உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இழைக்கப்பட்ட கொடுமை!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இழைக்கப்பட்ட கொடுமை! · 308 / 391

இளந்தலைவர் ராஜீவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை! பா ட்னா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் பொதுத் தேர்தல் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு வேட்பாளர் தேர்வுக்காகவும் தொகுதிப் பங்கீடுகளுக்காகவும்; தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினர் நூற்றுக்கணக்கானவர்களை ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தோம். 30-3-91 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களில் முக்கியமானவரும், என்னிடம் நட்புணர்வுடன் உரிமை எடுத்துக்கொண்டு பேசக்கூடியவருமான நண்பர் பி.

ராமமூர்த்தி அவர்களின் நினைவகத் திறப்பு விழாவிலே கலந்து கொண்டேன். மேற்கு வங்க முதல்வர் திரு. ஜோதிபாசு அவர்கள் அந்த விழாவிலே கலந்துகொண்டு நினைவகத்தைத் திறந்து வைத்தார். விழாவில் நான் பேசும்போது, இளவயதிலேயே ராமமூர்த்தி எந்த அளவிற்கு சுயமரியாதைக்காரராக, நாத்திகராக இருந்தார் என்பதையும், இப்போதும் அதே கொள்கை உறுதியுடன் இருப்பதையும், தந்தை பெரியார் தலைமையிலே அவர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டதையும் நினைவூட்டியதோடு அவர் வாழ்க்கைச் சரித்திரத்திலிருந்து தீரமும் தியாகமும் நிறைந்த பல பகுதிகளையும் குறிப்பிட்டுக் காட்டினேன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு புறப்படுவதற்கு முன்பு மக்களவைத் தேர்தலோடு மேற்குவங்க சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தலாம் கலைஞர் என்று அவரது அமைச்சரவையிலே முடிவு செய்து, மேலும் பத்து மாத காலத்திற்கு ஆட்சியிலே இருக்கலாம் என்ற நிலையிருந்த போதிலும் சட்டப் பேரவையைக் கலைக்குமாறு ஆளுநர் எஸ். நூருல்ஹஸன் அவர்களுக்குப் பரிந்துரை செய்துவிட்டுத்தான் சென்னைக்கு வந்திருந்தார்.

இந்தப் பரிந்துரையை ஏற்று ஆளுநர் மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார். அரசியல் சாசன 174வது பிரிவின்கீழ், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேற்கு வங்க அரசைப் போலவே கேரள மாநிலத்திலும் மேலும் சுமார் ஓராண்டு காலத்திற்கு ஆட்சியிலே நீடிக்கலாம் என்ற நிலையில் திரு. நாயனார் தலைமையில் இருந்த கேரள மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று மாநில ஆளுநர் சட்டப் பேரவையைக் கலைத்ததோடு, மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து சட்டப்பேரவை தேர்தலையும் நடத்துவதற்கு வழி வகுத்தார்.

அரியானாவில் என்ன நிலை தெரியுமா? நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்றாகிவிட்டது. தேவிலால் அவர்களின் மூத்த மகன் சௌதாலாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தலைமையிலே இருந்தது அந்த மாநில அரசு. சௌதாலாவின் நண்பரான சந்திரசேகர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும், திடீரென்று முதல்வரை விலகச் செய்துவிட்டு தானே மூன்றாவது முறையாக சௌதாலாவே முதலமைச்சராக ஆனார். சந்திரசேகர் பிரதமர் பொறுப்பிலே இருக்கும் போதே மாநிலச் சட்டப் பேரவையின் தேர்தலை நடத்தினால்தான் நன்மையாக இருக்குமென்று சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல் நடத்த ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார்.

ஆனால் இவருடன் மனக் கசப்பு கொண்டு சில அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகிய காரணத்தால் சௌதாலாவின் அமைச்சரவை பெரும்பான்மை பலத்தை இழந்தது. சட்ட மன்றத்தைக் கலைக்க சௌதாலா செய்த பரிந்துரையைப் பற்றி முடிவு செய்வதற்கு முன்பு ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சௌதாலா- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) விற்கு ஆளுநர் தனிக்லால் மண்டல் ஆணையிட்டார்.

