உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பதவி துறந்தேன்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பதவி துறந்தேன்! · 309 / 391

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இரண்டாவது முறையாகப் பதவி துறந்தேன்! ரா ஜீவ் காந்தி 21-5-91 இரவு படுகொலைக்கு ஆளானார் என்றால்; அன்று காலையில்தான் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு செயலாளர்களையும், தலைமைச் செயலாளர், மற்றும் ஆலோசகர்களையும் வைத்துக்கொண்டு, ஆளுநர் பீஷ்ம நாராயண சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது- "தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி ஏற்பட்ட பிறகு கடந்த மூன்று மாதங்களாக சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் சீர்பட்டிருக்கிறது.

இலங்கைப் போராளிகளின் தீவிரவாத நடவடிக்கைகள் வெகுவாகத் தடுக்கப்பட்டுவிட்டது" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமல்ல, தி.மு. கழகம் 1989-இல் ஆட்சிக்கு வந்த பிறகு 15-6-89 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி திருப்பதியிலிருந்து பாட்னா செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் 15 நிமிடங்கள் தங்கிச் சென்றார். பிறகு 5-11-89 அன்று பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி பொதுக்கூட்டங்களில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

பிறகு 8-11-89 அன்று சென்னை கடற்கரையில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ராஜீவ்காந்தி கலந்து கொண்டார். அவர் பிரதமர் பொறுப்பிலிருந்து எதிர்க்கட்சித் தலைவராக ஆனபிறகும் இங்கே தி.மு.கழக ஆட்சி நடைபெற்ற 24-1-90 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் ராஜீவ் கலந்து கொண்டார். பிறகு 25-2-90 அன்று புதுவையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் செல்லும் வழியில் ராஜீவ் கலைஞர் காந்தி சென்னை நகருக்கு வந்து சென்றார்.

7-6-90 அன்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டார். 7-10-90 அன்று சென்னைக்கு வந்த ராஜீவ் காந்திக்கு விமான நிலையத்திற்கு அருகில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்ட முயற்சித்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. 22-9-90 அன்று சென்னையில் தி.மு. கழக அரசு முன்நின்று நடத்திய தேசிய ஒருமைப்பாடு குழுக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கலந்து கொண்டார்.

இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தபோது ராஜீவ் காந்தி, பிரதமராக இருந்தபோதும்; எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும்; பத்திரமாக வரவேற்று, அக்கறையுடன் பாதுகாத்து, டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் ஆளுநர் பீஷ்ம நாராயண சிங்கின் மேற்பார்வையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் ஆட்சியில்தான் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து விட்டது. அவரது மறைவுக்குப்பின் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவராக திருமதி சோனியா காந்தி அவர்களையே நியமிக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுத்தபோதும் அவர் அந்தப் பதவியை ஏற்க முன்வரவில்லை.

பின்னர் அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 29-5-91 அன்று கூடி பி.வி. நரசிம்மராவ் அவர்களை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. ராஜீவ் காந்திக்கு இரங்கல் தெரிவிக்கவும், அவரது மறைவையொட்டி தமிழ்நாட்டில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சிகளுக்குக் கண்டனம் தெரிவிக்கவும் 25-5-91 அன்று தேசிய முன்னணி, இடதுசாரி மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து மாபெரும் அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தின. வன்முறைச் சம்பவங்கள் மீது விசாரணைக் கமிஷன் ஒன்றினை அமைக்க வேண்டுமென்று தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண சிங்கை முரசொலி மாறன், எம்.பி.

நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். 5ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு சரியான பாதுகாப்பு அளிக்கத் தவறி, நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) காவல்துறை கடமை செய்யத் தவற விட்டு - சட்டம்- ஒழுங்கு காத்திடும் இயந்திரத்தை இயங்காமல் செய்து தமிழ்நாட்டில் காட்டாட்சி நடைபெற அனுமதி அளித்த தமிழக ஆளுநர் மற்றும் அவரது ஆலோசகர்களே முழுப் பொறுப்பு, அவர்கள் பதவியில் நீடித்தால் தேர்தல் ஒழுங்காக நடைபெறாது, எனவே நடைபெற்ற கலவரங்களுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்று பதவி விலகிட வேண்டுமென்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மேலும் 29-5-91 அன்று சென்னையில் துறைமுகம் தொகுதியில் என்னுடைய தலைமையில் கழகத் தோழர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகத் தோழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அதைப்போலவே ஆந்திராவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து என்.டி. ராமராவ் அவர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. ராஜீவ் காந்தியின் திடீர் மறைவு காரணமாக எனக்கு அந்த ஆண்டு பிறந்த நாள் விழா தேவையில்லை என்றும், யாரும் நேரில் வர வேண்டாமென்றும் அறிக்கை விடுத்தேன்.

தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். ஜூன் 15-ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ராஜீவ் காந்தி படுகொலை காரணமாக ஏற்பட்ட அனுதாப அலையிலே அ.தி.மு.க.- இ-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. கழக வேட்பாளர்கள் நின்ற தொகுதிகளிலேயே துறைமுகம் தொகுதியில் நின்ற நான் ஒருவன் மட்டுமே சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். புதுவையிலும் இ-காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பெற்றது.

தி.மு.க.பெருந்தோல்வி அடைந்ததையொட்டி கழக உடன் பிறப்புகள் மூன்று பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்ற உடன் பிறப்பு தனது நாட்குறிப்பில் "எனது தலைவனின் பொது வாழ்வுக்கு இந்தத் தேர்தல் முடிவு சாவுமணி அடித்து விட்டது. இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கலைஞர் இது கோழைத்தனமான முடிவுதான் என்றாலும் என் நிலையில் உள்ள எவரும் இதைத்தான் செய்வார்கள்" என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனடியாக நான் அதுபற்றி விடுத்த அறிக்கையில், சாவு ஒன்றுதான் என் பொதுவாழ்வுக்கு முடிவு கட்ட முடியுமே தவிர, அதுவரையில் எந்தவொரு முடிவும் என் பொதுவாழ்வுப் பணியை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்பதை என் உடன்பிறப்புகள் உணர்ந்துகொண்டு இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்குத் தேவையான நல்லுயிரை மாய்த்துக் கொள்ளாமல் கடமையாற்றிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 511 இடங்களுக்கு, இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு 224 உறுப்பினர்களும், அதன் தோழமைக் கட்சிகளுக்கு 16 உறுப்பினர்களும் உள்ள நிலையில் அறுதிப்பெரும்பான்மை பெற மேலும் 16 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் தனிப் பெரும் கட்சியான இந்திரா காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு பாரதீய ஜனதா கட்சியோ, தேசிய முன்னணி, இடதுசாரிக் கட்சிகள் கூட்டணியோ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜூன் 20-ஆம் தேதி நாடாளுமன்ற இ.காங்கிரஸ் கட்சித் தலைவராக பி.வி. நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மக்களவையில் பெரும்பான்மையை நான்கு வாரத்திற்குள் நிரூபிக்குமாறு குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இந்தப் பதவிக்குப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிர முதல்வர் சரத்பவார் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதோடு, நரசிம்மராவ் அவர்களை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்குமாறு தானே நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஒரு வேண்டுகோள் அறிக்கையையும் விடுத்தார்.

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரசிம்மராவ் சோனியா காந்தியைச் சந்தித்தார். அதற்கடுத்த நாள் 21-ந்தேதியன்று நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை மத்தியில் பதவியேற்றது. 57 அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் அறிவிக்கப்பட்ட போதிலும் 53 பேர் மட்டுமே அன்று பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேரும், புதுவையைச் சேர்ந்த ஒருவரும் இணை அமைச்சர்களாக இடம் பெற்றனர். சில நாட்களுக்குப் பிறகு சரத்பவார் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார்.

தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 24-ந் தேதியன்று பதவியேற்றது. துறைமுகம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டேன். அப்போது நான் விடுத்த அறிக்கை வருமாறு :- "நெருக்கடி நிலையை எதிர்த்த காரணத்திற்காக தி.மு. கழகத்தின் ஆட்சி 1976-ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட பிறகு 1989 வரையில் தி.மு.கழகம் எதிர்க்கட்சி நிலையிலிருந்து பல்வேறு அடக்குமுறைகள், சோதனைகள், வேதனைகள், மிசாக் காலக் கொடுமைகள் அனைத்தையும் சந்தித்து 1989ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது.

கழக ஆட்சியின் இரண்டாண்டு காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எண்பது சதவிகிதத்திற்கு மேலாக நிறைவேற்றியுள்ளது. மகளிர் நல சிறப்புத் திட்டங்கள், தொழிலாளர் நல்வாழ்வு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் முன்னேற்றத்திற்காக வகுக்கப்பெற்ற கொள்கைகள், ஆதிதிராவிடர் பழங்குடி மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள், விவசாயிகள் கைவினைஞர்கள் கடன் ரத்து, விவசாயிகள் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின்சாரம், அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றம், கல்வித் துறையில் எல்லாப் பிரிவு மாணவ மாணவிகட்கும் ஊக்கமூட்டும் சலுகைகள், தொழில்துறையில் கணிசமான கலைஞர் வளர்ச்சி, சமூகநலத் திட்டங்களே அன்னியில் பல்வேறு தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள் என ஒரு சாதனைச் சரித்திரத்தையே படைத்த காலமாக அந்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சி விளங்கியபோதுதான்; வீண் பழியொன்றைச் சுமத்தி கழக ஆட்சியைக் கலைத்தனர்.

அந்தச் செயல் நியாயமா? எனக் கேட்டு தி.மு. கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தேர்தலைச் சந்திக்க முன் வந்தபோது மக்களின் அமோகமான ஆதரவு கழக அணியின் பக்கம் பெருவாரியாகத் திரண்ட நேரத்தில்தான் ராஜீவ் காந்தி அவர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட இடிபோன்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தது. ராஜீவ் காந்தி அவர்கள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்தது மட்டுமல்ல; அவரது எதிர்பாராத மறைவுக்காக வேதனையும் தெரிவித்துக் கொண்டதில் தி.மு.க.

அணியினர் தமது இதயமார்ந்த உணர்வினை வெளிப்படுத்தினர் என்ற போதிலும், அவரது படுகொலைக்குத் துயரமடைவதைக் காட்டிலும் - அதனைக் காட்டி நமது அணியின்மீது வீண் பழி சுமத்தி பொய்ப் பிரச்சாரம் செய்ததில் மாற்றார் வெற்றி பெற்றுவிட்டனர். அதற்கு மக்களும் பலியாகிவிட்டனர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தி.மு. கழகம் என்ற அரசியல் சமுதாய இயக்கம் தமிழ்மொழி காத்திடவும், இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திடவும், மாநில உரிமைகளை நிலைநாட்டி இந்திய ஒருமைப்பாட்டைக் காத்திடவும்; சகல தரப்பு மக்களின் பாதுகாப்புக்கு அரணாக விளங்கியும்; ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும்.

இல்லாவிட்டாலும் நாட்டு மக்களின் அமைதியான வாழ்வில் அக்கறை கொண்டு விழி மூடாமல் காவல் புரியும் சிப்பாயாகவே தனது பணியினை ஆற்றி வந்திருக்கிறது. ஆனால் இந்தக் கழகத்தின் இதய சுத்தியை உணர்ந்து பார்த்திட இயலாமல் அனுதாப அலையின் வீச்சில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டனர். அனுதாபம் அலையாக மட்டுமின்றி புயலாகவே வீசிவிட்ட காரணத்தால் மக்களின் தீர்ப்பு இவ்வண்ணம் அமைந்துவிட்டது. எனினும், என் தலைமையில் உள்ள கழகத்திற்குப் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பெருந்தோல்வியைக் கொடுத்திருக்கும்போது, எனக்கு மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றியைக் கொடுத்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

எனது இளம் பருவம் முதல் நான் இரண்டறக்கலந்து பாடுபட்ட திராவிட இயக்கத்தின் வளர்ச்சியிலும்- தாழ்ச்சியிலும் என்னைப் பிரித்துக் காண இயல்வதில்லை. நெருக்கடி நிலையில் - எனது உடன்பிறப்புக்கள் பல நூறு பேர் சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லொணாக் கொடுமைக்கு. ஆளான போது, நானே- அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த உணர்வுடன்தான் வெளியில் உலவினேன் - செயற்பட்டேன். எனவே என்னையும் கழகத்தையும் நான் பிரித்துப் பார்த்துக் கொண்டதே இல்லை அனுதாபப் புயலாலும், வீண் பழியினாலும்தான் உண்மையான பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு என் கழகத்திற்குப் பெரும் தோல்வி ஏற்பட்டிருந்தாலும்கூட அதையும் எனக்கு ஏற்பட்ட தோல்வியாகவே எண்ணி என் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும்போல் என் பொது வாழ்வுப் பயணம் தொடரும். கழக உடன்பிறப்புக்களுடன்- ஊனும் உயிருமாகப் பழகிச் செயற்படும் நான் அவர்களது உணர்வும் எனது உணர்வாகவே இருப்பதை உணர்ந்தே இந்த முடிவினை கலைஞர் மேற்கொள்கிறேன்" என்று அறிக்கையிலே தெரிவித்தேன்.

ஈழத் தமிழர்க்காக ஒரு முறை; அடுத்து; இந்த அறிக்கையைத் தொடர்ந்து ஒரு முறை; ஆக இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தேன். நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்கனவே இருந்ததை விட நல்ல வெற்றி பரவலாகக் கிடைத்தது. மக்களவையில் இந்தக் கட்சிக்கு ஏற்கனவே இருந்த இடங்கள் 85 என்பது, 119 ஆக உயர்ந்தது. நாட்டிலேயே இ. காங்கிரசுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய தேசியக் கட்சியாகவும் மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியாகவும் பா.ஜ.க.

உருவாகியது. ஒன்பதாவது மக்களவைக்கு 7 மாநிலங்களிலிருந்தும் 1 யூனியன் பிரதேசத்திலிருந்தும் பா.ஜ.க. உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மாறாக இந்தமுறை 10 மாநிலங்களிலிருந்தும், 2 யூனியன் பிரதேசங்களிலிருந்தும் பா.ஜ.க. உறுப்பினர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று முதல் முறையாக அந்த மாநிலத்தில் பா.ஜ.க.

ஆட்சி அமைத்ததும் அந்தக் கட்சியின் ஒரு சாதனையாகும். குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று அந்த மாநிலத்தில் முக்கியமான கட்சி என்ற பெயரையும் பெற்றது. மக்களவைத் தேர்தலோடு இணைந்து தமிழ்நாடு உட்பட ஆறு மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் நடைபெற்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலம் தவிர ஏனைய மாநிலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளம், அரியானா மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் அதுவரை ஆளுங்கட்சிகளாக இருந்தவைகள் வெற்றி வாய்ப்பினை இழந்தன.

விதிவிலக்காக மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியிலே நீடித்தது. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி தோற்று, இந்திரா காங்கிரஸ் முதல்வராக கருணாகரன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிப் பொறுப்பேற்றது. உத்தரப்பிரதேசத்தில் அயோத்திப் பிரச்சினையை முன்வைத்து பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று அந்த மாநிலத்தில் கல்யாண்சிங் தலைமையில் அரசு அமைத்தது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அஸ்ஸாம் கண பரிஷத் வெற்றி வாய்ப்பினை இழந்து இந்திரா காங்கிரஸ் ஹிதேஸ்வர் சைக்கியா தல

ைமையில் ஆட்சி அமைத்தது. அரியானா மாநிலத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பஜன்லால் தலைமையில் ஆட்சி அமைத்தது. புதுவையில் அ.தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிக இடங்களைப் பெற்ற இந்திரா காங்கிரஸ் வி. வைத்தியலிங்கம் தலைமையில் தனித்து ஆட்சி அமைத்தது. தெற்கு ஐரோப்பாவில் ஏட்ரியாடிக் கடலை அடுத்த பால்கன் தீபகற்பத்தில் உள்ள ஒரு சிறிய நாடு யூகோஸ்லேவியா. கடந்த நூற்றாண்டு வரை அந்த நாட்டின் பகுதிகள் ஆஸ்திரிய-ஹங்கேரிய, துருக்கிய சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்டு வந்தன.

முதல் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு 1918- இல் செர்ப், க்ரோட், ஸ்லோவேன் ஆகிய இனங்களின் மக்கள் ஒன்றிணைந்து யூகோஸ்லேவியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்த நாடும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் வந்தன. ஆயினும் அதிபர் டிட்டோ தலைமையில் இந்த நாடு சோவியத் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு தனிப்பட்ட கம்யூனிஸ்டு நாடாகவே இயங்கியது. 1980-இல் டிட்டோ மறைந்த பிறகு அந்த நாட்டில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் சிறுகச் சிறுகத் தளர்ந்து 1990-இல் கம்யூனிஸ்டுகளின் ஒரு கட்சி ஆட்சி முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கலைஞர் சோவியத் நாட்டின் பல குடியரசுகள் முக்கியமாக மூன்று பால்டிக் நாடுகள், சுதந்திரக் கொடி உயர்த்திய பிறகு யூகோஸ்லேவிய நாட்டிலும் பிரிவினைவாதம் தலையெடுத்துள்ளது. அந்த நாட்டில் செர்பிய இனத்தவர் 38 சதவிகிதம் ஆகும். அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்க க்ரோட் இனத்தவர்களும், ஸ்லோவேன் இனத்தவர்களும் விரும்பவில்லை. யூகோஸ்லேவியா நாட்டின் இரண்டு குடியரசுகள் க்ரோஷியாவும், ஸ்லோவேனியாவுமாகும்.

இவை இரண்டும் 1991-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதியன்று தங்களை சுதந்திரக் குடியரசுகள் என்று அறிவித்துக் கொண்டதையடுத்து அங்கே உள்நாட்டுப் போர் மூண்டது. யூகோஸ்லேவிய ராணுவம் ஸ்லோவேனியக் குடியரசின் தலைநகரான லியுப்லியானாவில் நுழைந்து விமான தளங்கள், ஒளி-ஒலி பரப்பு நிலையங்கள் ஆகியவற்றைக் கையகப்படுத்தியது. சோவியத் நாட்டிலிருந்து பால்டிக் குடியரசுகள் விலகுவதை ஆதரிக்கும் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் யூகோஸ்லேவியாவில் பிரிவினைவாதத்தை ஆதரிக்கவில்லை.

ஆகையால் க்ரோஷியா, ஸ்லோவேனியா ஆகிய மாநிலக் குடியரசுகள் அறிவித்துள்ள சுதந்திரத்தை சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மேலை நாடுகளும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டன. நேரு- டிட்டோ காலத்திலிருந்து இந்தியாவிற்கும் யூகோஸ்லேவியாவிற்கும் இருந்துவந்த நேச உறவின் அடிப்படையில் இந்திய அரசும் அந்த நாடு சிதறுண்டு போவதை விரும்பவில்லை. ஜூன் 29-ஆம் தேதியன்று சுதந்திரப் பிரகடனம் செய்த இரண்டு குடியரசுகளும் அவற்றை அமல்படுத்துவதை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.

யூகோஸ்லேவிய அரசும் தனது துருப்புகளை முகாம்களுக்குத் திருப்பியனுப்பத் தீர்மானித்தது. ஆனாலும் இரு தரப்பினருக்குமிடையே தொடர்ந்து போர் நீடித்துக்கொண்டேயிருந்தது. பழுத்த சிந்தனையாளரும், தடம் புரளாத பகுத்தறிவுவாதியும், பல நூல்கள் இயற்றிப் பைந்தமிழுக்குப் பணியாற்றிய வரும், பொது வாழ்வில் ஓய்வின்றி உழைத்தவரும், தமிழகச் சட்டப் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்று அவையில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தமிழ் மணம் கமழச்செய்தவரும், இயக்கத்திற்கு வந்த எந்தச் சோதனையிலும் தலைநிமிர்ந்து நின்றவருமான புலவர் கோவிந்தன் 2-7-91 அன்று திடீரென இயற்கை எய்தினார்.

செய்தி கிடைத்ததும், நானும், பேராசிரியரும், ஆற்காடு வீராசாமியும் திருவத்திபுரம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். ஜெயலலிதா அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையாற்றத் தொடங்கியபோது பா.ம.க. உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து ஒரு அறிக்கையைப் படிக்க முற்பட்டபோது அ.தி.மு.க. உறுப்பினர் தாமரைக்கனி அவரைப் பேரவையிலே தாக்கியது குறித்து அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் கால வரையற்ற உண்ணாவிரதத்தினைத் தொடங்கினார்.

மூன்று நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த டாக்டர் ராமதாஸ் அவர்களை நானும் பொதுச் செயலாளர் பேராசிரியரும் நேரில் சென்று 6-7-91 அன்று நலம் விசாரித்தோம். அவை விதி 17-இன்படி ஆளுநர் உரை நிகழ்த்தும்போது யாரும் குறுக்கிட்டுப் பேசக்கூடாது; எனவே பண்ருட்டி அப்படி விதியை மீறிப் பேசியது ஒழுங்கீனமானது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு தமிழக ஆளுநர் பர்னாலா அவர்கள் உரையாற்றியபோது அ.தி.மு.க.

உறுப்பினர்களைக் குறுக்கிடச் செய்து அறிக்கை படிக்கச் செய்ததும் ஜெயலலிதாதான்! பண்ருட்டி ராமச்சந்திரனை அடித்ததற்காக அப்போது பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? பண்ருட்டி ராமச்சந்திரனையும், தாமரைக்கனியையும் அவை நடவடிக்கைகளில் மூன்று நாட்களுக்குக் கலந்து கொள்ளக்கூடாது என்று நீக்கப்பட்டதுதான்! 7-ந் தேதி மாலையில் உண்ணாவிரதம் இருந்த டாக்டர் ராமதாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

91-ஆம் ஆண்டு ஜூன் இறுதி வாரத்திலும் ஜூலை முதல் வாரத்திலும் இந்தியாவில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தன. காஷ்மீரில் ஜூன் 26-ஆம் தேதி இரவு இஸ்ரேல் கலைஞர் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைக் கடத்திச்செல்ல காஷ்மீர் தீவிரவாதிகள் முயற்சித்தனர். அப்போது ஆயுதமற்ற இஸ்ரேலியர் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டார்கள். அந்த மோதலில் இஸ்ரேலியப் பயணி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு பயணி தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து 28-ந்தேதி இந்திய எண்ணெய் நிறுவன இயக்குநர் கே.துரைசாமி கடத்திச் செல்லப்பட்டார். பும்போர் என்ற இடத்திலே மண்ணெண்ணெய்க் கிடங்கு ஒன்றைப் புதிதாக நிறுவுவதற்காக மும்பையிலிருந்து சென்ற அவரைத் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையிலே கடத்திச் சென்றார்கள். காஷ்மீர் அரசு உணவு வழங்கு துறை இயக்குநர் மகமது இமாம் கான் 29-ந் தேதி நாசில் உல் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்களுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு ஸ்வீடிஷ் பொறியியல் நிபுணர்கள் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்கள் கதி என்னவாயிற்று என்றே பிறகு தெரியவில்லை. காஷ்மீரின் தலைமை மதகுரு மகமது பஷீருத்தீன் 29-ந் தேதி காலையில் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். சிறையிலே உள்ள தங்களது மூன்று நண்பர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் இந்தியன் ஆயில் அதிகாரி துரைசாமியைக் கொன்றுவிடப் போவதாகத் தீவிரவாதிகளிடமிருந்து செய்தி வந்தது.

காஷ்மீர் உணவு விநியோகத் துறை இயக்குநர் எம்.ஐ.கான் இதற்கிடையிலே வீடு திரும்பினார். மற்றவர்களை விடுவிக்கும் பணியில் காஷ்மீர் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஜூலை 3-ந் தேதியன்று விடுவிக்கப்பட்டார். 97 நாட்களாக பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஸ்வீடன் பொறியாளர்கள் 6-7-91 அன்று விடுவிக்கப்பட்டனர். அதிகாரி துரைசாமி பல தரப்பு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 20-ஆம் தேதிதான் விடுவிக்கப்பட்டார்.

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஒரு சோவியத் இஞ்சினீயர், 8 ஓ.என். ஜி.சி. அதிகாரிகள் உட்பட 22 மாநில உயர் அதிகாரிகளை அஸ்ஸாமில் உல்ஃபா தீவிரவாதிகள் கடத்தினர். இவர்களில் ஒருவர் மட்டும் அடுத்த நாளே விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்றவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் சிறையிலே உள்ள 6 தீவிரவாதிகளை ஜூலை 9-ஆம் தேதிக்குள் விடுவிக்கவேண்டுமென்று நிபந்தனை தெரிவித்தனர். கடத்தப்பட்ட சோவியத் சுரங்கப் பொறியாளர் செர்கி கிரி சென்கோ துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பிவர முயன்றபோது நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் வைத்த நிபந்தனைப்படி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறு கொடிய பயங்கரவாதிகள் 9-7-91 அன்று விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கலைஞர் கச்சத்தீவு பிரச்சினையில் கழகத்தின் நிலை இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி நடைபெற்றபோது கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது இங்கிலாந்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஹேஸ்டிங்சுக்கு எதிராக நீதிமன்றத்தில் எட்மண்ட் பர்க் ஒன்பது நாட்கள் வாதம் செய்தார்.

அப்போது ஒருவர் குறுக்கிட்டு எட்மண்ட் பர்க்கைப் பார்த்து, "மிஸ்டர் பர்க்! இந்தியாவில் ஹேஸ்டிங்சைப் பாராட்டி வாரணாசியில் அவருக்குக் கோயிலே கட்டியிருக்கிறார்கள்; தெரியுமா?" என்று ஹேஸ்டிங்சுக்கு ஆதரவாகப் பேசினார். உடனே சட்டென்று பர்க் பதில் சொன்னாராம்; "இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! இந்தியாவில் நல்லது செய்யும் கடவுள்களுக்கு மட்டும் கோயில் கட்டுவதில்லை. அம்மை, காலரா போன்ற கொடிய நோய்களைப் பரப்பும் துஷ்ட தேவதைகளுக்கும் கோயில் கட்டுகிறார்கள்."

அதைப் போலத்தான் இந்திய மக்களும் சரி; குறிப்பாகத் தமிழ் மக்களும் சரி; யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தரலாம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டுக்கிணங்க - தங்களின் அபிமானத்திற்குரிய கட்சியாகவோ அல்லது அதன் தலைவராகவோ; பர்க் சுட்டிக் காட்டிய பட்டியலில் இடம் பெற்றவர்களை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். 1991-இல் ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும்; அவருடைய கட்சிக்காரர்களால் ஒரு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதில் இருவர் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கொலை செய்யப்பட்டு; அந்தப் பழியை யார் மீது போடலாம் என்று திட்டமிட்டு, கழக ஆட்சியில் என் பொறுப்பில் இருந்த உள்துறையின் செயலாளராக இருந்த திரு.நாக ராஜன், ஐ.ஏ.எஸ்.

மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்து, அவரைப் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து, அவர் ஜாமீனில் வெளி வந்திருந்தபோது மீண்டும் அவரை "தடா" சட்டத்தில் கைது செய்து, அவரிடமிருந்து எனக்கு எதிராக வாக்குமூலம் பெற்றிட செய்த சித்திரவதைகள் எல்லாம் நாடறிந்த உண்மைகளாகும். 'தடா' சட்டம் கொண்டு வரப்பட்டதற்குச் சொல்லப்பட்ட நோக்கத்திற்கு மாறாக; முதன்முதலாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மீது அந்த 'தடா' சட்டத்தைப் பிரயோகித்தவரும் ஜெயலலிதாதான் என்பதை சற்று நினைத்துப் பார்த்தாலே; 1991 முதல் 1996 வரையில் அவரது ஆட்சி எந்த வகையில் நடந்திருக்குமென்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

வானத்தை வில்லாக வளைக்கப் போகிறேன் என்று தேர்தல் நேரத்தில் சிலர் பேசி, மக்களைக் கவர்வதுண்டு; ஆனால் இந்த அம்மையார் தேர்தல் முடிந்த பிறகும் அப்படிப்பட்ட வாக்குறுதிகளையும் சூளுரைகளையும் அநாயாசமாகப் பொழிந்து கொண்டேயிருந்தார். 1991 ஆகஸ்ட் 15 சென்னை தலைமைச் செயலகத்திலே தேசியக் கொடியேற்றி உரையாற்றியபோது; "இலங்கைக்குத்தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதற்குப் போராடுவேன்" என்று வீர சபதமே செய்தார்.

அவரது அந்த சபதத்தைப் பின்பற்றி அவர் கட்சியின் அமைச்சர்கள், பேச்சாளர்கள்; கச்சத்தீவை, தி.மு.க. ஆட்சிதான் இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டது போல விஷமப் பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர். இதற்கு மறுப்பும் விளக்கமும் அளிக்க வேண்டிய நிலை கழகத்திற்கு ஏற்பட்ட காரணத்தால்; 1974-ஆம் ஆண்டிலேயே கழகம் ஆட்சியில் இருந்தபோது கழகப் பொதுக்- கலைஞர் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தமிழக மக்களுக்கு நினைவூட்டினேன்.

அந்தத் தீர்மானம் வருமாறு:- "இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதுமான கச்சத் தீவின் மீது இலங்கைக்கு அரசுரிமை வழங்கும் வகையில் இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சிக்கு எதிராக இந்த ஒப்பந்தம் அமைந்துவிடக் கூடாது என்று தமிழக தி.மு.க. அரசு பலமுறை ஆதாரங்களுடன் மத்திய அரசை அணுகித் தடுத்தும் கூட அதனை அலட்சியப் படுத்திவிட்டு மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு அளித்துள்ள செயல் வேதனை தருவதாகும்.

கச்சத்தீவு பிரச்சினையை முடிந்துவிட்ட பிரச்சினையாகக் கருதாமல் மத்திய அரசு மறுபரிசீலனை செய்து அந்தத் தீவின்மீது இந்திய அரசுக்கு அரசுரிமை இருக்குமாறு ஒப்பந்தத்தைத் திருத்த வழிவகை காணவேண்டுமென்று பிரதமர் இந்திராகாந்தியை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது."

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், 74ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் கச்சத் தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் கூடாது என்றும் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் பல்வேறு ஆதாரங்களுடன் முதல்வர் என்ற முறையில் 6-1-1974 அன்று பிரதமர் இந்திரா காந்திக்கும் கடிதம் எழுதினேன். இந்திய அரசும் இலங்கை அரசும் 1974-ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், யாத்திரீகர்கள் செல்லும் உரிமையும், கப்பல் போக்குவரத்துக்கான உரிமையும் பாரம்பரிய பாத்யதையுடன் இந்தியாவுக்கு இருந்தன.

அப்படி நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இருந்தும் அந்த ஒப்பந்தத்தையே கழக அரசு ஏற்காமல் எதிர்த்தது. ஆனால் 1976ஆம் ஆண்டு கழக அரசு கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இருந்த நேரத்தில் இந்திய அரசு இலங்கையுடன் செய்து கொண்ட ஒரு உடன்பாட்டின்படி 1974ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்த இந்த உரிமைகளும் பறிபோய் விட்டன. இந்த உண்மையை வெளிப்படுத்தி 91ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் வெளிவந்த "ப்ரண்ட்லைன்" ஏடு கச்சத்தீவு பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தது.

அதில் சில பகுதிகள்- "இந்திய அரசு இலங்கை அரசுடன் கச்சத் தீவுக்கான ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பே தமிழகத்தில் இருந்த தி.மு.க. ஆட்சி, அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. கருணாநிதி, இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை அரசு கச்சத் தீவு மீது உரிமை கொண்டாடுவதை இந்திய அரசு ஏற்கக்கூடாது, மறுத்திட வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஒப்பந்தம் நடைபெற்ற உடனேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தின் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொண்டார்."

உண்மையை அ.தி.மு.க. அரசு அப்படியே மறைத்துவிட்டு கச்சத் தீவை மீட்போம் என்று சொல்லி விட்டு, கழகத்தைக் குறை கூறுவதிலேயே கவனத்தைச் செலுத்தியது. 1991-ஆம் ஆண்டு கோட்டை முகப்பிலே நின்றுகொண்டு கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்று சபதம் செய்தவர்கள் தொடர்ந்து ஐந்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தார்கள். ஆனால் கச்சத்தீவிற்காகச் செய்த சபதம் நிறைவேறவில்லை என்பதும், அதற்காகக் கழகத்தின் மீதும் சேற்றை வாரி வீசியது தான் நடந்தது என்பதும்தான் உண்மை.

நான் பதவி விலகிய துறைமுகம் தொகுதி, எழும்பூர் தொகுதி, காங்கேயம் தொகுதி, முசிறி தொகுதி ஆகியவற்றுக்கான இடைத்தேர்தல் 23-8-1991 அன்று நடைபெற்றது. ஜூன் மாதம் 232 தொகுதிகள

ுக்குத் தேர்தல் நடைபெற்றபோது கலைஞர் ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றதற்கு மாறாக ஆகஸ்ட் திங்களில் நான்கு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் தி.மு.கழகம் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதமே வினோதமான ஒரு ஆணை பிறப்பித்தது. கழக ஆட்சிக் காலத்தில் "சுற்றுலா பஸ்"களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இருக்கை ஒன்றுக்கு 2000 ரூபாய் வரி விதிக்கப்பட்டது.

அந்த "சுற்றுலா பஸ்" முதலாளிகள் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வருகிற வரை "சுற்றுலா பஸ்" அதிபர்கள் இருக்கை ஒன்றுக்கு 1500 ரூபாய் வரியாகக் கட்ட வேண்டுமென்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அ.தி.மு.க. அரசு 30-7-91 அன்று பிறப்பித்த அரசாணை எண்.1203-இன்படி இருக்கை ஒன்றுக்கு 500 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமென்று உத்தரவிட்டது. அதிலும் ஒரு வேடிக்கையாக 1991 ஜூலை 30ந்தேதி அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், 1991 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருமென்று அறிவித்தார்கள்.

அ.தி. .மு.க. ஆட்சியிலே பழி வாங்கும் படலத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு! 91ஆம் ஆண்டில் செப்டம்பர் திங்கள் 7ந்தேதி திடீரென்று ஜெயலலிதா அரசு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், கழக முன்னணியினரில் ஒருவருமான கே.பி. ராமலிங்கத்தைக் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். காரணம் கேட்டபோது 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது உடல் இருந்த பீரங்கி வண்டியின் மீது செருப்புக் காலோடு ஏறிய ஜெயலலிதாவைக் கீழே இறங்குமாறு கே.பி.ராமலிங்கம் கூறியதற்காகப் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்யப்பட்டது தெரிந்தது.

கமிஷனர் அலுவலகத்திலிருந்து நள்ளிரவில் அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஜட்டியோடு இரவு முழுவதும் சாப்பாடு கூடக் கொடுக்காமல் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) லாக்கப் அறையில் பூட்டி வைத்தார்கள். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு சாதாரண சம்பவத்திற்காக இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் செப்டம்பர் 9ந் தேதியன்று பேரவையில் கழக உறுப்பினர் பரிதி இளம்வழுதி அரசைக் குற்றஞ் சாட்டிப் பேசியதற்காகத் தாக்கப் பட்டார்.

அவரது வேட்டி பறிக்கப்பட்டது. சட்டை கிழிக்கப் பட்டது. மீண்டும் மறுநாள் அதே சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்னிலையிலேயே "டேய் வெளியே போடா" என்று பரிதி இளம்வழுதியைப் பார்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூறியதோடு, அந்தக் கூட்டத் தொடர்முடியும் வரை அவரை சட்டப் பேரவையிலிருந்தே வெளியேற்றினார்கள். இதனை அவையிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக வர்மா கமிஷனின் ஆய்வு வரம்பிற்குள் வராத இதர அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்காக மத்திய அரசு மேலும் ஒரு கமிஷனை அமைக்க முடிவு செய்தது.

டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி. ஜெயின் இந்தக் கமிஷனின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். சோவியத் யூனியனின் முன்னேற்றத்திற்காக அதிபர் கோர்பச் சேவ் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தெல்லாம் முன் அத்தியாயங்களில் விவரமாகத் தெரிவித்திருக்கிறேன் என்ற போதிலும் 91ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் சில அதிரடிச் சம்பவங்கள் நடைபெற்றன. 19-8-91 அன்று சோவியத் நாட்டில் நடந்த திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சியில் சோவியத் அதிபர் மிகையில் கோர்பச்சேவ் அகற்றப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஊர்ஜிதமாகாத தகவல்கள் வந்தன. அதுவரை துணை அதிபராக இருந்த கென்னடி கலைஞர் யனயேவ் தற்காலிகமாக அதிபர் பதவியைக் கைப்பற்றினார். அவசர நிலை அறிவிக்கப்பட்டது. நாட்டை நிர்வகிப்பதற்கு எட்டு பேர் கொண்ட ஓர் ஆட்சிக் கவுன்சில் அமைக்கப்பட்டது. மாஸ்கோ நகரத் தெருக்களில் முக்கிய இடங்களில் ராணுவ டாங்க்குகளும் துருப்புகளுடன் கூடிய வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் கிரெம்ளின் மாளிகைக்கு வெளியே ராணுவ வாகனங்களைச் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால் சோவியத் யூனியனில் 19ந் தேதி ஏற்பட்ட திடீர் புரட்சி மூன்றே நாளில் படுதோல்வி அடைந்தது. திடீர் புரட்சித் தலைவர்களால் பதவிநீக்கம் செய்யப்பட்டு கிரிமியாவில் காவலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் கோர்பச்சேவ் 21ந்தேதியன்று காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். அத்துடன் கோர்பச்சேவை அதிபர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என்று சோவியத் நாடாளுமன்றத்தின் தலைமைக் குழு அறிவித்ததையடுத்து அவர் மீண்டும் சோவியத் யூனியனின் அதிபரானார்.

அதிரடிப் புரட்சி மூலம் கோர்பச் சேவைக் கவிழ்க்க முயன்ற 8 தலைவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் போரிஸ் புகோ உடனடியாகத் தற்கொலை செய்து கொண்டார். புரட்சியில் ஈடுபட்ட சோவியத் முன்னாள் துணை அதிபர் கென்னடி யனயேவ் உட்பட மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். திடீர் புரட்சிக்குச் சதித் திட்டம் தீட்டியவர்கள் மீது கிரிமினல் விசாரணை நடைபெறும் என்று எல்ட்சின் தெரிவித்தார். கோர்பச்சேவ் மீண்டும் அதிபரானதற்கு உலக நாடுகளின் தலைவர்களும், அமெரிக்க அதிபரும், இந்தியாவின் நாடாளு மன்றமும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

ஆனாலும் கூட சோவியத் யூனியனில் ஒரு நிரந்தர, நிலையான அமைதி ஏற்படவில்லை! ருமேனியா நாட்டின் தூதுவராக டெல்லியில் 91ஆம் ஆண்டு பொறுப்பிலே இருந்த வில் வியு ராடு என்பவர் அக்டோபர் 9ந்தேதி காலையில் தனது இல்லத்திலிருந்து நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வசந்த் விகாரிலே உள்ள தூதரகத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது சீக்கிய தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட சிலரால் கடத்தப் பட்டார். இந்தியாவில் தூதர் ஒருவர் கடத்தப்பட்டது அதுதான் முதல் முறையாகும்.

காலிஸ்தான் விடுதலைப்படை அனுப்பி வைத்த தூதரின் புகைப்படம் ஒன்றின் மூலம் அந்தப் பயங்கரவாத அமைப்புதான் ருமேனிய தூதரைக் கடத்தியது என்பது உறுதியாயிற்று. ஆனால் அந்த அமைப்புடன் இணைந்து மற்ற அமைப்புகளும் சேர்ந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், ஓய்வுபெற்ற ராணுவ தளபதி வைத்யா கொலை வழக்கு தொடர்பாக புனே நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹெர்ஜிந்தர் சிங் ஜிந்தா, சுக்தேவ்சிங் சுக்கா ஆகியோரையும், லோங்கோவால் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக் கைதியாக இருக்கும் நிர்மல்சிங் நிம்மாவையும் விடுதலை செய்ய வேண்டும்.

விடுதலை செய்யாவிட்டால் தூதர் ராடு கொல்லப்படுவார் என்று தெரிவித்திருந்தது. கடத்தப்பட்ட தூதுவரின் மனைவி கணவரை மீட்டுத் தரும்படி வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். இறுதியாக நவம்பர் 26ந் தேதியன்று எந்தவித நிபந்தனையும். இல்லாமல் இவர் விடுவிக்கப்பட்டார். 1991ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் தொசிகி கைபு. இவர் அரசியல் சீர்திருத்தம் பற்றிய மசோதா குறித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானம் ஆளுங்கட்சியினாலேயே (லிபரல் டெமாக்ரடிக் கட்சி) தோற்கடிக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் மீண்டும் பதவிக்குப் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிப் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது பதவிக் காலம் அக்டோபர் 31ந்தேதி வரை இருந்தபோது, அவர் அக்டோபர் 5ந்தேதியன்றே பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். அதே ஆண்டு அக்டோபர் திங்களிலேயே மேகாலயா அமைச்சரவை கவிழக் கூடிய நிலை இந்திய அரசியலிலே கலைஞர் ஏற்பட்டது.

மேகாலயத்தில் அப்போது ஐக்கிய பாராளுமன்றக் கட்சித் தலைமையிலான கூட்டணி ஆட்சி முதல் அமைச்சர் லிங்டோக் தலைமையிலே 19 மாதங்களாக நடைபெற்று வந்தது. இவர் மீது கட்சியிலே அதிருப்தி தோன்றிய காரணத்தினால் அவர் அவையிலே நம்பிக்கை ஓட்டு பெற நினைத்தார். அதற்கான தீர்மானம் அரசின் சார்பில் அவையிலே கொண்டுவரப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பிற்கு தீர்மானம் விடப்பட்டபோது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சரிசமமாக தலா 26 வாக்குகள் கிடைத்தன.

இதுபோன்ற நேரங்களில் பேரவையின் தலைவர் தனது வாக்கினைப் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் பேரவைத் தலைவராக இருந்த பி.ஆர். கிண்டியா நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். அதன் காரணமாக அரசின் நம்பிக்கை தீர்மானம் தோல்வியடைந்தது. பேரவைத் தலைவர் நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததாகக் கூறிவிட்டு, அவையை அத்துடன் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். பேரவைத் தலைவர் இவ்வாறு அறிவித்ததை ஆளுங்கட்சியினர் ஏற்க மறுத்தனர்.

கடந்த ஆகஸ்ட் திங்களில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்று ஒரு காரணத்தைக் கூறி பேரவைத் தலைவர் அவையை விட்டுச் சென்ற பிறகும் தொடர்ந்து பேரவையை நடத்தி, பேரவைத் தலைவரை நீக்குவதாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதை நிறைவேற்றிவிட்டு, புதிய பேரவைத் தலைவர் ஒருவரையும் தேர்ந்தெடுத்தனர். அப்போது ஏற்கனவே வாக்களிக்க அனுமதிக்கப்படாத நான்கு சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட 30 சட்டப் பேரவை உறுப்பினர்கள் அவையிலே இருந்தனர்.

அந்த நேரத்தில் முதலில் பேரவைத் தலைவராக இருந்த பி.ஆர். கிண்டியா பேரவைச் செயலாளருக்கு அனுப்பிய குறிப்பில், பேரவைக்குள் எந்தப் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பணியும் நடக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். சட்டசபைச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பேரவைத் தலைவர் அதிகாரபூர்வமாக அவையை ஒத்திவைத்தபிறகு அவையிலே எடுக்கப்படும் முடிவுகள் செல்லாது என்று தெரிவித்தார். இதற்குப் பிறகு அங்கே இந்திரா காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய மேகாலய பாராளுமன்ற முன்னணி; ஆட்சி அமைக்கும் முயற்சியிலே ஈடுபட்டது.

அந்த முன்னணியின் தலைவர் ஜே.டி. போர்மன் தலைமையில் 14 சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மதுகர் டிக்கியைச் சந்தித்து அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டுக் கொண்டனர். பிரச்சினை பற்றி முழுமையாகப் பரிசீலித்து முடிவினை அறிவிப்பதாக ஆளுநர் தெரிவித்தார். அக்டோபர் 11ஆம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் மேகாலயாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கான ஆணையைப் பிறப்பித்தார். ஆனாலும் சட்டசபை கலைக்கப்படவில்லை.

அவை செயல்படுவது மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆளுநரின் பரிந்துரையின் பேரில்தான் இந்த முடிவு குடியரசுத் தலைவரால் எடுக்கப்பட்டது. 91ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி நள்ளிரவில் வட இந்தியாவில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், இமாசலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களிலும், டெல்லி, சண்டிகார் ஆகிய நகரங்களிலும் பூமி அதிர்வு ஏற்பட்டது. இதில் உ.பி.யில் உத்ரகாசி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்தப் பகுதிக்கு மிக அருகில் இருந்த தேஹ்ரி அணை பெரும் சேதமடைந்து அங்கு மட்டும் 400-க்கு மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக அழிந்து விட்டன. அங்கே இறந்தவர்கள் மட்டும் 2000-க்கு மேல் இருக்கலாம் என செய்திகள் வந்தன. இந்தப் பூமி அதிர்வு 45 வினாடிகள் நீடித்தன. இமயமலையின் அடிவாரத்தில் இருந்த அல்மாரா மாவட்டமும் பெரிதும் பாதிப்புக்கு கலைஞர் ஆளாகியது. அந்த மாவட்டத்தில் மட்டும் 500-க்கு மேற்பட்ட கிராமங்கள் முழுவதுமாக அழிந்து விட்டன.

அந்தப் பூகம்பத்தின் அளவு 6.1 என்று நில நடுக்கப் பதிவுக் கருவி கூறியது. சார்லஸ் பிரான்ஸிஸ் ரிக்டர் என்ற அமெரிக்கரால் உருவாக்கப்பட்ட அந்தக் கருவியில் 9 புள்ளிகள் வரை மட்டுமே பூகம்பத்தின் வலிமையை அளக்க முடியும். உலகில் அதுவரை ஏற்பட்டுள்ள பூகம்பங்களில் மிகக் கடுமையான பூகம்பம் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் ஏற்பட்டது. அப்போது ரிக்டர் கருவியில் பதிவாகிய பூகம்பத்தின் அளவு 8.3.

