உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அடக்குமுறை அடுக்கடுக்காக!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அடக்குமுறை அடுக்கடுக்காக! · 208 / 391

அடக்குமுறை அடுக்கடுக்காக! ஆட்சி பறிபோய் விட்டது என்ற செய்தி கேட்டு எந்தவிதச் சலனமும் சங்கடமும் தலைகாட்டாமல் இருந்த வீட்டில் என் மகன் ஸ்டாலினைக் கைது செய்யத் தேடுகிறார்கள் எனக் கேள்வியுற்றதும் என்னைத் தவிர அனைவரும் அதிர்ச்சியுற்றனர். அந்த அதிர்ச்சியை எனக்கு முன்னால் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஆனால் ஸ்டாலினின் துணைவியோ; ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி வீட்டுக்கு வந்த புதிய மருமகள்!

ஓரிரு மாத கர்ப்பவதி வேறு! இந்த நிலையில் கணவன், தன்னிடமிருந்து மிசாக் கொடுமையால் பிரிக்கப் படுவதை அந்தப் பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் காலில் விழுந்து கோவெனக் கதறியழுதது. இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு ஆறுதல் கூறி-எல்லாவித தியாகத்திற்கும் எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்று உரக்கச் சப்தமிட்டேன். அதற்குள் தலைமைக் கழகத்தின் செயலாளர்களான வீராசாமி, நீலநாராயணன், சிட்டிபாபு, செ. கந்தப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி வந்தது.

மறுநாள் ஸ்டாலின் வீடு வந்து சேர்ந்ததும் போலீஸார் கைது செய்யத் தேடுகிற விஷயத்தைச் சொல்லிச் சிறைக் கோட்டப் பயணத்திற்குத் தயாராக இருக்குமாறு கூறினேன். அவனும் குளித்து முழுகித் தன் இளம் மனைவியைத் தேற்றிவிட்டு என் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றுத் துணிமணிகளுடன் பயணத்திற்குத் தயாரானான். நானே போலீஸ் ஐ.ஜி.க்கு "போன்" செய்து ஸ்டாலின் வந்துவிட்ட விஷயத்தைக் கூறினேன். சில நிமிடங்களுக்கெல்லாம் "போலீஸ் வேன்" வந்து வீட்டு வாசலில் நின்றது.

வீட்டாரும், அந்த வீதியில் வசித்தோரும், கழகச் செயல்வீரர்களும் சூழ்ந்து நின்று ஸ்டாலினைப் போலீஸ் வேனில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். அவன் கையை அசைத்து விடைபெற்றுக் கொண்டபோது எல்லோருடைய இதயமும் குலுங்கி, விழிகள் குளமாகத்தான் காட்சியளித்தன! என் மகன் மட்டுமா; எத்தனை எத்தனை வீட்டு வீரப்புதல்வர்கள் அன்றைய தினம் மிசாக் கைதிகளாகச் சிறைச் சாலைகள் பலவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்ற செய்தி என் நெஞ்சத்தை மேலும் வலுப்படுத்தி என்னை வளையாமல் நிமிர்ந்து நிற்கச் செய்தது.

அன்றிரவு மீண்டும் போலீசார் பல லாரிகளில் வந்து வீட்டை முற்றுகையிட்டனர். என்னைத்தான் தேடி வந்திருக்கிறார்கள் என்று நான் பயணத்திற்குத் தயாரானேன். "உங்களையல்ல; உங்கள் மருமகன் மாறனைத் தேடி வந்திருக்கிறோம்" என்றார்கள். விடுவார்களா மாறனை? 1975-ல் நெருக்கடி நிலைப் பிரகடனப்படுத்தியதையொட்டி தி. மு. க. தனது எதிர்ப்பைத் தீர்மானத்தின் மூலம் வெளிப்படுத்தியபோது-'முரசொலி' இதழில் "இட்லராகிறார் இந்திரா" என்ற கார்ட்டூனை வெளியிட்டவனாயிற்றே மாறன்!