ஆனால் சௌதாலா, சட்டமன்றத்தைக் கலைக்க தான் பரிந்துரை செய்தபிறகு சட்டப் பேரவையிலே பலப் பரீட்சை நடத்தத் தேவையில்லை என்றார். ஆனால் மாநில ஆளுநர், அரியானாவில் சட்டமன்றத்தைக் கலைக்கவும், சௌதாலா அரசை நீக்கிவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தொடர்ந்திடவும் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவரும் ஏற்றுக் கொண்டார். அரியானாவில் இது நிலை என்றால் குஜராத் நிலை மேலும் விசித்திரம்!

1990ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் எதிர்ப்பு அலை நாடெங்கும் வீசியபோது, வி.பி.சிங் அவர்களுடன் சேர்ந்து குஜராத்தில் வெற்றி பெற்று, பாரதீய ஜனதா கட்சியுடன் அங்கே கூட்டணி ஆட்சி அமைத்தவர் சிமன்பாய் படேல். வி.பி.சிங் அவர்களின் ஆட்சி கவிழ்ந்ததும், சிமன்பாய் படேல் அவரைக் கைவிட்டுவிட்டு, சந்திர சேகரின் ஜனதா தள (சோஷலிஸ்ட்) கட்சியோடு சேர்ந்து கொண்டார். இதற்கிடையில் பா.ஜ.க. கட்சியோடு இவருக்கு உறவு முறிந்தது.

கூட்டணியிலிருந்து அந்தக் கட்சி விலகி விட்டது. உடனே பா.ஜ.க. உறுப்பினர்கள் இருவருக்குப் பணத்தாசை காட்டி சட்டமன்றத்திலிருந்து விலக வைத்து, அந்தக் கட்சியின் பலத்தை பேரவையிலே குறைத்தார். இந்திரா காங்கிரஸ் தயவுடன்தான் பதவியில் நீடிக்க முடியுமென்ற நிலைமை ஏற்பட்டவுடன் அந்தக் கட்சியுடன் உறவு கொள்ள முடிவு செய்து, சந்திரசேகரைக் கைவிட்டுவிட்டு, ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து கொள்வதற்காக மாநில தனிக்கட்சி ஒன்றை ஜனதா தளம் (குஜராத்) என்ற பெயரில் தொடங்குவதற்கு முடிவு செய்தார்.

அமைப்பு ரீதியற்ற கொள்கை உறுதியில்லாத தனிப்பட்ட ஆசாபாசங்களினால் உருவாகும் கட்சிகளின் நிலைக்கு இது மற்றொரு உதாரணம்! இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிர தேசத்திலும் ஆட்சி ஆட்டம் கண்டது. மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான ஆட்சி இடையில் முடிவுற்று சந்திரசேகர் கலைஞர் பிரதமராக ஆனபிறகு, உ.பி.யின் முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சியிலே தொடர்ந்து நீடித்து வந்தார்.

ஆனால் ஏப்ரல் திங்கள் முதல் வாரத்தில், மாநில அரசின் சில முடிவுகளை இ.காங்கிரஸ் ஆதரிக்க மறுத்ததோடு அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அந்த மாநில ஆளுநர் சட்டப் பேரவையைக் கலைத்து விட்டதாகவும், இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி முலாயம்சிங் யாதவைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், மக்களவைத் தேர்தலோடு சட்டப் பேரவைக்கான தேர்தலையும் இணைத்து நடத்திட தலைமைத் தேர்தல் கமிஷனரைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

அந்த மாநிலத்தில் இந்த நேரத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அந்த மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் மெஹ்ரானா கிராமத்தில் மார்ச் இறுதி வாரத்தில் இரண்டு இளைஞர்களையும் ஒரு பெண்ணையும் பொதுமக்கள் முன்னிலையில் நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) சித்திரவதை செய்து தூக்கிலிட்ட கொடுமைதான் அது. ஜாட் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண், அவருடைய இனத்தை விட தாழ்ந்த குலமாகக் கருதப்படும் யாதவ் குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைக் காதலித்ததற்காக அந்த இருவருக்கும், அதற்கு உதவியாக இருந்த நண்பனுக்கும்தான் இந்த மரண தண்டனையை ஊர்ப் பஞ்சாயத்து நிறைவேற்றியது.

