ச்சியாகும். உதாரணமாக சொல்லவேண்டுமேயானால் ஜெயலலிதா ஆட்சியில் தலைமைச் செயலாளர் அரிபாஸ்கர், ஐ.ஏ.எஸ். அவர்கள் டிசம்பர் 94இல் ஓய்வு பெற வேண்டும். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.
அதிகாரிகளுக்கு முதல் ஆறு மாத பதவி நீட்டிப்பை மாநில ஆளுநரே செய்ய முடியும். அப்போது முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு காரணமாக அரிபாஸ்கரின் பதவி நீட்டிப்பை முதல் அமைச்சர் ஜெயலலிதாவே செய்தார். அரசு அலுவல் விதியைப் பயன்படுத்தி இந்தப் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது. இவ்வாறு அரிபாஸ்கர் விஷயத்தில் அரசு கலைஞர் அலுவல் விதியைப் பயன்படுத்தியதை ஆட்சேபித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், கழக வழக்கறிஞர் ஜெகநாதன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.
மாநில காவல் துறைத் தலைமை இயக
்குநராக இருந்த வைகுந்த் அவர்களுக்கும் பதவி நீடிப்பு அப்போது வழங்கப்பட்டது. சட்டப் பேரவைச் செயலாளராக இருந்த ஜானகிராமனுக்கு ஒரே கோப்பில் மூன்று ஆண்டுக் காலத்திற்கு ஒரே நேரத்தில் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. இந்த அதிகாரி மூன்றாண்டு காலம் பதவி நீடிப்பு பெற்று பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றுவிட்டார். அந்த அதிகாரியைத் தேடிப் பிடித்துத்தான் தற்போது மீண்டும் ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு சட்டப் பேரவைத் துறையிலே முதன்மைச் செயலாளர் என்ற பதவியை அளித்துள்ளார்.
இப்படிப்பட்ட விநோதங்களையெல்லாம் ஜெயலலிதா ஆட்சியிலேதான் காண முடியும். இடையில் சில காலம் தாய்க் கழகத்தில் ஊடல் கொண்டு, தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற புதிய அமைப்பை நடத்தி வந்த தம்பி டி. ராஜேந்தர் 95ஆம் ஆண்டு மே திங்களில் மீண்டும் கழகத்திலே இணைந்தார். இதற்கான விழா மயிலை மாங்கொல்லையில் 20-5-1995 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், தம்பி டி. ராஜேந்தரும் கலந்து கொண்டோம்.
ஜெயலலிதா டான்சி நிலம் வாங்கியது தொடர்பாக வழக்குத் தொடர ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் 30-5-95 அன்று இரவு அ.தி.மு.க. குண்டர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு, குற்றுயிரும், குலையுயிருமாக மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்ட நான் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தேன். அந்த வழக்கு ஆலந்தூர் பாரதி அன்று மாலையில் சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு வந்து விவாதித்து விட்டுச் சென்ற பிறகு இந்தக் குண்டர்கள் அங்கே வந்து "அம்மா மேலேயா கேஸ் போடற" என்று கேட்டவாறே தாக்கியிருக்கிறார்கள்.
அவர் வயது காரணமாகவும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாகவும் மரணப் படுகுழியிலிருந்து தப்பிப் பிழைத்தார். உயிர் பிழைத்த பிறகும், அவர் அதற்கு முன்பு கழக வழக்கறிஞராக ஆற்றிய பணியில் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து மேலும் உறுதியாகக் கழக வழக்குகளை நடத்திவந்தார். அவர் அன்று சிந்திய ரத்தத்திற்கு கழகம் காட்டிய நன்றிக் கடனாகத்தான் கழக ஆட்சியில் அரசு வழக்கறிஞராகவும், தற்போது மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் பணியாற்றிடும் அரிய வாய்ப்பினை அளித்தது.
சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களை வழக்கறிஞர்கள் எல்லாம் சந்தித்து மனு கொடுத்தார்கள். மாநிலங்களவையில் முரசொலி மாறன் சண்முகசுந்தரம் தாக்கப் பட்டது பற்றி மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணை நடத்த வேண்டுமென்றும், அந்தச் சம்பவத்திற்கு ஜெயலலிதாவே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார். 2-6-1995 அன்று நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிலும் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ.
விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 11-6-95 தேதியிட்ட ஆனந்தவிகடன் "சென்னை நகரில் வன்முறைக் கும்பல்கள் இப்படித் தாக்குதல் நடத்துவதும் போலீஸ் கையைப் பிசைந்தபடி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு நிற்கும் வெட்கம் கெட்ட காட்சியும் புதிதல்ல. இந்தத் தாக்குதலின் பின்னால் ஏதோ வஞ்சகமான மர்மங்கள் இருப்பதுபோல மக்களே பேச ஆரம்பித்து விட்டார்கள். இதனால் போலீஸ் மீது இருக்க வேண்டிய மரியாதை இன்னும் அதலபாதாளத்துக்கு இறங்கியிருக்கிறது.
சண்முக சுந்தரத்தின் மீது விழுந்த 32 வெட்டுகள், உண்மையில் ஜனநாயக வேர் மீது விழுந்த வெட்டுகள். இதை உணராத- கலைஞர் வரை காவல் துறையினர் தங்கள் காக்கிச் சட்டையைக் கழற்றி எறிவதே மேல்" என்று தலையங்கம் எழுதியது. 20-6-1995 அன்று தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களும் தமிழகம், புதுவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். மேலும் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்தனர்.
20-6-95 அன்று நீதிபதி ஜெகதீசன் வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், 4 மாதங்களுக்குள் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு அனைத்து உதவிகளும் அளித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், சண்முகசுந்தரத்திற்கு ஆகும் மருத்துவ செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்க வேண்டுமென்றும், சண்முகசுந்தரத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்தது. ஆனால் அங்கே நடைபெற்ற இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி, சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை அங்கீகரித்து தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கல்யாண வைபோகமும்; ஈழத்தமிழருக்காகப் பேரணியும்!
ஆம் ஆண்டு தமிழகத்திலே நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி எழுதும்போது ஜெயலலிதாவின் இல்லத்திலே நடைபெற்ற அவரது வளர்ப்பு மகன் திருமணத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. 19-6-95 அன்று அதுபற்றி தினமணி இதழ் வெளியிட்ட செய்திச் சுருக்கம் பின்வருமாறு:- "முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும், சிவாஜி கணேசனின் பேத்தி சத்தியலட்சுமிக்கும் செப்டம்பர் 7ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக முதல்வரின் இல்ல அலுவலகத்திலிருந்து பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த பேக்ஸ் செய்தியின் முழு விவரம். ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் வி.என். சுதாகரன் மற்றும் சிவாஜி கணேசனின் பேத்தி என்.சத்திய லட்சுமி ஆகியோரது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்துவதற்காக போயஸ் தோட்டத்திலிருந்து புறப்பட்டு சிவாஜி கணேசன் இல்லத்திற்குச் சென்றார்.
முதல்வருடன் மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 18 கார்களில் சென்றார்கள். கிட்டத்தட்ட 150 பேர் மணமகன் வீட்டுச் சார்பில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். 27 வெள்ளித் தட்டுகளில் சீர்வரிசை மணமகளுக்கு வழங்கப்பட்டது." இந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாததோடு, ஜெ.ஜெ. தொலைக்காட்சியினரை மட்டும் நிகழ்ச்சியை படமெடுக்க அனுமதிக்கப்பட்டது. கலைஞர் இந்த ஆடம்பரத் திருமணம் குறித்து ஜூலை இறுதியில் திருச்சியில் என்னைச் சந்தித்த நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ஆடம்பரச் செலவில் திருமணம் நடைபெறுவது உண்மைதானென்றும், நான் முதல்வராக இருந்தபோது எங்கள் வீட்டுத் திருமணங்களை சாதாரணமாக மண்டபங்களில்தான் நடத்தியிருக்கிறேன் என்றும், குறிப்பாக மகன் அழகிரியின் திருமணத்தை பெரியார் திடலில்தான் நடத்தினேன் என்றும், வருகை தந்தோர் அனைவருக்கும் சென்னையிலே உள்ள ஓட்டல்களில் சாப்பாடு அவரவர் செலவிலே வழங்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டதை ஞாபகப்படுத்தினேன்.
மேலும் பதவியிலே உள்ளவர்கள் நடத்தும் திருமண விழாக்கள் சிக்கனமாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைய வேண்டுமென்றும் அங்கே தெரிவித்தேன். உடனே முதல்வர் ஜெயலலிதா ஒரு முதல்வரின் மகனுடைய திருமணம் நடக்கும்போது ஆகக்கூடிய செலவுகளே எனது வளர்ப்பு மகன் திருமணத்திற்கும் ஆகும் என்று பதிலளித்தார். இதுகுறித்து தினமணி எழுதிய துணை தலையங்கத்தில் "கண்டித்தவர் கருணாநிதி என்பதை மறந்து விடலாம்.
பெரியார், அண்ணா பாரம்பரியத்தில் வந்திருப்பதாக ஜெயலலிதா உரிமை கொண்டாடுகிறார். எனவே அண்ணாவின் கொள்கைக்கு மாறாக, மன்னர் ஆட்சிக்காலத்து அரண்மனைத் திருமணம் போல் நடத்துவது முறையா என்பதே கேள்வி. இந்தக் கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்" என்று எழுதியது.
எழுதியதோடு மாத்திரம் விட்டு விடாமல் ஆடம்பரமான அளவில் மணவிழா கொட்டகைகள் போடப்பட்டதையெல்லாம் புகைப்படமெடுத்து தனது இதழிலும் அவைகளை வெளியிட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருந்த திருமணத்திற்காக 75 ஏக்கர் பரப்பளவில் பந்தல்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே அமைக்கப்படும் பணிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைக்கப்பட்ட 75 ஏக்கர் பந்தல் போதாமல் திருமண வரவேற்புக்காக சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நகரில் சினிமா செட் போல மிகப் பெரிய அளவில் பந்தல் போடப்பட்டது.
மேலும் சென்னையில் பல்வேறு சாலைகளில் ஆடம்பரமான மின் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டன. அதுதவிர சர விளக்குகள், குழல் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விளக்குகள் ஜெயலலிதா வீடு உள்ள இடத்திலிருந்து திருமணம் நடந்த எம்.ஆர்.சி. நகர் வரையிலும், பின்னர் அங்கிருந்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் இடமான தரமணி வரையிலும் பரவலாக அமைக்கப்பட்டிருந்தன. அதற்கான மின்சாரத்தையெல்லாம் அரசுக்குரிய மின் கம்பங்களிலிருந்து நேரடியாகத் தொடர்பு படுத்தியிருந்ததை பல ஏடுகள் அப்படியே புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தன.