அந்தப் பூகம்பத்தின் விளைவாக 700 பேர் மாண்டனர். ஆனால் 91ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் 6.1 அளவுக்கே பூகம்பம் ஏற்பட்ட போதிலும், அங்கே பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 1556ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி சீனாவில் உள்ள ஷென்ஸி பகுதியில் நேர்ந்த பூகம்பத்தில் 8,30,000 பேர் மாண்டனர். உலகில் ஏற்பட்ட பூகம்பங்களிலேயே அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டது அந்தப் பூகம்பத்தில்தான். 91ஆம் ஆண்டு இறுதியில் அயோத்தி பிரச்சினை மீண்டும் எழுந்தது.

அந்த ஆண்டு நவம்பர் திங்களில் மீண்டும் ராமர் கோவில் கட்டப்போவதாக பாரதீய ஜனதா அரசு ஆதரவோடு விசுவ இந்து பரிஷத் அறிவித்தது. மத்திய அரசின் எதிர்ப்பையும், நீதிமன்ற உத்தரவையும் புறக்கணிக்கும் வகையில் பிரச்சினைக்குரிய இடத்தில் காவிக் கொடிகள் ஏற்றப்பட்டன. இந்தப் பிரச்சினை பற்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் மாநில முதல் அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் பி.வி. நரசிம்மராவ் முடிவு செய்து தேசிய ஒருமைப்பாட்டுக் குழு மாநாட்டினை 2-11-91 அன்று டெல்லியில் கூட்டியிருந்தார்.

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவில் உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்திருந்தது. அந்தக் கால கட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்த கிருஷ்ண குமார் என்பவர் ஒரு கூட்டத்தில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பேசும்போது தி.மு.கழகத்தை தேச விரோதக் கட்சி என்று கூறியதையொட்டி அவர் அவ்வாறு பேசியதற்குக் கண்டனம் தெரிவித்து அந்த ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் தி.மு.கழகம் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தது.

அந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க வேண்டியது பற்றி ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாகக் கூடி முடிவெடுத்தன. குறிப்பாக பா.ஜ.க. தனது கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ராம ஜென்ம பூமி பிரச்சினை பற்றி எந்தவித விவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவெடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி. ஆகிய இடதுசாரிக் கட்சிகள் உத்தரப்பிரதேச பாரதீய ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்யும்படி வற்புறுத்துவது என்று முடிவெடுத்தன.

அந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்று கலந்து கொண்டார். தனது பேச்சின் முடிவில் "இந்தப் பிரச்சினை மீது லட்சக் கணக்கான மக்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாம் முடிவெடுப்பது அவசியம். அப்படி எடுக்கப்படும் முடிவு மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். கோவில் கட்டவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உத்தரப்பிரதேச அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த நாட்டு மக்களும், அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இதை நமது முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப் பிரதேச இந்துக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முன் வர வேண்டும்" என்று

செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டார். கலைஞர் அவுங்சான் புதல்வி அனுபவித்த கொடுமை சர்வாதிகாரிகள் பலரைச் சரித்திரம் அடையாளம் காட்டியிருக்கின்றது. அந்த வரிசையில் 1991ஆம் ஆண்டில் முன்னாள் பர்மா, அதாவது மியான்மர் நாடு ஒரு சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. அவன் பெயர் ஜெனரல் நீவின். அவனுடைய 27 ஆண்டு கால ராணுவ ஆட்சியில் அந்நாட்டு மக்கள் மிகுந்த வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த மக்களுக்குத் தலைமையேற்று அங்கே ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்ட தியாகத் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண்மணி புறப்பட்டார். பர்மா வெள்ளைக்கார ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைவதற்காகப் போராடிய அவுங்சான் 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது ஆறு அமைச்சர்களுடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அவுங்சானின் மகள்தான் வீராங்கனை சூ கியி.

இவர் தந்தையின் பெயரோடு இணைத்து அவுங்சான் சூ கியி என்றே அழைக்கப்பட்டார். இவரது தலைமையில் தேசிய ஜனநாயக இயக்கம் உருவாயிற்று. மியான்மரில் சர்வாதிகார ஆட்சிக்கு விடை கொடுத்துவிட்டு, ஜனநாயக மலர்ச்சிக்கு வழி வகுப்போம் என்று சூ கியி குரல் கொடுத்தபோது, அவரது பேச்சைக் கேட்க மக்கள் கூடிய இடங்களில் எல்லாம் ராணுவத்தின் அச்சுறுத்தல், மிரட்டல், அடக்கு முறை. ஆனால் அனைத்தையும் மீறி அணையுடைத்து எழும் நீத்தம் போல மியான்மர் நாட்டு மக்கள் அரிமாக்களென ஆர்த்தெழுந்து ராணுவ ஆட்சிக்கு அறைகூவல் விடுத்தனர்.

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கைது செய்வது, காராக்கிரகத்தில் தள்ளுவது, கடுமையாக நடத்துவது, காட்டுமிராண்டித்தனமாகப் பழிவாங்குவது போன்ற முறைகளால் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் எதிர்ப்பு உணர்வுகளையும், ஜனநாயக எழுச்சியையும் நசுக்கி விடலாம் எனக் கணக்கிட்ட சர்வாதிகாரத்தனத்தின் மொத்த உருவமான நீவின், தேசிய ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பல்வேறு குற்றங்கள் சுமத்தி சிறையிலே அடைத்துவிட்டு அவுங்சான் சூ கியியையும் வீட்டுப் பாதுகாப்பில் வைத்தான். 1989ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அந்தத் தியாக வல்லிக்கு 1991ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே 90ஆம் ஆண்டு மே மாதம் ஜெனரல் நீவின் மியான்மர் நாட்டுத் தேர்தலை நடத்தினான். சிறைப் பறவைகளாகக் கிடக்கும் தேசிய ஜனநாயக இயக்கத்தினர் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனக் கணக்கிட்டு நீவின் நடத்திய அந்தத் தேர்தலில் 27 ஆண்டுக்கால ராணுவ ஆட்சியை பர்மிய மக்கள் முடித்து வைக்கும் ஆசையுடன் தேசிய ஜனநாயக இயக்கத்துக்குப் பெரும்பான்மையான ஆதரவை வழங்கினர். எனவே விரைவில் ஜனநாயக முறைப்படி சூ கியி தலைமையில் ஆட்சி அரும்பி, மலர்ந்து, மணம் வீசும் என எதிர்பார்த்துக் களித்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாயினர்.

சூ கியி தலைமையிலான இயக்கம் வெற்றி பெற்று 82 சதவிகித வாக்குகளைப் பெற்றும் கூட சிறைக் கதவு திறக்கப்படவே இல்லை. சர்வாதிகாரி ஜெனரல் நீவின் ஆட்சியே தொடர்ந்தது. சூ கியி தனக்குக் கிடைத்த நோபல் பரிசை வாங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 91ஆம் ஆண்டு இறுதியில் சூ கியி சிறையில் இருந்தவாறே உண்ணா நோன்பு போராட்டத்தைத் தொடங்கினார். அவருடைய உறவினர்களோ, நண்பர்களோ யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

வீட்டுச் சிறையிலே அந்த வீராங்கனையின் தொலைபேசிகளும் துண்டிக்கப்பட்டே கிடந்தன. அவரது கணவரைக் கூட செய்தியாளர்கள் சந்திக்கக் கூடாதென்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் மியான்மரில் நடைபெற்ற கலைஞர் இந்தக் கொடுமை குறித்து உலகத்தின் எந்த நாடும் அப்போது குரல் கொடுக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி நான் ஒரு கடிதம் அப்போது முரசொலியில் எழுதியிருந்தேன். 1989ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20ஆம் நாள் வீட்டுச் சிறையிலே வைக்கப்பட்ட சூ கியி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1995ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10ஆம் நாள் விடுவிக்கப்பட்டார்.

நீண்ட காலம் சிறையிலே இருந்த நெல்சன் மண்டேலா விடுதலை பெற்ற பிறகு அந்த நாட்டின் அதிபராக வர முடிந்ததைப் போல சூ கியி ஆறு ஆண்டுகள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை பெற்றபோதும் பொறுப்புக்கு வரவில்லை. ஓரளவு சுதந்திரம்தான் அவருடைய விடுதலைக்குப் பிறகும் அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய இயக்கத்தினரைக்கூட தனியாகச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது. வெளிநாட்டிலே இருந்த அவருடைய குடும்பத்தினர்கூட சந்திக்கவில்லை.

குறிப்பாக அவருடைய கணவர் 1998ஆம் ஆண்டு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட போது சூ கியியைச் சந்திக்க விசா மறுக்கப்பட்டது. பிறகு அவர் லண்டனில் 99ஆம் ஆண்டு இறந்த போது கூட தனது கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கோரிக்கை வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர் கோரிக்கை வைக்காததோடு, கணவரைப் பற்றிக் கூறும் போது, "எனக்கு எத்தகைய ஆறுதல் என் கணவரிடமிருந்து தேவைப்பட்டதோ, அதனை முறையாகத் தந்த நல்ல குணம் கொண்ட ஒரு கணவரை அடையக் கூடிய அதிர்ஷ்டம் பெற்றிருந்தேன் என்ற திருப்தி ஒன்றே எனக்குப் போதுமானது" என்றார்.

1991ஆம் ஆண்டு நவம்பர் திங்களில்தான் "குங்குமம்" இதழில் "நெஞ்சுக்கு நீதி" தொடரின் மூன்றாவது பாகத்தை எழுதத் தொடங்கினேன். அப்போது கழகத்திலே இருந்த வைகோ எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அவர் புதுக்கட்சி கண்டபிறகு என் மீது வாரியிறைக்கும் தடித்த வார்த்தைகளை எல்லாம் காணும்போது; நான் அவரது பழைய கடிதங்களைப் படித்துப் பார்த்து மனத்தை ஆற்றிக் கொள்கிறேன். அவற்றில் ஒரு கடிதம்தான் இது:- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) "எனது உயிரினும் மேலான தலைவர், ஆருயிர் அண்ணன், டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் நலமே எங்கள் நலம். நவம்பர் முதல் வாரம் இதயத்தைத் துள்ளிக் குதித்திடச் செய்தது - குங்குமம் தந்திடும் புதிய பரவசம்! பூரிப்பு- புத்துணர்ச்சி. திராவிட இயக்கத்தின் தியாக வரலாற்றின் மூன்றாம் பாகம் தொடருகிறது. தமிழகத்தின் வரலாறு எதிரே அணிவகுத்துப் புறப்படுகிறது. போராட்ட வேள்வி நெருப்பின் சுடர்கள் தமிழன்னைக்கு ஆராதனை செய்திடும் காட்சி விழிகளுக்கும் சிந்தைக்கும் விருந்து படைக்கிறது. இரண்டாம் பாகம் தீட்டிட வேண்டும் தாங்கள் என்று கடற்கரை மணலில் யாசித்தேன்- அருட்கொடை ஆயிற்று- அக்காவியம்- நமது பாசறையின் வலிய படைக்கலனாயிற்று.

இயற்கைத் தாயின் வளமார்ந்த உள்ளம் வழங்கிட்ட ஆற்றலே தங்களின் எழுதுகோல்- எத்துணை நோன்புற்றாலும் கிடைத்திடற்கரிய வரப் பிரசாதம். "என் எழுத்துக்கள் என் கண்ணீரைத் துடைத்து விட்டு என் தோளில் தட்டும்! துயரம் பறக்கும்! ஏங்கும் நெஞ்சம்! வீங்கும் விழிகள்! ஆறுதல் கூற எழுதுகோல்தான் ஓடிவரும்! எழுதும்! எழுந்து கொள்வேன் நான்! பகை நாணும் படைக் கலன்களாய் எழுத்துக்கள் என் பின்னே அணிவகுக்கும்! எழுதிப் படிப்பேன்!

புழுதியெனக் காற்றில் மறையும் பகைப்புலம்!" உணர்ச்சியால் துடிக்கும் இச் சொற்களை எவரே ஆள முடியும் - தங்களின் ஆளுகைக்கும் ஆணைக்கும் அல்லவோ இத்தகைய வார்த்தைகள் அருவியென துள்ளிப் பாய்கின்றன. உங்களின் தோளினைத் தட்டிய எழுத்துக்கள் லட்சோபலட்சம் உடன்பிறந்தார் தோள்களையல்லவா தடந்தோள்களாக்குகின்றன. மூன்றாம் பாகத்தைத் தாங்கள் எழுதிட வேண்டும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் கலைஞர் தங்களை வேண்டினேன்.

ஆட்சிப் பொறுப்பின் சுமையும், அலுவல் பளுவும் - நேரம் வழங்கவில்லை. இந்த வீர காவியத்தைத் தங்களைத் தவிர்த்து இன்னொரு ஜான்சன் தீட்ட முடியாது - என் போன்றவனின் இயக்கம், கிடைத்துள்ள எளிய ஆற்றல் அனைத்தும் தங்களின் அன்பாலும் பரிவாலும் கிடைக்கப் பெற்றவையே! எந்தத் திசையில் இருப்பினும் ஆதவனை நோக்கியே திரும்பும் தாமரை! பிரம்மன் படைப்பினை புராணம் புகல்கிறது. தங்களால் உருவாக்கப்பட்ட வார்ப்படம்தான் இந்தத் தம்பி.

என்றும் தங்கள் புகழ்பாடும் வை. கோபால் சாமி." எவ்வளவுதான் இப்போது கசப்பு உணர்வை அவர் காட்டினாலும்; இந்தக் கடித வாசகங்கள் என்றைக்கும் எனக்கு தித்திக்கக் கூடியவை அல்லவா! 21-11-1991 அன்று இராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு தமிழகம் முழுதுமுள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது எனலாம். காவல் துறை என்பது கடமையாற்றும் வீரர்களின் பாசறை- நெஞ்சில் நேர்மை எனும் கேடயம் தாங்கி; பாரபட்சமற்ற தன்மையெனும் படைக்கலனைப் பயன்படுத்தி- சமுதாயக் கேடுகள் போக்கவும் - நாடு காக்கவும்- மனச்சாட்சியுடன் மக்களுக்கிடையே பணியாற்றும் தூய்மையாளர்களின் பாடி வீடு!

அப்படித்தான் அந்தத் துறை இருக்க வேண்டும். ஆனால் உலையில் போடப்பட்ட அரிசியோடு ஒருசில கற்களும் கலந்து மறைந்து சோற்றுக்குள் ஒளிந் திருந்து பற்களைப் பதம் பார்ப்பது போல காவல்துறையில் கடமையாற்றும் நல்லோர் பலருக்கு மத்தியில் பொல்லார் சிலரும் இடம் பெற்று விடுகின்றனர். அத்தகையோர் விளைத்திட்ட வினைகளில் ஒன்றுதான் இராமநாதபுரம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கு. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பாண்டியம்மாள் என்ற பெண்மணியை அவரது கணவர் வேலுச்சாமி, மகன் அர்ச்சுனன், மதுரை வீரன் ஆகிய மூவரும் கொலை செய்ததாக 91ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

அழுகிய நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் பிணத்தைப் பாண்டியம்மாள் பிணம்தான் எனக் கூறி கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கொலை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு நாள் கொலையுண்டு இறந்து போனதாகக் கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்துக்கே வந்து, தான் உயிரோடிருப்பதாகக் கூறினார். காணாமற் போயிருந்த பாண்டியம்மாளை அவரது கணவரும் மற்றும் இருவரும் கொலை செய்து விட்டார்கள் என்று போலீசார் வழக்கு ஜோடித்து விட்டதாகவும், அது பொய் வழக்கு என்றும் ஆனந்தவிகடன் ஆசிரியர் திரு.

பால சுப்ரமணியம் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார். அரசியல் காரணங்களுக்காக வேண்டாதவர் மீது பயங்கர வழக்குகள் தொடரப்படுவதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூற வேண்டுமேயானால், கழகச் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மயிலாடு துறை கிட்டப்பா வீட்டுத் தோட்டத்துச் சுவரோரம் ஒரு சிலையைப் போட்டு விட்டு, அவரை சிலை திருடிய வழக்கில் அ.தி.மு.க.

அரசு கைது செய்து, அவர் தன்மீது சுமத்தப்பட்ட களங்கத்தினால் மன நிம்மதி இழந்து, பிறகு எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க.விலேயே சேர்ந்து, பிறகு அந்த வழக்கு கேட்பாரற்றுப் போய் - களங்கம் வந்ததே என்ற கவலையில் அவரும் விரைவில் இறந்து போய் - மலர்வளையம் வைத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திட நான் மயிலாடுதுறைக்குச் சென்றதும், அவர் மறைவினால் நடந்த இடைத்தேர்தலில் கழகம் வென்றதும் கடந்த கால வரலாறு!

ஆனந்தவிகடன் பாலு அவர்கள் தாக்கல் செய்த மனுவிலே அப்பாவியான மூன்று பேர் மீது போலீசார் பொய் வழக்கு கலைஞர் போட்டது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்க வேண்டுமென்றும், அந்த வழக்கில் கைதாகியுள்ள மூவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்றும், சட்ட விரோதமாக அவர்களைப் பல மாதங்கள் சிறையிலே வைத்திருந்ததற்காகத் தலா மூன்று இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். 21-11-91 அன்று தீர்ப்பு வழங்கிய இராமனாதபுரம் செஷன்ஸ் நீதிபதி- "உயிருடன் இருக்கும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுவிட்டதாக வழக்கு தாக்கல் செய்யப் பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது...

வேடிக்கை என்னவென்றால் எதிரிகள் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து, அதன்படி ஆயுதம் கைப்பற்றப்பட்டதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டதாகும். கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் இப்போது உயிரோடு இருக்கிறாள். எனவே போலீசார் கவனத்தோடு செயல்பட்டு புலன் விசாரணை நடத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்தக் காலத்தில் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது. போலீஸ் சித்திரவதைக்குப் பயந்து, செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிற சூழ்நிலையும் இருப்பதாகத் தெரிகிறது.

சாட்சியை வைத்துத்தான் தீர்ப்பு கூறப்பட வேண்டியுள்ளது. திறமையான ஒரு போலீஸ் அதிகாரி சாட்சிகளுக்குச் சொல்லிக் கொடுத்து நீதிமன்றம் நம்புகிற அளவில் சாட்சியத்தை வழங்கினால், அதை நீதிமன்றம் நம்பி செயல்பட வேண்டிய நிலை இருக்கிறது. எனவே போலீஸ் அதிகாரியின் திறமையைப் பொறுத்து ஒருவர் தண்டிக்கப்படவும் அல்லது அவர் விடுதலை செய்யப்படவும் கூடும்" என்று தீர்ப்புக் கூறினார்.

உள்துறைச் செயலாளராகவும் என்னிடம் செயலாளராகவும் இருந்த நாகராஜனைக் காவல்துறையினர் நவம்பர் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) 20ஆம் தேதி இரவு கைது செய்தது பற்றியும், அதனைக் கண்டித்து நான் கொடுத்த அறிக்கை பற்றியும் கடந்த அத்தியாயத்தில் சுருக்கமாகக் கூறியிருந்தேன். திருச்சி நீதிமன்றத்தில் அவர் நவம்பர் 21ஆம் தேதி கொடுத்த வாக்குமூலம் அனைத்து ஏடுகளிலும் வெளியாகியிருந்தது. திரு. நாகராஜன் நீதிபதியிடம் கூறும்போது, மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட கடும் நடவடிக்டிக்கைகள் குறித்து, காவல் துறை பொறுப்பை வகிக்கும் செயலாளர் என்ற முறையில் 80 பக்க அறிக்கை ஒன்றை அரசின் வேண்டுகோளுக்கிணங்க தான் தாக்கல் செய்ததாகத் தெரிவித்ததோடு, தற்போதைய அரசியல் விளையாட்டில் தான் ஒரு பகடைக்காயாக ஆக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.

திருச்சி சிறையிலே அடைக்கப்பட்ட நாகராஜன், சென்னைக்கு 27ஆம் தேதியன்று தடா வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட முடியாத அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. திடீரென்று நவம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை, நீதிமன்றம் விடுமுறை என்றபோதிலும், திறக்கப்பட்டு, நாகராஜன் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம் கொடுக்கும்வரை திருச்சி சிறையிலே இருந்த நாகராஜன், அது முடிந்ததும் நேராகச் சிறைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

அங்கிருந்து நேராக திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்; அங்கே செய்தியாளர்களையெல்லாம் சந்திக்க 'தடா' கைதியாக இருந்த அவர் அனுமதிக்கப்பட்டார்; அப்போது என் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தொடுத்தார். என்னுடைய அரசியல் வரலாற்றில் இதுபோன்ற பல சம்பவங்களைச் சந்தித்தவன் என்ற முறையில் அது அப்போது எனக்கு வேதனையாகத் தெரியவில்லை. ஆனால் அவர் திருச்சி நீதி மன்றத்திலே அளித்த நீண்ட வாக்குமூலம் காவல்துறையினரால் தட்டச்சு செய்யப்பட்டு, அதிலே காவல்துறை அதிகாரிகளால் பேனாவினால் கலைஞர் திருத்தமும் செய்யப்பட்டு, திருச்சிக்கு அனுப்பப்பட்டது என்பதை ஆதாரபூர்வமாக செய்தியாளர்களிடம் நகல்களுடன் விளக்கி

க் காட்டினேன். அதைப்பற்றி விரிவாகவும், சிறையில் இருந்த அந்த அதிகாரிக்கு 15 பக்கம் வாக்குமூலம் தயாரிக்க எப்படி முடிந்தது என்றும், அவர் அந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு சென்னையிலிருந்து போலீஸ் துறை அதிகாரிகள் இரண்டு பேர் திருச்சிக்கு வந்து நீண்ட நேரம் சிறையிலே சந்தித்துப் பேசியதாகவும், அதற்குப் பிறகு ஐ.பி.எஸ். அந்தஸ்து உள்ள ஒரு அதிகாரி சென்னையிலிருந்து திருச்சி வந்து சிறையிலே அந்த அதிகாரியைச் சந்தித்ததாகவும், சிறையிலே இருந்தபோது மருத்துவமனையிலே அனுமதிக்கப்படாத அந்த அதிகாரி வாக்குமூலம் கொடுத்ததும் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டது மாத்திரமல்லாமல், செய்தியாளர்களை அழைத்து தடா கைதி ஒருவரால் பேட்டி கொடுக்க முடிந்தது பற்றியும் பத்திரிகைகள் வியந்து எழுதின.

திரு. நாகராஜன் கைதானதைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசனையும், அவரது கணவர் ஜெகதீசனையும் தடா சட்டத்தின் கீழ் அ.தி.மு.க. அரசு கைது செய்து மதுரை சிறையிலே அடைத்தது. கோவை மாவட்டத்தில் கழக ஒன்றியச் செயலாளராக இருந்த தளி மாரிமுத்துவையும் அடுத்து கைது செய்தது. அதற்கடுத்த சில நாட்களில் போலீஸ் டி.ஐ.ஜி. யாகக் கழக ஆட்சியில் புலனாய்வுத் துறையில் திறம்படப் பணியாற்றிய நேர்மையான அதிகாரி ஜாபர் அலி, ஐ.பி.எஸ்., அவர்களை எந்தவிதமான காரணத்தையும் தெரிவிக்காமல் திடீரென்று பணி நீக்கம் செய்தார்கள்.

1991ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இரண்டாவது வாரத்தில் அப்போது சீனப் பிரதமராக இருந்த லீ பெங் இந்தியாவில் ஆறு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்தச் சுற்றுப் பயணம் உலகம் முழுவதுமிருந்த அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. காரணம், இந்தியாவிற்கு சீனப் பிரதமர் ஒருவர் வருகை தருவது சுமார் 30 நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஆண்டுகளுக்குப்பிறகு அதுதான் முதல் முறையாகும். சீனப் பிரதமராக இருந்த சூ யென் லாயின் வருகைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த சீனப் பிரதமர் லீ பெங் அவர்கள்தான்.

இவர் சூ யென் லாய் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 1954ஆம் ஆண்டு சீனாவிற்கு பிரதமர் பண்டித நேரு சென்றதற்குப் பிறகு, 1988இல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்களும் சீனாவிற்குச் சென்றார். 11-12-91 அன்று சீனப் பிரதமர் டெல்லி வந்து சேர்ந்தார். வந்ததுமே, இந்தியத் தலைவர்களுடன் தான் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தைகள் மூலம் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தொடக்கம் ஒன்று ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அந்தச் சுற்றுப்பயணத்தின் விளைவாக இரு நாடுகளிடையே 30 ஆண்டுகளாக இருந்து வரும் எல்லைப் பிரச்சினைக்கு விரைவான பரஸ்பரம் ஏற்கக் கூடிய தீர்வு காண இரண்டு நாடுகளும் உறுதி எடுத்துக் கொண்டன. இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை ஒன்றும் கையெழுத்தாகியது. அதில் வர்த்தகம் உட்பட பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் காண இரு தரப்பினரும் கூட்டாக முயற்சி எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரம், கல்வி, விவசாயம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒன்றுபட்டுச் செயல்படுவதென்றும் குறிப்பிடப்பட்டது.

கலைஞர் அடக்குமுறை, அராஜகம் அங்கும் இங்கும்! தமிழகத்துக்குக் கர்நாடகம் ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை 1991ஆம் ஆண்டு இறுதியில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் மீது அங்கே தாக்குதல் நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சூடும் நடந்தது. பெங்களூரிலிருந்த நூற்றுக்கணக்கான தமிழர் குடும்பங்கள் அங்கேயிருக்க அஞ்சிக்கொண்டு வேலூர் போன்ற இடங்களுக்கு வந்து விட்டனர்.

பெரும்பாலானவர்கள் பெங்களூரில் கட்டுமானப் பணி தொழிலாளர்களாவர். கர்நாடகத்தின் வேறு பகுதிகளிலேயிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளியேறி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வந்து விட்டனர். கர்நாடகத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு. கழகத்தின் சார்பில் 15-12-91 அன்று கண்டன ஊர்வலம் ஒன்று என்னுடைய தலைமையில் சென்னையிலே நடைபெற்றது. கர்நாடகத்தில் வன்முறை தொடர்ந்த காரணத்தினால் அங்கு வாழும் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை உடனடியாக ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் நரசிம்மராவ் அவர்களுக்கு நான் தந்தி அனுப்பினேன்.

அதில் "கர்நாடக மாநிலத்தில் பல தமிழர்கள் கொல்லப்படுவதாக தி.மு.க. அலுவலகத்திற்குத் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) படுகிறார்கள். சொத்துக்கள் நாசப்படுத்தப் படுகின்றன. குழந்தைகளைத் தீயில் தூக்கிப் போடுகிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் அங்கே ராணுவத்தினரை அனுப்புவதின் மூலமாகத்தான் தமிழர்களைக் காப்பாற்ற முடியும்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

தொடர்ந்து தமிழர்கள் கர்நாடகத்தில் சித்ரவதைக்காளாயினர். திருக்கணாம்பிகை அருகே ஒரு வீட்டில் 3 தமிழர்கள் பூட்டி வைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கெதிரான வன்முறைத் தாக்குதல் தொடர்ந்ததைக் கண்டித்து 30-12-91 அன்று தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 2-1-92 அன்று தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சினைக்காக 'பந்த்' நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

'பந்த்' தமிழகத்திலே முழுவெற்றி பெற்றது. 12-1-1992 அன்று சென்னையில் நடைபெற்ற கழக நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ஜனவரி 22ஆம் நாளன்று கர்நாடகத் தமிழர் பிரச்சினைக்காக மாநிலம் முழுதும் எல்லா ஊர்களிலும் கறுப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துவதென்றும், விலைவாசி உயர்வு, பேருந்து, ரெயில் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து 27ஆம் தேதி அன்று மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும், தடா சட்ட துஷ்பிரயோகத்தை எதிர்த்து பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை சென்னையில் ஊர்வலம் ஒன்றை நடத்தி ஆளுநரிடம் முறையீட்டு மனு ஒன்றினை அளிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

அறிவித்தவாறே மூன்று நிகழ்ச்சிகளும் எழுச்சியோடும் சிறப்பாகவும் நடைபெற்றன. ஆனால் பிப்ரவரி 3ந் தேதியன்று ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்ற பேரணியிலே லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதைப் பொறுக்காத ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊர்வலத்தினர் மீது கற்களை வீசி கலகம் விளைவித்தனர். ஊர்வலம் ஆளுநர் மாளிகையைச் சென்றடைந்த பிறகு, நானும், கழக முன்னணியினரும் ஆளுநர் மாளிகைக்குள் மனு கொடுப்பதற்காக உள்ளே சென்றிருந்த நேரத்தில் அங்கே திரண்டிருந்த கலைஞர் கழகத் தோழர்கள் மீது- சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு எதிரேயிருந்த பல்லவன் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன.

காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினரை ஓட ஓட விரட்டினர். காவல்துறை தாக்குதல் காரணமாக ஏராளமான கழகத் தோழர்கள் காயமடைந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்டனர். அந்தப் பதற்றமான சூழ்நிலையில் திடீரென்று காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காலாடிப்பேட்டை சேஷகிரி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் ஜெயபாண்டியன் காலில் குண்டு பாய்ந்து அவரது கால் ஒடிந்தது.

நெய்வேலி தாண்டவன்குப்பத்தைச் சேர்ந்த ஐயலு என்பவருக்குத் தலையிலே குண்டு பாய்ந்தது. துறைமுகம் அன்னை சத்தியா காலனியைச் சேர்ந்த சாமுவேலுக்கு விலா எலும்பு முறிந்தது. கோவை லிங்கேச கவுண்டர் காலனியைச் சேர்ந்த ராஜாம்பாள் என்பவருக்கு வாய் கிழிந்தது. சென்னை 3வது வட்டத்தைச் சேர்ந்த தனசேகரனுக்கு இரண்டு கால்களிலும் குண்டு பாய்ந்தது. கோவை சுந்தரபாளையம் தங்கவேலு என்பவருக்குத் தொடையில் குண்டு பாய்ந்தது.

குண்டடிபட்டு மருத்துவமனையிலே இருந்த தனசேகரன் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் பிழைக்காமல் மறைந்து விட்டார். கலவரத்திற்குக் காரணம் யார் என்பதைப்பற்றி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டபோது, "இவ்வளவு பெரிய கூட்டத்திற்குப் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. போலீசாரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. ஊர்வலத்தினர் பல்லவன் பணிமனையை நெருங்கிய போது, பணிமனையிலிருந்து சரமாரி கல் வீச்சால் தாக்கப்பட்டனர்.

அப்போது பணி மனையிலிருந்த தி.மு.க. ஊழியர்களுக்கும் அ.தி.மு.க.வினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது" என்று தெரிவித்திருந்தது. கழகத் தோழர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து நான் முரசொலியிலே அப்போது எழுதிய கடிதத்திற்குத் தலைப்பு - "ஒதியமிலார் அல்ல; உன் வீரம்!"

என்பதாகும். அந்தக் கடிதம் வருமாறு:- உடன் பிறப்பே, உன்னையேன் உருகி உருகி சென்னைப் பேரணிக்கு அழைத்தேன் என்று என்னையே நான் நொந்து கொள்கிறேன் இப்போது! பிப்ரவரி 3 பேரணி முடிவுற்று அண்ணா அறிவாலயத்தில் நானும் பேராசிரியரும் சாதிக்கும் நாஞ்சிலாரும் அமர்ந்திருந்த போது; எத்தனை எத்தனை உடன்பிறப்புகள் இரத்தம் சொட்டச் சொட்ட தூக்கி வரப்பட்டனர் - எத்தனை பேர் உடல் முழுதும் உருண்டை உருண்டையாக வீங்கிப்போன ஊமைக் காயங்களுடன் எங்கள் முன் வந்து விழுந்தனர்- "உங்களுக்கென்ன ஆயிற்று; ஊர்வலம் முடிந்து நெடுநேரம் ஆகிறதே!

உங்களை ஏன் அடித்தார்கள்? யார் அடித்தது?" கேட்டோம் அவர்களை! "ஊர்வலத்தில் தாக்கப்பட்டவர்களையும் துப்பாக்கிக் குண்டுகளால் காயம்பட்டவர்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் விட்டார்கள். நாங்கள் அமைதியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தோம். மறைமலை அடிகள் பாலத்தில் போலீசார் வேன்களில் வந்து எங்களை வழி மறித்து "எந்த ஊருடா நீங்க?...யா பசங்களா!"

என்று கேட்டுக் கொண்டே தடியடிப் பிரயோகம் செய்தனர். எங்களில் ஒருவர் "ஈரோடு" என்றார். "ஓ! ராமசாமி நாய்க்கன் ஊரா? அப்ப இன்னம் ரெண்டு சேத்து வாங்கிக்க!" என்று அவரைக் கீழே உருட்டி ஒரு போலீஸ் அதிகாரி அடித்தார்!..." "ஏன்ய்யா எங்களை வீணா அடிக்கிறீங்க? நாங்க பேரணிக்கு வந்துட்டு அமைதியாகத்தானே திரும்புறோம்" என்று கேட்டதற்கு "...தடா எதிர்ப்புப் பேரணிக்கு வந்தீங்கள்ளே."

"இப்படித்தாண்டா தடால் தடால்னு விழும் - உங்க தலைவனுக்கும் விழும்!" என்று பலங்கொண்ட மட்டும் அடித்தார்கள்" என்று வலியாலும் ஏற்படாத வேதனை அந்த வார்த்தைகளால் ஏற்பட்டதே என்று வாடிப்போய் நின்றனர். தம்பிகள் டி.ஆர். பாலுவும் உசேனும் மற்றும் கழக முன்னணியினரும் துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டவர்களை மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு, காயமுற்றோர் சிலர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைத் தெரிவித்தபோது; உடன்பிறப்பே!

என் உள்ளம் பட்ட பாட்டை எப்படி எழுத்துக்களில் விளக்க முடியும்! பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் சக்கரவர்த்தி என்ற கழக உடன்பிறப்புக்கு உயிர் நிலைக்கு அருகாமையில் துப்பாக்கி ரவை பாய்ந்து பிழைப்பது கேள்விக்குறியாக உள்ளது. கோவை ராசம்மாள் என்ற மூதாட்டி, இந்த மகனின் அழைப்பை ஏற்று சென்னைப் பேரணிக்கு வந்த குற்றம்; முகத்தில் காயமுற்றுள்ளார். ஓடச் சக்தியற்ற உடல்வாகு! அவர் ஓட ஓடப் போலீசாரால் துரத்தப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.

மற்றும் தங்கவேலு, சாமுவேல், ஜெயபாண்டியன், தனசேகரன் ஆகியோரையும் மருத்துவமனையில் கண்டோம் - மூவரில் இருவர் பிரக்ஞையற்ற நிலையில்! தனசேகரன் தேக்கு மரத் தேகம் படைத்த வாலிபன்! அவன் கால்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெருமளவு இரத்தம் வெளியேறிவிட்டதால்; இளைஞரணி தம்பி உமாபதி போன்றோர் இரத்தம் கொடுத்துள்ளனர். அந்தக் கட்டுடல் வீரனின் கால்களில் ஒன்று வெட்டப்பட வேண்டுமாம்- அத்துணை சேதம்! தனசேகரன் குடும்பத்தினர் எங்களைச் சூழ்ந்துகொண்டு அழுது புலம்பியதை; அம்மவோ!

தாங்கிக் கொள்ள முடியவில்லை! "தடா" எதிர்ப்புப் பேரணி லட்சோப லட்சம் மக்களைக் கொண்ட மனித வெள்ளமாகக் காட்சி அளித்ததையும் - அமைதியாகவும் கட்டுப்பாட்டு உணர்வுடனும்- அனைவரும் பாராட்ட நடைபெற்றதையும் கேள்விப்பட்டவுடன் ஆளுங்கட்சியினர் அதைக் குந்தகப்படுத்த கற்கள், குண்டாந்தடிகள், துப்பாக்கிக் குண்டுகள் என்ற ரீதியில் போலீஸ் துணையுடன் தாக்குதலைத் தொடங்கினர். பேரணியைக் கலைத்தனர்- சிதறியோடச் செய்தனர் - ஆளுநர் மாளிகைக்கு முன்னால் நான் பேசுவதற்கு மேடை அமைத்திட அனுமதி பெற்று குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் அந்த மேடையருகே வர முடியாமல் போலீசாரால் தாக்கப்பட்டனர். அந்தக் கொடுமையையும் மீறிக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் ஜெயலலிதா சட்டப் பேரவையில் ஓர் அறிவிப்பைச் செய்துள்ளார். தி.மு.க. பேரணி நடத்துவதென்றால் நிபந்தனை ஒப்பந்தத்தில் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டுமாம்! அண்ணன் குத்தூசி குருசாமி இருந்தால் இப்படி எழுதுவார்:- "முதல் மந்திரியின் இந்த நிபந்தனையைக் கேட்டு அரசியல்வாதிகள் வாயால் கூட சிரிக்க மாட்டார்கள்...

யால்தான் சிரிப்பார்கள்" என்று எழுதுவார்! பெரியார் இருந்தால் "இது என்ன நிபந்தனை! வெங்காய நிபந்தனை" என்று கேட்பார்! புரட்சிக் கவிஞர் இருந்தால் "தடைக் கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டெனச் சிரிப்போம்" என்று முழங்கியிருப்பார்!

அண்ணன் தளபதி அழகிரி இருந்தால் "உன் ரதகஜதுரக பதாதிகளை ஒரு கை பார்ப்போம்!" என்பார் வான் நோக்கிக் கைநீட்டி! அறிஞர் அண்ணா இருந்தால் "இராமலிங்க விலாஸ் பிரியாணி ஓட்டல் என்பது போல என் பெயரை கட்சிக்கு வைத்துக் கொண்டு சர்வாதிகாரக் காட்டுத் தீயைக் கொண்டு ஜனநாயகத்தைப் பொசுக்குவதா?"

என வேதனைப் பட்டிருப்பார். நாம்; இவர்களின் கருத்துக்களுக்கெல்லாம் செயல் வடிவம் கொடுப்போம்! மும்முனைப் போர் முதல் கட்டம் முடிந்தது - அடுத்த கட்டங்களைப் பற்றி விவாதித்து முடிவெடுப்போம்! நான் அழைத்தேன்! வந்தாய்! அடிபட்டு நொந்தாய்! அதற்காக அடுத்த கட்டப் போராட்ட அழைப்புக்கு ஒதுங்கி விடும் "ஒதியமிலார் அல்ல உன் வீரம் என்பது எனக்குத் தெரியும்!"

-இவ்வாறு அந்த உடன்பிறப்பு கடிதத்தில் நான் எழுதியிருந்தேன். அப்போது திருச்சி நகருக்கு வருகை தந்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து நாடு தழுவிய இயக்கத்தைத் தான் முன்னின்று நடத்தத் தயார் என்று தனது உரையிலே குறிப்பிட்டார். அன்றைய நிலையில் தமிழ்நாடு ஒரு மிகப் பெரிய சிறைச்சாலையாகத்தான் தனக்குக் காட்சி அளிக்கின்றது என்று கூறிய அவர், பொறுப்புணர்வு மிகுந்த ஒரு பதவியில் இருப்பதை ஜெயலலிதா உணர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

திராவிட இயக்கத்திற்கு 75 ஆண்டுகள் நிறைவானதையொட்டி 91ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் பவளவிழா மாநாடு மதுரை மாநகரில் சௌந்தர பாண்டியன் நகரில்,

பி.டி.ராஜன் பந்தலில், தென்னரசு தோரண வாயிலில் சிவகங்கை ராமச்சந்திரன் அரங்கில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பேராசிரியர் மாநாட்டுத் திறப்பாளர். பொன். முத்துராமலிங்கம் வரவேற்புக் குழு தலைவர். மாநாட்டினையொட்டி 21ஆம் தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் 15 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இதற்குமுன் நடைபெற்ற எந்தவொரு மாநாட்டிற்கும் இப்படி மக்கள் கூட்டம் திரண்டதில்லை என்று "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏடு அப்போது வர்ணித்திருந்தது.

"ஸ்டேட்ஸ் மென்" இதழோ, லாரி பேருந்துகளில் திரட்டி வரப்பட்ட கூட்டமில்லை, கட்டணம் செலுத்தி மாநாட்டிற்குச் செல்ல அலை மோதிய மக்கள் வெள்ளம் என்று எழுதியது. பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் தொடங்கிய வன்முறையைத் தொடர்ந்து 1985ல் பிரகாஷ்சிங் பாதல் தலைமையிலிருந்த அகாலிதள ஆட்சியை பிரதமர் ராஜீவ் காந்தி கலைத்தது முதல் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியும் ஜனநாயக முறையிலே தேர்தல் நடத்தப்படவில்லை.

அங்கே பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்துக்குப் பலமுறை தேர்தல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தீவிரவாதிகள் வன்முறை வெறியாட்டம் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு வந்தது. எத்தனை வகையில் முயன்றும் பிரிவினை கோரும் தீவிரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் இந்த நிலையை மாற்ற முடியுமென்று தேசியக் கட்சிகள் அனைத்தும் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இறுதியாக 92ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19ஆம் நாளன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

91ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேர்தல் நடத்த முற்பட்ட போது, போட்டியிட்ட வேட்பாளர்கள் 21 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர். அதன் காரணமாக 17 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. நரசிம்மராவ் ஆட்சி அதற்குள் அமைக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் முழுவதுமாகவே ரத்து செய்யப்பட்டு விட்டது. பிரிவினைவாதத்தை எதிர்க்கும் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது நல்லது என்ற பா.ஜ.க.வின் யோசனையை இந்திரா காங்கிரஸ் வரவேற்றது.

ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதாதளக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் எந்தவித கூட்டும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் இந்தக் கட்சிகளுக்கு அந்த மாநிலத்தில் அப்போது அவ்வளவாகச் செல்வாக்கில்லை. ஆனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கியவுடன் பயங்கரவாதிகளின் வன்முறையும் தொடங்கியது. ஹரிபல்சிங் என்பவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவித்து, அவர் வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்த நிலையில் அவரது வீட்டில் பயங்கரவாதிகள் புகுந்து அவரைச் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தேர்தலை அகாலிதளத்தின் நான்கு முக்கிய குழுக்களும், அகில இந்திய சீக்கிய மாணவர் சம்மேளனமும் புறக்கணித்தன. 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 525 வேட்பாளர்களே களத்தில் நின்றார்கள். 90ஆம் ஆண்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டபோது போட்டியிட்டவர்களில் நான்கில் ஒரு பகுதியினர்தான் இவர்கள். பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பயங்கரவாதிகள் சுட்டதில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அதுதவிர ஒரு போலீஸ் சப் இன்ஸ் பெக்டர், 4 பயங்கரவாதிகள் உட்பட மேலும் 8 பேர் உயிரிழந்தனர். தேர்தல் நாளன்று 7 இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் சிக்கி மூன்று பேர் இறந்தனர். 30க்கும் அதிகமானவர் காயமடைந்தனர். 24.23 சதவிகித வாக்குப்பதிவே நடந்தது. அந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றது. மக்களவை உறுப்பினர்கள் மொத்தம் 13 இடங்களில் 12 இடங்களில் இந்திரா காங்கிரசும், ஒரு இடத்தில் பகுஜன சமாஜ கட்சியும் வெற்றி பெற்றது.

சட்டமன்றத்திற்கு மொத்தம் 117 இடங்களில் 86 இடங்களில் இந்திரா காங்கிரஸ் கட்சியும், பகுஜன சமாஜ கட்சி அடுத்து 9 இடங்களிலும், பா.ஜ.க.8 இடங்களிலும் ஏனைய கட்சிகள் பிற இடங்களிலும் வெற்றி பெற்றன. கலைஞர் பஞ்சாப் மாநிலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 32 லட்சம். அதில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 32 இலட்சம்தான். அந்த 32 லட்சத்தில் 11 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 86 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.

அதாவது மொத்த வாக்குகளில் 9 சதவிகித வாக்குகள் பெற்ற ஒரு கட்சி பஞ்சாப்பில் ஆட்சி அமைத்தது. இதற்குப் பெயரும் ஜனநாயகத் தேர்தல்தான்! இந்தத் தேர்தலில் விழுந்த வாக்குகள் கூட, ராணுவப் பாதுகாப்புடன் குத்திப் போட்டுக் கொண்டவை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்தார்கள். பஞ்சாப் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் திரிபுரா மாநிலத்தில் இந்திரா காங்கிரஸ் - திரிபுரா உப ஜாதி யுவ சமிதி கூட்டணி அரசு கவிழ்ந்தது.

அந்தக் கூட்டணியிலேயிருந்த சமிதி உறுப்பினர்கள் விலகியதன் விளைவாக அந்த நிலை ஏற்பட்டது. 60 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மன்றத்தில் பெரும்பான்மை பலம் இழந்த முதல்வர் சுதீர் ரஞ்சன் மஜூம்தார் தனது பதவி விலகலை ஆளுநரிடம் அளித்து, சட்ட மன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துமாறு கோரினார். அந்தக் கூட்டணி அரசு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அந்த மாநிலத்தில் நான்காண்டு காலம் தொடர்ந்து பதவியிலே இருந்தது.

27 உறுப்பினர்களைக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு அமைக்க ஆளுநரிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் இரண்டே நாட்களில் மீண்டும் சமீர் ரஞ்சன் பர்மன் தலைமையில் இந்திரா காங்கிரசும் திரிபுரா உப ஜாதி யுவ சமிதி கட்சியும் கூட்டணி அரசை அமைத்தார்கள். முன்னாள் முதல்வரும் அந்த விழாவிலே பங்கேற்றார். ஆனால் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தனர்.