அது மாத்திரமல்ல, இந்த மூவரின் குடும்பத்தினரே இந்தத் தண்டனையை நிறைவேற்ற உடந்தையாக இருந்து இந்த மாபாதகச் செயலை நிறைவேற்றினார்கள். இது தொடர்பாக அந்த ஊரைச் சேர்ந்த 34 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். சோவியத் ஒன்றியத்திலிருந்து ஜார்ஜியா பிரிந்து செல்லலாமா, சுதந்திரமான நாடாக ஜார்ஜியா இயங்கலாமா என்பதற்கான வாக்கெடுப்பு 91ஆம் ஆண்டு மார்ச் திங்கள் இறுதியில் நடைபெற்றது.

இதில் 95 சதவிகித மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அதை அடுத்து சோவியத் யூனியனின் 15 குடியரசுகளில் (மாநிலங்களில்) ஒன்றான ஜார்ஜியாவின் நாடாளுமன்றம் 9-4-91 அன்று கூடி சுதந்திரப் பிரகடனம் செய்தது. லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகியவற்றைத் தொடர்ந்து சுதந்திரப் பிரகடனம் செய்த நான்காவது குடியரசு ஜார்ஜியாவாகும். ஏப்ரல் திங்களில் என்னைப் பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சிகளில் ஒன்றாக, தென்மாவட்டங்களில் கழகம் வலிவுடன் வளர பெரிதும் காரணமானவரும், கழகத்தின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருந்து அந்த மாவட்டங்களில் கழகத்தை வழி நடத்திச்சென்ற ஆற்றலாளரும், என்னுடைய தூண்டுதலால் அரசியலில் நுழைந்து அண்ணா அவர்களால் அரவணைக்கப் பட்டு சிறுகதை மன்னன், சின்ன மருது, தி.மு.

கழகத்தின் சிறைப்பறவை என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தவரும், கழகத்தின் அமைப்புச் செயலாளருமான அருமை நண்பர் எஸ்.எஸ். தென்னரசு 13-4-91 அன்று மதியம் 2 மணி அளவில் இயற்கை எய்தினார். அன்று முதல்நாள் காலையில்தான் தனியார் மருத்துவமனை- கலைஞர் யிலே சிகிச்சை பெற்று வந்த அவரை நேரில் சென்று பார்த்து வந்தேன். சிகிச்சைக்குப் பிறகு தேறி வருவதாகத் தெரிவித்தார்கள். ஆனால் 12 மணி அளவில் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்று தொலைபேசி வந்ததும், அறிவாலயத்திலிருந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தேன்.

என் வருகைக்காகத்தான் காத்திருந்தவரைப்போல, மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலன் அளிக்காமல் மறைந்து விட்டார். வரலாற்றுப் புதினங்களைப் படைப்பதிலே வல்லவர். குறிப்பாக மயிலாடும்பாறை, தங்கச்சிமடம், செம்மாதுளை, சுமங்கலியின் சுயசரிதம், ஆனந்த பைரவி, சந்தனத்தேவன், நகமும் சதையும், பெண்ணில்லாத ஊரிலே ஆகிய நூல்கள் எல்லாம் இவர் படைத்தவை. "சேது நாட்டுச் செல்லக்கிளி" என்ற பெயரில் ஒரு சரித்திர நவீனத்தை ஆனந்த விகடன் வார இதழில் தொடர்கதையாக எழுதி வந்தார்.

அந்தத் தொடர் அந்த வாரம்தான் முடிவுற்றது. அவருக்கு "எங்கள் சேது நாட்டு செல்லக்கிளி எங்கே" என்ற தலைப்பில் நான் எழுதிய இரங்கல் செய்தியில் சில துளிகள்! "கோட்டியூர் தந்த கொள்கைக் கோமேதகம் - முகவை மாவட்டக் கழகத்தின் முடிசூடா மன்னன்- தென் மாவட்டங் சின்ன மருதுவாகத் திகழ்ந்த கழகச் சிங்கம் - தென்னரசு மறைந்து விட்டார். நோய்நொடியில் வீழ்ந்து கிடந்து அல்ல! நொடியில் உயிர் பறிக்கும் மாரடைப்பு அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது.