இந்தத் திருமணத்தையொட்டி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் 42 வழக்கறிஞர்கள் சார்பில் அதன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அபிபுல்லா பாட்சா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தையொட்டி போக்குவரத்து மாற்றம், அந்தப் பகுதி மக்களுக்கு மின்சாரத் தடை, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே அலங்கார வளைவுகள் அமைக்கப்படுவதால் பொது மக்களுக்குப் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே அவற்றைக் களைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீசன் அவர்கள் செப்டம்பர் 7, 8 கலைஞர் ஆகிய நாட்களில் குடிநீர், மின்சாரம் பொதுமக்களுக்கு வழங்குவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்றும், போக்குவரத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார். மின்சாரம் எப்படி பெறப்பட்டது என்பதற்கான விளக்கத்தையும் உடனடியாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் ஆணையிட்டார்.
6-9-95 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும் ஏராளமான செய்தியாளர்கள் அங்கே சென்றிருந்தனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சி நிறுவனமும் தங்கள் செய்தியாளர்களை அங்கே அனுப்பியிருந்தது. ஆனால் சன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்கள் மீது அங்கே பயங்கரத் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
சன் தொலைக்காட்சியைச் சேர்ந்த தொழில்நுட்ப மேலாளர் எஸ். கண்ணன் குறிப்பாக குறி வைத்துத் தாக்கப்பட்டார். ஊர்வலத்துக்கு இடையே கண்ணனைத் தாக்கி, நிலைகுலைந்து போன அவரைச் சில அடி தூரம் தரதர வென்று இழுத்துச் சென்றனர். அவரைக் கொண்டுபோய் திருமண மண்டபத்திற்குப் பின்புறம் ஒரு அறையில் வைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அவரைக் காவல்துறைத் தலைவர் வைகுந்த், கமிஷனர் ராஜசேகரன் நாயர் ஆகியோர் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
பின்னர் விடியற்காலை 3 மணியளவில் கண்ணன் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, அலுவலகம் வந்து சேர்ந்தார். அவர்மீது நடைபெற்ற தாக்குதலை என்.வி.என். சோமு, வாழப்பாடி ராமமூர்த்தி, குமரிஅனந்தன், ஆர்.நல்லக்கண்ணு, திருநாவுக்கரசு, தலித் எழில்மலை ஆகியோர் அந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்தனர். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 70 பேர் தலைமை நீதிபதி திரு. கே.ஏ.சாமி அவர்களைச் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்காக அரசு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், ஜனநாயக நடைமுறைகளும், சட்டதிட்ட விதிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்து அந்த விழாவிலே நீதிபதிகள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி வாசலில் திருமண நாளன்று மனிதச் சங்கிலி அமைத்தும் சாலை மறியலில் ஈடுபட்டும் திருமணத்தைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
இதேபோல, புதுக்கல்லூரி மாணவர்களும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும் இந்த ஆடம்பரத் திருமணத்தைக் கண்டித்து, மொழிப்போர் தியாகிகள் சங்கம் சார்பில் ஏராளமான மொழிப்போர் தியாகிகளும், பெண் உரிமை சங்கத்தினரும், மனிதநேயக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், என்.எப்.ஐ. டபிள்யூ., பி.யூ.சி.எஸ்., தமிழ்மாநில குடிசை வாழ்வோர் மற்றும் குடியிருப்போர் சங்கம், ஷெனாய்நகர் மாதர் சங்கம், தமிழ் மாநில குடிசை வாழ்வோர் பெருமன்றம், மனித உரிமைக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.
கே.பி., கட்டிடத் தொழிலாளர் சங்கம், பஞ்சாயத்து சங்கம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், அம்பேத்கர் மக்கள் விடுதலை இயக்கம், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான பெண்கள் மன்றம், தலித் மக்கள் போராட்டக் குழு, உழைக்கும் மக்கள் மாமன்றம், ஜன ஜாக்தன் சமூக ஒருமைப்பாட்டு மையம் உட்பட பல்வேறு சங்கத்தினர் திருமண நாளன்று உண்ணாவிரதம் இருந்தனர். காந்தி சிலையை மறைத்து திருமண விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டு அதற்காக சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத் தலைவர் தளவாய் தலைமையில் போராட்டம் நடத்திய பிறகு காந்தியடிகள் விடுதலையானார்.
கலைஞர் 7ஆம் தேதியன்று முதல் பக்கத்தில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தை முதல் பக்கத்தில் மன்னர் கால மாப்பிள்ளை ஊர்வலம் என்று தலைப்பிட்டு ஏடுகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதிலே ஜெயலலிதாவும், சசிகலாவும் மற்ற பெண்களும் அணி வகுத்து வர அவர்களுக்கு முன்னால் கூடுதல் டி.ஜி.பி. தேவாரம் துப்பாக்கியை கையில் பிடித்தபடி செல்வார். நான்கு அராபியக் குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கார சாரட் வண்டியிலே மணமகன் சுதாகரன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.
செய்தி ஏடுகளில் பாதுகாப்பைத் தவிர முதல்வர் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு வந்தவர்களுக்குப் பூ கொடுத்து வரவேற்பது உட்பட அனைத்துப் பணிகளையும் தங்கள் வீட்டுத் திருமணம் போல் போலீசார் செய்தனர் என்றும், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குவிக்கப்பட்டிருந்த போலீசார் திருமணப் பந்தல் முழுவதும் ஒவ்வொரு வரிசையிலும் நின்று கொண்டிருந்தனர் என்றும், திருமணம் முடிந்தவுடன் தேங்காய், பழம் இருந்த பையையும் போலீசாரே கவுண்டர்களில் அளித்தனர் என்றும் வர்ணனைகள் செய்திருந்தன. இதற்கிடையே இலங்கையில் சந்திரிகா; அதிபர் பொறுப்புக்கு வந்த பிறகு தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் என்ன காரணத்தாலோ
பேச்சுவார்த்தை முறிந்து இரு தரப்பினருக்கும் இடையே போர் மூண்டது. இதுகுறித்து மே திங்களில் நான் விடுத்த அறிக்கையில் தமிழ் ஈழத்தில் வாழுகின்ற லட்சோப லட்சம் தமிழ் மக்களின் உயிர்களைப் பலி கொள்ளக்கூடிய சோக நிகழ்ச்சி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் இரு தரப்பினரும் பழி உணர்வுக்கு இடம் தராமல், அந்தத் தமிழ் மக்களின் உரிமைகள் மட்டுமல்ல, உயிரும் காப்பாற்றப்பட ஏற்ற முடிவுகள் மேற்கொள்வதற்கு இன்னமும் நேரம் இருக்கிறது என்றே கருதுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் சிங்கள ராணுவம் இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கடுமையான தாக்குதலை நடத்தியது. அப்போது நடைபெற்ற நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தாக்குதலில் குழந்தைகள் மட்டும் 63 பேர் பலியாகினர். இதுகுறித்து 13-7-95 அன்று அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திடும் தாக்குதலைக் கண்டித்திட 17-7-95 அன்று ஒவ்வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னமணிந்து உண்ணா நோன்பு இருப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.
அந்த உண்ணா நோன்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசியலீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் கலந்து கொண்டன. தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இந்த உண்ணா நோன்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற உண்ணா நோன்பு நிகழ்ச்சியை கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் தொடங்கி வைத்திட, நான் முடித்து வைத்தேன். இதற்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஓரளவிற்குக் குறைந்த போதிலும் சில மாதங்களுக்குப் பிறகு குறிப்பாக அக்டோபர் 95 இறுதியில் மீண்டும் தாக்குதல் கடுமையாகியது.
எனவே ஈழத் தமிழர் மீது படுகொலை நடத்திய சிங்கள அரசைக் கண்டித்து கழகத்தின் சார்பில் 2-11-1995 அன்று சென்னையில் கடற்கரை காந்தி சிலை அருகிலிருந்து என்னுடைய தலைமையில், பேராசிரியர், ஆர்க்காடு வீராசாமி, நாஞ்சிலார் முன்னிலையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி ஒன்றை நடத்தி அண்ணா அறிவாலயத்திற்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டது. அது போலவே மாவட்டத் தலைநகரங்களில் 3ந்தேதியன்று கறுப்புக் கொடி பேரணி நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அவ்வாறே 2ஆம் தேதியன்று கழகம் நடத்திய கறுப்புக் கொடி பேரணி காரணமாக சென்னை நகரமே குலுங்கியது. ஒரேநாள் அறிவிப்புதான் என்ற போதிலும் இலட்சக்கணக்கான மக்கள் அதிலே கலந்து கொண்டனர். பேரணி முடிவில் நான் உரையாற்றியபோது ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவ உதவிக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் 25 இலட்சம் ரூபாய் நிதி கலைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தேன். அறிவித்தவாறே மறுநாள் 3ந்தேதியன்று செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளைத் தலைவர் வி.கார்த்திகேயன் அவர்களிடம் 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலை கழக முன்னணியினர் மூலமாக ஒப்படைக்கப்பட்டது.
கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் சந்தித்து ஈழத் தமிழர்கள் படு கொலை குறித்து முறையீடுகளைக் கொடுத்தனர். பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பில் 25-11-95 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இந்திய அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி நவம்பர் 30ஆம் தேதியன்று முழு அடைப்பு நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. 30ஆம் தேதி முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தேசிய முன்னணியிலிருந்து தி.மு.க. விலகியது ஏன்? ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் உச்சநீதிமன்றம் தி.மு.கழகம் சம்மந்தப்பட்ட ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்பளித்தது. 18 ஆண்டுகள் நீடித்த வழக்கு அது. 1977ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்திற்கு வருகை தந்த இந்திராகாந்தி அம்மையாருக்கு தி.மு. கழகத்தின் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கறுப்புக் கொடி போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தைக் காரணமாகக் காட்டி, அப்போதிருந்த அ.தி.மு.க.
அரசு நான், பேராசிரியர், ஆர்க்காடு வீராசாமி உட்பட 134 பேர் மீது இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்றதாக வழக்கு தொடுத்தது. சுமார் பத்தாண்டு காலம் இந்த வழக்கு நீடித்தது. 180 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1987ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அந்தத் தீர்ப்பில் கழகத்தைச் சேர்ந்த தென்னரசு, ரகுமான்கான், கோவை ராமநாதன், கோபால் சாமி (வைகோ), பொன். முத்துராமலிங்கம், உட்பட 56 பேருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்தும், நான், பேராசிரியர் உட்பட மற்ற அனைவரையும் விடுதலை செய்தும் உத்தரவிடப்பட்டது.
எங்களை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க. அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 56 கழகத் தோழர்களுக்குத் தண்டனை வழங்கப் பட்டதை எதிர்த்து தி.மு.கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கலைஞர் இந்த இரண்டு மேல்முறையீடுகளையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். நடராஜன், சாமிதுரை ஆகியோர் 10-3-1994 அன்று வழங்கிய தீர்ப்பில் நான் பேராசிரியர் உட்பட 78 பேரை விடுதலை செய்தது சரியே என்று அரசின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
தி.மு.கழகம் செய்துகொண்ட மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 56 பேருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்தனர். ஜெயலலிதா அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், நானாவதி ஆகியோர் 4-8-1995 அன்று அளித்த தீர்ப்பில் இந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து அளித்த தீர்ப்பு சரியானது என்று தெரிவித்தனர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைக் கொண்டு பாட்சா படத்தினைத் தயாரித்து, அதன் வெள்ளிவிழா சென்னையிலே நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது தமிழ்நாட்டில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களைப் பற்றியும் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றியும் பேசினார். தமிழ்நாடு இப்படியே தொடர்ந்தால் சுடுகாடாக ஆகிவிடும் என்றும் பேசினார்.