கலைஞர் பத்திரிகை சுதந்திரம் பட்டபாடு! அ. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும்போதெல்லாம் பத்திரிகை உரிமைகளைப் பறிப்பதையும், பத்திரிகையாளர்களைக் கைது செய்வதையும், எதிர்க்கட்சிகள் மீது அடக்கு முறை ஏவுவதையும் தன் கடமையாகக் கொண்டு செயல்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1991ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிறகும் 9-9-91ஆம் தேதியன்று பரிதி இளம் வழுதி, எம்.எல்.ஏ., பேரவையிலே ஆற்றிய உரையின் சில பகுதிகள் பேரவைத் தலைவரால் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அந்தப் பகுதி முரசொலி இதழில் வெளிவந்து விட்டதாகவும் கூறி ஓர் உரிமைப் பிரச்சினை முரசொலி ஆசிரியர் செல்வம் மீது அவையிலே கொண்டு வரப்பட்டது.

அதனைப் பேரவைத் தலைவர் உரிமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பி வைத்தார். அதற்கு முரசொலி ஆசிரியர் எழுதிய விளக்கத்தில் நிருபர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் அச்செய்தி வெளியிடப்பட்டதாகவும், இருந்தாலும் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், நிருபரின் பெயரைக் குறிப்பிடுவது சரியாக இருக்காதென்றும், தானே நேரடியாக வந்து உரிமைக் குழுவின் முன்பு இந்த விவரங்களைத் தெரிவித்ததையடுத்து பிரச்சினையை அத்துடன் விட்டுவிட்டால் நன்றியுடையவனாக இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பிறகும் உரிமைக்குழு முரசொலி ஆசிரியரை அவை முன் வரவழைத்து கண்டனம் தெரிவிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அதைப்போலவே கழக முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான வெற்றிகொண்டான் மீதும் ஒரு உரிமைப் பிரச்சினை அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்து கொண்டு வரப்பட்டு அதுவும் உரிமைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அந்த நிலையில் திடீரென்று கடும் வயிற்றுவலி காரணமாக தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலே வெற்றி கொண்டான் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த 10-4-92 அன்று மாலை கடும் காய்ச்சல் இருந்த நிலையிலும் மருத்துவமனையினரால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முழுவதும் குணமாகாத நிலையில் ஏன் இவ்வாறு திடீரென்று வெளியே அனுப்பிவிட்டார்கள் என்று யோசித்தவாறு வெற்றிகொண்டான் வெளியே வந்த நிலையில் அங்கே தயாராக இருந்த காவல்துறையினர் கைது செய்து காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இது மாத்திரமல்லாமல் இல்லஸ்ட் ரேடட் வீக்லி, தினகரன், கோவை மாலை முரசு ஆகிய ஏடுகளின் மீதும் உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்டு, அதன்மீது உரிமைக் குழு செய்த பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவையிலே அறிவிக்கப்பட்டது.

கமிஷனர் அலுவலகத்திற்கு முன்னால் வெற்றிகொண்டானை விடுதலை செய்யும்படி ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரத்திற்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்ததோடு, முக்கியமானவர்கள் 50 பேரைக் கைதும் செய்தனர். நீதிமன்றத்தில் வெற்றி கொண்டான் சார்பாகக் கழக வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரியபோது நீதிபதி அவர்களே அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்தார். இந்தப் பழிவாங்கும் தொடர்கதையின் மற்றொரு அத்தியாயமாகக் கூற வேண்டுமேயானால் 15-2-1992 தேதியிட்ட மாலை முரசு பத்திரிகையில் வெளிவந்த ஒருவருடைய பேட்டியையும், அதுபற்றிய விவரத்தையும் கூற வேண்டும்.

அவர்தான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் விசுவாசமிக்க கலைஞர் அலுவலராக இருந்த முத்து! எம்.ஜி.ஆரின் உதவியாளரும், எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துப் பொறுப்பாளருமான அந்த முத்து அளித்த பேட்டியில் கூறியது வருமாறு:- "சம்பவத்தன்று நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட்டது. திறந்தேன். வெளியே ஒரு இன்ஸ்பெக்டரும், 2 போலீஸ்காரர்களும் நின்று கொண்டிருந்தனர். என்ன விஷயம் என்றேன். ஏ.சி.அய்யா உங்களைப் பார்க்க வேண்டுமென்று அழைத்து வரச் சொன்னார் என்றார்கள்.

நானும் அதை நம்பி அவர்களுடன் சென்றேன். போலீஸ் நிலையத்தில் மப்டி போலீஸ்காரர் ஒருவர் மட்டுமே இருந்தார். 90 நிமிடங்கள் அங்கேயிருந்தேன். நினைவு இல்லக் கதவைப் பூட்டவில்லை, போய் பூட்டிவிட்டு வந்து விடுகிறேன் என்றேன். உடனே இன்ஸ்பெக்டர் ஜீப்பில் போய் வரலாம் என்றார். நம்பி அதில் ஏறினேன். ஜீப் நேராக சைதாப்பேட்டை கோர்ட்டுக்குச் சென்றது. உடனே நான் அங்கென்ன வேலை என்றேன். உடனே இன்ஸ்பெக்டர் ஒரு பொட்டலத்தை என் கையில் கொடுத்து பிடி என்றார்.

என்ன இது என்று கேட்டேன். இதுவா? நீ கடத்திவந்த கஞ்சா என்று இன்ஸ்பெக்டர் கூறினார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. எல்லாம் ஜெயலலிதா வேலை என்று நினைத்து நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வேதனைப்பட்டேன். எதையோ மனதில் வைத்து என்னை இப்போது பழி தீர்த்துள்ளார். என்னைக் கைது செய்து சிறையில் வைத்ததை எம்.ஜி.ஆர். ஆத்மா கூட ஏற்காது."

இந்த முத்து ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட் செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொண்டார். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.ஜனார்த்தனம் அளித்த தீர்ப்பில் முத்துவை விடுதலை செய்ததோடு, அவருக்குக் காவல் நீடிப்பு செய்தது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தார். கழகத்தின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவரான நன்னிலம் நடராசன் அவர்களும் 18-4-1992 அன்று நள்ளிரவு 2 மணியளவில் அவர் திருமானூர் ஒன்றியம், காமரசவல்லி என்னும் ஊரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி முடித்த பிறகு கைது செய்யப்பட்டு திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், வெற்றிகொண்டான் மீதோ, நன்னிலம் நடராசன் மீதோ தொடரப்படும் வழக்குகளை நீதிமன்றங்களில் சந்திக்க தி.மு.க. தயாராக இருக்கிறது என்று நான் தெரிவித்தேன். 20-4-1992 அன்று நன்னிலம் நடராசன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நக்கீரன் வாரப் பத்திரிகையை அச்சிடும் அச்சக உரிமையாளர் கணேசனைப் போலீசார் கைது செய்தனர். போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வெளி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே பயனின்றி இறந்தார்.

தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதன்முதலாக இல்லஸ்ட்ரேடட் வீக்லியின் ஆக ஆசிரியர் மற்றும் அதன் நிருபர், அதைப்போலவே முரசொலி, தினகரன் ஆகிய வற்றின் ஆசிரியர்களும் கூண்டிலே ஏற்றப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்று பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனைக் கண்டிக்கும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது தலையங்கத்தில் பத்திரிகைகளை ஒடுக்கிடும் முயற்சியில் ஜெயலலிதா வெற்றி பெற முடியாது என்று எழுதியது. கலைஞர் டெக்கான் ஹெரால்டு இதழ் தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது என்றும், தகவல் அறியும் உரிமை மறுக்கப்படுகிறது என்றும் எழுதியது.

டைம்ஸ் ஆப் இந்தியா இதழ், எடுத்தேன், கவிழ்த்தேன் என்கிற சர்வாதிகாரப் போக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் மலிந்து கிடக்கின்றது, பத்திரிகைகள் அனைத்தும் தன்னிடம் மண்டியிட வேண்டுமென விரும்புகிறார் ஜெயலலிதா என்று எழுதியது. தமிழக சட்டப் பேரவையிலிருந்து முரசொலி செய்தியாளர் மற்றும் கோவை மாலை முரசுக்கு செய்தி கொடுத்த சென்னை தினகரன் செய்தியாளர் ஆகியோரைச் சட்ட சபையிலே செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு தீர்ப்பின் மூலம் அவைக்கு வரக் கூடாது என்று பேரவைத் தலைவர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இரண்டு செய்தியாளர்களும் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினர். தமிழக சட்டப் பேரவையில் பத்திரிகையாளரை வெளியேற்றிய நிகழ்ச்சியும் அதுதான் முதல் முறையாகும். பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தமிழக அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 22-4-92 அன்று சென்னை குறளகம் முன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. உரிமைக்குழு அளித்த தண்டனையை எதிர்த்து முரசொலி மற்றும் கோவை மாலைமுரசின் சார்பில் டெல்லி உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

பேரவையின் அந்தத் தொடரின் இறுதி நாளான 28-4-92 அன்று இந்து, எக்ஸ்பிரஸ், பி.டி.ஐ., யு.என்.ஐ., இந்தியா டுடே, பிசினஸ் இந்தியா, தினமணி, தினகரன், தீக்கதிர், தினப்புரட்சி, டெக்கான் ஹெரால்டு, மாலைமுரசு, மாலைக்கதிர், ஈவினிங் மெட்ராஸ், அப்சர்வர், டெலிகிராப், சண்டே மெயில் உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் தங்களின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் பேரவைக்குள் சென்று செய்தி சேகரிக்காமல் புறக்கணிப்பு செய்ததோடு, கறுப்புச் சின்னங்களும் அணிந்து கொண்டனர். ஆனால் அன்றையதினம் அவை நடவடிக்கைகளிலே கலந்து நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கொண்ட பத்திரிகைகள் எவையெவை தெரியுமா?

தினத்தந்தி, தினமலர், விடுதலை ஆகியவையாகும். 8-5-92 அன்று உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி இல்லஸ்டிரேடட் வீக்லியின் நிருபரைக் கைது செய்ய தமிழக போலீசாரும், அரசு அதிகாரிகளும் முன்வந்தால

் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு அவர்கள் ஆளாவார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர். முரசொலி ஆசிரியர் மன்னிப்பு கேட்டுக் கொள்ளத் தயாராக இருந்தால் உரிமை மீறல் பிரச்சினையை விட்டு விடும்படி பேரவைத் தலைவரைக் கேட்டுக்கொள்ள முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தபோது, முரசொலி செல்வம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்- அவை நடவடிக்கைகளில் எந்தப் பகுதியை அவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார் என்பது தெரிவிக்கப்படாத நிலையில் அதனை வெளியிட்டது அவையின் உரிமையை மீறிவிட்டதாகக் கூறப்படுவதை ஏற்பதற்கில்லை என்றும், எனவே மன்னிப்புக் கேட்கும் பிரச்சினை எழவில்லை என்றும்- தெரிவித்த காரணத்தினால் முரசொலி செல்வத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கலைஞர் அதன் தொடர்ச்சியாக 11-5-92 அன்று மாலையில் முரசொலி ஆசிரியர் செல்வத்தைக் கைது செய்து பேரவைத் தலைவர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்பு பேரவையைக் கட்டுப்படுத்தாது, முரசொலி செல்வம், சுனில், சுந்தர் ஆகிய மூன்று பேர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அப்படியே உள்ளது என்று கூறிய பேரவைத் தலைவர் டெல்லி சென்று மக்களவை சபாநாயகருடனும் ஆலோசனை நடத்தி விட்டு சென்னை திரும்பினார்.

அவர் வந்த அதே விமானத்தில்தான் பத்திரிகையாளர் சுனில் அவர்களும் திரும்பினார். ஆனால் அவரைக் கைது செய்யாத தமிழக போலீசார் முரசொலி செல்வத்தை மட்டும் கைது செய்து பேரவைத் தலைவரின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவரிடம் மீண்டும் சட்டமன்றம் கூடுகின்ற முதல் நாளில் அவையில் ஆஜராக வேண்டும் என்ற ஒரு நோட்டீசில் கையெழுத்து பெற்றுக்கொண்டு அனுப்பிவிட்டனர். அதன் தொடர்ச்சியாக 21-9-92 அன்று அவையின் கண்டனத்தைப் பெறுகின்ற வகையில் அவைக்கு வரும்படி பேரவைத் தலைவர் முரசொலி செல்வத்திற்குக் கடிதம் எழுதினார்.

அ.தி.மு.க. ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படுகின்ற போக்கினைக் கண்டித்தும், முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் அவர்களைச் சட்டமன்றத்தில் கூண்டில் நிறுத்திக் கண்டிக்க இருப்பதைக் கண்டித்தும் 21ந்தேதியைத் துக்க நாளாகக் கருதி அன்று தமிழகம் எங்கும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்று கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகம் எங்கும் 21ஆம் தேதி காலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அன்றையதினம் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் மார்ஷலை அழைத்து முரசொலி செல்வம் வந்திருக்கிறாரா? என்று கேட்க அவர் வந்திருப்பதாகத் தெரிவித்தார். அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தம்புசாமி, பா.ம.க. உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜனதாதள உறுப்பினர் டாக்டர் குமாரதாஸ், எம்.ஜி.

ஆர். அ.தி.மு.க. உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் எழுந்து- இது ஜனநாயக விரோதமானது, தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத செயல், பத்திரிகை ஆசிரியரை அழைத்து கூண்டில் ஏற்றிக் கண்டிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினர். ஆனால் அவர்களின் கோரிக்கையைப் பேரவைத் தலைவர் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் வெளி நடப்பு செய்தனர். பேரவைக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் அன்று கறுப்புச் சின்னம் அணிந்து வந்திருந்தனர்.

செல்வத்தை அழைத்துவருமாறு மார்ஷலுக்கு பேரவைத் தலைவர் விடுத்த ஆணையின் பேரில் செல்வம் அவைக்கு வந்து அங்கே வைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி நின்று அவைக்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் பேரவைத் தலைவர் அவையின் கண்டனத்தைப் படித்தார்! அத்துடன் செல்வத்தை செல்லலாம் என்று கூறியதின் பேரில் செல்வம் வந்து விட்டார். அந்த நிகழ்ச்சி பற்றி "கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன்!"

என்ற தலைப்பில் எழுதிய உடன்பிறப்பு கடிதத்தில் ஒருசில பகுதிகள் வருமாறு:- "இந்தியாவின் ஆலோசகராக இங்கிலாந்து அரசின் வேண்டுகோளின்பேரில் இலண்டன் மாநகருக்குச் செல்ல அனிபால் எனும் விமானம் ஏறி, நீதிக்கட்சியின் தன்னேரில்லாத் தளபதி சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்கள் பயணம் செய்தபோது அவர் அமர்ந்திருந்த அந்த விமானம் ஓமான் கடலில் வீழ்ந்து, தமிழர்களின் செல்வத்தை- திராவிடர்களின் செல்வத்தை நம்மிடமிருந்து பிரித்துத் தொலைத்தது.

கலைஞர் 1940ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் நாள்தான் இந்தத் தாங்க முடியாத சோகம் தமிழ் மக்களை நிலைகுலையச் செய்தது. காணாமற் போனதாகச் சொல்லப்பட்ட அனிபால் விமானம்; எங்கேயாவது ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுப் பன்னீர்செல்வம் பத்திரமாக உயிரோடிருக்கிறார் எனச் செய்தி வராதா என்று வானொலிப் பெட்டிகள் இருக்குமிடங்களில் எல்லாம் செய்தியை எதிர்பார்த்து திரள் திரளாகக் காத்திருந்தவர்களில் நானும் ஒருவன்!

தமிழ்நாட்டுச் செல்வம் மட்டும் அல்லவே அவர்; எங்கள் திருவாரூருக்கு அடுத்த பெரும்பண்ணையூரில் பிறந்து வாழ்ந்த செல்வமும் ஆயிற்றே! 1940 மார்ச்சில் பன்னீர்செல்வம் மறைந்த சோக நிழல் இந்த மண்ணில் படிந்திருக்கும்போதுதான் அதே 1940 ஏப்ரல் திங்களில் என் சகோதரிக்கு ஒரு மகன் பிறந்தான். மறைந்தாலும்; மனத்தில் நிறைந்திருக்கும் பன்னீர் செல்வத்தின் நினைவாக அவனுக்கு நான் பன்னீர்செல்வம் என்று பெயரிட்டேன்.

அந்தப் பன்னீர்செல்வம்தான் கடந்த 21ஆம் நாள் சட்டப் பேரவைக் கூண்டிலே நிறுத்தப்பட்ட முரசொலி ஆசிரியர் செல்வம். செல்வம் பிறந்தபோதே, என் தாயார் என்னைப் பார்த்து, உனக்கு ஒரு பெண் பிறந்தால் அதற்கு செல்வி எனப் பெயரிட்டு செல்வத்துக்கே துணைவியாக்க வேண்டுமென்று அன்புக் கட்டளை பிறப்பித்தார்கள். பாட்டியின் ஆசை நிறைவேறியது; ஆனால் அதை அந்த அன்புப் பாட்டியிருந்து பார்க்கவில்லை. அண்ணா தலைமையில், தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, காயிதே மில்லத் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி மணமக்களை வாழ்த்தினர்.

அந்த மணக்கோலத்தில் செல்வத்தை நான் பார்த்தபோது கூட எனக்கு அத்தனை மகிழ்ச்சியில்லை! புதுக்கோட்டை, திருச்சி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது தாம்பரம் ரயிலடியில் வாங்கிப் படித்த நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஆங்கிலம், தமிழ் நாளேடுகள் அத்தனையிலும் செல்வம் சட்டப்பேரவைக் கூண்டில் சிரிப்பு தவழ நின்று கொண்டிருக்கும் படம் வெளிவந்துள்ளதைப் பார்த்தபோதுதான் எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

வாடிய முகத்துடன் அந்தக் கூண்டுக்குள் செல்வம் நின்றிருந்தால்; என்னகம் வாடிப் போயிருக்கும்! அந்தச் செல்வத்தின் பெயரை இந்தச் செல்வத்துக்கு எத்துணைப் பொருத்தமாக அப்போதே வைத்தேன் என்று என்னையே நான் பாராட்டிக் கொண்டேன்; படத்தில் செல்வத்தின் முகத்தில் அரும்பி நிற்கும் புன்முறுவல் கண்டு! படத்தை அரசாங்க செய்தித் துறையே எடுத்து, அந்தத் துறையே அல்லவா எல்லா ஏடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது!

இது, மேலும் பூரிப்பு வழங்கும் தகவல் அல்லவா! அந்தப் படத்தை உற்றுப் பார்த்தேன். செல்வம் நிற்கும் கூண்டுக்கு அருகே அறிஞர் அண்ணாவின் படம். நான் முதல்வராக இருந்தபோது பிரதமர் அன்னை இந்திரா காந்தியை அழைத்துத் திறந்து வைக்கப்பட்ட படம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற எழுத்துக்கள் ஒளி விடுகின்றன பார்த்தாயா? அண்ணா, செல்வத்தை - மிகச் செல்லமாக "செல்வா" என்றுதான் அன்பொழுக அழைத்து முரசொலிக்குத் தேவையான அறிவுரைகளைச் சொல்லுவார்.

அடையாறு மருத்துவமனையில் அண்ணாவுக்கு இறுதியாக ஓர் அறுவை சிகிச்சை அவசியம் தேவை என முடிவு செய்யப்பட்டபோது கூட; அண்ணா அவர்கள் அந்த உடல் நலிவுடனும் "செல்வா எங்கே?" என அழைத்து, செல்வம் அவர் அருகில் சென்றதும் "செல்வா! வீட்டில் உள்ள பிள்ளைகளை அழைத்து வா! நான் பார்க்க வேண்டும்" என்று கூறியதை எப்படி மறக்க முடியும்.

அந்தப் பாசமுள்ள பெருந்தலைவனின் படத்தருகே கூண்டு! அதிலே செல்வம்! மன்றத்தில் ஜனநாயகம் போற்றிய பல தலைவர்களின் படங்கள்! கலைஞர் முரசொலி 1942ல் தொடங்கப் பெற்று 1943ல் முதல் ஆண்டு விழா கொண்டாடியபோது வருகை தந்து வாழ்த்தியவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும், பேராசிரியர் அன்பழகனார் அவர்களும்! இன்று அந்த முரசொலியைக் கூண்டிலேற்றியது சரியென்று வாதாடுகிறார்; பேரவையில் நாவலர் நெடுஞ்செழியன்! இது பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கும் பழிவாங்கும் செயல் என்று கண்டித்துக் கறுப்புச் சட்டை அணிந்து திருச்சி வீதியிலே மனிதச் சங்கிலி அறப்போருக்குத் தலைமையேற்று கொளுத்தும் வெயிலில் நிற்கிறார் பேராசிரியர்!

என்னே அரசியலின் விசித்திரம்! "எல்லோரையும் தாங்கிட ஒரு தாயின் வயிறு போதாத காரணத்தால் தனித் தனித் தாய்களின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் நாம்" எனப் பெருமையுடன் கூறிப் பெருமிதம் கொண்ட அண்ணா அவர்கள், இன்றில்லாதது அவர் வரையில் அவருக்குக் கிடைத்த பேறுதானே! இல்லையா உடன்பிறப்பே! எப்படியோ கூண்டு கண்டேன்; நான் குதூகலம் கொண்டேன்!"

இதுதான் நான் முரசொலியில் எழுதிய கடிதம். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) திருவிழாக் கூத்தும்; திராவக வீச்சும்! இங்கிலாந்து நாட்டில் 9-4-92 அன்று தேர்தல் நடைபெற்றது. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் அப்போதைய மொத்த எண்ணிக்கை 651. அந்த நாட்டுத் தேர்தலில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி. 4 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் அந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கன்சர்வேடிவ் கட்சி அந்த நாட்டில் 1979ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியிலே இருந்து வந்தது. அந்தத் தேர்தலில் அந்தக் கட்சி மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என்று பரவலாகவே பேசப்பட்டது. பிரதமராக இருந்த ஜான் மேஜர் பிரச்சாரத்திற்குச் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு எதிராகக் குரல் எழுந்தது. முறைப்படி ஜூன் திங்களில் தான் அங்கே தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் ஜான் மேஜர் அதற்கு முன்பே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.

அந்த நாட்டின் பிரதமராக 11 ஆண்டுக் காலம் தொடர்ந்து இருந்து வந்த திருமதி தாட்சர் கட்சியில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகப் பதவி விலகியதால் ஜான் மேஜர் 1990இல் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் அதற்குப் பிறகு அந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாகத் திரும்ப அவர் வருவாரா என்பது பெரிதும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. வெளியிடப்பட்ட 46 கருத்துக் கணிப்புகளில் 40இல் கன்சர்வேடிவ் கட்சி தோற்றுவிடும் என்றுதான் கலைஞர் முடிவுகள் அறிவித்தன.

பிரபல தேர்தல் நிபுணர்கள் கூட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காதென்றும், தனிப்பெரும் கட்சியாகத் தொழிலாளர் கட்சி மட்டுமே விளங்குமென்றும், கன்சர்வேடிவ் கட்சி இரண்டாவது இடத்திற்குத்தான் வருமென்றும் கருத்து தெரிவித்தார்கள். எனினும் அனைவரது கணிப்புகளையும் பொய்யாக்கி விட்டு ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது. கன்சர்வேடிவ் கட்சி 336 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 271 இடங்களிலும், லிபரல் ஜனநாயகக் கட்சி 20 இடங்களிலும், மற்ற கட்சிகள் 24 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த வெற்றிக்குக் காரணமான பிரதமர் ஜான் மேஜரின் வாழ்க்கை வரலாறு, விசித்திரமானது. அவர் ஒரு சர்க்கஸ் கலைஞருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர். 16வது வயதிலேயே தன் பள்ளிப் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். பிறகு படிப்படியாக உயர்ந்து வங்கி அதிகாரியாக ஆனார். இளமைப் பருவத்திலேயே கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்தார். 1979ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அதற்குப் பிறகு பத்தாண்டுகளில் அமைச்சராக உயர்ந்தார். திருமதி தாட்சர் அமைச்சரவையிலே ஜான் மேஜர், நிதி அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் அந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜான் மேஜர் இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். இவரது மனைவி பெயர் நார்மா. இவருடைய மகள் எலிசபெத் கால்நடைகளுக்கான நர்சாகப் பணியாற்றினார். பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் அவர்கள் 92ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ஒரு விமான விபத்தில் சிக்கி அதிசயமாகத் தப்பிய நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அவர் சென்ற விமானம் புயலில் சிக்கி, பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த மூன்று விமானிகளும் இறந்தபோதிலும் அராபத் சிறு காயங்களுடன் தப்பினார். அப்போது அவருக்கு வயது 62. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தனது 39வது வயதிலிருந்து அவர் பாலஸ்தீன மக்கள் விடுதலைக்காகப் போராடி வரும் தலைவர். ரம்சான் பண்டிகையை முன்னிட்டு அவர் பல்வேறு இடங்களில் உள்ள பாலஸ்தீன விடுதலை இயக்க வீரர்கள் தங்கியிருந்த முகாம்களுக்கெல்லாம் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

அதன் தொடர்பாகக் கார்ட்டூம் நகரிலிருந்து லிபியா நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள முகாமிற்கு ஜெட் விமானத்தில் சென்றார். விமானத்தில் அராபத் உட்பட மொத்தம் 15 பேர் இருந்தனர். 3 பேர் விமானிகள், மற்றவர்கள் அராபத் அவர்களின் பாதுகாவலர்கள். சகாரா பாலைவனத்துக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது பாலைவனப் புயலில் விமானம் சிக்கிக் கொண்டது. அல்சோப்ரா விமான நிலையத்தில் இறங்க அனுமதி கேட்டபோது, அங்கே புயல் வீசுவதால் அல்சாரா சென்று விடுங்கள் என்று விமான தளத்திலிருந்து கூறப்பட்டது.

பிறகு தகவல் தொடர்பு எதுவும் இல்லை. அல்சாராவிலும் இறங்க முடியாமல் தவித்த விமானம் பின்னர் எங்கே சென்றது என்று தெரியவில்லை. விமானத்தின் கதி என்ன, அராபத் என்னவானார் என்று அவரை ஆதரிக்கும் நாடுகள் எல்லாம் கவலையில் ஆழ்ந்தன. அராபத்தைக் கண்டுபிடிக்க உதவும்படி அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, எகிப்து நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் அந்த வேண்டுகோளையேற்றுக் கொண்டார்.

15 மணி நேரம் தேடியபின் அமெரிக்க செயற்கைக்கோள் அல்சாராவிலிருந்து 44 மைல் தூரத்தில் விமானம் மோதி நொறுங்கிக் கிடந்ததைக் கண்டு பிடித்தது. யாசர் அராபத் அவர்களும், அவருடைய பாதுகாவலர்களும் ஆச்சரியமாக உயிருடன் மீட்கப்பட்டனர். விமானிகள் மட்டும் இறந்துவிட்டனர். அராபத் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி கேட்டு உலகமே தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது. 1992ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் கும்பகோணம் மகாமகத் திருவிழா!

எந்த மகாமக விழாவிலும் இல்லாத அளவிற்கு அந்த ஆண்டு கூட்டம் அதிகம். காரணம், எந்த மகாமக விழாவிற்கும் அத்தனை ஆடம்பரமான அழைப்புகள் கலைஞர் ஆரவாரமாக பக்தர்களுக்கு விடப்பட்டதில்லை. அத்தனை முழுப்பக்க விளம்பரங்கள் அரசின் சார்பிலும், மாவட்ட ஆட்சித் தலைவரைப் பொறுப்பாளராகக் கொண்ட விழாக் குழுவின் சார்பிலும் செய்யப்பட்ட

தில்லை. அவைகளும் போதாதென்று ஆளுங் கட்சி அமைப்பின் சார்பிலும் விளம்பரமோ விளம்பரம்! ஏடுகளில் முழுப் பக்க விளம்பரங்கள்! அத்தனை ஆர்ப்பாட்ட விளம்பரம் செய்ததும் மகாமகத்துக்காகவா என்றால் அதுதான் இல்லை. அம்மையார் ஜெயலலிதா அந்தக் குளத்துப் படிக்கட்டுகளை மிதிக்க வருகிறார் என்பதற்காகத்தான்! பக்தர்களை மட்டு மல்ல, பத்து லட்சம் உணவுப் பொட்டலங்கள் ஜெயலலிதாவின் சொந்தப் பணத்திலேயே வழங்கப்படும் என்று பிச்சைக்காரர்களுக்கும் அழைப்பு.

மகாமகத்தன்று நடந்தது என்ன? பாவம் தொலைக் காட்சியில் விழா நிகழ்ச்சிகளை விளக்குவதற்காக நியமிக்கப்பட்ட தமிழ் மொழி விரிவுரையாளர்கள் திணறிப் போனார்கள். மகாமகக் குளக்கரையையொட்டி உள்ள கடவுளர்களைப் பற்றி அவர்கள் விளக்க முற்பட்டால், குளத்தைச் சுற்றி மிக உயரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நூற்றுக்கணக்கான கட் அவுட்களைத்தான் காண நேரிட்டது. அவர்கள் கட் அவுட்களை விமர்சிப்பார்களா? அல்லது கடவுளை விமர்சிப்பார்களா?

விழாவிற்கு காஞ்சி பெரிய சங்கராச்சாரியார் செல்லவில்லை. நடு சங்கராச்சாரியாரும், இளைய சங்கராச்சாரியாரும் சென்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்கோ ஒரு படித்துறையில் அம்போ என்று பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைத் தவிர தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தர்மபுரம் ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம் போன்றவர்களைத் தொலைக்காட்சியிலே காட்டவே இல்லை. கும்பகோணத்தில் உள்ள காசி விசுவநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஏகாம்ப ரேஸ்வரர் போன்ற 11 சிவ ஸ்தல சாமிகளையும், சாரங்க- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பாணி, சக்கரபாணி உள்ளிட்ட ஐந்து வைணவ ஸ்தல சாமிகளையும் மிஞ்சக்கூடிய அளவிற்கு- குடந்தையிலே உள்ள கோடீஸ்வரர் என்ற கடவுளுக்கு மேலாக புதிய தெய்வம் கோடீஸ்வரி ஜெயலலிதா மகாமகக் குளத்திற்கு எழுந்தருளிய காரணத்தால் அதிகாரிகள் அனைவரும் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டும், ஆத்திகப் பெரியவர்கள் அந்தணப் பெருமக்கள் கையது கொண்டு வாயது பொத்திக் கொண்டும், அமைச்சர்கள் சிகப்புக் கம்பள சுருக்கங்களைச் சரி செய்து கொண்டும், போலீசார் பூப்பந்தல் முதல்வரின் தலையில் இடிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொண்டுமிருந்தது தொலைக்காட்சியில் நன்றாகத் தெரிந்தது.

குளத்திற்குள் ஈயம் பித்தளைப் பாத்திரங்களிலும், தகரக் குவளைகளிலும் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக் கொள்ள பக்தர்கள் தவியாய்த் தவித்தபோது, தனிக்குளியலறை மேடையில் 21 வெள்ளிக் குடங்களை அலங்கரித்து வைத்து புரோகிதர்கள் அடக்கவொடுக்கமாக மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருந்தனர். 21 குடங்களில் இருந்த குளத்து நீரை... புரோகிதர்கள் பயபக்தியுடன் முணுமுணுத்துக் கொண்டே எடுத்து எடுத்துக் கொடுக்க அவற்றை வாங்கி தோழிகள் இருவரும் மாறி மாறி தலையில் ஊற்றிக் கொண்ட மகாத்மியமே மகாமகாமகத் திருவிழாவின் சிறப்புக்குரிய அம்சமாகும்.

அதற்கு முன்பும் மகாமகத் திருவிழா நடைபெற்றதுண்டு. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மகாமகத்தின் போது விழாவுக்கு முதல் நாள் அவர் சென்று மக்களுக்கான வசதிகளைப் பற்றி அறிந்து கொண்டு உடனடியாக சென்னை திரும்பிவிட்டார். அண்ணா முதல்வராக இருந்தபோது பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த நான் குடந்தை சென்று அந்த நகரைச் கலைஞர் சுற்றி சுற்றுச்சாலை அமைத்துக் கொடுக்கும் பணிகளை மேற்பார்வையிட்டுவிட்டு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பே சென்னை திரும்பிவிட்டேன்.

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதும், மூகாம்பிகை கோவிலுக்குக்கூட ஆடம்பரமின்றி சென்று வணங்கி வந்தாரே தவிர, அவர் காலத்தில் நடந்த மகாமக விழாவிற்கு அவர் சென்று அந்தக் குளத்தைப் படுகளமாக்க நினைத்ததில்லை. ஆனால் 1992இல் தோழிகள் இருவரும் 21 குடங்களில் தண்ணீரை ஒருவர் மாற்றி ஒருவர் ஊற்றிக் கொண்ட காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட குடும்பங்களில் மண்பாண்டக் குடங்களை உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆம்; 100க்கு மேற்பட்டவர்கள் இடிபாடுகளிலே சிக்கியும் குளத்திலே மூழ்கியும், உணவுப் பொட்டலங்களைப் பெறுவதற்கான போட்டியில் நசுங்கியும், தோழிகள் நீராடிய காட்சியை நேரில் காணத் திரண்ட கூட்டத்தின் எடை தாங்க முடியாமல் சுவர் இடிந்து விழுந்த காரணத்தினாலும் மாண்டு மண்ணோடு மண்ணாய்ப் போனார்கள். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும், அந்தப் பயங்கர உயிர் இழப்புகளுக்குக் காரணங்களை அறிந்திடவும், பொறுப்பானவர்களைத் தண்டிக்கவும் ஏற்றவகையில் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைப்பதோடு, இறந்தோர் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு ஒரு அறிக்கை விடுத்தேன்.

மகாமகத் திருவிழாவில் சாவுக்குக் காரணம் காவல்துறையினர் நடத்திய தடியடிதான் என்றும் நீதி விசாரணை தேவை என்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அறிக்கை விடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நீதி விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாகச் செய்யப்படாததுதான் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று தமிழக ஜனதாதள தலைவர் சிவாஜி நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கணேசன் அறிக்கை விடுத்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகாமகச் சாவுகளுக்கு ஜெயலலிதாவே பொறுப்பு என்று அறிக்கை விடுத்தார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. சார்பில் திருநாவுக்கரசு விடுத்த அறிக்கையில் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை அவசியம் தேவை என்று கேட்டிருந்தார். ஆனால் தமிழக அரசின் சார்பில் விடுத்த அறிக்கையில், உணவுப் பொட்டலத்தைப் பொறுக்க பக்தர்கள் ஓடி மோதிக் கொண்டதுதான் சாவுக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

மேலும் இந்து இதழில் "மகா மகமா? அல்லது ஜெயா மகமா?" என்ற தலைப்பில் வெளியிட்ட செய்திக்கும் அரசின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்துக் கட்சிகள் சார்பிலும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை வைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்து, தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் விசாரணையே போதும் என்று அரசு முடிவு செய்தது. அந்தச் சம்பவம் குறித்து அப்போது தலையங்கம் எழுதிய தினமணி அதனை முடிக்கும்போது, "ஆயிரம் கார் பவனி, போகும் பாதையில் நீண்ட நேரத்திற்கு போக்குவரத்து நிறுத்தம், ஊதாரித்தனமான அரசு விழாக்கள், சுய விளம்பரங்கள் எல்லாம் ஜெயலலிதாவின்பால் மக்களுக்கு இருக்கும் அபிமானத்தைக் குறைத்து வருகின்றன என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

மகாமகத் துயர நிகழ்ச்சி நீங்காத களங்கத்தை ஏற்படுத்திவிட்டது." என்று எழுதியிருந்தது. 92ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருக்கி நாட்டில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. முதலில் வந்த செய்தியில் கலைஞர் ஆயிரம் பேர் பலியாகி விட்டதாகத் தெரிந்த போதிலும், பிறகு பலியானவர்களின் எண்ணிக்கை 5000 ஆக உயர்ந்தது. சம்பவம் நடந்த எர்ஜின்கான் நகரத்தில் இருந்த கட்டிடங்களில் 25 சதவிகித கட்டிடங்கள் இடிந்து விழுந்துவிட்டன.

பூகம்பத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் இருந்தன. துருக்கியின் அருகில் உள்ள நாடுகளும், அமெரிக்கா போன்ற பெரிய வல்லரசு நாடுகளும் உடனடியாகத் தங்களது மீட்புப் படையினரையும் உணவுப் பொருள்களையும் அனுப்பி துருக்கி நாட்டு மக்களுக்கு உதவி புரிந்தனர். 1992ஆம் ஆண்டு தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர் திருமதி சந்திரலேகா. இவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பொறுப்பிலே இருந்த போது ஸ்பிக் நிறுவனத்தில் தனியார் பங்குகள் மாற்றிக் கொடுக்கப்பட்ட வகையில் அரசு தனியார் ஒருவருக்குச் சலுகை செய்யும் வகையிலே அரசின் விருப்பத்திற்கிணங்க கோப்பிலே கையெழுத்திட மறுத்த காரணத்தினால் இந்தப் பதவியிலிருந்து திடீரென்று மாற்றப்பட்டு தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் கமிஷனராக நியமிக்கப்பட்டதாகப் பல ஏடுகளில் அப்போது செய்தி வந்தது.

இந்தச் செய்தி வந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர் மே திங்கள் 19ந்தேதியன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பி காரிலே அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது எழும்பூர் புகைவண்டி நிலையத்திற்கு எதிரிலே திடீரென்று ஒருவன் அவரது காரை நெருங்கி அவர் மீது திராவகத்தை வீசினான். அதிலே மிகவும் பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி உடனடியாக மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சைக்குப் பிறகு தேறினார்.

அவரது காரின் ஓட்டுநரும் பொதுமக்களும் திராவகம் வீசியவனைத் துரத்திச் சென்று பிடித்த போதும், அவனுடன் வந்த மற்றவர்கள் தப்பிச் சென்று விட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது திராவகம் வீசக் காரணமாக இருந்தவர்களைத் தீவிரமாகக் கண்டித்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் செயலாளராக இருந்த திரு. மலைச்சாமி, ஐ.ஏ.எஸ். ஒரு நீண்ட அறிக்கை விடுத்தார். அந்தச் சம்பவம் கொலை நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) செய்யும் நோக்கத்தோடு நடைபெறவில்லை என்றும், உருவத்தைச் சிதைக்கவே திராவக வீச்சு நடைபெற்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டியின்போது தெரிவித்தார்.

இது குறித்த வழக்கு தமிழகத்தில் பல ஆண்டுகாலம் நடைபெற்றது. இடையிலே ஒரு முறை முக்கிய கைதி தப்பிச்சென்று மீண்டும் பிடிபட்டு அதற்குப் பிறகும் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களே தவிர, அவர்களுக்குப் பின்னாலிருந்து தூண்டிவிட்டவர்கள் தப்பிவிட்டார்கள் என்றுதான் தமிழகத்திலே பரவலாகப் பேசப்பட்டது. உண்மையாக அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது எல்லோருக்கும், அனைத்து ஏடுகளுக்கும் தெரிந்த போதிலும் ஆதாரபூர்வமாக அது நிரூபிக்கப்பட வில்லை என்பது நீதிக்குப் பின்னால் மறைந்துவிட்ட உண்மை.

அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்த இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவும், கழகத் தோழர்கள் ஆங்காங்கு கைது செய்யப்பட்டு வந்ததின் காரணமாகவும் 92ஆம் ஆண்டும் என்னுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாட வேண்டாமென்றும், என்னைச் சந்திக்க கழகத் தோழர்கள் யாரும் சென்னைக்கு வரவேண்டாமென்றும் அந்த நாளில் கலைஞர் கழகத் தோழர்கள் ஏழையெளியோர்க்குத் தங்களால் இயன்ற வகையில் உதவிகள் புரிந்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன்.

20-5-1992 அன்று தமிழகம் முழுவதிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தேர்தல் 12 மாவட்டங்களில் நடைபெற்று செயலாளர்களும், மாவட்டக் கழகப் பிரதிநிதிகளும் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய மாவட்டங்களில் அடுத்த நாளான 21ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதியன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற புதிய பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல் போட்டியின்றி நடைபெற்று, முறையே நானும், பேராசிரியரும், சாதிக்பாட்சா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

துணைப் பொதுச் செயலாளராக நாஞ்சிலார் நியமிக்கப்பட்டார். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) துரத்தப்பட்ட நந்தனும்; துணை ஜனாதிபதியாக நாராயணனும்! 1989-90 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கழக ஆட்சியின் போது விவசாயிகளுக்கு மட்டும் செய்யப்பட்ட ஒருசில சாதனைகளைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். விவசாயிகளின் கடன் ரூபாய் பத்தாயிரம் வரையில் தள்ளுபடி செய்யும் திட்டத்தின்கீழ் தேசிய முன்னணி அரசின் உதவியுடன் கழக அரசு கூட்டுறவு வங்கிக் கடன் சுமார் 270 கோடி ரூபாயையும், கிராமிய வங்கி, வணிக வங்கிக் கடன்கள் சுமார் 220 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்ததின் மூலம் 18 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளும் கைவினைஞர்களும் பயனடைந்தனர்.

மேலும் 90ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் பம்ப் செட்டுக்கான மின்சாரத்தை இலவசமாக வழங்குவதென்றும் அதனால் 12 லட்சம் சிறிய பெரிய விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு சுமார் 41 ஆயிரம் பம்ப் செட்டுகளுக்கும், 1991ஆம் ஆண்டு மேலும் 40 ஆயிரம் பம்ப் செட்டுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 1989 ஏப்ரல் திங்கள் முதல் விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

இந்தப் புள்ளி விவரங்களை ஏன் சுட்டிக்காட்டுகிறேன் என்றால், அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் வந்ததும் வராததுமாக விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. அதனைக் கண்டித்து கலைஞர் பல முறை கழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததின் பேரில், அந்த அறிவிப்பை மாற்றி பெரிய விவசாயிகளுக்கு மின் கட்டணம் விதிக்கிறோம் என்ற பெயரால், 1992ஆம் ஆண்டு ஜூன் திங்களில் அ.தி.மு.க.

அரசு ஒரு குதிரை சக்திக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுமென்றும், அதனை 6 மாதத்திற்கு ஒருமுறை என்று இரண்டு தவணைகளில் செலுத்தலாம் என்றும், 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பைப் பெற்றவர்கள் ஒரு குதிரை சக்திக்கு 150 ரூபாய் வீதம் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்றும் அறிவித்தது. மின்சார பம்புசெட் வைத்துள்ள சிறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 98 ஆயிரம் என்றும், அவர்களைத் தவிர 11.50 லட்சம் பம்பு செட்டுகளை வைத்துள்ள மற்ற விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து உடனடியாகக் கழகத்தின் சார்பில் நான் ஒரு அறிக்கை விடுத்தேன். விவசாயிகள் சங்கங்களின் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள். 92ஆம் ஆண்டு ஜூன் 11ந்தேதியன்று அராஜக ஆட்சியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், ஜூன் 13ந்தேதியன்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து பேரணி நடத்தவும், ஜூன் 16ந் தேதியன்று நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் நடத்தவும் கழகத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஜூன் 11ந்தேதி மதுரையிலே அதற்காக நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் நானும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ.நல்லசிவன், ப.மாணிக்கம் ஆகியோரும் கலந்து கொண்டோம். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியரும், சங்கரய்யா, நல்லக்கண்ணு ஆகிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) மதுரையிலே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நான், தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரைச் சிறையிலே இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனையும், அவரது கணவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறலாம் என்பதற்காக சென்னையிலிருந்து எனது குடும்பத்தினரை அழைத்துச் சென்றிருந்தேன்.

ஆனால், அவர

்கள் இருவரையும் நான் சந்திக்கக் கூடாதென்று முதல்நாள் இரவோடு இரவாக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 27-2-1992 அன்று அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்ட நான் இந்த முறை திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டேன். இந்த நிகழ்ச்சியையொட்டியும், அப்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வைகோவின் தம்பி ரவிச்சந்திரனையும், ஜெகதீசனையும் கைவிலங்கிட்டு அழைத்து வந்ததையும் நினைவிற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கிலே வழங்கப்பட்ட தீர்ப்பினை இணைத்து நான் எழுதிய கடிதத்திலே குறிப்பிட்ட அந்தப் பகுதியை இதிலேயும் ஞாபகப்படுத்துவது சரியாக இருக்குமென்று கருதுகிறேன்.

1980ஆம் ஆண்டு டெல்லி திகார் சிறைச்சாலையிலே சுனில் பத்ரா என்ற ஒரு கைதி அடைபட்டிருந்தான். அவன் கொலை வழக்கிலே சிக்கி ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தான். அந்தக் கைதி சிறையில் இருந்தவாறே உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்தை உச்ச நீதிமன்றம் அவனது ரிட் மனுவாகவே பாவித்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வி.ஆர். கிருஷ்ணய்யர், ஆர்.எஸ். பதக், ஓ.

சின்னப்ப ரெட்டி ஆகியோர்தான் அந்த விசாரணையை நடத்தினர். சுனில்பத்ரா அந்தக் கடிதத்திலே எழுதியிருந்தது என்ன தெரியுமா? சிறையிலே நேர்காணலுக்கு விதிக்கப்படும் தடை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளைத்தான் அவன் அந்தக் கடிதத்திலே குறிப்பிட்டுவிட்டு, தனக்குக் கைவிலங்கு பூட்டி அழைத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தான். அதனை வெறும் புலம்பல் என்று உச்ச நீதிமன்றம் கலைஞர் எடுத்துக்கொள்ளாமல் அதன்மீது விசாரணையும் நடத்தி தீர்ப்பும் வழங்கியது.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் மனித நேயப் பண்பு வளர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். நீதிபதி சின்னப்ப ரெட்டி அவர்கள் சமூக நீதிக் காவலர். அவர்களோடு நீதிபதி ஆர்.எஸ். பதக் அவர்களும் இணைந்து அளித்த தீர்ப்பில்- "சிறையில் உள்ளவர்களைப் பார்வையாளர்கள் நேர்காணல் என்பது குடும்பத்தினரும் நண்பர்களும் சந்திப்பதால் கைதிகளுக்கு மன ஆறுதல் ஏற்படும் என்பதற்காக அனுமதிக்கப்பட்டதாகும். மனிதாபிமானம் அற்றவர்கள்தான் இதனை மறுப்பார்கள்.