சிங்காரச் சிற்றூர் திருக்கோட்டியூரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சிந்தாமணி என்ற இயற்பெயருடன் என்னிடம் கவிஞர் கண்ணதாசனால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த இளைஞன் தென்னரசாகப் பெயர் பூண்டு, தி.மு.கழகமெனும் மரகத மண்டபத்தின் மணித்தூணாக விளங்கினார். முரசொலிக் குடும்பத்துக்கும் அவர் உறுப்பினர். முரசொலிக்கின்ற திராவிட இயக்கத்துக்கும் அவர் தளபதி."

ஒவ்வொரு நாளும் நான் என் வீட்டிலிருந்து கீழே இறங்குகின்ற இடத்தில் தென்னரசு முன்னின்று நடத்திய ராமனாதபுரம் மாவட்ட தி.மு.க. ஐந்தாவது மாநாட்டிலே எடுக்கப்பட்ட நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) புகைப்படத்தில் அவர் என்னோடு இருக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டேதான் இன்றைக்கும் வெளியே வருகிறேன். எங்கள் வீட்டில் எத்தனையோ புகைப் படங்கள் இடம் மாறும்! ஆனால் தென்னரசின் படம் என்றைக்கும் அதே இடத்தில் இருக்கும்!

பத்தாவது மக்களவைக்கான தேர்தல்கள் மே மாதம் 20, 23, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், அந்தத் தேர்தலுடன் கேரளா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அரியானா ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும், புதுவை சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் 12-4-91 அன்று அறிவித்தார். தமிழ்நாட்டில் மே மாதம் 26ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று; திராவிட முன்னேற்றக் கழகம் 29 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 171 சட்டப் பேரவை தொகுதிகளிலும்; தமிழ்நாடு ஜனதா தளம் கட்சி 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 15 சட்டப் பேரவை தொகுதிகளிலும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவை தொகுதிகளிலும்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 10 சட்டப் பேரவை தொகுதிகளிலும்; திருநாவுக்கரசர் தலைமையிலான அ.தி.மு.க. 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும்; அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 1 சட்டமன்றத் தொகுதியிலும்; அ.தி.மு.க.

(ஜானகி அணி) ஒரு சட்டப் பேரவை தொகுதியிலும்; ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் ஒரு கலைஞர் தொகுதியிலும் என்று பகிர்ந்துகொண்டு போட்டியிடுவதென்று முடிவெடுக்கப்பட்டது. 17-4-1991 அன்று கழகம் போட்டியிடும் தொகுதிகளுக்கான முதல் பட்டியலை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டேன். அந்தப் பட்டியலில் துறைமுகம் தொகுதியில் நானும், சேப்பாக்கம் தொகுதியில் பொதுச்செயலாளர் பேராசிரியரும், திருவல்லிக்கேணி தொகுதியில் நாஞ்சிலாரும், புரசைவாக்கம் தொகுதியில் ஆற்காடு வீராசாமியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

கழகம் போட்டியிட்ட மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் தொடர்ந்து வெளியிடப்பட்டது. என்னுடைய தேர்தல் சுற்றுப் பயணம் 1-5-91 முதல் ஒரு நாள் கூட ஓய்வின்றி நடைபெற்றது. 24-4-91 அன்று என்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தேன். அன்று மாலையில் கழகத்தின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டேன். அனைத்துக் கட்சிகளும் கடுமையாகத் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டன. அனைத்து ஏடுகளும், கருத்துக் கணிப்புகளும், கழக அணி மாபெரும் வெற்றி பெறுமென்று செய்திகளையும் வெளியிட்டன.