அவரது இந்தப் பேச்சை முன்னிலை வகித்த ஆர்.எம். வீரப்பன் ஏன் கண்டிக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் வீரப்பனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் விளக்கம் அளித்ததாகவும் சில ஏடுகளில் செய்திவந்தது. ஆர்.எம்.வீ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்தக் கட்சி ஏட்டிலே கட்டுரையும் வெளிவந்தது. அமைச்சர் வீரப்பனுக்கு ஜெயலலிதா கருணை காட்டக்கூடாது என்றெல்லாம் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறிக்கைகளை விடுத்தனர்.
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தான் ஏன் அந்த விழாவில் ரஜினியின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க இயலவில்லை என்பது குறித்து ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்றிருந்த நிலையிலும் அங்கிருந்தவாறே ஒரு அறிக்கை மூலம் விளக்கியிருந்தார். ரஜினிகாந்த் அவர்கள் அந்த விழாவில் பேசியது பற்றி நிருபர்கள் என்னுடைய கருத்தைக் கேட்டபோது தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கக்கூடாது, அதை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் வெடிகுண்டு ஆயுதக் கலாச்சாரம் பரவிவிடும் என்று நண்பர் ரஜினிகாந்த் பேசியது ஒரு பிரஜையின் உரிமையாகும்.
அந்த உரிமையைக் கூட வழங்க முடியாது என ஆளும் கட்சியினர் அச்சுறுத்துகிறார்கள். அதற்குக் காரணம் அத்தகைய வன்முறைக் கலாச்சாரத்தின் கர்த்தாக்களாகவே ஆளும் கட்சியினர் இருப்பதுதான் என்று கூறினேன். இந்தக் காலகட்டத்தில் ஆர்.எம்.வீ. அவர்கள் வெளிநாட்டில் இருந்ததால் அவர் வகித்து வந்த உணவு, சிவில் சப்ளை துறை பொறுப்புக்கள் வணிக வரித்துறை அமைச்சரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டன. ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையே இருந்த பிணக்கு காரணமாக ஜெயலலிதா ஆளுநரை அந்தக் காலகட்டத்தில் நேரில் சந்திக்காமல் இருந்த காரணத்தினால்தான் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் பதவி நீடித்து வருவதாக ஏடுகள் எல்லாம் எழுதின.
ஆனால் ஜெயலலிதா தனது பிடிவாதத்தை விடுத்து 1-9-95 அன்று மாலையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது ஆர்.எம். வீரப்பன், நடேசன் பால்ராஜ் என்ற இரண்டு அமைச்சர்களையும் நீக்க வேண்டுமென்றும், அவர்களுக்குப் பதிலாக இரண்டு பேரை புதிய அமைச்சர்களாக நியமிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து ரஜினிகாந்த் அவர்கள் விடுத்த அறிக்கையில், "பாட்சா விழாவில் நாட்டு நலனை மனத்தில் கொண்டு நான் வெளியிட்ட கருத்தினையும் அதற்குப் பிறகு வந்த கலைஞர் பத்திரிகை செய்திகளும் நடந்த சம்பவங்களும் தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே.
ஆர்.எம்.வீரப்பன் வெளிநாடு சென்று திரும்பியவுடன் வெறும் மரியாதை நிமித்தம் அவரை நான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு முதல்வருக்கு அதிருப்தியைத் தந்திருப்பது என்பது அதற்குப் பிறகு அவர் எடுத்த நடவடிக்கைகள் தெளிவாக்குகின்றன. நேற்று ஆர்.எம்.வீ. பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்திருக்கிறது. நான் பாட்சா விழாவில் வெடிகுண்டு கலாச்சாரத்தைப் பற்றிப் பேசியது தவறில்லை.
ஆனால் முதல்வரின் சுபாவம் தெரிந்திருந்தும் அவர் அமைச்சரவையில் இருந்த ஆர்.எம்.வீ. மேடையில் இருக்கும்போது பேசியதுதான் தவறு என்பதை நான் இப்போது உணர்கிறேன். நான் பாட்சா விழாவில் பேசியதும், பிறகு ஆர்.எம். வீ.யை இல்லத்தில் சந்தித்ததும் இயற்கையாக நடந்த சம்பவங்கள்தான். அவருக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்கு நான்தான் காரணம் என்று நினைக்கிறேன். அதற்காக அவரிடமும் அவரது விசுவாசிகளிடமும், அமரர் எம்.ஜி.ஆர்.
ரசிகர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். ரஜினிகாந்த் அவர்களின் இந்த அறிக்கைக்கு அ.தி.மு.க. அமைச்சர் செங்கோட்டையன் விடுத்த பதில் அறிக்கையில் "ஏதோ வருத்தம் தெரிவிப்பதுபோல் முதல்வரைக் குறை கூறும் வண்ணம் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். தெளிவு இல்லாமல் பேசுவதும், அறிக்கை விடுவதும் சுய தெளிவு இல்லாதவர்களின் சுபாவம். முதல்வரின் சுபாவத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு அருகதை வேண்டும்.
சிவாஜி கணேசனுக்கு செவாலியே பட்டம் வழங்கும் விழாவிலும் முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டி நன்றி கூறுவதை விட்டுவிட்டு சற்றும் மேடை நாகரிகம் இன்றி சம்பந்தம் இல்லாமல் பேசினார் ரஜினி" என்று குற்றம் சாட்டியிருந்தார். 95ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்த ஒரு அறிக்கையில்; நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) "முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டவன் அளித்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழக மக்களுக்குச் சேவை செய்யாமல் அந்தப் பதவியை தன்னுடைய சுயநலத்திற்கும் ஆடம்பர ஆர்ப்பாட்டத்திற்கும் பயன்படுத்திவிட்டார்.
மக்களுக்கு நிறைய நல்லது செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பல கோடி மக்களில் நானும் ஒருவன். மக்கள் நலனை மனதில் கருதித்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவை நான் விமர்சித்தேன். அதில் எந்தவித தனிப்பட்ட வெறுப்போ சுயநலமோ அரசியல் நோக்கமோ இல்லை. வரும் பொதுத் தேர்தலில் மக்களும் தாய்க்குலங்களும் அ.தி.மு.க.வினரும், எம்.ஜி.ஆர்.ரசிகர்களும், தொண்டர்களும், செல்வி ஜெயலலிதா தலைமையில் மறுபடியும் ஆட்சி அமைத்துக் கொடுத்தால் தமிழக மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று சுட்டிக் காட்டியிருந்தார்.
அ.தி.மு.க.விலிருந்து ஆர்.எம். வீரப்பன் நீக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் உண்ணா விரதம் நடைபெற்றது. இந்த உண்ணா விரதத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் (இந்நாள் நிதியமைச்சர்) பொன்னையன் அப்போது பேசியது ஏடுகளில் இன்றும் உள்ளது. அது வருமாறு:- "அண்ணா, கருணாநிதியின் ஆட்சிகள் அமைவதற்கான அச்சாணியாக, அடித்தளமாக எம்.ஜி.ஆர். மன்றங்கள் செயல்பட்டன. அதன்பின் எம்.ஜி.ஆர்.
மன்றங்களை அரசியல் சக்தியாக மாற்றும் பணியை அதன் நிறுவனர் ஆர்.எம். வீரப்பன் நிறைவேற்றினார். எம்.ஜி. ஆரின் பெயரையும் புகழையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இப்போது எம்.ஜி.ஆரின் புகழை மறைக்கும் விதத்தில் செயல்படுகிறார். ஆர்.எம். வீரப்பனையே கட்சியிலிருந்து நீக்கி விட்டார். இந்த எதேச்சாதிகார நடவடிக்கை கண்டிக்- கலைஞர் கத்தக்கது. அ.தி.மு.க. தலைமை, உலக வரலாறு காணாத ஊழலில் சிக்கியுள்ளது. ஜனநாயக விரோத, அராஜக நடவடிக்கைகளில் அது ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் புகழைக் காக்க ஜெயலலிதாவைக் கட்சித் தலைமையிலிருந்து நீக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசான ஆர்.எம். வீரப்பனைத் தலைவராக்க வேண்டும். இதற்கு ரஜினிகாந்த் உதவ வேண்டும்." இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எதிராக உண்ணும் விரதம் இருக்கப் போவதாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தேசிய முன்னணியின் பக்கம் அ.தி.மு.க.
சாய்கின்ற நிலை தென்பட்டது. அதைப்பற்றி ஏடுகள் எல்லாம் பெரிதாக எழுதத் தொடங்கின. அவர்களின் அந்தச் செயற்பாடுகள் காரணமாக தி.மு.கழகமும் தேசிய முன்னணியிலிருந்து சற்று விலகியே இருக்க முற்பட்டது. இந்த நிலையில் 95ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தேசிய முன்னணியின் கூட்டத்திலே கழகம் கலந்து கொள்ளவில்லை. அதுகுறித்து செய்தியாளர்கள் என்னிடம் நீங்கள் தேசிய முன்னணி கூட்டத்தில் கலந்து கொள்ளாததை வைத்து, அந்த அணியிலிருந்து உங்களை வெளியே அனுப்பக்கூடிய வாய்ப்பு ஏற்படுமா என்று கேட்டார்கள்.
அதற்கு நான், தேசிய முன்னணியில் அதி.மு.க.வைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருவதைப் பார்த்து நாங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தேசிய முன்னணியில் தி.மு.க. இருக்கும்போதே அதில் உள்ள சில முக்கியத் தலைவர்கள் ஜெயலலிதா வீடு தேடிச் சென்று அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்ததையும், அறிக்கைகள் விடுத்ததையும் தி.மு.க. தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகக் கருதுகிறது. 1988 முதல் ஏழாண்டு காலம் எங்களுடன் அவர்கள் நண்பர்களாக இருந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்புக்கு இலக்கணமாகவும், சமூக நீதிக் காவலராகவும் திகழுகிற நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வி.பி. சிங்கிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பு என்றைக்கும் மாறாது என்று கூறினேன். எங்களுடைய இந்த முடிவு குறித்து 2
4-7-95 தேதியிட்ட தினமணி தலையங்கத்தில் "தி.மு.க. வை தேசிய முன்னணியில் வைத்துக் கொண்டே ஜெயலலிதாவின் வீடு தேடிச்சென்று அதன் தலைவர்கள் பேச்சு நடத்தியதை, தி.மு.க. வுக்கு இழைக்கப்பட்ட அவமானமாக கருணாநிதி கருதியது நியாயமே. அதோடு, தேசிய முன்னணியுடன் தி.மு.க.வுக்கு இருந்து வந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் அறிவித்து விட்டதில் வியப்படைவதற்கில்லை. எனினும் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து விட்டாலே தமிழகத்தில் கணிசமான மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றிவிடலாம் என்ற தேசிய முன்னணி தலைவர்களின் கணிப்பு தப்புக் கணிப்பாகிவிடும்" என்று எழுதியிருந்தது.