அதுமட்டுமல்ல; கைதியின் மனதை மென்மைப்படுத்தி ஒழுங்குறச் செய்யவே தண்டனை வழங்கப்படுகிறதே தவிர, முரட்டுத்தனமாக ஆக்குவதற்காக அல்ல. விலங்கு மாட்டுவது என்பது மனித கௌரவத்தையும் சமூக நீதியையும் அடைய வேண்டுமென்ற குறிக்கோளை அடையவொட்டாமல் தடுத்திடும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும்" -எனக் குறிப்பிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் 92ஆம் ஆண்டு ஆட்சியிலே இருந்த அ.தி.மு.க.நடந்து கொண்ட முறையையும் ஒப்பிட்டுத்தான் அப்போது நான் உடன்பிறப்பு கடிதம் எழுதியிருந்தேன்.

கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல் அவர்களைப் பார்க்க அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்தேன். அதன்மீது அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து சிறையில் சென்று அவர்களைப் பார்க்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. 92ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று தடா சட்டத்தின் கீழ் 18-11-91 அன்று கைது செய்யப்பட்ட வைகோவின் இளவல் வை. ரவியும், 9-1-92 அன்று கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் ஜெகதீசனும் உச்சநீதிமன்றத்திலே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஜூன் 13ஆம் தேதியன்று இலவச மின்சாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நடத்தவிருந்த வாகனப் பேரணிக்கு அரசின் சார்பில் அனுமதி மறுக்கப் பட்டது. தடையை மீறி பேரணியில் கலந்து கொள்ள வந்த விவசாயிகளும் கழகத்தினருமாகப் பத்தாயிரம் பேர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டனர். அந்த வரிசையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களையும் கைது செய்து ரிமாண்ட் செய்தார்கள்.

அவர்கள் கட்சி சார்பில் மறியல்கூட அறிவிக்கவில்லை, வெறும் ஆர்ப்பாட்டம்தான் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் கைது செய்யப்படக் காரணம் என்னவென்றால், ஊர்வலமாக அவர்கள் வந்தபோது, விவசாயிகளைத் தூக்கில் போடுவதுபோல இலவச மின்சார ரத்து நடவடிக்கை ஆகிவிட்டது என்பதை விளக்க மின்சார ஒயர்களைக் கயிறு போல கழுத்தில் கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்ததை ஜெயலலிதா அரசினால் பொறுத்துக்கொள்ள முடியாததால்தான் கைது செய்தார்கள்.

அதனையும் வன்மையாகக் கண்டித்து கழகத்தின் சார்பில் அறிக்கை விடுத்தேன். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி விடுத்த அறிக்கையில், இலவச மின்சாரம் நீடிக்கும் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு இலவச மின்சாரத்தை ரத்து செய்து விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்து விட்டார் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜூன் 16ந்தேதி தேசிய முன்னணி இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்பு ஆதரவுடன் அகில இந்திய அளவில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து நடத்தவிருந்த பொது வேலை நிறுத்தத்தை நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொழிலாளத் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.

கலைஞர் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடுமையாக எதிர்ப்பு ஏற்படத் தொடங்கியது. அதனைச் சமாளிக்க முடியாத தமிழக அரசு 18-6-92 அன்றும் 2-6-92 அன்றும் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்தது. எல்லா விவசாய பம்ப் செட்டுகளுக்கும் தொடர்ந்து இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கழகத்தின் சார்பில் அந்த அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டதோடு, அதற்காகப் போராட்டம் நடத்தி சிறையில் இருந்த தி.மு.க., பா.ம.க.

வைச் சேர்ந்தவர்களுக்கும், எதிர்ப்புக் குரல் கொடுத்த மற்றக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டேன். இவற்றோடு மற்றும் ஒரு கட்டமாக சிதம்பரம் அண்ணா மலைநகர் காவல்நிலையத்தில் நந்தகோபால் என்ற கைதியின் கண் எதிரிலேயே அவருடைய மனைவி பத்மினியைக் காவல் துறையினர் கற்பழித்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழகத்திலே பல்வேறு எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் 20-6-1992 அன்று தென் ஆற்காடு தெற்கு மாவட்டப் பகுதியில் உள்ள வட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னால் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.

1992ஆம் ஆண்டு இந்திய நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த மற்றொரு நிகழ்ச்சி பம்பாய் பங்கு மார்க்கெட் ஊழல். தொழில் நிறுவனங்களின் பங்குகளை (ஷேர்) அன்றாடம் குறைந்த விலைகளில் வாங்கி, பிறகு நிலவரத்தையொட்டி அதிக விலைகளில் விற்று இலாபம் சம்பாதிப்பதுதான் இதன் அடிப்படை. ஒரு சாதாரண பங்குத் தரகராக இருந்த ஹர்ஷத் மேத்தா ஒருசில ஆண்டுகளில் கோடீஸ்வரராக மாறினார். பங்குகளை விலைக்கு வாங்குவதற்குத் தேவையான பணத்தை அரசு வங்கிகளில் இருந்து தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

பாரத ஸ்டேட் வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற அரசு வங்கிகளும் சில நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வெளிநாட்டு வங்கிகளும் மேத்தாவின் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்காக ஆயிரம் கோடி ரூபாய் வரை தந்துள்ளன. இவரது நடவடிக்கைகளுக்குச் சட்ட விரோதமாக உதவி புரிந்த யுனை டெட் கமர்ஷியல் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே. மார்க்கபந்து, பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் சி.எல்.

கெமானி ஆகியோர் விடுப்பில் செல்லுமாறு உத்தரவிடப்பட்டனர். தேசிய வீட்டு வசதி வங்கி ஒரு பெரும் தொகையை ஹர்ஷத் மேத்தாவிற்குக் கொடுத்துவிட்டதால், கனரா வங்கி பரஸ்பர நிதிக்குத் தேசிய வீட்டு வசதி வங்கி தரவேண்டிய தொகையைத் தர முடியாமல் போய் விட்டது. அதனால் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அந்த வங்கியின் தலைவராக இருந்த ஃபெர்வானி தனது பதவியை விட்டு விலகினார். இந்தப் பிரச்சினை காரணமாக நாடாளுமன்றத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஹர்ஷத் மேத்தாவை நம்பி அரசு வங்கிகள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் எப்படி கடன் கொடுத்தன என்று அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை விசாரித்தறிய சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பல மாதங்கள் அந்த விசாரணை நடைபெற்றபிறகு ஹர்ஷத் மேத்தா தண்டிக்கப்பட்டு சிறையிலே இருந்தபோது திடீரென்று நோய்வாய்ப்பட்டு மறைந்தார். மாநிலங்களவையில் பங்குச்சந்தை மோசடி குறித்து கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் முரசொலி மாறன் விரிவாகப் பேசியதோடு, 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கணக்கே இல்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்- கலைஞர் களைக் கொண்ட கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பங்குச்சந்தை மோசடியில் பேர்குரோத் என்ற ஒரு நிதி நிறுவனமும் ஈடுபட்டுள்ளது என்று ஒரு புகார் வந்ததின் பேரில் அதன் மீது விசாரணை நடத்தப்பட்டது. அந்த நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்குவதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மத்திய அமைச்சராக இருந்த திரு.ப.சிதம்பரம் அவர்கள் முதலீடு செய்திருந்த காரணத்தால், அவராக தானே முன்வந்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 92ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 28, 29 ஆகிய நாட்களில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.

சார்பில் மதுரையில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாநாடு ஒன்றினை நடத்தினர். அந்த மாநாட்டிற்கான பணிகளில் அரசு அதிகாரிகள் எல்லாம் ஈடுபடுத்தப்பட்டார்கள். அரசுப் பணமும் செலவிடப்பட்டது. அ.தி.மு.க. ஆதரவு ஏட்டிலேயே அந்தச் செய்திகள் வந்திருந்தன. மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடந்தபின்னர் தி.மு.க.வே இருக்காது என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் கூட்டங்களில் பேசினார்கள். ஏராளமான கட் அவுட்கள் 100 அடி உயரத்திலும் 150 அடி உயரத்திலும் மதுரை மாநகர் முழுவதும் வைக்கப்பட்டு, இரவும் பகலும் அவற்றைப் பாதுகாக்கக் காவல்துறையினர் நியமிக்கப்பட்டார்கள்.

இதில் 150 அடி உயர கட் அவுட் விழுந்து அதன் காரணமாக 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த மாநாட்டினைப் பற்றி "டைம்ஸ் ஆப் இந்தியா" கருத்து தெரிவிக்கும்போது, "வெற்றி மாநாடு என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வர்ணித்திருக்கிறார். இந்த அபரிமிதமான ஊதாரிச் செலவை யார் எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது கும்பமேளா அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஜெயலலிதா புகழ்பாடும் விழாவாகும். இந்த மாநாட்டிற்கு ஆகும் செலவு என்ன என்பது அதன் அமைப்பாளர்களுக்குத் தெரியாது.

மாநாட்டிற்காக வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் கசக்கிப் பிழியப்பட்டிருக்கிறார்கள். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தத்திற்கு எளிதாக இரையாகி விடுகிற வியாபாரிகளைக் கட்டாயப்படுத்தி அபரிமிதமாகச் செலவழிக்கச் செய்து இந்த ஆடம்பரமான அ.தி.மு.க. மேளா நடத்தப்படுகிறது. ஜெயலலிதாவின் ராட்சத கட் அவுட்களும், அலங்கார வரவேற்பு வளைவுகளும் மதுரை நகரத்திற்கே திருவிழாக் கோலத்தைத் தரலாம்.

ஆனால் இவை எல்லாம் பொதுமக்கள் மனதில் ஜெயலலிதாவின் மரியாதையையோ செல்வாக்கையோ உயர்த்தாது" என்று எழுதியிருந்தது. இந்தச் செய்திக்கு அந்த ஏடு தந்திருந்த தலைப்பு "தேவதை ஜெயாவுக்கு மதுரையில் திருவிழா" என்பதாகும். இதைவிட "ஸ்டேட்ஸ்மென்" ஏடு அந்த மாநாடு பற்றி விளக்கமாக விமர்சித்திருந்தது. "மீனாட்சி அம்மன் திருக்கோவிலையே பின்னுக்குத் தள்ளி விட்டன தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ராட்சச கட் அவுட்கள்.

இந்தக் கட் அவுட்களில் பல மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை விட உயரமாக இருந்தன. அதுமட்டுமல்ல, ஜெயலலிதாவின் உருவம் பதித்த பெரிய பெரிய பலூன்கள் மதுரை நகரத்தின் வானத்தில் ஏராளமாகக் காணப்பட்டன. இந்தப் பலூன்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் பயணிகளுக்கும் பெரும் தொல்லை தருவனவாக இருந்தன. மதுரை நகரத்தின் மக்கள் தொகையில் ஒரு பகுதியினரும், இந்தக் கோவில் நகரத்திற்கு வருகின்ற யாத்திரிகர்களும் சுற்றுலாப் பயணிகளும் அ.தி.மு.க.

மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்குமுன் ஊரை விட்டு ஓடி விட்டனர். தமிழ்நாட்டின் சக்கரவர்த்தினியாக ஜெயலலிதாவிற்கு முடிசூட்டும் அந்த இரண்டு நாள் விழாவுக்காக மதுரை நகரத்தில் உள்ள அனைத்துத் திருமண மண்டபங்களும் ஓட்டல் அறைகளும் அக்கட்சியினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன. இப்படிப் பல விழாக்களைக் கொண்டாடுகிற வாய்ப்பைப் பெற்றமைக்காகக் கட்சிக்காரர்கள் கலைஞர் மிகுந்த நன்றியோடு தங்கள் தலைவிக்கு முடிசூட்டும் இந்த வெற்றி மாநாட்டைக் கொண்டாடுகிறார்கள்.

ஏனென்றால், முகவரியே இல்லாமல், ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் இருந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு லட்சாதிபதிகளாக ஆகியிருக்கிறார்கள். இவர்களில் சிலரின் படங்கள் உள்ளூர் காவல் நிலையங்களில் தேடப்படும் குற்றவாளிகள் என்ற வகையில் இடம் பெற்றிருந்தன. அவர்கள் எல்லாம் இப்போது அமைச்சர்களாகவும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இதெல்லாம் ஜெயலலிதாவின் கைங்கரியம், சாதனை.

இப்படிப்பட்ட ஒருவர் 99 கிலோ எடையுள்ள வெள்ளிச் சிம்மாசனத்தோடு மதுரைக்கு வந்திருக்கிறார். சிங்கங்கள் பொறிக்கப்பட்டு உயர்ந்த பட்டு மெத்தைகள் தைக்கப்பட்டு சென்னையில் உள்ள பிரபலமான நகை வியாபாரி ஒருவரால் தயாரிக்கப்பட்ட இந்தச் சிம்மாசனத்தின் விலை 12 லட்ச ரூபாய். இதற்குப் பொருத்தமாக ஜெயலலிதா சிம்மாசனத்தில் அமரும்போது 9 அடி வெள்ளிச் செங்கோலை வேறொருவர் கொடுத்தார். இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை மகுடம் ஒன்றுதான் காணவில்லை.

ஜெயலலிதாவின் முடிசூட்டு விழாவில் வழங்கப்பட்ட அன்பளிப்புகள் ஏராளம். அதில் ஒன்று இரண்டடி உயரம் உள்ள மீனாட்சி அம்மன் சிலை. அது தங்கத்தாலும் வெள்ளியாலும் விலை உயர்ந்த நவரத்தினக் கற்களாலும் செய்யப்பட்டது. 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட 10 கிலா எடையுள்ள தங்க மீன் ஒன்றும் தரப்பட்டது. அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலைச் சின்னமும் ஜெயலலிதாவுக்குத் தரப்பட்டது. தங்கத்தால் ஆன இந்த இரட்டை இலைச் சின்னம் 44 பவுனில் செய்யப் பட்டிருந்தது.

மாநிலத்திலுள்ள காவல்துறையில் சரிபாதிக்கு மேற்பட்டவர்கள் காவல்துறைத் தலைவர் ஸ்ரீபாலின் நேரடி பார்வையில் கட்சி மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்" என்று எழுதியிருந்தது. மதுரையிலே நடைபெற்ற அந்த மாநாட்டில் பேசும் போதுதான் ஜெயலலிதா, ராஜீவ்காந்தியின் மரணம்தான் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அ.தி.மு.க.வின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்று கூறும் வாதத்தைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறினார்.

அதே மாநாட்டில் பேசும்போதுதான் டான்சி நிலத்தை வாங்கியது உண்மைதான் என்றும், அதிலே எந்தவிதமான தவறும் கிடையாதென்றும் திட்டவட்டமாகத்

தெரிவித்தார். குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் பதவிக் காலம் 92ஆம் ஆண்டு ஜூலைத் திங்களோடு முடிவடைவதையொட்டி அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிற்று. இந்திரா காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவிக்காமல், அதுபற்றி முடிவு செய்யும் பொறுப்பை கட்சித் தலைவர் நரசிம்ம ராவ் அவர்களிடம் ஒப்படைத்தது. அதிலே ஒரு பொதுக் கருத்துக்காண பிரதமர் முயன்று பா.ஜ.க. தலைவர்களையும், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

அந்தப் பேச்சுக்களின் விளைவாக, குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டர் சங்கர்தயாள் சர்மாவிற்கு அதிக ஆதரவு தென்பட்டது. குடியரசுத் துணைத்தலைவராக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனை நிறுத்தலாம் என்ற பேச்சும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் ஜனதா தளத் தலைவர் வி.பி.சிங், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரைத்தான் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார்.

இந்திரா காங்கிரஸ் மற்றும் அவர்கள் கூட்டணி சார்பில் சங்கர் தயாள் சர்மா அவர்களும், தேசிய முன்னணியின் சார்பில் பேராசிரியர் ஜி.ஜி. ஸ்வெல் அவர்களும் போட்டியிட்டார்கள். இடது சாரிக் கட்சிகளும் சங்கர் தயாள் சர்மா அவர்களையே ஆதரிக்க முடிவு செய்தனர். பாரதிய ஜனதா கட்சியினரும் ஸ்வெல் அவர்களுக்கே ஆதரவளிப்பதென முடி- கலைஞர் வெடுத்தனர். அப்போது தேசிய முன்னணியில் தி.மு.கழகமும் இருந்த காரணத்தால் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஸ்வெல் அவர்களை ஆதரித்தது.

ஆயினும் 65 சதவிகித வாக்குகளைப் பெற்று சங்கர் தயாள் சர்மா குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று 25-7-92 அன்று பதவியேற்றார். அவரது வெற்றி பற்றி நான் செய்தியாளர்களிடம் கூறும்போது, திரு. சங்கர் தயாள் சர்மா அவர்கள் நல்லவர், எளிமையானவர். இனிய இயல்புகளைக் கொண்டவர். முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனைப் போல ஜனநாயக விரோதமாக நடக்க மாட்டார் என்று நம்புகிறேன் என்று கூறினேன்.

அதற்குக் காரணம் தி.மு.கழக அரசை ஜனநாயகத்திற்கு விரோதமாக 1991ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு ஆதரவாகக் கலைத்ததுதான். பதவி போனபிறகு சென்னை மாநகரில் தங்குவதற்காக அவருக்கு அரசு பங்களா ஒன்று அ.தி.மு.க. ஆட்சியிலே ஒதுக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான பங்களா சென்னை மாநகரிலே இருக்கின்றபோது அரசு பங்களா ஒதுக்கக் கூடாது என்று கூறி அப்போது திராவிடர் கழகத்தினர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி 200 பேர் கைதாகினர்.

புதிய குடியரசுத் துணைத் தலைவராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்த திரு. கே.ஆர். நாராயணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 21-8-92 அன்று பதவியேற்றார். அதுகுறித்து நான் விடுத்த செய்தியில், "நந்தனார் ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கண்ணீர் வடித்த அந்தக் காலத்தையும், இன்று நாராயணன் இந்திய நாட்டுத் துணை ஜனாதிபதி மாளிகையில் வீற்றிருக்கும் காட்சியையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இந்தச் சமுதாயப் புரட்சிக்கு தீபச் சுடர் ஏந்திய காந்தியடிகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் அயராத பணியினை எண்ணும்போது என் விழிகள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தேன். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தமிழக, ஆந்திர, கர்நாடக அரசுகள்! க்கு முன்பு அரசாங்கத்திற்குரிய பெரிய நிலப்பரப்பில், முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு, நடைபெற்று வந்த போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை 1989ல் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் அரசுடைமை ஆக்கிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அக்கல்லூரியின் அறக்கட்டளையினர், கல்லூரியை அரசுக்கு ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி அதன்படி அந்தக் கல்லூரியை அரசு உடமையாக்கி, லட்சக் கணக்கான ரூபாய் நன்கொடை என்ற பெயரால் மாணவர்கள் அந்தக் கல்லூரியிலே சேருவதற்கு இருந்த நிலை மாற்றப்பட்டு, கல்லூரி மருத்துவமனையும் ஏழை எளியவர்கள் சிகிச்சைக்குப் பயன்பட்டு, கல்லூரி அலுவலர்களும் அரசுத் துறை அலுவலர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றிடும் நிலைமைகளும் ஏற்பட்டு, அந்தக் கல்லூரிக்கு அரசின் சார்பில் ஏழு கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சித் திட்டங்களும் நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில் 1991ஆம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அந்த அறக்கட்டளையினர் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.

அப்போது பொறுப்புக்கு வந்திருந்த அ.தி.மு.க. அரசு உரிய ஆவணங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தால், நீதிமன்றத்தில் அந்தத் தனியார் அறக்கட்டளைக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்திலே முறையீடு செய்து கொள்ளாமல், அந்தக் கல்லூரியினை உடனடியாக தனியாருக்கே தாரை வார்த்துக் கொடுத்து கலைஞர் விட்டது. அதனை எதிர்த்து அந்தக் கல்லூரி மாணவர்களும், அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலே உள்ள மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

தேசிய முன்னணி மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் 7-8-92 அன்று சென்னையில் கறுப்புக்கொடி பேரணியும் ஆர்ப்பாட்டமும் கழகப் பொருளாளர் சாதிக்பாட்சா தலைமையில் நடைபெற்றது. 1-9-92 அன்று ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை அரசுடைமையாக்கிட வலியுறுத்தும் வகையில் மறியல் அறப்போராட்டம் நடத்துவதென்றும் தேசிய முன்னணி, இடதுசாரி கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. மறியல் நாளுக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பே கழக முன்னணியினர் ஆயிரக் கணக்கானோர் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டனர்.

அவ்வாறு முன்கூட்டி கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், க. சுந்தரம், கும்முடிப்பூண்டி வேணு, சோ.மா.ராமச்சந்திரன் போன்றவர்களை நானும், பேராசிரியர், முரசொலி மாறன், நாஞ்சிலார், செ.குப்புசாமி ஆகியோரும் சென்று சந்தித்தோம். செப்டம்பர் 1ந்தேதியன்று தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சினையையொட்டி தி.மு.க. நடத்திய மறியலில் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்த மருத்துவக் கல்லூரியை மீண்டும் அரசுடைமையாக்குவது குறித்து அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அரசு கவலைப்படவே இல்லை. அதே ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் நாளன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் திருமண மண்டபத்தில் முரசொலி பொன்விழா மிகுந்த சீரோடும் சிறப்போடும் பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமையில் நடைபெற்றது. தம்பி முரசொலி மாறன் வரவேற்புரை ஆற்றிட நான் முரசொலி பொன்விழா மலரினை வெளியிட்டு உரையாற்றினேன்.

அந்த மலரை யொட்டி நான் எழுதிய ஒரு சிறுகவிதை இதோ :- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அஞ்சுக அன்னையிடம் உயிர்ப்பால் அருந்தி, அய்யாவின் கொள்கையின்பால், உவப்பால் தவழ்ந்து, அண்ணாவின் பேரன்பால் ஆளாகி வளர்ந்து, இளமைத் துடிப்பால் இந்திப் போர்ப்படை கூட்டி இலட்சிய முனைப்பால் முரசொலிக்க வந்தவன் நான்! ஆதிமகன் வள்ளுவன் வழி முப்பால் தந்தவளே! அணுப்பொழுதும் அப்பால் சென்றிடாமல் - எனை அரவணைத்துக் காக்கின்ற தமிழே!

உன் சார்பில் போர்க்கள முரசின் பொன்விழா மலரை ஆர்த்தெழும் உடன்பிறப்பாளர் அனைவருக்கும்; - நெஞ்சில் என்றும் பூத்திருக்கும் தாய், தந்தை, பெரியார், அண்ணா - மற்றும் வாழ்த்துகின்ற ஆன்றோர் சான்றோர்க்கும்; காணிக்கை ஆக்குகின்றேன். இந்த விழாவிற்கு வி.பி. சிங் அவர்கள் தன் கைப்பட ஆங்கிலத்தில் வாழ்த்து எழுதி அதிலே தமிழில் வி.பி. சிங் என்று கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். விழாவில் நான் முரசொலியைத் தொடங்கியபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் நண்பன் திருவாரூர் தென்னன், அப்போது முரசொலியை அச்சிட்டுக் கொடுத்த திருவாரூர் கருணாநிதி அச்சக உரிமையாளர் கருணை எம்.

ஜமால், முரசொலியின் தொடக்ககால நிர்வாகியாகப் பணியாற்றிய சி.டி.மூர்த்தி, முரசொலி சொர்ணம், பெரியண்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தினேன். முரசொலியை தொடர்ந்து நடத்துவதற்காக ஒரு அறக்கட்டளை நிறுவுவதென்று அன்று காலை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை தனது தலைமையுரையில் பேராசிரியர் அறிவித்தார். அந்த அறக்கட்டளை சார்பில்தான் தற்போதும் முரசொலி தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளது.

92ஆம் ஆண்டு முரசொலிக்காக பொன்விழா கொண்டாடப்பட்டதைப் பற்றி எழுதும் இந்த 2002ஆம் ஆண்டுதான் முரசொலிக்கு மணிவிழா என்பதும், அந்த விழா இந்த ஆண்டில் நடத்தப்படவுள்ளது என்பதும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய செய்திகளாகும். கலைஞர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டிற்குள்ளாகவே பல்வேறு ஊழல் புகார்கள்! உதாரணமாக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயலலிதா விலைக்கு வாங்கியது; ஸ்பிக் பங்கு பேர ஊழல்; சாராய சாம்ராஜ்ய ஊழல்; அரசுக்குச் சொந்தமான பீர் தொழிற்சாலையை டெண்டர் விடாமலே தனியாருக்கு வழங்கிய ஊழல்; சொந்தமாக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் ஆட்சிக்கு வந்தவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், வைர, வைடூரிய நகைகளையும் சேர்த்திட்ட ஊழல், மதுரை அ.தி.மு.க.மாநாட்டிற்கு கட்டாய வசூல்; ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய ஊழல்; ஆம்னி பஸ்களுக்கு வரி குறைப்பு ஊழல்; சந்திரலேகா மீது திராவகம் வீச்சு போன்றவை, சிதம்பரம் காவல் நிலையத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட கொடுமை; வாச்சாத்தியில் 17 பெண்கள் கற்பழிக்கப்பட்ட அராஜகம் என்பன போன்ற சம்பவங்களை சமாளிக்க முடியாத ஜெயலலிதா 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தி.மு.கழக ஆட்சியில் முதல்வராக இருந்த என் மீது சிவசுப்ரமணியம் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தார்.

அதைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் திரு. ஏ. நல்லசிவன், எம்.பி., ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பல பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கலைஞர் மீது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் திசை திருப்பும் வேலை மட்டுமல்ல, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் ஆகும் என்று தெரிவித்தார். ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரான அர்கிஷோர் சிங் விடுத்த அறிக்கையில் ஜெயலலிதா அரசியல் பழிவாங்கும் நோக்குடன் இந்த விசாரணைக் கமிஷனை தி.மு.க.

தலைவர் மு.கருணாநிதி மீது அமைத்துள்ளார். இது வெளிப்படையான பழிவாங்கும் நடவடிக்கை. ஜெயலலிதாவின் இச்செயலை ஜனதா தளம் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று தெரிவித்தார். இந்தியக் கம்யூனிஸ் கட்சியின் சார்பில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஆர். நல்லக்கண்ணு அவர்கள் விடுத்த அறிக்கையில் தமிழக அரசின் நடவடிக்கை அரசியல் வஞ்சம் தீர்க்கும் செயலாகும். அரசியல் பழிவாங்கும் போக்கை கைவிட்டு, தமிழகத்தில் நாகரிகமான அரசியல் நடத்துவதற்கு வழிவகை காண வேண்டுகிறோம் என்று எழுதியிருந்தார்.

அந்த விசாரணைக் கமிஷன் குறித்து செய்தியாளர்கள் என்னுடைய கருத்தைக் கேட்டபோது, அந்த ஒன்றரை ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியிலே நடைபெற்ற ஊழல்களையெல்லாம் நான் பட்டியலிட்டுக் காட்டியதோடு, அந்தப் பிரச்சினைகளிலிருந்து. மக்களைத் திசை திருப்பிவிடலாம் என்ற கடைசி நம்பிக்கையுடன்தான் அந்தக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது என்றும், என் மீதும் என் குடும்பத்தார் மீதும் சாக்கடையை வாரி வீசினால் ஏதாவது ஒரு சில துளிகள் ஒட்டாதா என்கிற நப்பாசையுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா ஈடுபட்டிருப்பதாகவும், அவற்றையெல்லாம் தி.மு.

கழகம் சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திக்கும் என்றும் கூறினேன். விசாரணைக் கமிஷன் நியமித்ததோடு மட்டுமல்லாமல், அது பற்றி ஒரு முழு பக்க விளம்பரம் அனைத்து ஏடுகளிலும் 21-9-92 அன்று காலையில் வெளியிடப்பட்டது. ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்தது குறித்து அரசு செலவில் பத்து இலட்ச ரூபாய் செலவழித்து முழு பக்கம் விளம்பரங்கள் செய்தது எனக்குத் தெரிந்த வரையில் அதற்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. அது மாத்திரமல்ல, 21ந்தேதி வெளிவந்த அதே விளம்பரம் மீண்டும் ஒரு முறை அதுவும் முழு பக்க விளம்பரமாகவே செப்டம்பர் 28ந்தேதியன்றும் வெளியிடப்பட்டது.

இது ஒன்றிலிருந்தே அந்த அம்மையாரின் பழிவாங்கும் நோக்கம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களடங்கிய வாக்குமூலத்தைத் தர விரும்புபவர்கள் 15-10-92க்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு இந்த இரண்டு விளம்பரத்திலும் தெரிவிக்கப்பட்டது. அதிகம்பேர் வாக்குமூலம் தராததால், இந்த உறுதி கலைஞர் மொழிப் பத்திரங்களைப் பெறுவதற்கான கால அளவு பத்திரிகை செய்தி மூலம் 5-11-1992வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்குப் பிறகும் 6 உறுதி மொழிப் பத்திரங்கள்தான் வரப்பெற்றன. அவற்றின் மீது அதிகாரிகள் புலன் விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணைக் கமிஷன் முன்னால் மொத்தம் ஒன்பது குற்றச்சாட்டுகள் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்ததில் ஒன்றில்கூட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று விசாரணைக் கமிஷன் நீதிபதி அவர்களால் திட்டவட்டமாகக் கூறப்பட்டது. 1992ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் ஆண்டுதோறும் கொண்டாடுவதைப்போல் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

செப்டம்பர் 16ந்தேதி அண்ணா அறிவாலயத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு ஜெயலலிதாவின் ஊழல்கள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு பேரணி நடத்துவதென்று முடிவெடுத்திருந்தபடியாலும், செப்டம்பர் 15ஆம் தேதியன்று மாலையில் அண்ணா அறிவாலய வளாகத்திலே பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையினைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தபடியாலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்புற அமைந்தது. வழக்கம் போலவே கவியரங்கம், கருத்தரங்கம் அனைத்தும் கொண்ட மூன்று நாள் நிகழ்ச்சிகளாக அனைத்தும் நடைபெற்றன.

ஆண்டுதோறும் வழங்கப்படுவதைப் போலவே அந்த ஆண்டு பெரியார் விருது திருநெல்வேலி ஆ. திராவிட மணிக்கும், அண்ணா விருது கோவை மு.இராமநாதனுக்கும், கலைஞர் விருது இரா. வெற்றிகொண்டானுக்கும் வழங்கப்பட்டது. 16ஆம் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்திலிருந்து லட்சோப லட்சம் மக்கள் கலந்து கொண்ட பேரணி என்னுடைய தலைமையிலே புறப்பட்டது. சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம் வரையில்தான் பேரணி செல்ல போலீசார் அனுமதி தந்தனர்.

அங்கிருந்து நானும், பேராசிரியர், சாதிக்பாட்சா, முரசொலிமாறன், நாஞ்சிலார், நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஆற்காடு வீராசாமி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று ஆளுநர் பீஷ்ம நாராயண சிங்கைச் சந்தித்து ஜெயலலிதா மீதும், அவரது அமைச்சரவை மீதும் 18 குற்றச்சாட்டுகள் கொண்ட பட்டியலைக் கொடுத்தோம். ஆனால் அந்த மனுவின் மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் 24-10-92 அன்று ஆளுநருக்கு கழகத்தின் சார்பில் ஒரு நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டது.

அதில் ஆளுநர் அனுமதியை அளிப்பது தொடர்பாக மாநில அமைச்சரவையின் ஆலோசனையை ஆளுநர் பெறத் தேவ

ையில்லை, அவரே உரிய முடிவை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம், அதற்குப் பிறகு வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும், இல்லாவிட்டால் மறுக்க வேண்டும், முடிவெடுக்காமல் நீண்ட காலத்துக்கு மனுவை நிலுவையில் வைப்பதோ, புறக்கணிப்பதோ சரியல்ல, வழக்கு தொடர அனுமதி அளிப்பதில் காட்டப்படும் காலதாமதம், சட்டத்தை அமல்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதோ என மக்கள் சந்தேகிக்க வழி வகுக்கும் என்பதால் உரிய பதிலை விரைந்து அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தோம். இதற்கும் ஆளுநரிடமிருந்து பதில் இல்லாததால் ஆளுநர் அனுமதி தராததைச் சுட்டிக்காட்டி அதைப் பெற நீதிமன்றம் செல்வோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.

இந்தச் செய்தி ஏடுகளில் வந்ததும் ஆளுநர் பீஷ்ம நாராயணசிங் அவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கொடுக்க அவசியமில்லை என்று பதில் அனுப்பியிருந்தார். 18-9-92 அன்று ஆந்திர உயர்நீதிமன்ற முழு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் நன்கொடை கட்டணம் வசூலிக்கும் 20 தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க ஆந்திர மாநில அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ததோடு, தனியார் கல்வி நிறுவனங்கள் 50 சதவிகித இடங்களை நன்கொடைக் கட்டணம் வாங்கிக் கொண்டு நிரப்பிக் கொள்ள வகை செய்யும் ஆந்திரப் பிரதேச கல்வி நிறுவனங்கள் கலைஞர் சட்டத்தின் பிரிவையும் ரத்து செய்தது.

மாணவர்களிடமிருந்து நன்கொடை கட்டணமாக வசூலிக்கப்பட்ட முழு தொகையையும் 4 வாரங்களுக்குள் திருப்பிக் கொடுக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெல்லூரில் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதில் அந்தக் கல்லூரிக் குழுவிலே முதல் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவியும் தம்பியும் இடம்பெற்றுள்ளார்கள் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தார்கள். இதன் காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று 47 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மேலிடத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆந்திரப் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட நேரிட்டது. எதிர்ப்பு அதிகமான நிலையில் பிரதமர் அவர்கள் மூப்பனார் அவர்களை சிறப்புத் தூதுவராக ஹைதராபாத் நகருக்கு அனுப்பி வைத்தார். திரு.மூப்பனார் முதல்வரிடம் பேசியதைத் தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி தனது பதவி விலகல் கடிதத்தை தருவதற்கு முதலில் மறுத்த போதிலும் பின்னர் வலியுறுத்தலுக்கிணங்க பிரதமரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான பி.வி.

நரசிம்மராவ் அவர்களுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். ஆந்திராவிற்கு புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதமருக்கே சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்டது. பிரதமரின் அறிவுரையின் பேரில் ஆந்திர முதல்வராக மத்திய அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ரெட்டி ஒருமனதாக 7-10-92 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திராவில் இந்தத் தகராறு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் கர்நாடகத்திலும் முதலமைச்சர் பங்காரப்பாவிற்கு எதிராக அவருடைய கட்சிக்குள் பெரிய குழப்பம்.

அவருக்கு எதிராக அப்போது முதன் முதலில் போர்க்கொடி உயர்த்தியவர் அஜீஸ் சேட் என்ற அமைச்சர். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்தார். இவர் மட்டுமின்றி அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, பி. பசவ லிங்கப்பா, கே.எஸ். நாகரத்தினம்மா, மனோரமா மாதவராஜ், கே. சிவமூர்த்தி, டி.எம். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) மஞ்சுநாத், எம்.எஸ். ஆத்மானந்த, எம்.பி. நாத கெளட ஆகியோரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை அனுப்பினர்.

பங்காரப்பா தனது ஆட்சியின் இரண்டாண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்திருந்த விழர்வினை நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை மீறி பங்காரப்பா விழாவினை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டதின் காரணமாக மத்திய அமைச்சர்கள் தாராதேவி சித்தார்த்த, ராஜேஷ் பைலட், சீதாராம் கேசரி ஆகியோர் நிகழ்ச்சியிலே பங்கேற்றார்கள். பெரும்பாலான சட்ட மன்ற உறுப்பினர்கள் விழாவினைப் புறக்கணித்தனர்.

அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தன்னை அனுமதிக்க வேண்டுமென்று பங்காரப்பா கேட்டுக் கொண்டார். அதிருப்தி அமைச்சர்கள் பிரதமருக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதங்களின்மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அக்டோபர் 23ந்தேதி கர்நாடக அமைச்சர்கள் மூன்று பேர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியதின் பேரில் அவர் அவற்றை உடனடியாக ஏற்றுக் கொண்டார். கர்நாடகத்தின் முன்னாள் முதல் அமைச்சர்கள் அனைவரும் பங்காரப்பா பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை.

அவர் உடனடியாக விலக்கப்பட வேண்டுமென்று குண்டுராவ் அவர்களும், நிஜலிங்கப்பா அவர்களும், ராமகிருஷ்ண ஹெக்டே அவர்களும் வெளிப்படையாகவே தெரிவித்தனர். முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு பிரதமர் நரசிம்மராவ் பங்காரப்பாவிடம் கேட்டுக் கொண்டார். அதனையேற்று 11-11-92 அன்று பங்காரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக வீரப்ப மொய்லி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 20-11-1992 அன்று பதவியேற்றார்.

ஆனால் வீரப்ப மொய்லி புதிய முதல்வரானதை எதிர்த்து பேரவைத் தலைவராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா போர்க் கொடி உயர்த்தி, தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டு, தன் ஆதரவாளர்களையெல்லாம் வீரப்பமொய்லிக்கு எதிராகத் திரட்டினார். கலைஞர் 1992 டிசம்பர் 6 கரசேவை ஆம் ஆண்டு உலக அளவிலும் இந்திய நாட்டளவிலும் பெரும் விபத்துக்கள் நடைபெற்ற ஆண்டு என்பது மட்டுமல்ல; இந்தியாவில் மிகப் பெரிய மதக் கலவரமும் அதன் தொடர்பாக ஏராளமானோர் உயிர்ப்பலியாகவுமான கொடுமைக்கு வித்திட்ட ஆண்டுமாகும்.

அந்த ஆண்டில்தான் அக்டோபர் மாதம் 12ஆம் நாள் எகிப்து நாட்டில் கடுமையான பூகம்பம் காரணமாக 500 பேர் மாண்டு மடிந்தனர். 5000 பேர் படுகாயமுற்றனர். கெய்ரோ பகுதியில் பள்ளி மாணவர்கள் 100 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதே நாளில் இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடிக் கொண்டிருந்த புகைவண்டியில் "டைம்-பாம்" வெடித்து முப்பது பேர் சிதறிச் செத்தனர். இந்த விபத்துக்களையொட்டி வந்த மற்றொரு செய்திதான்; அதே ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் டெல்லி ஜான்சிராணி மைதானத்தில் 5000 சாமியார்கள் கலந்து கொண்ட விசுவ இந்து பரிட்சத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்று; அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பிரச்சினை சம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு; பிரதமர் நரசிம்மராவ் பாபர் மசூதியை அகற்றி இராமர் கோயில் கட்டும் முயற்சிக்கு ஆதரவு தராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி; டிசம்பர் 6ஆம் நாள் அதற்கான கரசேவையைத் துவக்குவதென்றும் முடிவெடுத்த செய்தியாகும்.

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அது குறித்து நான் கூறும்போது, தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் பதவியைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்த நடவடிக்கையைப் போல் இன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால் நாட்டில் ரத்தக் களரியை உருவாக்கிட நடைபெறும் செயலுக்கு வாசல் கதவைத் திறந்துவிட்ட குற்றத்துக்கு மத்திய காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று கூறினேன்.

அயோத்தியில் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட கரசேவையைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி அறிக்கை விடுத்தனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவையை டிசம்பர் 6ஆம் தேதியன்று தொடங்கப் போவதாக விசுவ இந்து பரிட்சத் (வி.எச்.பி.) அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை 23-11-92க்குள் உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

23ஆம் தேதி மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தையும் கூட்டியிருந்தது. இந்த ஒருமைப்பாட்டுக் கூட்டத்தைப் புறக்கணிப்பது என்று பா.ஜ.க.வும், விஸ்வ இந்து பரிட்சத்தும் முடிவு செய்தன. கரசேவையை மீண்டும் தொடங்குவதாக விசுவ இந்து பரிட்சத் அறிவித்துள்ளதையடுத்து சட்டத்தின் மாட்சியையும் அரசியல் சாசனத்தின் கண்ணியத்தையும் காப்பாற்றப் பொருத்தமான நடவடிக்கை எதையும் எடுக்கப் பிரதமர் நரசிம்மராவுக்கு அதிகாரம் அளித்து தேசிய ஒருமைப் பாட்டுக் குழு கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுர்ஜித் கொண்டு வந்தார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, அயோத்தி விவகாரத்தில் சட்டமோ, நீதிமன்ற உத்தரவோ எந்த வகையிலும் மீறப்பட அனுமதிப்பதற்கில்லை என்றும், அயோத்தியில் கலைஞர் கரசேவை துவக்கும் திட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சட்டத்தையோ நீதிமன்ற உத்தரவுகளையோ மீறுவதைத் தவிர்க்க வேண்டும்.

என்றும் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா "டிசம்பர் 6ந்தேதி பாரதீய ஜனதா, விஸ்வ இந்து பரிட்சத் மற்றும் சில அமைப்புகள் துவக்கப் போவதாக அறிவித்துள்ள கரசேவை நடைபெறுவதற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் பாபர் மசூதி அப்படியே இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்" (தினமணி - 24-11-1992). மேலும் அவரது பேச்சில் சில குறிப்பிட்ட பகுதிகள் தினமணி இதழில் அப்போது வெளி வந்தது வருமாறு:- "பெரும்பான்மையினராக உள்ளவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை அதே அளவில் சிறுபான்மையினராக உள்ள குடிமக்களும் அனுபவிக்கும் வகையில் நம்முடைய நடைமுறைகள் அமைய வேண்டும் என்ற பொறுப்பை நமது அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை நமக்குத் தந்துள்ளது.

அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்டில் பெரும்பான்மை வகுப்பு இந்துக்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் தங்களுடைய மதச்சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும்.

பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப் போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அயோத்தி பிரச்சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும். உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளும், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவிதமான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன்.

இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக்கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டுமானத்துக்குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும் உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். சட்டச் சிக்கல் இருப்பதையே இந்தப் பிரச்சினையில் முடிவு எடுப்பதை ஒத்திப் போடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் கட்டுப்பட மறுக்கும் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை எதிர்கொள்வது ஒவ்வொரு நாள் கழியக் கழிய அரசுக்குப் பெரும் கடினமாக அமையும். எனவே கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்த அமைப்பு எடுக்க வேண்டியுள்ளது. கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டுகோளைத் தெரிவிக்கிறேன்.

உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். மசூதி பிரச்சினை அப்படியே இருக்கட்டும். நம் நாட்டு மக்கள் அமைதியாக வாழட்டும். உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு ஒரு மாநில அரசு செவி சாய்க்காவிட்டால் அரசியல் சட்டப்படி அந்த மாநில அரசு இயங்கவில்லை. அந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று வி.பி.- கலைஞர் சிங்கும் மற்றவர்களும் பேசினார்கள். ஒரு மாநில அரசு மட்டும் நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும் என்று பாரபட்சமாகக் கூற முடியாது.

அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. பொதுமக்கள் கருத்தை இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது."

இவ்வாறு கரசேவையை ஆதரித்து ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்திலேயே பேசியவர்தான் ஜெயலலிதா. கரசேவையை டிசம்பர் 6ஆம் தேதி துவக்காமல் ஏழு நாட்களுக்கு ஒத்திப்போடுங்கள் என்று இறுதியாக பிரதமர் நரசிம்மராவ் கூறிய யோசனையையும் ஏற்க முடியாது என்று விசுவ இந்து பரிட்சத் நிராகரித்து விட்டது. மதுரையிலே நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டிலே ஜெயலலிதா பேசும்போது கடந்த தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமல்ல என்று பேசியதற்குப் பிறகு அ.தி.மு.க.விற்கும் காங்கிரசிற்கும் இடையே இருந்த உறவில் சற்று விரிசல் காணத் தலைப்பட்டது.

காங்கிரஸ் கட்சியிலே உள்ளவர்கள் இரண்டு பிரிவாக நின்று அ.தி.மு.க.விற்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், சுயமரியாதையோடு கட்சி நடத்த வேண்டுமென்று ஒரு பிரிவினரும் கூறத் தலைப்பட்டனர். முதல் பிரிவினருக்கு திரு. வாழப்பாடி ராமமூர்த்தியும், இரண்டாவது பிரிவினருக்கு திரு. மூப்பனார் அவர்களும் தலைவர்களாக விளங்கினர். இரண்டு கட்சிகளுக்குமிடையே உள்ள கூட்டணி உறவில் நீறுபூத்த நெருப்பாகப் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு 92ஆம் ஆண்டின் இறுதியில் பெரும் விரிசலாகியது.

இந்தக் காலகட்டத்தில் பழனி மக்கள் அவைத் தொகுதிக்கும், ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதிக்கும் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருந்ததால், அந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு வேண்டாம் என்று அந்தக் கட்சியின் அகில இந்திய நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தலைமைக்குப் பரிந்துரை செய்யப் போவதாக மூப்பனார் வெளிப்படையாகப் பேசினார். இந்த நேரத்தில் 14-11-92 அன்று டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா பா.ஜ.க.