அந்தக் கார்ட்டூன் வெளிநாட்டு வார ஏடுகளில் கூட பிரசுரிக்கப்பட்டு இந்திராவின் சர்வாதிகாரத்தைத் தமிழகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பதற்குச் சான்று காட்டி எழுதப்பட்டதே; அதனால் மாறனை மிசாச் சட்டம் விட்டுவிடுமா? டெல்லியில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும் வந்தவுடன் போலீசுக்குத் தகவல் அனுப்புவதாகவும் கூறினேன். போலீசார் விமான நிலையம் சென்று காத்திருந்தனர். ஆனால் மாறன், கமலநாதன், மாரிசாமி ஆகியோர் ஐதராபாத் வந்து இறங்கி வெவ்வேறு வழிகளில் ஊர் வந்து சேர்ந்தனர்.

மாறன் சென்னை வந்ததும், ஐ.ஜி.க்குப் போன் செய்தேன்; "நீங்கள் தேடுகிறவர் தயார்!" என்று! உடனே போலீஸ் வேன் வந்தது! கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டு வாசலில் குழுமி விட்டனர். மாறனின் துணைவியும், பிள்ளைகளும், தாயாரும் என்னதான் தைரியமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களின் கலங்கிய கண்கள் அவர்களது வெந்து நொந்த உள்ளங்களை வெளிப்படுத்திக் கொண்டுதானிருந்தன. மாறனைக் கட்டித் தழுவி உச்சி மோந்து, "சென்று வா" எனச் சொல்லி போலீஸ் வண்டியில் ஏற்றி அனுப்பினேன்.

கூடியிருந்தோர் வாழ்த்தொலி முழங்கினர் மாறன் விடைபெற்ற போதும்; ஸ்டாலின் விடைபெற்ற போதும்! அவை வாழ்த்தொலியாக இல்லை! எதேச்சாதிகார வெறியர்களை வீழ்த்துவதற்கு எழுந்த சூளுரை போலத்தான் என் செவிகளில் ரீங்காரமிட்டது. தொடர்ந்து கழகக் கண்மணிகள் மிசாக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட செய்திகள் கிடைத்த வண்ணமிருந்தன. ஆனால் அவர்கள் சிறையில் அடைபட்டிருப்பதைக் கூட ஏடுகளில் வெளியிட முடியாத அளவுக்குத் தடை போட்டிருந்தது கவர்னரின் ஆட்சி!

ஆம்; இந்திரகாந்தியின் ஏஜெண்டுகளாத இருந்த கவர்னர்கள் அந்த அம்மையார் ஆட்டி வைக்கப்படுகிறபடி ஆடுகிற பொம்மைகளாகத்தானே இருந்தார்கள்! என் வாழ்வையும், என்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கழகத்தின் வரலாற்றையும் பின்னிப் பிணைத்துச் சுழன்றோடுகிற இந்த சரித்திரப் பெருவெள்ளத்தில் இயக்கத்தை அழித்தொழிக்க எடுக்கப்பட்ட இறுதிக் கட்ட முயற்சியில் எத்தனை பேர் - யார் யார் - மிசாவெனும் அடக்குமுறைக்கு ஆளானார்கள் என்ற பட்டியலை இடம் பெறச் செய்வது என் கடமையல்லவா?

அவர்களில் எத்தனை பேர் நிமிர்ந்து நின்று தாக்குப் பிடித்தார்கள்; எத்தனை பேர் வளைந்து நெளிந்து வதங்கிப் போனார்கள் என்பது எனக்கும் அவர்களது மனச்சாட்சிக்கும் மட்டுமே தெரிந்திருக்கட்டும்! ஆட்சி கலைக்கப்பட்ட இரண்டொரு நாட்களுக்கெல்லாம் பிப்ரவரி 3-ஆம் நாள்! அதுதான் அண்ணா நினைவு நாள்! அண்ணா சதுக்கம் சென்று வழக்கம்போல மலர் வளையம் வைத்தோம்! அந்த நாளைப் பயன்படுத்திக் கொண்டு; "அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்" என்று முரசொலியில் வெளியிட்டு அந்தத் திரைமறைவில்; மிசாவில் கைதானோர் யார் என்பதை நாட்டுக்கு அறிவித்தேன்!