கலைஞர் அங்கும் இங்கும் அரசியல் படுகொலைகள்! 15-8-1995 அன்று விடுதலை நாள் விழா. அதற்கு முதல்நாள் இரவு வேலூர் கோட்டை சிறப்பு முகாமிலிருந்து 43 விடுதலைப் புலிகள் சுரங்கப் பாதை வெட்டி, அதன் வழியாகத் தப்பிச் சென்று விட்டனர். அவர்களில் 8 பேர் சென்னையில் சிக்கிக் கொண்டனர். 2 பேர் சயனைடு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு முன்பு 16-11-92 அன்று 19 விடுதலைப் புலிகள் வேலூர் கோட்டை மதில் சுவரில் கயிறு கட்டி ஏறித் தப்பினர் என்பது தெரிந்ததே!
அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 7 பேர் சரணடைந்தனர். மற்றும் 7 பேர் தப்பிவிட்டனர். மற்றொருவர் தப்பிச் செல்லும் போது அடிபட்டு இறந்தார். தற்போது அந்த அறையில் குழி தோண்டி 43 விடுதலைப் புலிகள் தப்பிச் சென்றனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைத்ததைப்போல ஆந்திராவிலும் என்.டி. ராமராவ் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைக் கைப்பற்றினார். 95ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அந்தத் தெலுங்கு தேசம் கட்சி இரண்டாக உடைந்தது.
அவருடைய மருமகனும், அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவருமான சந்திரபாபு நாயுடு அவர்களே அந்தக் கட்சி பிரிவதற்குக் காரணமாக அமைந்தார். ராமராவ் அவர்கள் லட்சுமி பார்வதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரைக் கட்சி நடவடிக்கைகளிலே ஈடுபடுத்த விடக் கூடாது என்றும், அந்த அம்மையாரை ஆதரிக்கும் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இடையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. சட்டப்பேரவையில் மொத்தம் 295 உறுப்பினர்களில் 214 பேர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் 163 பேர் சந்திரபாபு நாயுடுவிற்கு ஆதரவு கொடுத்தனர். ஆளுநர் பெரும்பான்மையை 31-8-95 அன்றுக்குள் நிரூபிக்க வேண்டுமென்று ராமராவ் அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் 31ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து என்.டி.ராமராவ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 31ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் சட்டப் பேரவைமுன் மக்களைக் கூடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபு நாயுடுவை சட்டமன்றத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக அவரது ஆதரவாளர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய தீர்மானத்தைப் பரிசீலித்த சட்டமன்றப் பேரவைத் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சட்டமன்ற தெலுங்கு தேசக் கட்சித் தலைவராக அங்கீகரிப்பதாக 29ஆம் தேதியன்று அறிவித்தார்.
சந்திரபாபு நாயுடு உடனடியாக ராமராவ் உட்பட அனைத்து தெலுங்கு தேச உறுப்பினர்களும் அரசின் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்று கொறடா ஆணை பிறப்பித்தார். 30ஆம் தேதியன்று தெலுங்கு தேசக் கட்சியின் பொதுக்குழு கூடி சந்திரபாபு நாயுடுவை அந்தக் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. இதற்கிடையில் வி.பி.சிங், எஸ்.ஆர். பொம்மை, சரத்யாதவ் ஆகியோர் ஹைதராபாத் சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டும் வெற்றி பெறவில்லை.
31ஆம் தேதி காலை 9.30 மணியளவில் என்.டி. ராமராவ் அவர்களுக்குத் திடீரென்று பக்கவாதத் தாக்குதல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆளுநர் கிருஷ்ணகாந்த் மருத்துவமனைக்குச் சென்று ராமராவ் கலைஞர் அவர்களின் உடல்நலம் விசாரித்தபோது, அங்கேயே ராமராவ் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி தனது அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.
மத்திய அரசுடன் கலந்து கொண்டு ஆளுநர் கிருஷ்ணகாந்த் ராமராவ் அவர்களின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார். மாலை 4 மணிக்குக் கூடிய சட்டப் பேரவையில் ராமராவும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. பேரவைத் தலைவர் அதுவரை முதல்வராக இருந்த ராமராவ் அவர்களின் பதவி விலகலை ஆளுநர் ஏற்றுக்கொண்டு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறி அவையை ஒத்திவைத்தார். சந்திரபாபு நாயுடு அவர்களை அரசு அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததின் பேரில் 1ஆம் தேதியன்று சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார்.
ஆந்திராவில் இந்த அளவிற்கு ஒரு முதலமைச்சர் தனது பதவியை இழந்த நேரத்தில் பஞ்சாப் முதலமைச்சருக்கு இதைவிட பயங்கரக் கொடுமை ஏற்பட்டது. பஞ்சாப் அரசின் தலைமைச் செயலகம் சண்டிகர் நகரிலே உள்ளது. அங்கே அந்த மாநில முதல்வராக இருந்த பியாந்த் சிங் மாலை 5 மணி அளவில் தனது பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காகத் தனது காரிலே ஏற முற்பட்டபோது, அந்தக் காரில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் உடல் சிதறி பலியானார்.
அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு கார்களும் பலத்த சேதத்திற்கு உள்ளானது. அங்கே இருந்தவர்கள் 12 பேர் இந்தச் சம்பவத்தில் பலியானார்கள். பியாந்த் சிங் கொலை செய்யப்பட்டதை அடுத்து மாநில நலத்துறை அமைச்சர் எச்.ஆர். பிரார் தற்காலிக முதல்வராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர், பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரும் மற்ற தலைவர்களும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தனர்.
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) 1992ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, பியாந்த் சிங் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரதமர் நரசிம்மராவ் அவர்களின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். சில ஆண்டுகளாக அடங்கிக்கிடந்த தீவிரவாதிகளின் செயலாக இது இருக்குமோ என்று காவல்துறை சந்தேகப்பட்டது. 1995ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அதற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே சென்னையில் பயங்கரக் கலவரம் நடைபெற்றது.
கண்ணீர்ப் புகைக் குண்டுகள் சரமாரியாக வீசப்பட்டன. 150க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேலும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் 20 பேர் காயமடைந்தனர். காவல்துறையினர் தடியடி காரணமாகப் பிள்ளையார் சிலையைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் ஆங்காங்கு அவைகளை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். காவல் துறையினரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் சீரணி அரங்கம் அருகே தர்ணா நடத்தினர். அங்கும் கல்வீச்சும் கண்ணீர்ப்புகை வீச்சும் நடந்தன.
சிலம்புச் செல்வர் என்று அனைவராலும் பாராட்டி அழைக்கப்பட்ட சட்டமன்ற மேலவையின் தலைவராக இருந்த ம.பொ.சி. அவர்கள் சில மாதங்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருந்தவர் 3-10-95 அன்று இயற்கையடைந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாரையும் எழுத்து வடிவில் தமிழகத்திற்குத் தந்தவர் அவர்தான். விடுதலைப் போராட்ட வீரராகச் சிறைக் கோட்டங்களில் சித்திரவதையேற்று "சிப்பியேந்திய சிவஞானம்" என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்வதிலே தனி இன்பம் காண்பார்.
அந்தத் தியாக உணர்வு அவர் துவக்கத்தில் இருந்த இயக்கத்தில் மதிக்கப்படவில்லை என்ற மனவருத்தம் அவருக்கு உண்டு. அதை உணர்ந்து அண்ணா கலைஞர் அவர்கள் அவரை அணைத்துக்கொண்டதும் உண்டு. அண்ணா அவர்களின் ஆட்சியில் சென்னை ராஜ்யம் என்பதற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது ஒரு தாயின் மகிழ்ச்சியோடு கழக ஆட்சியைப் பாராட்டியவர் ம.பொ.சி. 1971ஆம் ஆண்டிற்குப் பிறகு அவரைச் சட்டமன்ற மேலவைத் துணைத்தலைவராக ஆக்கியவன் நான்தான்.
தொடர்ந்து அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அவர் மேலவைத் தலைவராகவே பொறுப்பேற்றார். ம.பொ.சி. அவர்கள் ஆரம்பக் காலத்தில் திராவிட இயக்கத்தைக் கடுமையாகச் சாடியவர். எனினும் பெரியார், அண்ணா, என் போன்றவர்களிடம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்தியவர். தமிழரசுக் கழகத்திலே முக்கிய பொறுப்பான பதவிகளை வகித்த கவிஞர் கா.மு. ஷெரீப், ஏ.பி. நாகராஜன், திருத்தணி ரஷீத், மாடர்ன் தியேட்டர்ஸ் வேணு போன்றவர்களிடம் கலையுலகத் தொடர்பு கொண்டவன் என்ற முறையில் ம.பொ.சி.
அவர்களிடமும் பழகிடும் வாய்ப்பு எனக்கு துவக்கத்தில் கிடைத்தது. ஒருமுறை மயிலாடுதுறையில் ம.பொ.சி. அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு அவருக்குச் சிறு காயம் ஏற்பட்டது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் அந்தப் பகுதியில் நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த நான் அவர் தங்கியிருந்த இடம் சென்று நலம் விசாரித்தேன். கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது தமிழைப் பயிற்று மொழி ஆக்குவதற்கான ஆணையைப் பிறப்பித்தபோது மாணவர்கள் அதை எதிர்த்துக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது ம.பொ.சி. என்னைச் சந்தித்து நிலைமையை அனுசரித்து அந்த ஆணையைச் சற்றுத் தளர்த்துமாறு வலியுறுத்தியதன் காரணமாகத்தான் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவரும் மேலவை உறுப்பினராக இருந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் என்னை அடிக்கடி சந்தித்து அறநிலையத்துறை, ஆலயங்களின் சீரமைப்பு, தமிழ் மொழியின் ஆக்கம் போன்றவைகளில் பல அறிவுரைகளை நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வழங்கியிருக்கிறார்கள்.
அவரது மறைவு என்னைப் பெரிதும் வருந்தச் செய்தது. அவரது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். அதே அக்டோபர் திங்கள் 7, 8 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் "சமுதாய விழிப்புணர்ச்சி மாநாடு", "அரசியல் விழிப்புணர்ச்சி மாநாடு" ஆகியவை டாக்டர் ராமதாஸ் அவர்கள் தலைமையில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. ஏ.கோவிந்தசாமி அரங்கில், திருக்குறள் முனுசாமி பந்தலில் நடைபெற்ற அந்த மாநாட்டில் இரண்டாவது நாளில் நான் கலந்து கொண்டேன்.
பேராசிரியர் தீரன் தலைமையில் அந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அலங்கரிக்கப்பட்ட தனியானதொரு நாற்காலியில் என்னை அமரவைத்து மிகச் சிறப்பானதொரு உரையினை ஆற்றினார். அவரது பாராட்டுரையின் சில பகுதிகள் மட்டும் இதோ:- "இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். 1989இல் கலைஞர் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாக இடஒதுக்கீடு பிரச்சினையைத் தீர்க்க பெருமுயற்சி எடுத்தார்.
அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தை அனுப்பி என்னை அவரது இல்லத்திற்கு அழைத்து வரச் சொன்னார். அதன்படி நாங்கள் கலைஞர் இல்லத்திற்குச் சென்று இட ஒதுக்கீடு பிரச்சினை பற்றிப்பேசினோம். அப்போது எங்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டேன். மற்றவர்கள் ஏதாவது நினைத்துக்கொள்வார்கள், வேறு சில சாதிகளையும் சேர்த்துச் சொல்லுங்கள் என்றார். நான் சில சாதிகளைச் சேர்த்து வைத்திருந்த பட்டியலை அவரிடம் கொடுத்தேன்.
அதன்பிறகு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு என்று ஒரு பிரிவை உருவாக்கி, அதில் 107 பிரிவுகளைச் சேர்த்து ஆணை பிறப்பித்தார். நான் இந்தக் கனியைக் கொடுக்கிறேன். இதனைச் சாப்பிட்டுப் பாருங்கள். வன்னியர்க்கு மருத்துவம், கலைஞர் பொறியியல் படிப்புகளில் முன்பு எவ்வளவு இடங்கள் கிடைத்தது, இப்போது எவ்வளவு கிடைக்கிறது என்று பாருங்கள் என்றார். உண்மைதான். ஆனால் கலைஞர் ஆட்சி இரண்டு ஆண்டுகளில் கலைக்கப்பட்டது.
நாங்கள் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடியபோது சட்டத்தில் இடமில்லை என்று சொன்னவர்களுக்குச் சாட்டையடி கொடுப்பது மாதிரி, சட்டத்தில் இடமிருக்கிறது, இதற்கு ஒரு ஆணை பிறப்பித்தாலே போதும் என்று கூறி அந்த ஆணையைப் பிறப்பித்த அந்தத் துணிச்சல், அந்தப் பக்குவம், அந்த மனப்பாங்கு கலைஞருக்குத் தான் வந்தது, வேறு யாருக்கும் வரவில்லை. எனவே இந்த இட ஒதுக்கீட்டை, பெருந்தன்மையோடு இந்தச் சமுதாயத்தை மதித்து அந்த ஆணையை வெளியிட்ட கலைஞர் அவர்களே, உங்களுக்கு இந்தச் சமுதாயம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
அந்த நன்றியைச் சொல்வதற்காகத்தான் நாங்கள் உங்களை இங்கே அழைத்திருக்கிறோம்." 95ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் உள்ளாட்சி மன்றங்களின் தேர்தலை நடத்தப் போவதாக மாநில அரசு அறிவித்தது. அத்துடன் இணைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்தலையும் நடத்தவேண்டுமென்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்தன. தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலும், தொகுதிகள் பிரிக்கப்பட்டதில் ஏராளமான தவறுகள் நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டு அவைகள் ஏடுகளின் மூலம் எதிர்க்கட்சியினரால் எடுத்துக் காட்டப்பட்டது.
பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லாத தொகுதி, பழங்குடி வகுப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதுபோல் ஏராளமான தவறுகள். எனவே அறிவித்தவாறு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) 1995ஆம் ஆண்டு நவம்பர் 3ந் தேதியன்று இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சுமார் ஒரு இலட்சம் பேர் கலந்துகொண்ட அந்தப் பேரணியில் கலந்து கொண்டுவிட்டு அந்த நாட்டின் பிரதமர் இட்ஸ்ஹாக் ரபின் இல்லம் திரும்புவதற்காகக் காரில் ஏற முற்பட்டார்.
அப்போது ஒரு கொலையாளி அவரை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டதில், துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள் அவருடைய முதுகிலும் வயிற்றிலும் பாய்ந்தன. ஆபத்தான நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குப்பின் ரபின் உயிரிழந்து விட்டார். பிரதமர் ரபினைச் சுட்டுக்கொன்ற கொலையாளியைப் போலீசார் உடனே கைது செய்தனர்.
வலதுசாரி தீவிர அமைப்பைச் சேர்ந்த அந்தக் கொலையாளியின் பெயர் அமீர் என்றும் சட்டக் கல்லூரி மாணவன் என்றும் தெரியவந்தது. 1922ஆம் ஆண்டு ஜெருசலம் நகரில் பிறந்த ரபின் படிப்படியாக உழைத்து முன்னேறியவர். தனது 18வது வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றத் துவங்கினார். 1948ஆம் ஆண்டு நடந்த சுதந்திரப் போரில் பங்கேற்று ராணுவ கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். அரசியலில் பிறகு தீவிரமாக இறங்கி 1992ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பங்கேற்று தொழிலாளர் கட்ச
ியை வெற்றி பெறச் செய்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமராக ஆனார். பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல்- பி.எல்.ஓ. அமைதி ஒப்பந்தத்துக்கு வழி வகுத்தார் ரபின். இதற்காக யாசர் அராபத்துக்கும் ரபினுக்கும் 1994ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த மாபாதகத்தைப் புரிந்தவன் யூத சமய சாத்திரங்களில் ஆழ்ந்த பிடிப்புடையவன். பாலஸ்தீனத்தோடு ரபின் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையை இஸ்ரேலில் உள்ள வைதீக வலதுசாரிக் குழுவினர் துவக்கத்திலிருந்தே எதிர்த்து கலைஞர் வருகிறார்கள்.
சட்டம் பயின்று வரும் மாணவன் வலதுசாரி சித்தாந்தத்துக்கு மனத்தை அடிமையாக்கியதால், சமய நெறிக்கும் சட்டத்துக்கும் புறம்பான இந்தக் கொடுமையைச் செய்துவிட்டான். ரபினின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) திருச்சியில் தி.மு.க. 8வது மாநில மாநாடு! ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் என்பதை மனதிலே கொண்டு கழகத்தின் 8வது மாநில மாநாட்டினை திருச்சியிலே ஜனவரி 96இல் நடத்துவது என்று கழகத்தின் நிர்வாகக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
திருச்சியின் வரலாற்றில் அவ்வளவு பெரும் பரப்பளவு கொண்ட ஓர் இடத்தில் அதுவரையில் எந்த மாநாடும் நடைபெற்றதில்லை. நான்கரை லட்சம் சதுர அடி கொண்ட பந்தல் - பந்தலைச் சுற்றியுள்ள அண்ணா நகர் வளாகம் மேலும் நான்கரை லட்சம் சதுர அடி பரப்பளவு. கடலென பரந்து கிடக்கும் அந்த இடத்தை அரும்பாடுபட்டுத் தேர்வு செய்து அந்தக் கொட்டப்பட்டில் வாழுகின்ற பெருமக்களின் ஒப்புதலோடு அங்கே மாநில மாநாட்டுக்கான அண்ணா நகரையும், அன்பில் பந்தலையும் வரவேற்புக் குழுத் தலைவர் நேரு ஏற்பாடு செய்திருந்தார்.
நேருவுடன் இணைந்து நிதிக் குழுத் தலைவர் பால கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அரியலூர் ஆறுமுகம், மாயவன், வரவேற்புக் குழு செயலாளர்கள் கோ.சி. மணி, பெரியண்ணன், செல்வேந்திரன், பரமத்தி சண்முகம், சிவசுப்பிரமணியம், அம்பலவாணன், துணைச் செயலாளர்கள் கே.கே.எம். தங்கராசு, நாகவேணி வேலு, ரெங்கய்யன், சுப.ராசகோபால், ஏ.சிவராமன், பா.செழியன், டாக்டர் தேவராசன், மெகன், மகராசன் மற்றும் ஒவ்வொரு குழுவிற்கும் பொறுப்பேற்றிருந்த உடன்பிறப்புகள் எல்லாம் பம்பரமெனப் பணியாற்றினார்கள்.
கலைஞர் தீர்மானக் குழுவுக்கு செயலாளர் சிவா என்றபோதிலும், அவரும், ஊர்வலக் குழு செயலாளர் அன்பில் பொய்யா மொழியும், இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலினுடன் இணைந்து தென்னரசு பெயரால் அமைந்த தியாகிகள் மண்டபப் பணிகளிலும், திருச்சி ஏ.வி.கே. பெயரால் அமைந்த திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சிக் கூடப் பணிகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தனர். எஸ்.ஏ.ஜி. ராபி தலைமையில் பந்தல் குழுவினரும், ஆதிமூலம், நாகசுந்தரம் மேற்பார்வையில் உபசரிப்புக் குழுவினரும், மதிவாணன் தலைமையில் தொண்டர் அணியினரும், ராஜாமணி ரங்கராசன் தலைமையில் மகளிர் தொண்டர் அணியினரும், அரங்கராசன் மேற்பார்வையில் நகர் அலங்காரக் குழுவினரும், உபயதுல்லா, அஞ்சுகா மீனாட்சிசுந்தரம் மேற்பார்வையில் விளம்பரக் குழுவினரும், செங்குறிச்சி கருப்பையா தலைமையில் அலுவலகக் குழுவினரும், அவர்களோடு இணைந்து அனைத்துக் குழு உறுப்பினர்களும் அரும்பாடுபட்டு அந்த மாநாட்டினை வெற்றி மாநாடாக ஆக்கித் தந்தனர்.
மாநாட்டின் துவக்கமாக 26-1-1996 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், பொதுத் தேர்தலில் முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் உடன்பாடு கண்டு தி.மு.க. தோழமைக் கட்சிகளின் அணியை உருவாக்கி ஊழல் ஆட்சிகளை வீழ்த்தி நல்லாட்சி அமைத்திடும் முயற்சிகளில் கழகம் ஈடுபடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 26ஆம் தேதி மாலையில் தொடங்கிய பேரணியில் 25 இலட்சம் பேர் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்கிய பேரணி சனிக்கிழமை காலை 7.30 மணி வரை வந்து கொண்டே இருந்தது.
14 மணி நேரம் நான் மேடையிலே இருந்தவாறு தொடர்ந்து அந்த ஊர்வலத்தை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். காலை 7.30 மணி அளவிலும் ஊர்வலம் வந்து கொண்டு தானிருந்தது. "திருச்சி நகரத்தின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து விட்டது, ஒளிமிகுந்த கருப்பு சிவப்பு உடையணிந்து தி.மு.கழகக் கொடிகளை ஏந்திய ஆயிரக்கணக்கான ஆண்களாலும் பெண்களாலும் அனைத்துச் சாலைகளும் நிரம்பி நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வழிந்தன" என்று 27-1-96 தேதிய "இந்து" இதழே எழுதியிருந்தது.
விடிய விடிய ஊர்வலம் என்று தினத்தந்தியும், எங்கு பார்த்தாலும் தலைகள், கொடிகள் என்று தினமணியும், தி.மு.க.வின் பலத்தை நிரூபிக்கும் வகையில் பேரணி என்று கதிரவனும், திருச்சி முற்றுகையிடப்பட்டதாக மாலை முரசும், காலையிலும் பேரணி தொடர்ந்ததாக யு.என்.ஐ. நிறுவனமும் ஊர்வலத்தை விமர்சித்திருந்தன. மாநாட்டின் இரண்டாவதுநாள் நிகழ்ச்சி காலை 9 மணியளவில் திருச்சி கொட்டப்பட்டு அண்ணா நகரில், மன்னை நாராயணசாமி முகப்புடன் கூடிய அன்பில் தர்மலிங்கம் பந்தலில், சாதிக்பாட்சா அரங்கத்தில் தொடங்கியது.