தலைவர் அத்வானியைச் சந்தித்துப் பேசியது, இந்திரா காங்கிரசுடன் கொண்டுள்ள உறவைத் துண்டித்துக் கொள்ளத் தயாராக இருப்பதை பிரதமர் நரசிம்மராவுக்கு உணர்த்துவதாக அமைந்தது. நவம்பர் 23ந் தேதியன்று ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா கரசேவையை ஆதரித்து

ப் பேசியது அவரது கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே இருந்த உறவு முறிந்தது என்பதை தெளிவாகக் காட்டியது. தினமணி இதழ் காங்கிரஸ் அ.தி.மு.க. உறவு முறிந்தது என்றே முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. ஜெயலலிதாவின் பேச்சுக்கு தமிழகத்திலே உள்ள கட்சித் தலைவர்கள் நல்லசிவன், திருநாவுக்கரசு, வீரமணி, அப்துல் சமது, அப்துல் லத்தீப், வாழப்பாடி ராமமூர்த்தி, அன்பரசு, நல்லக்கண்ணு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜெயலலிதாவின் பேச்சைக் கண்டித்து தி.மு. கழகத்தின் சார்பில் தமிழகம் எங்கும் 30-11-92 அன்று கண்டனக் கூட்டங்களை நடத்துமாறு பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிக்கை விடுத்தார். விசுவ இந்து பரிட்சத் தலைவர்கள் அசோக் சிங்கால், விஷ்ணு ஹரி டால்மியா, ஆசார்ய கிரிராஜ்கிஷோர் ஆகியோர் ஜெயலலிதாவின் பேச்சினைப் பாராட்டி அவருக்கு தந்தி கொடுத்தனர். அறிக்கை தந்தனர். தமிழ்நாடு விசுவ இந்து பரிட்சத் சார்பாக சென்னை போன்ற பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில்- "தேசிய ஒருமைப் பாட்டுக் குழு கூட்டத்தில் அயோத்தி கரசேவைக்கு ஆதரவாகப் பேசி கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி கலைஞர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி!

நன்றி! நன்றி!" என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. கட்டுமானப் பணிகளை அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசிடம் உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி உத்தரப்பிரதேச அரசு அளித்த வாக்குறுதியை ஏற்று, அயோத்தியில் டிசம்பர் 6ந்தேதி பஜனைகளை நடத்த அனுமதித்து நீதிபதிகள் எம்.என். வெங்கடாசலய்யா, ஜி.என். ராய் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு கூறியது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு விசுவ இந்து பரிட்சத் கண்டனம் தெரிவித்ததோடு அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது தான் எங்கள் குறிக்கோள், அதில் யார் குறுக்கிட்டாலும் கடுமையாக எதிர்ப்போம் என்று கூறியது.

26-11-1992 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணச் செட்டித் தெருவில் கழகத்தின் சார்பில் கரசேவை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் பேசும்போது வெளிநாட்டுப் படையெடுப்புகள் நிகழ்ந்தபோது பண்டிதநேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு ஆதரவு கொடுத்ததைப் போல, கரசேவை பிரச்சினையில் பிரதமர் நரசிம்மராவுக்கு தி.மு.கழகம் துணை நிற்கும் என்று அறிவித்தேன். 30-11-92 அன்று உச்ச நீதிமன்றம், அயோத்தியில் அரசு கையகப்படுத்தியுள்ள இடத்தில் டிசம்பர் 6ஆம் தேதியன்று கரசேவை என்ற பெயரில் கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்று உ.பி.

அரசு அளித்துள்ள உறுதிமொழியை தவறாமல் காப்பாற்ற நிர்வாக இயந்திரத்தை முடுக்கி விடுமாறு உத்தரவிட்டது. ஆனால் விசுவ இந்து பரிட்சத் டிசம்பர் 6ந்தேதியன்று பஜனைகளும் நடக்கும், அதே நேரத்தில் கட்டுமானப் பணியும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தது. கரசேவைக்காக அத்வானி அவர்களும், முரளி மனோகர் ஜோஷி அவர்களும் டெல்லியிலிருந்து அயோத்திக்குப் புறப்பட்டனர். தேசிய முன்னணி மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நாடாளு- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) மன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து அயோத்தி பற்றி பேசியபோது, பாபர் மசூதி இடிக்கப்படக் கூடாது, மாநில அரசு கையகப்படுத்திய 2.77 ஏக்கர் நிலத்தில் கரசேவை எதுவும் நடைபெறக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணை மீறப்பட்டால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர்கள்; சிறுபான்மையினரின் உணர்வு மதிக்கப்படும் அதே நேரத்தில் பெரும்பான்மையினரின் உரிமையும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிசம்பர் 3ஆம் தேதியன்றே அயோத்தியில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட கரசேவகர்கள் திரண்டிருந்தனர். அயோத்திக்குப் பேரணி செல்ல முயன்ற முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கும் ஜனதா தள தொண்டர்கள் 350 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

டிசம்பர் 3ஆம் தேதிய டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் உ.பி.மாநில விசுவ இந்து பரிட்சத் அமைப்பின் செயலாளரான குலாப் சிங் பரிகார் என்பவர் அளித்த பேட்டியில் அயோத்தியில் நடைபெறும் கரசேவைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினரை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார், மேலும் கரசேவைக்குரிய பல உதவிகளைச் செய்வதாக உறுதியும் அளித்துள்ளார் என்று கூறியதாக செய்தி வெளி வந்திருந்தது. டிசம்பர் 5ஆம் தேதி முரசொலியில் "துள்ளி வரும் வேலாக; ஆவேசத்தை அள்ளி வரும் வாளாக!"

என்ற தலைப்பில் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட சில பகுதிகள் வருமாறு :- கரசேவை என்பது தான் என்ன? கடவுள் சேவையா? அல்லால் கலக விதை தூவும் சேவையா? அதற்குக் கை கொடுத்திட இங்கோர் பாவையா? திரேதாயுகத்தில் பிறந்தான் இராமன் எனில் துவாபரயுகம் தொடர்ந்து வந்து; அதுவும் முடிந்து, இப்போது நடப்பது கலியுகம் என்கின்ற போது கலைஞர் இருபது லட்சம் ஆண்டுகள் அன்றோ கடந்து போயின! இத்தனை லட்சம் ஆண்டுக்கு முன்னே இராமன் பிறந்த இடத்தைக் கண்டது யாரோ?

விண்டது எவரோ? இப்போது இதுதான் அந்த இடமென்று கூறி, இஸ்லாமிய வரலாற்று சின்னத்தை இடித்தலென்ன நீதி? அயோத்தி நகரில் இராமனுக்கோர் கோயில் அட்டியின்றிக் கட்டிக் கொள்ள அனைவரும் அனுமதிக்கின்றோம்; எனினும் அதற்காக அகற்றுவோம் பாபர் மசூதியை எனில் ஒப்பிடமாட்டோம்! குறிப்பிட்ட டிசம்பர் 6ந்தேதியும் மிகுந்த பரபரப்புடன் வந்தது. பூஜைகள், பஜனைகள், கீர்த்தனைகள் என்று மட்டுமே கரசேவை நடைபெறும் என்று விசுவ இந்து பரிட்சத், ஆர்.எஸ்.எஸ்.

அமைப்புகளால் அறிவிக்கப் பட்டிருந்த போதிலும், கட்டுக்கடங்காமல் கூடியிருந்த கரசேவகர்களின் நடவடிக்கைகளால் பாபர் மசூதி கட்டடத்துக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. பகல் 11.50 மணிக்கு ஒரு சாது எழுந்து கரசேவைக்கான பூஜைகள் ஆரம்பமாகப் போகின்றன என்று அறிவித்தார். உடனே சிவசேனை, பஜ்ரங்தளம் ஆகியவற்றின் தொண்டர்கள் பாபர் மசூதியை நோக்கி ஓடினர். போகிற வழியில் இருந்த மரக்கட்டை தடுப்பு, இரும்புக் கிராதிகள் தடுப்பு, முள்கம்பி வேலி தடுப்பு ஆகியவற்றை உடைத்து எறிந்து கொண்டு பாபர் மசூதி மீது வேகமாக ஏறினர்.

மசூதி கட்டிடம்மீது காவிக் கொடிகளைப் பறக்க விட்டு ஜய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். கைகளிலிருந்த கடப்பாரை, இரும்புக் கம்பி, கோடரி ஆகிய வற்றால் மசூதியின் கூண்டுகளையும், மேல்தளத்தையும் சுவரையும் உடைக்கத் தொடங்கினர். மசூதியை நோக்கி ஓடிவந்த கரசேவகர்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சுமார் 60 பேர் தடுக்கப் பார்த்தனர். ஆயிரக்கணக்கில் அலை அலையாகத் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தொண்டர்கள் ஓடி வருவதைப் பார்த்ததும் இனி தம்மால் ஏதும் செய்ய முடியாது என்று பின்வாங்கி விட்டனர்.

மாநில ஆயுதப்படை போலீசாரும், சாதாரண போலீசாரும் தடுக்கக் கூட முற்படவில்லை. ஒரே சமயத்தில் பல பேர் பல இடங்களில் இடித்ததால் ஒருவர் இடித்த செங்கல் இன்னொருவர் மீது விழுந்து காயம் அடைந்தனர். இதனால் மட்டும் நான்கு கரசேவகர்கள் இறந்தனர். கரசேவகர்கள் அயல் நாட்டுப் புகைப்படக்காரர்களையும் நிருபர்களையும் தாக்க முற்பட்டனர். கரசேவகர்கள் மீது எந்தக் காரணம் கொண்டும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யக் கூடாதென்று மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

கலைஞர் மசூதி இடிப்பும் மக்கள் கொதிப்பும்! கரசேவகர்கள் பாபர் மசூதிக்குள் நுழைந்து அதன் கூண்டுகளை இடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் மாநில முதல்வர் கல்யாண் சிங் தமது சக அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார். அயோத்தியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைசாபாத்தில் அதிரடிப்படையை மத்திய அரசு நிறுத்தியிருந்தது. பகல் 1 மணிக்கு அவர்களுக்கு மாநில அரசு தகவல் அனுப்பி அயோத்தி செல்லப் பணித்தது.

ஆனால் கரசேவகர்களால் முன்னேற்பாடாக அந்தப் பாதையில் அதிரடிப்படை வாகனங்கள் செல்ல முடியாதபடிக்கு பாறாங்கற்களும் மரக்கட்டைகளும் போடப்பட்டிருந்தன. தரையில் நிலக்கரித்தூள் கொட்டப் பட்டு பழைய டயர்களும் கொளுத்திப் போடப்பட்டிருந்தன. சாலைகளிலும் தீ எரிந்தது. பகல் 11.50 மணிக்குத் துவங்கிய இடிப்புப் பணியால் முதல் கூண்டு 2.45 மணிக்கும், இரண்டாவது கூண்டு பிற்பகல் 4.30 மணிக்கும், 3வது கூண்டு மாலை 4.45 மணிக்கும் இடித்து வீழ்த்தப்பட்டன.

பாபர் மசூதியின் முழுக் கட்டடமுமே மாலை 5 மணிக்கு இடித்துத் தள்ளப்பட்டு விட்டது. இதைப்பற்றிச் செய்தி நிறுவனங்கள் உடனடியாக என் கருத்தைக் கேட்டபோது, "மதவெறி இயக்கங்களும் அவற்றின் போக்கை ஆதரித்தவர்களும் நினைத்ததையும் பேசியதையும் நிறைவேற்றி முடித்துவிட்டார்கள். கரசேவை நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) என்பது இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கும் சேவை ஆகிவிட்டது. இன்று நடந்துள்ள காட்டுமிராண்டித்தனமான மதவெறிச் செயல் மூலம் உச்சநீதிமன்றமே புறக்கணிக்கப்பட்டு பிரச்சினைக்குரிய பகுதி என்பதற்கான ஆதாரங்களும் சிதிலமாக்கப்பட்டுவிட்டன.

மத நல்லிணக்கக் கொள்கையில் உண்மையான நம்பிக்கை கொண்ட கட்சிகளால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை மத்திய காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்தியதோடு, இந்தக் கொடுஞ் செயலையும் தடுத்து நிறுத்திட தக்க நடவடிக்கை எடுக்காமல் பெரிய தவறு செய்து விட்டது. எனவே, இதன் விளைவுக்கான முழுப்பொறுப்பையும் மத்திய அரசே ஏற்கவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

அயோத்தி சென்றிருந்த அத்வானியும், உமாபாரதியும், ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. தொண்டர்களும் கரசேவகர்களைக் கீழே வருமாறு கேட்டுக் கொண்டும் அவர்கள் கீழே இறங்கத் தயாராக இல்லை. பஜ்ரங்தள் தொண்டர்களும், சிவசேனையினரும்தான் கட்டிட இடிப்பு வேலைகளில் இறங்கினர் என்று வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குற்றம் சாட்டினர். மாநில முதல்வர் கல்யாண் சிங் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கலந்துவிட்டு, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பி.சத்தியநாராயண ரெட்டியிடம் அளித்தார்.

ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அதே நேரத்தில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கல்யாண்சிங் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசை டிஸ்மிஸ் செய்யவும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கினார். உத்தரப்பிரதேச அரசைக் கலைத்தது பற்றி என்னிடம் கருத்து கேட்டபோது, "தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது என்று ஒரு பழமொழி உண்டு.

அதுபோலத்தான் இப்போது உத்தரப் பிரதேச அரசு கலைப்பும் உள்ளது. 400 ஆண்டு கால முகலாய வரலாற்றுச் சின்னத்தை இடிப்பதை கலைஞர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு இப்போது ஆளுக்கு ஆள் நீலிக் கண்ணீர் வடிப்பதில் பயன் என்ன?" என்று கூறினேன். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து நாடு முழுதும் பல இடங்களில் கலவரங்களும், தீ வைப்புகளும், சூறையாடல்களும் நடைபெற்றன. குறிப்பாக மராட்டியத்திலும் குஜராத்திலும் உயிர்ச்சேதம் அதிகமிருந்தது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால் மராட்டியத்தில் 68 பேரும், குஜராத்தில் 41 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 35 பேரும், கர்நாடகத்தில் 25 பேரும், ராஜஸ்தானில் 25 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 17 பேரும், ஆந்திராவில் 10 பேரும், டெல்லியில் 4 பேரும், மேற்கு வங்கத்தில் 4 பேரும், பீகாரில் 2 பேரும், கேரளத்தில் ஒருவரும் பலியானார்கள். பின்னர் இந்த எண்ணிக்கை மொத்தத்தில் 800 பேர் என்ற அளவிற்கு அதிகரித்தது.

மராட்டியத்தில் முதலில் 68 பேர் என்பது பின்னர் 125 பேர் என்ற அளவிற்கு உயர்ந்தது. குஜராத்தில் 20 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். தேசிய முன்னணி, இடதுசாரிக் கூட்டமைப்புக் கட்சிகளின் கூட்டம் 7ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. 10ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்துவதென்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கரசேவை அக்கிரமத்தைக் கண்டித்து கழகத்தின் சார்பில் சென்னை சூளையில் மாபெரும் பொதுக்கூட்டம் 7ஆம் தேதியன்று நடைபெற்றது.

பாபர் மசூதியைக் காப்பாற்றாத இந்திய ராணுவமா பாரதநாட்டைக் காப்பாற்றப் போகிறது என்று நான் பேசும் போது கேள்வி எழுப்பினேன். தமிழ்நாட்டிலும் 8-ந் தேதியன்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டு ஆறு இடங்களில் போலீசார் துப்பாக்கிச் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) சூடு நடத்தினர். அந்தச் சம்பவங்களில் 3 பேர் இறந்தனர். 25 பேர் காயமடைந்தனர். கோவையில் கோயில்களுக்குத் தீ வைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பிரதமர் பதவி விலக வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. திரு.அத்வானி அவர்கள் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பேற்று தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 8ஆம் தேதி அதிகாலையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் இல்லம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற பாபர் மசூதி கமிட்டித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றம் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாரதீய ஜனதா அரசுகளையும் கலைக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டன. மத்திய அரசு; ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிட்சத், பஜ்ரங்தள், இஸ்லாமிக் சேவக் சங், ஜமாத்-இ-ஹிந்த் ஆகிய ஐந்து மத அமைப்புகளைத் தடை செய்தது.

இதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட 3 மத அமைப்புகளைச் சேர்ந்த 21 அலுவலகங்களுக்குத் தமிழகத்திலே 'சீல்' வைக்கப்பட்டது. அந்த அமைப்புகளின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அந்த அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். 15-12-1992 அன்று நள்ளிரவில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சி அரசுகளை மத்திய அரசு கலைத்தது.

அந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டன. 3 மாநிலங்களிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அரசியல் சாசனத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலைஞர் 3 மாநில ஆளுநர்களின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து அமைச்சரவை அந்த முடிவை எடுத்தது என்று மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார். மத்திய அரசின் அந்த நடவடிக்கையை அடுத்து அப்போது எந்த மாநிலத்திலும் பா.ஜ.க.

அரசு ஆட்சிப் பொறுப்பிலே இல்லாத நிலை உருவாக்கப்பட்டது இதுபற்றி என்னிடம் கருத்து கேட்டபோது, "உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக மசூதி இடிக்கப்படவும் அதனால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படவும் ஆயி

ரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாண்டிடவும் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு காரணமாக இருந்தது. எனவே அந்த மாநில அரசைக் கலைத்ததற்கு நியாயம் கற்பிக்க முடியும். ஆனால் பாரதீய ஜனதா என்ற அரசியல் கட்சி தடை செய்யப் படாத நிலையில் அந்தக் கட்சி ஆண்டு கொண்டிருந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளை அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைத்ததை தி.மு.க.

ஏற்றுக் கொள்ள இயலாது" என்று கூறினேன். ஆனால் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசு அவர்கள், மத்திய அரசு அந்த மாநிலங்களை டிஸ்மிஸ் செய்தது சரியான நடவடிக்கை, தனது நடவடிக்கையால் அரசை ஆளும் தகுதியை பாரதீய ஜனதா இழந்து விட்டது என்றார். பா.ஜ.க. அரசுகளைக் கலைத்தது குறித்து மத்திய அரசின் தோழமைக் கட்சியாக இருந்த அ.தி.மு.க. மக்களவையிலே கண்டனக்குரல் எழுப்பியது. தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில், கரசேவையை ஆதரித்துப் பேசிய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை ஏன் கலைக்கவில்லை என்று வி.பி.

சிங் ஓர் அறிக்கையிலே கேள்வியெழுப்பினார். இதற்கிடையில் தமிழகத்திலே சில மாநிலங்களில் ராணுவத்தினர் நடமாட்டம் இருந்ததைக் கண்டு ஜெயலலிதா பிரதமருக்கு ஆட்சேபக் கடிதம் ஒன்றை நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) எழுதினார். பிரதமராக இருந்த நரசிம்மராவ் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று அ.தி.மு.க. அமைச்சர்கள் இருவர் அறிக்கை விடுத்தனர். பிரதமர், தமிழகத்திற்கு ராணுவம் வந்திருப்பது திருவனந்தபுரம் செல்லும் வழியில்தான் என்றும், தமிழகத்திற்காக வந்தவர்கள் அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுந்தர் லால் பட்வா தலைமையிலான பாரதீய ஜனதா அரசைக் கலைத்ததும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ததும் செல்லாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற ஜபல்பூர் பெஞ்ச் 2-4-93 அன்று தீர்ப்பு வழங்கியது. அதே சமயம், அந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இரண்டு வார காலம் அனுமதித்து, அதுவரை தங்களுடைய தீர்ப்பை அமல் செய்வதை நிறுத்தி வைத்தது.

26-12-92 அன்று அ.தி.மு.க. பொதுக் குழுவில் பேசிய ஜெயலலிதா, இந்திரா காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வோடு உறவைத் தொடருவதில் ஆட்சேபம் இல்லை, அதே நேரத்தில் கூட்டணி என்பதை ஒரு வழிப்பாதையாகவே காங்கிரஸ் எண்ணி தொடர்ந்து செயல்படுமானால் அக்கட்சி தனி வழியில் செல்வதைப் பற்றியும் தங்களுக்கு அக்கறை இல்லை என்றும், தோழமை என்று உதட்டளவில் கூறிக்கொண்டு எங்களது முதுகில் குத்த வந்தால், கத்தியை எடுக்கும் கையை முறித்து விடுவோம் என்றும் கூறி அனைத்து ஏடுகளிலும் வெளி வந்தபோதிலும், பின்னர் ஜெயலலிதா அவ்வாறு பொதுக்குழுவிலே தான் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

மதுரை மாநாட்டிற்குப் பிறகு ஜெயலலிதா காங்கிரசை அவ்வப்போது தாக்கிப் பேசி வந்ததும், டெல்லியில் நடைபெற்ற ஒருமைப்பாட்டுக் குழுவில் கரசேவைக்கு ஆதரவாகப் பேசியதும், பிரதமர் நரசிம்மராவைச் சந்திக்காமல் பா.ஜ.க. தலைவர் அத்வானி அவர்களை மட்டும் சந்தித்ததும் அ.தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டது நன்றாகத் தெரிந்தது. இதற்கெல்லாம் மேலாக 1-12-1992 கலைஞர் அன்று பிரதமர் நரசிம்மராவ் தமிழகத்திற்கு வரவிருந்த நேரத்தில் அதற்கு முதல் நாள் ஜெயலலிதா, தினமணி பொறுப்பாசிரியராக இருந்த பிரபு சாவ்லா அவர்களுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்தார்.

அப்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தற்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கும் என்ன வித்தியாசம் காணுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டபோது, "நானும் ராஜீவ் காந்தியும் ஒரே தலைமுறையைச் சார்ந்தவர்கள். இப்போது ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது. பிள்ளைகள் கூட தலைமுறை இடைவெளியினால் தந்தையோடு பல சமயம் ஒத்துப்போக முடியாது. பிரதமருக்கும் மாநில முதல்வருக்கும் இடையில் இதுபோன்று இருக்கும்போது பிரச்சினைகள் மேலும் சிக்கலாகின்றன" என்றார்.

சட்டமன்ற, நீதிமன்ற மற்றும் ஆட்சித்துறை அதிகாரங்களை ஒருங்கே பெற்று, உலகிலேயே அதிகமான அதிகாரமுடைய தனிநபராகத் திகழ்பவர் அமெரிக்க அதிபர். இந்தப் பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் 1992ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷும் எழுத்தாளர் பாட்ரிக் புக்கனனும் அவர்கள் கட்சிக்குள் போட்டியிட்டனர். முதலில் 15 மாநிலங்களில் நடைபெற்ற தொடக்கக் கட்டத் தேர்தல்கள் அனைத்திலும் புஷ் வெற்றி பெற்றார்.

இருந்தாலும் புக்கனன் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்தக் கட்சியின் சில மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும் கூட போட்டியிலிருந்து விலக புக்கனன் மறுத்துவிட்டார். பொதுமக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடந்தபோது ஜனநாயகக் கட்சி வேட்பாளரிடம் புஷ் தோல்வி அடையக்கூடிய நிலை உள்ளதாகத் தெரிந்தது. ஜனநாயகக் கட்சி சார்பில் பில் கிளிண்டன், ஜெர்ரி பிரௌன், பால் சாங்காஸ் ஆகிய மூவரும் (அந்தக் கட்சிக்குள்) அதிபர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

அதில் அர்கன்சா மாநில ஆளுநர் பில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கிளிண்டன்தான் புஷ்ஷுக்கு உண்மையான போட்டி வேட்பாளர். கிளிண்டனுக்கு அவருடைய கட்சியில் சவாலாக இருந்தவர் பால் சாங்காஸ் எனினும், தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் கலிபோர்னியாவிலும் தெற்குப் பிராந்திய மாகாணங்களிலும் சாங்காஸுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காததால் அவர் வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை சிக்கலானது.

முதலாவதாகக் கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் போட்டியிடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள். இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் தொடக்கக் கட்டத் தேர்தல் நடைபெறும். இதன்பிறகு அதிபரைத் தேர்வு செய்வதற்கான வேட்பாளர் நியமனம் நடைபெறும். அதன் பின்னர் இறுதி வாக்கெடுப்பு நடக்கும். நான்காண்டுகள் பதவிக்காலம் கொண்ட அதிபர் பதவிக்கு நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைமுறை தொடங்கும். நான்காண்டுகளுக்கு ஒருமுறை வரும் 366 நாட்கள் கொண்ட லீப் வருஷத்தை அடுத்து வரும் ஆண்டில் ஜனவரி 20ந் தேதி அதிபரின் பதவிக் காலம் தொடங்கும்.

இரண்டு பதவிக் காலத்திற்கு மேல் அதிபர் பதவிக்கு ஒருவர் போட்டியிட முடியாது. இரண்டாவது முறையாகப் போட்டியிட முன்வந்த புஷ், ஈராக் போரில் கிடைத்த வெற்றி தனக்குச் சாதகமாக இருக்குமென்று எண்ணியபோதிலும், உள்நாட்டுப் பொருளாதாரம் மோசமாகி, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வந்ததை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தேர்தலுக்கு ஒரு திங்கள் முன்னதாக, அதாவது அக்டோபர் திங்களில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படும் தொலைக்காட்சிகளில் கிளிண்டனுக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் நடைபெற்ற நேருக்கு கலைஞர் நேர் விவாதங்களில் கிளிண்டன் வெற்றி பெற்றதாக ஏ.பி.சி.

நியூஸ் தெரிவித்தது. பதவியில் இருந்த ஜார்ஜ் புஷ் வளைகுடாப் போரில் வெற்றி பெற்றது, கம்யூனிசம் தோல்வியுற்று சோவியத் யூனியன் சிதறுண்டு போனது, உலகில் ஏகபோக வல்லரசாக அமெரிக்கா திகழ்வது ஆகியவற்றைத் தம் சாதனையாக புஷ் பெருமையுடன் கூறிப் போட்டியிட்டார். 12 ஆண்டுக் கால குடியரசுக் கட்சி ஆட்சியிலே மேட்டுக் குடி மக்கள்தான் சலுகைகளைப் பெற்றார்கள் என்றும், நடுத்தர, கீழ்நிலை மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கிளிண்டன் தன் வாதங்களைக் கூறி அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மக்களுக்குப் பயனளிக்கவில்லை என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இறுதியில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான பில் கிளிண்டன் அமெரிக்க ஐக்கிய நாட்டின் 42வது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுக் கட்சியிடமிருந்து நாட்டின் தலைமைப் பொறுப்பு ஜனநாயகக் கட்சிக்கு மாறியது. குடியரசுத் தலைவராக அமெரிக்காவில் ஜிம்மி கார்ட்டருக்குப் பிறகு, குடியரசுக் கட்சியின் சார்பில் ரொனால்டு ரீகன் இரண்டு முறை வெற்றி பெற்றும், அவரைத் தொடர்ந்து ஜார்ஜ் புஷ் அவர்கள் 1988இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றும் குடியரசுத் தலைவர்களாக இருந்தபிறகு; ஜனநாயகக் கட்சியின் சார்பில் பில் கிளிண்டன் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜ் புஷ், சுயேச்சை வேட்பாளர் ரோஸ்பெரட் ஆகியோர் தோல்வியடைந்தனர். கிளிண்டன் வெற்றி உறுதி- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) யானதும், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற இரண்டு வேட்பாளர்களும் தொலைபேசி மூலம் கிளிண்டனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். 8-11-92 தேதியிட்ட முரசொலி கரிகாலன் பதிலில் இந்தப் பண்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு, நமது நாட்டில் அத்தகைய பண்பாடு இல்லையே என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், "இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில்தான் அந்த அரசியல் பண்பாடு நசித்துப் போய்விட்டது.

ஆனால் 1967ல் தி.மு.க. வெற்றி பெற்றபோது அண்ணா அவர்கள் பெரியாரைத் தேடி திருச்சிக்குச் சென்று வாழ்த்துப் பெற்றார், ராஜாஜி, பக்தவத்சலனார், காயிதே மில்லத் போன்றவர்களின் இல்லங்களுக்கும் சென்று வாழ்த்துப் பெற்றார். அதேபோல 1969ல் நான் முதல்வர் பதவியேற்றபோதும் 1971 தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை தி.மு.க. பெற்று மீண்டும் நான் முதல்வரான போதும் பெரியார், பெருந்தலைவர் காமராஜ், மூதறிஞர் ராஜாஜி, பெரியவர் பக்தவத்சலனார், காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்று வாழ்த்துப் பெற்றேன்.

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது போற்றப்பட்ட அரசியல் பண்பாடுகள் என்பது தெளிவாக விளங்குமே" என்று குறிப்பிட்டிருந்தேன். கலைஞர் சமூகநீதி வெற்றியும்; சில சங்கடங்களும்! மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது 92ஆம் ஆண்டு நவம்பர் 16ந்தேதியன்று ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. இந்த ஒன்பது நீதிபதிகளில் தலைமை நீதிபதி எம்.எச்.

கனியா, நீதிபதி பி.பி. ஜீவன்ரெட்டி, எம்.என். வெங்கடாச்சலய்யா, ஏ.எம். அகமது, பி.பி.சவந்த், எஸ்.ரெத்தினவேல் பாண்டியன் ஆகிய ஆறு நீதிபதிகள் ஆதரவாகத் தீர்ப்பளித்ததின் பேரில் பெரும்பான்மை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மூன்று நீதிபதிகள் மட்டுமே வேறு விதமாக கருத்துத் தெரிவித்தனர். பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி அன்றைய பிரதமர் வி.பி.

சிங் பிறப்பித்த உத்தரவு செல்லும். அதன் பிறகு 1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பொருளாதார அடிப்படையில் 10 சதவிகிதம் ஒதுக்கீடு செய்து பிரதமர் நரசிம்மராவ் பிறப்பித்த உத்தரவு செல்லாது. இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகமாகப் போகக்கூடாது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து சமூக ரீதியில் முன்னேறியவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கூடாது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை நிர்ணயம் செய்ய இன்னும் நான்கு மாதங்களில் மத்திய மாநில அரசுகள் கமிஷன்களை நியமிக்க வேண்டும்.

பதவி நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) உயர்வுகளுக்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது ஐந்தாண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்த கருத்து வருமாறு:- மண்டல் அறிக்கையை வீழ்த்தும் எண்ணத்துடன் காங்கிரஸ் அரசு 10 சதவிகிதம் பொருளாதார அடிப்படைக்கு ஒதுக்கிய ஒதுக்கீடு செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, இதை வரவேற்கிறோம்.

பொருளாதார அடிப்படை அரசியல் சட்டத்திற்கு உகந்ததல்ல என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது, இதையும் வரவேற்கிறோம். மத்திய அரசு உத்தியோகங்களில் 27 சதவிகிதம் பின்தங்கிய சமூகத்திற்கு ஒதுக்கிய தேசிய முன்னணியின் அரசு உத்தரவு செல்லுபடியாகும், இது தீர்ப்பின் இதயம் போன்ற பகுதியாகும். இதையும் வரவேற்கிறோம், இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆனால் 27 சதவிகித ஒதுக்கீடு உத்தரவை உடனடியாக அமல்படுத்த முடியாதபடி தடங்கல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சமுதாயத்தில் "முன்னேறிய- பின்தங்கிய சமூகத்தோரை" இந்த 27 சதவிகிதத்திலிருந்து நீக்கிவிட வேண்டுமாம். இதைக் கண்டறியவும், பின்தங்கியோர் பட்டியலைத் திருத்தி அமைக்கவும் ஓர் அமைப்பினை நான்கு மாதங்களில் உருவாக்கி இதற்குத் தீர்வுகாண வேண்டுமாம். பிறகு அது நிரந்தர அமைப்பாக நீடிக்குமாம். அதாவது இன்னொரு நிரந்தரக் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்திருக்கிறது. அதன் அளவுகோல் என்ன? அதை எப்படி கண்டறிவது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கவில்லை.

எனவே இப்பிரச்சினை மீண்டும் 'பண்டோரா பெட்டி'யைத் திறந்து அநாவசிய - தவிர்க்கக் கூடிய சர்ச்சைகளைக் கிளப்பும். சமுதாயத்தில் பதற்ற நிலையை உருவாக்கும். இது குறித்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இதற்கான மாற்றத்தை மறு ஆய்வின் மூலம் பெற வேண்டும். இல்லாவிடில் இது மாநிலந்தோறும் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். அண்மைக்காலமாக நீதி மன்றங்களில் கலைஞர் பஞ்சாயத்து செய்து வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

அதுவே இப்போதும் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இந்தத் தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த பாதி வெற்றியே ஆகும்." இதைப் பற்றி 21-11-92 தேதியிட்ட எகனாமிக் டைம்ஸ் இதழ் எழுதும் போது, "இந்தத் தீர்ப்பு குறித்து முக்கியமாக திரு.கருணாநிதி சகல விதத்திலும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் பின்தங்கிய சமூகத்தினருக்கு சமூக நீதி கோரி அவரது கட்சி பெரும்பணி ஆற்றியிருக்கிறது. 1990ஆம் ஆண்டு மண்டல் எதிர்ப்பு அலையால் வி.பி.சிங் ஆட்சி என்ற படகு ஆடிக் கொண்டிருந்தபோது முதலமைச்சராக இருந்த திரு.

மு. கருணாநிதி தனது முழு பலத்தையும் உபயோகித்து வி.பி. சிங்கை ஆதரித்தார். ஆனால் சமுதாயரீதியாக- கல்வி ரீதியாகப் பின்தங்கியோரிலிருந்து முன்னேறியோரைக் கண்டறிந்து அவர்களைப் பின்தங்கியோர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தாக்கீது தி.மு.க. தலைவரை வருத்தமடையச் செய்திருக்கிறது" என்று எழுதியிருந்தது.

பிரதமர் நரசிம்மராவ் அவர்களின் கொள்கைகளை விமர்சித்து மராட்டிய ஆளுநராக இருந்த திரு. சி. சுப்பிரமணியம் சில கருத்துக்களைத் தெரிவித்ததாக கோவா தினசரி இதழ் ஒன்றில் வெளிவந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 7-1-1993 அன்று சி.சுப்பிரமணியம் அவர்கள் தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்களுக்கு அனுப்பி

வைத்தார். உடனடியாக அந்தக் கடிதம் குடியரசுத் தலைவர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆளுநர் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இவரது இடத்திற்கு தமிழகத்திலே ஆளுநராக இருந்து சில திங்கள்களுக்கு முன் விடுவிக்கப்பட்டிருந்த திரு. அலெக்ஸாண்டர் நியமிக்கப்பட்டார். 2-2-93 அன்று சென்னையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் மார்ச் 19, 20, 21 ஆகிய நாட்களில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கோவையில் மாநில மாநாட்டினை நடத்துவதென்றும், மாநில அரசு இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்தால் மாபெரும் போராட்டத்தை நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் கடும் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருந்த தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண சிங் பதவி விலகலை வலியுறுத்தும் வகையில் 4ஆம் தேதியன்று சட்டப் பேரவையில் ஆளுநர் உரையாற்றும்போது அதில் கழக உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது. அரிசி விலையை 2 ரூபாயிலிருந்து 2.75 ரூபாயாகவும், 3 ரூபாயிலிருந்து 3.75 ரூபாயாகவும் உயர்த்தியதைக் கண்டித்தும், நில வரியை மூன்று மடங்காக உயர்த்தியதைக் கண்டித்தும், உரம், பூச்சி மருந்து, விவசாய இடுபொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், குடும்ப அட்டைகளுக்கு மாதம் 20 கிலோ அரிசி கழக ஆட்சியிலே வழங்கப்பட்டதைப் போல வழங்க வேண்டுமென்று கோரியும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நியாய விலைக் கடைகள் முன்பு கழகம் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே பல லட்சம் பேர் கலந்து கொண்டு பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

4ஆம் தேதியன்று ஆளுநர் உரையாற்றும்போது புறக்கணிப்பது என்ற முடிவிற்கிணங்க அவைக்குச் செல்லவில்லை. பா.ம.க., சி.பி.ஐ., சி.பி.எம்., எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் சிறு சிறு அறிக்கையைப் படித்து விட்டு வெளி நடப்பு செய்தன. இதற்கிடையே கழக முன்னணி தளபதிகளில் ஒருவரான என் ஆருயிர் நண்பர் அன்பில் தர்மலிங்கத்துக்கு 1992-93ஆம் ஆண்டுகளில் உடல்நலம் ஓரளவிற்குப் பாதிக்கப்பட்டு அவரால் சரியாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

93ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் உடல்நிலை சற்று மோசமாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் திருச்சியிலே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சங்கரன்கோவில், தூத்துக்குடி, கன்யாகுமரி மாவட்டங்களில் சுற்றுப் பயண நிகழ்ச்சிக்காக தேதி கொடுத்திருந்த நான் நேராக அங்கே செல்லாமல் மார்ச் 5ந்தேதி திருச்சி சென்று அன்பிலை மருத்துவமனையிலே பார்த்து விட்டுத்தான் கார் மூலம் கலைஞர் சங்கரன்கோவில் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தேன்.

சென்று கொண்டிருக்கும்போதே அந்தச் சுயமரியாதை சுடரொளி, என் அன்புக்கு இனிய நண்பர், 45 ஆண்டு காலம் பழகிய அந்த மாவீரர் மறைந்துவிட்ட செய்தி வந்துவிட்டது. உடனடியாக திருச்சிக்குத் திரும்பிட நான் துடித்தேன். ஆனால் என்னுடனிருந்த வைகோ சங்கரன் கோவில் கூட்டத்திலே பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குழுமிவிட்டார்கள். நீங்கள் மட்டும் அந்தக் கூட்டத்திலே 15 நிமிடம் பேசிவிட்டு, தூத்துக்குடி, நாகர்கோவில் நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு திருச்சி திரும்பி விடலாம் என்று வலியுறுத்தியதின் பேரில் சங்கரன்கோவிலில் 15 நிமிடம் அன்பில் தர்மலிங்கத்தின் புகழைப் பாடிவிட்டு திருச்சி திரும்பினேன்.

அன்பில் தர்மலிங்கம் தன் வாழ்நாளில் பல பதவிகளை வகித்தவர். ஊராட்சி மன்றத் தலைவராக, கூட்டுறவு சங்க இயக்குநராக, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக, சென்னை கூட்டுறவு வங்கி இயக்குனராக, திருச்சி மாவட்ட கழகத்தின் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். என்னுடைய அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக மட்டுமல்லாமல், உள்ளாட்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளையும் அவர் வகித்தவர்.

சங்கரன்கோவில் கூட்டத்தை முடித்துக் கொண்டு திருச்சி வந்து அன்பில் அவர்களின் இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். சென்னையிலிருந்து பொதுச் செயலாளர் பேராசிரியரும் திருச்சி வந்திருந்தார். அன்பிலுக்காக முரசொலியில் நான் எழுதிய கண்ணீர் அருவியில்; சில துளிகள் இதோ:- "திருச்சியில் 1956 கழக மாநில மாநாட்டின்போது, "அன்பில் அழைக்கின்றார்" என்பது அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதத்தின் தலைப்பு. அது அண்ணா வழங்கியுள்ள பொருள் பொதிந்த சொற்றொடர்களில் ஒன்றாக ஆகிவிட்டிருப்பதை எப்படி மறக்க இயலும்?

அந்த அன்பில் இன்று இல்லை. படமாகி விட்டார். இந்த முடிவு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு எனினும், இன்னும் அவர் பழமாக, கிழமாக மாறி அப்போதும் இந்த இயக்கத்தின் பாதுகாப்பு அரணாகத் திகழ்வார் என்றுதான் நம்பியிருந்தேன். நானிருந்தாலும் இல்லாவிட்டாலும் இல்லத்தில் எம் அஞ்சுகத்தாயின் கையினால் குறைந்தது பத்து இட்லிகளாவது பரிமாறச் செய்து உண்டு செல்லும் அந்தக் காலம் முதல் எங்கள் குடும்பத்தில் ஒருவரானவர் தானே அவர்!

மாவட்டத்திலும் சரி, மாநில முழுமையும் சரி, எத்தனை செல்வாக்கு அவருக்கு! அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திலே பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பெரியார், அண்ணா, இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், காயிதேமில்லத் போன்றவர்களின் அன்பைப் பெற்ற என் நண்பர் - என் உயிர்த் தோழர் - கழக ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்ததையும், அத்துறையினைத் திறம்பட வளர்த்ததையும் எண்ணித்தான் திருச்சி மாவட்டத்தில் 1989ஆம் ஆண்டு "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி" ஒன்றினைத் தொடங்கினேன் கழக அரசின் சார்பில்!

அன்பிலுக்கும் அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்குமுள்ள நட்பைப் பத்திரிகைகள் எல்லாம் படம் போட்டு எழுதியுள்ளனவே இப்போது; அந்த எம்.ஜி.ஆர். அவர்களின் நண்பர் அன்பிலின் பெயரை நான் வைத்ததைத்தான்; இந்த ஆட்சி வந்ததும் வராததுமாகத் தூக்கி எறிந்துவிட்டது. ஆனால் புகழ்வானின் உச்சியிலே கொடி போட்டு, இலட்சோப லட்சம் கழகத் தொண்டர்களின் உள்ளத்தில் குடி கொண்டுள்ள, அந்த விவசாயக் குடும்பத்து வீரன் - கொள்கைத் தங்கம், அன்பில் தர்மலிங்கத்தின் பெயர் என்றைக்கும் யாராலும் அழிக்க முடியாதது!

நண்பனே! அன்பில்! இப்போதும் நீ எங்கள் வீட்டுக்குள் நுழைந்து தாழ்- கலைஞர் வாரம், கூடம், இங்கெல்லாம் நடந்து கொண்டிருப்பது போலவே இருக்கிறது! அண்ணா அறிவாலயத்தில் என்னருகிலும் பேராசிரியர் அருகிலும் அமர்ந்து இருப்பது போலவே உணருகிறேன்! நீ எங்கும் போய்விடவில்லை; எங்களுக்குள்தான் இருக்கிறாய்!"

அன்பில் என்னிடமிருந்து பிரிந்துவிட்டக் கொடுமைக்குப் பிறகு அவர் பெற்ற மூத்தசெல்வன் என்னை அன்பொழுக அப்பா, அப்பா என்று அழைப்பானே, அன்பு மகன் பொய்யா மொழி, அவனை சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்கினேன், இளைஞர் அணியின் இணைச் செயலாளராக ஆக்கினேன், ஆனால் அவன் தன் தந்தையைப் பின் தொடர்ந்து மிகச் சிறுவயதிலேயே மறைந்து விட்டான். அன்பிலின் இரண்டாவது மகனும், பொய்யாமொழியின் தம்பியுமான பெரியசாமியை திருச்சி இரண்டாவது தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்கியுள்ளோம்.

அவனைப் பார்க்கும்போதெல்லாம் மறைந்த மாவீரர்களின் நினைவு என் நெஞ்சில் எத்தனையோ பழைய சிந்தனைகளைக் கிளப்பத் தவறுவதில்லை. கழகத்தின் 7வது மாநில மாநாடு கோவையில் 1993ஆம் ஆண்டு மார்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. கழகத்தின் முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே திங்கள் 17 முதல் 20ஆம் தேதிவரை திருச்சியில் நடைபெற்றது.

கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு 1961ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 13 முதல் 16ஆம் தேதிவரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. நான்காவது மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 29, 30, 31 மற்றும் 67ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் தேதி ஆகிய நாட்களில் நடைபெற்றது. கழகத்தின் ஐந்தாவது மாநில மாநாடு கோவையில் 1975ஆம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கழகத்தின் ஆறாவது மாநில மாநாடு திருச்சியில் 1990ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 9, 10, 11 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற்ற 7வது மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நான் ஒருமுறை கோவைக்குச் சென்று மாநாட்டுப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெறுகிறதா என்று பார்த்து விட்டு வந்தேன். அந்த மாநில மாநாடு நடைபெறும் இடத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. அந்த மாநாட்டிலே இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து முடிவுகள் எடுக்கப்படவிருந்ததால் மாநாட்டுப் பந்தலுக்கு தாளமுத்து நடராசன் பெயர் சூட்டப்பட்டது.

வால்பாறை இராமசாமி முகப்பு அமைந்த கோவை அரங்கநாதன் அரங்கத்தில் மாநாடு நடைபெற்றது. மாநில மாநாட்டிற்கு தலைமை வகிப்பது கழகத்தின் தலைவர் என்ற சட்ட விதிமுறைப்படி நான் தலைமை வகித்தேன். பொதுச் செயலாளர் பேராசிரியர் மாநாட்டினைத் திறந்து வைத்தார். பொருளாளர் சாதிக்பாட்சா மாநாட்டுப் பொருளாளர். மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக மு.கண்ணப்பன், மாநாட்டுச் செயலாளர்களாக கோவை மு.ராமநாதன், சி.டி.தண்டபாணி, விடுதலை விரும்பி, எம்.பி., ஈரோடு அ.கணேச மூர்த்தி, நீலகிரி முபாரக், க.ரா.சுப்பையன் பொறுப்பேற்றனர்.

மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள் கோவை மாநில மாநாட்டுப் பந்தலுக்கு கயவர்கள் சிலர் தீ வைத்தனர். அதிலே பந்தலின் பெரும்பகுதி எரிந்து சாம்பலானது. 30 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டது. ரூபாய் இழப்புக் கூட அல்ல, 45 ஏக்கர் பரப்பில் 10 லட்சம் பேர் அமரக் கூடிய வகையில் ஒரு மாத காலமாக கழக முன்னணியினரின் மேற் பார்வையில் இரவும் பகலும் உழைத்து எழுப்பியது அந்தப் பந்தல். அந்த உழைப்பினை அந்தக் கயவர்கள் கருக்கினர்.

மாநாட்டிற்கு முதல் நாள் பகல் 3.15 அளவிலே ஒரே நேரத்தில் பந்தலின் மூன்று இடங்களில் திடீரென தீப்பிடித்தது. பந்தலுக்குள் வைக்கப்பட்டிருந்த மின் சாதனங்கள், கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டிகள், அலங்கார வேலைப்பாடுகள் எல்லாம் கருகின. பாஸ்பரஸ் போன்ற பொருளைப் பயன்படுத்தி பந்தலுக்குத் தீ வைத்திருக்கின்றனர். நல்லவேளையாக மாநாட்டின் முகப்பும் மேடையும் தீயினால் பாதிக்கப்படவில்லை. செய்தியாளர்கள் என்னைச் சந்தித்தபோது, பந்தலுக்குத் தீ வைத்தது நாசவேலை என்றும், மாநாடும் பேரணியும் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்றும், D.M.K.

will take It என்றும் கூறினேன். பந்தலுக்குத் தீ வைத்ததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உமாநாத், காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க. சார்பில் பேராசிரியர் தீரன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத்தின் சார்பில் கி.வீரமணி, ஜனதா கட்சியின் சார்பில் சந்திரலேகா ஆகியோர் கண்டன அறிக்கை விடுத்தனர்.