மேலும் நான் செல்லும் இடங்களில் எல்லாம் இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்து என்னை வரவேற்றனர். முதற்கட்ட வாக்குப் பதிவு மே 20ந்தேதியன்று வட மாநிலங்களில் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டு 30 பேர் பலியானார்கள். பீகாரில் தேர்தல் அதிகாரியே சுட்டுக் கொல்லப்பட்டார். ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி அவர்கள் மே 21ந்தேதியன்று நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) இரவு திருப்பெரும்புதூர் பொதுக் கூட்டத்திற்காகக் காரிலே வந்து இறங்கி மேடையை நோக்கிச் சென்றபோது, மனித குண்டு ஒன்று அவரை நெருங்கி வெடித்தபோது ராஜீவ் காந்தி அவர்களும் வேறு சிலரும் அந்த இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து நடந்த மேடைக்கு அருகே இருந்த மூப்பனாரும், ஜெயந்தி நடராசனும் ஓடிவந்து தலைவர் எங்கே, தலைவர் எங்கே என்று தேடியபோதுதான் ஒரு உடலில் இருந்த கால் ஷூவை மூப்பனார் அடையாளம் கண்டு அந்த உடலின் முகத்தைத் திருப்பி அதுதான் ராஜீவ் காந்தி என்று தெரிந்து கொண்டு கதற ஆரம்பித்தார். அந்த இடத்தை நோக்கி வந்த செய்தியாளர்களும் அருகே வந்து அதுதான் ராஜீவ் காந்தி என்பதை உறுதி செய்தனர். நினைத்துப் பார்க்கக்கூட முடியாத கொடுமை நிகழ்ந்துவிட்டது.

தாய்நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்து, நான்கு தலைமுறைகளாக சீரிய தொண்டாற்றி வந்த ஒரு பெருங் குடும்பத்தின் வழித்தோன்றல்; வெறியர்களின் மனித வெடி குண்டுக்கு இரையானார். 1948இல் அண்ணல் உத்தமர் காந்தியும், 1984இல் அன்னை இந்திரா காந்தியும் படுகொலை செய்யப்பட்டபோது அனுபவித்த வேதனையை நாடு மீண்டும் அனுபவித்தது. இந்தக் கொடிய சம்பவத்தில் ராஜீவ் காந்தியைத் தவிர 9

காவல்துறை அதிகாரிகளும், பொது மக்கள் ஏழு பேரும், மனித குண்டாக வந்த தாணுவும் சேர்ந்து 17 பேர் பலியானார்கள். நான் விடுத்த இரங்கல் செய்தியில், "ஒரு நீண்ட எதிர்காலத்திற்குரியவரும், இந்திய அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்தவருமான ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான முடிவு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாததாகும். ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் அந்த நாட்டிற்கே இழிவு சேர்ப்பதாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் காங்கிரஸ் இயக்கத்தின் நண்பர்களுக்கும் தி.மு.கழகச் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தேன். உலக முழுதுமுள்ள தலைவர்கள், கலைஞர் பல நாட்டு அதிபர்கள் அனுதாபச் செய்திகளை வானொலியும், தொலைக்காட்சிகளும் அறிவித்தவண்ணம் இருந்தன. இடி விழுந்தாற்போல அதிர்ச்சியூட்டும் இச்செய்தி உடனடியாக டெல்லிக்கு அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்கப்பட்டு 22ந்தேதி காலையில் திருமதி சோனியாகாந்தியும், அவரது குடும்பத்தினரும் சென்னை வந்து சேர்ந்தனர்.

அந்தத் தேர்தலில் ராஜீவ் காந்தி; தி.மு. கழக அணியின் எதிர் அணியில் போட்டியிட்ட காரணத்தினால், ராஜீவ் காந்தியின் மறைவினால் வேதனைக்காளான அந்தக் கட்சித் தொண்டர்களைத் தூண்டிவிட்டு அ.தி.மு.க.வினரும், சமூக விரோதிகளும் அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழகத்தினர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் புகுந்து கொள்ளை அடித்தனர். பல இடங்களுக்குத் தீ வைத்தனர். கழகத்தினருக்குச் சொந்தமான கார்கள், இரு சக்கர வண்டிகள் எல்லாம் கொளுத்தப்பட்டன.

வீடுகளுக்குள் புகுந்து அங்கேயிருந்தவர்களைத் தாக்கி கொள்ளை அடிக்கப்பட்டது. முரசொலி அலுவலகத்தில் பெரும்பாலான பகுதிகள் கொளுத்தப்பட்டன. நீண்ட காலத்து முரசொலி கோப்புகள் எல்லாம் தீயில் கருகிச் சாம்பலாயின. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அப்போது முரசொலி அலுவலகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த கலாநிதி மாறன் செய்தியைக் கேள்விப்பட்டு என்னுடைய உதவியாளரின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு முரசொலி அலுவலகத்திற்குச் சென்றபோது அவரால் உள்ளேயே நுழைய முடியவில்லை என்பதோடு, அவர் சென்ற ஸ்கூட்டர் அவர் கண் முன்னாலேயே கொளுத்தப்பட்டது.