கொள்கை பரப்புச் செயலாளர் டி.ராஜேந்தர் இசையமைத்த 'கொள்கை கீதம்' ஒலிநாடாவை நான் வெளியிட, முதல் ஒலி நாடாவை டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார். வரவேற்புக் குழுத் தலைவர் கே.என். நேரு வரவேற்புரை ஆற்றினார். முதல்நாளன்று இரவு கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றினார். இறுதி நிகழ்ச்சியாக போலீஸ் கண்ணன் நடத்திய 'மீண்டும் உதயம்' நாடகம் நடைபெற்றது. மாநாட்டின் மூன்றாவது நாள் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியமாகத் தமிழையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக உடனடியாக ஆக்கிட வேண்டுமென்ற தீர்மானத்தை முரசொலி மாறன் முன்மொழிந்தும், பேராசிரியர் அவர்கள் வழிமொழிந்தும் உரையாற்றினார்கள். மாநாட்டை நடத்திய கழகத்தைப் பற்றி அப்போது வெளி வந்த இந்தியா டுடே-திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்னொரு பெயர் ஃபீனிக்ஸ் பறவை. இடையில் இரண்டு ஆண்டுகள் போக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அரியணையையே பார்க்காத கட்சி. இரண்டு முறை பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கட்சி.
இரண்டு பிளவுகளைச் சந்தித்த கட்சி. வேறொரு கட்சியாக இருந்திருந்தால் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் தி.மு.க. இதில் இருந்தெல்லாம் மீண்டு எழுந்து தமிழக அரசியல் அரங்கில் அசைக்க முடியாத கட்சியாகவே இருந்து வருகிறது. திருச்சி கலைஞர் மாநாடு இதைத்தான் உணர்த்தியது. இந்தக் கூட்டம் திருச்சி இதுவரையிலும் கண்டிராத ஒன்று என்று போலீஸ் அதிகாரிகள் கூட ஒப்புக் கொள்கிறார்கள்- என்று எழுதியிருந்தது.
இது போலவே பல ஆங்கில இதழ்கள் கழக மாநாட்டின் சிறப்பினை வர்ணித்து எழுதியிருந்தன. ஜனவரி திங்கள் இறுதியிலே தி.மு.கழக மாநாடு இவ்வாறு நடைபெற்றது என்றால் பிப்ரவரி 8ஆம் தேதியன்று அ.தி.மு.க. அதே திருச்சியில் மாநாட்டினை நடத்தியது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அத்தனை அமைச்சர்களும் இரவு பகலாக உழைத்து கழக மாநாட்டினை வென்று காட்டிட வேண்டுமென்ற எண்ணத்தோடு பணத்தை அள்ளிக் கொட்டி ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால் இந்த இரண்டு மாநாடுகளையும் ஒப்பிட்டு மாலைமுரசு எழுதியது.
"தி.மு.க.வின் இந்த எழுச்சிப் பேரணியை முறியடிக்க ஜெயலலிதா திட்டம் தீட்டினார். திருச்சியில் நடந்த தி.மு.க. பேரணியை விட அ.தி.மு.க. பேரணியைப் பிரமாண்டமாக நடத்த அமைச்சர்கள், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களிடம் அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பேரணி புறப்பட்டபோது எழுச்சியுடன் புறப்பட்டது. அதாவது பேரணியின் முன்பகுதி மட்டுமே எழுச்சியோடு இருந்தது. பின்பகுதியில் எழுச்சி இல்லை. பேரணியில் வந்த அணியினர் தி.மு.க.வினர் போல சாரைசாரையாக சாலையை அடைத்துக் கொண்டு செல்லாமல் நான்கு நான்கு பேராகச் சென்றனர்.
தி.மு.க. பேரணி இடைவெளி இல்லாமல் சென்றது. ஆனால் அ.தி.மு.க. பேரணி நீண்ட இடைவெளி விட்டுச் சென்றது. 72 வயது கருணாநிதி மாநாட்டிற்கு 7 தடவை வந்து இருக்கிறார். உடன்பிறப்புகளுக்கு மாநாட்டு அழைப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். எனவே தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது. ஆனால் புரட்சித் தலைவி மாநாட்டுப் பக்கமே தலையைக் காட்டவில்லை. மாநாட்டு ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) என்று பார்க்க ஒருநாள் கூட மாநாட்டுப் பந்தலுக்கு வரவே இல்லை இப்படியிருக்கும்போது தொண்டர்கள் மத்தியில் எப்படி எழுச்சி ஏற்பட முடியும் என்று அ.தி.மு.க.வினர் கேள்விக்கணை எழுப்பியதைக் கேட்க முடிந்தது.
தி.மு.க. பேரணியைப்போல் அ.தி.மு.க. பேரணி எழுச்சிமயமாக இருந்தது என்று ஜெயலலிதாவினால் கூற முடியாது. பேரணியின் எழுச்சிக் கணக்கைப் பார்த்தால் கருணாநிதிக்கு வெற்றி. இதுதான் திருச்சி நகர மக்களின் பொதுவான கணிப்பு." இவ்வாறு மாலைமுரசு எழுதியது. சுதேசமித்திரன் இதழோ, "ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பு கட்சியும் ஆட்சியும் கலந்துவிட்டன. முதலமைச்சருக்கே கட்சிக்கும் ஆட்சிக்கும் வித்தியாசம் காண முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திருச்சி மாநாட்டுப் பேச்சில் கண்ணியம், பெருந்தன்மை தேடப்பட வேண்டியதாக ஆகிவிட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியை ஜெயலலிதா விமர்சித்துள்ள பாங்கு முதலமைச்சரின் ஆத்திரத்தையும் தாளாமையையும் எடுத்துக் காட்டுகிறது" என்று எழுதியது.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழ், "தி.மு. கழகத்தினர் நடத்திய பேரணிக்கு வந்த கூட்டம் தானாக வந்த கூட்டம், அதனால் அது எழுச்சிமயமாகத் திகழ்ந்தது. ஆனால் அ.தி.மு.க. நடத்திய ஊர்வலம் அப்படி இல்லை" என்று எழுதியிருந்தது. பொதுத்தேர்தல் அறிவிப்பு எந்த நிலையிலும் வரலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் பிப்ரவரி திங்கள் இறுதியில் "இந்து" இதழ் 'சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ்' எடுத்த கருத்துக்கணிப்பை வெளியிட்டது.
அதிலே, தமிழ்நாட்டிலே அ.தி.மு.க. எதிர்ப்பு அலை பலமாக வீசுகிறது என்றும், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டியிட்டால் கூட 34 சதவிகித வாக்குகளையும் 130 இடங்களையும் பெற்று தி.மு.கழகமே ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் எழுதியது. அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிடும்படி வாக்காளர்களிடம் கேட்ட கேள்விக்குப் பெரும்பாலான வாக்காளர்கள் கழகத்தின் ஆட்சியே கலைஞர் சிறந்தது என்று பதிலளித்ததாகவும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறியது.
தேர்தலில் அணிகள் எவ்வாறு அமையும் என்பதைப் பற்றி ஏடுகள் எல்லாம் தங்கள் அபிப்பிராயத்திற்கு ஏற்றவாறு செய்திகளை வெளியிட்டன. இந்தக் காலகட்டத்தில் உமா சங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுரையிலிருந்து திருச்சிக்கும், பின் திருச்சியிலிருந்து வேறு இடத்திற்கும் திடீர் திடீரென மாற்றப்பட்டார். அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு இவர் ஒத்துழைக்க மறுத்த காரணத்தினால்தான் இவ்வாறு பந்தாடப்படுகிறார் என்று ஏடுகள் எழுதின.
பத்திரிகைகளில் வந்த இந்தச் செய்திகளின் அடிப்படையில் திருச்சியைச் சேர்ந்த கோபாலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதத்தில் உமாசங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளையெல்லாம் தெரிவித்து அதனையே தனது ரிட் மனுவாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும் அதை ரிட் மனுவாக ஏற்றுக் கொண்டு அதுகுறித்து விசாரிக்க நீதிபதிகள் அருணாசலம், ஜெயராம் சவுதா ஆகியோரைக் கொண்ட ஒரு பெஞ்ச் அமைத்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரை நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர் தாக்கல் செய்த மனுவில், "ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி மதுரை மாவட்டத்தில் பணிகளை ஆளுங்கட்சியினருக்குத்தான் வழங்க வேண்டுமென்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகவும், சேலத்திலே உள்ள நான்கு கூட்டுறவு சொசைட்டிகளுக்கே ஒப்பந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டுமென்று அரசாங்கம் ஒரு ஆணை பிறப்பித்ததாகவும், ஆதிதிராவிட மக்களுக்கான சுடுகாடுகளில் தகரக் கொட்டகைகள் அமைக்கும் பணியை ஆளுங்கட்சியினருக்குத்தான் அளிக்க வேண்டுமென்று நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரே தன்னை வற்புறுத்தினார் என்றும், தான் அதற்கு மறுத்தபோது, மதுரை கலெக்டர் எல்லா மாவட்டங்களிலும் தரப்படுவதுபோல ஆளுங்கட்சியினருக்குத்தான் ஒப்பந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டுமென்று தன்னை நிர்ப்பந்தம் செய்ததாகவும், அதை மறுத்துதான் கோப்புகளில் குறிப்பு எழுதியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் குறிப்பையும் மீறி சுடுகாடுகளில் தகரக் கொட்டகைகள் அமைக்கும் பணி சிலருக்குக் கொடுக்கப்பட்டது என்றும், அந்தப் பணிகளுக்கான முழுத்தொகையும் முன்கூட்டியே வழங்கப்பட்டு விட்டதென்றும், அந்தப் பணிகளைத்தான் சோதனையிட்டபோது, பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என்பதைக் கண்டுபிடித்து அதையும் கோப்புகளிலே எழுதியதாகவும், அதன் காரணமாகத்தான் மதுரையிலிருந்து தான் மாற்றப்பட்டதாகவும் இந்த அதிகாரி எழுதியதோடு, பிறகு திருச்சியில் அவர் பணியாற்றியபோது அரசுக்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் ஓட்டல் ஒன்றுக்கு அளிக்கும்படி தனக்குச் சொல்லப்பட்டதாகவும், அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்த காரணத்தினால் மீண்டும் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டதாகவும் வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
ஜெயலலிதா அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், எந்தத் தவறும் நடக்கவில்லை என்றும், மாற்றப்பட்ட காரணத்தினால் அதிகாரி இட்டுக்கட்டிக் கூறுவதாகவும் வாதிட்டார். ஆனால் நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்க மறுத்து தீர்ப்பு அளித்தபோது, ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளன என்று நீதிமன்றம் கருதுகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்டங்களில் பெருத்த ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகவே தெரிகிறது.
இதில் வாங்கப்பட்ட பணமெல்லாம் எங்கே போய்ச் சேர்ந்திருக்கும் என்று தேடி அலைய வேண்டியதில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறிய வேண்டுமென்று உத்தரவிடுகிறது. கலைஞர் அத்துடன் இந்தப் பெரும் ஊழலுக்குக் காரணமான அரசின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்குகள் தொடர வேண்டுமென்றும் சி.பி.ஐ.க்கு உத்தரவிடுகிறது என்றும் தெரிவித்திருந்தது.