26ஆம் தேதி நடைபெற்ற வரலாறு காணாத பேரணியில் 20 இலட்சம் பேர் பங்கேற்றனர். விடிய விடிய தனி மேடையிலிருந்து நானும் கழக முன்னணியினரும் ஊர்வலத்தைப் பார்வையிட்டோம். என்னுடைய நிறைவுரையின் போது ஏப்ரல் 20 அன்று தமிழகம் முழுவதும் இந்தித் திணிப்பை எதிர்த்து ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்துவதென்றும், இந்தி எழுத்து அழிப்பு தொடர் போராட்டம் நடத்துவதென்றும் கழகத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தேன்.

நுழைவுக் கட்டணம், நன்கொடை சீட்டுகள் மூலம் 86 இலட்சம் ரூபாய் வசூலானது. அதில் மாநாட்டுப் பந்தல் எரிப்பு காரணமாக இரட்டைச் செலவானதால் 55 இலட்சம் ரூபாய் போக மீதம் 31 இலட்சம் ரூபாய் என்னிடம் மாநாட்டுக் குழுவினரால் வழங்கப்பட்டது. இலட்சக்கணக்கான கழகச் செயல்வீரர்களும், வீராங்கனைகளும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஏப்ரல் 20ஆம் தேதி நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) களம்புக காத்திருந்த வேளையில், தமிழகத்தில் கழகம் எழுப்பிய குரலைப் புரிந்து கொண்ட மத்திய அரசு தானே ரயில்களையெல்லாம் அந்த நாளில் நிறுத்துவதாக அறிவித்து விட்டது.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 1992ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை ஆறு மாத காலத்தில் 192 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது. அ.தி.மு.க. அரசின் மீது தி.மு.கழகத்தின் சார்பில் ஆளுநரிடத்தில் தரப்பட்ட ஊழல் புகார் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருந்தது. இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு உள்ளது என்றும், அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி உயர்நீதிமன்றத்திலே ஒருவர் வழக்கு தொடுத்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:- "கடந்த 92ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 192 ஆசிரியர் பள்ளிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட பல பள்ளிகளில் பயிற்சி எதுவும் தரப்படவில்லை. இன்னும் சில பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கூட இல்லை. மனு கொடுத்த சில தினங்களிலேயே பல பள்ளிகளுக்கான அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றனவா, அவற்றில் மாணவர்கள் பயில்கின்றனரா என்பது குறித்து நாங்கள் வியப்படைகிறோம். மனுதாரர் குற்றம் சாட்டியிருப்பது போல இந்த நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதில் புறம்பான காரணங்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கருத்து ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலும், பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலும் பணியாற்றும் சில அதிகாரிகள், கல்வி அமைச்சர் உத்தரவுபடி இந்த அங்கீகார உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.

அமைச்சர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் இதற்கான ஆணையை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது தெரிகிறது. இந்த ஆசிரியர் பயிற்சிப் கலைஞர் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் கல்வித் துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள். விதிமுறைகளை மீறி அங்கீகாரம் அளித்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை அரசு பாழ்படுத்தி நாசப்படுத்திவிட்டது. அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதோடு அல்லாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது.

இதில் நீதிமன்றம் தலையிடாவிட்டால் மாநிலத்தில் கல்வித்துறை அழிவுப் பாதையை நோக்கிப் போய்விடும். எனவே அனுமதி வழங்கப்பட்ட 192 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் 175 பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப் படுகிறது." இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. நெஞ்சுக்கு நீதி (நான்காம்

பாகம்) ஆட்சியின் அலங்கோலமும் அராஜகமும்! மார்ச் 9ஆம் நாள் காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அறிவித்தார். சில மாதங்களாகவே இரண்டு கட்சிகளின் உறவு நீடிப்பதில் சந்தேகம் இருந்து வந்தது. ஜெயலலிதாவின் திடீரென உணர்ச்சி வயப்படும் தன்மையும் அப்போதிருந்த காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளும்தான் இரண்டு கட்சிகளுக்கிடையே உறவு முறியக் காரணம் என்று 'தினமணி' தலையங்கம் எழுதியது.

16-3-93 அன்று சட்டப் பேரவையில் பேசும்போது, அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டபோது ராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது என்று ஜெயலலிதா மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி உரையாற்றினார். அயோத்தி கரசேவைக்கு ஆள் அனுப்பியதாகப் புகழப்பட்டவர்; இப்படிப் பேசியது அவரது கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது ஒன்றும் புதிதல்ல! அவரது பேச்சுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் கட்சியின் பேரவை உறுப்பினர்கள் எழுந்தபோது அவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

தொடர்ந்து 19-3-93 அன்று பிரதமர்தான் பாபர் மசூதியை இடிக்க அனுமதித்தார் என்றே ஜெயலலிதா குற்றஞ் சாட்டினார். இதற்கிடையே சென்னையில் 21-3-93 அன்று பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே பெருமளவில் நல்லெண்ணம் நிலவுகிறது என்றும், தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் பாரதிய ஜனதாவை கலைஞர் ஆதரித்துப் பேசிய ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்றும், கரசேவை நிகழ்ச்சியையும் அவர் வரவேற்றுப் பேசினார் என்றும், அ.தி.மு.க., பா.ஜ.க.

இடையே பெருமளவில் நல்லெண்ணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 20-4-93 அன்று தமிழக சட்டப் பேரவையில் வரலாறு காணாத அளவிற்கு விடிய விடிய எதிர்க்கட்சிகளின் தர்ணா, உண்ணாவிரதம் நடைபெற்றது. காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதத்தில் 'எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.'

உறுப்பினர் திருநாவுக்கரசு புகளூர் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசியதையொட்டி தகராறு எழுந்தது. ஆளுங்கட்சி தரப்பிலிருந்து திருநாவுக்கரசை நோக்கி "வெளியே போடா" என்ற குரல் வந்தது. ஒருவருக்கொருவர் வேகமாக வாதிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பேரவைத் தலைவர் அவை நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாக அறிவித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியே சென்றபிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் வெளியே போகாமல் அவைக்குள்ளேயே இருந்தனர்.

இந்த நிலையில் குளிர்சாதனமும் மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன. கதவுகள் மூடப்பட்டன. அதற்குப் பிறகும் பெண்கள் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியே போகவில்லை. சி.பி.ஐ., சி.பி.எம். உறுப்பினர்களும் பேரவைக்குள்ளேயே இருந்தனர். அதற்குமுன்பே பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திருநாவுக்கரசும் அங்கே வந்துவிட்டார். கழக உறுப்பினர் பரிதிஇளம்வழுதியும் அங்கிருந்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்களை வெளியேறும்படி பேரவைத் தலைவர் அலுவலகத்திலிருந்து கூறியதற்கு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) பத்திரிகையாளர்களும் வெளியேற மறுத்துவிட்டனர்.

மறுநாள் காலையில் அவை மீண்டும் கூடியதும் அரசுக்கும் பேரவைத் தலைவருக்கும் எதிராக எதிர்க்கட்சியினர் முழக்க மிட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றனர். ஆனால் பேரவைத் தலைவர் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுத்ததோடு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற வேண்டுமென்று உத்தரவிட்டார். அவர்கள் வெளியேற மறுக்கவே அவைக் காவலர்களைக் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவையிலிருந்தும் அவை தாழ்வாரத்திலிருந்தும் வெளியேற்றினார்.

அப்போது காவலர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டை வாயிற்புறம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு போர் நினைவுச் சின்னம் அருகில் பிறகு சென்று சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மாநகர போலீஸ் ஆணையர் அவர்களிடம் சென்று கலைந்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து அங்கிருந்து எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே வந்து அங்கே சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் அப்போது காங்கிரஸ் கட்சியிலே இருந்து கொண்டே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்ட சஞ்சய் ராமசாமி, சிங்காரம், கோவை செல்வராஜ் போன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. மறியலில் ஈடுபட்டவர்கள் பிற்பகல் 12.30 மணி அளவில் கைது செய்யப்பட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். காங்கிரஸ் தலைவர் திரு. மூப்பனார் அவர்களும், கழகத்தின் சார்பில் ஆற்காடு வீராசாமியும், மு.க.ஸ்டாலினும் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று அவர்களைப் பார்த்தார்கள்.

இதைத் தொடர்ந்து 22-4-93 அன்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறும்போது "ஏற்கனவே எழுதி வைத்த நாடகத்தை இந்திரா காங்கிரஸ் திறம்பட அரங்கேற்றி கலைஞர் விட்டது. ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் உயிர் நீத்ததால், காங்கிரசுக்கு மக்களிடம் ஏற்பட்டிருந்த சிறிதளவு அனுதாபம் கூட, அக்கட்சியினரின் நடவடிக்கை, போக்கு காரணமாக மக்கள் மனதில் இருந்து இந்நேரம் விலகியிருக்கும். பொதுமக்கள் சேவையை மறந்து விட்ட காங்கிரஸ் இனி எக்காலத்திலும் தேர்தலில் மக்களைச் சந்திக்க முடியாது" என்றார்.

22ஆம் தேதியன்று எதிர்க்கட்சியினர் அனைவரும் பேரவையைப் புறக்கணித்தனர். இதற்கிடையே பழனி நாடாளுமன்றத் தொகுதிக்கும் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் மே மாதம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு கழகத்தின் சார்பில் பழனியில் சுப்புலட்சுமி ஜெகதீசனும், ராணிப்பேட்டையில் ஆற்காடு வீராசாமியும் போட்டியிட்டனர். தொடக்கத்தில் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பா.ம.க. ஆதரவு தருவதாக முதலில் தெரிவித்தது.

ஆனால் தேர்தலின்போது ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அதைப் பற்றிப் பேரவையில் விமர்சித்த ஜெயலலிதா "பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய ஊர்வலத்தில் ராஜீவ்காந்தியைக் கொல்லச் சதி செய்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம், கொலையை மேற்பார்வையிட்ட சிவராசன் படம், நேரடியாக வெடிகுண்டுடன் கொலையில் ஈடுபட்ட தனுவின் படம் எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் புலி ஆதரவு கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பேசியிருக்கும் போதும், மூத்த காங்கிரஸ் உறுப்பினரான ஏ.எஸ்.பொன்னம்மாள் பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தடை விதிக்க வேண்டுமென்று அவையில் தெரிவித்திருக்கும்போதும், தடை செய்வது நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நான் (ஜெயலலிதா) தெரிவித்தேன். மத்திய உள்துறை அமைச்சரிடமும் தடைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமான தீவிரவாதக் கும்பலுக்கு ஆதரவளிக்கும் பா.ம.க.வுடன் இந்திரா காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பதை ராஜீவ் காந்தியின் ஆத்மாவே மன்னிக்காது" என்று முழங்கினார். ஆனால் பின்னர் ஜெயலலிதாவே அதே பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார் என்பதுதான் தமிழகத்தின் அரசியல் வரலாறு. ஜெயலலிதாவிற்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் விடுதலைப் புலிகளுடனும் அதன் தலைவர்களுடனும் அ.தி.மு.க.

பொதுச் செயலாளர் ஜெயலலிதா நெருக்கமான உறவு கொண்டிருந்தார் என்றும் ஆதரவு தந்து வந்தார் என்றும், அதனால் புலிகள் தமிழ்நாட்டில் தங்குதடையின்றி நடமாடி ஆதிக்கம் பெற்றனர் என்றும், இது ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் கூறினார். 26-4-93 அன்று திடீரென்று தேர்தல் கமிஷன் ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலை ரத்து செய்தது. தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்ததன் மூலம் தேர்தல் நெறிமுறைகளை மீறி விட்டதாகத் தேர்தல் கமிஷன் அறிவித்தது.

நலத்திட்டங்களை அறிவித்தது குறித்து தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டதற்கு தமிழக அரசு பதில் ஏதும் தரவில்லை என்பதால் அது உண்மையென ஒப்புக்கொண்டதாகிறது என்றும், தேர்தல் நெறிமுறைகளை மீறி தமிழக அரசு செயல்பட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது என்றும், அந்தச் சூழ்நிலையில் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்குமெனக் கருத முடியாது என்றும் தேர்தல் கமிஷன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. பழனியில் அ.தி.மு.க.

சார்பில் குமாரசாமி என்பவரும், இந்திரா காங்கிரஸ் சார்பில் வேணுகோபால் என்பவரும் போட்டியிட்டனர். 8-5-93 அன்று பழனி மக்களவைத் கலைஞர் தொகுதிக்கான இடைத்தேர்தலையும் தேர்தல் கமிஷன் அந்தத் தொகுதியில் வறட்சி கடுமையாக உள்ளதால் ஒத்தி வைப்பதாகக் கூறி ஒத்தி வைத்தது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் தேர்தல் கமிஷன் இவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பது அரசியல் உள்நோக்கம் தான் காரணம் என்று நான் கருத்து அறிவித்தேன்.

ஆகஸ்ட் திங்கள் 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மீண்டும் ஒருமுறை அறிவிக்கப்பட்டு, அப்போதும் இடைத்தேர்தல் நடத்தப்படாமல் டிசம்பர் 18ஆம் தேதிக்கு இடைத் தேர்தல்கள் இந்தியா முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டன. அனைத்திந்திய அளவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் இவ்வாறு இடைத்தேர்தல்களை அடிக்கடி ஒத்திவைப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்தன. மத்திய தேர்தல் கமிஷனின் இந்த இடைத்தேர்தல் ஒத்திவைப்பிற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதியன்று ராணிப்பேட்டை, பழனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு நான் சென்றபோதுதான் ராணிப்பேட்டையில் காவல்துறையினரின் துணையோடு ஆளுங்கட்சியினர் அராஜகத்திலே பயங்கரமாக ஈடுபட்டனர். ராணிப்பேட்டை தொகுதியிலே போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் இளவழகனை முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் வந்த போலீசார் தாக்கி விட்டதையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் அ.தி.மு.க.

வினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதைக் கண்டித்து நான் ஒரு அறிக்கை வெளியிட்டதோடு மருத்துவமனையிலே இருந்த இளவழகனை இரவு ஒரு மணி அளவில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அ.தி.மு.க. குண்டர்கள் என்னுடைய வேனையும் எனக்குப் பின்னால் தொடர்ந்து வந்த கார்களையும் கற்களாலும், தடிகளாலும், கம்புகளாலும் சோடாபுட்டிகளாலும் தாக்கினர். இரு தரப்பினரும் மோதிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே எனது வேனையும், கார்களையும் திருப்பச் சொன்னேன்.

அதற்குள்ளாக நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அ.தி.மு.க.வினர் முன்னேறிவந்து நானும், என் மனைவியும் வேட்பாளர் ஆற்காடு வீராசாமியும் இருந்த வேனைச் சூழ்ந்துகொண்டு அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதிலே வேதனை என்னவென்றால் நூற்றுக்கணக்கான போலீசார் அ.தி.மு.க.வினருக்குத் துணையாக அவர்களோடு சேர்ந்துகொண்டு தாக்குதலை ஊக்கப்படுத்திய கொடுமையை என் கண்ணெதிரிலேயே கண்டேன். ஆனால் கழகத் தோழர்கள் அந்தத் தாக்குதலைத் தாங்கள் தாங்கிக் கொண்டு எங்கள் வேனைச் சுற்றி நின்றுகொண்டு எங்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர்.

என்னுடன் வந்த கார்கள் பல சேதமடைந்தன. என் வேனுக்கு அடுத்து வந்த கழகத் தொண்டர் அணியினர் வந்த வேன் கொளுத்தப்பட்டு அறவே கருகிவிட்டது. அதிலிருந்த எனது உடைகள், பெட்டிகள் அனைத்தும் சாம்பலாகிவிட்டன. எனக்குப் பாதுகாப்பு என்ற பெயரால் இரண்டு ஜீப்புகளில் பத்து போலீசார் வந்து கொண்டிருந்தார்கள். இந்த அராஜகக் கலவரம் நடந்தபோது அவர்கள் பத்து பேரும் ஜீப்புகளை விட்டு இறங்கவே இல்லை. எனவே அவர்களை இனி நீங்கள் எனக்கு பாதுகாப்புக்கு வர வேண்டாம் என்று கூறித் திருப்பி அனுப்பி வைத்துவிட்டேன்.

பழனி தொகுதியிலும் இதே நிலைமை நீடித்த காரணத்தினால் அங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் அங்கிருந்தவாறே குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் அவசரத் தந்தி அனுப்பினார். வாக்குப்பதிவு நாளன்று போலி வாக்குகளைப் போட முயன்ற அ.தி.மு.க.வினரைக் கழக வேட்பாளர் வீராசாமி பிடித்த காரணத்தால் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். காவல்துறையினரின் ஒத்துழைப்போடு அமைச்சர்கள் ஒவ்வொரு பூத்திலும் அராஜக நடவடிக்கையிலே ஈடுபட்டனர்.

பழனி தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதைக் கண்ட தேர்தல் அதிகாரி குறிப்பிட்ட நாளில் வாக்குகளை எண்ணிடவே முதலில் அனுமதிக்கவில்லை. ராணிப் பேட்டை தொகுதியிலோ 65 சதவிகிதம் வாக்குகள்தான் பதிவானதாக கலைஞர் முதல்நாள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மறுநாள் வாக்கு எண்ணிக்கையின் போது 76 சதவிகித வாக்குகள் இருந்தன. வாக்குப் பெட்டிகளிலே பல சீல்கள் உடைக்கப்பட்டிருந்ததும் வாக்கு எண்ணிக்கையின்போது காணப்பட்டது.

இந்த இரண்டு தொகுதிகளிலுமே அராஜகம் வெற்றி பெற்று தி.மு.க. வெற்றி வாய்ப்பினை இழந்தது. இந்தத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதாவது அந்த இடைத் தேர்தல்களில் ராணிப்பேட்டையில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஓட்டுப் போடுவதென்றும், பழனியில் காங்கிரசுக்கு தி.மு.க. ஓட்டுப் போடுவதென்றும் உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதாக அந்தக் கட்சியின் செயலாளர் நல்லசிவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அது எவ்வளவு தவறான அறிக்கை என்பது வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டபோது தெளிவாகத் தெரிந்தது. பழனி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. 2,78,855 வாக்குகளும், தி.மு.க. 2,34,027 வாக்குகளும், காங்கிரஸ் 1,30,625 வாக்குகளும் பெற்றிருந்தன. இதிலிருந்து பழனி தொகுதியில் தி.மு.கழகம் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெளிவாயிற்று. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து "இந்து" தனது தலையங்கத்தில் "நடந்து முடிந்த இடைத்தேர்தல் வாக்கெடுப்பின்படி தெரியவருவது, தி.மு.க.வின் செல்வாக்கு ஏறத்தாழ அசைக்க முடியாத உறுதியாக உள்ளது என்பதுதான்.

அந்தக் கட்சி செல்வாக்கு குறைந்ததாகவோ அல்லது செல்வாக்கு இழந்ததாகவோ சொல்ல முடியாதவாறு தொடர்ந்து அசைக்க முடியாத சக்தியாகவும் உள்ளது" என்று எழுதியிருந்தது. சென்னை மத்திய சிறையில் தடா கைதிகளாக கிருபன், சந்திரன், ரவி, விக்டர் ஆகிய விடுதலைப் போராளிகள் இருந்தார்கள். அவர்கள் சென்னை மத்திய சிறையிலிருந்து என்ன காரணமாகவோ பாளையங்கோட்டைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதியன்று இவர்கள் போலீஸ் வேனில் சென்னையிலிருந்து நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கொண்டு செல்லப்பட்டா

ர்கள். இவர்களுக்குக் காவலாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், தலைமைக் காவலர் ஒருவர், மூன்று காவலர்கள் உடன் சென்றனர். சென்னையிலிருந்து புறப்பட்ட வேன் இரவு 11 மணி அளவில் மதுராந்தகம் அருகே மாமண்டூர் சென்றபோது ஒரு ஓட்டலுக்கு முன் சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது வேனுக்குப் பின் அம்பாசிடர் கார் ஒன்றில் நான்கு பேர் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் வந்திறங்கி போலீசாரைத் தாக்கினர். போலீசாரும் திருப்பித் தாக்கியுள்ளனர்.

இந்த மோதலில் மோகன் என்ற காவலர் அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கிருபன், சந்திரன், ரவி ஆகிய மூவரும் போலீஸ் வேனில் இருந்து தப்பி அம்பாசிடர் காரில் ஏறிக்கொண்டு சென்று விட்டனர். விக்டர் என்பவர் மட்டும் தப்பவில்லை. இதற்கடுத்த சில நாட்களில் சென்னை சைதாப்பேட்டை சிறப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த சார்லஸ் என்ற விடுதலைப் புலி, ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே முக்கியமான சாட்சியான இவர் தப்பியோடி விட்டார்.

தொடர்ந்து 21-5-93 அன்று திருச்செந்தூரிலிருந்து விஜய குமார் என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர் - இலங்கை தீவிரவாதிகள் முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்தவர் தப்பிச் சென்றுவிட்டார். இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா கூறும்போது, கடந்த ஓராண்டில் சிறையிலிருந்து தப்பியவர்களின் எண்ணிக்கை 65 பேர் என்று சொன்னதோடு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.சவான் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவிடம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமா என்று கேட்டதாகவும், அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் எப்படி பேச்சு நடத்த முடியும் என்று தான் கூறியதாகவும் தெரிவித்தார்.

அந்தச் செய்தி வந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர், முதல்வர் ஜெயலலிதா அப்படிச் சொன்னது பொய் என்றும், தான் அப்படி கலைஞர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுபற்றிக் கேட்கவே இல்லை என்றும் மறுப்பறிக்கை விடுத்தார். அதற்குப் பிறகும் ஜெயலலிதா மத்திய அமைச்சர் கேட்டது உண்மைதான் என்று ஒரு அறிக்கை விடுத்தார். மத்திய அமைச்சர் சவான் 24-5-93 அன்று ஒரு கூட்டத்திலே பேசும்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப்புலி ஒருவர் சென்னை சிறையிலிருந்து தப்பிச் சென்றது ஒரு கடுமையான விஷயம் என்று மத்திய அரசு கருதுகிறது.

இந்தச் சம்பவம் பற்றிய முழுமையான அறிக்கை ஒன்றை அனுப்புமாறு தமிழக முதல்வரிடம் கேட்டுள்ளோம். மாநில அரசின் காவலில் இருந்த ஒரு குற்றவாளி தப்பிச் சென்ற விஷயத்தில் மாநில அரசின் நேர்மை பற்றி மக்கள் மனதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) கழகப் பெயர், கொடி, சின்னம் காப்பாற்ற பட்டபாடு! ஏப்ரல் 23ஆம் நாள் இரவு இலங்கை ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர் லலித் அதுலத் முதலி கொழும்பு புறநகர் பகுதியில் தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1989இல் நடந்த அதிபர் தேர்தலில் பிரேமதாசாவின் வெற்றிக்கு அதுலத் முதலி அரும்பாடு பட்டவர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு வார காலத்திற்கெல்லாம் இலங்கையில் கொழும்பு நகரில் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மே தினப் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை அதிபர் ரணசிங்கே பிரேமதாசா முன்னின்று நடத்தினார். பேரணி சென்று கொண்டிருந்தபோது உடலில் வெடிகுண்டைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென்று பிரேமதாசா வந்து கொண்டிருந்த ஜீப் மீது மோத, வெடிகுண்டு வெடித்துச் சிதற, பிரேமதாசா உட்பட 40 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பிரேமதாசா அவர்கள் ஒரு சலவைத் தொழிலாளி குடும்பத்திலே பிறந்து ஒரு நாட்டின் தலைமைப் பதவிக்குத் தனது கடும் உழைப்பால் உயர்ந்தவர். கொழும்பில் அவர் நடுநிலைப் பள்ளியிலே படித்த காலத்தில்கூட, அவரது தாயார் காலையில் சுட்டுத் தரும் இடியாப்பத்தை குறிப்பிட்ட இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்றுவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்வாராம். இதனால் அவரை 'லெவரியா பாய்' என்று கலைஞர் சின்ன வயதிலே அழைப்பார்களாம்.

லெவரியா என்றால் இடியாப்பத்துக்குள் இனிப்புப் பூரணம் வைத்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டமாகும். பணக்காரர்கள் கட்சி என்று கருதப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயகாவினால் கவரப்பட்டு அந்தக் கட்சியிலே பிரேமதாசா சேர்ந்தார். அவர் அந்தக் கட்சியிலே சேர்ந்த பிறகுதான் சாமான்ய குடும்பத்து இளைஞர்களும் அந்தக் கட்சியிலே சேரத் தொடங்கினார்கள். கொழும்பு மாநகரசபை உறுப்பினராக, துணைமேயராக, பிறகு மேயராக, பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக, அதிபராக என்று படிப்படியாக உயர்ந்தார்.

ஜெயவர்த்தனாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவர். ஆனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து 1987இல் இந்திய அரசுடன் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் செய்துகொண்டபோது அதனை எதிர்த்தார். ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கொழும்புக்குச் சென்றபோது, அவரை வரவேற்கக்கூட பிரேமதாசா வரவில்லை. ஜெயவர்த்தனாவுக்கு அடுத்த நிலையில் பிரேமதாசா இருந்த போதிலும் 1989ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இளைஞர்களான லலித் அதுலத் முதலியையும், காமினி திசநாயகாவையும் ஜெயவர்த்தனா தயார் செய்தது பிரேமதாசாவிற்குப் பிடிக்கவில்லை.

நீங்கள் போட்டியிடாமல் வேறு யார் போட்டியிட்டாலும், தானும் அப்பதவிக்குப் போட்டியிடுவேன் என்று பிரேமதாசா மிரட்டியதால் ஜெயவர்த்தனா அவருக்கு விட்டுக் கொடுத்தார். பிரேமதாசா அந்தத் தேர்தலில் வெற்றி பெற ஜெயவர்த்தனா, அதுலத் முதலி, காமினி திசநாயகா ஆகியோர் அரும்பாடுபட்டனர். குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரேமதாசாவை லலித் முன்மொழிய, காமினி வழி மொழிந்தார். இருவரும் தங்களுக்கு பிரதமர் பதவி கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் பிரேமதாசா வெற்றி பெற்றதும் இந்த இருவருக்கும் முக்கியத்துவம் இல்லாத அமைச்சர் பதவிகளைக் கொடுத்துவிட்டு பிரதமர் பதவியை விஜயதுங்காவிற்கு அளித்தார். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மீது வழக்குத் தொடர அனுமதி மறுத்து அவரது தவறான செயல்களுக்கெல்லாம் உடந்தையாக இருந்த தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண சிங் 23-5-93 அன்று திடீரென்று தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

23ஆம் தேதி இரவு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண சிங்கின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு ராஜஸ்தானில் அப்போது ஆளுநராக இருந்த டாக்டர் சென்னா ரெட்டி அவர்கள் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் இருக்கும் மூன்று மாடிக் கட்டடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததின் காரணமாக இரண்டு பெண்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர்.

ஐந்து பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் ஜெயலலிதாவிற்கு அவர் திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், மறுநாள் காலையில் திண்டுக்கல்லில் இருந்து திரும்பி வந்தபிறகுதான் அந்த இடத்தைச் சென்று பார்த்தார் என்றும் ஏடுகள் செய்தி வெளியிட்டன.

இந்தச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்குப் பிறகு ஆளுநர் சென்னாரெட்டி அவர்கள் ஆனந்த விகடன் வார இதழுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்த சில முக்கிய கருத்துகள் வருமாறு:- "இடித்துரைக்க வேண்டியதை இடித்துரைத்துத்தானே ஆக வேண்டும்! உதாரணத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலக வெடிகுண்டுச் சம்பவத்தில் நான் உடனடியாக அங்கே விரைந்தபோது, அங்கிருந்தவர்கள் மூன்று மர்ம நபர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கிருந்து ஓடியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

சம்பவம் நடந்து இப்போது கலைஞர் வரையிலும் மாநில ரகசியப் போலீஸாரின் விசாரணையில் மூன்று நபர்கள் என்பது இரண்டு நபர்கள் என்றாகியிருக்கிறதே தவிர, மேற்கொண்டு எதுவும் வெளிப்படவில்லை. ஜெயலலிதா தலைமையிலான நிர்வாகம் வெகு சுதந்திரமாய் இருப்பது போன்று எனக்குத் தெரியவில்லை. எண்ணங்கள், நடவடிக்கைகள், செயல்பாடுகள் ஆகிய எல்லாவற்றிலும் தமிழக அரசு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்."

இவ்வாறு ஆளுநர் சென்னா ரெட்டி தான் பொறுப்புக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே தமிழகத்தின் அரசியல் நிலை குறித்துப் புரிந்துகொண்டு அதனை வெளிப்படுத்தியிருந்தார். மண்டல் குழு பரிந்துரைகள் 8-9-1993 முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. இடஒதுக்கீடு உரிமைக்கு வித்திட்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையுடனும், அந்தச்சமூக நீதிக்காகப் பல ஆண்டு காலமாகக் குரல் எழுப்பி வரும் திராவிட இயக்கத்தில் நானும் ஓர் அங்கம் என்ற பெருமிதத்துடனும் இந்த அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டேன்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி அடிப்படையில் இன்னும் பல வெற்றிகளைப் பெறவேண்டியுள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோரிலேயே முன்னேறியோர் என்கிற CREAMY LAYERஐ நீக்கிவிட்டு மண்டல் அறிக்கை அமல்படுத்தப்படுவது குறைபாடு உடையதாகும். அரசுப் பணிகளில் இப்போதே தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு நிரப்பப்படவில்லை. அதுபோலவே CREAMY LAYER என்கிற செயற்கைப் பாகுபாட்டை நீக்கிவிட்டால் பிற்பட்டோர் ஒதுக்கீட்டை நிறைவு செய்ய இயலாது.

எனவே இது நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். பழனி, ராணிப்பேட்டை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபட்டிருந்த நேரத்தில் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்த புதுக்கோட்டை வீரையா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தியதோடு அவருடைய குடும்பத்தினருக்கும் அவரது இளவல் சிதம்பரத்திற்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொண்டேன்.

அவரது இறுதிச்சடங்கில் கழகத்தின் சார்பாகப் பொதுச் செயலாளரும், கழக முன்னணியினரும் கலந்து கொண்டனர். தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 3-10-1993 அன்று எனக்கொரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் "அன்புள்ள அய்யா, திரு. வை. கோபால்சாமியின் ஆதாயத்திற்காக உங்களைத் தீர்த்துக்கட்ட எல்.டி.டி.ஈ.யினர் திட்டம் வைத்திருப்பதாக மத்திய அரசுக்குக் கிடைத்த அதிகாரபூர்வமற்ற தகவலை உங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உங்களுக்கு வழங்கவும் எனக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே உங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் பற்றி அரசின் அதிகாரிகள் வாயிலாகக் கேள்விப்பட்டு என்னைச் சூழ்ந்து கொண்ட செய்தியாளர்களிடம் "பொதுச் செயலாளர் ஊரில் இல்லை, சென்னை திரும்பியதும் அவருடனும் கழக முன்னணியினருடனும் கலந்து பேசி அரசு தரும் பாதுகாப்புப் பற்றி முடிவெடுப்பேன்" என்று கூறினேன்.

என்னையோ பொதுச் செயலாளரையோ தொடர்பு கொள்ளாமல் அக்கடிதம் பற்றி திரு. வைகோ ஓர் அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில், "என் வாழ்நாளில் நான் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பேரிடி என் தலையில் விழுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளேன்" என்று கலைஞர் தொடங்கி "மத்திய அரசின் உளவுத் துறையினர் தி.மு.க.

வில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கலைஞர் பலமுறை கூறியிருப்பதை நினைவுகூர்கிறேன். என்னால் தி.மு.க. தலைவர் கலைஞருக்கோ அல்லது கட்சிக்கோ கடுகளவும் கேடு வராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

5-10-93 அன்று கழக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்தநாள் நான் வெளியிட்ட அறிக்கையில் சில காலமாகவே கழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிற சில விரும்பத்தகாத சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் சில பகுதிகள் வருமாறு :- "மத்திய, மாநில புலனாய்வுத் துறையினரும் குறிப்பிட்ட சில பத்திரிகைகளும் தி.மு.க.வின் பலத்தைக் குறைக்கவும், கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தவும் கடந்த ஓராண்டு காலமாகவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதை நான் தொடர்ந்து கூறிக் கொண்டு வந்திருக்கிறேன்.

அப்பொழுதெல்லாம் அதனைச் சிந்தித்துப் பார்க்கக்கூட நமது கழகத்திலேயே சிலருக்கு மனமில்லாதது மட்டுமல்ல; மறுக்கவும் செய்தனர். ஆனால் இன்று திரு.கோபால்சாமி (வைகோ) அவர்கள்; முன்பு அவரால் ஏற்றுக்கொள்ளப்படாத அந்தச் செய்தியை இப்போது தனது தரப்பு வாதத்திற்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு இரண்டு நாளைக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்னமும் அவர், குறிப்பிட்ட சில பத்திரிகைகள் தி.மு.க.

தலைமையைக் குறை கூறி அவரை முன்னிலைப்படுத்தி ஆதரவு தருகிற குள்ளநரித் தந்திரத்தை அவர் உணர்ந்து கொண்டவராகத் தெரியவில்லை. எனவே இனியாவது இது போன்ற சீர்குலைவு காரியங்கள் நடைபெறாமல் இருந்தால் கட்சிக்கு நல்லது என்று வலியுறுத்திக் கூறியும் கூட, இன்னமும் அது தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது" என்று விளக்கியிருந்தேன்.

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக மத்திய அரசின் ஜெயின் கமிஷன் விசாரணை நடத்தியபோது அந்த விசாரணைக்காக நானும் சுமார் ஒரு வார காலம் சென்று கலந்து கொண்டேன். அந்த விசாரணைக் கமிஷனில் வைகோ அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் வளைத்து வளைத்து கேள்விகளைக் கேட்டார். வைகோவின் ஆதாயத்திற்காக விடுதலைப் புலிகள் என்னைக் கொலை செய்ய முயன்றார்களா?

என்ற விஷயத்திற்கு வர அந்த வழக்கறிஞர் பெரும்பாடுபட்டார். நான் அவரைச் சுற்றி வளைக்க விடாமல் ஏன் இப்படி திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள், நான் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். என்னைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வைகோவிற்கு என்றைக்குமே இருந்ததில்லை, இருக்கவே இருக்காது என்று சொல்லி அந்த வழக்கறிஞரின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். நெஞ்சுக்கு நீதி இந்த நான்காம் பாகத்தில் இந்தப் பிரச்சினை குறித்து மேலும் மேலும் நான் எழுதிட விரும்பவில்லை.

என் நிழல் போலவே இருந்து; என் கைப் போர்வாளாகவே திகழ்ந்து ஒருவரையொருவர் உயிருக்குயிரான உடன்பிறப்புகளாக நேசித்த நிலை எப்படியோ கெடுக்கப்பட்டு; அண்ணா அறிவாலயத்துக்கும், தி

.மு.க. என்ற பெயருக்கும், தி.மு.க.வின் இரு வண்ணக் கொடிக்கும் அவர் உருவாக்கிய நிலைமைகளால் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற சூழல் அமைந்து, சட்டரீதியாகவும், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமை ஆணையர் திரு.சேஷன் முன்பாக பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் அவர்கள் வாதாடியும், பொதுச் செயலாளர் பேராசிரியர், முரசொலி கலைஞர் மாறன், ஆற்காடு வீராசாமி, என்.வி.என். சோமு, தா. கிருட்டிணன், மிசா கணேசன், முகமதுசகி ஆகியோர் புதுடெல்லியில் தங்கி அதற்கான வழக்கை நடத்தியும் கழகம், கழகக் கொடி, கழகத் தேர்தல் சின்னம் ஆகியவை பறிபோகாமல் காப்பாற்றப் பட்டன.

இதற்கான ஆணையை 3-5-1994 அன்று தேர்தல் ஆணையர் வெளியிட்டார். இந்த வழக்கில் கபில் சிபல் அவர்களுக்குத் துணையாகக் கழக வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, கல்யாணசுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கழகப் பொதுக்குழு இதற்கு முன்பே 29-12-1993 அன்று தஞ்சையில் கூடி உண்மையான தி.மு.க. இதுதான் என்பதை நாட்டுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.

இந்தச் செய்தி கிடைத்ததும் முரசொலியில் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதைப் படித்தாலே விவரங்களைப் புரிந்துகொள்ளலாம். அது வருமாறு:- உடன்பிறப்பே, என் நெஞ்சிலிருக்கும் நீயும், உன் நெஞ்சிலிருக்கும் நானும் சேர்ந்து; நம்மையெல்லாம் ஆளாக்கி நமது இனத்துக்கென தி.மு.கழகத்தைப் போர்வாளாக்கி நம் கரத்தில் பேரறிஞர் அண்ணா ஒப்படைத்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தும்; இடையில் இதற்கோர் விபத்து வருமோ என மனம் வெதும்பியும்- ஆறு மாத காலமாக இருளில் மூழ்கியிருந்த நிலை மாறி, "தெளிவு மிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி" எனப் புரட்சிக் கவிஞர் எழுதியதற்கேற்ப, "வானில் உயர்கின்றான் உதயசூரியன் வாழ்க நன்றே!"

என ஆடிப்பாடும் நாள் இந்நாள்! கடந்த ஆறு திங்களாக நீ சென்னை வந்து என்னைக் காணும் பொழுதும், நான் வந்து உன்னைக் காணும் பொழுதும் ஊக்கமளிக்கத்தக்க உரைகளை நிகழ்த்துவாய்- உற்சாகமூட்டும் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவாய்-உறுதி குலையாத உடன் பிறப்புகள் என் போன்றோர் நாற்பது லட்சத்துக்கு மேற்பட்டோர் இருக்கையிலே கவலை எதற்கு எனக் கண்களால் பேசுவாய்- ஆயினும் ஓர் ஏக்கம்; என் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அன்பே, உன் அகத்தில் ஒளிந்திருப்பதை முகம் காட்டத் தவறவில்லை.

அந்த ஏக்கத்தைப் போக்க முடியுமா? அண்ணன் சொன்னாரே ஆயிரங்காலத்துப் பயிர் இந்தக் கழகமென்று; அந்தப் பயிர் தழைக்க வேண்டிய இந்தக் கழனிக்கு வேலியாக இருக்க முடியுமா? வேறு எவரோ சிலர் வயலையே தூர்த்துவிட முனைவதைத் தடுத்திட இயலுமா? உடன்பிறப்பே, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நியாயமான விடை கிடைத்திராவிடில்- இன்று எனக்கு மலர்மாலை அணிவித்திடும் நீ; மலர் வளையம் வைத்திடும் அளவுக்கு நான் ஆகியிருப்பேன்! இப்படி எழுதியது கண்டு என்மீது சீறிப் பாய்ந்துவிடாதே!

என்மீது குற்றமல்ல உடன்பிறப்பே, இளம் பருவ முதல்- ஈரேழு பதினான்காம் வயது முதற்கொண்டு இரண்டறக் கலந்து ஊனாக, உயிராக, உயிர் மூச்சாக ஒன்றி விட்ட இயக்கமல்லவா இது! ஓர் அரசியல்வாதி இப்படிப் பேசக்கூடாதுதான்! அறிவேன் நான்! வெறும் அரசியல்வாதியாக மட்டும் அன்று முதல் இன்றுவரை நான் என் பொதுவாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லையே; என் தந்தை முத்துவேலர் - தாயார் அஞ்சுகம் என்றாலும்கூட; தந்தையாகப் பெரியாரையும், தாயாக அண்ணாவையும் அல்லவா பொது வாழ்வில் வரித்துக்கொண்டு; உன் போன்ற உடன்பிறப்புக்களையெல்லாம் ஒரு தாயின் உதிரப் புனலில் உதித்தவர்களாகக் கருதி உம் தோள்மீது கைபோட்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

எனவே இந்த இயக்கம் என் வாழ்நாளிலேயே, என் கண் முன்னாலேயே, என்னைத் தொழுது ஏத்தியோர் கைகளில் ஒடுங்கிய படைக்கருவியாலேயே சிதைக்கப்படுமென்றால்; பிறகேன் நான் இருக்க வேண்டும்! இதுபோல நான் கலைஞர் உணர்ச்சிப் பிழம்பாக, உறக்கமின்றிக் கழித்த நாட்கள் எத்தனை எத்தனை இந்த ஆறு மாதங்களில்! ஏனிப்படி ஒரு பகை? எவருக்கும் எத்தீங்கும் விளைவிக்கவில்லையே! அவரா இப்படி? இவரா அப்படி? நம்பமுடியவில்லையே! ஏன், எதற்காக?

எவர் திசை திருப்பினர், எப்படித் திசை திருப்பினர், என்ன சொல்லி அந்த நீங்காத அன்பையும் பாசத்தையும் நீக்கிச் சிதைத்தனர்? ஒன்றாகப் பணியாற்றியது மறந்து போமோ! ஒன்றாகப் பயணம் செய்தது மறந்து போமோ! கடலின் அலை ஓயாததுபோல அல்லவா, மனதில் இந்த நினைவுகளும் ஓயாது தொடர்ந்தன! நீர் இடித்து நீர் விலகுமா என்பார்களே; ஆனால் இயக்கத்தின் வேர் அறுக்கவே முற்பட்டனரே - எனப் புலம்பிய நெஞ்சுக்கு, புதிய தெம்பு! புதிய வலிவு!

புதிய உற்சாகம்! யாரால்? யாரால்? எல்லாம் உன்னால்தான்! ஆம்; என் கண்ணாம் உன்னால் தான்! மாஸ்கோ செஞ்சதுக்கத்தில்கூட இப்படியொரு விழாக்கோலம் இருந்திருக்குமா என வியக்குமளவுக்கு சேலத்தில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மே தின விழாவை நடத்திக்காட்டினார். பெரியார் சிலை திறப்பு, அண்ணா சிலை திறப்பு, இராவண காவியம் விழா என சேலத்தின் இரு பகுதி விழாக்களிலும் வழியெங்கும் விழிமலர்ந்து - தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கண்டு மகிழ்ந்தேன்; எனினும் அகழ்ந்தெடுக்க இயலாத சோகச் சுமையொன்று இதயத்தின் ஆழத்தில் அழுத்திக் கொண்டுதானிருந்தது.

அந்தச் சுமையுடன்தான்; சென்னை திரும்பினேன்; நினைவை வேறுபக்கம் திருப்ப, மூன்றாம் தேதிக்கு முதல் தேதி "என் தமிழ் ஆசானுக்கு" எனக் குறிப்பிட்டு கவியரசு வைரமுத்து அனுப்பி வைத்த "வில்லோடு வா நிலவே!" நூலைப் படிக்கத் தொடங்கினேன். இடையிலேயே நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) டெல்லிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டவாறு இருந்தேன். பிற்பகல் மூன்றரை மணி அளவில்கூட செய்தி கிடைக்கவில்லை. ஆவலைச் சற்று உறங்க வைத்துவிட்டு; அமைதிக்காக, வைரமுத்துவின் நூலைப் படிப்பதில் ஆழ்ந்தேன்!

அந்த நூலில்; ஒரு இடத்தில் - மேற்கொண்டு படிக்க முடியாதவாறு- சில வைர வரிகள்! அப்படியே - அந்த இடத்திலேயே நெஞ்சுக்கு நங்கூரம் போட்டு நின்றுவிட்டேன் - ஆம்; அவ்வளவு அழகான கவிதை வரிகள்! "மேற்கே சென்று விழுகிறபோதும் சூரியன் முகம் காட்டுமே தவிர, முதுகு காட்டுவதில்லை; வெற்றி நிச்சயம்!"

என்னே வியப்பு! அந்த வரிகளில் லயித்திருக்கும்போது தொலைபேசி மணி அடித்தது - நானே எடுத்தேன்! ஆம்; அன்று முழுதும் நானேதான் எடுத்தேன்! டெல்லியிலிருந்து தம்பி முரசொலியும் ஆர்க்காடும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு "நல்ல செய்தி" சொன்னார்கள். என் முத்தம் பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன்- அவர்களுக்கு அது எதிர்பாராத முத்தம் - நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முத்தம்; என் தாய் அஞ்சுகத்தின் உருவில் அண்ணாவும், என் தந்தை முத்துவேலர் உருவில் அய்யாவும் அளித்த முத்தம்!

அனைத்தையும் சேர்த்து; அன்பு உடன்பிறப்பே;. இந்தா; வாங்கிக்கொள், என் வாஞ்சைமிகு முத்தம்! இப்படியொரு கடிதம்; இப்போது படித்தாலும் என் கண் கலங்குகிறது! ✽⁠ ✽⁠ ✽தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்குப் பிறகு அவர்களும் திரு. வைகோவை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்து 'மறுமலர்ச்சி தி.மு.க.'

என்ற பெயருடன் அ.தி.மு.க.வுக்கு எதிர் முகாம் என விளக்கி; புதுக்கட்சி உருவாக்கிக் கொண்டனர். 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.கூட்டணியில் இடம் பெற்றனர். பின்னர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தோடு உடன்பாடு கலைஞர் வைத்துக் கொண்டு போட்டியிட்டார்கள். அந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு ம.தி.மு.க.வின் சார்பில் திரு. கண்ணப்பன், திரு.செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் ஆயினர்.

தி.மு.க. சார்பில் முரசொலி மாறன், டிஆர்.பாலு, பெரம்பலூர் ராஜா ஆகியோர் முதலிருவர் கேபினட் அமைச்சர்களாகவும், ராஜா இணை அமைச்சராகவும் ஆயினர். ஆனால் 2001இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு கொள்ள முடியாமல் போய்விட்டது! நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) உச்சநீதிமன்றத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு தீர்ப்பு! ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இறுதியில் உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், டெல்லி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற்றது.

இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நான்கில் மூன்று பங்கு இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 68-இல் 52 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பா.ஜ.க. விற்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அந்த மாநில முதல்வராக முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் பதவியேற்றார். ஆனால் டெல்லியில் பா.ஜ.க. மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியது. மொத்தம் 70 இடங்களில் 48 இடங்களையும் பா.ஜ.க.வும், இந்திரா காங்கிரஸ் 14 இடங்களையும் அங்கே கைப்பற்றின.

டெல்லி யூனியன் பிரதேச முதல்வராக பா.ஜ.க. வைச் சேர்ந்த மதன்லால் குரானா தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் இழுபறி நிலை! ராஜஸ்தானில் மொத்தம் 199 இடங்களில் பா.ஜ.க. 95 தொகுதிகளையும், காங்கிரஸ் 76 தொகுதிகளையும், ஜனதாதளம் 6 தொகுதிகளையும், மார்க்சிஸ்ட் கட்சி ஒரு தொகுதியையும், சுயேச்சைகள் 21 தொகுதிகளையும் பெற்றார்கள். சுயேச்சைகளின் ஆதரவோடு பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஷகாவத் புதிய முதல்வராகப் பதவியேற்றார்.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 421 இடங்களில், பா.ஜ.க. 176 இடங்களிலும், சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி 176 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும், ஜனதா தளம் 28 இடங்களிலும், இந்தியக் கலைஞர் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்திலும், ஜனதா கட்சி 1 இடத்திலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றனர். சட்டப் பேரவை சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவராக முலாயம் சிங் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள 28 பேர்களின் ஆதரவையும், ஜனதா தளக் கட்சியில் உள்ள 28 பேர்களின் ஆதரவையும் அவர் கோரினார். ஆனால் அந்த இரண்டு கட்சிகளிலும் அதற்கு முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பா.ஜ.க. அங்கே ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டது. எனினும் உத்தரப்பிரதேச ஆளுநர் மோதிலால் வோரா பா.ஜ.க.வை ஆதரிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் பட்டியலை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அந்தப் பட்டியலை அந்தக் கட்சியினர் அளிக்க மறுத்ததையடுத்து முலாயம் சிங் யாதவ் முதல்வராகப் பதவியேற்றார். உத்தரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் தோல்வியுற்றதற்காகப் பொறுப்பேற்று காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டுமென்று மத்திய அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் குமாரமங்கலம் கோரிக்கை வைத்தார். மேலும் அயோத்தி உட்பட பல முக்கியமான பிரச்சினைகளை கட்சித் தலைமை சரியாகக் கையாளாததும் தோல்விக்கு ஒரு காரணம் என்று தன் கடிதத்திலே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்றதும் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சர் குமாரமங்கலத்தை அழைத்து பதவியைவிட்டு விலகுமாறு கூறியதின் பேரில் உடனடியாக அதற்கான கடிதத்தை குமார மங்கலம் அளித்து விட்டார். மத்தியப் பிரதேசத்தில் 316 தொகுதிகளுக்கு நடை பெற்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 171 இடங்களைக் கைப்பற்றியது. மத்தியப் பிரதேச முதல்வராக அந்த மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திக்விஜய்சிங் பொறுப்பேற்றார்.

தஞ்சைப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகத்திலே இருந்து வரும் 69 சதவிகித இடஒதுக்கீடு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) நீடிக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நகரில் 23-1-1994 அன்று சமூக நீதிப் பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள். பேரணி ஒரு இடத்தைக் கடக்க ஐந்து மணி நேரமாயிற்று. அன்று மாலையில் பேரணியின் முடிவில் கடற்கரையில் மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெற்று நானும், பொதுச் செயலாளரும், கழக முன்னணியினரும் அதிலே கலந்து கொண்டு உரையாற்றினோம்.

இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே விரிசல் அதிக அளவிற்கு ஏற்பட்டு ஏடுகள் எல்லாம் அதைப் பற்றி விமர்சிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இந்திய அரசியலில் ஒருசில ஆளுநர்கள் செயல்பட்ட விதம் குறித்து இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். தி.மு.கழகத்தின் கொள்கை பொதுவாக ஆளுநர் பதவி என்று தனியாக ஒன்று மாநிலத்திற்குத் தேவையில்லை என்பதுதான். ஆனால் அப்படியொரு பதவி இருக்கும்வரை அந்தப் பதவிக்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டது.

1976ஆம் ஆண்டு தமிழக கவர்னராக இருந்தவர் திரு. கே.கே. ஷா. கே.கே. ஷா என்றால் கலைஞர் கருணாநிதி ஷா என்று பொருள் கொள்ளலாம் என்று அவரே கூட்டத்தில் சொல்லக் கூடிய அளவிற்கு என்பால் அன்பு கொண்டவர். ஆனால் அவரிடமிருந்தே மத்திய அரசு கையெழுத்துப் பெற்று தி.மு.கழக அரசை 76ஆம் ஆண்டு கலைத்தது. மீண்டும் 1991ஆம் ஆண்டு தி.மு.கழக அரசை மத்திய அரசு கலைத்தபோது தமிழக ஆளுநராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. தமிழக கழக அரசைக் கலைப்பதற்கு 91ஆம் ஆண்டு பர்னாலா அவர்களிடம் அறிக்கை கேட்டபோது தனது பதவியைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல் அப்படி உண்மைக்கு மாறான அறிக்கையைத் தரவே மாட்டேன் என்று டெல்லிக்கு அழைத்து குடியரசுத் தலைவர் ஆர்.

வெங்கட்ராமனே வலியுறுத்திய நேரத்திலே கலைஞர் கூட உறுதியாக நின்று இந்திய வரலாற்றில் தனியானதொரு இடம் பெற்ற ஆளுநர் இவர். மராட்டிய மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.சுப்ரமணியம் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டு மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்ததை ஒரு பத்திரிகை பிரசுரம் செய்த காரணத்தினால், அவராகவே முன் வந்து தான் அரசியல் மரபுகளை மீறிவிட்டதாக உணர்வதாகக் கூறி அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

இமாசலப் பிரதேச ஆளுநராக இருந்தவர் குல்ஷார் அகமது கான். அவரது மகன் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஆளுநர் தனது மகனுக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக தேர்தல் கமிஷனே கூறியதால், தார்மீகப் பொறுப்பேற்று தனது ஆளுநர் பதவியை விட்டு அவராகவே விலகி விட்டார். மேற்கு வங்கக் கவர்னராக இருந்தவர்களில் ஒருவர் தர்மவீரா. அவர் அவையிலே உரையாற்ற வந்தபோது, அரசு தயாரித்துக் கொடுத்திருந்த உரையின் சில பகுதிகளை தான் படிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

அதன் காரணமாக அவையிலே அமளி ஏற்பட்டு அரசியல் சட்டச் சிக்கலே ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து அந்த மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றவர் நூருல் ஹசன். சிறந்த பேராசிரியர், அரசியல் அறிஞர். அவரை ஆளுநராக நியமிக்கவேண்டுமென்று மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு

அவர்களே கேட்டுப் பெற்றார் என்றுகூடச் சொல்வதுண்டு. அவர் மாநில அரசுக்கும் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) மத்திய அரசுக்கும் இடையே நல்ல இணைப்புப் பாலமாக விளங்கினார். இந்த வகையில் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சென்னா ரெட்டி அவர்களின் காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ஆளுநருக்கும் இடையே ஒரு தொடர் போராட்டமே தொடர்ந்தது. அதற்கு முதல் காரணம் ஜெயலலிதா மீது கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை ஆளுநர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார் என்பதுதான்.

அடுத்து சென்னை நிருபர்கள் சங்கம் சார்பில் ஆளுநருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் அவர்கள் தெரிவித்த புகார்கள் குறித்து கோப்புகளை வரவழைத்துப் பார்ப்பதாக ஆளுநர் குறிப்பிட்டதுதான். அடுத்து ஒரு ஆங்கில இதழுக்கு அவரளித்த பேட்டியில், தமிழக அரசில் எந்த வேலையும் நடைபெறவில்லை, அரசு செயல் இழந்துவிட்டது என்று கூறியது. தொடர்ந்து ராணிப்பேட்டை, பழனி இடைத் தேர்தல்களின்போது எதிர்க்கட்சிகளின் மனுக்கள் குறித்து தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்பதாக ஆளுநர் கூறியதும் ஜெயலலிதாவின் கோபத்தை அதிகப்படுத்தியது.

அமைச்சர்கள் எல்லாம் ஆளுநரை எந்த அளவிற்கு ஆபாசமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு விமர்சித்தார்கள். அவரது உடல் நலிவினைக் குறிப்பிட்டுக்கூட விமர்சனங்கள் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் சரியாக நடந்துகொள்ளவில்லையென்று அமைச்சர் அரங்கநாயகம் குற்றஞ்சாட்டியபோது முதல்வர் எம்.ஜி.ஆர். அமைச்சரை விட்டு அதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை விடச் செய்தார்.

ஆனால் சென்னா ரெட்டி- ஜெயலலிதா காலத்தில் ஆளுநர் மாளிகை வேவு பார்க்கப்படுவதாகப் புகார். பணியாளர்கள் மீது புகார். போதிய பாதுகாப்பு தரப்படவில்லை என்று புகார். ஆளுநர் அவர்கள் விடுதலை நாள் அன்றும், குடியரசு நாள் அன்றும் தொன்றுதொட்டு வழங்கும் தேநீர் விருந்தை முதல்வரும் அமைச்சர்களும் அறவே புறக்கணித்தனர். ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் சட்டப் பேரவை கலைஞர் ஆளுநர் உரையுடன்தான் தொடங்கும். சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான கோப்பு ஆளுநருக்கு முதல்வரிடமிருந்து செல்கிறது.

ஆனால் பேரவையைக் கூட்டுவதற்கான அறிவிப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து வரவில்லை. பேரவைத் தலைவரும், சட்ட அமைச்சரும் டெல்லிக்கு குடியரசுத் தலைவரிடம் முறையிடப் புறப்பட்டுச் செல்கிறார்கள். அதற்குள் இங்கே அறிவிப்பு வெளியானது. அதுபோலவே தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் பதவி நீடிப்பு கோப்பிலும் தாமதம் ஏற்பட்டு, பின்னர் கையெழுத்தானது. ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கப்படுவது பல ஆண்டுக் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபு.

அதற்குக்கூட ஆளுநரை அழைக்க அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை. ஆளுநர் உரையின்றி பேரவைக் கூட்டம் நடப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனதா தளமும் எதிர்ப்பு தெரிவித்து ஏடுகளில் அறிக்கை விடுத்தன. 3-1-94 அன்று ஆளுநர் உரை இடம் பெற்றாக வேண்டுமென்று பேரவையிலேயே கருத்துத் தெரிவித்து தி.மு.க.வும் இந்திரா காங்கிரசும் வெளிநடப்பு செய்தன. இதன் அடுத்த கட்டமாக 94ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு அதுவரை ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர்தான் அந்தப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினர்.

பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்விக்குறி அப்போது பெரிதாக எழுந்தது. ஏனென்றால் ஆந்திராவில் என்.டி.ராமராவ் அவர்கள் முதல்வராக இருந்தபோது இதுபோன்றதொரு சட்டத்தை அங்கே நிறைவேற்றினார். ஆனால் அதற்குப் பிறகு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அந்த மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற சென்னாரெட்டி அவர்கள் அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஆளுநரே வேந்தராக நீடிக்க வகை செய்தார்.

எனவே அவர் தமிழகத்தின் ஆளுநராக இருந்து இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தருவாரா என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக் காலத்தில் முதல்வர் இருக்கமாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது. தமிழகச் சட்டப்பேரவையில் தி.மு. கழகத்தின் சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப் பட்டது.

அரசாங்கத்தின் மீது புகார் கூறி 10-1-94 அன்று ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மறுநாளே முதல் அமைச்சர் அதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார். மேலும் டெல்லி சென்று குடியரசுத் தலைவரையும் சந்தித்தார். 26-1-1994 அன்று குடியரசு நாளன்று கொடியேற்ற வந்த ஆளுநருடன் முதல்வர் பரஸ்பரம் பேசிக்கொள்ளக்கூட இல்லை. அன்று மாலையில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தையும் முதல்வர் புறக்கணித்தார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஷெரீப் பதவியேற்பு நிகழ்ச்சிக்கும் முதல்வர் செல்லவில்லை. அந்தச் சண்டை எந்த அளவிற்கு முற்றியது என்பதற்கு ஒரு உதாரணம் அந்த ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டு தோறும் தரப்படும் நாட்குறிப்பில் ஆளுநர் படம் முதலிலே இணைக்கப்பட்டு பின்னர் அனைத்திலும் அந்தப் படம் கிழிக்கப்படும் அளவிற்குப் போனதுதான். அந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தப்படாமல் விடப்பட்ட போதிலும் அதே ஆண்டு மார்ச் திங்களில் 16-3-1994 அன்று ஆளுநர் சென்னா ரெட்டி அவர்கள் அவைக்கு வந்து உரையாற்றினார்.

ஆனால் ஆளுநர் உரையிலே புரட்சித் தலைவி என்ற வார்த்தை இடம் பெறுமேயானால் அப்படிக் கூறமாட்டேன் என்று ஆளுநர் அலுவலகத்திலிருந்து கூறப்பட்டதாகவும், அவ்வாறே அந்த வார்த்தைகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் கலைஞர் ஏடுகளில் செய்தி வந்தன. ஆளுநர் உரையாற்ற வந்தபோதும் விடைபெற்றபோதும் முதல்வரின் பக்கம் திரும்பாமலே சென்றார் என்பதும் ஏடுகளில் செய்தியானது. 94ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ஆம் நாளன்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது.

1977ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத்தைச் சேர்ந்த அனைவரையும் விடுதலை செய்து அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நான், பொதுச் செயலாளர், பேராசிரியர் உட்பட 78 பேர் அந்த வழக்கிலிருந்து ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயன்றதாக முதலில் 134 பேர் மீது வழக்குத் தொடர்ந்தார்கள்.

சுமார் பத்தாண்டுகள் நடைபெற்ற அந்த வழக்கில் 180 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். 1987ஆம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அந்தத் தீர்ப்பில் கழகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். தென்னரசு, ரகுமான்கான், கோவை ராமநாதன், வைகோ, பொன்.முத்துராமலிங்கம் உட்பட 56 பேருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், நான் உட்பட மற்ற அனைவரையும் விடுதலை செய்தும் தீர்ப்பு கூறப்பட்டது. 56 கழகத் தோழர்களின் மீது தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதேபோல தலைவர் கலைஞர் அவர்கள் உட்பட மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து எம்.ஜி.ஆர். ஆட்சியிலே மேல்முறையீடு செய்திருந்தார்கள். இந்த இரண்டு மேல் முறையீட்டு வழக்குகளிலே தான் 94ஆம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். நடராஜன், சுவாமி துரை ஆகியோர் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்கள். கழகத்தின் சார்பில் இந்த இரண்டு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர் என்.

நடராஜன், சண்முகசுந்தரம், நல்லியண்ணன், நாகராஜன், கார்த்திகேய நாராயணன் ஆகியோர் வாதிட்டனர். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே காலகட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்தது செல்லும் என்றும், ஆனால் அதற்கு முன்பு கர்நாடக மாநிலத்திலும், மேகாலயாவிலும், நாகாலந்திலும் மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்தது செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் 11-2-1994 அன்று தீர்ப்பளித்தது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைப்பதற்கு எதிராகக் கருத்துக்கள் பேசப்பட்டு வந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த அந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்பட்டது. மாநில அரசுகளைக் கலைப்பதற்கான முடிவு மேற்கொள்வதற்கு முன்பு, நாடாளுமன்றத்தில் அது குறித்து விவாதித்து மன்றத்தின் ஒப்புதல் பெற்றபிறகே அச்செயலில் ஈடுபட வேண்டுமென்றும் அந்தத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

ஒரு மாநில அரசு கலைக்கப்பட்டது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்யுமேயானால் கலைக்கப்பட்ட அந்த அரசை, மீண்டும் அமைத்திடுமாறு கட்டளையிடவும் அதிகாரம் உண்டு என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவு படுத்தப்பட்டிருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியது மாண்புமிகு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தலைமையிலே அமைந்த நீதிபதிக் குழுவினர் என்பது நம்மைப் பெரிதும் மகிழ்ச்சியுறச் செய்தது.

அவர் தனது கலைஞர் தீர்ப்பிலே குறிப்பிடும்போது, "இப்படியொரு கலைப்பு நிலைமை கட்டாரி போலத் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தால், எந்த மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சர்கள், நாற்காலியில் உட்காராமல் நின்று கொண்டேதான் இருக்க வேண்டும், எப்போது கலைப்பு உத்திரவு வருமென எதிர்பார்த்து" என்று குறிப்பிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றம் அளித்த வாழப்பாடி ராமமூர்த்தி அந்தத் தீர்ப்பின் மூலம் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு, நீக்கப்படவேண்டிய ஒன்று என்ற நமது கழகத்தின் நீண்டநாள் கோரிக்கையிலே நியாயம் உண்டு என்பதை நிலை நாட்டியது. ஜெயலலிதா அரசு மீதான ஊழல் பட்டியல் ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராம மூர்த்தி உட்பட ஏழு கட்சித் தலைவர்கள் 16-3-1994 அன்று தமிழ்நாடு ஆளுநர் சென்னாரெட்டி அவர்களைச் சந்தித்துக் கொடுத்தனர்.

அந்தப் பட்டியலில் மொத்தம் 38 புகார்கள் அடங்கியிருந்தன. தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி அதன்மூலம் முதல் அமைச்சர் ஜெயலலிதா பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார். எனவே அவர் மீதும் மற்ற அமைச்சர்கள் மீதும் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று அந்த ஊழல் புகார் அறிக்கையிலே ஏழு கட்சித் தலைவர்கள் கோரியிருந்தனர். இந்தப் புகார் மனுவினை தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அவர்கள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பிரதமர் நரசிம்மராவ், மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.

சவான் ஆகியோருக்கு 19-3-1994 அன்று அனுப்பி வைத்தார். நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) எதிர்க்கட்சியாக, இ.காங்கிரஸ் பட்ட வேதனை! 1991-96 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது இந்திரா காங்கிரஸ் கட்சிதான் பிரதான எதிர்க்கட்சி. அதுவும் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்குத் தோழமையாக இருந்து பிறகு அவர்கள் இடையே பிளவு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் தலைமையிலே பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டபோது அவர்கள் அந்தக் காலகட்டத்தில் குறிப்பாக 1994ஆம் ஆண்டு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினால் எந்த அளவிற்கு நடத்தப்பட்டார்கள் என்பதற்கு அப்போது நடைபெற்ற சில சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

17-3-94 அன்று ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியது. முதல்நாள் விவாதத்தின்போதே, ஏற்பட்ட பிரச்சினையில் எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கே பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை. எனவே காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய சோ.பாலகிருஷ்ணன் ஆளுநர் உரைக்கே பெரும் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது என்று ஆரம்பித்தவுடனேயே ஆளுங்கட்சியினர் அவரை தொடர்ந்து பேசவிடவில்லை.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் இதென்ன சட்டமன்றமா என்று கூறி விட்டு வெளிநடப்பு செய்தனர். 19-3-94 அன்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசியபோது, ராஜீவ் காந்தியின் மரணத்தினால் கலைஞர் ஏற்பட்ட அனுதாப அலை காரணமாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்று குறிப்பிட்டதோடு, அ.தி.மு.க.வின் செல்வாக்குதான் வெற்றிக்குக் காரணம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். 21-3-94 அன்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா காங்கிரசாரைப் பற்றியும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தைப் பற்றியும் விமர்சனம் செய்த நேரத்தில், "எங்கள் தயவால் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக ஆகி எங்களையே கொச்சைப்படுத்துகிறீர்கள்.

பர்கூர் தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் உண்மையிலேயே எனக்கு ஓட்டுப் போடவில்லை. எனக்காகச் செயல்பட வில்லை. பர்கூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் எனக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என முடிவு செய்து பேசப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் வாழப்பாடி ராமமூர்த்திக்கு அப்பாவி அ.தி.மு.க. தொண்டர்கள் உண்மையோடு பணியாற்றி ஓட்டுப் போட்டனர். எனக்குக் கிடைத்தது அ.தி.மு.க. ஓட்டுகள் மட்டும் தான். காங்கிரஸ் கட்சியினர் செய்த சூழ்ச்சி, வஞ்சனை, துரோகச் செயல்களை நாங்களும் செய்திருந்தால் வாழப்பாடி ராமமூர்த்தி டெபாசிட் இழந்திருப்பார்."

என்றார். அ.தி.மு.க.வுடன் இந்த அளவிற்கு காங்கிரஸ் உறவு முறிந்து கொண்டிருந்த நேரத்தில்கூட காங்கிரஸ் கட்சியிலே உள்ள சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினர். 25-3-94 அன்று காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான வேலூர் ஞானசேகரன் முதல்வரைச் சந்திக்க நேரமே கிடைப்பதில்லை என்று குறை கூறிப் பேசிக்கொண்டிருந்த போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் அவர்கள் கட்சியினர் தடுத்த போதும் மீறிக்கொண்டு பேரவைத் தலைவர் தந்த அனுமதியினைப் பெற்று முதல்வரைச் சந்திப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றும், தான் கோரிக்கை வைத்தபோது முதல்வர் அதனையேற்று உடனடியாகச் செய்து கொடுத்தார் என்றும் புகழ் மாலை தொடுத்த வேடிக்கையும் நடந்தது.

29-3-1994 அன்று முதல்வர் ஜெயலலிதா, விடுதலைப் புலிகள் அமைப்புடன் மத்திய அரசின் உளவு நிறுவனமான நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ரா வெளிநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், மத்திய அரசு சூது சூழ்ச்சியில் ஈடுபடுகிறது என்ற உண்

மை வெளியாகிவிட்டதாகவும் பேரவையிலே தெரிவித்தார். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், இதே குற்றச்சாட்டை "93ஆம் ஆண்டிலேயே ஜெயலலிதா குறிப்பிட்டு, அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்ததாகவும், ஆனால் ஓராண்டு ஆகியும் ஆதாரத்தை வெளியிடவில்லை" என்றும் தெரிவித்தார்.

பத்திரிகையில் வெளியான செய்திதான் ஆதாரம் என்று ஒரு அமைச்சர் பதில் கூற, எதிர்க்கட்சித் தலைவர் எஸ். ஆர்.பாலசுப்ரமணியம் பத்திரிகைச் செய்தி ஆதாரமாகாது என்றார். தொடர்ந்து பேச அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாது முதல்வரே தொடர்ந்து பதில் கூறிக் கொண்டிருந்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். அதைப்பற்றி ஜெயலலிதா அவையிலே விமர்சிக்கும்போது தன் பதிலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் காங்கிரசார் ஓட்டம் பிடிக்கிறார்கள் என்றார்.

வெளியேறிய எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறும்போது, எதிர்வரிசையிலே உள்ளவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், ஏதாவது ஒன்று கூறினால் உடனே நான்கு அமைச்சர்கள் எழுந்துகொண்டு குறுக்கிடுவதாகவும் தெரிவித்தார். இதற்கடுத்தநாள் இதைவிட வேதனை. அவையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.ஆர்.பி. அவர்கள் மத்திய அரசு மீது முதல்வர் சாட்டிய குற்றச்சாட்டு குறித்து பிரச்சினை கிளப்ப முயன்றபோது அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

மாறாகப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி, "இது சந்தைக்கடை அல்ல, சட்டமன்றம்; இதையெல்லாம் இங்கு வந்து பேச நான் அனுமதிக்கத் தயாராக இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் முறைகேடாகப் பலமுறை எதிர்க் கலைஞர் கட்சித் தலைவர் நடந்திருக்கிறார். அவருக்கு எனது இறுதி எச்சரிக்கை. இனியும் அவ்வாறு நடக்காதீர்கள். இல்லா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். கை நீட்டிப் பேசுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது, உள்ளே உட்கார்ந்திருக்கும் உறுப்பினர்களை வெளியே வரச் சொல்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு முறை அவையில் ஒரு கலவரச் சூழ்நிலையை உருவாக்கக்கூட அவர் முயற்சித்தார். அப்போது பெருந்தன்மையோடு முதல்வர் தமது கட்சியினரை அமரச் செய்து அன்றைக்கு ஓர் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தார். தனது முறைகேடான பேச்சுக்கு இன்றோடு எஸ்.ஆர்.பி. முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து எஸ்.ஆர்.பி. தன்னைப் பேச அனுமதிக்க வேண்டி நின்று கொண்டிருந்தபோதே அவைக் காவலர்களை அனுப்பி அவரை வெளியேற்றச் செய்தார்.

பிறகு அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களையும் வெளியேற்றினார். நிதியமைச்சர் நாவலர் அப்போது எழுந்து எஸ்.ஆர்.பி.யும் அவரைச் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக மன்னிப்புக் கேட்டால் ஒழிய அவர்களை இனிமேல் பேரவையின் நடவடிக்கைகளில் பேசுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவித்த யோசனையையும் பேரவைத் தலைவர் ஏற்று அவ்வாறே அறிவித்தார். வெளியேறிய எஸ்.ஆர்.பி. மன்னிப்பு கேட்கும் பிரச்சினைக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

ஆளுநர் சென்னாரெட்டி அவர்களை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து இதுபற்றிப் புகார் கூறினர். காங்கிரசாரை மீண்டும் திரும்ப அவைக்கு அழைக்க வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்புவதற்காக முற்பட்ட கழக உறுப்பினர் பரிதி இளம்வழுதிக்கும் அங்கே அனுமதி வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்சினையைப் பற்றிச் செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, "விடுதலைப் புலிகளைக் காரணமாகக் காட்டி தி.மு.க. ஆட்சியைக் காங்கிரசாரும் அ.தி.மு.க.வினரும் சேர்ந்து நியாய விரோதமாகக் கலைத்தார்கள்.

இப்போது மத்தியிலே உள்ள காங்கிரஸ் ஆட்சி, அ.தி.மு.க. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அரசு விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது. மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசோ மத்திய காங்கிரஸ் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது. எனவே இப்போது இந்த இரண்டு ஆட்சிகளையும் கலைப்பது யார்?"

என்று கூறினேன். பேரவையிலே இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களையெல்லாம் எதற்கெடுத்தாலும் வெளியேற்றிக் கொண்டிருந்ததை மனதிலே வைத்திருந்த நான் செய்தியாளர் ஒருவர் என்னிடம் தற்போதைய சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து உங்கள் கருத்தென்ன என்று நிருபர்கள் கூட்டமொன்றில் கேட்டதும், "இப்படி சும்மா கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் வெளியே தூக்கி எறிந்துவிடுவேன்" என்று நான் கூறியதுதான் தாமதம், செய்தியாளர்கள் அனைவரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர்.

மூன்று நாட்கள் அவைக்கு வராமல் இருந்த காங்கிரசார் அதற்குப் பிறகு பேரவைத் தலைவர் அனுமதி அளித்ததின் பேரில் 6-4-94 அன்று அவைக்கு வந்தார்கள். அன்றைக்கும் காங்கிரஸ் அலுவலக மேலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த பிரச்சினையிலே முதலமைச்சர் அளித்த விளக்கத்திற்குப் பிறகு அதிலே உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளன என்பதைத் தெரிவிக்க முற்பட்ட எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணமாக அவரும் காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்ததோடு, வெளியே வந்து முதல்வர் அளித்த விளக்கம் அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்தார்கள் 11-4-94 அன்று நொச்சியத்தில் நடைபெற்ற ஒரு கொள்ளை குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டபோது கழக உறுப்பினர் பரிதியும், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்சும் வெளியேற்றப்பட்டார்கள்.

அன்றைக்குத்தான் அவையிலே பதிலளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்திலே நடைபெறும் கொள்ளைகளுக்கெல்லாம் மத்திய அரசுதான் காரணம் என்பதுபோலக் குற்றஞ் சாட்டினார். அதற்கு கலைஞர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திரா காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டமன்றத்தைப் புறக்கணித்தனர். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பிரதமர் மீதும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

அவருக்கு இதுபோன்று குற்றம் சாட்டுவது வாடிக்கையானது. முன்பு ஒரு கட்டத்தில் அவரது கட்சியிலிருந்து அவர் ஓரங்கட்டப்பட்ட போது, எம்.ஜி.ஆர். மறைந்து பல மணி நேரம் ஆகிவிட்டது, ஆனால் அதை மறைத்து விட்டார்கள் என்றும், அவர் கட்சித் தலைவராக வருவதைத் தடுக்கிறார்கள் என்றும் ராஜீவ்காந்திக்கு மனு கொடுத்தவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். இறந்த போது மோரில் விஷம் கொடுத்துக் கொன்று விட்டார்கள் என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

மேலும் கலைஞர் என்னைக் கொல்ல சதி செய்கிறார் என்றும் குற்றம் சாட்டியவர்தான் ஜெயலலிதா. இதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவை நடவடிக்கைகளைக் காங்கிரஸ் புறக்கணிக்கும் என்று தெரிவித்தார். அப்போது சென்னை மாநகருக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் சவான் அவர்களைச் சந்தித்து ஜெயலலிதா மீது புகார் மனுவினை எஸ்ஆர்.பாலசுப்ரமணியமும் அவரது கட்சியினரும் கொடுத்தார்கள். காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையைப் பேரவைத் தலைவர் ஏற்க மறுத்தார்.

அதைக் கண்டித்து பேரவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அ.தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர் அப்போது அவையிலேயே இருந்தனர். இப்படித்தான் அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருமே எதுவுமே பேசாத நிலைமை தொடர்ந்தது. அமைதியின் உருவமாகத் திகழ்ந்தவரும் - கழகத்தைச் சோதனைகள் சூழ்ந்த நேரத்தில் எல்லாம் எஃகு இதயத்தோடு பணியாற்றி இயக்கத்திற்காக உழைத்தவருமான கழகப் பொருளாளர் சாதிக் பாட்சா அவர்கள் மே 12ஆம் தேதியன்று எங்களை விட்டுப் பிரிந்தார்.

சில மாதங்களாகவே உடல் நலக் குறைவுற்று சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மே 12ஆம் தேதியன்று பிற்பகலில் கவலைக்கிடமான நிலைக்காளாயினார். செய்தி அறிந்ததும் நானும் பொதுச் செயலாளர் பேராசிரியரும், துரைமுருகனும், என்.வி.என். சோமுவும் மருத்துவமனைக்கு விரைந்தோம். டாக்டர் அர்ஜுன் தாஸ் அவர்களிடம் தொலைபேசியில் நானே பேசி உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கேட்டுக் கொண்டேன்.

அவரும் விரைந்து வந்து சாதிக் பாட்சா அவர்களின் உயிரைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடினார். ஆனால் பயனளிக்காமல் 3.30 மணி அளவில் சாதிக் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தார். 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையிலும், 1969, 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் என் தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். 1976ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்டு 500க்கு மேற்பட்ட கழகத்தினர் சிறைச்சாலைகளில் மிசாகைதிகளாக அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சாதிக் தி.மு.க.

கலைஞர் தலைமை நிலையமான அன்பகத்தில் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்து பணியாற்றியவர். 1977ஆம் ஆண்டு கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதிக்,1982, 1986, 1992ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கழகத் தேர்தல்களிலும் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு பொறுப்பு வகித்தவர். கழகத்தின் வெற்றியிலும், தோல்வியிலும், சோதனையிலும், சாதனையிலும், கொடிய வெயிலிலும், நிழலிலும் கூடவே இருந்து அசையாத மலையாக எதற்கும் ஊசலாடாத இதயத்துடன் எனக்குத் துணையாக இருந்த அந்தத் தங்கத் தூண் சாய்ந்துவிட்டது.

அந்த இன்முகத்தை, புன்முறுவலை, அன்புப் பெருக்கை, துன்பம் ஊழிப்பெருக்காக வரினும் துவளாமல் எங்களுக்குத் தோள் கொடுத்த அந்தத் தூயவரை இழந்தோம். அவரது உறுதி குலையாத கொள்கைப்பற்றை, இலட்சியப் பிடிப்பைப் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதை, கண்ணீர் காணிக்கை என்று அவருக்கு இரங்கல் தெரிவித்தேன். சாதிக் அவர்களின் மறைவினையொட்டி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்த கொள்கைச்சுடர் கோவை ஜானகிராமன் சாதிக் வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

மறைந்த சாதிக் பற்றி எங்களிடம் பேசிக் கொண்டிருந்தபோதே ஜானகிராமனை சாவு, தழுவிவிட்டது. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) சமூகநீதிக்காக மீண்டும் போர்க்குரல் ஆம் ஆண்டு ஜூன், ஜூலைத் திங்களில் தமிழகத்தில் இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்றன. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதம் என்பதற்கு மாறாக 50 சதவிகித அளவிற்கு மட்டுமே செல்லும் என்று 16-11-1992 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விளைவாகத் தொழிற்கல்விகளில் 69 சதவிகித அளவிற்கு இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம் மாணவர்கள் மத்தியில் பெரிதாக எழுந்தது. இடஒதுக்கீடு பிரிவில் எத்தனை சதவிகிதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வண்ணம் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஜெயலலிதா அரசு இரட்டை வேடம் போடுவதைப்போல ஒரு கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்தது. அதற்குக் காரணம் 22-11-1993 அன்று உச்சநீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையேற்று தமிழ்நாட்டில் 93-94ஆம் ஆண்டுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஜெயலலிதாவின் அரசின் சார்பில் சம்மதம் கொடுத்ததுதான். கலைஞர் இட ஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்டத்தைத் திருத்த ஆதரவு கேட்டு, பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் பிரதமர் வி.பி.

சிங், தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் என்.டி.ராமராவ், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் இந்திரஜித் குப்தா, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பாரதிய ஜனதா தலைவர்கள் வாஜ்பய், எல்.கே. அத்வானி மற்றும் சந்திரசேகர், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பஸ்வான், ரபிராய், சிக்கந்தர் பக்த், சுப்பிரமணியசுவாமி, இப்ராகிம் சுலைமான்சேட், பனத்வாலா, சித்த பாசு, உன்னிகிருஷ்ணன், பிரகாஷ் சிங் பாதல், கன்சிராம் போன்ற தலைவர்களுக்கு 28-6-1994 அன்று நான் கடிதம் எழுதினேன்.

29ஆம் தேதியன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடமிருந்து பெற்ற அறிவுரைப்படி, இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இதற்காக அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதற்காகக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திண்டிவனம் வெங்கட்ராமன், விடுதலை விரும்பி, மிசா கணேசன், முகமது சகி, ஜெ. எஸ்.ராஜு ஆகியோரை டெல்லிக்கு அனுப்பிவைத்தேன். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜூலை 10ந்தேதி முதல் 15ந்தேதி வரை வட்டத் தலைநகரங்களிலும், பேரூர்களிலும் கூட்டங்களை நடத்துவதென்றும், ஜூலை 15ந்தேதி முதல் 22ந்தேதி வரை ஒன்றியங்களில் உள்ள எல்லா கிராமங்களிலும் அனைத்துக் கட்சி சைக்கிள் பேரணிகள் அல்லது நடை பேரணிகள் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

கழகத்தின் முயற்சிக்குப் பெரிதும் ஆதரவளிப்பதாக கழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரிடையாகவும், எனக்கு எழுதிய கடிதத்தின் மூலமும் வட இந்தியத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இட ஒதுக்கீடு பிரச்சினைக்காக 17-6-1994 அன்று தி.மு.கழகம் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப் போவதாக நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அறிவித்தபோது அதே நாளில் இட ஒதுக்கீடு பிரச்சினைக்காக பந்த் நடத்துவதற்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.

உடனே தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமது மறியல் போராட்டத்தை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தன. ஜெயலலிதா அரசு மறியல் போராட்டத்தால் வன்முறை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுத்ததோடு, 20-6-94 அன்று காலையில் என்னையும், நல்லக்கண்ணு, டாக்டர் ராமதாஸ், எஸ். திருநாவுக்கரசு ஆகியோரையும் கைது செய்து, பின்னர் பெரும் விளைவுகள் ஏற்படக் கூடும் என்பதற்காக அன்று மாலையில் எங்களை விடுவித்தது. ஜெயலலிதாவின் இந்த மாறுபட்ட நிலையினை 15-7-1994 தேதியிட்ட ஆங்கில இதழ் 'ஃப்ரண்ட்லைன்' நீண்ட கட்டுரையாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஜெயலலிதா இரட்டை வேடம் என்ற தலைப்பிலேயே வெளியிட்டிருந்தது.

இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து தினமணி இதழ் 8-7-94 அன்று ஒரு முக்கியமான தலையங்கத்தைத் தீட்டியிருந்தது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:- "இட ஒதுக்கீட்டை 69 சதவிகித அளவில் தொடர வேண்டும் என்

பதில் தனக்கு ஆத்மார்த்த ஈடுபாடு உண்டு; இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாமல் ஓயமாட்டேன்" என்று முதல்வர் ஜெயலலிதா பொதுமக்கள் முன்னிலையில் உறுதி அளித்திருக்கிறார். அவரது இந்த முடிவை வரவேற்கிறோம். முன்பு கச்சத்தீவை மீட்பேன் எனச் செய்த சபதத்தைப் போல இதுவும் வெறும் வாய்ச்சொல் வீரமாகப் போய்விடாமல், இந்த வாக்கை நிறைவேற்றிக் காட்டுவார் என்று நம்புகிறோம்; நிறைவேற்றிக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறோம்.

அதே சமயம் மனத்தில் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. 69 சத இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக விரும்புகிற ஒருவரின் தலைமையில் இயங்கும் அரசு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த மாட்டோம், 50 சதவிகிதத்தை அமுல்படுத்து- கலைஞர் கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு உறுதிமொழியை எழுத்து மூலமாகக் கொடுத்தது எப்படி? கல்வி நிலையங்களில் இடங்களின் எண்ணிக்கை போர்க்கால அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவையில் தீர்மானம்.

ஒரு சில நாட்களுக்குள் மாணவர் சேர்க்கை ஒத்தி வைப்பு என்று அறிவிப்பு. கன்னியா குமரியில் ஒரு நிலை, புது டெல்லியில் ஒரு நிலை, நவம்பர் மாதம் ஒரு நிலை, டிசம்பர் மாதம் ஒரு நிலை, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு நிலை, அரசு அறிவிப்பில் ஒரு நிலை என்று முதல்வர் வெவ்வேறு நிலைகளை மேற்கொள்வது இட ஒதுக்கீடு பிரச்சினையில் அவர் குழம்பிப் போயிருக்கிறார் என்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது ஒன்றுதான் இந்தப் பிரச்சினைக்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வு.

அதற்கு நாடாளுமன்றத்தில் பலம் கொண்ட அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்திற்குக் கிடைத்திருக்கும் பதில்கள் அந்தக் கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. கருணாநிதி எடுத்த முயற்சிதானே என்று அலட்சியமாகவோ, அல்லது அரசியல் போட்டி மனப்பான்மை காரணமாகவோ முதல்வர் இந்த வாய்ப்பை ஒதுக்கித் தள்ளிவிடாமல் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

கருணாநிதி புகழ்பெற்று விடுவாரோ என்று எண்ணித் தயங்குவதைவிட, தமிழக மக்கள் நலம்பெற வேண்டும் என நினைத்துச் செயல்படுவது ஆரோக்கியமான முன்னுதாரணமாக இருக்கும். கருணாநிதியின் முயற்சியைத் தொடர்ந்து அவரோடு இணைந்து அவர் களத்தில் இறங்கட்டும்."

நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இவ்வாறு தினமணி இதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. 27-6-1994 அன்று நான் கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தும், அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து எழுதிய கடிதங்களை இணைத்தும் மீண்டும் ஒருமுறை 9-7-1994 அன்று பிரதமர் நரசிம்மராவ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இட ஒதுக்கீடு பிரச்சினையில் நான் எழுதிய கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏ.பி.

வாஜ்பய், வி.பி. சிங், ரபிராய், இந்திரஜித் குப்தா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் எழுதிய கடிதங்கள் 10-7-1994 தேதிய தினமணி இதழில் முழுவதுமாக அப்படியே வெளியிடப்பட்டிருந்தன. இதற்குப் பிறகு 18-7-1994 அன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இட ஒதுக்கீடு பிரச்சினையில் ஆதரவு கோரி கடிதம் எழுதினார்.

இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்தும் அ.தி.மு.க. அரசின் ஊழல், அநாகரீகப் போக்கு, குற்றவாளிகளுக்கு அமைச்சர்களே உடந்தையாக இருப்பது போன்ற பிரச்சினைகள் குறித்தும் பேசி முடிவெடுப்பதற்காக 11-11-1994 அன்று அண்ணா அறிவாலயத்திலுள்ள தி.மு.க. அலுவலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தேன். அந்தக் கூட்டத்தில்; பேரவையில் கழக உறுப்பினரான பரிதி இளம்வழுதியைக் காட்டுமிராண்டி எனப் பேசி இழிவுபடுத்திய செயலைக் கண்டித்தும், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாது தள்ளிவைத்த போக்கினைக் கண்டித்தும், 50 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதி மன்றத்தில் அரசு சார்பில் ஒப்புக்கொண்டதைக் கண்டித்தும், ஈரோட்டில் எம்.ஜி.ஆர்.

சிலையை வைக்க 'எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.' சார்பில் திரு.திருநாவுக்கரசு அவர்கள் எடுத்த முயற்சிக்கு எதிராக அந்தச் சிலையைக் கைப்பற்றிக் கொண்ட போக்கினைக் கண்டித்தும், 15-12-1994 அன்று மாவட்டத் தலைநகரங்களிலும் வட்டத் தலைநகரங்களிலும் கலைஞர் மாநில அரசு அலுவலகங்களின் முன்னால் மறியல் நடத்தி இலட்சக்கணக்கானோர் சிறை செல்வதென்று முடிவெடுக்கப்பட்டது. இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி விடுத்த கண்டன அறிக்கையில் - "தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு பிரச்சினையில் போதுமான ஈடுபாடோ அல்லது நம்பிக்கையோ இல்லாத காரணத்தால் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை உதாசீனப்படுத்தி ஒதுக்கித் தள்ளி விட்டார்.

கடந்த 1929ஆம் ஆண்டிலிருந்து தமிழகம் அனுபவித்து வந்த இந்த இட ஒதுக்கீடு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்பற்ற செயல் காரணமாக இப்போது இழக்க வேண்டி வந்துள்ளது. ஜெயலலிதா இட ஒதுக்கீடு பற்றி உதட்டளவில் பேசி வந்தாரே ஒழிய அதனைப் பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா வழி செய்து கொடுத்து விட்டார்.

எனவே தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்ட ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வெளியேற வேண்டும்" -என்று தெரிவித்திருந்தார். டிசம்பர் 15ந்தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த மறியல் போராட்டம் காரணமாக டிசம்பர் 10ஆம் தேதி முதலே கழகத்தைச் சேர்ந்தவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், பா.ம.க., இந்திய தேசிய லீக், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., ஆகிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

முன்கூட்டி கைது செய்வதை எதிர்த்து கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இருக்கும்போதே ஜெயலலிதா ஆட்சியினர் கைதுப்படலத்தைத் தொடங்கி விட்டார்கள். 15-ஆம் தேதி வரை சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள். 15-ஆம் தேதியன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இலட்சம் பேர் ஈடுபட்டு தமிழகமெங்கும் கைதாகினர். சிறைச் சாலைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. அவர்களைச் சிறையில் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று இரவே விடுதலை செய்யப்பட்டனர்.

கழகத்தின் சார்பில் மதுரை மாநகரில் 30-7-1994 அன்று சமூக நீதி மாநாட்டினையும், 31-7-1994 அன்று அரசியல் மாநாட்டினையும் நடத்த முடிவெடுக்கப்பட்டு, 29ஆம் தேதியன்று மாநாட்டினையொட்டி பேரணி ஒன்றை நடத்துவதென்றும், பேரணியின் முடிவில் சாதிக்பாட்சா நகரில், அன்பில் தர்மலிங்கம் அரங்கில், மன்னை நாராயணசாமி பந்தலில், புதுக்கோட்டை வீரையா முகப்பில் கொடியேற்றுவதென்றும் அறிவிக்கப்பட்டது. சமூக நீதி மாநாட்டிற்கு வீரபாண்டி ஆறுமுகம் தலைவராகவும், சுப்புலட்சுமி ஜெகதீசன் திறப்பாளராகவும், பரிதிஇளம்வழுதி கொடியேற்றுபவராகவும், அரசியல் மாநாட்டிற்குக் கோ.சி.மணி தலைவராகவும், எஸ்.பி.

சற்குணம் திறப்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்கள். வரவேற்புக் குழுத் தலைவராகக் காவேரி மணியம், செயலாளர்களாக அக்கினிராசு, ஐ. பெரியசாமி, எல். மூக்கையா, நிதிக்குழுத் தலைவராக பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மற்றும் பல்வேறு குழுத் தலைவர்களாகக் கழக முன்னணியினரும் நியமிக்கப்பட்டார்கள். ஜூலை மாத இறுதியில் மதுரை மண்டில மாநாட்டினையொட்டி நடைபெற்ற மாபெரும் பேரணியை நானும், பொதுச் செயலாளரும் மற்றும் கழக முன்னணியினரும் ஒரு மேடையில் ஒன்பது மணி நேரம் நின்றவாறே தொடர்ந்து பார்த்தோம்.