தணிக்கை அதிகாரிகளை ஏமாற்ற அப்படியொரு தந்திரம்- இதோ; மிசாவில் மாவட்ட வாரியாகக் கைதானவர்கள் பெயர்களை குறிப்பிடுகிறேன். சென்னை மாவட்டம் நீலநாராயணன், நா. வீராசாமி, ஏ. வி. பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன், சிட்டிபாபு, சீத்தாபதி, அ. செல்வராசன், டி. ஆர். பாலு, மு. க. ஸ்டாலின், புலவர் பொன்னிவளவன், மைனர் மோசஸ், சா. கணேசன், சோ. மா. ராமச்சந்திரன், பழக்கடை ஜெயராமன், வள்ளுவன், உசேன், கு. இராமலிங்கம், வழக்கறிஞர் ஆர்.

கணேசன், து. கணபதி, கோடம்பாக்கம் சவுந்தரராஜன், சுப்பு, செல்வம், ராயபுரம் கபடா ராஜு, மு. கன்னியப்பன், காட்டூர் கோபால், துறைமுகம் கிருஷ்ணன், மயிலை சம்பந்தம், ஆர். ஆறுமுகம், மாணவர் தமிழ்மணி; செங்கற்பட்டு மாவட்டம் சி. ஆறுமுகம், மா. வெ. நாராயணசாமி, பம்பல் நல்லதம்பி, காஞ்சிபுரம் கே. டி. எஸ். மணி, வி. பி. அகிலன், வீரராகவன், மாதவரம் வேதாசலம், எருக்கஞ்சேரி மதிவாணன், கும்மிடிப்பூண்டி வேணு, கோபாலகிருஷ்ணன், வேலு, ஊத்துக் கோட்டை ஸ்ரீராமலு, ஊத்துக் கோட்டை ஏ.

டி. ஆறுமுகம், ஆலந்தூர் ஆப்ரகாம், பரங்கிமலை டில்லிபாபு, பல்லாவரம் பாலகிருஷ்ணன், காட்டாங்குளத்தூர் இராமு, கண்ணபிரான், ஓமலூர் கன்னியப்பன், செங்கற்பட்டு பசுபதி, அன்சர், செ. கோ.விசுவநாதன், திருக்கழுக்குன்றம் வகாப், சபாபதி, செங்குன்றம் ஏழுமலை, மதுராந்தம் சுந்தரமூர்த்தி, பிரேம்ராஜ், குலசேகரன், காஞ்சி வெங்கடேசன், ஏ.சுப்பிரமணியம், ராஜமாணிக்கம், டி. சீனிவாசன், மீஞ்சூர் கேசவன், பொன்னேரி நாகலிங்கம், விருகம்பாக்கம் லோகநாதன், போரூர், பி.கே.ராஜகோபால், பூவை டி.

ராஜரத்தினம், அம்பத்தூர் ரவைக்கண்ணன், குப்புசாமி, குன்றத்தூர் பாலகிருஷ்ணன், தி. சு. லட்சுமணன் கம்பராசபுரம் எம். ராஜகோபால், செங்கை கே. ஆர். சந்திரன் பல்லாவரம் இருதயராஜ், பட்டாபிராம் கா. மு. பாபு மதுராந்தகம் சஞ்சீவி; வட ஆற்காடு மாவட்டம் வி. எம். தேவராஜ், துரைமுருகன், ஆரணி செல்வரசு, ஏ. சி. நரசிம்மன், வேலூர் வி. டி. தேவராஜன், மு. நடராஜன், திருப்பத்தூர் ஏ. டி. மணி, திருவத்திபுரம் பாண்டியன், குடியேற்றம் ஏ.

கே. துரைசாமி, செங்கம் சி. பாண்டுரங்கம், எம். பி. வடிவேலு, களம்பூர் அண்ணாமலை; தென் ஆற்காடு மாவட்டம் விருத்தாசலம் எம். செல்லராஜ், பொன். சொக்கலிங்கம், நெல்லிக்குப்பம் வி. கிரூஷ்ணமூர்த்தி, சி. இராமகிருஷ்ணன் சி. குப்புசாமி, ஏ. வி. தண்டபாணி, ஏ. பாட்சா, வி. எஸ். மணி, வி. மாயவன், சி. ராஜகோபால், வி. துரை, வேங்கை மார்பன், சி. பாண்டுரங்கன்; தஞ்சை மாவட்டம் கோ.சி.மணி, எல். கணேசன், என். கிட்டப்பா, தாழை மு. கருணாநிதி, தஞ்சை எஸ்.