தி.மு.கழக அரசு ஆட்சியிலே இருந்தபோதுதான் ஜெயலலிதா மீதும், அவரது அமைச்சர்கள் மீதும் பழிவாங்கும் மனப்பான்மையோடு வழக்குகளைத் தொடுத்தது என்று இப்போதும் கூறுகிறார்களே, சுடுகாடு கொட்டகை ஊழல் வழக்கு என்பது அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதே இந்த வழக்கு நடைபெற்று, அப்ப
ோது சென்னை உயர்நீதிமன்றத்திலே இருந்த இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்புதான் இது. இது ஒன்று மாத்திரமல்ல. இன்னும் எத்தனையோ வழக்குகள் அ.தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதே பல தீர்ப்புகள் ஜெயலலிதாவிற்கு எதிராக அப்போது நீதிபதிகளால் வழங்கப்பட்டன என்பதுதான் உண்மை. இந்தச் சுடுகாடு கொட்டகை ஊழலைப் போலவே தான் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், பள்ளிச் சிறார்க்குச் சீருடை வழங்கும் திட்டம் ஆகியவற்றில் மட்டும் 35 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று வருமான வரித்துறையினரே கண்டுபிடித்து, இந்தத் துணிமணிகளை 14 நிறுவனங்களிடமிருந்து வாங்கியதாகக் கணக்கு எழுதப்பட்டிருந்ததின் அடிப்படையிலே வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த 14 நிறுவனங்களைத் தேடிச் சென்றபோது, அப்படிப்பட்ட நிறுவனங்களே இல்லை என்பதைக் கண்டுபிடித்து, ஆதாரபூர்வமான ஆவணங்களோடு செய்திகளை வெளியிட்டார்கள்.
நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கலையுலகம் நடத்திய பொன்விழா! 19-3-1996 அன்று மத்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைக்கும், தமிழ்நாடு, புதுவை உட்பட ஆறு சட்டப் பேரவைகளுக்கும் நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுமென்ற அறிவிப்பு வெளிவந்தது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 27 மற்றும் மே 2 ஆகிய இரண்டு நாட்களிலும், புதுவையில் ஏப்ரல் 27ஆம் தேதியும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஏக காலத்தில் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.
மார்ச் 27ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், ஏப்ரல் 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 26 முதல் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களையெல்லாம் நேர்காணல் செய்யப்படும் என்று கழகத்தின் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டது. 24-3-96 தேதிய இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறுவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்றும், காங்கிரஸ் கூட்டு இல்லை என்றாலும் தி.மு.கழகம்தான் வெற்றிபெறும் என்றும் எழுதியது.
பம்பாயிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழும் ஜெயலலிதா எதிர்ப்பு உணர்வு தமிழகத்தில் வேரூன்றிவிட்டது என்றும், அ.தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி தி.மு.கழகம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் எழுதியது. கலைஞர் கழகம் அறிவித்தவாறே மார்ச் 26ஆம் தேதி முதல் கழக வேட்பாளர்களை நேர்காணல் பணி கழக அலுவலகத்தில் தொடங்கியது. நானும், பேராசிரியர், நாஞ்சிலார், ஆர்க்காடு வீராசாமி, முரசொலிமாறன் ஆகியோர் அன்றாடம் நூற்றுக்கணக்கான கழகத்தினரைச் சந்தித்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியிலே ஈடுபட்டோம்.
தேர்தல் சூடு அதிகமாகிக் கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில் 21-3-1996 அன்று ஐ.ஆர்.எஸ். பி-3 தொலை உணர்வு செயற்கைக்கோளைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது 90 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டதாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அந்த வெற்றி ஒரு மகத்தான சாதனை என்று அப்போது பாராட்டப்பட்டது. உலகம் முழுவதையும் ஐந்து நாட்களில் படம் எடுத்து பூமிக்கு அனுப்பும் திறன் கொண்ட சாதனங்கள் அந்தச் செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருந்தது.
அன்றைய தினம் அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட பத்தாவது செயற்கைக்கோளாகும். அ.தி.மு.க.வோடு கூட்டுச் சேருவது பற்றி இந்திரா காங்கிரஸ் கட்சியிலே கருத்து வேறுபாடு பெரிய அளவிற்கு இருந்தது. அந்தக் கட்சியிலே உள்ள பெரும்பாலோர் தி.மு.கழகத்தோடுதான் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தனர். செய்தியாளர்கள் அதைப்பற்றி என்னிடம் கேட்டபோது, காங்கிரஸ் பேசினால் நாங்கள் பேசுவோம் என்ற அளவிற்குச் சொல்லியிருந்தேன்.
தி.மு.கழகத்துடன் பேசுவதற்காக நரசிம்மராவ் அவர்களிடமிருந்த அவரின் நம்பிக்கைக்குரிய தூதுவர் சென்னை வருவதாக தலைப்புச் செய்திகள் கூட தினமணி போன்ற இதழ்களில் வெளிவந்தது. ஆனால் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் இந்திரா காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் தான் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். அது நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஒன்றும் அதிசயமல்ல; இயற்கையான சமுதாயப்பற்று!
பார்ப்பனீய சாம்ராஜ்யத்தைச் சரியவிடாமல் பாதுகாப்பதில் அவருக்கு அவ்வளவு அக்கறை! 25-3-1996 அன்று ஏடுகளில் வெளிவந்த செய்தியில் அ.தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மீண்டும் கூட்டணி என்று முடிவாகி விட்டதாகவும், அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவிற்கு வேண்டிய நண்பர் ஒருவர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கூட்டணி உருவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கூட்டணி ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து மூப்பனார் தலைமையிலே ஒரு அணியினர் சென்னையிலே தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்கள்.
பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வோடுதான் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து அந்த முடிவினை 25-3-1996 அன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், சென்னையில் அ.தி.மு.க. சார்பிலும் அறிவித்தார்கள். புதுவை உட்பட மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் 30 இடங்களிலும், அ.தி.மு.க.10 இடங்களிலும் என்று பங்கிட்டுக் கொண்டதோடு சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.168 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்கள்.
இந்த முடிவுகளோடு அப்போது காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த குமரி அனந்தனும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் சென்னைக்கு வந்தபோது, காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெரும் கலவரம் மூண்டது. நரசிம்மராவ் அவர்களின் கட்அவுட்டுகளைக் காங்கிரஸ் தொண்டர்கள் அந்தக் கட்சியின் அலுவலக வாசலிலேயே செருப்புகளாலும், கைகளில் வைத்திருந்த கட்டைகளாலும் அடித்து உடைத்து எரித்தனர்.
சத்தியமூர்த்தி வளாகத்தில் பறந்து கொண்டிருந்த கட்சிக் கொடியை கீழே இறக்கி கறுப்புக் கொடியை அங்கே சிலர் ஏற்றினர். மகளிர் காங்கிரசைச் கலைஞர் சேர்ந்தவர்கள் நரசிம்ம ராவ் கட்அவுட்டுகள் எரிக்கப்பட்டபோது ஒப்பாரி வைத்து ஏளனம் செய்தனர். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்த அறிக்கையில்- "நான் வெளிநாட்டில் இருக்கிறேனே தவிர, என்னுடைய உயிர்மூச்சு, உணர்வு, எண்ணம் எல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
சகோதரி ஜெயலலிதாவுக்கு ஒரு முன் எச்சரிக்கை. தமிழக மக்களுக்கு நீங்கள் நல்லது செய்து அவர்களை வாழவைத்து அவர்களுடைய அன்பையும், ஆதரவையும், நன்மதிப்பையும் சம்பாதிப்பீர்கள் என்று நம்பினேன். தமிழக மக்களும் நம்பினார்கள். அதற்காக உங்களுக்கு அரசு பதவியும் கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் சுயநலத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து பணத்தைச் சம்பாதித்தீர்கள். அந்தப் பணத்தை வைத்து டெல்லியையே வாங்கி விட்டீர்கள்.
அந்தப் பணத்தைக் கொடுத்து வாழும் தெய்வங்களான தமிழக மக்களையும் தமிழ்நாட்டையும் வாங்க முடியுமென்று கனவிலும் நினைக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணியைப் பற்றி ஏடுகள் எல்லாம் தாக்கி எழுதியிருந்தன. ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நரசிம்ம ராவ் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக கூட்டணி வைத்துக் கொண்டதாக தினமணி கடுமையாக எழுதியிருந்தது.
செய்தியாளர்கள் என்னை அணுகி மூப்பனார் தலைமையிலே உள்ள காங்கிரசார் பிரிந்து எங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டபோது, அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்வோம், அவர்களது ஆதரவைத் தட்டிக் கழிக்கும் அளவிற்கு அரசியல் புரியாதவர்கள் அல்ல நாங்கள் என்று கூறினேன். அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் நாள் இரவு வேகமாகப் பேசிய தமிழ்நாடு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) காங்கிரஸ் தலைவர் மறுநாள் அந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து விட்டார்.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து மூப்பனாரிடம் ஒரு முடிவினை எடுத்து அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். அதன் காரணமாக மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற பெயரிலே புதிய கட்சியை உருவாக்கிக் கொண்டு, 31-3-1996 அன்று அண்ணா அறிவாலயத்திற்கு மூப்பனாரும் அவரது தோழர்களும் நேரில் வந்து எங்களுடன் அமர்ந்து பேசி உடன்பாடு கண்டனர். மத்திய அமைச்சரவையிலே இருந்த ப.சிதம்பரம், அருணாசலம் போன்றவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகி த.மா.கா.விலே இணைந்தனர்.
அந்தக் கட்சிக்கு கழக அணியில் 40 சட்டப்பேரவை இடங்களும், 20 நாடாளுமன்ற இடங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. த.மா.கா.விற்கு தி.மு.க. கூட்டணியுடன் உடன்பாடு வரவேண்டுமென்பதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக் கொண்டதோடு, அதற்கு ஒப்புக் கொண்ட எனக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு; நடைபெற்று வந்த ஜெயலலிதாவின் ஆடம்பர அராஜக ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அதைப்போலவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 11 சட்டப் பேரவை இடங்களிலும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதென்றும் உடன்பாடு காணப்பட்டது. இந்திய தேசிய லீக் 5 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இரண்டு இடங்களில் போட்டியிடவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவும் சசிகலாவும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் 17 தொகுதிகளிலும், த.மா.கா.20 தொகுதிகளிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளிலும் கழக முற்போக்கு அணியின் சார்பில் போட்டியிட்டன. சட்டப்பேரவையைப் பொறுத்த- கலைஞர் வரை தி.மு.கழகம் 176 இடங்களிலும், த.மா.கா. 40 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய தேசிய லீக் 5 இடங்களிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் 2 இடங்களிலும் முற்போக்கு அணியின் சார்பிலே போட்டியிட்டன.