அந்த ஒன்பது மணி நேரமும் உட்காரலாம் என்ற எண்ணம் கூட வரவில்லை. அந்த அளவிற்கு அந்தப் பேரணி விடிய விடிய வந்து கொண்டே இருந்தது. மாநாட்டினையொட்டி நடைபெற்ற பொதுக் குழுவிலே கலைஞர் இட ஒதுக்கீடு குறித்தும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்பது குறித்தும், கல்வி நிலையங்களிலும் மண்டல் பரிந்துரை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் மற்றும் பல முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவிற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர்கள் பேட்டியின்போது, "மண்டல் கமிஷன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டபோது உச்சநீதி மன்றம்; கிரிமிலேயர் என்று ஒன்றை வைத்தும், கேரி பார்வர்டு முறையில் கைவைத்தும் ஒரு தீர்ப்பளித்தது. அதை தி.மு.க. ஒத்துக் கொள்ளவில்லை. எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்; தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது ஐந்து வருடம் வரை இருக்கலாம், அதன்பின் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

எனவே பதவி உயர்வுகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கூறினேன். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் "மை பிரசிடென்ஷியல் இயர்ஸ்" என்ற புத்தகத்தில் காவேரி பிரச்சினை பற்றி எழுதும்போது 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மட்டுமே என்றும், 1974ஆம் ஆண்டோடு அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும் என்றும் எழுதியிருந்தது பற்றி முன்னாள் நிதித்துறைச் செயலாளராக இருந்த திரு.குகன், ஐ.ஏ.எஸ்.

அவர்கள் 'இந்து' இதழில் மிகவும் கடுமையாக ஆர்.வி. அவர்களைக் கண்டித்து எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் நானும் திரு. ஆர்.வி. அவர்களின் அந்த வாதத்தைக் கண்டித்து ஒரு அறிக்கை விடுத்தேன். ஆர்.வி. அவர்களைக் கண்டித்து ஆகஸ்ட் 11ந்தேதியன்று எல்லா நகரங்களிலும் கண்டன நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஊர்வலங்களை நடத்துமாறு பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிக்கை விடுத்தார். வெங்கட்ராமன் செய்த தவறுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பா.ம.க.

நிறுவனத் தலைவர் அறிக்கை விடுத்தார். ஆனால் அ.தி.மு.க., காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் ஆர்.வி. அவர்களின் செயலைக் கண்டிக்க முன்வரவில்லை. எதிர்ப்பு அதிகரித்த நிலையில் ஆர். வெங்கட்ராமன் அவர்கள் தனது தவறைத் திருத்திக் கொள்வதாகவும், அவரது நூலில் அதற்கான திருத்தம் செய்யப்பட்டு அடுத்த பிரதி வெளிவரும் என்றும் அறிக்கை விடுத்தார். அவரது அறிக்கையை வரவேற்று நானும் ஒரு அறிக்கை வெளியிட்டதோடு, கழகம் நடத்தவிருந்த பேரணியை நடத்தத் தேவையில்லை என்றும் கழக அமைப்புகளுக்கும் தெரிவித்துக் கொண்டேன்.

இதுபோலவே தேர்தல் கமிஷனராக இருந்த திரு. டி.என். சேஷன் அவர்கள் குறிப்பு கொடுத்து கோவிந்தன் குட்டி என்பவர் எழுதிய நூலில் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி சில விஷமமான கருத்துக்களை தி.மு. கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டமே அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தூண்டுதலால்தான் நடைபெற்றது என எழுதியிருந்த காரணத்தால் தமிழகமே வெகுண்டெழுந்தது. 15-10-1994 அன்று அண்ணா அறிவாலயத்தில் காலையில் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

17-10-94 அன்று சேஷனின் நூல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அண்ணா அவர்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் அடங்கிய அந்தப் புத்தகத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி அது வெளியிடப்படுமேயானால், அந்தநாள் தமிழ் மக்களுக்குக் கறுப்பு நாள் என்றும், அந்த நாளில் தமிழகம் முழுதும் கறுப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்றும், தெருக்கள் தோறும் கறுப்புத் தோரணம் கட்டப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் அனைவரும் கறுப்புச் சின்னம் அணிந்திட வேண்டுமென்றும் தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் கலைஞர் நாட்டில் உள்ள பல கட்சிகளின் தலைவர்களும் சேஷன் எழுதியிருந்த கருத்துக்குத் தங்களது கடும் எதிர்ப்பினை அறிக்கைகள் மூலமாக வெளியிட்டார்கள். அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக ஒப்புதல் அளித்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இந்திரஜித் குப்தா அவர்கள் தான் அந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் தமிழகத் தலைவரான திரு.நல்லக்கண்ணு அவர்கள் மூலமாக எனக்குத் தெரிவித்தார்.

அவருக்கு என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் உடனடியாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். மத்திய உள்துறை அமைச்சகத்தில் 1961 முதல் 1970 வரை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.ராகவன் அவர்கள் 'இந்து' இதழில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்தி எதிர்ப்புப் போராட்டப் பிரச்சினையை தான் நேரில் கவனித்தவன் என்றும், அண்ணாவையும் நன்கு அறிந்தவன் என்றும், அண்ணா பற்றி சேஷன் எழுதிய கருத்துக்களில் கொஞ்சம் கூட உண்மை கிடையாதென்றும், வேண்டுமென்றே அந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது என்றும் எழுதியிருந்தார்.

அண்ணா அவர்களைப் பற்றிப் பொய்ப் புகார் கூறிய பகுதியை நீக்காமல் சேஷன் புத்தகத்தை வெளியிடவோ, விற்கவோ, மதிப்புரைக்கு வழங்கவோ, இலவசமாகத் தரவோ கூடாது என்றும், அந்தப் புத்தகத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நானே ஒரு வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கு 17-10-94 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஏ.ஆர்.லெட்சுமணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழங்கிய தீர்ப்பில், மேலெழுந்த வாரியாகப் பார்த்தாலே இந்த வழக்கில் உத்தரவு அளிக்க அடிப்படை இருக்கிறது.

உத்தரவு கொடுக்காவிட்டால் இழப்பும் கஷ்டமும் ஏற்படும். இதே போன்றதொரு வழக்கில் நீதிபதி சீனிவாசன் இடைக்காலத் தடை விதித்திருக்கிறார். எனவே இந்த நீதிமன்றம் சேஷன் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) புத்தகத்தை வெளியிடவோ, விற்கவோ, விமர்சனத்திற்காக வழங்கவோ, இலவசமாகத் தரவோ இடைக்காலத் தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார். 18-10-94 அன்று திரு.டி.என். சேஷன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவரான அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி நான் அவதூறாக நூலில் எழுதியிருப்பதாகத் தமிழ்நாட்டு மக்களும் என்மீது அன்பு கொண்டவர்களும் அதிருப்திப்பட்டுள்ளது கண்டு நான் வேதனைப்படுகிறேன், வருத்தப்படுகிறேன்.

இது தொடர்பாகத் தலைவர் கருணாநிதி அவர்களும் மற்ற நண்பர்களும் கொடுத்த தந்திகளும் பெற்றேன். நான் கலெக்டராக இருந்தபொழுது நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றிப் பலவாறாகப் பேசினார்கள் என்று சொன்னது மிகப்பெரிய விஷயமாக சி.ஐ.ஏ. உடன் அறிஞர் அண்ணாவுக்குத் தொடர்பு உள்ளதாக எழுதியது போலப் பத்திரிகைகளில் வேண்டுமென்றே தவறாக வெளியாகி; பிரச்சினை பெரிதாகிவிட்டத

ு. சமீபத்தில் சென்னையில் பேசியபோதுகூட அண்ணாவின் அறிவையும், கண்ணியத்தையும், ஏல் பல்கலைக்கழகம் கொடுத்த மரியாதையையும் குறிப்பிட்டு, அவரைப் போன்ற உத்தமர்கள் நாட்டுக்குத் தேவை என்று குறிப்பிட்டது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்தது. அப்படிப்பட்ட அண்ணாவைத் தரக் குறைவாக நான் எப்போதும் எண்ண மாட்டேன், பேசமாட்டேன். அண்ணாவைப் பற்றி அப்படியெல்லாம் சொன்னார்கள் என்றுள்ள பகுதி நூலிலேயே இருக்காது என்று எழுதியிருந்தார்.

கலைஞர் தமிழ்மொழிக் காவலரும்- தமிழிசை பாவலரும் மறைவு! ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் வாரத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் தலைமையில் வந்த கும்பல் ஒன்று மேட்டுப்பாளையம் வனச்சரகம் சிறுமுகை கிராமத்தில் ஜீப்பில் வந்து கொண்டிருந்த போலீஸ் டி.எஸ்.பி. சிதம்பரநாதன், அவரது மைத்துனர் சேகர் ராஜ், தலைமைக் காவலர் ராஜகோபால் உட்பட ஏழு பேரை கடத்திச் சென்றுவிட்டது. மறுநாள் காலையில்தான் அதுபற்றிய செய்தியே கிடைத்தது.

வீரப்பனைப் பிடிப்பதற்காக அப்போதும் தமிழக கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த தேவாரம் தலைமையில் சிறப்புக் காவல் படையொன்று அமைக்கப்பட்டு அவனைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. கடத்திச் சென்ற வீரப்பன் கிராமவாசிகள் மூலம் கொடுத்தனுப்பிய கடிதத்தில் தங்களைத் தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபடக்கூடாது என்றும், அப்போது அங்கேயிருந்த போலீசார் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்றும், அவனது சகோதரர் மாதையனைப் போலீசார் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் மூன்று கோரிக்கைகளைத் தெரிவித்ததோடு இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப் படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தான்.

இதைத் தொடர்ந்து வீரப்பனைத் தேடிவரும் அதிரடிப்படையினர் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டனர். வனக்காவல் துறையைச் சேர்ந்தவர்களும் யாரும் காட்டுக்குள் செல்லக் கூடாது என்று கூறப்பட்டனர். அப்போது நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தலைமைச் செயலாளராக இருந்த அரிபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது "வீரப்பனுடைய தளபதி பேபி இரண்டு கோரிக்கைகளைச் சொன்னார். ஒன்று வீரப்பன் கோஷ்டியினர் காட்டுக்குள் உணவு கொண்டு செல்லும்போது, எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது.

மற்றொன்று, சிறையிலே உள்ள வீரப்பன் கோஷ்டியை தளபதி பேபி பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து வருகிறது. இப்போது அரசினுடைய மிக முக்கியமான முன்னுரிமை கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளையும், மற்றவர்களையும் மீட்பதுதான். விசேஷ அதிரடிப்படையின் பணிகள் நிறுத்தப் பட்டுவிட்டன. இந்தப் படைகளை அனுப்பினால் வீரப்பன் போலீஸ் அதிகாரிகளையும், மற்றவர்களையும் கொன்றுவிடக் கூடும்.

பேச்சுவார்த்தை முடிந்து, பேபி, வீரப்பன் மீண்டும் காட்டுக்குள் செல்ல முழு பாதுகாப்பும் அளிக்கப்படும்" என்று தெரிவித்தார். இதற்குப் பிறகு வீரப்பனின் தம்பி அர்ஜுனன் "நாங்கள் சரணடைய மாட்டோம், தண்டனை அனுபவிக்க மாட்டோம். எங்களுக்கு மன்னிப்பு கொடுத்து, ஜனாதிபதி எழுத்து மூலம் உத்தரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஆயுதங்களை ஒப்படைப்போம்" என்று கூறியதாக ஏடுகளில் செய்திவந்தது.

அதற்குப் பிறகு தலைமைச் செயலாளர் அரி பாஸ்கர், "ஒரு அடிப்படை விஷயத்தை நாம் மறந்துவிடக் கூடாது, இது உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம், போலீஸ் துணை சூப்பிரன்டென்டென்ட் மற்றும் இரண்டு நபர்களை நாம் மீட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் காட்டிற்குள் வீரப்பனுக்காக எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்களை யாரும் தடுக்கக் கூடாதென்று அறிவித்தார். இறுதியாக டிசம்பர் 30ஆம் தேதியன்று அதிரடிப்படைத் தலைவராக இருந்த தேவாரம் செய்தியாளர்களைச் சந்தித்து, அதிரடிப்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் வீரப்பனின் ஆட்கள் நான்கு பேர் பணயக் கைதிகளோடு கலைஞர் சரணடைந்து விட்டதாகவும், வீரப்பன் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறினார்.

இந்தச் செய்தியும் தேவாரம் நடுநாயகமாக அமர்ந்திருக்க கடத்தப்பட்டவர்கள் உடன் நிற்கும் புகைப்படமும் அனைத்து ஏடுகளிலும் வெளி வந்தது. ஆனால் அந்தச் செய்தியைத் தாங்கி வெளிவந்த ஏடுகளிலே மற்றொரு செய்தியும் வந்தது. "டி.எஸ்.பி. உள்ளிட்ட மூவரும் மீட்கப்பட்டார்களா? அல்லது தப்பி வந்தார்களா?"

என்ற தலைப்புடன் அந்த மூவரும் தாங்களாகவே தப்பி வந்தார்கள் என்று போலீசாரில் ஒரு தரப்பினர் தெரிவித்த செய்தி வெளிவந்தது. அரசுத் தரப்பிலிருந்து இந்தச் செய்திக்கு எந்தவித மறுப்பும் வராததிலிருந்து எந்தச் செய்தி உண்மை என்பது மக்களுக்குத் தெளிவாகாத குழப்பமாகவே இருந்தது. தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையே நீடித்த தகராறு முற்றிப்போன நிலையில் டெல்லியில் 15-12-1994 அன்று ஒரு வேகமான கருத்தைக் கவர்னர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்குத் தைரியம் இருந்தால் தான் அளித்துள்ள அறிக்கைகள் அடிப்படையில் அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்குச் சீர்குலைவுகள் பற்றியும், கல்வித் தரம் குறைந்து கொண்டே செல்வது பற்றியும் கலாச்சாரச் சீர்கேடுகள் குறித்தும் அவ்வப்போது மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியிருப்பதாகவும், மத்திய அரசு தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க அதுவே போதும் என்றும் செய்தியாளர்களிடம் ஆளுநர் சென்னா ரெட்டி தெரிவித்தார்.

இதற்குப் பதிலாக ஜெயலலிதா அளித்த ஒன்பது பக்க அறிக்கையில் ஆளுநர் முதல்வர் போல நடந்து கொள்கிறார் என்றும், அரசு ரகசியங்களை வெளியிடுகிறார் என்றும், சட்டப் பேரவையைக் கூட்டத் தாமதம் செய்கிறாரென்றும், அமைச்சரவை மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறாரென்றும், வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்துவதைக் கண்டிக்கிறார் என்றும் அவரை உடனடியாக மாற்ற வேண்டுமென்றும் குடியரசுத் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) தலைவரையும் பிரதமரையும் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார். இருவரிடையே நடைபெற்ற இந்தச் செயற்பாடுகள் குறித்து என்னிடம் கருத்து கேட்ட போது- ஓர் ஆளுநர் மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்த அரசுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ மத்திய அரசிடம் அறிக்கை கொடுக்கலாம்.

ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெறும் ஓர் ஆட்சியை, அந்த ஆட்சி நடைபெறும் மாநிலத்தில் உள்ள ஆளுநர் வெளிப்படையாகக் கடுமையாக விமர்சித்து, மத்திய அரசுக்குத் துணிவிருந்தால் இந்த மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு டெல்லியில் கூறியிருப்பது சரியா என்கிற கேள்வி எழாமல் இல்லை. என்ன தான் அவரது பொறுமை சோதிக்கப்பட்ட போதிலும், அவர் அப்படி பேசியிருக்கத் தேவையில்லை என்று கருதுகிற காரணத்தினால் ஆளுநர் குறிப்பிட்டுள்ள குற்றம் குறைகள், ஊழல்கள், முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஜெயலலிதா ஆட்சியில் இல்லை என்று எவராலும் சொல்லி விட முடியாது- என்று கூறினேன்.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், சிக்கிம், கோவா மாநிலங்களுக்கான பொதுத் தேர்தல் 94ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடைபெற்றது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மூன்றாவது முறையாக அருமை சகோதரர் என்.டி. ராமராவ் அங்கே முதல்வராகப் பொறுப்பேற்றார். கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த இந்திரா காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்று ஜனதா தளம் வெற்றிபெற்று, தேவகவுடா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

சிக்கிம் மாநிலத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக கலைஞர் முன்னணி மொத்தம் 32 இடங்களில் 19 இடங்களில் வெற்றி பெற்றது. அதுவரை அங்கே ஆட்சியில் இருந்து வந்த இந்திரா காங்கிரஸ் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. சிக்கிம் காங்கிரஸ் கட்சி பத்து இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியானது. கோவாவில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதுவரை ஆளுங்கட்சியாக அங்கேயிருந்த இந்திரா காங்கிரஸ் 17 இடங்களிலும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி 12 இடங்களிலும், ஐக்கிய கோவா ஜனநாயகக் கட்சிக்கு 3 இடங்களும், பா.ஜ.க.விற்கு 4 இடங்களும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

தமிழ் ஆர்வலர்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம் பெற்றிருந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் 19-12-94 அன்று தனது 95ஆம் வயதில் இயற்கை அடைந்தார். சென்னையில் டாக்டர் ரங்கபாஷ்யம் 'ரமணா' மருத்துவமனையில் கி.ஆ.பெ. அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கடைசி நேரத்தின்போது அவர் குடும்பத்தார் புடைசூழ அவர் அருகில் நின்ற என்னை அழைத்து என் கரம்பிடித்து தமிழையும் தமிழ்நாட்டையும் காப்பாற்றுங்கள் என்று சொன்னது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவர் மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தியில் "தமிழ் மலை ஒன்று சாய்ந்தது; நிலை குலைந்தது உலகத் தமிழ் நெஞ்சம்! பேச்செல்லாம் மூச்செல்லாம் தமிழுக்கே என்று வாழ்ந்தவர் - இயங்குவதும் எழுதுவதும் தமிழர் ஏற்றத்திற்கே என்று இருந்தவர் - பிறமொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் போர்வாளாய்ச் சுழன்றவர்- பழகுவதற்கு இனியவராய், பண்பாட்டில் இமயம் நிகர்த்தவராய் - பரந்த மனப்பான்மையில் குமரி முனையில் கூடும் முக்கடலாய்த் தமிழ் நிலத்திற்கென்று வாய்த்தவர் - ஐம்பது ஆண்டுகட்கு முன்பு இளங்காளைப் பருவத்தினராய் இருந்த எம்போன்ற இளைஞர்களைத் தட்டியெழுப்பிய நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஏந்தல்- அருமை அண்ணன் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.

விசுவநாதம் அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தார் எனினும் இன்னும் பல்லாண்டு அவர் இருந்து, தமிழையும் தமிழரையும் காத்திடும் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்திருக்க வேண்டிய வாய்ப்பினை இழந்தோமே என்று எண்ணித் துடித்துப் போகிறேன். அந்தத் தமிழ் மாமேதை மறைந்து விடவில்லை. மறைய மாட்டார். தமிழர்களின் நெஞ்சில் என்றும் நிறைந்துள்ளார்."

இலங்கைத் தலைநகர் கொழும்பில் 23-10-1994 அன்று இரவு நடந்த எதிர்க்கட்சிப் பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்து 60 பேர் இறந்தனர். இலங்கை அதிபர் தேர்தலில் பிரதமர் சந்திரிகாவை எதிர்த்துப் போட்டியிட்ட காமினி திசநாயகா அவர்களும் வடமேற்கு மாகாண முதல் மந்திரி பிரேம் சந்திரா ஆகியோரும் இதிலே பலியானார்கள். நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெறவிருந்த தேர்தல் ஆளும் மக்கள் கூட்டணியின் சார்பில் இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவரும் பிரதமருமான திருமதி சந்திரிகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் காமினி திசநாயகா போட்டியிட்டார். கொழும்பு நகரில் கேனா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது நடைபெற்ற குண்டுவெடிப்பில் இந்த வன்முறைச் சம்பவம் நடைபெற்றது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மனித வெடிகுண்டாக வந்தது ஒரு பெண் என்று கண்டுபிடிக்கப்பட்டது. நவம்பர் 9ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது.

பத்தாயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஒரு கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். ஆயிரம் இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிரதமர் சந்திரிகா சுமார் இருபது லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 12-11-1994 அன்று பதவியேற்றார். அதிபர் பதவியேற்பதற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகிய சந்திரிகா தனது தாயாரான கலைஞர் திருமதி பண்டாரநாயக் அவர்களைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்து தானே அவருக்குப் பதவிப் பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

அ.தி.மு.க.விற்கும் இந்திரா காங்கிரசிற்கும் இடையே இருந்த உறவு 1993ஆம் ஆண்டு முறிந்ததற்குப் பிறகும் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு சட்டப் பேரவை உறுப்பினர்கள் அ.தி.மு.க. விற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இந்திரா காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருந்த பேராவூர்ணி சிங்காரம், கோவை செல்வராஜ், அப்பு நடேசன், ஜீனத் சர்புதீன், சின்னப்பன், சஞ்சய் ராமசாமி ஆகியோர் இந்திரா காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, பேரவைத் தலைவருக்கும் அந்தக் கட்சியின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எஸ்.ஆர்.

பாலசுப்ரமணியம் கடிதம் எழுதினார். தங்களைக் கட்சியிலிருந்து நீக்க அகில இந்திய தலைவருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று அந்த உறுப்பினர்கள் கூறியதன் பேரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜனார்த்தன பூசாரி அவர்களே அது குறித்து கடிதம் எழுதினார். சாலை விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜைல்சிங் அவர்கள் சண்டிகர் மருத்துவமனையில் 27 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகும் தேறாமல் 25-12-1994 அன்று காலமானார்.

1982இல் குடியரசுத் தலைவராகி, அவர் அந்தப் பதவி வகித்த போதுதான் அமிருத சரஸ் பொற்கோவிலில் தங்கியிருந்த பயங்கரவாதிகளை ராணுவத்தினரைக் கொண்டு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது சீக்கியத் தீவிரவாதிகளிடையே வெறியை ஏற்படுத்தியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஜைல் சிங் ஆகியோரை தங்களுடைய கொலைப் பட்டியலிலேயே தீவிரவாதிகள் வைத்திருந்தனர். இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு ராஜீவ் காந்திக்கு இவர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது டெல்லியில் பயங்கரமான மதக் கலவரம் ஏற்பட்டது. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிறகு ஜைல்சிங்குக்கும் ராஜீவ் காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நல்ல உயரமும் அதற்கேற்ற கம்பீரமும் சாந்தமான முகமும் கொண்டு ஜைல்சிங் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர். குடியான குடும்பத்திலே பிறந்து குடியரசுத் தலைவராகவும் ஆக முடியும் என்பதை உலகத்திற்கு உணர்த்திய ஜைல்சிங் மறைவு நாட்டிற்கும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் ஏற்பட்ட பெரும் இழப்பு என்பதை என்னுடைய இரங்கல் செய்தியிலே தெரிவித்திருந்தேன்.

ஜெயலலிதா பதவிக்கு வரும்போதெல்லாம் அதற்கு முந்தைய ஆட்சியினர் பற்றாக்குறையை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள், அரசு நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ளது என்று சொல்லத் தவறுவதே இல்லை. அப்படியேதான் 91ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு, வடசென்னை அனல் மின்நிலைய விழாவில் உரையாற்றும்போது ஜெயலலிதா "நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது எங்களுக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள் விட்டுச்சென்ற கடன் சுமைகளும் நிதிப் பற்றாக்குறையும் எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது" என்றார்.

திரைப்பட விழா ஒன்றில் பேசும் போது 1200 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டுடன் கழக ஆட்சி இவரைச் சிக்கலில் மாட்டி விட்டதாக முதலிலே குறிப்பிட்ட ஜெயலலிதா தன் பேச்சின் இறுதி பகுதியிலே "கலைஞர் உபரி பட்ஜெட்டை வைத்தே ஆட்சி நடத

்தினார். அண்ணா, எம்.ஜி.ஆர்., காமராஜ், ராஜாஜி, பக்தவத்சலம் ஆகியோரும் உபரி பட்ஜெட்டில்தான் ஆட்சி நடத்தினார்கள்" என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். 1991-92ஆம் ஆண்டு வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையிலே பற்றாக்குறை 577 கோடி ரூபாய் என்றும், 90-91ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டின்படி முடிவான பற்றாக்குறை 208 கோடி ரூபாய் என்றும், அதையும் சேர்த்து 91-92இல் மொத்தப் பற்றாக்குறை 785 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி 1200 கோடி ரூபாய் பற்றாக்- கலைஞர் குறையை நாங்கள் வைத்து விட்டுச் சென்றோம் என்பது எவ்வளவு பெரிய பொய் என்பதையும், ஜெயலலிதா மேலும் குறிப்பிட்டதைப் போல தமிழகத்தின் மற்ற முதலமைச்சர்கள் எல்லாம் உபரி பட்ஜெட்டைக் கொண்டு ஆட்சி நடத்தினார்கள் என்பதும் தவறான தகவல் என்பதையும் ஆதார பூர்வமாக விளக்கிக் காட்டினேன்.

அதற்குப் பிறகு அந்தப் பிரச்சினையை வழக்கம் போல அப்படியே விட்டுவிட்டார். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைவர் அலுவலகத்தை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடு ஜெயலலிதா ஆட்சியிலே 1995இல் தொடங்கப்பட்டது. பாரம்பரியமிக்க புராதனக் கட்டிடமான அதை இடிக்கக் கூடாது என்று கோரி கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய அறக்கட்டளையின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அந்தக் கட்டிடத்தை இடிப்பதற்குத் தடை உத்தரவைப் பெற்றனர்.

அதற்குப் பிறகு 1996இல் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு அந்தக் கட்டிடத்தை இடிக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அந்த பாரம்பரியம் மிக்க பழைய கட்டிடத்தையே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து தற்போது தொடர்ந்து அங்கே காவல்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. 1995ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சன் தொலைக்காட்சி சார்பில் "கணக்கு" என்ற தலைப்பில் என்னுடைய தலைமையில் நடைபெற்ற கவியரங்கிலே கலந்து கொண்டேன்.

கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நா. காமராஜன், கவியரசு வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரும் அதிலே கலந்து கொண்டனர். அத்திங்கள் இறுதியில் என்னுடைய அருமை மைத்துனரும், சின்னஞ்சிறு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) வயதிலேயே இசை உலகிலும், கலையுலகிலும் கொடிகட்டிப் பறந்தவரும், கிட்டப்பா அவதார சங்கீத இளஞ்சிங்கம், சிதம்பரம் சிங்கக் குட்டி ஜெயராம் என்று தமிழகம் முழுதும் பாராட்டப் பெற்றவரும், தமிழ்ப் பாடல்களை எழுத்துச் சுத்தமாக உச்சரித்து அந்தப் பாடல்களுக்கு உயிர் கொடுத்து, கேட்போர் உள்ளத்தைக் கவரும் தனி ஆற்றல் பெற்ற தமிழ் இசைப் பாவலரும், தமிழிசை இயக்கத்தை வளர்த்த பெருந்தகைகளில் ஒருவரும், அண்ணா அவர்களின் அன்பினைப் பெற்று அவரால் சீராட்டிப் புகழப்பட்டவரும், திரைப்படங்களில், இசை மேடைகளில் தனது குரலுக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தவருமான சைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் இயற்கை எய்தினார்.

அவரது மறைவு என் உள்ளத்தில் எத்தனையோ நினைவுகளையெல்லாம் அடுக்கடுக்காக எழுப்பியது. என்னை நானே தேற்றிக் கொண்டு எங்களுடைய குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினேன். நான், பொதுச்செயலாளர் பேராசிரியர், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி மற்றும் கழகத் தோழர்கள் என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். கலைஞர் தமிழ் மாநாடும் தன்மானம் பறிப்பும் ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் தஞ்சை மாநகரில் அ.தி.மு.க.

ஆட்சியினர் உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரால் நடத்தப்பட்ட மாநாடு இருக்கிறதே அதைப்பற்றிக் கூற வேண்டுமென்றால் தனியாக ஒரு நூலே எழுதப்பட வேண்டும். தஞ்சை மாநாட்டிற்கு பிரதமரும், குடியரசுத் தலைவரும் வருவதால் ஜெயலலிதாவின் ஆதாரபூர்வமான ஊழல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக ஆகிவிடும் என்றும், எனவே பிரதமரும் குடியரசுத் தலைவரும் தங்களின் வருகை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகள் கூடித் தீர்மானம் நிறைவேற்றி அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்திருந்தது.

அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு, ஜனதா தளப் பொதுச் செயலாளர் டேவிட், தி.மு.கழகப் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். மாநாட்டின் துவக்க நாளில், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும், தமிழ் அறிஞர்களைப் புறக்கணித்து விட்டு உலகத் தமிழ் மாநாடு நடத்தக் கூடாது, உலகில் உள்ள பல தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை, ஆளுங்கட்சிக்கு ஆதரவான அரசியல் கட்சி மாநாடு போல நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) நடத்தப்படுகிறது என்றெல்லாம் சுட்டிக்காட்டி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தபோது, ஜெயலலிதாவின் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழறிஞர்கள் தஞ்சையில் கைது செய்யப்பட்டதைக் கழகத்தின் சார்பில் நான் வன்மையாகக் கண்டித்ததோடு, உடனடியாக அவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி விடுத்த அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதாவால் காங்கிரசார் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஆகவே பிரதமர் நரசிம்மராவ் உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு விழாவிலே கலந்து கொள்ளக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார்.

எல்லா தமிழ் மாநாடுகளுக்கும் அழைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அறிஞர்கள் அந்த மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அது தவிர, அழைக்கப்பட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் சிலர், குறிப்பாக இலங்கைத் தமிழறிஞர்கள் அவமானப்படுத்தப் பட்டார்கள். இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் திருப்பியனுப்பப்பட்டார்.

தமிழ்க் கவிதை பற்றி இலக்கியமயப்படுத்தப்பட்ட நோக்குகளும், தமிழ் இலக்கியத்தின் உள்ளார்ந்த படைப்பாற்றல் நெகிழ்வுணர்வும் என்ற ஆய்வுக் கட்டுரையை அவர் படிப்பதாக இருந்தது. ஆனால் அவர் கட்டுரை படிக்க முடியவில்லை. அதைப்போலவே பீட்டர்ஸ் சால்க் என்ற சுவீடன் நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார். கலைஞர் ஜப்பான் பேராசிரியர் சண்முகதாசனும் மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படவில்லை.

சுவீடன் நாட்டு உபசாலா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வேலுப்பிள்ளையும் திருப்பி அனுப்பப்பட்டார். இந்தத் தமிழறிஞர்களை எல்லாம் அழைத்துவிட்டு, விளம்பரங்களில் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுவிட்டு, அவர்களது ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டுச் செலவில் அச்சியற்றப்பட்டு, நிகழ்ச்சி நிரலிலும் அவர்கள் பெயர்கள் இடம் பெற்றபிறகு அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.

அந்த மாநாட்டினைப் பற்றி அப்போது தினமணி, எக்ஸ்பிரஸ் ஏடுகள் எழுதும்போது, எட்டாவது உலகத் தமிழ்மாநாடு என்ற பெயரில் ஜெயலலிதா அரசு தனது விளம்பர வெளிச்சத்திற்காக அரசுப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்து தஞ்சையில் அ.தி.மு.க. கட்சி மாநாடாகவே நடத்தி வருகிறது. தஞ்சைக்குச் செல்பவர்கள் அ.தி.மு.க. வண்ணத்தைப் பார்க்காமல் தப்பித்து விட முடியாது, அரசு செலவில் நடைபெறும் மாநாடு என்று சொல்லப்பட்டாலுங்கூட எங்கு பார்த்தாலும் எதில் பார்த்தாலும் அ.தி.மு.க.

கட்சிக்குரிய வண்ணங்கள்தான் காட்சி தருகின்றன. மாநாட்டிற்கென அமைக்கப்பட்டுள்ள தொண்டர் படையில் இடம் பெற்றிருப்பவர்கள் எல்லோருமே அ.தி.மு.க.வினர். பெண்கள் அ.தி.மு.க. வண்ணம் தாங்கிய சேலைகளையும், ஆண்கள் ஜெயலலிதா படம், அவர்கள் கட்சிச் சின்னம் பொறிக்கப்பட்ட பனியன்களையும் அணிந்துகொண்டு கைகளில் பெரிய பெரிய தடிகளுடன் நகர்வலம் வருகிறார்கள். நடைபெறும் சம்பவங்களையும், கேலிக் கூத்துகளையும் பார்க்கும்போது நடைபெறுவது உலகத்தமிழ் மாநாடு அல்ல, அ.தி.மு.க.

மாநாடுதான் என்பது தெள்ளத்தெளிவாகிறது என்று எழுதியிருந்தது. பல்கலைக்கழகத்தின் சார்பில்தான் அந்த மாநாடு நடத்தப்பட்டது என்றபோதிலும், பல்கலைக்கழகத்தின் வேந்தரான திரு. சென்னாரெட்டி அவர்கள் அந்த மாநாட்டிற்கு நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அழைக்கப்படவே இல்லை. அவருக்கே தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டதுதான். மாநாட்டையொட்டி தமிழ்த்தாய் என்றும், நாராயணி என்றும், ஆதி பராசக்தி என்றும், தமிழ் மகளைப் பெற்றெடுத்த தாய் என்றும், வேதங்களுக்கு இணையான பாதங்களைப் பெற்ற தேவமாதா என்றும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஒரு பக்க விளம்பரங்கள் பத்திரிகைகளில் வந்தது போதாதென்று ஜெயலலிதா படத்துடன் கூடிய இந்த வாசகங்கள் எழுதப்பட்ட வண்ண வண்ணமான பேனர் தட்டிகள் மட்டும் பத்தாயிரத்திற்கு மேல் வைக்கப்பட்டிருந்தன.

முதல் நாள் ஊர்வலத்தில் மாணவிகள் கும்மிப் பாட்டிலும், கோலாட்டப்பாட்டிலும் ஜெயலலிதாவின் புகழே இசைக்கப்பட்டன. உலகத் தமிழ் மாநாட்டின் இதயம் போன்ற ஆராய்ச்சி கருத்தரங்கு நடைபெற்ற ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட அந்தப் பக்கம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைகாட்டவில்லை. இன்றைய குடியரசுத் தலைவரும், அப்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான கே.ஆர். நாராயணன் அந்த மாநாட்டிலே குத்துவிளக்கினை ஏற்றி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் மேடையிலே எந்தக் குத்து விளக்கும் கிடையாது. குத்துவிளக்கை ஏற்றுவதற்காக எழுந்து நின்ற குடியரசுத் துணைத் தலைவர் நின்று நின்று பார்த்து விட்டு பின்னர் அமர்ந்து விட்டார். அடுத்த கே. ஆர். நாராயணன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது ஒரு அதிகாரி பக்கத்திலே உள்ள ஏதோவொரு வீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டிலேயிருந்த ஒரு சிறிய குத்து விளக்கினைக் கொண்டு வர அதனை கே.ஆர். நாராயணன் ஏற்றி வைத்தார்.

1995ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் இறுதியில் சென்னை மத்திய சிறையிலிருந்து 'தடா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ஒன்பது விடுதலைப் புலிகள் கலைஞர் மர்மமான முறையிலே தப்பிச் சென்றனர். தப்பிச் சென்றவர்களில் இரண்டு பேர் கும்முடிப்பூண்டி அருகே பிடிபட்டு விட்டதாகவும், ஒருவர் சயனைடு அருந்தி தற்கொலை செய்துவிட்டதாகவும், மற்ற ஆறு பேர் தப்பிச் சென்று விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தடா கைதிகள் தப்பிச் சென்றதால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் சிறையிலிருக்கும் மற்ற தடா கைதிகள் மீது காட்டி கடுமையாகத் தாக்கினர். இதன் காரணமாக பலத்த காயமடைந்த பலர் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சியிலிருந்த அந்தக் காலத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வதென்பது தொடர்கதையாகவே இருந்தது. விடுதலைப் புலிகள் மட்டும் அந்தக் காலகட்டத்தில் 33 பேர் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திரும்பப் பிடிபடவில்லை. சேலம் சிறையிலிருந்து சிவன் என்பவர் 27-5-1992 அன்றும், அதே ஆண்டு நவம்பரில் மதுரை மேலூர் சிறையிலிருந்து யோகராஜ், சந்திரன் என்ற இருவரும் தப்பிச் சென்றனர். அதே நவம்பர் திங்களில் வேலூர் கோட்டைக்குள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளில் 19 பேர் தாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து சுரங்கப்பாதை தோண்டி நள்ளிரவில் தப்பிச் சென்றனர்.

அவர்களில் 8 பேர் பிறகு பிடிபடவே இல்லை. 8-4-1993 அன்று சேலம் சிறையிலிருந்து சக்திவேல் என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியமானவர் தப்பிச் சென்றார். சைதாப்பேட்டை கிளை சிறைச்சாலையில் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத் தினருமாக 18 பேர் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாட்சிகளாவர். அதில் முக்கிய சாட்சியான சார்லஸ் 19-5-1993 அன்று சிறையிலிருந்து தப்பிச் சென்றார்.

சென்னை மத்திய சிறையிலிருந்து புதுக்கோட்டை நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கிருபன் உள்ளிட்ட நான்கு விடுதலைப் புலிகளை போலீசார் வேனில் அழைத்துச் சென்றபோது மாமண்டூர் அருகே ஓட்டலில் உணவு அருந்த நின்றபோது விடுதலைப்புலிகள் துப்பாக்கிகளோடு அங்கே வந்து அவர்களை விடுவித்துச் சென்றனர். விக்டர் என்ற ஒரு விடுதலைப்புலி மட்டும் தப்பவில்லை. கிருபன் உள்ளிட்ட 3 பேர் தப்பிச் சென்றனர்.

29-4-93 அன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. 95ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஜெயலலிதாவை அன்னை மேரியாகச் சித்தரித்து கட்-அவுட்களை வைத்ததின் காரணமாக கிறித்தவ சமுதாயத்தினர் ஜெயலலிதாவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அன்னை மேரியை அவமதிக்கும் வகையில் கட் அவுட் மற்றும் சுவரொட்டிகளை வைத்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று ஐக்கிய கிறித்தவப் பேரவையின் தலைவரான மதுரை கத்தோலிக்க கிறித்தவப் பேராயர் ஆரோக்கியசாமி அவர்கள் ஜெயலலிதாவிற்குத் தந்தி அனுப்பினார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட இந்த கட் அவுட்களுக்கும், சுவரொட்டிகளுக்கும் எதிராகக் கிறித்தவ சமுதாயமே கொந்தளித்தது. பல நிறுவனங்களின் சார்பில் கண்டன அறிக்கைகள் விடப்பட்டன. தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள் கிறித்தவர்கள் சார்பில் நடைபெற்றன. ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் சிலர் வெளியிட்ட அறிக்கைகள் நிலைமையை சுமுகமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

அதுகுறித்து மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி விடுத்த அறிக்கையில் அன்னை மேரியாக ஜெயலலிதாவைச் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது கிறித்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே போராட்டம் நடத்தினார்கள். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரச்சினை தொடர்பாக முதல் அமைச்சர் வெளியிட்டிருந்த அறிக்கை எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

இந்நிலையில் கலைஞர் ஒரு சிலர் வேண்டாத அறிக்கைகளை வெளியிட்டு கிறித்தவர்களின் மனங்களைப் புண்படுத்தி வருகின்றனர். இந்தப்பிரச்சினை தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், அமைச்சர் லாரன்சும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் பேராயரின் இல்லத்திற்குச் சென்று மிரட்டினர். கடலூரில் கிறித்தவர்கள் கூட்டிய மாநாட்டில் நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு முன் உ

ண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். இந்தப் பிரச்சினைக்கு ஜெயலலிதா உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் கிறித்தவர்களுடன் சேர்ந்து இஸ்லாமியர்களும் போராடுவார்கள் என்று இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப் அறிவித்தார். 26-3-1995 அன்று கன்னிமேரியாக ஜெயலலிதா சித்தரிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கிறித்தவ தேவாலயங்களில் பரிகார திருப்பலி நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு பிப்ரவரியில் மணிப்பூர் சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றபோதிலும் எந்தக் கட்சியிலும் ஆட்சி அமைக்கும் அளவிற்குப் பெரும்பான்மை பெறாத நிலை ஏற்பட்டது.

மொத்தம் 60 உறுப்பினர்களில் இந்திரா காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று அதிக இடங்களைப் பெற்ற தனிக் கட்சியாக விளங்கியது. மணிப்பூர் மக்கள் கட்சி 18 இடங்களைப்பெற்றது. இந்தக் கட்சியின் தலைவர் ரண்பீர் சிங் தலைமையில் ஆறு கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சிக் கூட்டணி தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்து, தங்கள் கூட்டணிக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், தங்களை அமைச்சரவை அமைக்க அனுமதிக்கும்படியும் கோரிக்கை வைத்தனர்.

அந்தக் கூட்டணியிலே மணிப்பூர் மக்கள் கட்சி, ஜனதாதளம், சமதா கட்சி, என்.பி.பி., எப்.பி.எம்., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அடங்கும். இந்திரா காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்சிங் ஆளுநரைச் சந்தித்து தனக்கு 31 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) அமைச்சரவை அமைக்க தன்னை அழைக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ஆளுநராக அங்கே அப்போதிருந்த ஸ்ரீவஸ்தவா எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து, தனிப்பெரும் கட்சி என்ற முறையில் அமைச்சரவை அமைக்க இந்திரா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார்.

ஒரு மாதத்திற்குள் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டவேண்டுமென்றும் நிபந்தனை விதித்தார். அந்த வகையில் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கெய்சிங் தலைமையிலே இந்திரா காங்கிரஸ் பதவியேற்றது. மணிப்பூரைத் தொடர்ந்து 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் பிப்ரவரி 9 மற்றும் 12ஆம் தேதிகளிலும், 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 20 மற்றும் 25ஆம் தேதிகளிலும், 147 தொகுதிகளைக் கொண்ட ஒரிசா மாநிலத்தில் மார்ச் 7 மற்றும் 9ஆம் தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மூன்று மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 11ந்தேதியன்று நடந்தது. பீகார் மாநிலத்தில் தேர்தல் கலவரம் காரணமாகப் பலமுறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பிறகு அங்கேயும் வாக்குப்பதிவு வன்முறைக்கிடையே நடைபெற்றது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்று இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்தது. சரத்பவார் தலைமையில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற மராட்டியத்திலும் இந்திரா காங்கிரஸ் தோல்வியடைந்தது.

பா.ஜ.க.வும் சிவசேனாவும் இந்த மாநிலத்தில் அமைத்த கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. சரத்பவார் தோல்வியை ஏற்பதாக அறிவித்தார். பிஜு பட் நாயக் தலைமையில் ஜனதாதள ஆட்சி நடைபெற்ற ஒரிசாவில் ஆளுங்கட்சி தோல்வியடைந்து இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி கலைஞர் பெற்றது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த கேசுபாய் படேல் அவர்களும், மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவைச் சேர்ந்த மனோகர் ஜோஷி அவர்களும், ஒரிசா மாநிலத்தில் இந்திரா காங்கிரஸ் சார்பில் ஜே.பி.

பட்நாயக் அவர்களும் முதல் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். வன்முறைக்கிடையே தேர்தல் நடைபெற்ற பீகாரில் ஜனதாதளக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் லல்லு பிரசாத் யாதவ் அவர்களே முதலமைச்சராக ஆனார். தடா சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் 17-3-95 அன்று வள்ளுவர் கோட்டத்திலிருந்து பேரணியும், சாஸ்திரி பவன் முன் ஆர்ப்பாட்டமும் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் வள்ளுவர் கோட்டத்திலிருந்து பேரணி நடத்த முற்பட்டபோது ஜெயலலிதாவின் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று கூறி தடியடிப் பிரயோகம் செய்து கூட்டத்தினரைக் கலைத்தனர். இதில் 500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்குப் பெண்களும் தப்பவில்லை. அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உட்பட 400க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில், தற்போது அ.தி.மு.க.விலேயும் அப்போது பா.ம.க.விலும் இருந்த தலித் எழில்மலை படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. ரத்தக் காயங்களுடன் அவர் காவல்துறை வேனிலேயே படுக்க வைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட டாக்டர் ராமதாஸ் அவர்கள் நெஞ்சு வலி காரணமாக ராயப்பேட்டை மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, அவரை வேலூர் சிறைச் சாலைக்குக் கொண்டு போய் அங்கே அடைத்தனர்.

டாக்டர் ராமதாஸ் அவர்களையும், தலித் எழில்மலை உள்ளிட்ட ஏனைய பா.ம.க.வினரையும் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு அறிக்கை ஒன்றை நான் விடுத்தேன். 21-3-95 அன்று நானும் கழகப் பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி, துரை முருகன் ஆகியோரும் கார் மூலம் வேலூர் சென்று சிறையிலிருந்த டாக்டர் ராமதாஸ் அவர்களைச் சந்தித்தோம். முகமது சகி, எம்.பி., ராணிப்பேட்டை காந்தி, எம்.ஜி.ஆர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோரும் வேலூரில் எங்களுடன் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க.வினர் போலீசாரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து 22-3-95 அன்று சென்னையில் நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன். இதற்குப் பின்னர் டாக்டர் ராமதாஸ் அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து முதலில் வேலூர் மருத்துவமனையிலும் பின்னர் சென்னையிலே தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அவரை விடுவிப்பதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில் டாக்டர் ராமதாஸ் அவர்களின் மனைவி நேரில் முதல்வரைச் சந்தித்து தனது கணவரை விடுவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அந்த அடிப்படையில்தான் அவர் விடுவிக்கப்பட்டாரென்றும், போராட்டம் நடத்திவிட்டு சிறையிலே இருக்க முடியாமல் மனு போடுவதாகவும், குளிர்ப்பதன வசதி அறையிலே எப்போதும் இருக்க நினைப்பவர்கள் எதற்காகப் போராட்டத்திலே கலந்துகொள்ள முன்வரவேண்டுமென்றும் கேட்டிருந்தார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் அவர்களும், அவரது துணைவியாரும் தாங்கள் அப்படி எந்த மனுவையும் முதல்வரிடம் கொடுக்கவில்லை என்றும், முதல்வர் தெரிவித்தது அப்பட்டமான பொய் என்றும் மறுப்பு தெரிவித்தனர்.

அதற்கு அரசு தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கூறப்படவில்லை.