முரசொலி இதழைத் தொடர்ந்து அச்சிட்டு வழங்க முடியாத அளவிற்கு அங்குள்ள இயந்திரங்கள் நாசமாக்கப்பட்டன. மாவட்டங்களிலிருந்து கழக முன்னணியினர் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு தங்கள் உடைமைகளுக்கு நாசம் விளைவிப்பதாகத் தொடர்ந்து முறையிட்டார்கள். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான தீக்கதிர் அலுவலகத்- நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்) திற்கும் பெருத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஏட்டின் மேலாளரான ஆர்.

ராமராஜ் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆந்திராவில் என்.டி. ராமராவ் அவர்களுக்குச் சொந்தமான திரையரங்கம் முழுவதுமாகத் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தனர். அறந்தாங்கி அருகில் ஜவுளி ஆலை ஒன்றின் விருந்தினர் விடுதியில் திருநாவுக்கரசு தங்கியிருந்தபோது கும்பல் ஒன்று அங்கே நுழைந்து கிடங்குக்குத் தீ வைத்தது. ஜெயலலிதா போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றான காங்கேயம் தொகுதியில் தி.மு.கழகத் தொண்டர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

மாநில முழுதும் பல பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு இரண்டு கழகத் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டார்கள். டெல்லியில் பஸ்வான் வீட்டிற்குத் தீ வைக்கப் பட்டது. பத்திரிகைகள் எல்லாம் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையில் தேர்தலைத் தொடர்ந்து நடத்துவது என்பது முடியாத காரியம் என்றும், அடுத்த கட்ட வாக்குப் பதிவுகளைச் சில வாரங்களுக்கு ஒத்திவைத்து நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தன.

அந்தக் கருத்தினை ஏற்று தேர்தல் ஆணையர் சேஷன் அவர்கள் இரண்டாவது, மூன்றாவது கட்ட வாக்குப் பதிவினை ஜூன் 12, 15 ஆகிய நாட்களுக்கு ஒத்திவைத்து அறிவித்தார். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றி ஆராய உச்சநீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ். வர்மா தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. இந்தப் படுகொலை பற்றி புலனாய்வு மேற்கொள்வதற்கான விசேஷக் குழு ஒன்றையும் அரசு நியமித்தது. மேலும் மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.)

மூலமும் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரிலிருந்து வெளியாகும் இந்தியா வெஸ்ட் என்ற பத்திரிகையின் அலுவலகத்- கலைஞர் திற்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர்; தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதிநிதி என்றும், ராஜீவ் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்றும் தெரிவித்ததாகச் செய்திகள் முதலில் வெளியாகின.

சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் காவல்துறைத் தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற புலனாய்வில் 91ஆம் ஆண்டு ஜூன் 11ந்தேதி முதல் குற்றவாளியாக எஸ். பாக்கியநாதன் மற்றும் அவரது தாயார் பத்மா ஆகியோரைக் கைது செய்தது. 41 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிவராசன் உள்ளிட்ட 12 பேர் இறந்துவிட்டனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட மூன்று பேர் கண்டு பிடிக்கப்படவில்லை.

மீதி 26 பேர்மீது வழக்கு நடைபெற்றது. 605 நாட்கள் வழக்கு நடைபெற்றது. 288 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குற்றஞ்சாட்டப் பட்ட 26 பேருக்கும் நீதிபதி நவநீதம் தூக்குத் தண்டனை விதித்து 28-1-1998 அன்று தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றோர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துகொண்டனர். 99ஆம் ஆண்டு மே திங்களில் உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தும் 4 பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்தும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், தீர்ப்பளித்தது.

அந்த ஆண்டு ஜூன் திங்கள் 9ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் குடியரசுத் தலைவருக்குக் கொடுத்த கருணை மனு காரணமாக அந்தத் தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.