நடராஜன், நன்னிலம் நடராஜன், குடந்தை பத்மநாபன், வெங்கிடங்கால் ஏ.சந்தானம், வரதகோபாலகிருஷ்ணன், தஞ்சை டி. கே. கோவிந்தன், பேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் தென்னன், சித்தமல்லி ந. சோமசுந்தரம், மன்னை பாலகிருஷ்னன், செம்பனார் கோவில் மதிவாணன், மாயவரம் செங்குட்டுவன், சிக்கல் கணபதி, ஏனாதி ஏ. பி. இராஜன், திருவாரூர் ராஜன், குடந்தை ஆர். துரை, திருவாரூர் முருகு பாண்டியன், பட்டுக் கோட்டை அப்துல் சமது, மாயவரம் பாக்கியராஜு, தஞ்சாவூர் அறிவழகன், பழைய கூடலூர் ராஜமாணிக்கம், பொறையாறு சம்பந்தம், தஞ்சை இளங்கோவன், புலிவலம் ஜான், நாகை எஸ்.

பி. தங்கையன், எம். மீனாட்சிசுந்தரம், சீர்காழி குமாரசாமி, தஞ்சை கன்னையன், தஞ்சை கோபாலகிருஷ்ணன், மதுக்கூர் ஏ. வி. சுப்பிரமணியம், பூம்புகார் மனோகரன், தென்னவமணி, இலக்குமணன்குடி தட்சிணாமூர்த்தி; திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் பரமத்தி சண்முகம், திருச்சி மலர்மன்னன், இரா. வெற்றி கொண்டான், கரூர் எஸ். பி. இராசகோபால், பெரம்பலூர் ஜ. எஸ். ராஜு, திருச்சி எஸ். ஏ. ஜி. இராபி, எம். எஸ். வெங்கடாசலம், நாக சுந்தரம், பராங்குசம், ஆர்.

கே. சின்ன துரை, குளித்தலை முத்துகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ஏ. கே. மூர்த்தி, செட்டிக்குளம் அல்லாபிச்சை, குஞ்சிதபாதம், திருச்சி கரிகாலன், திருச்சி பி. சுப்பிரமணியம், ஏ. கோபாலகிருஷ்ணன், துவரங்குறிச்சி செங்குட்டுவன், திருச்சி இருதயராஜ், உறையூர் செவந்திலிங்கம், இடையாற்றுமங்கலம் சிவ. சண்முகம், திருச்சி டி. என். கோபாலகிருஷ்ணன், என். சுப்பிரமணியம், வி. கிருஷ்ணமூர்த்தி, சாக்ரடீஸ், ஏ. எம். சம்பந்தம்; அ.

பெரியண்ணன், காடுவெட்டி தியாகராஜன், சுப்பிரமணியபுரம் இரா. ராஜன், இராமையா, புதுக்கோட்டை அப்துல் மஜீத், ஆவுடையார்கோவில் துரை. மாணிக்கம், எஸ். இராமநாதன், சரவணமுத்து; சேலம் மாவட்டம் செ. கந்தப்பன், வீரபாண்டி எஸ். ஆறுமுகம், மு. பழனி வேலன், சேலம் அன்புக்கரசு, சேர்ந்தமங்கலம் பெரியசாமி, சேலம் மாரியப்பன், ஆத்தூர் மா. முத்து, மாயவன், ஏ. ஆறுமுக சாமி, என். நடேசன், இரத்தினம், வக்கீல் அப்புசாமி, கு. சி.

வெங்கடாசலம், கே. பி. கணேசன், ஏ. பி. அப்புசாமி, ஆர். பெருமாள், எஸ். குப்புசாமி, என். நல்லப்பன், மின்னாம் பள்ளி நடேசன்; தர்மபுரி மாவட்டம் எம். கமலநாதன், ஆர். சின்னசாமி. நெ-34