31ஆம் தேதியன்று இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட நாளன்றே நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலுக்கான கழகத் தேர்தல் அறிக்கையினையும் நான் வெளியிட்டேன். சிந்தாதிரிப்பேட்டை தொகுதியிலே அன்றைய தினம் மாலையில் நடைபெற்ற மாநாடு போன்ற பொதுக்கூட்டத்தில் கழக வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டு உரையாற்றினேன். புதுவை மாநிலத்திலும் வேட்பாளர்கள் தோழமைக் கட்சிகளோடு பேசி சுமுகமான முறையிலே அறிவிக்கப்பட்டது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நேரில் என்னை வந்து சந்தித்து அந்தத் தேர்தலில் கழகத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்து அவ்வாறே பிரச்சாரம் செய்தார்.
அந்தத் தேர்தலில் கழகத்தின் சார்பில் பூங்கா நகர் தொகுதியிலே போட்டியிட்ட டி.இராஜேந்தர் அவர்களும், திருமதி ராதிகா அவர்களும், கழகத்தின்பால் பற்று கொண்டுள்ள நடிகர் சந்திரசேகர் போன்ற மற்ற கலைஞர்களும் ஆர்வத்தோடு தேர்தல் பிரச்சாரப் பணிகளிலே ஈடுபட்டனர். திராவிட முன்னேற்றக் கழக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழா 7-4-96 அன்று தியாகராயநகர், பனகல் பூங்கா அருகில் தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் சைதை கிட்டு தலைமையில் தென் சென்னை த.மா.கா.
தலைவர் எஸ். நாராயணன் முன்னிலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நானும், மூப்பனார், ஆர்.நல்லக்கண்ணு, எம்.ஏ.லத்தீப், அய்யணன் அம்பலம், ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், வை.பாலசுந்தரம் ஆகியோரும் உரையாற்றினோம். ஜெ.அன்பழகன் நன்றி கூறினார். அணியின் வெற்றிக்கு அந்த முதற் கூட்டமே சான்று பகருவதைப் போல மக்கள் கூடியிருந்தனர். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கலையுலகச் செல்வர்கள் இணைந்து நின்று எனக்கு கலையுலகப் பொன்விழாவினை 14-4-1996 அன்று சென்னையில் கொண்டாடப் போவதாக அறிவித்தார்கள்.
கலையுலகத்தினர் நடத்தும் விழா குறித்து விழாக் குழுத் தலைவர் தம்பி விஜயகாந்த் 7-4-96 அன்று அதைப்பற்றி செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது விஜயகாந்த் கூறியதாவது:- "கலைஞர் தமிழ்த் திரை உலகிற்கு செய்துள்ள சேவை அளவிட முடியாதது. அவர் எழுதிய சிறப்புமிக்க வசனங்கள் காலத்தால் அழியாதவை. அவர் பணியாற்றிய பல படங்கள் எதிர்கால கலைஞர்களுக்குப் பாடங்களாக அமைந்தன. பராசக்தி படத்திலும், மனோகரா படத்திலும் கலைஞர் எழுதிய வசனங்கள் மிகப் புகழ்பெற்றவை.
பட்டி தொட்டியெல்லாம் மணம் வீசியவை. எங்களைப் போன்ற நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமா சான்ஸ் கேட்டு அலைந்தபோது படக்கம்பெனிகளில் இவருக்குச் சரியாக வசனம் பேச வருமா என்று சோதிக்க கலைஞர் எழுதிய மனோகரா, பராசக்தி வசனங்களைத்தான் பேசச் சொல்வார்கள். அந்த அளவிற்கு கலைஉலக ஆசானாக விளங்கி கொடிகட்டிப் பறந்தவர் கலைஞர். அவருடைய வயது அனுபவத்தைப் பார்த்தால் கலை உலகத்தினர் நடத்துகிற இந்தப் பாராட்டுவிழா இன்னும் மிகப் பொருத்தமானதாகும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் தந்தைக்கு மகன் செய்யும் கடமையைப் போன்றது இவ்விழா. இந்த விழாவில் அரசியல் கலப்பு சிறிதும் கிடையாது. தேர்தலைக் கருத்தில் கொண்டு இவ்விழா நடத்தப்படவில்லை. நாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடிதான் இவ்விழாவை நடத்துகிறோம். இதற்கு யாராவது அரசியல் சாயம் பூசினால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் மீது எப்படிப்பட்ட முத்திரை குத்தினாலும் கவலையில்லை. கலைஞர் முதலமைச்சராக வரப் போகிறார், அவரிடம் கலைஞர் சலுகைகளை எதிர்பார்த்து இப்படி ஒரு விழாவை நடத்துகிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறு.
எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் கலை உலகின் பெருமைக்குரிய கலைஞரைப் பாராட்டி இந்த விழாவை நடத்துகிறோம்" என்றெல்லாம் கூறியதோடு, விழா நிகழ்ச்சிகளைப் பற்றியும், அதனையொட்டி வெளிவரும் சிறப்பு மலர் பற்றியும் விளக்கிக் கூறினார். விழா சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் நடைபெற்றது. பொன்விழாக் குழுவின் சார்பில் ஆறு அடி உயரமுள்ள பேனா ஒன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அந்தப் பேனா வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டதாகும்.
பேனாவின் முள் மட்டும் தங்கத்தால் செய்யப்பட்டது. அந்தப் பேனாவினை மூன்று நாட்கள் மட்டும் என்னுடைய வீட்டிலே வைத்திருந்து விட்டு பிறகு தலைமைக் கழகத்திற்கு அனுப்பி விட்டேன். விழாவில் பாலச்சந்தர், பாரதிராஜா, கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் மம்முட்டி, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், வினுச்சக்கரவர்த்தி, கே.எஸ். கோபாலகிருஷ்ணன், விஜயகுமார், ஜெமினி கணேசன், பார்த்திபன், விஜயகுமாரி, நடிகர் பாண்ட
ியன், கலைச்சுடர் சந்திரசேகர், தியாகு, நடிகர் ஆனந்த்ராஜ், நெப்போலியன், இயக்குநர் சந்திரசேகர், நடிகர் சங்கத் தலைவர் ராதாரவி, நடிகர் நாகேஷ், நடிகர் பாண்டிய ராஜன், துக்ளக் சோ, எம்.என். ராஜம், நடிகர் அர்ஜுன் ஆகியோர் எனக்கு வாழ்த்துரைத்தனர். இசைஞானி இளையராஜா என்னைப் பற்றி வாழ்த்துக் கவிதை பாடினார். நிகழ்ச்சிகளை நடிகை லட்சுமி தொகுத்து வழங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளி நாட்டிலிருந்து அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தியை அவரது உதவியாளர் சத்தியநாராயணன் விழாவில் படித்தார்.
விழா தொடங்கி சில மணித்துளிகளிலேயே பெருமழை பொழிந்தது. ஆயினும் அந்த மழையினால் அந்தக் கூட்டத்தைக் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கலைக்க முடியவில்லை. கலைஞர்கள் எல்லாம் மழை காரணமாக தங்கள் வாழ்த்துரையைச் சுருக்கிக்கொள்ள இறுதியாக நன்றி தெரிவித்து நான் உரையாற்றினேன். என்னுடைய ஏற்புரையில் அந்த விழாவினை அருமையாக ஏற்பாடு செய்த கலையுலகினைச் சேர்ந்த கலைஞர்களுக்கெல்லாம் உளமார நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
கலையுலகில் நான் தொடர்பு கொண்ட பல சம்பவங்களை அந்த விழாவிலே நினைவு கூர்ந்தேன். இறுதியாக தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளுடன் என்னுரையை நிறைவு செய்தேன். தயாரிப்பாளர்கள் எதற்காகப் படம் எடுத்தாலும், எந்தச் சூழலிலே படம் எடுத்தாலும் அந்தப் படம் மக்களுக்குப் பாடமாக அமைவதற்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், சமுதாயத்தைத் திருத்த, புதிய எழுச்சியை ஏற்படுத்தத்தக்க வகையில் நாம் தயாரிக்கின்ற படங்கள் அமைய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.
இந்த விழாவினையொட்டி 12-4-96 தேதிய "இந்து" இதழில் ராமானுஜம் என்பவர் என்னுடைய ஐம்பதாண்டு கால கலையுலகப் பணியைப் பற்றி சிறப்பானதொரு கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் "பொது மக்களைப் பெருமளவில் தனது கூட்டத்திற்கு இழுத்தது அண்ணாவின் ஆற்றல் மிகுந்த பேச்சுத் திறமை என்றால், வாசகர்களின் பெரும்பாலோரைக் கவர்ந்தது கருணாநிதியின் ஆற்றல் மிகுந்த பேனாவாகும். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 1946ல் தொடங்கி இன்று வரை இவ்வளவு நீண்ட காலத்திற்கு திரையுலகில் தொடர்பு கொண்டுள்ள ஒரே நபர் கருணாநிதிதான்.
கதாசிரியர்களாகவும், நடிகர்களாகவும் இருந்து பதவிக்கு வந்தவர்கள் இருவரே, அவர்கள் சி.என். அண்ணாதுரையும், கருணாநிதியுமே! அவர்களிலும் கலைஞர் உலகிலேயே திரைப்படத் துறையில் ஐம்பதாண்டுகள் தொடர்பு கொண்- கலைஞர் டிருந்த ஒரே ஒருவர் ஆவார். அவர் தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், சில ஆண்டுகள் மாநிலத்தை நிர்வகிப்பவராகவும் திகழ்ந்த அவருடைய சாதனைகள் பொறாமைக் கொள்ளத் தக்கவையாகும்.
கருணாநிதியின் திராவகம் வடியும் வசனங்களும், சிவாஜி கணேசனின் புயல் போன்ற நடிப்பும் 1952ல் வெளியான பராசக்தி படத்தை நினைவில் நிற்கக்கூடிய ஒன்றாக மாற்றியது. அதில் கருணாநிதியின் வசனம் மதத்தின் பெயரால் அப்பாவிகளை ஏமாற்றுபவர்களைத்தான் அடையாளம் காட்டி விமர்சிக்கிறது என்பதைக் கவனிக்காமல், அந்தப் படம் கடவுளை எதிர்க்கிறது என்று கூறி, சிலர் அதனைத் தடை செய்யவும் கோரினர். கருணாநிதியின் நீண்ட வெற்றி, தோல்விகள் நிறைந்த, காலத்தைக் கடந்து நின்ற திரையுலக வாழ்வில் அவர் ஒரு போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மரபுகளையோ, கட்சிக் கொள்கைகளையோ விட்டுக் கொடுத்ததில்லை.
கால மாற்றத்திற்கேற்ற வகையில் கதைகளையும் வசனங்களையும் மாற்றுவதில் அவர் திறமை பெற்றிருந்தார். அவர் தனது எழுத்தின்மூலம் தமிழ் மொழிக்கு மதிப்பும் அங்கீகாரமும் பெற்றுத் தந்தார். உலகம் முழுவதும் தமிழைப் பரப்ப உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருடைய தனிப்பட்ட வாழ்வே வாளைவிட பேனா வலிமை வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளது. எனவே அத்தகைய உயர்ந்த மனிதருக்கு தங்கத்தால் ஆன பேனாவைப் பரிசளித்து சென்னையில் பொது நிகழ்ச்சியில் திரையுலகம் கவுரவிப்பது பொருத்தமேயாகும்" என்று அந்தக் கட்டுரையிலே குறிப்பிட்டிருந்தார்.
